Advertisement

19 “அபி..அபிஎன்ற விஷாலின் குரலைகேட்டு நடையின் வேகத்தை கூட்டினாள் அபிராமி..அவளை பற்றி தெரிந்தவனாக பைக்கின் வேகத்தை அதிகரித்து அவளுக்கு முன்னால் வழிமறித்த படி சென்று நின்றான்..தனது வழியை மறித்தவனை கடந்து அபி போகவும் கையை பற்றி மறித்தவன்

 

ஹேய் அபிஎன்று கெஞ்சலாக அழைத்தான்.. அவனை முறைத்து விட்டு கையை விடுவிப்பதிலேயே அவள் குறியாக இருக்கவும்

 

ஏய்..என்னடி இப்பிடி பண்ற?”

 

பச்..முதல்ல கையை விடுங்க

 

ஹேய் பேபி..அது நேற்று ஒரு பார்ட்டி ஆபிஸ் ..அதுல கம்பல் பண்ணதால தான் ட்ரிங்க் பண்ணேன்

 

நீங்க என்னமோ பண்ணுங்க என்னை விடுங்க முதல்லஎனவும் கையை அழுந்த பற்றீ தன்னை நோக்கி அவளை இழுத்தவன் தன் நெஞ்சிலேயே வந்து விழுந்தவளின் இடுப்பை சுற்றி வளைத்து கொண்டான்..

 

அவன் அணைத்தவுடன் நெளிந்தவாறே அவன் அணைப்பிலிருந்து விலக முயற்சி செய்தவள்

விஷால் என்னது இது?? விடுங்க..”

 

ஹூஹூம்..உனக்கு கோவம் போனா தான் விடுவேன்..”

 

அய்யோ கோவம் போய்டுசு விடுங்க பா

 

நிஜமா?”

 

ஹ்ம்ம்..கோவம்லாம் இல்ல பாஎன்றவுடன் அவளை விடுவித்தவன் அவளது முகத்தை பார்த்து

 

சாரி டாஎன்றான்..

 

என்ன விஷால் சாரி?? வீட்ட ஒரு வயசு பொண்ணு இருக்கிறா..தம்பி இருக்கான்..பொறுப்பா இருக்கனும் என்று யோசிக்கிறீங்களா?? அம்மா அப்பா உங்கள நம்பி அவங்க ரெண்டு பேரையும் விட்டுடு போய் செர்ந்துட்டாங்க..

 

பாவனாவுக்கு நல்ல கணவனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கனும்..தம்பியை பொறுப்பான பிள்ளையா மாத்தனும்..இப்பிடியெல்லாம் சொன்னா மட்டும் பத்தாது.. ” என்று அவள் விடாமல் பொரியவும் காதை கைகளால் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போட தொடங்கினான்..

 

அவனை பார்த்து அபி சிரிக்க தொடங்கவும் அவளை அணைத்து நின்று தானும் சிரிக்க தொடங்கினான்.அபியும் சிரித்தவாறே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்..இந்த நிலமையில் தான் வியாபார விடயமாக அந்த புறம் வந்த தேவனின் கண்களில் இருவரும் விழுந்தனர்.

 

அதன் விளைவினை அன்று இரவே அபி பார்க்க நேரிட்டது.. அன்று இரவு உணவுக்கு பிறகு பேசவேண்டும் என கூறி தனது இரு மகள்களையும் ஹால்சோபாவில் அமர சொன்னார் தேவன்..

 

அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தவர் அபியை பார்த்து அபி..உனக்கு இப்போ கல்யாணம் பண்ற வயசு வந்திட்டுது..” என்று இழுக்கவும் அதிர்ந்து நோக்கியவளை கூர்ந்து நோக்கியவாறே

 

நாளைக்கு உன்னை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வாறாங்க

 

அப்பாஎன்று கத்தவும் கத்திய அக்காவையும் திடீரென திருமணபேச்சை எடுக்கும் தந்தையையும் புரியாமல் நோக்கி கொண்டு இருந்தாள் ஆதிரா..

 

என்ன அப்பா?? என்னை பற்றி உனக்கு நல்லாவே தெரியும்..நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அது தான் கடைசி..இந்தா இது தான் மாப்பிள்ளையோட ஃபோட்டோஎன்று அவளுக்கு முன்னால் போடவும்

 

எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கல

 

ஹா..ஹா..உன்னோட அபிப்பிராயத்தை இதுல நான் கேட்கவே இல்லஆதிக்கு ஒன்றும் புரியாவிடினும் இந்த திருமணத்தில் அக்காக்கு விருப்பம் இல்லை என்று மட்டும் தெரிந்தது..எனவே

 

அப்பா..அதுதான் அக்கா இவ்வளவு சொல்ல்றாளே இப்போ எதுக்கு இவ்வளவு அவசர படுறீங்க?”

 

ஆதி..உனக்கு ஒன்றும் தெரியாது..இப்போ பண்ணலனா நம்ம குடும்ப மானமே போய்டும் மாஎன்றார்.

 

அவரின் பதிலில் புருவம் சுருக்கியவள் அக்காவை நோக்க அபியோ விழிகளில் கண்ணீர் மல்க தந்தையை இறைஞ்சுதலாக பார்த்துக்கொண்டு இருந்தாள்..

 

ஆதி..இவள இதுக்கு மேல எதுவும் பேச வேணாம் என்று சொல்லு..ரோட்டுல ஒருத்தன கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிற்கிறா..உடனே அப்பாவா நான் அங்கேயே வைச்சு அறைஞ்சு இருக்கனும்..ஆனாலும் இவளுக்காக அவங்க குடும்பத்தை பற்றி விசாரிச்சேன்..

 

அவன் ஒரு ஐடி கம்பனியில வேர்க் பண்றான்.. தம்பி ஊர்சுத்தி திரியுறான்..தங்கை ஒருத்தி படிக்கிறா..அப்பா அம்மா இல்ல..குடும்பம் ஒரு அந்தஸ்துமே இல்லாத குடும்பம்..எனக்கு பிடிக்கல.. இது தான் என்னோட முடிவு.. அபிராமி இந்த ஃபோட்டோவை பாரு..ம்ம்..” என்று உறுமவும் பயந்து போய் கைகளில் அதை வாங்கி கொண்டாள் அபிராமி..

 

தேவன் அந்த பக்கமாக நகரவும் ச்சேஎன்று கையில் இருந்த ஃபோட்டோவை தூக்கி மோடாவில் போட்டவள் ஆதி என்று கத்தியபடி அவளை அணைத்து கொண்டாள்..அக்காவை அணைத்து தட்டி கொடுத்த ஆதி

 

அக்கா..நாளைக்கு மட்டும் அப்பாவோட பேச்சை கேளு..எப்பிடியாச்சும் இதை நிறுத்திடலாம்..போ கா..பயப்பிடாத..எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம்..ம்ம்..இப்போ போய் ரெஸ்ட் எடு..போஎன்று அவளை அனுப்பி விட்டு அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.

 

ச்சே என்னது இது புது பிரச்சனை..?”

 

அப்பா ஏன் இப்பிடி பண்றார்?”

 

நம்மள்ட இல்லாத பணமா சொத்தா?”

 

குணம் தான் முக்கியம் என்று ஏன் புரியவில்லை?”

இது இது தான் ஆதி..அபிராமியின் வளர்ப்பு..பணத்தை என்றுமே பெரிதாக மதிக்கமாட்டாள்..ஆனால் பணத்தை உழைக்கும் வித்தையை கைதேர்ந்து வைத்துஇருந்தாள்..அது தேவனின் வளர்ப்பு..

இப்படியே சிந்தித்து கொண்டிருந்தவளின் கண்களில் பட்டது சோபாவில் அபி தூக்கி போட்டு இருந்த போட்டோ..கவரில் இருந்து வெளியில் வந்து அவனது விழிகள் மட்டும் வெளியே தெரிந்தது..கூரிய விழிகளில் இருந்த ஏதோ ஒன்று அவளை இழுக்க மெல்ல அந்தை எடுத்து முழுதும் உருவி பார்த்தாள்..அதில் முன்னுச்சியை கோதியபடி தலையை சாய்த்து சிரித்துக்கொண்டிருந்தான் கவின்..கவின் சக்கரவர்த்தி..

 

அவனது முகம் மனதில் நச்சென்று பதிய புன்னகையுடனே அவனை எவ்வளவு நேரம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாளோ ஹாலில் இருந்த கடிகாரம் ஒலியெழுப்பவும் நினைவுக்கு திரும்பியவள் தனது சிந்தனையின் போக்கு உரைக்க மின்சாரத்தை தொட்டது போல மீண்டும் அந்த ஃபோட்டோவை தூக்கி மோடா மேல் போட்டாள்..

 

போட்டுவிட்டு வேறு திக்கில் பார்த்தவளுக்கு அது முடியாமல் போகவும் திரும்ப அதை தூக்கியவள் அதை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள்..

கட்டிலில் படுத்தவாறெ எப்படி அந்த நிச்சயத்தை நிறுத்துவது என்ற சிந்தனையிலேயே உழன்றவள் அப்படியே தூங்கி போனாள் நாளையின் தீவிரம் உரைக்காமல்

 

மறுநாள் சிந்தனைகளுடன் சற்று தாமதமாகவே உறங்கியதால் தாமதமாக எழுந்த ஆதிக்கும் சரி தேவனுக்கும் சரி சிறிது நேரம் வரை அபிராமியின் நடமாட்டம் இல்லாதது தெரியவே இல்லை..

 

சக்கரவர்த்தி குடும்பத்தில் இருந்து தேவனுக்கு கால் வரவும் தான் அபிராமியை தேட தொடங்கினார்.. அவர்களுக்கு அப்பொழுது தான் நிதர்சனம் உரைக்க தொப்பென்று சோர்ந்து போய் அமர்ந்தவரின் அருகே சென்று ஆறுதலாக அமர்ந்த ஆதிக்கு குழப்பமாக இருந்தது..ஆதி அப்படி எங்கு போய் இருப்பாள் என்று யோசித்து கொண்டிருந்தவள்

 

அப்பாஎன்ற அபியின் குரல்கேட்டு மகிழ்வாக நிமிர்ந்தவள் அங்கு அபியின் மணக்கோலம் கண்டு ஷாக் அடித்தது போல எழுந்து நின்றாள்..

 

அதன் பிறகு அபியை தேவன் திட்டியதோ அபி அவர் காலில் விழுந்து கதறியதோ அபி தன்னை ஏக்கமாக பார்த்ததோ விஷால் ஆறுதலாக தட்டி அவளை அழைத்து சென்றதோ கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை..

அக்காவா இப்படி

எங்களை எல்லாம் விட காதல் பெரிதாகி போய் விட்டதா?’

தான் அவ்வளவு கூறியும்..தன்னில் நம்பிக்கை இல்லாமல் போய் தானே இந்த முடிவு

ஆதியிடம் ஒரு குணம் உள்ளது..அவளை நம்பினோருக்காக உயிரை கொடுத்தாவது அந்த நம்பிக்கையை காப்பாற்றுவாள்..ஆனால் நம்பாமல் போனால் மன்னிக்கவே மாட்டாள்..ஆனால் இது அவளை தாய் ஸ்தானத்தில் இருந்து வளர்த்தவள் அல்லவா..

 

சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தவள்

ஐயோ அய்யாஎன்ற வேலைகாரர்களில் கதறலில் சுயநினைவு பெற்று திரும்பி பார்க்க அங்கு நெஞ்சை பிடித்தபடியே சாய்ந்து விழுந்து இருந்தார் தேவன்..

 

அன்று நெஞ்சை பற்றிக்கொண்டு சரிந்த தேவன் தான்..ஹாஸ்பிட்டெலுக்கு எடுத்து செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது போலும்..மீண்டும் எழவே இல்லை..

 

முடிந்தது..ஒரே நாளில் இந்த பாழாபோன காதலால் அனைத்தையும் இழந்து, சொத்து மட்டுமே உறவாக நிற்கும் கொடுமை யாருக்கும் வர கூடாது..தந்தையின் மரணம்,அக்காவின் காதல் திருமணம் எத்தனை அதிர்ச்சி தான் ஒரே நாளில் இறைவன் கொடுப்பார்??..

 

தந்தையின் உடலை பார்த்து கதறிய அக்காவை கூட வெறித்து பார்த்தாளே தவிர ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை..அவளிடம் ஆறுதல் தேடவும் இல்லை..தந்தையின் உடலுக்கருகில் அமர்ந்து இருந்த ஆதியை அணைத்து

 

அய்யோ ஆதி..என்னால தான்டி..நம்ம அப்பா இப்பிடி போய்ட்டார்..எங்கள விட்டு போய்ட்டார்

 

“…”

 

ஏதாவது பேசுடி..பேசு ஆதி

 

“…”

 

அய்யோ என்னை அடிச்சாவது கொல்லுடி

 

“…..”

 

ஹூஹூம் அபியின் எந்த கதறலுக்கும் செவி சாய்க்காமல் பொம்மையை போல அமர்ந்து இருந்தாள் ஆதிரா..தந்தையின் உடலை தகனத்துக்காக எடுத்து செல்லும் போது உச்சகட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவள் எழும் போது வீடே நிசப்தமாக இருந்தது..

 

முடிந்து விட்டது..அனைத்தும் முடிந்து விட்டது..சிரிப்பே உலகமாக இருந்தவளுக்கு தனது குடும்பம் சிதைந்து போனதை தாங்கவே முடியவில்லை..

எழுந்து அறையில் இருந்து வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்து கணவனின் தோள் சாய்ந்து அழுது கொண்டிருந்த அக்காவை நெருங்கினாள்..

 

ஆதி அருகே வருவதை கண்டதும் எழுந்து அருகே ஓடி வந்த அபிராமியை கவனிக்காமல் விஷாலின் அருகே சென்றவள்

ஹலோ மிஸ்டர்.. அபி சாரி அபிராமியோட ஹஸ்பன்ட் ரைட்?” என்று நிமிர்வாக வினவினாள்..

 

அவளின் நிமிர்வை அபி பயத்துடன் பார்க்க விஷாலோ ஆச்சர்யமாக நோக்கினான்..ஆயினும் அவளுக்கு பதிலாக அவனது தலை சம்மதமாக ஆடியது..

உங்க வைஃப்பை கூட்டிகிட்டு இப்போவே இங்க இருந்து போய்டுங்க..இது அவளோட வீடு இங்க தான் இருப்பேன் இப்பிடியான சில்லி டாக் வேணாம்..நாளைக்கு லாயர் வந்து உங்க பங்கை எல்லாம் உங்களுக்கு பிரிச்சு தந்திடுவார் அவளின் பேச்சின் போக்கு பிடிக்காமல்

 

ஆதிஎன்று அபி கத்த

 

நிறுத்து!!!” என்று கூறி அவளை பார்த்து உக்கிரமாக முறைத்தவள்..

 

அந்த பெயரை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்ல..அக்கா அக்கா என்று உயிரையே வைச்சேனே?? அதுக்கு நீ நல்லா நல்லாவே பண்ணிட்ட..நம்ம அப்பா?? அம்மா போனதுல இருந்து எங்களுக்காக வேற துணையே தேடாம இருந்தவரோட பொண்ணு தனக்கு பிடிச்ச வாழ்க்கையை பெற அவரை கொன்னுட்டு போய்ட்டா..

 

மற்ற பொண்ணு அநாதையா இருப்பாளே நு அவரும் கவலைப்படாம போய் சேர்ந்திட்டார்..இல்ல.. தயவு செய்து போய்டு..என் முன்னால நிற்காத..நின்றா ஏதும் சபிச்சிடுவேனோ என்று பயமா இருக்குஎன்று கூறி வாசலை நோக்கி கைகாட்ட

 

ஆதி ப்ளீஸ்டி..ஒரே ஒருதடவை என் பக்கம் யோசி டிஎன்று அபி இறைஞ்சுவது கேட்டும் சிலையாகவே நின்றாள்.. விஷால் அபியை அணைத்து வெளியே அழைத்து செல்ல தங்கையை திரும்பி திரும்பி பார்த்த படி அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் அபிராமி..

 

அவள் வெளியேறியதும் அப்படியே மடிந்து அமர்ந்து கதற தொடங்கியவள் அன்று முழுதும் கதறினாள்..ஆனால் அதன் பிறகோ முற்றிலும் இறுகி போனாள்..அவளது அந்த இறுக்கத்தை உடைக்க யாராலும் முடியாமல் போனது..

 

வேலை வேலை..இதுவே தாரக மந்திரமாக கொண்டு வெறிதனமாக இயங்கினாள்..கவினின் கன்ஸ்ட்ரக்ஷன் பற்றி தெரிந்து கொண்டவள் அவர்களின் வருகை இடம்பெற கூடிய இடங்களுக்கு நேரடி தொடர்பை தவிர்த்தாள்..

 

இப்படியான ஒரு இயந்திர வாழ்க்கையை ஆதி வாழ தொடங்கி ஒரு வருடத்தின் பின்னர் தான் மீண்டும் அவளது அக்காவை சந்திக்க நேரிட்டது..அந்த அடுத்த சந்திப்பில் மீண்டும் அவளது வாழ்க்கை தடம் மாறி போனது..

 

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே ஆதிக்கு ஏதோ பட படவென்று கொண்டே இருந்தது..ஏதோ ஒரு தப்பு நடக்க போவது போல தோன்றி கொண்டே இருந்தது..தியானம் மூலம் தன்னை சமன்செய்து கொண்டவள் ஆபிஸுக்கு தயாராகி காரை எடுத்து கொண்டு விரைந்தாள்..

 

அப்படி செல்லும் பொழுது தூரத்தில் கூட்டமக இருக்கவும் காரை நிறுத்திவிட்டு என்னவென்று பார்க்க சென்றாள்.. செல்லும் போதே கால்கள் பின்னிக்கொள்வது போல இருந்தது..அருகில் சென்று பார்த்த போதோ இதயமே வெளியில் வந்து விடும் போல அதிர்ச்சி அடைந்து போனாள்..

 

கார் ஒன்று அங்கிருந்த மரத்தில் மோதி இருக்க உள்ளே இருந்ததோ அவளது அக்காவும் அவளின் கனவனும்..அதுவும் அக்கா நிறைமாத கற்பினியாக..

அதைகண்டதும் அக்காஎன்று அலறீயவளின் குரல் எட்டியோ என்னமோ இரத்தவெள்ளத்தில் இருந்த அபியின் விழிகள் மெல்ல திறந்து

..ஆதிஎன முணகியது..

 

உடனே அவர்களை காப்பாற்றவேண்டும் என்ற துடிப்பு எழ அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர்களை ஹாஸ்பிட்டெலுக்கு தூக்கி சென்றாள்..

 

வெளியே காரிடோரில் தலையை கைகளில் தாங்கி அமர்ந்து இருந்த ஆதி

மேம்என்ற நர்ஸின் குரலில் பதறி அடித்து எழுந்து

 

என்ன ??என்ன?” என்று பதறினாள்.. அவளை பாவமாக பார்த்த நர்ஸ்

 

உங்..உங்க அக்காகு ஆப்ரேட் பண்ணியாச்சு..பெண் குழந்தை பிறந்து இருக்கு..பட்..”

 

பட்?”

 

உங்க சிஸ்டரோட நிலைமை தான் மோசமா இருக்கு..உங்க பெயர் ஆதி தானே?”

 

ஆமா

 

உங்க பெயரையே சொல்லிக்கிட்டு இருக்காங்க..ஒருக்கா போய் பாருங்கஎன்று நர்ஸ் முடிக்க முதல் அறைக்குள் ஓடி சென்று அக்காவின் கையை பற்றி இருந்தாள்..

 

அக்காஎன்று விழிகளில் நீரோடு அழைத்தவளின் குரல் கேட்டு அபியின் கண்கள் மெல்ல மெல்ல அசைந்து விரிந்தது..அங்கு ஆதியை கண்டதும் மெல்ல புன்னகைத்து ஆதிக்குட்டிஎன்றாள்..

 

அதோடு முற்றாக உடைந்து போன ஆதி அபியின் கைகளை பற்றியபடி கதற தொடங்கினாள்.. அய்யோ அக்கா..ஏன் கா?? ஏன் இப்படி?? என்னால முடியலையே?? ஏன்கா இப்பிடியெல்லாம் நடக்குது? அம்மா அப்பா இப்போ நீ? இல்ல கா..உனக்கு எதுவும் ஆகாது..” என்று கதறியவளை

 

ஆதிஎன்ற அபியின் அழுத்தமான அழைப்பு நிமிர செய்தது..

 

சொல்லுகா

 

குழந்தையை பாத்திய டி?”

 

இல்ல கா.”

 

பொண்ணு டி..நம்ம அம்மா ஆதி..ஸ்ஸ்.. என்னால நி..நிறைய நேரம் தாங்க முடியாது ஆதி.. அவர்..அவர்

 

அத்தான் அத்தான் இப்போ ஓகே கா..நீ வொர்ரி பண்ணாத

 

ஹ்ம்ம்.. ஆதி

 

சொல்லுகா..என்னை மன்னிச்சுருடி

 

ச்சே..ச்சே கா..நீ ஒரு தப்பும் செய்யல கா..ப்ளீஸ் கா..நல்லபடியா வந்திடு கா.. நான் தனிச்சிடுவேன் கா

 

ஆதி..விஷாலோட தம்பி ஹரிஷ் சரி இல்ல..அவன் தான் சொத்துக்காக ....இப்ப்..இப்பிடி ப்ரேக்கை அறுத்து இருக்கனும்..என் பங்கு என்று எனக்கு தந்த எல்லாமே பாவனா விஷாலோட தங்கை பெயரில மாத்தி வைச்சுட்டேன்..ஸ்ஸ்ஸ்அந்த கோவம்..அத்..அதோட உன்னை உன்னையும் குறி வைச்சு இருக்கான்..பொல்லாதவன் டி..போய்டு ஆதி..நமக்கு இந்த சொத்துலாம் வேணாம்..இனி இது உன்னோட குழந்தை..பாத்துக்கோ....ஆதீஇ

 

அதோடு அந்த தேவதையின் மூச்சு நின்று போனது அக்கா என்று கதறி விழுந்து அழுதவள் குழந்தையின் அழுகுரலில் நிமிர்ந்தாள்.. விழிகளை துடைத்தவள் குழந்தையின் அருகே சென்று அதை தூக்கி தன் மாரோடு அணைத்து கொண்டாள்..

 

Advertisement