Advertisement

13

அவளை ஒரு பார்வை பார்த்தவாறே குறைந்த வேகத்தில் காரை செலுத்தியவன் அடிக்கடி பக்கவாட்டில் திரும்பி அவளின் நெற்றியில் இதழொற்றியபடியும் அதற்கு நாணத்தில் சிவக்கும் பாவனாவின் முகத்தை ரசித்தபடியும் இருந்தான்..

 

அப்படியே காரை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி லாக் செய்தவன்,இறங்கிய பாவனாவுடன் விரல்களை பிணத்தபடி கற்கரையை நோக்கி நடந்தான்..

 

நடந்தபடியே கடற்காற்றுக்கு நெற்றியில் புரண்ட கூந்தல் கற்றையை ஒதுக்கியபடியும் காற்றுக்கும் பறந்த முந்தானையை பற்றி முன்னால் பிடித்த படி வந்த பாவனாவின் அழகு இன்று அதிகரித்து இருப்பதாக பட்டது கருணுக்கு..அமர்வதற்கு ஏதுவான ஒரு இடம் வரவும் அமர்ந்தவர்கள் சிறிது அந்த சூழலை ரசித்த படி மௌனமாக அமர்ந்து இருந்தனர்.

 

என்ன பாவனா எதுவுமே பேசாம இருக்க?”

 

என்ன பேசுறதுஎன்று தயக்கமாக கேட்டவளை பார்த்து சிரித்தவன்

 

அடிப்பாவி..வருங்கால கணவனோட பேச எதுவும் இல்லை என்று சொல்லுற ஒரே ஒரு ஆள் நீயா தான் இருப்ப..எவ்வளவுவுவுவுவு விஷயம் இருக்கு பேச தெரியுமா?”

 

ஹ்ம்ம்?? அப்போ நீங்க பேசுங்க பார்ப்போம்

 

ஹா..ஹா..நான் பேச தொடங்குனா தாங்க மாட்டா ஆமா

 

அய்யோ வேணாம் சாமி.. இன்னொரு தரம் எந்த அதிர்ச்சியும் எனக்கு தந்திடாதீங்கஎனவும் மௌனமானவன் அவளின் கைகளை எடுத்து வருடியவாறே

 

ஏன் அப்பிடி பண்ண பாவனா? எவ்வளவு துடிச்சு போய்ட்டேன் தெரியுமா? வெளில இருந்து பாக்கிறவங்களுக்கு என்ன கொஞ்ச நாள் பார்த்திருப்பான்..அப்பிடி என்ன பெரிய லவ் என்று தோணலாம்..ஆனா சத்தியமா சொல்லுறேன் உனக்கு மட்டும் ஏதும் ஆகி இருந்தா அப்புறம் நிச்சயம் நான் உயிரோடஎன்றவனின் வாயில் பட்டென்று அடி போட்டவள்

 

ஏன் கருண் இப்போ திரும்ப ஆரம்பிக்கிறீங்க? அதெல்லாம் முடிஞ்சு போச்சு..இப்போ இந்த நிமிஷம் நான் உங்க சொந்தம் சரியா? வேற எதையும் யோசிக்காதீங்க

 

அப்பிடின்ற?”

 

ம்ம்

 

அப்போ வேற எதை பத்தி யோசிக்கட்டும்?”

 

..இந்த நாட்டை எப்பிடி உங்க வழிக்கு கொண்டு வரலாம்னு யோசிங்கஎன்று கூறி சிரித்தவளின் இடையில் கை போட்டு இழுத்தவன் அருகில் வந்த அவளது முகத்தை நோக்கியபடி

 

என் ஆளை என் வழிக்கு கொண்டு வந்த மட்டும் எனக்கு போதும்என்று மெல்ல கூறினான்..

 

அவனின் பார்வையும் குரலும் இடையில் ஊர்ந்த கரங்களும் உள்ளே ஏதோ செய்ய வெட்கத்தில் அவன் மார்பிலேயே புதைந்தவள்

உங்க ஆள் உங்க வழிக்கு வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சுஎன்று உரைத்தாள்..

 

ம்ம்?” என்றபடி அவளின் முகத்தருகில் அவன் நெருங்கவும் சட்டென்று அவனை தள்ளி விட்டு சிரித்தபடியே எழுந்து காரை நோக்கி ஓடினாள்..

 

ஏய் பாவனாஎன்று கத்தியபடி தன் காதல் இணையை மகிழ்வுடன் துரத்தி ஓட தொடங்கினான் கருண் சக்கரவர்த்தி..

 

                                                                           **********

 

அன்று இரவு தனது அறையில் கருணுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த பாவனாவிற்கு பால் கொடுக்க வந்த ஆதிரா அவளின் கதவை தட்டவும்

 

அய்யோ அண்ணி..நான் அப்புறம் பேசுறேன்என்று கூறி ஃபோன வைத்துவிட்டு

வா..வாங்க அண்ணிஎன்று கூவினாள்.

 

புன்னகையுடனேயே அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்த ஆதிரா

 

இந்தா பாவனாஎன்றபடி பால் கிளாஸை அவள் கைகளில் திணித்துவிட்டு

 

யாரோட பாவனா பேசிக்கிட்டிருந்த?” என இயல்பாக கேட்டாள்..

 

பட்டென்று முகத்தில் வெட்கம் அப்பிக்கொள்ள

அவர் தான்..கருண் அண்ணிஎன்று கூறினாள்..

 

ஓஹ்..” என்றபடி அவள் தலையை கோதிக்கொடுத்தவள்

எப்படியோ நீ மகிழ்வாக இருந்தால் சரிஎன்றபடி வெளியேற போனவளை

அண்ணிஎன்ற குரல் தடுத்து நிறுத்தியது..

 

ஹ்ம்ம்?” என்றபடி திரும்பி தன்னை நோக்கியவளை கண்ண்டு பளிச் என புன்னகைத்தவள்

 

தேங்க்ஸ்எனவும் தலையை இருபுறமும் அசைத்து விழிகளை சுருக்கி

அசடுஎன்று கூறி புன்னகைத்தவாறே அவள் அறையில் இருந்து வெளியேறினாள்.

 

மீண்டும் கிட்சன் வேலைகளை முடித்துவிட்டு பாவனாவின் கதவை தாண்டி செல்லும் போது

 

இன்று நான் காலேஜ் போய் இருந்தேன் ..அப்போ அந்த கவி இல்ல?” என்று அன்று நடந்த விஷயங்களை கருணுடன் பகிர்ந்து கொண்டிருந்தாள் பாவனா.

 

இவ்வளவு நாள் என்னுடன் பகிர்ந்தவள் இப்பொழுது கருணிடம்.. பாவனா கைநழுவி செல்ல போகிறாள். என்ற உண்மை முகத்தில் அறைய இவ்வளவு நாள் அவளுடன் பாசம் கொண்ட மனது சிறிது சுணங்கியது..ஆனால் அது தான் நிதர்சனம்..எல்லா பெண்களின் வாழ்விலும் இடம் பெறும் மாற்றம்..

 

பெற்றவர்களே மனம் வலிக்க தாங்கி கொள்ளும் நிகழ்வு.. என்று தன்னை தேற்றி கொண்டவள் மீண்டும் பாவனாவின் கதவை பார்த்து புன்னகைத்த படி தனது அறைக்கு சென்றாள்..

 

அறைக்கு சென்றவள் கட்டிலில் துயில் கொஞ்சும் மகளையே இமைக்காமல் பார்த்தாள்..பின்னர் ஸ்ரீயின் தலைக்கருகில் அமர்ந்து அவளின் தலையை சற்று கோதிக்கொடுத்த படி..

 

இனி உன் பானா நமக்கு சொந்தமில்லை குட்டி..அவளில உரிமை கொண்டாட வேறு ஒருத்தங்க..கருண் மாமா வர போகிறார்..இனி நீயும் நானும் மட்டும் தான்என்று மெல்லிய குரலில் உரைக்கவும் என்னை எப்படி மறந்தாய் என்பது போல அவளின் செல்ஃபோன்கிர்ர்ர்ர்ர்ர்ர்” “கிர்ர்ர்ர்ர்ர்ர்என்று வைப்ரேட் பண்ண தொடங்கியது.

 

குழந்தையின் முகத்தை பார்த்தவாறே  ஃபோனை எட்டி எடுத்தவள்  டிஸ்ப்ளேயில் கவின் என்று விழவும் ஆஆ என்று வாயை பிளந்தபடி ஃபோனையே வெறிக்க வெறிக்க பார்த்தாள்..

 

அவளுடைய காதில் அன்று கவின் கூறிய இனி உங்களோட உலகத்தில நானும் இருப்பேன் என்றதை ஏத்துக்கோ ஆதிராஎன்ற வாக்கியம் ஒலிக்கவும்

இவனுக்கு எப்பிடி தெரிஞ்சுது?” என்று வியந்து போய் ஃபோனை அட்டென்ட் பண்ணவும் மறந்து அப்படியே அமர்ந்து இருந்தாள்..

 

ஃபோன் ஒரு முறை அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கவும் பட்டென்று அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்,, அவள் எடுத்தவுடனே பச்..ஃபோன் அடிச்ச எடுக்க தெரியாதா?” என்று அந்த புறம் கவின் பாய்ந்தான்..

 

..என்ன சார் அதிகாரம் எல்லாம் பலமா இருக்கு?”

 

ஆமா..இவங்களை அதிகாரம் பண்ணதும் அடங்கிடுவாங்க பாரு

 

என்னைய அடங்காப்பிடாரி என்றீங்களா?”

 

ஹல்லோ மேடம்..நான் உங்கள அடங்காதவங்க நு தான் சொன்னேன்..இந்த பிடாரி இதெல்லாம் நீங்களாவே சேர்த்து கொண்டது தெரியுதா?”

 

வேணாம்..இந்த பிடாரி கிடாரி என்றா எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா

 

மறுபடியும் பாருடா..சரி ஆமா..அதென்ன கெட்ட கோவம்? உன் கோவத்தை ஃப்ரிஜ்ல வைக்க மறந்துடுச்சா?” என்று மீண்டும் கிண்டலாக தொடங்கவும் இது வேலைக்காகாது என எண்ணியவள்

 

இப்போ இதை கேட்க தான்..ஐயா இப்போ கால் பண்ணீங்களா?”

 

ச்சே..ச்சே இதை தெரிஞ்சு நான் என்ன அவார்ட் வாங்க போறேன்என்று மீண்டும் கலாய்த்து விட்டு

 

ஸ்ரீ என்ன பண்றா நு கேட்க தான் கால் பண்ணேன்என்றான்..

 

அவனின் பதிலை கேட்டு கோவம் தலைக்கு ஏற

லூஸா நீங்க? இந்த நேரத்துல என்ன பண்ணுவாங்க..கரகமா ஆட போறாங்க..தூங்கிகிட்டு தான் இருப்பாங்க..கேக்குற கேள்விய பாருஎன்று நொடித்துக்கொள்ளவும்

 

ஆஹ்..அப்போ உனக்கு எத்தனை மணிக்கு ப்ரோக்ராம்?” என்று சாவகாசமாக கேட்கவும்

 

என்..என்ன..என்ன ப்ரோக்ராம்?” என்று வியப்பாக வினவினாள்..

 

நீ தானே இப்போ சொன்ன எல்லோரும் தூங்குற நேரம் நு..அப்போ முழிச்சிருக்கிற நீ கரகம் ஆட போகனும் ?அதான் கேட்டேன்என்று சாவகாசமாக கூறவும் பல்லை கடித்தவள்

 

யு..யுஎன்று இழுக்கவும்

 

சக்கரவர்த்தி..கவின் சக்கரவர்த்திஎன்று ஸ்டைலாக தனது பெயரை சொல்லிக்கொள்ள மறுபுறம் இருந்து  புடலங்காஎன்ற பதில் வரவும் கவினின் முகமோ இஞ்சி தின்ற குரங்கை போல மாறியது..

 

ஏய்..என்ன நக்கலா?” என்று இந்த புறம் கவின் எகிறவும்

 

ஏன் சார்என்று அறியாபிள்ளையை போல வினவினாள் ஆதிரா..

 

இப்..இப்போ ..இப்போ எதுக்கு நீ புடலங்கா என்ற?”

 

அது நாளைக்கு சந்தைல வாங்கோனும்..நியாபகம் வந்திச்சா அதான்

என்று பதில் கொடுத்தாள்..

 

இல்ல..இல்ல நீ பொய் சொல்ற

 

ஆமா..இவருக்கு பொய் சொன்னா எனக்கு அவார்ட் தர போறாங்கஎன்று அவனது பதிலையே உல்டாவாக்கி திருப்பி அனுப்பியவள்

 

சரி..நீங்க கேக் நினைச்சத கேட்டாச்சு ? இப்போ ஃபோனை வைக்கிறீங்களா?”

 

பின்ன உன்னை போல பிசாசு கூட பேசிக்கிட்டு இருப்பாங்களா?”

 

வேணாம்

 

நான் எதுவும் தரலயே

 

போடா

 

போடாவா?? சரி தான் போடிஎன்றபடி இந்த புறம் ஃபோனை ஆதிரா அணைக்க அந்த புறம் கவின் அணைத்தான்..

 

பின்னர் அவனை திட்டியபடியே கட்டிலில் ஏறி படுத்துது ஸ்ரீயின் மீது கைபோட்டு விழிகளை மூடியவளுக்கு சற்றுமுன் மனதில் இருந்த தனிமை உணர்வு காணாமல் போய் இருந்தது..

 

பெரிய இவஎன்று கூறியபடி ஃபோனை வைத்த கவினுக்கும் மனதிற்குள் இதமாக இருந்தது..ஆனாலும் அவளை திட்டிய படி தான் இருந்தான்..

 

சற்று முன்னர் ஆபிஸ் ஃபைல் ஒன்று பற்றி கேட்க கருணின் அறைக்கு சென்றவன் அவன் பாவனவிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டதும் கிழிஞ்சுதுஎன்று முணுமுணுத்தபடியே திரும்பி அறைக்குள் வந்தவனுக்கு மனது குறுகுறுத்துக் கொண்டே இருந்தது..

 

அதை போக்க தான் ஸ்ரீயுடன் ஆவது பேசுவோம் என எண்ணி நேரத்தை கூட பார்க்காமல் அவன் ஆதிராவுக்கு அழைத்தது..என்னவோ ஸ்ரீயுடன் பேசும் பொழுது தன் மனதிற்குள் மென்மையான உணர்வு பரவுவதை அவனே உணர்ந்து இருக்கிறான்..

 

ஆனால் ஸ்ரீயுடன் கதைக்காமல் போனாலும் ஆதிராவுடன் போட்ட சண்டையில் அவன் மனதில் இருந்த குறுகுறுப்பு காணாமல் போய் விட்டதை ஆச்சர்யமாக உணர்ந்தான்..அவளுடன் இனி வரும் தன் வாழ்க்கையை பற்றி நினைக்க அவனது உதடு தானாகவே புன்னகைத்ததோடு இல்லாமல் இட் வில் பீ அன் இன்டரெஸ்டிங்க் கேம்என்று முணுமுணுத்தும் கொண்டது..

 

 

                                                                           ************

ஆதியின் வீடும் சரி சக்கரவர்த்தி குடும்பத்தின் மாளிகையும் சரி திருமணவேலைகளால் நிறைந்து போய் இருந்தது.. டேய் சஞ்சய் கார்ட் எப்போ வருமாம்?”

 

அது குடுத்தாச்சு பா..ஆதிரா தன்னோட சைட் கு தானே பாத்துக்கிறேன் என்று சொல்லிட்டாங்க..ஸோ நம்ம சைட்டுக்கு நானும் கருணும் பாவனாவும் போய் செலக்ட் பண்ணோம்

 

பாவனா ஏன் உங்களோட வந்தா?”

 

ஹி..ஹி..அது பா..கருண் தான் எங்களோட டேஸ்ட் மட்டமா இருக்கும்னுட்டு கூட்டி வந்தான்

 

ஹா.ஹா..அவனை விட இவன் கூட வெட்கப்படுறான் பாரு மனோஎன்று மனோகர் சஞ்சய் மாகாதேவன் என ஒரு புறம் அலச

 

ஏன் சுமதி புடவை எல்லாம் எப்போ போய் எடுக்கனும்?”

 

வாற சன்டே எடுக்கலாம் அண்ணி..எல்லாரும் வீட்ட நிற்பாங்க ?”

 

ஹ்ம்ம்..அதுவும் சரி

 

அத்தை ஆனா நான் சொல்லுற கடைக்கு தான் போகனும்சரி சிந்து குட்டிஎன்று தனலக்ஷ்மி சுமதி சிந்து ஒரு புறம் அலச..

 

இல்ல குட்டி..இப்போ தான் கிளம்புறன்..ம்ம்..சாப்பிட்டு தான் டா போவேன்..டோன்ட் வொர்ரிஎன்று ஃபோனில் ஒருபுறம் கருண் வழிய என்று வீடே கலகலத்துக்கொண்டிருந்தது..

 

ஆனால் அந்த பரபரப்பு சிறிதும் இல்லாது ஆபிஸில் தனக்கு முன் நின்று கொண்டிருந்த ஆபிஸ் ஸ்டாஃப்பை லெஃப்ட் அன்ட் வாங்கி கொண்டிருந்தான் கவின்.

 

அவனையும் விடுவேனா என்று அவனது தொலைபேசி சிணுங்கவும்பச்என்றபடி சலித்தவன் தன் முன்னே நின்றவரை அனுப்பி விட்டு மேஜையில் இருந்த தன் தொலைபேசியை நோக்கி நகர்ந்தான்..

 

ஆதிரா காலிங் என்று திரையில் பளிச்சிடவும் புருவம் சுருக்கியவன் அதை அட்டென்ட் செய்து காதிற்கு கொடுத்தான்..

 

ஹல்லோ

ஹலோ கவின் இருக்கிறாரா?”

என்று நக்கலாக அந்தபுறம் வந்த ஆதிராவின் குரலில் இருந்த கோவம் எல்லாம் வடிந்து போக புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது கவினின் முகத்தில்..

 

இருந்தாலும் சந்தேகமாக ஃபோனை சற்று தள்ளி பிடித்தவாறே

இவ எதுக்கு இப்போ கால் பண்ணி வம்பு வளர்க்கிறா?” என்று முணுமுணுத்தவன் தொண்டையை செறுமியபடி

 

யெஸ் கவின் ஸ்பீக்கிங்என்றான்..

 

ஓஹ்..நீங்க தானா..?? இல்ல தொடக்கத்துல ஏதோ கருங்கல்லை முழுங்கினாப்போல ஒரு மார்க்கமான குரல் கேட்டுதா? அதான்என்று மேலும் சீண்டவும் டையை இழுத்தவாறே தனது சுழல்நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன் முன்னும் பின்னும் ஆடியவாறே

 

ஆமா..இவ வாயை திறந்தா சுசீலாவும் சித்ராவும் பேக்ரவுன்ட் பாடுறாங்க..என் குரலை கிண்டலடிக்கிறா..அடச்சா..எதுக்கு இப்போ எடுத்த? சொல்லு டி

 

என்னது டி யா?”

 

எது அந்த பி சீ டி யில வருமே.அந்த டி யா?”

 

பச்..உன்னோட மனுஷர் கதைக்க முடியாது

 

அதுக்காக தான் உன்னை பேச சொல்லுறேன்

 

சரி..சரி..நீ என்னை கலாய்ச்சதா நான் ஒத்துக்கிறேன்..விஷயத்துக்கு வரட்டுமா?”

 

அதை தான் நான் ஆரம்பத்துல இருந்தே  சொல்லிக்கிட்டு இருக்கேன்

 

சபா..போதும் சாமி..உங்க பொண்ணு உங்கள பார்க்கனும் என்று அடம் பண்ணிக்கிட்டிருக்கா..”

 

உங்க பொண்ணு என்று ஆதிரா விழித்ததில் சில்லென்ற ஒரு உணர்வு உடலெங்கும் பரவ மெல்லிய குரலில் யார்னு சொன்ன?” என்று வினவ

 

பச்..ஸ்பீக்கரும் அவுட்டா? உங்க பொண்ணு தான்.. இதுக்கு தான் செல்லம் குடுக்காதீங்க என்று தலபாடா அடிச்சுக்கிட்டேன்..கேட்டா தானே? இப்போ படுத்துறது அவ..படுறது நான்..இதுல இவர் மட்டும் ஹாயா போய் ஆபிஸ் இருப்பாராம் ..விடுவமா நாங்க?”

என்று சலித்துக்கொண்டாள்.

 

ஓவரா சலிச்சுக்காதீங்க மேடம்..இன்னும் எவ்வளவோ இருக்கு.,.இப்போ ஸ்ரீ என்னை பார்க்கனும் என்று அடம் பண்றா அதானே?” என்று கூலாக கேட்கவும்

 

ஆமா..” என்று பல்லை கடித்தவாறெ பதிலளித்தாள்..

 

ஓகே..இப்போ நீ ஸ்ரீ கிட்ட ஃபோனை குடு..இல்ல ஸ்பீக்கர் போடுஎன்று கூறவும் அடடே இந்த அறிவு ஏன் தனக்கு வராமல் போய்விட்டதே என்று தன் தலையில் தட்டி கொண்டவள்

 

கொஞ்சம் ஓங்கி..ஓங்கி அடிஎன்று அந்த புறம் வந்த கவினின் பதிலில் பே என்று விழித்தாள்..

Advertisement