Advertisement

12                                                                 

நிச்சயமா இல்லை பாவனா.. இந்த முடிவை நான் எடுக்கல..கவின் தான் கேட்டார்..எப்படியும் உன்னோட பிடிவாதத்திற்கு முன்னாடி நான் தான் மாறனும்..தெரியாத யாரையோ கல்யாணம் பண்றதுக்கு கவினோட என் வாழ்க்கை அமைஞ்சா நீயும் எங்களை விட்டு விலக தேவை இல்லை என்று பட்டுது..இதுல என்ன தப்பு சொல்லு?”

 

இல்லை அண்ணி..இருந்தாலும் என் வாழ்க்கைகாக நீங்க தியாகம் செய்யாதீங்க.”

                                                                                 *************

 

தியாகமா டேய்..ஆதிராவை திருமணம் செய்தா தியாகமா?? ஏன் என் அம்மாவை கேளு..ஆதிரா போல ஒரு பொண்ணு இந்த வீட்ட வரணும் என்றால் நாம தவம் செய்திருக்கோம் என்று சொல்லுவாங்க..உன்னோட வாழ்க்கையை சீராக தான் இந்த முடிவு என்றாலும் ஆதிராவை நான் தான் திருமணம் செய்யனும் என்று இல்லையே? ஸோ இந்த முடிவு என்னோட முழுக்க முழுக்க என்னோட சம்மதத்தில தான் உருவாகி இருக்குது

இப்படி பல வாதங்களுக்கு பிறகு தமது திருமணத்தை தமது குடும்பத்தாரிடையே உறுதிப்படுத்தி கொண்டது ஆதிராகவின் ஜோடி..

 

அன்று மனோகரின் குடும்பம் ஆதிரா மற்றும் பாவனாவை நிச்சயம் செய்ய வருவதாக இருந்தது.அதனால் சுதா மற்றும் அக்கம் பக்கத்தில் ஆதிராவிடம் நெருங்கி பழகியவர்கள் அனைவரும் ஆதிராவின் வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்த வேலைகளில் ஈடுபட ஆதிராவும் சேர்ந்து அவர்களுடன் வேலைகளை பகிர்ந்து கொண்டு இருந்தாள்..அதைக்கண்டு கடுப்பாகி போன சுதா ஆதிராவின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு சென்று அவளது அறையில் சென்று கதவை அடைத்தாள்.

 

பச்..என்ன சுதா? வெளியில எவ்வளோ வேலை இருக்குது..இப்போ வந்து ரூமுக்குள்ள தள்ளி கதவை சாத்துற?”

 

லூஸாடி நீ..இன்றைக்கு நிச்சயம் உனக்கும் தான்..பாவனாவையும் ஸ்ரீயையும் பியூட்டிபார்லர் இருந்து வந்தவங்க கிட்ட விட்டுவிட்டு நீ ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தா என்ன அர்த்தம் ஆதி?”

 

..வேலை இருக்குனு அர்த்தம்

 

அப்பிடியே ஒன்னு போட்டேன்னா பாரு..இவ்வளோ பேர் இருக்கிறம்..நாங்க எல்லாம் பார்த்துக்குறம்..அவங்க வரும் நேரம் ஆயிட்டுது சீக்கிரம் தயாராகு..ஷ் ஒன்றும் சொல்லாத..தயாராகுஎன்று விட்டு வெளியே கதவை பூட்டி சென்றவளை பார்த்து பெருமூச்சொன்றை விட்டவாறே தயாராக தொடங்கினாள்.

 

வெளியில் காரின் ஒலியும் அதைத்தொடர்ந்து பேச்சுக்குரல்களும் கேட்கவும் தயாராக நின்ற ஆதிரா கதவின் அருகில் விரையவும் சுதா வந்து கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

 

அவங்களாம் வந்தாச்சு ஆதிரா..என் அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டு இருக்காங்க..நீ..நீ வர போறியா? இல்லனா

 

லூஸு..தள்ளுடி..நான் இல்லாம யார் அவங்க கூட பேசுறது?” என்று கூறி வெளியே செல்ல போனவளை தடுத்து நிறுத்திய சுதா

 

அழகா இருக்கா ஆதி..இப்படி உன்னை பார்க்க சந்தோசமா இருக்குஎன்று கூறி கண்கலங்கவும் புன்னகைத்தவள் அவளை ஒரு தடவை அணைத்து விலக்கி ஹாலை நோக்கி விரைந்தாள்..

 

ஹாலில் போடப்பட்டிருந்த நான்கு பேர் அமரக்கூடிய சோஃபாவில் மனோகர்தனலக்ஷ்மியும் மகாதேவன்சுமதியும் அமர்ந்து இருக்க அதற்கு இருபுறமும் போடப்பட்டிருந்த சோபாவில் ஒருபுறம் கருணும் அதன் கைபிடியில் ஏதோ சலசலத்தபடி சிந்துவும் அமர்ந்து இருக்க மறுபுற சோஃபாவில் சுதாவின் தந்தை அமர்ந்து இருக்க சுதாவின் தாய் அருகில் நின்று கொண்டிருந்தார்.

 

நொடியில் வந்த அனைவரையும் கணக்கெடுத்தவள் கவின் இல்லாததையும் கவனிக்க தவறவில்லை.. அதை யோசித்தவாறே அவர்களின் அருகில் செல்ல எத்தனித்தவளை தடுத்து நிறுத்தியது செல்ஃபோனின் மெசேஜ் டோன்.

ஸாரி..கொஞ்சம் லேட்டாகும் வருவதற்குஎன்ற வரிகள் கவினின் நம்பரில் இருந்து வரவும் புன்னகைத்தவள் விரைந்து பெரியவர்களை நோக்கி சென்று கரம் குவித்தாள்..

 

வணக்கம் சார்..வணக்கம் மாஎன்று கூறியவள் அதே போல் மகாதேவரையும் பார்த்து கூறிவிட்டு கருண் சிந்துவை வரவேற்கும் விதமாக தலை அசைத்து விட்டு அவர்களின் பேச்சை எதிர்பார்த்து அமைதியாக நின்றாள்.

 

ஆனால் ஆதிராவை பார்த்த குஷியில் சிந்துவோஆதிக்காஎன்று ஓடிவந்து அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு ரொம்ப..ரொம்ப..அழகா இருக்கிங்கஎன்று கூறி வெள்ளந்தியாக சிரித்தாள்..

 

அவளை அணைத்து விடுவித்தவள் பெரியவர்களை சங்கடமாக பார்க்கவும் ஆதிராவை நோக்கி புன்னகைத்த தனலக்ஷ்மி எழுந்து அவளின் அருகில் அவந்து அவளின் கன்னம் வழித்து முத்தமிட்டார்..

 

பின்னர் அவளை திருப்பி கையில் இருந்த பூவை தலையில் சூடியவர் மீண்டும் திருப்பி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு ரொம்ப சந்தோஷம் டா..உன்னை போல ஒரு பொண்ணை கவின் திருமணம் பண்ண யோசிச்சதை நினைக்கிறப்போ.” என்று அவர்களின் சம்மதத்தை மறைமுகமாக கூறவும் அவரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டாள்..

 

பின்னர் தொண்டையை செறுமிய மனோகர் கவின் வர கொஞ்சம் லேட்டாகும் மா.. அதுக்குள்ள நம்ம கொஞ்ச விஷயங்களை பேசிடலாம்என்று கூறவும் அதை எதிர்பார்த்தது போல தலையை அசைத்தவள் கேள்வியாக அவர்களை நோக்கவும் மகாதேவன்

 

ஆதிரா..உங்களை பற்றிய குடும்ப பின்னணி எதுவுமே எங்களுக்கு தெரியாது..இவங்களும் சுதாவோட பேரன்ட்ஸ் தான்..உங்க குடும்பத்தில இருந்து யாருமே வரலையாமா?” என்று கேட்டார்.அவரை பார்த்து மாறாத புன்னகையை வெளியிட்டவள் தொண்டையை செறுமியவாறே

 

சார்..என்னோட ஃபேமிலி பாவனாவோட ஃபேமிலி எல்லோருமே ஒரு விபத்தில இறந்துட்டாங்க..பாவனா ஒரு கன்னி பொண்ணு..அவளோட நான் தனிச்சு நிற்கிறப்போ அவளை பாதுகாப்பா வைச்சுக்க எந்த சொந்தகாரங்களையும் அண்டவிடலை. இப்போவும் அதை நான் விரும்பல.. உங்களுக்கு அவங்ககூட பேசனும் என்றால் நான் அரேஞ்ச் பண்ணுறேன்.” என்று கூறினாள்.

 

இல்லமா..எனக்கு உன்னை பற்றி தெரியும்..ஆனா இனி நீங்க எங்களோட குடும்பம் என்றப்போ நடந்ததை அறியனும் என்று தான்என்று அவசரமாக கூறிய மனோகரை பார்த்துபுரியுது சார்.” என்று கூறியவள்

 

வேற ஏதும் வேணும்னாலும் கேளுங்க சார்..எங்களை பற்றி எதுவுமே தெரியாம கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கீங்க..அந்த நம்பிக்கையை நாங்க உடைக்க மாட்டோம் .அவளும் சரி நானும் சரி உங்க குடும்பத்திற்கு எந்த ஒரு களங்கமும் வர விடமாட்டோம்என்று கூறியவள்

 

ஒரு நிமிஷம் சார்என்றபடி விலகி சென்றவள் வரும் போது அவளின் கைகளில் ஒரு ஃபைல் இருந்தது..

 

அங்கிருந்த யாருமே ஆதிரா பேசும் போது சிறு அசைவை கூட வெளிப்படுத்தவில்லை.ஏன் பாவனாவை காணும் ஆவலில் இருந்த கருண் கூட அவளின் கதையின் தாக்கத்தில் இருந்து வெளிவர இயலாமல் நின்றிருந்தான்.. பாவனாவின் வாயிலாக அவர்களின் கடந்த காலம் அறிந்து இருந்தாலும் அதனை இவ்வளவு இலகுவாக கூறிவிட்டு சென்றவளை நோக்கும் போது பிரம்மிப்பாக இருந்தது.

 

வந்தவள் மனோகரை நோக்கிசார்..பாவனாவோட சொத்து விபரம் இந்த ஃபைல்ல இருக்கு..இதுல அவளோட பர்த் சேர்டிஃபிக்கேட் என்றுமேலும் ஏதோ கூற வந்தவளை தடுத்த மனோகர்

 

ஆதிரா.. எங்களை பொறுத்தவரையும் சொத்து எதுவுமே முக்கியம் இல்லமா..எங்களுக்கு உங்களோட குடும்பம் பற்றி தெரிய வேண்டி இருந்தது..இதெல்லாம் பாவனாவோட வாரிசுக்கு சேர்ந்தா போதும்.”

 

இல்ல சார்என்று மீண்டும் ஏதோ கூற வந்தவளை மறித்தவர்

 

இல்லமா..உன்னோட பேச்சு..கண்ணுல தெரியும் நேர்மை..எதுலயும் பொய் இல்லை..எங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் மருமகளாக்கிக்க பரிபூரண சம்மதம்..ஆனாஎன்று கூறி அவர் தாடையை சொறியவும்

பதட்டமானவள்

 

என்ன சார்?” என்று கேட்கவும்

 

இனி என்னை அப்பானு கூப்பிடு..அப்போ தான் நான் இதுக்கு சம்மதிப்பேன்என்று உரைத்தார்..

 

கண்களில் பெருகிய நீருடன் சம்மதமாக தலை அசைத்தாள்..அதை விடு ஆதிரா..எங்க எங்களோட பேத்தி?” என்று தனலக்ஷ்மி ஆர்வமாக கேட்கவும்

என்ன அண்ணி பேத்தி மட்டும் போதுமா? எங்களோட மருமகளையும் கூப்பிடுங்கஎன்று சுமதி கூறவும் அனைவரும் ஆச்சர்யமாக நோக்கினர்.

 

பின்னே அந்த திருமணபேச்சு தொடங்கியதில் இருந்தே எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்த சுமதி திடீரென அப்படி கேட்டால்..ஆமாம் கருணின் மனநிலை, குடும்பத்தில் அதனால் நடந்த குழப்பநிலைகள் அனைத்துக்கும் பாவனா தான் காரணம் என்ற மனநிலை சுமதிக்கு ஏற்பட்டு இருந்தது.ஆனால் ஆதிரா எப்பொழுது தனது நிலமை பற்றி சுருக்கமாக கூறினாளோ அப்போதே பாவனாவின் முடிவில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்து கொண்டதாலே அவர் அவ்வாறு வினவியது..

 

கண்களை தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்து புன்னகைத்தவாறே

இதோ மாஎன்றபடி உள்ளே திரும்பியள் சுதாவை பார்த்து கண்களை அசைத்து விட்டு சென்றாள்..அவளது விழிஅசைவை படித்த சுதாவும் காபி அடங்கியிருந்த தட்டை தயாராக வைத்த படி பாவனாவின் அறை வாசலில் நின்றிருந்தாள்..

பாவனாவை அழைத்துக்கொண்டு ஆதிரா வெளியே வரவும் ஆதிராவின் கைகளை பற்றியபடியே ஸ்ரீயும் வெளியே வந்தாள்..

 

கரும் பச்சை நிறத்தில் பொன்னிற இழைகளால் கரை நெய்யப்பட்டிருந்த புடவைக்கு தோதாக பொன்னிற பிளவுஸ் அணிந்து ஒற்றை பின்னல் அதில் நிறைந்து போய் இருந்த மல்லிகையுடன் கழுத்தில் ஒரு நெக்லஸும் கைகளில் கரும்பச்சை நிற வளையல்களிற்கிடையில் பொன் வளையல்களும் அணிந்து காலில் கொலுசு சப்தம் ஒலிக்க மென்னடை இட்டு வந்த தன் காதலியை இத்தனை நாளும் பார்க்காத ஏக்கமும் அவள் அழகை விழிகளில் நிரப்பும் ஆர்வமும் கொண்டு திறந்தவாய் மூடாமல் நோக்கி கொண்டு இருந்தான் கருண்.

.

அருகில் இருந்த சிந்து அவனின் வாயை தனது கைக்குட்டையால் துடைப்பது போல பாவனை காட்டவும் லட்ஜையே இல்லாமல் அவளை பார்த்து இளித்தவன் மீண்டும் பாவனாவை நோக்க தொடங்கினான்..அங்கிருந்த அனைவருக்கும் காபியை கொடுத்தவள் கருணின் புறம் குனிந்து கொடுக்கவும் அவள் தன்னருகில் நிறபதை கூட உணராமல் இமைக்காமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

 

கையில் இருந்த காபியை அவன் எடுக்காமல் இருக்கவும் விழி உயர்த்தி அவனை பார்த்தவள் கையில் இருந்ததை எடுக்கும்படி ஜாடை காட்டினாள்.அவளை பார்த்து மண்டையை ஆட்டியவாறே கையில் இருந்த தட்டுடன் காபியை எடுத்தவனை பார்த்து பொங்கிய சிரிப்பை பாவனா அடக்க அருகில் இருந்த சிந்துவோ கெக்கேபெக்கே என்று சிரிக்க தொடங்கினாள்.

 

பெரியவர்களும் அதை கண்டு மெலிதாக புன்னகைக்க ஆதிராவின் அருகில் இருந்த ஸ்ரீயோம்மா..அங்கிதுக்கு ஒன்னுமே தெதியல“: என்று கூறி அரிசிப்பல் தெரிய சிரித்தாள்.. அவள் அவ்வாறு கூறவும் தன் சிரிப்பொலியின் டெஸிபெல்லை உயர்த்திய சிந்துவை பார்த்து முறைத்த கருண் அசடு வழிந்தவாறே தட்டை பாவனாவிடம் கொடுத்துவிட்டான்.. புன்னகைத்தவாறே அவனின் கையில் காபிக்கப்பை திணித்தவள் சென்று அண்ணியின் அருகே நின்று கொண்டாள்.

 

பின்னர் தனலக்ஷ்மி ஸ்ரீயை பார்த்துதங்கம்..இங்க வாமாஎன்று அழைக்கவும் ஸ்ரீயோ தாயை அண்டினாள். அவளின் தலையை புன்னகையோடு தடவிய ஆதிரா

ஸ்ரீ பாட்டி தான்மா..போடா குட்டிஎன்று கூறவும் ஹூஹூம் என்று தலை அசைத்தவள் ஆதிராவையே ஒண்டினாள்..

 

அப்பொழுது வாசலில் ஸ்ரீக்குட்டிஎன்ற கவினின் அழைப்பு கேட்கவும் முகம் பிரகாசமுற திரும்பியவள் ப்பாஎன்று அழைத்தபடி ஓடி சென்று அவன் கால்களை கட்டிக்கொண்டாள்..

ஹாஹா.அம்முக்குட்டிஎன்று கூறியபடி அவளை தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டவன் அவளின் பிஞ்சு நெற்றியில் முத்தமிட்டவாறேஸ்ரீ குட்டி அழகா இருக்காளேஎன்று கூற கிளுக்கி சிரித்தவாறே அவனின் தோளில் முகம் பதித்துக்கொண்டாள்..

 

இந்த காட்சியை ஆதிரா தவிர அங்கிருந்த அனைவருமே திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

ஸ்ரீயும் கவினும் ஒன்றி போனதை பார்க்கவே அனைவரின் மனதில் தியாகமாக இந்த திருமணமோ என்று எண்ணி இருந்த எண்ணம் அழிந்து போனது எனலாம். அதிலும் கருணோ மகிழ்ச்சியில் சிறிது கலங்கியே விட்டான்..பாவனாவோ அண்ணியை அணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்..இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருந்தனர்..

 

ஸ்ரீயுடன் உரையாடி விட்டு திரும்பியவன் நிம்மதி நிறைந்த முகத்துடன் இதழில் தவழ்ந்த புன்னகையுடன் தங்கள் இருவரையும் திருப்தியாக பார்வை இட்டு கொண்டிருந்த ஆதிராவை கண்டான்..பட்டு புடவையில் எளிய அலங்காரத்துடன் அம்சமாக விளங்கியவளை பார்த்தவனுக்கு மனதுக்குள் ஒரு நொடி சலனம் வந்தது என்னமோ உண்மைதான்..

 

ஆனால் நொடியில் அதை மறைத்து ஆதிராவின் அருகில் சென்று ஸ்ரீயை அவளின் கைகளில் தந்தவன்,தனது தந்தையை பார்த்து என்னபா..இனி நிச்சயத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம் ? ஐயரையும் கூட்டி வந்தேன்எனவும் பெரியவர்கள் சம்மதமாக தலை அசைத்தனர்..பின்னர் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் நிச்சயிக்க பட்டு இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றி கொள்ள நிச்சயம் நல்ல படியாக நிறைவுற்றது..

 

அனைவரும் பின்னர் கிளம்ப போக கவினின் காதை கடித்தான் கருண்.ஆதிரா கேள்வியாக நோக்கவும் கண்ணை சிமிட்டியவன், தனது குடும்பத்தினரிடம் கருண் பாவனாவை வெளியில் அழைத்து செல்ல விரும்புவதாக தெரிவித்தான்..

 

எங்களுக்கு சம்மதம்..பொண்ணு வீட்டுக்காரங்கள கேளுஎன்று மனோகர் கிண்டலாக கூறி ஆதிராவை பார்த்து சிரிக்கவும் அவரை பார்த்து தானும் கிண்டலாக சிரித்தவன் ஆதிராவின் அருகில் சென்று அருகே நின்றிருந்த ஸ்ரீயை தூக்கி கைகளில் ஏந்தி மறு கையால் ஆதிராவை அணைத்தவாறு நின்று

பொண்ணு வீட்டுக்காரங்க எங்களுக்கும் சம்மதம் பாஎன்றான்.

 

கவின் தோளை சுற்றி கையை போடவும் அவஸ்தையாக நெளிந்த ஆதிரா அவன் கூறியதை கேட்டவுடன் அதிர்வாக அவனை நோக்கினாள்..அவனது பதிலை கேட்டு மனோகர் கலாட்டாவாக சிரித்ததோ கருண் பாவனாவை இழுத்து வந்து தன்னிடம் அனுமதி கேட்டதோ பின்னர் அவளை அழைத்து சென்றதோ கண்ணில் பதிந்தாலும் கருத்தில் பதியாமல் நின்றிருந்தாள்.

 

பின்னர் அனைவரும் வெளியேறவும் தோளில் இருந்த கவினின் கரங்களை தட்டியவள்என்ன நடிப்பு இது?” என்று முகத்தை சுளித்தவாறு கேட்கவும் ஸ்ரீயை இறக்கிவிட்டவன்

 

ஸ்ரீ குட்டி சுதா ஆன்டி உள்ள இருப்பாங்க அவங்களை கூப்பிடு மாஎன்று அனுப்பி வைத்துவிட்டு ஆதிராவின் பக்கம் திரும்பி முறைத்தான்.

 

என்ன முறைப்பு?”

 

உனக்கு முன்னமே சொல்லி இருக்கேன் ஆதிரா. நீயும் நானும் கணவன் மனைவி இல்லை என்றது நம்ம இரண்டு பேருக்குள்ள தான்..இரன்டு பேருகுள்ள மட்டும் தான்..உன்னோட கணவன் ஆனா பாவனாவோட அண்ணன் நான்..ஸோ இந்த நடிப்பு மண்ணங்கட்டி என்று உளறுறதை நிறுத்து..நான் வரேன்என்றவாறு வெளியேறியவனை பார்த்து முகவாய்க்கட்டை தோளில் இடித்தவாறே உள்ளே ஸ்ரீயை தேடி சென்றாள் ஆதிரா..

 

கார் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது..

 

கருணினதும் பாவனாவினதும் முகத்தில் நிறைவான புன்னகை ஒன்று நிறைந்திருந்தது..பாவனா கருணின் கையுடன் தனது கரத்தினை பிணைத்த படி அவனது தோள்களில் சாய்ந்து இருந்தாள்.

 

Advertisement