Advertisement

11

ஆதிரா அண்ணீயா என் வாழ்க்கையா என்று வரும் போது நிச்சயம் என்னால என் வாழ்க்கை தான் என்று முடிவு எடுக்க முடியாது கருண்

இப்படி எண்ணூபவளுக்கு மகிழ்வை அளிக்க வேண்டியது தன் கடமை என்றும் விளங்கியது. தன்னை விட சிறூ பெண் தனக்காக தன் வாழ்வை தியாகம் செய்ய முன் வரும் போது தான் அமைதியாக இருப்பது சுயநலத்தின் உச்ச கட்டமாக தோன்றியது ஆதிராவிற்கு..

 

அப்பொழுது மட்டும் அல்ல வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் போதும் சரி ஸ்ரீயை அழைத்து வந்து அவளை பாவனாவை கவனித்த போதும் சரி மனதினுள் சிந்தனை வயப்பட்டவாறே செயற்பட்டாள்..

 

அந்த சிந்தனைகள் இறுதியாக எவனோடு மல்லுக்கட்டிவிட்டு வந்தாளோ அவன் கவின் சக்கரவர்த்திக்கு அழைப்பை ஏற்படுத்த வைத்தது..

 

வீட்டினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணும் வேளையில் தனது ஃபோன் அழைக்கவும் அனைவரையும் நோக்கி மன்னிப்பு வேண்டிய படி எரிச்சலுடன் அழைப்பை துண்டிக்க போன கவின் அதில் தெரிந்த ஆதிராவின் பெயரை நோக்கிவிட்டு அவசரமாக அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

 

அந்தபுறம் ஒரு ஹல்லோ கூட இல்லாமல்

நாம கல்யாணம் பண்ணிக்கலாம்என்று வந்த பதிலில் திகைத்தவனுக்கு புரையேறவும் அருகில் இருந்த சிந்து அவனின் தலையை தட்டி

பாத்துண்ணாஎன்றாள்.

 

அவளை நோக்கி நன்றிபார்வையை வீசியவன் தண்ணீரை எடுத்து குடித்து விடு

நான் இப்போ சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.. கொஞ்சம் கழித்து நானே எடுக்கிறேன் என்று கூறி விட்டு தன்னை நோக்கி வந்த கேள்வி பார்வைகளை வாயில் அடைத்த உணவுடன் சேர்த்து விழுங்கினான்.

 

அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்கி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு குட்நைட்டுடன் அறைக்கு ஓடிய கவினை அனைவரும் விசித்திரமாக நோக்கினர்.

 

எப்பொழுதுமே கவின் இப்படி அவசர அவசரமாக செயற்பட்டு அவர்கள் கண்டது இல்லை.அதைவிட அவன் எதையோ ஒன்றை மறைக்க முற்படுவது போலவும் செயற்பட்டது விந்தை தான்..ஆனால் எப்பொழுதுமே கவின் தவறான முடிவுகளை எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கை அங்கிருந்த அனைவருக்கும் இருந்ததனால்

அவனை மறந்து விட்டு வேறு கதைகளுக்கு தாவினர்.

 

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

 

ஆதிராவிற்கு அழைத்துவிட்டு அந்த புறம் கேட்ட பாட்டில் இலயித்து இருந்த கவின் அந்தபுறம் கேட்ட ஆதிராவின் ஹல்லோவில் தலையை ஒரு முறை குலுக்கிவிட்டு

 

சொல்லு ஆதிரா..அப்போ என்ன சொன்ன?”

 

நம்ம கல்யாணம் பண்ணீக்கலாமா என்று கேட்டீங்களே? அதற்கு எனக்கு சம்மதம்

 

என்ன திடீர் ஞானோதயம்? என்னமோ தாம்தூம் என்று குதிச்சிட்டு போன?”

 

“….”

 

ஓகே..ஓகே..லீவ் இட்..சரி சொல்லு.. இந்த முடிவை நான் எங்க வீட்ட சொல்ல முன்னம் உன்னோட கொஞ்சம் பேசனுமே?”

 

நானும் உங்ககூட கொஞ்சம் பேசனும்

 

குட்..அப்போ நாளைக்கு நம்ம காலேஜுக்கு பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரென்ட்கு வந்திடுறீயா?”

 

ஹ்ம்ம்ம்..என்ன நேரம்?”

 

நாளைக்கு உனக்கு என்ன நேரம் வர முடியும்..ஆஃப்டர் ஸ்கூல் அப்பிடியே வந்துடுறியா?”

 

ஆஹ்..அது எனக்கும் ஈஸியா இருக்கும்..வந்துடுறேன்

 

ஹ்ம்ம்..வேற என்ன?”

 

இல்..இல்லை..நாளைக்கு பார்க்கலாம்..வைச்சிடவாஎன்று வைக்க போனவளை

ஹேய் கொஞ்சம் பொறு..பொறு..” என்று தடுத்தான்..  அவ்வாறு தடுக்கவும் என்னமோ ஏதோ என்று நொடியில் பயந்தவள்

 

என்..என்ன?”

 

இல்லை..நாளைக்கு வாற நேரம் ஸ்ரீயும் உன்கூட வரட்டும்

 

அவள் எதுக்கு?”

 

இனி உன்னோட ஸ்ரீயோட உலகத்துக்குள்ள நானும் வர போறேன் என்றதை ஏத்துக்கோ..இனி ஸ்ரீ எனக்கும் பொண்ணா இருக்கனும்..இருப்பா

அதற்கு அவள் பதில் கூற முதல்பீப் பீப்என்ற ஒலியே ஆதிராவின் காதை அறைந்தது..

ஏசியின் சில்லென்ற குளுமை முகத்தை அறைய அந்த ஹாட்டெலின் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த கவினின் கண்கள் அந்த கண்ணாடி நுழைவாயிலையே வெறித்துக்கொண்டு இருந்தது..ஆதிராவை சந்திப்பதற்காக அன்று இருந்த பிஸ்னஸ் டீல்களை எல்லாம் கருணிடம் ஒப்படைத்துவிட்டு சொன்ன நேரத்திற்கு முன்னரே வந்து அங்கு அமர்ந்திருந்த கவினுக்கு தன்னை நினைத்து தன் முடிவை நினைத்து வியப்பாக இருந்தது.

 

ஆதிராவை சந்தித்த நாளில் இருந்து இருவருக்குள்ளும் சண்டைதான் ஏற்பட்டு இருந்தது..அப்படி இருக்க வாழ்க்கை முழுவதையும் அவளுடன் கழிக்க எண்ணியுள்ளான்..அதுவும் ஒத்துக்கொள்ளாதவளை கார்னர் பண்ணியுள்ளான்..அப்படி என்ன கருண்பாவனாவின் திருமணத்தை நடத்த இயலாத நிலை..இவன் நினைத்து இருந்தால் நிச்சயம் அந்த திருமணம் நிகழ்ந்து இருக்கும்..

 

ஆனால் அதன் பிறகு உள்ள அவர்களின் வாழ்க்கை? அதை எண்ணித்தான் சுமூகமாகவே அந்த திருமணத்தை நிகழ்த்த எண்ணியது.அந்த எண்ணம் இப்பொழுது இவனை எங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது? வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல இருந்தது.. இவனுக்கும் ஒரு திருமணம்.அதுவும் ஒரு விதவை பெண்ணுடன்..அப்பாவென்று அழைக்க ஒரு குழந்தை..காலத்தின் போக்கு விந்தை தான்..இப்படி பலவற்றை எண்ணிக்கொண்டு இருந்தவனின் பார்வை வட்டத்தினுள் விழுந்தனர் ஆதிராவும் ஸ்ரீயும்.

 

தங்களை நோக்கி விரைந்து வந்த கவினை நோக்கி சங்கடமான புன்னகையை வெளியிட்ட ஆதிரா ஸாரி..லேட் ஆக்கிட்டமா? இந்த டைம் ஒரே ட்ராஃபிக் அதான்..ஆனாலும் நேரம்என்று இழுத்தவாறு தன் கைக்கடிகாரத்தை பார்க்கபோனவளை

 

இல்ல ஆதிரா..நான் கொஞ்சம் முன்னமே வந்திட்டேன்என்ற கவினின் குரல் தடுத்தது..ஓஹ்என்றவள் இனி என்ன என்பதாய் நோக்கவும் அட்சரம் பிசகாமல் அவளின் விழி மொழியை படித்தவன்

 

உள்ள போகலாம் வாஎன்றவன் ஸ்ரீயை தூக்குவதற்காக கையை அவள் புறம் நீட்டினான்..

 

அவன் தன்னை நோக்கி வருவதை கண்டவுடன் அம்மா என்ற படி ஆதிராவின் முந்தானையின் பின்னே ஒளிந்த ஸ்ரீ தாயை அண்ணாந்து பார்த்தாள்..ஸ்ரீ ஆதிராவை அண்ணாந்து நோக்க கவினும் ஆதிராவின் முகத்தையே நோக்கினான்.ஆதிராவிற்கு கவின் தன்னை நோக்குவது நன்கு தெரிந்தாலும் அவன் புறம் பார்வையை திருப்பாது குழந்தையை நோக்கி பார்வையை திருப்பியவள் குழந்தையின் உயரத்திற்கு மண்டி இட்டு அமர்ந்து

 

ஸ்ரீ..அவர் தான் உன்னோட அப்பா.” என்று மெல்லிய குரலில் எடுத்துரைத்தாள்.

 

கவினே இதை எதிர்பார்க்கவில்லை..ஆனால் அவள் தன்னை தன் குழந்தையிடம் தந்தையாக அறிமுகப்படுத்திய நொடி ஏதோ ஒன்று உள்ளே அசைந்தது உண்மை.

ப்பா எந்தாஎன்று அடுத்த வினாவை ஸ்ரீ எழுப்பவும் ஒரு புன்னகையை வலிய உதட்டில் தவழ விட்டவள்

 

நம்ம சுதா ஆன்டியோட அங்கிள் இருக்காங்க ?”

 

ஹ்ம்ம்

 

அவங்களுக்கும் மதன் அண்ணாக்கும் அங்கிள் எப்படியோ இனி நமக்கு இவர் தான்என்று குழந்தைக்கு எடுத்து கூறியவள் இனி என்ன கேள்வி வருமோ என்று உள்ளூக்குள்ளே கலங்கி போனாள்.

 

அவளின் கலக்கத்தை அறியாத குழந்தையோ

ம்மா..ப்பா நமக்கு என்ன தெய்வார்என்று வினவவும் சங்கடமாக கவினை நோக்கினாள் ஆதிரா.

 

உலகின் பல மொழிகளை தன் நாவில் விளையாட விடும் அந்த பெரிய பிஸ்னஸ் மேன் கவின் சக்கரவர்த்தியோ அந்த குழந்தையின் மொழி விளங்காமல் பே என்று முழித்தவாறு நின்றிருந்தான். ஆதிரா தன்னை நோக்கவும்

 

ஆதிரா..இவ என்ன கேட்கிறா எனக்கு புரியலையேஎன்று பரிதாபமாக கேட்டவனை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதனை அடக்கியவாறு

அப்பா என்ன செய்வாங்க? என்று கேட்கிறா என்றாள்..

 

ஓஹ்என்றவன் ஆதிராவை போலவே ஸ்ரீயின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவாறு

ஸ்ரீயோட அப்பா அவங்களை அவங்க அம்மாவை நல்லா பார்த்துப்பார்..அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் செய்து கொடுப்பார்..ஆனா அதெல்லாம் ஸ்ரீ அவங்க அப்பாவை அப்பானு கூப்பிட்டாதான்

என்று கூறவும் நாடியில் கைவைத்து யோசித்தவள்

 

பெதிய சாக்கி ததுவியா?”

 

ஹ்ம்ம் தருவேனே

 

அப்போ நிதைய பொம்மை?”

 

கட்டாயமாஎன்று கூறி ஸ்ரீயை சிறிது தன்னருகில் இழுத்தான்.அவனின் இழுப்பிற்கு ஏற்ப சென்று அவனின் கைவளைவுக்குள் நின்று திரும்பி அவனை அண்ணாந்து நோக்கியவள் அவனின் கன்னத்தை எக்கி தடவி

 

அம்மாவை அழ வித கூடாது..ப்ராமிஸ்என்று கூறவும் அதிர்ந்து போய் ஆதிராவை நோக்க அவளும் கவினை தான் பார்த்தாள்..ப்ராமிஸ்என்று கூறி அவளை தூக்கியபடி எழுந்தவன் ஆதிராவிற்கு எழுவதற்காக கையை நீட்டினான்..

 

அதை காணாதவாறே எழுந்த ஆதிரா பாந்தமாக பொருந்தி போன கவினையும் ஸ்ரீயையும் பார்த்து பெருமூச்சு விடவும் அதனை பார்த்தவாறே ஸ்ரீயை நோக்கி திரும்பியவன்அம்மா எப்போ அழுதாங்க குட்டி?”என்று கேட்டான்.

 

பச்..அதெல்லாம் எதுக்கு இப்போஎன்று தடுக்க வந்த ஆதிராவை டீலில் விட்டவன் மீண்டும் ஸ்ரீயை பார்த்து அதே கேள்வியை கேட்க நேத்து அழுத்தாஎன்று உதட்டை பிதுக்கி அழகாக மொழிந்தாள் குழந்தை..

 

ஹ்ம்ம்என்றவன் இனி நம்ம அம்மாவை அழ விடவேணாம் சரியாஎனவும்

ததிப்பாஎன்று தலை அசைத்து கன்னத்தில் முத்தமிடவும் அந்த இடத்திலேயே சமைந்து நின்ற கவினுக்கு மனம் முழுதும் தான் ஸ்ரீயின் அப்பா என்ற எண்ணம் வியாபித்து உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஒரு குழந்தையின் முதல் முத்தம்..ஒரு பிஞ்சின் ஸ்பரிசம்..சிறிது நேரத்தில் தன்னை சமன்செய்தவன் ஆதிராவை அழைத்துக்கொண்டு ஸ்ரீயை தூக்கியபடியே உள்ளே உணவகத்துக்குள் நுழைந்தான்.

 

ஸ்ரீயுடனேயே ஒன்றி போய் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டிருந்த கவினுக்கு ஆதிரா என்ற ஒருத்தி தன் முன்னே அமர்ந்து இருப்பது சுத்தமாக மறந்தே போனது..ஸ்ரீயும் கவினும் தங்களுக்குள் ஒன்றி இருப்பதை பார்த்தபோது ஒரு புறம் நிம்மதியாகவும் மறுபுறம் ஏதோ இனம் தெரியாத பயமாகவும் இருந்தது ஆதிக்கு.

 

பொறுத்திருந்து பார்த்தவள் இருவரும் தன்னை கவனிப்பது போல தோன்றாததால்

க்கும்என்று தொண்டையை செறுமினாள்.. பட்டென்று இருவரும் இவள் புறம் திரும்பவும் இருவரை பார்த்துமே முறைத்தாள்..

 

ம்மாஎன்று ஸ்ரீ ஆதியின் புறம் சரிய தொடங்கவும் அவளை பற்றி நிறுத்திய கவின்

ஸ்ரீ குட்டி அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் பேசனும்..நீங்க போய் அதோ அங்க இருக்கிற குட்டி அக்கா அண்ணாக்களோட சேர்ந்து போய் விளையாடுறீங்களா?”

 

ஹ்ம்ம். ம்மா..போகத்தாஎன்று ஸ்ரீ ஆதிராவின் அனுமதி கேட்கவும்

விழிகளாலேயே மெச்சிய கவின் ஆதிராவை பார்த்து ஜாடை காட்டவும்

சரி குட்டி..ஆனா தூர எங்கயும் இல்ல..இதோ இதுக்குள்ள தான் இருக்கனும் சரியாஎன்று கேட்க ஹ்ம்ம்ம்என்று சமத்தாக தலை அசைத்தாள்..

 

அவள் சம்மதித்தவுடன் அவளை தூக்கி சென்று அங்கு குழந்தைகள் விளையாட என்றூ அமைக்க பட்டிருந்த பகுதிக்குள் விட்ட கவின் அங்கு பொறுப்பாக நின்றவருக்கு ஸ்ரீயை கூடுதல் கவனத்துடன் பார்க்கும் படி கூறி சிறுதொகை பணத்தையும் அளித்து விட்டு வந்தான்..

 

அவனின் செயற்பாடுகளை கவனித்தவாறே இருந்த ஆதிரா அவன் அமர்ந்தவுடன்

குழந்தையை பார்த்துக்க பணம் கொடுத்தது தப்பு கவின்என்றாள்.

 

ஏன்? நம்ம குழந்தை ஸேஃப் இருக்க போறது தான் நமக்கு முக்கியம்என்று கூறவும்

ம்ம்என்று புருவம் உயர்த்தியவள்

இன்றைக்கு கிடைச்ச உறவை பற்றி நீங்க இவ்வளவு யோசிக்கும் போது, அவன் ஸ்ரீயில எடுக்கிற கூடுதல் அக்கறையால மற்ற குழந்தைகளை கவனிக்காம விட்டு ஏதும் ஆகிடுச்சுனா,பெத்தவங்கள பற்றி யோசிச்சிங்களா?”

 

ஆதிரா.. போதும்..உன்னோட விதண்டாவாதம் கேட்க நான் இங்கு வரல..ஸ்ரீ இப்போ என்னோட குழந்தை..எனக்கு என்னோட குழந்தை மட்டும் தான் முக்கியம்..”

 

ஸ்ரீ உங்களோட குழந்தை இன்னும் ஆகல

 

ஏய்என்று உறுமியவன் ஆழ மூச்சை எடுத்து விட்ட வாறே நீ சம்மதம் சொல்லி தான் நான் இங்க வந்திருக்கேன்

 

ஆனா நமக்கு இன்னும் கல்யாணம் முடியல

 

அது கண்டிப்பா நடக்கும்

 

அத பத்தி பேச தானே இங்க வந்திருக்கோம்

 

ஏட்டிக்கு போட்டியாக ஆதிரா கதைக்கவும் கதிரையில் நன்கு சாய்ந்து அவளை உறுத்து விழித்தவன்சரி இந்த திருமணத்துக்கு உன்னோட நிபந்தனைகளை சொல்லுஅவன் சரியாக தன்னை புரிந்துகொண்டதை கண்டு வியந்தவள்

 

இந்த திருமணத்தால அதாவது என்னோட கழுத்துல தாலி ஏறுறதால உங்க உயிருக்கு ஆபத்து வர இருக்கு..இப்போவும் உங்களுக்கு என்னை திருமணம் பண்ணிக்க சம்மதமா?”என்று கேட்டு முடிக்க ஹா..ஹாஎன்று பெருங்குரல் எடுத்து சிரிக்க தொடங்கினான் கவின்கவின் சக்கரவர்த்தி..

 

அவன் சிரிப்பதை சற்று பயம் கலந்த பார்வையுடன் நோக்கிக்கொண்டிருந்த ஆதிராவை கண்டதும் சிரிப்பை நிறுத்தியவன்எனக்கு குறிவைச்சு நிறைய நிறைய வில்லன்கள் சுத்துறாங்க..அதுக்கெல்லாம் பயந்தா நான் பிஸ்னஸே பண்ண முடியாது..எனக்கு மட்டுமில்ல உனக்கோ நம்ம குடும்பத்துக்கோ எந்த பிரச்சனையும் இல்லாம பார்த்துக்க என்னால முடியும்

அவன் நம்ம என்று இணைத்து கூறியதில் மனதினுள் ஒரு வித மகிழ்ச்சி எழுந்தாலும் அதைக்காட்டி கொள்ளாமல்

என்னோட கடந்த காலம் பற்றி

 

நீயா சொல்லுறவரை கேட்கமாட்டேன்

 

அடுத்து..நாம..திருமணம்..அதுக்கு பிறகு..அதுஎன்று தடுமாறவும் அவளை பார்த்து ஆறுதலாக புன்னகைத்தவன்

 

நாங்க ஜஸ்ட் கோ பசெஞ்சர்ஸ் போல தான்..உன்னை மீறி எதுவும் எதுவுமே நடக்காது..பிகாஸ் எனக்கும் இந்த கல்யாணத்துல எல்லாம் இன்டெரெஸ்ட் இல்லை..இப்போ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறது முழுக்க முழுக்க குடும்பத்துக்காக தான் சரியா?” என்று கேட்கவும் தயக்கமாக புன்னகைத்தபடி ஆனால் உறுதியாக தலை அசைத்தாள் கவினின் இல்லாள் ஆக போகும் ஆதிரா..

 

கவின் ஆதிரா இருவரும் தத்தமது பக்கம் தெளிந்த பின்னர் தமது முடிவுகளை குடும்பத்தினரிடம் எடுத்து சென்றனர்..

 

அன்றே கவின் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்று கூட்டி தனது முடிவை அறிவிக்கவும் அனைவருமே என்ன பதில் கூறுவது என்று தடுமாறி போக

நோ நான் சம்மதிக்க மாட்டேன்என்றபடி எழுந்து கொண்டான் கருண்..

 

கருணை நோக்கிய கவின்கருண் இப்போ நான் பேசுறது என்னோட கல்யாணம் பற்றிஎன்று அழுத்தி கூறவும் மறுப்பாக தலை அசைத்தவன்நீ எனக்காக தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க..எனக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்யாத கவின்என்று சற்று குரல் உயர்த்தி கூறினான்..

 

அவனை புருவம் உயர்த்தி பார்த்த கவின் பார்த்தீங்களா அத்தை உங்க மகனுக்கு கோவம் அதுவும் என் மேல வருதுஎன்று சுமதியிடம் கூறவும் தணிந்த கருண் கவினின் அருகில் சென்று அவன் கையை பற்றியபடி

 

டேய்..எனக்காக உன் வாழ்க்கை பலி ஆகிறத நான் விரும்பல்ல டா..நீ இப்படி ஒரு முடிவெடுக்க நான் காரணம் இல்லை என்று சொல்லு பார்ப்போம்

Advertisement