Advertisement

அத்தியாயம்…9

அந்த இடத்தில் இந்துமதி வாசுதேவனை சத்தியமாக  எதிர்பார்க்கவில்லை. வாசுதேவனும் முதலில் இந்துமதியை பார்த்து அதிர்ந்தான் தான்.  பின் ஒரு  சுவாரசிய பார்வையை அவள் மீது செலுத்தியவன், தன் டீமின் மற்றவர்கள் பக்கம்  தன் பார்வையை செலுத்தியவனின்  அந்த குறுநகை இந்துமதிக்கு ஏனோ சரியானதாக  படவில்லை.

மறறவர்கள் இந்துமதியை வாசுதேவனுக்கு அறிமுகம் படுத்த,  வாசுதேவனும் புதியதாக அவளின் பெயரை அறிந்தது போல்.

“அலோ.” என்று கை குலுக்க கை நீட்டியவனின் கையில் தன் கையை இந்து மதி பதித்தாள். அங்கு இது போல் கை பிடிப்பது எல்லாம் சர்வ சாதரணம்.  அப்படி இருக்க  வாசுதேவன் கை நீட்டும் போது, தான் கை குலுக்கவில்லை என்றால் தான் அது மற்றவர்களின் பார்வைக்கு வித்தியசமாக தெரியும்.

அது மட்டும் அல்லாது இந்துமதி ஆண்களை பார்த்தால் அப்படியே ஒதுங்கி போகும் பத்தாம்பசலி தனத்தையும் இது வரை அவர்களிடம் காட்டியது கிடையாது. இப்போது புதியதாக வாசுதேவனுக்கு கை குலுக்கவில்லை என்றால் தான் தன்னை மற்றவர்களுக்கு காட்டி கொடுக்கும் என்று நினைத்து  நீட்டிய வாசுதேவனின் கையை இந்துமதி பிடிக்க, அவளின் கையை பிடித்தவனோ அதை விடாது  கையை பிடித்து கொண்டே தன்னிடம் .

“ எத்தனை வருடம் எக்ஸ்பிரியன்ஸ்.? சமீபத்தில் முடித்த ஜாப் டீடையல்ஸ் பற்றி பேசிக் கொண்டு இருந்தவனுக்கு  இந்துமதி தன்னால் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலுமே, அவன் கை பிடியில் இருக்கும் தன் கையை விடுவிக்க முயற்ச்சி செய்து கொண்டு தான் இருந்தாள்.

அது முடியாது போகவும். “ வாசுதேவன் கொஞ்சம் என் கையை விடுறிங்கலா.? என்று சொல்லி வாசுதேவன் பற்றிய தன் கையை மறந்தது போல் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று நினைத்து அனைவரின் முன்னும் சொன்னதால் வாசுதேவன்.

சிரித்துக் கொண்டே. “ சாரி கவனிக்கவில்லை.” என்று வாசுதேவன் இந்துமதியிடம்  மன்னிப்பு வேண்ட.

இந்துமதியும். “ இட்ஸ் ஓகே வாசுதேவன்.” என்று அது ஒன்றும் இல்லை என்பது போல் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு வந்தவளுக்கு, மனது ஒரு நிலையில் இல்லை. 

என்ன இது ஏற்கனவே என்  நிச்சயத்தை நினைத்து குழம்பி போய் இருக்கும் போது,  இது என்ன புதியதாக ஒரு பிரச்சனை என்று அவள்  நினைக்கும் போதே, இது புது பிரச்சனையா.? ரொம்ப பழைய பிரச்சனை. அதுவும் நீயே வர வழைத்து கொண்ட  பிரச்சனை என்று அவள் இன்னொரு மனது சொல்லும் போதே,

  இந்த பிரச்சனை மட்டுமா நானே வரவழைத்து கொண்டது. தனக்கு வந்தது எல்லாம் தானா வந்த பிரச்சனைகள்  கிடையாது. நானே.  நானே என்றால், இதோ இந்த வாய். இதை கொஞ்சம் மூடி  இருந்து இருந்தால்,   எனக்கு அனைத்துமே நல்ல படியாகவே முடிந்து இருக்கும்.

அன்று யம்மீ அவள் கல்யாணத்திற்க்கு ட்ரீட் கொடுத்தாள். நல்ல  ஸ்டார் ஒட்டலில். இது போல் ஓட்டலுக்கு எல்லாம் நாம் போவதே அபூர்வம். அப்படி இருக்க  அங்கு எது எது நல்லா இருக்கும் என்று கேட்டு சாப்பிடுவதை விட்டு விட்டு எனக்கு என்ன வந்தது.

அவளை மணப்பவன்  அழைத்து பேசினால் என்ன .? இல்லை யமுனாவே பேசினால் என்ன என்று, ஜாலியா பேசிட்டு வரதை விட்டு விட்டு எனக்கு வந்த பிரச்சனை  அவளுக்கும் வர கூடாதுன்னு அட்வைஸ் பண்றேன்னு  செய்தேன்.

அதனால எனக்கும் பிரச்சனை, அவளும் மனது நிம்மதி இல்லாம தற்கொலை வரை போய். அதனால நான் பயந்து. அதோட பிரச்சனை முடிந்ததா. இதோ என் கல்யாணம் வரை அந்த பிரச்சனை நீண்டு என் மனது நிம்மதியும் போய் என்று யோசித்தவளுக்கு இதன் ஆரம்பபுள்ளி எது.? என்று யோசித்தவளுக்கு விடையாக வாசுதேவன் தான் வந்தான்.

ஆம் யமுனாவிடம் நீயே வலிய போய் பேசாதே பின் அவன் உன்னை கீழா பார்ப்பான் என்று  சொன்னது எல்லாம் அவளின் சொந்த அனுபவத்தில் அவள் படித்த  பாடம்.

அதுவும் அவளின் பதினைந்தாம் வயதில். அப்போது அவள்  பத்தாம் வகுப்பில்  படிக்கும் போது. அனைவரும் பொது தேர்வு என்று பாடத்தில் கவனமாக  இருந்தார்கள் என்றால்,

 இந்துமதியின் கவனம் முழுவதும்  பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வாசுதேவன் மீது தான் இருந்தது. வாசுதேவன் அந்த பள்ளியில் அனைத்திலுமே முதன்மையாக இருந்தவன். 

பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதலாவதாக வந்து பள்ளிகே பெருமை தேடி தந்தவனை, அந்த பள்ளி நிர்வாகமே  கொண்டாடும் போது, அங்கு படிக்கும் மாணவ மாணவியர்கள் கொண்டாட மாட்டார்களா.?

வாசுதேவன் நடந்து சென்றாளே, அவனை பார்க்காது யாரும் இருக்க மாட்டார்கள். அவன் படிப்பில் மட்டும் கிடையாது, விளையாட்டிலும் பங்கு பெறுவான். அதன் வெற்றிக்கும் இவன் பங்கு நிச்சயம் உண்டு. பார்க்கவும்  மிக அழகாகவே இருப்பான்.

பின் சொல்லவும் வேண்டுமோ, அந்த பள்ளியில் நாயகனாக வாசுதேவன் நடமாடிக் கொண்டு இருந்தவனின் மீது தான் அந்த பள்ளியில் படிக்கும் மாணவியர்களின் பார்வை இருக்கும்.

ஆனால்  வாசுதேவன் யாரையும் பார்க்காது இருந்தவன் ஏனோ இந்துமதியை கடக்கும் போது மட்டும் திரும்பி பார்த்து செல்வான்.  இதை இந்துமதி கவனித்தாளோ இல்லையோ, அவனையே பார்த்து கொண்டு இருந்த மற்ற பெண்கள் கவனித்து அதை இந்துமதியிடம் சொல்ல,

அவளும்  வாசுதேவனை  பார்ப்பாள் தான்.  அவளின் தோழிகள் . “ அவன் உன்னை பார்த்தான்.” என்று சொன்னதில், அதை  உறுதிபடுத்திக் கொள்ள இவள் இன்னும் உற்று நோக்கியதில், தோழிகள் சொன்னது உண்மை தான் என்று அறிந்த அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தாள் என்று சொல்ல இயலாத நிலையில் தான் அவள் அப்போது இருந்தாள்.

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவியர்களும் அவனை பார்க்க, அவன் தன்னை பார்ப்பது அந்த  டீன் ஏஜில் இருந்த இந்துமதிக்கு  வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, இரவு தூங்காது அவனை எப்போதாடா பார்ப்போம் என்று காத்திருந்து பள்ளிக்கு அவன் பார்வைக்காக சென்ற காலம்  எல்லாம் உண்டு,

அவள் மயக்கத்திற்க்கும் முடிவு கட்டும் காலமும் ஒன்று வந்தது. அன்று தான் பன்னிரெண்டாம் பொது தேர்வு முடிவைடைந்து மாணவ மாணவியர்கள் எல்லாம்  விடுதலை விடுதலை என்று கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.

 அப்போது  இந்துமதி மெல்ல வாசுதேவனின் அருகில் போய் நின்றாள்.

இது வரை பார்வையால் மட்டுமே பார்த்து கொண்டு இருந்த  இருவர் முதலில் வாய் திறந்து வாசுதேவன் தான். “ என்ன.?” என்று கேட்டான்.

அந்த என்ன என்ற கேள்வியை  கேட்ட விதம். இப்போது இந்துமதி ஆனால் அவனின் அந்த ஒட்டாத பேச்சில்  சுதாகரித்து இருந்து இருப்பாளோ என்னவோ, ஆனால் அன்று இருந்த  இந்துமதியோ  அவனின் அந்த ஒட்டாத குரலின் வேற்றுமையை  கூட அறியாது.

“ எப்படி எக்ஸாம் எழுதினிங்க.?” என்று கேட்டவளுக்கு, பதில் அவன்  கொடுக்காது,  பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவன் தான்.

“ அவன் எப்படி எக்ஸாம் எழுதி இருக்கான்  என்று கேட்கும் தகுதி  நம்ம  பள்ளியில் படிக்கும் யாருக்கும் கிடையாது.” என்ற அந்த ஆணவமான பேச்சு கூட அன்று இந்துமதிக்கு இனித்தது. அது தன்னவனை உயர்த்தி கூறியதாலோ, என்னவோ, 

“ஆமாம். ஆமாம்.” என்று மகிழ்ந்து போய் தான்  இந்துமதி சொன்னாள்.

அவளின் மகிழ்ச்சியை பார்த்த பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தவர்கள் இவளை ஒரு கேவலமான பார்வை பார்க்க. பாவம் அதை எல்லாம் இந்துமதி கவனிக்கும் நிலையில் இல்லை.

இன்றோடு இவன் பள்ளிக்கு வர மாட்டான். இன்று தன் மனதை திறந்தால் தான். எனக்கும் அவனை பிடித்து இருக்கு என்று சொல்லி விட்டால் நல்லது தானே என்று நினைத்து தான் நாளை அவளுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பம்.

ஆனால் இவள் அதற்க்கு படிக்காது அவனுக்கு தானே ஒரு க்ரீட்டிங் கார்டை  தயாரித்து.   தான் சேர்த்து வைத்த மொத்த பேக்கெட்  மணியை கொண்டு நூற்று ஒரு ஜாக்லெட்டை  வாங்கி, அதை மாலையாக்கி அவனுக்கு பரிசளிக்க கொண்டு வந்தாள்.

 அதை அவனிடம் கொடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவளின் மொத்த கவனமும் அவனிடம் மட்டுமே நிலை பெற்று இருந்ததால், மற்றவர்களை எல்லாம் அவள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.

அதோடு அவன் என்னை  பார்ப்பதும்.. நான் அவனை பார்ப்பதும் தான் இந்த பள்ளிக்கே தெரியுமே, என்ற மெத்தனமும்  தான்.

கூடவே அவன் தன்னை அனைவரும் பார்க்க பார்ப்பது அவளுக்கு அவ்வளவு  பெருமையாக இருந்தது. அதுவும் கூட படிப்பவர்கள்.

“ நீ என்னம்மா வாசுவோட ஆள்.”  என்ற அந்த வார்த்தையே அவளுக்கு அப்போது அவ்வளவு தித்திக்கும்.  

அதே போல் அனைவரின் முன்நிலையிலும் தங்கள் காதல் அரங்கேற்றப்படுவதை கூட ஒரு பெருமையாக நினைத்து தான் தன் பேகில் மறைத்து வைத்து இருந்த அந்த கார்டையும், ஜாக்லெட் மாலையையும் எடுத்தவள். நேற்று  பார்த்த படத்தின் மூலம் செய்த ஒத்திகையை அவள் அங்கு அனைவரின் முன்னும்  செய்து காட்டினாள்.

அந்த மாலையை அவன் கழுத்தில் போட்ட பின்,  தன் ஒற்றை காலை மடித்து தான் தயார் செய்த க்ரீட்டிங் கார்டின் மீது ஒரு சிகப்பு ரோஜாவை  வைத்து அவன் முன் நீட்டி விட்டு,  அவன் வாங்கும் அந்த தருணத்திற்க்காக ஆவளோடு அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவளின் முகத்தில் அவள் போட்ட மாலையை வாசுதேவன்  பிடித்து இழுத்ததில்  ஜாக்லெட் எல்லாம்  உதறி கீழே  விழ.

வாசுதேவன்  இந்துமதியை ஒரு கேவலமாக பார்வை பார்த்து “ நீ இங்கு படிக்க வர்றியா.? இல்ல லவ் பண்ண வர்றியா.? எனக்கு உன் பெயர் கூட தெரியாது. எந்த தைரியத்தில் நீ எனக்கு இது எல்லாம் கொடுப்ப.” என்ற அவன் கேள்வியில் அவள் அதிர்ந்து தான் போனாள்.

அவள் ஒற்றை  காலை மடக்கி வைத்து அமர்ந்த  நிலையில் இருந்தவள் அந்த அதிர்ச்சியில் மல்லாக்காக அப்படியே கீழே விழுந்து விட்டாள்.

அனைவரும் அவளை பார்த்து அந்த சிரிப்பு அதன் பின் நடந்தது. அனைத்தும்  அவள் நினைத்து பாராதது தான். ஆனால் அது அவளுக்கு உண்டான தண்டனை என்று தான் அவள் வளர்ந்த பின் உணர்ந்தாள்.

ஆனால் அன்று அவள் பட்ட அவமானம். இந்த விசயம்  பள்ளியின் தலமை வரை சென்று, இவளை மட்டும் அல்லாது இவள் பெற்றோரையும் அழைத்து இவளுக்கு வழங்கிய அந்த அறிவுரை ஒரு பக்கம் என்றால், அங்கு வாசுதேவனையும் அழைத்து  அந்த தலமை ஆசிரியர் பேசிய பேச்சு.

“இவன் நல்ல பையன் என்றதால் , பிரச்சனை இல்லாது போயிடுச்சி. இதே வேறு மாதிரியா இருந்து இருந்தால், நீங்களே சொல்லுங்க. அன்றைய நாளுக்கு பின் வாசுதேவனின் பெருமை  பள்ளி மட்டும் அல்லாது அங்கு பயிலும் மாணவ மாணவியர்கள் இந்த விசயத்தை வீட்டிலும் சொல்ல.

“ என்ன பையன் பா. பெத்தா  இவனை போல் தான் பெத்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லும் அளவுக்கு அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்கள்.

இவள் வேறு பள்ளிக்கு மாறினாள். கெட்டதிலும் ஒரு நல்லது. இவளை இவள் வீட்டில் ஒன்றும் சொல்லாதது தான்.  இவள் அண்ணன் ஆனந்த மட்டும் கூப்பிட்டு திட்டவில்லை.

“புரிந்து இருக்கும் இந்து. பார்த்து நடந்துக்க.” என்று இது மட்டும் தான்  அவன் சொன்னது.

அதில் இருந்து அவள் புரிந்து கொண்டது இது தான்.  இது போல் விருப்பம் எல்லாம் ஆண் தான் சொல்ல வேண்டும். பெண் சொன்னால் அவளை கேவலமாக தான் பார்ப்பார்கள் என்று.

தனக்கு கிடைத்த அந்த அனுபவ பாடத்தை வைத்து தான், இந்துமதி யமுனாவிடம் சொன்னது. ஆனால் அது இப்படி ஆகும் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.

அதுவும் இப்போது வாசுதேவனின் வருகை.  இங்கு ஏதாவது சொன்னால், அந்த பயமும் கூடவே, அன்று அவனும் என்னை பார்த்தான்  தான்.

பின் அவன் நல்லவன் போல் அனைவருக்கும் தெரியும் படி ஒரு பிம்பத்தை கொடுத்து விட்டான்.

இப்போது என்ன செய்ய காத்து கொண்டு இருக்கிறான். அதுவும் பற்றிய தன் கையை  விடாது   பிடித்துக் கொண்டதே அவளுக்கு அவன் ஏதோ ப்ளான் செய்கிறான் என்று  அவளுக்கு தெரிந்து விட்டது. ஆனால் என்ன என்று அவள் யோசிக்கும் போது தான் யமுனா   திரும்பவும் பேசியில் அவளை அழைத்தது.

Advertisement