Advertisement

அத்தியாயம்…8

அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயத்திற்க்கு கடமைக்கே என்று தயாரிக் கொண்டு இருந்தாள் இந்துமதி. வீர ராகவ் சாருகேசனின் நண்பன் என்று அறிந்த விசயம் அவளுக்கு அவ்வளவு நல்லதாக படவில்லை.

வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. பெண் பார்க்க வரவில்லை. அதற்க்கு அவர் வேலை காரணமாக இருக்கும் என்று அப்போது நினைத்த  இந்துமதிக்கு. இப்போது அதற்க்கு காரணம் வேறு ஏதாவது இருக்குமா.? என்று நினைக்க தூண்டியது.

இந்த திருமணம் பழிவாங்கும் படலமா.? என்று நினைத்தவள் கூடவே யம்மீக்கு அவள் வருங்கால கணவன் போன் செய்யாதது தவறு என்று நினைத்த நான், ஏன் இவர் பெண் பார்க்கவும் வரவில்லை.

சரி அது தான்  வேலை  அதனால் வர வில்லை என்று நினைத்தாலுமே, . ஆனால் அதற்க்கு அடுத்து ஒரு போன் கூட செய்யாது இன்று நிச்சயத்திற்க்கு அவன் எப்படி ஒத்துக் கொண்டான். தானும் எப்படி ஒத்துக் கொண்டேன் என்று குழம்பியவளாக தான் அன்று மாலை  வரை இருந்தால்.

அவள் குழப்பத்தை சொல்ல கூட தோழிகள் ஒருவர் கூட இல்லாதது இன்னும் அவளுக்கு பயத்தை தான் ஏற்படுத்தியது.

சாந்தி தான் அடிக்கடி இந்துமதியின் அறைக்கு வந்து. “ இப்போ மாப்பிள்ளை  வீட்டு ஆளுங்க வரப்போறங்க. நீ ஏன்டி இப்படி  முகத்தை  வைத்து கொண்டு இருக்க. அப்புறம் அவங்க பெண்ணுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையோ என்று நினைத்து கொள்ள போறாங்க.” என்று அதட்டியவளின் கை பற்றி கொண்ட இந்துமதி.

“ அம்மா அவங்க இந்த கல்யாணத்தை விரும்பி தானே செய்து கொள்றாங்க.” என்று தன் கை பிடித்து கலங்கிய கண்ணோடு கேட்ட மகளை இப்போது அதிர்வோடு பார்த்தார் சாந்தி.

“ என்ன இந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயம் வைத்து கொண்டு,  இப்படி ஒரு சந்தேகம் உனக்கு வருது.” என்று சாந்தியுன் கொஞ்சம் பயத்தோடும் , பதட்டத்தோடும் தான் தன் மகளிடம் பேசினார்.

குழந்தைகளை பெற்ற அனைவரும் நினைப்பது இதுவே.. தங்கள் பசங்ளுக்கு  நடக்க வேண்டிய நேரத்திம் அனைத்தும் நல்ல விதமாக நடக்க வேண்டும். அதுவே சாந்தியின் எண்ணமும்.

மகளின் இந்த பேச்சு ஏனோ சாந்திக்கு பயத்தை கொடுத்தது, இது வரை அமைதியாக இருந்தவள்.  இப்போ ஏன் திடிர் என்று இப்படி பேசுகிறாள் என்று.

“ அவருக்கு பிடித்து தான் இந்த கல்யாணம் இந்து. நாங்க ஒரு இடம் வந்தா போதும் உன்னை தள்ளி விட்டு விடிவோமா. சொல். உன் அண்ணன் அவன் பங்குக்கு மாப்பிள்ளை பற்றி நல்லா விசாரித்து விட்டான். யாரும் ஒரு குறையும் சொல்லலே..

எல்லோரும் ஒரே மாதிரி உங்க வீட்டு பெண் கொடுத்து  வைத்தவள் என்று தான் சொல்லி இருக்காங்க. அதே போல் தான் நாங்க மாப்பிள்ளை வீட்டுக்கு கை நினைக்க  போகும் போது மாப்பிள்ளையே என் கிட்ட நல்லா பேசினார்.

தான் பெண் பார்க்க வராததுக்கு  மன்னிப்பு கேட்டார். அதோடு அவர் உன்னை எங்கேயோ பார்த்து இருக்கிறார். அதனால அம்மா கிட்ட  நீங்களே முடித்து விடுங்கன்னு சொல்லிட்டேன்.

ஆனா நான் மதியையும் நினைத்து பார்த்து இருக்க வேண்டும். அவங்க என்னை பார்த்து தானே முடிவு  செய்ய வேண்டும் என்று.

இப்போ நான் ஒரு கேசில் பிஸியா இருக்கேன். அதான் என்னால வர முடியல. என் டியூட்டி முடிய மிட் நையிட் ஆயிடுறது. என்ன தான் என் வருங்கால மனைவியா இருந்தாலும், அந்த நேரத்துக்கு ஒரு பெண்ணை  போனில்  அழைப்பது முறையா இருக்காது என்று தான் நான் பேசல.” என்று சாந்தி  இப்போது சொன்னதை அப்போதே அவர்கள் வீட்டுக்கு  போய் வந்த அன்றே சொல்லி விட்டார் தான்.

அப்போது அதை கேட்டு இந்துமதிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. பரவாயில்லை மற்றவங்க நிலையில் இருந்தும் யோசிக்கிறரே என்று.

ஆனால் இப்போதும் அனைத்தும் ஏதோ திட்ட மிட்டு நடப்பது போலவே அவளுக்கு தோன்ரியது. தன் அம்மாவிடம் தன்னை  முன்னவே பார்த்து இருக்கிறேன் என்று சொன்னவருக்கு எங்கு பார்த்தேன்  என்று ஏன் சொல்லவில்லை.

அதோடு ஒரு போன் பேச வேலையை காரணம் காட்டுவது எல்லாம் நம்பும் படியாகவா இருக்கிறது. முன் தன் தோழியை பற்றி மட்டும் யோசித்துக் கொண்டு இருந்ததில், தன்னை பற்றி யோசிக்காது,  அனைத்திற்க்கும் தலை ஆட்டி கொண்டவளுக்கு, முன் யோசிக்காததையும் இப்போது சேர்த்து வைத்து யோசித்தாள்.

இப்போது யோசித்து என்ன பயன் என்பது போல் தான்  சரியாக மாலை ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விட..

 வீட்டில் வைத்தே சிறிய அளவில் நிச்சயம் என்பதால் வெளியில் இருக்கும் கொஞ்ச இடத்திலும், மொட்டை மாடியிலும் பந்தல் கட்டி நிச்சயம் நடப்பதால். வீட்டில் இருந்து முன்பாக போட்டு இருந்த பந்தலுக்கு  தலையை குனிந்து கொண்டு வந்த இந்துமதி, அனைவரையும் பொதுவாக பார்த்து வணக்கம் என்று சொல்லும் போது  தான் தலை நிமிர்ந்து அனைவரையும் பார்த்தாள்.

பார்த்தவளுக்கு நேர் எதிராக தான்  வீர ராகவும், சாருகேசனும் அமர்ந்து இருந்தனர். அது என்னவோ இந்துமதியின் கண்ணுக்கு வீர ராகவோடு சாருகேசனே முதன்மையாக தெரிய, கூப்பிய கை தானாக நடுங்கி கொண்டு இருந்தது.

தன்  பக்கத்தில் ஒருவர் வந்து தன் கை நடுக்கத்தை நிறுத்தவும் தான் அது யார்  என்றே பக்க வாட்டில் திரும்பி பார்த்தாள். அங்கு யமுனா   நிற்பதை பார்த்து அவளுக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு சிரிப்பு வந்ததோ.

“யம்மீ.” என்று அழைத்து அவளை இறுக்கி அணைத்து கொண்டாள். அனைவரும் தங்களை தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்  என்று கூட கருத்தில் கொள்ளாது. அப்போது இந்துமதிக்கு அந்த அணைப்பு மிக  தேவையாக இருந்தது.

யமுனா தான். “ இந்து என்ன இது எல்லோரும் நம்மையே  பார்க்கிறாங்க.” என்று சொன்னதும் தான்  அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்தாள். ஆனால் இம்முறை கை எல்லாம் நடுங்கவில்லை.

அம்மா சொன்னதற்க்கு ஏற்ப அவர்கள் வாழ்த்தி கொடுத்த புடவையை காலில் விழுந்து  நமஸ்கரித்து வாங்கி கொண்டவள் கைய்யோடு யமுனாவையும் அழைத்து கொண்டு சென்று விட்டாள்.

இதை எல்லாம் பார்த்த சாருகேசன் தான். “ கை நடுங்குது, கால் நடுங்குதுன்னு என் பெண்டாட்டிய அனுப்ப சொன்னே. பார்த்த இல்ல என்னம்மா கட்டி பிடிச்சாங்கன்னு, நான் கூட அவளை அவ்வளவு இறுக்கமா கட்டி பிடிச்சி இருக்க மாட்டேன் டா. அதோட் கைய்யடோ கூட்டிட்டு போயிட்டாங்க.” என்று  சாருகேசன்  வீர ராகவனிடம்  புலம்பி தள்ளினான்.

“ உனக்கு கட்டி பிடிக்க தெரியலேன்னு சொல்லு. அதுக்கு எதுக்கு மதியை குறை சொல்ற.?” என்ற வீர ராகனின் கேள்வியில் . “ இது எல்லாம் நல்லதுக்கு இல்லேடா.” என்று நண்பர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே இந்துமதி வீர ராகவ்  அம்மா கொடுத்த பட்டு புடவையை கட்டி கொண்டு வர,  வீர ராகவ்  பேச்சு தன்னால் நின்று விட்டது.

அதை பார்த்ததும் தான் சாருகேசன் நிம்மதி ஆனான். என்ன தான் அவன் இந்துமதியை பிடித்து  தான் இந்த திருமணம் என்று அவன் அம்மா மீது சத்தியம் செய்தாலுமே, சாருகேசன் மனது கொஞ்சம் இடற தான் செய்தது.

அதுவும் யமுனா தற்கொலைக்கு பின்  தன்னோடு  யமுனாவின் தோழிகளின்  மீது அதிகம் கோபம் கொண்டது  வீர ராகவ் தான்.

“ இவங்களுக்கு வேறு  வேலையே  இல்லையாடா../ மத்தவங்க விசயத்தில் தான் எப்போவும் மூக்கை நுழைப்பாங்களா. இது போல் அடுத்தவங்க விசயத்தில் தேவையில்லாது தலையிடுவது என்பது  அடுத்தவங்க படுக்கை அறையை எட்டி பார்ப்பதற்க்கு சமம் என்று இவங்களுக்கு புரியாதா.?  படித்தவங்க செய்யிறதாடா இது எல்லாம்.” என்று அவ்வளவு கோபம் கொண்டவன்.

யமுனாவின் தோழிகளில், அதுவும் முக்கியமான இந்துமதியை திருமணம் செய்ய போகிறேன் என்று சொன்னதும், என்ன இது என்று வேறு எதேதோ தான் நினைத்தான்.

ஆனால் இப்போது இந்துமதி வந்து நமஸ்கரிக்கும் போது அவள் கை நடுக்கத்தை பார்த்தவன் யமுனாவிடம்.

“ உங்க பிரண்ட் தானே. பக்கத்தில் போகலாம் தானே.” என்று கேட்டவன் தன்னிடம்.

“ஏன்டா வீட்டில் தான் ஒட்டிட்டு அலையிற இங்கேயுமா.?” என்று தன் காதருகில் ரகசியம் பேசுபவனை முறைப்பது போல் முறைத்தாலுமே, சாருகேசன் இந்துமதியிடம்  வீர ராகவன்  காட்டிய  அக்கறையில் மகிழ்ந்து தான் போனான்.

இப்போது இந்துமதி   நிச்சய புடவை  கட்டி வந்ததும் தன்னோடான பேச்சை மறந்து இந்துமதியை பார்த்தவனை ..

“ மச்சான் வாய மூடு.” என்று சொன்னவனின் பேச்சை சட்டை செய்யாது பார்த்தவனை இன்னும் இன்னும் கிண்டல் செய்து கொண்டு இருந்தான் சாருகேசன்

ஆனால் சாருகேசன் ஒன்றை கவனிக்கவில்லை இந்துமதி பார்க்காத போது  அவளை பார்க்கும் வீர ராகவ் , அவளின் பார்வை தங்கள் பக்கம் வந்தாலே, அப்போது தான் சாருகேசனின் கிண்டலுக்கு பதில் சொல்வது போல் அவனிடம் பேசுவதை . கவனிக்காது விட்டு விட்டான்  காவலனாக இருப்பவனே.

ஒரு சமயம்  இது போல் வேறு யாராவது செய்து இருந்தால் சாருகேசனின் கண்ணுக்கு மாட்டி இருக்குமோ என்னவோ, ஒரு காவலன் பார்வையை காவலன் அறிந்து இருந்ததால் சாருகேசனுக்கு எந்த வித சந்தேகமும் இல்லாது அழகாக தன் நிச்சயத்தை சாருகேசனுக்கு சந்தேகம் வராதது போலவும், இந்துமதியை இன்னும் குழப்பி விடுவது போலவும் அழகாக நடந்து முடிந்தது. 

ஆம் மாலை மாப்பிள்ளை வருகிறார். அவரிடமே  பேசி தெளிவு படுத்தி கொள்ளலாம் என்று இந்துமதி நினைத்தாள்.

ஆனால்  வீர ராகவ் அவளை தெளிவு படுத்துவதற்க்கு பதில். அவனின் செயல்கலின் மூலம் இன்னும் அவளை குழப்பத்தில் தான் தள்ளினான்.

அனைத்தும்  அவன் செயல்கள் மூலமே தான். நிச்சயம் மோதிரம் போடும் போது அவளின் கை பற்றி போடுவது போல் தான் அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் உண்மையில் வீர ராகவின் கை இந்துமதியின் கையை பிடித்து இருப்பது போல் தெரிந்தாலுமே, அவன் அவள் கையை பற்றவில்லை. பற்றுவது போல் ஒரு பாவத்தை தான் அவன் கொடுத்தான். மோதிரம் மட்டுமே இந்துமதியின் விரலை தீண்ட, அதை மாட்டியவனின் ஸ்பரிசம் படாது  அவளின் நிச்சயம் நடந்தது.

பொதுவாக நிச்சயத்தில் இது போல் மாப்பிள்ளை மோதிரம் மாட்டும் போது,  மாப்பிள்ளையின் அந்த  மோதிர மாட்டாலே, இருவருக்குமே மட்டும்  உள்ள ஒரு ரகசிய சமிஞ்சை  இல்லாது முடிவடையாது.

அந்த ரகசிய தீண்டல் கண்டிப்பாக, ஆண் மகனாக இருக்கும் மாப்பிள்ளையுடையதாக  தான் இருக்கும்.  இங்கு  மாப்பிள்ளையே கை தொடாது மோதிரம் மாட்டும் போது  இந்துமதி எப்படி வீர ராகவுக்கு மோதிரம் போட்டு இருப்பாள். 

அவளும் கை படாது மோதிரம் மாட்டிய பின் அடுத்து சாப்பாடு என்று அருகருகே அமர்ந்து இருந்த போதும் அப்படியே நடந்து முடிய அன்றைய இரவு   இந்துமதிக்கு தூங்கா இரவாக்க,  வீர ராகவுக்கு  நிம்மதியான இரவாக முடிந்தது. தன் தொடக்கமே இந்துமதியின் மனதில் எந்த அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ற நிம்மதியில்.

இங்கு இந்திமதியின் தோழி யமுனாவோ . “ உங்க பிரண்டுக்கு இந்துவை ரொம்ப பிடித்து இருக்குங்க. என்னமா ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செய்யிறார்.” என்று  மகிழ்ச்சியுடன் தன்  கனவன் கை பற்றி பேசிக் கொண்டு இருக்க சாருகேசனோ ஏதோ ஒரு யோசனையில் மூழ்கி இருந்தான்.

“ என்னங்க. என்ன யோசனை.?” என்று யோசனையான தன் கணவனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்து யமுனா கேட்டாள்.

யமுனாவையோ கூர்ந்து பார்த்த சாருகேசன். “ உன் பிரண்டுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானே.. அவளை யாரும் கட்டாயம் படுத்தவில்லை தானே.?” என்ற கணவனின் கேள்வியில், இப்போது யமுனா தான் குழம்பி போனாள்.

“ஏன். ஏன். கேட்கிறிங்க.?” என்று யமுனா பதட்டத்துடன் கேட்டாள்.

அதற்க்கு சாருகேசன். “ இன்னைய நிச்சயத்தில் வீர் எவ்வளவு சந்தோஷமா இருந்தான். நீ பார்த்தே தானே. ஆனா அந்த சந்தோஷத்தில் பாதிய  கூட உன் பிரண்ட் முகத்தில் நான் பார்க்கலே . அது தான் கேட்டேன்.” என்று கணவன் சந்தேகமாக கேட்கவும்.

யமுனாவுக்கும்  இப்போது இந்துமதிக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்துமதி நிச்சய புடவை கட்டிக் கொண்டு வந்த  போது வீர ராகவ் இந்துவையே மெய் மறந்து பார்ப்பதை பார்த்த யமுனா.

“ஏய்  உன் ஆளை பாருடீ. வாயில் ஈ போவது கூட தெரியாது பார்க்கிறார்.” என்று சொல்லவும் தான் யமுனாவின் பார்வை வீர ராகப் பக்கம் போனது.

அப்போது   வீர ராகவ் பக்கம் பார்வையை செலுத்திய உடனே தன்னை பார்த்த இந்து சொன்ன. “ போடீ.” என்று கோபத்துடன் தன்னை பேசியது. யமுனா என்ன என்று திரும்பவும்  அவள் வீர ராகவ்  பக்கம் யமுனா பார்க்க, அவன் பார்வை இந்துமதியிடம் மட்டுமே நிலைத்து இருப்பதை பார்த்தது.

அதே போல் நிச்சய மோதிரம் போடும் போது  இவள் கை பற்றி அவர் எப்படி மகிழ்ச்சியோடு  போட்டு  விட்டார். ஆனால் இந்து என்னவோ தீண்டதாகாதவன் போல் விரலை கூட  பிடிக்காது ஏனோ தானோ என்று  இந்துமதி மாட்டி விட்ட மோதிரம் .. இப்படி ஒரு  சில காட்சிகள்  யமுனாவின்  கண் முன் வர..

“ நான் அவள் கிட்ட பேசுறேன் கேசவா.” என்றதில்.

சாருகேசன். “ தோ பார் யம்மீ. நம்ம விசயத்தில் உன் கிட்ட அந்த பெண் ஏதோ சொன்னா.. நம்ம இடையும் எதேதோ பிரச்சனை ஆகி விட்டது. இப்போ திரும்பவும் என் பிரண்ட் வீர் வாழ்க்கையில் இவள் ஏதாவது விளையாடா பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று தன் கணவன் பேசிய பேச்சில்

மறு நாளே யமுனா இந்துமதியை பேசியில் அழைத்து விட்டாள். அழைத்தவள் எடுத்த உடனே “ உனக்கு வீரை பிடித்து இருக்கு தானே இந்து. பிடித்து தானே இந்த கல்யாணத்திற்க்கு ஒத்து கொண்டாய்.” என்ற அவள் கேள்வியை இந்து மதி காதில் வாங்காது.

“ அவருக்கு பிடித்து தானே யம்மீ இந்த கல்யாணம் நடக்குது.?” என்ற இதுமதி கேள்வி யமுனாவுக்கு எரிச்சலை தான் கிளப்பியது.

“ நிச்சயம் வந்த எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இந்த கல்யாணம் எவ்வளவு பிடித்தம் என்று. நான் உன்னை கேட்டேன்.” என்ற யமுனாவின் பேச்சில் இந்துமதி இவள் என்ன சொகிறாள் என்று யோசிக்கும் போதே,

ஆபிசில் இந்துமதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த சுரேகா. “ நம்ம புது டி.எல் கூப்பிட்டு அனுப்பி இருக்கார் இந்து வா.” என்று அவசரப்படுத்தவும் இந்துமதி யமுனாவிடம்.

“ நான் அப்புறம் பேசறேன்.” என்று சொல்லி யமுனாவின்  அழைப்பை அணைத்து விட்டாள்.

இங்கு யமுனாவோ பிடித்து இருக்கு என்று சொல்வதற்க்கு ஏன் பின்  பேசுறேன் என்று சொல்றா. என்று சாருகேசன் பேச்சு உண்மை தானோ என்று யமுனா இங்கு இந்துமதிக்கு எதிராக யோசனை செய்ய.

இங்கு இந்துமதியின் புது டி.எல் ஆக  இந்துமதி முதலில் காதல் சொல்லி, அதை வைத்து தன்னை அசிங்கபடுத்திய  வாசுதேவனை பார்த்து அதிர்ந்து நின்று விட்டாள். 

Advertisement