Advertisement

அத்தியாயம்…5

பேசியில் கேட்ட செய்தியில் அப்படியே திக் பிரம்மை  பிடித்தது போல அமர்ந்து விட்ட நண்பனின்  நிலையை பார்த்து வீர ராகவ்  பதட்டத்துடன் அவன் அருகில் வந்து 

“என்னடா..? என்ன ஆச்சு.? என்ற கேள்விக்கு சாருகேசனால் பதில் கூட அளிக்க முடியாது அந்த பேசியை மட்டுமே  அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருப்பதை  பார்த்து வீர ராகவனே, அவனின்  பேசியை வாங்கி பேசினான்.

பேசியவனுக்கு  அந்த பக்கம் சொன்ன செய்தியில், அவனே அதிர்ந்து போன போது  சம்மந்தப்பட்ட சாருகேசன் அதிர்ந்து தானே போவான்.

நண்பனை அழைத்து கொண்டு அவர்கள் சொன்ன மருத்துவனைக்கு  வந்த வீர ராகவன் அங்கு இருந்த யமுனாவின் அப்பா அம்மாவின் அருகில் நண்பனை அழைத்து  சென்றான்.

 சாருகேசன் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல்  திக் பிரம்மை பிடித்து போல்  இருந்ததால்,  அவனே யமுனாவின் அப்பா அம்மாவிடம். “ என்ன  சார். என்ன ஆச்சி..?” என்று கேட்டதற்கு அவர்கள் பதில் சொல்லாது யமுனாவின் தந்தை அவனிடம் ஒரு  சில பேப்பரை நீட்டினான்.

“என்ன அது..?” என்று வீரராகவன் வாங்கி பார்த்தவன் அது விவாரத்து பத்திரம். 

அதை பார்த்து  வீர ராகவன்.  “ என்ன சார். அவங்க தான் ஏதோ தப்பா அர்த்தம்  புரிந்து கொண்டு,  தற்கொலைக்கு முயன்று இங்கு வந்து படுத்துட்டு இருக்காங்கன்னா. பெரியவங்க, நீங்க  இப்படி எடுத்த உடன் விவாகரத்து என்று போயிடுறிங்க.. என்ன சார் கல்யாணம்   உங்களுக்கு எல்லாம் விளையாட்டா  போயிடுச்சா.?” என்று வீர ராகவன் கேட்க,

“ அதை எங்க   கிட்ட சொல்லாதிங்க. உங்க பக்கத்தில் இருக்க உங்க பிரண்டுட்  கிட்ட சொல்லுங்க.” என்று யமுனாவின் அப்பா சொல்லவும் தான் வீர ராகவன் சாருகேசனா என்று அதிர்ந்து போய் அவனை பார்த்தான்.

என்ன காரியம் செய்து வைத்து  இருக்கான். நம்ம கிட்ட பேசினான் தான். ஆனால் அந்த பெண் கிட்ட விவாகரத்து பத்திரம் கொடுத்து விட்டு தான் நம்ம கிட்ட பேச வந்து இருக்கான் ..

இப்போது என்ன சொல்வது என்று வீர ராகவன் யமுனாவின் பெற்றோர்களை தயக்கத்துடன் பார்த்தான். அதற்க்குள் ஒரு செவிலியர் வந்து..

“ இப்போ பரவாயில்லை. போய் பாருங்க.” என்று சொல்லி விட்டு செல்லவும், அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வந்த சாரிகேசன் முதல் ஆளாக யமுனா அனுமதிக்கப்பட்டு இருந்த அறைக்கு செல்ல பார்த்தான்,

யமுனாவின் அன்னை. “ நீங்க போக வேண்டாம். இப்போ தான் உயிரை பிடிச்சி வெச்சி இருக்கேன். நீங்க போய் எதாவது பேசி  அதை எடுத்துடாதிங்க.” என்ற அவரின் பேச்சில், வீர ராகவன் தான்.

“ அவங்க இப்போவும்  அவனோட மனைவி தான். அவங்களை பார்க்க அவனுக்கு முழு உரிமை இருக்கு. அவனை யாரும் தடுக்க முடியாது.” என்று அவர்கள் அப்படி சொன்னதும், வேதனை காட்டிய நண்பனின் முகத்தை பார்த்து விட்டு கோபமாக அவரிடம் இப்படி சொன்னான்.

இடையில் சாருகேசனிடம்  நீ போ என்பது போல் சைகையும் காட்டி விட்டே, யமுனாவை பார்த்தால் போதும் என்று சாருகேசன் அவள்  அனுமதிக்கப்பட்டு இருந்த  அறையை நோக்கி ஓடி விட்டான்.

இங்கு வீர ராகவனின் பேச்சில்..  யமுனாவின் தந்தையோ தன் மனைவியை பார்த்து.. “ நீ சும்மா  இரும்மா. அவங்க போலீஸ் என்ன வேணா செய்யலாம். என்ன வேணா பண்ணலாம். அப்புறம் நீ ஏதாவது பேசி, உன் மேலே ஏதாவது  பொய் கேசு கொடுத்துட போறார். ஏன்னா   காவல் துறையே அவங்க தானே.

அவர் நண்பன் கேட்டது போல என் பெண் கிட்ட சொல்லி நான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட சொல்றேன்.

 ஆனால்  அதுக்கு  என்று  வீண் பழி எல்லாம் போட வேண்டாம். நாளை  பின்ன என் பெண் வெளியில் போயிட்டு வரனும் பாருங்க.

நான் உங்க கிட்ட சண்டை எல்லாம் போடல சார். பெண்ணின் தந்தையா உள்ளே படுத்து இருக்கும் மகளை நினச்சி நானும் என் மனைவியும் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னித்து கொள்ளுங்கள்.” என்று சொல்லி தன் தந்தையின் வயதில் இருப்பவர் தன்னை கை எடுத்து கும்பிடவும், வீர ராகவன் சங்கடப்பட்டு போனான்.

கூப்பிய அவர் கையை கீழே இறக்கியவன்.. “ என்ன சார்..? என்ன இது..? நான் அவன் மனைவியை பார்க்கனும் என்று அப்படி துடித்து போய் இருக்கான்.

அவனை பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னதும் தான் அப்படி பேசினேன். நீங்க என்ன என்னவோ சொல்றிங்க.

எங்க துறையில் அனைவரும் ஒழுங்கு என்று சொல்லலே.. அதே மாதிரி அனைவரும் கெட்டவங்க என்றும் சொல்ல முடியாது சார்.

அதுவும் இது போல் பொய் கேசு அது இதுன்னு  என்ன பேச்சு சார். அதுவும் இல்லாம இது போல கையெடுத்து கும்பிடுவது எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

என் பிரண்டடோ மனைவி எனக்கு சிஸ்டர்னா. நீங்க எனக்கு அப்பா போல சார். இப்படி எல்லாம் பேசாதிங்க சார்.” என்று வருந்தி பேசிய வீர்ராகவனை பார்த்த யமுனாவின்  தந்தை என்ன நினைத்தாரோ..

“ கேண்டினுக்கு  போய் காபி குடித்து கொண்டே பேசலாமா சார்.” என்று யமுனாவின் தந்தை கேட்கவும்..

“ சார் வேண்டாம் அங்கிள்.. வீர் என்றே என் அம்மா போல கூப்பிடுங்க.” என்று சொன்னவனோடு அவரும் கேண்டின் போனார்.

வீர ராகவன் இரண்டு காபியோடு  அவர் அருகில் அமர்ந்தவன் .. “ இப்போ சொல்லுங்க சார் என் கிட்ட என்ன சொல்லனும்.?” என்று கேட்டதும்.

  எந்த ஒரு வித முக பூசும் இல்லாது நேரிடையாக “ என் பெண்ணுக்கு இந்த இடம் முடிக்கும்  போது என் சொந்தம் எல்லாம் போலீஸா வேண்டாம். அது  ஆபாத்தானது என்று ஒருத்தவங்க சொன்னாங்க என்றால், இன்னொருத்தரோ அவங்க நம்ம பெண்ணை ஏதாவது செய்தா கூட எதுவும் கேட்க முடியாது என்று சொன்னாங்க.

அப்போ நானும் உங்களை  போல  தான்.  எல்லா துறையிலும் தான் நல்லவங்களும் இருக்காங்க. கெட்டவங்களும் இருக்காங்க.

நான் மாப்பிள்ளையை பற்றி நல்லா விசாரித்து விட்டேன். எந்த தப்பும் இல்லாதவர் தான் என்று தான், வசதியில் எங்களோடு கம்மியா இருந்தாலும், நாளை எங்களோடது எல்லாம்  எங்க பெண்ணுக்கு தானே என்று நினைத்து உங்க நண்பனுக்கே கட்டி வைத்தேன்.” என்று யமுனாவின் தந்தை பேச பேச, அதுவும் அவர் சொன்ன என்னுடையது எல்லாமே என் பெண்ணுக்கு தானே என்ற அந்த வார்த்தையில், இதே தானே அந்த பெண்ணும் சொன்னாள் என்று  இந்துமதியை நினைத்து கொண்டான்.

வீர ராகவன்,  யமுனாவின் தந்தையின்  பேச்சில்.. “ நீங்க சொன்னது எல்லாம் சரி  தான். சாருகேசன்   ரொம்ப நல்லவன். அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அதே போல் நாங்க காவல்துறையில் இருக்கோம். இவங்க ஏதாவது தப்பு செய்தாலும் ஒன்னும் கேட்க முடியாது அந்த தாட்டே உங்களுக்கு வேண்டாம்  அங்கிள்.

இப்போ நான் பேசுனதுல ஏதாவது தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க.” என்ற வீர ராகவன் பேச்சில் உண்மையான வருத்தம் தெரிய..

“அதை விடுங்க தம்பி. இப்போ பிரச்சனை என் பெண்ணோட வாழ்க்கை பத்தியது. எனக்கு ஒரே பெண்.. அவளை வைத்து தான் நாங்களே. அது அவளுக்கு நல்லாவே தெரியும்.

அப்படி இருக்க, அவள் இந்த முடிவு எடுத்து இருக்கானா.  என் பெண் உங்க பிரண்ட்ட எந்த அளவுக்கு முக்கியமானவனா நினைத்து இருக்கனும்.

அவள் கிட்ட போய் . வேறு யார் மீதாவது விருப்பமா..? என்று கேட்டா  என் பெண் தாங்குவாளா தம்பி..?” என்ற யமுனாவின் தந்தை பேச்சில் இருந்து வீர ராகவன் புரிந்து  கொண்டது இது தான்.

தன் நண்பன் தன் மனைவியிடம் நிறைய வார்த்தைகளை  விட்டு இருக்கிறான் என்று. இதில் என்ன கொடுமை என்றால் , அவனுக்கு அவன் மனைவியை பிடிக்காது இல்லை. மிக பிடித்ததில் தான் இந்த அதிகப்படியான  வார்த்தைகளை வீச காரணம். என்ன தான் இருந்தாலும், சாருகேசன் அது போல் பேசியும் இருக்க கூடாது.

அதே போல் விவாகரத்து. திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இது போல் என்றால், எந்த பெண்ணால் தான் தாங்கி கொள்ள முடியும். அதே போல் அதை பெற்றவர்களும் அதை  பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா..? அதுவும் தற்கொலை முயன்று மருத்துவமனையில் இருக்கும் போது..

என்று அவன் அடுத்து அவரிடம் என்ன பேச என்று யோசிக்கும் போதே அந்த இடத்திற்க்கு, யமுனாவின் அன்னையோடு சாருகேசன் வருவதை பார்த்து..

வீர் ராகவன் சாருகேசனிடம்  “  அவங்களை  தனியாவா விட்டு விட்டு வந்திங்க..” என்று  இருவரும் வந்து விட்டார்களே என்று நினைத்து கேட்டவனிடம்..

சாருகேசன்  .. “ இல்ல    கொஞ்ச நேரத்துக்கு, சிஸ்டரை பார்த்துக்க சொல்லிட்டு தான் வந்தேன்.” என்று சாருகேசன் தன் நண்பனிடம் சொல்லி  கொண்டு இருக்கும் போதே யமுனாவின் அன்னை தன் கணவரிடம்..

“ மாப்பிள்ளை மீது தப்பு இல்லேங்க.. எல்லாம் நம்ம பெண் அவள் பிரண்ஸ்சுங்க பேச்சு கேட்டதால் வந்த  வந்த வினை.” என்று சொல்லி நிறுத்தவும், 

வீர் ராகவனும் , யமுனாவின் தந்தையும் என்ன என்பது போல் பார்க்க.. சாருகேசன் தயங்கிய வாறு.

“  எங்க கல்யாணம் முடிவானதில் இருந்து எனக்கு யமுனா தான் எப்போவும் போன் போடுவா. நான் போன் செய்தது இல்ல.  எனக்கும் அவள் கிட்ட பேச ஆசை தான். ஆனால் என் வேலை டென்ஷன் இப்படி நிறைய பிரச்சனையில் நான் அவளிடம் பேசாததோடு, அவள் அழைத்தாலும், சில சமயம் எடுக்க மாட்டேன்.” என்ற சாருகேசனின் பேச்சில்,

யமுனாவின் தந்தையே.. “ உங்க வேலை அப்படி. என் பெண் இதை எல்லாம் பெருசா எடுத்து கொள்ள மாட்டாளே மாப்பிள்ளை.” என தன் மனைவி சொன்ன அவர் மீது தவறு இல்லை என்ற  அந்த வார்த்தையில், தன்னால் மீண்டும் சாருகேசனை மரியாதையாக  மாப்பிள்ளை என்று அழைத்தார்.

சாருகேசன் நீண்ட பெரும் மூச்சை ஒன்று விட்டு..  “அங்கு இருந்து தான் பிரச்சனையே ஆரம்பமாகி இருக்கு மாமா.. இவள் கல்யாணத்துக்கு என்று ட்ரீட் கொடுத்த போது இவள் பிரண்ட்..” என்று ஆரம்பித்த சாருகேசன் அங்கு பேசியது அனைத்தும் சொன்னவன் பின் தயங்கிய  வாறு..

“கல்யாணம் அன்னைக்கே அவள் அந்த அறைக்கு வந்த உடன் தூங்கிட்டா.. அது பெருசு இல்ல.. நான் அதை பெருசாவும் எடுத்துக்கல.. ஆனா பேசனும் என்று நினைத்தேன்.

சரி அன்னைக்கு தான் அப்படின்னா.. நான் கிட்ட வந்தாளே தூரம் தூரம்  போவதை நினச்சி தான் நான் வேறு யாராவது விரும்பி அது உங்களுக்கு பிடிக்காது.

இப்படி அவசர  அவசரமா எனக்கு கல்யாணம் செய்து வெச்சிட்டிங்களோ என்று தான் நான் நினைத்தேன் மாமா.  நான் உங்களை பத்தி கேள்வி பட்டது நீங்க நம்ம இனத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பிங்கன்னு..

ஒரு சமயம் யமுனா வேறு இனத்தைவரை விரும்பி இருப்பாளோ. அதனால் தான் என்னோடு அவளுக்கு  இந்த கல்யாணமோ என்று தப்பா நினச்சிட்டேன் மாமா.. என்னை மன்னிச்சிங்கோ. என்ன தான் இருந்தாலும் நான் அப்படி நினைத்து இருக்க கூடாது தான்.” என்று சொல்லும் மாப்பிள்ளையை அவர்களால் மன்னிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். அதுவும் தவறு தன் பெண் மீதும் இருக்கும் போது..

ஆனால் வீர ராகவன் .. “ பிடித்தம் இல்லாத தான்  உன் மனைவி முதல்ல உனக்கு போன் போட்டாங்களா.. நீ இதை நினைத்து பார்க்க மாட்டியா..? யமுனாவுக்கு இப்போ பிரச்சனை எதுவும் இல்லை. நீ பேசிய பேச்சால்  யமுனாவுக்கு ஏதாவது ஆகி இருந்தால்.” என்ற நண்பனின் வார்த்தைகளில்  இருக்கும் உண்மையில்  சாருகேசன் அமைதியாகி போனான்.

வீர ராகவன் தான் விடாது யமுனாவின் தோழிகளை திட்டி கொண்டு இருந்தான். அது எப்படி ஆண்கள் தான் பின்னால் வர வேண்டுமா. ஏன் பெண் வந்தால் அவங்க கிரீடம் கீழே விழுந்து  விடுமா என்ன.” என்று திட்டியவன் அங்கு கொஞ்சம் நிலமை சரியானதும் தான் அவன்  தன் வீட்டுக்கே வந்தான்.

யமுனாவும் நல்ல முறையில் உடல் தேறி வீட்டுக்கு வர வாரம் ஒன்று பிடித்தது. இந்த ஒரு வாரமாக  வேறு எந்த பிரச்சனையும் இல்லாது தான் சென்றது.

வீர ராகவன் யமுனாவிடம் அதிகம் பேசவில்லை. அவள் செய்தது அடுத்த ஆண் பேசும் விசயமும் கிடையாது. ஆனால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் போது அவனும் உடன் வந்தான்.

வீட்டில் விட்டு விட்டு போகும் போது… யமுனாவிடம்.. “  நல்லா படிச்சே.. உங்க அப்பா அம்மாவுக்கு நீங்க ஒரே பெண். இந்த சொத்து எல்லாம் உங்களுக்கு தான். இருந்தும் ஏன் வேலைக்கு போகனும் என்று நினச்சிங்க..? யாரையும்  எதிர் பார்த்து  நாம இருக்க கூடாது என்று தானே..

சொந்த அப்பா நாளை வரும்  புருஷன் இவங்களை கூட எதிர்  பார்க்க கூடாது என்று உங்க சொந்த காலில் நிற்பது பாராட்டுக்குறிய விசயம் தான்.

ஆனால் நீங்க படித்த படிப்பை பணம் சம்பாதிக்க மட்டும் தான் பயன் படுத்துவிங்களா..? ஏன் கேட்கிறேன் என்றால், பணத்தை யரிடமும் எதிர்பார்க்க கூடாது என்று நினைக்கும் நீங்க, அறிவை மட்டும் ஏன் மத்தவங்க கிட்ட எதிர் பார்த்து இருக்கிங்க..” என்று பேசியவனின் பேச்சு யமுனாவுக்கு புரியவில்லை. அதனால் அவனை கேள்வியாக பார்த்தாள்.

“  முதல்ல உங்க இரண்டு பேர் பேசியதை பொதுவில் பேசுனது  தப்பு.. அதில் நீங்க மட்டும்  இவனுக்கு போன் செய்வதில் பிரச்சனை இருந்தால், அதை அவனிடம் கேட்டு தெளிவு படுத்தி இருக்கிறதை விட்டு விட்டு,

உங்க பிரண்டுங்க கிட்ட சொல்லி, அதில் ஒரு கூமுட்டை பேசியதை பெருசா எடுத்துட்டு, அதை வைத்து நீங்களும் கஷ்டப்பட்டு, அவனையும் கஷ்டப்படுத்திட்டு, உங்க இரண்டு பேரால் பாவம் உங்க அப்பா அம்மா அவங்களையும் சேர்த்து வருத்தப்பட  வைத்தது இது எல்லாம் தேவை தானா..?” என்று அவன் பேசிய பேச்சுக்கு ஒன்று கூட எதிர் பேச்சு பேசாது அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள் யமுனா..

ஏன் என்றால் அவன் கேட்பது அனைத்தும் நியாயமான கேள்வி என்பதால், யமுனாவின் தெளிந்த முகத்தை பார்த்த வீர ராகவன் இனி  நண்பனின் வாழ்க்கையில்  பிரச்சனை இருக்காது என்று வீட்டுக்கு வந்தவன் கையில் வீர ராகவனால் கூமுட்டை என்று  அழைக்கபட்ட இந்துமதியின் போட்டோவை காண்பித்த யசோதா..

 “ எனக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கு  வீர்.. ஜாதமும் பொருத்தமா இருக்கு. உனக்கு பிடித்து இருந்தால் பெண் பார்க்க போகலாம்.” என்று சொன்ன அன்னையின் வார்த்தை கேட்டு கொண்டே இந்துமதியின் போட்டோவை பார்த்துக் கொண்டு இருந்த வீர ராகவன் என்ன நினைத்தானோ..

“ இந்த இடத்தையே முடித்து விடுங்க அம்மா.. நான் வந்து பார்க்கனும் என்று கூட அவசியம் இல்லை.” என்ற வீர ராகவனின் பேச்சில் யசோதா மகிழ்ந்து போனார்.

Advertisement