வீடு இருளில் மூழ்கியிருந்தது. ஷண்முகவேலின் அறையில், கட்டிலின் மேல், வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சினேகாவின் செவிகளில் சற்றுமுன் கைப்பேசி வழியாக அவள் கேட்ட ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அதோடு ‘சாமி, சாமி’என்ற விஜயாவின் வார்த்தைகளும் சேர்ந்து கொள்ள, அவளது அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது. அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தாள். அப்போது, அவனுடைய சாவியைப் போட்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தான் ஷண்முகவேல். கர்ட்டன் வழியாக வெளியேயிருந்து வந்த மெல்லிய வெளிச்சத்திற்கு அவன் விழிகள் பழகிக் கொண்ட நொடியில், நிழலுருவமாக அவனது படுக்கையறை வாயிலில் சினேகா நின்றிருப்பதை உணர்ந்தான். அதே நொடியில் கண்ணெதிரே ரத்தமும் சதையுமாக நின்றிருந்தவனைக் கண்டவுடன் கடந்த சில நிமிடங்களாக ஆழ்முடக்கத்தில் இருந்த அனைத்தும் வெறியுடன் மேலெழ, வேலை நோக்கிப் பாய்ந்தது கொடி.
அவனது உடல் பலவிதமான வலிகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் வருடக்கணக்கான பயிற்சியின் காரணமாக அவன் மீது பாய்ந்தவளை,”ஈஸி ஈஸி பேபி” என்று அவளைச் சமாதானம் செய்தவன் அப்படியே இடுப்பைப் பிடித்து தூக்கி அவனோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். கொடியின் பாதங்கள் காற்றில் மிதக்க, கைகள் மாலை போல் வேலனது கழுத்தை சுற்றிக் கொள்ள, இதழ்கள் இரண்டும் இணைய, தேகங்கள் இரண்டும் பிணைய, அவன் மீது பூரணமாக படர்ந்த கொடியின் மென்மை தன்மையில் உருகியிளகிப் போன ஷண்முகம் சினேகாவோடு சோஃபாவில் சரிந்தமர்ந்தான்.
வரம்புகளைத் தாண்டி மெல்லிழையாளின் மேனியை வேலின் விரல்கள் தீண்ட, விரகிணியாக தவித்துக் கொண்டிருந்தவளின் தேகம் முரண்டு பிடிக்காமல் அவனோடு மேலும் ஒன்ற, இருவர் ஒருவராக மாறிக் கொண்டிருந்தாலும் உயிர் மூச்சு வேறாக இருந்ததால் இதழ்களுக்கு சில வினாடிகள் விடுதலை அளிக்க, அந்த இடைவேளையிலும் வேலின் விரல்கள் அதன் வேலையைத் தொடர, இன்பக்கொடியின் கழுத்தில் முகத்தைப் புதைத்து,’my enchanting witch’ (யட்சிணி) என்று முணுமுணுத்தான் சிங்காரவேலன்.
கழுத்தில் புதைந்திருந்த இதழ்களும் விரல்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இன்பத்தை அனுபவிக்க ஆசைப்பட, மங்கையின் அங்கங்களை விட்டுக் கொடுக்க விரல்கள் மறுக்க, ‘எனக்கும்’ என்று இதழ்கள் அடம் பிடிக்க, இன்பத்தை இரட்டிப்பாக்க வஞ்சியின் மேட்டுத்தாக்கை இதழ்களுக்கும் பள்ளத்தாக்கை அவனது விரல்களுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தான் வடிவேலன். அந்த இருமுனை தாக்குதல் ஏற்படுத்திய தாபவெப்பத்தில் கொடியின் தேகமானது காயும்பதத்திலிருந்து வேல்பதத்தை அடைய, உடைய, உருகிக் கரைய, பரவசத்தில், “என் சாமி, அழகர்சாமி” என்று சினேகா முனங்க, ‘சாமி’ என்ற சொல்லில் வேலை சுற்றியிருந்த மோகத்திரை மாயமாக மறைய, உடனேயே அவளை விடுவித்து, விலகி அமர்ந்து, விஜயாவின் படுக்கையறையை நோக்கியபடி சினேகாவிடம் ”கெட் டிரெஸ்ட்” என்றான் ஷண்முகம்.
அவளது மதிமயக்கத்திலிருந்து மீண்டு அவனது கட்டளையை நிறைவேற்ற சினேகாவிற்கு அவகாசம் தேவைப்பட்டது. அவர்களின் அந்தரங்கமான சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல் குழப்பத்தோடு அவனை நோக்கினாள். அவனது பார்வை இருந்த இடத்தைப் பார்த்து பதறிப் போனவள், அவளை மீட்டுக் கொண்டு, வேகமாக எழுந்து தரையில் தவழ்ந்து கொண்டிருந்த சேலையை அவசர அவசரமாக மடிப்பு வைத்து இடுப்பில் சொருகி, தலைப்பை சீர் செய்தபடி, கலைந்த தலை, கசங்கிய மேல் சட்டை, வலது தொடையில் கிழிந்திருந்த கால்சட்டை என்று அச்சம் அளிக்கும் தோற்றத்தில் இருந்தவனிடம்,”நீங்க முதல்லே போய் டிரெஸ் மாத்திட்டு வாங்க..உங்களை அத்தை இப்படிப் பார்த்தா அவ்வளவு தான்..அவங்களாலே தாங்கிக்க முடியாது.” என்றாள்.
அதற்கு,“பெரிசா அடி எதுவும் படலை..ஜஸ்ட் ஃப்யூ ப்ருயுஸஸ், ஸ்க்ராட்சஸ்.” என்றான் ஷண்முகம்.
கைப்பேசி வழியாக அவள் கேட்ட இடைவிடாத ஆம்புலன்ஸ் ஒலிக்குப் பதில் தேவைப்பட்டதால்,”வேற யாருக்கு பலமா அடிபட்டிச்சு?” என்று கேள்வியை மாற்றி போட்டாள்.
அடுத்த சில நொடிகள் அமைதியில் கழிய அதற்கு பதில் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்த போது,”மதன் ஸர் அண்ட் ஃப்யூ அதர்ஸ்..உயிர் இழப்பு இல்லை.” என்றான் ஷண்முகம்.
அந்த நேரம் வாயில் அழைப்பு மணி ஒலித்தது. உடனே சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டவன்,”யாரா இருந்தாலும் நான் வீட்லே இருக்கறது தெரிய வேணாம்..ஹாண்ட்ல் தெம்.” என்று சினேகாவிற்கு கட்டளையிட்டு விட்டு அவனது அறைக்கு சென்றவன், அதே இடத்தில் நின்றபடி அவனை அவள் முறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்த போது,”கண்ணு” என்று அடுத்த அறையிலிருந்து விஜயா அழைக்க, அதைக் கேட்டு அவளது உடை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தபடி”வரேன் அத்தை” என்று உரக்க பதில் அளித்தாள் சினேகா.
அவனைத் தாண்டி விஜயாவின் படுக்கையறைக்கு அவள் சென்ற போது அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,”அடுத்த வாரத்திலிருந்து நீ தான் எல்லாத்தையும் ஹாண்டில் செய்யணும்.” என்று சொன்னவன், வாசலைக் காட்டி,”அங்கே” பக்கத்து அறையைக் காட்டி,”இங்கே” என்றவன் கடைசியாக ஆள் காட்டி விரலை அவனது நெஞ்சின் மீது வைத்து, கண்ணை சிமிட்டி,”என்னை” என்று சொல்லிவிட்டு அவளது எதிர்வினைக்கு காத்திருக்காமல் ஜெட் வேகத்தில் அவனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவனது அறை வாசலிலேயே வேரூன்றி நின்று விட்டாள் சினேகா. அப்போது மறுபடியும் “கண்ணு” என்று விஜயா அழைக்க, வாசலில் யாராக இருந்தாலும் காத்திருக்கட்டுமென்று விஜயாவின் அறைக்கு விரைந்து சென்றாள் சினேகா.
கட்டிலில் அமர்ந்திருந்தவர்,“அழைப்பு மணி கேட்டா போல் இருந்திச்சு கண்ணு..குரல் கொடுத்தேன் உன்னைக் காணலை அதான் நானே திறக்கலாம்னு எழுந்துகிட்டேன்.” என்றார்.
“சமையலறைலே தண்ணீர் குடிச்சிட்டிருந்தேன் ஆன்ட்டி..நானே போய்ப் பார்க்கறேன்..நீங்க படுத்துக்கோங்க.” என்று சொல்லி விட்டு மேலும் கேள்விகள் வருமுன் வாசல் கதவைத் திறக்க சென்றாள்.
கதவைத் திறந்ததுமே,”என்ன டீ ஆச்சு..ஃபோனை எடுக்கவே இல்லை..பதறிப் போய் வேலையைப் பாதிலேயே விட்டிட்டு ஓடி வரேன்.” என்றார் ஜோதி.
“ஆன்ட்டியோட தூக்கத்துக்கு தொந்தரவா இருக்கும்னு எங்க இரண்டு பேரோட ஃபோனையும் சைலெண்ட்டிலே போட்டு வைச்சிருந்தேன் ம்மா..நான் எடுக்கலைன்னா மெஸேஜ் போடுறது தானே வழக்கம்..இது என்ன புதுப் பழக்கமாப் புறப்பட்டு வந்திருக்கீங்க.”என்று சினேகா கடிந்து கொள்ள, அதற்கு ஜோதி பதில் சொல்லுமுன் அவரது அறையிலிருந்து வெளியே வந்த விஜயா,
“உன் ஃபோனை சைலெண்ட்டிலே போடாதே நீ எடுக்கலைன்னா ஜோதி நேர்லே வந்திடுவான்னு சொன்னேனில்லே..என் பேச்சை நீ கேட்கலையே.” என்று மாமியாராக பேச,
“இதே நேரம் அடுத்த வாரம் இந்த மாதிரி நடந்தா இங்கே வந்து நிப்பேனா விஜயாம்மா? இது என்ன புது பழக்கம்னு இவ கேட்கறா.” என்று அம்மாவாக ஜோதி மகளைக் குறை கூற,
“இங்கே தானே விட்டிட்டுப் போனீங்க? வீட்டு உள்ளே இருக்கறவளுக்கு என்ன ஆகிடப் போகுது? எதுக்கு ஜோதி இத்தனை பதற்றம்? கல்யாணம் கிட்டே வந்திடுச்சு உடம்புக்கு எதையாவது இழுத்து விட்டுக்காதே.” என்று சம்மந்தியாக ஜோதியைக் கடிந்து கொண்டார் விஜயா.
“இவளை உங்க மகன் கைலே பிடிச்சுக் கொடுக்கற வரை எனக்கு இப்படித் தான் இருக்கும்.” என்று ஜோதி உரத்த குரலில் பதில் அளிக்க, அதைக்கேட்டு,’ஐயோ இந்த அம்மா எதுக்கு இப்படிக் கத்தறாங்க..என்னை அவங்க ஹாண்ட்லே பிடிச்சுக் கொடுத்ததும் அவங்களை எப்படி ஹாண்டில் செய்யப் போறேன்னு இப்போ அவங்களும் யோசிக்கப் போறாங்க’ என்று கரெக்ட்டாக யோசித்த சினேகாவின் மனதும் ஷண்முகத்தை போல் அதே பாதையில் பயணம் செய்தது.
“விஜயாம்மா உங்களை ஒரு விஷயம் கேட்க மறந்திட்டேன்..கல்யாணம் முடிஞ்சதும் நீங்க எப்போதில்லிக்குத் திரும்பி வரப் போறீங்க? அதுக்கு ஏத்த மாதிரி இவளோட சீர் பொருளைக் கொண்டு வந்து வைச்சிடலாம்னு மனோ சொல்றான்.” என்றார்.
“அது இன்னும் முடிவு செய்யலை ஜோதி..சினேகாவை வெளியூருக்குக் கூட்டிட்டு போக திட்டம் போட்டிருக்கான் சாமி..என் அண்ணன் வீட்லே கொஞ்ச நாள் இருந்திட்டு நாங்க மூணு பேரும் சேர்ந்து தில்லிக்கு திரும்பி வருவோம்.” என்று சொன்னவருக்கு தெரியவில்லை வசந்தியோடு சேர்ந்து நான்கு பேராக தில்லிக்குத் திரும்பி வரப் போகிறார்களென்று.
“அப்போ கல்யாணம் முடிஞ்சதும் உடனே இங்கே வரப் போகறதில்லையா?” என்று ஜோதி மீண்டும் கேட்க,
“அண்ணன், அண்ணி இரண்டு பேரும் சாமியையும் சினேகாவையும் விருந்து அழைக்கறதா இருக்காங்க..அதை முடிச்சிட்டு அப்படியே ஜெயந்தி வீட்டுக்குப் போயிட்டு, வசந்தி சென்னைலே இருந்தா அவளையும் பார்க்கப் போவேன்..எப்படியும் நாங்க மூணு பேரும் இரண்டு நாளைக்கு அண்ணன் வீட்லே இருக்க வேண்டி வரும்..எத்தனை தேதிக்குத் திரும்புவோம்னு தெரியலை..சாமி வரட்டும் கேட்டுச் சொல்றேன்.”என்றார்.
“அது மரியாதை கிடையாது..உங்ககிட்டேயே கேட்டுக்கறேன்.” என்றார்.
“நீங்க எப்போ திரும்பி வர்றீங்க ஜோதி?” என்று விஜயா கேட்க, அதற்கு உடனே பதில் அளிக்காமல் சில நொடிகள் யோசித்த ஜோதி,
“மனோவும் ஷிக்காவும் உடனே திரும்பறாங்க..எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது..அதை முடிச்சிட்டு வருவேன்.” என்றார்.
“தனியா வரப் போறீங்களா?” என்று கேட்ட விஜயாவின் மனத்தில்,’மகள் திருமணம் முடிந்த பின் வேறு என்ன முக்கியமான வேலை இருக்கக்கூடுமென்ற கேள்வி வர ஆனால் அதை வெளியிடவில்லை.
“ஆமாம்..கல்யாணத்துக்கு முன்னாடியே முடிக்கணும்னு முயற்சி செய்தேன் நடக்கலை.” என்று அந்த பேச்சை முடித்தவர், அப்படியே “விஜயாம்மா இவளை அழைச்சிட்டுப் போகறேன்.” என்று தெரிவித்து விட்டு, மகளின் புறம் திரும்பி,”கிளம்பு டீ” அவளது கற்பனை உலகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தவளின் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
“இராத்திரி இங்கே என் கூடவே சினேகாவை வைச்சுக்கணும்னு ஆசையா இருக்கு.” என்று ஜோதியிடம் சொன்னவருக்கு தெரியவில்லை அவனது அறையினுள்ளே இருந்த அவருடைய மகனின் விருப்பமும் அதுதானென்று.
அது நிறைவேறாத விருப்பம் என்று உணர்ந்தவர் ஒரு பெருமூச்சுடன் சினேகாவிடம்,”கண்ணு, என்னோட கைப்பேசி எங்கே? அனிஷுக்கு ஃபோன் போடறேன்.” என்றார்.
வெளியே நடந்த உரையாடல்களை கேட்டபடி அவனுடைய அம்மாவின் கைப்பேசியோடு கட்டிலில் அமர்ந்திருந்தவன் அதிர, வெளியே இருந்தவளும் அது அவனின் கட்டிலின் மேல் உள்ளது என்ற உணர்ந்து அவனை விட அதிகமாக அதிர்ந்து, ஒரு முடிவிற்கு வந்து,”உங்க அறைலே தான் இருக்கும் ஆன்ட்டி..வாங்க..தேடிப் பார்க்கலாம்.” என்றாள்.
“ஒரு கைப்பேசியைத் தேட இரண்டு பேரா? ஒரு கால் போட்டா எங்கே இருக்குதுன்னு தெரிஞ்சிடப் போகுது?” என்ற சொன்ன ஜோதியின் கைகள் அதே நொடியே அவரது கைப்பேசியிலிருந்து விஜயாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தது. அறைக்குள் இருக்கும் அலைப்பேசியின் ஒலியை எதிர்பார்த்து பயத்தில் அவளுடைய அம்மாவின் முகத்தை சினேகா பார்த்துக் கொண்டிருக்க,”அதிலே எப்படி ஒலி கேட்கும் அது தான் சைலெண்ட்டிலே இருக்குதே..நீங்க கொஞ்சம் உட்காருங்க ஜோதி..என்னோட அறைலே தான் இருக்கும்..எடுத்திட்டு வரேன்.” என்று விஜயாவின் பதில் அறையினுள்ளே வெளியே இருந்த இருவரின் மனத்திலும் பாலை வார்த்தது.
கைப்பேசியை எடுத்து வர அவரது படுக்கையறைக்கு விஜயா செல்ல, ஜோதி மறுப்பு தெரிவிக்கும்முன்,”அம்மா, என்னோட கைப்பை அங்கே தான் இருக்கு எடுத்திட்டு வரேன்.” என்று விஜயாவைப் பின்தொடர்ந்து சென்றாள் சினேகா.
படுக்கையறையினுள்ளே சென்றதும் கதவை லேசாக சாத்திய சினேகா அதை விட லேசாக,”அத்தை” என்று விஜயாவை அழைக்க அது காதில் விழாததால் தலையணையின் அடியில் துழாவிக் கொண்டிருந்தவர் அருகில் சென்று மீண்டும் ,”அத்தை” என்று அழைத்தவள், அவர் திரும்பியதும் அவள் வாயில் விரலை வைத்து,”ஷு” என்று எச்சரிக்கை விடுத்து,”உங்க கைப்பேசி பக்கத்து அறைலே இருக்கு..அங்கே உங்க மகன் இருக்கார்.” என்றாள்.
உடனே, சந்தோஷத்தில்“சாமி” என்று ஆரம்பித்தவரின் உதடுகள் மீது விரலை வைத்து,”உங்களுக்கு ஃபோன் செய்தாங்க..நான் தான் எடுத்தேன்..வீட்டுக்கு வந்திட்டு இருக்கேன்னு சொன்னாங்க..இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தாங்க..அவங்க வீட்லே இருக்கறது தெரிஞ்சா அம்மா.” என்றவளின் எண்ணப் போக்கு விஜயாவிற்குப் புரிய அவளது விரலை உதடுகளிருந்து விலக்கி,”அவன் வீட்லே இருக்கற விஷயம் தெரியாம ஜோதியை இங்கேயிருந்து கிளப்பறேன்..நீ உன்னோட பையை எடுத்திட்டு வா.” என்று சினேகாவிற்கு கட்டளையிட்டு விட்டு வெளியே சென்றார் விஜயா.
“என்னவோ ஏதோன்னு பதற்றத்திலே உங்க வேலையைப் பாதிலே விட்டிட்டு வந்திருப்பீங்க..நீங்க வந்ததும் ஒரு விதத்திலே நல்லதாகிப் போச்சு ஜோதி இல்லைன்னா சினேகாவை அனுப்ப இன்னும் தாமதமாகி இருக்கும்..இனிமேல் நான் ஃபோன் செய்து, அனிஷ் எப்போ வந்து எப்போ உங்களை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகறது…நீங்களும் சினேகாவும் ஆட்டோல போயிடுங்க.” என்றார்.
அதைக் கேட்டு விஜயா வண்டிக்கு ஏற்பாடு செய்வார் என்ற எண்ணத்தில் வந்திருந்த ஜோதிக்கு ஏமாற்றமானது.ஆனாலும் அவரை மறுத்து பேசவோ கேள்வி கேட்கவோ முடியாதென்பதால், அறையிலிருந்து வெளியே வந்த சினேகாவிடம்,”ஒரு கைப்பையை எடுத்திட்டு வர இத்தனை நேரமா? குளிர்க்காலத்திலே சீக்கிரமே இருட்டாகிடும்னு தெரியாது உனக்கு.” என்று கோபித்துக் கொண்டார்.
அதற்கு எடக்காக பதிலளித்து ஜோதியின் கோபத்தை அதிகப்படுத்த விரும்பாமல்,“வரேன் அத்தை” என்று வினயத்தோடு விஜயாவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள் சினேகா. வாசல்படியில் அவர்கள் கால் வைத்ததும் வீட்டுக் கதவை சாத்திய விஜயா அடுத்த நொடியே “சாமி..சாமி” என்று மகனின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்.
“குளிச்சு தயாராகிட்டு வரேன் ம்மா.” என்று அதற்கு பதிலளித்தான் ஷண்முகம்.
அதைக் கேட்டு அன்று முழுவதும் இருந்த மனத்தின் அலைப்புறுதல் காணாமல் போக,”சரி சாமி.” என்றார் விஜயா.
சில நிமிடங்கள் முன்பு வரை விஜயாவின் கைப்பேசியை ஏந்தியிருந்த ஷண்முகத்தின் கைகள் இப்போது சினேகாவின் தீபாவளிப் பரிசான கைக்குட்டையை ஏந்தியிருந்தன. அதில் இருந்த நூல் வேலைப்பாட்டை மென்மையாக வருடியபடி,”லதா, மதுலதா” என்றான்.
அதே நேரம் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்த சினேகா, அவளது கைப்பேசி திரையில் தெரிந்த மிஸ்ட் கால் லிஸ்ட்டில் இருந்த பெயரை மென்னகையோடு பார்த்தபடி, “என் சாமி வேலுசாமி” என்று முணுமுணுத்தாள்.
*********
விரகிணி-காதலனைப் பிரிந்தவள்
காயும்பதம், slight heat, for boiling the juices of plants; வேல்பதம், full heat for melting gold, silver and other metals.
Madhulatha – sweet creeper or lovely creeper..கதைலே ‘intoxicating’ will be more appropriate.
எனக்கு தெரிஞ்ச வரை தட்பவெப்பம் நு வார்த்தை இருக்கு. தாபவெப்பம்னு வார்த்தை கிடையாது கதைக்காகதாபத்தையும் வெப்பத்தையும் இணைத்து ஒரு வார்த்தையாக உபயோகித்திருக்கேன். Creative liberty.