**

பார்த்திபன் மருத்துவமனைக்கு கிளம்பி சென்ற பின்,என்ன செய்வது என்று தெரியாமல்,போனை பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

கமலா உடல் அசதியாக இருந்ததால், அப்போதுதான் எழுந்து வந்தார். 

அவரைப் பார்த்ததும்,”இப்போ எப்படி இருக்குத்தைஎன்று கேட்க,

பரவாயில்லம்மாஎன்றவர்,

டீயை குடித்துவிட்டு,”நான் கடைக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்.நீ அங்க போய் இருக்கியாஎன்று கேட்க,

சரிங்கத்தைஎன்றவள் கடைக்கு சென்றாள். 

தங்கள் வீட்டிலிருந்து,நான்கு வீடு தள்ளியே,கமலா கடை வைத்திருந்ததால், அஞ்சலி நடந்தே சென்று விட்டாள். 

அங்கே ஏற்கனவே,மூன்று பெண்கள் வேலை செய்து கொண்டிருக்க, அஞ்சலியை பார்த்ததும் வரவேற்பாக சிரித்தார்கள். 

அத்தை..கொஞ்ச நேரம் கழிச்சு தான் வருவாங்கஎன்றவள்,அங்கிருந்த சேரில் அமர்ந்து கொள்ள,எல்லாரும் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில்,இன்னொரு பெண் வேலைக்கு வந்தவர்,தன் கையில் இருந்த பில்லை அஞ்சலியிடம் கொடுத்தவர்,”அத்தைகிட்ட கொடுத்துடும்மாஎன்றவர்,வேலையை பார்க்க,தனது இடத்தில் சென்று அமர்ந்தாள்.

என்ன பில்என்று அஞ்சலி பிரித்துப் பார்க்க,அது ஏதோ ஸ்கூல் பில் போல தெரிந்தது..

யாரோடதுக்காஎன்று கேட்க,அங்கிருந்த நால்வருமே,ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அந்தப் பெண்,”தம்பிக்கு தெரிஞ்சவங்க பையன்,என் பையன் கூட தான் படிக்கிறான்.அவங்களுக்கு தம்பி தான் பீஸ் கட்டறார்என்றவர்,எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்பது போல வேலையை பார்க்க ஆரம்பிக்க,அவர்களிடம் மேற்கொண்டு எதுவும் கேட்பது சரியாக இருக்காது என்பதால்,அஞ்சலி அமைதியாகிவிட்டாள்.

 ஆனால் மனம் மட்டும்,எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் கமலாவும் வந்து விட, அஞ்சலி அந்த பில்லை பற்றி அத்தையிடம் கேட்கலாமா,வேண்டாமா என்று யோசித்துக் கொண்டேயிருந்தவள்.. இவர்களின் முன் கேட்பது தவறாகிவிடும் என்று நினைத்து,எதையும் கேட்கவில்லை

பில்லை பற்றியும் கூறவில்லை

மதிய உணவு நேரம் வந்து விட்டதால், கமலா அஞ்சலியிடம்,”சாப்பாடு வீட்டுக்கே வந்துடும் அஞ்சலி.நீ வீட்டுக்கு போ.. பார்த்திபனும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்என்று அனுப்ப,ஏற்கனவே பார்த்திபனும் இதைக் கூறியிருந்ததால், நேரத்தை பார்த்தவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்..

அவள் சென்ற ஐந்து நிமிடத்தில், பார்த்திபனும் வீட்டிற்கு வந்து விட்டான்.

ஹாய் மேடம்என்று சந்தோஷமாக வந்தவனிடம்,அஞ்சலியால் எதையும் கேட்க முடியவில்லை.

அமைதியாக அவனுக்கு உணவு எடுத்து வைக்க,”இன்னைக்கு எப்படி போச்சுஎன்று கடைக்கு சென்றதைப் பற்றி விசாரித்தான்.

நல்லா தான் இருந்துச்சுங்கஎன்று சோர்வுடன் பேசவும்,

உனக்கு எந்த ஐடியாவும் தோணலையா..என்று கேட்க,

நீங்க சொன்ன மாதிரி..மார்க்கெட்டிங் எப்படி எல்லாம் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்..என்னோட ஃப்ரெண்ட் ஆப் டெவலப்பர் தான்..அவங்ககிட்ட பேசலாம்னு இருக்கேன்..என்ன சொல்லுவாங்கன்னு தெரியலஎனவும்,

நல்ல விஷயம் தானே..உனக்கு தோனறதை செய்.அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்கஎன்று அனுமதி வழங்கியவன்,

ஏன் ரொம்ப டல்லா இருக்க..உடம்பு சரியில்லையாஎன்று கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.

உடம்பு நார்மலா இருக்க மாதிரி தான் இருக்கு.என்ன ஆச்சு..?”என்று விசாரிக்க

தூக்கம் வருது..வேற ஒன்னும் இல்லஎன்று பார்த்திபனுக்கு புரியும்படி,பதில் கொடுக்க,அஞ்சலியின் கண்கள் தூக்கத்திற்காக ஏங்கியது உண்மைதான்.. 

இன்னைக்கு ரெஸ்ட் விட்டுடலாம்..நீ நல்லா தூங்குஎன்று வம்பளக்க ஆரம்பிக்க,அஞ்சலி பார்த்திபனின் பேச்சை கேட்கும் நிலையிலையே இல்லை.

சேரில அமர்ந்த நிலையிலையே தூங்கி வழிய,”சரி நீ தூங்கு அஞ்சலி..கடைக்கு ஒரு மணி நேரம் கழிச்சு வருவேன்னு,அம்மாகிட்ட சொல்லிடறேன்என்றவன்,

 “டைம் ஆச்சு.போயிட்டு வரேன்என்று கிளம்பி விட்டான்

பார்த்திபன் கிளம்பியதும்,அலாரம் வைத்த அஞ்சலி,ஒரு மணி நேரம் நன்றாக தூங்கி எழுந்தாள். தூங்கியெழுந்த பின்பு  தான்,அஞ்சலியின் உடலும்,மனமும் சமன்பட்டது போல் இருந்தது.

அஞ்சலி கடைக்கு வந்த பின்னர்,”தலைவலி எப்படி இருக்கு அஞ்சலிகமலா கேட்க,

பரவாயில்லத்தைஎன்றவள்,என்ன வேலை செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள்.

காலைல..சாந்தி பில் கொடுத்தாலாமே அஞ்சலி..எங்க வைச்ச..?”என்று கமலாவே கேட்டுவிட,

உங்ககிட்ட கொடுக்க மறந்துட்டேன்த்தைஎன்றவள், தன்னுடைய பேகிலிருந்த,பில்லை எடுத்துக் கொடுக்கவும்,

நம்ம பார்த்திபன்..ஒரு பையனோட படிப்பு செலவை ஏத்துக்கிட்டிருக்கான்..அவனும் சாந்தி பையன் படிக்கிற ஸ்கூல்ல தான் படிக்கிறான்..அதனால சாந்தியவே பீஸ் கட்ட சொல்லிடுவேன்என்றவர்

நீ ஏதோ யோசனையாவே இருக்க மாதிரி இருக்கு அஞ்சலி.என்று கேட்க,

அப்படி எல்லாம் இல்லத்தஎன்று சமாளித்தாள்.

உனக்கு சமாளிக்க வரல அஞ்சலி.அந்த பையன் யாருன்னு,உனக்கு சந்தேகமாக இருக்காஎன்று கேட்க அஞ்சலி திருத்திருவென்று முழித்தாள்.

பெண்ணின் மனம் பெண்ணிற்கு புரியாமல் போகுமா..!!

தங்கள் கடையில் வேலை செய்பவர்களுக்கு தெரிந்த உண்மை, அவர்களின் மூலமாக அஞ்சலிக்கு தெரிவதை விட,தானே கூறுவது சரியாக இருக்குமென்று முடிவெடுத்தவர்,” பார்த்திபன் காலேஜ் படிக்கும் போது,ஒரு பொண்ணை விரும்பினான் அஞ்சலிஎன்றவுடனே அஞ்சலிக்கு தூக்கி வாரிப்போட்டது..

லவ்வா..என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்று சற்று குரலை உயர்த்தி தன் அதிர்ச்சியை வெளிப்படுத்த,அங்க வேலை செய்பவர்களை பார்த்துவிட்டு,

வீட்டில் போய் பேசிக்கலாம்த்தைஎனவும்,

அவங்க எல்லாருக்கும் தெரியும் அஞ்சலி. இது ஒன்னும் மறைக்கிற அளவுக்கு,பெரிய விஷயமே கிடையாது.பார்த்திபன் லவ் பண்ணான்..அந்த பொண்ணும் லவ் பண்றேன்னு,வீட்டுக்கு வந்துட்டெல்லாம் போகும்..அப்போ நம்ம கிட்ட சொந்த வீடு கூட இல்லை, தெரிஞ்சுதான் லவ் பண்ணுச்சு..

ஒரு நாள் என்ன நினைச்சான்னு தெரியல. வீட்ல பார்த்த மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லிட்டேன்னு,பார்த்திபன் கிட்ட வந்து அழுதா..நானும் அவ வீட்ல போய் பேசி பார்க்கிறேன்னு சொன்னேன்..ஆனா அவ,என்னோட  அப்பா,அம்மா செத்துப் போயிடுவேன்னு சொல்றாங்க..

அவங்களுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு,ரொம்ப அழுதா..எங்களாலும் எதுவும் செய்ய முடியல..அவ கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஒருநாள் உண்மை தெரிஞ்சுது..

அந்த மாப்பிள்ளை நல்ல வசதியான இடம்.. நல்ல வேலையில இருக்காருன்னு, இவதான் விரும்பி கல்யாணம் பண்ணியிருக்கா..இந்த விஷயம் தெரிஞ்ச பார்த்திபன்,ரொம்ப உடைஞ்சு போயிட்டான்.அதுலருந்து அவன் மீண்டு வர்றதுக்கு, எவ்வளவு கஷ்டப்பட்டான்னு எனக்கு தெரியும்என்றவர்,

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி,அவ புருஷன் தற்கொலை பண்ணிக்கிட்டானாம்..ஏதோ ஆன்லைன் விளையாட்டுல,இருக்க பணத்தையெல்லாம் இழந்து,கடனில் மூழ்கி இறந்துட்டதா சொன்னாங்க..

பார்த்திபனுக்கு மனசு கேட்காம,வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லிட்டு வந்தான்..அப்புறம் அடிக்கடி போய்,அவ வீட்டு செலவுக்கு பணம் கொடுத்திருக்கான்..இந்த விஷயம் எனக்கு கொஞ்ச நாள் கழிச்சு,சாந்தி மூலமா தான் தெரிய வந்துச்சு..

பார்த்திபன் கிட்ட கேட்டா..அவளையே கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்றான்.நான் அவள கல்யாணம் பண்ணவே..கூடாதுன்னு முடிவா சொல்லிட்டேன்..

என்னவென்னவோ பேசி ,சம்மதம் வாங்க பார்த்தான்.நான் அசைஞ்சு கொடுக்கவேயில்லமுக்கியமான விஷயம் என்னன்னா, பார்த்திபனுக்கு முன்ன மாதிரி,இப்போ அந்த பொண்ணு மேல பெருசா விருப்பமில்லை..தன்னை மாதிரி அந்த  பையனும்,அப்பா இல்லாம கஷ்டப்பட்டு வளர வேண்டாம்னு யோசிச்சிருக்கான்..

படிப்பு செலவு மட்டும்,நாம பார்த்துக்கலாம்.. அந்த பொண்ணுக்கு வேற யாரையாவது பார்த்து,கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்னு,நான் முடிவா சொல்லவும்,பார்த்திபனாலும் எதுவும் செய்ய முடியலஎன்றவர் மருமகளின் முகம் கலங்குவதை பார்த்தவர்,

என் பையன் ரொம்ப நல்லவன்மா.நான்பட்ட கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவன்.என்னை மாதிரி அந்த பெண்ணும் கஷ்டப்படவும்,மனசு இறங்கிட்டான். மத்தபடி அந்த பொண்ணு மேல,பெரிய ஆசையெல்லாம் இல்ல.அவ மேல அவனுக்கு இன்னமும் வெறுப்பு இருக்கு.அது எனக்கு நல்லாவே தெரியும்என்று மருமகளுக்கு ஆறுதலாக பேசவும்,

நீங்க ஏன் வேண்டாம்னு சொன்னீங்க..உங்க நிலைமையில் இருக்க,ஒரு பொண்ணுக்கு உதவனும்னு உங்களுக்கு தோணலையா?”என்று கேட்டேவிட்டாள்.

 தான் அதிகப்படியாக பேசி விட்டோம் என்று உணர்ந்து,”சாரித்தைஎன்று மன்னிப்பும் கேட்டாள்.

அந்தப் பொண்ணு..நல்ல பொண்ணா இருந்தா பரவாயில்லயே அஞ்சலி. பணத்தாசை பிடிச்ச பொண்ணு..அவ புருஷன் இறந்ததுக்கு,அவளும் ஒரு காரணம்..

பணம் போயிடுச்சுன்னா சம்பாதிச்சுக்கலாம்னு,அவனுக்கு ஒரு தைரியத்தை கொடுக்காம..பேசியே நோகடிச்சிருக்கா..அதனால தான் அவன் தற்கொலை முடிவு எடுத்திருக்கான்..இப்படி ஒரு பொண்ண,எப்படி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்..?”

எனக்கு என் பையனோட வாழ்க்கை, ரொம்ப முக்கியம் அஞ்சலி..இனிமேலாவது அவன் சந்தோஷமா இருக்கணும்என்றவர்,

அவ மேல விருப்பமிருந்தா,அவன் முடிவுல உறுதியா இருந்திருப்பான்.என்னையும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருப்பான்..வேற வழி இல்லாம நானும் சம்மதிச்சிருப்பேன்..அவனும் ரொம்ப வற்புறுத்தல..இதிலிருந்து உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..

நான் உன்கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு தான்..உண்மையை சொல்லிட்டேன்..நீ பார்த்திபன்கிட்ட எதையும் கேட்டு சண்டை போட வேண்டாம்.. முடிஞ்சு போனது முடிஞ்சு போனதுதான்.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சு.. உங்க வாழ்க்கைய எடுத்துக்காதஎன்று அஞ்சலி மனம் அறிந்து அறிவுரை கூற, அஞ்சலி அந்த நொடி மாமியாரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டாள்.