அருணகிரி, “மஞ்சுளா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. ரயில் போயிட்டே இருந்தா தண்டவாளத்துக்கு சுமை. தண்டவாளம் பிசகினா ரயில் குடை சாஞ்சிடும். எதுவும் அளவா, சரியா இருக்கணும். அப்போ தான் உறவு நிலைக்கும்”
“ராஜேஸ்வரி அம்மா மாதிரி அதிகாரமும் இருக்க கூடாது. மாப்பிள்ளை போல பொறுமையும் இருக்க கூடாது. பாரதி போல பொறுத்து ஒரேடியா வெடிக்கவும் கூடாது” என்றார் பெரியவராக.
வீட்டினர் புரிந்து கொண்டனர். ராமமூர்த்தி, “நான் வேலையை விட போறேன்” என்றார்.
தனிமை இருவருக்கும் பிடிக்கவில்லை. அண்ணனோடே வந்துவிட நினைத்தனர். “ரொம்ப சந்தோசம்” என்றார் அருணகிரி.
“மாமா நானும் வேலையை விட போறேன்” என்று மருமகள் சொல்ல, வீட்டினர் திகைத்தனர்.
ரகுராம் மனைவியை கோவமாக பார்க்க, “உன் வீட்டுக்காரனுக்கு இதுல விருப்பம் இல்லை போலயேமா” என்றார் பத்மா.
“மருமகளுக்கு என்ன வேணுமோ அதை செய்யட்டும் பத்மா” என்றார் அருணகிரி.
“ப்பா. படிச்ச படிப்பை விட்டு நம்ம தொழிலுக்கு வரேங்கிறா” என்றான் ரகுராம்.
“நான் யாருக்கோ ஏன் மாமா உழைக்கணும்? எனக்கு இது பிடிச்சிருக்கு” என்றாள் ஜனக்நந்தினி.
அருணகிரி இதில் தலை கொடுக்காமல், “நீங்க என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம்” என்றார்.
எல்லாம் தூங்க கிளம்ப, “சித்தப்பா” என்று நிறுத்தினான் ரகுராம்.
“இப்போவும் நீங்க உங்க தங்கச்சிக்கு துணை போனது தப்புன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.
என்றோ அவர்கள் வருத்தப்பட்டதை கேட்க, தம்பதி முகம் பார்த்து கொண்டனர். “மகனுக்கு அப்பாம்மா கெட்டது நினைக்க மாட்டாங்கன்னு புரிஞ்சிடுச்சு போல” என்றான் சிரிப்புடன்.
ராமமூர்த்தி வேகமாக வந்து அவனை அணைத்து கொண்டார். அருணகிரி, பத்மா நெகிழ்ச்சியுடன் நிற்க, மஞ்சுளாவிற்கு கண்ணீர்.
“என்ன சித்தி” என்றான்.
“எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சாமி” என்றார் மஞ்சுளா.
“இதே சந்தோஷத்துல இவரை வேலை வாங்க மறந்துடாதீங்க” என்றான் சித்தப்பாவை கை காட்டி.
“அதெல்லாம் முதலாளிங்க விவரம். அண்ணாவையும், என்னையும் நல்லா வேலை வாங்குறாங்க” என்றார் ராமமூர்த்தி.
அனுஷா திருமண நேரம் அவர் கொடுத்த பணத்துக்காக தொழிலில் அவரை சரிபாதி பங்குதாரர் ஆக்கிவிட்டான். ராமமூர்த்தி கோவப்பட்டு, மறுத்து சண்டையிட்டு எதுவும் மகனை அசைக்கவில்லை.
அதே நேரம் சுதாகரனிடமும் சிறிய தொகையை பெற்று கொண்டான். அனுஷாவும் ஒரு பங்குதாரர். ராஜேஷ்வரி அந்த இடத்தை பற்றி பேசுவதில்லை. பேத்திக்கு தானே என்று விட்டுவிட்டார்.
மனோகரிடம் இருந்த கடனும் குறைந்து கொண்டே வருகிறது. அதே வீடு தான். முதலில் தொழில், அப்பறம் தான் புது வீடு என்று அம்மாவிடம் சொல்லிவிட்டான் ரகுராம். கூடிய விரைவில் வீடும் கட்டுவான்.
எல்லாம் நிம்மதியாக அவரவர் அறைக்கு சென்றனர். நிஹாரிகா நல்ல தூக்கத்தில் இருக்க, ரகுராம் குளித்து வந்தான். “இன்னைக்கு ஒன்னும் கிடையாது” மனைவி எச்சரிக்கையாக சொல்ல,
“நீ என்னமோ எல்லாம் பண்ணிடுற மாதிரி. சேவையும் நான் தான். செக்கிங்கும் நான் தான்” என்றான் கணவன்.
“அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு நீங்க செய்ய வேண்டாம் போங்க” ஜனக்நந்தினி முறுக்கி கொள்ள,
“எது வேணாம் சேவையா, செக்கிங்கா? தெளிவா சொல்லுடி” என்றான் அவளை தன் கை வளைவுக்குள் நிறுத்தி.
“இரண்டும் தான்” என்று அவனிடம் இருந்து விலக,
“இருடி” என்று இடை வளைத்தவன், “என்ன கோவம்” என்று நெற்றி முட்டினான்.
“தெரியாத மாதிரி கேட்காதீங்க” மனைவி கோவம் கொண்டாள்.
“இப்போ என்ன உனக்கு ஜனக் முகூர்த்தம் பார்க்கணும் அதானே” என்று கேட்க.
“ஆமா” என்றாள் உற்சாகமாக.
“அப்போ மேடம் என்னை விட்டு ஊருக்கு வர போறீங்க”
“அதுக்கு வாய்ப்பே இல்லை. உங்களோட இருந்து தான் செய்வேன். ஆன்லைன்ல முழு மூச்சா செய்ய போறேன். கூட சின்ன சின்ன ஐடியாஸ் இருக்கு” என்றாள்.
“படிப்புக்கான வேலை”
“ப்ளீஸ்ங்க” என்று அவன் வாய் மூடினாள்.
“எல்லோரும் உங்களை மாதிரி இருக்க மாட்டாங்க. பாருங்க சொந்த பிஸ்னஸ் இருந்தும் வேலையை விட மாட்டேங்கிறீங்க. கூட பார்ட் டைம் ஜாப் வேற”
“அதை என் புருஷன் சமாளிச்சுப்பார். எனக்கு ஜனக் முகூர்த்தம் ஜெயிக்கணும்”
“ஜனக் முகூர்த்தமா? உன் புருஷனா?” ரகுராம் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கேட்டாள்.
பெண்ணுக்கு பேச்சு வரவில்லை. கணவன் கண்டுகொண்டான். அவள் முகத்தோடு முகம் உரசினான். அணைப்பில் நெருக்கம் கூட்டினான்.
உதடுகள் நான்கும் பேச ஆரம்பித்தது. பேசி கொண்டே இருந்தது. கணவனின் முதுகை தடவி கொடுத்து அவனை நிதானப்படுத்தினாள்.
ரகுராம் கட்டுப்பாடு உடைந்து போனது. மனைவியை சுழற்றி தன்னுள் அடக்கி கொண்டான். அவளுக்கான சேவையை முற்றும் முழுதாக செய்தான். ஆராதித்தான். முத்தங்கள் அவனின் காதலில் கணக்கில்லாமல் கொட்டியது.
ஜனக்நந்தினி ஒரு கட்டத்தில் அவனுக்கு கட்டுப்பட்டு போனாள். ரகுராம்க்குள் மூழ்கிவிட்டாள். சுற்றம் எதுவும் நினைவில் இல்லை. கணவனின் மூச்சு காற்றில் சுவாசித்தாள்.
ரகுராம் மனைவியிடம் அவனை தொலைத்து, நிதானித்திற்கு வந்தான். ஈர்க்கும் அவனின் செயினுக்கு முத்தங்கள் நில்லாமல் தொடர, அவன் கன்னம் பிடித்து கொஞ்சியவள், “போதும்” என்றாள்.
“நீ தான் என்னை இப்படி பண்ண வைக்கிற” என்றான்.
“அப்படி பார்த்தா நான் என்ன சொல்ல? எனக்காக நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, ஓடுறீங்க. அதுக்கு நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள்.
“இத்தனை வருஷத்துல நான் உங்களுக்கு பெருசா சமைச்சு கூட கொடுத்தது இல்லை. எனக்கான கமிட்மெண்ட்ஸை நீங்க கொடுத்ததே இல்லை. பாப்பாவை கூட கேர் டேக்கர், சின்ன அத்தை தான் பார்த்துகிறாங்க. என் அப்பாகிட்ட எப்படி இருந்தேனோ அப்படி தான் நீங்க என்னை வைச்சிருக்கீங்க. ரொம்ப சொகுசா”
“நீ ஏண்டி கஷ்டப்படணும்?”
“அப்போ நீங்க மட்டும் ஏன் எப்போவும் உழைக்கணும்?”
“என் குடும்பத்துக்கு நான் தான் செய்வேன்”
“அப்போ என் புருஷனுக்கு நான் செய்றதுல என்ன இருக்கு? ஏன் இவ்வளவு எமோஷன் ஆகுறீங்க?” என்று கேட்டாள்.
“நீ எனக்காக இல்லாம போயிருந்தா நான் இப்படி இருந்திருக்க மாட்டேன் தானே?”
“நான்னு இல்லை. யார் உங்க வாழ்க்கையில வந்திருந்தாலும் நீங்க இப்படி தான் இருந்திருப்பீங்க”
“என்ன பேசுற நீ? உன்னை தவிர என் வாழ்க்கையில யாரும் இல்லை?” என்று கோவம் கொண்டான்.
“சொன்னதுக்கேவா. அப்பறம் என்னைவிட்டு போக காரணம் தேடிட்டு இருந்தீங்க?” என்று கேட்டாள்.
“அது அப்போ” என்றான் அவளோடு நன்றாக பிணைந்து.
“அப்போன்னாலும் எனக்கு கோவம் வருதே” மனைவி அவன் முடி பிடித்து தன் முகம் பார்க்க வைத்தாள்.
“சரி செக்கிங்க் ஆரம்பிக்கலாமா?” என்று கண்ணடித்து கேட்டான்.
“இவ்வளவு நேரம் வேறென்ன செஞ்சிங்க? எல்லாம் போதும்”
“போதுமா? விருந்து எல்லா நேரமும் கிடைக்காது. கிடைக்கிற நேரம் முழுசா சாப்பிட்டிடணும்”
“அடேங்கப்பா என்னமோ சாப்பிடவே செய்யாத மாதிரி தான்” மனைவி நொடித்து கொண்டாள்.
ரகுராம் சிரிக்க, உதடுகளால் அவளை கவர்ந்த புன்னைகையை தனக்குள் எடுத்து கொண்டாள் மனைவி.
ரகுராம்க்கும் அவளின் காதல் இனித்தது. அவளிடம் தன்னை ஒப்புக்கொடுத்து தித்திப்பை சுவைத்தான். இருவரின் நெருக்கமும், இறுக்கமும் அவர்களின் ஆழ்மனதின் பிணைப்பே.
ஜனக்நந்தினி எனும் பெண் அவனை அளவுக்கு அதிகமாக கவர்ந்திழுக்க, ஆழ்ந்த முத்தம் மனைவிக்கு. “யப்பா. உதடு போச்சு” அவள் சிவக்க,
“மொத்தத்தையும் சிவக்க வைக்கிறேன்” என்று அவளை தனக்குள் இழுத்துகொண்டான்.
உறவு, பந்தம், பாசம், காதல் எல்லாம் படிக்க படிக்க தான் அதற்கான அழகியல் வெளிப்படும். புரிந்து கொள்ள முடியும். அனுபவிக்க முடியும்.
ரகுராம், ஜனக்நந்தினி வாழ்க்கையும் அப்படி தான். வருடங்கள் கூட, கூட அவர்களின் அழகான காதலும் கூடி கொண்டே போகும்.
பணம், அந்தஸ்து பார்க்கா அவளின் குணத்திற்கு ரகுராம் கட்டுபட்டான் என்றால், குறையாத அன்பையும், குறைவில்லா குடும்பத்தையும் கொடுத்த ரகுராமிடம் மனைவி சரணடைந்தாள்.
விட்டுக்கொடுத்தல், புரிதல் இரண்டும் இவர்களின் உறவில் தானே நடந்தது.
கணவனுக்காக என்று மனைவி செய்த செயல்கள், மனைவிக்காக என்று கணவன் செய்த செயல்கள் இரண்டும் தராசில் சரிசமமாக நின்றுவிட்டது.
அன்பை வாங்கி கொள்ள தெரிந்தவர்களுக்கு அதை அள்ளி கொடுக்கவும் தெரிய வேண்டும். இவர்களுக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது.
பாரதி என்பவரால் ஆரம்பிக்கபட்ட ஒற்றை செயின் உறவு. அந்த உறவின் மேல் இவர்கள் வைத்த மதிப்பு. அதற்கான உண்மை, ஈடுபாடு, போராட்டம் இதெல்லாம் தான் இவர்கள் வாழ்க்கை எனும் அழகியல்!!!