Advertisement

ரகுராம் மௌனித்தவன், தொண்டை செருமி கொண்டான். “நான்.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்ப்பா. இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.

“அது அப்பறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல வேலையை கொஞ்சம் குறைச்சுக்கோ” என்றார் பத்மா.

“ம்மா..”

“ரகு.. முன்ன நம்ம நிலைமை வேற. இப்போ பரவாயில்லை. உனக்கு இல்லாம நாங்க பூட்டி வைச்சு என்ன பண்ண போறோம்” என்றார் பத்மா.

அருணகிரி மகன் தோள் தட்டியவர், “எடுத்துக்கோப்பா” என்றார்.

ரகுராம் அங்கிருக்க முடியாமல் அறைக்கு வந்துவிட்டான். ஆட்கள் கூலி குறையும் என்று அருணகிரி, பத்மா இருவரும் தறியில் வேலை செய்வர். அப்போதும் வருமானம் கொட்டிவிடாது. இழுத்து பிடித்து தான் குடும்பம் ஓடும்.

கஷ்டத்தை பார்த்து, அனுபவப்பட்டு தான் வளர்ந்திருக்கிறான். பெற்றவர்களின் பாரம் புரிந்ததாலே அனுஷா திருமண நேரம் கை கொடுத்தான்.  உழைப்பு, ஓட்டம். முதலில் வலித்தாலும் இப்போதும் பழகிவிட்டது. பிடித்துவிட்டது.

தறியை மேம்படுத்தியிருக்கிறான். பெற்றவர்களும் கூடுதல் நேரம் எடுத்து உழைக்கின்றனர். வருமானம் அவனுக்கு தெரியும். ஆனாலும் கேட்க நினைத்ததில்லை. இன்று அருணகிரியே கொடுக்க, நிறைவு தான்.

பணத்தை பார்த்தே அமர்ந்திருந்தான். சில நிமிடங்கள் தான். மீண்டு கொண்டான். அடுத்து இந்த பணம் எதற்கு எடுக்கலாம் என்று கணக்கு போட ஆரம்பித்துவிட்டான்.

அங்கு இவன் மனைவி கரூர் கிளம்ப வேண்டும் என்று நின்றிருந்தாள். “இப்போ வந்து போயே ஆகணும்ன்னா எப்படி பாப்பா?” ராஜேஸ்வரி கேட்டார்.

“அவ்வளவு ஒன்னும் லேட் ஆகிடலை. நான் என் வீட்டுக்கு தானே போறேன்” என்றாள் அவள்.

நேற்றில் இருந்து அறையில் அடைந்து கிடந்தவள், இப்போது பிடிவாதம் பிடிக்க வீட்டினர் திகைத்தனர். “ப்ரவீன் கூட இல்லை கண்ணு. அண்ணிகிட்ட போயிருக்கான்” என்று பாரதி சொல்ல,

“அண்ணா எதுக்கு? நான் பஸ்ல போயிக்கிறேன்” என்றாள் அவள்.

“என்ன பஸ்ஸா?” தணிகைவேல் கோவமாக கேட்டார்.

“போவேன்” என்றாள் ஜனக்நந்தினி.

“இதென்ன அடம் பாப்பா? உன்னை எப்படி நாங்க தனியா அனுப்ப? இப்போ ஈவினிங்ன்னாலும் நீ கரூர் ரீச் ஆகும் போது நைட் ஆகிடும்” என்றார் தந்தை.

“நான் மேனேஜ் பண்ணிப்பேன் ப்பா. இன்னும் என்னை சின்ன பொண்ணா ட்ரீட் பண்ணாதீங்க”

“பாப்பா. உன்னோட சேஃப்டி பார்க்கணும். நாளைக்கு காலையில  கிளம்பு”

“நான் போகணும்ப்பா”

“வெளியே போக வேலை இல்லைன்னு ட்ரைவர்ஸை எல்லாம் அனுப்பியாச்சு. இப்போ வந்து, என்ன பண்ற பாப்பா நீ?”

“நான் உங்ககிட்ட காரே கேட்கலைப்பா”

“கண்ணு பொறுமையா இரு” ராஜேஸ்வரி பேத்தி கை பிடித்தார்.

“என் வீட்டுக்கு நான் போக கூடாதா பாட்டி?”

“இதுவும் உன் வீடு தான் பாப்பா” தந்தை கண்டித்தார்.

“அப்போ என் வீட்டுக்காரர் எங்க?” என்றாள். குரல் உயர்ந்திருந்தது.

“நேத்து அவர் அந்த டைம்க்கு கிளம்புறார். ஒருத்தரும் இங்க இருக்க சொல்லி சொல்லலை”

வீட்டினர் திகைத்து முகம் பார்த்து கொண்டனர். “கண்ணு. அப்போ, அது உண்மையிலே தோணலை” ராஜேஸ்வரி சமாதானம் சொல்ல,

“நான் போகணும்” என்றாள் திரும்ப.

“பாப்பா.. அது தான் உன் கோவம்ன்னா நான் ரகுராமை கூப்பிடுறேன் இரு” என்று பாரதி சொல்ல,

“அவர் உங்க அண்ணா மகன் மட்டுமில்லை. என் ஹஸ்பண்டும். இந்த வீட்டு மாப்பிள்ளையும். மரியாதை கொடுங்க”

“கண்ணு.. நான் ரகு.. மாப்பிள்ளையை நம்ம வீட்ல தங்க தான்”

“நீங்க  கூப்பிட்டதும் அவர் ஓடி வரணும்ன்னு எதிர்பார்க்கிறீங்களாம்மா?”

“கண்ணு.. நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சுக்கலை. மாப்பிள்ளையை வீட்டுக்கு கூப்பிடுறது”

“ம்மா.. நான் இப்போ கிளம்புறேன்” என்று வாசலுக்கு நடந்தாள் பெண்.

“என்னம்மா இவ இப்படி பண்றா?” தணிகைவேல் அம்மாவிடம் புலம்பி, மகள் பின் சென்றார். உடன் பாரதியும், ராஜேஸ்வரியும்.

“கண்ணு நில்லு. என்னால வேகமா நடக்க முடியல” ராஜேஸ்வரி சொல்ல,  கேட்டுக்கு சென்ற பெண்ணின் வேகம் குறைந்தது.

“நீங்க ஏன் பாட்டி வரீங்க. போங்க” என்றாள் நின்று.

“கண்ணு. நிச்சயமா உன்னை தனியா அனுப்ப முடியாது. இரு” என்றவர், “வேலா. நீ கூட்டிட்டு போய் அவளை விட்டுட்டு வா” என்றார்.

தணிகைவேலும் அந்த முடிவில் தான் இருந்தவர், “நீயும் வா” என்று பாரதியை அழைத்து கொண்டவர். “ம்மா.. நான் வேணியை உங்க துணைக்கு வர சொல்றேன்” என்று கார் எடுத்தார்.

ஜனக்நந்தினிக்கு தயக்கம், “என்ன பாப்பா ஏறு” என,

“ப்பா.. நீங்க என்னை கூட்டிட்டு போகணும்ன்னு இல்லை” என்றாள்.

மகள் எதற்கு யோசிக்கிறாள் என்று புரிய, தணிகைவேல்க்கு மொத்த தயக்கமும் உடைந்து போனது. என் மகள் என் கௌரவத்துக்கு யோசிக்கிறாள். இது போதுமே?

“கார்ல ஏறு பாப்பா” என்றார் தந்தை. ஜனக்நந்தினி ஏறிக்கொண்டாள். பாரதி வேணிக்கு அழைக்க, கார் ரகுராம் வீடு நோக்கி சென்றது.

“உங்க அம்மா வீட்ல சொல்லிடு” என்றார் தணிகைவேல்.

பாரதிக்கு ஒருவித அச்சம் தான். அண்ணனை எதிர்கொள்ள வேண்டுமே? மஞ்சுளாவிற்கு அழைத்து இப்படி என்று சொன்னார்.

மஞ்சுளா  வீட்டில் சொல்ல, ரகுராம்க்கு ஆச்சரியம். ‘என்ன பண்ணிட்டிருக்கா இவ?’ தனியே வந்து  அழைக்க, எடுக்க வேண்டுமே அவள்.

“மருமக பிடிவாதத்தினால அழைச்சுட்டு போனவரே, திரும்ப கூட்டிட்டு வர மாதிரி ஆகிடுச்சு” என்றார் ராமமூர்த்தி. பத்மாவிற்கு அதில் மனம் கொஞ்சம் இளகியது.

“சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர சொல்லிடலாமா?” என்று மனைவியிடம் கேட்டார் அருணகிரி.

பத்மா சரியென்றதோடு,  தேவையான பொருட்களையும்  வாங்கி வர சொன்னார். மஞ்சுளா, அனுஷா உதவி செய்தனர். “நைட் இங்க தங்க சொல்லலாமா?” மஞ்சுளா மெல்ல கேட்க,

“வேறெங்க  போவாங்க? ஆனா பாரதி வீட்டுக்காரர் என்ன சொல்றார்ன்னு பார்க்கணும்” என்றார் பத்மா.

காரில் மகள் அமைதியாகவே வர, பெற்றவர்களிடமும் பெரிதான பேச்சு இல்லை. எதிர்பார்த்ததை விட சீக்கிரம் வந்துவிட்டனர். சம்மந்தி வீட்டினர் வரவேற்க, ரகுராம் கண்கள் மனைவியிடமே இருந்தது.

“டைம் ஆச்சு சாப்பிட்டுடலாமா?” பத்மா கேட்க, தணிகைவேல்க்கு இயல்பாக இருக்க முடியவில்லை. ஆனால் மிகவும் முயன்றார்.

மனைவியுடன் அமர,  ஜனக்நந்தினி, “நான் ரூம் போய்ட்டு வரேன்” என்று அறைக்கு சென்றுவிட்டாள்.

ரகுராம்க்கு மனைவி தன்னை கண்டு கொள்ளாததில் எக்கச்சக்க கடுப்பு. ‘போடி நான் வர மாட்டேன்’ என்று கீழேயே இருந்தான்.

ஓரிரு நிமிடம் தான். கால்கள் தானே மாடியேறிவிட்டது.   ஜனக்நந்தினி கட்டிலில் அமர்ந்திருக்க, கதைவடைத்து அவள் முன் சென்று நின்றான். “என்ன கோவம் உனக்கு?” என்று கேட்டான்.

“உன்னை தாண்டி கேட்கிறேன்” என்று அவள் கன்னம் பிடித்து தன்னை பார்க்க செய்தான்.

மனைவி பார்த்தே இருந்தவள், கண்களில் கண்ணீர் விழ, வேகமாக எழுந்து அவன் கழுத்தோடு கட்டி கொண்டாள்.

“ஹேய்” ரகுராம் ஒரு நொடி திணறி, அவளை தன்னோடு அணைத்து பிடித்தான்.

பெண் தேம்பினாள். முத்தமிட்டாள். கட்டி கொண்டாள். கழுத்தை விட்டு நெஞ்சில் சாய்ந்தாள். நெஞ்சில் முட்டினாள். முத்தம் வைத்தாள். திரும்ப இதையே செய்ய, ரகுராம் அவளை விலக்கி தன்னை பார்க்க வைத்தான்.

“என்னன்னு சொல்லுடி” என்று கவலையாக கேட்டான்.

“என.. எனக்காக தானே?” என்றாள் விசும்பலுடன்.

“என்ன.. உனக்காக?” அவளின் கண்ணீர் துடைத்து, முடி ஒதுக்கி கேட்டான்.

மனைவி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். “நேத்து ஏன் அப்பாகிட்ட அப்படி கேட்டீங்க?” என்றாள். கொஞ்சம் கோவமும் அதில் இருந்தது.

“என்ன கேட்டேன்?”

“என்னை விலைக்கு வாங்கியிருக்கீங்களான்னு”

“அது தான் கோவமா?”

“ஸ்ஸ்ஸ்” மனைவி கடித்த கன்னத்தை தேய்த்து கொண்டான்.

“சாதாரணமா அதுதான் கோவமா கேட்கிறீங்க” என்று திரும்ப கடிக்க வர,

“இந்த கன்னத்தில கடிடி. அங்கேயே திரும்ப கடிச்சா மார்க் ஆகிடும்” என்று காட்டினான்.

“கடிக்க மாட்டேன்னு நினைச்சீங்களா?” என்று கடித்து வைத்தாள்.

ரகுராம் தேய்த்து கொள்ள, அவன் கையை விலக்கி முத்தம் கொடுத்தாள்.

“நான் அம்மா வீடு வேணும்ன்னு கேட்டதுக்காக தானே பொறுமையா நடந்துக்கிறீங்க?” என்று முகம் பார்த்து கேட்க,

“ஏன் எனக்கும் மாமியார் வீடு வேணாமா” என்று அவள் இடை வளைத்து நெருக்கமாக நிறுத்தினான்.

“நேத்து உங்களை யாரும் அங்க தங்க கூட சொல்லலை” என்று திரும்ப கண்ணீர் தேங்கியது.

“இன்னொரு டைம் அழுத, நான் ரூமை விட்டு போயிடுவேன்” என்றான் மிரட்டலாக.

“போங்க. இப்போவே போங்க” என்று அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.

“இது ஓகே. அழ மட்டும் செய்யாதடி” என்று அவளை மடியில் இருத்தி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“அப்போ ஏன் நேத்து என்னை உங்களோட கூட்டிட்டு வரலை. விட்டுட்டு வந்துட்டீங்க” என்று முன்னுச்சு முடி இறுக்க, சுகமாக கண்கள் மூடி கொண்டவன்,

“வீடு ஷிப்ட் பண்ணிட்டு கூப்பிடுக்கலாம்ன்னு தாண்டி” என்றான்.

“ஆமாவா”

“ஆமாவே தான். அதுக்கா என்கிட்ட பேசலை”

“இல்லை. நீங்க பேசுனது எனக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு. என்னை கட்டிகிட்டதனால தானே”

“ஸ்ஸ்ஸ்” என்று உதட்டை பிடித்து கொண்டாள். கடித்து வைத்திருந்தான் கணவன்.

“இனி பேச கூடாது. புரிஞ்சுதா”

“பேசுவேன். அது உண்மை தானே. அப்பா உங்களுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கலை. எனக்கு அவர்கிட்ட ஒரு அளவுக்கு மேல சண்டை போடவும் முடியல. அவர் நல்ல அப்பா, ஆனா ஏன் நல்ல மாமனாரா இருக்க மாட்டேங்கிறார் தெரியல” என்றாள் வருத்தத்துடன்.

“இருப்பார். இருக்க வைக்கலாம். நீ அந்த கவலைய விடு” என்றவன், அடுத்த நிமிடங்கள் அவளை பேச விடவில்லை. இதழ்களில் சரணடைந்து இருந்தான்.

“நான் ஒன்னு கேட்பேன். எனக்கு உண்மையை சொல்லணும்” என்றாள் அவன் கன்னம் பிடித்து கொஞ்சி.

“கேளு பார்ப்போம்” என்றவன் கைகள் அவள் இடைக்குள் நுழைந்தது.

“எங்க வீட்ல, பெரிய மாமா, சின்ன மாமாக்கு எதாவது நடந்ததா?”

“உங்க வீடா எது?”

“உங்க அத்தை வீட்ல. இப்போ சொல்லுங்க”

“அங்க என்ன நடக்கும். ஒன்னுமில்லை”

“அப்போ சொல்ல மாட்டீங்க”

“இருந்தா தானே சொல்ல”

ஜனக்நந்தினி கணவனை முறைத்தாள். பாரதியிடம் அவன் கேட்டதிலே பெண் கண்டு கொண்டிருந்தாள்.

“உடனே மூஞ்சை தூக்காத” என்றவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

“என்கிட்ட எதாவது கேட்கிறதா இருந்தா உடனே கேளுடி. இதென்ன ஒரு நாள் முழுசும் என்கிட்ட பேசாம இருக்கிறது” கணவனாக அதட்டினான்.

“என்னால பேச முடியல. ரொம்ப எமோஷனலா இருந்தேன்” என்றவளுக்கு திரும்ப தொண்டை கட்டியது.

“நான் காபி ஷாப் வந்ததுக்கு அப்பா உங்களை இன்சல்ட் பண்ணி, வீட்ல வைச்சு கேள்வி கேட்டு. நீங்க.. ம்ப்ச். நான் தானே காரணம்” என்று மறுகினாள்.

“பாப்பா”

“அப்படி கூப்பிடாதீங்க”

“அப்போ நீ முடிஞ்சதை விட்டுட்டு என்னை கவனி. நான் பாவம்” என்றவன் விரல்கள் மனைவி கழுத்தில் இருந்த அவன் செயினை சுருட்டி கொண்டிருந்தது.

“விடுங்க. எப்போவும் அதுல தான் கண்ணு”

விடாமல் அதற்கு முத்தம் வைத்தவன், “அது மேல கண்ணு இல்லை. அது இருக்கிற ஆள் மேல தான் கண்ணு” என்றான்.

ஜனக்நந்தினி முகம் சிவக்க, அவள் உதட்டினை வருடினான். “ஏதோ ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்குடி” என்றான்.

மனைவி அவன் பின் முடியை பிடிக்க, இருவரின் உதடுகளும் மிக நெருக்கத்துடன், இணக்கத்துடன் பேசி கொண்டது. பிரிவிற்கு நலம் விசாரித்து கொள்ள, கணவனின் கைகள் மனைவியை ஆராய்ந்து சரி பார்த்து கொண்டது.

“நீயும் என்னை செக் பண்ணிக்கோடி” என்று வம்பாக அவள் கை பிடித்து தன் மேல் வைத்தான்.

“என்ன செக் பண்ணனும்?” கிசுகிசுத்த பெண் வெட்கத்தில் கை எடுத்தாள்.

“அப்படியே  இருக்கேனான்னு தான் வேறென்ன” என்றான் அவள் கையினை மீண்டும் வைத்து.

“எல்லாம் அப்படியே தான் இருக்கீங்க. போங்க” அவள் விலக பார்க்க, முழுதாக தன்னுள் வளைத்து கொண்டான்.

“ம்ஹூம்.. நீ பார்த்து சொல்லு. நான் பண்ண மாதிரி.  பண்ணுடி” என்று அவள் கையினை விடாமல் செய்ய வைத்து, இவனும் சரி பார்த்து கொண்டே இருந்தான்.

Advertisement