Advertisement

அழகியல் 18

அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார்.

தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும் கிளம்பி இருக்க, பெற்றவர்கள் கேள்வியாக பார்த்தனர். ரகுராம் காபி முடியவும், “நாங்க ஊட்டிக்கு போலாம்ன்னு இருக்கோம்” என்றான்.

அவர்கள் அதிர்ந்து மகளை பார்க்க, அவள் சங்கடமாய் அவர்கள் பார்வையை எதிர்கொண்டாள். “இன்னைக்கு கோயில்” என்று தணிகைவேல் சொல்ல வர,

“இல்லைங்க. அவங்க போகட்டும்” என்றார் பாரதி.

“என்ன கோவில்?” ரகுராம் கேட்க,

“அது பாரதி குலதெய்வத்துக்கு  வேண்டுதல் வைச்சிருந்தா, இன்னைக்கு அங்க போகலாம்ன்னு”

“இன்னொரு நாள் கூட போயிக்கலாம்” என்றார் பாரதி.

தணிகைவேல் திரும்பி மனைவியை கொஞ்சம் கோவமாக பார்த்தார். பங்காளிகள், அன்னதானம், பூஜை என்று எல்லாவற்றுக்கும் சொல்லியாகிவிட்டது.

ஜனக்நந்தினி கணவனிடம் கண்கள் சுருக்கி கோரிக்கை வைக்க, “நாம கோயிலுக்கு போலாம்” என்றான் அவன் தானே.

“இல்லை.. பரவாயில்லை, நீங்க கிளம்புங்க” பாரதி சொல்ல,

“இன்னைக்கு ப்ரீ, சும்மா இருப்போம்ன்னு சடன் பிளான் தான் இது, நாம வேண்டுதலே முடிச்சிடுவோம்” என்றுவிட்டான் ரகுராம்.

தணிகைவேல் கிளம்ப ஏற்பாடு செய்ய, வீட்டில் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். காலை உணவு முடியவும், ஆர்த்தியை அம்மா வீட்டில் விட்டு வந்தான் ப்ரவீன்.

 பாரதி காலை உணவு இலையிலே பரிமாற, ராஜேஸ்வரிக்கு கடுப்பு தான். ஆனால் மகன் அவரிடம் சரிவர பேசாததில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். வேணியும் நேற்று அவர் செய்த வேலைக்கு சத்தம் போட்டிருந்தார்.

வீட்டில் இருந்து இரு காரில் கோவில் கிளம்பினர். இரண்டு மணி நேர பயணம். ரகுராம் மனைவியை முறைக்க, அவள் கணவன் கன்னம் பிடித்து கொஞ்சினாள், ப்ரவீன் முன்னால் இருக்க, ரகுராம் அவள் கையை தட்டிவிட்டு, முகம் திருப்பி கொண்டான்.

பெரிய கோவில். பங்காளிகள் எல்லாம் வந்திருக்க, விமரிசையாக பூஜை நடந்தது. அன்னதானம் ஏற்பாடு செய்திருக்க, இவர்களும் அங்கேயே மதிய உணவு முடித்தனர்.

தணிகைவேல் மருமகனை தன்னுடனே வைத்து கொண்டார். பங்காளிகள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

வேண்டுதல் நல்லபடியே முடிந்ததில், முன் மாலை போல தான் அங்கிருந்து கிளம்பினர். வழியிலே காபி, டீ, பலகாரம் என்று பயண நேரம் நீடித்து, இரவு உணவுக்கு தான் வீடு வந்து சேர்ந்தனர்.

நினைத்ததை விட நாள் சீக்கிரம் முடிந்துவிட, ரகுராம்க்கு ஓகே தான். உணவு உண்ட கையோடு அறைக்கு வந்துவிட்டனர் புதுமணமக்கள்.

ரகுராம் வேஷ்டி மாற்றி கட்டிலில் கால் நீட்டி ஓய்வாக அமர, அவன் மனைவி புடவையுடனே அவன் மேல் சாய்ந்து கொண்டாள். “செம டையார்ட்” என்றவள் வாகாக அவன் நெஞ்சில் படுத்து கொண்டாள்.

“என் பிளானை ஊத்தி மூடிட்டு டையர்டா. ஓடிடு” என்றான் ரகுராம்.

“நான் என்ன பண்ணேன். உங்க அத்தை வைச்ச வேண்டுதல் தான் அது” என்றாள் மனைவி.

“பாரேன், அம்மா சொல்லாம, என் அத்தையாம். நீ தேறிடுவடி” என்றான்.

“தேங்க் யூ தேங்க் யூ” பெண்  சிரிக்க,  அவளை முழுதாக தன் மேல் இழுத்து கொண்டான். முகங்கள் உரச, இதழ் காந்தம் தானே ஈர்த்து கொண்டது.

ரகுராமின் கைகள் மனைவியின் இடைக்குள் நுழைந்து வருட, பெண்ணின் முத்தம் அழுத்தம் கண்டது.

“உன்னை பக்கத்துல வைச்சுக்கிட்டு அமைதியா இருக்க முடிய மாட்டேங்குது” என்றவன்  இதழ்கள்  திரும்ப திரும்ப அவளின் இதழ்களை சந்தித்து  கொண்டே இருந்தது.

ஜனக்நந்தினி கணவனின் முன்னுச்சு ஊத,  சுகமாக கண் மூடி கொண்டான். அவனின் புருவம், மூக்கு, கன்னம் என்று அவள் இதழ் சூடு இறங்க, ரகுராம் கைகள் எல்லை மீற பரபரத்தது.

“போதும்டி.. தாங்க மாட்டேன்” என்றான். ஜனக்நந்தினி குறும்பாக புருவம் தூக்கியவள், அவனின் உதட்டை மெல்ல மெல்ல நெருங்க, இவன் பொறுமை இல்லாமல் அழுத்தமாக பற்றி கொண்டான். கைகளும் எல்லை மீறியது.

“நீ ஏன் புடவை மாத்தலை?” அவளிடம் கோவப்பட்டான்.

ஜனக்நந்தினி சிரிக்க, “உன்னால தான் இப்படி. நீ தான் காரணம்” என்றான்.

“நானே காரணமா இருந்துட்டு போறேன். நீங்க தள்ளுங்க” என்று அவன் மேலெறிந்து விலகி கட்டிலுக்கு வந்தவள், முந்தானையை சரியாக போட்டாள்.

“இருக்கட்டும்” என்று அவளை அணைக்க,

“எனக்கு ஒன்னுமில்லை. நீங்க தான். உங்களுக்கு தான் கோவம் வரும்” என்றாள் அவள்.

உண்மை தான். ரகுராம் பெரு மூச்சுவிட்டு அவளிடம் ஒண்டினான்.  “தூக்கம் வருதா?” என்று அவன் தலை கோதி கேட்க,

“வருமாடி” என்றான் அவன்.

“ஏதாவது பேசுங்க” என,

“ம்ம்.. நான் உன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே பேச நினைச்சதை இப்போ பேசலாம்” என்றான்.

“என்ன” என்று ஜனக்நந்தினி கேட்க, அவள் இதழ்களை அழுத்தமாக கொய்து எழுந்தமர்ந்தான்.

மொபைல் எடுத்தவன், மெயிலில் டேட்டாவை திறந்தான். “நம்மளோட பைனான்ஷியல் ஸ்டேட்டஸ்” என்றான்.

ஜனக்நந்தினி அவன் தோள் சாய்ந்து பார்த்தவள், கடுப்பாகி போனாள். “கணக்கு பண்ண வேண்டிய நேரத்துல கணக்கா?” என,

“இன்னைக்கு நைட் மட்டும் தான் நமக்கு ப்ரீ. இதை முடிச்சிடுவோம். நீயும் எல்லாம் தெரிஞ்சுக்கணும்” என்றான் அவன். ஆள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்.

ஜனக்நந்தினி நேராக அமர,  “இது என்னோட மன்த்லி வருமானம்” என்று காட்டினான்.

மனைவிக்கு ஆச்சரியம். “இவ்வளவுவா” என்றாள்.

“நீ ஆச்சரியப்படுறதை பார்த்தா என்னை லோ ப்ரோபைலா நினைச்சிருப்ப போலயே” என்று கேட்க,

“அப்படி இல்லை. ஆனால் நிச்சயம் இந்த இன்கம் எதிர்பார்க்கலை” என்று ஒத்துக்கொண்டாள்.

“என்னோட சேலரி, பார்ட் டைம் ஜாப் இரண்டும் சேர்ந்தது. இதுபோக அப்பாவோட தறி இன்கம் இவ்வளவு” என்று காட்டினான்.

எல்லாம் சேர்ந்து ஆறு இலக்கத்தை எட்ட, “தறியில இன்னும் வருமானம் கூட்டணும். அதற்கான ஏற்பாடு போயிட்டிருக்கு. நீ தான் என்னோட ஐடியாக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்க. பார்ப்போம் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு” என்றான்.

“நான்.. நான் என்ன ஐடியா?” பெண் புரியாமல் பார்க்க,

“சொல்றேன்” என்று முடித்துவிட்டான் அவன்.

“இது என்னோட கடன்” என்று காட்டினான். “மனோகர் ஞாபகம் இருக்கு இல்லை” என,

“ம்ம். பெஸ்ட் ப்ரெண்ட்ன்னு சொன்னீங்களே” என்றாள்.

“எஸ் அவன் மூலமா வாங்கின கடன் தான் இது.  அக்கா மேரேஜ் அப்போ நமக்கு பெரிய அமவுண்ட் தேவைப்பட்டது. இவன் தான் உதவினான்” என்றான்.

“கடனா கொடுத்தாரா?” என,

“கிட்டத்தட்ட” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“இவன் சேலரில ஹவுசிங் லோன் எடுத்து கொடுத்தான். நான் தவணை கட்டுறேன். அவன் உங்களை போல செட்டில்டு பேமிலி, அவனோட அப்பா சென்னையில பணம் கட்டி வீடு வாங்க, அதை காட்டி  லோன் எடுத்தோம்”

“அதுக்கு நீங்களே லோன் எடுக்க வேண்டியது தானே?” மனைவி கேட்க,

“பர்ஸ்ட் அப்போ தான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆகியிருந்தது. செகண்ட் எனக்கு தேவைப்பட்ட அமவுண்ட் பெருசு. பெர்சனல் லோன் கிடைச்சாலும் அவ்வளவு கிடைக்காது. வட்டியும் அதிகம். எல்லாம் யோசிச்சு தான் மனோ என்னை கன்வின்ஸ் பண்ணான். நான் அவன்கிட்ட இப்படின்னு ஷேர் பண்ணேன். அவன் சோலியூஷன் கொடுத்தான்”

“அதான் ப்ரெண்ட்ஷிப் இல்லை” என்றாள் பெண்.

“எஸ்.. இன்னும் இந்த அமவுண்ட் இருக்கு. கூட நான் லோன் எடுத்தது, எல்லாத்தையும் சீக்கிரம் கட்டி குளோஸ் பண்ணிடணும்” என்றான்.

இவர் ஏன் திரும்ப லோன் எடுத்தார்? தேதி பார்க்க, ஒரு வருடம் கூட ஆகவில்லை. பெண்ணுக்கு கேட்க தடுத்தது. ரகுராம் அவளை புரிந்து,

“அக்கா வீடு கட்ட கொடுத்தேன், தறிக்கு கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணேன். அது போக என் அத்தை மகன் கல்யாணம்ன்னு”

“அண்ணா மேரேஜ்க்கா?” என்றவளுக்கு, இவர்கள் வைத்த சீர், நகை எல்லாம் நினைவிற்கு வந்தது.

“மகனா பிறந்தா இதெல்லாம் பார்க்கணும் இல்லை” என்றாள்.

“கண்டிப்பா பெனிபிட் இருக்கிற இடத்துல லாஸும் இருக்கும்” என,

ஜனக்நந்தினி ஏற்று கொண்டவள், தன்னுடைய சேலரி சொன்னாள். MTECH முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். அனுபவம் கூட வருமானம் உயரும். மெச்சுதலாக அவளை அணைத்து கொண்டவன், “அதான் மேடம் புடவையா வாங்கி தள்ளியிருக்கீங்க” என்றான்.

“ம்ம்.. அப்பா என் சேலரி கேட்டுக்க மாட்டார். சென்னை வீட்டுக்கும் அவர் தான் செய்வார். உங்களை போல எனக்கு கமிட்மென்ட் இல்லை, அதான் கஷ்டம் தெரியலை. புடவையா வாங்கி அடுக்கிட்டேன்.  இனி எல்லாம் நான் புடவை ஆர்டர் போட மாட்டேன். நீங்க வேற கஸ்டமர் பிடிச்சுக்கோங்க” என்றாள் பெண்.

ரகுராம் சிரித்தவன், மொபைல் வைத்து அவளை அள்ளி கொண்டான். “தறியே நம்மது தான், நீ ஏண்டி பணம் கொடுத்து ஆர்டர் போடணும்” என்றான் மூக்கு உரசி.

“நானே எடுத்துக்கிட்டா வியாபாரத்துக்கு என்ன பண்றதாம்?”

“உன் புருஷன் எதுக்கு இருக்கான்? உனக்கு போக வியாபாரம் பண்ணிட மாட்டேன்”

“எனக்கு இருக்கிற புடவையே போதும். இன்னும் மூணு வருஷத்துக்கு தாங்கும்” என்றாள்.

“அது அப்புறம் பார்ப்போம். இதுவும் நான் நெஞ்ச புடவை தானே?” என்று கேட்டான்.

“நீங்க நெஞ்சது தான். அதுக்காக எடுத்து பார்க்கணும்ன்னு இல்லை” என்றவள் முந்தாணையை இழுத்து பின் குத்தி கொண்டாள்.

“ரொம்ப பண்ணாதடி” என்று அவள் மடியில் படுக்க, “எனக்கு தூக்கம் வருது. எழுந்து கட்டில்ல படுங்க” என்றாள் அவள்.

“தூங்கிக்கோ. நான் எழ முடியாது” என்றான் அவன் சட்டமாக.

“எனக்கு கால் வலிக்குது” பெண் முகம் சுருக்க, “உண்மையா தான் சொல்றியா” என்று எழுந்தமர்ந்தவன்,  அவள் பாதம் பார்த்தான்.

“வீக்கம் கூட இல்லையே” என்றவன் விரல்கள் பாதத்திலே தங்க,

கால்களை இழுத்து சுருட்டி கொண்டவள், “குட் நைட்” என்று படுத்தாள். ரகுராம் அவள் பின்னால் ஒட்டி கொண்டவன், “நாளைக்கு நைட் பார்த்துகிறேன் உன்னை” என்றான்.

“பாருங்க பாருங்க. இப்போ தூங்குங்க” என, ரகுராம் சில சில சேட்டைகளை செய்தே அவளை தூங்க விட்டான்.

மறுநாள் ஜனக்நந்தினி மறுவீடு முடிந்து தங்கள் வீடு திரும்ப வேண்டும். காலையில் இருந்தே தணிகைவேல் வீட்டில் ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது.

ஆர்த்தி காலையிலே வீட்டுக்கு வந்துவிட்டாள். “ஏன் அண்ணி அலையுறீங்க? நாள் நெருங்குதே” ஜனக்நந்தினி கவலைப்பட்டாள்.

“உனக்கு எதுவும் செய்ய தான் முடியல. கூட இருக்காவது செய்றேனே” என்றாள் ஆர்த்தி.

ஆர்த்தியின் அம்மா இன்னும் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டு தான் இருக்கிறார். “அவங்க பணக்காரங்கன்னா நாம மட்டும் என்ன? மாப்பிள்ளைன்னா பார்த்தா அவர் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்கிறார். மகளா நீ இதை எல்லாம் கேட்க மாட்டியா?” என்று இவளிடம் சண்டை.

ஆர்த்திக்கு வெறுத்தது. மாமியார் வீட்டை தேடினாள் பெண். பாரதி அவ்வளவு நன்றாக பார்த்து கொள்வார். உடன் ப்ரவீன்  காதல். இங்கு அவளுக்கு நிம்மதி.

அவளின் அம்மாவிற்கோ அளவுக்கு அதிகமான ஈகோ. “என்னை மதிக்காதவங்களுக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்க” என்று கணவரிடம் பிரச்சனை.

“உன் பொண்ணு அங்க வாழணும்ன்னு உனக்கு எண்ணமே இல்லையா?” என்று அவர் கேட்டால்,

“அவங்க இல்லைன்னா என்ன நான் சொத்து கொடுத்து என் மகளை செட்டில் பண்ணுவேன்” என்றார் அவர்.

ஆர்த்தியின் அப்பா தெளிந்து கொண்டார். “உன் வாழ்க்கையை உன் அம்மாகிட்ட இருந்து காப்பாத்திக்கோ” என்று மகளிடம் சொல்லிவிட்டார்.

காலையில் இங்கு போக கூடாது என்று நின்றவரை, எதிர்த்து தான் வந்திருந்தாள். மாமியார் வீட்டில் சரியில்லை என்றால் பரவாயில்லை. அவரின் ஈகோவிற்காக என் வாழ்க்கையை தொலைக்கணுமா? ஆர்த்தி உணர்ந்து கொண்டாள்.

ப்ரவீனுக்கு மனைவியின் முகம் வருத்தத்தை கொடுத்தது. தங்கள் அறைக்கு அழைத்து வந்தவன், “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

அம்மாவை கைகாட்ட மனம் வரவில்லை. அமைதியாக அவனை அணைத்து கொண்டாள். உடன் கண்களில் ஈரம் சேர்ந்து கொண்டது. கணவனின் அக்கறை அவளை பலவீனமடைய வைத்தது.

ப்ரவீன் புரிந்து கொண்டான். நிறை மாசமா இருக்கா இப்போ போய் அழ வைக்கிறாங்களே என்று மாமியார் மேல் அவ்வளவு கோவம். “இங்கேயே இருந்துக்கிறியா?” என்று கேட்டான்.

“இல்லை” என்று தலையாட்டிவிட்டாள்.

Advertisement