அத்தியாயம் 9
காரில் நேத்ராவை முன் ஏற்றி பசங்க பின்னே ஏறினர். “பொருட்களை எங்க வாங்க போறீங்க?” அதிரதன் கேட்டான்.
“நீங்க போங்க சார் சொல்கிறேன்” என்றாள். அவனும் சென்று கொண்டிருந்தான்.
வெளியே பார்த்துக் கொண்டே வந்த நேத்ரா கண்ணில் ஓர் ஸ்டோர் பட்டது. சார்..காரை ஓரமா நிறுத்துங்க.
“எங்க ஷாப்பையே காணோம்?” கேட்டான்.
அவனை முறைத்து விட்டு, “சின்ன ஸ்டோர் தான் சார்” என்றாள்.
ஹேய், என்னோட வீட்டுக்கு இங்கெல்லாம் பொருட்கள் வேண்டாம். நான் பணம் வச்சிருக்கேன். பெரிய ஷாப்புக்கு போகலாம்.
சார், நான் சமைக்கணும்ன்னா இங்க தான் வாங்கணும். உங்க ரேஞ்சுக்கு என்னால வாங்க முடியாது. நான் அதிகமா ஒன்றும் வாங்கப் போறதில்லை. ஆறு மாதத்திற்கு தேவையான முக்கியமான பொருட்கள் தான். மூன்று பேருக்கு பெரியதாக ஏதும் தேவைப்படாது. அப்புறம் கர்டைன்ஸ், மேட் வாங்கணும். இங்க தான் எல்லாமே க்வாலிட்டியாகவும் சீப்பான ரேட்டாகவும் இருக்கும் என்றாள்.
“ஏதாவது செய்” என்றான். மற்றவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சார், நீங்க உள்ளவே இருங்க. யாரும் உங்களை பார்த்து விடாமல் என்று அருள் சொல்ல, அதெல்லாம் பிரச்சனையில்லை. நானும் வருகிறேன் என்றான் அதிரதன்.
சார், இது சின்ன கடை. நீங்க போற அளவு பெரிய ஷாப் இல்லை என்று சினமுடன் நேத்ரா சொன்னாள்.
அக்கா, அவர் என்னமும் செய்றார்? எதுக்கு கோபப்படுறீங்க? காவியன் கேட்க, நான் எதுக்கு கோபப்படணும்? என்று அவள் உள்ளே செல்ல, அதிரதன் அவனது கேப்பை போட்டுக் கொண்டு புன்னகையுடன் உள்ளே சென்றான்.
அக்கா, கோபமா பேசுனாங்க? சிரிக்கிறீங்க? மிதுன் கேட்டான்.
எனக்கு சிரிப்பு தான் வருது என்றான்.
சார், நீங்க செம்ம டெரர்ன்னு சொன்னாங்க. நானும் அதை பார்த்துட்டேன். ஆனால் சிரிக்க கூட செய்றீங்க? கிருஷ்ணன் கேட்டான்.
அண்ணா, அக்கா திட்டப் போறாங்க? வா..போகலாம் என்று யுவன் அவன் கையை பிடித்து இழுத்தான். அவர்கள் அவள் பின் சென்றனர்.
நேத்ராவை பார்த்த கடை முதலாளி, ஹே..பாப்பா வந்திருக்கா. சேர்ற எடுத்து போடுடா? என்று சத்தம் கொடுத்து விட்டு, அம்மா அப்பா நல்லா இருக்காங்கலாடா? கேட்டார்.
இல்ல அங்கிள். இப்ப அவங்க இல்லை என்று சொல்ல,ஹரே ராமா..என்று மேலே பார்த்து விட்டு, என்னம்மா வாங்கணும்?
நம்ம சமான் நல்லா தானே இருந்திருக்கும். உங்களுக்கு கல்யாணம் முடிந்து ரெண்டு வருசம் தான ஆகுது? கேட்டார்.
ஆமா அங்கிள், எனக்காக வாங்க வரலை. என்னோட பாஸ் வீட்டுக்கு தான் என்று அதிரதனை பார்த்தாள். வாங்கப்பா..நம்ம பாப்பா கல்யாணத்துக்கு எல்லாமே இங்க தான் வாங்கினாங்க. எல்லாமே நல்லா இருக்கும் என்றார். அவன் ஏதும் பேசாமல் இருந்தான்.
அங்கிள், சார் மௌன விரதம். அவங்களுக்கு நல்ல பொண்ணு கிடைக்கணும்ன்னு வேண்டிக்கோங்க என்று கேலியாக அவள் சொல்ல, அவன் முறைத்தான்.
யாரை தேடுறீங்க அங்கிள்?
“உன்னோட கணவன் வரலையாம்மா” அவர் கேட்க, அவருக்கு வேலை இருக்கு அங்கிள் என்றாள்.
அவருக்கு வேலை இருக்கா? வேற யாருடனும் இருக்கானா? அதிரதன் கேட்க, அவள் கோபமாக எழுந்தாள்.
அக்கா, அமைதியா இருங்க என்று மிதுன் அவனிடம் வந்து, சார் என்ன பண்றீங்க?
நான் உண்மைய தான சொன்னேன். உன் அக்கா டிவோஸ் ஆனதை எத்தனை நாள் எல்லாரிடமும் மறைப்பாள்? கேட்டான்.
அவர் அதிர்ந்து, தம்பி என்னம்மா சொல்றார்? கேட்க, கண்ணீருடன் ஆமா அங்கிள், அந்த துரோகியால் தான் அம்மா, அப்பா எங்களை விட்டு போயிட்டாங்க என்று கண்ணை துடைத்து விட்டு,
அங்கிள், நான்ஸ்டிக் பொருட்கள் வேணும் என்றாள். அவர் பையனை விட்டு அழைத்து செல்ல சொன்னார். எல்லாரும் அவள் பின் செல்ல, அதிரதன் அங்கேயே அமர்ந்து, அவரிடம் பேச்சு கொடுத்தான்.
கல்யாணத்துக்கு பொருள் வாங்கியதால அவங்கள உங்களுக்கு தெரியுமா? அதிரதன் அவரிடம் கேட்டான்.
இல்லப்பா. அதனாலன்னா நிறைய பேர் வந்து வாங்கிட்டு போறாங்கல்லே? எல்லாரையும் தெரிஞ்சுக்க முடியுமா?
அவங்க வந்த அன்று கடையில பொருள் திருடு போயிருந்தது. அந்த பொண்ணோட அப்பா தான் யார் செய்த வேலைன்னு கண்டுபிடித்தார். அப்ப கேமிராவெல்லாம் வைக்கலப்பா. ரொம்ப நல்ல மனுசன்.
என்ன வேலை பார்த்தார் அவர்?
ஏதோ கம்பெனி வச்சிருந்ததா சொன்னார். இந்த பொண்ணு தான் பெரிய இடத்துல வேலை பார்த்துச்சுப்பா.
வினு வேலை செய்தாளா? எங்கன்னு தெரியுமா?
தெரியாதுப்பா. பையனும் லாயர்ன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோசமா சொன்னாங்க. ஆனால் இப்படி ஆகிடிச்சு? புள்ள வேலைய விடுறதா சொன்னாங்க.
இப்ப உங்க கூட வேலை பார்க்கிறாளா? பார்த்துக்கோங்கப்பா. யாருமில்லாம பொம்பள புள்ள வேற. அந்த பொண்ணு தம்பிய காணோம்?
அவன் வீட்ல இருக்கான் என்று அதிரதன் சொல்லி விட்டு எழுந்து, என்னையும் கூட்டு சேர்த்திட்டா. நான் கேட்ட போது வேலையே பார்க்கலைன்னு சொன்னா. சொல்றதுல்ல என்ன இருக்கு? என்று சிந்தித்தான்.
நீ எங்க வேலை பார்த்த? எதுக்கு என்னிடம் மறைக்கிறன்னு நானே கண்டுபிடிக்கிறேன் என்று மனதினுள் நினைத்தான்.
அவள் வாங்கி விட்டு வர, அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
வாங்க சார், போகலாம் காவியன் அழைக்க, எல்லாரும் வீட்டிற்கு செல்லும் போது அதிரதன் நேத்ராவை பார்த்துக் கொண்டே வந்தான். அவள் அவனுக்கு எதிர்பக்கமாக சாய்ந்திருந்தாள். அசதியில் அவள் தூங்க..சார், இங்க நிறுத்துங்க என்று காவியன் இறங்கி இறைச்சி பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்கணும் என்றான்.
அதிரதன் அவளை எழுப்ப அவள் காதருகே வந்து சொடக்கு போட்டான். சார், அக்கா ரெஸ்ட் எடுக்கட்டும் என்று மிதுன் யுவனை அழைக்க, ஐவரும் கடைக்கு செல்ல, அதிரதனும் அவர்களுடன் சென்றான். நேத்ரா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வந்த பின்னும் அவள் விழிக்காது தூங்குவதை பார்த்து, தம்பிகளா? உங்க அக்கா என்ன இப்படி தூங்குறாங்க? கும்பகர்ணன் தங்கச்சியா இருப்பாங்களோ? அதிரதன் கேட்க, அனைவரும் சிரித்தனர்.
அவர்கள் சென்று கொண்டிருக்க அவன் பக்கம் அவள் திரும்பி சாய்ந்தாள் நேத்ரா. அவள் புடவை விலகி அவளது இடை தெரிந்தது. அவன் கண்கள் அங்கே சென்று மீண்டது.
ரதா? உனக்கு நினப்பு எங்க போகுது? அவள் உன்னிடம் நிறைய மறைக்கிறாள். நீ அவள இந்த கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. அவ..திருமணமாகி டைவர்ஸ் ஆனவ என்று அவன் மனது அவனை எச்சரித்தது. அவன் நேத்ராவை பார்ப்பதை பசங்க கவனித்து, சார் நீங்க ரோட்ட பார்த்து ஓட்டுங்க. இல்ல ஆக்சிடென்ட் ஆகிடும் என்று அருள் இரு பொருளில் கூற, காரை நிறுத்தி அவனை பார்த்தான்.
என்ன சார்? வண்டிய நேரா பார்த்து ஓட்டுங்க? உங்க கவனம் வேரெங்கயோ போற மாதிரி இருக்கு. அதான் சொன்னேன் என்றான் நேரடியாக.
அதிரதன் அவனை முறைத்து விட்டு காரை விரைந்து ஓட்டினான்.
அக்கா, வீட்டுக்கு வந்துட்டோம். வாங்க உள்ள போகலாம் என்று சுபிர்தன் எழுப்ப, வந்துட்டோமா? அச்சோ.அசதியில தூங்கிட்டேன். யுவிக்கு ஈரல் கொடுக்கணும். வாங்கலையே? எழுப்பி விட்டுருக்கலாமே? என்றாள்.
நாங்க வாங்கிட்டோம். இறங்குங்க என்று அருள் கார் கதவை திறந்தான்.
வாங்கிட்டீங்களா? பார்த்து வாங்குனியா இல்லையா? காவியா நில்லுடா..என்று அவன் பின் வேகமாக சென்றாள்.
அக்கா, சமைக்க வேண்டிய பாத்திரங்களை எடுத்து வையுங்க. அதை தவிர எல்லாவற்றையும் நாங்க அரேஜ் பண்ணுறோம். நீங்க சமையல் வேலை ஆரம்பிங்க என்றான். கரண்டு அடுப்பும் வாங்கி வந்திருந்தாள். அவள் வேலையை ஆரம்பிக்க, அதிரதன் அவன் அறைக்கு சென்றான். யுவன் விளையாண்டு கொண்டிருந்தான்.
அதிரதன் அப்பா வீட்டிற்கு தன் மகள் ஆத்விகாவை பார்க்க வந்தார். அவள் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவர் நேராக அவளறைக்கு சென்று படுத்திருந்த தன் மகள் பக்கம் அமர்ந்து அவள் தலையை கோதிக் கொண்டிருக்க, பிரணா..ஓடி வந்து அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
பிரணா..அக்கா, தூங்குறால்ல. வா வெளிய போகலாம் என அழைத்து சென்றார்.
வெளியே வந்து சோபாவில் அமர்ந்தார். பிரணா அவள் மடியில் படுத்துக் கொண்டு, அக்காவுக்கு ரொம்ப பெயினா இருக்கு போலப்பா..அழுதுகிட்டே இருந்தா என்றாள் கண்ணீருடன்.
எல்லாமே சரியாகிடும்மா என்று அவள் முதுகை தடவினார்.
அப்பா, அவங்க யார் கூடவும் பேச்சே வச்சுக்காதீங்கப்பா. பயமா இருக்கு என்றாள். பாட்டி, சிவநந்தினி, யசோதா வந்தனர்.
அண்ணா, இதுக்கு தான் முன்னதாகவே நான் சொன்னேன். கேட்டியா? இதுல நம்ம அதிக்கு அவளை முடிச்சு வைக்க பார்த்துட்டோம் என்று கோபமானார் யசோதா.
பாட்டியும் அவரை திட்ட, சிவநந்தினி மட்டும் அமைதியாக நின்றார்.
இவள் தானே கோபப்பட்டிருக்கணும்? அமைதியா இருக்காளே! அதான் பயமாவே இருக்கு என்று அவர் தன் மனைவி சிவநந்தினியை பார்த்துக் கொண்டே மனதினுள் நினைத்தார். பிரணா எழுந்து அமர்ந்தாள்.
“நான் கிளம்புகிறேன்” என்று அவர் கூறவும், அதான் வந்துட்டேல்ல. அரைமணி நேரம் பொறுத்திரு. சாப்பாடு தயாராகிடும் என்று பாட்டி சிவநந்தினியை பார்த்தார்.
போடி..சீக்கிரம் தயார் செய்ய சொல் என்று பாட்டி சொல்ல, அவரை பார்த்து விட்டு அவர் ஏதும் சொல்லாமல் அறைக்கு சென்று கதவை பட்டென அடித்து சாத்தினார்.
டேய், உன்னோட பொண்டாட்டி கோபமா இருக்காடா? பாட்டி சொல்ல
அண்ணா, நீ காலி தான். நல்லா வாங்கு. உனக்கு வேணும் தான் என்று “எத்தனை தடவை அண்ணியும் சொன்னாங்க கேட்டியா?” எங்களுக்கு தெரியாது. நாங்க வாரோம் என்று அம்மா, பிரணா வாங்க என்று இருவரையும் அழைத்து சென்றார் யசோதா.
இவளை எப்படி சமாளிக்கிறது? என்று கதவில் கை வைத்தார். கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்து உள்ளே சென்றார். படுக்கையில் படுத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார் சிவநந்தினி.
நந்தும்மா எதுக்கு அழுறீங்க? வேகமாக காதலுடன் அவரிடம் வந்தார் இளஞ்செழியன்.
பக்கத்துல வராதீங்க. வந்தா அடிச்சிருவேன் என்று அழுதார் சிவநந்தினி.
பரவாயில்லம்மா. அடிச்சுக்கோ..என்று சொல்லிக் கொண்டே தன் மனைவியை அவர் பக்கம் இழுத்தார். சிவநந்தினி கோபமாக அவரை அடித்துக் கொண்டே, எத்தனை முறை சொன்னேன். அவரிடம் பழகாதீங்கன்னு கொஞ்சமாவது கேட்டீங்களா? கேட்டுக் கொண்டு அடிப்பதை நிறுத்தி ஆத்வியை அவங்க ஏதாவது செய்திருந்தால்..என்று அழுதார்.
சாரிம்மா என்று கண்ணீருடன், இனி அவனுடனான பழக்கத்தை விட்டு விடுகிறேன் என்று அவரை அணைத்து சமாதானப்படுத்தினார். பின் இருவரும் வெளியே வந்தனர்.
அம்மா, அப்பா மேல கோபம் போயிருச்சா? பிரணவி கேட்டாள்.
இல்ல. அவர் என்னிடம் சொன்னதை செய்யட்டும். அப்புறம் பேசிக்கலாம்.
என்னம்மா இப்படி சொல்லீட்ட?
ஆமா, இனி நம்ம பசங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது. பப்பூவ எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க? என்று அவர் கேட்க, அம்மா அப்பா வாங்க சாப்பிடலாம் என்று பிரணவி பேச்சை மாற்றினாள்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். எழுந்த இளஞ்செழியன் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்க, அப்பா..என்ன செய்றீங்க? ஆத்விகா கோபமாக கேட்டாள்.
ரொம்ப பயந்துருப்பேல்லம்மா..அப்பா கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லைப்பா என்றாள் ஆத்விகா.
அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவர் பசங்க நல்லா வளந்துட்டாங்கம்மா..என்று பாட்டியை பார்த்து, நிது எனக்கே அறிவுரை கொடுக்கிற மாதிரி ஆயிருச்சு என்றார்.
ஆமா, நீ அப்படிதானண்ணா செஞ்சு வச்சுருக்க. அதீபனும் நிதினும் இல்லைன்னா நம்ம ஆத்வி என்ன ஆயிருப்பாளோ? யசோதா சொல்ல, அண்ணி..என்று முதல் முறையாக சத்தமிட்டார் சிவநந்தினி. ஆத்விகா கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.
உண்மைய தான சொன்னாங்க. நீ என்னமோ கத்துற? அவ அழுறா? அதான் என் பிள்ளை காப்பாத்திட்டானுள நிர்மலா கூற, அம்மா..நீ அமைதியா சாப்பிடுறியா? இல்லையா? அதீபன் கேட்டான்.
நம்ம ஆத்வி மேல அக்கறையோட பேசினான். அதை தான் சொன்னேன் என்றார் இளஞ்செழியன்.
அப்பா, என்ன சொன்னான்? என்று நம் ஆர்வக்கோளாறு பிரணா கேட்டாள்.
நிதின் பேசியதை சொல்ல, ஆத்விகாவின் மனம் உடைந்து போனது. நல்லா விசாரித்து கல்யாணம் செய்து கொடுக்க சொன்னானா? அவள் கண்ணீர் நிற்காமல் இருக்க, அதீபனும் அவளை பார்த்தான். அவனுக்கும் ஆத்வியின் காதல் புரிந்தது. ஆனால் யாரிடம் என்ன சொல்ல முடியும்? அமைதியாக இருந்தான்.
ஆமாய்யா..நம்ம பொண்ணுக்கு நல்ல பையனா பார்க்கணும் என்று பாட்டி சொல்ல அவள் சாப்பிடாமலே அமர்ந்திருந்தாள். அழுகாதடா..நான் தயாளனின் நட்பை, அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றியும் முடித்து விடுகிறேன் என்றார் செழியன்.
எப்படிடா முடிப்ப? என்ற சத்தத்துடன் வீட்டினுள் தயாளன் நுழைந்தார். பயந்த பிரணா..உடனே அவள் அண்ணன் அதிரதனை அழைத்தாள்.
சுபிர்தன் அதிரதன் அறைக்கதவை தட்டி சாப்பிட அழைத்தான். அதனால் அவன் சாப்பிட அமர்ந்தான். அவனுடன் அனைவரும் அமர்ந்தனர்.
நேத்ரா அனைவருக்கும் எடுத்து வைத்தாள். அதிரதனும் மற்றவர்களும் சாப்பிட சாப்பாட்டை கையில் எடுக்கும் போது அதிரதன் அலைபேசி அவனை அழைத்தது.
குட்டிம்மாவா? இப்ப எதுக்கு போடுறா? என்று போனை எடுத்து நகர, சார் சாப்பிட்டுக்கிட்டே பேசுங்க. சாப்பாடு ஆறிடும் என்றாள் நேத்ரா. அவளை பார்த்து விட்டு, அமர்ந்து ஸ்பீக்கரில் போட்டு,
குட்டிம்மா, ஆத்வி ஓ.கே தான அவன் கேட்க, அந்த பக்கம் பதிலே இல்லை
குட்டிம்மா ஏதாவது பேசு என்றான். பின் சத்தத்தை உயர்த்தினான். அனைவரும் போனை பார்த்தனர். காவியன் அதிரதனுக்கு வலப்பக்கமும், அருள் இடப்பக்கமும் அமர்ந்திருந்தனர்.
தயாளன் பேசியது தெளிவாக கேட்டது. நட்பை முடிக்கலாம். பார்ட்னர்ஷிப்பை எப்படி முடிப்ப? அவன் கேட்டுக் கொண்டே அருகே வந்தான்.
அதீபன் முன் வந்து, நீங்க எதுக்கு வீட்டுக்கெல்லாம் வர்றீங்க? எனக் கேட்டான்.
என்னோட மருமகன் வீட்டுக்கு நான் வாரேன் சின்ன மருமகனே?
யாருக்கு யார் மருமகன்? என் பிள்ளைய எதுக்கு உங்க மருமகன்னு சொல்றீங்க? நிர்மலா சத்தமிட்டார்.
உன்னோட சவுண்டு அதிகமா தான் இருக்கு. பார்த்துக்கிறேன்.
அண்ணா தான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உங்ககிட்ட சொல்லீட்டு தான போனான்? பிரணா கேட்க, ஊர்ல யாருக்கும் தெரியாதே? அவன் என் மாப்பிள்ளைன்னு தான் தெரியும்.
அதுசரி. நீ அவனோட செல்ல குட்டிம்மா தான? எங்க? உன் அண்ணன் எங்க இருக்கான்னு சொல்லீடு..
எனக்கு தெரியாது என்றாள் திமிறாக.
அப்படியே அவனோட திமிருல..என்று அவள் முடியை பிடிக்க, அவள் கத்தினாள்.
அதிரதன் எழுந்தான். காவியன் முகம் இறுகி அமர்ந்திருந்தான்.
என் பிள்ளை மேல நான் இருக்கும் போது கை வைக்கிறியா? என்று இளஞ்செழியன் அவன் கையை பிடித்து திருக, அவன் அவரை தள்ளி விட்டார்.
அப்பா..என்று ஆத்வியும் பிரணாவும் சத்தமிட, சிவநந்தினி தன் கணவனிடம் ஓடி வந்தார்.
“வெளிய போங்க” என்று அவரை அதீபன் தள்ள, அவர் அசராமல் நின்றார்.
உனக்கு என்னதான்டா வேணும்? பாட்டி சத்தமிட்டார்.
எனக்கு எல்லாமே வேணும். முதல்ல என் பொண்ணு வெளிய வரணும். அப்புறம் அதிரதன் எனக்கு மாப்பிள்ளையாகணும். அப்புறம் தானாக எல்லாமே எங்களுக்கு வந்து சேரும் என்றான் அவன்.
அது எப்படி முடியும்? சட்டப்படி பொண்ணுகளுக்கும் சொத்தில் உரிமை இருக்கு பிரணா மீண்டும் பேச,
எல்லாரும் என்னை வெளிய அனுப்புறதுல தான் குறியா இருக்காங்க.
நீ மட்டும் என்னிடம் வம்பு செஞ்சுகிட்டே இருக்க? என்னிடம் மட்டுமா செஞ்ச? உன் அண்ணன் மதிக்காம பேசிட்டு போறான். நீ என் வீட்டுக்கே வந்து என் பொண்ணையே எல்லார் முன்னும் அவமானப்படுத்துற. திமிரு அதிகம் தான் உனக்கு என்று அவன் அவள் மீது கை வைக்கும் முன், சிவநந்தினி பிரணவியை அவன் அருகே இருந்து இழுத்து..
அந்தாளு வீட்டுக்கு எடுக்குடி போன? என்று சப்பென கன்னத்தில் அறைந்தார்.
நந்து..என்று இளஞ்செழியன் அழைக்க, இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன். பொட்ட பிள்ளைக்கு செல்லம் கொடுக்காதீங்கன்னு. தனியா எந்த தைரியத்துல அவன் வீட்டுக்கு போயிருக்கா? எல்லாமே நீங்களும் பப்பூவும் இவளுக்கு கொடுத்த செல்லம் தான். இவ இந்த அளவு போயிருக்கா என்று அவர் திட்ட, பிரணவி அழுது கொண்டிருந்தாள்.
அட அட அட..இருந்தால் இப்படி ஒரு பொண்டாட்டி இருக்கணும்? எல்லாரையும் சரியா புரிஞ்சு வச்சிருக்கம்மா. என்ன யாரும் உன் பேச்சை கேட்க மாட்டிக்கிறாங்க. இதை நினைத்தால் தான் வருத்தமா இருக்கு.
என்னோட மருமகனுக்கு கொஞ்சமும் அறிவில்லை இல்லை இப்படியொரு அற்புதமான அம்மாவை கஷ்டப்படுத்துவானா? நீ தான் கோவில் கோவிலா வேண்டிக்கிட்டு தெரியுற? ஆனால் அவன் உன்னை அம்மா என்ன சும்மாவா தான் பார்க்கிறான் என்று அவர் பேச, மேலும் சிவநந்தினிக்கு கஷ்டமானது.
நான் என்னோட லதாவை பார்ப்பதற்கு முன் உன்னை பார்த்திருந்தால் எவனுக்கும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன் என்று இளஞ்செழியனை பார்த்தான். அவர் கண்கள் சிவக்க ஆரம்பித்தது.
சிவநந்தினி அருகே வந்து, இப்ப கூட ஒன்றுமில்லை லதா தான் என்னை விட்டு போயிட்டா. நீ என் பக்கத்துல இருந்தாலே எல்லாவற்றியும் ஜெயித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டே சிவநந்தினி கையை இழுத்து தயாளன் கன்னத்தில் வைத்து கண்மூடி நிற்க, அவன் மறுகன்னம் பழுத்தது. சிவநந்தினி அவனை அறைந்திருந்தார்.
என் மேல கை வக்கிறியாடா? இவருக்காக எப்ப என்னோட குடும்பத்தை விட்டு வந்தேனோ? அப்பவே எனக்கு எல்லாமே இவர் தான். அவர் உரிமையில் கை வைக்க உனக்கு ரொம்ப தான் தைரியம் என்று கன்னத்தில் வைத்திருந்த கையை பிடித்து திருகினார்.
விடு..என்று கத்திக் கொண்டே சிவநந்தினியை தள்ளி விட்டான் தயாளன். அவருக்கு கீழே விழுந்து அடிபட்டு இரத்தம் வந்தது. அம்மா..என்று ஆத்வியும் பிரணாவும் அவர்கள் அம்மாவிடம் வந்தனர்.
“அம்மாடி, இங்க பாரு” என்று பாட்டி அவரை அமர வைத்தார். இளஞ்செழியன் கோபத்தில் பக்கத்தில் இருந்த இரும்பு பூச்சட்டியை எடுத்து அவனை அடிக்க, அவன் தலையிலிருந்து இரத்தம் கொப்பளித்தது. ஆனாலும் இருவரும் சண்டை போட, அப்பா…வேண்டாம் என்று அதீபன் கத்தினான். அவனது அப்பாவில் எல்லாரும் அவனை பார்த்தனர்.
அவன் இரத்தத்துடன் இளஞ்செழியனை அடிக்க, அவருக்கும் அடிபட்டு இரத்தம் வந்தது. அதிரதன் வேகமாக ஓடி வந்து காரை எடுக்க காவியன் அவனை போக விடாமல் முன் வந்து நின்றான்.
ஏய், வழிய விடு என்று அதிரதன் கதவை திறந்து கோபமாக வந்தான்.
காவியா, என்ன பண்ற? நேத்ரா அவனிடம் வந்தாள்.
சார், இப்ப நீங்க போகாதீங்க.
சீற்றத்தில் இருந்த அதிரதன் காவியனை அடிக்க, அவன் ஏதும் சொல்லாமல் நின்றான். அவன் மீண்டும் அடிக்க வர, நேத்ரா அவன் கையை பிடித்து, சார் அவன் மேல கை வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கத்தினாள்.
அவன் எதுக்கு என் வழியை மறைக்கிறான்?
வழி தான. நீங்க போங்க என்று நேத்ரா காவியனை பிடித்து இழுக்க, அக்கா விடுங்க என்றான்.
அவரு என்ன செஞ்சா நமக்கென்ன? நேத்ரா கேட்க, அக்கா யுவி உயிரையே காப்பாத்த போறாரு. அவருக்கு என்னால் முடிந்த சின்ன உதவி என்றான் காவியன்.
அதிரதன் அவனிடம் வந்து, உதவியா? என்ன சொல்ற?
இப்ப போனீங்கன்னா உங்களுக்கு தான் பிரச்சனை? அவன் பேசியதை வைத்து பார்த்தால் இப்ப உங்க வீட்ல ரிப்போர்ட்டர்ஸ் வந்துருப்பாங்க?
“உங்க வீட்ல யாருக்காவது போன் செய்து கேட்டு பாருங்க” என்றான் காவியன்.
ரணாவிற்கு போன் செய்ய அவள் எடுக்கவில்லை. அவன் பாட்டியும் எடுக்கவில்லை.
நேத்ரா உள்ளே சென்று டிவியை போட்டாள். காவியன் சொன்னது போல் அதிரதன் வீட்டின் முன் டிவி சேனல்கள், பத்திரிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
சார், இங்க வந்து பாருங்க நேத்ரா அழைத்தாள். அனைவரும் உள்ளே வந்தனர். அவன் குடும்பம் வெளியே நின்றது. அவன் அம்மா, அப்பா தலையில் காயத்துடன் கட்டிட்டு இருந்தனர். அதீபன் தலையில் சிறு காயத்தில் மருந்து போட பட்டு இருந்தது. ஆத்விகா கையில் கட்டுடன் இருந்தாள். ஆனால் பிரணவியும் பாட்டியும் மட்டும் அங்கு இல்லை.
எல்லாரும் இளஞ்செழியனின் முன் கேள்விகள் கேட்க, எல்லாரும் அமைதியா இருங்க என்று சத்தமிட்டவர், என் கம்பெனி ஷேர் சிலவற்றை என் மகன் அதிரதனின் இண்டஸ்ரீஸ், எண்டர்பிரைசஸ் கம்பெனிக்கு தருகிறேன். அவனுடைய ஷேர் கோல்டர்ஸ் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சார், உங்க மகன் எங்க இருக்கார்? உங்களுக்கு தெரியுமா? ஒருவர் கேட்க,
தெரியாது. அவன் கம்பெனி மீது கை வைத்த போது அவன் வேடிக்கை பார்க்கலையே? வொர்க்ஸ்க்கு பாதுகாப்பு, ட்ரீட்மென்ட் என அனைத்தையும் எங்கிருந்தும் செய்து கொண்டு தான் இருக்கான். வந்த ரௌடிகளை வந்த வழியே அனுப்பினானே? அதிலே உங்களுக்கு தெரிந்திருக்கும் அவன் திறமை.
உங்க மகன் திறமைசாலி தான். ஆனால் பொண்ணுங்க விசயத்துல சரியில்லைன்னு சொல்றாங்களே?
யார் சொன்னது? என் அண்ணன் இதுவரை எந்த பொண்ணு பின்னும் சென்றதேயில்லை. அந்த தீக்சியவே அப்பாவுக்காக தான் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான். அந்த அஷ்வினி ஒரு கேண்டில் தான்.. யாரோ திட்டம் போட்டு என் அண்ணவை மாட்டி விட்டிருக்காங்க என்றாள் ஆத்விகா.
அப்படின்னா அந்த வீடியோ?
அது கண்டிப்பா என் அண்ணனே இல்லை. அந்த வீடியோவை எல்லாரும் பார்த்தீங்கன்னா நல்லா தெரியும் என்று அவள் அலைபேசியை காட்டி..இதை நல்லா பாருங்க, ஹோட்டல்ல அவன் காலை ஒரு மாதிரி இழுத்து இழுத்து நடக்கிறான்.
அண்ணா மீது பழி வந்த அன்று அண்ணா கம்பெனிக்குள் வந்த வீடியோ..பாருங்க நடையை பாருங்க. வித்தியாசம் தெரியலையா? என்றவள் உங்க எல்லார் முன்னும் அஷ்வினி, அண்ணன் மேல் பழி போட்ட அன்று அண்ணா நடந்தது.
மேம்..இந்த ஆதாரத்தை ஒத்துக்க முடியாதும்மா. அது முன் நடந்த விசயமாக கூட இருக்காலாம். அப்பொழுது அடிபட்டு காலை இழுத்து சென்றிருக்கலாம். இப்ப சரியாகி இருக்கும் என்றனர்.
உங்களுக்கு என்ன தெளிவான ஆதாரம் தானே வேண்டும்? அதை நான் உங்களுக்கு சீக்கிரமே காட்டுகிறேன் என்று இளஞ்செழியன் கூற, அப்பா தன்னை நம்புகிறார் என்று அதிரதன் மனம் அமைதியானது.
இங்க பாருங்க, எல்லாரும் குடும்பத்தோட சேர்ந்து என்னை கொல்லபாக்குறாங்க என்று தயாளன் அவனாகவே மேலும் காயப்படுத்தி பெரிய கட்டுடன் வந்தான்.
அக்கா..பசிக்குது யுவன் கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.
வா..நாம சாப்பிடலாம் என்று அவனை நேத்ரா அழைத்து சென்றாள்.
சார், இப்படி காயப்படுத்தி இருக்கீங்க? ரிப்போர்ட்டர் பொண்ணு கேட்க, வேகமாக முன் வந்த தயாளன், என் பொண்ணு எதுவுமே செய்யலை. இவங்க எல்லாரும் சேர்ந்து தான் அவளை உள்ள தள்ளீட்டாங்க.
என்ன நடந்தது சார்? தயாளனிடம் அந்த பொண்ணு கேட்க, என் பொண்ணு தப்பு செய்யலன்னு இவங்கள சொல்ல வரச் சொல்லி கேட்டேன். அதுக்கு எல்லாரும் என்னை கொல்ல பாக்குறாங்க..என்று முதலைக் கண்ணீர் வடித்தார்.
ரிப்போர்ட்டர்ஸ் எல்லாரும் இளஞ்செழியனை வில்லனாக பார்க்க,
“மாம்ஸ் நல்லா சொன்னீங்க போங்க” என்று கூறிக் கொண்டே பிரணவியும் பாட்டியும் வந்தனர்.
ஏம்மா சின்னப்பொண்ணு, பெரியவருக்கு மரியாதை கொடுக்க மாட்டியா? ரிப்போர்ட்டர் சைடில் ஒருவர் கேட்க, இந்த ஆளுக்கு இதுவே அதிகம். நான் தவறாகவும் பேசலையே? மாம்ஸ்ன்னு சொன்னது தப்பா..
ஆக்சுவலா நான் இவருக்கு இந்த மரியாதை கொடுத்ததே என் அம்மாவுக்காக தான். மரியாதை இல்லாமல் பேசினால் அம்மாவுக்கு பிடிக்காதே என்று அவள் அம்மாவை பார்த்தாள். எல்லாரும் அவளை பார்க்க, பிரணாவிற்கு தன் அம்மா, அப்பா காயத்தை பார்த்து விட்டு..ரிப்போர்ட்டர்ஸை பார்த்து,
நீ எல்லாரும் ரிப்போர்ட்டர்ஸ் தான? எதையும் உண்மையான்னு பார்த்துட்டு நியூஸை வெளியிடணும். என் அண்ணா எதுவும் செய்யலைன்னு அப்பாவுடன் சேர்ந்து நானும் நிரூபிக்கிறேன்.
அது எப்படி உன்னால் முடியும்? நீ சின்னப் பொண்ணு? தயாளன் கூற, அதீபன் அவனிடம்
எங்க பிரணவி சரியான வாயாடி தான். அவளை பேசி ஜெயிக்க முடியாது. விளையாட்டுத்தனமா இருந்தாலும் இறங்கிட்டான்னா முடிக்காம விட மாட்டா. அவ சின்ன பொண்ணா இருக்கலாம். இப்ப தான் காலேஜ் போறா..லாயருக்கு படிக்கிறா?
இவளோடவும் பெரியப்பாவோடவும் சேர்ந்து நானும் அண்ணா மேல தப்பு இல்லைன்னு நிரூபிப்பேன் என்றான். ஆத்விகாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, அதிரதனுக்கு சந்தோசமாக இருந்தது.
அண்ணா விசயத்தை அப்புறம் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி “பார்க்க வேண்டியதை நீங்க பாருங்க” என்ற பிரணவி
அது எப்படி? உதவி கேட்டு, இந்த சார் எங்க வீட்டுக்கு வந்தாரா? அவள் லேப்பில் பென்டிரைவ்வை சொருகி கேமிரா பக்கம் திருப்பினாள். அதில் தயாளன் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து அனைத்தும் இருந்தது. தயாளன் வருவதை பார்த்தவுடனே அவளுக்கு அதிரதன் கிப்டா கொடுத்த வீடியோ ரெக்கார்டரை ஓரிடத்தில் வைத்து விட்டு தான் அதிரதனுக்கு கால் செய்திருப்பான்.
அவளை பார்த்த காவியன் நண்பர்கள் அவனை பார்த்தனர். ஷ்..என்று அவன் வாயில் வைத்தான். இப்பொழுது இவளுடைய செயலில் ஆடிப் போனார்கள் அனைவரும்.
வீடியோவை பார்த்த அனைவரும், யோவ்..நீ செழியன் சார் குடும்பத்தையே மிரட்டி விட்டு, அவர் மேல் பழிய போடுற? அப்படின்னா..அதிரதன் சார் மீதும் உன் பொண்ணை வைத்து நீ தான் பழி போட்டாயா? கேட்க..
என் மாப்பிள்ளை மீது நானே பழி சுமத்துவேனா? அவன் கேட்க, சார், இப்ப உங்க டர்ண் என்றான் காவியன்.
புன்னகைத்த அதிரதன், ஆத்விகாவை அழைத்தான். அவள் அலைபேசியை எடுத்து அவன் கூறிய படி ரிப்போர்ட்டரிடம் காட்ட, இப்பொழுது அதிரதன் பேசினான்.
எனக்கும் தயாளன் சார் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்பாவிற்காக தான் திருமணத்தை ஒத்துக் கொண்டேன். அன்றே அவர்கள் வீட்டிற்கு சென்று திருமணத்தை நிறுத்த சொல்லி விட்டேன்.
இல்லை. அப்படியெல்லாம் இல்லை. இவர் தான் என் மகளை திருமணம் செய்து கொள்வார்.
சார், நான் அன்றே கூறிவிட்டேன். இதுக்கு மேல அப்பா சொன்னது போல் எங்க கம்பெனியில இருக்கும் உங்க ஷேரை எடுத்துட்டு கிளம்பிடுங்க. மறுபடியும் நான் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன். என்னோட குடும்பத்து மேலவே கையை வச்சுட்டீங்க.
அப்பா, இனி..இவர் சம்பந்தப்பட்ட எந்த டீலும் நம்ம கம்பெனிக்கு வரக்கூடாது. என்னோட கம்பெனி வொர்க்கர்ஸ் சிலர் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. நீங்க போய் பார்த்துட்டு வாங்க. எல்லா பிரச்சனைக்கும் காரணமும் இவர் தான்.
இவர் மேல் கம்பிளைண்ட் கொடுங்க..
சரிப்பா, நீங்க யார் சொல்றதையும் கேட்காமல் இருந்துட்டேன்ப்பா. என்னை மன்னிச்சிரு என்றார் செழியன்.
“அப்பா, என்ன செய்றீங்க?” என் மேல தப்பு இல்லைன்னு நீங்க இப்ப நம்புறீங்கள அதுவே போதும் என்றான்.
“சார், நீங்க எங்க இருக்கீங்க?” ஒருவர் கேட்க, அந்த விசயத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னா எதுக்கு மறைந்து இருக்கணும்? மற்றொருவர் கேட்க,
எல்லாவற்றிக்கும் காரணம் இருக்கு. போக போக உங்களுக்கு தெரியும் வரும் என்று அவன் அம்மாவை பார்த்தான். ஆனால் அவனால் பேச முடியலை.
“அப்பா, எல்லாரையும் பார்த்துக்கோங்க” என்று அலைபேசியை வைத்தான். தயாளனையும் போலீசார் வந்து இழுத்து சென்றனர்.
சார், உங்க தங்கை அவர் வாயிலாக உங்க மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்க பார்த்திருக்காங்க. ஆனால் உங்க அம்மா அடியில் அப்படியே நின்னுட்டாங்க என்று காவியன் புன்னகையுடனும் பொலிவுடனும் கூற, அவன் நண்பர்கள் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.
ம்ம்..ரொம்ப ரிஸ்க் எடுத்துருக்கா. குட்டிம்மா..நல்லா வளர்ந்துட்டா என்று அதிரதனும் புன்னகைத்தான்.
சார், நீங்க சிம்மை மாற்றுவது நல்லது காவியன் கூற, “ரொம்ப தேங்க்ஸ்” காவியன் என்று அவனை அணைத்துக் கொண்ட அதிரதன். நான் சென்றிருந்தால் யாருக்கும் நிதானம் இருந்திருக்காது.
அதான் சொன்னேனே சார். “என்னால் முடிந்த சிறு உதவி” என்றான் காவியன். நேத்ரா அங்கே வந்து, என்னாச்சு சார்? கேட்டாள்.
அவன் அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான். மற்றவர்களும் அமர்ந்தனர். அதிரதன் அலைபேசி ஒலித்தது.
சொல்லு குட்டிம்மா?
அண்ணா, எப்படி? உன்னை போல் நடந்து கொண்டேனா?
அவன் சிரித்து விட்டு, என்னை போல் உன்னால் ஆகவே முடியாது குட்டிம்மா.
ஏண்ணா?
சொல்லப் போனால் உன்னை மாதிரி என்னால் தான் இருக்க முடியாது என்று புன்னகைத்தான். அப்பா..இருக்காரா?
ம்ம்..என்றாள். ஸ்பீக்கரில் போடு..என்ற அதிரதன். நான் என்னோட சிம்மை மாற்ற போறேன். யாரும் கான்டாக்ட்ல வர வேண்டாம். யாரும் இந்த விசயத்தில் தலையிட வேண்டாம். நாம நினைக்கிற மாதிரி நம் பக்கத்தில் இருக்கும் யாரோ ஒருவர் தான் நம்மை கீழே இறக்க பார்க்கிறார்கள். நான் அதை கண்டுபிடித்த பின் நம் வீட்டுக்கு வாரேன் என்றான்.
அண்ணா, நம்பர் மாற்றப் போறாயா? எனக்கு மட்டும் கால் பண்ணு சரியா? பிரணவி கேட்க, காவியனை அவன் நண்பர்கள் பார்த்தனர்.
நோ, குட்டிம்மா. நீயும் இந்த விசயத்தில் தலையிடாத. நான் பார்த்துக்கிறேன்..
அண்ணா, நானும் உனக்கு உதவுவேன்.
சொன்னால் கேட்க மாட்டாயா? சத்தமிட்டான்.
போடா, காலையிலிருந்து எல்லாரும் திட்டிக்கிட்டே இருக்கீங்க? நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று பிரணா..அலைபேசியை அதீபனிடம் கொடுத்து விட்டு சென்றாள்.
அதீபனுக்கு நன்றி கூறிய அதிரதன், அவன் அம்மாவிடம் பேச நினைத்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை.
அவன் அப்பாவிடம் “எல்லாரையும் பார்த்துக்கோங்க. எப்படியும் எல்லாம் முடிய ஆறு மாதமாவது ஆகும். கவனமா இருங்க” என்று நிதின் அங்க வரலையா? எங்க போனான்? கேட்டான்.
கம்பெனி சீரமைப்பை முடித்திருப்பான். ஆனால் எங்க இருக்கான்னு தெரியலைப்பா என்றார்.
“சரிப்பா, எல்லாரையும் பார்த்துக்கோங்க” என்று சில நேரம் பேசாமல் வைத்திருந்தவன் ஆத்விகாவிடம் பேசி வைத்து சிம்மை மாற்றினான்.