Advertisement

அத்தியாயம் 8

நம் இயற்கையின் நாயகனான கதிரவன் மீண்டெழுந்து தன் ஒளியை இவ்வுலகிற்கு கொடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நேத்ரா, காவியன் மற்ற பசங்க யுவி அனைவரும் முதலிலே எழுந்தனர்.

பசங்களிடம் சொல்லி சில பொருட்களை வாங்கணும்ன்னு சொல்லிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் சொல்வதை எழுதிக் கொண்டிருந்தான் மிதுன். அவனுக்கு எழிலனிடமிருந்து போன் வர, அக்கா..சீனியர் தான் என்றான்.

அவனை பார்த்து அவள் அமைதியாக, இவங்க சரிபட்டு வர மாட்டாங்க என்று எண்ணியவன், போனை ஸ்பீக்கரில் போட நிதினும் அதிரதனும் தயாராகி வெளியே வந்தனர்.

விடியற்காலையிலே போன் செய்திருக்கீங்க? என்னாச்சு சீனியர்? மிதுன் கேட்க, அந்த பையன் நல்லா இருக்கானா? என்று மிதுனிடம் விசாரித்து விட்டு, நமக்கு தேவையானதை வாங்க போகலாமா? எழிலன் கேட்க,

சீனியர், நான் அங்க வர முடியாது. தூரமா ஒரு வேலையா வந்துருக்கேன். நாளைக்கு காலேஜூக்கும் வர முடியாது. மறுநாள் தான் வருவேன் என்றான்.

எங்க இருக்க? என்று நளன் போனை பிடுங்கி கேட்க, சீனியர்..என்று அதிரதனை பார்த்தான். அவனும் இவனை பார்க்க, நான் முக்கியமான வேலையா இருக்கேன். அப்புறம் கால் பண்றேன் என்று வைத்து விட்டான்.

நிதின் வினுவை பார்த்து, தனியே வரச் சொல்லி கண்ணை காட்டினாள். “முடியாது” என்று அவள் தலையசைக்க, ப்ளீஸ் என்றான். அதிரதன் இருவரையும் கோபமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வா, என்னன்னு சொல்லு” என்று எல்லார் முன்னும் பேசிக் கொண்டே வெளியே சென்றாள்.

சுபிர்தன் அவனை மறித்து நிற்க, நான் பேச மட்டும் தான் செய்யணும். காலை சாப்பாடு முடிந்தவுடன் கிளம்பி விடுவேன் என்றான் நிதின்.

“சுபி, வழிய விடு” நேத்ரா சொல்ல, அவனும் வழி விட்டான்.

“என்ன பேசணும்? சொல்லு?” என்று நடந்து கொண்டே கேட்டாள்.

வினு..என்று தயங்கிக் கொண்டே, உண்மையாகவே உனக்கு கொஞ்சம் கூட என் மீது காதல் வரலையா? கண்ணீருடன் அவன் நேத்ரா கையை பிடிக்க, அவன் கை மீது கை வைத்து, எனக்கு சுத்தமாக உன் மீது காதல் உணர்வுகள் வரவே இல்லை நிது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. நீ என்னோட தோழன் மட்டும் தான்டா. நீ உன்னோட வேலைய பாரு. உனக்காக காதல் நான் இல்லை. நீயே பாரு என்னை விட ரொம்ப அழகான பொண்ணு உனக்கு கிடைப்பா என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் நேத்ரா நிதின் கை மீது கை வைப்பதை பார்த்த அதிரதனுக்கு கோபம் அதிகமானது. அவன் அலைபேசி ஒலிக்க, அனைவரும் அவனை பார்த்தனர்.

பாட்டி அவனை அழைக்க, “சொல்லுங்க பாட்டி” என்றான்இருவரையும் பார்த்துக் கொண்டு.

வாட்? அவளுக்கென்ன பைத்தியமா?

கண்ணா, நல்ல விசயம் தான?

பாட்டி, இப்ப அவளுக்கு கல்யாணம் வேண்டாம்.

அவளே கேட்டிருக்கா. நீ சந்தோசப்படுவன்னு சொன்னா. கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற?

பாட்டி, ஆத்வி எங்க?

அவ கம்பெனிக்கு தயாராகிட்டு இருக்கா? போனை அவகிட்ட கொடுங்க என்றார்.

பிள்ளைய திட்டாதய்யா..

“குடுங்கன்னு சொன்னேன்” அவன் கத்த, எல்லாரும் அவனை பார்க்க, யுவி பயந்து அருள் காலை பிடித்துக் கொண்டான்.

அண்ணா, ஆத்வி அழைத்தாள்.

உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ண முடியாதா? அவன் சத்தமிட்டான்.

கதவை பூட்டி விட்டு அழுது கொண்டே, என்னால முடியலண்ணா. ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அவன் விட்டு வந்ததை சொல்ல, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு ஆத்வி. அண்ணா இருக்கேன் என்று அவள் காதலுக்கு ஆதரவாக பேசினான்.

“வேண்டாம் அண்ணா” என்று அவள் சொல்லி கொண்டிருக்க லயன் கட் ஆனது.

செட்…என்று மீண்டும் முயற்சி செய்தான். இப்பொழுது வீட்டிற்கும் செல்ல முடியாது. போனை அணைத்துவிட்டாள் ஆத்வி.

நேத்ராவும் நிதினும் உள்ளே வந்தனர். இருவரையும் முறைத்துக் கொண்டிருந்த அதிரதன் நிதினிடம் வந்தான்.

ரதா, என்னாச்சுடா? அவன் கேட்க, அவனை ஓங்கி அறைந்தான் நம் அதிரதன்.

ஆத்விய தனியா எதுக்கு விட்டுட்டு வந்த? இப்ப இருக்கும் சூழ்நிலையில் தனியா விட்டுட்டு வந்திருக்க? அவளுக்கு ஏதாவது ஆனால்..என்று நிறுத்தி நேத்ராவை பார்த்தான்.

அவள் மீது தவறில்லை என்று அதிரதனுக்கும் தெரியும். ஆனால் கோபத்தில், “இவளுக்காக தான அவள தனியா விட்டுட்டு வந்த?” அதிரதன் நேத்ரா அருகே சினமுடன் வந்தான். காவியனும் மற்றவர்களும் அவள் முன் வருவதற்குள் அவளை நெருங்கி இழுத்து முத்தமிட வந்து நிறுத்தி, அவளை தள்ளி விட்டான். கீழே விழுந்து விடாமல் அங்கிருந்த சோபாவை பிடித்த அவளும் மற்றவர்களும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

நிதின் அதிரதனை அடிக்க, அதிரதனும் நிதினை அடித்தான். இருவரும் சண்டை போட, நேத்ரா அழுது கொண்டே அறைக்குள் சென்றாள். நடப்பது புரியாமல் காவியனும் நண்பர்கள் திகைத்து நின்றனர்.

நிலைக்கு வந்தவுடனே..அக்கா, என்று ஐவரும் நேத்ரா அறைக்கதவிற்கு வெளியேயிருந்து தட்டினர். சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களை பார்த்து எழுந்தனர்.

நிதினும் அவர்களிடம் செல்ல, அருள் அவனை தள்ளி விட்டு “யாராவது பக்கத்துல வந்தீங்கன்னா மரியாத இல்ல” என்று கத்தினான்.

நேத்ரா கதவை திறக்க, ஐவரும் உள்ளே சென்றனர். நிதின் கதவருகே வர, கதவை பட்டென சாத்தி தாழ்ப்பாள் போட்டான் காவியன். நிதின் அதிரதனை முறைத்துக் கொண்டு கதவருகே நின்றான்.

“அக்கா, உங்களுக்கு ஒன்றுமில்லையே?” மிதுனும் மற்றவர்களும் பதறி கேட்டனர்.

இல்லை. நான் விழவேயில்லையே? எப்படி அடிபடும்?

“அக்கா, வாங்க இப்பவே கிளம்பிடுவோம்” அழைத்தான் காவியன்.

“இல்லடா, வேற வழியே இல்லையே?” என்று கண்ணீருடன் காவியனையும் மற்றவர்களையும் பார்த்தனர்.

அவரு நல்லவருன்னு தான் இங்க தைரியமா இருந்ததே? ஆனால் அவர் சரியில்லைக்கா. நாம போயிடலாம்.

இல்லடா. யுவிக்காக தான் என்று அவர்களை பார்த்து, காவியா, யுவி எங்கடா? கேட்டாள். விளையாண்டுகிட்டு தான் இருந்தான் என்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“வழிய விடுங்கடா” என்று கதவை திறந்து முன் இருக்கும் இரு ஜீவன்களையும் கண்டுகொள்ளாமல் பதட்டமாக, யுவி..யுவி என்று ஹால் அறைகள் அனைத்தையும் திறந்து பார்த்தாள். மற்றவர்களும் அவளுக்கு உதவினர்.

வீட்டினுள் இல்லை என்று வெளியே வந்தாள். டேய், எங்கடா போனான்? என்று புலம்பிக் கொண்டே தேடினாள். ஹே..யுவி பதட்டமாக சுபிர்தன் சத்தமிட்டான்.

எங்கடா? நேத்ரா கேட்க, அக்கா..ஸ்விம்மிங் ஃபூல்ல என்று பதறி அவ்விடம் ஓடி வந்தனர். தாமதிக்காது அதிரதன் உள்ளே குதித்து யுவனை தூக்கி வெளியே வந்து அவனே முதலுதவி செய்து விழிக்க வைத்தான்.

விழித்த யுவன் அதிரதனை பார்த்து பயந்து அணைத்துக் கொண்டான்.

யுவி, என்று காவியன் சத்தமிட, அவன் பயந்து மற்றவர்களை பார்த்து விட்டு நேத்ராவை பார்த்தான். அவள் அழுது கொண்டிருந்தாள். அதிரதனை பார்த்து விட்டு, அக்கா…என்று அவளிடம் சென்று அணைத்துக் கொண்டான்.

“யுவி உனக்கு ஒன்றுமில்லையே? என்று அவனுக்கு முத்தம் கொடுத்தாள். பின் அவனிடம், எதுக்கு வெளிய வந்த?” கேட்டாள்.

“நான் விழுந்துட்டேன்” என்று பதட்டமுடன் நேத்ராவை அணைத்துக் கொண்டான்.

அண்ணாவிடம் வா..என்று கிருஷ்ணன் அழைக்க, அவன் அவனிடம் சென்றான். காவியனும் மிதுனும் நேத்ரா பின்னிருந்த சிறு இடைவெளியில் நின்று, மெதுவாக எழுந்திருங்கக்கா. தண்ணீயா இருக்கு. வழுக்க போது என்றனர்.

இவளுக்கு பாடிகார்டா இவனுக? இப்படி பண்ணுறானுகளே! என்று அதிரதன் மனதில் நினைக்க, நிதின் அவர்களிடம் நேராகவே கேட்டுட்டான். அவனை முறைத்துக் கொண்டே ஐவரும் நேத்ரா, யுவியை அழைத்து வீட்டினுள் சென்றனர். இவர்களும் வீட்டிற்குள் வந்தனர்.

அக்கா, நாம இங்க இருக்கிறது சரியா இல்லை. நாம பார்த்துக்கலாம் என்று காவியன் கூற, சோபாவில் அமர்ந்து யுவன் உடலை துடைத்து விட்டு, தலையை துவட்டிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

ஆமா, வினு நீ இங்க இருக்க வேண்டாம். பணத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று நிதின் சொல்ல, அருள் யுவியோட ஆடையை எடுத்து வா என்று நேத்ரா சொல்ல, அதிரதனும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவளருகே நிதின் வர, சுபிர்தனும் கிருஷ்ணனும் அவன் முன் வந்து நின்றனர்.

டேய், உங்க அக்காவை நான் முழுங்கி விட மாட்டேன் என்று அவர்களை விலக்கி விட்டு, அவளருகே அமர்ந்து அவளை பார்த்தான்.

சொல்றதை சொல்லீட்டேல. நீ கிளம்பு என்றாள் நேத்ரா நிதினிடம்.

வினு, நான் இப்ப உன்னோட ப்ரெண்டா உதவ நினைக்கிறேன் என்றான்.

அவன் பக்கம் திரும்பிய நேத்ரா, இங்க பாரு பணத்துக்காக தான் இங்க வந்தேன். ஆனால் இந்த பணத்தை வேற யார் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன். இவங்க குடும்பத்துல இருக்கிறவங்க தான் எங்க நிலையத்திற்கு பொறுப்பு. இவங்க யாராவது தான் தரணும்.

அக்கா, அப்படின்னா மத்த செலவுக்கும் இவங்களிடம் முதலில் இருந்தே வாங்கி இருக்கலாம்.

எப்படிடா வாங்குவ? இவங்க கம்பெனிக்கு போனீங்களே? ஏதாவது உதவி கிடைச்சதா? சேர்மன் சாரை மீட் பண்ணவே ஒரு மாதம் ஆகுமாம்.

சுபி, இவங்க வீட்டுக்கு போய் யுவி சிகிச்சைக்குன்னு சொல்லியும் அவமானம் தான மிஞ்சியது. இந்த இடத்துல போய் எந்த செலவுக்கு எதுக்குன்னு கேட்க சொல்ற? சின்னப்பையனோட உயிரையே மதிக்க மாட்டேங்கிறாங்க. என்ன செய்ய? வேற வழியில்லாமல் தான் இவரை தேடி வந்தேன்.

நிதினை பார்த்து, வேணும்ன்னா உங்க சேர்மன் சார்கிட்ட என்னை கூட்டிட்டு போ. நான் பேசி வாங்கிக்கிறேன்.

சேர்மனிடமா? என்ற நிதின், வினு எப்ப கம்பெனிக்கு வந்தீங்க? வீட்டுக்கும் போனீங்களா? கேட்டான்.

கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு. முடிஞ்சத பத்தி பேசி ஒன்றும் ஆகாது என்றாள்.

வினு, நான் வேண்டுமானால் அம்மாவிடம் உதவி கேட்கவா? நிதின் கேட்க, உங்க அம்மா அவங்க பிள்ளைக்காக கோவில் கோவிலா ஏறி இறங்க தான் நேரமிருக்கும் என்றாள்.

உனக்கு என்னோட அம்மாவை தெரியுமா? அதிரதன் கேட்டான்.

நல்லா தெரியும். இரு நாட்களுக்கு முன் கூட பார்த்தோமே? என்னடா காவியா? நேத்ரா கேட்க, அவன் நேத்ராவையும் முறைத்தான்.

எப்படி தெரியும்?

காவியனும் மிதுனும் பள்ளியில் முதல், இரண்டாம் மதிப்பெண் எடுத்திருந்தாங்க. அவங்க மேல்படிப்புக்கு உதவி கேட்டு விஷ்வா என்னை உங்க அம்மாவிடம் தான் அழைத்து போனாங்க. அவங்க உதவியால தான் காவியன் சட்டக்கல்லூரியிலும், மிதுன் இஞ்சினியரிக்கும் படிச்சிக்கிட்டு இருக்காங்க.

சேர்மனை பார்க்க ஒரு மாதம் காத்திருக்கணுமா? இது எப்பொழுதிலிருந்து? அதிரதன் கோபமாக நிதினிடம் கேட்டான்.

அது வந்து, அப்பாவுக்கு நியூ பிராஜெக்ட் ஒண்ணு வந்திருக்கு. அதனால அவர் கேரளா வரை போகணும். வர இரண்டு வாரம் ஆகும் என்று தயங்கி சொன்னான்.

என்ன பிராஜெக்? யார் இன்வெஸ்ட்டர்? அதிரதன் கேட்க, நீ அப்பாவிடமே கேட்டுக்கோ என்று அவன் நழுவ பார்த்தான்.

சொல்லு, அவன் பிராஜெக்ட்டை சொல்லி விட்டு, ரதா..என்று அவனிடம் வந்தான்.

“யாருன்னு சொல்லு?” என்று முறைப்புடன் நின்றான் அதிரதன்.

“தயாளன் அங்கிள் தான்” என்றதும் அங்கிருந்த நாற்காலியை தூக்கி எறிந்தான்.

ஏன்டா, இவருக்கு என்ன தான் பிரச்சனை? அந்த ஆளோட மகளால தான் நான் இந்த நிலையில இருக்கேன். அவங்க டீலிங் இப்ப முக்கியமா? வெளிய தெரிஞ்சா அப்பாவே என்னை தப்பானவன்னு ஏத்துகிட்டது போல இருக்காதா? கத்தினான்.

அப்ப வா. நீயே வந்து அவரிடம் கேளு.

அய்யோ, நான் இங்க இருக்க காரணம் இருக்கு. எல்லாத்தையும் உங்கிட்ட விளக்க முடியாது. முதல்ல அவர கேன்சல் செய்ய சொல்லு.

நான் ஏற்கனவே பேசிட்டேன். ஆத்வியும் பேசுனா. கேட்கவே மாட்டேங்கிறார்.

ஆத்வி என்றவுடன் தான் கல்யாணத்தை பற்றி பாட்டி சொன்னது நினைவு வந்தது.

எப்ப கிளம்ப போறார்?

நாளைக்கு?

நாளைக்கா? பிராஜெக்ட் வந்திருக்கா? இல்லை கம்பெனி வாங்க போறாரா?

சரியா தெரியலை. ஆனால் பிராஜெக்ட்டுன்னு தான் விசயம் வெளிய வந்தது. ஆனால் அவர் அறையில் அந்த கம்பெனி பற்றிய மொத்த டாக்குமெண்ட்டையும் வச்சிருந்தார்.

ஓ..மை காட். இடியட் என்ன பண்ணிடா வச்சிருக்க? என்று நிதினிடம் சத்தமிட்டு, பாட்டியை அழைத்தான்.

பாட்டி, அங்க என்ன நடக்குது?

கண்ணா, நம்ம ஆத்விக்கு ஓர் இடம் வந்துருக்கு. மாப்பிள்ளை கேரளாவாம்.

அய்யோ பாட்டி, நேத்து தானே ஓ.கே சொன்னா? அதுக்குள்ள என்ன அவசரம்?

என்னாச்சுய்யா?

பாட்டி, கேரளாவில் கம்பெனிய வாங்க போறாங்க. அதுக்கு பதிலா ஆத்வியை கல்யாணம் பண்ணி வக்க சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன். எனக்கு சந்தேகமா இருக்கு.

கண்ணா, அப்பா அப்படி செய்ய மாட்டான்.

பாட்டி, அப்பா செய்ய மாட்டார். ஆனால் தீக்சி அப்பா நினைப்பதை செய்வார்.

ஆத்வி எங்க? இருக்காலா?

அவ கம்பெனிக்கு போயிருக்கா. குட்டிம்மா, இருந்தா போனை குடுங்க என்றான்.

பிரணா..எங்கடி இருக்க?

பாட்டி..இந்தாங்க நீங்க கேரட் ஜூஸ் கேட்டீங்கல்ல? எனக்கு கேரட் அல்வா..என்று அவள் சத்தம் கேட்க, இவ வேற? என்ற ரதன், குடுங்க பாட்டி கத்தினான்.

குட்டிம்மா, அண்ணா பேசுறேன். நீ ஆத்விக்கு கால் பண்ணி அப்பா கதவை திறக்க சொன்னா. திறக்க கூடாதுன்னு சொல்லு..

எதுக்குண்ணா? சொல்றத மட்டும் செய். நான் சொன்னால் அவள் கேட்கும் நிலையில் இல்லை. நான் சொன்னேன்னு ஆத்விகிட்ட சொல்லாத. நிதின் சொன்னான்னு சொல்லு. அவ திறக்க மாட்டா.

“இப்பவே செய்றேன் அண்ணா” என்று சொல்லி விட்டு அதிரதனை அழைத்தாள் செய்தாள் நம் ரணா.

சொல்லீட்டியா. அவ சரின்னு சொன்னாலா?

சொன்னா அண்ணா. ஆனால் வாய்ஸ் சரியில்லை. என்னன்னு தெரியலை. ஏதோ தப்பா இருக்குற மாதிரி இருக்கு.

தீபனிடம் போனை கொடு. அவன் அறையில் இருப்பானே?

குடுன்னு சொன்னேன்.

பாருடா, குட்டிக்கழுத என்னோட அறைக்கு வந்துருக்கு அதீபன் சொல்லிக் கொண்டே பேயை எதுவும் பார்த்தியா? இப்படி நிக்குற?

“அண்ணாகிட்ட பேசு” என்று போனை கொடுத்தாள்.

சர்பிரைஸ்க்கு மேல சர்பிரைஸ் குடுக்குறீங்க?

அதீபா, உன்னோட பைக்க எடு. நம்ம இன்டஸ்ட்ரீஸ் கம்பெனிக்கு போ..ஆத்வி அறைக்கு போ சீக்கிரம். க்விக் பாஸ்ட் என்றான்.

பிரச்சனையாடா? அவன் கேட்டுக் கொண்டே பைக்கை விரட்டினான். ஆத்வியை தூக்க போறானுக. சீக்கிரம் யார் என்ன செய்தாலும் கம்பெனிக்குள்ள நிக்காத. அவளறக்குள் சென்று அவளை பார்த்துக்கோ. இருவருமே வெளிய வராதீங்க.

நான் பார்த்துக்கிறேன் என்றான் அதீபன்.

“ரதா என்ன சொல்ற? ஆத்விக்கு கல்யாணம்ன்னு பேசுற? தூக்கப் போறானுகன்னு பேசுற? என்ன தான் நடக்குது?” நிதின் கத்தினான்.

உன்னையெல்லாம் அரஞ்சேன்னா பார்த்துக்கோ. அவளை பிசினஸ் மேரேஜ் பண்ணி வைக்கலாம்ன்னு அப்பா மனச மாத்தி அவள இப்ப துக்க ஏற்பாடு பண்ணி இருக்காங்க.

மேரேஜா? ஆத்விக்கா?

நேற்று தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கா? அதுக்குள்ள அப்பா எப்படி மாப்பிள்ள பார்த்து முடிவு பண்ணுவாங்க? ஏற்கனவே பேசி இருக்காங்க. அப்பாவை ஏமாத்தி அந்த தீக்சி அப்பன் தான் அவள தூக்க பார்க்கிறான்.

அவள எதுக்குடா துக்கணும்?

இடியட், என்னை அவங்க திட்டத்துல சிக்க வச்சி வெளிய அனுப்பிட்டாங்க. என் இடத்துல அப்பா இருந்தா அவரை பேசியே சமாளிச்சிருப்பான். ஆனால் ஆத்வி அந்த இடத்துக்கு வருவான்னு யாருமே எதிர்பார்க்கலை. நீ பக்கத்துல இருந்தா தைரியமா இருப்பான்னு உன்னை விட்டுட்டு நான் தனியா வந்தேன். நீ என்ன செஞ்சு வச்சிருக்க?

திடீர்ன்னு எதுக்கு கல்யாணப் பேச்சு வந்தது?

“போய் உன்னோட மூஞ்சிய கண்ணாடில்ல பாரு” என்று கடுகடுத்தான்.

அவள் கல்யாணத்துக்கும் என் மூஞ்சிக்கும் என்ன சம்பந்தம்? அவள் கேட்க, அதிரதன் அலைபேசி அலறியது.

தினகரன் போன் செய்தார். சார் சொல்லுங்க?

தம்பி, இங்க ரௌடி பசங்க எல்லாரும் வந்து ஆட்களை அடிச்சி போட்டுக்கிட்டு இருக்கானுக பதறினார்.

சார், என்னோட அறைக்கு சென்று மைக்ல போனை வையுங்க என்றான். அவர் அவ்வாறே செய்ய, சோபாவில் தோரணையாக அமர்ந்து, தொண்டையை செருமிக் கொண்டு,

என்னடா, சின்னபசங்களா? நீங்களே வந்து மாட்டிக்கிட்டீங்களே? இப்ப நீங்க உள்ள போறது உறுதி. நான் கூட என்னோட தங்கச்சிய தான் துக்க போறீங்கன்னு நினைச்சேன். ஆனா..பரவாயில்லை. என் மேலுள்ள பழியை நீக்க நீங்களே தரமான சம்பவத்தை செஞ்சிருக்கீங்க. எங்க ஊழியர்களையும் அடிச்சிருக்கீங்க. கம்பெனிய தர மட்டமாக்கிடீங்க போல..அப்பாடா, இனி நான் வெளிய வரலாம் போலவே? அவன் சொல்ல, அவர்கள் அனைவரும் அப்படியே நின்றனர்.

லாயர் சார், கேஸ் ஃபைல் பண்ணுங்க. அவனுக மூஞ்சிய நல்லா போகஸ் பண்ணுங்க. இந்த ரதன் கிட்ட மோதுனா வெளிய வர முடியுமா? முடியாதுன்னு தெரிய வேண்டாமா?  என்னடா பார்க்கலாமா? அதிரதன் சத்தமிட, வந்த வழியே ரௌடிகள் ஓடினர்.

தம்பி, எல்லாரும் போயிட்டாணுக.

சார், வொர்க்கர்ஸ்க்கு சிகிச்சைக்கு, அப்புறம் கம்பெனியை சீரமைக்க ஆகும் செலவை கணக்கிட்டு, உங்க சேர்மன் சாருக்கு பைல் அனுப்புங்க. அப்பவாது அவருக்கு புரியுதான்னு பார்ப்போம். செக்யூரிட்டி யாருமே உள்ள வரலையா?

வந்தாங்க ரெண்டு பேர் வந்தாங்க. ஆனால் திடீர்ன்னு காணாமல் போயிட்டாங்க..என்றார்.

காணா போயிட்டாங்களா?

நீங்க மத்தவங்கள பாருங்க. எல்லாரும் இன்று ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு கண்டிப்பா எல்லாரும் வந்திருக்கணும். உடனே எல்லாரையும் போக சொல்லுங்க என்றான்.

கடிகாரத்தை பார்த்து இவன் இன்னுமா ஆத்வி அறைக்கு போகலை? என்று அதீபனை அழைத்தான். அவன் எடுக்கவில்லை.

நிதின் ஆத்விகாவை அழைத்தான். அலைபேசி எடுக்கப்பட்டது.

ஆத்வி, நிதின் அழைக்க, ஆத்வியா? ஆமா இது ஆத்வி அலைபேசில..என்ற சத்தம் கேட்டு, தீக்சி..நீ எப்ப உள்ள வந்த? நிதின் கேட்க, அதிரதன் அவனை போனை பிடுங்க..

அதிரதனை பிடித்து தள்ளிய நிதின், ஆத்வி எங்க? கேட்டான்.

ஆத்வியா? அவ அழுதுகிட்டு இருக்கா.

அவள என்ன செஞ்ச?

நான் எதுவும் பண்ணலடா அண்ணா.

அண்ணாவா? உன்னை மாதிரி பிறவிக்கு நான் அண்ணனா? ஆத்விய எங்க? கத்தினான்.

எதுக்குடா கத்துற? அவளுக்கு ஒன்றுமே இல்லை. ஆனால் பாவம் அதீபன். அவன் தான் சாக கிடக்கான். பாவம்ல..

எதுக்கு உன்னிடம் வெட்டிப் பேச்சு? காதலின் அருமை தெரியாத உன்னிடம் பேச நான் தயாராக இல்லை.

காதலா? என்ன பேசுற?

ஏன்டி ஆத்வி,  இன்னுமா அவனிடம் காதலை சொல்லலை? என்ற தீக்சி, நிதின் கண்ணா, ஆத்விக்கு நீன்னா ரொம்ப லவ்வு. இப்ப அழுவா பாரேன் என்று கத்தியை அவள் கையில் கிழிக்க, அவளும் கத்தினாள்.

அச்சோ, அவ ரொம்ப வீக்கா இருக்கா. மயங்கிட்டா. இப்ப என்ன பண்றது?

லவ்வா? ஆத்விக்கா? நிதின் கேட்க, அதிரதன் அவனை முறைத்து விட்டு, ஸ்பீக்கரில் போட்டதை எடுத்து விட்டு, சொல்லு என்ன பண்ணனும்? அதிரதன் கேட்க,

அதி டார்லிங், எனக்கு நீ தான் வேண்டும்?

அப்படியா? நானா வேண்டும்? என்றவன் நீ என்ன செய்தாலும் வர முடியாதே என்றான்.

சார்..காவியன் அழைக்க, அதிரதன் அவனை பார்த்தான். நீங்க போறது தான் சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன் அவன் சொல்ல, அதிரதன் நிதினிடம் கண்ணை காட்டினான்.

நிதின் அதிரதன் காரில் கிளம்பினான். அலைபேசியை மறைத்த அதிரதன், எல்லா அறையையும் லாக் பண்ணுங்க என்று சைகையில் சொன்னான். நேத்ராவும் யுவியும் அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதி, யாரோ ஒரு பையன் வாய்ஸ் கேட்குதே?

யாரா இருந்தா உனக்கென்ன? நீ செஞ்ச வேலைக்கு நான் உன் முன்னே வருவேன்னு நினைக்கிற?

வரணுமே? அதீபன் கண்டிப்பா செத்திருவான். உன்னோட ஆத்விக்கு கையில இரத்தம் கொட்டுது. நான் இவளை பிடித்திருக்கக் கூடாது. உன்னோட குட்டிம்மாவை தான் பிடிச்சு வைக்கிறதா பிளான். என்னோட அப்பா தான் கெடுத்திட்டார்.

அப்புறம் என்ற அதிரதன், அதீபா பிடிச்சு கட்டுடா என்று கத்த, அதீபன் நன்றாக எழுந்து, தீக்சியை பிடித்து கட்டிப் போட்டு, ஆத்வியை பார்த்து, ஆத்வி..எழுந்திரு கத்தினான்.

டேய், ஆத்விக்கு என்ன? அதிரதன் சத்தமிட,அண்ணா அவள் மயங்கி இருக்கான்னு நினைச்சேன். தண்ணீரில் மூழ்கி இருக்காடா கத்தினான்.

வேகமாக கிளம்பிய நிதின் உள்ளே போலீஸூடன் வந்தான். தீக்சியை போலீஸ் பிடிக்க, ரிப்போர்ட்டர்ஸ் உள்ளே வந்து அவளிடம் கேள்விகளாய் கேட்க, அவள் முகத்தை மறைத்துக் கொண்டு சென்றாள். “அதி உன்னை சும்மா விட மாட்டேன்டா” என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

அதீபன் சத்தம் கேட்டு உள்ளே சென்ற நிதின் ஆத்விகாவை பார்த்தவுடன் அவளை தூக்கி வெளியே வந்தான். முதலுதவி செய்து அவளை விழிக்க வைத்தான். அவள் அவனை அணைத்து அழுதாள். அவன் அவளை முறைத்துக் கொண்டே கையில் கட்டிட்டு மருத்துவரை அழைத்தான்.

மருத்துவர் அவன் கட்டியதை பிரித்து மருந்திட்டு கட்டினார். தேங்க்ஸ் டாக்டர் என்று நிதின் அவரை அனுப்பி விட்டு உள்ளே வந்தான். அதீபா, வீட்டுக்கு கிளம்புங்க என்றான் நிதின். ஆத்விகா அவனை பார்க்க, அதீபன் கதவை திறந்தான். ஆத்விகாவை பார்த்து, உன்னையும் தான் போக சொன்னேன் என்றான் நிதின்.

நான் உன்னிடம் பேசலாமா? ஆத்விகா கேட்டாள்.

தேவையில்லை. வேலை சம்பந்தப்பட்டதை மட்டும் பேசிக்கலாம். நாளைக்கு பார்த்துக்கலாம் என்று கண்ணை மூடி சாய்ந்து கொண்டான்.

ஆத்விக்கு என் மீது காதல் வரும் படி நான் என்ன செய்தேன்? இது நல்லதல்ல. நான் இப்ப என்ன செய்வது? எப்பொழுதும் போல் வேலையை மட்டும் கவனிப்போம் என்று முடிவெடுத்தவனாய் எழுந்தான்.

அதிரதன் அப்பா அவனை அழைக்க, உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லையே சார்? கேட்டான்.

“நீ என் அறைக்கு வா” என்று அவர் அழைக்க, அவரது எஸ்டேட் கம்பெனிக்கு சென்றான்.

ரதன் எங்க இருக்கான்? உனக்கு தெரியும்ல?

தெரியும் சார். அவன் சொல்லும் வரை அவன் எங்க இருக்கான்னு என்னால் சொல்ல முடியாது.

யார்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?

என்னை படிக்க வைத்து, எந்த குறையும் இல்லாது வளர்த்தவரிடம் பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறேன் சார். உங்களிடம் சொல்லலாமான்னு தெரியலை. ஆனால் சொல்லணும்ன்னு தோணுது.

உங்க ப்ரெண்டுக்காக உங்க குடும்பத்தை விட பார்த்துட்டீங்க சார். நீங்க முடிவெடுத்தது போல் நடந்திருந்தால், உங்கள் மகனை நீங்களே தவறாக நினைப்பதாக காட்டி இருப்பார்கள். ஆத்வியும் இப்பொழுது உயிரோடு இருந்திருக்க மாட்டாள்.

அவர் அவருடைய வேலையில் மூழ்கி இருந்ததால் நடந்த எதுவும் தெரிந்திருக்காது. நியூஸ் பார்த்து தான் அனைத்தையும் அறிந்திருப்பார். அதிரதனை அவர் அழைக்க அவன் எடுக்கவில்லை. அதனால் நிதினை அழைத்தார்.

ஆத்விம்மா..நல்லா இருக்கால்ல. ஒன்றுமில்லையே? அவர் கேட்க,

நல்லா இருக்கா. நல்ல இடமா விசாரித்து பார்த்து கல்யாணம் செய்து வையுங்க சார். தயாளன் சார் போலுள்ள ஆட்களை நம்பாதீங்க. அவர் நம் மீது கோபத்தில் இருப்பார். தீக்சியை போலீஸ் பிடிச்சிட்டு போயிருக்காங்க. எதுக்கும் கவனமா இருங்க. இப்ப தெளிவா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

நல்லா அறிவுரை சொல்ல கத்துக்கிட்ட போல.

அறிவுரை இல்ல சார். அக்கறை என்று எழுந்தான்.

உன் முகமே சரியில்லையே? அவர் கேட்க, கொஞ்சம் சோர்வா இருக்கு சார்.

கம்பெனியை சரி செய்து விட்டு நான் ஓய்வெடுத்துக்கவா? அவன் கேட்க, ஓய்வா? இவனா? நல்லா சந்தோசமா வேலையை பார்ப்பான். இன்று இவன் சரியில்லையே? இவனுக்கு என்னாச்சு? அவர் சிந்தித்தார்.

அதீபன் மூலமாக அதிரதனுக்கு ஆத்விகாவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து கொண்டு பெருமூச்சுடன் அமர்ந்தான்.

அவன் அமைதியாக அமர்ந்திருக்க, அவன் எதிரே பசங்க ஐவரும் அமர்ந்தனர்.

நேத்ரா அருகே அமர்ந்திருந்த யுவன் சோபாவிலிருந்து இறங்கி, துவாலையை எடுத்துக் கொண்டு அதிரதன் அருகே வந்து அவன் அமர்ந்திருந்த சோபாவில் ஏறி அவன் தலையில் அத்துவாலையை போட்டு அவன் தலையை துவட்ட,

டேய்..என்ன பண்ற? என்று நேத்ராவும் மற்றவர்களும் எழுந்தனர். அவனை தூக்கி முன் நிறுத்திய அதிரதன் தலையை அவனிடம் காட்டினான். யுவன் துவட்டி விட, அதிரதன் கண்கள் கலங்கியது. அவனது சிறு வயதில் அவன் அம்மா துவட்டியது. பின் யாரையும் அவன் பக்கம் விட்டதேயில்லை.

அங்கிள், எனக்கு கை வலிக்குது. அக்கா நீ நல்லா துவட்டி விடுவேல்ல. வா..என்று அழைக்க, அதிரதன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்டு கொள்ளாதது போல் அமர்ந்திருந்தாள்.

அக்கா, இங்க வா யுவன் அழைக்க, “டேய், நீ இங்க வா” அருள் அழைத்தான்.

அதிரதன் எழுந்து அறைக்கு சென்று, அந்த கான்ட்ராக்ட்டை ஐவர் முன்னும் வைத்தான். உங்க அக்காவால இங்கிருந்து நகர முடியாது என்று அவளை பார்த்தான்.

நான் இங்கிருந்து போவதாக சொல்லவேயில்லை. என் வேலை முடிந்த பின் தான் போவேன் என்றாள்.

அக்கா..என்ற காவியன், சார் எங்களுக்கு பணம் ஏதும் வேண்டாம். விட்டுருங்க என்றான்.

ஏன்? என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அதான் இங்க இருக்கிறவங்களே என்னை நம்புறாங்களே?

இல்ல சார், ஏற்கனவே பாட்டி கோபமா இருக்காங்க.

காவியா, ப்ளீஸ் சும்மா இதையே சொல்லாதீங்க. யுவன் நிலைமை உங்களுக்கு புரியலையா? அவள் கேட்க, “அக்கா..அதுக்காக உங்களை விட முடியுமா?”

புரியுதுடா. இன்றே எல்லாவற்றையும் அரேஜ் செய்து கொடுத்துட்டு கிளம்புங்க என்றாள்.

ஏன்கா? சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க? எனக்கு டென்சன் ஆகுது.

சரிக்கா என்று அதிரதனிடம், உங்க பிரச்சனை முடிந்தால் அக்காவை விட்டுருவீங்களா? மிதுன் கேட்டான்.

அது எப்படி முடியும்? இப்ப தான் ஆரம்பமாகி இருக்கு. தீக்சி தான் உள்ள போயிருக்கா..அவளோட அப்பா தான் எல்லாத்துக்கும் காரணமா? வேற யாரும் இருக்காங்களான்னு பார்க்கணும்?

ஆனால் இப்ப நடந்ததை வைத்தே நீங்க தப்பு செய்யலன்னு நிரூபிக்கலாமே? காவியன் கேட்க, செய்யலாம். பிரச்சனை செய்தவர்கள் அவர்களாகவே ஒத்துக் கொண்டால் தான் எனக்கான பழைய நிலை மாறும்.

அனைவரும் அமைதியாக இருந்தனர். நீங்க எல்லாரும் என்ன வேண்டுமானாலும் பேசுங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் யுவி சாப்பிட்டு மாத்திரை போடணும் என்றாள்.

அக்கா, இங்கே தான் ஏதும் இல்லையே? அருள் கேட்க, அதான் லிஸ்ட் இருக்கே. வாங்கிட்டு வரலாம் மிதுன் சொல்ல, “பணம் யாரு உங்கப்பன்னா தருவான்?” கிருஷ்ணன் கேட்க.

ஏய், என்ன பேச்சு பேசுறடா கிருஷ்.

அப்புறம் என்னக்கா? ஒரு மணி நேரத்தில் வாங்குவதே முடியாது. இதுல எப்படி சமைப்பது? அதுவும் பொருட்கள் நிறைய தேவைப்படும்.

காலை சாப்பாடு வெளியில வாங்கிடலாம். என்னோட வீட்டுக்கு தானே சாமான் வாங்குறீங்க? நானே பணம் தாரேன். இந்த ஆறு மாதம் வீட்டுச் செலவுக்கு நானே தாரேன் என்று அதிரதன் சொல்ல, அனைவரும் அவனை பார்த்தனர்.

என்ன? எதுக்கு இப்படி பாக்குறீங்க?

இல்ல,..என்று கிருஷ்ணன் ஆரம்பிக்க, அவன் வாயை பொத்திய சுபிர்தன், வாய மூடிக்கிட்டு இரு. நீயே எடுத்து கொடுக்காத என்று அவன் காதில் கூறியவன் சத்தமாக கூறி விட்டான். அனைவரும் அவனை முறைக்க, என்ன எடுத்து கொடுக்கிறான்? அதிரதன் கேட்டான்.

“ஒன்றுமில்லை சார்” என்றான் அருள்.

அக்கா, பசிக்குது..யுவன் சொல்ல, அனைவரும் கிளம்பினர். காரில் அனைவரும் அமைதியாக வர, எப்பொழுதும் பேசிக்கிட்டே இருப்பீங்க? ரொம்ப அமைதியா வாரீங்க அதிரதன் கேட்டான். அதற்கும் யாரும் பதில் சொல்லவில்லை.

நேத்ரா எல்லாரையும் பார்த்து விட்டு, என்னடா சாப்பிட போறீங்க? என்று கேட்க, சாதாரண சாப்பாட்டை சொன்னார்கள்.

யாரும் முடிவெடுக்காதீங்க. இன்று உங்க எல்லாருக்கும் நான் ஆர்டர் பண்றேன் என்றான் அதிரதன்.

இல்ல சார். நாங்க சிம்பில்லா ஏதாவது சாப்பிட்டுப்போம் என்றாள் நேத்ரா.

“இன்று ஒரு நாள் தானே” என்று அவன் பெரிய ரெஸ்டாரன்ட்டில் நிறுத்தி கேப், கண்ணாடி எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு முகத்தை மறைக்க, இவர்கள் அவனையே பார்த்தனர்.

வாரீங்களா? அவன் சத்தம் கொடுக்க, அனைவரும் உள்ளே சென்றனர். அக்கா, சூப்பரா இருக்குல்ல யுவன் கேட்க, “யுவி இட்லி மட்டும் தான் சாப்பிடணும்” என்றாள். அவன் முகம் சுருங்கியது.

அவன் சாப்பிடட்டுமே? அதிரதன் சொல்ல, சார் அவனுக்கு “கெல்த் இஸ்யூ” இருக்கு.

“யுவி உனக்கு என்ன வேண்டுமோ அதையெல்லாம் அக்கா வேரொரு நாள் வாங்கித் தாரேன்” என்று சொல்ல அவனும் பிடிவாதம் செய்யாமல் சரி என்றான்.

அதிரதன் பேரரை அழைக்க, அவன் ஆர்டர் கொடுக்கும் முன்னே, வரிசையாக ஒவ்வொருவராக பார்த்து நேத்ரா ஆர்டர் கொடுத்து விட்டு அதிரதனை பார்த்து அவனுக்கும் ஆர்டர் கொடுக்க, அவன் அதிர்ந்து அவளை பார்த்தான். பசங்களும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

அக்கா, உங்களுக்கு?

“ஒன் வெஜ் சூப் வித் ஒன் எக்” என்று சொல்லி விட்டு அவள் கூந்தலை சரி செய்தாள். அதிரதனும் ஒரு நிமிடம் தடுமாற தான் செய்தான்.

“நீ ஏற்கனவே இங்க வந்திருக்கியா?” அதிரதன் கேட்டான்.

எஸ் சார், இங்க தான் படித்தேன்..என்று அவனை பார்த்து, மேரேஜூம் இங்கே தான சார்? இது எங்களோட “பேவரேட் ரெஸ்டாரண்ட்” என்றாள்.

எங்களோடவா? காவியன் கேட்க, அதிரதனும் அவளை பார்த்தான்.

ம்ம்..என்றாள். ஒரு பொண்ணு வயிற்றை பிடித்துக் கொண்டு, ஹே வினு..என்று சத்தமிட்டாள்.

நேத்ரா திரும்பி பார்த்து புன்னகையுடன் எழுந்தாள்.

ஹரிணி, எப்படி இருக்க? “கங்கிராட்ஸ்” என்று நேத்ரா அவளை அணைக்க, ஆமா உன்னோட ராக்ஸ்டார் எங்க?

“இதோ..வந்துட்டேன்” என்று சத்தமுடன் வந்த ஒருவன் சாப்பாட்டு கொண்டு வந்தவரை இடிக்க வந்தான். அவர் தப்பி விலகி செல்ல, இருவரும் அவனை பார்த்து சிரித்தனர்.

“நீ இன்னும் மாறவேயில்லை” என்று நேத்ரா அவனை பார்த்து சிரித்தாள். அவனும் வினு, எப்படி இருக்க? கையை நீட்டினான்.

அந்த பொண்ணு அவன் கையை திட்டி விட, “ஓவர் பொசசிஸ் ஆகிட்டா” வினு.

ஆமா, உனக்கு ஹரா தான் சரி.

உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு கேள்விபட்டோம் என்று இவர்கள் டேபிளுக்கு வர, அவள் சங்கடமாக அங்கேயே நின்றாள்.

ஹாய்..சார், நாங்க வினுவோட காலேஜ் மெட் என்று நீங்க எல்லாரும்?

என்னோட பிரதர்ஸ்?

பிரதர்ஸ்ஸா? உனக்கு எழில் மட்டும் தான?

இல்ல..இல்ல..எல்லாருமே என்னோட பிரதர்ஸ் தான் என்று எல்லாரையும் அறிமுகப்படுத்தினாள்.

அட, பையன் கூட இருக்கான் போல என்று யுவியை பார்க்க, வினு உனக்கு மேரேஜ் ஆகி ரெண்டு வருசம் தான் இருக்கும்ன்னு விஷ்வா சொன்னான். ஆனால் பையன் பெரியவனா இருக்கான் என்று அவன் அதிரதனை பார்த்தான்.

அவன் என்னோட பையன் இல்லை என்றாள்.

இவனை பிரதர்ன்னு சொல்லீறாத. நான் ஏத்துக்க மாட்டேன் என்றாள் ஹரிணி.

ஹரிணி, பிரபா..சத்தம் கேட்க, “வந்துட்டோம் அத்தை” என்று அவள் நேத்ராவிடம் இன்னொரு நாள் பார்க்கலாம்டி என்று பிரபா வா, திட்டப் போறாங்க என்று அவள் சொல்லிக் கொண்டே செல்ல,

மெதுவா போ..என்று அவன் அவள் கையை பிடித்து செல்வதை பார்த்து அவளை மீறியும் கண்கலங்க பார்த்த நேத்ரா, அவர்கள் பின் சென்றாள்.

“அக்கா, இவ்வளவு அழகா சிரித்து பார்த்ததேயில்லைல்ல காவியா?” என்று அருள் கேட்க, ஆமாடா, “லைட்டான ஸ்மைல் தான்” நானும் பார்த்திருக்கேன்.

எப்படியோ சிரித்தாங்களே? அதுவே போதும் மிதுன் சொல்ல, அவர்களுக்கு சாப்பாடு வந்தது. அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்.

அவர்கள் பின் சென்ற நேத்ரா, ஹரா..இவரு என்னோட ஹஸ்பண்டு இல்லை. இந்தா நம்பர் பிரீயா இருக்கும் போது கால் பண்ணு என்று பிரபா “அவள நல்லா பார்த்துக்கோ” என்று சொல்லி நகர, இருவருக்கும் ஒருமாதிரி ஆக, அத்தை ஒரு நிமிசம் என்று, வினு..நில்லு என்று ஹரா அவளிடம் வந்தாள்.

ஹே, முதல்ல குடும்பத்தை பாரு. நாளை பேசிக்கலாம் என்று நேத்ரா ஹராவின் அத்தையை கண்ணால் காட்ட, அவர் ஹராவை முறைத்துக் கொண்டிருந்தார்.

அத்தை,..

சாப்பிட வா…அழைத்தார்.

பிரபா எழுந்து வந்து, சாரி வினு என்றான்.

போடா திட்ட போறாங்க. நாம இன்னொரு நாள் பேசிக்கலாம் என்று சொல்லி விட்டு, பிரபா என்று அவளாகவே அழைத்தாள். அவன் நேத்ராவை பார்த்தான்.

இல்ல, இனியும் அவள கஷ்டப்படுத்திறாத என்று அவள் சொல்ல, அவன் கண்ணீருடன் தன் மனைவியை பார்த்தான். பின் ஒரு கார்டை கொடுத்து விட்டு, “கெல்ப் வேணும்ன்னா கால் பண்ணு” என்று அதிரதனை பார்த்துக் கொண்டே சென்றான்.

அதிரதனும் பசங்களும் அவளை பார்க்க, பேச முடியாமல் தொண்டை அடைத்தது நேத்ராவிற்கு. நான் ஹண்டுவாஸ் பண்ணிட்டு வாரேன் என்று அவள் செல்ல, அவளது இந்நிலையால் கஷ்டப்படுகிறாள் என்று காவியனும் அவன் நண்பர்களுக்கும் புரிந்தது. ஆனால் அதிரதனுக்கு ஒன்றுமே புரியலை. ஆனால் அவள் எதுக்கோ கஷ்டப்படுறான்னு மட்டும் தெளிவாக புரிந்தது.

வாமிட் செய்து வந்திருப்பாள். சாப்பிட முடியாமல் பாதி மட்டும் சாப்பிட்டாள். முட்டையையும் யுவனுக்கு ஊட்டி விட்டாள்.

சார், இங்க பார்சல் தருவாங்களா? காவியன் கேட்க, பேரரை கை காட்டினான். அவன் அவரிடம் சென்று சொல்ல, அவளது மீதி சூப்பை பார்சல் செய்து வாங்கினர்.

இது எதுக்கு? வாங்கணும்ன்னா வேற ஆர்டர் பண்ணவா? அதிரதன் கேட்டான்.

இல்ல சார், வீணாக்க வேண்டாம். அக்காவால இங்க சாப்பாடு ஸ்மெல்லால சாப்பிட முடியலன்னு நினைக்கிறேன். அதான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கலாமே?

ம்ம். உங்களுக்கு ஓ.கேன்னா. ஓ.கே தான், போகலாமா? என்று அனைவரும் கிளம்பினர்.

Advertisement