Advertisement

அத்தியாயம் 7

அக்கா, இறை வழிபாடு செய்யலாமா? என்று யுவன் கேட்க, சாப்பிட ஆர்டர் பண்ணிக்கலாமா சார்? அவள் கேட்டாள்.

நோ…என்றான்.

அப்புறம் எப்படி சாப்பிடுறது?

“யாராவது ஒருத்தர் மட்டும் போய் வாங்கிட்டு வாங்க” என்றான் அதிரதன்.

எல்லாரும் நிதினை பார்த்தனர்.

“சாரோட செக்கரட்டரி தான வாங்கிட்டு வர்றீகளா சார்?” என்று நேத்ரா கேட்க,

வினு நீ.. என்று சொல்ல வந்த நிதினை பார்த்து பதறி, சீக்கிரம் வாங்கிட்டு வா. யுவிக்கு பசிக்குது அதான் அவனே கேட்டுட்டான். இதுவரை கேட்கவே மாட்டான். அவன் கேட்கும்படி ஆகிடுச்சு என்று அதிரதனை முறைத்தாள்.

“போறேன்” என்று சென்று வாங்கி வந்தான்.

“உனக்கு இந்த சூப் மட்டும் போதுமா?” அதிரதன் அவளிடம் கேட்க, “போதும் சார்” என்று சொன்னாள்.

“உங்களை நான் எப்படி கூப்பிடணும்?” யுவன் அதிரதனிடம் கேட்டான்.

யுவி “சார்” ன்னு சொல்லணும் என்றாள் நேத்ரா.

அக்கா, உங்களுக்கெல்லாம் அங்கிள் இருக்காங்கல்ல. நான் அங்கிள்ன்னு கூப்பிடவா? என்று கேட்க, அதிரதனுக்கு புரை ஏறியது. நிதின் பயங்கரமாக சிரித்தான்.

“ஹாய் அங்கிள்” என்று நிதின் சொல்லி காட்ட,

நான் கேட்டதே சாப்பிடும் போது அமைதியா பேசணும்ன்னு சொல்ல தான். அந்த அங்கிள் அக்காவிடம் ஒரு வார்த்தை தான் பேசினாங்க. நீங்க இப்படி சிரிச்சா. எங்களால சாப்பிடவும் முடியாது. உங்க சாப்பாடு தொண்டையில சிக்கி உங்கள ஹாஸ்பிட்டல்ல தான் சேர்க்கணும் அங்கிள் என்று யுவன் சொல்ல..

ஏய் வினு, இந்த குட்டிப்பையனை எங்க இருந்து பிடிச்ச?

நிது, உன்னை விட எங்க யுவன் ரொம்ப சமத்து. இல்லடா கண்ணா..என்று அவள் சொல்ல, அதிரதனுக்கு அவன் அத்தை, பாட்டி நினைவு வந்தது.

ஆமா, நான் சமத்து உங்களை மாதிரி சிரிக்க மாட்டேன் என்று நேத்ரா மீது தாவினான்.

டேய், இறங்கு. தூக்கணும்ன்னா..என்னிடம் வா காவியன் சத்தமிட, யுவன் அழுதான்.

காவியா, எதுக்கு இப்ப அவனை அதட்டுற? பயந்துட்டான் பாரு என்று அவனை அணைத்து சமாதானப்படுத்த, சாப்பிடும் கையோட எழுந்த காவியன் யுவனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.

நேத்ரா அவன் பின்னே வெளியே வர, அவன் யுவனிடம் அக்காவை தொந்தரவு செய்யாம “உன் வேலையை நீயே பார்த்துக்கணும்” என்று சொல்லிக் கொண்டிருக்க

அவனிடம் என்ன சொல்லிக்கிட்டு இருக்க? கோபமாக சத்தமிட்டாள். மற்றவர்களும் அங்கே வந்தனர்.

அக்கா, நான் தப்பா ஏதும் சொல்லலை. அவன் வேலையை அவனையே பார்த்துக்க சொன்னேன் காவியன் சொல்ல, எதுக்கு அப்படி சொல்ற? அவனுக்கு ஏதும் ஆகிவிட்டால்..

அக்கா உங்களுக்காக தான் சொன்னேன்.

எனக்காக யாரும் ஏதும் செய்ய வேண்டாம். என்னை யாரும் பாரமா பாக்குறது பிடிக்கலை.

உங்களை யாரு பாரம்ன்னு சொன்னது? அடிக்கடி இதையே சொல்றீங்க? உங்க தம்பி இடத்துல நான் இருந்தேன்னா எவ்வளவு கஷ்டப்படுவேன்னு தெரியுமா? அவர் நிம்மதிக்காவாது நீங்க நல்லா இருக்கீங்கன்னு பேசவாது செய்யுங்க? எப்ப பாரு பாரம்? என்ன பாரம்? அப்ப நாங்க எல்லாரும் உங்களுக்கு பாரம் தான? காவியன் கேட்க, அவனை அறைந்தாள் நேத்ரா.

என்ன தான் பிரச்சனை? அதிரதன் கேட்க, நீங்க அடிச்சாலும் பரவாயில்லை. உங்களை பாரம்ன்னு யாரு சொன்னா? சொல்லுங்க? காவியன் கத்தினான். நேத்ரா அமைதியாக அமர்ந்தாள்.

சொல்லுங்கக்கா என்று மிதுனும் கேட்க, அவளிடம் பதிலில்லை.

நீங்க சொல்லாமல் நாங்க இங்கிருந்து நகரவே மாட்டோம் என்று ஐவரும் அங்கேயே நின்றனர்.

அவன் தானா? என்று நிதின் கேட்டான். எல்லாரும் அவனை பார்த்தனர். நேத்ரா அழுதாள்.

அக்கா, அவன் யாருக்கா? சொல்லுங்க என்று காவியன் மீண்டும் கத்தினான்.

அவ சொல்ல மாட்டா காவியன். அவ சரியான அடமண்ட்டு. சொல்லக்கூடாதுன்னு நினைச்சுட்டான்னா சொல்லவே மாட்டா. ஒரு வாரத்துக்குள்ள நான் அவன் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்றேன் என்றான் நிதின்.

நேத்ரா அவனை பார்த்தாள். யாருக்கு அவனை பற்றி தெரிஞ்சாலும் எனக்கு ஏதுமில்லை. அவனுக்கு நான் செய்ய வேண்டியது பாக்கி இருக்கு. அதுக்காக தான் காத்திருக்கேன். நேரம் வரட்டும். என்னோட மனதுக்கு நானே மருந்து போட்டுப்பேன் என்றாள்.

சார், அக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். முன்னே யாருன்னு கண்டிபிடிச்சு சொல்லுங்க. நாம பார்த்துக்கலாம் என்று காவியன் கோபமாக உள்ளே செல்ல, எழுந்து அவன் பின் செல்ல இருந்தவள் கையை பிடித்து நிறுத்தினான் அதிரதன்.

சார், என்னோட கையை விடுங்க. நான் அவனிடம் பேசணும் என்றாள்.

நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும் அதிரதன் அதிகாரமாக பேச, கேட்கிறேன் சார். ஆனால் இப்ப விடுங்க.

நான் சொல்வதை விட அவன் முக்கியமா? அதிரதன் கேட்க, ஆமா அவன் எனக்கு ரொம்ப முக்கியம் தான் என்று சொல்ல அவள் கையை விட்டான் அவன்.

அவள் காவியன் சென்ற அறைக்குள் ஓடினாள்.

அக்கான்னு அவன் அழைக்கிறான். இவள்..அவன் முக்கியம் என்கிறால்..என்ன நடக்குது? அதிரதன் அவனாக பேச, சார் நாங்க இங்க தான் இருக்கோம். அவங்க எங்க எல்லாருக்கும் அக்கா தான். ரொம்ப யோசிக்காதீங்க என்றான் அருள்.

இல்லையே? வினு அவனை ஸ்பெசலா நடத்துற மாதிரி இருக்கே? அதிரதன் கேட்க, ஆமா சார், இதை நானும் உணர்ந்திருக்கிறேன். எல்லாரையும் அக்கா சமமாக பார்த்தாலும் காவியன் மீது ஒன் பர்சன்ட் அதிகமா தான் பார்ப்பாங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு தெரியல என்று மிதுன் கூறி விட்டு, டேய் அவங்க தம்பியோட பேர் என்னன்னு சொன்னாங்க? கேட்டான்.

தம்பியோட பேர சொன்னாங்களா? கிருஷ்ணன் கேட்க, எழிலன் என்று நிதின் கூறினான்.

எழிலனா? என்று சிந்தனையுடன் அவர்கள் இருக்கும் அறைக்கு மிதுனும் சென்றான்.

காவியன் அப்செட்டாக அறைக்குள் அமர்ந்திருக்க, காவியா கோபப்படாதடா. நீ படிக்கிறதுல்ல கவனத்தை செலுத்து. அது ரொம்பவே முக்கியம். அவனை நான் பார்த்துக்கிறேன்.

அக்கா, நாங்க உங்களுக்கு பாரமா இருக்கோமா? அவன் கேட்க, அவள் கண்ணீருடன் ஏன்டா இப்படி கேக்குற? எப்பொழுதும் எங்களை நாங்க தானக்கா பார்த்துக்கணும்.

நீ ஸ்கூல் தான் முடிச்சிருக்க. இப்ப தான் வெளிய வந்துருக்க. ப்ளீஸ் படிப்புல கவனத்தை செலுத்து. எத்தனை வருடமானாலும் எனக்கு நீங்க பாரமா இருக்க மாட்டீங்கடா அவள் சொல்லிக் கொண்டிருக்க மிதுனும் அவன் பின் மற்றவர்களும் வந்து நின்றனர்.

அப்புறம் எதுக்கு அப்படி பேசுறீங்க?

என்னோட பிரச்சனைய நானே தீர்க்கணும்ன்னு நினைக்கிறேன்.

“அப்ப, நாங்களும் எங்க வழிக்கு போறோம்” என்றான்.

உனக்கு எப்படி புரிய வைக்கிறது? என்னோட லைஃப்ல எல்லாமே முடிஞ்சு போச்சு.

எதுக்கா முடிஞ்சது? அந்த இரண்டு மாத திருமணம் தான.

அப்படி இல்லைடா. எனக்கு சொல்லத் தெரியலை. இனி இந்நிலையத்தை விட வேரெங்கும் போக விருப்பமில்லை. அதான் என்று காவியனை பார்த்தாள்.

அப்ப உங்க தம்பி எழிலன்? என்று மிதுன் அவள் பின்னிருந்து குரல் கொடுத்தான். அவள் திரும்பி பார்த்து எழிலா? என்று எழுந்தாள்.

அக்கா, உங்க தம்பி எங்க படிக்கிறாங்க? மிதுன் கேட்டான்.

எதுக்கு கேக்குற?

சொல்லுங்க.

எனக்கு தெரியாது.

“தெரியாதா? என்னக்கா பதில் இது?” அவன் கேட்க, அவள் கண்ணீருடன் அவனை பார்த்தான்.

உங்க தம்பிக்கு நளன்னு ப்ரெண்டு இருக்காங்களா? அவன் கேட்க, அவள் அதிர்ந்து எழுந்தாள்.

“அவன உனக்கு எப்படி தெரியும்?” நிதின் கேட்டான்.

அவளோட தம்பிய உனக்கு தெரியுமா? அதிரதன் கேட்க, அவளை பார்த்த நிதின் ஒரே ஸ்கூல் தான. அதனால் தெரியும் என்று மிதுனை பார்த்தான்.

“இருவருமே என்னோட சீனியர்ஸ் தான்” என்றான் மிதுன்.

நல்லா இருக்கானா? என்ன படிக்கிறான்? அவள் ரொம்ப எமோஸ்னலாக கேட்க, அக்கா, இவ்வளவு அக்கறையா கேக்குறீங்க? இந்த பிரிவு தேவையா? அவன் கேட்க,

தேவை தான். ரொம்ப தேவை. பணக்காரவங்க சிலருக்கு படிப்பு வெறும் பொழுது போக்காக தான் இருக்கும். ஆனால் நம்மை போல் இருப்பவர்களுக்கு படிப்பு தான் வாழ்க்கையே.

நான் அவனை விட்டு பிரிந்து வந்ததால் தான் படித்துக் கொண்டிருக்கிறான். நான் அவனுடன் இருந்திருந்தால் எனக்காக பார்க்கிறேன் என்று படிக்க சென்றிருக்க மாட்டான்.

நான் அழுதாவது வலிகளை கொஞ்சமாவது கரைப்பேன். ஆனால் என்னை விட அவன் ரொம்ப ஸ்டபர்ன். வலிகளை காட்டிக் கொள்ளவே மாட்டான். ஆனால் புன்னகையுடன் ஜாலியா பேசுவான் என்று நிதினை பார்த்து, அப்படியே எனக்கு எதிர்ப்பதம். உனக்கு தெரியும்ல? என்று கேட்டாள். அவன் தலையசைத்தான்.

அக்கா, சரியா சொன்னீங்க. நம்ம வெண்பாவை நிலையத்துக்கு அவர் தான் அழைத்து வந்தார். தன்வந்த் பிரச்சனை செய்த போது உதவியதாக ஜீவா சொன்னான் என்று மிதுன் சொல்ல..

எனக்கு டயர்டா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கணும் என்று டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த யுவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் செல்ல, கிருஷ்ணன் கையை வைத்து அவள் மூடும் கதவை தடுத்து, அக்கா..மாத்திரை சாப்பிட்டு படுங்க என்று அவளுக்கு குழந்தையை நினைவு படுத்தினான். அவளது அழும் மனநிலை மாறியது. தன் தம்பி எழிலுடனான நினைவுகளை மனதில் உருப்போட்டுக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு அனைவரும் சென்று படுத்தனர்.

எல்லாருக்கும் “வினு நேத்ராவின் கணவன் யாராக இருப்பான்?” என்ற எண்ணமே நீடித்தது. சாப்பிட்டு அறைக்குள் நுழைந்த அதிரதன் தன் பாட்டியை அழைத்து அவருடன் பேசி விட்டு..

பாட்டி, என்னோட சின்ன வயசு புகைப்படம் அனைத்தையும் எடுத்து அனுப்புறீங்களா? கேட்டான்.

“கண்ணா, என்ன திடீர்ன்னு?”

“பாட்டி, பார்க்கணும்ன்னு தோணுது” என்றான்.

“அண்ணா, பொண்ணு யாரையும் தேடிகிட்டு இருக்கியா?” ரணா சத்தம் கேட்க,

“குட்டிம்மா..உனக்கு காய்ச்சலாமே?”

இப்ப பரவாயில்லை அண்ணா. “உனக்கு எப்படி தெரியும்? எங்க இருக்க? எப்ப வருவ?”

“வரணும்டா..”சீக்கிரம் வந்துருவேன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். இருவரும் நான் உங்களிடம் பேசியதை யாரிடமும் சொல்லக்கூடாது.

“சரிண்ணா” என்ற பிரணவி, யாரு அண்ணா? தீக்சின்னு சொல்லிடாத என்றாள்.

“இல்லம்மா” என்றான்.

“பாட்டி, அப்ப உண்மையிலே யாரோ பொண்ணை தேடுகிறான் போல”.

“யாருடா அந்த பொண்ணு?” பாட்டி கேட்டார்.

“பாட்டி, அதெல்லாம் ஒன்றுமே இல்லை”. நான் என்னோட பிரச்சனைக்காக தான் அனுப்ப சொன்னேன். அதில் கூட என் பகையாளி என் கண்ணில் படலாமே? என்று சொல்ல..

“போ..அண்ணா”, கொஞ்ச நேரம் யாரு யாருன்னு யோசிக்க வச்சிட்டு இப்ப இல்லன்னு சொல்லீட்டியே? பிரணா செல்லமாக கோபிக்க, ஆத்வி வந்துட்டாளா?

“அண்ணா, அக்கா சரியில்லை”. ஒருமாதிரி டல்லாவே இருக்கா என்றாள்.

“நாளைக்கு சரியாகிடுவா பாரு” என்று, பாட்டி இப்பவே அனுப்புங்க என்றான். ஒன்று கூட மிஸ் ஆகக் கூடாது என்றான்.

“பாட்டி, குட் நைட்” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு ரணா அவள் அறைக்கு சென்றாள். பாட்டி அனுப்ப, அதை பார்த்துக் கொண்டே வந்தான். அதில் சிலவற்றில் வினுநேத்ராவை பார்த்தான். கடைசியாக வந்த புகைப்படத்தை பார்த்து, பாட்டி இந்த பொண்ணு யாரு?

“நான் மட்டும் ஒரு பொண்ணுடன் இருக்கிறேன்” என்று அதிரதன் கேட்டான்.

“கண்ணா, இந்த பொண்ணு, உன்னோட மாமா பொண்ணு”. நம்ம ரணா புலம்பிக் கொண்டே இருப்பாளே? உன் அம்மாவின் தம்பி பொண்ணு என்றார்.

சிந்தனையுடன், இப்ப எங்க இருக்காங்க? அவன் கேட்க, தெரியலைப்பா. உன் அப்பாவிற்கும் அவருக்கும் பிரச்சனை என்பதால் அவர் உன்னையும் அம்மாவையும் பார்க்கில் வைத்து சந்திக்கும் போது எடுத்தது.

அப்பாவுக்கு தெரியாமல் அம்மா அவங்க குடும்பத்தோட பேசுனாங்களா? அப்பாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாரே?

இல்லப்பா. சொல்லப் போனால் உன்னோட அப்பா தான், அம்மாவை காதலித்து அவங்க குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டார். நானும் எதுவும் சொல்லலை. உன் அப்பா விருப்பத்துடன் வந்ததால் என்னால் அவனை மீற முடியலை.

பாவம்டா உன்னோட அம்மா. ரொம்ப கஷ்டப்பட்டா. முதல்ல அப்பா நேர்ல போய் பேசிய போது, அவங்க வீட்ல ஒத்துக்கல. நம்ம பணக்காரவங்கன்னு ரொம்ப யோசிச்சாங்க. யோசனை இல்லை பயம்ன்னு கூட சொல்லலாம். உன் அம்மா படிக்கவும் இல்லையா? நாங்க கஷ்டப்படுத்துவோம்ன்னு அவங்க பயத்துல கட்டி வைக்க மாட்டோம்ன்னு சொல்லீட்டாங்க. அதனால உன்னோட அப்பா அவள் மனதை மாத்தி கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டான்.

அவள் தினமும் தன் குடும்பத்தில் யாராவது வருவாங்களான்னு காத்துகிட்டே இருந்தா. உன்னை விளையாட பூங்காவிற்கு அழைத்து செல்லும் போது தான் தற்செயலாக அவள் அண்ணனையும், பொண்ணையும் பார்த்து பேசினாள். அவள் அம்மா, அப்பாவை பற்றி அவளோட தம்பி பேசவில்லைன்னு வருத்தப்படுவா. அவங்க ஆனா மன்னிச்சிட்டாங்கன்னு மட்டும் ஒருமுறை சொன்னதாகவும், ஆனால் உன்னை பார்க்க விருப்பமில்லைன்னும் சொன்ன மாதிரி பேசியதா சொன்னா. அப்புறம் ஒரு வருடத்திற்கு அப்புறம் அவர் வரவேயில்லை என்று சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பாள். இப்பொழுது வரை அவள் எங்காவது தன் தம்பியை பார்க்க மாட்டோமா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.

அவனை விட்டு வந்ததால் தான் தன் மகனும் தன்னை விட்டு விலகி இருக்கிறான் என்றும் எல்லாம் தன் பிழை என்றும் சொல்லி ரொம்பவே அழுவாள். ஆனால் உன்னோட அம்மாவுல சின்ன பகுதி கூட நிம்மி வர மாட்டாடா. நம்ம எல்லாருக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்வாள் என்றார்.

இது எந்த வயதில் எடுத்ததுன்னு நினைவிருக்கா பாட்டி?

ம்ம்..ஐந்து வயது. இருவருக்கும் ஒரே வயது தான்ய்யா என்றார்.

“பாட்டி, நீங்க தூங்குங்க” என்று புகைப்படத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

“போன் செய்யலாமா? வேண்டாமா?” என்று தீவிர யோசனையுடன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் காவியன். அவனுக்கு ரணா நினைவாக இருக்க, ஒருவழியாக போன் செய்து விட்டாள்.

“ஹலோ, யாரு?” என்று கேட்டாள்.

“உனக்கு காய்ச்சலா?”

நீங்க யாருப்பா இந்த நேரத்தில்? உண்மையிலே நடக்கவே முடியாத கனவில் இருந்தேன். இப்படி டிஸ்டர்ப் பண்ணீட்டீங்களே?

ரணா, நான் காவியன் என்றான்.

காவியனா? என்று குதித்து அமர்ந்தாள். இந்த நேரத்துல என்ன கால் பண்ணியிருக்க? யுவிக்கு ஒன்றுமில்லையே? பதறினாள்.

இல்ல, உனக்கு காய்ச்சல் எப்படி இருக்கு?

காய்ச்சலா?  பரவாயில்லை..என்று உனக்கு எப்படி தெரியும்? அவள் கேட்க, என்ன சொல்ல என்று யோசித்த காவியன், ஆரா சொன்னா? ஒரு விசயமா கால் பண்ணேன். சொன்னா..

அப்படியா? சொல்லி இருப்பாள் என்று ஷ்..காவியா அமைதியா இரு. யாரோ வராங்க என்று போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

தூங்கிட்டாளா? என்று அவள் அம்மா உள்ளே வந்து, இப்படியா லைட்ட போட்டுக்கிட்டே தூங்குறது. காலேஜ் போயிட்டும் பொறுப்பு வருதா பாரு என்று திட்டிக் கொண்டே அவள் கழுத்து, நெற்றி என்று தொட்டு பார்த்து, அப்பாடா இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இது என்ன? என்று அவளது டேபிளை பார்த்தார்.

“பிரணா..என்னடி இது?” என்று கத்தினார்.

“அம்மா..என்னாச்சு?” என்று பயந்து எழுந்து அமர்ந்தாள்.

“உன்னை யாரு பீட்ஸா சாப்பிட சொன்னது?” காய்ச்சல வச்சுக்கிட்டு இது தேவையா? வாயை திற..என்று மாத்திரை போட்டார்.

அவள் துப்பினாள்.

“சின்னப்பிள்ளையாடி நீ மாத்திரைய துப்புற?” திட்டினார்.

சொல்லிட்டு வாயில மாத்திரையை போட மாட்டியா? என்ன கசப்பு? சுகர் எடுத்துட்டு வாம்மா. பேடு ஸ்மெல் வருது என்று கத்தினாள்.

அவள் அம்மா தலையில் அடித்துக் கொண்டு, இன்னும் நாலைந்து வருடத்தில் கல்யாணம் பண்ணிட்டு போகப் போற? மாத்திரைக்கே பயந்தால் என்ன செய்றது?

அம்மா, முதல்ல அக்காவை பாரு. அதுக்குள்ள வீட்டை விட்டு பத்த பார்க்காத. அப்புறம் அம்மா..எனக்கு இந்த மாத்திரை கூட ஓ.கே. அண்ணா அந்த தீக்சிய கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. ஏதாவது செய் என்றாள்.

எனக்கு அவன் விருப்பம் தான் முக்கியம் என்றார்.

அம்மா, அவள் ராட்ச்சசி, பிசாசு, கொடுமைக்காரி, மோசமானவ பார்த்தேல்ல அண்ணாவை எப்படி பேசுனா? அவ வேண்டாம்மா.

நீ ஏன்டி இப்படி கஷ்டப்படுற? உன் அப்பா பார்த்துப்பார்.

அய்யோ, அப்பாவை நம்பாத. அவ அப்பாவை ஏமாத்திடுவா.

படுத்து தூங்கு.

அம்மா, அவ நம்ம வீட்டுக்கு வந்தான்னா, நாம வெளிய தான் போகணும்.

போய்க்கலாம் என்றார்.

அம்மா, அவ வேண்டாம்மா. அண்ணா பாவம் என்றாள்.

அவன் வாழ்க்கையை அவன் பார்த்துப்பான்.

அம்மா…நீ மோசம்.

நானாடி?

இல்லை. சாரி..சாரி..க்யூட் அம்மால்ல. அவ வேண்டாம். நான் வேணும்ன்னா அண்ணாவுக்கு அண்ணி தேடவா?

படிக்கிற வேலைய பாரு. அப்பா கொடுத்த பணம் எங்க?

அப்பாவா? பணமா? எனக்கு தெரியாதே?

தெரியாதா? என்று அவளது பையை எடுக்க, அம்மா அதை எடுக்காதீங்க என்று போனை பெட்டில் போட்டு ஓடினாள். ஆவ்..வலிக்குதே என்று அவளது ஸ்டடி டேபிளில் இடித்துக் கொண்டு கத்தினாள்.

“அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என்னடி பிரச்சனை?” உங்க சத்தம் வெளிய வர கேட்குது பாட்டி உள்ளே வந்தார்.

“பாட்டி, பிரணாவ அம்மா என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க”.

“ஏன்டி, என் பேத்தியை திட்டுற?”

காய்ச்சலை வச்சுக்கிட்டு பீட்ஸா சாப்பிட்டிருக்கா.

பாட்டி பிராமிஸ்ஸா நான் இல்லை என்று அவர் தலையில் கை வைக்க,

கையை எடுடி. “உன்னோட பிள்ளைகளை பார்க்காமல் போகக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீ பிராமிஸ் செய்து இன்றே அனுப்பிடாதடி” என்று அவள் கையை தட்டி விட்டார்.

அம்மா, சுகர் தாங்க. எனக்கு விசமாகுது என்று கத்தினாள்.

“ஏய் அரலூசு, எதுக்கு கத்திக்கிட்டே இருக்க?” அதீபன் வந்தான்.

“யாருடா லூசு? நானா? நீயா?”

உன்னை யாரு கீழே வர சொன்னது?

உன்னை பார்த்தால் காய்ச்சல் இருக்கிற மாதிரி தெரியலையே?

உன்னோட சிஸ்டம் அலறியதில் தான் நான் பயந்து காய்ச்சலே வந்துடுச்சு..

எதை பத்தினாலும் பேசு. மியூசிக் பத்தி தப்பா பேசின. பொல்லாதவனாகி விடுவேன்.

ஆவடா, இரு அண்ணா மட்டும் வீட்டுக்கு வரட்டும் உன்னை அடிச்சு பத்துறேன்.

ஆமா, அவன் வந்து என் மகனை பத்துவானா? வரட்டுமே? நானும் பார்க்கிறேன் என்று நிர்மலா வந்தார்

அம்மா, இதுக்கு மேல நான் இங்கே இருந்தேன்னா. எனக்கு கோபம் தான் வரும். சுகரை குடும்மா. தூங்கணும்.

பச்சபிள்ள பாரு. மாத்திரைக்கு சுகராம் என்று அதீபன் கேலியாக பேச, நீ எதுக்கு என்னோட அறைக்கு வந்துருக்க? போடா வெளிய..என்றாள்.

ஹே, என்ன என் பிள்ளைய வெளிய போக சொல்ற?

சித்தி, நாங்க சொன்னாலும் நீங்க போக மாட்டீங்கன்னு நல்லா தெரியும். நான் அவனை என் அறைக்குள் வராதன்னு தான் சொன்னேன்.

அம்மா..கொடுக்கிறியா? இல்ல அப்பாவை வர வைக்கவா?

எடுத்து குடும்மா. இவ வர வச்சாலும் வர வச்சுருவா பாட்டி சொல்ல, நாங்க கிளம்புறோம் என்று நிர்மலா சொல்ல, உங்களை யாரும் அலைக்கல சித்தி என்று கத்தினாள்.

காய்ச்சல் வந்தாலும் உனக்கு திமிர் அடங்காதுடி என்று திட்டிக் கொண்டே அவர் சென்றார்.

அவள பத்தி தான் தெரியுமே? ஏன்டா கண்ணம்மா..அவகிட்ட வச்சுக்கிற.

பாட்டி, இவங்கள சும்மா விடவே கூடாது. எத்தனை முறை அம்மாவ கஷ்டப்படுத்தி இருப்பாங்க. இது என்னோட பழிவாங்கும் நேரம். அண்ணாவையும் ஓவரா பேசிட்டாங்க.

பாட்டி நீயும் என் டீம்ல சேர்ந்துக்கிறியா? என்று அவள் கண்ணடித்து கேட்க, நான் சேர்ந்தால் என் மகன் சின்னவன் கஷ்டப்படுவானே? சரி..சரி..நீ நடுவிலே இரு..

“இந்த பிரணா, எல்லாத்தையும் பார்த்துப்பா” என்று கிண்டலாக சொல்ல, ஏன்டி அண்ணா, திடீர்ன்னு போன் செய்து எதுக்குடி சின்ன வயசு போட்டோவ கேக்குறான்?

பாட்டி, உனக்கும் அந்த தீக்சிய பிடிக்காதுல்ல. நாம சேர்ந்து அண்ணாவுக்கு வேற பொண்ணு தேடுவோமா?

ஏன்டி, அவங்கள விடுடி. பப்புக்கு தெரிஞ்சது உன்னை ஒருவழி செய்திடுவான். இந்தா..குடி என்று அம்மா தண்ணீரை கொடுக்க குடித்து விட்டு,

நீ தான் பப்பு..பப்புன்னு நினைச்சுக்கிட்டே இருக்க. அவன் உன்னை கண்டுக்கவே மாட்டேங்கிறான்.

பாட்டி, அண்ணாவை முதல்ல அம்மாவோட பேச வைக்கணும்.

இதுக்கு நானும் உனக்கு உதவுகிறேன் என்றார் பாட்டி.

“லவ் யூ பாட்டி, சோ ஸ்வீட்..”என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு சொல்ல, உன்னோட பாட்டிக்கு மட்டும் தானா?

அம்மாவுக்கு இல்லாமலா? மை பெஸ்ட் மம்மிக்கு என்னுடைய அன்பார்ந்த முத்தங்கள் என்று முத்தம் கொடுக்க, சத்தம் கேட்டு போனை நகர்த்தினான் காவியன்.

“லவ் யூ மை க்யூட் அம்மா” போ படு என்று அம்மா சொல்ல, படுக்கைக்கு வந்து போனை பார்த்து “அச்சச்சோ..காவியா லைன்ல தான் இருக்கியா? சாரி..சாரி..மாத்திரை பார்த்ததில் மறந்துட்டேன்.

“இருக்கட்டும்” என்றான் புன்னகையுடன்.

இந்த நேரத்துல என்னடி போன்?

அம்மா, என்னோட நியூ ப்ரெண்டும்மா.

பையனாடி?

ஆமாம்மா. காவியன். எனக்கு காய்ச்சல்ன்னு கால் பண்ணி அக்கறையா விசாரிக்கிறான். இந்த ராகவ் பாருங்க. நல்லா குறட்டை விட்டு தூங்கி இருப்பான்.

இந்த நேரத்துல பசங்ககிட்ட பேசாத. போனை குடு.

அம்மா..ப்ளீஸ். இவன் போன் செய்ததே அதிசயம். போனை வச்சிறாதடா. இரு வந்திடுறேன் என்று அவள் அம்மாவை வெளியே தள்ளி, அம்மா இப்பவே வச்சிருவேன் என்று கதவை தாழிட்டு உள்ளே வந்து போனை எடுத்தாள்.

நல்லா தூங்கு என்று அவன் சொல்ல, வச்சிறாதப்பா..

நீ தான கனவு கலைந்ததாக சொன்ன?

கனவு தான எப்ப வேண்டுமானாலும் வரும். ஆனால் காவியன் கால் பண்ண மாட்டானே?

சரி, நான் நாளை கால் பண்றேன். இப்ப நல்லா ரெஸ்ட் எடு.

பிராமிஸ்ஸா கால் பண்ணனும்.

என்னோட தலையில பிராமிஸ் வாங்க மாட்டேல்ல அவன் சிரிப்புடன் கேட்க, இல்லடா..என்று நீ சிரிக்கிறியா? நீ சிரிச்சு நான் பார்த்ததேயில்லை.

போட்டோஸ் அனுப்புறியா?

நோ..நானும் ரெஸ்ட் எடுக்கணும். “குட் நைட்”. “ஸ்வீட் டிரீம்ஸ்” என்று சொல்லி போனை வைத்தான்.

நான் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தானா? அய்யோ, அம்மா, பாட்டிக்கு சொன்ன “லவ் யூ” கேட்டிருப்பான்ல்ல என்று துள்ளி குதித்தாள்.

காவியன் போனை வைத்து படுக்க, அவனுக்கு அவளது முத்தம் சத்தம் தொந்தரவு செய்தது. தூங்க முடியாமல் அல்லாடினான்.

ரணாவை கவனித்து விட்டு சிவநந்தினி தன் மூத்த மகள் அறைக்கு சென்றார். ஆத்விகா கண்ணீருடன் படுத்திருந்தாள்.

“என்னாச்சும்மா? ரொம்ப கஷ்டமா இருக்காம்மா?” என்று அவள் தலையை கோதிக் கொண்டு அவளருகே சிவநந்தினி அமர்ந்தார்.

ஆமாம்மா..ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுதாள்.

இதுக்கு தான் கம்பெனி பொறுப்பெல்லாம் வேண்டாம்ன்னு முதல்லவே சொன்னேன் என்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்து அவள் நகர்ந்து அவள் அம்மா மடியில் படுத்துக் கொண்டு, அம்மா..நீங்க கேட்டுக்கிட்டே இருப்பீங்கல்ல. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள்.

சிவநந்தினி சந்தோசமாக, நல்ல முடிவு எடுத்திருக்கடா. அப்பாவிடம் இப்பவே சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்றேன். பப்புவும் மாப்பிள்ளையும் கம்பெனிய பார்த்துப்பாங்க என்று “இரு வாரேன்” என்று வேகமாக வெளியே சென்று ஸ்வீட் எடுத்து வந்து அவளுக்கு கொடுத்து விட்டு, நல்லா தூங்குடா என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியே சென்றார்.

ஆத்விகா கதறி அழுதாள். ஏன்டா நிது, என்னை மட்டும் நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற? யார் என்ன நினைத்தாலும் ஓரளவு அவங்கள பார்த்தே சொல்லிடுற? உனக்கு என்னோட காதல் தெரியவேயில்லையா? என்னால நீ பேசுற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு அமைதியா இருக்க முடியல.

நேத்ரா நிதினுக்கு போன் செய்த போது நிதின் ஆத்விகாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பான். அவனது வினு டார்லிங் ஆத்விகாவை அதிக காயத்திற்கு உள்ளாக்கியது. அதை விட வினு பதறிய சத்தம் கேட்டு, ஆத்விகாவை பொருட்படுத்தாமல் அவளை தனியே விட்டு கிளம்பி இருப்பான் நிதின். இத்தனை வருசங்கள் காதலை மனதில் சுமந்த ஆத்விகா உடைந்து போனாள்.

நீ காதலிக்கும் வினு யாருன்னு தெரியல. ஆனால் இத்தனை வருசமா காத்திருந்தேன். கண்டிப்பா உனக்காவது உன் காதல் கைகூடட்டும். சில நாட்கள் உன்னுடன் நேரத்தை செலவழித்து விட்டு நான் போயிடுறேன்.

அண்ணா, உன்னிடம் கூறியது போல் என்னால் காத்திருக்க முடியலை. நிதின் என் முன்னே வேற பொண்ணிடம் கொஞ்சிப் பேசுவது ரொம்ப கஷ்டமா இருக்குடா. நீயாவது பக்கத்துல இருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனால் இப்ப நடக்குற பிரச்சனையில் உன்னிடம் சொல்லாமலே கல்யாணத்துக்கு தயாரானதாக முடிவெடுத்திட்டேன். அவனுக்கு நான் சரியா இருக்க மாட்டேன்டா என்று நிதினுடன் சிறுவயதிலிருந்தே வளர்ந்த நினைவுகளை எண்ணி அழுது கொண்டே தூங்கிப் போனாள்.

அதிரதன் வீட்டிலிருந்த நிதின் கண்ணீருடன், உன்னால் என்னை ஏத்துக்க முடியாதா வினு? எனக்கு நீ மட்டும் போதும் என்று தான் காத்திருந்தேன். ஆனால் நீ வேறொருவனை திருமணம் செய்து டிவோஸ் செய்திருக்கிறாய்? நீ அவனுடன் வெறும் இரண்டு மாதங்கள் தானே இருந்தாய்? அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. இப்ப கூட நீ என் மனசை விட்டு போக மாட்டேங்கிற. நான் விளையாட்டாக பேசியதால் என் காதல் உனக்கு சாதாரணமாகிடுச்சுல்ல. மத்த பசங்க மாதிரி பின்னே சுற்றினாலும் நான் உன்னை கட்டாயப்படுத்தலை. என்னோட பழைய வினு மாதிரி நீ இல்லை.

நீ கஷ்டப்படுறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. அந்த பையன் சொன்ன மாதிரி உனக்கு என் மீது ஆர்வம் கூட இல்லைன்னு இப்ப தெளிவா தெரியுது. உன்னை மறக்க முடியுமான்னு தெரியலை. முயற்சி செய்யலாம்ன்னு நினைக்கிறேன்.

நீ திருமணம் செய்தவன் யார்? அவனால் உன்னை விட்டு எப்படி அந்த அஷ்வினி பின் செல்ல முடிந்தது? உன் பிரச்சனையையும், ரதனின் பிரச்சனையையும் முதலில் சரி செய்தாக வேண்டும்..என்று பேசிக் கொண்டே படுத்து உறங்கினான்.

விடுதிக்கு வந்த எழிலனுக்கு வெண்பா நினைவாகவே இருந்தது. நளன் அவனிடம் வந்து, அந்த பொண்ணை பார்க்காமல் ஒரு நாள் கூடவா இருக்க முடியலை. ரொம்ப கஷ்டப்படுற போல..கிண்டல் செய்தான்.

டேய், நாளைக்கு எப்படியாவது அவளை பார்க்கணும். ஏதாவது யோசிடா..என்றான்.

நாளைக்கு விடுமுறை. நாம் போனால் தவறாக இருக்காதா? என்ற நளன் மிதுனை அழைத்து, எங்காவது வெளிய போகலாம்ன்னு கூப்பிடு. போகும் போதோ..இல்லை போயிட்டு வரும் போதாவது அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பார்க்கலாம்..என்று சொல்ல

டேய், மணிய பார்த்தியா? பதினொன்றாகப் போகுது. இப்ப எப்படி அழைப்பது?

நாளை காலையில பேசலாம் என்று நளன் சொல்ல,

காலையிலா? எழிலன் கேட்க,

இப்பவே போகணும்ன்னு சொல்லுவ போல?

ஆமாடா. பார்க்கணும் போல இருக்கு.

கொன்றுவேன் பார்த்துக்கோ. உன்னால என் மரியாதைக்கு பங்கம் வந்திரும் போல. இதுக்கு தான் லவ் பண்றவனை பக்கத்துல வச்சுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க..அவன் சொல்ல,

சரி, நாளைக்கு பார்க்கலாம் என்று எழிலன் படுத்தான். நேத்ராவை பிரிந்து கஷ்டப்படும் எழிலனுக்கு அன்று வெண்பாவின் அணைப்பு அதிர்ச்சியை கொடுத்தாலும் ஆதரவாக இருந்தது. அவளை சந்திக்கும் முன் தான் அவன் அங்கிளிடம் பேசி இருப்பான்.

வெண்பாவை சந்தித்த பின் அவன் அக்காவும் பின்னுக்கு தள்ளப்பட்டாள். அவளை எண்ணி மகிழ்ச்சியுடன் படுத்துறங்கினான்.

Advertisement