Advertisement

அத்தியாயம் 6

வினு நேத்ராவின் பின் சுற்றியவன் நம் அதிரதன் தோழனும், செக்கரட்டரியுமான நிதின். அவனை பார்த்து அதிரதன் அதிர்ந்து நின்றான்.

நீ எங்கடா வந்த? விஷ்வா அவனிடம் கத்த, வினு உனக்கு ஒன்றுமில்லையே?

அவள் அவனை முறைக்க, சரி நீ கேட்டதை சொல்கிறேன் என்று சுஜிக்கு மேரேஜ் முடிவு செஞ்சிருக்காங்க. பெற்றோர் இறந்ததும், அதை கேன்சல் பண்ணிட்டு போயிட்டாங்க என்று அவன் பின்னே பார்க்க, அழுது தோய்ந்தவாறு காரிலிருந்து இறங்கினாள். அவளை பார்த்த நேத்ரா..சுஜி..சுஜி..என்று அழைத்துக் கொண்டே அவளிடம் சென்று அவளை அணைத்தாள்.

சுஜி மடிந்து அமர்ந்து கதறி அழுதாள். வினு, அம்மாவும் அப்பாவும் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்கடி என்று அழுதாள். இருவரும் அணைத்து அழுது கொண்டிருக்க, யுவன் அவர்களிடம் சென்று இருவரையும் அணைத்தான்.

அவனை பார்த்த சுஜி..உன்னோட பையனா? கேட்டாள்.

பையனா? என்று நிதின் அவர்களிடம் வந்தான்.

ஆமா, அவளுக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருச்சே.

எங்கடி அவரு?

நேத்ரா அமைதியாக இருக்க, “என்ன வினு டார்லிங்? உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா?”

டிவோர்ச்சும் ஆகிடுச்சு என்றான் விஷ்வா.

“வினு, என்னடி சொல்றான்?” சுஜி கேட்க, நேத்ரா அவளை அணைத்து அழுதாள். அவன் அஷ்வினியோட சேர்ந்து எனக்கு துரோகம் பண்ணிட்டான்டி. அதை நேரில் பார்த்த அம்மாவும் அப்பாவும் அந்த இடத்திலே என்னை விட்டு போயிட்டாங்கடி என்று தலையில் அடித்து அழுதாள்.சுஜியும் அவளோடு சேர்ந்து அழுதாள்.

நிதினை பார்த்து கீழே வந்த அதிரதன் வினு நேத்ரா பற்றிய அனைத்தையும் கேட்டான். கலங்கிய மனதோடு இதனால் தான் இப்ப மயங்கினாலோ, நாம தான் தேவையில்லாமல் கோபப்பட்டுட்டோமோ? என்று வருத்தமானான். அவளது கல்யாணம், டிவோஸ்ஸில் அவனுக்கு ஏதோ மனம் கனமாகி போனது. அவன் உள்ளே சென்றான்.

“வினு, யாருன்னு சொல்லு?” நிதின் கேட்க, உனக்கெதுக்கு? போ..உன் ப்ரெண்டோட பிரச்சனையை முடி என்றாள்.

“வினு, வா..போகலாம்” விஷ்வா மீண்டும் தொடங்க, சார் அக்கா கையை விடுங்க என்று கோபமான காவியனை பார்த்து அதிர்ந்து வினு நேத்ராவை சுஜி பார்த்தாள். அவள் கண்ணசைக்க, தெரியுமா? கேட்டாள். இல்லை என்று நேத்ரா தலையசைத்தாள்.

“வினு, எழில் எங்க?” கேட்க, தெரியாது என்றாள் வினு நேத்ரா.

உன்னோட தம்பிடி அவன். தெரியாதுன்னு சாதாரணமா சொல்ற? அவள் பிரச்சனையை அவள் சொன்னாள்.

உன்னோட சூழ்நிலை புரியுது வினு. ஆனால் அவனும் உன்னை போல் தானே கஷ்டப்பட்டுகிட்டு இருப்பான்.

சுஜி, அவன் பாதுகாப்பா இருக்கான். எனக்கு அதுவே போதும் என்றாள் நேத்ரா.

வினு வா..என்று அவன் மீண்டும் கையை பிடிக்க, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? உன்னோட வந்து என்ன செய்ய சொல்ற? நீ சொல்ற எதையும் என்னால கேட்க முடியாது.

நீ இங்க எதுக்கு வந்தியோ? அதை நான் தாரேன் என்று விஷ்வா கூற, உனக்கு ஏது அவ்வளவு பணம்?

பணமா? என்ற விஷ்வா, நீ பணத்துக்காக அவனோட இருக்க வந்தேல்ல. பணமில்லாமல் உனக்கு நான் தாரேன் என்றவுடன் அவனை அறைந்தான் காவியன். அவன் கையை உதறி விட்டு நேத்ரா அழுதாள்.

“ஏய், சின்ன பயனா மட்டும் இருக்க பாரு” விஷ்வா சத்தமிட, அருள் அவனிடம் வந்து, எங்க அக்காவ நாங்க விற்க வரலை. புரியுதா? கத்தினான்.

அக்காவா? உங்களுக்கு அவ அக்காவா? யாருமில்லாத அநாத பசங்க என்னையே அடிக்கிறீங்க? என்று விஷ்வா கேட்க அழுது கொண்டிருந்த நேத்ரா அவனை அறைந்து..

அநாதையா? யார் அநாதை? வாய்க்கு வந்த படி பேசாத..

அவனுக எல்லாரும் என்னோட தம்பிகள் தான். புரியுதா? உன் இடத்துல இருந்து பசங்க எல்லாரையும் பார்த்துக்கிறாங்க. நீ செய்ய வேண்டிய எல்லாத்தையும் இவங்க தான் பண்றாங்க. நேற்றிலிருந்து உனக்கு போன் செய்றோம்.

ஒரு பிரச்சனைன்னா என்னன்னு பார்க்க வக்கு இல்ல. நீ பேசுறியா? இவங்க அஞ்சு பேரையும் உனக்கு பேச எந்த உரிமையும் இல்லை. அவங்க இப்ப நிலையத்து பசங்க இல்லை. இவங்க காலேஜ் போயிட்டாங்க. அவங்க வாழ்க்கையை பார்த்துட்டு போயிருக்கலாம். ஆனால் யாரும் அப்படி எங்க யாரையும் தனியே விட்டுட்டு போகல.

யுவி கஷ்டப்படும் போது எட்டியாவது பார்த்தியா? உன்னை பார்த்தால் நீ மனுசன் தானான்னு தோணுது. நிலையத்துக்கு எனக்கு மேல உள்ள பொறுப்பு உன்னுடையது தான? அவள் பேசும் போது அதிரதன் மீண்டும் கீழே வந்தான். நம்ம நிலையத்துல எத்தனை பிரச்சனை இருக்கு. பொண்ணுங்க பசங்க எட்டாம் வகுப்புக்கு பின் படிக்க முடியல. சரியான வசதி இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்.

இப்ப இல்ல பத்து வருசமா நடக்குது. ஏதாவது சேர்மனிடம் கொண்டு போனீயா? அப்படி செய்திருந்தால் இப்ப மாயா, வெண்பா, தேவா, அருணா, நாரதன், தாரகன் எல்லாரும் இந்த பசங்க போல படிச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க. யுவிக்கும் இப்ப பிரச்சனை வந்திருக்காது. அவனுக்கு எவ்வளவு பெயின் தெரியுமா? என்று நேத்ரா அழுதாள்.

வினு, பணத்துக்காக இங்க வந்தியா? நிதின் கேட்டுக் கொண்டே அந்த பங்களாவை பார்த்தான்.

யார் இங்க இருக்கா? நிதின் கேட்க, உன்னோட அருமை நண்பனும் பாசுமான அதிரதன் என்றான் விஷ்வா.

ரதனா? என்று நிதின், வினு..ரதனா உன்னிடம் தப்பா பேசி இருக்க வச்சிருக்கான் என்று கேட்டுக் கொண்டே உள்ளே செல்ல, சுஜியும் அவனுடன் கோபமாக சென்றாள்.

விஷ்வா கையை உதறி விட்டு நிது, சுஜி நில்லுங்க. முழுசா தெரியாம அவரிடம் தேவையில்லாம பேசிறாதீங்க நேத்ரா அவன் பின் ஓடினாள்.

ஓடி வந்த விஷ்வா, நேத்ரா கையை பிடித்து நிறுத்தி, வா என்று இழுத்தான். காவியனும் நண்பர்களும் கோபமாக அவனிடம் வந்தனர்.

“டேய், அவனை தடுத்து நிறுத்துங்கடா”. இவனை நானே பார்த்துக்கிறேன் என்றாள்.

ஐவரும் உள்ளே சென்றனர். அதிரதன் சட்டை பிடித்த நிதின், “ஏன்டா வினு உன்னை என்ன செஞ்சா? இப்படி செஞ்சிருக்க?”

ஹே நிது, நான் ஏதும் செய்யலை என்றான் அதிரதன்.

அவளை பற்றி தெரிந்தும் நீ இப்படி கேட்கலாமா? கத்தினான். சுஜி அதிரதனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை பற்றி தெரியுமா? எனக்கா? இல்லையே? உனக்கு எப்படி அவளை தெரியும்? என்று அதிரதன் கேட்க, இருவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

ரதா? உனக்கு வினுவை தெரியலையா? கேட்டான்.

“எனக்கு தெரியாதுடா” அதிரதன் கூற, நிதின் கோபமாக அங்கிருந்த பொருட்களை கோபமாக தட்டி விட்டான்.

டேய், என்ன பண்ற?

அவளையே உனக்கு தெரியலைன்னா என்னையும் உனக்கு தெரியாதுல்ல அதிரதன் சுஜி கேட்க, தெரியாது என்றான் சிந்தனையுடன். அவள் கண்கலங்கினாள்.

“உனக்கு தலையில ஏதும் அடிபட்டுருச்சா” நிதின் கத்தினான்.

வாசலில் நின்று ஐவரும் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏன்டா, ரதா? வினுவும் சுஜியும் நம்முடன் நான்கு வருடம் பள்ளியில் உடன் படித்தவர்கள். நீ ஸ்கூல் பர்ட்டுன்னா. நம்ம வினு தான்டா செக்கண்டு வருவா, தீக்சி கூட மூன்றாவது நாலாவது இடத்தில் தான் இருப்பா.

வாட்? நாலு வருசமா? நான் பார்த்ததேயில்லையே? என்றான் அதிரதன்.

உங்களுடன் வகுப்பில் படித்த பொண்ணு கூடவா நினைவில் இல்லை என்று மிதுன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

போடா டேய், நம்ம வினு கிராமத்து பொண்ணு. ஒன்பதாம் வகுப்பில் தான் நம்ம பள்ளியில் சேர்ந்தாள். அவள் அழகு மட்டுமல்ல அவளது புத்திசாலித்தனமும் நம்ம காலேஜையே திரும்பி பார்க்க வைத்தது. அவளை ஒரு நாள் பசங்க கிண்டல் செய்து அவளிடம் எல்லை மீற, நீ தான் அவளுக்கு உதவின. அது கூட உனக்கு மறந்து போச்சா.

எதுவுமே நினைவில் இல்லையே? என்றான். அதுவும் உன்னை அறியாமலே நீ செய்த உதவி தான். அவள் அன்று தான் உன்னை பார்த்தாள்.

சுஜி உனக்கு நினைவு இருக்கா?

நல்லா நினைவில் இருக்கு. அவள் பள்ளி நூலகத்திற்கு செல்லும் போது இடைமறித்து வம்பு செய்தனர் சிலர். கையில் புத்தகத்துடன் வந்த அதிரதன் மேலே அவள் இடித்து விட, அப்ப முதல் முறையாக “இடியட்” என்று அவளை திட்டி விட்டு அவளை பார்க்காமல் நகர, அவனை அவர்களுள் ஒருவன் பிடித்து அவனிடம் வம்பு செய்ய..ஒரே அடியில் அவனை ஆஃப் செய்து விட்டு புத்தகத்தை எடுத்து சென்ற.. என்று சொல்லி விட்டு சுஜி அவனை பார்த்தாள்.

இதை விட நீ “இன்டர்னேஸ்னல் லெவல் க்விஸ்” போட்டியில் பெங்களூரு போனேனல. அதுல உன்னோட பார்ட்னரா முதல்ல செலக்ட் ஆனது வினு தான். ஆனால் அந்த தீக்சி அவளோட அப்பாவை வைத்து உன்னுடன் வந்தாள். வினு இதை பெருசா எடுத்துக்கலை. சிலருக்கு மட்டும் தான் இந்த விசயம் தெரியும். ஆனால் போக போக அவளை தீக்சி டார்கெட் பண்ணா.

வினு ஒரே வார்த்தையில் அவளை கடந்து சென்று விடுவாள். தீக்சிக்கும்  நம்ம வினுவுக்கும் ஆகவே ஆகாது என்றான்.

சரி, நீ என்ன எதுக்கெடுத்தாலும் நம்ம வினுன்னு சொல்ற அதிரதன் கேட்க, அவன் நகத்தை கடித்தான்.

அடச்சே..பசங்க எவனாவது இப்படி வெட்கப்படுவானா? நீ திருந்தவே இல்லடா நிதின் என்று சுஜி அவன் முதுகிலே அடிக்க, “அவ பின்னாடி சுத்துன பசங்கல்ல நானும் ஒருவன்” என்று அதிரதனை பார்த்தான்.

அவன் கண்ணாலே பக்கத்தில் சைகை செய்ய, காவியனும் மற்றவர்களும் நிதின் அருகே முறைத்துக் கொண்டு வந்தனர்.

டேய், அங்கேயே நில்லுங்க. வினுக்கு ஒரு தம்பி தான? சமாளிக்கலாம்ன்னு நினைச்சா. இப்படி வளர்ந்து வந்திருக்கீங்க என்று பின்னே நகர்ந்து கொண்டு,

மச்சான்ஸ், உங்க அக்கா தனியா கஷ்டப்படுறால்ல. நான் வேண்டுமானால் அவளுடன் சேர்ந்து உதவவா? கேட்டான்.

காவியன் அனைவரையும் நிறுத்தி, அக்கா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. இப்பவும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. யாரும் அருகே வராமல் ஒரு ப்ரெண்டா கெல்ப் பண்றதா இருந்தா பண்ணுங்க? அவங்களுக்கு யாரையாவது பிடிச்சிருந்தா வேண்டுமானால் உதவுகிறோம். ஆனால் அது நீங்க இல்லை என்று அதிரதனை பார்த்து, உங்களுக்கு எப்படி கூட படிச்ச பொண்ணுங்க மறந்து போனாங்க.

தெரியல?

இவனுக்கு புத்தகத்தை தவிர என்ன தான் கண்ணுக்கு தெரியும்? என்று அதிரதனை முறைத்த நிதின், என்னடா அவகிட்ட பேசுன?

பசங்க விசயத்தை சொன்னார்கள்.

பணத்துக்காக நம்ம வினுவை வேலை வாங்குறியா? என்று கேட்ட நிதின் ஏதோ சொல்ல ஆரம்பிக்க உள்ளே வந்தாள் வினு நேத்ரா.

வந்தவுடன் சோபாவில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். விஷ்வாவும் உள்ளே வந்தான். மற்றவர்கள் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர்.

வினு, “வா..போகலாம்” என்று கையை பிடித்து ஹாஸ்பிட்டல் இல்ல. என்னோட வீட்டுக்கு என்றான். அமைதியாக அவனை முறைத்து பார்த்தாள்.

அம்மா, அக்கா, தங்கச்சி யாருமே உன்னை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கிறேன். எனக்கு நீ வேணும் வினு என்றான். நிதின் கோபமாக அவனிடம் வர, நிது வேண்டாம் என்று விஷ்வாவை பார்த்து, என்னிடம் எதுவுமே இல்லை. என்னை விட்டுரு என்றாள்.

இல்ல வினு. நீ எனக்கு வேண்டும்.

எங்கே மறுபடியும் சொல்லு, அவள் கேட்க, எனக்கு நீ வேண்டும் என்று கத்தினான்.

நான் தான் வேண்டுமா? இல்லை என்னுடைய வேறு எதையும் எதிர்பார்க்கிறியா? கண்ணீர் வடிய கேட்டாள்.

ஏய், என்னடி பேசுற? சுஜி கத்தினாள். என்னடி பேச சொல்ற? நான் கல்யாணம் முடிந்து அவனோட இரண்டு மாசத்துக்கு மேல வாழலை. அவன் என்னை ஏமாத்திட்டு போயிட்டான். மறுபடியும் இவனை  பார்த்ததிலிருந்தே இதையே சொல்லிகிட்டு திரியிறான். ஒரே ஒரு நிமிசம் என் நிலையை யோசிக்கணும்ன்னு யாராவது நினைக்கிறாங்களா?

அவன் துரோகத்தை தாங்க மாட்டேன்னு தெரிந்தும் அம்மா, அப்பா என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க. எழிலனும் அம்மா, அப்பா இல்லாமல் ரொம்பவே உடஞ்சு போயிட்டான். நானும் அவனுடன் இருந்து சுமையை ஏற்ற வேண்டாம்ன்னு தான் அவனை விட்டு விலகி இங்கே வந்தேன். அங்கிள் அவனை கவனித்துக் கொண்டு தான் இருக்கார். அவன் நல்லா இருக்கான்னு தெரிஞ்சு தான் நிம்மதியா இருக்கேன்.

ஆனால் நிது..நீ கூட வந்தவுடன் தேவையில்லாம லவ்வுன்னு வந்து நிக்குற? எனக்கு எதுவுமே வேண்டாம். எனக்கு கல்யாணமே பிடிக்கலை. அவனை அம்மா, அப்பா எப்ப பார்த்தாங்களோ அப்பவே ஒவ்வொன்றாய் இழக்க ஆரம்பித்தேன். அப்ப எதுவுமே தெரியலை. வீட்டை விட்டு இங்கே வந்து எங்கு செல்வது என புரியாமல் கோவிலிலே இருந்தேன். இரவு தங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஏதாவது பிரச்சனையுடன் தான் இரவு கழிந்தது. ஆனால் முன்பெல்லாம் இந்த அளவு ஆண்கள் மோசமில்லை. பகல் நேரம் தனியா நடந்து கூட போக முடியலை. ஆனால் அப்படி ஒருவன் என்னுடன் வம்பு செய்யும் போது தான் செல்லம்மா பாட்டி அக்கா என்னை சார் அம்மா பேர் உள்ள நிலையத்துக்கு அழைத்து வந்தாங்க.

முதல்ல யாரையும் பார்க்கலை. பேசலை. தனித்தே தான் இருந்தேன். ஆனால் யுவி போல் சின்ன பசங்க சத்தம் கொஞ்ச கொஞ்சமாக என் மனதை மாற்றி வெளியே வந்து..என்று காவியனை பார்த்தாள்.

அவங்க போன பின் யாராவது வெளியிலிருந்து படித்தவர்களை வேலைக்கு எடுக்கணும்ன்னு சொன்னாங்க. அதனால எனக்கு சப்போர்ட் பண்ணியா? இல்லை உனக்காக செஞ்சீயா? என்று விஷ்வாவை பார்த்தாள்.

அவன் தயங்கினான்.

அக்கா, யாரும் அவர் சொன்னதுக்காக செலக்ட் பண்ணலை என்ற அருள், பாட்டி எங்க எல்லாரிடம் கேட்டு அவங்க எல்லாரும் பேசி தான் முடிவெடுத்தாங்க என்று கத்தி விட்டு,

ஏன்டா மண்ணு மாதிரி நிக்குறீங்க? சொல்லுங்கடா என்று அவன் கண்ணை துடைக்க, காவியனும் மற்றவர்களும் எங்களை விட நீங்க தான் கஷ்டப்பட்டிருக்கீங்க என்று சொல்ல, எழுந்த நேத்ரா காவியனை அணைத்து அழுதாள். அனைவரும் அவளை அணைத்துக் கொண்டனர்.

அனைவரையும் விலக்கிய காவியன், நேத்ராவை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்து விட்டான். அக்கா நீங்க யாருக்கும் எதை பற்றியும் விளக்க தேவையில்லை. நாம சாரோட கான்ட்ராக்ட் போட்டபடியே செய்யலாம்.

சாரை உங்களுக்கு தெரியும்ன்னு நீங்க சொல்லவேயில்லை? அவன் கேட்க, அதிரதனும் அவளை பார்த்து, முதல்லவே சொல்லி இருக்கலாமே? கேட்டான்.

நான் நினைச்சிருந்தா, சேர்மன் சாரை மீட் பண்ணி விசயத்தை சொல்லி பணம் வாங்கி இருப்பேன். ஆனால்..என்று நிறுத்தி அதிரதனை பார்த்து, உங்களுக்கு என்னை நினைவிருக்கா சார்? என்று கேட்டாள்.

எனக்கு உன்னை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் இருந்தது. ஆனால் சுத்தமாக நினைவில் இல்லை என்றான்.

அவள் புன்னகையுடன், இப்ப இதெல்லாம் பேசி என்ன ஆகப் போகிறது? எல்லாரும் கிளம்புங்க. நான் என் வேலையை பார்க்கணும் என்று விஷ்வாவை பார்த்தாள்.

நிதின் அவளிடம் வந்து, ரதா நியூஸ் பார்த்தியா? கேட்டான்.

பார்த்தேன்.

அவள் தான உன்னோட புருசனோட சேர்ந்து துரோகம் செய்தது? சுஜி கேட்டாள்.

நேத்ரா அமைதியாக இருந்தாள்.

அவள் தானா? ஏன்டி, அவ பக்ககிட்ட போகாதன்னு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். கேட்டியா? இப்ப உன்னோட வாழ்க்கையையே பறிச்சிட்டா..என்று சுஜி சத்தமிட்டாள். அதிரதன் அவள் முன் வந்து நின்றான்.

அவளையும் உங்க எல்லாருக்கும் தெரியுமா? அதிரதன் கேட்க, ரதா..அவ எங்க காலேஜ் தான். நீ ஃபாரின் போன பின் நிறைய நடந்தது. அஷ்வினிக்கும் தீக்சுவுக்கும் கூட ஆகவே ஆகாது என்றான் நிதின்.

அதனால என்னை பயன்படுத்திடான்னு சொல்றீயா? அதிரதன் சத்தமிட, கண்டிப்பா தீக்சியால இருக்காது. சார், உங்களை பயன்படுத்தலை. வேற யாரோ தான் அஷ்வினிய பயன்படுத்தி இருக்காங்க என்றாள் நேத்ரா.

எப்படி உறுதியா சொல்ற? அவளுக்கு பசங்க நிறைய பேருடன் பழக்கம் இருக்கு. நீங்க அதை வச்சு உங்க பேர காப்பாத்திக்கலாம். ஆனால் உங்கள வேற யாரோ டார்கெட் பண்ணுறாங்க.

இதுக்கு முன் எங்கேயும் வேலை பார்த்தாயா? அதிரதன் கேட்க, டக்கென இல்லை என்றாள் நேத்ரா. விஷ்வாவும் நிதினும் அவளை பார்த்தனர்.

“வேண்டாம்” என்று கண்களாலே பேசினாள் நேத்ரா.

நீ கேட்ட டீட்டைல்ஸ் என்று நிதின் அலைபேசியை அதிரதனிடம் காட்டி அவனை திசை திருப்பினான்.

அலைபேசியை வாங்கிய அதிரதன், நான் கேட்ட கேள்வி ஒன்று. உன் பதில் வேரொன்றாய் இருக்கு என்றான். அவள் அவனை பார்த்து விட்டு, நீ உன்னோட வேலைய மட்டும் பாரு என்று விஷ்வாவிடம் சொல்லி அவனை பார்த்து, உன்னை என் தோழன் இடத்தில் மட்டும் அதான் வைத்திருக்கேன். எத்தனை வருடமானாலும் வேறு இடம் உனக்கு கொடுக்கமுடியாது. சுஜியை நிலையத்துக்கு அழைச்சிட்டு போ..என்று அவளிடம் திரும்பி, அங்க இருக்கும் பாட்டி, மற்றவர்களிடம் உன்னை பற்றி சொல்கிறேன். நாளையிலிருந்து நீ என்ன செய்ய வேண்டும்ன்னு நான் சொல்கிறேன். இப்ப இருவரும் கிளம்புங்க என்று நிதினை பார்த்தாள்.

என் ப்ரெண்டோட வீடு. இன்று இங்கு தான் இருப்பேன். காலையில் தான் கிளம்புவேன் என்றான் அவன்.

விஷ்வாவும் சுஜியும் கிளம்பினர். அக்கா..இருங்க என்று காரிலிருந்து அனைவருடைய ஆடை, பொருட்களை எடுத்து வந்தான் காவியன்.

அதிரதன் தயங்கிக் கொண்டே நேத்ராவை, “வினு” என்று அழைக்க, சார், உங்களுக்கு எப்படி அழைத்தால் கம்ஃபர்ட்டா இருக்கோ அப்படியே அழையுங்கள் என்றாள்.

இந்த குட்டிபையனுக்கா சர்ஜரி கேட்டான். ஆமா சார், அந்த ரிப்போர்ட்ல யுவன் பெயரும் வயதும் இருந்திருக்குமே? அவள் கேட்க, மெயின் விசயத்தை மட்டும் தான் பார்த்தேன்.

சார், உங்களுக்கு தான் அக்காவை தெரியுமே? இப்ப கூட நம்பிக்கை வரலையா? சுபி கேட்க, பாயிண்ட பிடிச்சுட்டானே! இப்ப என்ன சொல்றது? அதிரதன் சிந்தித்தான்.

எனக்கு இப்ப தான அதுவும் இவன் சொல்லி தான தெரிது. எனக்கு நேரம் வேண்டும் என்றான்.

உங்களை போதையிலிருந்து கஷ்டப்பட்டு எழுப்பி இருக்கோம். அதுக்காகவாது விடலாமே? காவியன் சொல்ல, போதையா? ரதா..நீ குடிச்சியா? எப்படி? கேட்டான்.

“குடியா? செம்ம போதை” என்று கிருஷ்ணன் சொல்ல, அதிரதன் அமைதியாக இருந்தான்.

அவனால் குடிக்க முடியாது. அலர்ஜியாகும். டேய் என்ன பண்ண? நிதின் கேட்க, குடிச்சது போல நடிச்சேன் என்றான் அதிரதன்.

நேத்ரா சினமுடன் அவனிடம் வந்தாள். காவியன் அவளை தடுத்து, அக்கா எனக்கு முன்னமே தெரியும் என்றான். அனைவரும் அவனையும் முறைத்தனர்.

“ஏன் சார் நடிச்சீங்க? நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்?” என்றான் அருள்.

என்னோட வீட்டுக்குள்ள பர்மிசன் கேட்காம உள்ளே வந்தீங்க. நீங்க என்னோட வீட்டுக்கு வர்றத? முன்னாடியே பார்த்துட்டேன். அதான் செட் பண்ணேன்.

அப்படின்னா, அக்கா தோள்ல சாஞ்சீங்களே? ஜஸ்ட் செக் பண்ணேன்.

என்ன சார்? நீங்களும் இப்படியா நடந்துப்பீங்க?

ஹலோ..என்னோட குடும்பமே என்னை நம்பலை. நான் எப்படி உங்களை என் வீட்டுக்குள் சாதாரணமாக விடுவது? அதான் சின்னதா டிராமா செய்து, நீங்க நல்லவங்களான்னு பார்த்தேன் என்றான்.

நல்லா பார்த்தீங்க? சிகரெட் பிடிக்கிறவங்க..யாராவது ஒரு இழுல விடுவானுகளா? எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. மது பாட்டிலை குடித்த மாதிரி டிராமா பண்ணீங்க. அதை எதுக்கு எல்லா இடத்துலயும் ஊத்தி வச்சீங்க? ஸ்மெல்லுக்காக தான இப்படி பண்ணீங்க? காவியன் கேட்டுக் கொண்டே அமர்ந்தான். நேத்ரா இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

காவியா, உனக்கு எல்லாமே முன்னாடியே தெரிஞ்சும் எப்படி அமைதியா இருந்த? என்று மிதுன் சத்தமிட்டான்.

கோபம் இல்லாமல் இல்லை. ஆனால் காரணம் இருக்கும்ன்னு தோணுச்சு. அதான் என்ன செய்கிறார்ன்னு பார்த்தேன்.

எதுக்குடா இதெல்லாம்? முதல்ல எதுக்கு இங்க வந்து தனியா இருக்கணும்? எல்லாரும் உன்னை தேடுக்கிட்டு இருக்காங்க? குள்ளச்சிக்கு நேற்றிலிருந்து காய்ச்சலா இருக்கு.

காய்ச்சலா? நேற்று காலை கூட மேசேஜ் பண்ணாலே?

நீ பேசினா சரியாகிடும் என்றான் நிதின்.

“குள்ளச்சின்னு சொல்லாதன்னு சொல்லி இருக்கேன்ல” அதிரதன் அரட்டினான்.

ஆமா, என்னிடம் சத்தம் போடு. வாயாடி..என்ன செஞ்சாலோ? காய்ச்சல்ல இருக்கா. ஆத்வியும் ரொம்ப கஷ்டப்படுறா என்று அவன் தங்கைகளை பற்றி பேசினான் நிதின்.

அந்த குள்ளச்சி ரணா தான் என்று காவியனுக்கு புரிந்தது. அவள் ஹாஸ்பிட்டல் வந்ததுல வந்திருக்குமோ? இல்ல அவ அந்த அங்கிளை நினைச்சு வருத்தப்பட்டதில் காய்ச்சல் வந்திருக்குமோ? சிந்தித்தான்.

டேய் காவியா, எவ்வளவு நேரமா கூப்பிடுவது? நேத்ரா சத்தமிட, “மேடம் காது வலிக்குது கத்தாதீங்க” என்றான் அதிரதன்.

அக்கா, என்று அவளை பார்த்தான். ஏதோ மனதினுள் ஒரு நெருடல்.

இவ்வளவு நேரம் நல்லா தான பேசிக்கிட்டு இருந்த? நிதின் கேட்க, இல்ல என்று நிதானமாகி அனைவரையும் பார்த்தான். அவனருகே அமர்ந்த நேத்ரா, மாயா நினைப்பு வந்துருச்சா? அமைதியாக கேட்டாள்.

யாரு வினு டார்லிங் மாயா? நிதின் கேட்க, டேய் ஒழுங்கா பேர சொல்லி கூப்பிடுறதா இருந்தா கூப்பிடு இல்லை என் பக்கமே வராத என்று சினமுடன் கூறிய நேத்ரா..

இப்ப யுவிய கூட்டிட்டு வர போனேல்ல. ஏதாவது பேசினாளா? திட்டுனாளா?

அக்கா, அவள விடுங்களேன். அவளை விடவா? அப்ப என்ன தான்டா பிரச்சனை?

பிரச்சனையெல்லாம் இல்லை. என்னோட ப்ரெண்ட பத்தி தான்..என்று அவன் சிந்திக்க..

ப்ரெண்டா? டேய், அதுக்குள்ள வேற பொண்ண கரெக்ட் பண்ணிட்டியா? கிருஷ்ணன் கேட்க, ஆமா, இந்த லவ்வே வேண்டாம்டா என்ற காவியன் யுவனை பார்த்து விட்டு மணியை பார்த்தான்.

அக்கா, சாப்பாடுக்கு என்ன செய்றது?

இன்று எதுவும் செய்யமுடியாது. இங்க சமையல் செய்ய பாத்திரமே இல்லை என்றான் அதிரதன்.

ஒன்றுமே இல்லையா? என்று கோபமாக எழுந்தாள் நேத்ரா.

அக்கா, பார்த்து மெதுவா எழுந்திருங்க என்றான் மிதுன்.

“வினு கால்ல அடிபட்டிருக்கு?” நிதின் கேட்டாள்.

“இவ்வளவு நேரம் பார்க்காம இப்ப தான் பாக்குறாங்க பாரு” என்றான் அருள்.

“ஹா.. உங்க ப்ரெண்டோட வேலை தான்” என்றான் கிருஷ்ணன்.

நானா அவளை பாட்டிலை உடைக்க சொன்னேன்? அவளா உடைச்சு காலை கிழிச்சுக்கிட்டா நானா பொறுப்பாக முடியும்?

அப்ப மருந்தை எடுத்து வந்து கொடுத்தீங்க என்று மிதுன் கேட்க, என்னோட வீடு இரத்தக்கறையாகிடும்ன்னு கொடுத்தேன். நிதின் ஆச்சர்யமாக இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

டேய், உங்க ரெண்டு பேர்கிட்டயும் மாற்றம் தெரியுதே?

நீ பேசவே மாட்ட. வினு அளவா பேசுவா? ஆனால் இருவருமே இப்படி பேசுறீங்க? வினு கூட கஷ்டத்துல இருக்கா? முள்ளான பாதையை கடந்து வந்திருக்கா? ரதா, நீ சரியில்லையே? கேட்டான் நிதின்.

ஏன்டா, இது கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையா? சார், இப்ப தான் வேலையில்லாம வெட்டியா இருக்கார் என்று நேத்ரா சொல்ல, அனைவரும் அவளை பார்த்தனர். அவன் கோபமாக எழுந்தான்.

என்ன சொன்ன? அவளருகே வந்தான். அவள் எழுந்து நின்றாள்.

“ஆமா சார், நீங்க இங்க இருந்தா உங்க கம்பெனி மற்ற எல்லாத்தையும் யார் பார்த்துப்பா” என்று அவள் கேட்க, எதுவும் தெரியாம பேசாத என்று அவளது தோள்பட்டையை அழுந்த பற்றினான்.

நீ சொல்வதற்கு முன்னே யாரோ என்னை கவனித்து தான் எல்லா வேலையும் பார்த்திருப்பாங்கன்னு தெரிஞ்சது. என் குடும்பம் நம்பலைன்னு கோபத்துல தான் இங்க வந்தேன். ஆனால் நான் மறைந்திருந்து அவனை வெளியே வர வைக்க தான் இங்கே இருந்தேன் என்று அவன் ஆபிஸ் அறைக்கு இழுத்து சென்று, சில பெயர்களை காட்டினான். அதில் நேத்ராவியின் பெயரும் இருந்தது.

அக்காவோடது எதுக்கு? கேட்டான் காவியன்.

அவகிட்ட கேளு. எனக்கு எப்படி தெரியும்?

அவள் நிதினை பார்த்தாள். அது அந்த அஷ்வினியின் ப்ரெண்ட்ஸ் லிஸ்ட் என்றான்.

அவள் உன்னோட ப்ரெண்டு தான? அவ என்ன திட்டத்துல இதை செஞ்சா? அதிரதன் மேலும் அவள் தோள்பட்டையை அழுத்தினான்.

அவள் கண்ணீருடன் தெரியாது என்றாள். சார், அவங்கள விடுங்க என்றான் மிதுன்.

விட முடியாது என்று அவனது அதிகாரம் தலை துக்க சத்தமிட்டான். யுவன் சத்தத்தில் மிரண்டு அழுதான்.

யுவனை பார்த்த நேத்ரா, நிஜமாகவே எனக்கு தெரியாது. அவளை பாலோ பண்ணிகிட்டு இருந்தா. இப்ப நான் இங்க இருக்க தேவையில்லை. அவளை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவள் கேவலமான பிறவி. அதை மட்டும் தான் சொல்ல முடியும் என்று அவன் கையை எடுக்க முயற்சித்தாள். அவன் அவளை முறைக்க, அவளுக்கு பொண்ணு ப்ரெண்டுன்னா என்னை தவிர யாருமில்லை. ஆனா இப்ப அவ என்னோட ப்ரெண்டு இல்லை என்று அழுதாள்.

அப்பொழுதும் சுஜி அளவுக்கு பழகியதில்லை. நல்லா பேசுவா..என்னோட பாப்புலாரிட்டிய யூஸ் பண்ண தான் அவள் பழகினான்னு வருடம் கழித்து தான் தெரிந்தது. அதனால் அவளை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன்.

சார், கையை எடுங்க. உங்க குடும்பமே நம்பலைன்னு சொன்னீங்கல்ல? ஆனால் நேத்ரா அக்கா, நீங்க செஞ்சிருக்க மாட்டீங்கன்னு உறுதியா எங்க பாட்டியிடம் சொன்னதா அக்கா எல்லாரும் சொன்னாங்க என்று காவியன் சொன்னான். அவள் மீதிருந்த கையை எடுத்தான் அதிரதன். அவள் அழுது கொண்டே மிதுனிடமிருந்து யுவியை தூக்கி வெளியே சென்றாள்.

அக்கா..என்று அவர்களும் வெளியே சென்றனர்.

என்னை தனியா விடுங்கடா என்று கத்தினாள். எல்லாரும் உள்ளே வந்து, உங்கள நம்பி எப்படி அக்காவ நாங்க எப்படி விட்டுட்டு போறது?

அவள் எதையோ மறக்கிற மாதிரி இருக்கு என்று அதிரதன், நிதினிடம் உனக்கு தெரியுமா? கேட்டான்

தெரியாது என்று நிதின் சொல்ல, அதிரதன் மிதுனை பார்த்தான். எங்களுக்கு என்ன தெரியும்? அக்கா அவங்க கடந்த காலத்தை பற்றி ஏதும் சொல்லலை. அதனால் இதை பற்றி எங்களுக்கு தெரியாது என்றான்.

அக்கா, கண்டிப்பா தப்பு செய்ய மாட்டாங்க. ஒருவேலை அதற்கான நிலை ஏற்பட்டாலும் அதை ஒத்துப்பாங்க என்றான் சுபிர்தன்.

நேத்ரா திட்டியும் அவளருகே காவியன் அமர்ந்திருந்தான். அவன் தோளில் சாய்ந்தாள். அக்கா, என்ன நடந்தாலும் டென்சன் ஆகாம இருங்க. பாப்பாவும் கஷ்டப்படுவா. இன்று ரொம்ப அழுதுட்டீங்க. அமைதியா இருங்க..என்றான்.

யுவியை பிடி என்று எழுந்து ஓடிச் சென்று வாமிட் செய்தாள். அக்கா..என்று யுவி இங்கேயே இரு வாரேன் என்று அவளிடம் ஓடினான். யுவி தனியே உள்ளே வருவதை பார்த்த நிதின், வினு எங்க? அவனிடம் கேட்டான்.

அக்கா வாந்தி எடுக்குறாங்க என்றான்.

வாமிட்டா? என்னாச்சு? என்று அதிரதனும் பசங்களும் எழுந்தனர்.

அவள் நடக்க முடியாமல் அங்கேயே அமர்ந்தாள். அக்கா..எழுந்திருங்க. ரொம்ப குளுருது. காய்ச்சல் வந்திடாமல்..

யுவிக்கு பசிக்கும். சாப்பிட என்ன செய்யலாம்ன்னு பாருங்க. எனக்கு எதுவும் வேண்டாம் என்று எழுந்தாள்.

நிதின் அவளிடம் வந்து, அவளது நெற்றியை தொட்டு பார்த்தான்.

என்ன பண்றடா? ரொம்ப டயர்டா இருக்கு என்று அவன் கையை தட்டி விட்டு உள்ளே செல்ல அதிரதன் அவள் முன் வந்து, சாப்பிடாம எங்க போற?

வாமிட் பண்ணிட்டேன். எனக்கு ஒருமாதிரி இருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம் என்றாள்.

எதுக்கு திடீர்ன்னு வாமிட்? அதிரதன் கேட்க, அவள் விழித்து காவியனையும் மற்றவர்களையும் பார்த்தாள். சோபாவில் காலை ஆட்டிக் கொண்டிருந்த அருள், இந்த நிலையில் வாமிட் வருவது சகஜம் தானே? என்றான்.

எந்த நிலை? என்று அதிரதன் அவளை பார்த்து விட்டு அவனிடம் வந்தான். உணர்ந்த அருள், அதான் இங்கே வரும் முன் செம்மையா வெட்டி விலாசினாங்களே? அதை தான் சொன்னேன் என்றான்.

அப்படி என்ன சாப்பிட்ட? அதிரதன் அவளிடம் திரும்ப, சிக்கன் என்று அவள சொல்ல, மீன் என்று காவியன் சொன்னான். நிதின் அவளிடம் வந்து, என்ன? கேட்டான்.

சிக்கன் சாப்பிட்டு மீன் சாப்பிட்டாங்க. அதை தான் சொல்றோம் என்று சமாளிக்க, வினு உனக்கு மீன் பிடிக்காதே என்றான் நிதின். அதிரதன் இருவரையும் கூர்ந்து பார்க்க, நான் பழகிகிட்டேன் என்றாள். அவள்அலைபேசி அவளை அழைக்க, அவர்களை பார்த்துக் கொண்டே எடுத்தாள்.

அங்கிள்..சொல்லுங்க? என்றாள்.

பிரச்சனை முடிஞ்சதா? தினகரன் கேட்க, இப்ப தான் அங்கிள் ஆரம்பமாகியிருக்கு.

ஆரம்பமா இருக்கா? அந்த பய உன்னை தொந்தரவு பண்றானா?

இல்ல அங்கிள். நான் அங்க வந்தா தானே அவனை சந்திக்கும்படி இருக்கும். அது வேண்டாம்ன்னு தான் இருக்கேன். அவன் மட்டும் என் கண்ணுல பட்டான்..என்னையும் மீறி அவனை ஏதாவது செய்து விடுவேன். பிரச்சனையாகிடும் என்றாள்.

அம்மா, முடிஞ்சத பத்தி யோசிக்காதம்மா.

எப்படி அங்கிள் மறக்க முடியும்? மறக்கிற மாதிரியா பண்ணி இருக்கான். அங்கிள்..அவன் எதிலாவது மாட்டினான்னா மட்டும் சொல்லுங்க. அதுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்.

இல்லம்மா. அவன் ஜாலியா வெளிய சுத்துறான்ம்மா வருத்தப்பட்டார்.

கண்ணை துடைத்து விட்டு, அங்கிள் சங்கீதன் காலேஜ் சேர்ந்துட்டானா?

ஆமாம்மா, சேர்ந்துட்டான்.

நல்லது அங்கிள். இப்பொழுதைக்கு நாம பேச வேண்டாம். நானே கால் பண்றேன்.

அக்கா..என்ன சொன்னீங்க? சங்கீதனா?

ஆமாம் காவியா.

நீங்க சொல்ற அங்கிள் மகனா இவன்? ஆமா..லாயருக்கு தான் படிக்கிறானா? கேட்க, ஆமா..

ஹே..உன்னோட தான் படிக்கிறனா காவியா? என்று சந்தோசமாக கேட்டாள்.

ஆமாக்கா. என்னோட ப்ரெண்டு தான் என்றான். நேத்ரா அவனை அணைத்துக் கொண்டாள்.

நிதின் இருவரையும் பார்த்து, இதுல என்ன இருக்கு? என்று கேட்க, நிது..என்னோட அங்கிள் மகனோட காவியன் படிக்கிறான்.

ஆமா வினு. இதுல என்ன இருக்கு? நிதின் கேட்க, அட ஆமாக்கா, இதுனால எதுக்கு நானும் இவ்வளவு எமோஸ்னல் ஆனேன் என்று காவியனும் நேத்ராவை பார்த்தான்.

நீயும் என்னடா இப்படி கேட்குற? அவரு நம்ம..என்று புத்தியில் உரைக்க நிறுத்தி அமைதியானாள். இவள் என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் எதையோ மறைப்பது போல் தெரியுதே என்று அதிரதன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

 

 

 

Advertisement