Advertisement

அத்தியாயம் 5

கேட்டை திறந்து உள்ளே செல்ல நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டே பெரிய கதவை திறந்து உள்ளே சென்றனர். கீழிருந்த ஓர் அறையின் வெளியே சிகரெட் துண்டுகள் இருந்தது. அதனருகே சென்று எட்டிப் பார்த்தான் காவியன்.

மதுவாடையுடன் தரையில் சுருண்டு விழுந்திருந்தான் அதிரதன். சுற்றி நிறைய மதுபாட்டில்கள் இருந்தது.

அக்கா, வீடு செம்மையா இருக்குல்ல அருள் கேட்க, ஆமாடா சூப்பரா இருக்குல்ல. அப்ப நீ இங்கேயே இருந்துக்கோ ஹாஸ்ட்டலுக்கு வந்த மவனே கொன்றுவேன் மிதுன் சொல்ல,

டேய், நல்லா இருக்குன்னு தான சொன்னேன். அதுக்காக இப்படி பேசுற? என்று அவன் பாவனையுடன் சொல்ல,

வாய மூடிக்கிட்டு வாங்க என்று நேத்ராவும் அறை பக்கம் வந்தாள்.

அக்கா, நீங்க வெளிய இருங்க என்று காவியன் அவளை நிறுத்தினான்.

ஏன்டா, அவள் எட்டி அவனை பார்த்து அதிர்ந்து நின்றாள். குடிபோதையில் மயங்கி இருந்தான்.

காவியா, என்ன வேடிக்கை பாக்குற? என்ற நேத்ரா உள்ளே வர, அக்கா வராதீங்கன்னு சொன்னேன் என்று அவன் கத்தினான். அதிரதன் மெதுவாக அசைந்தான்.

அக்கா, வெளிய இருங்க, டேய்..உள்ள வாங்க என்று மற்றவர்களை அழைத்தான் காவியன்.

அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. அவள் வாயில் கை வைத்து நிற்க, அக்கா..என்று அருள் அவளை அதே அறைக்குள் வாஷ் ரூமிற்கு  அழைத்து செல்ல, அவள் வாமிட் செய்து அமர்ந்தாள்.

அக்கா, இப்பவாது வெளிய போங்க என்றான் காவியன்.

டேய், முதல்ல அவரை வாஷ் பண்ணுங்க என்று சொல்ல, அவர்கள் கையை பிடி, காலை பிடின்னு அவனை இழுத்து சவர் கீழே விட்டு ஆன் செய்தனர்.

நேத்ரா வெளியே செல்லாமல் மதுபாட்டிலை எடுக்க, “அக்கா” என்று ஐவரும் கத்தினர். அவள் பயந்து பாட்டிலை கீழே போட்டு விட்டாள். தண்ணீர் பட்டது; இவர்கள் கத்தியது; பாட்டில் உடைந்த சத்தத்தில் அதிரதன் விழித்தான். ஆனால் போதை கொஞ்சம் தான் இறங்கி இருக்கும் போல.

யாருடா நீங்க? என்னோட வீட்ல கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? போதையுடன் கத்தினான்.

யோவ், உன்னோட வீடு தான். இப்படி திறந்து போட்டு வச்சிருக்க? இப்படி குடிச்சிட்டு இருக்க? எவனாது வந்து உன்னை ஏதும் செய்தால் கூட தெரியாது கிருஷ்ணன் சொல்ல,

ஷ் ஆ… என்ற நேத்ரா சத்தம் கேட்டு ஐவரும் அக்கா என்று வெளியே வந்தனர். அவன் பேசும் சத்தம் கேட்டு அவள் முன்னேற, உடைந்த துண்டுகளை கவனிக்கவில்லை. அவள் காலை கிழித்து இருந்தது.

அக்கா, இதுக்கு தான் சொன்னேன் வெளியே இருங்கன்னு காவியன் கோபமாக நேத்ராவிடம் வந்தான்.

அக்காவா? பொண்ணா? என்னோட வீட்ல பொண்ணா? என்று நனைந்தவாறு வெளியே வந்தான் அதிரதன். அவள் அவனது படுக்கையில் அமர்ந்திருக்க, அவனை கண்டுகொள்ளாமல் காயத்திற்கு மருந்தை தேடினர் நால்வரும். காவியன் காயத்தை அங்கிருந்த தலையணையை பிரித்து அதிலிருந்த பஞ்சை எடுத்து காயத்தை சுத்தம் செய்தான்.

“காவியா, இதையெல்லாம் எதுக்கு எடுக்குற?” நேத்ரா கேட்க, என்னடா பண்றீங்க? என்று ஈரமுடன் வெளியே வந்தான் அதிரதன்.

“யோவ், மருந்து வச்சிருக்கியா? எங்க இருக்கு?” அருள் கேட்க, டேய் ஒழுங்கா பேசுங்க என்றாள் நேத்ரா.

ஒழுங்காவா? எப்படிக்கா? வாங்க சார் குளிக்கலாம், குடிக்கலாம். இப்படியா? சுபி கேட்க, நேத்ரா அருகே அதிரதன் வந்து அவளை பார்த்து,

இவ தான் உங்க அக்காவாடா? என்று நேத்ராவை பார்த்தான். பேபி பிங்க் நிறத்தில் சாதாரண பிளைன் புடவையில் மெழுகாய் அமர்ந்திருந்தாள்.

சார்,..என்று அவள் எழ, அக்கா இப்ப பேசுனா சாருக்கு புரியாது. முதல்ல தெளிய வைக்கணும். இன்னுமாடா மருந்தை எடுக்குறீங்க? காவியன் கேட்க,

“காவியா, எல்லாமே ஆடையா இருக்குடா” என்று மிதுன் சொல்ல, அவளை பார்த்த அதிரதனின் கண்கள் அவள் காயத்தில் படிந்தது.

“அச்சோ இரத்தம் வருதே!” என்று மண்டியிட்டு அவள் காயத்தினருகே வந்து ஊதினான். நேத்ரா கண்ணை விரித்து பயந்தவாறு அமர்ந்திருந்தாள்.

சார், நாங்களே பார்த்துப்போம் என்று காவியன் கையிட்டு அவனை விலக்க, அவன் எழுந்து தள்ளாடிக் கொண்டே பக்கத்து அறைக்கு சென்றான்.

டேய், அவரு அங்கேயும் போய் சரக்கடுச்சுட்டு விழுந்து கிடக்காம என்று காவியன் சொல்ல, முதல்ல அவரை பிடிச்சு கட்டி போடணும் என்றான் அருள்.

டேய், அவரு எவ்வளோ பெரிய ஆளு. இப்படி பண்றீங்களே? அவருக்கு மட்டும் போதை தெளிஞ்சது. நாம காலிடா என்றாள் நேத்ரா.

ஆமாக்கா, பெரிய ஆளு. அதான் யாருமில்லாமல் தனியா இப்படி விழுந்து கிடக்கார். இப்படி கிடக்குறதுக்கு பணக்காரனாகாமலே இருக்கலாம் என்றான் மிதுன். அவள் முகம் வாடியது.

மருந்தை எடுத்து வந்து நேத்ரா அருகே அமர்ந்து மருந்தை அவளிடம் கொடுத்து விட்டு அவள் மீதே சாய்ந்தான் அதிரதன். நேத்ரா அவனை பார்க்க, “யோவ்…”என்று அவனை இழுத்து மறுபடியும் சவரை ஆன் செய்தனர்.

“டேய், அந்த குளிர்ந்த நீரை ஆன் பண்ணுங்கடா” என்றான் காவியன்.

காவியா, என்ன பண்றீங்க? நேத்ரா கேட்க, அவளிடம் வந்து அமைதியா இருங்க என்று அவள் காலுக்கு மருந்து வைத்து கட்டு போட்டு விட்டு வெளியே அழைத்து வந்து அவளை சோபாவில் அமர வைத்து விட்டு, அக்கா நீங்க எழவே கூடாது என்று ஆணையிட்டு அவனிடம் காவியன் சென்றான். நீரை அவன் முகத்தில் படும்படி வைக்க தெளிவாக விழித்தான் அதிரதன்.

மறுபடியும் அதிரதன் முன் போலே கேட்க, இவரை எங்க இருந்து தான்டா பிடிச்சிட்டு வந்தாங்க என்று அருள் தலையில் கை வைத்து அமர்ந்து, “இவருக்கு பார்த்து எனக்கு தான் தலை கிறுகிறுன்னு சுத்துது” என்று உட்கார்ந்தாவாரே படுக்கையில் படுத்தான்.

“டேய் நாயே, எதுக்காக வந்துட்டு என்ன பண்ற?” கிருஷ்ணன் அவனை எத்தினான்.

அதானடா? “நாம எதுக்கு வந்துட்டு என்ன வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கோம்?” காவியா என் மேலெல்லாம் ஸ்மெல்லா இருக்கு. இப்ப நாம வெளிய போனா. நாம குடிச்ச மாதிரி தான் பேசுவாங்க.

“அய்யோ, மானம் போகக் போகுது” என்று அருள் புலம்ப, விழித்த அதிரதன் புரியாமல் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாலும், இந்த மாதம் இல்லாத அமைதி இவர்களால் அவன் மனதில் தோன்றியது.

எழுந்து அவனை அவனே பார்க்க, டேய் சாருக்கு நல்லாவே போதை தெளிஞ்சிருச்சு என்றான் மிதுன்.

அப்பாடா, தப்பிச்சோம். வாங்கடா போகலாம். அக்கா வேலை முடிஞ்சது என்று சொல்லிக் கொண்டே அருளும் சுபிர்தனும் வெளியே வந்தனர்.

தன் துவாலையை எடுத்து, வெளிய இருங்க வாரேன் என்று முறைப்புடன் அதிரதன் இவர்களை பார்க்க, இவரை சுத்தம் செய்தால் முறைக்கிறார் பாரேன் என்று கிருஷ்ணன் சொல்ல, வெளிய வா..நம்ம வேலை முடியணும். அப்புறம் பார்த்துக்கலாம் என்று மிதுனும் மற்றவர்களும் வந்தனர்.

அறையினுள் அதிரதனுக்கு, “யார் இவனுக? படிக்கிற பசங்க மாதிரி இருக்காங்க? இங்க எதுக்கு வந்தாங்க? எப்படி கண்டுபிடிச்சாங்க?” என சிந்தித்துக் கொண்டே ஆடையை மாற்றி தயாராகி வெளியே வந்தான்.

வெளியே வந்த பசங்களிடம், ஒரே ஸ்மெல்லா இருக்கு. “ச்சீ, பக்கத்துல வராத போ” என்று கிண்டல் செய்து கொண்டிருந்தாள் நேத்ரா.

அக்கா, நாங்க குடிக்கல. ஆனால் கிண்டல் பண்றீங்களா? கிருஷ்ணன் கேட்க, “குடிச்சு பார்த்துட்டா போச்சு” என்று வெளியே இருந்த பாட்டிலை காவியன் எடுத்தான்.

காவியா என்று பதட்டத்தில் சோபாவில் ஏறிய நேத்ரா, “வேண்டாம்டா” என்று கீழே இறங்க அவள் கால் சோபா முனையில் தட்டி விட, “அக்கா..” என்று பயந்து கத்தினர் ஐவரும்.

அதே நேரம் கதவை திறந்த அதிரதன் இவர்கள் கத்திய சத்தத்தில் பயந்து பின்னே விலகினான். பக்கத்திலிருந்த சோபாவிலிருந்து முன்னோக்கி விழுந்த நேத்ராவை பிடித்தான். அவன் கைகள் அவள் இடையில் இருக்க, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவனை தள்ளி விட்டு வயிற்றில் கை வைத்து உஃப் என்று ஊதினாள்.

“அக்கா, ஒன்றுமில்லையே?” என்று ஐவரும் பதறிக் கொண்டே அவளிடம் வந்து அவனை முறைத்து பார்த்தனர்.

“ஏன்டா, நான் என்ன செய்தேன்? இப்படி முறைக்கிறானுக?” என்று மனதில் நினைத்த அதிரதன், நீங்க பஞ்சபாண்டவர்களா? கேட்டான்.

வாட்? என்று மிதுன் கேட்க, இல்ல..என்னோட அத்தை சொல்லுவாங்க. தன் தாய்க்கு ஒன்று என்றால் தலையெடுக்கவும் பஞ்சபாண்டவர்கள் தயங்க மாட்டார்களாம் என்றான்.

நேத்ரா ஐவரையும் பார்த்து சிரித்தாள். “அக்கா..”என்று காவியன் முறைக்க, அப்பொழுது தான் அவளுக்கு அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

டேய், நீ என்ன சொன்ன? குடிப்பியா? உலகத்துலே அவ ஒருத்தி தான் இருக்காலா? இப்ப தான் உன் வாழ்க்கையில முதல் அடி எடுத்து வச்சிருக்க. இனி மேல போகணும். அதை விட்டுட்டு “லவ்” பண்றானாம். அதுக்கு நிறைய நேரம் இருக்கு.

இனி எவனாது லவ்வுன்னு என் முன்னாடி வந்து நின்னீங்க கொன்றுவேன். நம்ம நிலைமைய புரிஞ்சு நடந்துக்க வேண்டாமா? அவள் சீரியசாக மாறி திட்ட, அனைவரும் அமைதியாக நின்றனர். காவியன் தலைகவிழ்ந்து கண்ணீருடன் நின்றான். அதிரதன் கையை கட்டிக் கொண்டு அவர்களை பார்த்தான்.

“ஹலோ மேடம், கொஞ்சம் நிறுத்துறீங்களா?” காது வலிக்குது என்று காதை குடைந்து கொண்டு சோபாவில் அமர்ந்தான் அதிரதன். எல்லாரும் அவனை பார்த்தனர்.

“அப்பாடா தெளிவாகிட்டீங்க” என்று அவனிடம் வந்தாள். பசங்களும் அவள் பின் வந்து நின்றனர்.

“நான் சொன்னது தப்பேயில்ல போல” என்று மனதினுள் சிரித்த அதிரதன், முகத்தை கடுகடுவென மாற்றினான்.

“நீங்க எல்லாரும் யாரு? டீச்சர் ஸ்டெண்டா?” கேட்டான்.

நோ..சார், என்று நேத்ரா அவனிடம் ரிப்போர்ட்டை கொடுத்து விட்டு அவர்கள் நிலையத்தை பற்றியும், யுவன் பற்றிய அனைத்தையும் சொன்னாள்.

“வாட்? அம்மா பேர்ல நிலையமா? சும்மா எதையாவது சொல்லி ஏமாத்த பார்க்காதீங்க?” என்றான்.

சார், நாங்க ஏமாத்தலை.

காவியா என்று அவனை பார்த்தாள் அவன் மூஞ்சியே சரியில்லை. அவனை முறைத்த நேத்ரா, “மிதுன், இந்தா வீடியோ கால் செய்து யுவியை காட்ட சொல்லு” என்றாள்.

“இப்ப காட்டினாலும் நான் எப்படி நம்புறது?” அவன் கேட்க, அவள் உதட்டை மடித்து யோசனையோடு நின்றாள். அவன் அவளையே பார்க்க, பசங்க அவனை கவனித்து விட்டு,

“அக்கா, நாம இதுக்கு மேல இங்க இருக்கிறது வேஸ்ட்டு. நமக்கு நேரமில்லை. வேற ஏதாவது முடியும்மான்னு பார்க்கலாம்” என்றான் மிதுன்.

ஒரு லட்சம்ன்னா கூட எப்படியாவது கெட்டலாம். அதுக்கு மேல கேக்குறாங்கடா என்று அவள் மிதுனை பார்த்தாள்.

“உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லாம யோசிக்கிறீங்களா? இல்ல எங்களுக்கு உதவ விருப்பமில்லையா?” காவியன் கேட்டான். நேத்ராவும் அதிரதனை பார்த்தாள். அவன் அவர்கள் எல்லாரையும் பார்த்தான். நம்பிக்கை இல்லாமலா வீட்டினுள் நிற்க வைத்து பேசுகிறேன் என மனதினுள் எண்ணிக் கொண்டே,

“இந்த பொண்ணு என்னோட ஆறு மாதம் இதே வீட்ல இருக்கணும்” என்றான்.

“ஏய், என்னடா சொன்ன?” என்று அவன் மரியாதை காற்றில் பறக்க கத்தினார்கள் நம் பசங்க. காவியன் அவன் சட்டையை பிடிக்க,

“காவியா பிரச்சனை வேண்டாம். நாம போயிடலாம்” என்று கண்கலங்கி நேத்ரா சொல்ல..

“ஹலோ…இப்ப என்ன சொல்லீட்டேன்? எனக்கு உங்க மேல நம்பிக்கை வர வேண்டாமா?”

எல்லாரையுமே இருக்க சொல்லலாம்ன்னு தான் நினைத்தேன். உங்கள பார்த்தா படிக்கிற பசங்க மாதிரி இருக்கு. நீங்க போயிட்டு வர்றத யாராவது பார்த்தாலும் என்னோட பிரைவேசி கெட்டு விடும். யாரோ ஒரு பையனுக்கு உடல் சரியில்லைன்னு தான பணம் கேட்குறீங்க? அவனும் கூட இங்க இருக்கட்டும். அவனுக்கு பிரச்சனை இருக்கான்னு தெரிஞ்சுப்பேன். எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் நான் இங்கே தான் இருக்கிறேன்னு யாருக்கும் தெரியக்கூடாது.

அப்புறம் இங்க சும்மாவெல்லாம் இருக்க முடியாது. வீட்டை சுத்தமா வச்சிருக்கணும். நான் என்ன சொன்னாலும் கேட்கணும் என்று நேத்ராவை பார்த்தான் அதிரதன்.

அக்கா..வாங்க போகலாம் என்று பசங்க அழைக்க, இல்லடா நம்ம யுவன் கூட இருப்பான்ல. நான் இருக்கேன்.

அக்கா, அவனுக்கு இரண்டு வாரம் தான் நேரம் இருக்கு.

அதான் சொல்றேன்.

ஆனா, இவரு ஆறுமாதம் வீட்ல இருக்க சொல்றாரு. யாருக்காவது விசயம் தெரிஞ்சா. அதை விட தனியா எப்படி? நோ..அக்கா. வேற ஏதாவது செஞ்சுக்கலாம். ஏற்கனவே வாங்கிய பேச்சு போதாதா? சுபிர்தன் அதிரதன் வீட்டில் நடந்ததை நினைத்து சொல்ல, தன்னை தான் சொல்கிறான் என்று அதிரதன் நினைத்தான்.

பரவாயில்லைடா. பேச தான செய்வாங்க. பேசிட்டு போகட்டும். அதுக்காக ஓர் உயிரை இழக்க முடியாது. “வேற என்ன செஞ்சு அவ்வளவு பணத்தை இரு வாரத்திற்குள் தயார் செய்வ?” வேலை தான செய்யணும். செஞ்சிட்டு போறேன்.

சரிக்கா. இருக்கலாம். நானும் இங்கேயே இருக்கேன் காவியன் சொல்ல “ஆமா, நாங்களும் இருக்கோம்” என்றார்கள்.

“டேய், என்னை ரொம்ப பேச வக்கிறீங்க? உங்க கூட பேசியே சோர்வானா எப்ப தான் வேலைய பாக்குறது?” சொன்னா புரிஞ்சுக்கோங்கடா என்று காவியனை பார்த்தாள்.

அவன் அவளருகே வந்து, இந்த நிலையில தனியா எப்படிக்கா விட்டுட்டு போறது? ஷ்..சும்மா இரு. தெரிஞ்சா எனக்கு இந்த வேலையும் இல்லாமல் போகும் என்று அவனை இழுத்து அவன் காதில் கூற,

மேடம், என்ன திட்டமா? அதிரதன் கேட்க, ஆமா சார், உங்க சொத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம்ன்னு திட்டம் போடுறோம் என்றாள் எரிச்சலுடன்.

“அக்கா..போயிடலாம்” காவியன் மேலும் சொல்ல, இப்பவே கிளம்புங்கடா. சொல்றது உங்களுக்கு புரியவேயில்லையா? யுவியை நினைச்சா கஷ்டமா இருக்கு. நீங்க தேவையில்லாம பேசுறீங்க?

சாரால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் பார்த்துப்பேன். நீங்க காலேஜூக்கு போற வழிய பாருங்க. கவனம் எப்போது படிப்பில தான் இருக்கணும். யுவி என் கைக்கு வந்தால் போதும்.

“அக்கா, அப்ப உங்க வேலைய யாரு பார்ப்பா?” அருள் கேட்டான்.

அது..அதுக்கு, நான் சொல்றேன்.

“சார், நான் இங்கே நீங்க சொல்லும் எல்லா வேலையையும் செய்வேன் என்றாள்”.

ஐவரும் அவள் முன் வந்து, அக்கா நீங்க தாராளமா பாருங்க. ஆனால் சேர் போட்டு மேலே ஏறக் கூடாது. ரொம்ப குனிந்து வேலை செய்யக்கூடாது. அப்புறம் என்று யோசித்த காவியன் “கவனமா இருக்கணும்” என்று அதிரதன் பக்கம் திரும்பி,

சார், நீங்க அக்கா அறைப்பக்கம் செல்லக்கூடாது. அவங்களுக்கு ஓய்வும் கொடுக்கணும் என்று அவளிடம் திரும்பி, மாலை கொஞ்ச நேரம் வாக் போயிட்டு வாங்க. அப்புறம் மாத்திரை என்று ஆரம்பிக்க இருந்தவன் வாயில் கை வைத்து, “காவியா, உன்னோட விதிமுறைகள் போதும்”. “இப்ப சாரிடம் பேசலாமா?” என்று கேட்டாள்.

“நானா உங்களிடம் வேலை பார்க்கிறேன்? எனக்கு ஆர்டர் போடுற?” என்று அதிரதன் கேட்க, நீங்க யாராக வேண்டுமானாலும் இருங்க. ஆனால் எங்க அக்காவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, தொலைஞ்சீங்க? என்று கையை உயர்த்தினான் காவியன்.

சாரி சார், இவன் இப்படி தான் என்ற நேத்ரா, டேய்..நீ சும்மா இரேன். நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல என்று நானும் சாரும் பேசிக்கிறோம். யாரும் வாயை திறக்கக்கூடாது. புரியுதா? என்று அவள் சோர்வாக,

சார், நான் உட்கார்ந்து கொள்ளவா? என்று அவனிடம் கேட்க, அவன் கையை காட்டினான்.

அவள் அவனுக்கு எதிரே அமர்ந்து, நான் ஒத்துக்கிறேன் சார். ஆறு மாதம் நீங்க சொல்ற வேலைய செய்கிறேன்.  நான் வெளியே செல்லவிருந்தால் சென்று வருவேன். ஆனால் இரு வாரத்திற்கு யுவிக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆகணும். அதற்கு முன்னதாகவே பணம் கொடுக்க முடியுமா? கேட்டாள்.

“அக்கா” மிதுன் அழைக்க, என்னடா?

யுவி நீங்க பக்கத்துல இல்லைன்னா அழுவானே? என்று சொல்ல, அவள் அதிரதனை பார்த்தாள்.

ஒருவாரம் அந்த பையன் தங்கட்டும். எனக்கு உங்க மேல நம்பிக்கை வந்து விட்டால் உடனே பணம் கட்டி விடுவேன். சிகிச்சை செய்து அவனை இங்கே மாற்றி கூட நர்ஸூடன் சேர்ந்து பார்த்துக்கலாம் என்றான்.

“தேங்க்யூ சார்” என்று அவள் மகிழ்ச்சியாக கூறினாலும் தவறு செய்யப் போகிறோமோ? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

ஒரு நிமிஷம் என்று காவியன் எழுந்து, இரண்டு நாட்கள் நாங்க இங்கே தான் தங்குவோம்.

நாளைக்கு மட்டும் தான உங்களுக்கு விடுமுறை. அடுத்த நாள் எதுக்கு? எல்லாரும் இப்பவே கிளம்புங்க அவள் விரட்ட, தங்கணும்ன்னா தங்கலாம் என்று அதிரதன் சொன்னான்.

அக்கா நினைவு வந்தா நாங்க எப்ப வேண்டுமானாலும் வருவோம் என்றான் மிதுன்.

வரலாமே? என்றான் அதிரதன். அவனை ஆச்சர்யமாக பசங்க பார்த்தனர். சுபிர்தன் அவன் முன் வந்து அவனை கூர்ந்து பார்த்து, “நிஜமாகவே ஒத்துக்கிறீங்களா?” கேட்டான். அவன் நிர்மலா செய்கையை எண்ணி கேட்டான்.

கண்டிப்பா வரலாம். சாப்பிடலாம். தங்க கூட செய்யலாம் என்றான். நேத்ராவும் அவனை புரியாமல் பார்த்தான். ஓ.கே “தேங்க்ஸ் ஃபார் யுவர் பர்மிசன்” என்ற காவியன். அவன் பெயரை கூறி அறிமுகம் செய்து கொண்டான். மற்றவர்களும் அறிமுகம் செய்து கொண்டனர். அவன் நேத்ராவை பார்க்க,

“மை நேம் இஸ் வினு நேத்ரா” என்றாள். அவன் புருவம் சுருக்கி அவளை பார்க்க, அவள் பயத்துடன் என்னாச்சு சார்? கேட்டாள்.

என்ன படிச்சிருக்கீங்க? அவன் கேட்க, நான்..என்று தயங்கினாள்.

படிக்கலையா?

நோ..சார், “என்.பி.ஏ” செய்திருக்கேன் சார்.

வாட்? எம்.பி.ஏ வா? அப்புறம் எதுக்கு இங்க வேலை பாக்குறீங்க?

மனநிம்மதிக்காகவும், இவர்களை போலுள்ள பசங்களுக்காகவும் என்றாள்.

“ம்ம்..கிரேட்” என்றான்.

சார், நாங்க பேசிட்டு வரவா?

என்ன பேசணும்?

நான் இங்க வந்துட்டா. அங்க பொறுப்பா பார்த்துக்க யாராவது வேணும்? அதுக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசணும்?

இதெல்லாம் எங்க குரூப்ல பண்ண மாட்டாங்களா?

இல்ல சார், உங்க எல்லாருக்கும் உங்க கம்பெனிய பார்க்கவே நேரம் சரியா இருக்கும். உங்களுக்கு கூட நாங்க இருக்கும் நிலையம் உங்களுடையது தான்னே தெரியலன்னு சொன்னீங்க? படிக்காம அங்கேயே மத்த பசங்கள கவனிச்சுக்கிட்டு இருக்கிற சின்ன பசங்களும் இருக்காங்க. இதுல..எப்படி இந்த உதவியெல்லாம் செய்வீங்க? நானே பார்த்துக்கிறேன் சார் என்றாள்.

படிக்க வைக்க முடியாமல் பசங்க இருக்காங்களா?

ஆமா சார், நிறைய பொண்ணுங்க அவங்க படிப்பை எங்களுக்காக விட்டு கொடுத்திருக்காங்க. அவங்க பொறுப்பை நாங்க தான் ஏத்துப்போம்.

வாட்? நீங்க படிக்கிற பசங்க?

ஆமா சார், படிச்சு வேலைக்கு போன பின் அவங்களுக்கு திருமணம் செய்து வைப்போம். இது போல் இதற்கு முன் இங்கே இருந்தவர்கள் செய்திருக்கிறார்கள் என்றான் அருள். அதிரதனுக்கு ஒருமாதிரி ஆனது. ஆனால் இவர்கள் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

நீங்க ஏற்பாடு பண்ணிக்கோங்க. அதுக்கு முன் ஒப்பந்தம் தயார் செய்துக்கலாம். நீங்க படிச்சிருக்கேன்னு சொன்னீங்கல்ல, “வாங்க” என்று ஓர் அறைக்கு அழைத்து வந்தான். அவர்கள் அங்கே வர..மேடம் இங்க உட்காருங்க. நான் சொல்றதை டைப் செய்து ஒப்பந்தம் தயார் செய்யுங்க என்று அவள் அருகே வந்து சாய்ந்து நின்று அவன் சொல்ல சொல்ல, அவள் டைப் செய்தாள். இதில் பசங்க பெயர்களும் போட்டு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று டைப் செய்ய சொன்னான். பசங்க நிம்மதியுடன் நேத்ராவை பார்த்தனர்.

அவள் அதை பிரிண்ட்டு செய்து வெளியே எடுத்தாள்.

அதுல சைன் பண்ணுங்க என்றான். அவள் அங்கிருந்த பேனாவை எடுக்க, ஒரு நிமிஷம் சாப்பாடு செய்யத் தெரியுமா? கேட்டான்.

தெரியும் சார் என்று புன்னகைத்தாள்.

அப்ப, ஓ.கே சைன் பண்ணுங்க என்றான். அவள் சைன் செய்து அவனிடம் கொடுக்க சைன் செய்து, “இதோ..இப்ப ஓ.கே வா?” என்று பசங்களிடம் காட்டினான்.

“ஓ.கே சார்” என்று மிதுன் இழுத்தான்.

இதுக்கு மேல என்னடா?

அக்காவால எப்படி இவ்வளவு பெரிய வீட்டை சுத்தப்படுத்த முடியும்?

அதான் எப்ப வேண்டுமானாலும் வரலாம்ன்னு சொன்னாருல்ல. நாம அக்காவுக்கு கெல்ப் பண்ணுவோம் என்று கிருஷ்ணன் சொல்ல,

“தேங்க்யூ சார்”, நான் பேசிட்டு வந்துடுறேன். குளிச்சிட்டு வாங்கடா. ஸ்மெல் ஹெவியா இருக்கு என்றாள் நேத்ரா.

அக்கா, மாற்ற எதுவும் இல்லையே? கேட்டான்.

அவள் பர்சை எடுக்க, உள்ள வாங்க என்று அவனது அறையில் இருந்த புதிய ஆடைகளை கொடுத்தான் அதிரதன்.

எங்களுக்கு இது வேண்டாம் சார். நீங்கள் பயன்படுத்திய ஆடை இருந்தா தாங்க என்றான் காவியன். மற்ற பசங்களும் அதையே கேட்டனர். நேத்ரா முகம் மாறியது. அவள் கண்கலங்க காவியனை மட்டும் பார்த்தாள்.  அதிரதன் அதை பார்க்க, அவள் அவனறைக்குள் வந்து,

யாருக்கும் எதுவுமே வேண்டாம் என்று வெளியே சென்று விஷ்வாவிற்கு போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. “என்ன செய்வது?” என புரியாமல் இருக்க, அதிரதன் அவளிடம் வந்தான்.

“ஹலோ..நீங்க எதுக்கு ரொம்ப யோசிக்கிறீங்க?”

இல்ல சார். எப்பவாது வெளிய வச்சு நல்ல ஆடை போட்டுகிட்டா தான். இப்ப தான் காலேஜ் போறதுக்காக வாங்கித் தந்தேன். இப்ப வாங்கித் தாரேன்னு சொன்னா ஏத்துக்க மாட்டாங்க. அங்க ஏற்கனவே இவனுக ஆடை இருக்கு..என யோசித்தவள்..

“நான் பார்த்துக்கிறேன் சார்” என்று திரும்பினால் ஐவரும் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்.

இல்லடா, நான் அப்படி சொல்ல வரலை என்று அவள் அவர்களிடம் செல்ல, போதும்..எங்களுக்கு கோபம் இல்லை. நீங்க சொன்னது போல் ஏத்துக்க மாட்டோம் தான். ஆனால் சார் பயன்படுத்தியதை போடுவதால் என்ன? மிதுன் கேட்க, அவள் அதிரதனை பார்த்தாள்.

எப்படி சொல்றது? என்று சிந்தித்த நேத்ரா..அதுவந்து, என்று அவள் தயங்க, புரியுதுக்கா..ஒரு நாள் தானக்கா. இதுக்கெல்லாமா டென்சன்? பயம்? காவியன் கேட்டான்.

அதிரதனுக்கு புரியவில்லை. இல்ல சார், உங்களுடையதை நீங்க பயன்படுத்தியதாக இருந்தாலும் அது க்வாலிட்டி அதிகமானதாகவும் அழகாகவும் இருக்கும். அதுக்கு ஆசை வந்துரும்மோன்னு தான் யோசிக்கிறாங்க என்றான்.

வாட்?

அதுவும் சரி தான். எங்க படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும் வரை நாங்க எப்பொழுதும் போல் இருப்பதும் நல்லது தான். நாங்க எல்லாரும் சேர்ந்து தங்கும் அறைக்கு அக்கா தான் பணம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இவனுக காலேஜ் முடித்து வேலைக்கு போறாங்க. அதுவும் ஃபீஸூக்கு சரியாகிடும். இந்த நிலையில் நாங்க தேவையில்லாமல் ஆசைப்பட்டு கஷ்டப்பட்டால், மனம் தவறான வழிக்கு கூட போகலாம் என்ற மிதுன்..சாரி சார். எங்களுக்கு வேண்டாம்.

அக்கா, விஷ்வா சாருக்கு கால் பண்ணுங்க.

விஷ்வா வா? அதிரதன் கேட்க, ஆமா சார், உங்க கம்பெனி வொர்க்கர் தான். இங்க பெரிய பிரச்சனை இருந்தால் பார்த்துப்பார் நேத்ரா கூறினாள்.

அப்படின்னா, அவன் தான் எங்களிடம் உங்க நிலையை சொல்லவில்லையா? என்று மனதினுள் நினைத்த அதிரதன், அவன் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தான்.

ஓ..அப்படியா? என்று பட்டும் படாமலும் அவன் கேட்க, அவன் போனை எடுக்க மாட்டேங்கிறான் டா. நீங்க குளிக்க போங்க. நான் ஏற்பாடு செய்கிறேன் என்றாள்.

அக்கா, வேண்டாம். நாங்களே போயிட்டு. உங்களுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்துட்டு யுவியையும் அழைத்து வாரோம் என்றான் அருள்.

இதோட போக வேண்டாம் என்று நேத்ரா சொல்ல, உள்ள வாங்க ஒரு நாள் போடுவதால் ஒன்றுமாகாது என்று அதிரதன் அழைத்தான். அவர்கள் நேத்ராவை பார்த்தனர்.

சரி, இரவுக்கு மட்டும் போட்டுக்கோங்க. போங்க என்றாள்.

அதிரதன் புது ஆடைகளையே எடுத்து தர, குளித்து அணிந்து வந்தனர். வெளியே சோகமாக கடலை பார்த்தவாறு நேத்ரா அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சுக்கா?” கிருஷ்ணன் அருகே வந்து அமர்ந்தான். பாட்டி, திட்டுறாங்க. இப்பவே வரச் சொல்றாங்க. எனக்கு கஷ்டமா இருக்கு என்றாள்.

அலைபேசியை குடுங்க..செல்லம்மாவிடம் நான் பேசுகிறேன் என்றான்.

அவள் புன்னகையுடன், இருக்கட்டும்டா..என்று அலைபேசியை எடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களும் வந்தனர்.

யுவியை அழைச்சிட்டு வர சொல்லீட்டீங்களாக்கா? காவியன் கேட்டான்.

இல்லடா, அதான் விஷ்வா போனை எடுக்கலையே? என்னோட ப்ரெண்டு ஒருவன் இருக்கான். அவனுக்கு போட பயமா இருக்கு. விஷ்வாவோட வேலை பார்க்கிறான்.

அக்காவுக்கு பயமா? அருள் கேட்க, டேய் நானும் மனுசி தான்.

எதுக்குக்கா பயம்?

படிக்கும் போது என் பின்னாலேயே சுத்திகிட்டு இருந்தான். அதான் யோசனையா இருக்குன்னு சொன்னாள்.

இப்ப அவரால உதவ முடியும்ன்னா போடுங்க அக்கா. விஷ்வா சாரிடம் போனை கொடுக்கவாது சொல்லலாமே? சுபி கேட்க, சரி நான் பேசிட்டு வாரேன் என்று விலகி கடல் பக்கமாக நடந்தாள். அதிரதன் அவனறையிலிருந்து அவளை பார்த்தான்.

அவன் குடித்து கிடந்தது. அவனது குளியல், டிரெஸ்ஸிங் அறை. அவனறை மேலே உள்ளது. அவ்வறையிலும் குளிக்க, ஆடையும் உள்ளது. ஆனால் அவன் கீழே இருந்தான்.

“ஹலோ..”என்று இவள் அழைக்க, “ஹலோ..சொல்லுங்க” என்று குரல் கேட்டது. நான் வினு நேத்ரா என்றாள்.

வாட்? வினுவா? வினு டார்லிங்..எங்க இருக்க? எப்படி இருக்க? அவன் ஆர்வமாக பேச, எனக்கு ஒரு கெல்ப் வேணுமே? கேட்டாள்.

சொல்லு டார்லிங். உனக்காக உயிரையே கொடுப்பேன்.

நீ திருந்தவே மாட்டியா?

அதை அப்புறம் பார்த்துக்கலாம். நீ எங்க இருக்க? சொல்லாம போயிட்ட? எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? அவன் கேட்க, சுஜியை உதவிக்கு வர சொல்லணும்.

உதவியா? யாருக்கு? உனக்கா? நான் வாரேன் என்றான்.

இல்லடா..என்று அவள் நிலையத்தை கூறி, அங்க ஆறு மாதம் பொறுப்பேற்று நடத்த சொல்லணும். அதான் அவளோட நம்பர் இப்ப என்னிடம் இல்லை.

சுஜியா? எந்த சுஜி?

சுஜித்ரா.

ஓ.. நம்ம க்ளோஸ் ப்ரெண்டு சுஜியா? ஓ.கே பண்ணிடலாம்.

அப்புறம், விஷ்வாவும் அதில் தான் இருக்கான். நான் அங்கே தான் இருந்தேன். இப்ப ஒரு வேலையா..என்று யோசித்தவள். வெளிய வந்திருக்கேன். விஷ்வாவிடம் பேசலாமா? கேட்டான்.

அவன் முக்கியமான வேலையா இருக்கானே? நான் வரவா? அவன் கேட்க, “வேண்டாம். நீ சுஜிகிட்ட பேசிட்டு சொல்லு” என்று போனை வைத்தாள்.

அதிரதன் வீட்டிலிருந்த காரை பார்த்த நேத்ரா யோசனையுடன், காவியா இங்க வாயேன் என்று அவனை வீட்டினுள் அழைத்து சென்று..சார்..சார்..என்று அதிரதனை அழைத்தாள்.

எதுக்கு கத்துற? சிடுசிடுவென கேட்டான்.

சார், கொஞ்ச நேரம் உங்க கார் மட்டும் தர்றீங்களா?

காரா?

ஆமா சார், யுவியை அழைத்து வரணும். விஷ்வா வேலையா இருக்கானாம். ப்ளீஸ் சார்..

காரை பார்த்து பாலோ செய்து ஆட்கள் வந்துடுவாங்களே? என்று அவன் கேட்க, சார்..அப்படி நடக்காது. அதுக்கு ஒரு வழி இருக்கு என்று அங்கிருந்த சில அட்டை பெட்டிகளை எடுத்து..அதை கிழித்து, கிரீஸ்ஸை அதன் மேல் தடவி நம்பர் பிளேட்டில் ஒட்டி அதில் நம்பரை மாற்றி எழுதினாள்.

ம்ம்..நைஸ். பட்..பிரச்சனையாகாமல்?

“பார்த்துப்பேல்லடா காவியா” நேத்ரா அவனை பார்க்க, அக்கா நான் போகணுமா? என்னால முடியாது.

“டேய், எப்படியும் ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும் காவியா? எத்தனை நாள் தள்ளி இருப்ப?”

மாயா கண்டிப்பா முன்னாடி வருவா.

ஆமா வருவா. ஃபேஸ் பண்ணு..என்றாள்.

யுவிக்காக போடா. ப்ளீஸ், விஷ்வாவுக்கு விசயம் தெரிஞ்சா பிரச்சனை பெருசாகும். அதனால் தான் யோசித்தேன்.

அவன் வொர்க்கர் தான? அவனுக்காக இவ்வளவு யோசிக்கிற? அதிரதன் கேட்டான்.

சார், அவன் என்னோட காலேஜ் ப்ரெண்டு. அவள் ஆசிரமம் வந்த கதையை சொல்லி விட்டு, இப்ப கிளம்பினா தான் இருட்டாகும் முன்னாவது வருவீங்க என்று அவனை கிளப்பினாள்.

அவன் கிளம்ப, அவளுக்கு போன் வந்தது. அதை எடுத்த நேத்ரா, கண்ணீருடன் அமர்ந்தாள். அவளுக்கு அவன் பேசும் ஏதும் கேட்கவில்லை. சுஜி அம்மா, அப்பா விபத்தில் இரு நாட்களுக்கு முன் தான் இறந்திருக்காங்க என்றான் அவன். அவளுக்கு அவள் அம்மா, அப்பா அவள் கண் முன் வந்தனர். கண்கள் இருட்டாக அலைபேசியை அப்படியே போட்டு விட்டு அங்கேயே மயங்கி விழுந்தாள்.

அக்கா..என்று பசங்க பதற, அதிரதன் அவளை துக்கி அறைக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்து, தண்ணீரை தெளித்தான். அவள் அலைபேசி அதே இடத்திலே கிடந்தது. இவர்கள் சத்தத்தில் பயந்து வினு..வினு..என்று அவன் கத்திக் கொண்டிருந்தான். நேத்ரா கண்விழித்து எழுந்து அமர்ந்தாள். அவளை சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க, அதிரதன் அவளை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவள் அலைபேசியை தேடினாள். என்னோட அலைபேசி..அலைபேசி..என்றாள்.

நீ எதுவும் பேச தேவையில்லை. உடல்நலமில்லாத பையனை நீ பார்த்துக்கப் போறியா? உன்னை பார்க்கவே ஆள் போடணும் போல அதிரதன் சொல்ல, அவள் அழுது கொண்டே, என்னோட அலைபேசி என்றாள்.

அருள் எடுத்து வந்து கொடுக்க, அவள் நண்பனுக்கு அழைப்பு விடுத்தாள். அவன் எடுக்கவில்லை.

“என்னாச்சு? எடுக்க மாட்டேங்கிறான்? சுஜி என்ன பண்றான்னு தெரியலை?” என்று பதறினாள்.

நீ முதல்ல உன்னை பாரு அதிரதன் சொல்ல, ப்ளீஸ் சார். கொஞ்ச நேரம் என்னை விடுங்க என்று அவள் அழ, அவன் கோபமாக அறைக்கு சென்றான்.

சற்று நேரத்திலே காவியனும், யுவனும் வந்தனர். யுவனை பார்த்து வேகமாக அவனிடம் வந்த நேத்ரா பின்னே காரிலிருந்து இறங்கியவனை பார்த்து அதிர்ந்து நின்றாள்.

விஷ்வா..நான், என்று பேச முடியாமல் தடுமாறினாள்.

அதான் நானும் கேட்கிறேன். இங்க என்ன செய்ற? விஷ்வா கத்தினான்.

சார், அதெல்லாம் பிரச்சனையில்லை. நாங்க இருக்கோம்ல..என்றான் காவியன்.

உன்னோட வேலைய மட்டும் பாரு. எங்க விசயத்தில் தலையிடாத என்று மீண்டும் அவன் கத்த, அதிரதன் அவனை பார்த்தான். ஆனால் அவர்கள் பேசும் ஏதும் கேட்கவில்லை.

“வா..போகலாம்” என்று விஷ்வா நேத்ரா கையை பிடிக்க, அவள் கையை எடுத்து விட்டாள்.

வினு என்னை கோபப்படுத்தாத. வா..என்றான்.

“நான் எதுக்கு வரணும்? உன்னால ஏதாவது செய்ய முடிந்ததா?” அவளும் கத்தினாள். அவனுக்கு எவ்வளவு கிரிட்டிக்கலா இருக்கு தெரியுமா?

முதல்லவே சேர்மன் சார்கிட்ட, நிலையத்தில் இல்லாத விசயத்தை பேசுன்னு சொன்னேனே கேட்டியா? அவர் உள்ளே வந்திருந்தால் இந்த மாதிரி ஏதும் நடக்காது என்றாள்.

உனக்கு உன்னோட குடும்பம் தான முக்கியம்? போக வேண்டியது தான? எதுக்கு வந்த? நான் என்ன செய்தால் உனக்கென்ன? அவள் கேட்க, அவளை விஷ்வா அடித்தான்.

சார், இங்கிருந்து போங்க. இதுக்கு மேல அக்கா மேல கையை வச்சீங்க. மரியாதை கெட்டுரும் என்று காவியன் சொல்ல, புதுசா வசதியா ஒருத்தனை பார்த்தவுடனே அவள விக்க பாக்குறீங்களா? அவன் கேட்க, ஐவரும் அவனை அடிக்க ஆரம்பித்தனர். அப்பொழுதும் அசையாமல் வேடிக்கை பார்த்தான் அதிரதன்.

“நிறுத்துங்க” என்று கதறி அழுது கொண்டே நேத்ரா, நான் கர்ப்பமா இருக்கேன். இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்? என்று கத்தினாள்.

வினு? என்று அமர்ந்தான் கண்ணீருடன். வேண்டாம் வினு அந்த குழந்தை வேண்டாம் என்றான் அவன்.

அதை சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை என்றாள். அவன் அந்த மணலிலே கையை குத்திக் கொண்டே கதறி அழுதான்.

எனக்கும் என்னை அன்று கல்யாணம் செய்தவனது குழந்தை என்று சொல்ல, அவனால் தாங்கவே முடியவில்லை. சற்று நேரம் அழுது விட்டு எழுந்து, வா..போகலாம் என்றான்.

விஷ்வா, பைத்தியமா உனக்கு? அவள் கேட்க, மற்றொரு கார் ஒன்று வந்தது. காரிலிருந்து குதித்து இறங்கிய அவன், “வினு டார்லிங்” என்று அழைத்துக் கொண்டே அவளிடம் வர, “இவனுமா?” என்று கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

Advertisement