Advertisement

அத்தியாயம் 43

ரணா அதீபனிடம் வந்து “பயமா இருக்குடா” என்று அழுதாள்.

அதிரதன் சென்ற காரின் முன் ஆட்கள் வந்தனர். அவர்களை அடித்து விட்டு மேலும் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். எதிரே ஓடி வந்த நேத்ராவை பார்த்து காரை நிறுத்தினான்.

ராகவ் அவள் பின் ஓடி வர, டேய்..இவரை முதல்ல கூட்டிட்டு போ. காரை எடு என்று ராகவ்விடம் அதிரதன் கூறினான். அவன் செல்ல, அதிரதன் நேத்ரா பின்னே ஓடினான். இருவரையும் பார்த்து நிதின் காரை நிறுத்தினான். அவனை பார்த்து பின்னே வந்த அதீபனும் காரை நிறுத்தினான்.

நேத்ராவை பிடித்து இழுத்து, எங்க போற? அதிரதன் கத்தினான்.

“நான் போறேன். என்னை விடுங்க” என்று அழுது கொண்டே நேத்ரா சொல்ல, காரிலிருந்து நிதின் அவளிடம் வந்து, வினு என்ன பண்ணிட்டு இருக்க?

“நான் போகணும்” என்று நேத்ரா சொல்லி விட்டு அதிரதன் கையை உதறி விட்டு செல்ல, அவளை இழுத்து ஓங்கி அறைந்தான் அதிரதன்.

ரதா, என்ன பண்ற? நிதின் கேட்க, இவள் எங்க போறா தெரியுமா? அந்த பொறுக்கி கொலைகாரனிடம் இவளை கொடுக்க போறாள் என்று சீற்றமுடன் கத்தினான் அதிரதன்.

வினு, ரதா என்ன சொல்றான்?

அப்பொழுதும் நான் போறேன் என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நேத்ரா சொல்ல. வினு உனக்கென்ன பைத்தியமா? நிதுனும் சத்தமிட்டான்.

ஆமாடா, பைத்தியம் தான் பிடிக்குச்சிருக்கு. என்னை என்ன தான் பண்ண சொல்ற? எத்தனை பேர கொன்னுருக்கான்? யாருன்னு தெரியல? அவன் நிறுத்தும் படி தெரியல நிது.

நான் யாருன்னு பார்த்துட்டு தான் வாரேனே? நேத்ரா கேட்டாள்.

பார்த்துட்டு வரப் போறியா? உன்னை விட்டுட்டு தான் அவன் மறுவேலை பார்ப்பான் என்று அதிரதன் கத்தினான்.

இப்ப எதுக்கு திடீர்ன்னு இப்படி நெருக்கடி கொடுக்கிறான்? நிதின் கேட்க, அதிரதன் நேத்ராவை பார்த்தான்.

ரொம்ப முக்கியமா? நான் போறேன் என்று அவள் ஓட, அவள் முன் வந்து நின்றான் அதீபன்.  வீட்டுக்கு போங்க. மத்ததை பேசிக்கலாம் என்று அவன் சொல்ல, என்ன பேசணும்? பேச ஏதுமில்லை என்றாள்.

அதிரதனை அழைத்த சங்கீதன் ஸ்பீக்கரில் போட, “அக்கா போகாதீங்க. நான் அவனை பார்க்க முயற்சி செய்தேன். அவனை பார்க்க முடியலை. ஆனால்..நீங்க வீட்டுக்கு வாங்க. நான் உங்களிடம் பேசணும்” என்று காவியன்  சொன்னான்.

அதிரதனிடமிருந்து அலைபேசியை பிடுங்கிய நேத்ரா, காவியா உனக்கு ஒன்றுமில்லைல்ல.

நீங்க வாங்க என்று அவளை அழைத்தான். ஆனாலும் நேத்ரா மனம் இறங்கவில்லை.

இப்ப காவியன் தப்பிச்சுட்டான். ஆனால் இனி அவன் ஏதும் செய்து விட்டால் என்ற பயம் அவளை பிடிக்க, “நான் வரலை” என்று நேத்ரா நகர்ந்தாள்.

அக்கா, சொன்னா கேணுங்க காவியன் தளர்ந்த குரலுடன் பேச, அவ இப்பவே வீட்டுக்கு வருவா என்று நேத்ரா கையை பிடித்து மீண்டும் அறைந்தான் அதிரதன்.

டேய், நிதின் சத்தமிட, நேத்ரா அதிரதன் கையிலே மயங்கினாள்.

ரதா, மயங்கிட்டாடா என்று நிதின் அவளருகே வர, எங்க வர்ற? காரை எடு. எல்லாரும் ஏறுங்க என்று கார்ட்ஸை மட்டும் அனுப்பி விட்டு நேத்ராவை தூக்கிக் கொண்டு நிதின் காரில் ஏறினான் அதிரதன்.

வீட்டிற்கு வந்தவுடன் நேத்ராவை டாக்டர் முன் போட்டு விட்டு, இவளுக்கும் என்னன்னு பாருங்க. அடிக்கடி மயங்கி விழுந்திடுறா? என்று அதிரதன் சொல்ல, காவியன் பயத்துடன் அவனை பார்த்தான்.

“போச்சு, மாட்டப் போறோம்” என்று காவியன் நினைக்க, சங்கீதன் அவன் கையை ஆதரவாக பற்றினான். காவியன் அவன் நண்பர்களிடம் கூறி விட்டான்.

டாக்டர் நேத்ராவை பார்த்து விட்டு, பதட்டம் டென்சனாக தான இப்படி மயங்கி இருக்காங்க என்று காவியனை பார்த்தார். அவன் பதட்டத்தை கண்டுகொண்ட டாக்டரும் நேத்ராவை பார்த்து விட்டு காவியனுடன் சேர்ந்தார்.

தம்பி, தண்ணிய தெளிச்சு எழுப்புங்க. தண்ணீர் கொடுங்க. இவங்க தண்ணீர் நிறையா குடிக்கணும் என்று காவியனிடம் ஒரு வாரம் நன்றாக ஓய்வெடுங்கள் என்றார்.

சார், வீட்ல வச்சு பார்த்துக்கலாமா? அதிரதன் கேட்க, பார்த்துக்கலாம். யாரு பார்த்துப்பா? டாக்டர் கேட்க, அதான் இவ இருக்காலே என்று நேத்ராவை காட்டினான்.

இவங்களா? இந்த பொண்ணுமே ஓய்வெடுக்கணுமே? இவங்களுக்கும் ஹல்த் அப்படி நன்றாகவெல்லாம் இல்லை என்றார்.

நாங்க பார்த்துக் குறோம் டாக்டர் என்ற குரல் கேட்டு அனைவரும் பார்க்க, மிதுனும் அவன் நண்பர்களும் கண்ணீருடன் காவியனை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இல்லடா, உங்க உதவி கண்டிப்பாக நிலையத்துக்கு தேவைப்படும் அதிரதன் சொல்ல, சார் ஜீவாவும் அவனோட ப்ரெண்ட்ஸூம் இருக்காங்க என்றான் கிருஷ்ணன்.

அவங்க ஸ்கூலுக்கு போற பசங்கடா..

ஆமா சார், அவனுக ஸ்கூல் பசங்க தான். அவங்க வாலி பால் பிளேயர்ஸ். அவங்களாலும் சமாளிக்க முடியும் என்றான் மிதுன்.

இல்லப்பா, எனக்கு சரியா படலை அதீபன் சொல்ல, அனைவரையும் பார்த்து காவியனை நிலையத்துக்கு அழைச்சிட்டு போகலாமே? அங்க வச்சே பார்த்துக்கலாம்ல்ல சங்கீதன் கேட்டான்.

பண்ணலாம். ஆனால் அக்கா..என்று மிதுன் நேத்ராவை பார்க்க, கண்ணன் தண்ணீர் தெளிக்க எழுந்து அமர்ந்தாள் நேத்ரா.

காவியனை பார்த்து, “நீ ஓ.கே தான?” நேத்ரா கேட்க, நான் எனக்கு யாருமில்லைன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனால் எல்லாரும் எனக்காக எவ்வளவு பேசுறீங்க? என்று எல்லாரையும் பார்த்தான்.

என்னடா யாருமில்லை? என்று அவன் வாயிலே தன் வெண்டைபிஞ்சு விரல்களால் சுண்டினாள் நேத்ரா.

அது சரி, நீங்க எங்க போக போறீங்க? காவியன் கேட்க, நான் வந்து..என்று அவள் காவியனையும் அதிரதனையும் பார்த்தாள். அதிரதன் அவளை முறைத்து பார்த்து விட்டு கோபமாக திரும்பிக் கொண்டான்.

சார், உங்க கோபத்தை அப்புறம் வச்சுக்கோங்க. முதல்ல டாக்டரை விட்டுட்டு வாங்க என்று காவியன் சொல்ல, அதிரதனை எல்லாரும் பார்த்தனர்.

ஆமாப்பா, போக காரை கூட எடுத்துட்டு வரலை. தம்பி தூக்கி வராத குறை தான் என்று டாக்டர் அதிரதனை பார்த்து நொந்து கொண்டார்.

“நாங்க விட்டுட்டு வாரோம்” என்று ராகவ்வும், கண்ணனும் கிளம்ப, “நானும் வாரேன்டா” என்று சங்கீதனும் கிளம்ப, விட்டவுடன் எங்கும் நிற்காமல் வந்திருங்கடா என்று அதிரதன் கூறினான்.

தம்பி, பிள்ளைய முதல்ல வேற இடத்துக்கு மாத்துங்க என்று நேத்ராவை டாக்டர் பார்த்துக் கொண்டே சென்றார்.

அவர்கள் சென்றவுடன் சாரி சார், கொஞ்சம் கவனமில்லாமல் விட்டுட்டேன் என்றான் காவியன் அதிரதனிடம்.

அதிரதன் அவனை பார்க்க, சார் அவன் சொன்னது போல் உங்க தங்கச்சிய என்று காவியன் சொல்ல, மற்றவர்களுக்கு புரிந்தது. பல்லை கடித்துக் கொண்டு அவனை என்ன செய்யப் போறேன் பாரு என்று அதிரதன் கர்ஜித்தார்.

அதிரதனை அருகே அழைத்த காவியன், சார் என்னோட பாக்கெட்டில் இருப்பதை எடுங்க என்றான். அதிரதன் எடுத்து அலைபேசியா? கேட்டான்.

அண்ணா, அதை கொடு என்று அதீபன் வாங்கி அதோட ஃபீச்சர்ஸ் அனைத்தையும் சொன்னான். இப்ப இதுக்கான பாஸ்வேர்டை கண்டுபிடிக்கணுமே? என யோசனையுடன் அதனை பார்த்து விட்டு, இதை எங்கிருந்து எடுத்த? அதீபன் கேட்டான்.

சார், உங்க தங்கச்சிய கடத்திய காரிலிருந்து தான் எடுத்தேன். அவனை பார்க்க முடியலை. அதற்கு பதில் ஒரு விசயம் மட்டும் கிடச்சது என்று அனைவரையும் பார்த்தான். எல்லாரும் ஆர்வமுடன் அவனை பார்த்தனர்.

அவனுக்கு இடது கையில் ஆறு விரல்கள் இருக்கும் என்றான். ஆறு விரலா? என்று கேட்டுக் கொண்டே நேத்ரா எழுந்தாள்.

அக்கா, அவன் உங்க பேட்ஜ் தான். அதிரதன் சாருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நிதினை பார்த்து, ஆறு விரல் உடையவர்கள் மிகவும் அரிதானவர்கள். நினைப்பதை நடத்தியும் காட்டுவர். அவன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா சார்? காவியன் கேட்டான்.

நிதினும் நேத்ராவும் பார்த்துக் கொண்டனர்.

என்னாச்சு? தெரியுமா? என்று அதீபன் கேட்க, அவன் எங்க வகுப்பு தான் அதிகம் படிக்க மாட்டான். விளையாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் என்ற நேத்ரா, நிது அவன் தானா? என்று கேட்டாள்.

“ஆம்” என்று தலையசைத்தான். அவன் பெயர் என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “பரத் ராஜ்” என்றனர்.

அக்கா, ரொம்ப பில்டப் கொடுக்குற மாதிரி இருக்கு? கிருஷ்ணன் கேலி உரைக்க, அதிரதன் அவனை முறைத்தான்.

டேய், அவனுக்கு தெரியாத விளையாட்டே இல்லை. அவன் அப்பவே மாடு மாதிரி உடம்பை வளர்த்து வச்சிருப்பான் என்று நிதுவை பார்த்து, அவன் மட்டும் இருக்கக்கூடாது நிது. இதை என்னால் ஏத்துக்கவே முடியாது என்று நேத்ரா சோர்வுடன் அமர்ந்தாள்.

அவன் தான் உன் பின் சுற்றியது கூட கிடையாதே? நிதின் சொல்ல, அங்கே வந்த சங்கீதன்..சார் டாக்டரை விட்டு வந்துட்டோம். அப்புறம் எல்லாரும் தங்கள் காதலை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று காவியனை பார்த்தான். எல்லாரும் காவியனை பார்த்தனர். அனைவருக்கும் புரிந்தது.

காவியன் சங்கீதன் சொன்னதை கண்டுகொள்ளாமல், அக்கா..என்று நேத்ரா கையை பிடித்து, நீங்க எதுக்கு உங்க தம்பியிடம் அம்மா, அப்பா கொலை செய்யப்பட்டதை மறைச்சீங்க? அங்க தான் பிரச்சனை தீவிரமாக ஆரம்பித்து இருக்கு?

அவள் பேச ஆரம்பிக்க, “அக்கா, அவன் மிரட்டினான்னு சொல்லாதீங்க” என்றான். அவள் அமைதியாக இருந்தாள்.

ரதா, நீ இரு. நாங்க காவியனை நிலையத்துல்ல விட்டுட்டு நர்ஸ் அரேஜ் பண்ணித் தாரோம் என்றான் நிதின்.

நர்ஸ் வேண்டாம் சார், நானே பார்த்துக்கிறேன் காவியன் சொல்ல, ஆமா சார் நர்ஸ் வேண்டாம். டாக்டரை ஒரு முறை மட்டும் அனுப்புங்க. எங்க ளோட காவியனை நாங்க பார்த்துக்கிறோம் என்றான் அருள்.

“நானும்” என்று நேத்ரா ஆரம்பிக்க, “ஷ்..வாயை திறந்த கொன்றுவேன்” என்று அதிரதன் அவளை மிரட்டினான். அவள் பாவமாக எல்லாரையும் பார்த்தாள்.

சார், அக்காவை வீட்டுக்குள்ள வச்சிருக்க வேண்டாம். அவங்க அறையில போட்டு அடைச்சு வச்சிருங்க. எப்ப பாரு எல்லாரையும் பயமுறுத்துறதே வேலையா போச்சு என்று கிருஷ்ணன் நேத்ராவை முறைத்தான்.

என்னை எதுக்குடா பூட்டி வக்க சொல்ற? அவள் கேட்க, அவன் சரியா தான் சொல்றான் என்ற நிதின், “காலெடுத்து நீ வெளிய வச்ச செத்த” என்றான்.

ஏன்டா, எல்லாரும் இப்படியே சொல்றீங்க? நேத்ரா க்யூட்டாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, “அக்கா போதும், இந்த ரியாக்சனை மாத்துங்க. நீங்க என்ன செஞ்சாலும் யாரும் மசிய மாட்டோம். அப்படி ஒரு காரியத்தை செய்ய துணிஞ்சுட்டீங்க” என்றான் மிதுன் கோபமாக.

மிதுன் நீயுமா? அவள் உதட்டை பிதுக்க, அதீபன் சிரித்தான்.

இப்ப தான் இவளோட பைத்தியத்தை சரி செஞ்சுருக்கு. உனக்கும் பைத்தியம் பிடிச்சிருச்சா? அதிரதன் கேட்க, இல்ல இல்ல க்யூட்டா பண்றாங்க என்றான் அதீபன்.

என்ன சொன்ன? எனக்கு கேட்கல? என்று நிதின் அவனிடம் வந்தான். அய்யோ..சும்மா ஒரு ரசனை தான். உங்க தங்கச்சிட்ட சொல்லீடாதீங்க என்றான் அதீபன்.

ஒரு நிமிசம், நீங்க இருவரும் உங்க வீட்ல இருந்தாலும் உங்க லவ்வரோட கொஞ்சம் எல்லார் முன்னும் பார்த்து நடந்துக்கோங்க. சிலர் அங்க வயித்தெரிச்சல் படுறாங்க என்று நிதின், அதீபனை பார்த்து சங்கீதன் கூறினான்.

காவியன் அவனை பார்த்தான்.

வயித்தெரிச்சலா? எங்க வீட்லயா? அதீபன் கேட்க, டேய் என்னடா பண்ணீட்டு இருக்கீங்க? அதிரதன் கேட்க, இருவரும் அசட்டு புன்னகையை உதிர்த்தனர்.

ஓ..அவளுக்கு பொறாமையா இருக்கா? நிதின் கேட்க, உங்க கேக்க முடிச்சீங்களா? ராகவ் கேட்க, இதெல்லாமா உங்களிடம் சொன்னா? நிதின் கேட்டான்.

ஆமா, ஒரு ஃபீஸ்ஸாவது கொடுத்துருக்கலாம்ல்ல. அதான் புலம்பிக்கிட்டு இருந்தா என்றான் கண்ணன்.

யாரை பத்திடா பேசுறீங்க? அதிரதன் கேட்க, உன்னோட செல்ல குட்டிம்மா தான் என்றான் நிதின்.

அதிரதன் காவியனை பார்க்க, அவன் அதிரதனை பார்த்து, சார் நாங்க போயிட்டு கால் பண்றோம் என்றான்.

காவியனால் எழ முடியாததால் அவனை அதீபன் காரில் தூக்கி வந்து போட்டனர். அவனுடன் மிதுனும் சங்கீதனும் மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் நிதினுடன் சென்றனர்.

ஏற்கனவே ரணாவையும் அவன் குடும்பத்தையும் வீட்டிற்கு ஆட்களை வைத்து அனுப்பி இருப்பர். இப்பொழுது அதீபன் காவியனை பார்த்துக் கொண்டே வந்தான்.

நல்ல வேலைடா நாங்க வந்துட்டோம். இல்லைன்னா என்ன செஞ்சிருப்ப? அப்பொழுது கூட யாரையும் கூப்பிட தோணலையாடா? சங்கீதன் கேட்க, “தோணலைடா” என்றான் காவியன்.

“இனியாவது ஏதாவது ஒன்றுன்னா சொல்லு” என்றான் சங்கீதன். ம்ம்..என்று பதிலளித்து விட்டு அதீபன் அவனை பார்ப்பதை காவியன் பார்த்தான்.

ஏதும் கேட்கணுமா சார்? அதீபனிடம் கேட்டான்.

இவ்வளவு வலியிலும் சாதாரணமா இருக்கிறியே? அதான் பார்த்தேன்.

யாருமில்லாத எங்களை நாங்கள் தான் பார்த்துக்கணும். சங்கீதன் காவியனை முறைத்தான்.

எதுக்குடா முறைக்கிற? அதான் யாருமில்லைன்னு சொன்னேல்ல. இப்ப எதுக்கு பேசுற? சங்கீதன் கோபமாக கேட்டான்.

உண்மை தானடா. நீ என்னோட ப்ரெண்டு மட்டும் தான? ப்ரெண்ஷிப் வேறு குடும்பம் வேறு. உன்னை என்னோட அண்ணன் தம்பின்னு சொல்ல முடியுமாடா? காவியன் கேட்க,

ஏன்டா முடியாது? என அமைதியாக இவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தவன் தன் கேள்வியை எழுப்பினான் மிதுன்.

என்னடா புரியாம பேசுற? காவியன் மிதுனை பார்க்க, சரிடா நான் கேட்பதற்கு பதில் சொல்லு. ஒரு வேலை உனக்கு குடும்பம் இருந்து இனி உன்னை தேடி உன் முன் வந்தால் என்ன செய்வ? என்று மிதுன் கேட்க, அதீபன் காரை நிறுத்தினான். சங்கீதனும் அதீபனும் மிதுனை பார்த்தனர்.

என்னாச்சுடா உனக்கு? இப்படி பேசுற? காவியன் கேட்க, ஆமா காவியா நான் கேட்டதற்கு பதில் வேண்டும் என்றான் மிதுன்.

நான் பிறந்தவுடனே நம்ம நிலையத்துக்கு வந்துட்டேனாம். உனக்கு தெரியுமா? காவியன் கேட்க, மிதுன் அமைதியாக இருந்தான்.

இப்ப என்ன? பதில் தான வேணும். “சார் காரை எடுங்க” என்று அதீபனிடம் கூறி விட்டு, ஒரு வேலை குடும்பம் என்று யாரும் வந்தால் என்னால அவங்கள ஏத்துக்க முடியாதுடா. இத்தனை வருடங்களாய் இல்லாமல் இப்ப எங்கிருந்து எதுக்கு வந்தீங்கன்னு கேட்பேன்? எனக்கு எப்போது என் வீடு “நம்ம நிலையம் தான்டா” என்றான் காவியன்.

நிஜமாக தான் சொல்றீயா? மிதுன் கேட்க, ஆமாடா என்ற காவியன், என்ன திடீர்ன்னு கேக்குற? என்று மிதுனிடம் கேட்டான்.

எல்லா ஆசிரமத்திலும் யாரையாவது தத்து எடுத்துட்டு போவாங்க. ஆனால் நம்முடையதில் யாரும் வந்ததில்லையே? அதான்..திடீர்ன்னு தோன்றியது கேட்டேன் என்றான்.

சரி, நீ என்ன செய்வ? காவியன் மிதுனை திருப்பி கேட்டான்.

“நான் அவங்களோட போயிருவேன்டா” என்றான் மிதுன்.

என்ன இப்படி சொல்றேன்னு பார்க்கிறியா காவியா? ஆமாடா சின்ன வயசுல இருந்தே அநாதை பட்டம் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு. அதை போக்க செல்வேன். நீ சொன்னது போல் நம்ம நிலையம் தான் நம் முதல் வீடு என்றான் மிதுன். மற்ற இருவரும் இவனை பார்த்துக் கொண்டே சென்றனர். மிதுனின் திடீர் கேள்வி, இருவரின் பதில்கள் அதீபன் மனதில் தெளிவாக பதிந்து விட்டது.

அதிரதன் கோபமாக அறைக்கு சென்றான். நேத்ரா செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருந்தாள்.

சார், ரொம்ப நேரமாகிடுச்சு. சாப்பிட வாங்க என நேத்ரா அவனறைக்கு வெளியிருந்து அழைத்தாள்.

எனக்கு வேலையிருக்கு. தொந்தரவு செய்யாத.

சார், சாப்பிட்டு வேலைய பாருங்க.

நான் என்ன செய்தால் உனக்கென்ன? உன்னோட வேலைய மட்டும் பாரு என்று சொன்னான். நேத்ரா அமைதியாக உணவை சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்து விட்டு, அங்கேயே தலை சாய்ந்து தூங்கி விட்டாள்.

சற்று நேரம் கழித்து அதிரதன் வெளியே வந்தான். நேத்ராவை பார்த்து அருகே வந்து அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

நேத்ரா விழித்து அவனை பார்க்க, அவன் திரும்பிக் கொண்டான். அவள் அவனை கண்டுகொள்ளாது உணவை எடுத்து வைத்தாள்.

அதிரதன் அவளை முறைக்க, “சார் நீங்க என்னை முறைத்தே வயிற்றை நிரப்ப முடியாது. சாப்பிடுங்க சார்” என்றாள்.

“நீ போகணும்ன்னு சொன்னேல போ” என்று அதிரதன் கோபமாக சொன்னான். அவனை முறைத்து பார்த்துக் கொண்டே அவளும் நின்றாள்.

என்ன? முறைக்கிற? எனக்கு இது வேணாம். வேற தட்டுல எடுத்து வை என்றான். அவள் எடுத்து வைத்து விட்டு அறையை நோக்கி சென்றாள்.

அவள் ஓடி முன் வந்து, நான் இன்னும் சாப்பிட்டே முடிக்கல அதுக்குள்ள எங்க போற? அதிரதன் கேட்க, சார் நீங்க தான் என்னை போக சொன்னீங்களே?  நான் எடுத்து வைக்க வேண்டாமா? நேத்ரா கேட்டாள்.

ஹேய், அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவேனா? நீ என்ன செஞ்சன்னு கொஞ்சம் யோசித்து பார். நாங்க தடுக்கலைன்னா என்ன நடந்திருக்கும்? அதிரதன் சீற்றமுடன் கேட்க, நேத்ராவின் மனமும் அடித்துக் கொண்டது. கண்ணீர் கரித்துக் கொண்டு வர, அதிரதன் முன் அழ முடியாமல் திரும்பி நின்றாள் கண்ணீருடன். அவள் முன் வந்த அதிரதனை விலகி வேகமாக அறைக்குள் சென்று கதவை தாழிட்டு அழுது தீர்த்தாள்.

வினு, வெளிய வா. இல்லை நான் சாப்பிட மாட்டேன் அதிரதன் சொல்ல, சார் நான் வர நேரமாகும் என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள். அந்த பரத்தின் நினைவுகள் அவளுள் எழுந்து பயமுறுத்தியது. அவன் எனக்காக கொலை செய்கிறானா? அவன் தான் நிறைய பொண்ணுங்களுடன் டேட் செய்திருக்கானே? என்று அவள் சிந்தனையுடன் தண்ணீரை திறந்து விட்டு நின்றாள். அவள் மனம் அமைதி பெறவேயில்லை. அவன் மீதுள்ள பயத்திலே அவள் மனம் உலன்று கொண்டிருந்தது. நேத்ராவால் நிற்க முடியாமல் கால்கள் தளர்ந்தது. புடவை முழுவதும் நனைத்திருக்க, சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள். அவள் நா வறண்டது.

அதிரதன் உதவி தேவை என அவள் மெதுவாக வெளியே நகர்ந்து வந்து அலைபேசியை எடுத்து அவனை அழைத்தாள். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

உள்ளிருந்து என்னை அழைக்கிறாளா? என்று எழுந்து வினு, அறைக்குள்ள தான இருக்க? அவன் கேட்க, சார் முடியல. ப்ளீஸ் வாங்க என பேச முடியாமல் பேசினாள். பதறிய அதிரதன் அவனிடம் உள்ள மற்றொரு சாவியை எடுத்து திறந்து அறைக்குள் வந்தான்.

தண்ணீர் இல்லாமல் ஏதோ உயிரே போவது போல் இருந்தது நேத்ராவிற்கு. மேலும் குளியலறையில் தண்ணீர் முன் சாய்ந்து கண்ணை மூடினாள். அவளை பார்த்து பதறி வந்த அதிரதன் கையை பிடித்து சார், என்னால முடியாது. இங்கேயே தண்ணீர் முன்..என்று அவன் மீது சாய்ந்து, “சற்று நேரம் மட்டும் சார்” என்று அவள் சொல்ல, அவனும் அங்கேயே அமர்ந்து அவளை தன் மடியில் அவள் முகத்தில் தண்ணீர் விழும் படி படுக்க வைத்து, அவள் ஆடையை சரி செய்து விட்டு கண்ணை மூடினான்.

சற்று நேரத்தில் கண்ணை விழித்த அதிரதன் நேத்ராவை பார்த்தான். அவனது இடையை இரு கைகளால் இறுக்கி அணைத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகையுடன் தண்ணீரை நிறுத்தினான். அவளும் மெதுவாக கண்ணை பிரித்தாள் மிகச் சோர்வுடன்.

அதிரதனை பார்த்துக் கொண்டே பார்வையை தாழ்த்தி அவள் அவனை அணைத்திருப்பதை பார்த்து, எழுந்து அமர்ந்தாள். சாரி சார்..எனக்கு என்று தலையை பிடித்தாள். அவன் புன்னகையுடன், இதே போல் எத்தனை வருடமானாலும் இருக்கலாம் என்றான்.

அவளால் அவன் பேச்சுக்கு பேச்சு இப்பொழுது கொடுக்க முடியவில்லை. அதை உணர்ந்த அதிரதன், வினு உடனே எழுந்திருக்காத..என்று அவளை தூக்கி அவன் மடியில் குழந்தையை போல் அமர வைக்க, பேச முடியாமல் வினு தடுக்க..நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன் வினு என்று அவன் சொல்ல, அவளாகவே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் கண்ணீருடன்.

கழற்றி வைத்திருந்த சட்டையை எடுத்த அதிரதன் அவன் மேல் போட்டான். அவள் அதை இழுத்துக் கொண்டு, அப்பாவை பார்க்கணும் என்று அழுதாள்.

எதுக்கு வினு உனக்கு இப்படி இருக்கு? உடலுக்கு ஏதும் செய்யுதா? ஏதும் பிரச்சனையா? அதிரதன் கேட்க, சாரி சார் என்னால சொல்ல முடியாது. ஆனால் உங்களிடம் சொல்லாமல் போக மாட்டேன் என்று முணுமுணுத்தாள்.

போக போறீயா? உன்னை விட்டு என்னால் இனி இருக்க முடியாது வினு. உன்னை தொந்தரவு கூட செய்ய மாட்டேன். இதே போல் இருந்து கொள்ளலாமா? அவன் கேட்க, நேத்ரா அழுதாள். எனக்கு பயமா இருக்கு. இனி அவன் உங்களையும் டார்கெட் செய்வான்ல சார்?

அதெல்லாம் எனக்கு ஏதும் ஆகாது. வினு, நான் கேட்டதன் பதில் அவன் கேட்க, அவள் அழுகை நின்று அவனை பார்த்து விட்டு மயங்கினாள்.

இது சரியில்லை. சாருவை மீண்டும் அழைக்கணும் போலவே? அவன் நினைக்க, சார் எனக்கு இப்படி தான் இருக்கும். ஏன்னா..நான் என்று வாய் குலறலுடன் சொல்ல வந்த நேத்ரா, மனசு உடைந்திருக்கேன் என்று அவனை இறுகிக் கொண்டாள்.

நீ மயங்கலையா?

மயக்கம் வருது சார். ஆனால் நான் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றாள்.

வினு, எதுக்கு கட்டுப்படுத்துற? நீ தூங்கு. ஆனால் ரொம்ப நேரமாகவே ஈரமுடன் இருக்க? உன்னால் ஆடை மாற்ற முடியுமா?

நோ..சார், இப்படியே கூட இருக்கேன் என்று குலறியவாறு பேசிக் கொண்டு, ஏதோ சொல்ல வந்து அவன் கையை இறுக பற்றி தோதாக அவன் மீது சாய்ந்து தோளோடு அவனை கட்டிக் கொண்டாள்.

நீ தப்பா எடுத்துக்கலைன்னா, நான் கண்ணை மூடிக் கொண்டு மாற்றி விடவா? காய்ச்சல் வந்து விடாமல் அதிரதன் கேட்க, அவள் ஏதும் பேசவில்லை. அவளை பிரித்து நகர்த்தி வெளியே தூக்கி வந்து சாய்வு நாற்காலியில் போட்டு விட்டு, அவனது ஜீன்ஸ் டாப்பை எடுத்துக் கொண்டு, அவனது கண்ணை துணியால் கட்டிக் கொண்டான்.

அவளது ஆடையை மாற்றி விட்டு, கண்ணை திறந்து அவளது கூந்தலை துவாலையால் துவட்டி விட்டான். அவள் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று விட்டாள். பின் அவளை தூக்கி படுக்கையில் போட்டு விட்டு அருகிலேயே அமர்ந்தான். நேத்ராவின் ஸ்கேன் ரிப்போர்ட் அதிரதன் கண்ணில் பட்டது. அவன் எழ, அவள் அவன கையை பிடித்திருந்தாள். அவளருகிலே அவள் மீது கை போட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

மாலையில் முதலில் நேத்ரா தான் விழித்தாள். அதிரதனை பார்த்து நகர்ந்தாள். பின் ஆடையை பார்த்து பதறினாள். அவன் கண்ணில் கட்டிய துணி அருகிலேயே இருந்தது. அதை பார்த்து விட்டு அவனை பார்த்து, அவனை நெருங்கினாள். நேத்ராவிற்கும் அதிரதனுக்கும் உடல் கொதித்தது. அவன் எழவேயில்லை. அவள் சோர்வு அவளை எழ விடாமல் செய்தது. ஆனாலும் எழுந்து அவனுக்கு தேவையானதை செய்து வைத்து விட்டு, ஈரத்துணியை அவன் நெற்றியில் போட்டு, தானும் போட்டுக் கொண்டு அவனருகிலே படுத்துக் கொண்டாள்.

அதிரதன் விழித்து இருவரையும் பார்த்து விட்டு, வினு உனக்கும் காய்ச்சலாக இருக்கா? என்று அவளது கழுத்தில் தொட்டு பார்த்து, நீ இன்னும் சாப்பிடலைல்ல என்று எழுந்தான்.

சார், நீங்க ஓய்வெடுங்க என்றாள்.

நீ சாப்பிடு, நான் படுத்துக் கொள்கிறேன் என்றான்.

சார், நமக்கு கஞ்சி செய்து வச்சிருக்கேன் இருவருமே சாப்பிடலாம். இருங்க எடுத்து வாரேன் என்று வினு எடுத்து வர, இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டனர்.

அதிரதன் அலைபேசி அழைக்க, எடுத்து இங்க பாரு நாளைக்கு வரை  தொந்தரவு செய்யாத. எங்களுக்கு பீவரா இருக்கு. நாங்கள் ஓய்வெடுக்கணும் என்றான்.

வினுவுக்குமாடா? நிதின் கேட்க, ஆமாடா. எங்களை விடு.

டேய், உதவிக்கு வரவா? நிதின் கேட்க, தேவையேயில்லை. நாங்களே பர்த்துப்போம் என்றான் நேத்ரா.

வினு, நீயா பேசுற?

ஆமாடா, நாங்க பார்த்துக்கிறோம் என்று அழுத்தி சொல்லிய நேத்ரா அதிரதனை பார்த்து புன்னகைத்து படுத்துக் கொண்டாள். ஏதோ வினு, அவனை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதை போல் மகிழ்ச்சியடைந்தான் அதிரதன்.

நிதின், அதீபனுக்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்தாள் ரணா. ஓரிடத்தில் நில்லாது பதட்டமாக அங்கும் இங்கும் நடப்பதும், வாயிலை பார்ப்பதும், கடவுளிடம் வேண்டுதல் விடுப்பதுமாக இருந்த ரணாவை வீட்டினர் அனைவரும் புதிதாக பார்த்தனர்.

நம்ம பொண்ணு அந்த பையனை நிஜமாக தான் காதலிக்கிறாள் அண்ணா யசோதா சொல்ல, செழியன் அவளை பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் இருந்தார்.

நிதின், அதீபன் கார் வந்ததும், காவியனுக்கு ஒன்றுமில்லைல்ல. அவன் நல்லா தான இருக்கான் என்று அவர்கள் காரை திறந்து இறங்கவும் கேட்க ஆரம்பித்தாள். ஒருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அவளை ஓரிடத்தில் அமர வைத்தனர். அதீபன் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதை தட்டி விட்ட ரணா, “உயிரே போறது போல இருக்கு சொல்லித் தொலைங்கடா” என்று கத்தினாள்.

அவன் நிலையத்தில் தான் இருக்கான். பார்க்கணும்ன்னா போய் பார்த்துக்கோ என்றான் நிதின். அவள் “ஓ”வென ஒப்பாரி வைக்க, வீட்டிலிருந்து எல்லாரும் வெளியே வந்தனர்.

அவனுக்கு ஏதும் ஆகி விட்டதாடா? காப்பாற்ற முடியாதா? ஆத்விகா கேட்க, ரணா மேலும் அழுதாள். சிவநந்தினியும் யசோதாவும் ரணாவை அணைக்க, அவனுக்கு அதிகப்படியான அடிதான். அவன் தைரியமா தான் இருக்கான் என்றான் நிதின்.

“அப்பாடா” என்று அனைவரும் நகர, “வந்தவுடன் சொல்லி இருக்கலாம்ல்ல” என ரணா இருவரையும் அழுது கொண்டே அடித்தாள். இருவரும் அவளை தோளோடு அணைத்துக் கொண்டனர்.

ஏய், குட்டிப்பிசாசு உன் காதலுக்கு எதிரி நம் அப்பாவை விட வில்லாதி வில்லனே காவியன் தான் என்றான் அதீபன்.

என்னடா சொல்ற? நிதின் கேட்க, அவன் நண்பர்களிடம் பேசியதை வைத்து சொல்கிறேன். ரணா நல்ல விசயம் என்னன்னா? காவியன் அந்த பொண்ணு மாயாவை காதலித்தே இருக்க மாட்டான்.

அவனுக்கு தனியே குடும்பம் அமைய பிடிக்கவில்லை. அந்த நிலையத்தில் உள்ளவர்கள் தான் குடும்பமாம். அதனால தான் எப்போதும் அவங்களோட இருக்கணும்ன்னு தான் அந்த பொண்ணை பார்த்து பிடிக்க ஆரம்பித்து இருக்கு.

அங்கிருக்கும் ஏதாவது ஓர் பொண்ணை கூட காதலிப்பான். ஆனால் ரணா உன்னை அவன் காதலிப்பது கஷ்டம்.

ஏன்டா, இப்படி பிள்ளைய பயமுறுத்துறீங்க? யசோதா திட்டினார்.

இல்ல அத்தை, உண்மையை தான் சொல்றேன். அவன் நிலையில் இருந்து பார்த்தால் தான் அவன் கஷ்டம் புரியும். ரணா உன்னால அங்கே இருக்க முடியுமா? அதீபன் கேட்க, ஏய். என்னடா பேசுற? செழியன் கர்ஜித்தார்.

அப்பா, அவனுக்கும் நம் பிரணவியை பிடித்தது போல் தான் இருக்கு. ஆனால் அவன் எதையும் காட்டிக் கொள்ளவே மாட்டான். ரணாவே காதலை சொன்னாலும் ஏத்துக்க மாட்டான். அதுக்கு காரணம்? என்று ரணாவை பார்த்தான் அதீபன்.

காரணம்..நாம் எல்லாரும் தான் என்றான் நிதின்.

நிது, நீங்களா? என்ன சொல்ற? ரணா கேட்டாள்.

ஆமா, அப்பா அவன் சிறுவயதிலிருந்தே உங்களது பாதுகாப்பில் வளர்ந்தவன். உங்களுக்கு தெரியலைன்னாலும் அங்கிருக்கும் எல்லா பசங்களுக்கும் இருக்கும் உறவே நாம் தான். நாமில்லாமல் அந்த நிலையமும் இல்லை. அவர்களும் இல்லை. ரணாவை காதலிப்பதாக அவனால் உங்கள் முன் வந்து நிற்க முடியாது. அதை துரோகமாக நினைப்பான். அதை விட இப்பொழுது அவனிடம் ஏதுமில்லை. நண்பர்களுடன் சிறு விடுதி அறையில் தான் இருக்கிறான். பணம் கூட பொறுப்பை நடத்தும் பொண்ணு தான் கொடுக்கிறாள்.

நம்ம ரணா அங்க சென்று எல்லாருடன் பழகி அவர்களுள் ஒருவளாகினால் தான் அவன் கொஞ்சமாவது ரணாவின் காதலை பற்றி யோசிப்பான். நான் ரணாவின் காதலுக்காக பேசுகிறேன். நானும் அவன் நிலையில் இருந்து தான் வந்தேன் என்று நிதின் ஆத்வியை பார்த்துக் கொண்டே கண்கலங்க உள்ளே சென்றான். நிதின் குடும்பமும் ஆத்வியும் அவனை சமாதானப்படுத்த சென்றனர்.

தம்பி, இப்ப எப்படி இருக்கான்? செழியன் கேட்க, அவன் சேதமாகி தான் இருக்கான். வலியை மறைத்துக் கொண்டு புன்னகையை காட்டிக் கொண்டிருக்கிறான் என்று அதீபன் ரணாவை பார்த்தான்.

வாம்மா, நாம போய் பார்த்துட்டு வரலாமா? செழியன் கேட்க ரணா அவரை கண்ணீருடன் அணைத்து “தேங்க்ஸ்ப்பா” என்றாள்.

அப்பா, நீங்க போனா உங்க பொண்ணை யாருமே கண்டுகொள்ள மாட்டாங்க. அவள் பார்த்துட்டு வரட்டும். நான் சங்கீதனை வர சொல்லி இருக்கேன் என்று அதீபன் சொல்ல, அவனும் வந்தான்.

ரணா வீட்டினரை பார்க்க, “போயிட்டு வாம்மா” என்றார் செழியன். சங்கீதனிடம் “அப்பா காவியனை ஏத்துக்கிட்டாங்கடா” என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டே ஏறினாள் ரணா.

“பார்த்து போயிட்டு வாம்மா” என்றனர் அனைவரும். கையசைத்து விட்டு சங்கீதனுடன் தன் காவியனை சந்திக்க நிலையத்திற்கு சென்றாள் ரணா.

சங்கீதா, காரை நிறுத்து என்ற ரணா, “சிவநந்தினி அன்பு நிலையத்திற்கு” வெளியே இறங்கினாள்.

ரணா, வா..உள்ள போகலாம்.

இறங்கி வா, நடந்து போகலாம் என்றாள் ரணா. இருவரும் உள்ளே சென்றனர். மிகவும் அமைதியாகவும் யோசனையுடனும் ரணா நடந்து வர, அவளை பார்த்து சங்கீதன், என்ன யோசிக்கிற? என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை” என்று அவள் சொல்லிக் கொண்டே முன்னேறினாள். அருணா அவளை பார்த்து, நீங்களா? வாங்க என்று இருவரையும் அழைத்து வந்தாள்.

பாட்டி, ரணாவை பார்த்து என்னம்மா திடீர்ன்னு வந்துருக்கீங்க? எனக் கேட்டார்.

“சும்மா தான் பார்க்கலாம்ன்னு வந்தேன்” என்றாள்.

“உட்காரும்மா” என்று அவளை அமர வைத்து உபசரித்தனர்.

எனக்கு எதுவும் வேண்டாம். நான்..என்று பாட்டியை பார்த்தாள்.

ஜீவா அவளை பார்த்து, அக்கா எப்ப வந்தீங்க? “அண்ணா, உள்ள தான் இருக்காங்க” என்று நேரடியாக சொல்லி அவளை அழைத்தான்.

எந்த அண்ணா? என்று பாட்டி அவனிடம் கேட்க,” காவியன் அண்ணா தான்” என்று ஜீவா அவளை பார்த்தான்.

பெருமூச்செடுத்து விட்டு “ஆமா நான் காதலிக்கும் காவியனை தான் பார்க்க வந்தேன்” என்றாள் ரணா.

காதலா? காவியனா? மல்லிகா அக்கா கேட்க, ஆமா எனக்கு அவன் மீது விருப்பம் இருக்கு. என்னோட அப்பாவிடம் சொல்லி தான் அவனை பார்க்க வந்திருக்கேன் என்றாள்.

எல்லாரும் அதிர்ச்சியுடன் உங்க காதலை சேர்மன் சார் ஏத்துக்கிட்டாரா? தனசேகரன் கேட்டார்.

ஆனால் காவியன் விருப்பம்? பாட்டி கேட்டார்.

எங்க வீட்ல எல்லாரும் ஏத்துப்பாங்க. அவனுக்கு பிடிக்காது தான். ஆனால் “நான் பின் வாங்கமாட்டேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் தொலைவில் நின்ற விக்ரம் பேசி கொண்டிருந்தான். இருங்க வாரேன் என்று ரணா அவனிடம் சென்றாள். சங்கீதன் அங்கேயே அமர்ந்தான்.

தம்பி நீங்க யாரு? பாட்டி கேட்க, “காவியன் அண்ணா ப்ரெண்டு தான்” என்ற ஜீவா உள்ளே சென்றான்.

விக்ரமிடமிருந்து அலைபேசியை ரணா பிடுங்கி காதில் வைத்தாள்.

கொடும்மா, அதிரதனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என்று அவன் மெதுவாக சொல்லி கேட்க, அண்ணா நீ தான்னு தெரியும். நான் நிலையத்துக்கு தான் வந்துருக்கேன். எனக்கு காவியனை பிடிச்சிருக்கு. இனி அடிக்கடி இங்கே வருவேன். தங்க கூட செய்வேன் என்று நிறுத்தாமல் பேசினாள்.

அதான் தெரியுமே? ஆனால் அப்பா ஒத்துப்பார்ன்னு நினைக்கலை. “ஆல் தி பெஸ்ட் குட்டிம்மா” படிப்பை விட்றாத. அதுவும் முக்கியம் என்ற அதிரதன், காவியனை ஒத்துக்க வைக்கிறது கஷ்டம்மா. வருசம் கூட ஆகும் என்றான்.

பரவாயில்லை அண்ணா. படிப்பு முடிந்த பின்னும் உங்களுக்கு காதல் இருந்தா ஒத்துக்கிறேன்னு அப்பா சொன்னாரு. அதனால ஒரு வருசம் இல்லைண்ணா மூன்று வருடமானாலும் காத்திருப்பேன் என்றாள்.

என்னோட குட்டிம்மா நல்லா வளர்ந்துட்டா.

ஆமாண்ணா, நான் அவனை பார்த்துட்டு வாரேன் என்று அலைபேசியை விக்ரமிடம் கொடுத்து விட்டு சங்கீதா,.வா போகலாம் என்றாள்.

ரணா, நான் கிளம்பணும். லட்சு வீட்டுக்கு போயிட்டாளாம். அம்மாவை பார்த்துக்க போகணும் என்றாள்.

“நீயாவது சந்தோசமா இரு” என மனதில் ரணா நினைக்க, சங்கீதன் வீட்டில் லட்சணா இருப்பது, அவன் அம்மாவின் செய்தி அனைத்தும் கல்லூரியிலும் பரவி, அவனை பற்றிய பேச்சு தான் போனது. ரணாவின் பிரச்சனையில் அவளுக்கு இது எதுவும் தெரியவில்லை.

சரிடா கிளம்பு, நான் பார்த்து போயிடுவேன் என்றாள்.

இல்ல, நீ கிளம்பும் முன் ராகவ்விடம் சொல்லு. அவன் வந்து அழைச்சிட்டு போவான். எனக்கு இந்த கார்ட்ஸ் மேலும் நம்பிக்கையில்லை. “கவனமா இரு ரணா” சங்கீதன் சொல்லி விட்டு கிளம்பினான்.

“நான் காவியனை பார்த்துட்டு வாரேன் பாட்டி” என்று அவள் உள்ளே செல்ல, உள்ளே சென்ற ஜீவா ரணா வந்திருப்பதை ஏற்கனவே காவியனிடம் அறிவித்து விட்டான்.

வெண்பா ரணாவை பார்த்து பேசிக் கொண்டே காவியனும் அவன் நண்பர்களும் இருக்கும் அறையை காட்டி விட்டு சென்றாள்.

 

Advertisement