Advertisement

அத்தியாயம் 41

விஷ்வாவிடம் டாக்டர் பேசிக் கொண்டிருந்தார். சுஜியும் அவனுடன் அமர்ந்திருந்தாள். எல்லாரும் உள்ளே வர..அந்த பொண்ணுக்கு வலி குறையணும். ஒரு வாரம் அப்சர்வேசன்ல இருக்கட்டும். யாராவது ஒருவர் பக்கமிருந்து பார்த்துக்கணும். வலி அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. ஒரு வாரம் பின்னும் வலி அதிகமாக இருந்தால் இங்கே தான் இருக்கணும். பார்த்துட்டு தான் முடிவெடுக்கணும்.

ஓ.கே டாக்டர் என்ற விஷ்வா அனைவரையும் பார்த்தான். எல்லாரும் வெளியே வந்து அமர்ந்தனர். சுஜியையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவை அனைவரும் பார்த்தனர்.

என்னாச்சு சார்? காவியன் கேட்க, அவனை பார்த்து விட்டு சுஜியை அழைத்தான். உன்னிடம் ஒன்று கேட்டால் தப்பா எடுத்துக் கொள்ள மாட்டாயே? விஷ்வா கேட்க, என்ன விஷ்வா? வேரெதுவும் பிரச்சனையா? சுஜி கேட்டாள்.

இல்ல சுஜி என்று அவளை நெருங்கி அமர்ந்தான். சார்..காவியன் சத்தமிட, மீண்டும் விஷ்வா காவியனை பார்த்து விட்டு, சுஜி கையை பிடித்து “என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?” என கேட்டான்.

“நீ சொன்னது எனக்கு தப்பா காதுல விழுதுன்னு நினைக்கிறேன் விஷ்வா. திரும்ப சொல்” என்றாள் சுஜி.

உனக்கு சரியா தான் கேட்டிருக்கு? என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? அவன் கேட்க, என்னடா விளையாடுறியா? நீ எப்ப நிது மாதிரி பேச ஆரம்பிச்ச?

இல்லை சுஜி, நிஜமாக தான் கேட்கிறேன். என்னோட இரண்டாவது தங்கைக்கு அடுத்த மாதம் பிரசவ தேதி கொடுத்திருக்காங்க. குழந்தை பிறந்து ஒரு மாதத்திலே எங்க வீட்ல எனக்கு திருமணம் முடிக்கணும்ன்னு பொண்ணு தேடுறாங்க. யாருன்னு தெரியாத பொண்ணை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. உன்னை தான் நன்றாக தெரியுமே? உனக்கும் என்னை தெரியும்? அதான்..

ஓ..அதனால் அவளுக்கு பதிலாக உன்னை எனக்கும், எனக்கு உன்னையும் தெரியும்ன்னு திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு சொல்றீயா? என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? ரீபிலைஸ்மென்ட் மாதிரி தெரியுதா? சுஜி சத்தமிட்டாள்.

இல்ல சுஜி. அதனால் இல்லை. எனக்கு உன்னை பிடிக்கும். இந்த ஒரு மாதத்தில் காதல் வர கூட வாய்ப்பிருக்கே என்றான்.

சுஜி அவனை பார்த்துக் கொண்டே யோசனையுடன், வெயிட் பண்ணு சொல்றேன் என்று மாயா அறைக்குள் சென்றாள். எல்லாரும் அதிர்ந்து இருவரையும் பார்த்தனர்

நிதின் விஷ்வாவிடம், உன்னை போல் தைரியம் யாருக்கு வரும்? காலேஜ்ல பார்த்தது. இப்ப இருவரும் சந்தித்து ஒரு வாரம் இருக்குமா? என்று கேட்டான்.

உன்னோட ப்ரெண்டு அதிரதன் கேட்கலையா? விஷ்வா கேட்க, உங்களுக்கு எப்படி என்னோட அண்ணனோட காதலை பற்றி தெரியும்? ரணா கேட்டாள்.

காவியன் நிதினை முறைத்து பார்த்தான். இருடா என்று காவியன் தோளை தட்டிய நிதின், ரணா அவன் நம்ம கம்பெனில இருக்கும் ஒருவன். அவனுக்கு தெரியாமல் இருக்குமா? அதை விட இவன் என்னுடன் படித்தவன் என்றான் நிதின்.

அப்ப நீ தான் அண்ணா காதலை சொன்னீயா? உங்களுக்கு அந்த பொண்ணை தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க என்று ரணா சொல்ல,

உனக்கெதுக்கு இதெல்லாம்? காவியன் கேட்க, அவன் என்னோட அண்ணன். என்னிடம் சொல்லாமல் லவ் பண்றான். யாருன்னு கேட்டா யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க.

நிது, நீ அறிமுகப்படுத்தி வைக்கலாம்ல்ல என்று நிதினிடம் கேட்க, அதெல்லாம் அவன் செய்ய மாட்டான் என்றாள் ஆத்விகா.

அக்கா, நிது மாமா முன் காதலித்த பொண்ணு தான? அதான் உனக்கு கோபம் வருதா? ரணா கேட்க, எனக்கும் அவளை பிடிக்கும். அவ்வளவு தான். என்னோட ஆத்து நைஸ். அதனால உன் பேச்சுக்கு அமைதியா இருக்கா.

“ரதன் முன்னாடி எதையும் சொல்லி என்னை கொன்றுவிடாதம்மா” என்று கெஞ்சுவது போல் வேடிக்கை காட்டினான் நிதின்.

கண்ணன் அலைபேசி ஒலிக்க, எடுத்த அவன் முகம் மாறி கண்ணீர் வந்தது.

என்னாச்சுடா? ரணா கேட்க, சங்கீதனை பார்த்த கண்ணன்..சங்கீத் நம்ம லட்சணா அம்மா, அப்பா, அவளும் தற்கொலை செய்தததில் நம் லட்சு மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் ஹாஸ்பிட்டலில் இருக்காலாம்டா என்று அழுதான்.

என்னடா சொல்ற? என சங்கீதன் அவன் சட்டையை பிடிக்க, ரணாவும், ஆராவும் இருக்காது என்று சத்தமிட்டனர்.

எல்லாரும் அழ, காவியனும், அதீபன், ஆத்வியும் அவர்களுடன் லட்சணாவை பார்க்க ஹாஸ்பிட்டல் கிளம்பினார்கள். காவியன் மாயாவுடன் பேசவேயில்லை.

அந்த பொண்ணு உன்னோட தங்கச்சி தான? இப்படி சாதாரணமா பேசுற? நர்ஸ் ஒருவர், அந்த பொண்ணு எவ்வளவு சீரியசா இருக்காங்க. பாதி பணமாவது கட்டுங்க என்று மற்றொரு நர்ஸூம் லட்சணாவின் அண்ணாவை திட்டிக் கொண்டிருந்தனர். அவனுடன் வந்த பக்கத்து வீட்டு பெரியவர்கள் இப்பொழுதைக்கு நாங்க கட்டுகிறோம். பின் தந்திடுப்பா..என்று சொல்ல, அவன் அமைதியாக நின்றான். அவர்கள் தான் லட்சணாவிற்கான சிகிச்சைக்கு உதவினர்.

அம்மா, அப்பா பாடியை எடுக்க பணம் அரேஜ் பண்ணுங்க தம்பி. போர்ட்ஸ் மார்ட்டம் முடிஞ்சதும் பணம் கட்டி தான் அம்மா, அப்பாவை வாங்கணும் என்றார் அந்த பெரியவர். அவன் கண்ணீருடன் பணத்துக்கு எங்கே போறது? என்று சொந்தக்காரர்களிடம் உதவி கேட்டான் லட்சணாவின் அண்ணன். ஆனால் யாரும் உதவ முன் வரவே இல்லை. அதனால் தான் கண்ணனிடம் லட்சணா பற்றி சொன்னான். அவளுடைய நண்பர்கள் அனைவரும் பணக்கார பசங்க உதவுவாங்க என அவன் சோகமாக பேசுவதை போல் விசயத்தை சொன்னான்.

சங்கீதன் நீ ரணா குடும்பத்தோட வா. நாங்க உன்னோட கார்ல வர்றோம். இந்த நிலையில் நீ காரை செலுத்துவது நல்லதல்ல என்ற காவியன் சங்கீதன் காரில் ஏறினான். சங்கீதனும் ரணாவும் அழுது கொண்டிருக்க, ஆத்வி ஆறுதலாக பேசிக் கொண்டு வந்தாள்.

ஹாஸ்பிட்டலில் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்தாள் லட்சணா. அவளை பார்க்க வந்த நண்பர்கள் அவள் அண்ணனை முறைத்து விட்டு அவளிடம் ஓடினர்.

நர்ஸ் ஒருவர் ஆராவிடம் வந்து, ஏம்மா பொண்ணு இந்த பொண்ண தெரியுமா? அவ அண்ணன் பணமே கட்டலை. அதோ அந்த பெரியவர் தான் கட்டினார்.

அவ பெற்றோர் வேற இறந்துட்டாங்க. இப்ப அதுக்கும் பணம் கட்டணும். உங்களால முடிந்தால் ஏதாவது ஏற்பாடு செய்யுங்க என்றார்.

லட்சணா அண்ணன் சங்கீதனிடம் வந்து பணம் கேட்க, அவன் லட்சணா அண்ணனை அறைந்தான். இருவரும் சண்டை போட அதீபன் அவர்களை தடுத்து சங்கீதனை திட்டினான்.

சார், எதுவும் தெரியாம சங்கீதனை திட்டாதீங்க. லட்சணா அண்ணன் கேஷினோ மெம்பர். தினமும் சூதாட்டத்தில் பணத்தை இழப்பான். எல்லாம் பணக்கார நட்பால் வந்த பழக்கம். அவன் சம்பாதித்து அம்மா, அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டியது. அவர்களை மிரட்டி பணம் வாங்கி சூதாட்டத்தில் தொலைத்து அவர்களை கடன்காரர்களாக்கி இப்பொழுது அவர்களை சாவு வரை தள்ளி விட்டிருக்கான்.

அப்ப நேற்று நடந்த பிரச்சனை?

அங்கே வந்த பெரியவர் அதீபனை பார்த்து சொல்ல ஆரம்பித்தார்.

கடன்கொடுத்தவர்கள் வீட்டிற்கு வெளியே வச்சு ரொம்ப அவமானப்படுத்திட்டாங்கப்பா. நாளைக்கு பணம் தரலைன்னா பிள்ளைய ஒப்படைக்கணும்ன்னு தெருவினர் முன் மிரட்டி சென்று விட்டாங்கப்பா. பாவம் வீட்ல எல்லாரும் உடைஞ்சு போயிட்டாங்க. அதனால் தான் விசத்தை புள்ளைக்கும் சேர்த்து கொடுத்து நிம்மதியா செத்துடலாம்ன்னு நினைச்சு அவர்களும் விசம் சாப்பிட்டு பாப்பாவுக்கும் கொடுத்துட்டாங்க.

இந்த பய உருப்படியா எங்களிடம் வந்து உதவி கேட்டதால நாங்க தான் அழைச்சிட்டு வந்து பணம் கட்டினோம். ஆனால் பெத்தவங்கள காப்பாத்த முடியலை என்றார்.

சங்கீதன் லட்சணா அண்ணாவிடம் வந்து, “உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு” என்றான்.

என்னிடம் எங்கே இருக்கு? அவன் கேட்க, எனக்கு நல்லா தெரியும்? உன்னிடம் இல்லாமல் இருக்காது. சிறிதளவேணும் வச்சிருப்ப..தா என்றான்.

முடியாது. என்னிடம் பத்தாயிரம் தான் இருக்கு. இதை வைத்து தான் பெரியதாக பிடிக்கணும் என்றான். சங்கீதன் அவனை அடிக்க வந்தான்.

“வேண்டாம்டா” என்ற சோர்வான குரலில் லட்சணா பேச, அனைவரும் அவனிடம் வந்தனர்.

லட்சு, நீ நல்லா தான இருக்க? என்று கண்ணீருடன் சங்கீதனும் நண்பர்களும் அவளிடம் வந்தனர்.

சங்கீதன் கையை பிடித்த லட்சணா, எனக்கு அம்மா, அப்பாவை பார்க்கணும் போல இருக்கு என்று அழுதாள். ரணா அவளருகே அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

சாரி லட்சு, இப்ப முடியாது. நேரமாகும். நீ நல்லா தான இருக்க? அவன் கேட்க, அவர்கள் முன் வந்த ஒருவர் யாரு பணம் கட்ட போறீங்க? என்று கேட்டார்.

அதுக்குள்ளவா போஸ்ட் மார்ட்டம் பண்ணீட்டீங்க? அதீபன் கேட்க, தம்பி, இந்த புள்ளைய சேர்ப்பதற்கு முன்னே இவங்க அம்மா, அப்பாவை இறந்து போய் கொண்டு வந்துட்டாங்க. அந்த பையன் தான் வேண்டுமென்றே நேரமாக்கி இருக்கான் என்று அவர் லட்சணா அண்ணனை பார்க்க, அவளுக்கு ரொம்ப கஷ்டமானது. மனம் உடைந்து அழுதாள் லட்சணா.

அதீபன் அவனை பார்க்க, காலை ஆட்டிக் கொண்டு திமிறாக அமர்ந்திருந்தான்.

அதீபன் கோபமாக அவனிடம் வர, அவனை தடுத்த ஆத்விகா..பணம் தான நாங்க தாரோம் என்று சொல்ல, அக்கா..வேண்டாம் என்றாள் லட்சணா.

வேண்டாம்ன்னா இப்ப பணத்துக்கு எங்க போவ?

அப்பா என்னோட பேர்ல இவனுக்கு தெரியாமல் சேமிப்பு வச்சிருக்கார். அதை கொடுத்திடலாம் என்று சங்கீதன். ராகவிடம் அவர்களை அழைத்து ஏதோ சொல்ல, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

பின் பணத்தை கொடுத்து விட்டு பெற்றோரை மீட்டு அவளையும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்து அவளது அம்மா, அப்பா சடலத்தை வைத்தனர். அனைவரும் அவளுடன் இருந்தனர்.

அப்பொழுது அங்கே வந்தனர் கடன் கொடுத்தவர்கள். லட்சணா அண்ணனிடம் சென்று பணம் கேட்க, அவன் அவளிடம் பணமிருக்கு என்று சொல்ல, அவர்கள் அவளை பார்த்தனர்.

இல்ல சார், என்னிடம் பணம் இல்லை. ஆனால் கண்டிப்பாக தருகிறேன் என்றாள்.

எப்படிம்மா தருவ? ஒருவன் கேட்டுக் கொண்டே அருகே வந்தான். அவள் தன் மாமாவை அழைக்க, அவர் நகர்ந்து சென்றார். சொந்தங்கள் அனைவரும் விலகி நிற்க, கண்ணீருடன் சார் இந்த வீட்டை எடுத்துக்கோங்க. இதை விட என்னிடம் ஏதுமில்லை. இது ஐந்து லட்சம் வரும் சார் என்றாள்.

மீதி அஞ்சு லட்சத்தை எப்பம்மா தருவ? சார், மூன்று வருடங்கள் மட்டும் தாங்க சார் என்றாள்.

மூன்று வருசமா? அதெல்லாம் முடியாது. ஒரு மாதம் தருகிறேன்.

ஒரு மாசத்துல நான் எப்படி சார் தயார் செய்வது? அவள் கேட்க, இந்த வீடெல்லாம் தர முடியாது என்று லட்சணா அண்ணா அவளிடம் சண்டைக்கு வந்தான்.

என்னடா பேசிட்டு இருக்க? என்று தூரத்து உறவு ஒருவர் சத்தமிட, யோவ் நீ பணத்தை கட்டுறியா? அவள் அண்ணன் கேட்க, அவர் அமைதியானார்.

எல்லாமே உன்னால தான். ஒழுங்கா இங்கிருந்து போயிடு. இந்த வீடும் இல்லாமல் நான் எப்படி கடனை அடைப்பேன்? என்று லட்சணா அழுதாள்.

லட்சணாவிடம் வந்த ஆத்விகா, எவ்வளவு கொடுக்கணும் லட்சு? என கேட்டார்.

அக்கா, வேண்டாம். நானே பார்த்துக்கிறேன் என்றாள்.

நீ எப்படி பார்ப்ப லட்சு? இப்பொழுதைக்கு வாங்கிக்கோ. அவங்களுக்கு கொடுப்பதற்கு ரணா அக்காவிற்கு உன்னால் முடிந்த அளவு கொஞ்ச கொஞ்சமாக கொடு என்றான் காவியன்.

இல்லடா காவியா, இவனை பற்றி உனக்கு தெரியாது. இவரிடம் பணத்தை கொடுத்துட்டா. இந்த வீட்டையும் சூதாட்ட ஆட்களிடம் வச்சு விளையாடி விட்டுட்டு வந்து நிற்பான். அதுக்கு பதில் இவர்களிடம் இதை கொடுத்து விட்டு மீதியை அவர்களுக்கு..என்று கடன் கொடுத்தவனை பார்த்தாள்.

சரி, உன்னோட நிலைமை புரியது? நீ மெதுவா கொடு. ஆனால் நீங்க எங்களது வீட்டிற்கு வர வேண்டும் என்றான் கடன் கொடுத்தவன்.

இதுக்கு செத்தே போயிருக்கலாம் என்று லட்சணாவிற்கே தோன்றியது. அவள் உடல் சோர்வு, பெற்றோர் இழப்பு. இதில் இப்படியொரு பேச்சு. அவளால் தாங்க முடியாமல்..இல்ல சார், நான் வர முடியாது என்று அமர்ந்தாள்.

பணத்துக்காக இப்படியெல்லாம் பேசுற? என்று கண்ணன் கேட்க, ஆமாப்பா ஒன்று ஒரு மாதத்தில் பணம் வேண்டும் இல்லை இப்பொழுதே இந்த பொண்ணை இழுத்து செல்வோம். டேய்..வாங்கடா என்று கடன் கொடுத்தவன் சத்தமிட்டான்.

சார், ப்ளீஸ் என்று லட்சணா எழுந்தாள். சங்கீதன் கோபமாக, லட்சு இவனுகளிடம் எதுக்கு கெஞ்சுற? சத்தமிட்டான். பேச வந்த ரணா கையை பிடித்த காவியன், “நீ வாய மூடிக்கிட்டு நில்லு” என்றான் கோபமாக.

அதீபன் லட்சணா அண்ணனிடம் வந்து, “வெளிய போடா” என்று அவனை பிடித்து தள்ளினான்.

நீ யாருடா என்னை என் வீட்டிலிருந்து வெளிய தள்ளுற?

நீயெல்லாம் அண்ணனா? இப்ப இவன் கேட்ட கேள்வியில் இந்த பொண்ணோட அண்ணனா நான் இருந்தால் சாவடிச்சிருப்பேன். நீ அவனுடன் போக சொல்லுவ போல அதீபன் கத்தினான்.

ஆமாடா, இவள வச்சுட்டு எனக்கு என்னோட வீட கொடுத்திரு என்று லட்சணா அண்ணன் சொல்ல, பொண்ணு நல்லா தான் இருக்கு என்று சொன்ன நிமிடம் அவன் மூக்கிலிருந்து இரத்தம் வந்தது.

சங்கீதா, என்னடா பண்ணீட்ட? லட்சணா கோபமாக அவனை பார்த்தாள்.

வாய மூடு. இவனெல்லாம் அண்ணனா? நேற்று நடந்த பிரச்சனையை எங்களிடம் சொல்லி இருந்தாள். உன்னோட அம்மா, அப்பாவும் இருந்திருப்பாங்க. கண்டவனெல்லாம் இந்த பேச்சு பேசுவானா? என்று உறுமினான். இருவரும் அன்றே காதலை பரிமாறிக் கொண்டார்கள். அவனுக்கு கோபம் வராதா என்ன? அவள் புரிந்து கொண்டு கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

“என்ன சொன்ன? எங்கள சாவடிப்பியா? டேய் அவனை போட்டு தள்ளிட்டு பொண்ணை தூக்கிட்டு வாங்கடா” என்று கடன் கொடுத்தவன் சத்தமிட்டான். ஆட்கள் சங்கீதனை நெருங்க காவியன் சங்கீதனுடன் வந்து நின்றான். பின் ராகவ், கண்ணன், அதீபன் சண்டைக்கு நின்று ஆரம்பமானது சண்டை. லட்சணா அழுது கொண்டிருந்தாள்.

“எல்லாரும் நிறுத்துங்க” என்று சத்தம் கேட்ட சங்கீதன் உறைந்து தன் அப்பா தினகரனையும் அவருடன் வந்த போலீஸையும் பார்த்தான்.

அப்பா, நீங்க எப்படி இங்க? என்று சங்கீதன் கேட்க, லட்சணாவும் பயத்துடன் அவரை பார்த்தாள்.

“நான் தான்” என்று ரணா தினகரிடம் வந்து நின்றாள்.

“ஏய் குட்டிபிசாசு, உன் வேலைய காட்டிட்ட பாரு” என்ற அதீபன், அங்கிள் அப்பாகிட்ட சொல்லாதீங்க என்றான்.

அவனை பார்த்து விட்டு அவர் கண்ணீருடன் காவியனை பார்த்தான். இவனை எதுக்கு பார்க்கிறார்? என்று சங்கீதன் அவன் அப்பாவை பார்த்தான்.

ரணா கொடுத்த நேரடி காட்சியில் காவியனை பார்த்து அதிர்ந்து, உடனே கிளம்பி விட்டார் தினகரன்.

“தம்பி, நீங்க கிளம்புங்க” என்றார் லட்சணா அண்ணவை பார்த்து.

நான் எதுக்கு கிளம்பணும்? என்னோட அம்மா, அப்பாவை இப்படியே விட்டு எப்படி போறது?

தம்பி, என்னிடம் நீங்க நடிக்க தேவையில்லை. போய் உங்க பாஸை பாருங்க என்றார்.

அப்பா, என்ன சொல்றீங்க?

கேஷினோ கிளப் ஓனரை போய் அவன் பார்க்கட்டும். “தம்பி, இனி அந்த பொண்ணுக்கும் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று போலீஸிடம் கண்ணை காட்டினார்.

அங்கிள், அம்மா அப்பா? என்று லட்சணா தினகரிடம் கேட்டார்.

அவன் போகட்டும். வேற பசங்களா இல்லை? இவனெல்லாம் உன் அம்மா, அப்பாவுக்கு தகுதியான மகனில்லை.

இருந்தாலும் சார், அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்மா. நீ உட்காரு என்றார்.

அங்கிள், அந்த பொண்ணு நம்மிடம் பணம் வாங்க மாட்டேங்கிறா? ஆனால் இவன்..என்று அதீபன் சொல்ல, “அமைதியா இருங்க தம்பி” என்று அவனை விலக்கி விட்டு, அவர் மகனிடம் வந்தார்.

நீ ஏதாவது சொல்லணுமாப்பா? என்று கேட்டார்.

என்னதுப்பா?

ஏதாவது சொல்லணுமா? என்று அழுத்தமாக கேட்டார்.

“ஆமாப்பா” என்று லட்சணா அருகே வந்து அவள் கையை பிடித்துக் கொண்டு, கடன் கொடுப்பவனை பார்த்து இவளுக்கான கடனுக்கும், இவளுக்கும் நான் பொறுப்பெடுத்துக்கிறேன். நீங்க சொன்ன ஒரு மாதத்தில் அடைக்க முடியுமான்னு தெரியல. ஆனால் என்னால் அடைக்க முடியும் என்று லட்சணாவை பார்த்து,

நீ இங்கே இருக்க வேண்டாம் லட்சு. இப்பொழுதைக்கு விடுதியில் தங்கிக்கோ. நம் படிப்பு முடிந்தது வேலைக்கு சென்ற பின் நம் வீட்டுக்கு வரலாம் என்றான் சங்கீதன். அவள் கண்ணீருடன் அவனை பார்த்து விட்டு, அவன் கையை பிடித்து தினகரனை பார்த்தாள்.

நீ சொல்லி தான் எனக்கு தெரியணுமா? இந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருக்குன்னு முன்பே எனக்கு தெரியும் என்ற தினகரன், உனக்கு இந்த அண்ணன் வேண்டுமாம்மா? என கேட்டார்.

என்னோட அண்ணனா எனக்கு ஏதும் செய்யவில்லை என்பதை விட அம்மா, அப்பாவுக்கு கஷ்டத்தை தான் கொடுத்திருக்கான். என்ன இருந்தாலும் அவன் என்னோட இரத்தம் தானே சார். அவனை ஏதும் செய்ய வேண்டாம். விட்ருங்க.  ஆனால் அவன் நம் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. இனி எங்களுக்குள் எந்த உறவும் வேண்டாம். முடிந்தால் அதற்கான ஏற்பாட்டை செய்யுங்க சார் என்றாள்.

அதெல்லாம் வேண்டாம்மா. அவன் இனி நம் பக்கம் வர மாட்டான் என்று அவர் போலீஸை பார்த்தார்.

என்னடா சொல்ற? இந்த பொண்ணு யாரு? என்று லட்சணாவை கை காட்டி அவர் கேட்க, “எனக்கு தெரியாது” என்று அவன் சென்று விட்டான்.

எப்படி அங்கிள்? அதீபன் கேட்க, தினகரன் புன்னகைத்தார். அம்மா, அப்பாவை எடுத்து சென்று அனைத்தும் நடந்து முடிய சோர்ந்து அமர்ந்தாள் லட்சணா. உறவுகள் அனைத்தும் சென்று விட்டனர்.

கிளம்பலாமா? தினகரன் கேட்க, அமைதியாக இருந்த கடன் கொடுத்தவர், சார்..பணம்? என்று இழுத்தார். அவருக்கு ஏற்கனவே தினகரை தெரியும்.

அதான் நான் சொன்னேனே? சங்கீதன் சொல்ல, தன் மகனை பார்த்த தினகரன் செக் எழுதி கொடுத்தார்.

அங்கிள், நான் பேசலாமா? காவியன் கேட்டான்.

“சொல்லுப்பா” என்று காவியன் தோளில் கை போட்டார். அவன் எடுத்து விட்டு, லட்சு விடுதினாலும் தனியா இருக்கிறது சரியா படலை என்று அவரை பார்த்தான்.

சொல்லு..என்று கையசைத்தார்.

சார், தனியா பேசலாமா? என்று காவியன் கேட்க, எதுக்கு தனியா பேசணும்? நம்ம தான இருக்கோம் என்று ரணா கேட்க, “எல்லாத்தை உன் முன்னாடி பேச முடியாது. நீ லைவ்ல போட்டாலும் போட்டு விட்டுருவ” என்றான் காவியன்.

இல்லடா. அங்கிள் பிராமிஸ் என்று அவள் தினகரன் தலையில் கை வைக்க, உன்னோட பிராமிஸிற்கு என் அப்பா தான் பழியா ஓடிப்போயிரு என்று போ காவியா பேசிட்டு வா என்றான் சங்கீதன்.

டேய், நீயும் லட்சுவும் வரணும் என்றான் காவியன்.

சரி, நீங்க பேசுங்க. அண்ணா, ஜூஸ் ஆர்டர் பண்ணேன் என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ரணா.

உனக்கு ஜூஸ்ஸா வேணும்? ஹாட்டா இருக்குல்ல குட்டிப்பிசாசு? அதீபன் கேட்க, ஆமாடா ரொம்ப….என்றாள் ரணா. அங்கிருந்த குடத்து நீரை எடுத்து ரணா மீது ஊற்றினான் அதீபன்.

டேய்,டோபர் மண்டையா அவள் திட்ட, அங்கிள் இவங்க ஆரம்பிச்சிட்டாங்க., இப்பொழுதைக்கு முடியாது. நீங்க பேசிட்டு வாங்க என்று ஆத்விகா சொல்ல, அங்கிருந்து சற்று தள்ளி நடந்து வந்தனர். தினகரன் மூவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே வந்தார்.

அங்கிள், உங்க வொய்ப்பை அவங்க இருக்கிற இடத்துல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருங்க என்றான் காவியன். அவர் கோபமாக சங்கீதனை முறைத்தார்.

சாரி அங்கிள், உங்க பர்சனல்ல நான் வரக்கூடாது தான். இதனால் இரு நன்மை இருக்கு சார். அதனால் தான் சொல்றேன்.

என்ன? அவர் கேட்க, சங்கீதன் அம்மா வீட்ல இருந்தா தினமும் அவரை பார்ப்பீங்க. அவங்க கத்தினாலும் அழுதாலும் அவங்களால உங்களையும் அவர் மகனையும் உணர முடியும். வேகமாக அவங்க சரியாக வாய்ப்பிருக்கு.

காலையிலிருந்து மாலை வரை ஆள் போட்டுக்கோங்க. மாலைக்கு மேல் என்று காவியன் லட்சணாவை பார்த்தான்.

ஹே, இவளால் அம்மாவை சமாளிக்க முடியாது சங்கீதன் சொல்ல, அம்மாவுக்கு என்னாச்சு? அவள் கேட்க, அப்பாவும் மகனும் தயக்கமுடன் நின்றனர்.

அங்கிள், நீங்க தான் சொல்லணும். லட்சுவுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் என்றான் காவியன்.

எல்லாருக்கும் தெரிஞ்சா எங்க மானம் போயிரும் அவள கொன்றுவானுக. அங்கிள், இதுவரை உங்க வொய்ப் உயிரோட இருப்பது அவங்களுக்கு தெரியாம இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?

ஏன்டா, அம்மா இருப்பது தெரிந்திருக்குமா?

அது எப்படி தெரியாமல் இருக்கும்? நீங்க தான் வாரத்துக்கு ஒருமுறை சென்று பார்ப்பதாக சொல்லி இருக்கீங்க. அவங்க ஏதோ சொல்லி புலம்புவதாக சொன்னாயே? உன் அம்மாவை கொல்ல முடிவு செஞ்சது. அவங்க எதையோ உன்னோட அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று தான். உங்க அம்மா இறந்த பின் உங்களை கவனிக்காமல் விட்டுருப்பாங்களா?

அம்மாவுக்கு மனநலம் சரியில்லை என்று தான் விட்டு வச்சிருக்கானுகன்னு எனக்கு தோணுது. வீட்டுக்கு வந்து அம்மாவை சரி செய்தால் அவரிடம் என்ன விசயமென்று கண்டு கொள்ளலாம். லட்சுவும் உன்னோட அம்மாவை பார்த்துக் கொண்டு பாதுகாப்பாகவும் இருந்துப்பா என்று அவளிடம் உனக்கு பிரச்சனையில்லையே? எனக் கேட்டான்.

சரிப்பா, ஆனால் அவள் வீட்டில் இருப்பது தெரிந்தால் அவளை கொல்ல பார்ப்பாங்களே?

சரி தான் அங்கிள். பாதுகாப்பு போட்றலாம் என்று அதிரதன் வீட்டில் இருக்கும் காட்ஸ்ஸை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம் என்றான்.

சரி தான். நான் முதல்ல சேர்மனிடம் சொல்றேன். பின் முடிவெடுக்கலாம் என்று காவியனை அணைத்தார்.

எதுக்கு அங்கிள்? வாங்க கிளம்பலாம் என்று காவியன் சொல்ல, லட்சணா அவளுடைய பொருட்களையும் அம்மா அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தையும் எடுத்துக் கொள்ள, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

மறுநாள் சேர்மனை சந்தித்த தினகரன் தன் மனைவிக்கு நடந்ததை சொல்ல, “ஏன்டா இத்தனை நாளாக சொல்லலை?” என்று செழியன் சத்தமிட்டார்.

“எப்படி சொல்றது? அவள கொன்றுவாங்களோன்னு பயந்து தான் அவ செத்துட்டான்னு நம்ப வைத்தோம்” என்றார்.

இப்ப என்ன திடீர்ன்னு சொல்ற? செழியன் கேட்க, ஒருவரை சந்தித்தேன். அவர் தான் என் பொண்டாட்டி அருகே இருந்தால் சீக்கிரமும் சரியாவாள் என்றும் அவள் நிலைக்கு காரணமானவர்களையும் கண்டறியலாம் என்றும் சொன்னார். அவ வீட்டுக்கு வந்தான்னா எப்படியும் நியூஸ் வெளியே செல்லும். அதனால் நானே முன்னதாக அறிவிக்கலாம் என இருக்கிறேன்.

இது ரிக்ஸ்கென உனக்கு தோணவில்லையா?

ரிஸ்க் தான். ஆனால் எடுத்து தானே ஆகணும்.

சரி, ஆட்களை வைத்து தங்கச்சிய பார்த்துக்கலாம். ஆனால் மருத்துவர் முதற்கொண்டு அனைவரையும் மாற்றணும். நடந்த எல்லாத்தையும் சொல்ல வேண்டாம். கடத்தி கொல்ல முயன்றதை மட்டும் சொல்லு. பயத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதுன்னு சொல்லு. பார்த்துக்கலாம் என்றார் செழியன்.

“தேங்க்ஸ்டா” என்று செழியனை அணைத்தார் தினகரன். செய்தி ஊரெங்கும் பரவியது. சங்கீதன் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அன்று லட்சணாவும் சங்கீதனும் கல்லூரி செல்லவில்லை. அவன் அம்மாவிற்காக நியமிக்கப்பட்டவர் அவன் அம்மாவை எப்படி பார்த்துக் கொள்கிறார்? என கவனித்துக் கொண்டனர். மூவரும் அன்றைய பொழுதை சேர்ந்தே கழித்தனர்.

தினகரன் நேத்ராவை அழைத்து, காவியனை பற்றி சொல்ல, தெரியும் அங்கிள் என்ற நேத்ரா அவனிடம் ஏதும் காட்டிக்காதீங்க. அவன் ரொம்ப சார்ப். கண்டுபிடிச்சிருவான் என்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

யாரு கண்டுபிடிச்சிருவாங்க? என்ன கண்டுபிடிப்பாங்க? என்று அதிரதன் நேத்ரா அருகே வந்து அமர்ந்தான். நேத்தும்மா..அதிரதன் தம்பியா?

ஆமா அங்கிள். “நான் அப்புறம் பேசுறேன்” என்று அலைபேசியை வைத்து விட்டு அவனை முறைத்தாள்.

யாரிடம் பேசுற? என்று நேத்ராவிடம் நெருங்கி வந்தான் அதிரதன்.

சார், உங்களுக்கு வேலையே இல்லையா? என்று அவள் எழுந்தாள்.

வினு, எனக்கு ஜூஸ் வேணும்?

“எடுத்துட்டு வாரேன்” என்று முறைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.

மெதுவாக எழுந்த அதிரதன் அவள் பின் வந்து அவளை பயமுறுத்தினான். அவள் வேகமாக நகர்ந்தாள்.

ஹே..செல்ப் இருக்குடி. இடிச்சுக்காத என்று கையை அவள் முட்டவிருந்த இடத்தில் வைக்க, அவள் தலை அவன் கையில் இடித்தது.

ஷ்ஆ..என்று அவன் சத்தமிட, அச்சோ..சாரி சாரி என்று அவன் கையை பிடித்து பார்த்தாள். லேசான காயமாக இருந்தது. சிங்க் டேப்பை திறந்து அவனது கையை தண்ணீரில் நனைத்தாள். அவள் கையை தட்டி விட, அவள் நகர, அவளை இழுத்து அவன் கைக்குள் வைத்துக் கொண்டு வினு, அங்க பாரேன் என்று சிங்கை காட்ட, அவளும் பார்த்தாள்.

தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க, என்ன பண்றீங்க? என்று அவள் நகர, மீண்டும் தண்ணீர் அவள் மீது படும் படி அவளை டேப்பில் நிறுத்தி விளையாட்டு காட்ட, அவளும் அவன் மேலை தண்ணீரை பிடித்து தெளிக்க இருவரும் மாறி மாறி பிடித்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடினர். ஒரு கட்டத்தில் அதிரதன் நிறுத்தி நேத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வையும் காதலாக அவன் அவளது இதழ்களை பார்த்துக் கொண்டே நெருங்கினான். முதலில் உரசல் ஏற்பட, அதில் சுதாரித்த நேத்ரா அவனை நகர்த்தி விட்டு வேகமாக அறைக்கு சென்று தாழிட்டு கண்ணீருடன் கதவில் சாய்ந்து அழுது கொண்டே அமர்ந்தாள்.

நான் தப்பு செய்துட்டேன். ஏன்? என்னால அவரை தடுக்க முடியலை. நான் எதற்காக அவரை அப்படி பார்த்தேன். இது தவறாயிற்றே? என்று எண்ணிக் கொண்டே அழுதாள்.

“வினு, கதவ திற” என அதிரதன் கதவை தட்டினான்.

“சார், நான் ஓய்வெடுத்துட்டு வாரேன்” என்றாள்.

“வினு, கதவை திறன்னு சொன்னேன். நான் சொல்வதை நீ கேட்டு தான் ஆகணும்” என்றான்.

நேத்ரா கண்ணீரை துடைத்து விட்டு,” நீ ஸ்ட்ராங்கா பதில் சொல்லணும் வினு” என்று அவளை அவளே ஊக்கிக் கொண்டு கதவை திறந்தாள்.

உள்ளே வந்த அதிரதன் காலம் தாழ்த்தாது அவளை இழுத்து முத்தமிட்டான்.

“சார் விடுங்க” என்று அவள் விலக, அவளை விடாது அவளை அணைத்துக் கொண்டு, “வினு உனக்கும் என்னை பிடிச்சிருக்குல்ல?” என்று கேட்டான்.

“இல்ல சார். அது தெரியாம நடந்திருச்சு” என்றாள்.

தெரியாமலா? அது எப்படி உனக்கு தெரியாமலே என்னை கண்நோக்கி பார்ப்ப? என்னை ஏமாத்தாத வினு. “உன் கண்ணில் என் மீது உனக்குள்ள காதல் தெரிஞ்சது” என்றான்.

“இல்ல சார்” என்று அவனை நகர்த்த, அவன் இறுக்கமாக அவளை பற்றி இருந்தான்.

“ப்ளீஸ் விடுங்க” என்று அழுதாள்.

“அழாத வினு” என்று அவளை நகர்த்தி அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க? எப்படி என்னை பசங்க சிலருக்கு பிடிக்குமோ? அதுபோல் உங்களையும் பொண்ணுங்களுக்கு பிடிக்கும். அது போல தான் நான்..என்று நேத்ரா நிறுத்தி அவனை பார்த்தாள்.

அவளை நகர்த்தி பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டு அவளது தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து, ம்ம்..சொல்லு என்றான்.

சார், ப்ளீஸ் என்றாள்.

நீ சொல்லு. சொல்லி முடி என்று அவளது கழுத்துப் பக்கம் ஊதினான். அவளுக்கு கூச்சமானது.

சார்..

சொல்லு.

“எல்லாரையும் போல் தான் எனக்கு உங்களை பிடிக்கும்” என்றாள்.

ம்ம்..அப்புறம்..

சார், அவ்வளவு தான்.

அவ்வளவு தானா?

ம்ம்..

என்னை அதின்னு கூப்பிட உனக்கு பிடிச்சிருக்கா? அதிரதன் கேட்டான்.

“இல்ல சார்” என்றாள்.

அவன் புன்னகைத்தான்.

என்னோட அப்பா மட்டும் தான் என்னை “அதி”ன்னு அழைப்பார்.

அப்படியா சார்?

நேற்று நீ அழைத்தாயே?

நானா? நோ சார்.

நீ தான். “இந்த வினு..என் வினு தான் அழைத்தாய்” என்றான்.

சார், ஆசையை வளர்த்துக்காதீங்க. இது நல்லதல்ல.

எது?

நம் நெருக்கம்?

இது நெருக்கமா? என்று அவளை திருப்பினான்.

“ஆமா சார்” என்று அவனை விலக்கி விட்டு நகர்ந்தாள்.

வினு, நீ சொல்றது சரி தான். இந்த நெருக்கம் எனக்கு யாருடனும் இருந்ததில்லை.

“உனக்கு உன் கணவனோட இருந்திருக்கும்ல்ல” என்று கேட்டான். அவள் அதிர்ந்து அதிரதனை பார்த்தாள்.

என்ன வினு? ஆமா தான? என்று கண்கலங்கியவாறு அதிரதன் கேட்டான். அவள் திரும்பி நின்று அழுதாள்.

பதில் சொல்லு வினு?

சார், என்ன கேட்குறீங்க? இதுக்கெல்லாம் நான் எப்படி….? என்று பேச முடியாமல் தொண்டை அடைத்தது நேத்ராவிற்கு.

“சொல்லு வினு?” என்று சினமுடன் கேட்டான். அவள் அழுதாள்.

விரைந்து அவளை நெருங்கி அவளது தோள்ப்பட்டையை பிடித்து உலுக்கினான் அதிரதன்.

“இல்ல சார். இல்லவே இல்லை” என்று கத்தினாள்.

அவளை விடுத்து நகர்ந்தான்.

இல்லையா? என்று அதிரதன் அவளை பார்த்தான்.

ஆமா சார், திருமணம் முடிந்த முதலிரவோட அவ்வளவு தான். கொஞ்சமும் அவனுக்கு என் மேல் விருப்பமில்லை. பாசம், காதல், சிறு அணைப்பு, காதலுடனான பார்வை எதுவுமே அவனிடம் இல்லை. முதலிரவு நடந்ததன் பின் அவனது விரல் கூட என் மீது பட்டதில்லை என்றாள்.

வாட்? நீ தான பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட? அவனுக்கும் விருப்பமில்லையா? அவன் பல பெண்களுடன் இருப்பான்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனால்..என்று சிந்தித்து உன்னிடம் பேசுவானா?

அம்மா, அப்பா முன் மட்டும் தான் பேசுவான்.

உன்னோட அம்மா, அப்பா, எழிலனோட எப்படி நடந்துப்பான்?

ம்ம்..கேட்டால் பதில் சொல்லுவான். என்னோட தம்பி தான் அவன் பின் மாமா, மாமான்னு சுத்திக்கிட்டே இருப்பான். அவன் அவனை கூட பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றாள்.

அதிரதன் நேத்ராவை அணைத்து விட்டு, வெளியே வந்தான். நிதினை அழைத்து செள்ளியனை பற்றி விசாரிக்க சொன்னான்.

மாலையில் நிதின் அதிரதனை அழைத்து, ரதா நம் வினுவை திருமணம் செய்யும் முன்னே அஷ்வினியுடன் பழகி இருக்கான். இருவருக்கும் முன்பே தெரிந்து இருக்கு. அவளை சந்தித்த பின் வேறு எந்த பொண்ணு பின்னும் அவன் செல்லவில்லை. இருவரும் காதலித்தது போல் தெரியுது. இப்ப கூட அவளை விட யாருடனும் அவன் இருக்கவில்லை என்றான்.

சரிடா, எல்லாரும் அங்கே ஓ.கே தானே? என்று அவனிடம் விசாரித்து விட்டு சோபாவில் படுத்து கண்ணை மூடினான் அதிரதன்.

சார், தேனீர்? என்று சொல்லி அவன் முன்னிருந்த டேபிளில் வைத்து விட்டு நேத்ரா உள்ளே சென்றாள்.

அலைபேசியை எடுத்த அதிரதன், அந்த தேர்டு பர்சனை கண்டி பிடிக்கணும்? அந்த ஹாஸ்பிட்டலில் தப்பியவன் புட்டேஜை எடுத்து அனுப்புங்க. நீங்களும் பாருங்க. கண்டிப்பாக ஏதாவது சிக்கும் என்று வைத்து விட்டு, தேனீரை எடுத்து பருகினான்.

பின் விக்ரமை அழைத்து, அந்த கார்த்திக்கை கண்டுபிடிங்க. அவனோ இல்லை விக்னேஷோ கிடைத்தால் வினுவை அடைய நினைப்பவனை பிடித்து விடலாம். அவனை வைத்து கொலைகாரனையும் கண்டுபிடித்து விடலாம் என்றான்.

ஏற்கனவே கார்த்திக்கை பற்றி விசாரிக்க சொல்லியாச்சு ரதன் சார்.

ஆனால் கொலைகாரன்னு சொல்றீங்களே? அவன் உங்களை கொல்ல நினைப்பவன் தானே? வேற யாரையும் கொன்றி இருக்கிறானா?

ஆமா, அவன் எங்க கம்பெனி வளர்ச்சியை தடுக்க எங்க ஊழியர்களிடம் பணம் யார் மூலமாகவோ தருகிறார்கள். அவன் சொல்வதை ஊழியர் செய்தால் விடுறாங்க. இல்லை கொலைசெய்கிறான். இதுவரை ஐந்து பேரை கொன்றுக்கான். அதுவும் வினுவை அடைய நினைப்பவன் போல் தற்கொலையாக காட்டி இருக்கான். சீக்கிரம் அவனையும் கண்டறியணும் என்றான் அதிரதன்.

ஓ.கே சார் பிடிக்கலாம். முதல்ல நீங்க சொன்ன கார்த்திக்கை பார்க்கிறோம் என்றான் அவன்.

ஓ. கே சீக்கிரம் பாருங்க என்று எழுந்து சமையலறைக்கு வெளியே நின்று நேத்ராவை பார்த்தான். அவள் தேங்காய் சட்னி தயார் செய்து விட்டு, வடை சுட தயாராகிக் கொண்டிருந்தாள்.

யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்து நேத்ரா கதவு பக்கம் பார்த்தாள். யாருமில்லை. அவள் வேலையை பார்க்க அதிரதன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அழைப்பு வர நகர்ந்து சென்றான். அப்பொழுது தான் இவ்வளவு நேரம் வெளியே அதிரதன் நின்றது நேத்ராவிற்கு புரிந்தது. அவளுக்கு கண்ணீர் வர, கட்டுப்படுத்திக் கொண்டே வேலையை செய்து முடித்தாள்.

Advertisement