Advertisement

அத்தியாயம் 39

மறுநாள் நீச்சல் குளத்திற்கு அருகே சாய்வு நாற்காலியில் தேனீர் அருந்தி விட்டு கண்ணை மூடி படுத்திருந்தான் அதிரதன். காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வினு நேத்ரா.

சாரு அதிரதன் அருகே வந்து, பேசலாமா? கேட்டாள். கண்ணை திறந்து அவளை பார்த்த அதிரதன், எழுந்து நீச்சல் குளத்தில் காலை தண்ணீரில் மிதக்க விட்டு அமர்ந்தான். சாருவும் அருகே வந்து அமர்ந்தாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவின் முகம் மாறியது.

நேத்ராவை பற்றி சாரு அவளுக்கு தெரிந்ததை கூறினாள்.

ஹேய், உனக்கு தெரியுமா? வினு செம்மையா நடனம் ஆடுவாள் என்று பள்ளி ஒவ்வொரு வருடமும் நடந்த நடன நிகழ்ச்சியில் அவள் நடனத்தை காட்டினாள்.

ஒன்பதாம் வகுப்பில் “மனுசா கொய்ராலாவின் கண்ணாலனே” பாடலும்

பத்தாம் வகுப்பில் “ஐஸ்வர்யா ராயின் எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது” பாடலும்

பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பில் மாடர்ன் உடையில் நடனம் ஆடி இருந்தாள். அதிரதன் புன்னகையுடன் அதனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட அழைக்க வந்த நேத்ரா அதிரதன் தன் நடனத்தை பார்க்கிறான் என அவனருகே வந்து பார்த்து, சாருவின் அலைபேசியை பிடுங்கினாள்.

சாரு, என்ன பண்ணீட்டு இருக்க? என்று அவள் சத்தமிட, அவள் கையிலிருந்த அலைபேசி பறிக்கப்பட்டது. நேத்ராவின் கையிலிருந்து அதிரதன் அலைபேசியை பறித்தான்.

சார், அதை குடுங்க என்று நேத்ரா அவனிடமிருந்து பறித்தாள். அவன் அவளிடமிருந்து பறித்தான். இவ்வாறாக இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து அந்த நீச்சல் குளத்தில் விழுந்தனர்.

அதை பார்த்ததும் சாருவும் நீரில் குதித்தாள். அவளை பார்த்து ஜீவாவும் குதித்தான்.

அதிரதனை தள்ளி விட்டு ஜீவா நேத்ராவை தூக்கி வெளியே வந்து படுக்க வைத்தான். அதிரதன் கோபமுடன் வெளியே வந்தான். சாரு கொஞ்சமும் யோசிக்காமல் அவள் வாயோடு நேத்ரா வாயிலிருந்த தண்ணீரை எடுத்தாள்.

இவள் செய்கையில் அதிரதனும் ஜீவாவும் அதிர்வுடன் நின்றனர். நேத்ரா விழித்தாள்.

ஆமா, இப்ப என்ன பண்ண? அதிரதன் அதிர்வு குறையாமல் சாருவிடம் கேட்டான்.

நான் என்ன செய்தேன்? வினுவை காப்பாற்றினேன் என்றாள்.

இப்படி தான் செய்வதா? அவன் கேட்க, அதை கண்டுகொள்ளாமல் வினு “ஆர் யூ ஆல் ரைட்?” என கேட்டாள் சாரு.

ம்ம்..என்ற நேத்ரா அதிரதனை பார்த்தாள். அவன் சாருவை முறைத்துக் கொண்டிருந்தான். நேத்ரா கையில் தான் சாருவின் அலைபேசி இருந்தது.

“சாரி சாரு” என்று நேத்ரா அலைபேசியை சாருவிடம் கொடுத்தாள். சாருவின் முகமும் வாடியது. அவளுக்கு வாங்க பணம் வேண்டுமே? அவள் உள்ளே சென்றாள்.

அதிரதனை முறைத்துக் கொண்டே நேத்ரா எழுந்து அவள் பின் செல்ல, அதிரதனும் அவர்கள் பின் சென்றான். ஜீவாவும் உள்ளே வந்தான்.

சாரு அருகே வந்த அதிரதன், இந்தா இதுல ஏதாவது செலக்ட் பண்ணு என்று அலைபேசியை ஆன்லைனில் ஆர்டர் செய்ய கொடுத்தான். சாரு அவனை பார்த்தான்.

அதிரதன் அலைபேசியை பிடுங்கிய ஜீவா, அதெல்லாம் தேவையில்லை பாஸ். அவளுக்கு நான் ஆர்டர் பண்ணிட்டேன். நாளைக்கு வீட்டுக்கு போறால்ல. அவள் கைக்கு அலைபேசி வந்திடும் என்றான்.

நீ ஆர்டர் பண்ணியா? எப்படிடா பண்ண? அதிரதன் கேட்டான்.

எப்படியோ பண்ணிட்டேன். இப்ப ரொம்ப தேவையா? என கோபமாக கேட்டான் ஜீவா.

என்னாச்சுடா உனக்கு? அதிரதன் கேட்க, நீங்க எதுக்கு பாஸ் அவளுக்கு வாங்கி கொடுக்கணும்? ஜீவா கேட்க, நானும் வினுவும் சண்டை போட்டு தான அவளது அலைபேசி நீரில் நனைந்தது. அதனால் நான் வாங்கி தாரேன்னு சொன்னேன்.

அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என்ற ஜீவா, சாரு அறையை விட்டு வெளியேறினான்.

இப்ப என்ன பண்ணீட்டேன்னு இப்படி கோபப்படுறான் சாரு? என்று அதிரதன் சாருவை பார்க்க, நேத்ரா அவளை பார்த்து சிரித்தாள்.

வினு, சிரிக்காத. நீ முதல்ல ஆடையை மாத்து. நீயும் தான் என்று அதிரதனையும் சாரு பார்த்து விட்டு ஜீவாவிடம் சென்றாள். அவள் பின்னே நேத்ரா செல்ல, அவள் சொன்னது கேட்கலையா? அதிரதன் நேத்ராவிடம் கேட்டான்.

சார், நான் உங்க வேலைக்காரி தான். அதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்கணும்ன்னு அவசியமில்லை. முதல்ல ஆடைய மாத்துங்க. பின் கட்டை பார்க்கணும் என்ற நேத்ரா வேகமாக சாரு பின் சென்று தள்ளி நின்று இருவரையும் பார்த்தான்.

ஜீவா, நீ எதுக்கு எனக்கு ஆர்டர் பண்ண? சாரு கேட்டாள்.

பண்ணக்கூடாதா? ஜீவா கேட்டான்.

நீ செய்றது சரியில்லை ஜீவா.

என்ன சரியில்லை? எல்லாமே சரி தான்.

சரியா இருந்தா நான் கேட்டவுடன் பதில் சொல்லி இருப்ப?

என்ன பதில் வேணும் உனக்கு?

நீ இந்த வேலைக்கு வந்த காரணம் பணம் தான? அப்படிப்பட்ட முக்கியமான பணத்தை, அதுவும் உன் அப்பாவின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தில் எதுக்காக எனக்கு அலைபேசி வாங்கி தந்த? அதற்கு என்ன அவசியம் வந்தது? சாரு வினவ, அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவா.

அவசியம் தான். நீ பாஸிடம் பேசுறது எனக்கு பிடிக்கல என்றான்.

நான் அவனிடம் பேசினால் உனக்கென்ன? அவள் கோபமாக கேட்டாள்.

பிடிக்கல..என்றான் சுருக்கமாக.

உனக்கு பிடிக்கலன்னு நான் அவனிடம் பேசக் கூடாதா? அவள் கேட்க, ஆமா என்றான்.

என்ன ஜீவா நீ? இப்படியெல்லாம் நீ பேச மாட்டாயே? என்ன ஆச்சு உனக்கு?

எனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு என சத்தமிட்டான்.

ஏன்டா கோபமாகவே பேசுற? நான் ஒன்றுமே செய்யலையே? அதிரதன் வினுவ புரிஞ்சுக்கணும்ன்னு தான பேசினேன்.

அதுக்கு நெருக்கமாக அவரோட அமர்ந்து தான் பேசணுமா? அவன் கேட்டான்.

நான் நெருக்கமாகவா? எனக்கு ஒன்றும் தோணவில்லை. நான் எல்லாரிடமும் அப்படி தானே பேசுவேன். உன்னிடம் கூட பேசி இருக்கேனே?

ஜீவா கோபமாக அவளை முறைத்தான்.

என்னாச்சுடா? என்று அவனது கன்னத்தில் கை வைத்தாள் சாரு. அமைதியாகி அவள் கை மீது கையை வைத்தான் ஜீவா.

அவள் கையை எடுக்க, அவளை விடாது பிடித்து அவளது உள்ளங்கையில் முத்தமிட்டான்.

ஏய், என்னடா பண்ற? என்று கையை வேகமாக உருவிக் கொண்டு சாரு நகர்ந்து அவனை பார்த்தாள்.

“லவ் யூ சாரு” என்றான் கண்கலங்கியவாறு.

லவ்வா? சாருவையா? இவனா? அதிரதன் நேத்ரா பின்னிருந்து குரல் கொடுத்தான். அவள் திரும்பி அவனை முறைத்தாள்.

என்னடா சொல்ற? நீ என்னை விட சின்னவன்டா.

சின்னவன்னா லவ் பண்ண மாட்டியா சாரு?

இல்ல ஜீவா, என்னால லவ் பண்ண முடியாது என்றாள் சாரு.

இன்னும் உன்னோட எக்ஸை லவ் பண்ணிட்டு இருக்கியா சாரு?

இல்லடா. நான் எப்படி சொல்றது? இது சரியா வராதுடா..

எதுக்கு சரியா வராது சாரு? இப்ப இதெல்லாம் சாதாரணம் தானே?

அதுக்காக..என் அம்மா விருப்பத்தை நான் பார்க்க வேண்டாமா? நான் என் அம்மாவை தனியே விட முடியாது என்றாள்.

நீ தான் ஏற்கனவே சொன்னேல்ல சாரு. எனக்கு பிரச்சனையில்லை. எனக்கும், என் தம்பிக்கும் அம்மா இல்லாததால் நாங்க அவங்களையும் நல்லா பார்த்துப்போம்.

அம்மா, ஒத்துக்க மாட்டாங்கடா?

அப்ப நீ சாரு? உனக்கு என்னை பிடிச்சிருக்கா? அவன் கேட்க, ப்ளீஸ் என்னை விட்டுரு ஜீவா.

ப்ளீஸ் சொல்லு சாரு.

எனக்கு டைம் வேணும் ஜீவா. உனக்கே தெரியும்? ஒருவனால் ஏற்கனவே உடைந்து போயிருக்கேன். இப்ப லவ்வுன்னு சொல்றீயே?

சரி சாரு. நீ எத்தனை வருடமானாலும் நேரம் எடுத்துக்கோ சாரு. உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால் உனக்காக காத்திருப்பேன் என்று சொல்லி விட்டு, உள்ள போ சாரு என்று அவனும் பின்னே வந்தான். இருவரும் நேத்ரா, அதிரதனை பார்த்துக் கொண்டே சென்றனர். சாருவிற்கு ஜீவாவை பிடிக்கும். ஆனால் தன்னை விட சின்னவனை எப்படி கல்யாணம் செய்வது? என்ற குழப்பமுடன் அறைக்கு சென்றாள்.

அதிரதன்  வீட்டிலிருந்து சாருவையும் யுவனை அழைத்து சென்று கொண்டிருந்தான் ஜீவா. அவன் மனம் கனத்து போயிருந்தது. காரை ஓட்டிக் கொண்டே இடையிடையே சாருவை பார்த்துக் கொண்டே வந்தான்.

இடையே சட்டென பிரேக்கை அழுத்தினான். கண்ணை மூடிக் கொண்டே யுவனை மடியில் சாய்த்திருந்த சாரு கண்ணை விழித்தாள். அவர்கள் காரின் முன் மூவர் வந்தனர்.

சாரு விழித்ததை பார்த்து, கீழ இறங்காத என்று ஜீவா கீழே இறங்கினான்.

ஹேய், யாருடா நீங்க? ஜீவா சத்தமிட, உன்னிடம் இருக்கும் பணம் முழுவதையும் கொடுத்திரு. போயிடுறோம் என்றனர்.

சாரு கார் சன்னலை திறந்து எட்டிப் பார்த்தாள். அவளை பார்த்த ஒருவன்..ஹே வாங்கடா, பணமாவது மண்ணாவது இங்க ஒரு அழகு சிலையே இருக்கா என்று கார் பக்கம் நெருங்கியவனது மார்பில் கை வைத்து நிறுத்தினான் ஜீவா.

எங்களுக்கு பணமே வேண்டாம். நானே பணம் தாரேன். எங்களுக்கு வழிய விடு மற்றொருவன் சொல்ல, ஜீவா ஏதும் பேசாமல் அவர்கள் கார் பக்கம் வர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.

வழிய விடுடா என்று அவர்களில் ஒருவன் அடிக்க, ஜீவாவும் அடித்தான். மூவருடனும் அவன் சண்டை போட்டான். அவர்களும் அவனை அடித்தனர். அவர்களில் ஒருவன் கத்தியை எடுத்தான்.

அதற்கு மேல் உள்ளே இருக்க முடியாமல் யுவனை நகர்த்தி காரினுள் படுக்க வைத்தாள் சாரு.

“வெளிய வராத சாரு” ஜீவா சத்தமிட்டான். அவள் அவனை பார்த்துக் கொண்டே உள்ளே இருந்தாள்.

அசால்ட்டாக அவன் கத்தியை தட்டி விட்டு அவர்களை அடித்து விட, மூவரும் சுருண்டு கிடந்தனர். அவர்களை ஓரமாக நகர்த்தி போட்டு விட்டு காரை எடுக்க வந்தான் ஜீவா.

சுருண்டு கிடந்த மூவரும் எழுந்தனர். கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு அவன் பின் வந்தனர். அவன் கவனிக்காமல் கார் அருகே வந்தான். சாரு இதை பார்த்து, ஜீவா என்று காரை விட்டு இறங்கி அவனிடம் வந்தாள்.

சாரு..என்று அழைத்துக் கொண்டே திரும்பினான். அவள் அவன் முன் வந்து நிற்க, ஜீவாவை குத்த வந்த கத்தி சாருவை நோக்கியது. ஆனால் அவளுக்கு ஏதும் ஆகாமல் கத்தி வைத்திருந்தவன் கையை பிடித்து தடுத்த ஜீவா, கத்தியை அவனிடமிருந்து பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு அவன் கழுத்தை பிடித்தான்.

மற்ற இருவரும் கோபத்தில் சாருவை பிடித்து ஜீவாவை மிரட்டினர். ஜீவா கழுத்தை பிடித்திருந்தவனை விட்டு விட, அவன் கோபத்தில் ஜீவாவை பிடித்து பயங்கரமாக அடிக்க ஆரம்பித்தான்.

அவனை ஏதும் செய்யாதீங்க. விட்டுருங்க என சாரு அழுதாள். அவள் சத்தம் கேட்டு யுவன் விழித்து எட்டிப் பார்த்தான்.

சாரு..என்று கார்க்கதவை திறக்க முயன்றான் யுவன்.

மூவரில் ஒருவன் அவள் ஆடையில் கை வைக்க, சாரு அவனை அடித்தாள்.

உனக்கு ரொம்ப திமிரு தான்டி என்று அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்து கிழித்தான். அவள் அழுது கொண்டே கார்டு ஜீவாவை அழைத்தாள்.

ஜீவா விழித்தும் எழ முடியவில்லை. சாரு அழுவதும் யுவன் அழும் சத்தமும் அவனுள் ஒலிக்க, தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மூவரையும் கை, கால்கள், தொடையில் சுட்டான்.

அவர்கள் வலியில் அவனது ஒரே சாட்டில் சரியாக சுட்டதை பார்த்து பயந்து கத்திக் கொண்டே உயிர்பயத்தில் ஓடினார்கள்.

அவர்கள் சென்றவுடன் துப்பாக்கியை அவனது ஆடையில் வைத்துக் கொண்டான். சாரு அவனிடம் ஓடி வந்து அழுது கொண்டே, இப்படி அடிச்சு போட்டுடானுகளே என்று அவனை தூக்கி விட்டாள். அவனால் நிற்கவே முடியவில்லை. அவளது தோளில் அவன் கையை போட்டு அவனது இடையில் கையிட்டு கஷ்டப்பட்டு காரின் பின் சீட்டில் அவனை போட்டு விட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்தாள். ஜீவா மெதுவாக தன் சட்டையை கழற்றி யுவியிடம் போட்டு கண்ணை காட்டினான்.

அக்கா, இந்தாங்க அங்கிள் உங்களுக்கு தான் கொடுத்தாங்க என்று அவளிடம் தூக்கி போட்டான். ஜீவாவை பார்த்து விட்டு, நான் ஒரு முறை தான் கார் ஓட்டி இருக்கேன். இப்ப ஓட்டுகிறேன். மெதுவாக தான் போவேன் என்று அவனிடம் சொல்ல, அவனிடம் சிறு புன்னகை மட்டும் பதிலாக கிடைத்தது.

அங்கிள் இரத்தம்..என யுவன் அழ, யுவி அழாத..அங்கிள பார்த்துக்கோ என்று காரை மெதுவாக ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக வேகமெடுத்தாள். நேராக அவள் வீட்டிற்கு தான் சென்றாள். அவர்கள் செல்ல நடுஇரவானது.

அவளை பார்த்து அவள் அம்மா பதறினாள்.

அம்மா, கதவை திற என்று காருக்கு ஓடிச் சென்று, “யுவி வீட்டுக்குள்ள போ” என்று அப்பொழுது போல் இப்பொழுதும் ஜீவாவை அவள் தோளில் போட்டு அழைத்து வீட்டிற்குள் வந்தாள்.

ஜீவாவை பார்த்த சாரு அம்மா, “என்னாச்சுடி? இப்படி அடிபட்டிருக்கு?”என்று அவனது வெள்ளை சட்டையில் இரத்தத்தை பார்த்து பதறினார்.

அம்மா, ப்ளீஸ் நீயும் பதறி என்னையும் பயமுறுத்தாதே. முதல்ல என்னோட அறைக்கதவை திறந்து விடு என்றாள்.

என்ன? உன்னோட அறையா?

அம்மா, திற என்று டென்சன் ஆனாள் சாரு.

இல்லடி, நீ என்னையே உள்ள விட மாட்ட?

அம்மா, அதை பார்க்கும் நேரமா இது? திறம்மா என்றாள்.  பின் அவள் படுக்கையில் அவனை படுக்க வைத்து, அவனது முகத்தில் மருந்தை போட்டு விட்டு சட்டையை கழற்றி அடிபட்ட இடத்தை பார்த்தான். அவன்  உடல், கை, கால்களில் சிவப்பாக வீங்கி இருந்தது.

சாரு கண்ணீருடன் பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு அவனை கவனிக்க ஆரம்பித்தாள். ஜீவாவால் முடியவில்லை என்றாலும் அவன் கண்கள் அவளை பார்த்துக் கொண்டிருந்தன. அவன் இதழ்களில் தவழ்ந்த சிரிப்பை கண்டு கொண்ட சாருவின் அம்மா யோசனையுடன் யுவனிடம், அவர் யாரு? உன்னோட அப்பாவா? எனக் கேட்டார்.

அம்மா, சின்ன பையனிடம் என்ன கேக்குற? சாரு திட்டினாள்.

பாட்டி, அவங்க அங்கிள் என்றான் யுவன்.

ஒ..என்று சாரு அம்மா அவனை பார்த்தார்.

ஜீவா, நீ ஓய்வெடு என்று சாரு சொல்ல, அவள் கையை பிடித்து நிறுத்தி..அவள் அம்மா முன்னே “லவ் யூ சாரு” திணறி சொல்லி விட்டு கண்களை மூடினான். சாரு அவனை பார்த்து விட்டு, கதவை சத்தி விட்டு வெளியே வந்தாள்.

என்னடி இதெல்லாம்? யார் இந்த பையன்? அவர் கேட்க, அம்மா யுவி எங்க? என கேட்டுக் கொண்டே வந்தாள். சோபாவிலே யுவன் தூங்கிக் கொண்டிருக்க, “இரும்மா பேசலாம்” அவனை தூக்கி அவள் அம்மா அறையில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்து, அவள் அம்மா அருகே வந்து அமர்ந்து அதிரதனை அழைத்து அனைத்தையும் சொன்னாள்.

இதுக்கு முதலிலே துப்பாக்கியை பயன்படுத்தி இருந்திருக்கலாம்ல்ல. சொன்னா கேட்க மாட்டான். ரொம்ப அடி பட்டிருக்கா? உனக்கு ஒன்றுமில்லையே? அவன் கேட்க, நான் நல்லா இருக்கேன்டா. அவனுக்கு தான் ரொம்ப அடிப்பட்டிருக்கு.

நான் வேண்டுமானால் ஆள் அனுப்பவா? உனக்கு தனியா பார்த்துக்க கஷ்டமா இருக்குமே? நர்ஸ் யாரையாவது பார்த்துக்க சொல்லலாமா? அதிரதன் கேட்க, ஒன்றும் தேவையில்லை. நானே பார்த்துப்பேன் என்று வாயை கோணினாள்.

ரொம்ப பொறாமப்படுற மாதிரி இருக்கு? அதிரதன் கேட்க, அப்பொழுது போல் வினுவிடம் நடந்துகிட்டன்னு தெரிஞ்சது நான் அவளை என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவேன் என்றாள்.

சரி சரி. நல்லாவே பேச்ச மாத்துற? அவன் நல்லா சரியான பின் இங்க வரட்டும். நீயும் ஒரு வாரத்திற்கு எங்கும் போக வேண்டாம். எதுக்கும் கவனமா இருங்க என்ற அதிரதன், காலையில விஷ்வான்னு ஒருவனை அனுப்புறேன். நீ அவனுடன் யுவனை அனுப்பி விடு. மத்ததை அவன் பார்த்துப்பான்.

ஜீவாவை பார்த்துக்க சிரமமா இருந்தா சொல்லு. நான் அவனை ஆள் வைத்து பார்த்துக்கிறேன்.

அதான் சொல்றேன்ல. அவனை நானே பார்த்துப்பேன்.

அப்புறம் ஒரு விசயம் சாரு. நம்ம வீட்ல ஒரு சத்தம் வந்ததுல்ல அந்த டிராக்கிங் டிவைஸ் வைத்து கண்டிப்பா அந்த கொலைகாரனோட ஆளோ இல்லை. வினுவை அடைய நினைப்பவனுடைய ஆளோ வரலாம். அதனால் அவள் என் பக்கத்தில் இருக்கணும். அவளை என் அறையிலே இருக்க சொல்லேன்.

ஓய், இன்று நடந்தது போதாதா?

இல்ல சாரு. அவளுக்கு ஏதாவது ஆகிடும்மோன்னு பயமா இருக்கு என்றான் அதிரதன்.

சரி, சொல்றேன். உன் மேல நம்பிக்கை வச்சிருக்கேன். உன் செய்கை அவளை இம்பிரஸ் செய்யணும். போடான்னு அவளை போக வச்சுறாத என்றாள்.

நீ அவளை சம்மதிக்க வை. நான் என்ன செய்றேன் பாரு?

அதான் பார்த்தோமே? என்று கிண்டலாக சாரு சொல்ல, அவள் அம்மா அவளை கவனிப்பதை பார்த்து, கவனமா இருங்க. அவளுக்கு வேலை ரொம்ப கொடுக்காத. தொந்தரவு செய்யாத.

எனக்கு அடிப்பட்டிருக்கா? இல்லை அவளுக்கு அடிபட்டிருக்கா? அதிரதன் கேட்க, உன்னிடம் பேசினால் நேரம் போயிடும்.நான் தூங்கணும் என அலைபேசியை வைத்து விட்டு அவள் அம்மாவிடம் ஜீவா குடும்பத்தையும், அவங்களுக்காக அவன் செய்வதையும், இப்ப இவளுக்காக அடிப்பட்டதை சொல்லி விட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன் தான் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான் என்றாள்.

அவள் அம்மாவும் அவனது பொறுப்புணர்வு பிடித்து தான் போனது. தயங்கிய சாரு, அம்மா அவன் என்னை விட இரு வயது சிறியவன் என்றாள்.

சின்னப்பையனா? அப்புறம் எப்படி கல்யாணம் செய்து வைப்பது? அவர் கேட்க, அவள் அதிர்ந்து அம்மா கல்யாணம் வரை போயிட்ட. நான் அவனுக்கு பதிலே சொல்லலை என்றாள்.

சொல்லிடும்மா..என்றார் அவள் அம்மா சோகமாக.

என்னம்மா சொல்ல? என்ற சாரு அம்மாவை பயத்துடன் பார்த்தாள்.

எனக்கு இந்த பையனை பிடிச்சிருக்கு. ஆனால் சின்ன வயசுன்னு யோசனையா இருக்கு..பரவாயில்லை நீ சரின்னு சொல்லிடு என்றார். அவள் தன் அம்மாவை அணைத்து “தேங்க்ஸ்ம்மா” என்றாள்.

உன்னை பத்தி எனக்கு தெரியாதாடி. உன் அறைக்கு என்னையே விட மாட்ட. அந்த பையனை அழைத்து செல்லும் போதே நினைத்தேன். அதுவும் நல்லா கவனிச்ச்சுக்கிட்டேல்ல அப்பவே புரிஞ்சது. பின் அவன் சொன்னது என்று அவளை பார்க்க, சாரு தன் அம்மாவை அணைத்து அழுதாள்.

போ..தூங்கு அவர் சொல்லி விட்டு, அவரும் சென்றார்.

சாரு ஜீவாவிடம் வந்து, அவன் நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ டூடா” என்றான்.

“தேங்க்ஸ்” என்றான் கண்ணை திறந்து. அவளை பார்த்துக் கொண்டே ஜூவா. அவள் எழ, “என்னருகே இரேன்” என்றான். அவளும் அங்கேயே இருந்து விட்டாள்.

காலை விடியவும் சாருவை அழைத்துக் கொண்டே ஒருவன் வந்து நின்றான். சாரு அம்மா சென்று பார்த்தார்.

உங்க பார்சல் மேம் என்றான்.

பார்சலா? நாங்க ஆர்டர் பண்ணலையே? கேட்டார்.

சாருமதி..

என்னோட பொண்ணு தான். அவங்களுக்கு தான் வந்துருக்கு என்று சொல்ல, அவளும் வந்து வாங்கி அதை பிரித்தாள். ஜீவா ஆர்டர் செய்த அலைபேசி இருந்தது.

அதில் கவருடன் இருந்தது. கவரில் அவளும் அம்மாவும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வைத்திருந்தான். அவன் எப்படி இதை எடுத்தான்? என்று அவர்கள் அறையை பார்த்தாள். அவள் அம்மாவுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவர் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.

வேகமாக அறைக்கு வந்து, “ரொம்ப தேங்க்ஸ்டா” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். இதுக்கே இவ்வளவு சந்தோசமா? என மெதுவாக வாயசைத்தான்.

அலைபேசியை விட என் உணர்வுகளுக்கு அதிகமா மதிப்பு கொடுத்திருக்க. அதிரதன் பிரச்சனை முடிந்து உன் அப்பா சரியாகவும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள் சாரு.

அவன் கண்ணீர் அவள் கையில் பட, அவன் முகமெங்கும் முத்த மழைய பொழிந்தாள். பின் வெளியே வந்து யுவனை தயார் செய்து விசுவாவுடன் அனுப்பி விட்டு நேத்ராவை அழைத்து நடந்ததை கூறி விட்டு, அதிரதன் சொன்னது போல் சொல்ல, முதலில் ஒத்துக் கொள்ளாத நேத்ரா குழந்தை பாதுகாப்பிற்காக ஒத்துக் கொண்டாள்.

காலையில் அதிரதன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். தேனீரை எடுத்து வந்த நேத்ரா அவனை ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை பார்த்து சமையலறைக்கு சென்றாள்.

சப்பாத்திக்கு மாவை பிசைந்து வைத்து விட்டு, குர்மாவிற்கு காய்களை நறுக்கி கொண்டு அவளது அலைபேசியில்

“சின்ன சின்ன கண்ணம்மா என்னிரண்டு வருசமா” பாடலை வைத்து ஆர்வமாக பாடிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தாள்.

எழுந்த அதிரதன் முகத்தை கழுவி பல் துலக்கி குளித்து விட்டு வெளியே வந்தான். நேத்ரா சத்தம் கேட்டு சமையலறைக்கு முன் அறைப்பக்கம் நின்றான்.

“என்னப் போல உன் மேல ஆச வச்சவன் இல்லை.

உன்னப் போல உள்ளூரில் மீச வச்சவன் இல்லை.

பத்தாகி உனக்கும் தான் தாலி கட்டப் போறேன்.

ஐஏழு நாளோடு முழுகாமப் போறேன்……….” என உருகி உருகிபாடிக் கொண்டிருந்த நேத்ராவின் மனதின் பாடலை ரசனையோடு கவனித்துக் கொண்டிருந்தான். அவள் பாடிக் கொண்டே திரும்பினாள். அதிரதன் புன்னகையுடன் அவள் முன் நின்றான்.

சார், நான் இப்ப எடுத்துட்டு வாரேன் என்று அவள் சொல்ல, இப்ப என்ன பண்ண வினு? அதிரதன் கேட்டான்.

நான்.. சார்..என்று தயங்கினாள். நேத்ரா அலைபேசி அழைத்தது.

சார்..என்று அவள் அலைபேசியை பார்த்தாள்.

பேசு என்று சொல்லி விட்டு சாப்பாடு மேசையில் வந்து அமர்ந்தான் அதிரதன்.

அக்கா, யுவி இங்க வந்துட்டான்.

ஆமா, காவியா அவனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. அவன் சாதாரணமாக விளையாட ஆரம்பித்து விட்டான்.

அங்க சார் கூட தனியா இருக்கீங்கன்னு விஷ்வா சார் சொன்னாங்க. ஒன்றும் பிரச்சனையில்லையே? நான் வாரேன்க்கா?

இல்ல காவியா, நீ நாளையிலிருந்து காலேஜூக்கு போ என்றாள் நேத்ரா.

அக்கா, சார் போக வேண்டாம்ன்னு சொன்னாங்க. யாருமே பள்ளிக்கு கூட போகலையே?

வினு கையிலிருந்த அலைபேசியை வாங்கிய அதிரதன், எல்லாருமே பள்ளி, கல்லூரிக்கு போங்க என்று சொல்லி விட்டு அவள கொஞ்சம் பார்த்துக்கோ என்றான்.

சார்..காவியன் அழைக்க, நான் தான் சொல்றேன். பார்த்துக்கோ. இந்தா பேசு என்று வினுவிடம் கொடுத்து விட்டு, அவன் சென்று அமர்ந்தான்.

நேத்ரா அதிரதனை பார்த்துக் கொண்டே நின்றாள்.

வினு, சீக்கிரம் பேசிட்டு வர்றீயா? பசிக்குது என்றான் அதிரதன். காவியா..நாம அப்புறம் பேசலாம் என்று அதிரதனுக்கு எடுத்து வைத்தாள் நேத்ரா.

வினு, அந்த பாடல் யாருக்காக பாடின? என்று கேட்டுக் கொண்டே அதிரதன் அவளை பார்த்தான்.

உங்களுக்கு எதுக்கு சார்? தேவையில்லாம பேசாதீங்க?

இதுல என்ன தேவையில்லாமல் இருக்கு?

என்னை நினைச்சு தான பாட்டு பாடுன? அதிரதன் கேட்டான்.

சார், இந்த பாடல் நான் என்னோட கிரஷ்ஷை முதலாவதாய் சந்தித்த போது கேட்ட பாடல். எல்லாரும் சேர்ந்து அவரை நினைவுபடுத்திட்டீங்க. அவர் நினைவா இருக்கா? அதான் பாடினேன் என்றாள்.

யார் அவன்? அவனை நீ நினைக்கக்கூடாது என்றான் சினமுடன் அதிரதன்.

இதுக்கு தான் இதை பற்றி பேச வேண்டாம்ன்னு சொன்னேன்.

எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அதிரதன் எழுந்தான்.

சாப்பிட்டு போங்க சார்.

நான் உன்னுடன் படித்தவன் தான? சும்மா சும்மா சார்ன்னு கூப்பிட்டுகிட்டே இருக்காத.

அப்புறம் எப்படி சார் கூப்பிடுறது? பாஸா?

வினு, என்னை கோபப்படுத்துற?

பெயர் சொல்லியே அழை. சாரு கூட பெயர் சொல்லி தானே அழைத்தாள்.

சார், நான் உங்க வேலைக்கார பொண்ணு. நான் எப்படி உங்க பெயரை சொல்றது? நேத்ரா வினவ, அதிரதன் சீற்றமானான்.

நேத்ரா இடையை இழுத்து அவளை நெருங்கிய அதிரதன், நல்லா நினைவில் வச்சிக்கோ. நீ வேலைக்காரி இல்ல. எனக்கு சொந்தமாகப் போகிறவள். மறுபடியும் வேலைக்காரின்னு இந்த வாயிலிருந்து வார்த்தைகள் வந்தால்..நேற்று போல்  நான் உனக்கு முத்தம் கொடுத்துவேன் என்று விலக்கினான். அவள் மலைத்து நின்றாள்.

அவன் கோபமுடன் அறைக்கு சென்றான்.

சார், சாப்பிட்டு போங்க என நேத்ரா அதிரதன் பின் சென்றாள். ஆனால் அவன் கதவை  அடித்து சாத்தி விட்டு நிதினை அழைத்தான். அவன் எல்லாருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

நிது, இந்த வினுவோட கிரஷ் யாருன்னு கண்டுபிடி என்றன் அதிரதன்.

அவளோட கிரஷ்ஷா தெரியாதே?

தெரியாதுன்னு தெரியும். மண்டையா பேசாம. சொல்றத மட்டும் செய்.

நான் என்னடா பேசினேன்? எதுக்கு கத்துற? சாப்பிடு பேசலாமா?

இல்ல, இப்பவே அவன் யாருன்னு தெரியணும்?

இப்பவே உன்னிடம் கொண்டு வர அவன் ரெடிமேடு பரோட்டாவா? நிதின் கேட்டான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

செழியன் நிதின் அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டார். சொல்லாம பேசு அவர் சைகை செய்தார்.

பரோட்டாவா? அவன் மட்டும் என் கையில் கிடைத்தானென்றால் பொடிமாசாக்கிடுவேன் அதிரதன் கோபமாக பேச, நீ கோபப்படும் அளவுக்கு என்ன தான் நடந்தது? நிதின் கேட்க,

டேய், அவ அவளோட கிரஷ்ஷை நினைச்சு பாட்டு பாடுறாடா?

பாட்டா? அவளா? சிரித்தான் நிதின். ஆத்விகா அவன் காலை மிதிக்க, எல்லாரையும் பார்த்து விட்டு, ரதா பாட்டு கேவலமா இருந்திருக்குமே?

இல்லடா. லவ் சாங்டா. சூப்பரா இருந்தது என்று அவன் கேட்ட அந்த வார்த்தைகளை பாட, அனைவரும் வாயை அடைத்துக் கொண்டு சிரித்தனர்.

இன்றே எனக்கு அவன் யாருன்னு தெரியணும்? அதிரதன் சொல்ல, “சார் சாப்பிட வாங்க” என நேத்ரா கத்தும் சத்தம் கேட்டது.

“நான் வரமாட்டேன். நீயே கொட்டிக்கோ” என்று இவனும் சத்தமிட்டான்.

அய்யோ, சார் கஷ்டப்பட்டு செஞ்சத கொட்ட சொல்றீங்க?

கஷ்டப்பட்டியா? நீ தான் ஜாலியா பாட்டு பாடிக்கிட்டே உன்னோட எக்ஸோட கனவிலே இருந்தேல்ல.

பாட்டு பாடியதெல்லாம் குத்தமா?

இல்ல. நீ எதுக்கு அவனை நினைச்சு பாட்டு பாடுன..

சார், இனி பாட்டே பாட மாட்டேன். சாப்பிட வாங்க என்றாள்.

நான் சாப்பிட வரணும்ன்னா நீ அவன் யாருன்னு சொல்லணும்?அப்புறம் நீ எனக்கு ஊட்டி விடணும் என்றான்.

ரதா, பேச்ச நிறுத்துடா நிதின் சொல்ல, உனக்கென்னடா ஆத்விய பக்கத்துலவே வச்சுக்கிட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க. என்னை பாரு. இவளெல்லாம் சரியான வேஸ்ட் என்றான் அதிரதன். செழியன் அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தார்.

என்னால அவர பத்தி சொல்ல முடியாது சார். அப்புறம் ஊட்டவெல்லாம் என்னால் முடியாது. அதுக்கு வேற வேலைக்காரிய பாருங்க என்றாள் நேத்ரா.

உனக்கு இப்ப தான சொன்னேன் வேலைக்காரின்னு சொல்லாதன்னு..

சார், நீங்க ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் நான் உங்களுக்கு ஜஸ்ட் வேலைக்காரி தான் என்றாள்.

அது என்ன நான் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாதுன்னு முடிவுல இருக்கிறாயா? என்று கோபமாக கதவை திறந்தான். அவள் கதவை தள்ளிக் கொண்டிருந்தாள்.

இவன் கதவை திறக்கவும் நேத்ரா அவன் மீது விழுந்து கத்தினாள். அதிரதன் கீழே விழுந்தான்.

அய்யோ அம்மா, என்னோட இடுப்ப உடைச்சுட்டாலே! அதிரதன் சொல்ல, ரதா என்னாச்சுடா? நிதினும் மற்றவர்களும் பதற,

சாரி சார், நீங்க கோபத்துல எதையாவது உடைச்சுட்டீங்கன்னா? அதான் கதவை திறக்க முடியுதான்னு தள்ளினேன். நீங்க எதுக்கு அந்த நேரம் பார்த்து கதவை திறந்தீங்க? அதான் விழுந்துட்டோம் என்று பின் தான் நேத்ராவிற்கு வயிற்றில் குழந்தை இருந்தது உரைத்தது. வேகமாக எழுந்து கண்ணீருடன் அறைக்கு ஓடினாள்.

ஏய், எதுக்கு அழுற? ஏதும் அடிபட்டிருச்சா? அதிரதன் கேட்க, அவள் சென்று விட்டாள். இப்ப என்ன நடந்ததுன்னு அழுறா? நல்லா தான சண்டை போட்டுக்கிட்டு இருந்தா?

நீ எதுக்குடா கதவை திறந்த? அவளுக்கு அடிபட்டிருச்சு போல நிதின் சத்தமிட, கண்ணா உனக்கு ஒன்றுமில்லையே? என யசோதா கேட்டார்.

நிது, என்ன பண்ண? யசோவுக்கு எப்படி தெரியும்? அதிரதன் கேட்க, ரணா பேச ஆரம்பிக்கும் போது ,  நிது..ஒரு நிமிசம் என்று சொல்லுடா காவியன் என்றான் அதிரதன். அவன் குடும்பம் முழுவதும் லைனில் இருப்பது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான்.

சார், எல்லாரையும் பள்ளிக்கு கிளம்ப சொல்லீட்டீங்க? யாருக்கும் ஏதும் ஆகாதுல்ல. பாட்டி ரொம்ப பயப்படுறாங்க கேட்டான் காவியன். எல்லாரும் ரணாவை பார்த்தனர்.

அதெல்லாம் யாருக்கும் ஏதும் ஆகாது. பள்ளியிலும் பாதுகாப்புக்கு ஆள் போட்டாச்சு. இங்கிருந்து எல்லாரும் சேர்ந்தே செல்லுங்கள் விஷ்வாவும் ஒரு கார்டும் வருவாங்க என்றான் அதிரதன்.

ஒ.கே சார். அங்க ஏதும் பிரச்சனையில்லையே?

இல்லப்பா. உங்கக்கா..எப்ப பாரு அந்த கிரஷ் பத்தியே பேசுறா? உனக்கு யாருன்னு தெரியுமா?

சார், அவங்க உங்ககூட படிச்சவங்க. என்னிடம் கேக்குறீங்க? அன்று அக்கா என்னிடம் பேசும் போது தான இது உங்களுக்கு தெரிந்தது. அவங்க என்ன சொன்னாங்க? உங்க வகுப்பு பையன் தானாம். சொன்னாங்கல்ல மறந்துடுச்சா..

நான்கு வருடம் உங்களுடன் அக்கா படிச்சிருக்காங்க. இந்த நான்கு வருடம் படிச்சவங்க லிஸ்ட்ட எடுங்க. அப்புறம் கண்டுபிடிங்க என்று, சார்..இதை தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க?

அவனை தூக்கப் போறேன் அதிரதன் சொல்ல, காவியன் மேலும் சிரித்தான்.

ஏன்டா, சிரிக்கிற? சின்னபிள்ளை மாதிரி பேசுறீங்க?

சரி..சரி..நீ சொன்ன லிஸ்ட நீயே எடுத்துட்டு வா என்றான் அதிரதன்.

நானா? நான் எப்படி தான் வாங்குறது? நான் கேட்டால் குடுத்திருவாங்களா? காவியன் கேட்டான்.

என் பெயரை சொல்லு.

உங்க பேர சொன்னா, உங்களுக்கும் எனக்கு என்ன பழக்கம்ன்னு கேட்பாங்க? நான் என்ன சொல்றது?

மச்சான்னு சொல்லு என்றான் அதிரதன். செழியன் கோபமானார்.

மச்சானா? என்று அதிர்ந்தாலும் சார், இதை தான் அவனும் என்னிடம் சொன்னான். இப்பொழுது அனைவரும் சீரியசானார்கள்.

யார் சொன்னா காவியா?

அவன் தான்..அக்காவை..என்று சிந்தித்தவாறு காவியன் சொல்ல, அவன் எதுக்கு என்னை உனக்கு மச்சான்னு சொல்லணும்? வினுவை நான் காதலிப்பது தெரிந்து தான் சொல்றானோ?

சார், நாம ஏதோ பெரிசா கவனிக்காம விடுவது போல் தெரியுதே? காவியன் சொல்ல, ஆமா..முதல்ல பிரச்சனைய முடிங்க. அப்புறம் கிரஷ் ஜூஸ்ஸூன்னு கண்டுபிடிக்கலாம் என்று எழிலன் சொல்ல,

எழிலனை பக்கத்துல வச்சுகிட்டா பேசுற காவியா?

சார், இப்ப தான் வந்தாங்க என்றான் காவியன்.

சரிடா. பார்க்கலாம் என்று அலைபேசியை வைத்தான் அதிரதன். நிது, அதிரதன் அழைக்க, ரதா காவியன் கேட்பது சரி தான்.

பிரச்சனையில அவளோட தம்பி, நீ, நான் சம்பந்தப்பட்டு இருக்கோம். அதனால் கால் செய்து மிரட்டுகிறான். காவியன் நம்ம நிலையத்துல வளர்ந்த பையன் தான? அவன் நண்பர்கள் யாரையும் அவன் குறி வைக்கலை. காவியனிடம் அவன் எதற்கு பேசணும்? அதுவும் இது எதற்கு? உன்னை மச்சான்னு சொல்லணும்? அவளை அடைய நினைத்து தான் எல்லாரையும் கொன்று கொண்டிருக்கிறான்.

ஏதோ நாம விட்டது போல தான் தெரியுது.

அண்ணா, அந்த பொண்ணோட வாய்ச கேட்டது போல இருக்கே ரணா கேட்க, செழியன் அவளை முறைத்தார்.

குட்டிம்மா, நீயுமா லயன்ல இருக்க?

எல்லாருமே கேட்டுகிட்டு தான் இருக்காங்க என்றாள் ரணா.

அவளோட குரலை நீ அறிந்திருக்க வாய்ப்பேயில்லை என நிதின் சொல்ல, எல்லாருக்கும் “பை”. எனக்கு முக்கியமான வேலை உள்ளது என்று அலைபேசியை வைத்து விட்டான் அதிரதன்.

அன்றிரவு நிலையத்தில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். மாயா, வா நீயும் சாப்பிடு என்று ஜீவா கையை நீட்டினான்.

எல்லாரும் சாப்பிட்ட பின் சாப்பிட்டுக்கிறேன் என்றாள்.

தினமுமெல்லாம் நீ எடுத்து வைக்க வேண்டாம் என்ற ஜெயந்தி அக்கா சுஜியை பார்த்தார். இனி இங்கே சாப்பாடு பரிமாற மாட்டோம். நீங்களாக வரிசையில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்.

எதுக்கு இப்ப திடீர்ன்னு மாத்துறீங்க? தன்வந்த் கேட்டான்.

டேய், அதான் பெரியவங்க சொல்றாங்கல்ல? எதிர்த்து கேள்வி கேட்காத அருள் சொல்ல, அண்ணா உங்க வேலைய பாருங்க. நான் ஜெயந்தி அக்காவிடம் தான் கேட்டேன் என்றான் தன்வந்த். அவன் குளிக்க ஆடை கூட முன்பு மாயா தான் எடுத்து வைப்பாள். ஆனால் இப்பொழுது அவள் ஜீவாவுடன் சுற்றுவது தன்வந்த்திற்கு கோபம். இதில் சாப்பாடு கூட இனி எனக்காக பரிமாற மாட்டாளா? என்ற எண்ணத்தில் கேட்டான்.

முடிவெடுத்தது எடுத்தது தான். எதையும் மாற்ற முடியாது என்றார் பாட்டி. இதற்கு மேல் அவன் என்ன சொல்ல முடியும்? அனைவரும் படித்து விட்டு அவரவர் அறைக்கு சென்றனர். சுஜி, பாட்டி அனைவரும் தூங்கி விட்டார்களா? என பார்த்தான் தன்வந்த். பின் வெண்பா, அருணா, மாயா..மற்ற பொண்ணுங்க இருக்கும் அறைக்கு சென்று வெளியே நின்றான்.

Advertisement