Advertisement

அத்தியாயம் 37

அதிரதன் வெளியே வர, யசோதா ஓடி வந்தார்.

என்ன யசோ? உன்னோட அண்ணாவ ஏதும் செய்யக்கூடாதுன்னு பாட்டி மாதிரி சொல்லப் போறீயா? கேட்டான் அதிரதன்.

இல்ல கண்ணா, கவனமா போயிட்டு வா. பார்த்து பத்திரம் என்று சொல்ல, அதிரதன் அவரை அணைத்துக் கொண்டே தன் அம்மாவை பார்த்தான். அவர் மனம் பதறினாலும் கண்ணில் தேங்கிய கண்ணீருடன் தன் மகள்களை அணைத்தவாறு மகனை பார்த்தார். அவனுக்கு ஏனோ அவர் அருகேவாது இருக்க தோன்றியது. ஆனால் அது முடியவில்லையே?

அவன் நிதினை பார்க்க, நானும் வாரேன் என்ற நிதினிடம், வேண்டாம் என்று தலையசைத்து அவன் அம்மாவை பார்க்க, எல்லாம் தன்னால் என்று குற்றவுணர்வில் அல்லாடிய மனதை தன் மகள்களின் அணைப்பால் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் சிவநந்தினி.

நிதினும் கண்ணசைக்க, ரதா பார்த்து போயிட்டு வா. யார் உதவிக்கு வர்றது?

விஷ்வாவை தான் அழைச்சிட்டு போகணும் என்றான்.

கவனமா இருடா என்று நிதின் அதிரதனை அணைக்க, அவனுக்கு தன் அம்மாவின் அணைப்பு கிட்டுமோ? என்று அதிரதனுக்கு முதலாவதாய் மனம் ஏங்கியது. அதிரதன் சாட்சி சொல்ல வந்தவருடன் வெளியே சென்றான்.

இதெல்லாம் நடப்பதற்கு முன்னதாக சிவநந்தினி நிதினை தேடி சென்றார். அவர் எதற்காக வந்துருக்கிறார்? என்று புரிந்து கொண்ட நிதின் அவர் பேசும் முன், அம்மா உட்காருங்க. நான் பேசிக்கிறேன். அப்புறம் நாம் பேசுவோம் என்றான் புரியாதவாறு.

சிவநந்தினி யோசனையோடு நின்றார்.

“உட்காருங்கம்மா” என்று அவரை அமர வைத்து விட்டு அழைப்பு விடுத்தான்.

“ஹலோ, யாருப்பா அது?” கிண்டலாக நிதின் கேட்டு விட்டு ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

சார், விளையாடுறீங்களா? என்னை தூங்க விடுங்களேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான சந்தித்தோம். அதுக்குள்ள நீங்க எதுவும் வேலை வச்சுருக்கீங்களா? காவியன் கேட்டான்.

சும்மா தான் கால் பண்ணேன் காவியன் என்றான் நிதின்.

காவியனா? இவனை பற்றி கேட்க தான வந்தோம் என்று சிவநந்தினி நிதினை பார்க்க, அவன் அவரை பார்த்து கண்ணடித்தான்.

“சும்மாவா?” இரவு முழுவதும் அதிரதன் சாருடன் சுற்றியது போதாதா? நீங்களுமா? என்று அலுத்துக் கொண்டு பேசினான்.

ஏன்டா, கோபிச்சுக்கிற?

தூங்க விடாம தொந்தரவு செய்திட்டு கோபிக்கிறன்னு கேட்டா? நான் என்ன சொல்றது?

அதான் காலேஜூக்கு போகலைல்ல.

போகலையா. எங்களுக்கு வேற வேலையே இல்லையா?

என்ன வேலை பார்க்க போற? நிதின் கேட்டான்.

சார், அதிரதன் சார் என்ன செய்றார்? அந்த ரிப்போர்ட் என்ன ஆச்சு? வீட்ல சொல்லிட்டாரா? காவியன் கேட்க, சிவநந்தினி அதிர்ந்து “ரிப்போர்ட்டா?” என்று நிதினை பார்த்தார்.

பரவாயில்லை. ஓசியிலே எல்லாமே ரிப்போர்ட்டும் தனியா செஞ்சிட்டியாமே? ரதன் சொன்னான். என்னோட அப்பாவும் உன்னை பாராட்டி பேசினார்.

ரொம்ப முக்கியம் பாரு. வீட்ல என்னாச்சு?

இதுவரை யாருக்கும் ஏதும் தெரியாது. சேர்மன் சாரிடம் தான் ரதன் சொல்லணும்ன்னு சொன்னான். ஆனால் சொன்னான்னு தெரியல.

சரி, கொஞ்சம் வக்கிறீங்களா? என்று அவன் கேட்க, டேய் தூங்குறன்னு நினைச்சா. யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க? சுபிர்தன் கேட்க, மயூரி உள்ள வந்து, சுபி அண்ணா..உதவ கூப்பிட்டால் என்ன செய்ற? என்று அவர்கள் அறைக்கு வந்தாள்.

காவியன் அண்ணா முழிச்சிட்டீங்களா? வாங்க அண்ணா, இவனுக தொல்லை தாங்க முடியல. எப்ப தான் இவனுக அடிச்சுக்கிறத நிறுத்த போறாங்களோ? என்று புலம்பினாள்.

அடிச்சுக்கிறானுகளா? யாரு? என்று காவியன் எழுந்தான்.

அண்ணா, எழிலன் அண்ணாவையை அந்த தன்வந்த் கையை ஓங்குறான் என்று மயூரி சொல்ல, இவன் இன்னுமா அடங்கலை? கொதித்தான் நிதின்.

காவியா, அவனிடம் நான் சொன்னதை சீரியசா எடுத்துக்கலன்னு நினைக்கிறேன். அவனிடம் போ..என்றான்.

சார், நீங்க அமைதியா இருங்க. அவனை நாங்க பார்த்துக்கிறோம்.

ஜீவாவோட தான சண்டை போட்டான்? காவியன் கேட்க, ஆமா அண்ணா, இப்ப ரெண்டு நாளா தான் நல்லவனா அமைதியா இருந்தான் ஜீவா. அவனை சும்மா இருக்க விட மாட்டேங்கிறான் மயூரி அவள் புலம்பலை தொடர்ந்தாள்.

சார், தன்வந்த் பொறாமையில தான் எல்லாமே செஞ்சுட்டு இருக்கான். இத்தனை வருடங்களாக அவனுக்காக மாயா எல்லாமே பார்த்து பார்த்து தான் செய்வாள். இப்ப தான் அவனை பார்க்ககூட மாட்டேங்கிறாளே? அந்த கோபத்துல தான் ஜீவாவுடன் சண்டைக்கு போகிறான்.

உனக்கு பொறாமை வரலையா? நிதின் கேட்க, சார் நான் பார்த்துக்கிறேன் என்று அலைபேசியை வைத்தான் காவியன்.

அவன் என்ன சொல்றான்? என்ன ரிப்போர்ட்? அவர் கேட்கும் போது தான் அதீபன் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.

காவியனும் எழிலனும் சேர்ந்து தன்வந்த், ஜீவாவை பிரித்து சமாதானப்படுத்தினார்கள்.

அதிரதன் வீட்டில் அனைவரும் சோகமாக அமர்ந்திருந்தனர். நிதின் தோளில் சாய்ந்திருந்தாள் தாட்சாயிணி. அவனுக்கு அழைப்பு வர, எல்லாரும் அவனை பார்த்தனர்.

சார், அதிரதன் சார் வீட்ல இருக்காரா? காவியன் பதட்டமாக கேட்டான்.

என்னாச்சுடா?

அக்கா, அக்கா..என்று மேலும் பதட்டமானான்.

காவியா, தெளிவா சொல்லு என்று சொல்ல சிவநந்தினி, ரணா, ஆத்விகா மூவரும் அவனை பார்த்தனர்.

அக்காவிடம் சொல்லாமல் வந்துட்டேன்னு அவங்க கோபமா அங்கிருந்து தனியா கிளம்பிட்டாங்களாம்.

வாட்? கிளம்பிட்டாலா? பைத்தியமாடா அவ? இங்க இருக்கிற பிரச்சனை தெரிஞ்சும், ஓ…அவளை..

சார்கிட்ட சொல்லுங்க ப்ளீஸ் என்றான்.

நீ முன்பே கால் பண்ணி இருக்கலாம்ல்ல.

அவனிடம் அலைபேசியை பிடுங்கிய எழிலன், நான் கிளம்புறேன். இதுக்கு மேல அவ பேச்சை என்னால கேட்க முடியாது.

டேய், சும்மா இரு. சார் பார்த்துப்பாங்க காவியன் சொல்ல, இவனுக கிளம்புறதுக்குள்ள அவளுக்கு ஏதாவது ஆகிடும்.

நீ கிளம்பு. நானும் வாரேன் என்று காவியன் சொல்ல, உனக்கு அடிப்பட்டது முழுசா கூட சரியாகலை எழிலன் சொல்ல, உனக்கு இப்ப தான் சரியாகி இருக்கு என்று அவனும் கத்தினான்.

ரெண்டு பேரும் இருங்க. நான் போறேன் என்று சுஜி செல்ல, அக்கா..என்று இருவரும் ஒன்றாக அவளை பிடித்து நிறுத்தினார்கள்.

எல்லாரும் வாய மூடுறீங்களா? டென்சனாக நிதின் கத்தினான். செழியனும் அதீபனும் வெளியே வந்தனர்.

சுஜி, அந்த விக்ரம் என்ன தான் செய்றான்?

இங்க பசங்களுக்கு யாராவது துணை இருக்கணும்ல்ல. அவனோட டீம் ஆட்களை அனுப்ப பேசிகிட்டு இருக்கான்.

நல்லா பேசினான். உன்னோட ப்ரெண்டுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? அவன் கேட்க, இப்ப பேசி ஏதும் ஆகப் போறதில்லை அவள் சொல்ல, அண்ணா..என்று வெண்பா சத்தமிட்டாள்.

ஏய், என்னாச்சு சுஜி? நிதின் கேட்க, எல்லாரும் வெளியே வந்தனர். வெண்பா ஓடிச் சென்று சுபிர்தனை அணைத்து கொஞ்ச விட்டுருந்தா ஏதாவது ஆகி இருக்கும்? என்று அழுதாள்.

ஏய், யாருக்கு என்னாச்சு? இவன் கேட்க, யாரும் மதிக்கவில்லை.

டேய், எதுக்குடா அவசரப்படுற? காவியன் கொந்தளித்தான். உங்கள மாதிரி சண்ட போட சொல்றியா? அங்க அக்காவுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்குடா என்று அழுதான் சுபிர்தன்.

அலைபேசியை அணைத்த நிதின், வேகமாக வெளியே சென்றான். எல்லாரும் பதறி எழுந்தனர்.

செழியன் அவனை தடுக்க, சார் ரதன் வந்தால் உடனே நிலையத்துக்கு வர சொல்லுங்க.

ஏதும் பிரச்சனையா?

ஆமா சார், இப்ப சொல்ல நேரமில்லை. முதல்ல அவனை கால் எடுக்க சொல்லுங்க.

நானும் வாரேன் என்று செழியன் சொல்ல, சார் இங்கேயே இருங்க. நீங்களும் அதீபனும் எல்லாருக்கும் துணையா இருங்க. அதான் கார்ட்ஸ் இருக்காங்கல்ல நான் பார்த்துக்கிறேன் என்று கார்ட்டு இருவரை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான் நிதின்.

நாங்க மூவரும் போகிறோம் என்று எழிலன் சொல்ல, யாரும் எங்கேயும் போகாதீங்க? என்ற விக்ரம், என்னோட ஆளுங்க கிளம்பிட்டாங்க என்றான்.

நிதினும் அங்கே வந்தான். காவியன் அலைபேசியை எடுத்தான்.

அக்காவை நாங்களே நிறுத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம். பயப்படாத என்று மிதுன் சொல்ல, உஃப் என்று காற்றை ஊதித் தள்ளி விட்டு காவியன் அமர்ந்து, அக்காவுக்கு ஒன்றுமில்லையாம் என்றான்.

கொஞ்ச நேரத்துல என்ன வேலைய பாத்து விட்டுட்டாங்க சுபிர்தன் சொல்ல, நிதினும் அப்பாடா என்று அமர்ந்த பின் தான் நினைவுக்கு வந்தது. அதிரதன் வீட்டுக்கு போயிருந்தால் அவனுக்கு விசயம் தெரிந்திடும். அதுக்கு முன்னாடி நான் போகணும். வாரேன் என்று காரை எடுத்தான் நிதின்.

அதிரதன் செழியனை அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து டீவியை போட்டு விட்டான். அதில் ராமவிஷ்ணுவை போலீஸார் விலங்கு மாட்டி அழைத்து செல்வதை பார்த்து, அனைவர் மனமும் கனத்து போனது. பாட்டி உடைந்தே போனார். அதீபன் அப்பொழுதும் கோபமுடன் அதை பார்த்தான்.

அண்ணா, அவர் எங்கே? அதீபன் கேட்க, அவர் வீட்டில் விட்டு தான் வருகிறேன் என்றான் அதிரதன்.

கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல அவர் வரணும்? அவருக்கு ஆபத்தாகி விடாமல்..

அதெல்லாம் ஏதும் தேவையில்லை. நான் நேராக கோர்ட்டுக்கு அழைத்து சென்று சொல்ல வைத்து விட்டேன். அதனால் தான் அவரை உடனே அழைச்சிட்டு போயிட்டாங்க என்று சிறு வலியுடன் சொன்னான் அதிரதன்.

அண்ணா, ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். நிதின் நிலையத்துக்கு போயிருக்காரு ஆத்விகா சொல்ல,

மாமா, மெசேஜ் அனுப்பியதா சொன்னாங்க ரணா சொல்ல, அதை எடுத்து பார்த்த அதிரதன் அவன் கையில் இருந்ததை போட்டு விட்டு வேகமாக ஓடினான்.

கண்ணா, நில்லு தனியா போகாத யசோதா கத்த, அதிரதன் காதில் ஏதுமே ஏறவில்லை. அதிரதன் காரை எடுக்க நிதின் காரில் வந்தான்.

ரதா, நில்லு..நிதின் சத்தமிட, என்னாச்சுடா? என்று அதிரதன் கீழே இறங்கினான்.

வீட்டினுள் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.

நிதின் விசயத்தை சொன்னவுடன் அதிரதன் வினு நேத்ராவுக்கு கால் செய்தான். அவள் அலைபேசி எடுக்கவும் திட்ட ஆரம்பித்தான்.

யோசித்தே எதையும் செய்ய மாட்டாயா? அறிவே இல்லையாடி? எல்லாரையும் பதற வச்சிட்டு இருக்க? இனி வீட்டிலிருந்து காலை வெளிய எடுத்து வை. நானே உன்னை கொன்றுவேன் என பதட்டமாகவும் சினமுடனும் கத்தினான்.

நம் அதிரதனா இப்படி பேசுவது? என்று அனைவரும் அதிர்ந்து பார்த்தனர். வினு அழுதாள். அவள் அழுவதை கேட்டு தான் கொஞ்ச கொஞ்சமாக அதிரதன் கோபம் குறைந்தது.

செய்றதையும் செஞ்சுட்டு அழுறா பாருடா நிது என்றான் அதிரதன்.

வினு அலைபேசியை பிடுங்கிய சாரு கோபமாக, நடந்தது தெரியாமல் திட்டிக்கிட்டே போற? என சத்தமிட்டாள்.

என்ன நடந்தால் என்ன? எதுக்கு தனியா வெளிய வரணும்? அத்தனை முறை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிட்டு தான வந்தேன் என்று சாருவிடமும் சத்தமிட்டான்.

சார், காவியன் இங்கிருந்து கிளம்பியதை எவனோ பார்த்து அக்காவுக்கு மட்டும் அவன் சென்ற கார் விபத்தானது போல அனுப்பி இருக்கான். அக்கா முதல்ல பார்க்கலை. சாப்பிட்டு அறைக்கு சென்ற பின் தான் பார்த்திருக்காங்க என்று சத்தமிட்டான் மிதுன்.

என்னடா சொல்ற? அவளோட அலைபேசியவே மாத்த தானே செய்தேன்.  யாருக்கு? எப்படி போயிருக்கும்? இப்ப அவ நல்லா தான இருக்கா?

சார், அக்காவை கடத்த தான் இந்த ஏற்பாடு? அவங்க போனதும் கார் ஒன்று அவங்கள கடத்த முயன்றனர். ஜீவா சாரும், நாங்களும் அங்க போகலைன்னா அக்காவை பார்த்திருக்க முடியாது.

வீடியோ இருந்தால் அதை உறுதி செய்து விட்டு போக வேண்டியது தான? அதிரதன் கேட்க, சாரு மீண்டும் கோபமானாள்.

டேய், என்ன நினைச்சுட்டு இருக்க? விபத்துன்னு அதை உறுதி செஞ்சுட்டு தான் போய் பார்ப்பாயா? அவள் சத்தமிட, கல் இருக்கை ஒன்றில் அமர்ந்து கண்ணை இறுக்கமாக மூடி, சரி..சரி..என்ன பண்றா?

வேற என்ன பண்ணுவா? அழுதுட்டு இருக்கா?

திட்டுனதுக்கெல்லாமா அழுறது?

இல்ல, இப்பவே காவியனை பார்க்கணுமா?

ஓய், என்ன விளையாடுறீங்களா? பார்சல் செய்ய அவன் என்ன விளையாட்டு பொம்மையா?

நீங்க தான் அவனை அங்க வர சொன்னீங்க? இப்ப அவன் இங்க வரணும்? என்றாள் நேத்ரா.

ஏய், என்னை டென்சன் ஆக்காத.

போடா, முடியாதுன்னா எதுக்கு வெட்டியா பேசுற? என்று நேத்ரா அழுது கொண்டே வைத்து விட்டாள்

டேய், அவ என்னை டா போடுறாடா? என்று நிதினிடம் அதிரதன் கூறினான்.

இதெல்லாம் கம்மி. நீ அங்க போன பிறகு தான் தெரியும் என்றான் நிதின்.

ஹப்பா, இவ தான் இப்படின்னா, சாருவும் ஓவரா கத்துறாடா.

உனக்கு அவங்கள இப்ப தான தெரியும். அவங்களுக்கு எப்பொழுதிலிருந்தே உன்னை தெரியும். அதான் கண்டபடி திட்டுறாங்க. நானெல்லாம் நிறைய வாங்கி இருக்கேன் நிதின் சொல்ல, ஆத்விகா அவனை முறைத்தாள்.

அண்ணா, அந்த பொண்ணு யாருன்னு? சொல்லேன். ஆர்வமா இருக்கு. எல்லாரையும் பாரேன் ரணா சொல்ல, குள்ளச்சி இப்ப வேண்டாம். தெரியும் போது தெரிஞ்சுக்கோ..என்றான் நிதின்.

டேய், அதிரதன் சத்தமிட, குட்டிம்மா அண்ணா மூடு அப்செட்ல இருக்கான். இன்னொரு நாள் தெரிஞ்சுக்கோங்க என்று நிதின் சொல்லி, “போதுமாடா” என்றான்.

இவங்க யாருக்கும் வேண்டாம். என்னிடம் மட்டும் சொல்லு கண்ணா யசோதா கேட்க, யசோ..எல்லாரும் உள்ள போங்க. நான் வாரேன் என்று மீண்டும் அவளை அழைத்தான்.

எல்லாருக்கும் அதிரதன் பேசியது தான் கேட்டிருக்கும். அவர்கள் அவனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.

வினு, இஷ்டத்துக்கு வர போக முடியாது. நீயும் இனி வெளிய வராத. எதுவாக இருந்தாலும் கால் பண்ணு என்று அவன் சொல்ல, ம்..ம்..என்று மட்டும் சத்தம் வந்தது.

ஹேய், என்ன பண்ற?

அதற்கும், ம்..என்றாள்.

வினு, அதுக்குள்ளவா தூங்குற?

ம்ம்..என்றாள்.

நிது, அதுக்குள்ள தூங்குறாடா? என்று அதிரதன் அலைபேசியை காட்ட, அவளது ம்..கேட்டு புன்னகையுடன் நகர்ந்தான் நிதின்.

அவளது தூக்கத்திற்கு இடையேயான மூச்சு ஏறி இறங்கும் சத்தத்தையும் ரசித்து கேட்டான் அதிரதன். அதீபன் அவனை பார்த்து விட்டு உள்ளே வந்தான்.

எல்லாருடைய அமைதியையும் பார்த்துக் கொண்டே மேலே சென்றான். சற்று நேரத்தில் அனைவரும் கலைந்து செல்ல, தாட்சாயிணி எழுந்து பூஜை அறைக்கு சென்று அவர்களது மாலையை கண்ணீருடன் தொட்டுப் பார்த்தாள்.

உள்ளே வந்த அதிரதன் அவளை பார்த்து நிற்க, ரேவதியும் ரவிக்குமாரும் அவர்கள் அறைக்கு வெளியே நின்று தன் மகளை பார்த்துக் கொண்டிருந்தனர். நிதினும் ரதா..என்று அழைக்க, திரும்பி பார்த்த தாட்சாயிணி இருவரையும் பார்த்து விபூதி குங்குமம் இட்டு, ஏதும் காட்டிக் கொள்ளாமல் சென்றாள்.

நிதின் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். பூஜை அறைப்பக்கம் அதிரதன் சென்று மாலையை பார்த்து, இது என்ன மாலை? என்று நிதினிடம் கேட்டான்.

அவன் நடந்ததை சொல்ல, அதிரதன் புன்னகையுடன் “கண்டிப்பா குட்டிம்மா சொன்னது போல ஏதோ இருக்கு. இருவரும் மறைக்கிறாங்கடா” பார்க்கலாம் என்றான். இவர்கள் பேசியதை கேட்ட ரேவதியும் ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

காவியன் நேத்ராவை அழைத்து, நான் நல்லா இருக்கேன். நீங்க எதுக்கு வெளிய வந்தீங்க? என அதிரதன் பேசிய வார்த்தையை உதிர்க்க, நேத்ரா கோபமானாள். ஆனால் காவியன் அவளை சமாதானப்படுத்தினான். அருகிலிருந்து எழிலன் காவியனையே பார்த்துக் கொண்டிருந்தான். சுபிர்தன் அவனை பார்த்தான்.

அன்று இரவு உணவு வேலை முடியவும் தாட்சாயிணி அதீபனை பார்க்க நினைத்து அவனறைக்கு வெளியே நின்றான். எங்கிருந்தோ வந்த காகித ராக்கெட் அவள் காலடியில் வந்து விழுந்தது. நிதினும் அதிரதனும் அதீபன் அறைக்கு எதிரே இருந்த அறையிலிருந்து விட்டிருந்தனர்.

இருவரையும் பார்த்துக் கொண்டே அதை எடுத்து பிரித்தாள். “உள்ளே போ. எவ்வளவு நேரம் இப்படியே நிற்ப? அவன் ஒன்றும் சொல்ல மாட்டான். நாங்க உனக்கு ஆதரவா இருப்போம்” என்று எழுதி இருந்தது. இருவரும் புன்னகைத்தனர். அவளும் அவர்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அதீபன் படுக்கையில் குப்புற படுத்திருந்தான்.

அவள் தொண்டையை செருமினாள். அவளை பார்த்து, அவள் கையிலிருந்த உணவை பார்த்து விட்டு, எனக்கு பசிக்கல. போ என்றான்.

மாமா, நீங்க மதியமும் சாப்பிடலை. கொஞ்சமாவது சாப்பிடுங்களேன்.

எனக்கு வேண்டாம் என்றான்.

அத்தையும், செழியன் மாமாவும் சாப்பிடலை என்றாள்.

எழுந்து அமர்ந்து சாப்பிடலையா? கொடு என்று உணவுத் தட்டை வாங்கி எழுந்தான்.

அவன் கையை பிடித்து, மாமா, அவங்க சாப்பிட்ட பின் தான் இங்கே வந்தேன்.

எல்லாரும் சாப்பிட்டாங்களா? கேட்டான்.

ம்ம்..என்றாள்.

பாட்டி?

அப்பா தான் சாப்பிட வைத்தார்.

ரணா, ஆத்வி?

அவங்க ஓ.கே தான் என்று அவனை பார்த்தாள்.

நீ போ. எனக்கு வேண்டாம் என்று முருங்கை மரத்தில் ஏறினான்.

கொஞ்சமா மட்டும் மாமா?

வெளிய போன்னு சொன்னேன்? சத்தமிட்டான்.

நந்து அத்தை தான் சாப்பிட கொடுத்துட்டு வரச் சொன்னாங்க என்றாள்.

ஓ..அவங்க சொல்லி தான் வந்தாயா? கொடு. நீ கிளம்பு என்றான்.

மாமா, அவள் தயங்கி நின்றாள்.

என்ன? அதான் கொடுத்துட்டேல்ல. போ..

அத்தை சொல்லலைன்னாலும் கொண்டு வந்திருப்பேன் என்றாள்.

சரி, நீ கிளம்பு.

முதல்ல சாப்பிடுங்க. கிளம்புகிறேன் என்றாள்.

தாட்சு போ. ஏற்கனவே கஷ்டத்துல இருக்கேன். தொந்தரவு செய்யாத என்றான்.

அவள் கண்ணீர் வெளியே வர, நான் தொந்தரவு செய்கிறேனா மாமா? கேட்டாள்.

குற்றவுணர்வில் அதீபனை பார்க்க முடியாமல் சிவநந்தினி அவனிடம் பேசி கூட இருக்க மாட்டார். இப்பொழுது தனக்காக அக்கறையுடன் உணவு எடுத்து வந்த பொண்ணை கஷ்டப்படுத்துறோமே? என்று அவன் மனம் கலங்கியது. அவனுக்கும் ஏற்கனவே அவளை பிடிக்க ஆரம்பித்து காதலை தான் உணர்ந்தானே? அவனை தடுத்தது ரேவதியின் குரல்.

தாட்சு, அழுறத நிறுத்து. சாப்பிடணும் அவ்வளவு தானே? என்று அவன் எடுத்து சாப்பிடும் போது, நீ சாப்பிட்டியா? எனக் கேட்டான். அவள் பதிலளிக்காமல் இருந்தாள்.

அவளை பார்த்த அதீபன் சாப்பிடுவதை நிறுத்தி அவளை பார்த்தான். கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்தாள்.

அவளை இழுத்து படுக்கையில் அருகே அமர வைத்து, மீண்டும் கேட்டான். அவள் அப்பொழுதும் அமைதியாக இருந்தாள்.

உணவை ஓரம் கட்டி விட்டு அவளை பார்த்தான்.

மாமா, உங்களுக்கு என்னை பிடிக்காதா?

பிடிக்காதாவா?

கோவிலில் அந்த பாட்டி சொன்னாங்களே? மாமா என்று தயங்கி அவனை பார்த்தாள். பின் மீண்டும் குனிந்து, “எனக்கு உங்களை பிடிச்சிருக்கு மாமா” என்றாள்.

ஆனால் உன்னோட அம்மாவுக்கு என்னை பிடிக்காதே? என்னிடம் வேலை இல்லை. பணமென்று எந்த சேமிப்பும் இல்லையே?

திறமை இருக்கே மாமா? பயன்படுத்தினால் எல்லாம் வந்து விடப் போகுது.

என் அம்மா, அப்பா சரியில்லையே?

அதுக்கு நீங்க என்ன செய்வீங்க? நான் எதுவும் கேட்கலையே? எனக்கு சின்னதா வீடு போதுமே?

அது கூட என்னிடம் இல்லையே?

உங்க கனவில் வெற்றி பெற்ற பின் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்ப கூட எனக்கு சின்ன வீடு போதும்.

அப்படின்னா நான் பெரிய வீடு தயார் செய்து கொள்ளவா? கிண்டலாக அவன் கேட்டான்.

மாமா..என்று அவனை அடித்தாள்.

எந்த நேரத்துல இதை பத்தி பேசுற?

இரவில் கல்யாணத்தை பற்றி பேசக் கூடாதா மாமா?

நேற்றும் இன்றும் என் வாழ்க்கை மாறிய நாளாயிற்றே!

நாளைக்கும் மாறுமே மாமா? நீங்க உங்க கரியர்ல வெற்றியடைவீங்க. அதன் பின்னும் மாறும். நம் கல்யாணம். அதன் பின்னும் மாறும். நம் குழந்தைகள் என்று அவள் அடுக்கினாள்.

அவள் காதலில் கசிந்து பாகானான் அதீபன். அவளை இழுத்து அணைத்து, அவள் கழுத்தில் குடி புகுந்தான். பின் அவள் முகமெங்கும் இச்சுகள் வைத்தான். அவளும் இசந்து கொடுக்க, அவனது அணைப்பு நீண்ட இதழணைப்பானது.

பின் அவளது இடைபுகுந்து முத்தமிட, அவனை விலக்கி விட்டு மாமா, “எல்லாமே கல்யாணத்துக்கு பின் தான்” என்று ஓட இருந்தவளை அணைத்தான் கண்ணீருடன்.

மாமா, அழாதீங்க. உங்களுக்கு தாட்சு இருக்கா என்றாள்.

குட்டிப்பிசாசு கூட அதிகம் சேராத. அவள மாதிரியே பேசுற என்றான்.

ம்ம்..பேசுவேனே? என்று அவள் உணவுத்தட்டை பார்த்து, இன்னும் முடிக்கலை. சீக்கிரம் முடிங்க என்றாள்.

வா..முடிக்கலாம் என அவளை இழுத்தான்.

ஹே நாட்டி, நான் சாப்பிட சொன்னேன்.

சரி, எனக்கு ஊட்டி விடு என்றான். அவளும் அவன் மடி மீது அமர்ந்து ஊட்ட, அவளை காதலுடனும் பாவமாகவும் பார்த்துக் கொண்டே அவளது விரல்களை சுவைத்தான்.

மாமா, கூச்சமா இருக்கு என்றாள்.

முத்தம் தரும் போது இல்லையா? என்று அவள் காதில் கிசுகிசுத்தான். அவள் தட்டை எடுத்துக் கொண்டு வெட்கமுடன் வெளியே ஓடி வந்தாள்.

சாரி, தாட்சு என்று கண்ணீருடன், என்னால நீயும் கஷ்டப்படுவ. இதை என்னால பார்க்க முடியாது. “சாரி அண்டு லவ் யூ” என்று சொல்லிய படி கண்ணீருடன் படுத்தான்.

அதிகாலை காவியன் நினைவில் தூங்க முடியாமல் எழுந்த ரணா அறையை விட்டு வெளியே ஹாலுக்கு வந்தாள்.

அப்பா, அண்ணா..என ரணா கத்த, என்னமோ ஏதோ? என்று அனைவரும் ஓடி வந்தனர்.

ஏன்டி கத்துற? யசோதா கேட்டுக் கொண்டே வந்து அதீபனை பார்த்து அதிர்ந்தார். அவன் கையில் லக்கேஜூடன் நின்று கொண்டிருந்தான்.

செழியன் அவனை பார்த்து, எங்க போற? கேட்டார். நிதின் அவனை முறைத்துக் கொண்டிருந்தான். அதிரதன் அப்பொழுது தான் வெளியே வந்தான்.

அதீபன் பார்வை தாட்சாயிணி அறையை தீண்ட, அவளும் கண்ணை கசக்கிக் கொண்டே வெளியே வந்து அதீபனை பார்த்து திகைத்து நின்றாள்.

கேக்குறார்ல? எங்க போறடா? சிவநந்தினி சத்தமிட்டார்.

“என்னால இங்க இருக்க முடியாது. நான் போறேன்” என்றான்.

நேற்று தான் கல்யாணம் பற்றி பேசினான். அவன் என்னை காதலிப்பது போல் முத்தம் கூட கொடுத்தானே? இப்ப விட்டு போகிறானே? என்று அவள் கண்ணீர் வந்தது. இவர்களுக்குள் ஏதோ இருக்கு? என்று பாட்டியை தவிர எல்லாருக்கும் தெரியுமே? எல்லாரும் தாட்சாயிணியை பார்த்தனர்.

ஏன்? உன்னால இருக்க முடியாது? அதிரதன் கேட்க, அதற்கு பதில் கூறாமல் நான் கிளம்புகிறேன் என்று சிவநந்தினியையும் ரேவதியையும் பார்த்தான்.

ஏற்கனவே நிறைய பிரச்சனையாக உள்ளது. நீ போகணும்ன்னா போ. முதல்ல எல்லா பிரச்சனையும் முடியட்டும் என்றார் செழியன்.

இல்லப்பா, நான் கிளம்பணும் என்று அவன் கதவருகே சென்று எல்லாரையும் பார்த்து விட்டு தாட்சாயிணியை பார்த்தாள்.

அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழுது கொண்டே அறைக்கு ஓடினாள்.

தாட்சு, நில்லு..என்று ஆத்விகா அவள் பின்னே அவளறைக்கு ஓடினாள்.

புரியுதுப்பா, அம்மா நினைவிலே இருக்கன்னு தெரியுது. அம்மாவை மறக்க முடியாது தான். ஆனால் இனி அவள் வர மாட்டா. நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் யசோதா சொல்ல, அவன் கண்கலங்கி நின்றான்.

நீயும் என்னை விட்டு போறியாய்யா? பாட்டி அழுது கொண்டே அவனிடம் வந்தார். அதீபன் பதில் சொல்லாமல் நின்றான்.

நிதினும் அதிரதனும் அவனை கோபமாக பார்த்தனர்.

“நான் கிஷோரிடம் பேசினேன்” என்றார் ரேவதி.

அதீபன் அவரை பார்த்தான். அவனுக்கு கோவிலில் நடந்தது நினைவுக்கு வந்தது. அவனுக்கு கடவுள் மீது பெரியதாக நம்பிக்கை இல்லை என்பதால் அதை அவன் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளுடனான நெருக்கம்; அவள் வைசுவிற்கு உதவுகிறேன் என அதீபனிடம் காதல் வார்த்தை பேசியது; அவர்களை பாட்டி வாழ்த்தியது; ஏதோ இருவருக்கும் திருமணம் முடிந்தது போல உணர்ந்தான். எல்லாம் எண்ணி கண்ணீர் வந்தது.

அன்று கோவிலில் நடந்த அனைத்தும் எனக்கு தெரியும். நானே எதிர்பார்க்கவில்லை. என்னோட பொண்ணு இவ்வளவு பேசுவாள் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன். கிஷோர் போட்டியன்று நீயும் தாட்சுவும் கண்டிப்பா வரணும்ன்னு சொன்னான். நானும் கூட வருவேன் என்றார்.

அதீபன் அவரை உறுத்து பார்த்தான்.

என்ன? அப்படி பாக்குற? வேலையில்லாம சும்மா இருக்குறவனுக்கு பொண்ண யாராவது கொடுக்க நினைப்பாங்களா? அவர் கேட்க, ஆன்ட்டி உங்களுக்கு தெரியுமா? ரணா கேட்டாள்

அவளை பார்த்த ரேவதி, அன்று நான் இவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நீ அங்க தான நின்று நாங்க பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த? அதீபனிடம் கேட்டார்.

ஆமா, கேட்டேன். நான் தான் போறேன்னு சொல்லீட்டேன்ல. அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசுறீங்க?

பேச வேண்டிய கட்டாயத்தை நீ தான கொடுத்துட்ட.

“கட்டாயமும் இல்லை. ஒன்றுமில்லை” அவன் சொல்ல, அவன் முன் வந்த ரவிக்குமார், அவள் நீங்க அவ்விடத்தில் இருப்பது தெரிந்து தான் பேசுனா. உங்கள ஏத்துக்க முடியாம அவள் பேசல. உங்களுக்கான பதில நீ தேடணும்ன்னு தான் செய்தாள்.

நீங்க தேடிட்டீங்கன்னு நினைக்கிறேன். ஆனால் இப்ப நீங்க போகத் தேவையில்லை. இங்கிருந்தே அதற்கான வேலைய பார்க்கலாமே?

இல்ல அங்கிள், சரியா வராது. என்னால் இப்ப ஏதும் முடியாது.

ம்ம்..அதான் சொல்றேன். இப்ப உங்களால முடியாது. நீங்க உங்க பிரிப்பரேசனை ஆரம்பிங்க. நாங்க எல்லாருமே துணைக்கு இருப்போம் என்றார் ரவிக்குமார்.

அங்கிள், நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அதீபன் கேட்டான்.

இதுகூடவா புரியல? இங்கிருந்து உங்களது கனவுக்கான வேலைய தொடங்குங்க மாப்பிள்ள. தாட்சுவ அப்புறம் எப்படி பார்த்துப்பீங்க? ரேவதி கேட்க, அனைவரும் ஆர்வமுடன் அதீபனை பார்த்தனர்.

என்னோட அம்மா, அப்பா சரியில்லையே?

அதெல்லாம் பிரச்சனையில்லை. அதான் என் பொண்ண பார்த்துக்க நீங்க இருக்கீங்கல்ல. வாழப் போவது நீங்க? இதுல எதுக்கு அம்மா? அப்பா? நிஜமாகவே அன்று உங்களுக்கான பதிலை உங்களிடமிருந்து கொண்டு வர தான் நினைத்தேன்.

தாட்சுவிற்கு உங்களை பிடிக்க ஆரம்பித்தது தெரிந்து தான் உங்களை கவனித்தோம். உங்களுக்கும் அவள் மீது விருப்பம் இருக்குன்னு தெரிந்து தான் இப்படி பேசினேன்.

கல்யாணத்தை இப்ப வச்சுக்கிட்டாலும் சரி. இல்லை ஒரு வருசத்துக்கு அப்புறம் என்றாலும் சரி என்றார் ரேவதி.

அதுக்குள்ள கல்யாணம் பத்தியா? அவன் கேட்க, நீங்க என்னண்ணா சொல்றீங்க? உங்க புள்ள தான. நீங்க சொல்லணுமே? அதிரதனை தான் பேசினோம். அவருக்கு தான் வேற பொண்ணை பிடிச்சிருக்கே. இவங்களுக்கும் ஒருவரை ஒருவர் பிடிச்சிருக்கே என்று இப்பவே பேசிக்கலாமே? ரேவதி கேட்க,

நந்து..என்று செழியன் அழைக்க, அவர் கண்ணசைத்தார்.

சரி, ஆனால் மூத்தவனை வச்சுக்கிட்டு சின்னவனுக்கு கல்யாணமா? செழியன் கேட்க,

அப்பா, இப்ப வேண்டாம். முதல்ல நான் சம்பாதிக்க வேண்டாமா? அப்புறம் இதெல்லாம் வச்சுக்கலாம். முதல்ல அதிரதன் அண்ணாவுக்கும், ஆத்வி அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வையுங்க. அப்புறம் எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று அதீபன் ஒத்துக் கொண்டான்.

ஆனால் நான் இங்கிருந்து கரியருக்காக போகணும். இப்ப போகலை. பிரச்சனை முடிந்த பின் போகிறேன் என்று அவனது லக்கேஜை ஓரம் கட்டினான் அதீபன்.

ம்ம், இதுவும் சரிதான் யசோதா சொல்ல, முதல்ல பிள்ளைய சமாதானப்படுத்து போடா..என்றார் சிவநந்தினி.

இன்னொரு தடவை இப்படி பையோட வந்து நின்ன? கொன்னுடுவேன் என்றான் அதீபனை பார்த்து நிதின்.

போ..அவள சமாதானப்படுத்து என்று அதிரதன் அவன் தோளில் தட்டினான்.

அதீபன் தாட்சாயிணி அறைக்கு வந்தான்.

எங்க அவள? மெதுவாக கேட்டான்

செம்ம கோபத்துல இருக்கா. குளிக்க போயிருக்கா. வந்துருவா என்றாள் ஆத்விகா.

நீ போ..அதீபன் சொல்ல, நான் போக மாட்டேன்

ஷ்..கத்திறாத. நான் இங்க வந்தது எல்லாருக்கும் தெரியும். நீ போ. நான் அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வாரேன் என்றான். ஆத்விகா அவனை பார்த்துக் கொண்டே நகர்ந்தாள்.

அவள் சென்றதும் கதவை அடைத்து விட்டு தாட்சாயிணியின் படுக்கையில் படுத்திருந்தான். தலையை ஈரமாக்கி நனைத்து விட்டு, துவாலையுடன் வெளியே வந்து அவள் ஆடையை கோபமாக தூக்கி எறிந்தாள். படுத்திருந்த அதீபனை அவள் பார்க்கவேயில்லை. அது அவன் மீது நேராக வந்து விழுந்தது.

கண்ணாடி முன் நின்று தன் சிவந்த கண்களை மேலும் அழுது சிவப்பாக்கிக் கொண்டு. ஏசி குளிரை அதிகப்படுத்தினாள். அவளுக்கு அவளே தண்டனை கொடுக்கிறாளாம்.

பின் அழுது கொண்டே அவளது ஆடை இருக்கும் கப்போர்ட்டை திறந்து மற்றொரு துவாலையை எடுத்து மீண்டும் கண்ணாடி முன் நின்று அழ, துடைக்க..அழ, துடைக்க..என இருந்தாள். அவளை ரசித்துக் கொண்டிருந்த அதீபனுக்கு இவளது செய்கை சிரிப்பை தான் வர வைத்தது.

அவன் புன்னகையுடன் அவளை பார்க்க, முகத்தை துடைத்துக் கொண்டே அப்படியே படுக்கையில் விழுந்தாள்.

கையை நீட்டி படுத்தவளுக்கு என்ன இது? கை அந்தரத்தில் இருப்பது போல் இருக்கே. என்று கையை மடக்கி விட்டு மேலும் விரித்தாள்.

படுக்கை ரொம்ப கடினமாக தெரியுதே? என்று நகர்ந்தாள்.

அய்யோ அம்மா, கொன்னுட்டியேடி? என்று அதீபன் அவளது கூந்தலை விலக்கிக் கொண்டே அவன் இடுப்பில் கை வைத்துக் கொண்டே அவளை பார்த்தான்.

அம்மா..அம்மா..அவள் கத்த, வாய மூடு..கத்துன. இந்த துவாலை என் கைக்கு வந்திடும் என்றான்.

மாமா, நீ தானா?

ஆமா, நான் தான். பேய் தான் வந்திருச்சுன்னு நினைச்சியா? அவன் கேட்க, வெளிய போடா என்று அவனை தள்ளினாள். அவன் அசையவேயில்லை. படுத்த இடத்திலே திருமால் பள்ளிகொண்டாற் போல் படுத்திருந்தான்.

நீ தான் கிளம்புனேல? போடா.. போடா என்று சொல்லிக் கொண்டே அழுதாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

உன்னால இங்க இருக்க முடியாதுல்ல போடா. உனக்கு கஷ்டமால்ல இருக்கும். போ..போ..எனக் கத்தினாள். அவள் சத்தம் வெளியே கேட்டது.

கத்துன இங்க நடக்குறதே வேற?

என்னடா மிரட்டிறியா? போ..இனி நான் உன்னை நம்பவே மாட்டேன்.

நானே எவ்வளவு கஷ்டத்தில் இருக்கேன். என்ன போ..போனே பத்துற? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? அவளை ஏமாற்றி நடிக்க ஆரம்பித்தான் அதீபன்.

நான்..நானும் தான் கஷ்டத்தில் இருக்கேன். நேற்று கல்யாணம் வரை பேசிட்டு இப்ப என்னன்னா பொட்டி படுக்கையெல்லாம் சுருட்டீட்டு நிக்குற? அவள் அழ,

நானே அம்மாவை இழந்து, நடந்து விசயத்தை ஏத்துக்க முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். அம்மா நினைவா இருக்கு தெரியுமா? நீயும் என்னை போக சொல்றேல்ல..என்று கண்ணீரை காட்டி கோபமாக திரும்பிக் கொண்டான்.

அவன் அம்மா, அப்பா விசயம் கஷ்டமா இருந்தாலும் எப்படியும் ஏற்றுக் கொண்டு தான் ஆகணும் என புரிந்தது. ஆனால் நிஜமாகவே அதீபன் அழ, அவன் உடல் குலுங்களை பார்த்து தாட்சாயிணி மனம் இளகி போயிற்று.

மாமா, கோவிச்சுக்காத. நீ கிளம்பவும் பயந்துட்டேன். அதனால் தான் என்று அவன் திரும்பிய பக்கம் வந்து நின்றாள். அவன் எழுந்து அவளை அணைத்துக் கொண்டான்.

மாமா, நான் மாத்திட்டு வாரேனே?

கொஞ்ச நேரம் மட்டும் என் பக்கம் இரு என்று அவளை மேலும் இறுக்கினான். அய்யோ, வெறும் துவாலையுடன் விழுந்தால் மானம் போயிடுமே? என்று மாமா, அண்ணா என்றாள்.

அதீபன் அவளை சோகமாக விலக்கி விட்டு, எங்க? அண்ணாவா? என்று அவளை பார்த்தால் அவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டு, மாமா அந்த ஆடையை மட்டும் எடுத்து தா..

இல்ல, நீ என்னை ஹக் பண்ணாம விட்டுட்டேல்ல. நீ அங்கேயே இரு. அவளிருக்கும் அறைப்பக்கம் வந்தான். அவள் வேகமாக கதவை அடைக்க, கரெண்டு போனது. அவனும் வெளியிலிருந்து தாழ்ப்பாள் போட்டான். பகலிலும் அறையில் விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே வெளிச்சம் இருக்கும். இப்பொழுது தாட்சாயிணி அறையில் இருள் சூழ, அவள் கதவை திறந்தாள். திறக்க முடியவில்லை. அவன் பூட்டி இருக்கிறான் என அறிந்து கொண்டாள்.

மாமா…கதவை திறங்க, பயமா இருக்கு. கதவை திறங்க என கத்தினாள்.

என்னை ஏமாத்திட்டு போக நினைச்சா இப்படி தான் உனக்கு தண்டனை கிடைக்கும் என்றான் புன்னகையுடன் அதீபன்.

மாமா, விளையாடாதீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சத்தமிட்டாள்.

பத்து நிமிசம் உள்ள இரு, நான் வாரேன் என்று அவன் கிளம்ப, அவளிடம் சத்தமில்லை. அவனுக்கு அவள் சத்தம் நின்றதும், ஹே..நீ என்ன செய்தாலும் நான் கதவை திறக்க மாட்டேன் என்றான். ஆனால் அவளுக்கு மூச்சு வாங்கியது. கரெண்டு வந்தது. ஆனாலும் மூச்சு விட முடியாமல் திணறி அங்கேயே விழுந்தாள். அவள் விழும் போது பொருட்கள் விழும் சத்தம் கேட்டு கதவை திறந்து வெளியே செல்ல இருந்த அதீபன், அவள் கதவருகே வந்து சத்தம் கொடுத்தாள். அவள் ஏதும் பேசாமலிருக்க, கதவை திறந்தான்.

அவள் விழுந்து இருப்பதை பார்த்து, தாட்சு..தாட்சு..என்று அழுது கொண்டே அவள் கன்னத்தில் அடித்தான். இவன் சத்தம் கேட்டு அனைவரும் உள்ளே வந்தனர்.

என்னாச்சு? என்று முதலில் ரணா தான் உள்ளே வந்தாள். தாட்சாயிணியை பார்த்து, ஆண்களை உள்ளே விடாமல் தடுத்தாள். சிவநந்தினி, ஆத்விகா, ரேவதி உள்ளே வந்து அவனிடம் கேட்க, அவன் நடந்ததை சொன்னான்.

ரணா, வழிய விடு..நிதின் சொல்ல, மாமா..வெளிய இருங்க என அவர்களை வெளியே வைத்து பூட்டி விட்டு அண்ணிய என்னடா பண்ண? ரணா சத்தமிட்டாள்.

மாப்பிள்ளைய திட்டாதீங்க. அவளுக்கு ஒன்றுமில்லை. இருட்டு பயத்தில் மயங்கிட்டா.

அத்த, ஒரு நிமிசம் கூட கரெண்டு போயிருக்காது. உடனே வந்திருச்சு அதீபன் சொல்ல, இருங்க என்று தண்ணீரை தெளித்து விட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து எழ வைத்தனர்.

தாட்சாயிணி எழுந்து அவள் அம்மாவை பார்த்தது அணைத்து அழுதாள்.

சாரி தாட்சு என்று அதீபன் கண்ணீருடன் சொன்னான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. அவள் சின்ன புள்ளையா இருந்தப்ப..ஸ்கூல்ல இவள் உள்ளிருப்பது தெரியாமல் பண்ணி வகுப்பு அறையை பூட்டிட்டு போயிட்டாங்க. அவளை காணோம்ன்னு எல்லா இடத்திலும் தேடினோம். இரவானது. எதற்கும் வகுப்பில் பார்க்கலாம்? என பார்க்கும் போது முதல் முறையாக ரொம்ப அழுது பயந்து அவள் மயங்கிய நிலையில் வீட்டிற்கு அழைத்து வந்தோம். அதிலிருந்து இருட்டென்றாலே ரொம்ப பயப்படுவா. கோஸ்ட் மூவி பார்ப்பா. அதிலும் இருட்டு வந்தா கத்து கத்துன்னு கத்துவா என ரேவதி அவளை பார்த்துக் கொண்டே சிரித்தார்.

அதீபனுக்கு சிரிப்பு வரவில்லை. அவனுக்கே உரித்தான தன் பெற்றொர்களை இழந்தவன் இப்பொழுது தன்னவளையும் இழந்து விடுவோமோ? என்ற பயத்தில் ரேவதி சிரிப்பதை பார்த்தும் கண்ணீருடன் தாட்சாயிணியை அணைக்க வந்தான்.

ஓய், என்னடா பண்ற? அண்ணி இத வச்சுக்கோங்க. பக்கத்துல வந்த கொன்றுவேன் என்ற ரணா, வாடா..என்று அவனை இழுத்து வெளியே தள்ளி விட்டு கதவை அடைத்தாள்.

தாட்சு..என்று அதீபன் அழ, என்னாச்சு? அவள என்ன பண்ண? நிதின் கோபமாக அதீபனை அடிக்க வந்தான். முந்திய அதீபன் மாமா, அவள் பயந்துட்டா..என்று நிதினையே அணைத்து அழுதான். அதிரதன் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

செழியனும் ரவிக்குமாரும், பாப்பாவுக்கு ஒன்றுமில்லையே? என கேட்டனர். அப்பா, அதெல்லாம் ஒன்றுமிருக்காது. பயந்ததாக சொன்னான்ல்ல என்று அதிரதன் சொல்ல, இரு நண்பர்களும் அவ்வறையையே பார்த்தனர்.

 

Advertisement