Advertisement

அத்தியாயம் 3

காவியன் நேத்ராவை கோவிலில் சந்தித்த நேரம், மிதுனை தேடி கல்லூரிக்கே வந்து விட்டாள் வெண்பா.

வாட்ச் மேனிடம் அழுது கொண்டே,என்னோட அண்ணாவை பார்க்கணும். நான் உள்ளே போகவா? கேட்டுக் கொண்டே மிதுன் இருக்கிறானா? என்று கண்களால் அலசினாள். அவர் அவளை வினோதமாக பார்த்தார். காரணம் அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை.

மாணவன் ஒருவன் அவளருகே வந்து, இது என்ன இரத்தமா இருக்கு? உனக்கு அடிபட்டிருக்கா? கேட்டான்.

என்னோட அண்ணனை பார்க்கணும் என்று ஒ..வென அழுதாள்.

உன்னோட அண்ணா பேர சொல்லு? அவன் கேட்க, அவரு பேரு மிதுன். இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்காங்க. ஓ..முதல் வருட மாணவனா? எந்த பிரிவு அவன் கேட்க, மேலும் அழுது கொண்டு தெரியலை என்றாள்.

சரிம்மா, அழாத. யாருன்னு கேட்கிறோம் என்று அவன் சொல்ல, அவன் மற்றொருவனிடம் கேட்டான்.

தெரியலை என்று பசங்க யாரு? யாரு? என்று பேச, ஓர் பொண்ணு அவளிடம் வந்து, இந்தா தண்ணீ குடி வந்துருவான் என்று எழிலன், உன்னோட பார்ட்னர் அந்த முதல் வருட மாணவன் பெயர் மிதுன் தான?

ஆமா எழிலன் சொல்ல, அவனை சீக்கிரம் கூட்டிட்டு வாடா. அவளோட தங்கை அழுதுகிட்டு இருக்கா. ஆடையில் இரத்தமா இருக்கு.

இரத்தமா? என்ற எழிலன் மிதுனை அழைக்க, என்னாச்சு சீனியர்?

டேய், உன்னோட தங்கை ஆடை முழுவதும் இரத்தமுடன் வந்திருக்காளாம் என்று சொல்ல. தங்கை இரத்தமா? என்று மிதுன் வெளியே ஓடி வர, எழிலனும் ஓடி வந்தான்.

மிதுன் வெண்பாவை பார்த்து பதறி, என்னச்சும்மா? கேட்டுக் கொண்டே வர, அவனை பார்த்து வெண்பா ஓடி வந்து மிதுன் என்று எழிலனை அணைத்தாள்.

வெண்பா என்று சத்தமிட்டான் மிதுன். அவள் விலகி நிமிர்ந்து பார்த்து விட்டு, மிதுனை பார்த்து அவனை அணைத்தாள்.

என்ன இது? இரத்தமா இருக்கு? மிதுன் கேட்க, அண்ணா..என அழுது கொண்டே யுவி இரத்தம் இரத்தமா வாமிட் பண்ணான். அவனை ஆனந்தி அக்கா, மல்லிகா அக்கா, பாட்டி ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க என்று மீண்டும் அழுதாள்.

அக்கா எங்க?

அவங்க கோவிலுக்கு போனாங்க. பாட்டி காவியன் அண்ணா கிட்ட சொன்னாங்க. அண்ணா அங்க போயிருக்காங்க. மாயா, தனசேகரன் அங்கிள், ஜெயந்தி அக்கா மத்த பசங்கள பார்த்துக்கிட்டு இருக்காங்க.

யாருமே அலைபேசியை எடுக்கலை. அதான் உங்க காலேஜ் பக்கம் என்பதால் வந்துட்டேன். சீக்கிரம் வா, பயமா இருக்கு என அழுதாள்.

மத்த பசங்களுமா அலைபேசியை எடுக்கலை என்று சுபிர்தனை அழைத்தான். அவன் எடுக்கலை. கிருஷ்ணன் எடுத்தான்.

டேய், யுவிக்கு..?

எந்த ஹாஸ்பிட்டல் மிதுன் கேட்க, அவன் சொன்னான்.

சீனியர் என்று மிதுன் அழைக்க, எழிலன் வெண்பாவை பார்த்துக் கொண்டு நின்றான். டேய், எழிலா, அவன் கூப்பிடுறான். காது போச்சா? என்று அவன் நண்பன் நளன் அழைக்க..

ம்ம்..கேட்குதுடா சொல்லு என்றான்.

நாம வாங்க வேண்டியதை நாளைக்கு பார்க்கலாமா? மிதுன் கேட்க, ம்ம்..வாங்கலாமே? என்றான்.

அண்ணா, நானும் ஹாஸ்பிட்டல் வாரேன் என்றாள் வெண்பா. அவன் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்த மிதுன் டென்சன் ஆனான்.

அண்ணா, அவனுக்கு ஒன்றுமாகாதுல்ல? வெண்பா கேட்க, அக்காவையும் ஹாஸ்பிட்டல்ல காவியன் சேர்த்திருக்கானாம். அவள் மேலும் அழுதாள்.

உன்னை யாரு தனியா வரச் சொன்னது. அண்ணாவை வர சொல்லி இருக்காலாம்ல.

எல்லாரும் பயந்துட்டாங்க. அங்கிளும் அவங்கள சமாதானப்படுத்தினாங்க.

அதுக்காக தனியா இப்படியேவா வருவ? இப்ப உன்னை விட போகவா? அக்காவை பார்க்க போகவா? யுவியை பார்க்கப் போகவா? அய்யோ என்று தலையை பிடித்தான் மிதுன்.

ஏன்டா, இந்த பொண்ணை எங்க விடணும்ன்னு சொல்லு நாங்க விட்டுடுறோம் என்ற நளன் எழிலனை பார்த்தான்.

ஆமா என்று அவன் தலையசைக்க, இங்க பாரு வெண்பா. ஜெயந்தி அக்கா எல்லாரையும் பார்த்துப்பாங்க. நேரமாகுது. எப்படியும் நாங்க வர நேரமாகலாம். சீனியர் உன்னை விட்டு வந்த பின் தனசேகரன் அங்கிளை கதவை பூட்டி வச்சுக்க சொல்லு. அவரை எனக்கு கால் பண்ண சொல்லு. அவங்கவங்க அறையில வச்சுக்க  படிக்க சொல்லு. நான் ஹாஸ்பிட்டல் போய் பார்த்துட்டு கால் பண்றேன். இப்ப வந்த மாதிரி தனியா வெளிய வராத. புரியுதா? கேட்டான். அவள் தலையசைத்தாள்.

செல்ல இருந்தவன் வெண்பாவை பார்த்து, அவன் சட்டையை கழற்றி, இதை போட்டுக்கோ. இவளை பத்திரமா விட்டுருங்க சீனியர். “ரொம்ப தேங்க்ஸ்” என்று அவன் வெளியே செல்ல,

ஏய், நில்லுடா..என்று எழிலன் மிதுனுக்கு அவனது பையிலிருந்து லேப் கோர்ட்டை கொடுத்தான். “தேங்க்ஸ் சீனியர்” என்று சொல்லிக் கொண்டே ஓடினான். வெண்பா வழிகாட்ட எழிலனும் நளனும் அவளுக்கு துணையாக அன்பு நிலையத்திற்கு சென்றனர்.

அவர்கள் செல்லும் போதே உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க? எழிலன் கேட்டான்.

நாங்க நிறைய பேர் சிறுவயதிலிருந்தே சேர்ந்தே தான் இருக்கோம்.

நிறைய பேரா? நளன் கேட்க, ஆம் என்று தலையை ஆட்டிக் கொண்டு, எங்களுக்கு யாருமில்லை. அதனால் நாங்க எல்லாரும் உறவாகிகிட்டோம் என்றதும் இருவரும் அங்கேயே நின்றனர்.

என்னாச்சு? என்று கண்ணை துடைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தாள்.

அச்சோ, என்ன பண்றீங்க? நடுரோட்ல இருவரும் நிக்குறீங்க என்று இருவருக்கும் இடையில் வந்து அவர்கள் கையை பிடித்து இழுத்து ஓரமாக அழைத்து வந்தாள்.

அப்படின்னா, மிதுன் உன்னோட அண்ணன் இல்லையா?

அண்ணா தான்.

என்னம்மா குழப்புற? நளன் கேட்க, சின்ன வயசுல இருந்து அண்ணா, தங்கையா தான் பழகுறோம். உங்களுக்கு ஒரு சீக்ரட் சொல்லவா? இருவரும் குனிங்க என்று இருவர் காதிலும் வந்து, ஒரு சிலர் மட்டும் லவ் பண்றாங்க என்றாள்.

லவ்வா? ஆமா, அந்த யுவி உனக்கு அண்ணனா? இல்லை லவ்வரா? எழிலன் கேட்க, நளன் அவனிடம் நடத்துடா என்றான். ஆனால் அவள் முகம் மாறியது.

யுவி அஞ்சு வயசு பையன் என்றாள் கண்ணீருடன்.

என்ன? அஞ்சு வயசு பையன் இரத்த வாந்தி எடுத்தானா? நளன் கேட்க, அவள் அழுது கொண்டே நடந்தாள்.

அவள் ஓரிடத்தில் நிற்க, என்னாச்சு? இன்னும் அழணுமா? எழலன் கேட்க, இல்லை என்று அவர்கள் நிலையத்தை காட்டினாள். மூவரும் உள்ளே நுழைந்தனர்.

ஏய், எங்க போன? என்று தன்வந்த்தும், ஜூவாவும் கோபமாக அவளிடம் வந்தனர். அவள் எழலன், நளன் பின் மறைந்து நின்றாள்.

ஏய், எதுக்கு மிரட்டுற? நளன் கேட்க,

நீங்க யாரு? தன்வந்த் கேட்டான். மிதுன் சீனியர் என்று நளன் சொல்ல வந்தவனை நிறுத்திய எழிலன், அவனோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் என்றான்.

ப்ரெண்டா? நீங்க எதுக்கு இவள கூட்டிட்டு வந்தீங்க?

இருவரும் நகருங்க. நான் பேசுறேன் என்று முன் வந்தாள் மாயா.

நீ எதுக்கு இவங்களோட பேசணும் தன்வந்த கோபப்பட, இங்க பாரு தம்பி, இந்த பொண்ணுக்கு துணைக்கு தான் வந்தோம். மிதுன் ஹாஸ்பிட்டல் போயிருக்கான் என்று எழிலன் நிதானமாக பேசினான்.

உங்க காலேஜ் வரை வர தெரிஞ்சவளுக்கு “இப்ப வரத் தெரியாதா? உனக்கு ஆள் கூட்டிட்டு வரணுமோ?” தன்வந்த் வினவ,

என்னடா பேசுற? அப்ப பயத்துல வேற வழியில்லாம தான் போனா. இருட்டாகும் நேரம்ன்னு அண்ணா தான் துணைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அவள பாதுகாப்பா கூட்டிட்டு வந்திருக்காங்க. தேங்க்ஸ் சொல்லாம இப்படி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க? மாயா கேட்க,

நீ எதுக்கு இப்ப உள்ள வர்ற? தன்வந்த் கேட்க, நான் தான் அவளை அனுப்பி வைத்தேன் என்று மாயா சொல்ல, நீ எவனுடன் போகணும்ன்னா போக வேண்டியது தான? அவள எதுக்கு அனுப்பி வச்ச? அவன் கேட்க, மாயா கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அமைதியாக இருந்த வெண்பா கொந்தளித்தாள்.

நளன், எழிலனை நகர்த்தி விட்டு தன்வந்திடம் வந்து அவனை ஓங்கி அறைந்து, என்ன பேச்சுட்டா பேசுற? உனக்கு எங்கள பத்தி பேச எந்த உரிமையும் இல்லை. இதுக்கு மேல மாயா பத்தி ஏதாவது பேசுன சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ.

அங்க யுவிக்கு என்னாச்சுன்னு தெரியாம பதறிக்கிட்டு இருக்கோம்? அக்கா தனியா கோவிலுக்கு போயிருக்காங்கன்னு காவியன் அண்ணா காலேஜ்ல இருந்து இங்க வந்து கோவிலுக்கும் போயிருக்காங்க. நான் சொன்ன மறுநிமிசம் மிதுன் அண்ணாவும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிட்டாங்க. அக்காவையும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க என்று அவள் சொல்ல,

பாப்பாவுக்கு என்னாச்சும்மா? என்று ஜெயந்தியும், தன சேகரனும் வந்தனர். தெரியலை எனக்கு எப்படி தெரியும்? நான் பையனா இருந்தா இப்படி இவனுக்கெல்லாமா பதில் சொல்லிக்கிட்டு இருப்பேன். இவன் செய்ய வேண்டியதை நானும் மாயாவும் செஞ்சுருக்கோம். பெரிய இவனாட்டம் பேசுற?

யுவிய அந்த நிலையில் பார்க்கவும் எல்லாருக்கும் உயிரே போச்சு. இங்க எல்லாரையும் நல்லா பாரு. டேய்..நீ தான் டா என்ன நடந்தாலும் ப்ரெஷ்ஷா இருக்க..என்று தன்வந்த்தை பார்த்து,

மாயாவ என்ன சொல்லிட்ட? அக்கா முன்னாடி சொல்லி இருந்த உன்னை கொன்றுப்பாங்க. அவ செஞ்சது, செய்றது உன் கண்ணுக்கு தெரியாதே? எங்க அந்த சிலுப்பி..அவள கூட்டிட்டு வருவேல்ல. நீ மாயாவை கேட்ட மாதிரி உன்னை கேட்க ஒரு நிமிசம் ஆகாது.

இப்ப எதுக்கு அவள இழுக்கிற? தன்வந்த் கோபமாக கேட்க,

ஜூவா பாரேன், இவ்வளவு நேரம் நம்ம பிரச்சனைய பேசினேன். ஒரு பதில் பேசலை. அவளை பற்றி பேசவும் இவனுக்கு கோபம் வருதாம். அவள் காரணமில்லாமல் உன்னுடன் பழகலை. அது மட்டும் நல்லா நினைவில் வச்சுக்கோ.

ஏய்..வெண்பா, ப்ளட்டா இருக்கு ஜூவா பதற, மேல கையை வச்ச அவ்வளவு தான்.

ஏன்டா, உனக்கு கூட யுவியை பார்க்க தோணலையா? இப்ப வரையும் யாருமே கால் பண்ணலைல்ல.

இல்ல வெண்பா, நீ வெளிய போனது தெரிஞ்சு உனக்காக தான் காத்திருந்தோம். என்னடா? ஜூவா திரும்பி பார்க்க, நீ பாதுகாப்பா வந்துட்டேல்ல. நாங்க கிளம்புறோம் ஜூவா சொல்ல,

இந்த நேரம் வேண்டாம் ஜூவா. அக்காவுக்கு என்னன்னு முதல்ல சொல்லு வெண்பா? மாயா கேட்டாள்.

தெரியலை. ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது மட்டும் தான் தெரியும்.

விஷ்வா சார்கிட்ட சொல்லலாமா? வெண்பா கேட்க, வேண்டாம், இதை அக்கா விரும்ப மாட்டாங்க.

“நாங்க கிளம்புறோமே!” பார்த்துட்டாவது வாரோம் என்று ஜூவா சொல்ல, எழிலன் அவர்களிடம் யாரும் எங்கும் சொல்லக்கூடாது. லாக் பண்ணிட்டு உள்ள இருங்க மிதுன் சொன்னான்ல என்று அவன் வெண்பாவை பார்க்க..

தன்வந்த் அவளிடம், இந்த ப்ளட்? கேட்டான்.

யுவியோடது என்ற வெண்பா, தனசேகரனிடம்..மிதுன் அண்ணா கால் பண்ண சொன்னாங்க. இவன் பேசிய பேச்சில் நான் மறந்தே போயிட்டேன் என்று எழிலன், நளனை பார்த்து “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

நாங்க கிளம்பிறோம். எல்லாரும் பாதுகாப்பா இருங்க என்று தன்வந்தை மட்டும் முறைத்து விட்டு அவர்கள் நகர, தம்பி, உட்காருங்க நான் தேனீர் போட்டுத் தாரேன் என்று ஜெயந்தி சொல்ல, இருக்கட்டும். நீங்களே கஷ்டத்துல இருப்பீங்க.

அதனால என்னப்பா? உங்க வேலை விட்டு எங்க பிள்ளைய பத்திரமா கூட்டிட்டு வந்திருக்கீங்க என்று சொல்ல, ஆமா..உட்காருங்க. ரொம்ப தேங்க்ஸ் என்று ஜூவாவும் அவர்களுடன் அமர்ந்தான்.

ஒரு குட்டிப்பையன் ஓடி வந்து, ஜூவா, நீ இவங்களோட உட்கார்ந்தா ஜெயந்திம்மா தேனீர் தந்துற மாட்டாங்க என்றான்.

டேய் நில்லுடா, “குட்டி சாத்தான்” என்று ஜூவா அவனை விரட்ட, இருவரும் அவனை பார்த்து புன்னகைத்தனர்.

அங்கிருந்த தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து கை, கால்களை அலம்பிக் கொண்டிருந்தாள் வெண்பா. தன்வந்த் அங்கேயே அமர, மாயா தேனீரை வாங்கி வந்து இருவரிடம் கொடுத்து “தேங்க்ஸ் அண்ணா”. வெண்பா கிளம்பவும் பயந்தோம். இங்க வேற வழியும் இல்லை. எல்லாரும் சின்ன பசங்க. பெரிய பசங்களுக்கு ஸ்டடி கிளாஸ் முடியல. சின்ன பசங்கள பெரியவங்க இருந்தா தான் சமாளிக்க முடியும். அதான் உங்களுக்கும் சிரமமாகிடுச்சு என்றாள்.

ச்சே, “சிரமமெல்லாம் இல்லை” என்று எழிலன் வெண்பாவை பார்த்துக் கொண்டே கூறினான். மாயா புன்னகையுடன், கோபமா இருந்தா இப்படி தான் யார் இருக்காங்கன்னு பார்க்கவே மாட்டா என்று புன்னகைத்தாள்.

வெண்பா உள்ளே சென்று கிரீட்டிங் ஒன்றை எடுத்து வந்து தன்வந்த் மீது தூக்கி போட்டு செல்ல, “வெண்பா என்னடி பண்ற?” அவள் பின்னே ஓடினாள் மாயா. அவளுக்கு பின், எல்லாரும் அவன் மீது ஒவ்வொன்றாய் தூக்கி போட்டனர். இருவரும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் தம்பளரை வாங்க வந்த அருணாவை பார்த்த எழிலன், என்னது கார்டு? கிப்ட்ஸ் மாதிரி இருக்கே? கேட்டான்.

அவனை பார்த்த அருணா, இவனுக்கு இது வேணும்தான் சார். ரெண்டு நாளைக்கு முன் தான் இவனுக்கு பிறந்தநாள். எல்லாரும் அவனுக்காக இரவு காத்திருந்தோம். ஆனால் இவனுக்கு ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தான் ரொம்ப முக்கியமா போயிட்டாங்க. இங்க வந்த பின்னாவது சாப்பிட வருவான்னு பார்த்தா யாரையுமே கண்டுக்கல அவனறைக்கு போயிட்டான். இப்ப கொஞ்ச நாளா இப்படி தான் திரியிறான். அவன் நிலையிலிருந்து அவன் தவறுகிறான். இதுக்கு கண்டிப்பா அனுபவிப்பான் என்று அவனிடம் சென்று,

நீ எல்லாத்தையும் மறந்துட்ட. ஒண்ணு மட்டும் மறந்துடாத. மாயா உன்னோட பொறுப்பு. அவள் இங்கிருந்து கிளம்பிய பின் என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ. இப்ப முடிஞ்சா அவளிடம் மன்னிப்பு கேள். ரொம்ப தப்பா பேசிட்ட. நாங்க கூட அடிக்கடி அக்காவுடன் வெளிய போவோம். ஆனால் அவள் வெளியே சென்றதே இல்லை. “அவள் எவனை பார்க்க போகிறாள்?” நீ தான் தப்பான வழியில போற. சொல்ல தோணுச்சி சொன்னேன் என்று அவர்களிடம் தம்ளரை வாங்கி விட்டு, வெண்பாவுக்கு உதவியதுக்கு “தேங்க்ஸ் சார்” என்று அவனை பார்த்து விட்டு சென்றாள்.

வெண்பா ஆடை மாற்றி பாவடை சட்டையில் வந்தாள். மாயா தன்வந்திடம் வந்து, எழுந்து சாப்பிட வா என்று அழைத்தாள். அவன் அவளை முறைத்துக் கொண்டு எழுந்தான்.

முறைச்ச கண்ணை நோண்டிருவேன் பார்த்துக்கோ என்றாள் வெண்பா.

அவர்களிடம் வந்து ஒரு நிமிசம் தன்வந்த் அவனை நிறுத்திய மாயா, எனக்கான பொறுப்பை நீ எடுத்துக்க வேண்டியதில்லை. நீ நல்லா படி அதுவே போதும் என்றாள்.

இங்க பாரு எல்லார் மாதிரியும் என் முன்னாடி பேசி நடிக்காத அவன் சொல்ல, யாருடா நடிக்கிறது? நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஓவரா பேசிட்டு இருக்க வெண்பா எகிற,

இதுல நீ தலையிடாத அவன் சொல்ல, மாயா அவள் கையை பிடித்து வேண்டாம் என்றாள். என்னமும் செய் என்று அவள் கையை உதறி சென்றாள்.

அக்கா, இந்தா என்று நிலவன் தண்ணீரை வெண்பாவிற்கு கொடுத்தாள். என்ன இது அதிசயம்? எனக்கா கொண்டு வந்துருக்க? கேட்டாள் வெண்பா.

ஆமா அக்கா. இதை குடிச்சிட்டு போய் தெம்மா பேசு என்றான் குட்டிப்பையன் நிலவன்.

இப்ப பேசியது போதாதா? என்று வெண்பா பின் வந்து எழிலன் பேச, அவள் பயந்து தண்ணீரை அவள் மேலே கொட்டினாள்.

ஏய், பேச தான செய்தான். இப்படி கொட்டிட்டாயே? நளன் அவளை பார்த்து. உன்னோட ஆடையை நீ மறுபடியும் மாத்தணும் என்றான்.

இல்ல, அது காஞ்சிடும்.

“நைட் குளுரப் போகுது” என்றான் எழிலன்.

பரவாயில்லை சார். நான் பார்த்துக்கிறேன்.

“என்னை எதுக்கு சார்ன்னு கூப்பிடுற?”

ஓ.கே உங்களையும் அண்ணன்னு கூப்பிடுறேன் என்று அவள் சொல்ல, அதெல்லாம் தேவையில்லை. என்னோட பெயர் எழிலன். பெயர் சொல்லியே அழைக்கலாம் என்றான். அவள் அவனை பார்க்க, நான் நளன். என்னையும் பெயர் சொல்லியே அழைக்கலாமே?

“ஏன்டா, உனக்கு என்ன தான் பிரச்சனை? மாயாவை ஏதாவது சொல்லிகிட்டே இருக்க?” ஜூவா கேட்க,

“அவளை சொன்னால் உனக்கென்ன? உனக்கு வேற வேலையே இல்லையா?” தன்வந்த் கேட்டான்.

“ஜூவா, வா போயிடலாம்” என்று மாயா அவன் கையை பிடித்து இழுத்தாள்.

“ஓ..இதனால் தான் இவளுக்காக பேச வர்றீயா? எத்தனை நாளா ஓடுது?” தன்வந்த் கேட்க, மாயா அழுதாள். ஜீவா அவனை அடிக்க, அவன் ஜூவாவை அடிக்க இருவரும் கட்டிக் கொண்டு உருண்டனர்.

“டேய், என்ன பண்றீங்க?” தனசேகரன், ஜெயந்தி, எழிலன், நளன் அவர்களை பிரிக்க, மாயா..இவனெல்லாம் உன்னோட காதலுக்கு அருகதையே இல்லாதவன். போயும் போயும்..இந்த கேவலமான பிறவிய லவ் பண்ற? ஜீவா கத்தினான்.

“லவ்வா? என்னை இவளா?” என்று தன்வந்த் அவளை  ஏளனமாக பார்த்து விட்டு, உனக்கு வாசிக்கவாது தெரியுமா? நீ என்னை லவ் பண்றியா? மூஞ்சியப்பாரு என்றான். அவள் அழுது கொண்டே உள்ளே செல்ல, பொறுமையுடன் இருந்த ஜெயந்தி அக்கா பொறுமை பறந்தது. அவனது கையை விட்டு, அவனை அறைந்தார்.

என்ன பேச்சு பேசுற? அவளுக்கு கிடைக்க வேண்டியதை உனக்காக விட்டு கொடுத்துட்டு நிக்கிறா? உனக்கு தெரியாதா? இல்லை பாட்டி பேசியதை மறந்துட்டியா?

அவ நல்லா படிச்சிட்டு இருந்த பொண்ணு தான். பொண்ணுங்க படிக்கிறத விட பசங்க படிச்சா, அவங்களை பாதுகாப்பா பார்த்துப்பாங்கன்னு தான் இந்த முடிவை எடுத்தாங்க. அதுவும் பணம் போதவில்லை என்பதால். ஆனால் உன்னோட பேச்சே மாறுது. அவள பிடிக்கலைன்னா என்னால உன்னை லவ் பண்ண முடியாதுன்னு சொல்லு. அதை விட்டு அது என்ன பேச்சு?

ஏம்ப்பா, நான் ஒன்று கேட்கவா? உன்னோட ஒரு பொண்ணு வருமே? அந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கோ. அப்படி இருந்தாலும் இதுவரை நம்ம நிலையத்துல்ல யாரும் பொண்ணுங்ககிட்ட இப்படி பேசியதேயில்லை. எல்லாரும் சரியா தான் இருந்துட்டு போயிருக்காங்க.

“எல்லாரும் ஒழுங்குன்னு சொல்லாதீங்க? யாருமே இதுக்கு முன் லவ் பண்ணலையா?” தன்வந்த் கேட்க,

அப்படி நான் சொல்லலைப்பா. உன்னை மாதிரி யாரும் பொண்ணுங்ககிட்ட நடந்துகிட்டதில்லை. ஜூவாவும் அவனோட ப்ரெண்ட்ஸூம் கூட கேலி செய்வாங்க. ஆனால் அதுக்கு மேல போகமாட்டாங்க என்ற தனசேகரன், பாப்பா நினைச்சா உன்னோட படிப்பை இப்பவே நிறுத்த முடியும். நல்லா நினைவில் வச்சுக்கோ என்று மாயாவை பார்க்க சென்றார்.

“இப்ப தானடா சொன்னேன்?” என்று அருணா அவனை பார்த்து, எக்கேடும் கெட்டு போ. ஆனால் நாளையிலிருந்து அவளை உன் பக்கம் வரவே விட மாட்டேன் பாரு. அப்ப தெரியும் அவள் தினமும் உனக்காக என்ன செய்கிறாள் என்று கோபமாக பேசி விட்டு சென்றாள்.

நிரல்யா, தேனிலா அவனிடம் வந்து, நீ ரொம்ப மோசம். இனி எங்க அறைக்கு எங்களை அழைத்து போக வந்த உன்னை தள்ளி விட்டுருவோம் என்று இருவரும் தோளில் கை போட்டுக் கொண்டு சென்றனர்.

வெண்பா அவனிடம் வந்து, இனி எங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னடா சொல்றீங்க? சத்தமாக மற்றவர்களை பார்த்து கேட்க, ஆமா..நீ பேட் பாய் என்று சிறுசுகள் கத்தியது.

நீ யாரையும் இனி பார்த்துக்க தேவையில்லை. உன் வேலைய நீயே பார்த்துக்கோ. இந்த படிப்பு தான எல்லாத்துக்கும் காரணம். இப்ப மாயா படிக்காமல் இருக்கலாம். என்ன நாலு வருசம் எங்க படிப்பு நின்னு போச்சு. அவ்வளவு தான? அதை எப்படி சரி செய்யணும்ன்னு நாங்க பார்த்துப்போம்.

படிக்கிற எல்லாரும் மேதையும் இல்லை. படிக்காத எல்லாரும் முட்டாளும் இல்லை. என்ன சொன்ன? வாசிக்க தெரியுமாவா? அவளுக்கு ஹிந்தி கூட வாசிக்க, என்ன? பேசவே தெரியும். நீ வாசிப்பியாடா முட்டாள் என்று அவள் திட்ட, அவன் கையை ஓங்கினான். நளனும் எழிலனும் அவன் கையை பிடித்து தடுத்தனர்.

அவர்களை முறைத்துக் கொண்டு தன்வந்த் பேச நினைத்த போது, நீ என்ன கேட்கப் போறன்னு தெரியும்? என்ற எழிலன், மிதுன் எங்களோட ப்ரெண்டு. இந்த பொண்ணு அவன் தங்கைன்னு இன்ட்ரோ கொடுத்தான். அதனால் உதவ வந்தோம். அப்ப முழுசா தெரியாத போதே உதவ வந்தோம். இப்ப தான் இந்த பொண்ண பத்தி நல்லா தெரிஞ்ச பின் உதவாமல் இருப்போமா? என்று நளனை பார்த்தான்.

தம்பி, கொஞ்சம் அமைதியா உள்ள போனா நல்லா இருக்கும் என்று அவன் சொல்ல, அவன் கோபமாக அறைக்கு சென்றான்.

“நீங்க சீனியர்ன்னு தான பேசுனீங்க?”

“ஏம்மா சீனியர், ப்ரெண்டா இருக்க மாட்டாங்கன்னு யாராவது சொன்னாங்களா?”

அப்படி இல்லை என்று இருவரையும் யோசனையுடன் பார்த்தாள் வெண்பா.

எழிலன் ஜெயந்தியை பார்த்து, “இனி பிரச்சனையிருக்காதுல்ல?” கேட்டான்.

“தேங்க்ஸ் தம்பி” என்றார் அவர்.

“பார்த்துக்கோங்க”.  நாங்க கிளம்புகிறோம் என்று வெண்பாவை பார்த்துக் கொண்டே எழிலன் கூற, நளன் அவளிடம் அழுதா ஒரேதா அழுற. பேசுனாலும் ஒரேதா பேசுற. பார்த்து பேசும்மா. இவனை மாதிரி எல்லாரும் கையை ஓங்கிடாமல். எல்லா நேரத்திலும் நாங்க இருக்க மாட்டோம் என்றான். எழிலன் முகம் வாடியது.

பார்த்து போயிட்டு வாங்க என்று ஜெயந்தி கூற, நளன் எழிலனை பிடித்துக் கொண்டு நகர, டேய் நில்லு என்று நளனை நிறுத்திய எழிலன் அலைபேசி எண்ணை கொடுத்திட்டு வாரேன் என்று திரும்ப, வெண்பாவும் ஜெயந்தியும் அவர்களை பார்த்துக் கொண்டே நின்றனர்.

“போ, குடுத்துட்டு வா” என்று நளன் எழிலனை தள்ளி விட்டான். டேய்..என்று எழிலன் விழ, அவனை பிடித்த வெண்பா “பார்த்து சார்” என்றாள். அவன் பதறினான். “ஐ அம் சோ சாரி” சாரி சாரி..என்று அவளிடம் கூறி நகர்ந்து தன் நண்பனை முறைத்தான். அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

இது என்னோட நம்பர். எதுவும் கெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க என்று ஜெயந்தி அக்காவிடம் நம்பரை கொடுத்து விட்டு, வெண்பாவை பார்த்தான். அவள் புன்னகையுடன், “பை தேங்க்யூ” என்றாள். இருவரும் புன்னகையுடன் சென்றனர்.

வெண்பா வேகமாக உள்ளே சென்று, மாயாவை பார்த்து பேசினாள். தன்வந்த் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மாயா இப்பொழுது வெண்பா அறிவுரைப்படி அவனை விட்டு விலகி இருக்க எண்ணினாள்.

நேத்ரா, காவியன், ரணா ஹாஸ்பிட்டல் வந்தனர். நேத்ராவை ரணா அருகில் விட்டு, டோக்கன் வாங்க சென்றான் காவியன். ரணா வீட்டில் அவளுக்கோ, மற்றவர்களுக்கோ என்றால் டாக்டரே வந்து விடுவார். ஒரு வேலை ஹாஸ்பிட்டல் போனாலும் இது போல் காத்திருந்து பார்த்ததில்லை. இது அவளுக்கு முதல் முறை. ஆனால் அவனிடம் பணம் இல்லை. அதனால் நேத்ராவிடம் வந்து அவளிடம் தயங்கிக் கொண்டே பணம் கேட்டான்.

அக்கா, வச்சிருங்க என்று ரணா எழுந்து செல்ல, ஹேய்..என்னிடம் இருக்கு என்று நேத்ரா சொல்ல, இருந்தால் வச்சிருங்க என்று பணம் கட்டி டோக்கன் வாங்கினாள். ரணா செயல் காவியனுக்கு ஒருமாதிரி இருந்தது. நேத்ராவிற்கு முக்கியமான சமயத்தில் கூட உதவ முடியவில்லை என வருத்தப்பட்டான்.

பின் மூவரும் உள்ளே சென்றனர். நேத்ராவிடம் என்ன செய்கிறது? என டாக்டர் கேட்டு விட்டு, நீங்க கொஞ்சம் வெளியே இருங்க என்று காவியன் ரணாவை வெளியே அனுப்ப, அவள் யோசனையுடன் வெளியே வந்தாள். அவன் பயத்துடன் அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் டாக்டர் இருவரையும் உள்ளே அழைத்தார். இருவரும் உள்ளே சென்றனர். நர்ஸ் நேத்ராவை ஒருமாதிரி பார்த்தனர்.

டாக்டர், அக்காவுக்கு ஒன்றுமில்லையே? காவியன் கேட்க, “கங்கிராட்ஸ்”. உங்க அக்கா கர்ப்பமா இருக்காங்க என்றார். நேத்ரா கண்கலங்க நின்றாள். காவியன் அவளை பார்க்க,

“வாட்? பிரக்டென்டா?” அதிர்ந்து ரணா கேட்டாள்.

உட்காரும்மா. கல்யாணம் ஆகலையாம்மா டாக்டர் கேட்க, இல்ல டாக்டர். கல்யாணம் ஆனவங்க தான் என்றான் காவியன். ரணா காவியனை பார்த்தாள்.

“அப்ப தாலி?” அவர் கேட்டார்.

“டிவோஸ் ஆகிடுச்சு” என்றான் அவன். நேத்ரா கண்ணிலிருந்து கண்ணீர் கசிந்தது.

“டிவோஸ்ஸா?” ரணா கேட்க, அவளை பார்த்து விட்டு காவியன் டாக்டரை பார்த்தான்.

உங்களை பார்த்தால் படிக்கிற பசங்க மாதிரி இருக்கு. உங்க அக்காவ உங்களால பார்த்துக்க முடியுமா? அவர் கேட்க, அவன் பதில் சொல்லும் முன் நானே பார்த்துக்கிறேன் டாக்டர் என்றாள் நேத்ரா.

அக்கா..அழைத்தான்.

இல்ல காவியா. நானே பார்த்துப்பேன்.

ஏம்மா, உங்க பேரண்ட்ஸ் இருப்பாங்கல்ல? டாக்டர் கேட்க, இல்லை அவங்க இறந்துட்டாங்க என்றாள்.

சரிம்மா. என்ன வேலை பாக்குறீங்க? அவள் நிலையத்தை கூற, அப்ப இந்த பையனும் உங்க தம்பி இல்லையா? அவர் கேட்க, நான் அவங்க தம்பி தான் என்று காவியன் சொல்ல, நேத்ரா இல்லை என்றாள். மற்றவர்கள் இருவரையும் பார்த்தனர்.

பெரியவங்க யாராவது இருக்காங்களா? டாக்டர் கேட்க, பாட்டி இருக்காங்க என்றனர் சேர்ந்தவாறு இருவரும்.

உன்னுடைய வேலை சரியில்லை. செலவாகுமே பணம் வச்சிருக்கியாம்மா?

இல்ல டாக்டர் என்றாள் நேத்ரா சாதாரணமாக.

உன்னோட கணவனுடன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தீங்க?

இரண்டு மாதம் என்றாள். காவியனும் ரணாவும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

அக்கா, என்ன சொல்றீங்க? காவியன் டென்சன் ஆனான். அவள் அமைதியாக மற்றவர்களை பார்த்தாள்.

எப்படிம்மா? ஆறு மாதமாவது சேர்ந்து இருந்தால் தானே டிவோஸ் கிடைக்கும்?

ஆமா மேம். நான் என் அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன் என்றாள்.

டாக்டருக்கே இதுக்கு மேல என்ன கேட்க? என்று தெரியவில்லை.

உங்க கணவர் காம்பென்சேட் பண்ணலையா? கோர்ட்ல வாங்கி கொடுத்திருப்பாங்களே?

கொடுத்தாங்க. நான் வாங்கலை.

ஏம்மா, வாங்கி இருந்தா இப்ப உதவும்ல நர்ஸ் கேட்க,

எதுக்கு அவனிடம் பணம் வாங்கணும்? திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் என்னோட ப்ரெண்டோடவே சேர்ந்திருந்து எனக்கு துரோகம் செய்ததுக்காக வாங்கணுமா? இல்லை அதை நேரடியாக கண்ணால் பார்த்து உயிரை விட்ட என் பெற்றோருக்காக பணம் வாங்கணுமா? அவள் அழுது கொண்டே கேட்க, அக்கா..என்று காவியனும் ரணாவும் எழுந்தனர். அனைவர் கண்ணும் கலங்கியது.

உங்க கணவன் பெரிய இடத்து பிள்ளையா? நர்ஸ் கேட்க, அவர் லாயர் என்றாள் நேத்ரா.

அக்கா, லாயரா? யாருக்கா? என்று காவியன் கேட்க, அவள் பதில் சொல்லவேயில்லை. அக்கா..சொல்லுங்க சத்தமிட்டான்.

ப்ளீஸ் காவியா, இதை விடுங்களேன். அவன் எனக்கு செய்த துரோகத்தை விட, அவனால் என் பெற்றோரை இழந்தேன். இப்ப கூட என் தம்பியை பிரிந்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். என்னால் இதை தான் தாங்கிக்கவே முடியலை. எதுக்காக என் தம்பியை விட்டு பிரிந்து வந்தேனோ? அது ரொம்ப நல்லது. அவனுக்கு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை.

அக்கா, எந்த தம்பியாவது அக்காவை பாரமா நினைப்பாங்களா?

நினைக்க மாட்டான் டா. என்னால அவனோட படிப்பு கெட்டு போயிரும்ன்னு தான் ரெண்டு வருசமா அவனை பார்க்க கூட இல்லை என்று அழுதாள்.

ரணா அவளை அணைக்க, இப்ப இந்த குழந்தைக்கு என்ன செய்யப் போறீங்க? டாக்டர் கேட்டார்.

ரணாவை நகர்த்தி விட்டு, வயிற்றில் கை வைத்த நேத்ரா. “எனக்கு என்னோட குழந்தை வேணும்” என்றாள். செலவு எவ்வளவு ஆகும்ன்னு சொல்லுங்க அவள் கேட்க,

அக்கா..நான் ரணா பேச, இல்லம்மா “நானே பார்த்துக்கிறேன்” என்றாள் நேத்ரா.

“இப்ப ஸ்கேன் பண்ணலாமா? குழந்தை எப்படி இருக்குன்னு பார்க்கலாம்?” என்று டாக்டர் சொல்ல, ஓ.கே மேம் என்றாள் நேத்ரா.

அக்கா, கொஞ்சம் யோசிங்க அப்பா இல்லாமல்..ரணா கேட்க, நல்லா யோசிட்டேன்ம்மா. என்னோட பையனும் காவியன் போல வளர்ந்துப்பான் என்றாள்.

அக்கா, அவரு யாருன்னு சொல்லுங்க? அவன் கேட்க, எதுக்கு? அதை தெரிஞ்சு என்ன செய்யப் போற? அவனை நான் பார்க்கவே கூடாது என்று தான் இங்க வந்த உடனே பாட்டி சொன்ன வேலைய ஏத்துக்கிட்டேன் என்ற நேத்ரா போகலமா மேம்? கேட்டாள்.

நீ படிச்சிருக்கியாம்மா? அவர் கேட்க, எஸ் மேம்..என்று எம்.பி.ஏ என்றாள்.

அப்ப வேற ஏதாவது வேலைக்கு போனால் உனக்கு நிறைய பணம் கிடைக்குமே?

நான் போவதாக இருந்தால் திருமணத்திற்கு முன் வேலை செய்த இடத்திலே சேர்ந்திருப்பேன். நான் எங்கு போனாலும் அவனை சந்திக்கும்படி நேரும். அதை விட எனக்கு நிம்மதி வேணும் என்பதால் தான் இங்கேயே இருக்கேன் என்றாள்.

அக்கா, ரணா ஆரம்பிக்க, ரணா நீ என்ன கேட்கப் போறன்னு தெரியும்?  அவங்ககிட்ட இதுக்கு மேல எதுவும் கேட்க வேண்டாம். போதும்..

“காவியன் அது இல்லை” என்ற ரணாவை காவியன் முறைத்தான். அவள் அமைதியாக நேத்ராவை பார்த்தாள்.

தன் பையிலிருந்து எடுத்து ஒரு கார்டை காவியனிடம் கொடுத்து பணம் கட்டு என்று ஸ்கேன் எடுக்க சென்றனர். பின் மூவரும் அமைதியாக காத்திருக்க, சற்று நேரத்தில் ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது.

குழந்தை நல்லா இருக்கு என்று கருவுற்றிருக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் அறிவுரையை டாக்டர் வழங்கினார். எல்லாவற்றையும் கேட்டு விட்டு ரிப்போர்ட்டுடன் வெளியே வந்தனர்.

“தேங்க்ஸ் ரணா”, என்று காவியன் அவள் கையை பிடித்தான். அவள் அவனை பார்க்க, நேத்ரா சோர்வுடன் அமர்ந்தாள். நீ கிளம்பு. நாங்க மருந்துகளை வாங்கி விட்டு கிளம்புகிறோம்.

இல்ல காவியன், இந்த நிலையில் அவங்களால் நடக்க முடியும்ன்னு தோணலை ரணா சொல்ல, அவனுக்கு அழைப்பு வந்தது.

வாட்? எப்ப? என்று கண்ணீருடன் நேத்ராவை பார்த்தான். அவள் அவனை பார்த்து என்ன காவியா? ஏதும் பிரச்சனையா? கேட்டுக் கொண்டே அவனருகே வந்தாள்.

ரணா, எங்களை வேற ஹாஸ்பிட்டல்ல மட்டும் டிராப் பண்ணிடுறியா? கண்ணை துடைத்துக் கொண்டே கேட்டான்.

டேய், என்னாச்சு? எதுக்கு ஹாஸ்பிட்டல்? பதறினாள் நேத்ரா.

அக்கா, இப்ப நீங்க தனியா இல்லை. பாப்பா இருக்கா. நான் சொல்றேன் வாங்க என்று “சீக்கிரம் காரை எடுத்து வர்றீயா?” “எங்களை விட்டுட்டு நீ கிளம்பிடு” என்றான்.

“இல்ல, நானும் வாரேன்” என்றாள்.

“ப்ளீஸ், சீக்கிரம் போகலாமா?” அவன் அவசரப்படுத்த, அவள் சென்று காரை எடுத்தாள். அவன் நேத்ராவை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.

அக்கா, நம்ம யுவி “ப்ளட் வாமிட்” பண்ணானாம். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்கலாம் என்றான்.

“ப்ளட் வாமிட்டா?” வாய்ப்பே இல்லடா. அவனுக்கு அல்சர் மட்டும் தான் இருந்தது. நான் சரியா தானே மாத்திரைகளை கொடுத்து வந்தேன்.

தெரியலக்கா. தேவையில்லாமல் யோசிக்காதீங்க. பார்த்துக்கலாம் என்றான் காவியன். அவள் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு கண்ணீருடன் சாய்ந்து கொண்டு, அவனுக்கு ஏதும் ஆகக்கூடாது மனதினுள் கடவுளிடம் பிராத்தித்துக் கொண்டே சென்றாள்.

Advertisement