Advertisement

அத்தியாயம் 25

“உன்னோட பெற்றோர் கல்யாணத்துக்கு எதுக்கு அவசரப்பட்டாங்க?” அதிரதன் சினத்துடன் கேட்டான்.

“எனக்கு தெரியாது” என்று நேத்ரா தயங்கினாள்.

அவளருகே வந்த அதிரதன் சினம் தாளாது அவளது கையை இறுக்கியவாறு, தெரியாதுன்னு எதுக்கு தயங்குற? ஏதாவது காரணம் இருக்குமே?

“தெரியாது” என்று அவள் கத்தினாள். சினத்தில் அவன் கை நேத்ரா கழுத்தை பிடிக்க, அனைவரும் பதறி விட்டனர்.

ரதா, என்று நிதின் அவன் கன்னத்தில் அறைந்தான்.

நிதானம் வந்தாலும் கோபம் தாளாது அங்கிருந்த பொருட்களை தள்ளி விட்டு கீழே அமர்ந்தான். அனைவரும் பயந்து ஒதுங்கி நின்றனர்.

வினு, உன்னோட அப்பா அவசரமாக திருமணத்தை முடிக்க நினைக்க காரணம் உன்னோட என விஷ்வா தொடங்கும் முன், உங்களுக்கு பேச வேற விசயமா இல்லை. அவளை கஷ்டப்படுத்தவே பேசுவீங்களா? சுஜி கத்தினாள்.

“பேசும் போது எதுக்கு இடையில வர்ற?” விஷ்வா சுஜியிடம் எகிற, லூசுத்தனமா பேசுனா என்ன தான் செய்றது? என்றாள்.

லூசா? நானா? அவன் கத்த,

நிறுத்துறீங்களா? அக்கா, அந்த கொலைகாரன் வாய்ஸ் உங்களுக்கு நினைவிருக்கா. கேட்டால் கண்டுபிடிச்சிருவீங்களா? காவியன் கேட்டான்.

தெரியல காவியா?

சொல்லு. “என்ன காரணத்தினால உன்னோட அப்பா திடீர்ன்னு உனக்கு கல்யாணம் முடிச்சாங்க?” அதிரதன் கேட்க, கண்ணை துடைத்த நேத்ரா அவனருகே வந்து அவனை பார்த்துக் கொண்டே மனதினுள், “நீ தான் டா. உன்னால தான் என்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க” என்று எண்ணிக் கொண்டே, உன்னிடம் சொல்ல தேவையில்லை என்று சத்தமிட்டான்.

ஏய், கேட்டால் பதில் சொல்லணும்? என் முன்னே சத்தம் போடுற? அதிரதன் சீற்றமுடன் கேட்க, நீ எவனா வேண்டுமானாலும் இரு. நான் உன்னை நாடி வந்தது பணத்திற்காக தான். யுவிக்காக தான் என்று அவனிடம் சொல்வது போல் அவள் மனதை அவளே தேற்றிக் கொண்டாள்.

நீ என்னிடம் சொல்லி தான் ஆகணும்? என்று நேத்ரா கையை பிடித்தான் அதிரதன்.

நான் உன்னோட வேலைக்காரி தான். தேவையில்லாமல் என் விசயத்தில் தலையிடாதே? கத்தினாள்.

வேலைக்காரியா? நோ..நெவர். “ஐ ஹவ் டிசைடடு”. “யூ ஆர் மை வொய்ஃப்”. “ஆர் யூ அன்டர்ஸ்டாண்டு?” என கத்தினான்.

எல்லாரும் அதிர்ந்து அவனை பார்க்க, “நடக்கவே நடக்காது, வீண்கனவு காணாதே!” என்று நேத்ரா கோபமுடன் வெளியேறினாள்.

நான் சொல்றதையும் கேட்டுட்டு போ. யார் என்ன செய்தாலும் மாற்ற முடியாது. உன் கழுத்தில் நான் தான் தாலி கட்டுவேன் என்று அதிரதன் கத்திக் கொண்டே வெளியே சென்றவனை இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் சுஜித்ரா.

சுஜி..நிதின், விஷ்வா சத்தமிட, வர வேண்டிய நேரம் ஒருத்தனும் வரலை. காதலிக்கிறானுகளாம். ஏன்டா இவனுக்கு தான் அவளை பத்தி தெரியாது. உங்களுக்கு தெரியாதா?

அவள் யாருன்னு தெரியாம கழுத்தை நீட்டினால் காரணம் இருக்கும்ன்னு தோணலையா? இஷ்டத்துக்கு பேசுறீங்க.

அப்ப உனக்கு தெரியுமா? அதிரதன் கேட்க, தெரியாது. ஆனால் கண்டிப்பா என்னோட வினு காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டாள் என்று அதிரதனை முறைத்து விட்டு அவள் நேத்ரா பின்னே சென்றாள்.

ஏன் சார், அவசரப்பட்டீங்க? நான் தான் கெல்ப் பண்றேன்னு சொன்னேன்ல காவியன் சொல்ல, டேய் என்ன சொன்ன? மிதுன் கேட்க,

அக்கா, கண்டிப்பா இவருடன் பாதுகாப்பா இருப்பாங்க. சோ..

சோ..இவரோட மேரேஜ் பண்ணி வக்கிறேன்னு சொன்னீயா? உனக்கு அக்கா சூழ்நிலை புரியலையா? மிதுன் திட்டினான்.

அப்படி என்ன சூழ்நிலை? அதிரதன் கேட்க, ரதா ஒன்றுமில்லை. பசங்க கொஞ்சம் டென்சன்ல பேசுறாங்க.

நான் வினுவை பார்த்துக்க முடியாதா? கோபமாக அவன் கேட்க, சார் நீங்க பார்த்துக்கலாம். ஆனால் உங்க இடம் வேற. அக்கா இடம் வேற. அவங்களே முடியாதுன்னு சொல்லீட்டாங்கள. தொந்தரவு செய்யாதீங்க என்றான் மிதுன்.

இவர்கள் பேசுவதை பாட்டி, மாயா, தேவா, ஜீவா கேட்டு அதிர்ந்தனர்.

பாட்டி, உள்ளே வந்து மிதுன் சொல்றது சரி தான் தம்பி. எங்க பொண்ணு உங்களோட வீட்டுக்கு வந்தா ரொம்ப கஷ்டப்படணும்.

என்னம்மா, நீங்களும் இப்படி பேசுறீங்க? அதிரதன் கேட்க, ரதா வெளிய வா நிதின் அவனை இழுக்க, அவன் கையை உதறி விட்டு, நான் எந்த விசயத்திலும் பின் வாங்க மாட்டேன். என் வாழ்நாள் முழுமைக்கும் எனக்கு வினு தான் வேண்டும் என்று உறுதியாக சொன்னான்.

அவள் வயிற்றில் குழந்தை இருக்குன்னா சொல்ல முடியும்? ப்ளீஸ் சார், புரிஞ்சுக்கோங்க மிதுன் மண்றாட, இதுல என்னடா இருக்கு? அக்காவுக்கு ஓ.கேன்னா கல்யாணம் பண்ணிக்கட்டும் என்றான் அருள்.

அவர் தான் புரியாமல் பேசுகிறார்? நீ என்ன மெண்டல் மாதிரி பேசுற? மிதுன் திட்ட, போதும்டா இப்பவே கல்யாணமா பண்ணிக்க போறார்? அக்காவுக்கு நேரம் கொடுக்கட்டும். அவங்க என்ன முடிவெடுக்குறாங்கன்னு பார்க்கலாம்? சுபிர்தன் சொல்ல, அதிரதனை முறைத்துக் கொண்டே மிதுன் அமர்ந்தான்.

அப்பவே கொடுக்காம இப்ப கொடுத்திருக்காங்க?

எனக்கு ஒரு சந்தேகம்? இறந்தவரின் நண்பன் வீடியோ எடுத்தார்ன்னு சொன்னீங்கல்ல. இத்தனை நாளாக அவர் போலீஸிடம் ஒப்படைக்காமல் என்ன செய்தார்? கிருஷ்ணன் கேட்க,

இங்க என்ன பேச்சு நடக்குது? நீ என்ன பேசுற? மிதுன் மேலும் கோபமாக, அண்ணா, எதுக்கு கோபப்படுறீங்க? எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கு என்று ஜீவா உள்ளே வந்தான்.

என்னடா நேரம்? மிதுன் சினமுடன் கேட்க, அவன் பத்து என்று விரலை காட்டி குழந்தைக்காக கண்டிப்பா அக்கா ஒத்துக்க மாட்டாங்கன்னு மறைவாக சொன்னான்.

அதிரதனுக்கும் நிதினுக்கும் புரியலை. அது என்னடா பத்து? நிதின் கேட்க, அது ரகசியம் என்ற விஷ்வா சும்மா சண்டை போடுறத நிறுத்திட்டு பிரச்சனைய பார்க்கணும்.

“அதிரதன் உங்க அக்காவை விழுங்கி விட மாட்டான்” என்று விஷ்வா சொல்ல, பசங்க எழுந்து அவனை சுற்றி சுற்றி வந்தனர்.

ஏன்டா, இப்படி சுத்துறீங்க? இல்ல எங்க சேதாரம் அதிகமா இருக்குன்னு பார்க்கிறோம் என்று அருள் சொல்ல, விஷ்வா சார், வேற யாரையும் பிக் அப் பண்ணீட்டீங்களா? கிருஷ்ணன் கேட்க, அவன் முறைத்தான்.

நீங்க நிஜமாகவே இனி அக்கா பக்கம் வர மாட்டீங்களா? மிதுன் கேட்க, இல்லடா. அவள் பேசணும்ன்னா காதல், கல்யாணம் என்று பேசக் கூடாதுன்னு சொன்னா. அதை விட இப்ப விட்டுட்டேன். இதுக்கு மேல அவள என்னால கஷ்டப்படுத்த முடியாது. ஆனால் அதிரதன் சரியாக இருப்பான். நான் அவன் கட்சி தான் விஷ்வா அவன் பக்கம் செல்ல, காவியனும் கை தூக்க, மிதுனை தவிர மற்ற நண்பர்களும் கையை தூக்கினர். பாட்டியை அதிரதன் பார்த்தான்.

தம்பி, புள்ள நல்லா இருந்தா சந்தோசம் தான். ஆனால் அது கஷ்டமும் கூட. அந்த பொண்ணு முடிவு தான் முக்கியம். தயவு செய்து கட்டாயப்படுத்தாதீங்க என்றார். அவன் முகம் வாடியது.

ஜீவா, மாயா நீங்க என்ன சொல்றீங்க? அருள் கேட்க, கல்யாணம் பண்ணிக்க போறவங்க இருவரின் முடிவும் ஒன்றானால் தான் சரியா இருக்கும் என்று மாயா கூறும் முன் ஜீவா சொல்ல, மாயா நீ சொல்லு? சுபிர்தன் கேட்டான்.

ஜீவாவை பார்த்த மாயா, நான் என்ன சொல்ல? நான் சொல்ல நினைத்ததை தான் ஜீவா சொல்லீட்டான் என்று பாட்டி, நான் அக்காவை பார்க்க போறேன் என்று ஜீவாவை பார்த்து புன்னகையுடன் வெளியேறினாள் மாயா.

டேய், ஜீவா சொல்லவேயில்லை என்று கேலி செய்ய ஆரம்பித்த கிருஷ்ணன் தன் நண்பன் காவியனை பார்த்தான். அவன் முகம் வருத்தமாக, நிதினும் அதிரதனும் அவனை பார்த்தனர்.

அண்ணா, மாயா சும்மா தான் சொல்லீட்டு போயிருக்கா என்று கேட்ட கிருஷ்ணனிடம் சொல்லாமல் காவியனை பார்த்து ஜீவா சொல்ல, அதான் உங்க மூஞ்சியிலே தெரியுதே? என்ற காவியன், அவளுக்கு பெரிய பிரச்சனை ஒண்ணு இருக்கு. பார்த்துக்கோங்க என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு.

காவியா, அந்த பிரச்சனை பரீட்சையுடன் முடிந்து விடும்ன்னு நினைக்கிறேன் என்ற பாட்டி தன்வந்துடன் மாயா விட்ட சவாலை கூற, அதான் தெரியுமே என்று காவியன் சிரித்தான்.

ஜீவா, நல்லா மாட்டுன? நீ படித்து முன் வந்தாலும் அவன் இடத்தை பிடிக்க முடியாது என்றான் காவியன். ஜீவாவிற்கு கஷ்டமானது.

காவியா, என்ன பேசுற?

நான் உண்மைய தான் சொல்றேன். இவன் படித்து முன் வருவது மட்டும் போதாது. அவனோட ஹண்ட் ரைட்டிங் மாத்தணும். தன்வந்த் பிரசன்டேசனை விட அழகா பண்ணா தான் அவனை பீட் பண்ண முடியும் தம்பி என்றான்.

அதுக்கு முதல்ல அவன் செயல்களை நன்றாக கவனி. அப்ப தான் உன் எதிராளியை விட முன்னோக்கி நீ செல்ல முடியும்.

“எஸ், அதே தான் காவியா” என்று உற்சாகமான அதிரதன், உங்களுக்கு மேலோட்டமாக தான் அந்த விக்கியை தெரியும். அவனை பிடித்தால் கொலைகாரனை பிடிக்கலாம். அவனோட பிளஸ், நெகட்டிவ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கணும் நிது என்றான். எல்லாரும் அவனை பார்க்க, நான் ஒன்று கேட்டேனே? கிருஷ்ணன் சொல்ல,

என்ன கேட்ட?

அது சார், இறந்தவன் நண்பன் எடுத்த வீடியோவை அப்பொழுதே போலீஸில் கொடுத்திருக்காலாமே? ஏன் இப்ப உங்களிடம் கொடுக்கணும்? அவன் கேட்க,

போலீஸ் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம் நிதின் கூற, ம்ம்..அப்படி தான் இருக்கணும் என்றான் அதிரதன்.

இன்னொரு முக்கியமான விசயம். எனக்கு இந்த செள்ளியன் கூட அந்த விக்கியாலோ இல்லை அந்த கொலைகாரனால் கூட நேத்ராவை கல்யாணம் செய்திருக்கலாமோ? கேட்டான் நிதின்.

என்னடா பைத்தியம் மாதிரி பேசுற?

வாய்ப்பிருக்கு சார் என்ற காவியன், அவர் அக்கா விவாகரத்து கேட்டவுடன் எதற்கு எந்த கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொண்டார்?

ஒரு வேலை அக்காவிற்கு தான் ஏற்கனவே அவரை பற்றி தெரியுமென அவருக்கே தெரியுமே? எதற்கு வீண் சண்டை என்றும் அக்கா இல்லை என்றால் அவருக்கு பொண்ணுங்களுடன் பழகுவது சரியாக இருக்குமே? அதனால் கூட ஏதும் கேட்காமல் விவாகரத்து கொடுத்திருக்கலாம் கிருஷ்ணன் சொல்ல,

ம்ம். இருக்கலாம். ஆனால் அழகான பொண்டாட்டியை பக்கம் வைத்துக் கொண்டு வேற பொண்ணுடன் இருக்க அவன் என்ன பைத்தியமா? நிதின் கேட்க, அதிரதன் அவனை முறைத்தான்.

ஆமா, எனக்கும் சந்தேகமா தான் இருக்கு என்றான் அருள்.

எதுக்கு உங்களுக்குள்ளே பேசுறீங்க? அவனோட நேரடியாக பேசலாமே? பாட்டி கேட்க, சார் இப்ப பிரபல வக்கீல்களில் ஒருவன். அவன் வீக்னஸ் பொண்ணுங்களும் பணமும் தான். அவனை மீட் பண்ணா ஆபிஸிற்கு தான் போகணும்? அவனிருக்கும் இடத்திற்கு எப்படி போறது? அதிரதன் முகம் சுளித்தான்.

தம்பி, ஆம்பள நீங்களே அவனிருக்கும் இடத்திற்கே போக தயங்குறீங்க? அப்ப எங்க பொண்ணு அவனால வீட்ல ரொம்ப கஷ்டப்பட்டிருப்பால்ல என்று பாட்டி அழுதார்.

பாட்டி, முடிஞ்சதை விடுங்க. நீங்களும் சுஜி அக்காவும் எல்லாரையும் கூட்டிட்டு போங்க. நாங்க வினுவை பார்த்துக்கிறோம். இனி அவளை தொந்தரவு செய்ய மாட்டேன். அதற்காக அவளை விடவும் மாட்டேன் என்றான் அதிரதன்.

எல்லாரும் பாட்டியோட கிளம்புங்க. காவியன் நாளைக்கு வந்திருவான். பின் உங்க பிராக்டிசை ஆரம்பிங்க என்று சொன்ன அதிரதன் மிதுன் நீ வினுவுடன் இரு. உனக்கு பிரச்சனையில்லையே? கேட்க, இல்லை என்றான் கடுமையாக.

பாட்டி, சுஜி, மற்றவர்கள் கிளம்ப, விஷ்வா இங்கேயே இரு. வீடியோ செக் பண்ணணும் என்றான் அதிரதன். நிது நீயும் வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிடு. அப்புறம் தேடப் போறாங்க அதிரதன் சொல்ல, போலீஸ் ஒருவர் அலைபேசி அழைத்தது அதிரதனை.

சொல்லுங்க சார்?

சார், அந்த பையன் தப்பி ஓடியதற்காக அவனை தலைகீழாக தொங்க விட்டு வயிற்றை அறுத்து போட்டிருக்கான். நாங்க வரும் போது உயிர் இல்லை என்றார்.

சார், அவன் போட்டோஸ் அனுப்புகிறேன். நீங்க எல்லா இடத்திலும் கூறி பரவி விடுங்க, அவனை யார் பிடித்தாலும் ரிவார்டு இருக்குன்னு சொல்லுங்க. பொது மக்கள் பார்வையில் வையுங்க என்றான்.

சார், என்ன பண்றீங்க?

அவனை சீக்கிரம் பிடிக்கணும். நீ சொன்ன மாதிரி மூன்று மாதம் காத்திருப்பான்னு தோணலை. அவனோட அடுத்த டார்கெட்..விஷ்வா நீயாக தான் இருக்கணும்.

இப்ப தான் இவர் அக்காவை விட்டு விட்டாரே?

அவன் அப்பொழுது நடந்ததற்காக பழி வாங்க கொல்கிறான்.

என்ன பழி? அக்காவிடம் பேச கூட தைரியமில்லாதவனெல்லாம் காதலிப்பதா?

இங்க பாரு நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவன் காதல் தான் உயர்ந்ததுன்னு காட்டணும் என்று வாயிலை பார்த்தான். நேத்ரா உள்ளே வந்தாள்.

அவளை பார்த்து வேண்டுமென்றே நிதின், வினு அருகே இருப்பவர்களை காயப்படுத்தினால் தானாக அவள் தன்னிடம் காதலை சொல்லலாம் என்று விக்கி நினைக்கிறான்னு தோணுது?

நீயா கதை சொல்லாத?

பாரு இதான் காரணமா இருக்க போகுது. விக்கி உன்னோட ப்ரெண்டுன்னு தான் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால் அவன் காதலிச்சிருக்கான். அதான் இப்படி செய்கிறான் என்றான் நிதின்.

பேச்ச நிறுத்துறியா? நான் இதை கேட்க வரலை. நான் என்ன செய்யணும்ன்னு யாராவது சொல்லுங்க? நேத்ரா கேட்க, நீ இப்பொழுதைக்கு இங்கே இருப்பது பாதுகாப்பு இல்லை. அதனால் நாளை காலையே நம்..அவள் முறைக்க, என் வீட்டிற்கு செல்லணும் என்றான் அதிரதன்.

அப்ப யுவி. அவனும் தான். உடன் எனக்கு பழக்கமான நர்ஸ் ஒருவர் வருவாங்க என்றான். அவள் அமைதியானாள்.

காவியன்? என்று அவனை நேத்ரா நோக்க, அவனை நாளை விடுப்பு எடுத்து பக்கமிருந்து நான் பார்த்துக்கிறேன் அக்கா என்றான் மிதுன்.

சரி, போகலாம். ஆனால் எனக்கு தேவையான பொருட்களை வாங்க உங்களுடன் வர மாட்டேன். நானே சென்று வாங்கிக் கொள்வேன்.

சாதாரண வாழ்க்கை வாழ்வதாக நினைப்போ காவியா உங்கள் அக்காவுக்கு?

சார், அமைதியா இருங்க என்ற காவியன் புன்னகையுடன் ஓ.கே என்று விரலை உயர்த்திக் காட்டினான். அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

ம்ம்..இவனுக்காக பாரு. எத்தனை பேரு இருக்காக்க? என்று மனதினுள் அதிரதன் நினைக்க, காவியா, எங்க ரணாவை காயப்படுத்தாமல் இந்த பொண்ணை மறந்து ரணாவை ஏத்துக்கோ இல்லை. கொஞ்சம் பயமாக தான் உள்ளது என்று எண்ணமிட்ட படி அமர்ந்தான் நிதின். அவர்கள் நால்வரும் ஹாஸ்பிட்டலில் வீடியோவை பிரித்து செக் செய்ய, விக்ரம் நிலையத்தில் செய்து கொண்டிருந்தான். ரிச்சர்டும் இவர்களுக்கு உதவ அவனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்த ரணா பையை சோபாவில் தூக்கி எறிந்து விட்டு அழுது கொண்டே அறைக்கு ஓடினாள். சோபாவில் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த அதீபன் மீது விழுந்தது ரணாவின் கல்லூரிப்பை.

ஏய் பிரணா, நான் இருப்பதே உன் கண்ணுக்கு தெரியலையா? அவன் கத்த, எதுக்குடா பிள்ள அழுதுகிட்டே போறா? யசோதா கேட்டார்.

அழுகிறாளா? என்று சிவநந்தினி ரணா அறைப்பக்கம் சென்றார். அழுகிறாளா? என்று அதீபன் எழ, அங்கே ஆராவும் ராகவ்வும் வந்தனர்.

அண்ணா, ரணா எங்க? ராகவ் கேட்க, சண்டை போட்டீங்களாடா? அதீபன் கேட்டான்.

நாங்க இல்லண்ணா. எங்க ப்ரெண்டு காவியன் தான்.அவனுக்கு விபத்தாகிடுச்சு. அவனை பார்க்க சென்றோம். ஆனால் அவன் கோபமாக ரணாவை ப்ரெண்டே இல்லண்ணு திட்டிட்டான்.

இதுக்கா அழுறா? அவன் ஆராவை பார்த்து கேட்க, ஆமாண்ணா என்றாள்.

லேசுக்குள்ள அழ மாட்டாளே? டிராமா அழுகை மாதிரியும் தெரியல. வேறெதுவும் சொல்லணுமா? சொல்லிக் கொண்டே பின்னே பார்த்து,

என்ன திடீர்ன்னு மேடம் வந்துருக்கீங்க? அதீபன் கேட்டான்.

ஏன்டா, வரக்கூடாதா? வீட்டுக்கு யாராவது வந்தா வாங்கன்னு கூப்பிடணும். எப்படி கேக்குற? என்று தாட்சாயிணி கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தாள்.

நீங்க சொல்லுங்க? அவன் ராகவ், ஆராவிடம் அதீபன் கேட்க, இருவரும் தாட்சாயிணியை பார்த்தனர்.

என்ன பசங்களா? நாம மீட் பண்ணி ரொம்ப நாளாகிடுச்சுல்ல அவள் அவர்களிடம் கேட்க, நீ அமைதியா இரு. இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க என்றான்.

“அண்ணா” என்று ராகவ் ஆராவை பார்க்க, அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

என்னாச்சு அதீபா? தாட்சாயிணி கேட்க, அவளை முறைத்த அதீபன் “இப்ப சொல்லப் போறீங்களா? இல்லையா?”

அண்ணா, ரணா அவனை காதலிக்கிறாள் என்றான்.

அதான பார்த்தேன். தேவையில்லாம அழ மாட்டாளே! என்ன பேர் சொன்னீங்க?

காவியன் அண்ணா.

காவியனா? என்று சிந்தித்தவன் அவன் நிலையத்தில் வளர்ந்தவன் தானே? கேட்டான்.

ஆமாண்ணா உங்களுக்கு அவனை தெரியுமா? அவன் நல்லவன் தான். அவன் இதுவரை எங்க யாரிடமும் கோபமாக பேசியது கூட இல்லை. அவன் தான் அண்ணா பெயரை சரி செய்ய வீடியோ போட்டிருக்கான்.

அவனை நான் பார்த்துக்கிறேன் என்று அதீபன் நகர, அவன் கையை பிடித்து நிறுத்திய தாட்சாயிணி, ஒரு நிமிசம் நில்லு என்று ராகவை பார்த்து, எந்த ஹாஸ்பிட்டல்? கேட்டாள்.

அந்த பையன் பேர் என்ன சொன்ன?

காவியன் சீனியர் என்றான்.

அது விபத்தல்ல. அவனை கொல்ல வந்திருக்காங்க. கத்தியால் அவன் கையில குத்திட்டாங்க. அப்பாவோட ஆள் போலீஸ்ல தான் இருக்கார். அவர் தான் பேசிக் கொண்டிருந்தார். இதுல அதிரதன் மாமாவும் இருக்காராம். அவருக்கு அந்த பையனை நன்றாக தெரியுமாம் என்றாள்.

என்ன காவியனை கொல்ல பார்த்தாங்களா? என்று ரணா சத்தம் கேட்டு அனைவரும் அவளை பார்த்தனர். அவனை அண்ணாவுக்கு தெரியுமா? என்று அதீபனிடம் வந்து, உனக்கு தெரியுமா? கேட்டாள்.

பார்த்ததில்லை. ஆனால் பேசி கேட்டிருக்கேன்.

பேசி கேட்டாயா? எங்க பேசி கேட்டாய்? ரணா கேட்க, அவன் நம்ம நிலையத்துல வளர்ந்தவன் தான் என்றான் அதீபன்.

என்ன? உங்க நிலையத்திலா? எங்களிடம் சொல்லவேயில்லை ராகவ் சொல்ல, ரணா யோசனையுடன் அமர்ந்தாள். அவன் சீனியரிடமிருந்து காப்பாற்றியது; நேத்ராவுடன் ரோட்டில் இருந்த போது அவளை அவனாக அழைத்து நிறுத்தியது; தீக்தாவிடமிருந்து உதவியது; யுவியை பார்க்க போனது என யோசித்த ரணா, யுவனுக்கு ஆப்ரேசன்னு தான போனான்.

ஏமாத்திட்டு போயிருக்கானோ? அதான் என்னை அழைக்கவில்லை என காவியனை தவறாக புரிந்து கொண்டு, அவன் என்னை பயன்படுத்தி இருக்கான் என அதீபனை அணைத்து அழுதாள் ரணா.

மனம் கேட்காமல் ரணாவை பார்க்க லட்சணாவுடன் வந்த சங்கீதன், ஏய்..என்ன சொன்ன? பயன்படுத்திக் கொண்டானா? என்ன பயன்படுத்தினான்? என்று கோபமாக அதீபனிடமிருந்து ரணாவை பிரித்து விட்டு கத்தினான்.

உனக்கும் தெரியுமா சங்கீதா? ஆரா கேட்டாள்.

என்னிடமும் அவன் சொல்லவில்லை. அன்று உன் காரில் அந்த மாயா பொண்ணுக்காக வந்து அவர்கள் நிலையத்தில் இறக்கிய போது தான் எனக்கே தெரியும். உங்கள நிலையத்தில் தான் வளர்ந்திருக்கான்னு. பயன் படுத்தினானா? அப்படி பயன்படுத்தணும்ன்னா? அந்த குட்டிப்பையன் யுவிக்காக உன் மூலமாக உன் வீட்டினரை தொடர்பு கொண்டு பணம் வாங்கி இருக்கலாம். செய்தானா?

அன்று நீயாக தான் மாயாவை அழைத்து செல்ல காரை எடுத்துட்டு முன் வந்த? அப்பொழுது கூட அந்த பொண்ணும் வேண்டாம்ன்னு தான சொன்னா? இது பயன்படுத்தியதா?

முதல் முறை உன்னை சீனியரிடம் காப்பாற்றியது உன் குடும்பம் அவனுக்கு முதலாளி என்பதால் மட்டுமல்ல எந்த நிலையிலும் யாரையும் தனியே விட மாட்டான். அதான் உனக்கு உதவினான்.

அன்று அவனோட அக்காவை பார்த்திருப்பாயே? அவங்க வேற யாருமில்லை. உன்னோட நிதின் மாமா காதலிச்ச பொண்ணு தான். ஆனால் அவங்க காதலிக்கவேயில்லை. இவர் தான் அவங்க பின் சுற்றிக் கொண்டிருந்தார்.

உன் அண்ணனும், மாமாவும் தான் காவியனையும் அவனது நண்பர்களையும் பயன்படுத்துறாங்க. அப்படியும் சொல்ல முடியாது. அவனுக அவங்களுக்கு உதவுறாங்க.

நிதின் சார், உங்க அண்ணா, அந்த அக்கா எல்லாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். மூவரையுமே ஒருவன் கொல்ல பார்ப்பதாக கேள்விப்பட்டேன்.

என்ன கண்ணாவையுமா? யசோதா கேட்க, சிவநந்தினி கண்ணீருடன், எதுக்கு நம்ம பசங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது? என அழுதார்.

இதெல்லாம் அவன் என்னிடம் சொல்லலை. அவன் நண்பன் மிதுன் தான் சொன்னான். உதவி தேவையென்றால் அழைப்பதாக சொன்னான். காவியன் எதையும் யாரிடமும் அதிகமாக சொல்லவும் மாட்டான். பேசவும் மாட்டான். உங்களுக்கு தெரியாதா? என்று ராகவ், ஆராவை பார்த்து கேட்டான்  சங்கீதன். யாரும் இதை பற்றி சேர்மன் சாரிடம் பேச வேண்டாம்.

அவங்க எல்லாரும் சேர்ந்து அவனை பிடிக்க தயாராகிகிட்டு இருக்காங்க. சொதப்பி விட்றாதீங்க. அப்புறம் என் மேல தான் கோபப்படுவாங்க. அவன் அக்காவுக்காக தான் இவன் உள்ளே சென்றான். ஆனால் இப்படி அவனுக்கு அடிப்பட்டிருச்சு என்று வருத்தப்பட்டான்.

தாட்சாயிணி புன்னகைத்தாள்.

அவன் சீரியசா பேசுறான்? நீ சிரிக்கிற? அதீபன் கேட்க,  ஒன்றுமில்லை என்றாள் தாட்சாயிணி.

அந்த குட்டிப்பையன் நல்லா இருக்கானா? அந்த பொண்ணு யார் கூட இருக்கா? நம்ம பசங்க அந்த பொண்ணை சந்திக்க போயிருப்பாங்கல்ல? சிவநந்தினி கேட்க,

ஆமா மேம், சார் இருவரோட ப்ரெண்டு தான் உதவியதாக சொன்னாங்க. யுவனுக்கு ஆப்ரேசன் முடிந்தது.

அந்த பொண்ணோட தம்பியும் நம்ம நிலையத்துல தான இருக்கான்? நாம கூட பார்த்தோம்ல அதீபா சிவநந்தினி கேட்க, ஆமா அழுதானே? என்றான்.

அழுதானா? பிரணா கேட்க, ஆமா அவங்க பிரச்சனை?

என்னோட அப்பாவும் அந்த அக்காவின் அப்பாவும் ப்ரெண்டஸ் தான் மேம் என்றான் சங்கீதன்.

உங்க அப்பாவுக்கு அந்த பொண்ணை தெரியுமா?

நல்லா தெரியும். அக்காவுக்கும் எழிலன் அண்ணாவுக்கும் என்னை நல்லா தெரியும். அவங்கள அப்பா கவனிச்சுகிட்டு தான் இருந்தார். அக்கா தான் எங்க போனாங்கன்னு தெரியலன்னு புலம்பி தீர்ப்பார். தற்பொழுது ஒரு முறை அவங்களாகவே அப்பாவிடம் பேசி இருக்காங்க. அவங்க பிரச்சனை முடியவும் சந்திப்பதாக சொன்னதாகவும் சொன்னாங்க என்றான்.

ஓ..அப்படியா?

அந்த பொண்ணு நல்ல புள்ள தான? எங்க வீட்ல தான் என்று வாயை மூடி யசோதா அதீபனை பார்த்தார்.

அதீபன் அலைபேசி ஒலித்தது. அண்ணா தான் என்று அலை பேசியை காட்டி விட்டு எடுத்து காதில் வைத்தான்.

அதிரதன், காவியனுக்கும் அவன் நண்பர்களுக்குமான பிராக்டிஸ் பற்றி சொல்ல, எதுக்கு இதெல்லாம் அண்ணா? தெரியாதது போல் கேட்டான்.

அதீபா? கேள்வி கேக்குற?

ஆமா, சில விசயங்களை நன்றாக தெரிந்து கொண்டு தான் செய்யணும் அண்ணா?

அதீபா, யசோதா சத்தமிட்டார்.

சொல்லுண்ணா? என்று அவரை முறைத்துக் கொண்டே அதீபன் கேட்டான்.

உனக்கு ஏதோ தெரிஞ்சிடுச்சோ? அத்தை சத்தம் கேக்குதே? எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?

ம்ம்..எங்களுக்கு தெரிந்தது இருக்கட்டும். நீ சொல்லு.

சொல்லணுமா? சரி சொல்கிறேன் என்று இவனையும் நிதினையும் மட்டும் அதிரதன் சொல்ல, பரவாயில்ல அண்ணா. மறைக்க பழகிட்ட.

அம்மா, உன்னோட மூத்த பிள்ளை அந்த பொண்ணை பற்றி வாயை திறக்க மாட்டேங்கிறான் என்றான் அதீபன் சிவநந்தினியிடம்.

அண்ணா, எங்க இருக்க? அதீபன் கேட்க, நான் எங்கிருந்தால் உனக்கென்ன? எல்லாத்தையும் எல்லாரிடமும் சொல்ல முடியாது அதீபா.

அண்ணா, நான் ஒன்றும் அடுத்தவன் இல்லை. சித்தப்பா பையனாக இருந்தாலும் உன்னோட தம்பி.

அதீபா, புரிஞ்சுக்கோ. இங்க பிரச்சனை பெருசா போயிட்டு இருக்கு.

என்னிடம் சொன்னால் நானும் உதவுவேன்ல.

இதுக்கு தான் நான் சொல்லலை அதீபா. நீ நம்ம வீட்ல இருக்கிற நிம்மதில தான் இங்கே இருக்கேன். எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ. கொலைகாரனை விட இவன் ரொம்ப மோசமானவனா இருக்கான் என்று அதிரதன் அவனாகவே உலறினான்.

கொலைகாரனை விட இன்னொருவனா?

ஆமாடா, நமக்கு மட்டுமல்ல அந்த நிலையத்துல இருக்கிற சின்ன பசங்களுக்கு கூட ஆபத்து இருக்கு. இப்பொழுதைக்கு விக்ரம் இருக்கான். இன்னும் ஆட்களை அங்கே துணைக்கு அனுப்பணும் என்றான். அப்புறம் கம்பெனி ஆட்கள் என அவன் திட்டத்தை கூறினான்.

அப்படி என்ன மோசமாவனன்?

நீ இதுல தலையிடாத. எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ. நாளை மறுநாளிலிருந்து அந்த பசங்களுக்கு கெல்ப் பண்ணுவேல்ல?

ம்ம்..மைதானத்தை பற்றி அவன் கேட்க, நான் பார்த்துட்டு சொல்றேன்.

நாளையிலிருந்து என்னை தொடர்பு கொள்ள முடியாது. அதனால நீயே பசங்களிடம் பேசிக்கோ என்றான்.

ரொம்ப முக்கியமான விசயமா போகப் போறீயா? என்ன விசயம் அண்ணா?

கேள்வி கேக்குறத நிறுத்து என்றான் கோபமாக அதிரதன்.

அலைபேசியை பிடுங்கிய ரணா, அண்ணா என்று அவள் கேட்க வர, சங்கீதன் அவளிடமிருந்து போனை பிடுங்கி வைத்து விட்டு, உனக்கு எப்படி “உன் அண்ணாவுக்கும் காவியனுக்கு தெரியும்” என்று தெரியாமல் இருந்ததோ அதே போல் அவன் உன் அண்ணாவிடமும் நீ அவன் வகுப்பு தான்னு சொல்லலை. என்னை கூட சொல்லாமல் தான் இருந்திருக்கான்.

சரி, நீ அண்ணாவை பார்த்தால் ஒன்று மட்டும் சொல்லு. காவியன் அன்று தீக்சியிடம் ரொம்ப பேசிட்டான். ஒரு வேலை அவள் கூட ஆளை வைத்து கொல்ல பார்த்திருக்கலாம்.

என்ன பேசினான்? அதீபன் கேட்க, ரணாவும் கூறினாள்.

ம்ம்..தைரியம் தான். ஆனால் அவன் என்று சங்கீதனை பார்த்து நிறுத்தினான்.

மேம், நீங்க யாரும் கவலைப்படாதீங்க? இதுவரை நான் அப்பாவிடம் சொல்லலை. ஆனால் நான் கவனிக்க சொல்றேன். மூவருமே அப்பாவுக்கு நெருக்கமானவர்கள் தான். அதுவும் இல்லாமல் நாங்க எல்லாருமே இருக்கோம் என்றான் சங்கீதன். லட்சணா எல்லாரையும் பார்த்துக் கொண்டே நின்றாள்.

“லட்சு உள்ள வா” ரணா அழைக்க, அவள் தயங்கிக் கொண்டே உள்ளே வந்தாள்.

நீங்க யாரும் தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்றான் அதீபன்.

சார், உதவி வேணும்ன்னா சொல்லுங்க என்ற சங்கீதன், நான் எழிலனை பார்க்க நிலையத்துக்கு தான் போறேன். வர்றீயா ரணா? அவன் கேட்க, அவள் அம்மாவை பார்த்தாள்.

நானும் அங்கே தான் வாரேன் என்று அதீபன் நீ முன்னாடி போ. நாங்க வாரோம் என்றான் அதீபன்.

அதீபா, நானும் வாரேனே? தாட்சாயிணி கேட்க, அம்மா உன்னை தேடப் போறாங்கடா என்றார் சிவநந்தினி.

ஆன்ட்டி, அம்மாவிடம் சொல்லிடுவேன். அதான் ரணாவும் அதீபனும் இருக்காங்களே என்றாள்.

சரிம்மா, பார்த்து போயிட்டு வாங்கடா என்று அவர் சொல்ல, சங்கீதன் நண்பர்களுடன் எழிலனை பார்க்க சென்றாள். அதீபன், ரணா தாட்சாயிணியுடன் அவனுக்கு தெரிந்த மைதானத்தை பார்க்க சென்றான். அதீபனுக்கு என்னோட காதல் விசயம் தெரிந்திருக்குமோ? என நிதினுடன் பேசிக் கொண்டிருந்தான் அதிரதன். காவியன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கீதனை பார்த்த எழிலன் எமோஸ்னலாக அவனை அணைத்துக் கொண்டான்.

அக்காவை பார்த்தாயா? சங்கீதன் கேட்க, ஆமா என்று கண்ணீருடன் என்னிடம் எல்லாத்தையும் மறைச்சிருக்கா என்று அழுதான்.

சரி விடு. உனக்காக தான செஞ்சாங்க? என்றான்.

அதுக்காக அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால் நான் உடைஞ்சு போயிருப்பேன் என்று அழுதான். இவர்களை பார்த்தவாறே கும்பலாக ஜீவா நண்பர்கள், மாயா தோழிகள், தேவா நண்பர்கள் சின்ன பசங்க எல்லாரும் நோட்டு, புத்தகத்தை கையில் வைத்து வேடிக்கை பார்க்க,

அவன் வருவான். ம்ம்..என்ன வேடிக்கை? படிங்க என்றான் நளன். நம் எழிலனும் நளனும் தான் பசங்க படிக்க உதவுறாங்க. நளன் நாளை சென்று விடுவான். எழிலன் தான் பசங்க படிக்க உதவ போறான். படிக்காமல் இருக்கும் அனைவருக்கும் ஒரு மாதம் தான் தேர்வு வைத்து எந்த வகுப்பில் சேர்க்கலாம் என்று சேர்மன் முடுவெடுப்பதாக சொல்ல, அனைவரும் தீவிரமானார்கள். வெண்பா நேத்ராவிடம் சொல்ல, பசங்க படிக்க போறாங்கன்னு செம்ம சந்தோசம்.

அதீபன், ரணா, தாட்சாயிணி நிலையத்திற்குள் வந்தனர்.

ரணா என்று அவள் நண்பர்கள் சத்தமிட, படித்துக் கொண்டிருப்பவர்கள் திரும்பி பார்த்தனர்.

வெண்பா, சார் வந்திருக்கார். வம்பு பண்ணாம வாய மூடிகிட்டு இரு மாயா சொல்ல, வெண்பா அதீபனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்

நண்பர்கள் அழைக்க ஓட இருந்த ரணா கையை பிடித்து நிறுத்தி, எங்களோட தான் இருக்கணும் என்றான் அழுத்தமாக அதீபன். அவள் நண்பர்கள் முகம் மாறியது.

ஹே, லட்சு இங்க வாவேன் பசங்க திறமையை பார்க்கலாம் என்று ஆரா அழைத்தாள்.

சுஜித்ரா அவர்களிடம் வந்து எதையும் தொடாம பாருங்க என்றாள். அதீபனையும் வந்தவர்களையும் நன்றாக கவனித்தனர் சுஜி, பாட்டி மற்றவர்கள். ரணா மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு அதீபன் அருகே அமர்ந்திருந்தாள்.

அதீபன், தாட்சாயிணிக்கு நன்றாக தெரியும். ரணாவை நண்பர்களுடன் விட்டால் ஜாலியாக எல்லாருடனும் பேசுவாள். ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்களே! தன்வந்த்தும் அங்கே தான் இருந்தான். அதனால் அதீபன் பிடித்து வைத்திருந்தான். ஆனால் அவள் சோகமாக நண்பர்களை பார்த்துக் கொண்டிருக்க,

வெண்பா, அவங்க தான் நம்ம காவியனோட ப்ரெண்டு. நான் சொன்னேனே? என்றாள் மாயா. ஜீவாவும் தேவாவும் அவளை பார்த்தனர்

மாயா, இப்ப எதுக்கு சொன்ன? அருணா முறைக்க, என்ன பேச்சு? நளன் கேட்க, மை டீச்சர் சார். எனக்கு ஐந்து நிமிடம் பிரேக் வேணுமே? வெண்பா கேட்டாள்.

படிச்சு தவிச்சு போயிட்டியா? நளன் கேட்க, நான் அவங்களிடம் பேசணும்? என ரணாவை காட்ட, வேற வினையே வேண்டாம் என்ற நளன் அவளருகே வந்து, எழுந்திருச்ச மண்டையிலே போற்றுவேன் என்று குச்சியை காட்டினான்.

இப்படி மிரட்டுனீங்கன்னா? நான் கம்பிளைண்ட் பண்ணுவேன்?

நளன் சிரித்துக் கொண்டு, யாரிடம் கம்பிளைண்ட் பைல் பண்ணுவ? என கேட்டான்.

“ஹட் மாஸ்டர்கிட்ட” என்று எழிலனை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

அவன் எனக்கு “ஹெட் மாஸ்டர்” இல்லையே?

ஆனால் ஸ்டூடண்டோட குறைய நீக்குவது அவர் வேலை தான?

வெண்பா அமைதியா உட்காரு. பிரச்சனை பண்ணிடாத அருணா சொல்ல, நளன் அவளை பார்த்தான்.

“அடப்போடி” என்று நளனை பார்த்தாள் வெண்பா. அவன் கவனம் அருணா மீதிருக்க, நான் ஓடிட்டேன்னே? என்று மூச்சிறைக்க ஓடி வந்து, ரணாவை இடித்து அமர்ந்தாள்.

நிவி குட்டி, அக்காவுக்கு தண்ணி கொண்டு வாயேன் என்று சத்தமிட்டாள் வெண்பா.

உனக்கு கையில்லையா? என்று உள்ளிருந்து கேள்வி வந்தது. எழிலன், சங்கீதன், கண்ணன், நளன் அவளிடம் வந்தனர்.

ஏய், இங்க வா என்று நளன் அழைக்க, ஓ..மை டீச்சர். கொஞ்சம் காத்திருங்கள். ஒரு சந்தேகத்தை போக்கி விட்டு வாரேன் என்றாள் வெண்பா.

வெண்பா, படிக்க போ எழிலன் சொல்ல, ஹெட் மாஸ்டர். ஐந்தே நிமிடம் தான்.

ஏய், நிவி அவள் கத்த, சுஜி எழுந்து அவள் காதை திருக, அக்கா வலிக்குது என்று கத்தினாள்.

வாயி ஒட்டே கிடக்காது போல என்று அதீபன் சொல்ல, அதை சைனாபீஸ்ஸெல்லாம் சொல்லக் கூடாது என்றாள் வெடுக்கென வெண்பா.

சைனா பீஸ்ஸா? ரணா பயங்கரமாக சிரித்துக் கொண்டு, டேய் இது கூட சூப்பரா இருக்குடா என்றாள். தாட்சாயிணி வெண்பாவை முறைத்தாள்.

வெண்பா, படிக்கப் போக போறீயா? இல்லையா? கோபமாக விரட்டினான் எழிலன். அப்பொழுது தான் சுபிர்தன், அருள், கிருஷ்ணன் உள்ளிருந்து வெளியே வந்தனர்.

வெண்பா உதட்டை பிதுக்கிக் கொண்டு, நான் இந்த அக்காவிடம் தான் பேச வந்தேன். தேவையில்லாம என்னை பத்தி பேசுனாங்க. நானும் பேசுனேன். நான் செஞ்சது மட்டும் தப்புல்ல என்று எழிலனிடம், போ நான் பேச மாட்டேன் என்று அழுது கொண்டு அறைக்கு சென்றாள்.

எழிலன் அதீபனை முறைத்து விட்டு, ஏய் நில்லு என்று பின்னே செல்ல, ஏன்டா உனக்கு அந்த பொண்ணை முன்பே தெரிந்து பேச விருப்பமில்லைன்னா சும்மா இருந்திருக்கலாம்ல தாட்சாயிணி சொல்ல, ரணா கோபமாக கீழிறங்கினார்.

 

Advertisement