Advertisement

அத்தியாயம் 24

கண்ணை துடைத்து விட்டு சங்கீதன் கதவை திறந்தான். லட்சனாவை பார்த்து, நீ என்ன செய்ற? கேட்டான். சங்கீதா..என்று அதிரதனை காட்டிக் கொண்டே அவனை பார்த்து திகைத்து காவியனை பார்த்தாள்.

சண்டை போட்டீங்களாடா? லட்சணா கேட்க, நாங்க என்ன சண்டை போட்ட மாதிரியா இருக்கு? கோபமாக காவியன் கேட்டான்.

கேட்க தானடா செஞ்சேன். அதுக்கும் கோபமா காவியா? உனக்கு இன்று என்ன தான் ஆச்சு? சங்கீதா..என்னடா அழுதியா? லட்சணா கேட்க, அழுதிருக்கானா? என்று அதிரதன் அவன் முன் வர, அவன் திரும்பி விலகி வெளியே செல்ல இருந்தவன் கையை பிடித்து நிறுத்தினான் அதிரதன். அவன் மூஞ்சியும் சரியில்லை. இவன் மூஞ்சியும் சரியில்லை. என்னடா பண்ணீங்க? அதிரதன் கேட்க, அவனை பார்த்துக் கொண்டே கையை எடுத்து விட்டு காவியனை பார்த்து விட்டு வெளியே சென்றான் சங்கீதன்.

லட்சணாவும் வெளியே சென்று அவன் காரை தேடினாள். பின் அவனை பார்த்து அவன் காரில் ஏறினாள். அவன் சீட்டில் சாய்ந்து படுத்திருந்தான். அவன் கை மீது லட்சணா கை வைத்து, ஏதும் பிரச்சனையா சங்கா? என கேட்டாள்.

அவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் கண்ணீருடன். அவள் அதிர்ந்து விட்டாள். சங்கா நீ?

ப்ளீஸ் கொஞ்ச நேரம் ஏதும் பேசாத என்றான்.

அவன் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறான் என்று தெரிந்து அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

என்னடா அழுதானா? அவன் உன்னோட ப்ரெண்டா? அதிரதன் கேட்டான். அவனை பார்த்து ப்ரெண்டு தான் என்றான்.

எதுக்கு அழுறான்?

அது அவனோட பிரச்சனை. சார் அக்காவை வரச் சொல்லுங்களேன். அவங்களிடம் பேசணும்.

சொல்றேன் என்று வெளியே வந்து நேத்ராவை அழைத்தான்.

அவள் யுவி, நீலுவிடம் பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த அதிரதன் அனைவரையும் பார்த்து விட்டு, காவியன் உன்னிடம் பேசணும்ன்னு சொன்னான் என்று அழைத்தான்.

அவன் நல்லா தான இருக்கான்? அவள் தயங்கி கேட்க, அவனை நீ மட்டும் தான் பார்க்க செல்லவேயில்லை.

நீ ஏன் போகல வினு? காவியனுக்கு கஷ்டமா இருக்குமே? ஒவ்வொரு முறை கதவை திறக்கும் போது அவன் உன்னை தான் எதிர்பார்க்கிறான் என்று அதிரதன் சொல்ல, கண்ணீருடன் தலைகவிழ்ந்து நின்றாள் நேத்ரா.

அக்கா, இதுக்காக எதுக்கு அழுறீங்க? போய் பார்த்துட்டு வாங்க என்று மாயா சொல்ல, தலையை ஆட்டிக் கொண்டே காவியன் அறைக்கு சென்றாள். அதிரதன் அவளை சந்தேகமாக பார்த்தான்.

காவியன் கையில் கட்டுப் போட்டிருப்பதை பார்த்து நேத்ரா அழுதாள். காவியன் பதறி எழுந்து அமர்ந்து, அக்கா எதுக்கு அழுறீங்க?

சாரி காவியா என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அக்கா, என்னாச்சு?

ரொம்ப வலிக்குதா? என்று நேத்ரா கேட்க, காவியன் கண்ணில் நீர் கசிய, எனக்கு சந்தோசமா இருக்குக்கா. இதுவரை எனக்கு அடிபட்டால் மருந்து போட்டு விட்டுருக்காங்க. இப்ப கூட வலி இருக்கான்னு கேட்டுட்டு போனாங்க. ஆனால் யாரும் அழவில்லை என்று சொன்ன காவியனுக்கு ரணா அழுதது நினைவிற்கு வந்தது.

உன்னோட ப்ரெண்ட்ஸ் வந்தாங்களாம். கோபப்பட்டியாமே? நேத்ரா கேட்க, அக்கா நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?

கேளு என்றாள்.

நீங்க வேற மேரேஜ் பண்ணிக்கலாமே?

காவியா? என்ன பேசுற? விஷ்வா தான் லூசு மாதிரி பேசுறான். நீயுமா? ஏன்டா, என் நிலை உனக்கு தெரியாதா?

தெரியுதுக்கா. அதற்காக தான் சொல்றேன்.

வயித்துல குழந்தையை வச்சிட்டு யார் என்னை கல்யாணம் பண்ணிப்பாங்க?

அக்கா, எங்களுக்கு விசயம் தெரியும்க்கா.

என்ன?

உங்க அம்மா, அப்பா கொலை, உங்களை சுற்றி இருப்பவர்களை கொல்ல நினைப்பது என்று அவளை பார்த்தான்.

அவனை விட்டு எழுந்த நேத்ரா, தேவையில்லாத விசயத்துல தலையிடாத என்று காவியனை முறைத்துக் கொண்டே கதவை திறந்தாள். அதிரதன் தன் அலைபேசியை காதில் வைத்தவாறு திரும்பினான்.

அக்கா போங்க, நான் சொல்றத கேட்டுட்டு போங்க. யாருன்னு தெரியாத ஒருவன் தான். ஆனால் உங்களை வைத்து தான் செய்கிறான். விஷ்வா சார், ரதன் சார் இருவரையும் உங்களை வைத்து தான் மிரட்டிக் கொண்டிருக்கிறான். உங்க தம்பி மட்டுமல்ல என்னையும் கொல்ல பார்த்திருக்கான். அவனுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்ன்னா அது உங்களது திருமணத்தில் தான் இருக்கு என்று கத்தினான் காவியன்.

காவியா, உன்னையுமா? என்று அவனை பார்த்து விட்டு, சார் உங்களை மிரட்டினானா? நேத்ரா கேட்க, ஷ்..என்று அவள் வாயில் கை வைக்க, காவியன் அதிரதனை எட்டிப் பார்த்து, தவறான நேரத்தில் பேசிட்டோமோ? என்று சிந்தித்தான். நேத்ரா அதிரதனை பார்த்துக் கொண்டே நிற்க, அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்து கதவை அடைத்தான்.

சார்..காவியன் அழைக்க,..ஷ்..என்ற அதிரதன்,

ம்ம்..பார்த்துட்டியா? நிதின் எங்க இருக்கான்? சரி, அவனிடம் கொடு என்று நீ சொல்லுடா..என்று அதிரதன் கேட்க,

நிதின் பயத்துடன் ரதா, எதுவுமே சரியில்லை. வினு பின் சுற்றியதில் மூவரை பற்றி விசாரித்தோம். அவன் குரல்கள் நடுங்க..அவங்க மூவருமே உயிரோட இல்லைடா.

வாட்? என்ன சொல்ற? என்று பதட்டமுடன் அதிரதன் எழ, காவியனும் நேத்ராவும் பார்த்துக் கொண்டனர்.

எப்படிடா?

அவங்க வீட்ல விசாரிச்சா ஒருவன் விபத்தில் இறந்ததா சொல்றாங்க. மற்றவன் தற்கொலை செய்ததாக சொன்னாங்க. மற்றவன் உடல் கிடைக்காமல் அவன் இறந்து ஆறு மாதத்திற்கு பின் ஓர் காட்டில் சிதைந்து இருந்ததாகவும் விலங்கு ஏதாவது கொன்றிருக்கும் என்று சொல்றாங்கடா. எல்லாத்தையும் விக்ரம் தோழன் ரிச்சர்டு தான் வீடியோ செய்து அனுப்புறான்.

அப்படின்னா மத்தவங்க? என்று தலையை பிடித்து அமர்ந்தான் அதிரதன்.

இருக்கிறது சந்தேகம் தான்.

நிது, விஷ்வாவை ஆட்களுடன் இங்கிருந்து அனுப்புகிறேன். இருவரும் சேர்ந்து உங்க கல்லூரி புட்டேஜ் அனைத்தையும் எடுத்துட்டு ஹாஸ்பிட்டல் வாங்க. ஒன்று கூட மிஸ் ஆகக்கூடாது. கவனமா இருங்க.

டேய், ஆத்விக்கு கால் பண்ணியா?

இருக்குற டென்சன்ல?

முதல்ல பேசுடா. அதுக்குள்ள விஷ்வா வந்துருவான் என்று அதிரதன் அலைபேசியை வைத்து விட்டு இருவரையும் பார்த்தான்.

என்னவான்டா இவளுக்கு? அதிரதன் நேத்ராவை பார்த்துக் கொண்டே காவியனிடம் கேட்டான்.

நீங்க என்ன பேசுனீங்க? காலேஜ் புட்டேஜா? நிதுவிடம் தான பேசுனீங்க?

அக்கா, நீங்க பேசாதீங்க. நீங்க முதல்லவே நிதின் சாரிடமாவது சொல்லி இருக்கலாம்.

என்ன சொல்ற காவியா? என்று நேத்ரா கேட்க, உங்க அக்காவிடம் காட்ட வேண்டியதை காட்டு என்றான் அதிரதன்.

புக் ஷாப்பில் நடந்ததை காட்டி விட்டு, என்ன சொல்றீங்க அக்கா? காவியன் கேட்டான்.

காவியா? என்னையா? எதுக்கு? இவன் யாரு? என்னை காப்பாற்றினானா?

அதான் யாருன்னு தெரியல? உனக்கு யாருன்னு தெரியுதா? பாரு என்றான் அதிரதன்.

அவள் மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தாள். பார்த்தது போல் தான் இருக்கு என்று மீண்டும் போட்டு பார்த்து சார், இவன் என்று ஆர்வமாக விக்கி என்றாள் புன்னகையுடன். இருவரும் அவளை முறைத்து பார்த்தனர்.

 எதுக்கு முறைக்கிறீங்க? அவன் உதவி தானே செய்திருக்கான். அவனும் எங்க ஊர்க்காரன் தான் என்றாள்.

உங்க ஊரா? உங்களை சின்ன வயசுல இருந்து அவனுக்கு தெரியுமா?

அவனா? டேய், உன்னோட பெரிய பசங்கள அவன் இவன்னு சொல்ற?

ஆமா, உங்கக்கா ஊருல்ல. ஆராத்தி எடுத்து கும்பிடு போட சொல்லு காவியா என்றான் கடுப்பாக அதிரதன்.

சார், என்ன இப்படி சொல்லீட்டீங்க? அவன் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு அப்பா மட்டும் தான். அவர் யாருன்னு கூட யாருக்குமே தெரியாது. பணம் மட்டும் வந்துரும். அவனுக்கு தங்கை ஒருத்தி இருந்தா. பாவம் அவளும் சின்ன வயசுலே நடந்த விபத்தில் இறந்துட்டா. அவன் உடைஞ்சு போயிட்டான். அப்பா அவனுக்காக ஒரு வாரம் அவனுடன் தான் தங்கினார். பின் அடிக்கடி வீட்டுக்கு வருவான். ஆனால் நம்ம பள்ளிக்கு வந்த பின் அவனும் வந்தான். நான் பேச சென்றால் கூட அவன் என்னை கண்டு கொள்ளவேயில்லை. நானும் பேசாமலே விட்டுட்டேன்.

எனக்காக எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கான்.

ஆமா, எவ்வளவு பெரிய உதவில்ல காவியா? அவன் இவங்கள பின் தொடர்ந்து வந்துருக்கான். உங்க அக்கா மூளைய கழற்றி வச்சிருக்காங்கலா? அவன் கேட்க, வேகமாக எழுந்து புடவை முந்தானையை இடுப்பில் சொருகி, யார் மூளைய கழற்றி வச்சிருக்கா? நீங்க தான் சார். ரொம்ப நாளா கழன்ற மாதிரி திரியுறீங்க?

ஓய், என்ன என்னிடமே சத்தம் போடுற?

ஹாம்..உண்மையை தானே சொன்னேன்.

என்ன உண்மை?

பேச தெரியாது. சிரிக்க தெரியாது. சின்ன பசங்கட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு தெரியாது. காவியா இவரு அன்று எழிலனை பார்த்துப்பான்னு போனா, அவனை தனியே விட்டுட்டு போயிட்டாரு. அவன் எப்படி அழுதான் தெரியுமா? நேத்ரா கேட்க,

அக்கா, தெரியாம பேசாதீங்க. உங்க தம்பி வேணும்ன்னே அடிபட்டதை போல் நடித்து தான் சாரை தூக்கி போக வச்சிருக்கான்.

உனக்கு எப்படி தெரியும்? அவன் வீட்ல வந்து அழுதுகிட்டே இருந்தான்.

வீட்ல வந்து அழுதானா? அவனுக்கு அடிபடவேயில்லையே? அதிரதன் சொல்ல, சார் உங்களுக்கு எழிலனை நினைவிருக்கா?

அக்கா, இங்க தான் உங்க ஸ்கூல் வீடியோவே இருக்கு. நீங்க சொன்ன நல்லவன் உங்களை காப்பாற்ற நினைத்தால் உங்களிடம் நேரடியாகவே வந்திருக்கலாமே?

எல்லா இடத்திலும் மறைந்து தான் இருக்கான். அவன் முகமே தெரியலை. ஆனால் அவன் கவனம் எப்பொழுதும் உங்க மேல தான் இருக்கு என்று காவியன் சொல்ல, அவள் அதிரதனை பார்த்து, எதுக்கு நம்ம பள்ளி சம்பந்தபட்ட வீடியோவை வச்சிருக்கீங்க? நாங்க படிச்ச காலேஜ்லயும் எடுக்க சொல்றீங்க?

அவனோட முழுப்பெயர் என்ன?

விக்னேஷ்வரன். உண்மையாகவே அவன் என்னை தான் பின் தொடர்ந்தானா? நேத்ரா பாவமாக கேட்டாள்.

நீ மட்டுமல்ல என்னையும், நிதினையும் அப்புறம் என்று யோசித்த அதிரதன், வினு எனக்கு தான் உன்னை தெரியாதே? இவனுக எல்லாரும் உன் பின் சுற்றியவர்கள். எனக்கு உன்னை தெரியவே தெரியாது. அப்புறம் என்னை எதுக்கு குறி வச்சிருக்கான்?

நேத்ரா முகம் வாடியது. அவள் அமைதியாக யோசிப்பது போல் நடிக்க, காவியன் புரிந்து கொண்டு, நிதின் சாருக்காக நீங்க முன்னாடி வந்தீங்கல்ல. அதான் என்றான்.

என்ன? நேத்ரா கேட்டுக் கொண்டே, காவியா இது வேறையா? என்று அதிரதனை பார்த்து விட்டு, இதெல்லாம் இருக்கட்டும். எதுக்கு திடீர்ன்னு விஷ்வா போல் திருமணப் பேச்சை ஆரம்பித்தாய்?

அக்கா என்று காவியன் தயங்கி அதிரதனை பார்த்தான்.

என்னப்பா, நான் வெளிய போகணுமா?

இல்ல சார், அக்கா, அவன் உங்களை குறி வைப்பது போல் தான் தெரியுது. கண்டிப்பாக என்னையும் எழிலனையும் தாக்கியது இவனாக தான் இருக்கும். அதனால உங்க பாதுகாப்புக்காக தான் திருமண பேச்சை ஆரம்பித்தேன்.

கல்யாணம் பண்ணிட்டா. அவன் என்னை விட்டுருவானா? என்னை கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு தான ஆபத்து.

எந்த ஆபத்தும் நெருங்காத ஒருவரை திருமணம் செஞ்சுக்கலாமே? காவியன் கேட்க, போச்சு. இவன் இப்பவே கல்யாணத்தை முடித்து வச்சிருவான் போல என்று நேத்ராவும் அதிரதனும் நினைத்துக் கொண்டே, நோ..என்றனர். பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காவியன் சிரித்தான்.

என்னது? காவியன் கேட்க, வேணாம்டா ஒருமுறை பட்டதே போதும். இதுக்கு நான் செத்து கூட போயிடலாம் என்று அவள் சொல்ல, அதிரதன் கோபமாக அவன் உன்னை கொல்ல நினைக்கலை. அடைய நினைக்கிறான் என்று வெறிபிடித்தவன் போல் கத்த, இருவரும் அதிர்ந்தனர்.

சார் காவியன் சத்தமிட, அமைதியாக நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான்.

நான் கிளம்புறேன் என்று நேத்ரா நகர, அவளது கையை பிடித்த அதிரதன் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? கேட்டான்.

வாட்? சார் ஜோக் செய்யும் நேரமில்லை. நீங்க அப்படியே மாறீட்டீங்க சார்.

எழுந்து, ஜோக் இல்லை வினு. நிஜமாக தான் கேட்கிறேன் என்று அவளை இழுத்து அணைத்து, என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?

அவனை தள்ளிவிட்டு, உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்ன்னு கல்யாணத்தை பத்தி பேசுறீங்க?

அன்று உன் அப்பாவின் கஷ்டத்தையும், உன் கஷ்டத்தையும் சொன்னாயே?

ஆமா சார், சொன்னேன். நான் பிறந்ததிலிருந்து சந்தோசமாக இருந்ததில்லை. பள்ளி முடிந்த பின்னும் பிரச்சனை. அதன் பின்னும் பிரச்சனை. இப்பொழுதும் பிரச்சனை. என்னை விட்ருங்க.

உன் தம்பியும் இதே தான் சொன்னான். எனக்கு உன்னை பற்றி தெரியாதுன்னா நீயே சொல்லு தெரிஞ்சுக்கிறேன்.

என்னால முடியாது என்று வினு கதறி அழுதாள். அவள் கணவனால் அவள் பட்ட இன்னல்களும் வேதனையும் சொல்லும் அளவு இல்லை. ரணமாகி போனது அவள் மனது.

சொல்லு..அவன் கேட்க, முடியாது என்று கத்திய நேத்ரா வாயில் கையை வைத்துக் கொண்டு வாமிட் வர ஓடினாள். அக்கா..என்று கையில் கட்டுடன் காவியன் எழ, நீ இரு என்று அதிரதன் அவள் முதுகை தடவ, வாயில் தண்ணீரை ஊற்றி கொப்பளித்து விட்டு, அப்பா..முடியலை என்று பின்னே அதிரதன் தான் இருக்கிறான் என்று அறியாது பின்பக்கமாக சாய்ந்து கண்ணை மூடினாள். அவன் அசையாது நின்று கொண்டிருந்தான்.

பின் அவனை பார்த்து விட்டு வேகமாக நகர்ந்தாள்.

அக்கா, நில்லுங்க…

உனக்கு தெரியாதா காவியா? புரிஞ்சுக்கோ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.

நான் என்பதால் வேண்டாம்ன்னு சொல்றீயா?

எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று அழுது கொண்டே வெளியே சென்று விட்டாள் வினு நேத்ரா.

சார், நீங்க வருத்தப்படாதீங்க. கொஞ்ச நாள் மட்டும் நேரம் கொடுங்க. நான் சம்மதிக்க வைக்கிறேன். ஆனால் சார் உங்கள் பணத்துக்காக நான் அக்காவை கல்யாணம் பண்ணிக்க சொல்லலை. அக்கா பாதுகாப்புக்காக தான் என்றான்.

அதிரதன் புன்னகையுடன் காவியனை பார்த்து, உன்னை பார்த்த அன்றே கோபம் வந்தது. ஆனால் உன் நடத்தையை பார்த்தால் அப்படியே நான் என்னை பார்ப்பது போல் உணர்ந்தேன். அதனால் உன்னை முழுதாக நம்புகிறேன் என்றான்.

அவனது நம்புகிறேன் என்ற சொல் காவியனுக்கு நிதின் சொன்னானே, ரதன் உன்னை நம்புகிறான். அவன் நம்பிக்கையை கெடுத்து விடாதே! என்பது நினைவுக்கு வந்து பெருமூச்சொன்றை எடுத்து விட்டான்.

என்ன?

ஒன்றுமில்லை சார். எனக்கு என்னமோ அக்கா சொன்ன விக்கி நம்மை கவனித்துக் கொண்டே இருப்பது போல் தெரியுது.

நல்லா கவனிக்கட்டும்.

சார்..என்ற சத்தத்தில் இருவரும் திரும்பினர். ஒருவன் கையில் ஆறு தேனீருடன் வந்தான்.

உள்ள வா. வச்சுட்டு முப்பத்து மூன்றாவது அறையில் இருப்பவர்களிடம் காவியன் நண்பர்களை மட்டும் வரச் சொல் என்றான் அதிரதன்.

ஓ.கே சார் என்று அவன் கிளம்பினான்.

எதுக்கு சார்? காவியன் கேட்க, இந்தா என்று அவனுக்கு ஒரு தேனீரை கொடுத்து விட்டு, அதிரதன் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனது அலைபேசி அழைக்க, சொல்லு ரிச்சர்டு?

சார், மத்தவங்களும் இறந்துட்டாங்க. ஆனால் கொலை போல் இல்லாமல் ஏற்கனவே மூவருக்கு நடந்தது போல் இருக்கு. ஆனால் ஒருவன் மட்டும் வீட்டை விட்டு ஓடியிருக்கான். அவனுக்கு தங்கை மட்டும் தான். அந்த பொண்ணையும் தனியா விட்டுட்டு போயிருக்கான். சார், இரு நாட்களாக தான் அவனை காணோம். மற்றவர்கள் இறப்பு கூட இந்த இரு வருடமாக சரியாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடந்திருக்கு.

விஷ்வா, நிதினை தவிர்த்து மொத்தம் ஒன்பது பேர் சார். ஓடியவன் தவிர..அவனோட அடுத்த டார்கெட் விஷ்வா இல்லை நிதினாக தான் இருப்பான்னு தோணுது. ஆனால் ஓடியவன் உயிரோட இருந்தால் இப்பொழுதைக்கு இவர்களுக்கு பிரச்சனையிருக்காது.

சரி, அந்த பொண்ணுகிட்ட அவ அண்ணோட நம்பரை வாங்கி டிரேஸ் பண்ணுங்க. அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக்கோங்க என்று போனை வைத்து விட்டான்.

ஓ.கே சார், என்று அவனது நண்பர்களிடம் ரிச்சர்டு சொல்ல, அவர்கள் நம்பரை டிராக் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அந்த நம்பர் ஓரிடத்திலே நின்று விட்டது.

காவியன் அறைக்குள் அவன் நண்பர்கள் வந்தனர். அவர்களுக்கும் அதிரதன் தேனீரை கொடுத்து விட்டு பேசலாம் என்று தொடங்க, மறுபடியும் அலைபேசி அவனை தொந்தரவு செய்தது. நேத்ரா வெளியே மறைந்து நின்றிருந்தாள்.

என்னடா? அதிரதன் சினமுடன் கேட்க, அவன் விசயத்தை சொல்ல, நெற்றியை தேய்த்துக் கொண்டே அந்த பொண்ணை போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ண சொல்லு. செய்தவுடனே உன்னோட குழுவினரை வைத்து போலீஸிடம் அவ்விடத்தை பற்றி கூறி உடனே போக சொல்லு.

சார், அந்த பொண்ணு ஏற்கனவே கம்பிளைண்ட் பண்ணி இருக்கா..

ரொம்ப நல்லாதா போச்சு. போலீஸை அங்கே போக சொல்லுங்க. சீக்கிரம்..அவன் உயிரோட வேண்டும். ஒருவேலை அந்த விக்கி பற்றிய விசயம் தெரிய வாய்ப்பிருக்கு என்றான்.

சார், என்ன பேசிட்டு இருக்கீங்க? காவியன் கேட்க, அதிரதன் அனைத்தையும் சொன்னான். நேத்ரா கண்ணீருடன் அங்கேயே அமர்ந்தாள்.

அவன் என்ன சைக்கோவா? காவியன் கேட்க, காவியா? இங்க என்ன நடக்குது? கிருஷ்ணா கேட்டான்.

முதலில் இருந்து அனைத்தையும் அவன் சொல்ல, நிதினை அழைத்து, விஷ்வா வந்துட்டான்ல. காலேஜ் போயிட்டீங்களா? கேட்டான்.

ம்ம்..வந்துட்டோம்டா என்றான் அவன். அவனோட அடுத்த டார்கெட் நீயும் விஷ்வாவும் தான். முதல்ல விஷ்வாவை தான் குறி வைப்பான்னு நினைக்கிறேன். கவனமா இருங்கடா என்று அதிரதன் சொல்ல, நேத்ராவிற்கு மேலும் கஷ்டமானது.

சார், இப்பொழுதைக்கு அவன் இவர்களை கொல்ல மாட்டான். ரெண்டு நாளுக்கு முன் தான் ஒருவனை ஓட விட்டிருக்கான். அவன் இறந்தாலும் மூன்று மாதம் கழித்து தான் மற்றவரை குறி வைப்பான். அதற்குள் அவனை நாம் பிடிக்கணும்.

ம்ம்..என்றான். அதிரதனும், காவியனும் அறைக்கு வெளியே பார்த்த வண்ணமிருந்தனர். எல்லாரும் அவர்களை பார்த்து விட்டு வெளியே பார்த்தனர்.

அதிரதன் வேகமாக எழுந்து அறைக்கு வெளியே வந்தான். நேத்ரா அமர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து, என்ன செய்ற? எழுந்திரு. ஒட்டு கேக்குறியா? கோபமாக கத்தினான். அவள் பாவமாக முகத்தை வைக்க, நண்பர்கள் வெளியே ஓடி வந்தனர். அவனும் கோபத்தை விடுத்து அவளிடம் கையை நீட்டினான். அவளும் அவன் கை பிடித்து எழுந்தாள். எல்லாரும் அறைக்குள் சென்றனர். அதிரதன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

அக்கா, உங்களாலன்னு நினைக்காதீங்க. இதில் விக்கி மட்டும் சம்பந்தப்படலை. மற்ற ஒருவனும் இருக்கான். அவன் தான் நீங்க பள்ளி படிக்கும் போது உங்கள் மூவரையும் கொல்ல நினைத்திருக்கான். இன்னொருவனா? நேத்ரா கேட்டாள்.

ஆமா. இருக்கான் என்ற அதிரதன் எனக்கு ஒரு சந்தேகம்? உன்னை சுற்றி இருப்பவர்களை ஒருவன் கொல்ல நினைக்கிறான். பள்ளி வயதில் என்னையும் நிதினையும் கூட எங்க அப்பாவோட எதிராளிகள் கொல்ல நினைக்கலாம். ஆனால் உன்னை எதற்கு? உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நிதின் உன் பின் சுற்றியதால் இது நடக்கலை என்று தெளிவாக தெரியுது. பத்து வயதில் ஆரம்பித்தது. இங்கே வரும் முன் உன்னை கொல்ல ஏதும் முயற்சி செய்தார்களா?

எனக்கு தெரியாது. என்னை கொல்ல நினைத்ததும் தெரியாது. என்னை சுற்றி இருப்பவர்களை கொல்ல நினைத்தது, கொலை செய்ததும் தெரியாது. என்னோட அம்மா, அப்பா கொலைக்கு பின் தான் தெரிந்தது என்று கத்தினாள்.

என்ன தெரிந்ததுக்கா? மிதுன் கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள்.

அக்கா, எனக்கும் ஒரு சந்தேகம்? என்று சுபிர்தன் நேத்ராவை முறைத்துக் கொண்டு, அம்மா, அப்பா இறந்த பின் உங்க தம்பியை தனியே விட்டு வந்தீங்க? ஆனால் அப்ப தான உடன் இருக்கணும்? உங்க தம்பியையும் கொல்லுவாங்கன்னு பயந்து நீங்க விலகி வந்திருந்தா உங்களிடம் அந்த கொலைகாரன் பேசி இருக்கணும் இல்லை அவனை நீங்கள் சந்தித்து இருக்கணும். கண்டிப்பா உங்க தம்பியை விக்கி கொன்றிருக்க மாட்டான்.

எல்லாரும் அவளை பார்த்தனர். நேத்ரா அழுதாள்.

ஓ..அப்ப அந்த கொலைகாரன் உன்னை சந்தித்தானா? அதிரதன் கேட்க, இல்லை சந்திக்கலை. அவன் மிரட்டினான். யாரும் உன்னருகே இருக்கக்கூடாதுன்னு மிரட்டினான். அதனால் தான் இருக்க இடம் கூட இல்லாமல் ஒருவாரமாக சுற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாளிலே ரொம்ப கஷ்டப்பட்டேன். போறவங்க வர்றவங்க ஒரு மாதிரியா பார்ப்பாங்க. அப்புறம்..என்று சொல்லாமல் அழுதாள்.

அக்கா என்று அருள் அவளிடம் வந்து நேத்ரா கையை பிடிக்க, மற்றவர்களும் அவளிடம் வந்தனர். அதிரதன் அருளை பார்த்து முறைக்க அவனை பார்த்த அருள் அவள் கையை விட்டு அருகே அமர்ந்தான்.

ஒரு வாரத்திற்கு பின் ஒருவன் என்னிடம் வம்பு செய்யும் போது தான் செல்லம்மா பாட்டி அக்கா வந்து நம்ம நிலையத்துக்கு அழைச்சிட்டு வந்தாங்க. பயந்து தான் வந்தேன். ஆனால் உங்க எல்லாரையும் பார்த்து நான் என்னை பார்த்துக்கிட்டா தான் எழிலனை பார்த்துக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அப்புறம் உங்களால தான் வெளியே வந்தேன் என்று காவியனை பார்த்துக் கொண்டே கூறினாள். மிதுனும் அவனை பார்த்தான். இருவரையும் கவனித்த அதிரதன்.. இன்னும் இவள் ஏதோ மறைப்பது போல் இருக்கு. இவனுக்கு ஏதும் தெரியுமோ? என்று மிதுனை பார்த்தான்.

நம்ம நிலையத்துக்கு வந்த பின்னும் மிரட்டினான். என்னை பாரின் போக சொன்னான். நான் முடியாதுன்னு சொல்லீட்டேன். அவன் ஏதும் செய்து விடுவானோ? என்ற பயம் வந்து விட்டது.

இந்த நிலையத்தை விட்டு நீ வெளியே வராமல் இருந்தால் உன் உயிருக்கும் உன் தம்பி உயிருக்கும் ஏதும் ஆகாது என்றான்.

இப்ப நடந்ததை வைத்து பார்த்தால், யுவிக்காக உதவி கேட்டு வந்த போது தான் காவியனை கொல்ல பார்த்திருக்காங்க. நான் உங்களுடன் வீட்டில் இருந்த போது தான் எழிலனை கொல்ல பார்த்திருக்காங்க. கண்டிப்பா உங்களுக்கும் அந்த ஆளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. ஆனால் என் அம்மா, அப்பாவை எதுக்கு அவன் கொல்லணும்? என்னை எதுக்கு மிரட்டணும்? எங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியலை என்றாள்.

இப்ப ஏதும் மிரட்டல் விடுத்தானா? உன் அம்மா, அப்பாவை அவன் தான் கொன்னானா? உனக்கு உறுதியா தெரியுமா?

அவன் சொன்னான். ஆனால் உங்களை விக்கி தான் மிரட்டினானா? நேத்ரா அதிரதனிடம் கேட்டாள்.

ஏன் அவன் செய்ய மாட்டான்னு சொல்றியா? அது என்ன அவனுக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணுற?

நீங்க நிதுவிடமே கேளுங்க. நான் சொன்னால் நம்ப மாட்டீங்க? அவன் யாரையும் எதிர்த்து கூட பேச மாட்டான். அவனிடமே கேட்டுக்கோங்க.

உன்னோட தம்பிக்கும் அவனை தெரியுமா?

நன்றாக தெரியும் என்றாள்.

சார், இப்ப எதுக்கு எல்லாரையும் வர வச்சீங்க? மிதுன் கேட்டான்.

நீ கிளம்பு. நான் பசங்களிடம் பேசணும் என்றான் அதிரதன்.

நான் இங்கே தான் இருப்பேன். நீங்க பேசுங்க என்றாள் நேத்ரா .

அக்கா..மிதுன் அழைக்க, அவள் கோபமாக திரும்பிக் கொண்டாள்.

அவள் என்னமும் செய்யட்டும். நீங்க யாராவது அத்லட்டா இருக்கீங்களா?

ம்ம்..இதோ இவன் தான் என்று சுபிர்தனை காட்டினார்கள்.

அவனோட வேகத்தை அறிந்து கொண்ட அதிரதன், நீங்க நிலையத்துல தான தங்குவீங்க. காலை எழுந்ததும் ரன்னிங் பிராக்டிஸ் பண்ணனும். நீ தான் உன் அளவுக்கு உன்னோட நண்பர்களை கொண்டு வரணும் என்றான் அதிரதன் சுபிர்தனிடம்.

எதுக்கு இதெல்லாம்? மிதுனுக்கு வீசிங் இருக்கு என்றாள் அதிரதனை முறைத்துக் கொண்டு நேத்ரா.

இங்க பாரு. என்னோட திட்டத்துல நீ தலையிடாத. மிதுன் நீ உன்னால முடியுறத செய். ஆனால் முயற்சி செய்யணும். எழிலனுக்கு மட்டும்  பிரச்சனையில்லை. சின்ன பசங்களுக்கு கூட இப்ப ஆபத்து தான்.

அருள் உங்க காலேஜ் பாதி தூரத்துல இடையில ஒரு பள்ளி..ம்ம்..என்று யோசித்தவன் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வரை ஓடணும். அங்கிருந்து கொஞ்சம் தள்ளி எங்க கம்பெனி இருக்கு. சோ…பிரச்சனைன்னா, நீங்க உங்க காலேஜ்ல இருந்து பாதி தூரம் ஓடி வந்தாலும் நிதின் வந்து உங்கள பிக் பண்ணிப்பான்.

நீங்க பிராக்டிஸ் பண்ணும் போது பாதுகாப்பிற்காக என்னோட பிரதர்ப் வருவான். எத்தனை கிலோ மீட்டர்ன்னு பாருங்க. அதுக்கு ஏத்த மாதிரி மைதானத்தில் பிராக்டிஸ் பண்ணலாம்.

போனை எடுத்த காவியன் ஆய்ந்து சொல்ல, ஓ.கே தீபனிடம் கேட்டு சொல்றேன். அவன் பார்த்துப்பான். நீங்களும் நிலையத்திலே எப்போதும் இருக்க முடியாது. விக்ரம் எப்போதும் அங்கு இருப்பான். நீங்க காலேஜ்ல கவனமா இருங்க. நிலையத்துக்கு நம்பிக்கையான ஆட்களை போடலாம்.

அலைபேசியில் நிதினை தொடர்பு கொண்டு, கம்பெனி எம்பிளாயிஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய சொன்னான்.

வந்துட்டோம்டா என்று நிதினும் விஷ்வாவும் வந்தனர்.

ஜீவா, மாயா, சுஜி அவர்களை பார்த்து வந்தனர். பாட்டி யுவி, நீலுவிடம் இருந்தார்.

நேத்ரா நிதினிடம் வந்து, விக்கிய பத்தி நீயே சாரிடம் சொல்லுடா என்றான்.

ஆமா, ரதா. அவன் இன்னசென்ட்டாக தான் இருந்தான். ஆனால் வினு விக்கி தான் சைக்கோ போல் எட்டு பேரை கொன்றிருக்கிறான். ஆதாரம் ஒன்று மட்டும் சிக்கி இருக்கு என்றான் நிதின்.

ஆதாரமா? நேத்ரா கேட்க, பாருங்க என்று அதிரதனிடம் காட்டினான். அனைவரும் அவனுடன் சேர்ந்து பார்த்தனர். விக்னேஷை பார்த்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன் இறந்தவனது நண்பன் போனில் கிடைத்த ஆதாரம். அதிரதன் போன்ற உடற்கட்டுடன் அடர்ந்த புருவம், சிவந்த கண்கள், இறுகிய முகம், ஆளை கொல்லும் பார்வை என விக்னேஷ் சினத்தின் அதிபதியாய் நின்றான்.

பெரிய கன்ஸ்ட்ரக்சன் பில்டிங்கில் கட்டிடத்திற்கான திட்டமிடலில் தன் குழுவினருடன் சைட் பார்க்க போன இடத்தில் யாரும் கவனிக்காத சமயத்தில் கட்டிட உச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டு அங்கே ஓர் இடத்தில் பதுங்கிக் கொண்டான். அவ்விடம் யாரும் இல்லாததால் தவறி விழுந்ததாக நியூஸ் பரவப்பட்டது. ஆனால் அவன் விழுந்த சற்று நேரத்தில் விக்கி வெளியே வந்து, “ஹி இஸ் ஃகான்” என்று பைத்தியம் போல் கத்தியது வீடியோவில் அனைத்தும் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோவை மறைந்திருந்து இறந்தவனுடன் வேலை செய்பவன் எடுத்து இருக்கிறான். இவர்கள் பின்னிருந்து சைட்டை பார்த்துக் கொண்டிருந்தவன்.. விக்கி கோபமான முகத்தை, இவனை கொல்லணும்..கொல்லணும் என்ற வார்த்தையில் பயந்து மறைந்தான். ஆனால் அவன் செய்ய இருந்ததை புரிந்து கொண்டு வீடியோ எடுத்திருக்கிறான். அவன் காப்பாற்ற நினைத்திருந்தால் அவனும் சேர்ந்து செத்திருப்பான். இந்த விசயமே தெரிந்திருக்காது என்றான் நிதின்.

வாயில் கைவைத்து தாளாத அதிர்ச்சியுடன் உதடு நடுங்க கண்ணீருடன் நேத்ரா பார்த்தாள்.

என்ன வினு? எப்படி மாறியிருக்கான் பார்த்தாயா?

நிது, இவன் விக்கி தானா? வாய் உலறலுடன் கேட்டாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.

நானும் முதலில் இவன் தானா? என்று அதிர்ச்சியானேன் வினு. இவன் அதே விக்னேஷ்வரன் தான்.

இல்ல நிது, அவனை போலே இல்லையே? முகம் மட்டும் தான் அவனை போல் இருக்கு நேத்ரா கேட்க,

நாம மீட் பண்ணி ஐந்தாறு வருசங்களாகுது.

இல்ல நிது, என்னோட மேரேஜூக்கு வந்தான். அதன் பின் தான் அவனை பார்க்கவில்லை.

இரு வருசம்ன்னு நீ தான் சொல்றேல்ல. என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் என்றான் நிதின்.

அதற்காக இப்படி மொத்தமாகவா மாறி இருப்பான்? என்று தலையை பிடித்து கண்ணீருடன் அமர்ந்தாள்.

ஏன் வினு? நீ மாறலையா? நிதின் கேட்க, அவனை நிமிர்ந்து கண்ணீருடன் பார்த்தாள்.

நிதின் அவளருகே அமர்ந்து மண்டியிட்டு, அவள் கண்ணீரை தொட்டு ஒரு நாள் கூட உன்னை இது மாதிரி கண்ணீருடன் பார்த்ததேயில்லை வினு. நீ கஷ்டப்பட்ட நேரம் கூட வெளிய காட்டிக்கலை. அன்று ரதனின் வீட்டின் வெளியே நீ கதறி அழுது கொண்டிருந்தாய். என்னால நம்பவே முடியலை. அவ்வளவு பிரச்சனையிலும் எதையும் காட்டிக்காமல் புன்னகையுடன் இருந்த நீ எங்க போன வினு?

என்னால முடியல நிது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் அம்மா, அப்பா இருந்தாங்க. ஆனால் தம்பிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து பயந்து தான் என்று நிதினை அணைக்க, அதிரதன் கோபமாக கையை இறுக்கினான்.

அக்கா, காவியன் சத்தமிட நிதின் நேத்ராவை விலக்கி விட்டு எழுந்து, வினு இப்ப இங்க எல்லாருக்கும் உன்னோட கணவன் யாருன்னு சொல்லு? என்று அதிரதனை பார்த்தான். அவன் நிதினை சினத்துடன் முறைத்து பார்த்தான்.

ரதா, நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?

அவன் கோபமுடன் நேத்ராவையும் முறைத்தான். அவள் அவனை பார்த்து எழுந்தாள்.

அவனை பற்றி எதுக்கு சொல்லணும்? நேத்ரா கேட்க, காரணம் இருக்கு வினு. நீ முதல்ல சொல்லு. காரணத்தை சொல்கிறேன்.

அவள் அனைவரையும் பார்த்தாள். தயங்கிக் கொண்டே நின்றாள்.

அப்பொழுது ஓர் குரல், “அவன் பெயர் செள்ளியன்” என்று சுஜி உள்ளே வந்தாள்.

ரதா, உனக்கு அவனை தெரியும்ல? நிது உனக்கும் விஷ்வா உனக்கும் தெரியும்ல. ஆனால் அவனோட பொண்டாட்டி நம்ம வினு நேத்ரான்னு என்னை தவிர யாருக்கும் தெரியாது என்றாள்.

வாட்? அவனா? அனைவரும் அதிர்ந்தனர்.

உங்க எல்லாருக்கும் அவரை தெரியுமா? காவியன் கேட்க,

ஒரு வேலை முன்பே தெரிந்திருந்தால் நம்ம வினுவிற்கு திருமணம் நடந்திருக்காது. எனக்கு வினு பத்திரிக்கை வைக்கல. அழைத்தால் அவ்வளவு தான். நான் அங்கே சென்ற பின் தான் அந்த பொறுக்கி ராஸ்கல்ன்னு தெரிஞ்சது என்றாள் சுஜி.

பொறுக்கியா? வக்கீல்ன்னு அக்கா சொன்னாங்க.

அவன் வக்கீல் தான் காவியா. உன்னோட ப்ரெண்டு சங்கீதனின் அப்பாவோட ஜூனியர் தான் செள்ளியன். அவன் அவருக்கு எதிர்மாறு. அவர் மக்களுக்கு நியாயம் வாங்கித் தந்தால் இவன் அவர்களுக்கு எதிரானவனுடன் கூட்டு சேர்பவன். நல்ல வக்கீல் தான். தொழிலில் திறமைசாலி தான். அவருடன் இருக்கும் வரை நல்லவன் போல் தான் இருந்தான். அந்த நேரம் தான் வினுவிற்கு மாப்பிள்ளை தேடும் படலத்தை அவள் அப்பா தொடங்கி இருந்தார்.

தினகரன் சாரும், வினு அப்பாவும் தற்செயலாக நண்பர்கள் ஆனார்கள். அதனால் தினகரன் சார் சொல்லி தான் நம்ம வினு திருமணமே நடந்தது. இதுல “ஹை லைட் என்னன்னு தெரியுமா?” செள்ளியன் தான் மாப்பிள்ளை என்று வினுவுக்கும் தெரியாது. தாலி கட்டிய பின் தான் அவனை பார்த்தாள். அவளுக்கு இவனை வக்கீல்ன்னு தெரியுமே? தவிர மற்ற எதுவும் தெரியாது.

அவர் நல்ல வக்கீல் இல்லையா? காவியன் கேட்க, அதிரதன் நிதின் விஷ்வா வினு நேத்ராவை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் தினமும் ஒரு பொண்ணுடன் உல்லாசமாக இருப்பவன். அவனுக்கு பெற்றோர்கள் இருக்காங்க. ஆனால் யார் பேச்சுக்கும் அடங்குபவன் அவன் இல்லை. இப்படி வினுவோட வாழ்க்கையை பாழாக்கிட்டான்.

அவரை கண்டுகொள்ளாதது அக்கா தவறு தான? அவங்க அம்மா, அப்பா மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு கேட்கவில்லையா?

அவங்க அவசரமா தான் திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடுனாங்க. வினு இவன் தான் என்று முன்பே பார்த்திருந்து நம்மிடம் சொல்லி இருந்தால் அவள் வாழ்க்கை இப்படி ஆகி இருக்காது.

நிதின் உன்னை கூடவா திருமணத்திற்கு உன் ப்ரெண்டு அழைக்கவில்லை? என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் அதிரதன். எல்லாரும் அவனை திகைப்புடன் பார்த்தனர்.

என்னிடம் யாருமே சொல்லலை. திடீர்ன்னு காணாமல் போயிட்டா என்றான் நிதின்.

ஆமா சார், என்னிடமும் சொல்லவில்லை என்ற விஷ்வா, சுஜியிடம் நீ போனேல்ல தடுத்து நிறுத்தி இருக்கலாமே?

எங்கே நிறுத்துவது? விடியவே கிளம்பி விட்டேன். ஆனால் கார் திடீரென்று பழுதாகி விட்டது. திருமணம் முடிந்த பின் தான் மண்டபத்திற்குள் நுழைந்தேன். நான் கூட அவனை வினு திருமணத்தின் ஒருவாரத்திற்கு முன் ஒரு பொண்ணுடன் மாலில் பார்த்தேன். இப்ப தான் இவன் அயோக்கியன் என்று தெரியாதே! நான் கூட குடும்பத்தில் யாராவது இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

 

 

Advertisement