Advertisement

அத்தியாயம் 23

அதிரதனிடம் விசாரித்து எழிலனும் மற்றவர்களும் காவியன் அறைக்கு சென்றனர். காவியன் நண்பர்களுடன் இருந்தான். அதிரதன் சிந்தனையுடன், அக்காவும் தம்பியும் காவியனுக்காக இப்படி கஷ்டப்படுறாங்களே? என பார்த்தான்.

எழிலன் வேகமாக காவியன் அருகே சென்று அக்கறையுடன் விசாரிக்க மிதுன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை எழிலனிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த காவியன் மிதுனை பார்த்தவுடன், பாட்டி..என்று அவரை அழைத்து பேசினான். எழிலன் கனமான மனதுடன் நகர்ந்து நின்றான். எழிலனது செயலை கவனித்த ஜீவாவும் தேவாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ஜீவாவும் மற்றவர்களும் காவியனிடம் பேச, ஜீவா உன்னிடம் ஏதோ வித்தியாசம் தெரியுதே? காவியன் கேட்டுக் கொண்டே அவனையும் மற்றவர்களையும் பார்த்தான். எல்லாரும் மாயாவை பார்க்க, அவள் ஜீவாவை பார்த்தாள்.

அதெல்லாம் ஒன்றுமேயில்லை அண்ணா என்று அவனும் மாயாவை பார்க்க, காவியன் முகம் மாறியது. அப்பொழுது உள்ளே வந்தனர் காவியன் கல்லூரி நண்பர்கள். அதிரதன் யுவி அறையில் இருக்க, நேத்ராவும் தன் தம்பியை பார்த்தவுடன் உள்ளே சென்றிருப்பாள்.

என்னடா பிரச்சனை? என்று சங்கீதன் கேட்க, காவியன் நண்பர்கள் ரணாவை பார்த்தனர். ரணாவை பார்த்த காவியன் கோபமாக, நீ எதுக்கு வந்த ரணா? போ..என்று சத்தமிட்டான். எல்லாரும் அவனை அதிர்ந்து பார்க்க, அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

அதிரதனுக்கும், ரணாவிற்கும் காவியனை தெரியும். ஆனால் இவன் தான் அவர்களிடம் தெரியாதது போல் காட்டிக் கொண்டானே?

டேய், அவ உனக்கு அடிப்பட்டிருக்குன்னு பார்க்க வந்தா இப்படி தான் பேசுவியா? சங்கீதன் சத்தமிட, அவளை யார் கூட்டிட்டு வர சொன்னது. முதல்ல அவள கூட்டிட்டு போங்க என்று கத்தினான். எழிலனும் மற்றவர்களும் திகைத்து பார்த்தனர்.

அண்ணா, உங்க ப்ரெண்டு தான? எதுக்கு போக சொல்றீங்க? அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் ஜீவா சொல்ல, நீ வாய மூடு. அவள் என்னோட ப்ரெண்டெல்லாம் இல்லை என மீண்டும் கத்தினான்.

எல்லாரையும் பார்த்து விட்டு மாயாவை பார்த்த ரணா, அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

உனக்கு என்னடா பிரச்சனை? கையில தான அடிபட்டிருக்கு. தலையிலும் அடிப்பட்டிருக்கா? ராகவ் சத்தமிட, உன்னை பார்க்க வந்தோம் பாரு என்று ஆரா கோபமாக வெளியே செல்ல மற்றவர்களும் வெளியே வந்தனர்.

காவியன் அமைதியாக, அவளை முதல்ல வீட்ல டிராப் பண்ணு என்று சங்கீதனிடம் சொல்ல, அதை நீ சொல்ல தேவையில்லை. நாங்க பார்த்துப்போம் என்று அவன் கோபமாக வெளியே வந்தான்.

ஓடி வந்த ரணா ஒருவனை மோதி நின்றாள்.

குட்டிம்மா, இங்க என்ன செய்ற? எதுக்கு அழுற? என்று ஹாஸ்பிட்டல் வந்த நிதின் கேட்க, நிது..என்று அவனை அணைத்துக் கொண்டு, அவன் என்னை யாரோ மாதிரி எல்லார் முன்னாடியும் திட்டிட்டான் என்றாள்.

யாரை சொல்ற?

என்னோட நியூ ப்ரெண்டு. அண்ணாவோட பெயரை கூட சரி செய்தான்னு சொன்னேன்ல அவன் தான். அவனுக்கு அடிபட்டிருக்கு அவனை பார்க்க வந்தேன். அவ முன்னாடி வச்சி என்னை ப்ரெண்டே இல்லன்னு திட்டிட்டான். ஆராவும் மற்றவர்களும் அவர்களிடம் வந்தனர்.

பாப்பா, யாரை சொல்றா? என்று நிதின் ராகவ்விடம் கேட்டான். அவள் நிமிர்ந்து நிதினை பார்க்க,

அண்ணா, அவனோட பெயர் காவியன். நல்லா தான் பழகினான். ஆனால் இன்று ரணாவிடம் அதிகமாக கோபப்பட்டு பேசிட்டான். அவனை பார்க்க தான் வந்தோம். எங்க யாரிடமும் ஏதும் கோபப்படலை. அவளிடம் தான் ப்ரெண்டே இல்லைன்னு சொல்லிட்டான். அதான் அழுறா என்று அவன் சொல்ல மேலும் அழுதாள் ரணா.

காவியா? என்று முணுமுணுத்த நிதின், அவனோட பேரண்ட்ஸ் இங்க இல்லையா? என்று காவியன் தானா? என நினைத்து விசாரித்தான்.

அவனுக்கு பேரண்ட்ஸ் எல்லாம் இல்லை ஏதோ ஆசிரமத்தில் வளர்ந்திருக்கான். இப்ப தான் வெளியே தனியா வீடு எடுத்து தங்கியதாக சொன்னான் என்று கண்ணன் கூற, காவியன் தான் என்று நிதினுக்கு உறுதியானது.

சங்கீதன் அங்கே வர, எல்லாரும் அவனை பார்த்தனர். ஆரா கொந்தளித்து, அவன் என்னடா பேசுறான்? எதுக்கு அப்படி கேட்டான்? என்று சங்கீதன் சட்டையை பிடிக்க, இவர்களது கோபத்தை பார்த்த நிதின் மேலும் ரணாவை ஆராய்ந்தான்.

ப்ரெண்டுக்காக இப்படி கோபப்பட மாட்டானுக. அதை விட நம்ம குட்டிம்மா இப்படி யாருக்காவும் அழ மாட்டாளே? என்று அவன் முகத்தில் புருவ முடிச்சுகள் விழுந்தது.

நீங்க நினைப்பது சரி என்பது போல், அவன் அவனாகவே பேசுவான். வா..வீட்டுக்கு போகலாம் என்று நிதினை பார்த்துக் கொண்டே அழைத்தான் சங்கீதன்.

அவன் எப்படி இப்படி சொல்லலாம்? ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுதாள் ரணா.

விடு ரணா. வேற பசங்களா இல்லை என்று கண்ணன் உலற, ரணாவை விலக்கி அவளை உறுத்து பார்த்தான் நிதின்.

அவன் பார்வையில் பயந்த ரணா அழுது கொண்டே காரில் ஏறினாள். பிரணா..என்று கோபமாக நிதின் அழைக்க, காரை திறந்தவள் கையை பிடித்து, நீ உள்ளே இரு என்று நண்பர்களையும் ஏறச் சொன்னான் சங்கீதன்.

நிதினிடம், காவியனுக்கு ரணாவின் காதல் தெரியாது. அவன் ப்ரெண்டா தான் பழகினான் என்று சங்கீதன் சொல்ல நிதின் அவனை அறைந்தான்.

அண்ணா, அனைவரும் சத்தமிட ரணாவும் எட்டிப் பார்த்தாள்.

உங்க கோபமும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னும் புரியுது. நீங்க லேட். ரணா சின்சியரா இருக்கா என்று சொல்லி விட்டு காரில் ஏறினான் சங்கீதன்.

என்னாச்சுடா? உன்னை எதுக்கு அண்ணா அடிச்சாங்க? கண்ணன் கேட்க, காவியனை திட்டினாரா அவனுக்கு ஆதரவா பேசினேன். அதான் அடிச்சிட்டார்.

அப்படின்னா..ரணா காதல் அண்ணாவுக்கு தெரிஞ்சு போச்சா? லட்சணா கேட்க, சங்கீதன் அவளை பார்க்க, ஆரா தோளில் சாய்ந்திருந்த ரணாவும் அவனை பார்த்தாள்.

தெரிஞ்ச மாதிரி தான் தெரியுது என்றான் சங்கீதன்.

ராகவ் காரை நிறுத்து, நான் மாமாவை பார்த்துட்டு வாரேன்.

நீ எதுவும் பேச வேண்டாம். உன் அண்ணாவிடம் சொல்ல மாட்டார் என்று சொல்ல, அதை எப்படி உறுதியா சொல்ற? ஆரா கேட்டாள்.

ஆமா, இங்க அண்ணா பெயர் சரியாகியும் அவர் மறைஞ்சிருக்கார்ன்னா காரணமிருக்கும். அவர் அதற்கான வேலையில் இருப்பார். அதனால் நிதின் அண்ணா கண்டிப்பாக அவரிடம் சொல்ல மாட்டார் என்று ரணாவை பார்க்க, அவள் அழுது கொண்டே மீண்டும் சாய்ந்தாள்.

காவியன் இந்த அளவு கோபப்படுவானா? பார்க்க அம்மாஞ்சி மாதிரி இருக்கான் கண்ணன் சொல்ல, ரணா அவனை முறைத்து பார்த்தாள்.

ஓய், அவன் உன்னை ப்ரெண்டே இல்லன்னு சொல்லிட்டான். இதுல உன்னோட லவ் தெரிஞ்சா இதுக்கு மேல கத்தப் போறான் என்றான் கண்ணன்.எதுக்கு இவ்வளவு கோபப்பட்டான்? யாருக்காவது ஏதாவது தோணுதா? லட்சணா கேட்க, அந்த பொண்ணு மாயா முன்னாடி சீன் போடுறான் கண்ணன் சொல்ல,

எனக்கு அப்படி தெரியல ரணா. அவன் வேண்டுமென்றே சொன்னது போல் இருந்தது.

உனக்கென்ன ரணா? நீ சரின்னா, உன்னை காதலிக்க லயன் கட்டி நிப்பானுக. இவன் யாருமில்லாத அநாதை. இவனுக்கு எப்படி உன் காதல் புரியப் போகுது? அவனை விட்டு தள்ளு கண்ணன் சொல்ல,

நிறுத்துறீங்களா? யாரு என்னன்னு பேசாம சொல்லாதீங்க. அவன் அநாதையா இருந்தாலும் அவனுக்கு ரணா மீது காதல் வந்தா அப்படி பார்த்துப்பான். அவனை போல் யாரும் பார்த்துக்க முடியாது.

உன் அண்ணாவை போல் தான் அவன் ரணா. நான் அவன் வந்த நாளிலிருந்து பார்த்திருக்கேன். எந்த அளவு அமைதியோ அதே அளவு கோபம். அவனோட புத்திசாலித்தனம். அவன் பேச்சு எல்லாமே அதிரதன் அண்ணா போலே இருக்கு. யோசித்து பாரு..

அண்ணா காரணமில்லாமல் எப்படி எதையும் செய்ய மாட்டாரோ? அதே மாதிரி தான் அவனும். உன்னிடம் நடந்து கொண்டதற்கும் காரணம் இருக்கும். சும்மா அவனை டம்ப் பண்ணி பேசுனீங்கன்னா அவ்வளவு தான். காரை நிறுத்து என்று சங்கீதன் கத்த அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

ராகவ் காரை நிறுத்த சங்கீதன் கீழிறங்கி ஓடினான்.

எங்க போறடா? லட்சணா கத்த, அவன் தான் உன்னை கண்டுகொள்ளவே மாட்டேங்கிறான். அவன் போயிட்டான். இப்ப கேக்குறா பாரு? கண்ணன் சொல்ல, வாய மூடுடா.

ஏற்கனவே காவியனை பத்தி அவன் முன்னே ஓவரா பேசுன. இதுக்கு மேல பேசுன பார்த்துக்கோ என்று ரணா சொல்ல, இப்ப வீட்டுக்கு போகலாமா? இல்லை சங்கீதன் பின் போகணுமா? ராகவ் கேட்க, வீட்டுக்கு போ என்றாள் ரணா.

நிதின் கோபமாக அதிரதனை பார்க்க வந்து காவியன் சத்தம் கேட்டு அறைக்கு வெளியே நின்றான்.

காவியா? எதுக்கு இப்படி கோபப்படுற? கூட படிக்கிற பொண்ணு தான. கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிருப்பால்ல பாட்டி கேட்டார்.

ஆமாடா, ரொம்ப கத்திட்ட. அந்த பொண்ணுக்கு கஷ்டமா இருந்திருக்கும் மிதுன் சொல்ல, ஆமா, எதுக்கு சத்தம் போட்ட? சொல்லு எழிலன் கேட்டான்.

எழிலாவா? அவன் இவனுடன் என்ன செய்கிறான்?

நான் நல்லதுக்கு தான் செய்தேன். நான் காலேஜூக்கு போய் புரிய வச்சுப்பேன் என்றான்.

என்னால் தான் அந்த பொண்ணை கத்துனியா? மாயா கேட்க, இல்ல..உன்னால என்னோட ப்ரெண்டிடம் எதுக்கு நான் கத்தப் போறேன்? அதான் முழுசா போயிட்டேல்ல என்றான் காவியன். மாயா அமைதியானாள்.

அண்ணா, வெண்பா அழைக்க, ஏன் உனக்கு ஏதும் கேட்கணுமா? அவன் கேட்க, இல்லண்ணா..ரொம்ப பசிக்குது. நான் சாப்பிடாம வந்துட்டேனா? என்று அவள் காவியனுக்கு வைத்திருந்த பழத்தை பார்த்தாள். அனைவரும் அவளை முறைத்தனர்.

ஜீவா கேட்பான்னு நினைச்சேன். ஆனால் நீ கேக்குற வெண்பா? ஆச்சர்யமா இருக்கு.

எடுத்துக்கோ..என்று காவியன் சொல்ல, பாட்டி அவளை முறைத்தார். அதை பார்த்து, வேணாம்..வேணாம்..அது உனக்கு தான் என்று நகர்ந்தாள்.

எதுக்கு பாட்டி முறைக்கிறீங்க? அவ தான் சாப்பிடட்டுமே? என்றான்.

பட்டென கதவை திறந்து உள்ளே வந்த நிதின் கோபமாக காவியனை முறைத்துக் கொண்டு, எல்லாரும் கொஞ்ச நேரம் வெளிய இருங்க என்று சொல்ல, சார், பிரச்சனையா? ஜீவா கேட்டான்.

வெளிய இருங்கன்னு சொன்னேன் என்றான்.

நிது? எழிலன் அழைக்க, அவன் பக்கம் திரும்பிய நிதின், நீ இங்க என்ன செய்ற? என்று அவனை நெருங்கி வந்தான்.

நான் காவியனை பார்க்க வந்தேன் என்று கம்ம பேசினான்.

காவியனுடன் உனக்கு அதிக பழக்கம் இருக்காதே? கேட்டான்.

நான் என் சீனியரிடம் காவியனை பற்றி அதிகம் பேசி இருக்கேன். அதனால் அவனுக்கு அடிபட்டதால் பார்க்க வந்திருக்காங்க என்று மிதுன் சொல்ல, அனைவரும் அவனை பார்த்தனர்.

என்னடா ஆச்சு? சுஜி கேட்க, அவளை முறைத்த நிதின் மனதினுள் எல்லாரும் இவனை தாங்குவது போல் தெரியுதே? என்று நினைத்தவாறு, நான் அவனிடம் தனியா பேசணும் என்றான்.

அனைவரும் செல்ல, எழிலன் கையை பிடித்து, நீ இப்பவே கிளம்பணும் என்றான் நிதின்.

கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேனே?

ரதன் சொன்னான். வினு இங்க தான் இருக்கா?

தெரியும். பார்த்தேன். உங்க ப்ரெண்டுக்கு மறைஞ்சு நிக்க கூட தெரியலை. நல்லா மறைஞ்சு நிக்க கத்து தாங்க என்று காவியனிடம் வந்து, உடம்ப பார்த்துக்கோ என்று அவனை பார்த்துக் கொண்டே சென்றான் ஜீவா உதவியுடன் எழிலன்.

அறைக்கதவை தாழிட்டான் நிதின்.

உனக்கு பிரணவியை யார்ன்னு தெரியுமா? நிதின் கேட்க, நல்லா தெரியும் சார் என்றான் காவியன்.

அவளை உனக்கு தெரியுமென்று நீ எங்களிடம் சொல்லவேயில்லை.

அவள் என்னோட ப்ரெண்டுன்னா எல்லாரிடமும் சொல்லணுமா சார்?

யாரோ ஒரு பொண்ணா இருந்தா அது எங்களுக்கு தேவையில்லை. அவள் ரதனோட செல்லத் தங்கை.

சோ..?

என்னடா சோ? நீ என்ன செய்ய நினைக்கிற?

நான் என்ன நினைக்கிறேன். ஒன்றுமில்லையே?

கோபமாக அவனிடம் வந்த நிதின், ரதன் உன் மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கான். அவனுக்கு மட்டும் விசயம் தெரிஞ்சது உன்னை கொல்லாமல் விட மாட்டான்.

என்ன சொல்றீங்க? சார் நம்பிக்கையை இழக்கும் அளவு நான் என்ன செய்கிறேன்?

ரணாவோட ப்ரெண்டா இருப்பது குத்தமா? நான் வேண்டுமானால் இப்பொழுதே சாரிடம் ரணா என்னோட ப்ரெண்டு என்றும் ரணாவிடம் உன் அண்ணனை எனக்கு நன்றாக தெரியும். அவர் என் அக்காவை பணத்தை காரணமாக வைத்து அவருக்கு வேலைக்காரியா கான்ட்ராக்ட் போட்டிருக்காருன்னு சொல்லவா? எனக்கு பிரச்சனையில்லை.  ஆனால் ரணா அவள் அண்ணாவை எவ்வளவு பெருமிதத்தோட பார்க்கிறாள் தெரியுமா? என இருவரும் சந்தித்த நாளை பற்றி கூறினான். நிதின் அமைதியானான்.

பின், “நீ ப்ரெண்டா மட்டும் தான நினைக்கிற?”

அப்படி தான சொன்னேன்.

அவனருகே நாற்காலியை இழுத்து போட்டு, நீ ரதனுக்கு எதுக்காக உதவின?

ரணாவோட ப்ரெண்டானதே அவங்க குடும்பத்துக்காக தான். என்ன தான் வசதிகள் செய்யலைன்னாலும் இருக்க இடமாவது கொடுத்தாங்களே? அதுவே பெரிய விசயம் தான். அவ பேசுற பேச்சுக்கு எவனிடமாவது வம்பை இழுத்துக்கிட்டு தான் இருக்கா என்ற காவியன், “எதுக்கு திடீர்ன்னு ப்ரெண்டா தான நினைக்கிறன்னு கேட்குறீங்க?”

ஏன்னா அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு. அவள் உன்னை காதலிக்கிறாள் என்றான் நிதின்.

என் மீது ரணாவுக்கு காதலா? என்று காவியன் கேட்டுக் கொண்டே அவளுடனான எண்ணங்களை மனதினுள் ஓட்டினான்.

நான் இனி விலகி இருக்கிறேன் என்றான்.

இப்ப நீ விலகி இருந்தால் நான் தான் காரணமென்று அவளுக்கு தெரிந்து விடும். உனக்கு அவங்க குடும்பத்தை பற்றி தெரியும்ன்னு நினைக்கிறேன். உனக்கு உண்மையாகவே ரணா மீது விருப்பம் இல்லையா? வருத்தமாக கேட்டான்.

சார், எனக்கு மாயாவை தான் பிடிக்கும். சிறுவயதிலிருந்து காதல். ஆனால் அவள் விருப்பமில்லைன்னு நேரடியா சொல்லிட்டா. என்னால முழுசா அவளிடமிருந்தே வெளிய வர முடியலை. நான் எப்படி சார் ரணாவை காதலிப்பது?

அதுவும் இல்லாமல் என்னோட சிறுவயதிலிருந்தே இந்த நிலையம் தான் எனக்கு எல்லாமே. அவங்க எனக்கு முதலாளி. என் வாழ்க்கையில் அவங்க இல்லாமல் இந்த அளவு நான் வந்திருக்க முடியாது. ரணா மீது இதுவரை நட்பை தாண்டி எந்த உணர்வும் வந்ததில்லை. வந்தால் கூட என்னால சொல்லவும் முடியாது. ஏத்துக்கவும் முடியாது என்றான்.

இதே நிலையில் வளர்ந்தவன் தானே நிதினும். நிதின் கண்ணீருடன் காவியனை அணைத்தான்.

சார், என்னாச்சு?

நானும் உன் நிலையில் தான் இருந்தேன். ஆத்வியை காதலித்தேன். ஆனால் சொல்ல தைரியம் வரலை. ஆனால் இப்ப பெற்றோர் இருக்காங்கன்னு நான் அவளை கல்யாணம் பண்ண சம்மதிக்கலை. அவளுக்கு திருமணம் என்றவுடன் தான் என்னால என் காதலை விட்டு கொடுக்க மனமில்லை. இதில் எனக்கும் திருமணம் முடிவு செஞ்சாங்க. ஆத்வியும் என் திருமணப்பேச்சால் கஷ்டப்பட்டாள். என்னால இதற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்று தான் அவளை கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். அவங்க உடனே சரின்னு சொல்லீட்டாங்க. அவங்களுக்கு என்னை பற்றி தெரியும். ஒத்துக்கிட்டாங்க என்று காவியனை பார்த்து,

இப்பொழுதைக்கு பிரணாவிடம் இதை பற்றி பேசாத. உனக்கு காதல் வந்தால் அவளை விட்டு கொடுக்காத. பிரணா கண்டிப்பா அவள் முடிவிலிருந்து பின் வாங்கவே மாட்டா. நீ எத்தனை முறை வேண்டாம்ன்னு சொன்னாலும் கண்டிப்பா கேட்க மாட்டா. ரொம்ப ஹார்சா நடந்துக்காத என்றான்.

சார், என்ன பேசுறீங்க?

என்னால ரணாவை..

எதுவும் சொல்லாத. நடப்பது சரியா நடக்கும். அது உங்கள் விதிப்படி அமையட்டும் என்றான் நிதின். காவியன் அமைதியாக அவனை பார்த்தான்.

எழிலன் அங்கிருந்து கிளம்பினான். அதிரதன் வெளியே இருந்தவர்களை பார்த்து, என்ன வெளிய நிக்கிறீங்க? கேட்க, நிது காவியனுடன் தனியா பேசணும்ன்னு சொன்னான் என்று சுஜி சொல்ல,

அவன் இங்கே என்ன செய்றான்? டேய் நிது, வெளிய வா என்று அதிரதன் சத்தமிட, நிதின் கதவை திறந்தான்.

உன்னை என்ன செய்ய சொன்னேன்? நீ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க? என்று அதிரதன் நிதினிடம் கேட்டுக் கொண்டே காவியனை பார்த்தான். அவன் முகமே சரியில்லை. ரணா என்னை காதலிக்கிறாளா? யோசனையுடன் அதிரதனை பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன அப்படி பாக்குற? அதிரதன் அவனிடம் கேட்டான்.

நாம பேசணுமே? காவியன் சொல்ல, நிதின் வெளியே நகர்ந்தான். சார் உங்களிடமும் பேசணும் என்றான் காவியன்.

என்ன சொல்லப் போகிறான்? ரணாவை பற்றி பேசப் போகிறானோ? நிதின் சிந்திக்க, மீண்டும் கதவடைத்து அதிரதனும் நிதினும் அவனருகே வந்து அமர்ந்தனர்.

சார், நீங்க அக்காவும் சாரும் படிக்கும் போது புக் ஷாப்ல வச்சு எடுத்த வீடியோவை காட்டுங்களேன் காவியன் கேட்க, என்ன திடீர்ன்னு அதை கேக்குற? உனக்கு எப்படி தெரியும்? நிதின் கேட்க,

நான் தான் சொன்னேன் என்று அதிரதன் அவன் போனில் எடுத்து கொடுக்க, காவியன் அதனை பார்த்து விட்டு,

சார், நல்லா பாருங்க. அக்காவை காப்பாற்ற நினைத்தவனாக தான் இவன் இருக்கணும் என்று பின்பக்கமாக நின்ற ஒருவனை காட்டிய காவியன், உங்க எல்லாருக்கும் தெரிஞ்சவனாக தான் இருக்கணும். அவனை யாருன்னு உங்களால் யூகிக்க முடியுதா?

யாருன்னு தெரியலையே? நிதின் ஆழ்ந்து யோசித்தான்.

அக்காவோட ப்ரெண்டா இருந்தா நேராகவே உதவி இருப்பாங்க. சார், விஷ்வா சார் சொன்னது போல் இவர் அக்கா பின் சுற்றியவராக இருப்பாரோன்னு தோணுது. நிதின் சார், அக்கா பின்னே சுற்றியவர்கள் யார்ன்னு உங்களுக்கு தெரியும்ல..

எட்டு, பத்து பேர் இருப்பானுகளே?

அவங்க எல்லாரும் இப்ப என்ன செய்றாங்கன்னு விசாரிங்க. இவர் சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார் என்றால் கண்டிப்பாக நம்மை கொல்ல நினைப்பவர்கள் யாருன்னு இவருக்கு தெரியும்.

நீங்க எல்லாரும் பள்ளியில் ஒன்றாக படிச்சிருக்கீங்க? என்னை எதுக்கு கொல்ல பார்க்கணும்? எனக்கும் உங்கள் யாருக்கும் சம்பந்தமில்லை. அக்காவை கூட இரு வருடங்களுக்கு முன் தான் பார்த்தேன். அதான் எனக்கு புரியவேயில்லை என்றான் காவியன்.

ஆமா காவியா, நீ சொல்றது போல் இவனை கண்டிபிடித்தால் போதும் என்றான் நிதின்.

நீ இந்த புட்டேஜை மட்டும் தான் பார்த்தாயா? இல்லை வேறேதுவும் வச்சிருக்கிறியா? அதிரதன் கேட்க, இருக்கு ரதா இந்த மாதிரி இல்லை. பிரச்சனை இல்லாத வீடியோ. சாதாரணமாக தான் இருக்கு என்றான்.

சார், இப்ப வச்சிருக்கீங்களா? காவியன் கேட்க, இருக்கு.

அதை பார்வர்டு பண்ணு..என்று அவனிடமிருந்த பன்னிரண்டு வீடியோவை பங்கிட்டு வாங்கி பார்த்தனர். அதில் பத்து வீடியோ தினசரி நடப்புகளாக இருந்தது. காவியன் அதில் ஒன்றை பார்த்து சிரித்தான்.

என்ன? இருவரும் கேட்க, அவன் அந்த வீடியோவை காட்ட, எழிலனும் நளனும் சின்ன பசங்களா இருந்தங்க. இருவரும் அதிரதனின் பின்னே செல்ல, அவன் காதை பிடித்த நேத்ரா, ஏன்டா உங்களுக்கு கிளாஸ் இருக்கும்ல என்று அவர்களை திட்ட, அக்கா என்று அதிரதனை பார்த்து,

எப்படிக்கா புத்தகத்தை பார்த்துக் கொண்டே சரியா போறாங்க என்று நளன் கேட்க, அதுக்கெல்லாம் நாலேஜ் வேணும். உங்களுக்கு இருக்காது போங்க என்று அனுப்பினாள். அவர்களும் சென்று விட்டனர்.

இதுல என்னடா இருக்கு? அதிரதன் கேட்க, வெயிட் பண்ணுங்க என்று அந்த வீடியோவை ஓட விட்டு காட்டினான். பள்ளி விட்டு கிளம்பும் சமயம் தோளில் பையை மாட்டிக் கொண்டு எழிலனும் நளனும் வந்து கொண்டிருந்தனர். அதிரதனை பார்த்து அவனை பின் தொடர்ந்தனர்.

அப்பொழுது எழிலன் திடீரென நின்று பையிலிருந்து புத்தகம் ஒன்றை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டே அதிரதனை போல் நடக்க, நளனோ வேண்டாம்டா மண்டை உடைய போகுது என்று சொல்ல..

அதிக்கு மட்டும் கீழ விழலைல்ல. நானும் விழ மாட்டேன் என்று அழகாக கூறிக் கொண்டே நடந்து அதிரதனை நிற்பதை கவனிக்காமல் அவனை இடித்து கீழே விழுந்தான் எழிலன்.

ஏய், பார்த்து வர முடியாதா? கணீர் குரலில் அதிரதன் மிரட்டுவதை போல் சொல்ல, காலை வேண்டுமென்றே கல்லில் இடித்துக் கொண்டு எழிலன் ஓரக்கண்ணால் அதிரதனை பார்த்து, ஆ…வலிக்குது என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான்.

நான் சொன்னேன்ல. இப்ப விழுந்துட்ட பாரு என்று நளன் அவனை துக்க அருகே வந்தவன் கையை தட்டி விட்டு, ஆ..இவன் தான் தள்ளி விட்டான் என்று அதிரதனை கையை காட்டினான் எழிலன்.

அவன் தான் என்னை தூக்கி விடணும் என்று அழுகையை அதிகப்படுத்த பக்கமிருந்த மாணவ, மாணவிகள் அதிரதனை பார்த்தனர்.

அழுறத நிறுத்து என்று சத்தமிட்ட அதிரதன், எழிலனை தூக்கி செல்ல விசயம் அ றிந்து நேத்ராவும் அங்கே வந்தாள். எழிலன் நளனிடம் கண்ணை காட்ட அக்கா உங்கள மேம் கூப்பிட்டதா மகி அண்ணா சொன்னாங்க என்றான் நளன்.

மேம்மை, நான் அப்புறம் பார்த்துக்கிறேன் என்று செல்ல இருந்த நேத்ராவிடம், நீங்க ரெக்கார்டுல மிஸ்டேக் செய்ததாதா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதி அண்ணா எழிலை பார்த்துப்பாங்க. நீங்க போங்கக்கா..

அவன் எப்படி பார்த்துப்பான்?

அக்கா, உங்க ரெக்கார்ட்டு..

ஆமா, அவன் பார்த்துப்பான். அப்படியே விட மாட்டான் என்று அப்படியே வார்த்தைகள் கட் ஆகி..வீடியோ தள்ளிச் சென்றது.

அதிரதன் புன்னகையுடன், என்ன கேடித்தனம் செய்திருக்கான் என்று சொல்ல, இடையில மிஸ் ஆகுது பார்த்தீங்களா? என்று காவியன் கேட்க,

ஆமா, அப்ப யாரோ இந்த புட்டேஜ் வீடியோவை வாங்கி இருக்காங்க நிதின் சொல்ல, சார் இதில் மட்டுமல்ல, அவங்க உங்களை கொல்ல நினைத்ததிலிருந்து எல்லா வீடியோவையும் பாருங்க. உங்கள் அனைவரையும் பள்ளி கடைசி வருடம் தான் அட்டாக் பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க. அதே போல..அக்காவை காப்பாற்ற நினைத்தவரும் உள்ள தான் இருக்கார்.

பள்ளியில் மட்டுமல்ல கல்லூரி வீடியோவை பார்க்கணும் என்றான்.

அத்தனையையும் எப்படி பாக்குறது?

சும்மா பாருங்க. கண்டிப்பா ஏதாவது சிக்கும் என்றான் காவியன்.

சரியா சொன்ன. முதல்ல வினு பின் சுற்றியவர்களை பற்றி விசாரிக்கணும் என்றான் அதிரதன்.

நாளைக்கே சொல்லீடுறேன். பார்க்கலாம் என்ற நிதின் ரதா ஸ்டேசனில் வைத்து அவனை அவனே துப்பாக்கியால் சுட்டு எல்லா போலீஸ் முன்னும் செத்துட்டான்.

என்னடா சொல்ற? இந்த விசயம் நியூஸ் வரை போயிருச்சு. போலீஸ் இதுல சீரியசாகிட்டாங்க. காவியனை பார்க்க வருவாங்க என்றான் நிதின்.

ஓ..செட், ஏதாவது சொல்லி சமாளிங்க என்று நிதின் சொல்ல, என்னை கொல்ல வந்து செய்ததாக கேஸை திருப்பலாம்.

சார், உங்களுக்கு செக்யீரிட்டின்னு யாராவது கவனிக்க வந்தால்? என்று காவியன் கேட்டான். என் பர்மிசன் இருந்தா தானே நடக்கும் என்று அதிரதன் சொல்ல, மூவரும் பார்த்துக் கொண்டனர்.

காவியனிடம் யாரும் வரும் முன் நானே வீடியோ தயார் செய்து அனுப்புகிறேன்.

நீ நேரா பிரஷ்ஷையே அழைக்கலாமே? நிதின் கேட்க, இப்ப யுவிக்காக தான் வந்தோம். யுவியோட மீண்டும் என்னோட வீட்டுக்கு தான் போவோம். அதனால என்னோட வீடியோ போதும். நிது அதை பரவ விட்டுரு.

என்னமும் செய்யுங்க. எனக்கு மண்ட காயுது என்றான் நிதின் காவியனை பார்த்துக் கொண்டே, அப்ப ஐஸ்ல தலை விடு, காயாது நனைஞ்சிடும் என்றான் கேலியாக அதிரதன்.

ரதா, நீ ரொம்ப மாறிட்டடா. வீட்ல தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவாங்க.

சந்தோசமா? என்று விரக்தியுடன் என்னை பற்றிய வதந்திய நம்புறாங்க. நான் சந்தோசப்படணுமா?

அது போதாத நேரம்ன்னு நினைச்சுக்கோங்க. உங்களுக்கு குடும்பம் இருக்காங்க. ஹாப்பியா இருங்க. இல்லாத எங்க போல எதுக்கு தனியா இருக்கணும் காவியன் கேட்க,

இதுக்கு மேல் நின்றால் இவன் நம்ம பிரணா வைத்து பேச ஆரம்பித்து விடுவான் என்று எண்ணிய நிதின், ரதா பார்த்துக்கோ. நான் கிளம்புகிறேன் என்று காவியனை பார்த்து, நான் சொன்னதை கொஞ்சம் யோசி என்று நிதின் கதவை திறந்து வெளியே வர, சங்கீதன் வியர்த்து விறுவிறுத்து வந்து நின்றான்.

உள்ளேயிருந்த காவியனும் அதிரதனும் அவனை பார்க்க நிதின் அவனை பார்த்து, இன்னும் நீ போகலையா? என கேட்டான்.

அதிரதன் வெளியே வந்து, இங்க என்ன செய்ற? என்று கேட்க, என்னோட ப்ரெண்டை பார்க்க வந்தேன் என்று நிதினை முறைத்து விட்டு காவியன் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

காவியனோட ப்ரெண்டா இவன்?

ம்ம்..என்று அக்கதவை பார்த்துக் கொண்டே நிதின் சென்றான்.

சங்கீதனை பார்த்து அவன் பின் ஓடி வந்த லட்சணா அங்கே வந்து அதிரதனை பார்த்து, அண்ணாவா? என்று மூச்சிறைத்துக் கொண்டு சிந்தனையுடன் அவனருகே வந்து அவனை உற்று பார்த்தாள்.

என்னம்மா? யாரும்மா நீ? இப்படி உற்று பார்க்கிறாய்? தள்ளி நில்லும்மா என்ற அதிரதன், என்ன இப்படி மூச்சு வாங்குது? தண்ணி குடிம்மா என்று சொன்னான். அவள் குடித்து விட்டு, அதிரதனை பார்த்தாள். ரணாவின் பள்ளித்தோழியை கூட அவனுக்கு தெரியவில்லை.

சங்கீதன், காவியனை பார்க்கணும் என்றாள்.

உள்ள தான் இருக்கானுக? கதவை பூட்டிட்டு என்னடா செய்றீங்க? அதிரதன் சத்தமிட, சங்கீதன் கதவை திறந்தான்.

உள்ளே சென்ற சங்கீதன் காவியனிடம், நிதின் சார் ஏதும் சொன்னாரா? திட்டினாரா? கேட்க, காவியன் அவனை முறைத்தவாறே சாய்ந்திருந்தான்.

சொல்லு காவியா? கோபமாக சங்கீதன் கேட்க, ரணா பத்தி பைத்தியக்காரத்தனமா ஏதோ சொன்னாரு என்றான் காவியன்.

பைத்தியக்காரத்தனமாவா? காதல் செய்தால் பைத்தியமா காவியா? சீறினான்.

பார்த்து ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள என்ன காதல் வேண்டி இருக்கு?

உனக்கு பிடிக்கலைன்னா விட்டுரு. அதை விட்டு ரணா காதலை பத்தி பேசாத.

பேசாம எப்படி இருக்குறது? அவள் நம்மோட ப்ரெண்டு. அவள் காதலிச்சா ஏத்துக்கணுமா? அவளோட காதலுக்காக என்னோட ப்ரெண்ஷிப்பை விட முடியாது காவியன் கோபமாக சொன்னான்.

சரி. நீ அவளை ப்ரெண்டாகவே பார்த்துக்கோ. ஆனால் கொஞ்ச நாள் அவளிடம் அவள் காதலை பற்றி பேசாத. உனக்கு தெரியாதது போல் காட்டிக் கொள்.

என்னை சொல்றியே? நீ என்ன செய்ற? லட்சணா உன் பின் தானே சுற்றிக் கொண்டிருக்கா. ஏதாவது பதில் சொல்லலாமே? முடியாதுன்னாது சொல்லு. நானும் ரணாவிடம் சொல்லி புரிய வைக்கணும்.

லட்சணா வேற ரணா வேற. ரணாவை பிடிவாதக்காரியா தான பார்த்துருக்க. வீட்ல கடைசி புள்ளை தான் எல்லாருக்கும் செல்லம். அவள் வீட்டில் எல்லாவற்றிலும் அதி சார் தான். பின் நிதின் சார். அதி சாருக்கு மட்டும் தான் ரணா செல்லம். மத்தபடி அம்மா, அப்பா எல்லாரும் அவளை பார்த்துக் கொண்டாலும் அவள் எதிர்பார்க்கும்படி ஒரு விசயம் கூட செய்யமாட்டாங்க. அதனால அவள் ப்ரெண்ஷிடம் மிங்கிள் ஆவா. நீயே பார்த்திருப்ப..எப்ப பாரு அண்ணா தான் அவள் வாயில் வரும். அவள் அம்மா பற்றி பேசினாலும் அவங்க கட்டுப்பாட்டை தான் சொல்வாள்.

புரியுது. அவளும் கஷ்டப்படுறா. நீ முதல்ல லட்சு பத்தி சொல்லு. உனக்கு அவளை பிடிக்காதா? காவியன் கேட்க, சங்கீதன் அமைதியானான்.

சொல்லுடா?

இப்ப நான் காதலிக்கும் நிலையில் இல்லை. நீ சட்டப்படிப்பை எடுக்க காரணம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு காரணம் இருக்கு. என்னோட அம்மா..என்று கண்கலங்கினான்.

காவியன் அவனிடம் அழுத்தமான பார்வையை வீசினான்.

ஆமா காவியா, அம்மா இப்ப மனநல காப்பகத்தில் இருக்காங்க. ஆனால் நாங்க அம்மாவை மறைச்சி வச்சு தான் பார்த்துக்கிறோம். ஊர்உலகத்துக்கு அம்மா செத்து போனதா தான் காட்டி இருக்கோம் என்றான் அழுதவாறு.

என்னடா சொல்ற?

ஆமா காவியா, பயங்கரமான கொலை ஒன்றை பார்த்து பயந்து கத்தி ரௌடிகளிடம் மாட்டி, அவங்கள கொல்ல இருந்தவனுக அவங்கள பார்த்து..என்று அழுதான். அவங்கள மூட்டையா கட்டி வீட்ல போட்டுட்டு போயிருட்டானுக. நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். இரு வருடமாகிறது. அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு எங்களை கூட பக்கம் விடுவதில்லை. அங்கே தனி அறையில் ஒரு வயதான பாட்டியுடன் தான் இருக்காங்க. என்னை சுத்தமா அவங்களுக்கு இப்ப கூட நினைவில்லை. ஞாயிறன்று நானும் அப்பாவும் அங்கே தான் இருப்போம். என்ன வேலையா இருந்தாலும் அப்பா போக மாட்டார். அப்பா ரொம்ப உடைஞ்சு போயிட்டார். வீட்டுக்கே வந்து போட்டுட்டு போயிருக்காங்க. யாருன்னு தெரிய வாய்ப்பிருக்குன்னு அப்பா யாரா இருக்கும்ன்னு ரொம்ப அலைஞ்சி திரிஞ்சு தேடினாங்க.

யாருன்னே தெரியலை? யாரை பார்த்தாங்கன்னு தெரியலை? அம்மாவின் கத்தல் இன்னும் எனக்கு கேட்குது. சிகிச்சையை வீட்டில் ரகசியமாகவே பார்த்தோம். அம்மா சொல்வது, அவனையும் அவளையும் கொன்னுட்டாங்கன்னு கதறுவாங்க. பக்கத்துல விடவேயில்லை. பக்கம் சென்றால் வீடே அலறுவது போல கத்துவாங்க. வீட்ல அன்று இரவு மட்டும் தான் இருந்தாங்க. அப்பா அம்மாவை சேர்த்த பின் தான் விபத்துன்னு எல்லா ஆதாரத்தையும் பொய்யா தயார் செய்து எல்லாமே நாங்களே முடித்தது போல் வீட்டையும் மாற்றி அனைவருக்கும் தெரிய செய்தோம். ஆனால் அம்மா.. கொஞ்சமும் மாறவில்லை. ரொம்ப கஷ்டமா இருக்குடா. இந்த நிலையில் எப்படி லட்சுவை காதலிப்பதை சொல்ல முடியும் என்று அழுதான்.

காவியன் எழ முயல, அவனிடம் வந்து அமர்ந்த சங்கீதன் அவனை அணைத்து அழுதான். மனதிலுள்ள பாரம் இறங்கியதாக உணர்ந்தான் சங்கீதன். அந்நேரம் தான் கதவை தட்டினான் அதிரதன்.

 

Advertisement