Advertisement

அத்தியாயம் 22

வெண்பா, அருணா, மயூரி ஓடி வந்தனர். அக்காவும் அண்ணாக்கள் யாரும் வரலையா? என்று எழிலனை பார்த்து கேட்க, அவன் நளனை பார்த்தான்.

அவன் வந்துட்டானா? எழிலன் கேட்க, எப்படிடா சரியா கண்டுபிடிச்ச? என்று வெண்பா எழிலன் கையிலே அடிக்க, பாட்டி சத்தம் வெளியே கேட்டது.

டேய், போ…பாரு என்று எழிலன் நளனிடம் கூற, இப்ப என்ன தான்ம்மா பிரச்சனை? என்று எழிலன் காரிலிருந்து வெளியே வர, அவனுக்கு பேலன்ஸ் செய்ய தான் யாராவது வேண்டுமே? அவன் தடுமாற்றத்தை பார்த்த அதிரதன் கீழிறங்கி வந்து எழிலன் கையை அவன் தோளில் போட, எழிலா..யாருடா இது?

சார், முகமூடி போட்டிருக்கிறவங்கல்ல நாங்க உள்ள விட மாட்டோம் என்று வெண்பா மறித்து நின்றாள்.

வழிய விடும்மா அதிரதன் சொல்ல, டிடெக்டிவ் சார்..இங்க வாங்க கொள்ளை அடிக்க ஒருவன் வந்துருக்கான் என்று வெண்பா கத்தினாள். அதிரதன் கண்டுகொள்ளாமல் உள்ளே வர, மீண்டும் முன் வந்து நின்றாள் வெண்பா.

வெண்பா வழியவிடு என்றான் எழிலன்.

ஏய், கையை எடுடா என்று அதிரதன் கையை எடுத்து அவள் தோளில் போட்டான். எழிலன் அதிர்ந்து அப்படியே நின்றான்.

ஏய், வெளிய போ. இல்ல கத்தி எடுத்து சொருகிடுவேன் என்றாள் வெண்பா.

வெண்பா, என்னடி பண்ற? அருணா அவளிடம் வந்தாள்.

அரு, அந்த டிடெக்டிவ் சார் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறார். இங்க வந்து ஏதாவது உருப்படியா செய்றாரா? இவருக்கெல்லாம் எதுக்கு சம்பளம்? என்று விக்ரமை திட்ட, ஏய் அமைதியா இரு என்றான் எழிலன். அவள் மேலும் அதிரனை பார்த்து, எப்படி இப்படி வளருறீங்க? என்னவொரு ஹைட்? அப்பாடா..என்றவள்

அச்சோ, எழிலா வந்த விசயத்தையே மறந்துட்டேன் என்று அவனை பார்த்தாள்.

இப்ப தான் உனக்கு நினைவிற்கே வருதா? நீ பேசுறதுல நான் டயர்டாகுறேன்டி.. என்று அருணா சொல்லி விட்டு அதிரதனை பார்த்து, சார் யார் நீங்க? கேட்டாள்.

நானா? என்று உள்ளே சென்றது அவன் மாஸ்க் கண்ணாடியை கழற்ற, ஆவென அதிரதனை பார்த்த வெண்பா, வாட் எ மேன்? என்றாள்.

என்ன சொன்ன? எழிலன் அவளை முறைத்தான்.

எழிலா, இவரு சைனாக்காரன் அண்ணா தான. இவரு காணோம்ன்னு நியூஸ் வருது. இவரு இங்க வந்திருக்காரா? என்று எழிலன் மீது சாய, ஏய்..என்னடி பண்ற? என்று அருணா எழிலனை பிடித்து, சாரி அண்ணா என்றாள்.

என்னது சைன்னாக்காரனா? அதிரதன் கேட்க, அவ உங்க தம்பி அதீபனை தான் சொல்றா? எழிலன் சொல்ல, அவன் சிரித்தான். எழிலன் புன்னகையுடன் காதலுடன் வெண்பாவை பார்த்தான். அதிரதன் அதையும் கவனித்தான்.

அழும் சத்தம் கேட்டது. நளன் தன்வந்த் கழுத்தை பிடித்துக் கொண்டிருந்தான். அங்கே வந்தவர்கள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

நளா? என்ன பண்ற? எழிலன் சத்தமிட்டான். பாட்டி கீழே இரத்தத்துடன் அமர்ந்திருந்தார்.

பாட்டி என்று வெண்பா அவரிடம் வர, மயங்கிய மாயாவை தண்ணீரை தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தான் தேவா.

மாயா..என்று அருணா சத்தமிட, வெண்பா அவளையும் பார்த்து,

டேய்..போடா..என்று ஆக்ரோசமாக தன்வந்த்தை பிடித்து தள்ள வந்த வெண்பா முடியை பிடித்தான் அவன்.

விடுடா என்று எல்லாரும் சேர்ந்து அவனை தள்ளினர்.

இங்க என்ன நடக்குது? என்ற சத்தத்தில் அனைவரும் அதிரதனை பார்த்தனர்.

பாட்டி அவனை பார்த்து, தம்பி நீங்க இங்கேயா? வாங்க என்று அழைக்க, நில்லுங்க என்று அவரை நிறுத்திய அதிரதன் இதுக்கு காரணம் யார்? என்று பாட்டி தலையை காட்டி கேட்டான். அனைவரும் தன்வந்த்தை காட்டினார்கள்.

ஏய், நீ தான் அந்த தன்வந்தா? இங்க வா? என்று அவனை அழைக்க, அவன் அங்கேயே நின்று திமிறாக, நீங்களே பயந்து மறைஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க? உங்க வேலைய பார்த்துட்டு போங்க என்றான்.

அதிரதன் சும்மா இருப்பானா? நீ இப்ப என்னருகே வந்து பாட்டியிடம் மன்னிப்பு கேட்டு, நீ தான் மருந்து போடணும் என்றான்.

நான் எதுக்கு பண்ணனும்? திமிறாக கேட்டான்.

விக்ரம் அங்கே வந்து, ரதா இங்க என்ன பண்ற? கேட்டான்.

நான் உன்னை என்ன சொன்னேன்? நீ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க?

சின்னப்பசங்க சண்டை நமக்கெதுக்கு?

என்ன பேசுற? இங்க பாரு என்று பாட்டியையும் மாயாவையும் அதிரதன்  காட்டினான். மாயா எழுந்து ஓரமாக அமர்ந்தாள்.

மாயா, உனக்கு ஒன்றுமில்லையே? ஜெயந்தி, மல்லிகா அக்கா அவளருகே வந்தனர்.

நீங்க பாட்டிக்கு மருந்தை போடுங்க என்று மல்லிகாவிடம் சொல்லி விட்டு, நான் பார்த்துக்கிறேன் என்றான் அதிரதன். அவர்கள் நகர்ந்து சென்றனர். தன்வந்த் அதிரதனை அலட்சியமாக பார்த்தான்.

இங்க வா, நடந்ததை சொல்லு என்று தேவாவை அழைத்து அதிரதன் கேட்டான்.

மாயாவிடம், சாப்பாடு எடுத்து தர சொல்லி தன்வந்த் கேட்டான். ஆனால் அவளுக்கு அதில் விருப்பமில்லை. இவன் தான் எடுத்துக் கொடுத்தான் என்று ஒருவனை காட்டினான் தேவா. ஆனால் சாப்பாட்டை துக்கி எறிந்து விட்டு அவளிடம் சண்டை போட்டான். மீண்டும் எடுத்து தர சொல்லி வற்புறுத்தினான். அவர்கள் சண்டையில் என்று தேவா வெண்பாவை பார்த்தான்.

அவள் மாயாவிடம் வந்தாள். அவள் ஆடை பின்னே கிழிந்து இருந்தது. வெண்பா தன்னுடைய துப்பட்டாவை அவளுக்கு கொடுத்து மறைக்க அதோட விடாமல்..என்று தேவா அதிரதன் பின்னே பார்த்தான். அனைவரும் அவன் பின்னே தான் பார்த்தனர். ஜீவா கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு நின்றான்.

அவனை பார்த்த அதிரதன் சொல்லு என்று தேவாவிடம் சொல்லி விட்டு,  வெண்பாவிடம் மாயாவை உள்ளே அழைத்து செல்ல சொல்லி கண்ணை காட்டினான். மாயா கண்ணீருடன் எழுந்து ஜீவாவை பார்த்தாள். அவள் ஜீவாவை பார்த்ததும், என்ன மாயா? உன்னோட ஹூரோ வந்துட்டானோ? என்று தன்வந்த் பேச கேட்காது சென்றாள் மாயா.

மதிக்கிறாளா பாரு? என்று தன்வந்த் சினந்தான்.

உன்னை எதுக்குடா அவ மதிக்கணும்? விக்ரம் கேட்டான்.

மதிக்கணும். அவள் என்னோட பொறுப்பு.

பார்த்தால் அப்படி தெரியலையே? அவள் தான் உன்னை பார்த்துக் கொள்வாள் எழிலன் கேட்க, தன்வந்த் சினத்துடன் எழிலனை பார்த்தான்.

அமைதியா இருங்க. நீ சொல்லு..என்றான் அதிரதன்.

அவள் ஆடை கிழிந்தவுடன் அவன் அவளருகே நெருங்கி வந்து அவளது தோளில் கை வைத்தான். அதனால் மாயா அவனை அடித்து விட்டாள். ஆனால் இவன் என்று தயங்கி எல்லாரையும் பார்த்தான்.

சொல்றியா? இல்லையா? அதிரதன் சத்தமிட, மாயாவிற்கு முத்தம் கொடுத்துட்டான். அவள் அவனை தள்ளி விட்டு அடித்தாள். அதற்கு அவன் காலை போல் ஜீவாவுடன் சேர்த்து பேசினான். பின் அவளை அடித்தான். மாயா மயங்கி விட்டாள்.

சரி, வா..போகலாம் என்று தன்வந்த் அருகே வந்து, அவளது சட்டை காலரை அதிரதன் இழுத்து செல்ல, கையை எடு..கையை எடு..என்று கத்திக் கொண்டிருந்தான் தன்வந்த்.

அவனை விடுங்க என்று ஜீவா அவனருகே வந்தான். உனக்கு என்ன அவள் பழையபடி வேலைக்காரி ஆகணுமா? ஜீவா கேட்டான்.

ஆமா, எனக்கு அவள் வேலைக்காரி தான் என்று தன்வந்த் கத்தினான். மாயா உள்ளே அழுது கொண்டிருந்தாள்.

மாயாவும், மயூரியும் இனி என்னோட பொறுப்பு. இனி மாயா பக்கமே நீ வரக்கூடாது என்றான் ஜூவா,

சார் சொல்லீட்டாரு. அப்படியே கேளுங்க..என்று ஜீவாவை பார்த்து நக்கலாக தன்வந்த் சொல்ல, எழிலன் முன் வந்து, இனி யாரும் யார் பொறுப்பும் இல்லை. எல்லாருமே சேர்மன் சார் பொறுப்பு தான். அவர் எல்லாரையும் படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்கார்.

யாரு? இதுக படிக்கப் போகுதா? என்று எளக்காரமாக அவன் கேட்க, ஏன் நாங்களெல்லாம் படிக்க மாட்டோமா? என்ற தேவா அவன் நண்பர்களையும் மற்றவர்களும் பார்த்தான். எல்லாரும் தன்வந்த்தை நெருங்க அதிரதன் அவனை விட்டு வேடிக்கை பார்த்தான்.

சான்சே இல்லை என்றான் தன்வந்த்.

எங்களால முடியும்ன்னு காட்டுனா, நீ இங்கிருந்து போயிடணும் என்றான் தேவா.

புள்ள பூச்சியெல்லாம் பேசுது? கிண்டலாக தன்வந்த் பேச, யாருடா புள்ள பூச்சி? யாரும் திறமையில்லாமல் இங்க சும்மா இருக்கலை. நாங்க விட்டு கொடுத்து தான் நீ படிக்கிற? மாயா இனி படிக்க போறா? உனக்கு தெரியுமா? சார் வைக்கும் தேர்வில் பாஸ் ஆகி நாங்களும் பள்ளிக்கு வருவோம் என்றான் தேவா.

பாருடா, பள்ளிக்கு வருவாங்கலாம் என்று அவன் கிண்டலாக கூற, அருணா அவனிடம் வந்து, நீ செய்ய வேண்டியதை காவியனும் அவங்க ப்ரெண்ட்ஸூம் எங்களுக்கு செய்தாங்க. அது தான் இப்ப எங்களுக்கு கை கொடுக்க போகுது.

பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து தினமும் புத்தகம் படிப்போம். காவியன் அண்ணாவும் மத்தவங்களும் அவங்க பழைய புத்தகத்தை தருவாங்க. நேத்ரா அக்கா..ஃப்ரீ டைம்ல எங்களுக்கு நிறைய சொல்லித் தருவாங்க சந்தேகம் தீர்த்து வைப்பாங்க. நீ மாயா உன் புத்தகத்தை எடுக்கக் கூடாதுன்னு மறைச்சு வச்ச. ஆனால் தம்பி, அவள் உனக்கு சரிசமமா படிக்கும் திறமை இருக்கு.தயாரா இரு தேவா சொல்ல, மாயா ஸ்கூல் புத்தகம் படிப்பாளா? ஜீவா கேட்டான்.

ஆமாட, இனியாவது கவனமா படி என்று ஜீவாவிடம் சொல்லி விட்டு, சார் சாப்பிட வர்றீங்களா? ரொம்ப பசிக்குது என்றான் தேவா.

ஜீவாகிட்ட இருந்து உனக்கு ஒட்டிக்கிச்சா..மயூரி கேட்க,

இல்லம்மா..காலையிலும் சாப்பிடலை. அதான் பசிக்குது. அவனை விடுங்க சார். வாங்க போகலாம் என்று தேவா அதிரதனை அழைத்தான்.

இங்க பாரு, ஏற்கனவே நிது எச்சரிக்கை செய்திட்டு போயிருக்கான். உன்னோட படிப்பு மொத்தமும் முடிஞ்சிரும் பார்த்துக்கோ என்று எழிலன் சொல்ல, தன்வந்த் அனைவரையும் முறைத்து விட்டு வெளியேறினான்.

அவனுக்கு என்ன தான் பிரச்சனையாம்? அதிரதன் கேட்டான்.

அவன் என்னமும் செய்துட்டு போறான். நீங்க கிளம்பலையா? எழிலன் கேட்டான்.

போகலை என்று அவனை பார்த்தான் அதிரதன்.

காவியன் அதிரதனை அழைத்து, எனக்கு இப்ப எதுக்கு சாப்பாடு?

உனக்கு யாரு ஆர்டர் கொடுத்தது?

வினு காலையில இருந்தே சாப்பிடலை. அவள முதல்ல சாப்பிட சொல்லு. அப்ப மதியத்துக்கு?

அதான் காலை சாப்பிடும் நேரமே முடிஞ்சு போச்சே. மதிய சாப்பாடு தான். அவள் சாப்பிடட்டும்.

நீங்க இன்னுமா அங்கிருந்து கிளம்பலை? காவியன் கேட்க, எழிலனை பார்த்த அதிரதன் எழுந்து நகன்று சென்று காவியனிடம் பேசினான்.

உனக்கு ஏதாவது வித்தியாசமா இருக்கா? அதிரதன் கேட்க, எதை கேக்குறீங்க? விஷ்வா சொன்ன அனைத்தையும் தான் சொல்றேன்.

இருக்கு சார். கொலைகாரன் ஒருவன் போல தெரியலை. உங்களிடமும் விஷ்வா சாரிடமும் அக்காவை விட்டு விலக சொன்னவன்; நிதின் சாரை அந்த சிறு வயதிலே கொல்ல பாக்குறவனும் வேற வேற. ஆனால் உங்கள அனைவரையும் கனெக்ட் செய்வது அக்கா தான்.

ம்ம்..என்ற அதிரதனிடம் வந்த விக்ரம், ரதா..அவன் உன்னை முன்பிருந்தே டார்கெட் செய்திருக்கான் என்றான்.

யாரு? என்னையா?

ஆமா, பள்ளியில் படிக்கும் போதே..என்று வீடியோவை காட்ட, அதில் நிதினை கொல்ல வந்தவனை அதிரதன் அடித்திருப்பான். ஆனால் வினு அழைத்தது அதிரதனை கொல்ல வந்தவனை. வினு குழப்பாக நிற்பது இவர்களுக்கு தெளிவாக தெரிந்தது. நிதினை கொல்ல வந்தவனை அதிரதன் அடிப்பதை பார்த்து, அவனை கொல்ல வந்தவன் நின்றிருப்பான். நேத்ரா மனரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டு தான் இருந்திருப்பாள். அதனால் நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டோம் என்று நினைத்து விட்டு விட்டாள்.

சார், உங்களையும் கொல்லப் பாத்திருக்காங்கன்னா உங்க அப்பா விரோதிகளாக இருக்குமோ? அப்படின்னா நிதின் சாரை கொல்ல நினைப்பவனுக்கும் அக்காவுக்கும் சம்பந்தம் இல்லை தானே?

அதிரதன் போனை பிடுங்கிய விக்ரம், இருக்கு இவர்களுடன் வினுவை கொல்ல பார்த்திருக்காங்க. ஆனால் யாருக்கும் அது தெரியாது.

என்ன சொல்ற? இருவரும் அதிர்ந்தனர்.

சார், அக்கா ஸ்கூல் படிக்கும் போதேவா கொல்ல பார்த்தாங்க? காவியன் கேட்க,

ஆமா. அதிரதா..நீங்க பள்ளி கடைசிக்கு முந்தைய வருடம் பசங்களுக்கு சுற்றுலா அரேஞ்ச் பண்ண போது நீயும் போகலை வினுவும் போகலை. அன்று இருவரும் ஒரே புக் ஷாப்ல இருந்தீங்க. வினு புத்தகத்தை ஆர்வமுடன் பார்க்கும் போது, அவளை கொல்ல ஒருவன் வந்தான். ஆனால் அவன் வினுவை குத்துவதற்குள் மின்னலாய் ஒருவன் வந்து அவனை கொன்று சென்று விட்டான். நீ அடுத்த ராக்கில் தான் இருந்த வினுவை காப்பாற்றியவன் உன்னை முறைத்துக் கொண்டே தான் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சென்று விட்டான்.

பசங்கள விட்டு வினு, நிதின், உன்னை கண்காணிக்க சொன்னேன்.  அதிரதா..அந்த வீடியோவில் ஒருவனின் பின் பக்கம் வினுவை பார்ப்பது போல் இருக்கு. எனக்கு அவனை பார்த்தாலே சந்தேகமா இருக்கு என்றான் விக்ரம்.

மாயா, என்ன செய்ற? வெண்பா அவள் பின் செல்ல, நேராக தண்ணீர் தொட்டி அருகே சென்ற மாயா தண்ணீரை எடுத்து தலைவழியாக ஊற்றினாள்.

பைத்தியம் பிடிச்சுருச்சாடி வெண்பா சத்தமிட, அவர்கள் பின் வந்த ஜீவா அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றான்.

சார், ஏதும் பிரச்சனையா? மாயாவுக்கா? தன்வந்த்தா? காவியன் கேள்விகளை அடுக்க, தம்பி..இங்க பிரச்சனை இல்லாமல் இருக்காது போல என்ற விக்ரமிடம் யாருக்கும் ஏதுமில்லையே? காவியன் கேட்டான்.

நாம அப்புறம் பேசலாம். இங்க நான் பிரச்சனையை முடிச்சிட்டு வாரேன் என்றான் அதிரதன்.

சார், நீங்களும் சாப்பிட்டிருக்க மாட்டீங்கல்ல.

ஆமா, ஏதோ பல்லாவது விலக்கினேனே! எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ. நான் வாரேன் என்று மத்ததை அப்புறம் பேசிக்கலாம் என்று போனை வைத்தான் அதிரதன்.

உள்ளே மாயாவை இழுத்து சென்ற ஜீவா, உனக்கு என்ன பிரச்சனை? அவனை மறக்க முடியலையா? இல்லை அவன் பேசியதா? கேட்க, அவள் அமைதியாக நின்றாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த மாயாவை நெருங்கிய ஜீவா, பதில் சொல்லு என்றான்.

அவன் என்னை பயன்படுத்துறான்னு யோசிக்கவில்லை. நான் தான் அவனை போய்…என்று ஜீவாவை பார்த்து அவன் கையை பிடித்து, ஜீவா..இனி நீ கிளாசை கவனிக்கணும். அவனுக்கு முன் நீ நிற்கணும் என்றாள்.

ஆமா ஜீவா, அவனையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று வெண்பாவும் பேச, ஜீவா மாயாவை இழுத்து இதழ் பொருத்தி முத்தமிட்டான். மாயாவும் அமைதியாக அவனை தடுக்காமல் இருந்தாள்.

வாயை பிளந்து கொண்டு வெண்பா இருவரையும் பார்த்து, பாட்டி…என்று கத்தினாள். இருவரும் விலக, மாயா வெட்கத்துடன் அறைக்கு ஓடினாள். ஜீவா புன்னகையுடன் வெளியே வர, வெண்பா சத்தம் கேட்டு அதிரதன் எழிலனை பிடித்துக் கொண்டும் விக்ரம், நளனும் வந்தனர்.

ஜீவா சிரிப்பதை பார்த்துக் கொண்டே வெண்பா அருகே சென்றனர். எதுக்கு இப்படி கத்துறா? பாட்டி தலையில் கட்டுடன் வந்தார்.

ஜீவா, சாப்பிட்டு போ மல்லிகா அக்கா சொல்ல, நான் சாப்பிட்டேன் என்று அவன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் சென்றான்.

சாப்பிடானா? என்று எழிலன் வெண்பாவிடம் கேட்க, ஹ..சாப்பிட்டான் என்று வாய்குலற பேசிய வெண்பா தெளிவாக, அச்சச்சோ இப்படி பண்ணிட்டானே? என்று வெண்பா கெட்கத்துடன் எழிலனை பார்த்துக் கொண்டே ஓட, அவளை பிடித்த எழிலன், நீயா வெட்கப்படுற? என்ன ஆச்சு? கேட்டான்.

ஜீவா…முத்தம்..ஜீவா..முத்தம் என்று மூச்செடுத்து விட்டாள்.

ஜீவா முத்தமா? எழிலன் கோபமாக, என்ன சொல்ற? சத்தமிட்டான்.

ஜீவா முத்தம் கொடுத்துட்டான் என்று அவள் சொல்ல, வாட் என்று அனைவரும் அதிர்ந்தனர். எழிலன் மனம் உடைந்து போனது.

வெண்பா, உனக்கு கொடுத்த மாதிரி இப்படி வெட்கப்படுற? என்று அருணா அவள் தலையை தட்டிக் கொண்டே எழிலனை பார்த்தாள். அவன் அவளை பார்த்தான்.

அண்ணா, கோபம் வேண்டாம். மாயாவிற்கு ஜீவா முத்தம் கொடுத்துட்டான். இவள் பக்கத்தில் இருந்தாலா அதான் இப்படி பைத்தியமாகிட்டா. அருணா சொல்ல, அப்பாடா என்று இருந்தது எழிலனிற்கு. அப்புறம் இந்த விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.

சார், இதுக்காக அவங்க படிப்பை தடுத்துற மாட்டீங்கல்ல? அதிரதனிடம்  அருணா கேட்டாள்.

ஒழுங்கா படிக்கணும். அப்புறம் நீ அவங்கள கவனிச்சுக்கோ என்றான் அதிரதன்.

என்னது? நான் கவனிக்கணுமா? எதுக்கு சார்? அருணா கேட்க, ஆமா மேடம்ன்னு விளக்கமா சொன்னா தான் புரியும் என்று நக்கலாக புன்னகையுடன் நளன் சொன்னான்.

உங்ககிட்ட யாரும் பேசலை சார். சும்மா இருக்கீங்கல்லா?

மாயாவை பற்றி எனக்கு நல்லா தெரியும். மாயா எப்போதும் தன்வந்த்திற்காக தான் எல்லாவற்றையும் யோசிப்பாள். ஆனால் ஜீவா அவளுக்காக அவனுக்கு பிடித்த சாப்பாட்டை விட்டுருப்பது கஷ்டமா இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. மாயா மனசு மாறுதுன்னு அப்பவே நினைச்சேன். அவள் பெரியதாக யாரை பற்றியும் பேசவே மாட்டாள். இன்று காலையில் கூட இருவரும் மாறி மாறி பார்வையை பரிமாறிக் கொண்டே இருந்தனர். அதிலே சின்னதாக சந்தேகம் எழுந்தது. எப்ப ஜீவா மாயா தன் பொறுப்புன்னு சொன்னானோ? அப்பவே எனக்கு உறுதியாகிடுச்சு.

பாட்டி இவள் பேசியதை கேட்டு கோபமாக, அவங்க நமக்காக இருக்க இடம் கொடுத்திருக்காங்க. காதலிக்கிற இடமா இது? இந்த வயசுல என்ன தெரியும்ன்னு காதல்ன்னு பேசுறீங்க? அவன் வரட்டும்.. இவள் எங்க? மாயா..மாயா..கத்தினார் பாட்டி.

பாட்டி அமைதியா இருங்க. அவங்க பக்கத்திலே இருக்கிறவங்க. காதல் இருப்பது சாதாரணம் தான். ஆனால் அவர்கள் இரவு சந்திக்க கூடாது. யாருமில்லா இடத்தில் சந்திக்க கூடாதுன்னு மட்டும் சொல்லுங்க. அவங்க இங்கிருந்து கிளம்பும் போது அவங்களே தெரிஞ்சுப்பாங்க..காதலா? இல்லை ஈர்ப்பான்னு? இந்த வயதில் சகஜம் தான். சில நேரம் நம்மை தாண்டியும் தவறு நடக்கும். அதை நடக்காம பார்த்துக்கிட்டாலே போதும். நீங்க திட்டி இருவரையும் பேச விடாம பண்ணா தான் தப்பு நடக்க வாய்ப்பிருக்கு என்றான் அதிரதன்.

இருந்தாலும்ப்பா..

பாட்டி, பசங்க மேல நம்பிக்கை வையுங்க என்றான் அதிரதன்.

பாட்டி, மாயா தன்வந்த்தை காதலிக்கும் போது நீங்க, அக்கா யாருமே ஒன்றுமே சொல்லலை. ஜீவாவை மாயா காதலிக்கிறது தப்பா? மயூரி கேட்டாள்.

மாயா மீது அவனுக்கு விருப்பமில்லையே? தப்பு நடக்க வாய்ப்பேயில்லை. அதான் அவளை யாரும் ஏதும் சொல்லலை. ஜீவா நல்ல பையன் தான். கொஞ்சம் ஆர்வக்கோளாறு. மாயா தெளிவா தான் இருப்பா. ஆனால் இப்ப போல் நடக்கக் கூடாதே? என்றார் பாட்டி.

நடக்காது பாட்டி. நான் அதிர்ச்சியில் தான் அப்படியே நின்று விட்டேன். ஆனால் ஜீவாவை பிடிச்சிருக்கிற மாதிரி தான் தோணுது. நாங்க தப்பா நடந்துக்க மாட்டோம். முதல்ல விட நல்லா பேசிப்போம். அதை விட படிக்கணும் பாட்டி. இந்த தன்வந்த் அவனாகவே இங்கிருந்து போக வைக்கணும். அதுக்கு ஜீவா முன் வரணும். அவனை வர வைப்போம் என்றாள் மாயா.

இரு கையிலும் கன்னத்தை தாங்கியவாறு வெண்பா அனைவரையும் பார்த்தாள்.

இங்க என்ன படமா ஓடுது? எழுந்திரு வெண்பா என்றான் தேவா.

எதுக்கு எல்லாரும் கும்பலா நிக்குறீங்க? ராகிணி கேட்டாள்.

ஒன்றுமில்லையே? தன்வந்த்தை பற்றி தான் சார் கேட்டுக் கொண்டிருந்தார். நீ வா.. நாம போகலாம் என்று எழிலா சாப்பிடலாமா? வெண்பா கேட்க, வாய மூடிட்டு போய் கொட்டிக்கோடி பாட்டி திட்டினார். அவள் அவரை முறைத்து நிற்க, இதுக்கு நான் வரலைப்பா என்று வந்த வழியே சென்றாள் ராகிணி.

நேத்ரா அக்கா தான் என்ன சொல்லப் போறாங்களோ? மாயா சொல்ல, வினு ஒன்றும் சொல்லமாட்டாள் என்றான் அதிரதன்.

தம்பி, அந்த பொண்ணை விட்டு தள்ளியே இருங்க பாட்டி சொல்ல, எனக்கு வினு பற்றிய எல்லாமே தெரியும் என்றான் அதிரதன்.

இல்லை. உங்களுக்கு அக்காவை பற்றி எல்லாமே தெரியாது என்று எழிலன் கோபமாக வெளியே சென்றான். நளன், வெண்பா, அதிரதன் செல்ல, நடக்க முடியாமல் அங்கேயே அமர்ந்தான்.

என்ன தெரியாது? சொல்லு? என்று கேட்டான் அதிரதன்.

என்னால எல்லாத்தையும் சொல்ல முடியாது. நீங்க கிளம்புங்க சார் என்றான் எழிலன் அதிரதனிடம்.

ஓ அப்படியா? என்று அதிரதன் அவனருகே வந்து எழிலனை துக்க, அய்யோ..என்ன செய்றீங்க சார்? வெண்பா பின்னாடியே ஓடி வந்தாள். அவள் பின் நளனும் மற்றவர்களும் வந்தனர்.

சார், இறக்கி விடுங்க. மானத்தை வாங்காதீங்க எழிலன் கத்தினான்.

நான் இவனிடம் தனியே பேசணும். கொஞ்ச நேரம் யாரும் எங்களை தொந்தரவு செய்யாதீங்க என்று ஓர் அறைக்குள் நுழைந்து அவனை கீழே விட்டு அவன் தோளில் கையை போட்டுக் கொண்டு எழிலனை அமர்த்தினான்.

சொல்லு? என்ன தெரியாது? அவளோட கிரஷ் யாருன்னு சொல்லு? உனக்கு தெரியும்ல? அதிரதன் கேட்க, எழிலன் கோபமாக தெரியும். ஆனால் உங்களிடம் சொல்ல முடியாது என்று கத்தினான்.

என்னிடம் சொன்னால் தான் இந்த பிரச்சனையை முடிக்க முடியும்? அவங்க உன்னை மட்டும் கொல்ல நினைக்கவில்லை. எங்களையும் உன் அக்காவையும் தான் கொல்ல நினைக்கிறான்.

ஒருவேலை உன் அக்காவின் கிரஷ்ஷாக கூட இருக்கலாம் அதிரதன் சொல்ல, அவர் அப்படி கிடையாது என்றான் உறுதியாக.

அவன் மீது உனக்கென்ன அவ்வளவு நம்பிக்கை?

உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கும் அவரை பிடிக்கும்.

அவள் கணவன் தானா?

இல்ல. அவனெல்லாம் என் அக்கா பக்கம் கூட நிற்க அருகதை இல்லாதவன். அவனை பத்தி பேசாதீங்க.

இல்ல எனக்கு அவன் மீதும் சந்தேகம் உள்ளது என்று அதிரதன் சொல்ல, எழிலன் அமைதியாக அவனை பார்த்தான்.

பின்னிருந்து பார்த்தால் அவனை கண்டுபிடிச்சிருவியா? அதிரதன் கேட்க, நல்லா தெரியும் என்றான் எழிலன்.

இந்த வீடியோவை பாரு என்று அதிரதன் காட்ட, அதை பார்த்த எழிலன் அதிரதன் போனை தூக்கி எறிந்தான். சரியாக அதை தாவி பிடித்தான் விக்ரம்.

வெண்பா அவனை ஆவென பார்த்தாள். எழிலன் அவளை பார்த்து முறைத்தான். இருவரையும் பார்த்து விட்டு, லவ்வா? கேட்டான் அதிரதன். எழிலன் அவனை முறைத்தான்.

நல்லா தான இருந்த? திடீர்ன்னு என்ன ஆச்சு? அதிரதன் கேட்டுக் கொண்டே அவனிடம் வீடியோவை பற்றி கேட்க, என்னால எதற்கும் பதிலளிக்க முடியாது.

நீ எதுவுமே சொல்ல வேண்டாம் என்று அதிரதனும் கோபமாக அறையிருந்ததை தட்டி விட்டு வெளியே வந்தான். சார்..நளன் அழைக்க, அங்கே வந்த ஒருவன் ஆர்டர் வந்துருக்கு சார் என்றான்.

அதிரதன் நளனை பார்க்க, அவன் உங்களுக்கு தான் ஆர்டர் செய்தான் என்று சொல்ல, எழிலன் நளனை அழைத்தான். இருவரும் வெளியே வர, அதிரதன் கிளம்பினான்.

சாப்பாடு வாங்கிட்டு கோபமாகவே போகலாம் எழிலன் சத்தமிட, நின்றான் அதிரதன்.

சார், யாராவது வாங்குங்க. எனக்கு வேலை இருக்கே? என்றான் டெலிவரி பையன்.

நான் பணம் தாறேன். சாப்பாட்டை அவரிடம் கொடுத்து விடு என்று எழிலன் நளனுடன் வந்தான்.

தேவையில்லை. என் சாப்பாட்டுக்கு நானே கொடுத்துப்பேன் என்று அதிரதன் சொல்ல, பணத்தை கொடுத்துட்டு பார்சலை வாங்கிய எழிலன், இந்தாங்க என்று அவன் கையில் வைத்து விட்டு அவன் நளனுடன் உள்ளே சென்றான்.

ஆமா, இருவரும் இப்படி சண்டை போடுறீங்க? சார், நீங்க செம்ம டெடர்ன்னு எல்லாரும் பேசுவாங்க ஆனால் குழந்தைத்தனமா பேசுறீங்க? என்றாள் வெண்பா.

எழிலா, நான் கேட்டதுக்கான பதிலை இந்த பொண்ணிடம் சொல்லு என்று கத்தினான்.

எழிலா..சொல்லு சொல்லு..என்று எழிலன் பின்னே வெண்பா சுற்ற, நீ ஸ்கூலுக்கு போகும் போது சொல்றேன் என்றான். அவள் தலையாட்டினாள்.

மீண்டும் உள்ளே சென்ற அதிரதன், பாட்டியிடம் சென்று நீலுவை கேட்க, அவர் அவனை அழைத்தார். நான் இவனை யுவியிடம் அழைத்து செல்லவா? கேட்டான்.

இருக்கட்டும் தம்பி, யுவன் இங்கே வரும் போது பார்த்து கொள்ளட்டும்.

அவன் முழுவதுமாக சரியாகும் வரை என்னுடன் தான் இருப்பான் என்றான் அதிரதன்.

தம்பி வேணாம். புள்ளைகள அங்க இருந்தா சரியா இருக்காது என்றார் அவர்.

எனக்கு புரியுது. ஆனால்..இருவரும் என்னுடன் தான் இருப்பாங்க. நான் இவனை அழைத்து செல்கிறேன் என்று அதிரதன் அவர் பதிலை எதிர்பாராமல் சென்றான் .

அவர் போகும் அவனை பார்த்துக் கொண்டு, இதுக்கு முன்னால் பட்ட வேதனையை விட பட போகிறாள் என்று கண்ணீருடன் நின்றார். அவன் அவர் கண்ணீரை பார்த்து நின்றான்.

மீண்டும் அவரிடம் வந்து, நீங்க உங்களையும் மத்தவங்களையும் பார்த்துக்கோங்க. வினுவை நான் கல்யாணம் செய்து கொண்டால் எவனாலும் ஏதும் பேச முடியாது. வருத்தப்படாம இருங்க.

கல்யாணமா? ஆனால் தம்பி, அந்த பொண்ணு?

எல்லாமே தெரியும். நான் பார்த்துக்கிறேன். அவ கஷ்டப்படாம பார்த்துப்பேன். ஆனால் நான் அவளிடம் பேசும் முன் இதை பற்றி சொல்லாதீங்க என்று அதிரதன் சென்றான்.

எப்படியோ நல்லா இருந்தா சரி தான் என்று அவர் ஜெயந்தி அக்காவை அழைத்து, மாயா ஜீவாவை கண்காணிக்கணும்ன்னு சொன்னார்.

நீலுவுடன் பேசிக் கொண்டே காரை ஓட்டிய அதிரதன் போன் ஒலிக்க, ஸ்பீக்கரில் போட்டான்.

சார், எங்க இருக்கீங்க? பதட்டமாக நேத்ரா குரலை கேட்டு, என்னாச்சு? கேட்டான்.

இங்க ஒருவன் என்னை கொல்ல வந்தான். அவனை விரட்டி விஷ்வா, காவியன், மிதுன் போயிருக்காங்க. பயமா இருக்கு. கொஞ்சம் என்னன்னு அவங்கள பார்க்க முடியுமா? என்று கேட்டுக் கொண்டே அழுதாள்.

அழாத வினு. அவங்களுக்கு ஒன்றுமாகாது சுஜி சொல்லியும் நேத்ரா அழுதாள்.

வினு, உங்களோட யார் இருக்கா? அதிரதன் கேட்க, மத்த மூணு பசங்க, நான், யுவி, சுஜி என்று அவள் சொல்ல, எல்லாரும் யுவியோட அறையிலே இருங்க. நான் பார்த்துட்டு வாரேன் என்று அதிரதன் காரை வேகமாக ஓட்டினான்.

அக்கா, எதுக்கு அழுறாங்க?

நீலு, கொஞ்ச நேரம் அமைதியா வா. நாம அப்புறம் பேசலாம் என்று விஷ்வாவிற்கு போன் செய்தான். அவன் போனை எடுக்கவில்லை. காவியனை அழைத்தான். போனை காதில் வைத்த காவியனின் மூச்சு சத்தம் கேட்டது.

காவியா, எந்த இடத்துல இருக்கீங்க? அவனை மிஸ் பண்ணிடாம பிடிங்க. அவனுக்கு ஏதும் ஆகக்கூடாது என்று சொன்ன அதிரதனிடம் காவியன் இடத்தை கூறினான்.

விஷ்வா அவனை எகிறி குதித்து பிடித்தான். சரியாக அதிரதனும் அவ்விடம் வந்தான். கொலை செய்ய வந்தவனோ? அவனை அவனே குத்த வந்தவன் கையை காவியன் பிடிக்க, அவன் கத்தியை காவியன் பக்கம் திருப்பினான். இருவரும் மாறி மாறி கையை திருப்ப, மிதுன் இடையே வந்து கத்தியை பிடிக்கும் முன் அவன் காவியன் கையில் கத்தியை சொருகினான். காவியன் கத்த, அதிரதன் அவனிடம் வந்தான். விஷ்வா கொலைகாரனை அழுத்தி பிடித்தான். போலீஸ் அங்கு வந்தனர்.

அப்போது ஒருவன் விசில் சத்தம் கொடுக்க, எல்லாரும் சத்தம் வந்த திசையை பார்த்தனர். நீலு கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்தான்.

ஓ..செட் என்று அதிரதன் பதற, அவன் பின்னே பெரிய கட்டையுடன் சுபிர்தன் வந்து அவன் நடுமண்டையில் ஓங்கி அடிக்க, அவன் மயங்கினான். சுபிர்தன் நீலுவை தூக்கி இவர்களிடம் வந்தான்.

ரொம்ப பிளீடாகுதுடா என்று மிதுன் அழுதான். காவியா என்று சுபிர்தனும், அண்ணா என்று நீலுவும் அழுதனர். காவியன் கையில் குத்தி இருந்த கத்தியை வலியுடன் கத்திக் கொண்டே உருவி எடுத்தான். இரத்தம் அதிகமாக வெளியேற காவியன் மயங்கினான்.

அதிரதன் காவியனை தூக்கி காரில் போட்டு, எல்லாருமே ஏறுங்க என்று கத்தினான். போலீஸ் அவர்களை பிடித்து செல்ல அந்த பதட்டத்திலும் அதிரதன் நிதினுக்கு போன் செய்து போலீஸை முழுதாக நம்ப முடியாது. நீ சீக்கிரம் போய் அவனை பார்த்து விசயத்தை வாங்கு என்றான்.

நிதின் ரவிக்குமார் கம்பெனியில் இருந்திருப்பான். ஆத்விகாவும் உடன் இருந்தாள்.

ஆத்வி நீ பார்த்துக்கோ. நான் வாரேன் வேகமாக வெளியே ஓட, ரவிக்குமார் அவனை பிடித்து எங்க போற?

ஒருவன் மாட்டி இருக்கான். நான் விசாரிச்சுட்டு வந்துடுறேன் என்று ஓடினான். அவர் ஆத்விகாவை பார்த்தார். அவள் மும்பரமாக கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டிருந்தாள். அவர் வேலையை கவனிக்க சென்று விட்டார்.

ஹாஸ்பிட்டலில் காரை நிறுத்திய அதிரதன் டாக்டர் என்று கத்திக் கொண்டே காவியனை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான். மற்றவர்கள் அவன் பின்னே வந்தனர். சுபிர்தன் யுவி அறைக்கு சென்று விசயத்தை சொல்ல, நேத்ரா தவிர மற்றவர்கள் வெளியே வந்தனர்.

நேத்ரா அறையினுள்ளே அழுது கொண்டிருந்தாள். விசயம் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. பாட்டி மற்றவர்களிடம் பசங்கள பார்த்துக்க சொல்லி விட்டு கிளம்ப, அந்நேரம் பள்ளி விட்டு பசங்களும் பொண்ணுகளும் வந்தனர். மாயா, வெண்பா, மற்ற பொண்ணுங்க முகம் வாடி இருக்க, பாட்டி நாங்களும் அண்ணாவையும் யுவியையும் பார்க்க வரட்டுமா? கேட்டாள் அருணா.

வா நளா, நாம போய் பார்த்துட்டு வரலாம்.

அக்கா, அங்க இருப்பாங்கடா என்று அவன் சொல்ல, எல்லாரும் அவனை பார்த்தனர்.

பாட்டி, வாங்க போகலாம் என்று எழிலன் பாட்டியிடம் வந்தான். நாங்களும் என்று மாயா, வெண்பா, அருணா, ஹரிணி, தேவா வந்து நிற்க,

எல்லாரும் எங்க போறீங்க? ஜீவா கேட்டுக் கொண்டே புத்தகப்பையை கீழிறக்கி வைத்தான். எல்லாரும் மாயாவை பார்க்க, அவள் காவியனை எண்ணி வருத்தத்தில் இருந்தாள்.

தேவா காவியன் ஹாஸ்பிட்டலில் இருப்பதை சொல்ல, என்னாச்சு அண்ணாவுக்கு? என்று அவன் நண்பர்களும் பதறினர். தன்வந்த் அவர்களை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான். யாரும் அவனை கண்டுகொள்ளவேயில்லை.

பாட்டி, ப்ளீஸ் நாங்களும் வாரோமே? மாயா கேட்க, எல்லாரும் வரக்கூடாது. யாராவது ஐந்து பேர் மட்டும் வாங்க என்றார் அவர்.

எழிலன் அவர்களை பார்த்து, ஜீவா, மாயா, வெண்பாவை அழைத்து, மற்றவர்கள் இங்கேயே இருங்கள்.

நாங்களும் வாரோம் அருணாவும் ஜீவா நண்பர்களும் கேட்க, முதல்ல நாங்க பார்க்கிறோம் என்று பாட்டி அவர்களை அழைக்க, நளா எல்லாரையும் பார்த்துக்கோ என்று விக்ரமை பார்த்தான்.

காவியனுக்கு கட்டிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் போன் ஒலிக்க அதை எடுத்தாள் சுஜி.

காவியா, யுவி எப்படி இருக்கான்? ஒன்றும் பிரச்சனையில்லையே? பிரணா கேட்க, காவியனுக்கு அடிபட்டிருக்கு. ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்.

அவனுக்கு என்னாச்சு? நீங்க யாரு? பதறினாள் ரணா.

நான் சுஜித்ரா. நீ யாரும்மா?

நான் அவனோட படிக்கிறேன். எந்த ஹாஸ்பிட்டல்? என்று ரணா விசாரித்து நண்பர்களுடன் கிளம்பினாள்.

காவியன் விழித்து அமர, அதிரதன் நேத்ராவை பார்க்க சென்றான். அவள் அழுது களைத்து யுவியை பார்க்க, அவனும் விழித்தான். செவிலியர் அவனை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

அதிரதன் உள்ளே வந்து நேத்ராவின் அழுத முகத்தை பார்த்து கேள்வியுடன் நோக்க, அங்கிள் என்று யுவி அவனை அழைத்தான். அவனை பார்த்து விட்டு அதிரதன் நேத்ராவை பார்க்க, அவளாகவே எழுந்து அவனிடம் வந்து,

சார், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்றும் ஆறுதலுக்காக அவனை அணைத்து அழுதாள் நேத்ரா. செவிலியர் புன்னகையுடன் இருவரையும் பார்க்க, யுவி அக்கா எதுக்கு அழுறீங்க? என்று கேட்டான்.

குட்டிப்பையா, நீ அமைதியா இருக்கணும். பேசக்கூடாது என்ற செவிலியர், சார் மேம் ரொம்ப நேரமாக அழுதாங்க. வேறெதுவும் பிரச்சனையா? செவியர் கேட்க, அவளை நிமிர்த்தி பார்த்த அதிரதன், உனக்கு காவியன் அவ்வளவு முக்கியமா? என்று கேட்க, அவள் கண்ணீருடன் பதில் கூறாமல் நின்றாள்.

விஷ்வா நேத்ராவை பார்க்க கதவை திறக்க, இருவரையும் பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும், நான் அப்புறம் வாரேன் என்று அவன் சொல்லி நகர, அதிரதனை விட்டு வேகமாக நகர்ந்து சாரி சார் என்று வெளியே வந்து விஷ்வா கையை பிடித்தாள். அவள் கையை எடுத்த விஷ்வா, வினு, கவனமா இரு. பசங்களுக்கும் அந்த கொலைகாரனால் ஆபத்து வரும்மோன்னு தோணுது என்றான்.

விஷ்வா, காவியன் முழிச்சிட்டானா? நல்லா இருக்கானா? கேட்டாள்.

அவனுக்கு ஒன்றுமில்லை. அவன் நல்லா இருக்கான் விஷ்வா சொல்ல, அதிரதன் காவியன் அறைக்கு சென்று நீலுவை தூக்கிக் கொண்டு வெளியே வர, எழிலன் அவனிடம் கண்கலங்க ஓடி வந்தான். நேத்ரா அவனை பார்த்து வேகமாக மறைந்து கொண்டாள். எழிலன் அவளை பார்த்தும் பார்க்காதது போல் காவியனை பற்றி விசாரிக்க, பாட்டியும் மற்றவர்களும் வந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement