Advertisement

அத்தியாயம் 21

ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வந்த அதிரதன் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். மீண்டும் உள்ளே சென்று நேத்ரா கையை பிடித்து வா என்றான்.

சார், எங்க? யுவிய பார்க்கணும் என்றாள் நேத்ரா. சார்..காவியனும் சத்தமிட, வினுவை நான் ஒன்றும் சொல்லப்போறதில்லை. தனியா பேசணும்.

என்னிடம் எதுக்கு சார் தனியா பேசணும்?

பேசணும் என்றான் கோபமாக.

அவள் அமைதியாக அவனுடன் செல்ல, மிதுனும் நண்பர்களும் வந்தனர்.

யுவியை பார்த்துக்கோங்கடா. நான் வந்துடுறேன் என்று அவர்கள் பின் சென்றான் காவியன்.

தனியே அழைத்து வந்த அதிரதன் அவளை அமர வைத்து, அவளருகிலே அமர்ந்தான். நேத்ரா அவனை பார்க்க, அவன் அவளை பார்த்து விட்டு,

உனக்கு நிதினை எத்தனை வருசமா தெரியும்?

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து தெரியும் என்றாள்.

அதற்கு முன் அவனை தெரியாதா?

என்ன சார் கேக்குறீங்க? நான் பிறந்ததிலிருந்து எங்க கிராமத்துல தான் இருந்தேன்.

அவன் யோசனையுடன் இங்க வந்ததேயில்லையா? நீ நல்லா யோசித்து பாரேன் என்றான். காவியனும் அவர்களிடம் வந்து அமர்ந்தான். அதிரதன் அவனை முறைத்து விட்டு, நன்றாக யோசித்து சொல்லு என்றான்.

நான் இங்கேவா?

ம்ம்..பத்து வயசுக்குள்ள? அதிரதன் கேட்க, ஆமா சார் வந்துருக்கேன். ஒரு சின்னப்பையன் இருக்கான். அவனோட விளையாடும் நினைவு இருக்கு. ஆனால் முகம் நினைவில்லை என்றாள்.

அவன் நிதினாக இருக்குமோ? அதிரதன் கேட்க, சார் என்ன சொல்ல வர்றீங்க? நிதினை கொல்ல நினைப்பவன் என்னால் தான் அவனை கொல்ல நினைக்கிறான்னு சொல்றீங்களா? நேத்ரா கோபமாக கேட்டான். அதிரதன் அமைதியாக அவளை பார்த்தான்.

நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க?

தெரியல என்றான்.

அவனோட தற்போதைய குடும்பம், அவனோட அம்மா, அப்பா..உண்மையிலே அவனோட பெற்றோர்கள் தானா?

என்ன கேக்குற? அவனோட பெற்றோர் தான்.

நூறு சதவீதம் தெரியுமா?

எஸ், நிச்சயமாக நூறு சதவீதம் தெரியும்.

அப்படின்னா, என்னுடன் விளையாடியவன் இவன் இல்லை.

எப்படி சொல்ற? அதுக்குள்ளவா முகம் நினைவுக்கு வந்திருச்சு? அதிரதன்  கேட்க,
இல்லை. அவன் நிது இல்லை நேத்ரா சொன்னாள்.

சரி, அதெப்படி உறுதியா சொல்ற?

ஏன்னா, அவன் என் அத்தை மகன் என்று கோபமாக கத்தினாள்.

அதுக்காக எதுக்குக்கா கத்துறீங்க? காவியன் கேட்டான்.

உனக்கு அத்தை மகனெல்லாம் இருக்கானா? அதிரதன் கேட்க, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

அக்கா, நீங்க யாருமில்லைன்னு சொன்னீங்க?

ஆமா, யாருமில்லை தான். நான் அவனையும் அவன் குடும்பத்தையும் இந்த ஜென்மத்தில் பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன் என்று சத்தமிட்டாள்.

எதுக்கு இப்படி கோபப்படுற? சேர்ந்து விளையாடியதா சொன்ன?

ஆமா, அப்ப எந்த விவரமும் தெரியாது. கொஞ்ச நாள் தான் பழகினோம். நல்ல ப்ரெண்ஸ் ஆனோம். பின் அப்பா அழைச்சிட்டு போகலை. நான் ரொம்ப நாளா என் மாமாவை மிஸ் பண்ணேன். வளரும் போது தான் அத்தையால தான் குடும்பமே உடைஞ்சதுன்னு தெரிஞ்சது.

அப்பா அழைச்சிட்டு போகலையா? அதிரதன் கேட்டான்.

ஆமா, அம்மாவுக்கு அவங்களோட அப்பா பேசுவது கூட பிடிக்காது. அதை மீறி தான் அத்தையையும் அவங்க பையனையும் சந்திக்க என்னை அழைத்து செல்வார். அப்பாவுக்கு அவர் அக்காவை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவங்களால தான் அப்பா அநாதையா தனியா ரொம்ப கஷ்டப்பட்டார்.

என்னோட அத்தை பெரிய தொழிலதிபரை காதலித்து ஓடிப் போயிட்டாங்க. அந்த கஷ்டம் தாங்க முடியாம தாத்தாவும் பாட்டியும் இறந்து போயிட்டாங்க என்ற நேத்ரா கண்ணீருடன்..அப்பாவுக்கு அப்ப கல்யாணம் ஆகலை. அப்ப தான் படித்து முடித்திருந்தார். வேலைக்காக எங்க ஊரில் எங்கே போனாலும் ஓடிப் போனவ தம்பி தான உனக்கெல்லாம் வேலையில்லைன்னு தான் அடிக்காத குறையாய் விரட்டும் போது தான் என் அம்மாவை பார்த்தார்.

அம்மாவோட அப்பா சூப்பர் மார்க்கெட் வச்சு நடத்துறவர். அப்பாவை பார்த்து அம்மா அவங்க கடையில சேர்த்து விட்டாங்க. அப்பாவுக்கு அவர் பட்ட கஷ்டத்தில் காதல் என்றாலே பிடிக்காது. ஆனால் அம்மாவுக்கு அப்பாவை பிடித்து அவங்க பெற்றோர் கேட்டதால் அம்மாவை அப்பா திருமணம் செய்து கொண்டார். நல்லா தான் போனது. நானும் பிறந்து வளர்ந்தேன். ஒருமுறை அப்பா அவர் அக்காவை சென்னையில் வைத்து பார்த்தார்.

அவருக்கு காதல் பிடிக்கலைன்னாலும் அக்காவை ரொம்ப பிடிக்கும். அவரால் அத்தையை கஷ்டப்படுத்த முடியலை. அதனால் பழையவாறு பேச அம்மாவிடம் வேலையை காரணமாக வைத்து என்னையும் கோர்ஸ் சேர்க்கிறேன்னு அழைத்து வந்தார். அவ்வப்போது சந்திப்போம். இது அம்மாவிற்கு தெரிந்து பெரிய பிரச்சனையாகிடுச்சு. அதிலிருந்து அத்தையையும் பார்க்கலை. அத்தை மகனையும் பார்க்கலை. சொல்லப் போனால் நான் மறந்து விட்டேன்.

அம்மா, அத்தையை பத்தி தவறாக பேச, பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்பா அம்மாவை அடித்து விட்டார். இருவருக்கும் அங்கே ஆரம்பித்த மோதல். அடிக்கடி சண்டை போடுவாங்க. சில நாட்கள் பேசாமல் கூட இருந்திருக்காங்க.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அம்மம்மா..அம்மாவை அவங்க வீட்டிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்ல, அம்மாவும் என்னை விட்டுட்டு தம்பியை தூக்கிட்டு போயிட்டாங்க. ஒரு வருசத்துல டிவோர்ஸ் பிரச்சனையும் வந்தது. அவர்களால் நான் அதிகம் காயமானேன். அப்பா அம்மாவிடம், இனி அத்தையை பார்க்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ணார். ஆனால் அம்மா கேட்கவேயில்லை. அம்மா இல்லாமல் நானும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டோம். என்னை அம்மா முன் நிறுத்தியும் அம்மா மனம் இறங்கவில்லை.

அப்பா வேறு வழியில்லாமல் விவாகரத்து பைல்ல சைன் பண்ணி குடுத்துட்டாரு. அம்மா அப்ப தான் கொஞ்ச கொஞ்சமா வருத்தப்பட ஆரம்பிச்சாங்க. நான் அங்கிருந்தால் பாதிக்கப்படுவேன்னு தான் என்னை அப்பா சென்னைக்கு அழைச்சிட்டு வந்தாங்க. அப்பா நடத்திய கம்பெனி அவங்க பணத்துல வாங்கியதால அதையும் வாங்கிட்டாங்க. அப்பா ரொம்ப உடைஞ்சு போயிருந்தாங்க. நான் அருகே இருந்தால் அப்பா என்னை கவனிக்கிறேன்னு அவர் வாழ்க்கையை அழிச்சுப்பார்ன்னு தான் நம்ம பள்ளி விடுதியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அப்பா சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து அவர் ஒரு நஷ்டத்தில் ஓடிய கம்பெனிய வாங்கி அதை ஓட வைத்தார்.

அம்மா அவங்களாகவே அப்பாவை தேடி வந்தாங்க. ஆனால் அப்பா..உன் பிறந்த குடும்பத்தை விட்டு வந்தால் நான் ஏத்துக்கிறேன்னு சொன்னார். முதலில் அம்மா, தம்பியை நன்றாக பார்த்துக் கொண்ட, அம்மம்மாவும் தாத்தாவும் பாரமாக நினைக்க ஆரம்பித்தனர். அம்மா அப்பா நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டு சென்னை வந்து விட்டார். பின் எப்பொழுதும் போல் வாழ்க்கை நன்றாக சென்றது. நானும் விடுதியில் இருந்து குடும்பத்துடனும் சேர்ந்து தங்க ஆரம்பித்தேன். ஆனால் என்னால் அம்மாவை ஏத்துக்க முடியலை. அவங்களாலும் அப்பா பட்ட கஷ்டத்தை நேரிலே பார்த்தேனே? எழிலனும் நானும் க்ளோஸ் தான். அம்மாவை மட்டும் தள்ளியே வைத்திருந்தேன். எனக்கு திருமணம் முடிந்த பின் கூட அம்மாவிடம் சரியாக பேசவில்லை. ஆனால் அப்பா என்றல் எனக்கு உயிர்.

நம்ம பள்ளியில் விடுதியில் இருந்த போது தினமும் எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்துட்டு போவார். சன்டே ஸ்பெசல் பர்மினசோட முழுவதும் அப்பாவுடன் தான் வெளியே சுற்றுவேன். ஆனால்..இப்ப..என்று அழுத நேத்ரா காவியனை பார்த்து அணைத்து கொண்டாள். காவியன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்படின்னா உனக்கும் காதல் பிடிக்காதா? அதிரதன் கேட்க, அவனை பார்த்து காதல் பிடிக்காதுன்னு சொல்லலை. நான் அப்பாவின் காதல் பற்றிய கருத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

என்னோட அத்தையையும் பிடிக்கும். அவங்க காதலிச்சது தப்பில்லை. பெத்தவங்கள தவிக்க விட்டு ஓடிப் போனது தான் தப்பு. யாரோ ஒருவருக்காக பல வருடமாய் தாலாட்டி பாலூட்டி வளர்த்த அம்மா, அப்பாவை விட்டு போனது தான் தப்பு. காதலிச்சா எல்லாரையும் ஒத்துக்கொள்ள வச்சு கல்யாணம் பண்ணிக்கணும்.

அவங்க செஞ்ச தப்பால இரு உயிரை இழந்து, அவமானப்பட்டு கட்டிக் கொண்டவளால் கஷ்டப்பட்டு அப்பா எங்களை ஒரேடியாய் விட்டுட்டு போயிட்டாங்க. எழிலனுக்கு முதலில் எதுவுமே தெரியாது. பின் வளரும் போது நான் சொல்லி தான் எல்லாமே அவனுக்கு தெரியும். ஆனால் அவன் அம்மா, அப்பா இருவரிடம் ஒரே போல் தான் இருந்தான்.

சார், தாத்தா பாட்டி திருமணத்திற்காக செய்ய வேண்டியதை தான் தன் அக்காவுக்கு செய்யணும்ன்னு என் அப்பா ரொம்ப ஆசைப்பட்டு, அத்தைக்காக தாத்தா, பாட்டி சேர்த்து வைத்தது. மேலே அப்பாவும் போட்டு ஆடை, அணிகலங்கள், சீமந்த பணம் என அனைத்தையும் எடுத்துட்டு அத்தை வீட்டுக்கே போனாங்க. ஆனால் அத்தை அதை ஏற்றுக் கொள்ளாமல் அப்பொழுது கூட கணவனுக்கு பிடிக்காது என்று என் அப்பாவை காயப்படுத்தி அனுப்பி விட்டார். அன்று தான் அம்மாவுக்கு அப்பா அத்தைய பார்க்க போனது தெரிய வந்து பிரச்சனையானது.

இதெல்லாம் என் அத்தையை நான் பார்க்கும் போது எனக்கு தெரியாது. எனக்கு அவங்கள அப்பொழுது ரொம்ப பிடித்தது. ஆனால் வீட்ல பிரச்சனை ஆரம்பித்த போது அம்மா எல்லாவற்றையும் சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார்கள். அதிலிருந்து அவங்களை வெறுக்க ஆரம்பித்தேன்.

அத்தை ஓடிப் போகாமல் இருந்தால் தாத்தா, பாட்டி உயிரோட இருந்திருப்பாங்க. அப்பா என்னோட அம்மாவை சந்தித்து இருக்க மாட்டார். என் அப்பா காதலித்து யாரோ ஒருவருடன் சந்தோசமா இருந்திருக்கலாம் என்று காவியனை பார்த்தாள்.

அதான் சேர்ந்துட்டாங்களே? காவியன் கேட்க, சேர்ந்தது பேருக்கென்று எங்களுக்காக தான். அப்பாவிற்கு மனைவி என்ற பந்தமே விட்டு போச்சு. முன் போல் அவரும் அம்மாவுடன் அதிகமாக பேசவே மாட்டார்.

என்ன இருந்தாலும் அம்மா..அம்மம்மா பேச்சை கேட்டாங்களே தவிர அப்பாவை ஏத்துக்கலையே?

அத்தை தப்பு செய்தாலும் அப்பா அனைத்தையும் மறந்து பேசினார். அது அவங்களுக்குள்ளது. அம்மா தலையிட்டு அப்பாவிற்கு அத்தையும் இல்லாமல் அம்மாவும் இல்லாமல் போனார்கள். என்னோட அப்பா எனக்கு கல்யாணம்ன்னு ரொம்ப சந்தோசமா இருந்தார். ஆனால் அவனை பற்றி தெரியாமல் போச்சு. அவர் வாழும் போதும் நிம்மதியாக இல்லை. சாகும் போதும் நிம்மதியாக இல்லை என்று காவியன் தோளில் சாய்ந்து அழுதாள்.

வினு, உன்னோட அத்தை பையன் பெயர் கூடவா நினைவில்லை? அதிரதன் கேட்டான்.

எனக்கு நாங்க சந்தித்த இடம் கூட முழுதாக நினைவில்லை. அவங்க முகமும் நினைவில்லை. பெயரும் தெரியாது. எங்க வீட்ல நடந்த பிரச்சனையில எனக்கு மனப்பிரச்சனை வந்தது. சைக்காட்டிஸ்கிட்ட காண்பித்து சரி செய்தோம். எல்லாம் சரியானது. அத்தையை பார்த்த நினைவு மட்டும் வரவேயில்லை. அதுக்கு காரணம் என் அம்மா தான்.

அப்பாவுக்கு தெரியாம அந்த நினைவுகளை அழிக்க சொல்லி சைக்காட்டிஸ்கிட்ட அம்மா கேட்டு பணம் கொடுத்து அழிக்க வச்சிருக்காங்க. அவரும் அப்பாவிடம் சொல்லலை. இதை அம்மா அம்மம்மாவிடம் பேசும் போது நான் கேட்டேன். அதுவும் திருமணமான பின் அப்பா அளவுக்கு அம்மா உண்மையாக இல்லை என்றாள்.

அந்த நினைவுகளை கொண்டு வர முயற்சி செய்யலாமே அக்கா? காவியன் கேட்க, அதிரதன் அவனை முறைத்தான்.

அக்கா, உங்களுக்கு உங்க அத்தை பையனை பிடிக்குமா? காவியன் கேட்க, எதுக்கு தேவையில்லாம பேசுறடா? அதிரதன் கேட்க, சார் இது ரொம்ப முக்கியமானது. அக்கா உங்களுக்கு பிடிக்கும்ன்னா சொல்லுங்க. நான் அவரை தேடி உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்.

காவியா, உனக்கு தெரியாதா? சும்மா இரு. கல்யாணம் எல்லாமே சும்மா தான்டா. நான் நம்ம நிலையத்திலே காலத்தை ஓட்டிருவேன் என்றாள். அதிரதன் அவளிடம், எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்களே? கேட்டான்.

சரி தான் சார். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. ஆனால் என்னால் மறுபடியும் அந்த வாழ்க்கைக்குள் நுழைய முடியாது. ரொம்ப கஷ்டம் சார்.

நிதினை கொல்ல நினைப்பவனுடன் எனக்கு சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா? நேத்ரா கேட்க, அப்படியில்லை வினு. நிதின் சம்பந்தப்பட்ட எல்லாரிடமும் கேட்டுக் கொண்டே தான் இருக்கேன். அவனை யார் கொல்ல நினைக்கணும்? எதுக்காக? என்று சிந்தித்தான்.

சார், பள்ளியில் உங்களை பார்த்தால் அமைதியாக தோன்றும். ஆனால் இப்ப நல்லா பேசுறீங்க? என்று கேட்ட நேத்ரா, நிதினுக்காக உங்க வாழ்க்கையை விட்டுக் கொடுத்திருக்கீங்க. ரொம்ப கிரேட் சார் என்றாள். அவன் புன்னகைத்தான்.

அக்கா, உங்களோட சின்ன வயசு போட்டோ இருக்கா? காவியன் கேட்டான்.

எதுக்குடா?

இல்லக்கா, இப்ப இவ்வளவு அழகா இருக்கீங்களே? படிக்கும் போது எப்படி இருந்திருப்பீங்க? காவியன் கேட்க,

அதை பார்த்து நீ என்ன செய்யப் போற?

நான் ஒன்றும் செய்யலை. அக்கா உங்க மனசு மாறுனா சொல்லுங்க. உங்களுக்கு நான் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்றான் காவியன்.

ஏய், என்ன பேசுற? அதிகாரமாக அதிரதன் சத்தமிட, நேத்ரா பதிலளிக்காமல் அதிரதனை பார்த்தாள். காவியன் அவனை நக்கலாக பார்த்து சிரித்தான்.

வாங்க உள்ளே போகலாம் நேத்ரா அழைக்க, நீ போ வினு. நாங்க வாரோம் என்று அதிரதன் காவியனை முறைத்து பார்த்தான்.

உங்க முறப்புக்கு பயப்படுற ஆள் நானில்லை என்ற காவியன் எழுந்தான்.

காவியா, எனக்கு உன்னோட கெல்ப் வேணும்?

அக்காவை கரெக்ட் பண்ண கேட்காதீங்க? என்றான்.

அதுக்கில்லை என்று அவனுக்கு வந்த போனை பற்றி கூறினான். அப்படின்னா அக்காவை யாரோ டார்கெட் பண்ணுறானோ?

ஆமா காவியா என்று விஷ்வா என்று அதிரதன் சொல்லும் முன் விஷ்வாவும் சுஜித்ராவும் வந்தனர். அவர்களிடம் வந்த அதிரதன், சுஜி நீ உள்ள போ. நான் இவனிடம் பேசணும்ன்னு அதிரதன் சொல்ல, எல்லாரையும் சந்தேகமாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் சுஜி.

விஷ்வா சட்டையை பிடித்து இழுத்து அதிரதன் காவியன் அருகே வந்தான்.

சொல்லு யாரவன்? அதிரதன் கேட்க, யாரை சொல்ற? என்று விஷ்வா கேட்டான்.

வினுவை கொல்ல நினைப்பவன்.

அவனை உனக்கு எப்படி தெரியும்? விஷ்வா கேட்க, சார் உங்களுக்கு முன்பே தெரியுமா? காவியன் கேட்டான்.

தெரியும்? அவன் யாருன்னு தெரியாது? ஆனால் அவன் வினுவை கொல்ல தான் நினைக்கிறானா? இல்லை வேறெதுவுமான்னு தெரியலை என்றான் விஷ்வா.

வேறெதுவுமா? காவியன் கேட்க, அவளை அடைய நினைக்கிறானா? என்று தெரியவில்லை விஷ்வா சொல்ல, என்ன சொன்ன? என்று அதிரதன் அவன் சட்டையை பிடித்தான்.

ரதா, இப்ப அவளுக்கு உதவி செய்ற. அதோட நிறுத்திக்கோ. இல்ல உன்னோட மொத்த குடும்பமும் காலியாகிடும் என்றான் விஷ்வா.

என்னையே மிரட்டுறியா? அதிரதன் விஷ்வாவை அடித்தான்.

சார் என்று விஷ்வாவை பிடித்த காவியன், என்ன தான் நடக்குது? கேட்டான்.

காவியா, ஒன்றுமே புரியலைடா. வினு பக்கம் யார் சென்றாலும் மரண பயத்தை காட்ட நினைக்கிறான். போனில் மிரட்டுறான். யாருன்னே தெரியலை. நான் வினுவை மறுபடியும் சந்தித்த போது ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆனால் மறுநாளே அவனிடமிருந்து போன் வந்தது. அதற்காக அவளை விடவில்லை. கல்யாணம் வரை பேசிப் பார்த்தேன். அவள் ஒத்துக்கவேயில்லை.

ஆனால் காவியா, அவன் உன்னை எதுக்கு குறி வச்சிருக்கான்னு தெரியலை என்று விஷ்வா சொல்ல, என்ன பைத்தியம் மாதிரி உளறுற? அதிரதன் கத்த.. அதிரதன் அமைதியா இருக்கியா? நான் நினைச்சிருந்தா இப்பவே உன்னை எல்லார் முன்னும் நிறுத்தி இருப்பேன். சேர்மனிடம் பொய் சொல்லி தான் இங்கே வந்துருக்கேன்.

காவியா, உனக்கு விபத்து ஏற்பட இருந்ததை மிதுன் கூட காப்பாற்றினானே? அது எதேச்சையாக நடந்தது இல்லை. அதுவும் அவனோட பிளான்.

என்னை எதுக்கு? காவியன் கேட்க, அதான் எனக்கும் புரியலையே? விஷ்வா சொன்னான்.

நீ சொன்னது போல் பள்ளியிலோ இல்லை கல்லூரியிலோ வினு பின் சுற்றியவனாக இருக்குமோ? அதிரதன் கேட்க, இருக்கலாம். ஆனால் அவன் ஒருவனில்லைன்னு தோணுது என்றான் விஷ்வா.

என்ன சொல்ற?

ஆமா, நிதினை கொல்ல நினைப்பவன் தான் வினுவையும் கொல்ல நினைக்கிறான். கொஞ்சமும் சிங்க் ஆகலை. வினு மேல் ஆசையுள்ளவன் என்றால் அவள் இரு வருடமாக தனியே தான் இருக்கா. அவளை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பான். இப்படி யாரையும் கொல்ல மாட்டான்.

கொலையா? யாரை கொலை செய்தான்? காவியன் கேட்க, விஷ்வா கண்கலங்க அமைதியாக நின்றான்.

யாரடா கொலை செஞ்சான்? எங்களுடன் படித்த யாரையும் கொன்னுட்டானா? அதிரதன் கேட்க, விஷ்வா மண்டியிட்டு அழுது கொண்டே வினு எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கா என்றான்.

சார், அக்கா ஏமாத்துறாங்களா?

ஆமா காவியா, அவள் கணவனுடன் திருமணம் முடிந்து நான்காவது நாளிலே அவன் வேற ஒரு பொண்ணுடன் தொடர்பு வச்சிருக்கான்னு கண்டுபிடிச்சிட்டா. ஆனால் எதையும் அவனிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை. அவள் பக்கம் விடவும் இல்லை. அந்த நான்கு நாட்கள் தான் அவனுடன் வாழவே செய்தாள். அவள் அப்பாவிற்கு தெரிந்தால் உடைந்து விடுவார்ன்னு யாரிடமும் சொல்லாமல் விட்டுட்டா. ஆனால் எதிர்பார்க்காமல் அவள் வீட்டிற்கு சென்ற அவளது பெற்றோருக்கு உண்மை தெரிந்து விட்டது. அவள் அம்மா உடைந்தே போனாங்க. அவள் அப்பா அவனை அடிக்க சென்று அவன் அவரை பிடித்து தள்ளி விட்டான். அவர் மயக்கமடைந்து விட்டார். ஆனால் அவருக்கு ஒன்றுமாகலை.

வினு சொல்வாளே, அவனை பற்றிய உண்மை தெரிந்ததென்று. அன்று அவள் அம்மா, அப்பா இறந்து அவள் வீட்டில் இருந்தாங்க. அதே நேரம் அவள் கணவன் தன் தோழியுடன் சேர்ந்து இருப்பதை பார்த்தாள். பின் இரவு வீட்டிற்கு வரும் போது அவள் அம்மா, அப்பா செத்து கிடந்ததை பார்த்தாள். அவர்களை யாரோ கொன்னுருக்காங்க. ஆனால் யாருன்னே தெரியலை. சின்ன துப்பு கூட இல்லாமல் செஞ்சிட்டு போயிருக்கானுக. யாருன்னு தேடிக்கிட்டு இருக்கா? அவளை சுற்றி இருப்பவர்களிடம் பேசும் அவன் வினுவிடம் மட்டும் பேசுவதில்லை. ஆனால் எழிலனை கொல்ல வருவான்னு நான் நினைக்கலை என்றான் விஷ்வா.

அனைவரும் அதிர்ந்து கேட்க, பின்னே அழும் சத்தம் கேட்டு அனைவர் கவனமும் அங்கு சென்றது.

எழிலன் அழுது கொண்டிருந்தான். நளன் அவனை பிடித்துக் கொண்டிருந்தான்.

எழிலா, நீ எதுக்கு இங்க வந்த? விஷ்வா கண்ணீருடன் அவனிடம் வந்தான்.

யாரும் பக்கத்துல வராதீங்க என்று கத்தினான். காவியன் அவனிடம் செல்ல, அவனை பார்த்த எழிலன் அவனை அடித்து அழுதான். அவன் செய்கையில் காவியன் அமைதியாக நின்றான். அதிரதனும் விஷ்வாவும் காவியனை எழிலன் அடிக்காமல் பிடித்துக் கொண்டனர்.

அதி..நீங்களா? என்று எழிலன் அதிரதனை பார்த்துக் கொண்டே மயங்கினான்.

நளன் தண்ணீர் எடுத்து வந்து தெளித்தான். விழித்த எழிலன், நான் என் அக்காவை பார்க்கணும் என்று அழுதான்.

எழிலா, உன் படிப்புக்காக அவள் உன்னை விட்டு விலக வில்லை. உங்க அம்மா, அப்பாவை மாதிரி அவளால் ஆபத்து வரும்ன்னு பயந்து தான் விலகி இருந்தா. நீ இப்ப அவளை பார்த்தால் ரொம்ப கஷ்டப்படுவா. அழுவா..இப்ப அவள் அழக்கூடாது என்றான் விஷ்வா.

அழக்கூடாதா? அதிரதன் கேட்க, எழிலனும் விஷ்வாவை பார்த்தான்.

அக்கா, ஏற்கனவே கஷ்டத்துல அழுதுகிட்டு இருந்தாங்க. அதை தான் சார் சொன்னார் என்று காவியன் சொல்ல, அதிரதன் காவியனை பார்த்தான். வினு இப்ப அழுதது விஷ்வாக்கு தெரியாதே? சிந்தித்தான்.

சார், நீங்க எப்படி இங்க? அதிரதனை பார்த்து எழிலன் கேட்டான். அதிரதன் அமைதியாக இருந்தான்.

ரதன் வீட்ல தான் வினு இருக்கா விஷ்வா சொல்ல, என்ன? என்று எழுந்த எழிலன்..இல்லைல்ல..விஷ்வா அண்ணா சும்மா தான சொல்றாங்க என்று அதிரதனை பார்த்தான்.

வினு என்னுடன் என் வீட்டில் தான் இருக்கா என்று அதிரதன் சொல்ல, எல்லாரும் ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்துறீங்க? கத்தினான் எழிலன். நளன் அவன் வாயை அடைத்து விட்டு,

யாரும் அசையாதீங்க. ஒருவன் நம்மையே கவனிச்சுட்டு இருக்கான் என்று சொல்ல, சாதாரணமாக பார்ப்பது போல் எல்லாரும் அவனை பார்க்க, போன் பேசிக் கொண்டே அவன் ஓட்டம் எடுத்தான்.

அதிரதன், விஷ்வா, காவியன் மூவரும் வேகமாக அவனை பின் தொடர்ந்து ஓடினர். மூவரும் சேர்ந்து அவனை பிடிக்க, எடுத்த கத்தியை அவனாகவே கழுத்தில் குத்திக் கொண்டு காவியன் மீது விழுந்தான். அவன் பயந்து பின்னே நகர்ந்தான்.

போலீஸிற்கு போன் செய்த அதிரதன், அவ்விடம் நடந்ததை சொன்னான்.

காவியன் பயந்தவாறு அமர்ந்திருக்க, அதிரதன் அவனை பார்த்து விட்டு எழிலா, உங்க அக்கா பணம் கேட்டு வந்தா. தனியா இருக்க போராக இருந்ததால் தான் அவளை உடன் இருக்க வைத்தேன் என்றவுடன் எழிலன் அதிரதனை அடிக்க கையை ஓங்கினான். அதற்குள் மனதிலிருந்ததை அதிரதன் சொல்லி விட்டான்.

ஆனால் எனக்கு வினுவை பிடிச்சிருக்கு என்றான்.

என்ன? என்று திகைத்து விஷ்வா அதிரதனை பார்த்தான். காவியா, இவன் என்ன சொல்றான்? தெளிந்த காவியன் என்னிடமும் சொன்னார் என்று அதிரதனை பார்த்தான். அவன் காவியனிடம் கண்ணை காட்ட, எழிலன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சார், அதான் யுவிக்கு ஆப்ரேசன் முடிஞ்சிருச்சுல்ல. அக்காவை நம்ம நிலையத்துக்கே கூட்டுட்டி வந்துறலாம் என்று காவியன் சொல்லிக் கொண்டே விஷ்வாவை கவனிக்க, அவன் முகம் மாறியது.

அது எப்படி முடியும்? என்னோட ஆறு மாத கான்ட்ராக்ட் என்ன ஆவது? அதிரதன் கேட்க, காவியன் அவனை முறைத்துக் கொண்டே, உங்க கான்ட்ராக்ட்டை கிழிச்சு போட்டிருங்க என்றான்.

இல்லப்பா. என்னால வினுவை விட முடியாதுப்பா.

அக்கா, உங்களுக்கு செட் ஆக மாட்டாங்க என்று இருவரும் மாறி மாறி பேச, எழிலன் இருவரையும் முறைத்தான்.

நளன் புன்னகையுடன், அதிரதனிடம்..நீங்க பேச மாட்டீங்களான்னு நானும் எழிலனும் காத்திருந்தோம். இவ்வளவு க்யூட்டா சண்டை போடுறீங்க? காவியனுடன் நீங்க நெருக்கமாகிட்டீங்க போல என்று கேட்க, இருவரும் நிறுத்தி அவனை பார்த்தனர்.

அமைதியாக இருந்த விஷ்வா, நீ வினுவோட கடைசி வரை வாழ்வதாக இருந்தால் அவளை கல்யாணம் பண்ணிக்கோ என்றான்.

எல்லாரும் திகைத்து அவனை பார்த்தனர்.

நீங்க தான் சொல்றீங்களா? நீங்க அக்காவை காதலிச்சீங்களே? எழிலன் கேட்க, ஆமா காதலித்தேன். ஆனால் என்னால உன்னையும் வினுவையும் பாதுகாப்பா பார்த்துக்க முடியாது. அவளுக்கு என் மீது எப்போதும் காதல் வராது. ஆனால் அதிரதனால் நீயும் வினுவும் பாதுகாப்பா இருப்பீங்க என்றான் கண்ணீருடன்.

ஹே..வினு வாராடா என்று விஷ்வா சொல்ல, எழிலன் நளன் கையை பிடித்து மரத்தின் பின் நிற்க வைத்த அதிரதன் இப்பொழுதைக்கு அவளுக்கு ஏதும் தெரிய வேண்டாம் என்று அவன் நிதினிற்கு போன் செய்து

நிது, வர இவ்வளவு நேரமா? அதிரதன் கேட்க, வினு அருகே வந்து அவனை பார்த்துக் கொண்டே, இவ்வளவு நேரமா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க? என்று கேட்டுக் கொண்டே அதிரதனை பார்த்து, அவனை சுரண்டினாள்.

என்ன? அவன் கேட்க, சார் என்ன செய்றீங்க?

பார்த்தா தெரியலையா? என் நண்பனிடம் பேசிட்டு இருக்கேன்.

போனை மாத்தி வச்சு பேசுனா எதுவுமே கேட்காது என்றாள். எழிலனும் நளனும் வாயில் கையை வைத்து சிரிக்க, காவியன் தலையில் அடித்துக் கொண்டான்.

வா, போகலாம் என்று விஷ்வா வினுவை அழைத்து செல்ல, அப்பாடா என்று போனை நேராக வைத்தான் அதிரதன்.

அண்ணா, இது தான் உன்னோட நம்பரா? தேங்க்ஸ் அண்ணா. நான் இப்ப கிளாஸ்ல இருக்கேன். அப்புறம் கால் பண்றேன் என்று போனை வைத்தாள் பிரணா.

அய்யோ, போச்சு..போச்சு..வினு, உன்னால பாரு என்னோட நம்பர் லீக் ஆகப் போகுது என்று அதிரதன் சத்தமிட்டான்.

ஏன் சார், கத்துறீங்க? போனை கூட நேரா வைத்து பேச முடியாதா? காவியன் கேட்க, அதை கூட விடு. நான் மாத்தி கால் பண்ணிட்டேன்டா. என்னோட குட்டிம்மாக்கு நம்பர் தெரிஞ்சு போச்சு. அவ பாட்டிகிட்ட குடுத்திருவா. பாட்டி யசோகிட்ட கொடுப்பாங்க. நான் எப்படி சமாளிப்பது? புலம்பினான் அதிரதன்.

மரத்தின் பின்னிருந்து வந்த எழிலனும் நளனும் அவனை பார்த்து சிரித்தனர். நீங்க கிளம்புங்க என்றான் காவியன்.

இருங்க. நான் டிராப் பண்றேன் என்று அதிரதன் சொல்ல, என்ன சார் பிராக்கெட்டா? காவியன் கேட்க, இருவரும் அவனை முறைத்தனர்.

எதுக்கு முறைக்கிறீங்க? இவ்வளவு நேரம் என்னிடம் முயற்சி செய்தார். இப்ப நீங்க மாட்டீங்க என்றான் காவியன்.

ஆமா, நீயும் அங்க அதிகமா பேச மாட்ட. இங்க நல்லா பேசுறியே? நளன் கேட்டான்.

சொல்ல தோணுச்சு சொன்னேன் என்று மழுப்பினாலும் அவனுக்கும் நளன் கேட்டது சரி எனப்பட்டது. நான் எதற்கு இவருடன் இவ்வளவு சகஜமா பேசுறேன்? எனக்கு யாரிடமும் அதிகமாக பேசுவதே பிடிக்காதே! என்று யோசனையுடன் அதிரதனை பார்த்தான்.

என்னை எதுக்கு பார்த்துக்கிட்டே நிக்கிற? வினு உன்னை தேடி மறுபடியும் வரப் போறா? எழிலா வாங்க போகலாம் என்று மூவரும் காரில் ஏறினர். அதிரதன் அவனை பார்க்க, காவியா வரலையா? என்று வினு சத்தம் கேட்க, அதிரதன் காரை எடுத்தான்.

சார், எங்க? அவள் கேட்க, ஏதோ வேலை இருக்காம். முடிச்சிட்டு வாரேன்னு சொன்னார் என்று காவியன் சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர்.

காரில் செல்லும் போது நளன் எழிலனிடம் கண்ணை காட்ட, அவன் சும்மா இருடா என்று சைகை செய்ய, ஏதும் கேட்கணுமா? என்று அதிரதன் கேட்டான்.

எழிலன் பேச தொடங்க நினைத்த போது அதிரதன் போன் அவனை அழைத்தது.

நிது ஒரு கெல்ப் பண்ணுடா. என்னோட நம்பரை குட்டிம்மா வச்சிருக்கா. எப்படியாவது அவளிடமிருந்து என் நம்பரை அழிக்கணும்.

ரதா, அவ காலேஜ்ல இருப்பா. நான் எப்படி? அவளோட ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி ஏதாவது செய்டா.

அவ தான் கால் பண்றா ரதா?

ஹே, கான்பரன்ஸ்ல போடு. ஆனால் என்னிடம் பேசுவதை காட்டிக்காத என்றான் அதிரதன். எழிலனும் நளனும் ஆர்வமுடன் அவனை பார்த்தனர்.

குட்டிம்மா, இந்த நேரம் கால் பண்ணி இருக்க? காலேஜ் இல்லையா? நிதின் கேட்க, எனக்கு வாச்சதெல்லாம் அப்படில்ல இருக்கு. ஏய் மாமா, என்ன சொன்ன? குட்டிம்மாவா? அண்ணாவை தவிர யாரும் என்னை குட்டிம்மா சொன்னீங்க. சீவிடுவேன் என்றாள் ரணா.

சரி, பிரணா..சொல்லு. எதுக்கு கால் பண்ண?

அண்ணா நம்பர் இல்லைன்னு கஷ்டமா இருந்தது. அவனே கால் பண்ணான். நம்பரை பதிந்து வைத்தேன். என்னோடவே சுத்துதே அரக்கிறுக்கு

கண்ணன்..நம்பரை அழித்து விட்டான். எனக்கு அண்ணா நம்பர் வேணுமே? உன்னிடம் பேசாம இருக்க மாட்டான். நம்பர் கொடு?

முடியாதுடி குள்ளச்சி. நீயும் உங்க அண்ணனும் விளையாட நான் தான் கிடைத்தேனா? நிதின் சொல்ல,

காரை சட்டென நிறுத்திய அதிரதன், டேய், எதுக்குடா டி போடுற? குள்ளச்சி சொல்லாதன்னு சொல்லி இருக்கேன்ல்ல என்று உணர்ச்சிவசப்பட்டு பேச, அண்ணா நீயும் லயன்ல தான் இருக்கியா? சாப்பிட்டியா? அந்த கொலைகாரனை அப்புறம் பார்த்துக்கலாம் வீட்டுக்கு வா. அம்மா தொல்லை தாங்க முடியலை.

அண்ணா, ரொம்ப முக்கியமான விசயம். உன்னோட இடத்தை நிதின் போல இன்னொருவனும் பிடிச்சிட்டான். நீ வரல கண்டிப்பா அம்மா உனக்கில்லை.

என்ன சொல்ற? ஏதும் பிரச்சனையா? அதிரதன் சீரியசாக, பிரச்சனையில்லை. நிர்மலா சித்திய அதீபன் தான் அவனோட தாத்தா வீட்ல விட்டுட்டு வந்தான். ஆனால் சோகக்கடலில் மிதந்து கொண்டிருந்தான் அதீபன். அலை அடித்தும் அவன் மீளவில்லை. அதனால் அவன் அம்மாவுடன் தான் இருக்கான்.

அப்பா என்றாவது அம்மாவை நம் அறைக்கு விட்டுருப்பாரா? நீ போனதால எல்லாமே போச்சு. அம்மா அதீயோட அறையில தான் நைட் இருந்தாங்க. அவனுக்கு பயங்கர உபசரிப்பு. அவனுக்கு ஊட்டி விடுறாங்கடா. நான் வாயை காட்டினால் கை இல்லையாடின்னு திட்டுறாங்க என்று பிரணா அடுக்கிக் கொண்டே போனாள்.

ஏய், நிறுத்துறியா? அவனிடம் எதுக்கு இதெல்லாம் சொல்ற? அவனுக்கு எங்கே இதோட அருமை புரியப் போகுது? என்னிடம் சொன்னாலும் நானாவது பொறாமைப்பட்டு வீட்டுக்கு வந்து பார்ப்பேன். அவனிடம் சொல்லி அவங்க பக்கத்துல இருக்கும் போதே மதிக்க மாட்டான். இப்ப ரொம்ப ஜாலியா தான் இருக்கான் உன் அண்ணன் என்று நிதின் கத்தினான். பிரணாவிற்கும் தெரியுமே? அவளும் அமைதியாக இருந்தாள்.

ஆனால், நிது அம்மாவுக்கு அவன் தானே ஸ்பெசல் என்று அழுது கொண்டே போனை வைத்தாள். அதிரதன் ஸ்டியரிங்கில் குனிந்து அழுகையை கட்டுப்படுத்தினான்.

நிது..எழிலன் அழைத்தான்.

எழிலா ரதனுடனா இருக்க?

ஆமா நிது, நீ அப்புறம் கால் பண்றியா?

உனக்கு கால் எப்படி இருக்கு? நிதின் கேட்க, அதிரதன் நிமிர்ந்து திரும்பி எழிலன் காலை பார்த்தான்.

இப்ப பரவாயில்லை. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகணும் என்று அதிரதனை பார்த்தான். அவன் கண்கள் கண்ணீரால் இருந்தது.

நான் உன்னிடம் பேசணும். அப்புறம் பேசுறேன் என்று அவன் போனை வைக்க, லயனில் வந்த பிரணா, அண்ணா எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு என்றாள்.

என்ன குட்டிம்மா, திடீர்ன்னு?

அந்த தீக்சி வெளிய வந்துட்டா. உன்னை வெளிய வர வைப்பேன்னு சொன்னா. அப்புறம் கொல்லாம விட மாட்டேன்னு சொன்னா பிரணா சொல்ல,

உனக்கு எப்படி தெரியும்?

அண்ணா, என்னிடம் தான் பேசுனா?

நீ அவளை மீட் பண்ணியா?

இல்லண்ணா. அவள் எங்க காலேஜூக்கு வந்துட்டா. என்னோட ப்ரெண்டு தரமா அவகிட்ட பேசி அனுப்பிட்டான். அண்ணா..நீ நியூஸ் பார்த்துருப்பேல்ல. உன்னை பத்திய அனைத்தும் காணாமல் போக வச்ச வீடியோ. அவன் தான் செய்தான்.

யாரும்மா அவன்? புது ப்ரெண்டா என்று சிந்தனையுடன் கேட்டான்.

ஆமாண்ணா. அவனும் நம்ம சங்கீதனும் க்ளோஸ் என்று காவியன் பெயரை சொல்ல வந்த பிரணா கால் கட் ஆனது.

நிது, என்னது? அவ எப்படி காலேஜ் வரைக்கும் போனா? அதிரதன் கேட்க, எப்படி போயிருப்பா? ஒன்று பணம் கொடுத்து போயிருப்பா. இல்லைன்னா மிரட்டி போயிருப்பா என்றான் நிதின்.

டேய், பாப்பாவுக்கு பாதுகாப்பு இல்லை என்றான் அதிரதன்.

இல்ல உள்ள ஒரு சாரிடம் பாப்பாவை பார்த்துக்க சொல்லி இருக்கார் அப்பா. அதனால பிரச்சனை இருக்காது.

யாருடா அந்த பையன்? நம் கண்ணுக்கு சிக்காத வீடியோ அவனுக்கு சிக்கி இருக்கு என்ற அதிரதனுக்கு அந்த வீடியோ பார்த்து வினு மயங்கியது நினைவுக்கு வந்தது.

எழிலா, உங்க அக்காவை கல்யாணம் செய்தவன் யாரு? அவன் பேர் என்ன? அதிரதன் கேட்க, அவனை பத்தி யாரும் என்னிடம் பேசாதீங்க. இல்ல இப்பவே காரை விட்டு இறங்கிடுவேன் என்றான் எழிலன்.

காரா? ரதா, ரொம்ப வெளிய சுத்தாத. நல்லதில்லை நிதின் சொல்ல, சரிடா, அப்பாவை தவிர யாருக்கும் என் நம்பர் தெரிய வேண்டாம் என்றான் அதிரதன்.

எல்லாரும் உங்களிடம் பேசணும்ன்னு நினைப்பாங்கல்ல? எழிலன் கேட்க, நம்பர் தெரிந்தால் அந்த கொலைகாரனுக்கு தெரிந்துவிடும் என்றான் அதிரதன்.

யார் தான் அவன்? எழிலன் கேட்க, தெரியலையே? என்ற அதிரதன்..நிதின்  நாம படிச்ச ஸ்கூலுக்கு போ. வினு பின் யாரெல்லாம் சுத்துனாங்களோ? எல்லாரோட விவரமும் அனுப்பு.

எதுக்குடா?

அதிரதன் சொன்னதை கேட்டு, வினுவை கொல்ல பார்க்கிறானா?

தெரியலடா. இனி தான் தெரிஞ்சுக்கணும். அவளுக்கு இப்ப பாதுகாப்பு வேணும்.

ரதா, இப்ப வினுவை விட அவளை சுத்தி இருக்கிறவங்களுக்கு தான் ஆபத்து. பார்த்துக்கோ. ஆனா எழிலா உன்னோட அக்காவை பாரு நல்லா ஏமாத்தி இருக்கா?

எழிலா, நீ வினுவை பார்த்தாயா? அதிர்ந்து நிதின் கேட்க, பார்த்தேன் நிது. ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்பாவை அவனுக கொன்னது கூட தெரியாம இருந்திருக்கேன் என்று அழுதான். நளன் அவன் கையை இறுக்கமாக பிடிக்க, அவளோட கணவன் யாரு? நிதினும் கேட்டான்.

அக்கா, உங்களிடம் சொல்லலையா?

அவளிடம் கேட்கவே கஷ்டமா இருக்கு. அவள் கேட்டாலும் சொல்ல மாட்டா நிதின் சொல்ல, நானும் சொல்ல மாட்டேன். அக்கா செய்வதில் ஏதாவது காரணம் இருக்கும். காரை எடுங்க. கொஞ்சம் டயர்டா இருக்கு என்றான் எழிலன். அவர்கள் போனை அணைக்க அதிரதன் அவன் அம்மா பெயர் எழுதப்பட்ட நிலையத்திற்கு வந்து காரை நிறுத்தினான்.

Advertisement