Advertisement

அத்தியாயம் 20

காலையில் எழுந்து யுவியையும் தயாராக்கி தானும் தயாரான நேத்ரா சமையலறைக்குள் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். யுவன் சத்தம் இல்லாமல் இருக்க, அவனை அனைத்து இடத்திலும் தேடி விட்டு அவர்கள் அறைக்கு சென்று அதிர்ந்து..யுவி..என்று அழுதாள்.

அதே பதட்டமுடன் அதிரதன் அறைக்கதவை தட்டினாள். அவன் எழுந்து கதவை திறந்து, என்ன வேகமாகவே எழுப்பி விட்டுட்ட. ஒன்பது மணிக்கு எழுப்புன்னு தான சொன்னேன் என்று கொட்டாவி விட்டுக் கொண்டே அவளை பார்த்தான்.

அவனை பார்த்ததும் அவள் அழுகை கூடியது.

வினு, எதுக்கு அழுற? அவன் கேட்க, சார்..அங்க..என்று அவன் கையை பிடித்து அவர்கள் அறைக்கு இழுத்து சென்றாள்.

யுவியை பார்த்த அதிரதன் பதறி உள்ளே சென்று அவனை தூக்கினான். படுக்கை முழுவதும் இரத்தமாகி இருந்தது. அவன் மயங்கி இருந்தான்.

“யுவி என்னை பாரு” என்று கண்ணீருடன் அதிரதன் சத்தமிட, நேத்ராவும் அழுது கொண்டே நின்றாள்.

வினு..பையனை பிடி வாரேன் என்று அவன் அறைக்கு சென்று ஆடையை போட்டு கையில் போனை எடுத்து, யுவியை வாங்கி..ரிப்போர்ட் எடுத்துட்டு வா, நான் காரை எடுக்கிறேன் என்று காரை போர்டிகோ அருகே கொண்டு வந்து நிறுத்தி ஹாரன் செய்தான்.

யுவியை தூக்கிக் கொண்டு கையில் ரிப்போர்ட்டுடன் அழுது கொண்டே வந்து காரின் பின்னே அமர்ந்து யுவியை மடியில் போட்டு அழுதாள். கார் மருத்துவமனைக்குள் விரைந்தது.

அதிரதன் காரை நிறுத்த, யுவியை தூக்கிக் கொண்டே நேத்ரா உள்ளே ஓடி வந்தாள். அவன் ஹூட்டியை இழுத்து விட்டு மாஸ்க் அணிந்து உள்ளே வந்தான்.

யுவனை மருத்துவரிடம் காட்ட, அவர் ரிப்போர்ட்டை பார்த்து, நீங்க பணத்தை கட்டினால் ஆப்ரேசன் இப்பவே செய்து விடலாம். குட்டிப்பையன் வேற. சீக்கிரமே செய்வது நல்லது சார் என்றார்.

இப்பவே ஆப்ரேசன் செய்திடலாம். உடனே செய்யுங்க. எங்க பையன் பழைய மாதிரி எங்களுக்கு வேண்டும் என்றான். நேத்ரா அதிரதனை பார்த்தாள்.

சார், செய்யலாம். பழையவாறு இருப்பான்ன்னு சொல்ல முடியாது..என்று நர்ஸை அழைத்து ஏற்பாடு செய்ய சொல்ல, அவர்கள் யுவியை தூக்கி சென்றனர்.

பின்னே செல்ல இருந்த நேத்ரா கையை பிடித்த அதிரதன் தன் மாஸ்க்கை கழற்றினான்.

சார், நீங்களா? என்று மருத்துவர் கேட்க, நான் தான். எங்களுக்கு யுவி பழைய மாதிரி வேணும் என்றான் முறைப்புடன்.

ஏம்மா, சார் பெயரை அன்றே சொல்லி இருந்தால் பையனுக்கு அன்றே முடித்திருக்கலாம். இப்ப கொஞ்சம் கிரிட்டிக்கல் தான் என்றார்.

அவள் கண்ணீருடன் வெளியே சென்றாள். அவன் நல்லபடியா எங்களுக்கு வேணும் என்றான் அதிரதன்.

பையனுக்கு ஏதுமாகாம பார்க்கிறோம் சார் என்று அந்த பொண்ணு? என்று அவர் கேட்க, அவன் முறைத்தான்.

சாரி சார் என்று அவர் வேகமாக செல்ல, அதிரதனும் மாஸ்க்கை போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.

நேத்ரா அழுது கொண்டே அமர்ந்திருந்தாள். யுவனை பார்த்து விட்டு, அவளருகே வந்து அமர்ந்து அவள் கையை பிடித்தான் அதிரதன்.

வினு, யுவிக்கு ஒன்றுமாகாது என்று அவளை தேற்ற, அவன் தோளிலே சாய்ந்து கொண்டாள் நேத்ரா. யாரோ அவர்களை கவனிப்பது போல் உணர்ந்தான் அதிரதன்.

வினு..என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு, இரு வாரேன் என்று நகர்ந்து நிதினுக்கு அழைத்தான். அவன் தான் நிலையத்தில் பிரச்சனையை சரி செய்ய வந்திருந்தானே? அவர்கள் யாருமே போனை எடுக்கவில்லை. மீண்டும் நேத்ரா அருகே வந்து அமர்ந்தான்.

சார், அவனுக்கு ஏதும் ஆகாதுல்ல நேத்ரா கேட்க, அவன் பதிலளிக்காமல் அவளை பார்த்தான். அவன் கண்ணை மூடி அவள் தோளில் சாய்ந்தான். அதிரதனுக்கு நேற்றைய இரவில் யுவி பேசியது நினைவில் வந்தது.

மணி பதினொன்றரை ஆக யுவியின் சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வந்தார். அவனுக்கு நல்லா இருக்கு. ஆனால் மாலையில் தான் விழிப்பான். பார்த்துக்கோங்க என்று அவர் செல்ல இருவரும் உள்ளே வந்தனர்.

யுவியை பார்த்து அவன் கையை பிடித்துக் கொண்டு, சாரிடா நான் வினு சொன்ன போதே சிகிச்சையை பார்த்திருக்கணும். உனக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல்ல. நான் சுயநலமா இருந்துட்டேன் என்று கண்ணீருடன் அவன் கையை கண்ணில் வைத்து அழுதான் அதிரதன்.

நேத்ரா அவன் தோளில் கை வைத்தாள். அவளை இடுப்போடு அணைத்து அழுதான்.

சார், சுயநலமான்னு ஏதோ சொன்னீங்க? என்று நேத்ரா கேட்க,

அவளை பார்த்த அதிரதன், தனியா இருக்க பிடிக்கலை. அதனால் தான்..என்று அவளை பார்த்து..உங்களை முதலில் இருந்தே கவனித்தேன். உங்க பசங்க கூட இருக்க வைக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனால் அவங்க படிப்பு கெட்டிரும்ன்னு தான் உனக்கு ஆறு மாத கான்ட்ராக்ட் போட்டேன். யுவியுடன் நேரம் செலவழிக்க நினைத்து தான் நம்பிக்கை இல்லைன்னு உன்னையும் யுவியையும் என் அருகே வைத்துக் கொண்டேன்.

அவள் கோபப்பார்வை வீச, எழுந்த அதிரதன் ப்ளீஸ் கோபப்படாத வினு. ஏற்கனவே கஷ்டமா இருக்கு. எனக்கு உண்மையிலே நிலையத்தை பற்றி தெரியாது என்று அவளை அணைத்தான்.

சார், அவள் அழைக்க, ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்றான்.

எனக்கு புரியுது சார். ஆனால் யுவிக்கு முன்னதாகவே சிகிச்சை செய்திருக்கலாம் என்று அவளும் அவனை அணைத்தாள்.

அதிரதன் போன் அழைக்க, நேத்ரா அவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்து அணைத்தவாறே போனை எடுத்தான். அவள் விலகி யுவி அருகே சென்று அமர்ந்தாள்.

என்னடா கால் பண்ணா எடுக்கவேயில்லை என்று அதிரதன் கோபமாக கேட்க, நீ வினுவோட எங்க இருக்க? என்ன செஞ்சுகிட்டு இருக்க? நிதின் கேட்டான்.

நிது, எதுக்கு இப்படி கேக்குற?

ஏய், ஃபூல் உங்கள ரிப்போர்ட்டர்ஸ் வாட்ச் பண்றாங்க. அது கூட தெரியாம..

வாட்? ரிப்போர்ட்டரா? என்று அதிரதன் கதவை திறக்க, ஒருவன் ஓடினான். அவன் பின்னே அதிரதன் விரட்ட, ரதா..என்ன பண்ற? வினுவ தனியா விட்டுட்டு போகாத நிதின் கத்தினான்.

அதிரதன் நின்று பின்னே பார்த்தான். யாரும் சந்தேகப்படும் படி இல்லை.

ரதா, நீ வினுவ பார்த்துக்கோ. நான் ஆட்களை வைத்து பாலோ பண்றேன் என்ற நிதின் விக்ரமை அழைத்து அவன் ஆட்களை வைத்து பார்க்க சொல்லி அவனை கட் செய்தான்.

ஏற்கனவே பத்திரிக்கை ஆபிஸ்ல..நீ வினு தோளில் சாய்ந்தது போல் இருக்கும் புகைப்படத்தை அவன் எடுத்து அனுப்பி இருக்கான். உன் நல்ல நேரம் நமக்கு தெரிந்தவன் பார்த்ததால் அதை அழித்து விட்டான். எங்கடா இருக்க? நிதின் சத்தமிட்டான்.

ஹாய் நிது? என்று ஆத்விகா உள்ளே வந்தாள்.

அவளை பார்த்து விட்டு, சொல்லித் தொலை. இதுக்கு தான் கம்பெனிக்காவது வான்னு சொன்னேன். நீதான் கான்ட்ராக்ட் அது..இதுன்னு. உன்னை…அந்த போட்டோஸ் மட்டும் வெளிய வந்தால் உன்னோட பேர் மட்டுமல்ல வினு பெயரும் கெட்டுப் போகும் என்றான்.

டேய், யுவிக்கு என்று அதிரதன் சொல்ல, சரி..இப்ப எப்படி இருக்கான்? பெரிய பிரச்சனை ஏதுமில்லையே? நிதின் அமைதியானான். சரி, டாக்டரிடம் பேசிட்டு கால் பண்ணு.

நிது, நீ வர முடியுமா? யுவனை தனியே விட்டு மருத்துவரிடம் செல்ல யோசனையா இருக்கு.

எனக்கு வேலை இருக்கே. விஷ்வா அப்பாவோட அங்க இருப்பான். இங்க வந்தவுடன் அவனுக்கும் வேலை இருக்கு. ரதா, நீ அந்த பசங்கள உதவிக்கு கூப்பிடலாமே? நிதின் சொல்ல..

சரிடா, நான் பார்த்துக்கிறேன். எப்படியாவது அந்த ரிப்போர்ட்டரை பிடித்து கேமிராவில் ஏதும் இருந்தா எடுத்திரு நிது. இனி கவனமா இருக்கேன் என்று அதிரதன் வருத்தமாக சொன்னான்.

வருத்தப்படாதடா. அந்த பையனுக்கு ஒன்றுமில்லைன்னு தான் மருத்துவர் சொல்லீட்டாரே? அப்புறம் வினுவையும் பார்த்துக்கோ என்று நிதின் போனை வைத்தான்.

ஆத்வி அவனிடம், அண்ணாவிடம் தான பேசின?

ஆமா, என்ன இந்த நேரத்துல வந்திருக்க?

அம்மா, சாப்பாடு கொடுத்து விட்டாங்க என்றாள். ஆத்வி அவனுக்கு எடுத்து வைத்தாள். இப்பொழுது தான் காவியனுக்கு அதிரதன் போன் செய்து வர வைத்தான்.

காவியனுக்கு சங்கீதன், ராகவ் போன் செய்ய அவன் எடுக்காமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். ரணா போன் செய்ய எடுத்த காவியன், ரணா யுவியை தான் பார்க்க போறேன். அவனுக்கு ஆப்பரேசன் செய்திருக்காங்களாம்.

நானும் வாரேன் அவள் சொல்ல, இல்லை..இல்லை..நான் முதல்ல பார்த்துட்டு சொல்றேன். நாளை வந்து பார்த்துக்கோ என்றான். அதிரதனை ரணா பார்க்க கூடாது என காவியன் அவளை தடுத்தான்.

நான் ஈவ்னிங் கால் பண்றேன். பிரச்சனையில்லைன்னு சொன்னாங்க. நீ ஃபீல் பண்ணாத என்று போனை வைத்து விட்டான் காவியன்.

ரணா பெருமூச்சோடு அமர்ந்து, நண்பர்களிடம் யுவியை பற்றி சொன்னாள்.

“சிவநந்தினி அன்பு நிலையத்தில்” பசங்க எல்லாத்தையும் செய்து முடிக்க சேர்மன் செழியன், சிவநந்தினி, விஷ்வா வந்து இறங்கினர்.

அவர்களை வரவேற்க நிலையத்தில் இருந்த பொண்ணுங்களும் பசங்களும் இரு வரிசையாக நின்று கைதட்டி வரவேற்றனர். அவர்கள் ஆச்சர்யமாக பசங்களை பார்த்துக் கொண்டே வர, “வெல்கம் சார்” என்று சுஜித்ரா அழைக்க, பின்னே பாட்டியும் மற்றவர்களும் தங்களது வணக்கத்தை தெரிவித்தனர்.

என்னை பார்க்க வேற பொண்ணு தான வந்தா? அவள் எங்கே? சிவநந்தினி கேட்க, அந்த பொண்ணு ஒரு வேலையா போயிருக்கா. வர நாட்களாகும் மேம் என்றான் விஷ்வா.

செழியன் காதில் வந்து, நான் சொன்னேன்ல அந்த பையனும் இங்கே தான் இருக்கணும். அவனை பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் அவன் இல்லை என்று வருத்தமாக எல்லா பசங்களையும் பார்த்தார் சிவநந்தினி.

அடிக்கடி வந்தேன்னா பார்க்க போற? இதுக்கு எதுக்கும்மா வருத்தப்படுற? அவர்கள் சொல்ல, மற்றொரு கார் வந்தது. அனைவரும் திரும்பி பார்க்க, அதீபன் வந்து இறங்கினான்.

அப்பா கிளம்பும் போது கால் பண்றேன்னு சொன்னீங்க. சொல்லவேயில்லை என்று அதீபன் செழியன் அருகே வந்து நின்றான்.

எல்லாரும் உள்ளே செல்ல, மயூரி வெண்பாவிடம், இந்த சார் செம்ம ஹேன்சம்மா இருக்காருல்ல என்று அதீபனை சைட் அடிக்க, அவன் கேட்டுக் கொண்டே பெருமையோடு நடந்தான்.

யாரு இவரா ஹேன்சம்? என்று உள்ளே அமர்ந்திருந்த எழிலனை பார்த்து..இவரை பார்த்தால் “எட்டீஸ் கிட்” மாதிரி இருக்கே? என்று முகம் சுருக்கினாள் வெண்பா.

சட்டென நின்ற அதீபன் திரும்பி வெண்பாவை பார்த்தான். மயூரி பே என விழித்துக் கொண்டிருந்தாள். அவள் இவனை பார்க்காமல், என்ன தான் இப்ப இருக்கும் பசங்க மாதிரி தலைய ட்ரிம் பண்ணா டூ கே கிட் ஆகிடுவாரா? அழகா இருக்காரு. மூக்கை பார்த்தாயா? சப்பி போய் சைனா காரன் போல இருக்கு. நம்ம நாட்டு பசங்களுக்குள்ள மீசையே இல்லை. வளர்ந்திருக்கார் பாரு மூளையேயில்லை என்று அவள் பேச..

போதும்டி..நிறுத்து என்றாள் மயூரி அழுத்தமாக.

சும்மா இருடி. நீ தான ஆரம்பிச்ச..நான் சொல்லி முடிச்சிடுறேன்.

அதான் முடிக்கிறேன்னு சொல்றாங்கல்ல. முடிக்கட்டுமே என்று வெண்பாவை முறைத்துக் கொண்டு நின்றான் அதீபன்.

என்னடா நின்னுட்ட? சிவநந்தினி கேட்க, ம்ம்..சொல்லு அப்புறம் என்றான்.

எல்லாரும் வெண்பாவை பார்க்க, “சாரி சார்” அவள் உங்கள பத்தி தெரியாம பேசிட்டா என்றாள் மயூரி.

தெரியாமல் பேசியது போல் தெரியலையே? அதீபன் கேட்க,

அம்மா, இந்த குட்டிப்பொண்ணு என்னையே கிண்டலா பேசுறா? என்றான் அதீபன்.

நான் ஒண்ணும் குட்டிப்பொண்ணு இல்லை. அப்புறம் நான் கிண்டல் பண்ணலை. உண்மையை தானே சொன்னேன்.

வெண்பா..என்று சுஜி அருகே வந்து, சார் அவள் எல்லாரிடமும் இப்படி தான் பேசுவா. சாரி சார்..என்று வெண்பா சாரி சொல்லு என்றாள் சுஜி.

நான் உண்மைய தானே சொன்னேன்.

அப்படி என்ன தான் சொன்னம்மா? செழியன் கேட்க, அவள் பேசியதை அவரிடமும் சொல்ல, அய்யோ..உன்னோட வாயை என்று மாயா அவளிடம் வந்து, வெண்பா சாரிடம் சாரி சொல்லு..

நான் உண்மைய தானே சொன்னேன். செழியனை பார்த்து, சார் உங்க வீட்ல எல்லாரும் இவரை மாதிரி இல்லையே? சப்ப மூக்கு. அப்புறம் என்று மீசை கூட இல்லை. அப்படியே சைனா காரன் மாதிரி இருக்கார். அதை சொன்னது தப்பா?

சப்ப மூக்கா? என்று அதீபன் அவளை நெருங்க, நளனுடன் வந்த எழிலன் வெண்பாவிற்கு முன் வந்து, சார்..இனி உங்களை அவள் எதுவும் சொல்ல மாட்டாள் என்று எழிலன் திரும்ப நிற்க முடியாமல் தடுமாறி விழ வந்தவனை செழியனை கடந்து வந்து விஷ்வா நிறுத்தி விட்டு,

நீ எதுக்கு நடக்குற? முதல்ல ரெஸ்ட் எடு. கீழ விழுந்திருப்பேல்ல என்று அவனை அழைக்க, சார் ஒரு நிமிசம்..என்று வெண்பாவிடம் சாரி சொல்லு என்றான்.

எழிலா, நான் ஒன்றுமே சொல்லலை. மயூரி பேசியதற்கு எதிராக பேசினேன். அவ்வளவு தானே.

எழிலன் நளனை பார்க்க, அவன் பேண்டிலிருந்து எடுத்த பிளாஸ்திரியை அவள் வாயில் நளன் ஒட்ட, வாய திறந்த..அவ்வளவு தான். எல்லாரும் கிளம்பும் வரை நீ பேசவே கூடாது என்று அவளை மிரட்டினான்.

ம்ம்..என்று அவள் முணங்க, செழியன் சிரித்து விட்டு வெண்பாவிடம் வந்து, அவளுடைய பிளாஸ்திரியை எடுத்தார்.

சார், அது அவள் வாயில் இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது என்றான் எழிலன்.

தைரியமா நினைக்கிறத பேசுறால்ல. இருக்கட்டும் என்று அவர் எடுத்து விட, வெண்பா எழிலனை முறைத்தாள்.

ஏம்மா, என் பிள்ளை உனக்கென்ன வயசானவன் மாதிரியா தெரியுறான்? சிவநந்தினி கேட்க, “ஆன்ட்டி” என்று சொல்ல வந்த வெண்பா தலையை இழுத்த தேவா “மேம் சொல்லு” என்றான்.

அதுக்கு ஏன்டா முடிய பிடிச்சு இழுக்கிற? என்று சொல்லிக் கொண்டே அவன் பக்கம் திரும்ப, அவன் கையிலிருந்த நோட்டால் முகத்தை மூடிக் கொண்டே பின்னே சென்றான்.

இருடா உன்னை கவனிக்க வேண்டிய நேரத்துல கவனிக்கிறேன்.

வெண்பா, என்ன பேச்சு? அமைதியா இரு விஷ்வா சத்தம் கொடுக்க, அதீபனை முறைத்துக் கொண்டே அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தாள்.

ம்ம், பசங்க விஷ்வாவிற்கு பயப்படுவாங்க போல செழியன் கேட்க, அப்படியெல்லாம் இல்லை சார். சார் எங்களுக்கு கெல்ப் பண்ணுவார் என்று வெண்பா வேறிடம் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“இவ மானத்த வாங்காம விட மாட்டா போல தேவா” நண்பன் ஒருவன் சொல்ல, சுஜியிடம் வந்து மிதுன் அண்ணாவை வர சொல்லவா? அப்ப தான் வாயை மூடுவா என்றான் அவன்.

யாரது? சிவநந்தினி கேட்க, அவர்கள் விசயத்தை சொல்ல, முதல்ல இதை மாத்தணும் என்றான் அதீபன்.

மாத்த போறீங்களா? என்று வெண்பா எழ, அவள் முன் நளன் வந்து பிளாஸ்திரியை காட்டினான்.

இந்த பசங்க இங்க இருக்கிற பசங்க மாதிரி இல்லையே? அதீபன் விஷ்வாவை பார்த்தான்.

அவங்க..என்று அவன் தயங்க, எழிலன் என்னோட தம்பி. எங்க அம்மா, அப்பா இப்ப தான் இறந்தாங்க. அவனுக்கு ஆக்சிடண்ட் ஆனதால் இங்க என்னுடன் இருக்கான். எனக்கு வேலை இருப்பதால் பார்த்துக்க முடியாது. அவன் நண்பன் நளன் தான் பார்த்துக்கிறான். சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிடுவான் என்று முடித்தாள். விஷ்வா அவளை பார்க்க, எழிலன் கண்கள் கலங்கியது.

எழிலா, அழுறியா? என்று வெண்பா அவனிடம் வந்து அமர்ந்தாள். எல்லாரும் அவனை பார்க்க, சுஜியும் கண்கலங்க அவனை பார்த்தாள்.

வெண்பாவுக்காக இவன் எதுக்கு வந்தான்? என்று சுஜி யோசிக்க,

சுஜி..விஷ்வா அழைத்தான்.

வாங்க சார், என்று அழைத்து சென்றாள். பசங்க திறமையை பார்த்து அசந்தனர்.

எல்லாருமே படிக்கலாம் என்ற செழியன், சில பாரமை சுஜியிடம் கொடுத்து இதில் பசங்க விவரங்களை கொடுங்கள். பின் இவர்களுக்கான தேர்வை நடத்தி யாரை எந்த வகுப்பில் சேர்க்கலாம் என்று பார்க்கலாம் என்றார்.

என்ன பரீட்சையா? என்ற நிவேதா குட்டி பாப்பா.. காய்ச்சல் வந்துருமே? எப்படி எழுதுவது? கேட்க, காய்ச்சலா? அதீபன் கேட்டான்.

நிரா அக்கா தான் சொன்னா. பரீட்சை வந்தாலே நிறைய திருநீறு இட்டு காய்ச்சல் வரக்கூடாதுன்னு சாமி குப்பிடுவா. அவளுக்காக நானும் சாமிகிட்ட கும்பிடுவேன்.

அதீபன் அவளை தூக்க, க்யூட்டாக எழுந்து ஓடி வந்த நிலவன் அவனிடம் நீங்க என்னை படிக்க வைக்க வேண்டாம். யுவன் சாகாம என்னோட விளையாட கூட்டிட்டு வாரீங்களா? என்று கேட்க, எல்லாருக்கும் தூக்கி வாரி போட்டது.

என்ன சாகாமலா? என்று அதீபன் செழியனை பார்த்தான்.

விஷ்வா, அந்த பையன் எங்க? செழியன் கேட்க, சார்..என்று அவன் தயங்க, அவன் எங்க அக்கா கூடவும் ஒரு அங்கிள் கூடவும் வீட்ல இருக்கான். கூட்டிட்டு வாரீங்களா? அவன் கேட்க,

விஷ்வா, இங்க என்ன பண்றீங்க? இந்த பையன் என்ன சொல்றான்?

அப்படின்னா, நீ இப்ப தான் சேர்ந்திருக்கிறியாம்மா? செழியன் சுஜியிடம் கேட்க. ஆமாம் சார். ஆனால் இதுக்கு முன்னாடி இருந்த பொண்ணு?

அதானே இது அந்த பொண்ணு இல்லையேன்னு சொன்னேன்ல. நீ வந்தவுடன் இதை சொல்ல வேண்டாமா? சிவநந்தினி அதட்டினார்.

மேம்…என்று கண்கலங்க சுஜி அவரை பார்த்தாள்.

“நான் தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்” என்றான் விஷ்வா.

இல்ல மேம், நான் தான் சொல்லலை என்று சுஜி கூற, உங்கள் இருவருக்கும் ஏற்கனவே தெரியுமா?

தெரியும் சார். நாங்க ஒண்ணா தான் படிச்சோம்.

அக்கா..என்று எழிலன் அழைத்து, நீங்க முன்பிருந்து வேலை பார்க்கலையா?

இல்ல எழிலா.

அப்ப யாரு தான் இங்க இருந்தது? எழிலன் கேட்க, அவள் விஷ்வாவை பார்த்தாள்.

அக்கா, இங்க இருந்தது எங்க அக்காவா? நளன் கேட்க, சுஜி கண்ணீர் எழிலனுக்கு பதில் சொன்னது.

நளனை தள்ளி விட்டு விஷ்வாவிடம் வந்த எழிலன், அக்கா தான சொல்லுங்க சார்..கத்தினான். விஷ்வாவாலும் பதில் சொல்ல முடியலை.

எழிலா, உங்க அக்கா தான் இங்க இரண்டு வருசமா இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க என்றாள் வெண்பா.

ஏன் சொல்லலை? எல்லாரும் சேர்ந்து ஏன் மறச்சீங்க? என்று விஷ்வா சட்டையை பிடித்து, நான் அக்காவை தேடுறேன்னு தெரியும்ல. இப்ப கூட கேட்டேனே? தெரியாதுன்னு சொன்னீங்க? என்று அழுதான் எழிலன்.

ப்ளீஸ் புரிஞ்சுக்கோ எழிலா, அவ தனியா இருக்கணும்ன்னு நினைக்கிறா? கொஞ்ச நாள் மட்டும் தெரியாத மாதிரி காட்டிக்கோ.

இவனோட அக்காவுக்கு நிதினை தெரியுமா? கேட்டான் அதீபன். ஆமா தெரியும் என்ற எழிலன்..

இந்த பையன் என்ன சொன்னான்? அக்கா யாரோட இருக்கா? என்று எழிலன் கத்தினான்.

அவ நல்லா தான் இருக்கா. உன்னை விட அவள் பாதுக்காப்பான இடத்துல தான் இருக்கா. கொஞ்ச நாள் தான் எழிலா..ப்ளீஸ்..விஷ்வா சொல்ல,

நீங்க எல்லாரும் அவளோட ப்ரெண்டா? சுஜிக்கா..நீயும் இவங்களோட சேர்ந்து என்ன செஞ்சுருக்கீங்க? சீற்றமுடன் பேசினான்.

விஷ்வாவும் கோபமாக, அவ எங்களோட ப்ரெண்டு தான். அவ பாதுகாப்பா இருக்கா. அவளுக்கு ஏதுமில்லை. ஆனால் உன்னோட இந்த நிலையை விட மோசமான நிலையை தாண்டி வந்திருக்கா. அவ இங்க இருந்தா கூட பாதுகாப்பு இருக்காது. உனக்கு புரியுதா? கத்தினான்.

எழிலன் உடைந்து அழுதான். தெளிவா சொல்றீங்களா? என்று எழிலன் அழுது கொண்டே கேட்டான்.

நீ ஓய்வெடு. நான் சொல்கிறேன்.

அவனுக்கு சொல்றது இருக்கட்டும். அந்த பொண்ணும், குட்டிப்பையனும் இங்க வரணும். விஷ்வா..நீ இப்படிப்பட்ட காரியம் பண்ணுவன்னு நினைக்கல என்றார் சிவநந்தினி.

மேம், அவ தப்பான வேலைக்காக போகலை. பணத்துக்காக கான்ட்ராக்ட் போட்டு அதுவும் எங்க எல்லாரும் தெரிஞ்ச நம்பிக்கையானவுடன் தான் இருக்கா. எந்த பிரச்சனையும் இல்லை என்றான் விஷ்வா. எழிலன் கோபமாக எழுந்து அவனிடம் வந்தான்.

சிவநந்தினி விஷ்வாவை அறைந்தார். தெரிஞ்சவன்னாலும் எப்படி தனியா ஒரு பொண்ண அனுப்பி வைப்ப? பணம் வேணும்ன்னா கேட்க வேண்டியது தான? அவர் கேட்க, பணம் கேட்கணுமா? நான் எப்படி? என்று அவன் நிறுத்த..

அவனால் எப்படி கேட்க முடியும்? சொல்ல முடியும்? எல்லாத்துக்கும் காரணமானவங்கல்ல பக்கத்துல வச்சுக்கிட்டு கேட்டா அவன் குடும்பத்தை தான் அழிச்சிருவாங்கல்ல என்று அதீபன் கோபமாக செல்ல, விஷ்வா கண்ணீருடன் அமர்ந்தான்.

எல்லாரும் என்ன பேசுறீங்க? அண்ணா..உங்களுக்கு ஒன்றுமில்லையே? என்று எழிலன் அருகே வர, நில்லு எழிலா, நீ என்னை நம்புறியா? இல்லையா? விஷ்வா கேட்க, அவன் சுஜியை பார்த்தான்.

விஷ்வா..அவங்க என்ன சொல்றாங்க? அம்மாவுக்கு ஒன்றுமில்லையே? சுஜி  கேட்க, ப்ளீஸ் அதை எல்லாரும் விடுறீங்களா? கத்தினான் விஷ்வா. அதீபன் அமைதியாக அமர்ந்தான்.

நிதுவுக்கு தெரியுமா? எழிலன் கேட்க, அவனுக்கும் தெரியும். இதோ நிக்கிறாலே இவளுக்கும் தெரியும். உன்னோட அக்கா வேலைக்காரியா தான் கான்ட்ராக்ட் போட்டிருக்கா என்றான் விஷ்வா. சுஜியும் கண்ணீருடன் எழிலனை பார்த்தாள்.

நீ அந்த பொண்ணோட தம்பியா? உன்னோட தம்பின்னு சொன்னம்மா? செழியன் கேட்டார்.

சார், இது உங்களுடைய நிலையம். அவ தான் இந்த இரண்டு வருசமா பசங்க எல்லாருக்கும் தேவையான செஞ்சு குடுத்திருக்கா. தயவுசெய்து எழில் இங்க இருக்கட்டும் ப்ளீஸ் என்றான் விஷ்வா.

வேற எதுவும் பிரச்சனையா? செழியன் கேட்க, அதீபன் எழிலன் அருகே வந்து, இது ஆக்சிடண்ட் தானா? கேட்டான்.

ஆமா என்றான் எழிலன்.

குனிந்து அவன் காலை பார்த்த அதீபன், எனக்கு பார்த்தால் அப்படி தெரியலையே?

சார், ப்ளீஸ் அவனை விடுங்கள். பசங்கள பார்க்கலாமே? சுஜி சொல்ல, சொல்லுங்க என்ற அதீபன் தூரத்தில் அமர்ந்திருந்த விக்ரமை பார்த்தான்.

அப்பா..என்னோட வாங்க என்று அவன் வெளியே வர, சார் இத்தனை நாள் எங்க பிரச்சனைய நாங்க தான் பார்த்துக் கொண்டோம். இனியும் பார்த்துப்போம் என்று அவர்களை தடுத்தான் விஷ்வா.

விஷ்வா,.செழியன் சத்தமிட்டார்.

நான் உங்களிடம் எல்லாத்தையும் சொல்றேன். எங்களுக்கு நேரம் கொடுங்கள். பிரச்சனை பெருசான்னா நம்ம கம்பெனியோட வொர்க்கர்ஸ் எல்லாருமே பாதிக்கப்படுவாங்க என்றான்.

வாங்க., நாம இன்னொரு நாள் வரலாம் என்று சிவநந்தினி சொல்ல, நீங்க வந்தது பசங்களை பார்க்க. பாருங்க மேம் என்றான் விஷ்வா.

செழியனை அமர வைத்து மீண்டும் தேர்வை பற்றி அதீபன் பேசினான். பின் அவர்கள் கிளம்பினார்கள்.

விஷ்வாவையும் காரில் அமர சொல்லி அவர்களுடன் செழியனும், சிவநந்தினியும் அழைத்து சென்றனர். சிவநந்தினி ஆரம்பித்தார்.

விஷ்வா, அந்த பொண்ணு நிது காதலிச்ச பொண்ணா? அவர் கேட்க, ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தான்.

உனக்கும் பிடிக்குமோ? செழியன் கேட்க, அதற்கும் தலையை மட்டும் ஆட்டினான்.

அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிந்ததாமே? அவர் கேட்க, ஆமா சார்.

அந்த பொண்ணோட பேரு என்ன? சிவநந்தினி கேட்க, விஷ்வா போன் அலறியது. அவரை பார்த்துக் கொண்டே போனை எடுத்தான்.

வாட்? எப்ப?

ம்ம்..இப்பவே வாரேன் என்று இருவரையும் பார்த்து போனை வைத்து விட்டு, சார் நான் கொஞ்சம் போகணும்?

எங்க போகப் போற?

சார், பர்சனல் என்றான். இருவரும் அவனை பார்க்க, அவசரம் சார், அரை விடுமுறை நாளாக எடுத்துக்கிறேன் சார். காரை நிறுத்துங்களேன் என்று டிரைவரிடம் கூறியவன் முடிஞ்சா ஆபிஸ்க்கு வந்துடுறேன் சார்.

விஷ்வா, நாங்க டிராப் பண்றோம். நோ..சார், நான் போயிடுவேன். டிரைவர் அண்ணா பார்த்து போங்க என்று சொல்லி காரை விட்டு இறங்கி பஸ்ஸை பிடித்தான். அவர்கள் சென்று விட்டனர். நேராக நிலையத்துக்கு சென்று நேராக சுஜியிடம் சென்று பாட்டியை பார்த்து, பசங்கள எல்லாரும் பார்த்துக்கோங்க. யுவனுக்கு ஹாஸ்பிட்டல்ல ஆப்ரேசன் முடிந்ததாம். நாங்க போயிட்டு வாரோம் என்று சுஜி கையை பிடித்து இழுத்து, ஏறு என்றான்.

சார், நாங்களும் வரவா? வெண்பா கேட்க, யாரும் கேட்டை தாண்டக்கூடாது. புரியுதுல்ல, நளா பசங்க வந்தாலும் யாரும் வெளிய போகாம பார்த்துக்கோங்க. விக்ரம் சார், நான் சொன்னேன்ல்ல பார்த்துக்கோங்க என்று தனசேகரனிடம் எல்லாரும் வந்தவுடன் கதவை பூட்டிக்கோங்க..

வெண்பா சண்டை போடக்கூடாது என்று பைக்கை எடுக்க, சுஜி அவனுடன் சென்றாள். என்றும் பார்க்காத விஷ்வாவாக அவளுக்கு தெரிந்தான்.

காவியன் ஹாஸ்பிட்டலுக்குள் வந்தான். அப்பொழுது அதிரதன் நேத்ரா கையை பிடித்து, எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு என்றான். இதை பார்த்துக் கொண்டே வந்த காவியன் கோபமாக, சார் என்ன பண்றீங்க? கேட்டான்.

வந்துட்டான்ல்ல. இனி இவள் பக்கம் கூட வர முடியாதே என நினைத்தான் அதிரதன். காவியா..ஒன்றுமில்லை என்ற நேத்ரா, யுவிக்கு ஆப்ரேசன் முடிந்தது. அவன் நல்லா இருக்கான்னு சொன்னாங்க. இப்ப மருத்துவரை பார்க்க போகணும் என்று அதிரதனை பார்த்தான்.

காவியன் கையை பிடித்து தனியே அழைத்து சென்ற அதிரதன். யாரோ கண்காணிப்பது போல இருக்கு. அதனால யுவனை பார்த்துக்கோ. நாங்க மருத்துவரிடம் பேசிட்டு வந்திடுறோம்.

நீங்க யுவி பக்கம் இருங்க. நான் பேசிட்டு வந்துருவேன்.

நான் நேரடியாவே சொல்றேன். எனக்கு வினுவை பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறேன். அதுக்காக பேச ஆரம்பித்தேன். நீ சரியா வந்துட்ட.

வேண்டாம் சார், நீங்க வேற, அக்கா வேற.

எங்க வீட்ல ஒத்துக்கிட்டா உங்களுக்கு பிரச்சனையில்லைல்ல அதிரதன் கேட்க,

எப்படி ஒத்துப்பாங்க சார்?

கண்டிப்பா வினுவை எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்.

எப்படி? பணத்தை தூக்கி போட்டாங்களே? அது போலவா?

எங்க சித்தி மட்டும் தான் அப்படி? அவங்களையும் வீட்டிலிருந்து அனுப்பிட்டாங்க. இனி பிரச்சனையில்லை.

முதல்ல யுவியை பாருங்க.

அதையும் பேசணும். வினு மாதிரி யுவனும் என்னுடன் இருக்கட்டுமே?

சார், என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?

முதல்ல கூட கஷ்டத்துல நம்பிக்கையான ஒருவர் இருக்கணும்ன்னு தான் வினுவுடன் கான்ட்ராக்ட் போட்டேன். ஆனால் அவளுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். அவ ஒத்துக்க மாட்டான்னு தெரியும். நான் காத்திருப்பேன். இதை விட வினுவை சுற்றி ஏதோ தவறாக நடப்பது போல இருக்கு. உங்க யாருக்கும் ஏதும் தோன்றவில்லையா?

சார், அவங்க பக்கத்துல இருக்கணும்ன்னு ஏதேதோ சொல்லாதீங்க என்று காவியன் சொல்ல, நிஜமாக தான். வினு, விஷ்வா இருவருமே எதையோ மறைக்கிற மாதிரி தெரியுது. விஷ்வா எப்பொழுதும் என்னுடன் பேசியதே இல்லை. ஆனால் முறைத்துக் கொண்டே இருப்பான். இன்று போனில் அவன் பேசியது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அவன் திரும்ப திரும்ப சொன்னது வினுவை பத்திரமா பார்த்துக்கோன்னு தான். அதே போல் வினு தம்பியையும் எவனோ கொல்லும் வரை வந்திருக்கான். கண்டிப்பா அவங்கள சுத்தி ஏதோ நடக்குது.

காவியா, நான் சொல்வது போல் விஷ்வாவிடம் சொல்லேன். அவன் என்ன சொல்றான்னு பார்க்கலாம்? என்றான்.

ஒரு நிமிசம், உங்க ப்ரெண்டு இருக்காங்க. சுஜி அக்கா இருக்காங்க. அவங்கள கூப்பிடாம என்னை கூப்பிடிருக்கீங்க?

தெரியலை. எனக்கு உன் மேல தான் நம்பிக்கை இருக்கு. வினுவிடமும் உன்னிடமும் தான் கோபமே வர மாட்டேங்குது.

என்ன?

நிஜமா தான் சொல்றேன். அதை விடு. நீ சொன்னது போல் யுவி சரியாகிட்டான் என்று வினுவை நிலையத்திற்கு அழைத்து போயிடலாம்ன்னு விஷ்வாவிடம் சொல்லிப் பாரு. அவன் பதிலுக்காக காத்திருக்கேன்.

எதுக்கு? காவியன் கேட்க, நீ கேட்டவுடன் அவன் சரி சொன்னா.. பிரச்சனையில்லை என்று அர்த்தம். ஒரு வேளை அவன் அவளை என் வீட்டில் இருக்கணும்ன்னு சொன்னா கண்டிப்பா ஏதோ பெருசா இருக்குன்னு அர்த்தம் என்றான்.

காவியா, இருவரும் என்ன பண்றீங்க? நேத்ரா சத்தமிட, வந்துட்டோம் அக்கா என்று கேட்கிறேன். பார்க்கலாம் என்று காவியன் சொல்ல இருவரும் வெளியே வந்தனர்.

இருவரையும் பார்த்த நேத்ரா, இவ்வளவு நேரமா என்ன செஞ்சீங்க? மருத்துவர் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவாராம். வாங்க சார்..யுவியை பற்றி கேட்க வேண்டாமா? என்று அவள் முன் செல்ல, அதிரதன் காவியனை பார்த்துக் கொண்டு அவள் பின் சென்றான்.

காவியன் யுவனை பார்த்து நின்று கொண்டிருந்தான். உள்ளே சென்றவர்களை பார்த்த மருத்துவர், பையன் இரு நாட்கள் இருக்கட்டும். இங்கேயே யாராவது உடனிருந்து பார்த்துக்கோங்க. நாளை மறுநாள் நான் பார்த்த பின் அழைத்து செல்லுங்கள் என்று அவனுக்கான மருந்துச்சீட்டை அவர்களிடம் நீட்டினார்.

சார், அவனுக்கு சாப்பிட எப்பொழுதும் போல் கொடுக்கலாமா?

ம்ம்..அவன் விழிக்கட்டும். பார்த்துட்டு கொடுக்கலாம். சத்தான ஆகாரம் கொடுக்கலாம் என்றார்.

சரிங்க சார், அவனுக்கு வேற எதுவும் பிரச்சனையிருக்காதுல்ல சார்.

பெயின் இருக்கும். ஆனால் அதிகமா இருக்காது. தாங்க முடியாத வலி ஏற்பட்டால் அழைத்து வாங்க.

சார், அப்ப இன்னும் அவனுக்கு முழுதாக குணமாகவில்லையா?

அவன் சின்னப்பையன். பயப்பட வாய்ப்பிருக்கு. பக்கத்திலே இருங்க. பையனுக்கு அந்த அளவு போகாது. ஒரு சதவீதம் வாய்ப்பிருக்குன்னு தான் சொன்னேன். கவனிக்காம விட்றக் கூடாதுல்ல..அவர் சொல்ல,

புரியுது சார் என்றாள்.

பையன் ஒரு வாரம் ஓய்வெடுத்த பின் எப்பொழுதும் போல் ஓடி ஆடி விளையாடலாம் என்று சொல்லி விட்டு அழைப்பு மணியை அழுத்தினார்.

செவிலியர் ஒருவர் வந்தார். அவரிடம் மருந்தை போட்டு விடுங்கள் என்றார். மூவரும் வெளியே வந்தனர்.

சார், நீங்க வாங்கிட்டு வாங்க. நான் இன்ஜெக்சன் போடணும் என்றார் செவிலியர்.

சார், நான் வாங்கீட்டு வரவா?நேத்ரா கேட்க, இல்ல நீ யுவன், காவியனுடன் இரு. நான் வாங்கிட்டு வாரேன் என்று அதே மாஸ்க்குடன் சென்றான்.

அதிரதன் வாங்கி விட்டு வரும் போது அவனுக்கு அழைப்பு வர, போனை எடுத்தான்.

உனக்கு வினுவோட என்னடா வேலை? ஒருவன் சினத்துடன் கேட்க,

ஹே..யாருடா பேசுற?

நான் யாருன்னு உனக்கு தேவையில்லை. வினு நேத்ரா பக்கம் வராத அதிரதன்.

என்னால முடியாது. நான் அவள் அருகில் தான் இருக்கிறேன். இருக்க போகிறேன். இருப்பேன்..

அவ பக்கத்துல யாரும் இருக்கக்கூடாது என்று கண்ணாடி ஏதோ உடையும் சத்தம் கேட்டது.

யாரு நீ? உனக்கும் வினுவிற்கும் என்ன சம்பந்தம்? அதிரதன் கடுகென பொரிந்தவாறு கேட்டான்.

எனக்கும் அவளுக்கும் சம்திங்..சம்திங்..என்று பயங்கரமாக சிரித்தான்.

வாட்?

யா..அதிரதா? அந்த சம்திங்..என்னன்னு நீயே கண்டுபிடி..கண்டுபிடி..என்று வில்லனாக சிரித்தான்.

இங்க பாரு. நானிருக்கும் வரை அவள் பக்கத்துல யாரும் நெருங்க முடியாது.

ம்ம்..முயற்சி செய். எனக்கான இந்நேரத்திற்காக தான் இத்தனை வருசமாக காத்திருக்கேன். நீ குறுக்கிட்டால் உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்.

நீ வினுவை கொல்ல பார்க்கிறாயா? அதிரதன் கேட்க, அவன் மை காட்..என்று அவன் மேலும் சிரித்தான்.

ஏய், முதல்ல சொல்லுடா..

நான் தான் உன்னை கண்டுபிடிக்க சொன்னேனே? கண்டுபிடி..என்று போன் வைக்கப்பட்டது.

டேய், நீ யாருன்னு கண்டுபிடிக்கிறேன் என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு உள்ளே வந்தான். அவன் கோபம் யாருக்கு தெரிந்தது. மாஸ்க் அணிந்திருந்ததால் யாருக்கும் ஏதும் தெரியவில்லை.

திடீரென முன் வந்தவனை பார்த்து பயந்து பின் சென்றார் செவிலியர். மருந்தை அருகே வைத்து விட்டு அமர்ந்தான் அதிரதன். அவன் கண்களில் அப்படியொரு கோபம் அப்பட்டமாய் தெரிந்தது நேத்ரா, காவியனுக்கு.

சார், என்று காவியன் அருகே வந்து அமர, அதிரதன் இமைகள் தாழ்ந்தன. அதிரதன் தோளில் காவியன் கையை வைக்க, சட்டென அவன் காவியனை அணைத்துக் கொண்டான். அவன் கோபம் கீழிறங்கி காணாமற் போனது. இதை நேத்ராவும் ஆச்சர்யமா பார்த்தாள். காவியனுக்கு அதிரதன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் அதிரதனை பார்க்க, வினுவையும் யுவியையும் பார்த்துக்கோ. நான் வெளிய போயிட்டு வர்றேன் என்று வெளியேறினான் அதிரதன்.

 

 

 

 

 

Advertisement