Advertisement

அத்தியாயம் 2

காவியனின் கல்லூரியில் புதிய மாணவ, மாணவிகளுக்கான விழா  நடந்து கொண்டிருக்க, அவன் கலையரங்கத்தில் வைத்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்.

டேய், இப்ப என்னடா புத்தகம் தேவையா? சங்கீதன் கேட்க, இதை தவிர எனக்கு ஏதும் முக்கியமில்லை என்று அவன் சொல்ல பசங்க சிலரின் நடனத்தை ஸ்டூடண்டஸ் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்தனர் காவியனை ராகிங் செய்தவர்கள்.

டேய்..வாடா என்று காவியன் சட்டையை பிடித்து தனியே இழுத்தனர்.

ரணா அங்க பாரு. உனக்கு உதவி அவன் நல்லா மாட்டிகிட்டான் லட்சணா  காவியனை கை காட்டினாள்.

அவன விடுங்கடா சங்கீதன் அவர்களிடம் வர, சங்கீத் நீ தலையிடாத என்றான் காவியன்.

காவியனுக்கு மிதுன் சொன்னது தான் ஓடிக் கொண்டே இருந்தது. அன்று இவர்கள் காவியனை அடித்த காயத்தை பார்த்து நண்பர்கள் கொதித்தெழுந்தனர். மிதுன் தான் அறிவுரை வழங்கினான்.

இவனுக எல்லாரும் பெரிய இடத்து பசங்க. அதனால நாம பொறுமையா தான் இருக்கணும். பிரச்சனையானால் நேத்ரா அக்கா தான் பதில் சொல்லணும். விசயம் நம்ம நிலைய முதலாளி வரை போயிடும். அடுத்து யாருக்கும் உதவும் எண்ணமே அவங்களுக்கு போயிடும் என்று சொல்லி இருப்பான்.

என்னடா பண்றீங்க? அவன விடுங்க என்று மேம் அவர்கள் அருகே வர, அவரை தள்ளி விட்டு, காவியனை மேடைக்கு இழுத்து சென்று நடனமாடுபவர்களை விலக்கி விட்டு காவியனை நிற்க வைத்தனர்.

ஹாய்..ப்ரெண்ட்ஸ்..இவன் யாரு தெரியுமா? இவன் பெயர் காவியன். இவனுக்கு அம்மா, அப்பாவெல்லாம் இல்லை. இவன் ஒரு அநாதை. அநாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தான். ஓசி காசில் வளர்ந்தவன்..என்று அவனை ஏளனமாக பார்த்தனர் அவர்கள்.

டேய்..இது மட்டுமா? அம்மா, அப்பா பேர் கூட தெரியாதவன். இவனெல்லாம் நம்ம காலேஜில் இருக்கணுமா? என்று அவர்களுள் ஒருவன் கத்தினான். பிரணவி அதிர்ந்து பார்க்க,..

கீழ வாங்கடா என்று பிரபசர்ஸ் மேலே வர, சார் உண்மையை தானே சொன்னோம் என்று கேட்க, அவரும் ஏதும் பேச முடியாமல் நின்றார்.

உண்மை தான் என்ற காவியன், அம்மா, அப்பா பேர் தெரியாதவன் தான். ஆனால் எனக்காக யாருமில்லாமல் இல்லை.

எனக்காக இருக்காங்க. ப்ரெண்ட்ஸ், ஆசிரமத்தில் எங்க நேத்ரா அக்கா, பாட்டி, ஆன்ட்டி, குட்டி பசங்க.. இதையெல்லாம் விட, எங்க ஆசிரமத்தை நடத்தும் நல்ல உள்ளங்கள் என்றான்.

அவனது நேர்மறையான பதிலில் அனைவரும் கை தட்டினர். சீனியருக்கு கோபம் ஏற, ஏதாவது பர்ஃபார்ம் பண்ணிட்டு நீ கீழே இறங்கு என்றவுடன் ..இவனுக்கு என்ன தெரியும்? ஏளனமாக சிலரும், பாவம் இப்படி கஷ்டப்படுத்துறானுகளே என்று சிலரும் பேச கேட்ட பிரணவிக்கு கோபம் வந்தது. அவள் எழ, அவள் நண்பர்கள் அவளை தடுத்தனர்.

நமக்கு ஏற்படும் அவமானத்தை கிடைக்கும் வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்ளணும் என்று நேத்ரா ஒரு முறை கூறியதை நினைத்தவன்..ஹே பாய்ஸ், “புட் தி சாங்” என்றான் காவியன்.

என்ன? சீனியர் கேட்க,

சீனியர் நீங்க தான பர்ஃபார்ம் பண்ண சொன்னீங்க? காவியன் கேட்க, டான்சு எப்படி இவனுக்கு தெரியும்?

வாடா..அவனே அசிங்கப்பட தயாரா இருக்கான். நாம போகலாம் என்று சொன்னான் ஒருவன்.

காவியன் புன்னகையுடன் ஏற்கனவே நடனமாடிய பசங்களை பார்த்தான். அவர்கள் பாடலை போட, ராக் பர்ஃபார்மன்ஸை போட்டு அனைவரையும் கவர்ந்த நம் காவியன் ரணாவின் மனதினுள் அவளை அறியாமலே வர ஆரம்பித்தான் .

அனைவரும் கூச்சலிட்டு அவனை பாராட்ட, அவனுடைய பிரபசர் பெருமையுடன் அவனை பார்த்தார். முடித்த காவியன் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அவனது புத்தகங்களை உள்ளே எடுத்து வைத்து பையை போட்டுக் கொண்டு, சீனியர் முன் வந்து பிறக்கும் போதோ, யார் மூலமாக பிறந்தோம் என்றோ நம் திறமைக்கோ தெரியாது. அது நாமே வளர்த்துக் கொள்வது. பணக்காரன் தான் திறமைசாலி என்பதில்லை என்று செல்ல, அவன் முன் வந்த மேம்,..

ஏய்..நில்லு, நான் உன்னை நடனப்போட்டியில் சேர்த்து விடுகிறேன்.

மேம்..எனக்கு அதெல்லாம் தேவையில்லை. என்னால் முடியும்ன்னு காட்டினேன். இதுக்கு மேல சீனியர் யாரையும் தாழ்வா நினைக்கக்கூடாதுன்னு தான் இதை செய்தேன். மற்றபடி இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. எனக்கு நிறைய வேலையிருக்கு என்று அங்கிருந்து கிளம்பினான். அவன் செயலும், பேச்சும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. நில்லுடா என்று சங்கீதனும் அவன் பின் ஓடினான். ரணா அவளை மறந்து நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரணா அவனை பார்த்தது போதும். வா..கிளம்பலாம் என்று ராகவ் சொல்ல, அவள் தன் நண்பர்களுடன் கிளம்பினாள்.

அன்றிலிருந்து கல்லூரியில் வைத்து காவியனை ஆழமாக கவனிக்க ஆரம்பித்தாள் பிரணவி. அவள் நண்பர்களுக்கும் காவியனை பிடித்து பேச சென்றால், அவன் விலகி சென்று விடுவான்.

அவன் ஓவரா பண்றான் ரணா? லட்சனா சொல்ல, ஹே..அவன் டிசர்வ் டைப்பா இருக்கான். அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பழகுவது போல் தெரியல என்றாள் ஆரா.

எங்க போகப் போறான்? நம்ம வகுப்பு தான பார்த்துக்கலாம் என்றான் கண்ணன்.

அன்று அதிரதன் பற்றிய மற்றொமொரு தகவல் அனைவரும் அவனை தவறாக நினைக்கும்படி பல பெண்களுடன் வந்தது. ஆனால் அவனோ தனியொரு வீட்டில் யாருமில்லாமல் இருந்தான்.

அதிரதன் அவன் வீட்டை விட்டு சென்றவுடன் தன் மகன் அதீபனை கம்பெனிக்குள் நுழைக்க எண்ணினார் நிர்மலா. அவன் கிளப் கிளப்பாக சுற்ற அவர் கடுப்பானார்.

ஆனால் அதிரதன் பெயரை காக்கவும் அவன் உழைப்பை வீணாக்க விரும்பாத அவளின் மூத்த தங்கை ஆத்விகா, அவன் இடத்திற்கு அவள் அப்பா உதவியுடன் வந்தாள். அவள் உதவிக்காக அழைத்தது நம் அதிரதனின் தோழனும் செக்கரட்டரியுமான நிதினை தான். அவள் அப்பாவும் அவளுடன் சேர்ந்து கம்பெனி பொறுப்புகளை அவனை பார்த்துக் கொள்ள பணித்தார்.

நிதினிற்கு என்று குடும்பம் யாருமில்லை. அவனுக்கு எல்லாமே சிவநந்தினியும், இளஞ்செழியனும் தான். அதிரதனுக்கு அவன் அம்மா மீது தவறான எண்ணமுள்ளதால் அதிகமாக அவருடன் உறவாட மாட்டான். ஆனால் நிதின் உரிமையாக அம்மா என்று அழைப்பான். இருவரில் யார் அழைத்தாலும் உடனே வீட்டிற்கு வந்து விடுவான். அதிரதன் அம்மாவின் நிம்மதிக்கு காரணமும் நிதின் தான். அவன் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் வீட்டிலே சிறு வயதிலிருந்து வளர்ந்தாலும் அவன் வளர வளர, நிர்மலாவின் நடவடிக்கையால் வெளியே தங்க ஆரம்பித்தான். இந்த விசயத்தில் அதிரதனின் அப்பா பேச்சை கூட அவன் கேட்கவில்லை.

ஆத்விகாவிற்கு நிதினை முதலில் இருந்தே இருந்து பிடிக்கும். அவள் வளர வளர அது காதலாக மலர்ந்தது. ஆனால் அவன் அவளையும் பிரணவியையும்  சிறுபிள்ளையாக தான் எண்ணி வந்தான். ஆத்விகாவும் மாடல் உடைகள் அணிவாள். ஆத்விகா கம்பெனிக்கு வர, ஷேர் கோல்டர் சிலரை பேசியே வர வைத்து விட்டாள். இளஞ்செழியனுக்கு எதையோ எட்டி பிடித்தது போல் இருந்தது. அதிரதனால் போன மரியாதை ஆத்விகாவால் கிடைத்தது. ஆனால் அதிரதன் போல் அவளால் திறம்பட கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால் தற்போதைய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தாள். நிதின் ஆத்விகாவை ஆச்சர்யமாக பார்த்தான்.

ஆத்துவா இது? வேற லெவல் பண்ணிட்ட போ என்று அவளை புகழ, இதுக்கு பதிலா நாம சாப்பிட வெளிய போகலாமா? கேட்டாள்.

ஓ.கே. நானே கூட்டிட்டு போறேன் என்றான் நிதின். அவன் டிரீட்டுக்காக சொல்ல, அவள் டேட்டிங்காக நினைத்துக் கொண்டு, இவனுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே தெரியலையே? என்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் புருவத்தை உயர்த்த, இல்லை என்ன சாப்பிடலாம்ன்னு யோசிச்சேன் என்றாள்.

முதல்ல கிளம்பலாம் வாம்மா என்று அவன் அவள் கையை பிடித்து இழுக்க, அவளுக்குள் பட்டாம்பூச்சிக்கள் பறந்தது. புன்னகையுடன் இருவரும் சென்றனர்.

அதிரதன் பெயரை போக்க அவன் தங்கையும் நிதினும் சேர்ந்தே செயல்பட்டனர். ஆனால் அவனை பற்றி தவறான எண்ணமே அனைவர் மனதிலும் பதிந்தது. மீடியா, இணையதளம் என அனைவரும் அவனை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். நேத்ராவும் பசங்களும் இரவு செய்தியை பார்த்தனர். அதில் அதிரதனை பற்றிய செய்தி வர,

ஏம்மா, இது நம்ம செழியன் சார் பையன் தான?

பாரின்ல படிச்சதால பசங்க கெட்டுபோறாங்க பாட்டி சொல்ல, அவள் புன்னகையுடன் பாட்டி, யாரை பற்றியும் முழுதாக தெரியாமல் எல்லாரும் பேசுவதால் தான் இப்படி நடக்குது. சார் மகன் இப்படி இருக்க மாட்டார் என்று அவள் உறுதியாக சொன்னாள்.

உனக்கு என்னம்மா அவரை பற்றி தெரியும்? அவர் கேட்க, நம்ம முதலாளி மகனை பற்றி தெரியாமல் இருப்பேனா பாட்டி என்றாள்.

என்னமோ போடுறானுக? என்று ஆனந்தி அக்கா சொல்ல, என்னம்மோ இல்லைக்கா. யாரோ வேண்டுமென்றே செய்வது போல் இருக்கு என்றாள்.

எவனும் ஏதும் செய்யட்டும். நமக்கென்ன? மல்லிகா அக்கா சொல்ல, நேத்ரா புன்னகைத்தாள். காவியனும் அலைபேசியில் இந்த செய்தியை பார்த்தான். அனைவருக்கும் விசயம் பகிரப்பட இதை அறியாத நம் நாயகனோ தனியே எப்பொழுதும் உறக்கத்தை தழுவிக் கொண்டிருந்தான்.

                 ஒரு மாதத்திற்கு பிறகு

ரணா? என்னாச்சு? என்று கேட்டுக் கொண்டே ராகவ்வும் நண்பர்களும் பிரணவி பின்னே ஓடி வந்தனர். அவள் ஓரிடத்தில் கோபமாக அமர்ந்திருந்தாள்.

அண்ணா அழைத்தால் கூட எடுக்கவே மாட்டேங்கிறான். பயமா இருக்குடி. எல்லாத்துக்குமே இந்த தீக்சி தான் காரணம். அவளுக்கு நான் செய்தது போதாது கோபமாக பேசினாள்.

என்னடி செஞ்ச? லட்சணா கேட்க,

ஒன்றுமே இல்லை. நேரா அவங்க வீட்டுக்கு சென்று அவள் அறையில் இருந்த பொருட்களை களைத்து விட்டு அவள் மீது சாப்பாட்டை கொட்டி எச்சரிக்கை விடுத்து வந்துள்ளேன் என்றாள்.

கண்ணன் சிரித்துக் கொண்டு,”ப்யீட்டியோட லூட்டியா?” கிண்டல் செய்தான்.

கொஞ்சமாவது சீரியசா இரு. ரணா நீ செஞ்சது சரியில்லை. அவ ரொம்ப டேஞ்சரானவ ஆரா சொல்ல,

நம்ம ரணா, “கெட்டவளுக்கெல்லாம் கெட்டவ” ராகவ் சொல்ல, இவள கெடுக்கிறதே நீங்க தான்டா என்ற ஆரா கோபமாக எழுந்தாள்.

ரணா, முதல்ல அண்ணா பக்கத்துல இருந்தாங்க. ஆனால் இப்ப எங்க இருக்காங்கன்னு உனக்கு என்ன, அப்பாவுக்கே தெரியல. நீ பிரச்சனைன்னு அப்பாகிட்ட போனா உனக்கு தான் திட்டு விழும். அப்பாவும் அந்த தீக்சித்தாவின் அப்பாவும் ப்ரெண்ட்ஸ். அவங்க அண்ணா மேரேஜ தள்ளி தான் வச்சிருப்பாங்க. அவ மட்டும் உங்க அண்ணாவ கல்யாணம் பண்ணி வீட்டுக்கு வந்தா “மகளே நீ தொலைஞ்ச”. எத்தனை நாள் உன்னோட அண்ணா உனக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. அவள விட்டு தள்ளியே இரு.

நான் அண்ணா செல்லம். அதனால என்னை யாரும் ஏதும் செய்ய முடியாது என்றாள் ரணா.

அவர்கள் பின்னிருந்த இருக்கையில் சிரிப்பு சத்தம் மேலோங்கியது. சங்கீதன் சிரித்துக் கொண்டிருந்தான். காவியன் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

எதுக்குடா சிரிக்குற? என்று ரணா கோபமாக எழுந்தான்.

ஏம்மா, அந்த பொண்ணு மேல சாப்பாட்டை கொட்டுனேல்ல. அவளோட ரியாக்சனை பார்த்தியா? கேட்டான் சிரித்துக் கொண்டே.

ஆமா, அதை பார்க்காம விட்டேன்னே?

ரொம்ப முக்கியம் பாரு. அலைபேசியை கொடு ரணா ஆராதனா கேட்டாள்.

எதுக்கு? ரணா கேட்க, உன்னோட பாதுகாப்புக்கு தான். அப்பாவிடம் சொல்லி வைக்க வேண்டாமா?

அப்பாவிடமா? நோ..நோ..கண்டிப்பா தர மாட்டேன். அவருக்கு தீக்சு மேல பிரியம் இருக்கு. நான் செய்ததை சொன்னால் நான் அவ்வளவு தான் ஆரா.

ஆரா பக்கத்துல வராத. இதெல்லாம் நடந்து ஒரு மாசமாகிடுச்சு. அவ என்ன செய்ய போறா? ப்ளீஸ் விட்டுரு.

சொன்னா கேளு ரணா. டேய் அவள பிடிங்கடா ஆரா சொல்ல, “என் பப்புக்குட்டில்ல” வந்துரு செல்லம் என்று கண்ணன் ஒரு பக்கம் வர, பக்கத்துல வந்த சீவிடுவேன் என்று ரணா சங்கீத் பக்கம் ஓடி வந்தாள்.

ஹேய், அவளை விட அலைபேசி தான் முக்கியம் என்று ஆராதனா சொல்ல, சங்கீத் அவளை பிடித்து அலைபேசியை பிடுங்க, போனை மறுகையில் மாற்றி கையை தூக்கி குதித்தாள்.

ஏய், குதிக்கிறேன்னு கீல்ஸ் வச்சு காலை மிதிக்கிறாடா காவியா இவளை பிடி என்று சங்கீத் அவளை தள்ள, புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த காவியன் மீதே விழுந்தாள் ரணா.

அவன் கோபமாக அவளை முறைக்க, அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நண்பர்கள் அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்க, வேகமாக சாரி காவியன் என்று எழுந்து வேண்டாம்டா குடுத்துருங்க என்று சொல்ல, ரணா அலைபேசி ஆரா கைக்கு வந்தது.

ரணா அழுதுவது போல் ஆராவை பார்த்தாள். ரணா,“உன்னோட நல்லதுக்கு தான?” என்றான் கண்ணன்.

உனக்கு என்ன தெரியும்? தெரியாம பேசாத? அண்ணாவை பார்த்து பயப்படுறுவங்கல்லாம். என்ன பேச்சு பேசுறாங்க தெரியுமா? ஃபாரின்ல படிச்சா தப்பா தான் பொண்ணுங்களோட பழகுவாங்களா? அவனுக்கும் அந்த தீக்சித்தாவிற்கு கல்யாணம் முடிவு செய்யும் நேரம் கூட அவன் அவளுடன் தனியாக பேசியது கூட இல்லை.

அம்மா மேலுள்ள கோபத்தில் அவன் எந்த பொண்ணுடனும் பழகியது கூட இல்லை. ரெண்டு வருசமா இங்க வந்ததிலிருந்து வேலை, வீடு என தான் இருந்தான். திடீர்ன்னு அந்த தீக்சித்தா பேசியது தான் எனக்கு சந்தேகமா இருக்கு. அவளுக்கு அண்ணாவை சிறு வயதிலிருந்தே தெரியும். அப்படி இருக்க? அந்த பொண்ணோட ஹோட்டல் ரூம்ல அண்ணா இருந்ததை எப்படி நம்பலாம்? என கோபமான ரணா, ஆரா நீ சொன்னது சரி தான். அவள் டேஞ்சர் தான். அவள என்னோட அண்ணா பக்கத்துல கூட இனிமே வர விடமாட்டேன் என்றாள்.

இப்ப தான உன்னிடம் சொன்னேன்? ஆரா சினமாக, உன்னோட அண்ணா  இருக்கிற இடமே தெரியல. இதுல அவ எப்படி உன்னோட அண்ணாவிடம் செல்வாள்? முதல்ல இந்த ஸ்கேண்டில நம்புற பொண்ணு உன் அண்ணா பக்கம் கூட வர மாட்டாள்.

ஏய், அவள பத்தி உனக்கு முழுசா தெரியல. தற்கொலை செய்வது போல் நடித்து விட்டு, அவள் என் அண்ணாவுக்கு வாழ்க்கை கொடுக்கிறாளாம் அப்பாவிடம் சொல்லி அனுப்பி இருக்காள். அண்ணா, எங்க வீட்ல இருந்து அவளோட வீட்டுக்கு போய் மேரேஜை கேன்சல் செய்ய பேசி இருக்கான். அவனிடம், என்னை பத்திரிக்கை ஆட்கள் சூழ்ந்ததால் தான் இப்படி பேசி விட்டேன் என்று சாரி சொல்லி இருக்காள். அண்ணா..நம்புவானா என்ன? எனக்கு கல்யாணத்திலும் உன் மீதும் விருப்பமில்லைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிருக்கான்.

அப்பாவுக்கு கோபம் என்றாலும் அவனுக்கும் மதிப்பு கொடுத்து விட்டு விட்டார். அவன் செய்த தவறால் மறைந்து இருக்கான்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. ஆனால் என்னோட அண்ணனுக்கு கோபம். அவனை அப்பாவும் யசோ அத்தையும் நம்பலை. அந்த கோபத்தில் தான் வீட்டை விட்டு சென்று விட்டான்.

புதுசா வந்த ஸ்கேண்டிலையும் அவன் பார்த்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன். அவன் அலைபேசியை பயன்படுத்தவேயில்லை. அதான் இன்னும் ஏதும் செய்யாமல் இருக்கான்.

ஆத்வி எப்படியோ கம்பெனியை கவனிச்சுக்கிட்டு இருக்கா. அப்பா என்ன தான் செய்யப் போறாரோ? அண்ணாவும் அப்பாவும் நல்லபடியா பேசிட்டாளே எல்லாமே சரியாகிடும் என்றாள் வருத்தமாக.

சரி,சரி, இந்த ஒரு முறை விடுறேன். ஆனால் இனி அவள் வம்புக்கு போகக்கூடாது. பிராமிஸ் பண்ணு. அலைபேசியை தாரேன் என்றாள் ஆரா.

 நீ அப்பாகிட்ட சொல்லணும்ன்னா சொல்லிக்கோ. அண்ணா வரட்டும். அப்புறம் அவள வச்சுக்கிறேன்.

நீ திருந்தவே மாட்ட ராகவ் சொல்ல, ஏன் ரணா? உன்னோட அண்ணாவும் அவர் செக்கரட்டரியும் ப்ரெண்ட்ஸ் தான. அவருக்கு தெரியாதா?

யாரு? அந்த லூசு பயலையா கேக்குற? நிதுவுக்கு அம்மா மேல ரொம்ப பிரியம். அதனாலே அண்ணா எல்லாத்தையும் அவனிடம் சொல்ல மாட்டாங்க.

அம்மாவுக்கும், அண்ணாவுக்கு என்ன தான் பிரச்சனை?

எனக்கும் சரியா தெரியல.

அம்மாவை, உனக்கும் உன் அக்காவுக்கும் பிடிக்குமா?

அம்மாவை பிடிக்காமல் இருக்குமா? ரொம்ப அமைதியான டைப். ஆனால் என்ன மாடர்ன் டிரஸ் போட்டால் தான் ருத்ரகாளி ஆகிடுவாங்க. அப்பாவும் இதுல அம்மாவுக்கு சப்போர்ட் வேற. சொல்ல வேண்டுமா?

அப்ப, நீ போட்டுட்டு வர?

அண்ணாவோட தயவால் தான் என்று பெருமூச்செடுத்து விட்டு, அண்ணா எங்க தான் இருக்க? நீ போனதிலிருந்து வீடு வீடாவே இல்லை என்று புலம்பினாள்.

காவியன் அலைபேசி ஒலிக்க, அனைவரும் அவனை பார்த்தனர். அவன் பேசிக் கொண்டே நகர்ந்து சென்றான்.

ஏன்டா, உன்னோட ப்ரெண்டு பேசவே மாட்டானா? லட்சனா கேட்க, அவன் பேசுவது அதிசயமா தான் இருக்கு. எப்ப பாரு அக்கா தான். இல்ல அவனோட ப்ரெண்ட்ஸ், இல்ல சப்ஜக்ட் பத்தி தான் பேசுவான். என்னிடமே அதிகமா பேசுறது இல்லை.

அப்பொழுது வேகமாக வந்த காவியன், அவனது பையை எடுத்துக் கொண்டு, “சீயூடா கிளம்புறேன்” என்றான்.

ஹே, “சேர்ந்து ஸ்டடி பண்ணுவோம்ன்னு சொல்லீட்டு விட்டுட்டு போற?”

அக்கா, தனியா போறாங்களாம். பாட்டி தான் சொன்னாங்க.

எங்க?

வாரேன் டா என்று காவியன் ஓடினான்.

சொல்லீட்டு போடா சங்கீதன் கத்தினான்.

நாளைக்கு சொல்றேன் என்று சொல்லிக் கொண்டே ஓடினான் அவன்.

குடும்பம் இருக்கும் நாமே லேட்டா தான் கிளம்புறோம். இவனுக்கென்னவாம்? நித்திர கண்ணன் கேட்க, சங்கீதன் கோபமாக, யாருமில்லாதவங்க தான்  அருகிலிருப்பவங்களை நல்லா பார்த்துப்பாங்க.

நாமெல்லாம் குடைக்குள் பாதுகாப்பா இருக்கோம். அவன் எத்தனை பெரிய மழையானாலும் அதை கடந்து வந்திருப்பான். அவன் அருமை குடைக்குள் மறைந்திருக்கும் நமக்கு தெரியாது. அவனுடன் மழையில் நனைந்தால் தான் தெரியும் என்று சொல்லி விட்டு சென்றான்.

காவியன் சென்ற பக்கமே ரணா பார்த்துக் கொண்டிருந்தாள். ரணா, உனக்கு அவனை பிடிச்சிருக்குல்ல? கண்ணன் கேட்க, தெரியல. ஆனால் இதுவரை இவன் போல் யாரையும் பார்த்ததில்லை. சோ, இன்ட்ரஸ்டிங் என்றாள்.

இன்ட்ரஸ்டோட நிறுத்திக்கோ. உன் குடும்பம் வேற, இவன் வேற ஆரா சொல்ல, என்னம்மா இப்படி பேசுற? லவ் வந்துட்டா யாரையும் மாத்தவே முடியாது என்றான் ராகவ்.

என்னமும் செய்யுங்க என்று ஆரா கிளம்ப, மற்றவர்களும் கிளம்பினர்.

காவியன் அன்பு நிலையத்திற்கு செல்ல, தம்பி நேத்ரா கிளம்பிட்டாங்க என்று தனசேகரன் சொல்ல, அண்ணா முதல்லவே சொல்லி இருக்கலாம்ல என்று பேருந்தில் ஏறினான்.

பொன்னியம்மன் கோவில் ஸ்டாப்பில் இறங்கி வேகமாக ஓடினான். நேத்ரா கடவுள் வழிபாட்டை முடித்து விட்டு, ஆலயத்தை சுற்றி ஓரிடத்தில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அங்கே நின்று பிரசாதம் வாங்க கொடுத்துக் கொண்டிருந்தவர் அதிரதனின் அம்மா சிவநந்தினி.

பிரசாதம் வாங்கிய நேத்ரா கண்ணீருடன் அதை பார்த்துக் கொண்டே நின்றாள்.

ஏம்மா, வாங்கிட்டேன்னா வழிய விடு. நாங்களும் வாங்கிக்கிறோம் என்றார் அவள் பின்னிருந்த பெண்மணி. பொங்கலுடன், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் கவரில் போட்டு கொடுத்தார். அதை பார்த்து கண்ணீருடன் நிற்க, அக்கா என்று காவியன் அவளிடம் வந்தான். அவனை பார்த்து சிவநந்தினி அதிர்ந்து நின்றார்.

அக்கா, என்னாச்சு? கேட்க, அவள் பார்வை அக்கயிற்றை விட்டு மீளவில்லை. வெடுக்கென அதை பிடுங்கி சிவநந்தினி கையிலே கொடுத்து விட்டு, வேற யாருக்காவது கொடுங்க என்று அவளை இழுத்து சென்றான்.

அவன் செயலிலும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பியது பிரசாதம் வாங்க வந்த குரல்கள். அவர் கொடுத்து விட்டு இருவரையும் தேடினார்.

இருவரும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர்.

அக்கா,எல்லாத்தையும்  மறந்துட்டேன்னு சொன்னீங்க. இதுக்கு தான் கோவிலுக்கு என்றாலே தனியே அனுப்ப யோசிக்கிறோம்.

பாட்டி, எவ்வளவு பதட்டத்தில் இருந்தாங்க தெரியுமா? கடிந்தான்.

நான் என்னடா செய்றது? எனக்கு அந்த கயிற்றை பார்த்தாலே என் அம்மா, அப்பா இறந்தது தான் நினைவுக்கு வருது என்று அவன் தோள் மீது சாய்ந்து அழுதாள்.

அக்கா, எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க. அழுறத நிறுத்துங்க. இதுக்கு மேல நீங்க அழுதா .நாங்க யாருமே உங்களுக்கு இல்லாததற்கு சமம் என்றான்.

அழுகையை நிறுத்தி பொங்கலை அவனிடம் நீட்டினாள். எனக்கு தண்ணீர் வேணும். நான் வந்த வேகத்தில் தொண்டை வறண்டு விட்டது. ஓர் கை அவனுக்கு தண்ணீர் தர, வாங்கி விட்டு “தேங்க்ஸ்” என்றான். அப்புறம் தான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மூன்றாமவரை பார்த்தனர்.

சிவநந்தினி இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார். நீங்க?

ஏம்ப்பா,இப்படியா கிடச்ச மஞ்சக்கயிறை குடுத்துட்டு வருவீங்க? ஆன்ட்டி தெரியாமல் ஏதும் பேசாதீங்க என்றான் காவியன்.

காவியா? பெரியவங்ககிட்ட இப்படியா பேசுவ? என்று அவனை அரட்டி விட்டு எழுந்தாள் நேத்ரா.

உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கே? அவர் கேட்க, அவன் அவரை முறைத்து பார்த்தான்.

முறைப்பு கூட அப்படியே இருக்கே? என்று மனதினுள் நினைத்துக் கொண்டு நேத்ராவை பார்த்தார்.

மேம், விஷ்வா கூட உங்களோட சிவநந்தினி அன்பு நிலையத்திலிருந்து உங்களை பார்க்க வந்தேனே? நேத்ரா கேட்க, அட..ஆமா, நீ தான் அந்த பொறுப்புல இருக்கிறாயாம்மா?

ஆம் என்று தலையசைத்தாள்.

அப்படியா? என்று புருவம் சுருங்க காவியனை பார்த்தார். அவன் வேகமாக எழுந்தான்.

போன வருடம் வரை எங்க கூட அங்க தான் இருந்தான். சட்டக்கல்லூரியில் நீங்க சார்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தந்தீங்கள்ள மேம். இவனுக்கு தான் என்றாள்.

சாரி சொல்லுடா என்றாள்.

இருக்கட்டும்மா. காரணமில்லாமல் கோபப்பட மாட்டார்ன்னு நினைக்கிறேன்னு அவர் சொல்ல, ஆமாம்மா. என்னோட வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் காரணம் என்றாள்.

சாரி மேம். உங்க கெல்ப்புக்கு “ரொம்ப தேங்க்ஸ்” என்றான். அவனுக்கு பிரணவி அவள் அம்மாவை பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. அவனை சிறுவயதிலிருந்தே படிக்க உதவியவர். இன்று தான் முதல் முறை சிவநந்தினியை பார்க்கிறான்.

தம்பி, உங்களுக்கு அம்மா, அப்பா இல்லையா? எனக் கேட்டார்.

மேம், அவன் சிறு வயதிலிருந்தே நம்ம நிலையத்தில் தான் வளர்ந்து வருகிறான்.

எனக்கு தெரிந்த ஒருவர் போலே இருக்கிறாரே அதான் கேட்டேன் என்றார். நேத்ரா அவரை ஒரு மாதிரி பார்த்தார்.

என்னம்மா?

ஒன்றுமில்லை மேம். நாங்க வாரோம். நேரமாகுது என்று நேத்ரா காவியனை அழைத்து சென்றாள்.

அக்கா, காலையிலே வந்திருக்கலாம்ல. பாருங்க இருட்டாக போகுது காவியன் சொல்ல, அதான் வந்தாச்சே. விடு. சீக்கிரம் போயிடலாம் என்று இருவரும் நடக்க, ஒருகட்டத்தில் முடியாமல் நேத்ரா மயங்கி விழுந்தாள்.

மெயின் ரோட்டில் யாருமில்லாமல் அவளை தோளில் தாங்கிக் கொண்டு, பதட்டமுடன் போகும் வண்டியை அவன் நிறுத்த யாருமே நிற்கவில்லை.

அந்நேரம் வந்த காரிலிருந்த ரணா காவியனை பார்த்து அதிர்ந்து, அந்த பொண்ணு யாராக இருக்கும்? என்று அவளுள் பொறாமை தலை தூக்கியது. அவளும் காரை நிறுத்தாமல் செல்ல, காவியனுக்கு அவளையும் அவள் காரையும் தெரியாமலா போகும்.

ரணா நில்லு, என்று கத்தினான் காவியன். அவனது அந்த கலக்கம் நிறைந்த குரல். அதுவும் முதல் முறை ரணா என்று அவளை அழைத்திருக்கான். அவளது கால் தானாக பிரேக்கை அழுத்தியது.

அவள் கார் அருகே வந்து, வெளிய வா என்று அவளது பின் சீட்டின் கார்க்கதவை திறக்க சொன்னான். அவள் அமைதியாக அவன் கூறுவதை செய்தாலும் மனம் அடித்துக் கொண்டது. காவியனோட லவ்வரா இருப்பாங்களோ? என்ற அவளுக்கு தான் அவன் மீது காதலுற்றுள்ளோம் என புரிந்தது. பயம் மேலும் அதிகமானது பிரணவிக்கு.

பின் சீட்டில் நேத்ராவை போட்டு, ரணா தண்ணி இருந்தா குடு என்று கேட்டான். அவள் கொடுக்க, நேத்ரா மீது தண்ணீரை தெளித்து, அக்கா எழுந்திருங்க..எழுந்திருங்க..என்று நேத்ரா கன்னத்தை தட்டினான்.

அக்காவா? என்று அவன் ஸ்டேஜில் நேத்ராவை கூறியது நினைவு வந்து, அப்பாடா என்று இருவரையும் பார்த்தாள். நேத்ரா எழுந்து அவள் முந்தானையால் முகத்தை துடைத்து விட்டு, காவியனை பார்த்தாள். அவன் முறைத்துக் கொண்டிருந்தான்.

அக்கா, இந்தாங்க குடிங்க என்று ரணா தண்ணீரை நீட்டினாள். வாங்கி குடித்து விட்டு பாவமாக காவியனை பார்த்தாள் நேத்ரா.

டேய், தள்ளிக்கோடா என்று பின் சீட்டில் ஏறி அவனருகே அமர்ந்து, அக்கா நீங்க ஓ.கே வா? எனக் கேட்டாள்.

அக்காவா? உனக்கு என்னை தெரியுமா? நேத்ரா ரணாவிடம் கேட்டாள்.

இவன் உங்களை அக்கான்னு தான்ன கூப்பிட்டான்? இந்த மலமாடுக்கே நீங்க அக்கான்னா, நான் சின்னப்பொண்ணு தான? நான் அக்கான்னு உங்களை கூப்பிடக்கூடாதா?

வாட்? ரணா வழிய விடு. வாங்கக்கா போகலாம். தெரியாம இவள கூப்பிட்டேன்ல என்னை சொல்லணும்?

ஆமா, சொல்லிக்கோ.

“வேலியில போற ஓணான வேஷ்டியில் விட்ட” மாதிரி நானே கூப்பிட்டுட்டேன் என்றான் காவியன்.

வாட்? ஓணானா? நானா? அக்கா என்னை பார்த்து ஓணான்னு சொல்றான். நான் எவ்வளவு க்யூட். என்னை பார்த்து உன்னால எப்படி இப்படி சொல்ல முடிந்தது. உன்னை சைலன்ட்டு பார்ட்டின்னு பார்த்தா, சவுண்டு குடுக்குற?

ஏய், ஓவரா பேசிக்கிட்டே போற? அப்புறம் அவ்வளவு தான். இதோட நிறுத்திக்கோ.

அவள் கோபமாக வெளியே சென்று நின்றாள்.

காவியா? யார் இந்த பொண்ணு? இப்படி சண்டை போடுறீங்க?

கிளாஸ்மேட் அக்கா.

முதல்ல அவளிடம் சாரி சொல்லு.

அக்கா, நான் எதுக்கு?

அவ தான் உதவி செஞ்சா. எனக்கு ஒரு மாதிரி சோர்வா இருக்கு. கேளு சீக்கிரம் போகணும் என்றாள் நேத்ரா.

காவியன் அவளை பார்த்துக் கொண்டே காரிலிருந்துவெளியே வர, அவளும் நேத்ராவிடம் பேச காரருகே வந்து குனிந்தாள். இருவரும் முட்டிக் கொண்டனர்.

அய்யோ, என் தலை போச்சு என்று சத்தமிட்டு சட்டென வாயை மூடி. உள்ள போ..என்று காவியனை உள்ளே தள்ளி விட்டு, அவன் தலையை அழுத்தி குனிடா என்று காரை சாத்தி விட்டு, ஹாய் அங்கிள் என்று அவளாகவே ஒருவருடன் பேசினாள்.

அவர் காரை பார்த்து, யாரும்மா அது? எனக் கேட்டார்.

அங்கிள், சிஸ்டர் மயக்கமா இருந்ததுன்னு சொன்னாங்க. அதான் நான் கெல்ப் பண்ணேன் என்றாள்.

யாரு? நீயாம்மா உதவி செஞ்ச?

ஆமா, அங்கிள். எனக்கு இவங்களை பார்க்கவும் ஆத்விய மாதிரி தோணுச்சு என்றாள்.

எங்க அந்த பொண்ணை நிமிர சொல் ஆத்வி மாதிரி இருக்காலான்னு பார்ப்போம் என்று அவர் கேட்க, அய்யோ அங்கிள், நான் ஹாஸ்பிட்டல் போகணும்.

ஏம்மா, என் பையனும் உன்னோட கிளாஸ் தானாம்மே?

எஸ் அங்கிள். கிளாஸ்ல பேடு வைபிரேசன் அதிகமா இருக்கு.

என்னம்மா, என் பிள்ளையவே கலாய்க்கிற?

அங்கிள், அவனை சொல்வேனா? அவனுக்கு ப்ரெண்டுன்னு வந்துருக்கான் பாருங்க. அவனால கிளாஸ்ல எல்லாருமே படிப்ஸ் ஆகிட்டானுக. கிளாஸ் கொஞ்சம் கூட ஃபன்னாவே இல்லை. எல்லாம் என் தலை எழுத்து என்றாள்.

அவர் சத்தமாக சிரித்து விட்டு, அந்த பொண்ணை சீக்கிரம் கூட்டுட்டு போ. இல்லை ஏதும் பிரச்சனை ஆகிடாமல் அவர் சொல்ல, “பை அங்கிள்” என்று காரை எடுத்து தள்ளி வந்து, அப்பாடா டேய்..வெளிய வா என்று காவியனை பார்த்தாள். அவர் சென்றவுடனே அவன் வெளியே வந்திருப்பான். அவன் அவளை முறைக்க, நேத்ரா மயங்கிய நிலையில் சீட்டில் சாய்ந்து இருந்தாள்.

ஹே, அக்காவை பாரு என்று அவள் பதட்டமாக காரிலிருந்து வெளியே வந்து பின் சீட்டை திறந்து, மீண்டும் தண்ணீரை தெளித்தாள். எழுந்த நேத்ராவிடம், உங்களுக்கு என்னாச்சுக்கா? பதறினான் காவியன்.

என்னை கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வர கூட்டிட்டு போறியாம்மா? என்று அவள் கையிலிருந்த பணத்தை ரணாவிடம் கொடுத்தாள் நேத்ரா.

அக்கா, இதெல்லாம் வேண்டாம். ஆனால் ஹாஸ்பிட்டல் போகலாம் என்று ஓடிச் சென்று காரை எடுத்தாள் ரணா.

அக்கா, எதுக்கு ஹாஸ்பிட்டல்? பெரிய பிரச்சனை இருக்காதுல்ல என்று காவியன் பயத்துடன் கேட்டான்.

கொஞ்ச நேரம் அமைதியா வர்றீயா? எனக்கே டென்சனா இருக்கு என்றாள். மூவரும் ஹாஸ்பிட்டல் வந்தனர்.

 

 

 

Advertisement