Advertisement

அத்தியாயம் 19

ஜீவா, பொண்ணுங்க அறைக்கு வெளியே பள்ளிச்சீருடையில் நின்று கொண்டிருந்தான். அங்கு வந்த தேவா, இப்பவே ஸ்கூலுக்கு போறியா? ஓய்வெடுத்துட்டு போகலாமே? கேட்டான்.

நான் போயிட்டு வாரேன் என்றான். அவன் நண்பர்கள் அங்கு வந்து தேவாவிடம் லிஸ்ட்டை கொடுக்க, இதை எதுக்கு என்னிடம் கொடுக்குறீங்க? போய் அக்காவிடம் கொடுங்க என்றான்.

தேவா போல் படிக்காத பசங்க அங்கே வந்து, தேவா..வா. நாம போகலாம். அக்கா நமக்கு வீடியோ அனுப்பிட்டாங்க. நாம தயார் செய்யலாம் என்றான்.

டேய், எங்க போறீங்க? நில்லுங்க என்று சுஜித்ரா அவர்களை அழைத்து தேவா, இன்று நம்ம முதலாளி வராங்க. நீங்க செய்த எல்லாத்தையும் காட்சி பொருளாக்குங்க. எல்லாத்தையும் மாட்டி வையுங்க. நம்ம குட்டிப்பசங்கல்ல இருந்து நீங்க செய்த உங்க பெயிண்ட்டிங், கைவினை பொருள் எல்லாமே எடுத்து அரேஜ் பண்ணி வையுங்க என்று இந்தா இதில் பழசும் இருக்காம் என்று ஒரு சாவியை கொடுத்து, எடுங்க பொண்ணுங்க உங்களுக்கு எதை எங்க வைக்கணும்ன்னு சொல்லுவாங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் முடிக்கணும். முதல்ல எல்லாரும் வழிபாட்டிற்கு வாங்க..என்று சொல்லி விட்டு சென்றாள்.

போங்கடா. தேவையானதே கிடைக்க மாட்டேங்கிதாம். இதுல இவனுக வேற என்று தேவா நண்பன் ஒருவன் கூறிச் சென்றான்.

ஜீவா தன் நண்பர்களிடம், போங்கடா நான் மாயாவிடம் பேசிட்டு வாரேன் என்றான். வெண்பா வெளியே வந்து ஹே ஜீவா..வா..என்று அவன் கையை பிடித்து இழுத்தாள். அவன் அவள் கையை தட்டி விட்டு மாயாவை கூப்பிடு பேசிட்டு கிளம்பணும் நேரமாகுது என்றான்.

ஏன்டா, வா..என்று அவள் அழைக்க, உனக்கு சொன்னா புரியாதா? ஜீவா கோபப்பட, கையை எடுத்து வெண்பா கண்கலங்க அவனை பார்த்தாள். அவன் சத்தத்தில் மாயாவும் மற்றவர்களும் வெளியே வந்தனர்.

மாயா தயங்கி நிற்க, அவளருகே வந்து லெமன் ஜூஸ்ஸை கொடுத்து விட்டு, கோபத்துல அடிச்சிட்டேன் சாரி. உன்னோட உதவிக்கு “தேங்க்ஸ்” என்று அவன் கிளம்பினான். போகும் அவனை பார்த்துக் கொண்டே நின்றாள் மாயா.

மற்றவர்கள் மாயாவையும் ஜீவாவையும் பார்த்து விட்டு வெண்பாவை பார்த்தனர்.

ஹே..வெண்பா, எதுக்கு அழுற? அருணா கேட்க, நான் ஜூவாவை உள்ளே தான் அழைத்தேன். கோபமா கையை தட்டி விட்டு கத்துறான். அவனை நான் என்ன செய்தேன்? என்று அவள் உள்ளே செல்ல, இந்த தன்வந்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ தெரியவில்லை என்று ஹாசினி சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள்.

அந்த ஜூஸ்ஸை பார்த்து புன்னகையுடன் உள்ளே சென்று அருந்திக் கொண்டிருந்தாள் மாயா. அனைவரும் வழிபாட்டிற்கு கிளம்ப, அவள் செல்லாமல் அறையை பூட்டிக் கொண்டாள். தன்வந்தின் பேச்சில் மனமுடைந்த மாயா, ஏற்கனவே அவனை விட்டு விலகி இருக்க நினைத்தவள் இப்பொழுது அருணா அவளிடம் பேசியதை கேட்டு, அவனிடமிருந்து வெளியே வருவதும் தான் நல்லது என நினைத்தாள்.

வழிபாடு முடிந்து அனைவரும் சாப்பிட்டு கிளம்பிக் கொண்டிருக்க, மாயா எங்க? என்று தன்வந்த் நிராவிடம் கேட்டான்.

அக்கா வர மாட்டா. நீ கிளம்பு.

இல்ல, என்னோட கடிகாரத்தை காணோம். அவள் எடுத்து தருவான்னு சாப்பிட வரும் முன் வரை காத்திருந்தேன். வரவேயில்லை. அறைக்குள்ள உட்கார்ந்து என்ன செஞ்சுகிட்டு இருக்கா? அவன் சத்தமிட, மிதுன் அவனிடம்..அவ என்ன உனக்கு வேலைக்காரியா? உன்னோட பொருளை கூட உன்னால பார்த்துக்க முடியாதா? மிதுன் கேட்க,

இவனுக்கு அடுத்தவனை எப்படி காயப்படுத்தலாம்? என்று யோசிக்கவே நேரம் பத்தாது. இதுல..என்று ஜீவா நண்பன் ஒருவன் சொல்ல, உன்னோட வேலைய பார்த்துட்டு போடா என்று தகாத சொற்களை தன்வந்த் உதிர்க்க, அனைவரும் அவனை ஒருவாறு பார்த்தனர்.

அருணா அவன் முன் வந்து, நான் தான் சொன்னேன்ல. இனி அவள் உனக்காக ஏதும் செய்யமாட்டாள். உன் பக்கம் கூட வர மாட்டா என்றாள்.

அவளிடம் கோபமாக வந்த தன்வந்த், அது எப்படி வராம போவா? அவளோட எதிர்காலம் என் கையில தான இருக்கு என்று அவன் சொல்ல கேட்ட பசங்க கோபமானார்கள். விஷ்வா அங்கே வந்து, என்ன சொன்ன? அவளோட எதிர்காலம் உன் கையிலா? என்ன திமிருடா உனக்கு? என்று அறைய வந்தவன் கையை பிடித்த தன்வந்த்,

எல்லா நேரமும் அடி வாங்கிக் கொண்டு இருக்க மாட்டேன் என்று அவன் விஷ்வாவை கையை ஓங்கினான். தனசேகரன் வந்து அவனை தள்ளி விட்டு,  தம்பி..இந்த பயல இப்பவே அனுப்பீடுங்க. என்ன தைரியம்? உங்கலையே கையை ஓங்குகிறான்.

விஷ்வா..என்று சத்தம் கேட்டு அவன் திரும்ப, விக்ரமுடன் நிதின் வந்து நின்றான்.

நிதின் அவனை பார்க்க, இருவரும் அனைவரையும் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தனர்.

விக்ரம் என்று நிதின் சத்தமிட, பசங்களா கிளம்புங்க என்று அவனும் சுஜியும் அனைவரையும் பள்ளிக்கு கிளப்பி விட, ஜீவா மாயாவை தேட, அந்த பொண்ணு எங்க விஷ்வா?

யாரை கேக்குற? அவன் மாயாவை கேட்கிறான் சுஜி சொல்லிக் கொண்டே ஜீவா..கிளம்பு என்று சொல்ல, அவன் தன்வந்த்தை முறைத்தவாறே நின்றான்.

ஜீவா,..கிளம்பு சுஜி சத்தமாக சொல்ல, ஓ..நீ தான் ஜீவாவா? வா..என்று நிதின் அவனை அழைத்தான்.

மயூரியை பார்த்த நிதின், அந்த பொண்ணு மாயாவ கூட்டிட்டு வா..என்று எழிலனை பார்த்து, என்னடா எழிலா செம்ம ஃபன்னா இருக்கு போல? நிதின் கேட்க, நளன் பிடிடா என்று அவனை பிடித்துக் கொண்டே எழிலன் நிதினிடம் வந்தான்.

எது ஃபன்? இவனுக செய்றதெல்லாம் பண்ணா? நிது, நீ தான் ஃபன் பண்ண போறன்னு நினைக்கிறேன் என்றான் எழிலன்.

நானா?

ஆமா, உன்னை விட யாரல பண்ண முடியும்? எழிலன் கேட்க, அய்யோ..நீ வேற எழிலா, இப்பெல்லாம் உன்னோட கிரஷ் அப்படியே மாறிட்டான்.

என்ன கிரஷ்ஷா? காவியன் கேட்க, ஆமா..நம்ம எழிலோட கிரஷ். என் உற்ற தோழன் அதிரதன் தான்.

வாட்? என்று மிதுனும் காவியனும் கேட்க, உங்களுக்கு அவரை தெரியுமா? எழிலன் கேட்டான்.

அவர்கள் நிதினை பார்க்க, எழிலா அது முக்கியமில்லை. நம்ம ரதன் சிரிக்கிறான். சின்ன பையனோட விளையாடுறான் தெரியுமா? என்று கேட்க,

என்ன நிது சொல்ற? நிஜமாகவா? எழிலன் கேட்க, ஹலோ பேச வேண்டியதை பேசுங்க என்றான் தன்வந்த்.

என்ன பேசலாம் எழிலா?

நிது, என்னை இதுல இழுக்காத. நீ வந்த வேலைய கவனி என்று எழிலன் பழைய இடத்திற்கே சென்று அமர்ந்தான்.

உங்களுக்கு அண்ணாவை தெரியுமா? ஜீவா கேட்க, தெரியாம பேசுவோமா? என்றவன், நீ ஏன்டா நிக்கிற என்று நிதின் சேரை போட்டு அவனும் அமர்ந்து, வா..என்று விஷ்வா கையை பிடித்து அமர வைத்தான்.

மாயாவை மயூரி அழைத்து வந்தாள்.

யூ..மாயா? நிதின் கேட்க, எஸ் “ஐ அம் மாயா” என்றாள்.

ஓ.கே நேரடியா விசயத்துக்கே வருவோம். சுஜி ஸ்கூலுக்கு போற பசங்க இவங்கள தவிர எல்லாரும் போயிட்டாங்கல்ல நிதின் கேட்க, ம்ம்..மல்லிகா அக்கா அழைச்சிட்டு போயிட்டாங்க.

ஆமா தம்பி, உங்க மேல கம்பிளைண்ட் நிறைய வருது என்று தன்வந்த் அருகே வந்தான்.

சார், உங்களுக்கும் இந்த நிலையத்துக்கும் சம்பந்தமேயில்லை. நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க?

என்ன தம்பி, இப்படி பச்ச பிள்ளையா இருக்கீங்க? நிதின் சொல்ல, யாரு? இவனா பச்ச பிள்ள? ஜீவாவும் பேச, அவனை பார்த்த நிதின் அதான் நான் பேசிகிட்டு இருக்கேன்ல என்றான்.

நியூஸ் பார்த்தா தெரிய போகுது. எனக்கும் அவங்களுக்கும் இதுவரை ப்ளட் ரிலேசன் இல்லை. ரதன் என்னோட தோழன். நான் அவனோட அவங்க வீட்ல தான் வளர்ந்தான். பின் நானும் உங்களை போல் தான் இருந்தேன். ஆனால் இப்ப நான் அந்த வீட்டு மருமகன் என்றான்.

நிது..என்ன சொன்ன? என்று எழிலனும், விஷ்வாவும் சுஜியும் ஒன்றாக, நிஜமா தான் சொல்றியா? என்று கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தனர். காவியன் நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆமா, ஆத்வியை நான் மேரேஜ் பண்ணிக்க போறேன்.

அதுக்குள்ளவா? நேற்று தான் என்று பேச வந்த அருளை பார்த்த விஷ்வா எழிலனை கண்காட்டினான். அருள் அமைதியாக, எழிலன் அவனை பார்த்தான்.

நேற்று தான் வேற பொண்ணோட கல்யாணம்ன்னு நியூஸ் வந்துச்சுல்ல அதுக்குள்ள வேற பொண்ணா? என்று கேட்கிறான். என்னடா அப்படி தானே காவியன் கேட்க, அருள் தலையை ஆட்டினான். எழிலன் காவியனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எழிலா? அவன் என்ன பொண்ணா? இப்படி சைட் அடிக்கிற? காவியனை பார்த்துக் கொண்டே நிதின் கேட்க, சுஜி அவன் தலையில் அடித்து, எதுக்கு வந்து என்ன செய்ற? என்று எழிலனை பார்த்தாள். மிதுன் எழிலனையும் சுஜியையும் பார்த்துட்டு காவியனை பார்த்தான்.

இடையில எவனாது பேசிடுறான் நிதின் சொல்ல,

சார், சொல்றத சொல்லுங்க. பொண்ணுங்க எல்லாரும் நின்னுகிட்டு இருக்காங்கள? ஜீவா கேட்க, ஏன்டா, அவளுக நின்னா உனக்கென்ன வலிக்குதாம்? தன்வந்த் கேட்க, இந்தா ஆரம்பிச்சுட்டானுகள தேவா நண்பன் சொல்ல..

தன்வந்த் அருகே வந்த நிதின், எனக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு. உங்களை பார்த்துக்க இருக்கிற சுஜியையும் நீ மதிக்கலை. எல்லாரிடமும் வம்புக்கு நிக்குற. சண்டை போடுற. தப்பா பேசுற? அது எப்படி? நம்மள நம்பி ஒரு பொண்ணு இருந்தா வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்ணுவியா? உன் பொறுப்புல இருக்கிறான்னா அந்த பொண்ணுக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாரா இருக்கணும். அதை விட்டு அந்த பொண்ணை கஷ்டப்படுத்துற.. என்று மாயா அருகே வந்து அவளை இழுத்து தன்வந்த் முன் நிற்க வைத்து,

ஏம்மா, உன் மேல கொஞ்சமும் அக்கறை இல்லாமல் உன்னை கஷ்டப்படுத்தும் இவனையா காதலிக்கிற? “இட்ஸ் சோ பேடு” என்றான் நிதின். அவள் கண்கலங்க நின்றாள்.

சார், என்ன பண்றீங்க? இவனை என்னன்னு பார்க்காமல் மாயா கஷ்டப்படுற மாதிரி பேசுறீங்க? காவியன் கேட்டான்.

நீ தான எனக்கு கால் பண்ண? நிதின் கேட்க, ஆமா சார், நான் தான் பேசினேன். நம்ம விசயத்தை அப்புறம் வச்சுக்கலாம். முதல்ல பாருங்க. அவனுகளுக்கு ஸ்கூலுக்கு நேரமாகுது என்றான் காவியன்.

இப்ப எல்லாமே இந்த பொண்ணும் ஜீவாவும் தான் முடிவெடுக்கணும் என்று நிதின் அமர்ந்தான்.

மாயாவும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிதினை பார்த்தனர்.

மேதாவி, கொஞ்சம் தெளிவா பேசுறியா? சுஜி கேட்க, அவன் இவங்க இருவரையும் தான கஷ்டப்படுத்துறான்? இவனை வம்பிழுத்து சண்டைக்கு வர வைக்கிறான். இந்த பொண்ண தான கஷ்டப்படுத்துறான். இந்த பொண்ணு வேற அவனை காதலிக்கிறா? அவளே முடிவெடுக்கடும் என்றான்.

நான் எப்படி? மாயா கேட்க, அவன் சொல்றது சரிதான் மாயா என்ற விஷ்வா எழுந்து அவளிடம் வந்து, நீ சொல்லணுன்னு நினைக்கிறத தயங்காம பேசு. எல்லாரும் இருக்கோம் என்றான்.

மாயா..பேசு என்று வெண்பாவும் பொண்ணுங்களும் சொல்ல, நான் பேசலாமா? ஜீவா கேட்டான்.

எல்லாரும் அவனை பார்க்க, பேசு என்றான் நிதின்.

மாயா இவன் பொறுப்பு என்று தானே இவ்வளவும் செய்கிறான். இனி மயூரி மட்டுமல்ல மாயாவும் என் பொறுப்பு என்றான்.

என்னது? இருவரையும் நீ பொறுப்பெடுத்துகிறாயா? என்று நக்கலாக சிரித்தான் தன்வந்த்.

கொஞ்சம் அமைதியா இருக்கிறியா? என்று மாயாவை பார்த்தான் நிதின். அவள் ஜீவாவை பார்த்தாள்.

நீ படிக்கமாட்ட. ஊர் சுத்திட்டு, எல்லாருடனும் விளையாண்டுகிட்டு இருப்ப. உன்னால எப்படி பார்த்துக்க முடியும் ஜீவா? இங்கிருக்கும் வரை பிரச்சனையில்லை. பொண்ணுங்கல்ல பத்திரமா பார்த்துக்கிட்டா போதாது. அதுவும் வெளிய பாதுக்காப்பா பார்த்துக்கிறது சாதாரண விசயமல்ல. அவங்களுக்கு தேவையானதை செய்து தரணும். வாங்கித் தரணும்.

வெளிய போன பின் அவங்களை பாதுகாப்பாகவும் பார்த்துக்கணும். நீ வேலைக்கு போய்க் கொண்டே படிக்கணும். நம்ம காவியனும் அவனோட ப்ரெண்ட்ஸூம் வெண்ணிலாவையும் அவளது தோழிகளையும் அவங்க படிக்கும் போது சேர்த்தே பயிற்சி கொடுத்தாங்க. அவங்க படிக்கும் போது சொல்லித் தருவாங்க. அந்த பொண்ணுங்க படிக்கலைன்னாலும் படிப்பறிவு இருந்தது. அதை வைத்து அவங்களால முடிஞ்ச வேலைய பார்த்துக்கிட்டு இருக்கங்க. என்னடா சொல்லுங்க என்று விஷ்வா கூற,

சார், நாங்க வேற இவங்க வேற. நாங்க எல்லாரும் ப்ரெண்ட்ஸ். ஆனா இவங்க அப்படி இல்லை. ஆனால் ஜீவாவும் அவன் நண்பர்களும் சேர்ந்தால் அரட்டை தான் அடிக்கிறாங்க காவியன் சொல்ல, அவர்கள் அவனை முறைத்தனர்.

ஆமா, எங்கடா படிக்கிறீங்க? இப்ப கூட ஜீவா சாப்பிடாம இருந்தப்ப ஏதாவது உதவினீங்களா? அவன் நல்லது செய்ய போய் தான் இப்படி நடந்தது? என்று மயூரி காவியனையும் மாயாவையும் பார்த்தாள்.

பின் ஜீவா நண்பர்களை பார்த்த மயூரி, உங்களால முடிஞ்சா சேர்ந்து அவனோட முன்னேற பாருங்க என்று ஜீவாவை பார்த்து நீ படிக்க ஆரம்பிப்பேல்ல? கேட்டாள்.

இவன் படிப்பானா? சாப்பாட்டு ராமன். இவளால் படிக்க முடியாது. அதுவும் என் அளவுக்கு இங்கிருக்கும் எவன் வருவான்? என்று திமிறாக எல்லார் முன்னும் கேட்டு தன்வந்த் சிரிக்க,

விஷ்வா சார், நான் ட்ரை பண்றேன் சார் என்றான் ஜீவா.

என்ன பண்ணுவ? உன்னோட மார்க் அவரேஜ்ல தான் இருக்கு. கொஞ்சம் படித்தாலும் ஒரு 75 இல்லை 80 சதவீதம் தான் வருவ தன்வந்த் சொல்ல,

ஜீவாவும் மற்ற எல்லாரும் ஒத்துக் கொண்டால், எனக்கான பொறுப்பை ஜீவா ஏற்கட்டும். ஆனால் அவனோட ப்ரெண்ட்ஸ் அவனோட சேர்ந்து படிக்கணும். நாங்களும் சேர்ந்து படிக்க ட்ரை பண்றோம் என்றாள் மாயா.

மாயா..தன்வந்த் சத்தமிட, என்னடா மாயா? என்று அருள் மாயாவிடம் “உருப்படியா முடிவெடுத்துருக்க”. ஆனால் ஜீவாவை நினைத்தால் தான் பயமா இருக்கு.

உன்னை நம்பி எல்லாரும் பேசுறோம். எல்லாத்தையும் கவித்து விட்றாதடா. ஜீவா நண்பனை பார்த்து, நரேன் என்ன சொல்றீங்க? அருள் கேட்டான்.

நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, நாங்களும் ட்ரை பண்றோம். ஆனால் நாங்க தூங்காம மட்டும் பார்த்துக்கணும் என்றான் ஒருவர்.

அதான் நான் இருக்கேனே? என்று வெண்பா முன் வர, இவளா? சார் இவளுமா? ஒருவன் கேட்க, உன்னை பார்த்து பசங்களே பயப்புடுறாங்க. என்னம்மா செய்வ? நிதின் கேட்டான்.

நீங்க வேணும்ன்னா நாங்க படிக்கும் போது வந்து பார்த்துக்கோங்க என்ற வெண்பா, இவனோட மட்டும் நான் பேசமாட்டேன் என்று ஜீவாவை காட்டினாள்.

நீயும் அவனும் தான் நல்லா சண்டை போடுவீங்களே? அப்புறம் என்ன? நரேன் கேட்டான்.

மிதுனிடம் வந்த வெண்பா, இவன் மேலுள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறான். நான் இவனை என்ன செய்தேன்? கேளுண்ணா.

ஏன்டா வெண்பாவ திட்டுன?

சும்மா நேரம் போகலை. அதான்.. ஜீவா சொல்ல, மிதுன் அவனை முறைத்தான்.

அண்ணா, அவள பேச்ச கொஞ்சம் குறைக்க சொல்லுங்க. நானே டென்சன்ல இருந்தேன். இவள் வேற?

நான் என்னடா செய்தேன்? என்று அவனிடம் வந்த வெண்பா, உன்னை அறைக்குள் தான அழைத்தேன்?

மூளை இருந்தா கூப்பிடுவியா? ஜீவா கேட்க, மூளையா? உனக்கு இருக்கா? இருந்தா இவனெல்லாம் பேசுற மாதிரியா நடந்துப்ப? வெண்பா கேட்டாள்.

ஏய், எதுக்கு என்னை இழுக்குற? கோபமான தன்வந்த் இவனால் என் பக்கம் கூட வர முடியாது. இவனெல்லாம்..

போதும். நிறுத்துறியா? உன்னால நடந்த எல்லாமே போதும். நாங்க பட்ட எல்லாமே போதும். இதுக்கு மேல எங்கள் பக்கம் நீ வரவே வேண்டாம். ஆனால் நாங்க உன்னை விட வாழ்க்கையில் முன்னேறுவோம். பார்க்கிறாயா? மாயா கேட்க,

நான் வந்ததேயில்லை. நீ தான் என் பின் சுத்துற?

ஆமா, நான் தான் சுத்தினேன். அது ரொம்ப பெரிய தப்புன்னு எனக்கு புரியவச்சுட்ட. இனி எப்பொழுதும் உன்னை பார்க்க கூட விரும்பலை.

நீ தான என்னை காதலிக்கிற?

இல்ல. காதலிச்சேன். அந்த அறையில் உன்னை பார்த்ததும் நான் என்ன கேட்டேன்? ஜீவா எழுந்திருக்க மாட்டேங்கிறான். உதவிக்கு வா…என்றேன். ஆனால் எங்களை கேவலமா பேசுன?

நான் பார்க்கும் போது நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்த?

ஜீவாவிற்கு மூச்சு தான் கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னை என்ன செய்ய சொல்ற? அவனுக்கு ஏதாவது ஆகிடும்ன்னு தான் மூச்சு கொடுத்தேன். அவன் மூச்சு விட சிரமமா இருக்குன்னு இரவே சொன்னான். எல்லாரும் தூங்கி இருப்பாங்கன்னு கதவை திறந்து வச்சிட்டு தூங்க சொன்னேன். அவன் பழக்கத்தில் கதவை மூடி இருப்பான் போல..

அவனுக்காக நீ எதுக்கு பயப்படணும்?

ஏன்னா, நம்ம எல்லாரும் ஒரே குடும்பமா தான இருக்கோம். சின்ன வயசுல இருந்தே அவனை எனக்கு தெரியும். அவன் செத்தாலும் பரவாயில்லைன்னு என்னால சுயநலமா இருக்க முடியல என்று அழுதாள். ஜீவா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி, இதை விடுங்க என்ற விஷ்வா. மாயா..நீ உன்னோட முடிவுல சரியா இருக்கிறாயா? விஷ்வா கேட்டான்.

ஆமா சார், மயூரி போல் நானும் ஜீவா பக்கம் தான்.

ஜீவா, நீ என்ன சொல்ற?

என்னை நம்புறாங்கல்ல. நான் கண்டிப்பா பார்த்துப்பேன் என்றான்.

தன்வந்த், நீ உன் விருப்பம் போல் எதுவும் செய்யலாம். ஆனால் மாயா, ஜீவா அவங்க நண்பர்கள் வேற யாரையும் ஏதும் செய்யக்கூடாது. செய்தால் உன்னை இங்கிருந்து வெளியேற்றுவதை தவிர வேற வழியில்லை என்றான் நிதின்.

இல்லை, என்னால ஏத்துக்க முடியாது. மாயா என்னோட பொறுப்பு தான் என்றான் தன்வந்த்.

அமைதியா நீ பள்ளிக்கு போ. உன்னை பற்றி சேர்மனுக்கு தெரிந்தால் நீ படிப்பை முடிக்க விடாமல் செய்திடுவார். அவருக்கு ஒழுக்கம் தான் முதற்படி என்றான் நிதின். தன்வந்த் அமைதியாக சென்றான்.

இருவரும் பள்ளிக்கு கிளம்புங்க என்றான் விஷ்வா. தன்வந்த் நீ கிளம்பு என்ற காவியன் ஜீவாவிடம், அவன் என்ன செய்தாலும் பொறுமையா இரு. அவன் மேல கைய வச்சிறாத. அவனால் அடிக்க முடியாது. ஆனால் உங்களை அடிக்க வைக்க முடியும் என்றான். ஜீவாவும் அவன் நண்பர்களும் கிளம்பினர்.

என்ன பஞ்சபாண்டவர்களா? நீங்க காலேஜூக்கு கிளம்பலையா? நிதின் கேட்க, பஞ்சபாண்டவர்களா? என்று வெண்பா அவர்களை பார்த்து பயங்கரமாக சிரித்தாள்.

அண்ணா, அப்படியே நிக்கிறீங்க..என்று அவளும் கிண்டல் செய்ய, எல்லாரும் சிரித்தனர். உங்களுக்கு எப்படி தெரியும்? அருள் கேட்க,

வெண்பா..மிதுன் சத்தமிட்டான். அனைவரும் அமைதியானார்கள்.

சாரி அண்ணா, எங்களோட சாப்பிடுறீங்களா? அவள் கேட்க, ஒன்றும் தேவையில்லை என்று காவியன் கோபமாக சொல்லி விட்டு செல்ல, மற்றவர்களும் அவன் பின் சென்றனர். மயூரி அருணாவிடம், சரியா தான் இருக்கு. இவர்களும் அப்படி தானே உடன்பிறவா சகோதர்களாக சுற்றுகின்றனர் என்று சொல்ல, எழிலன் முகம் மாறியது.

சார், நான் ஒன்று கேட்கலாமா? என்று வெண்பா நிதினிடம் வந்து, இந்த பெயரை யார் வச்சது. பர்பைக்டா இருக்கு என்றாள். சென்ற காவியன் பையை எடுக்க வந்து அவளை முறைத்தான்.

அண்ணா..கோவிச்சுக்கிட்டீங்களா? என்று அவனிடம் கேட்டுக் கொண்டே வாசலருகே வந்தவள் படி தட்டி கீழே விழ வந்தாள்.

ஏய்..வாலு..பார்த்து எழிலன் சத்தம் கொடுக்க அனைவரும் அவனை பார்த்தனர். அவன் அவளை பார்க்க, காவியன் வெண்பாவை பிடித்தான்.

கண்ண எங்க வச்சுட்டு வர்ற?

அண்ணா, நான் பாண்டவர்களின் தங்கையா? என்று வெண்பா கண்ணடிக்க, உன்னை..என்று காவியன் அவள் கையை விட்டான். நளன் அவளை பிடித்து நிறுத்தி விட்டு, உன் வாய்க்கு பூட்டு போடவே மாட்டாயா?

என்னால முடியலையே என்று அவள் எழிலனை பார்த்தாள். அவன் கோபமாக அவளை பார்த்தான். அவள் பார்ப்பதை பார்த்த நிதின் எழிலனை பார்த்தான்.

ஆஹா..பையன் சிக்கிட்டான் போலவே என்று மனதினுள் எண்ணினான்.

சுஜி, பிரச்சனைன்னா உடனே கால் பண்ணு..

சார், இந்த பெயரை வச்சது யாரு? வெண்பா கேட்க, உன் பாண்டவ அண்ணன்களிடமே கேட்டுக்கோ.

அவங்க சொல்ல மாட்டாங்க சார் என்று எக்கி அவன் காதில் சொன்னாள்.

ஆமா, நீ எப்பொழுதும் இப்படி தான் பேசுவியா? நிதின் கேட்க, ஆமா சார், ஆனால் கவலையா இருந்தா தான் அமைதியா இருப்பேன்.

உன்னோட அமைதிய நான் பார்க்கணுமே?

அதுக்கு என்னை அழ சொல்றீங்களா? என்று அவனிடமும் துடுக்காய் கேட்டாள்.

அழுதா கூட நீ அழகா தான் இருப்ப.

சார், ப்ளர்ட் பண்றீங்களா? நம்ம கிட்ட அதெல்லாம் நடக்காது. அப்புறம் உங்க பியான்சேவிடம் நான் பேச வேண்டி இருக்கும்.

அம்மா தாயே, இப்பவே வா? இன்னும் ஆரம்பிக்க கூடயில்லை. அதுக்குள்ள முடிச்சு விட்றாத.

தேவா, சாப்பிட்டு வேலைய ஆரம்பிங்க. வெண்பா பேசியது போதும். மாயா..எல்லாரும் எங்க அரேஜ் பண்ணலாம்ன்னு முடிவெடுத்து பசங்களுக்கு உதவுங்க என்றாள் சுஜி.

என்ன செய்ய போறீங்க? விஷ்வா கேட்க, “வெயிட் அன்டு வாட்ச்” என்ற சுஜி, நிது சேர்மன் சாரோட வருவேல்ல.

விஷ்வா, நீ கிளம்பலையா? நேரமாகுது என்ற நிதின், நான் வரமாட்டேன். யாரும் இந்த பிரச்சனைய அவர்கிட்ட சொல்லாதீங்க. அவருக்கு தெரிந்தால் கண்டிப்பாக அந்த பையனுக்கு இருக்க இடம் கூட இல்லாமல் செய்திடுவார்.

தம்பி, உங்களிடம் தனியா பேசணும்? என்றார் பாட்டி.

நிதின் சுஜி, விஷ்வாவை பார்த்துக் கொண்டே அவருடன் சென்றார். அவர் நேத்ரா, யுவனை பற்றி விசாரித்தார். இன்று கண்டிப்பா ஹாஸ்பிட்டல் போகணுன்னு தான் சொன்னான் பாட்டி. அந்த பையனுக்கு ஏதுமாகாது. வினுவும் பத்திரமா இருப்பா.

எழிலனை நல்லா பார்த்துக்கோங்க. அவனால் யாருக்கும் ஏதும் ஆகாது. விக்ரமை காட்டி, அவர் ஒருவரே போதும். யாரையும் உங்க பக்கமே வர விட மாட்டான் என்று சொல்லி விட்டு, எழிலனிடம் வந்தான்.

சும்மா வினுவை பத்தியே யோசிக்காம படிக்கிற வேலைய பாரு சரியா? நிதின் கேட்க, எழிலன் வருத்தமாக தலையை ஆட்டினான்.

இப்ப கோபம் போயிருச்சா? நிதின் அவனுக்கு மட்டும் கேட்கும் படி கேட்க, என்ன கோபம்?

உன்னோட செலக்சன் சூப்பர். என்ன வினு தான் ஒத்துக்கணும். அது கொஞ்சம் கஷ்டம் என்றான் நிதின்.

முதல்ல அவ என் முன்னாடி வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.

பார்க்கலாம்..பார்க்கலாம்..என நிதின் புன்னகைக்க, நிது “இப்ப உன்னோட பேமிலி எப்படி? உனக்கு ஓ.கே தான?”

இப்ப நேரமாகுது. நான் போயிட்டு கால் பண்றேன். உன்னோட நம்பர் கொடு. “ஏதும் பிரச்சனைன்னா நீயும் உடனே எனக்கு கால் பண்ணு” என்று நிதின் சென்றான்.

நானும் கிளம்புகிறேன். நேரமாகுது. நாங்க அங்கிருந்து கிளம்பும் போது சொல்றேன் என்று விஷ்வா சொல்லி விட்டு எழிலனை பார்த்தான்.

அவன் நளனிடம் கண்ணை காட்ட, இருவரும் விஷ்வாவிடம் வந்தனர்.

விஷ்வா அருகே வந்த எழிலன், யாருக்கும் உண்மை தெரியாது போல. உங்க ஆபிஸ்ல அக்கா இல்லைல்ல..அவன் கேட்க,

இல்லை எழிலா என்ற விஷ்வா கவனமா இரு என்றான்.

அவ்வளவு தானா? நம்பர் தர மாட்டீங்களா? எழிலன் கேட்க, விஷ்வா கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டான்.

சரி..சரி..கொஞ்சம் நகர்ந்தீங்கன்னா மூச்சு விட்டுப்பேன்.

அம்மா, அப்பா..விஷ்வா நகர்ந்து பேச, ப்ளீஸ் வேண்டாம். குடும்ப விசயத்தை மட்டும் யாரும் பேச வேண்டாமே? எழிலன் சொல்ல, சாரிடா நம்பரை கொடுத்து விட்டு, கால் பண்ணு என்று அவனும் சென்றான். எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேலைய ஆரம்பிங்க. வந்துருவாங்க என்றாள் சுஜி.

எழிலனும், நளனும் வெளியே செல்ல, வெண்பாவும் பின்னே வந்து எங்களோட சாப்பிட வர்றீங்களா? கேட்டாள். நளன் எழிலனை பார்க்க, மதியம் பார்க்கலாம் என்று கண்ணில் தேங்கிய கண்ணீருடன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

“வெண்பா” என்று நீலு அவளிடம் வந்தான்.

என்னடா, வா..சாப்பிடலாம் என்று கையை வாயில் வைத்து கை சூப்பினான்.

ச்சீ..என்ன பண்ற? பாட்டி நீலுவை பாருங்க என்று வெண்பா உள்ளே செல்ல, நில்லு..என்னை மாட்டி விட்டுட்டு போற என்று கையை வாயில் வைத்தவாறே உள்ளே ஓடினான் நீலு.

நீ எப்படா வெண்பாவிடம் சொல்லப் போற?

சொல்லணும். இங்கிருந்து கிளம்பும் முன் சொல்லணும். ஆனால் என்னை கொல்ல நினைப்பவனால் அவளுக்கு ஆபத்து வந்து விடும் என்று வருத்தமாக அவன் சொல்ல, அதான் நான் இருக்கேனே? என்று விக்ரம் பின்னிருந்து வந்தான்.

உனக்கும் ரதனை தெரியுமா? விக்ரம் எழிலனை கேட்டான்.

ம்ம்..தெரியும். நாங்க ஒரே பள்ளியில் தான் படித்தோம் என்று அவனிடம் பேச்சை நிறுத்தி, சார்..நான் தனியா இருக்கணும் என்றான் எழிலன். நளனும் அங்கிருந்து நகர்ந்தான்.

எழிலன் யோசனையுடன், அவன் யாராக இருப்பான்? என்று சிந்தித்தான்.

சட்டக்கல்லூரியில் காவியன், சங்கீதன், ஆரா நண்பர்கள் அருகே வந்து அமர்ந்தனர். காரிலிருந்து இறங்கிய ரணாவை அனைவரும் ஆவென பார்த்தனர். காவியனும் மெய் மறந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். நண்பர்கள் அனைவரும் எழுந்தனர்.

பிங்க் நிற மாடர்ன் உடையில் வந்து இறங்கி முகம் முழுவதும் சந்தோசமாக ஓடி வந்து அணைத்துக் கொண்டு, அக்கா காதல் சக்சஸ் ஆகிடுச்சு ஆரா என்று குதித்தாள்.

ஹலோ..என்று ஆரா சத்தம் கொடுக்க, ஆரா நீ இங்கே என்று கையை எடுத்து நிமிர்ந்து காவியனை பார்த்து, ஓ..சாரி காவியா என்று அவனிடமிருந்து விலகி ஆராவை கட்டிக் கொண்டாள்.

ஆராவிற்கும் காவியனுக்கும் உண்மையிலே உனக்கு வித்தியாசம் தெரியலையா ஆரா செல்லம்? கேட்டான்  கண்ணன்.

என்னடா செல்லம்? கொன்றுவேன்.

இல்ல, க்யூட் பேபியா வந்துருக்க என்றான் ராகவ்.

காவியன் அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான். அவள் அணைத்த போது உலகமே நின்றது. காவியன் காட்டிக் கொள்வானா? என்ன?

கேட்க கேள்விக்கு பதில் சொல்லு?

என்னத்த சொல்லுவா? அவ தான் ஹாப்பியா இருக்காலே. பிங்க் கலரு சிங்குச்சான்னு வந்திருக்க? லட்சணா கோபமாக கேட்டாள். அவளுக்கு சங்கீதனை பிடிக்கும். அவன் புன்னகையுடன் ரணாவை ரசிப்பது இவளுக்கு பிடிக்கவில்லை.

இது நிது..நோ..நோ..மாமா. வாங்கி தந்தது.

நிது, தேங்காய் மண்டையன், காமெடியன்..மாமா வாகிட்டாரா? ஆரா கேட்க, ஆமா இனி மாமா தான்.

என் அம்மா இருக்காங்களே சும்மாவே அவன் நோ..நிது மாமா அம்மா செல்லம். நான் மட்டும் மரியாதை கொடுக்கலைன்னா அவ்வளவு தான். அறுவைய போடுவாங்க என்று இந்தாங்க என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.

எல்லாரும் எடுத்துக் கொள்ள காவியா உனக்கும் தான் என்று அவனுக்கு தனியா எடுத்துக் கொடுத்தாள்.

அது என்ன? அவனுக்கு மட்டும் ஸ்பெசலா? கண்ணன் பிடுங்க வந்தான். கைய வச்ச கொன்றுவேன் என்று அவனை மிரட்டி விட்டு.. எடுத்துக்கோ என்று அவனருகே வந்து அமர்ந்தாள்.

அவனுக்கு ஜீவா, மாயா பற்றிய யோசனையாகவே இருந்தது. அவளிடம் வாங்கி கையில் வைத்துக் கொண்டு, போனை எடுத்து சுஜிக்கு கால் செய்தான்.

அக்கா, அங்க எல்லாமே ஓ.கே வா? அவங்க கிளம்பிட்டாங்களா?

அப்பவே போயிட்டானுக. என்ன திடீர்ன்னு கால் பண்ணி இருக்க?

அக்கா, மாயா முடிவு சரி தான். ஆனால் ஜீவா எப்படிக்கா மேனேஜ் பண்ணுவான்?

எதை கேக்குற?

நான் எதை கேட்பேன்னு நினைக்கிறீங்க?

தெளிவா சொல்லு காவியா. வேலை வேற இருக்கு.

அக்கா, சும்மாவே அவன் படிக்க மாட்டான். இப்ப கிளாசை கவனித்தாலும் என்ன புரியப் போகுது? முன்னாடி வர்றது கஷ்டமா இருக்குமே?

நீ தான் அப்ப சப்போர்ட்டா பேசுன?

ஹா..அது, தன்வந்த் முன்னாடி விட்டு கொடுக்கக் கூடாதுன்னு சப்போர்ட் பண்ணேன்.

என்னாக்கா? பிஸியா இருக்கீங்க? என்று எழிலன் நளனுடன் அமர்ந்தான்.

காவியா, அத எழிலன் பார்த்துப்பான். நீ உன்னோட படிப்புல கவனத்தை செலுத்து, ஏன் அவங்க படிக்கலையா?

அவன் இருக்கும் வரை பார்த்துப்பான்.

சரிக்கா, நீங்க வேலைய பாருங்க என்று காவியன் போனை வைத்து விட்டு கையிலிருந்த ஸ்வீட்டை பார்த்தான்.

மாயா என்றவுடன் நம் ரணா முகம் சுருங்கியது.

ஏன்டா, அந்த பொண்ணு மாயா தான் முடியாதுன்னு சொல்லீட்டாலே? அப்புறம் என்ன அவளை பத்தி பேசுற? சங்கீதன் கேட்க,

ஆமா, சொன்னா. அதுக்காக அப்படியே விட முடியுமா? நாங்க எல்லாரும்  ஒரே இடத்தில் இருக்கிறவங்க. அவளுக்கு பிரச்சனைன்னா விட முடியுமா? அவன் கேட்க, நான் கேண்டீனுக்கு போறேன். சாப்பிடணும் என்று ரணா அகல,

ரணா..ஒரு நிமிஷம் என்று அவள் கொடுத்த இனிப்பை அவளிடமே கொடுத்து, இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன் என்றான். அவளுக்கு கஷ்டமானது.

இனிப்பு தானடா கொஞ்சமாவது எடுக்கலாமே? ராகவ் கேட்க, பழக்கமில்லாததை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்றான்.

அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் காவியன் அவளை ரிஜெக்ட் செய்வது போல் உணர்ந்தாள் ரணா. அவள் வேகமாக நடந்து சென்றாள். பின்னே ஆராவும் ராகவ்வும் சென்றனர்.

நீ புரிஞ்சு தான் பேசுறியா? சங்கீதன் கேட்க, என்ன புரியணும்? காவியன் கேட்டான்.

சங்கீதன், நீ எனக்கு ஏதாவது வாங்கித் தருகிறாயா? லட்சணா கேட்க, என்னால முடியாது. வா, காவியா நாம வகுப்பிற்கு செல்லலாம் என்று சென்றனர்.

சந்தோசமாக வந்த ரணா மனதில் ரணம் ஏறியது. ஆராவை அணைத்து அழுதாள். அவளை சமாதானப்படுத்தி வகுப்பிற்கு அழைத்து சென்றனர் நண்பர்கள்.

வகுப்பு முடிந்து வந்த போது அவனுக்கு வந்த போனை எடுத்து விசயத்தை அறிந்து கலங்கி அங்கிருந்து ஓடினான் காவியன். அப்பொழுதும் ரணா அவள் காரை எடுத்துக் கொண்டு அவன் முன் நிறுத்த, தேங்க்ஸ் ரணா. நீ இங்கேயே இரு என்று அவள் காருடன் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

Advertisement