Advertisement

அத்தியாயம் 18

வினு, நாளைக்கு காலையில் நம்ம நிலையத்துக்கு நம்ம சேர்மன் சார் வர்றதா சொல்லி இருக்கார்? என்றான் விஷ்வா.

வாட்? என்று நேத்ராவும் அதிரதனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அங்கிள்…என்று யுவன் கையை நீட்ட, அதிரதனை அவனை தூக்கிக் கொண்டு,

இத்தனை நாளாக யாருமே வரலன்னு சொன்ன? அதிரதன் கோபமாக கேட்க, சார் நிஜமாகவே யாருமே வந்ததில்லை என்று அவனிடம் வந்து, யுவி கூட நெருக்கமாகாதீங்கன்னு சொன்னேன்ல என்று யுவியை அவனிடமிருந்து வாங்கி வந்து அமர்ந்தாள்.

அவன் என்னிடம் இருந்தால் தான் உனக்கென்ன? அதிரதன் அதே சினமுடன் கேட்க, அவன் எங்க நிலையத்துக்கு சொந்தமானவன். அடுத்தவங்க உறவு கொண்டாடக்கூடாது என்றாள்.

அடுத்தவனா? நான் அடுத்தவனா? அது எங்களோட நிலையம்? உன்னுடையது போல் பேசுற? அங்க இருக்கிற பசங்க எல்லாரும் எனக்கு உரியவங்க. நான் யார் கூட வேண்டுமானாலும் பேசுவேன் என்று யுவியை அவளிடமிருந்து வாங்கினான்.

வினு, எங்களை சொல்லிட்டு, அவனோட சண்ட போட்டுக்கிட்டு இருக்க?

ஆமா, தி கிரேட் அதிரதன் சார், சின்ன பையனுக்காக ஒரு பொண்ணுடன் சண்டை போடுகிறாரா? அதுவும் யாரும் கேட்டால் கூட பதிலளிக்காதவர்..அந்த பையனுக்காக..என்று நிறுத்தி,

ஏய், நீ வினுவிடம் உரிமையா சண்ட போடுற? விஷ்வா கேட்க, அதிரதன் அவளை பார்த்தான்.

விஷ்வா, யார் என்ன செஞ்சா நமக்கென்ன? திடீர்ன்னு எதுக்கு சார் வாரார்?

நிதின் அவங்க குடும்ப பிரச்சனையில நம்ம நிலையத்துல எந்த வசதியும் சரியாக கிடைக்கவில்லைன்னு சொல்லீட்டான். ஆனால் அவர்..என்று தயங்கி நிறுத்தினான்.

என்ன சொல்லு? அதிரதன் கேட்க, உன்னிடம் யாரு பேசுனா? கோபப்பட்ட விஷ்வா..சாரி வினு, நான் உன்னிடம் ஒரு விசயத்தை மறச்சுட்டேன் என்று தயாளனும், நிர்மலாவும் அவன் குடும்பத்தை வைத்து மிரட்டி.. எல்லாவற்றையும் அவர்கள் வாங்கியதை சொன்னான்.

அதிரதன் முகம் மாறினாலும், நீ எங்கள் யாரிடமாவது சொல்லி இருக்கலாமே?

உங்களிடமா? நிதினிடம் சொல்ல செல்லும் போது தான் என் அம்மாவிற்கு விபத்துன்னு சொன்னாங்க. ஏதோ அந்த கடவுள் புண்ணியம். என் அம்மாவிற்கு அடியோட நின்றது. இப்படி இருக்க நான் எப்படி சொல்வது? அப்ப என்னோட அக்கா, தங்கைகளுக்கு திருமணமும் முடியல. எங்களுடன் தான் இருந்தாங்க. அவளுக்கு ஒண்ணுன்னா..என்று நிறுத்தினான். அவன் அழுகிறான் என்று புரிந்து கொண்ட நேத்ரா,

சரி, விடு..நீ என்னிடமாவது சொல்லி இருக்கலாமே?

நீ வருவதற்கு முன்பே நடந்தது வினு.

ரதா..நீ நினைக்கிற மாதிரி அந்த தயாளன் சாதாரண ஆள் இல்லை. அவன் சீக்கிரமே வெளியே வருவான். இருபது வருசமா இந்த நிலையத்து பணம் மட்டுமல்ல நம்ம கம்பெனி பல கிளைண்ட்ட நாம கான்டாக்ட் பண்ண முடியாம பண்ணி இருக்கான். இது எதுவுமே சேர்மனுக்கு தெரியாது என்றான்.

அதிரதன் அமைதியாக இருக்க,  இன்னொரு விசயம் வினுவ ஜாக்கிரதையா பார்த்துக்கோ என்றான். அதிரதன் அவளை பார்த்தான்.

டேய், பைத்தியம் மாதிரி உலறாத..

இப்ப அவன் தான பக்கதுல இருக்கான். அதான் சொன்னேன். இல்லன்னா..நான் வரவா? விஷ்வா கேட்க, அதெல்லாம் தேவையில்லை நான் பார்த்துப்பேன் என்றான் அதிரதன்.

என்ன பார்ப்பீங்க? நான் உங்க வொர்க்கர் தான்.

வினு, நீ நிதினை ஏமாத்தலாம். ஆனால் என்னை ஏமாத்த முடியாது என்ற விஷ்வா, நீ உண்மையிலே எழிலை விட்டு பிரிந்து இருப்பது அவன் படிப்பிற்காக இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ நினைக்கிறது தப்பு. எழில் உன் பக்கம் இருக்கும் வரை யாரும் நெருங்க மாட்டாங்க. நல்லா யோசிச்சிக்கோ. எனக்கு வேலை இருக்கு என்று போனை வைத்தான்.

இவன் என்ன சொல்கிறான்? என்று நேத்ராவை பார்த்தான் அதிரதன். அவள் கண்ணீருடன் எழுந்து அறைக்குள் ஓடினாள்.

என்னவாக இருக்கும்? என்று அதிரதன் சிந்தித்தான். பின் தன் குடும்பம்..என்று நினைத்தவன், நிதினுக்கு போன் செய்தான்.

வீட்டில் ஆத்விகா புடவை மாற்றி தயாராக வந்து, சாரி அங்கிள், ஆன்ட்டி முக்கியமான போன் அதான் என்று நிதினை பார்த்தாள். அவன் அவளை கண் சிமிட்டாது பார்த்தான்.

என்ன? இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று பிரணா கேட்க, அவளை பார்த்துக் கொண்டே சண்டையை மறந்து, ம்..என்றான்.

அப்பா, பார்த்தீங்கல்ல? அவள் கேட்க, எல்லாரும் நிதினை கேலி செய்தனர். அதீபன் அமைதியாகவே இருந்தான். துறு துறுன்னு இருக்கும் அதீபனை இவ்வாறு பார்க்க, சிவநந்தினிக்கு கஷ்டமாக இருந்தது.

ஆத்விகா அனைவர் முன்னும் கீழே விழுந்து ஆசி வாங்கி விட்டு, எழுந்து நின்றாள்.

வாங்க சாப்பிட போகலாம் என்று செழியன் அழைக்க, பட்டம்மா.. எல்லாத்தையும் எடுத்து வையுங்க என்று சிவநந்தினி புன்னகையுடன் விலகி சமையலறைக்கு சென்று அவரும் எடுத்து வைத்தனர்.

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். நிதின் சாப்பாட்டை எடுக்கவும் போன் அவனை அழைத்தது. அதிரதனின் போனை பார்த்து வேகமாக எடுத்தான். ஆத்விகா அவனை பார்த்தாள்.

போனை எடுத்து அவன் எழுந்து நகர, அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருப்பதால் அவளால் செல்ல முடியவில்லை.

சாப்பிடுடா. அப்புறம் பேச வேண்டியது தானே? ரேவதி கேட்க, அம்மா..முக்கியமான கால் என்று ஆத்விகாவை பார்த்துக் கொண்டே சென்றான். அதீபனுக்கு சாப்பாடு இறங்காமல் பேருக்கு என சாப்பிட்டு எழுந்து செல்ல, தாட்சாயிணி அவனிடம் வந்து, அண்ணா சொன்னதில் உனக்கு ஏதும் வித்தியாசமாக தெரியுதா? கேட்டாள்.

அவளை பார்த்து விட்டு இயற்கை காற்றை சுவாசிக்க வெளியே சென்றான். அவளும் பின்னே வந்தாள்.

என்ன?

அவள் மீண்டும் கேட்க, சிந்தித்தவன் அந்த இரு மாதம்ன்னு சொன்னானே, அவன் காதலித்த பொண்ணு தான் நிலையத்தை பார்த்துக் கொள்ளும் பொண்ணாக இருக்குமோ? என்று தோணுது என்றான் அதீபன்.

ஆமா..ஆமா..அதே தான் எனக்கும் தோன்றுகிறது. அந்த பொண்ணை நீ பார்த்திருக்கிறாயா? அவள் கேட்க, ம்ம்..வீட்டுக்கு வந்தால்..என்று அவன் முகம் வாட்டமாக, இந்த பொண்ணா பாரு என்று நம் வினு நேத்ரா புகைப்படத்தை காட்டினாள்.

ஆமா, இதே பொண்ணு தான் என்று புகைப்படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

ஹலோ,..இந்த பொண்ணான்னு பார்க்க தான் சொன்னேன். விட்டா விழுங்கிடுவ போல அவள் சொல்ல, பார்த்த அன்றே இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருச்சு என்றான்.

நிதின் சத்தம் கேட்டு இருவரும் அமைதியாக கவனித்தனர்.

ரதா, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? வினுவை விட்டு தள்ளியே இரு என்று கத்தினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, இவங்க பேரு தான் வினு என்றாள் தாட்சாயிணி மெதுவாக அதீபனிடம்.

நான் அவளை என்ன செய்யப் போகிறேன்? எனக்கு அவளை பிடிச்சிருக்கு.

பிடிக்க மட்டும் தான் செய்யும்ன்னா. எதுக்குடா முத்தம் கொடுத்த? நிதின் சீற்றமுடன் கேட்க, இருவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர். அவன் அதிரதனிடம் தான் பேசுகிறான் என்பது நன்றாக தெரிந்தது.

என்னது அண்ணா ஒரு பொண்ணுக்கு முத்தம் கொடுத்தானா? நியூஸ்ல போட்டா டிரெண்டாகிடும் என்றான் அதீபன்.

சும்மா இருடா என்று அவன் காலை மிதித்தாள் தாட்சாயிணி. ஆ..என்று கத்த வந்தவன் வாயை பொத்தி, மூடிகிட்டு பாரு என்றாள்.

அடிப்பாவி, நீ அமைதியான நல்ல பொண்ணுன்னு நினைச்சேனே?

ஷ்..என்று அவன் தலையை அழுத்தி அவளும் குனிந்து செடிகளுக்கு பின் மறைந்தனர்.

எனக்கு வினு மேல காதல் இருக்கான்னு பார்த்தேன். இருக்குடா என்றான் சாதாரணமாக அதிரதன்.

ரதா, வேண்டாம். நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. ரொம்ப கஷ்டம்டா. அவளை கஷ்டப்படுத்தாத.

உனக்கு ஏன்டா, இவ்வளவு கோபம் வருது? இன்னும் அவளை காதலிக்கிறாயா?

எனக்கு ஆத்வி தான்னு முடிவு செய்து தான் அம்மா, அப்பாவை கூட்டிட்டு வந்தேன். ஆனால் வினு என்னோட ப்ரெண்டுடா. அவள் உன்னை ஏத்துக்கவே மாட்டா.

அதை நான் பார்த்துப்பேன் அதிரதன் சொல்ல, ரதா..அவள் வாழ்க்கையில் நீ விளையாடாதே!

என்னை பற்றி உனக்கு இன்னுமா புரியலடா. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்.

ரதா, அப்பா கண்டிப்பாக ஒத்துக்க மாட்டார்.

அவரை நான் ஒத்துக்கொள்ள வைப்பேன். நம்ம வீட்ல என்ன நடக்குது? அவன் கேட்க, நிதின் அமைதியாக நின்றான்.

சொல்லுடா? சித்தி என்ன செய்றாங்க? அதிரதன் கத்தினான்.

அவங்கள அதீபன் அவன் தாத்தா வீட்ல விட்டுட்டு வந்துட்டான்.

அவன் நல்லா தான இருக்கான்?

இல்லை. அவன் சரியில்லை.

ஏதாவது பேசி அவனை சரி செய் என்றான்.

நானா? நான் பேசி என்று அவன் காதில் வாங்கி இருக்கான். அவன் அம்மாவை நினைத்து ரொம்ப கஷ்டப்படுறான். ஆனால் நான் பேச மாட்டேன். அவன் உன்னோட தம்பி தான பேசு.

நான் யாரிடமும் கான்டாக்ட்ல இருக்க கூடாதுன்னு தான் தனியா வந்திருக்கேன். சித்தப்பா கோபப்பட்டாரா? கஷ்டப்பட்டிருப்பாரே? அவன் கேட்க, ஆமா..என்றான்.

இந்த நேரத்துல எதுக்குடா நிலையத்தை பத்தி எல்லாத்தையும் சொன்ன? அதிரதன் கேட்க,

ரதா, அந்த குட்டிப்பையனுக்கு உடனே சிகிச்சை அளிக்கணும். உயிரோட விளையாடாத. வினுவை அவளிடத்திலே விட்டுரு..

அந்த குட்டிப்பையனுக்கு நாளைக்கே பார்க்கிறேன். ஆனால் வினுவை என்னால் விட முடியாது. ஆறு மாத கான்ட்ராக்ட் இருக்கே. அதை வைத்தே அவளை என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க வைப்பேன் என்றான்.

கல்யாணமா? உனக்கு இங்கே என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி வைக்க பேச ஆரம்பிச்சுட்டாங்க என்றான்.

வாட்? பரவாயில்லை. என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் முடிவெடுத்தால் மாற மாட்டேன்னு உனக்கு தெரியாதா?

தெரியும்டா. தாட்சுவை கூட வேண்டாம். வேற பொண்ணு யாரையாவது பிடிச்சுருந்தா நான் கண்டிப்பா அப்பாகிட்ட உனக்காக பேசுறேன்.

நோ..நோ..எனக்கு வினு தான் வேண்டும். அவள் கல்யாணம் முடிந்தவள்டா..

ஆமாடா, அவளுக்கு அவன் மீது காதலில்லாமல் தான என்று அதிரதனுக்கு நினைவு வந்து, வினுவோட கிரஷ் யாருடா? அதிரதன் கேட்க,

வினுவுக்கு கிரஷ்ஷா? என்ன சொல்ற ரதா?

நம்ம வகுப்பில் யார் மீதோ அவளுக்கு கிரஷ்ஷாம். அவளே சொன்னா. யாருன்னு உனக்கு தெரியாதா?

தெரியாதுடா? உண்மையிலே வினுவுக்கு கிரஷ் இருக்கானா?

ஏன்டா, அதையே திரும்ப திரும்ப கேக்குற?

அவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சுட்டா. எனக்கு பிரச்சனை இருக்காது.

மகனே கொன்றுவேன் பார்த்துக்கோ என்று அதிரதன் அவனை மிரட்ட, அவனுக்கு மற்றொரு கால் வந்தது.

இவன் எதுக்கு எனக்கு கால் பண்றான்? என் நம்பர் இவனுக்கு எப்படி கிடைச்சது? நிதின் கேட்க, யாருடா? அதான் அந்த நிலையத்து பையன் காவியன் என்றான்.

காவியனா? கான்பிரன்ஸ் காலுக்கு வா என்றான் அதிரதன். நிதினும் அவ்வாறே செய்ய, ஹலோ..நிதின் சார், காவியன் அழைக்க, அங்க எதுவும் பிரச்சனையா? நிதின் கேட்டான்.

இல்லை. நீங்க எங்க நேத்ரா அக்காவோட பள்ளியில் படிச்சவங்க தான?

ஆமாம்.

அவங்க கிரஷ் யாருன்னு சொல்லுங்க? காவியன் கேட்க, இவன் எதுக்கு கேட்கிறான்? என்று அதிரதன் மனதினுள் எண்ணினான்.

எல்லாரும் இதையே கேக்குறீங்க? நிதின் புலம்பினான்.

யார் கேட்டா? காவியன் கேட்க, வேற யாரு என் ஆருயிர் உயிரை எடுக்கும் தோழன் ரதன் தான்.

சார், நீங்க அவங்ககிட்ட சொல்லாதீங்க என்றான் காவியன்.

எனக்கே யாருன்னு தெரியாதுடா என்று அவன் சொல்ல, தெரியாதா? அப்புறம் எப்படி அக்கா பின்னாடி சுத்துனீங்க?

என்னிடம் எதுக்கு சொல்லக்கூடாதுன்னு சொன்ன? அதிரதன் கேட்க, திகைத்த காவியன் சாதாரணமாக, உங்களுக்கு தெரிய வேண்டாம்ன்னு தோணுச்சு.

அதான் ஏன்னு கேட்டேன்?

உங்க பேச்சே இன்று சரியில்லை. உங்கள நம்பி தான அக்காவை விட்டுட்டு வந்தோம். அவங்க அறை பக்கமே போக நினைக்காதீங்க என்றான் அதிகாரமாக காவியன்.

பாருடா எனக்கே அதிகாரமா? நான் அறைபக்கம் போகலை. அறைக்குள்ளே போயிட்டு வந்துட்டேன்.

சார், என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? அக்கா ஏற்கனவே கஷ்டத்துல இருக்காங்க.

எல்லாம் ஓ.கே. நீ எதுக்கு வினுவோட கிரஷ்ஷை தேடுற?

வேறெதுக்கு? அக்காவுக்கு விருப்பமிருந்தால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து வைக்க தான்.

என்னடா ஆளாலுக்கு அவளுக்கு மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க? அதிரதன் சத்தமிட்டான்.

சார், உங்க சத்தத்துக்கு உங்க ஸ்டாஃப்ஸ் பயப்படலாம். நான் பயப்பட மாட்டேன். நான் எங்க அக்காவுக்கு கல்யாணம் செய்து வைக்க தான் போறோம். உங்களுக்கு எதுக்கு சார் இவ்வளவு கோபம்?

எனக்கு அவளை பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன் என்று அதிரதன் சொல்ல, அதீபனும் தாட்சாயிணியும்..கல்யாணமா? அதி மாமாவா? அந்த பொண்ணையா? அதிர்ந்தாள் தாட்சாயிணி.

சார், நீங்க அக்கா பக்கத்திலே போகக்கூடாது. அது தான் உங்களுக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லது. அக்காவுக்கு மட்டும் உங்களால ஏதாவது ஆச்சு? உங்களை சும்மா விட மாட்டேன் என்றான் சினமுடன் காவியன்.

இத தான்டா நானும் ரதனிடம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறான் என்றான் நிதின்.

பாருடா, எனக்கே வார்னிங்கா?

ஹேய், யார் என்ன சொன்னாலும் இந்த அதிரதன் தன் முடிவிலிருந்து மாற மாட்டான். கல்யாணம் பண்ணா அவளை தான் பண்ணிப்பேன். எனக்கு பொண்டாட்டின்னா அவ மட்டும் தான் என்றான் உறுதியாக.

எல்லாரும் அதிர்ந்து இருக்க, காவியன் மட்டும் பார்க்கலாம் என்று அதிரதனிடம் சொல்ல, பார்க்கலாமே? உங்க எல்லாருக்கும் மாமாவா நான் தான் வரப் போகிறேன் என்று சவால் விடுத்தான்.

நிதின் சார், அக்கா கிரஷ் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க என்று போனை வைத்தான் காவியன்.

நிது, என்னை பார்த்தால் வில்லன் மாதிரியா இருக்கு? வினுவை கல்யாணம் பண்ணிக்கணுன்னு தானடா சொன்னேன். அதுக்கு ஏன்டா நீங்க இப்படி மறுக்குறீங்க? அதிரதன் கேட்டான்.

பரவாயில்லை. சின்ன பையனா இருந்தாலும் சரியா யோசிக்கிறான். நீங்க இருவரும் சரியா தான் இருப்பீங்க. ஆனால் உன்னோட ஸ்டேட்டஸ்க்கு அவ வர மாட்டா. கல்யாணம் ஆனவள். பின் கம்பெனியும் இதனால் பாதிக்கப்படும்.

டேய், எங்க கல்யாணத்துக்கும் தொழிலுக்கு சம்பந்தமேயில்லடா என்று அதிரதன் சொல்ல, இருக்குடா. வினு தான் உன்னை கல்யாணம் பண்ணா அதிகமா பாதிக்கப்படுவா?

அந்த பையனுக்கு தான் என் மேல நம்பிக்கையில்லை. உனக்கு கூடவா இல்லை.

நம்பிக்கை இல்லாமலா வினுவை உன்னிடம் விட்டான். அவன் பேசியதை நல்லா கேட்டியா இல்லையா? அவனுக்கு உன் மேலிருந்த நம்பிக்கைய நீ தான் உடைச்சுட்ட. நீ முத்தம் கொடுத்தது தெரிந்தால் அவளை அழைத்து செல்ல வந்துருவான் என்று நிதின் சொல்ல,

என்னிடமிருந்து அவளை யாராலும் பிரிக்க முடியாது அதிரதன் சொல்ல, நிதின் சிரித்தான்.

எதுக்குடா சிரிக்கிற? பொண்ணுங்க பக்கமே போக மாட்ட? வினுவை நீ பார்த்தே இரு நாள் தான் இருக்கும். அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று எப்படி உறுதியா சொல்ற?

அவளோட குணம் பிடிச்சிருக்கு. படிச்சிருந்தும் இங்கே இருக்காலே? எல்லாரும் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாங்க. ஆனால் இவள் வித்தியாசமா இருக்கா. நம்ம செய்ய வேண்டியதை அவளே இத்தனை நாள் அந்த பசங்கள பார்த்துக்கிட்டு இருந்திருக்கா. தனக்கு துரோகம் செய்தவனை கூட எதுவும் செய்யாமல் விட்டு வச்சிருக்காளே! அவனிடம் ஜீவனாம்சம் கூட வாங்கலை போல.

வினு..இப்படி தான். அவளுக்கு பிடிச்சிருந்தா உயிரையும் கொடுப்பா. பிடிக்கலையா அவங்கள காயப்படுத்தாம விலகிடுவா. வம்பு பண்ணா தரமா வச்சு செஞ்சுருவா. டேய், நீ முத்தம் கொடுத்த போது ரொம்ப அழுதாளா?

எனக்கு அப்படி ஏதும் தெரியலை. அழுதா..ரொம்ப இல்லை என்றான். அதான் நான் வாங்கினேனே அடி.

வாங்கு..வாங்கு..உன்னை யாரும் அடிச்சதேயில்லைல்லடா? நிதின் கேட்க, இல்லடா..யசோடா என்றான். அதுவும் இந்த தீக்சி பிரச்சனையால தான். அப்பாவும் என்றான்.

புன்னகைத்த நிதின், நான் கிளம்புகிறேன். ஆத்வி வந்தால் நான் அவ்வளவு தான்.

நாளைக்கு நிலையத்துக்கு அப்பாவோட போவேல்ல? அதிரதன் கேட்க, ஆமா போகணும்.

சரி, என்னோட மச்சானை நலம் விசாரித்து, அவன் மாமா கொடுத்தேன்னு பூச்செண்டு கொடுத்துட்டு அப்படியே என் மச்சானோட செல்பி எடுத்து அனுப்பு. நானும் அவரை பார்க்கணும்ல..என்றான் அதிரதன்.

மச்சானாம் மச்சான் கொன்றுவேன். எழிலுக்கு மட்டும் தெரிஞ்சது,…என்று நிறுத்தி, நான் வைக்கிறேன் என்றான் நிதின்.

சொல்லுடா..

கட்டி பிடிச்சுப்பான் என்றான் நிதின்.

என்ன?

ஆமா, அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ தான் ஒரு தடவை கூட நிமிர்ந்தே பார்க்கலையே?

என்னடா சொல்ற?

போடா டேய்..என்று போனை வைத்து விட்டு, மச்சானாம் மச்சான் என்று புலம்பிக் கொண்டே நிதின் சாப்பிட சென்றான்.

மறைந்திருந்த இருவரும் எழுந்தனர். அதுவரை இருவரும் நெருக்கமாக கையை பிடித்துக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. தாட்சண்யா பதறி அவன் கையிலிருந்து அவள் கையை எடுத்தாள்.

நாம..என்று அவள் தடுமாற, இருவரும் ஒன்றாக இருக்காங்க. என்னோட அண்ணன் எங்க இருக்கான்னு நான் பார்த்து, அந்த பொண்ணை அவங்க இடத்துல விடணும் என்றான்.

இல்லை..இல்லை..அதெல்லாம் வேண்டாம். அதி மாமா காதலிக்கிறதே பெரிய விசயம். எதையும் கெடுக்க வேண்டாம். எதுவரை போகுதுன்னு ஒரு வாரம் காத்திருந்து பார்க்கலாம். யாரிடமும் ஏதும் சொல்லிறாத.

ஏய், அண்ணனை உனக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு பேசுறாங்க?

மாமா காதல் என்னாவது? நான் மாமா பக்கம் தான். நான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு அவரை பிடிக்கும். ஆனால் அந்த பொண்ணை ஒத்துக்க வைக்கணும் என்று அவனை பார்த்தாள். அவன் அவளை முறைத்து பார்த்தான்.

அவங்க உன்னோட பெரியவங்க. உனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ என்றாள்.

அவனுக்கும் சரி என்று பட்டது. இருவரும் உள்ளே சென்றனர். சற்று நேரத்தில் ரவிக்குமார் குடும்பம் கிளம்பினார்கள்.

அதிரதன் யோசனையோடு நேத்ரா அறைப்பக்கம் சென்று எட்டி பார்த்தான். கதவு திறந்து இருந்தது. தள்ளி நின்று என்ன செய்கிறாள்? என்று கவனித்தான்.

அவள் யுவனுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள். யுவன் அவளை அணைத்து படுத்திருந்தான். அதிரதனும் சுவற்றில் சாய்ந்து கதை கேட்கலானான். அவனுக்கு அவன் அம்மா அவனுக்கு கூறிய கதை நினைவுக்கு வந்தது. அவனை மீறி கண்ணில் நீர் பெருக, அவன் அதை துடைத்தான். திடீரென சத்தம் நின்றது. மெதுவாக எட்டி பார்த்தான்.

நேத்ரா உடல் அசதியில் கதை கூறிக் கொண்டே தூங்கி விட்டாள். யுவன் தூங்காமல் விழித்திருந்தான். அவன் விழித்திருந்ததை கவனிக்காமல் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்து நேத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கிள்..என்று சத்தம் வந்தததை திடுக்கிட்டு பார்த்தான். கையசைத்து யுவன் அதிரதனை அழைத்தான்.

என்ன? நீ தூங்கலையா?

தூக்கம் வரல அங்கிள். உங்களுக்கு என்னை பிடிக்குமா?

எதுக்கு திடீர்ன்னு கேக்குற?

பிடிக்காதா?

பிடிக்குமே. உன்னை ரொம்ப பிடிக்கும் என்றான் அதிரதன்.

எனக்காக அக்காவை நல்லா பார்த்துக்கோங்க.

அவன் புன்னகையுடன், பார்த்துட்டா போச்சு என்றான்.

அக்கா, அழாம பார்த்துக்கோங்க என்றான்.

என்னாச்சு யுவிக்கு? என்று அவனை தூக்கிக் கொண்டு அதிரதன் வெளியே வந்தான்.

தன்னு சொன்ன மாதிரி. நான் செத்து போயிட்டேன்னா அக்காவையும் நீலுவையும் அண்ணா, அக்கா, பாட்டி, மல்லி, ஜெயாக்கா எல்லாரையும் பார்த்துக்கோங்க என்றான்.

அதிரதன் கண்ணீர் மல்க, உனக்கு ஏதும் ஆக விட மாட்டேன் யுவி. நீ சாக மாட்ட.

இல்ல அங்கிள். எனக்கு அடிக்கடி வயிறு வலிக்குது. செத்தா..ரொம்ப வலிக்குமா? அவன் கேட்க, அதிரதன் அவனை அணைத்து அழுதான்.

அங்கிள், நீங்க அழுதா யார் எல்லாரையும் பார்த்துப்பா என்று யுவன் தன் பிஞ்சு விரல்களால் அவன் கண்ணீரை துடைத்தான்.

உனக்கு நாளைக்கே செக் அப் செய்து, உடனே சரி செய்துடுவேன் என்றான் அதிரதன்.

அப்ப நான் சாக மாட்டேனா?

இல்லை. நான் தான் இருக்கேனே? யுவியை என்னை விட்டு போக விட்டுருவேனா? யுவி அதிரதனை அணைத்து, “லவ் யூ அங்கிள்” என்றான்.

தூங்கலாமா? என்று அவனை நேத்ரா அருகே படுக்க வைத்து அவனருகே அமர்ந்து இருவரையும் யோசனையுடன் பார்த்தான். யுவன் தூங்கவும் அவனறைக்கு சென்றான்.

நிதினுக்கு போன் செய்த நேத்ராவிடம் அவன் போலீஸ், அன்பு  நிலையத்தில் வந்து தங்க பாட்டி யோசிக்கிறாங்க என்றான்.

யோசித்த நேத்ரா, விக்ரமை வர வை என்றாள்.

உனக்கு இன்னும் அவனை நினைவிருக்கா?

வெட்டி பேச்சு பேசாம வர வைச்சு, விசயத்தை சொல்லி தங்க வை. பாட்டிக்கு நான் தான் சொன்னேன் என்றும் அவன் நம் தோழன் என்பதையும் சொல்லு என்றாள்.

வினு, இத்தனை நாள் அந்த பயபுள்ள என்னை பார்த்துக்கிறேன்னு எனக்கே தெரியாம இருந்திருக்கான். நம்ம விக்ரம் என்பது கூட மறந்து போச்சு. எல்லாம் நம்ம பாஸ் அதிரதன் வேலை தான் என்றான் கிண்டலாக.

சாருக்கு எப்படி அவனை தெரியும்?

அவன் தான் பெஸ்ட் டிடெக்டிவாக இருக்கானே?

அதான் இன்னும் உன்னை கொல்ல வந்தவனை கண்டுபிடிச்சிட்டானோ? நேத்ரா கேலி உரைக்க, அவனை சாதாரணமா நினைக்காத என்று அவன் பெருமையை பாட, எனக்கு தூக்கம் வருது. வேலையை முடிச்சிட்டு கால் பண்ணாத. மேசேஜ் பண்ணு என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

செழியன் வீட்டிலிருந்து நிதின் வீட்டிற்கு வந்தவுடன் தான் நேத்ரா அவனை அழைத்திருந்தாள்.

சற்று நேரத்திலே விக்ரம் வந்து விட, பசங்க எல்லாரும் தூங்க சென்றனர். அவன் வெளியே இருந்து அனைவரையும் கவனித்து விட்டு தனசேகரனுடன் தங்கினான்.

மாயா, மெதுவாக எழுந்து சாப்பாட்டு தட்டுடன் வெளியே வந்து, ஜீவாவை மெதுவாக அழைத்தாள். அவன் சோர்வாக எழுந்து கதவை திறக்க, அவள் உள்ளே வந்தாள்.

மாயா, இந்த நேரத்துல என்ன பண்ற? நான் வேற என்று சட்டையை தேடினான். களைப்பில் அந்த இருட்டில் தூக்கிப் போட்டிருந்தான்.

உள்ளே வந்த மாயா வைத்து, இந்தா சாப்பிடு என்றாள்.

இல்ல மாயா, பசியில்லை.

பசிக்கலையா? உனக்கா? சும்மா சாப்பிடு. நீ சாப்பிட்ட பின்தான் நான் சாப்பிடுவேன் என்றாள்.

உனக்கு பயமா இல்லையா? என்னுடன் தனியாக.. பாரு. நான் சட்டை கூட அணியவில்லை என்றதும் தான் அவள் விழிகள் அவனது உடலில் பதிந்தது. என்ன தான் சாப்பிட்டாலும் உடலை ஃபிட்டாக வைத்திருந்தான்.

ஏய், என்ன பேசுற?

ஆமா, நான் தப்பா நடந்து கொண்டால். அதான் உன்னோட ஆளு சொல்வானே? என்று தன்வந்த்தை கூற, அவள் முகம் மாறியது. வருத்தமானாள்.

நீ கிளம்பு. யாராவது பார்த்தால் தப்பாகிடும் என்றான் ஜீவா.

ஜீவா, என்னால தான் நீ சாப்பிடாமல் இருக்க? முதல்ல சாப்பிடு. நான் போறேன் என்றாள்.

உனக்கு இங்க கஷ்டமா இல்லையா? மாயா கேட்க, இருட்டுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். மூச்சு விட கொஞ்சம் சிரமமா தான் இருக்கு என்றான்.

ஆமா, கதவை திறந்து வைத்தும் இந்த அறை இப்படி தான் இருக்கு என்ற மாயா, சீக்கிரம் சாப்பிடு. யாரும் வந்து விடாமல் என்றாள்.

முதல்ல நீ சாப்பிடு. நான் சாப்பிடுறேன் என்றான் ஜீவா.

நீயே வச்சுக்கோ. நான் கிளம்புகிறேன் என்று மாயா எழுந்தாள். அவள் கையை பிடித்த ஜீவா, உட்காரு இருவருமே சாப்பிடலாம் என்றான். அவள் அமர்ந்து அவனை பார்த்தாள்.

அவன் இருவருக்கும் பாகம் பிரித்தான்.

என்ன இது? இவ்வளவா? என்னால முடியாது என்று அவளிடமிருந்த பாதியை அவன் பக்கம் தள்ளினாள்.

மாயா, நீ நல்லா சாப்பிட்டாலே வயிறு வலிக்காது என்றான்.

அவனை பார்த்தாள்.

எனக்கு தெரியும் மாயா. நீ சாப்பிடு என்று ஒரே தட்டில் இருவரும் பிரித்து உணவை உண்டு முடித்தனர். அவள் அவனை பார்த்துக் கொண்டே உண்டாள்.

உன்னோட பெயின் எனக்கு முன்னமே தெரியும். நீ போ. உன் அறையில் தண்ணீர் இருக்கும். பாதியை குடிச்சிட்டு தூங்கு. நல்லா தூங்குவ என்று தட்டை அவளிடம் கொடுத்தான்.

ஜீவா கதவை மூடாத இரு வாரேன் என்று எழுந்தாள். இருட்டில் ஏதோ அவள் காலில் பட, பயந்து அவனை அணைத்துக் கொண்டு, ஜீவா..அங்க என்னமோ இருக்கு என்றாள். அவன் கயிற்றை தூக்கி காட்ட, அதை பார்த்து விட்டு, அவனை பார்த்து, சாரி ஜீவா..என்று அவள் வெளியே ஓடினாள். அவன் புன்னகையுடன் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

போன மாயா மறுபடியும் வந்து, அவனுக்கு டார்ச்சும், சின்ன பசங்க விளையாடும் சின்ன ஃபேன்னையும் எடுத்து வந்து, ஜீவா..இந்தா, என்னிடம் இது தான் இருக்கு என்றாள்.

என்ன இது? இதை வைத்து விளையாடும் வயசா எனக்கு? அவன் கேட்க, அவள் புன்னகையுடன் பின் செல்ல சுவற்றில் இடித்தாள்.

ஏய், பார்த்துப்போ என்றான்.

அப்பொழுது அவள் காலில் பட்டதை கயிறு என எண்ணி கையில் எடுக்க, அது கரப்பான் பூச்சி. அவள் கத்துவாள் என்று அவன் ஓடி வந்து அவள் வாயில் கை வைக்க, அதை தூக்கிப் போட்டு, மீண்டும் அவனை அணைத்தாள். ஜீவாவால் அவள் நெருக்கத்தை தாங்க முடியவில்லை. ஆனாலும் அவள் ஆஸ்வாசமடையட்டும் என நிதானித்து இருந்தான். அவள் நிமிர்ந்து அவனை பார்த்து அவன் இடுப்பை சுற்றியிருந்த கையை எடுத்துக் கொண்டே அவனை பார்த்தாள். பின் வேகமாக ஓடி அவளறைக்குள் சென்று கதவை பூட்டி, நெஞ்சில் கை வைத்து அமர்ந்தாள் மாயா.

எனக்கு தன்னுவை தானே பிடிக்கும். ஆனால் இப்ப நான் என்ன செஞ்சிட்டு வந்தேன்? என் இதயம் ஏன் இப்படி அடிக்கிறது? அச்சோ..பயமா இருக்கே என்று அவள் மார்பில் கை வைத்து படுத்தாள். அவளால் தூங்க முடியவில்லை. அவளுக்கு ஜீவாவே முன் வந்து கொண்டிருந்தான்.

ஜீவாவோ..பிரம்மை பிடித்தவன் போல் அப்படியே அமர்ந்தான். மாயாவின் மென்மையான ஸ்பரிசம் அவனுள் விதையாய் முளைக்க ஆரம்பமானது.

காலை எழுந்த மாயா அவளது பழைய அறைக்கு சென்று குளித்து விட்டு, அவளறைக்கு வந்து கொண்டிருக்கும் போது ஜீவா நினைவு எழுந்தது. அவனறையில் மூச்சு விட கஷ்டமா இருக்குன்னு அவன் சொன்னதை நினைத்துக் கொண்டே அவனிருந்த அறைப்பக்கம் வந்தவள் அவன் கதவை பூட்டி இருப்பதை பார்த்து, மனதினுள் இவனை கதவை திறந்து வச்சிட்டே தூங்குன்னு தானே சொன்னேன் என்று திட்டிக் கொண்டே கதவை தட்டினாள். அவன் திறக்கவில்லை.

அவளுக்கு பயமாக அங்கிருந்த சிறு ஓட்டைகளால் செய்த ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள். அவன் தூங்கிக் கொண்டிருந்தான். அவள் மீண்டும் அழைத்தாள். அவன் எழவில்லை. மாயாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.

குச்சி ஒன்றை எடுத்து அச்சிறு ஓட்டை வழியே குச்சியை நுழைத்து தாழ்ப்பாளில் எம்பி விட்டு லாக்கை திறந்தாள். கதவு திறக்க, உள்ளே சென்று அவனை எழுப்பினாள்.

அவனுக்கு வியர்த்து இருந்தது. கதவை முழுதாக திறந்து விட்டு அவனிடம் வந்து, ஜீவா..எழுந்திரு..எழுந்திரு என்று அழுதாள். அவனை வெளியே கொண்டு வர நினைத்தாள். அவளால் சுத்தமாக முடியவில்லை.

ஜீவா..எழுந்திரு..எழுந்திரு..என்று அழுது கொண்டே அவன் முகத்தில் அவள் வாயால் காற்றை ஊதினாள். அவன் அசையவேயில்லை. அவன் மார்பில் காதை வைத்து பார்த்தாள். அவன் வாயோடு வாய் வைத்து காற்றை ஊதினாள். அந்நேரம் அங்கே வந்து கையை கட்டி மாயாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் தன்வந்த்.

இரவு சரியான சம்பவம் போல என்று அவன் கேட்க, திரும்பி அவனை பார்த்து கண்ணீருடன் தன்னு..இங்க வா..ஜீவா எழுந்திருக்க மாட்டிங்கிறான். பயமா இருக்கு என்றாள்.

சம்பவத்தில் களைத்து தூங்குபவனை எழுப்பினால் அவனுக்கு சோர்வா இருக்குமே? தன்வந்த் பேச, ச்சீ என்ன பேச்சு பேசுறடா? அவன் விழிக்க மாட்டேங்கிறான்ன்னு பயந்துகிட்டு இருக்கேன் என்று மாயா தன்வந்த் பேச்சில் மனம் உடைந்தாலும், ஜீவாவிடம் சென்று அவனது மார்பில் கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள்.

அந்த பக்கம் வந்த காவியன் முதலில் தன்வந்த்தை பார்த்து வந்து, ஜீவாவின் ஆடையில்லாத உடலுடன் மாயா அருகே இருப்பதை பார்த்து, அவர்களை தவறாக எண்ணி கொந்தளித்து மாயா..என்று சத்தமிட்டான்.

மாயா காவியனை பார்த்து அழுது கொண்டே, காவியா ஜீவா..என்று பேச முடியாமல் அழுதாள். அப்பொழுது தான் ஜீவா முகத்தை கவனித்தான். விழிக்காமல் அவனிருக்க அந்த அறையை பார்த்ததும் அவனுக்கு புரிந்தது.

என்ன அண்ணா, இந்த மாதிரி ஒருத்தியையா காதலிச்சீங்க? இரவு முழுவதும் ஜல்சா பண்ணிட்டு எப்படி தூங்குறான் பாருங்க? என்றான் தன்வந்த் ஏளனமாக.

காவியன் அவனை அடிப்பதற்குள் அவன் கன்னத்தில் அறை விழுந்தது. மாயா தன்வந்த்தை அடித்து விட்டு, அவன் எழுந்திருக்க மாட்டேங்கிறான். என்னால அவனை வெளிய கொண்டு வர முடியாம பத்து நிமிசமா..போராடிக்கிட்டு இருக்கேன். நீ எவ்வளவு கேவலமா பேசுற கத்தினாள். அனைவரும் அங்கு வர, அருணா சீக்கிரம் தண்ணி எடுத்து வா காவியன் சொல்ல, அவள் சென்றாள்.

பசங்க எல்லாரும் சேர்ந்து அவனை அறையிலிருந்து தூக்கி வந்தனர். அருணா கொண்டு வந்த தண்ணீரை வாங்கிய காவியன் ஜீவா முகத்தில் தெளிக்க, அவன் விழித்தான்.

அவன் விழித்தவுடன் மாயா அவனிடம் சென்று, ஜூவா..ஒன்றுமில்லைல்ல. கதவை திறந்து வச்சுட்டு தூங்குன்னு சொன்னேன்ல அவள் கேட்க, அவன் பதிலளிக்காமல் அவனை சுற்றி இருந்தவர்களை பார்த்தான்.

கதவை திறந்து வச்சிருந்தா உங்களை பத்தி தான் எல்லாருக்கும் தெரிய வந்திருக்குமே? தன்வந்த் மீண்டும் பேச, காவியன் அவனை முறைத்து பார்த்தான்.

என்ன பேசிக்கிட்டு இருக்க? அருள் சத்தமிட்டான் தன்வந்த்.

நேற்று இந்த அறையில் மாயா ஜீவாவுடன் இருந்தாள். நான் பார்த்தேன். நீங்க அவளிடமே கேளுங்க என்றான் தன்வந்த்.

காவியன் மாயா அருகே வர, அங்கே பாட்டி, சுஜித்ரா மற்றவர்களும் வந்தனர்.

இங்க என்ன நடக்குது? சுஜித்ரா சத்தமிட, மாயா நீ அவனறைக்கு போனாயா? காவியன் கேட்க, ஜீவா எழுந்தான்.

அனைவரையும் பார்த்த மாயா, போனேன் என்றாள்.

சுஜித்ராவும் காவியனும் ஒன்றாக அவளை அடிக்க, இடையே வந்த ஜீவா மீது அடிபட்டது.

காவியன் ஜீவா கழுத்தை பிடிக்க, மாயா காவியனை பிடித்து தள்ளி விட்டு, நான் அவனை பார்க்க போயிருக்கலாம். பேச போயிருக்கலாமே? ஏன் அவனுடன் படுக்க தான் போயிருக்கணுமா? என்ன நடந்துதுன்னு தெரியாம இவன் சொல்றான்னு எங்கள சந்தேகப்படுறீங்க? என்று கத்தினாள்.

ஜீவா மாயாவை அவன் பக்கம் திருப்பி அவளை ஓங்கி அறைந்தான். மாயா கன்னத்தை பிடித்து பாவம் போல் அவனை பார்த்தாள்.

நான் இதுக்கு தான் நேற்றே சொன்னேன். இத்தனை பேர்ல யாராவது நான் சாப்பாடாம இருக்கேன்னு கவலைப்பட்டாங்களா?  படலையே? உனக்கென்ன அக்கறை? அவன் கத்த, மாயா கன்னத்தை பிடித்துக் கொண்டே, என்னால தான உனக்கு தண்டனை கிடைச்சது. அதனால தான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். அதுல என்ன தப்பு இருக்கு?

இருக்கே! தப்பில்லாம நம்ம மேல எதுக்கு இவங்க சந்தேகப்படணும்? ஜீவா கேட்க,

அட அட அட..என்னம்மா நடிக்கிறானுக? இரவு அவனறையில் இருந்துட்டு இப்ப ஃப்ரெஸ்ஸா குளிச்சிட்டு வந்து நிக்கிறதுலயே தெரியலையா? தன்வந்த் ஏளனமாக கேட்க, ஜீவா கையை இறுக்கினான். மாயா கண்ணீருடன் ஜீவாவையும் காவியனையும் பார்த்தாள்.

வெண்பா அவன் முன் வர இருந்தவளை பிடித்து நிறுத்திய எழிலன், நீ இதுல தலையிடாத என்றான்.

என்ன நடந்தால் எனக்கென்ன என இருக்கும் ஜீவா நண்பர்களில் ஒருவன், தன்வந்த்தை அடித்தான். அவனும் இவனை அடிக்க, காவியன் அவர்களை தடுத்து, தன்வந்த்தை தரதரவென இழுத்து சென்று அவ்வறையில் தள்ளி விட்டு, வெளியிலிருந்து பூட்டினான்.

அண்ணா, அவனுக்கு ஏதும் ஆகிடாமல். அங்க சரியா மூச்சுவிட முடியாமல் தான் ஜீவா மயங்கிட்டான் மாயா அவ்வறை பக்கம் செல்ல, தன்வந்த் கதவை தட்டினான். யாரும் கதவை திறக்கக்கூடாது. அவனுக்கே நடந்தது புரிபடும் என்றான் காவியன்.

ஏன்டி, அவன் உன்னை பத்தி இவ்வளவு கேவலமாக பேசியும் அவன் பக்கமா போற? அருணா கோபமாக கேட்க, மாயா காவியனையும் ஜீவாவையும் பார்த்தாள். இருவரும் அவளை எரித்து விடுவது போல் முறைத்து நின்றனர்.

ஜீவா..நடந்ததை சொல்லு பாட்டி கேட்க, அவன் ஓரிடத்தில் அமர்ந்து, பெருமூச்சை எடுத்து விட்டு நடந்ததை சொல்லி விட்டு அச்சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடினான்.

உனக்கு ஒன்றுமில்லையே? சுஜித்ராவும் மயூரியும் அவனிடம் வந்தனர்.

யாரும் என் பக்கம் வர வேண்டாம். நான் தனியா இருக்கணும். போங்க என்று ஜீவா கத்தினான். மாயா அழுது கொண்டே அறைக்கு சென்றாள். வெண்பாவும் அவள் தோழிகளும் அவள் பின்னே அறைக்கு சென்றனர்.

அனைவரும் கலைய, நளன், எழிலன், ஜீவாவின் நண்பர்களும் பேசாமல் அவனருகே வந்து அமர்ந்தனர்.

ஜீவாவிற்கு மாயா அழுதது, அவனுக்கு மூச்சு கொடுத்தது என அவளை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.

ஜீவா தோளில் கை வைத்தான் எழிலன். ஜீவா நிமிர்ந்து அமர, இந்தா இதை போட்டுக்கோ என்று அவன் நண்பன் சட்டை ஒன்றை கொடுத்தான்.

அந்த அறைக்கதவை பார்த்தான் ஜீவா. அவனை அப்பொழுதே திறந்து விட்டோம். அவன் அடிச்சு பிடிச்சு அவனறைக்கு சென்று விட்டான் என்றான் அவன் நண்பன்.

அவன் கண்கள் மாயாவை தேட, எல்லாரும் அப்பொழுதே போயிட்டாங்க என்றான் மற்றவன்.

ஜீவா, அவனை சும்மா விடவே கூடாது.

அவனை ஏற்றி விடாத என்றான் நளன் கண்டிப்புடன்.

இன்று நம்ம முதலாளி வராராம். ஆனால் நாங்க தான் பள்ளிக்கு போயிருவோம். நீ அவரை பார்த்தால் இதையெல்லாம் கேளு என்று ஒருவன் ஜீவா கையில் அந்த லிஸ்ட்டை திணிக்க, அவன் அதை துக்கி எறிந்து விட்டு எழுந்தான்.

ஜீவா, நீ கோபத்தை கட்டுப்படுத்திக்கோ. எனக்கு தெரிந்து அவன் மீண்டும் உங்கள் இருவரையும் டார்கெட் பண்ணுவான். பொறுமையா பேசு. மற்றவர்கள் பேச இடம் கொடுக்காமல் நீ தான் சமாளிக்கணும். கத்துக்கோ என்று எழிலன் கூற, சரி என்று தலையசைத்து சுஜித்ரா, பாட்டி அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அக்கா..ஜீவா அழைக்க, அனைவரும் அவனை பார்த்தனர்.

பசிக்குதா? சாப்பிடுறியா? பாட்டி சாப்பாட்டை எடுக்க, இல்ல பாட்டி..நான் அதுக்கு வரலை. என்னையும் மாயாவையும் இந்த ஒரு முறை மன்னிச்சிருங்க. இனி எந்த தப்பும் நடக்காது. அதனால இன்று நான் ஸ்கூலுக்கு போகவா?

சுஜித்ரா புன்னகையுடன் அவனை பார்த்து, இப்ப தான் மாயா வந்து நீ சொன்னது போல் சொல்லீட்டு உன்னை பள்ளிக்கு அனுப்ப சொன்னாள். அவளை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டிரு என்றாள் சுஜித்ரா.

அக்கா..என்று தயங்கி, எல்லாரும் எங்களை நம்புறீங்கல்ல? அவன் கேட்க, அனைவரும் அவனை ஒருமாதிரி பார்த்தனர்.

என்ன? அவன் கேட்க, இல்லை அவளும் இதையே தான் கேட்டாள் என்றார் ஜெயந்தி.

அதான் நீ சொல்லீட்டேல்ல. நாங்க நம்பாம இருப்போமா? என்ற பாட்டி,.போய் குளிச்சி தயாராகி வா. இறைவழிபாட்டின் பின் சாப்பிடலாம். இப்பொழுது இதை குடிச்சிட்டு போ. கடுங்காபி உனக்கு உடல் சரியாகும். புத்துணர்ச்சியா இருக்கும் என்றார். அங்கேயே அமர்ந்து குடித்து விட்டு குளித்து தயாராகி மாயாவை பார்க்க, அவளறைக்கு சென்றான் ஜீவா.

Advertisement