Advertisement

அத்தியாயம் 17

ஹாய்டா..மிதுன், “பிராஜெக்டுக்கு ஆரம்பிச்சுட்டீங்களா?” நளன் கேட்க, அவன் எழிலனை பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணா..என்று ஜீவா அவனை தட்ட, எழிலன் அவனை பார்த்தான்.

“நாளைக்கு தான் சீனியர் ஆரம்பிக்கணும்” என்றான்.

அருணாவும் மயூரியும் வெளியே வந்தனர். ஜீவாவை பார்த்து அவனிடம் வந்தனர். அருணா நளனை பார்த்து, நீங்க எப்ப சார் வந்தீங்க? கேட்டாள்.

“நான் இப்ப தான் வந்தேன்” என்று இருவரையும் பார்த்தான். அவர்கள் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு, ஜீவா..வா என்று அழைத்தனர்.

என்ன? அவன் கேட்க, வா..என்று மயூரி அவன் கையை பிடித்து இழுத்தாள்.

நாம அப்புறம் பார்க்கலாம். எதுவும் வேணும்ன்னா சொல்லுங்க என்று ஜீவா  எழிலனை பார்த்து கூறி விட்டு அவர்களுடன் சென்றான்.

டேய், இந்த சார் நேத்ரா அக்கா தம்பியாம் அருணா சொல்ல, வாட்? என்று அவன் எழிலனை பார்க்க, மூவரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். நளன் எழுந்து அவர்களிடம் வந்தான்.

“டேய், உலறி வச்சுறாத” என்ற மயூரி ஜீவாவிடம், சுஜி அக்கா அழுதுகிட்டு இருக்காங்கடா. ஏதும் பிரச்சனையான்னு தெரியல என்று பேச்சை மாற்றினாள்.

“ஆமாடா, என்ன பேசினாலும் பதிலே சொல்ல மாட்டேங்கிறாங்க” என்றாள் அருணா.

ஏதும் பிரச்சனையா? நளன் கேட்க, உங்களுக்கு சுஜி அக்காவை முன்பே தெரியுமா? கேட்டான் ஜீவா.

தெரியும் என்று விஷ்வாவை பார்த்தான். இருவரும் சண்டை போட்டுக்கிட்டாங்க அருணா. அதான் அழுறாங்கன்னு நினைக்கிறேன்.

அழுறாங்களா? வாங்க பார்க்கலாம் என்று எழிலனிடம் ஐந்து நிமிடத்தில் வாரேன் என்று கையை காட்டி விட்டு விஷ்வாவை பார்த்துக் கொண்டே சுஜியை பார்க்க சென்று விசயத்தை கேட்டான் நளன்.

அவனிடம் தனியாக பேசணுன்னு..நேத்ரா இங்கே தான் வேலை பார்க்கிறாள் என்றிலிருந்து அவளது கர்ப்பத்தையும் சொன்னாள். உன்னை நான் வர சொன்னதே எழில் அருகிலே இருந்து அவன் இதை தெரிந்து கொள்ள விடக் கூடாது என்பதற்காக தான். அவன் படிப்பு முடியவுமே அவன் முன் வந்து விடுவாள் என்றாள் சுஜி.

அக்கா..அக்கா நல்லா இருக்காங்கல்ல? வேற ஒன்றுமில்லையே? அவன் படிக்கணும்ன்னு தான் இப்படி பிரிஞ்சு இருக்காங்களா? கேட்க. அதிரதனுடன் அவள் எந்த காரணத்திற்காக வேலைக்கு சென்றிருக்கிறால் என்று சொல்ல, நளன் கோபமாக,

அக்கா, பணத்துக்காக தனியா ஒருவனின் வீட்டில் இருக்காங்களா? சினமாக வெளியே சென்றான்.

ஏய், நில்லுடா..நளன் என்று சுஜி அவன் பின்னே வந்தாள். அவள் கால் தட்டி கீழே விழுந்து ஷ்ஆ..என்றாள். அருணாவும் மயூரியும் அவளிடம் வர, என்னை விடுங்க மூவரும் அவனை பிடிங்க என்றாள்.

சுஜி சத்தம் கேட்டு அவர்களை திரும்பி பார்த்தான் நளன். அவள் சொன்னவுடன் வெளியே ஓட வந்தவனை ஜீவா பிடித்து உள்ளே தள்ளினான். அவன் மீண்டும் ஓட, அவன் முன் வந்த அருணாவும் மயூரியும் அவனை உள்பக்கமாக தள்ளினர். அவன் கீழே விழக்கூடாது என மயூரி அருணாவின் ஒவ்வொரு கையையும் பிடிக்க, அருணாவின் கால்கள் அவனது இரு கால்களுக்கு இடையே இருந்ததை பார்க்காமல் மூவரும் விழுந்தனர்.

“நெத்தியடி” என்பது போல மயூரி நெற்றி தரையில் பட்டு வீங்கி விட்டது. நளனுக்கு தலையின் பின் பகுதியில் அடிப்பட்டது. ஆனால் பலமாக இல்லை. அருணா கையை பிடித்து இழுக்க, அவள் நேராக அவன் மீதே விழுந்து அவன் மார்பிலே முட்டினாள். அவள் இதழ்கள் அவன் மார்பில் படிய அனைவரும் உறைந்து இருவரையும் பார்த்தனர்.

சுஜித்ரா அருணாவை எழுப்பி விட்டு, தெரியாம தான சாரிம்மா என்னால் தானே என்றாள். அருணா உள்ளே ஓடினாள். நளன் எழுந்து சுஜித்ராவை முறைத்துக் கொண்டே செல்ல,

“சொல்லீறாதடா” என்று அவள் சொல்ல, அவன் அருணா சென்ற திசையை பார்த்துக் கொண்டே, நான் அவனிடம் சொல்லலை என்று வெளியே சென்றான். மயூரி நெற்றி வீக்கத்தை பார்த்து பயங்கரமாக சிரித்தான் ஜீவா. அவன் சத்தம் கேட்டு மற்ற அனைவரும் வந்தனர்.

மிதுனுக்காக காத்திருந்த காவியனும் அவன் நண்பர்களும் நேரமாகிறது என்று அறைக்கு சென்றனர். இப்பொழுது அவர்களும் வந்தனர். உள்ளே சென்ற அருணா ஜீவாவை முறைத்துக் கொண்டே மயூரியை தூக்கி விட்டாள்.

காவியன் அண்ணா, கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் இங்கே ரொமான்ஸ் நடந்ததை பார்த்திருப்பீங்க? உங்களுக்கு குடுத்து வைக்கலை என்று அருணாவை பார்த்துக் கொண்டே கூற,

எல்லாமே உன்னால தான்டா என்று அவள் அவனருகே வர, அவன் ஓடினான். உன்னால முடியாதே..என்று அவன் ஓட,

ஜீவா..உனக்கு ரொம்ப பசக்குதுல்ல..சாப்பிடலாமா? சத்தமாக அருணா கேட்க,

வாவ்..சாப்பாடு. அதுக்காக எவ்வளவு அடி வேண்டுமானாலும் வாங்குவேனே? என்று அவளிடம் வர, வெளியே உள்ளே இருந்தவர்கள் எல்லாரும் இருவரையும் பார்த்தனர். சுஜித்ரா முன் நின்று கொண்டிருந்த நளன், பைல்லை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, பேசிக் கொண்டிருந்த எழிலன் மிதுன் என எல்லாரும் அவர்களை பார்த்தனர்.

மகனே நீ செத்தடா என்று ரசம் இருந்த வாளியை எடுத்து வந்தாள். பாட்டி அவளை தடுக்க, அவன் ரொம்ப பேசுறான். அவனை சும்மா விட்டால் நல்லா இருக்காது என்று அவன் மீது ஊற்றினாள். எல்லாரும் ஜீவாவை பார்த்து சிரித்தனர்.

ஏய்..உனக்கு நம்ம வெள்ளெலியே பரவாயில்லை. சைலண்ட் பார்ட்டி எல்லாம் இப்படி செய்யலாமா? அவன் கேட்க, எல்லாரும் சிரித்தனர்.

டேய், உன்னை வெள்ளெலின்னு சொல்லாதன்னு சொல்லி இருக்கேன்ல்ல.. வெண்பா அவனிடம் வர, வாழைப்பழ தோல் வழுக்கி அவன் மீதே முட்டினாள். எழிலன் வேகமாக எழுந்தான். மிதுன் அவனை பார்க்க, ஜீவாவும் அவனை திரும்பி பார்த்தான்.

ச்சீ..ஓவர் ஸ்மல்லா இருக்கு. எரும..போய் குளிச்சிட்டு வா..அவள் சொல்ல, வெண்பாவை நெருங்கி அவன் முகம் அருகே வந்து தலையை சிலுப்பினான்.

அய்யோ..அக்கா..இவனுக்கு இன்னும் ரெண்டு நாள் பட்டினியா போடுங்க என்று முகத்தை சுருக்கினாள் வெண்பா.

நான் சொல்லலை. மேனஸ் தெரியாதவன் தன்வந்த் மீண்டும் வம்பு செய்ய, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? சும்மா அவனையே டார்கெட் பண்ணுற?

அது என்ன? பொண்ணுங்க எல்லாருமே அவனுக்கு சப்போர்ட்டுக்கு வர்றீங்க? இங்க பாரு..தேவா வேடிக்கை தான் பாக்குறான். அட..நம்ம அண்ணனுகளும் வேடிக்கை தானப்பா பாக்குறாங்க. அப்படி என்ன செஞ்சு வச்சிருக்கான்? தன்வந்த் கேட்க,

நீ வாடா..இவனுக்கு வேற வேலையேயில்லை என்று மயூரி ஜீவாவை இழுத்து செல்ல, விடு…அவன் வர வர ரொம்ப பேசுறான். அவன் பல்லை உடைச்சா தான் எனக்கு நிம்மதி என்று ஜீவா மயூரி கையை எடுத்து விட்டு, கால்பந்து இருப்பதை பார்த்தான்.  தன்வந்த்தை குறி வைத்து அவன் மீது படுமாறு எத்த ஓடி வந்து பந்தருகே வந்து நின்றான்.

அவனுக்கு பின்னே நின்று மாயா இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாயா, நீ இங்க என்ன பண்ற? சுஜி அவளிடம் வர, எல்லாரும் அவளை பார்த்தனர். வெண்பாவும் அருணாவும் ஜீவாவை பார்த்துக் கொண்டே அவளிடம் சென்றனர்.

அக்கா..என்று அவள் நகராமல் இருக்க, வெண்பாவிற்கு புரிந்தது.

அக்கா…அவளுக்கு பீரியட்ஸ். நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன் என்று மாயாவுடன் உள்ளே சென்றாள். மயூரி ஜீவாவை இழுத்து குளியலறைக்கு வெளியே நிறுத்தி போ..குளிச்சிட்டு வா என்றாள். தேவா அவர்கள் பின் வந்து, நில்லு வாரேன் என்று ஜீவா ஆடையை எடுத்து கொடுத்து விட்டு சென்றான்.

இவனுக்கு என்னக்கா பிரச்சனை? எல்லாரும் கஷ்டப்படுற மாதிரியே பேசுறான்? நளன் கேட்க, அவனுக்கு திமிரு கூடிப் போச்சு என்று கூறி விட்டு அருணா வெண்பா பின் சென்றாள்.

பெருமூச்சுடன் எப்படி தான் நேத்ரா இவனை சமாளித்தாளோ தெரியல? என்று புலம்பிக் கொண்டே, நீயும் ஜீவா அறையில் இருந்துக்கோ என்றாள் சுஜி.

அவனுடனா? அப்ப எழிலன்? அவன் மிதுனுடனும் நண்பர்களுடனும் தங்கிக்கட்டும். காலையிலிருந்து நீ பார்த்துக்கோ. நைட் காலேஜ் போயிட்டு வந்து அவனுக பார்த்துப்பானுக.

அக்கா, இரு நாட்கள் தானே?

ஆமா, அதுக்குள்ள அவனுக்கு சரியாகிடும்ன்னு நினைக்கிறேன் என்றாள் சுஜித்ரா.

“எல்லாரும் சாப்பிட வாங்க” என்று பசங்களை சாப்பிட அழைத்து சென்றாள். அனைவரும் சாப்பிட, சுஜித்ரா மாயாவிற்கு சாப்பாடு எடுத்து சென்றாள். மாயா, வெண்பா, அருணா, மயூரி இன்னும் நான்கு பொண்ணுங்களும் ஒரே அறை தான். அவர்கள் அறையில் மட்டும் குளிக்க அறை, பாத்ரூமிற்கு அறை இருக்கும். பசங்க மொத்தமாக குளிக்க அறை இருக்கும்.

ஆனால் தண்டனைக்காக மாயா சிறிதளவு வெளிச்சம் இருக்கும் அறையிலே இருந்ததால் அவளுக்கு தேவையான வசதி இல்லை. சுஜி அவளிடம், அவளறைக்கு அழைத்தாள்.

அக்கா, நான் தப்பு செய்திருக்கேன். இங்கேயே இருக்கேன். அப்புறம் பசங்க உங்களை தான் தப்பா பேசுவாங்க. அவன் பேசியதை பெருசா எடுத்துக்காதீங்க என்றாள்.

அக்கா, நான் ரெஸ்ட் ரூமிற்கு மட்டும் எங்கள் அறைக்கு போயிட்டு வாரேன் என்றாள்.

ஜீவா, ரொம்ப கோபப்படுறான். அதுனால விஷ்வாவை உன்னோட பக்கத்து அறையில் தான் இரு நாட்கள் இருக்கணும்ன்னு சொல்லி இருக்கான். பள்ளிக்கு கூட போக வேண்டாம்ன்னு சொல்லீட்டான்.

அக்கா..அங்க ரொம்ப இருட்டா இருக்குமே? எனக்காவது லைட், ஃபேன் இருக்கு. நீங்க அவனுக்காக பேசிப் பாருங்களேன். அவன் இன்னும் சாப்பிடலையாக்கா? மாயா கேட்டாள்.

நான் பேசிப் பார்த்துட்டேன். அவன் கேட்க மாட்டேங்கிறான்.

அக்கா, சாப்பிடவாது அவனை விடுங்களேன். அவன் பசிதாங்க மாட்டான் என்றாள் மாயா.

நீ தான்ன சொன்ன? தண்டனையை மாற்றினால் பசங்க ஏதாவது சொல்லுவாங்கன்னு. ஆனால் அதுக்காக அவனுக்கு சாப்பாடு தராமல் இல்லை. இன்று அவன் உன்னை பார்த்து தான் பந்தை அடிக்காமல் விட்டான். அவன் ஏதாவது செய்து தன்வந்த்திற்கு அடிபலமாகி இருந்தால் அவனை இங்கிருந்து வெளியே அனுப்பி விடுவார்களாமே? மல்லிகா அக்கா சொன்னாங்க.

ஆமாக்கா என்று சாப்பாட்டை பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் சாப்பாடு எடுத்து வர்றீங்களா? ரொம்ப பசிக்குது. எனக்கு இந்த நேரம் அதிகமாக பசிக்கும் என்றாள்.

இரு. நான் வெண்பாவிடம் எடுத்து கொடுத்து விடுகிறேன். உனக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே அக்காவை கூப்பிடு என்று வெளியே வந்தாள் சுஜி.

சுஜி உள்ளே சென்ற பின் வெண்பா அருகே அமர்ந்த யுவனின் குட்டி நண்பன் நிலவன் சாப்பிடாமல் வெளிய ஓடி வந்தான்.

நீலு நில்லுடா என்று அவன் பின் ஓடி வந்து அவனை பிடித்தாள் வெண்பா.

நிம்மதியா சாப்பிட விடுறீங்களாடா? எதுக்குடா வெளிய வந்த? வெண்பா கேட்க, காலை தரையில் அடித்துக் கொண்டு ஏதும் சொல்லாமல் அழுதான் நிலவன்.

நீலு..என்னன்னு முதல்ல சொல்லு? என்று அவனை தூக்கினாள்.

எனக்கு யுவி வேணும் என்று அழுதான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள். பின் மூச்செடுத்து விட்டு, யுவி அக்காவோட தான் இருக்கான். சீக்கிரம் வந்துருவான் என்றாள்.

இல்ல. அவன் வரமாட்டான் என்று அழுதான். காவியனும் நண்பர்களும், எழிலனும் நளனும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெண்பா கண்ணீரை பார்த்ததும் மிதுனும் மற்றவர்களும் அவளிடம் வந்தனர்.

வெண்பா முகம் மாறியது. வரமாட்டானா? யார் என்ன சொன்னாங்க? அவள் கேட்டுக் கொண்டிருக்க, அவளிடம் அவர்கள் வந்தனர்.

என்னாச்சு? எதுக்கு அழுற? மிதுன் கேட்க, எல்லாரையும் பார்த்து விட்டு, சொல்லு..யார் என்ன சொன்னா? என்று மறுபடியும் நீலுவிடம் கேட்டாள்.

தன்னு தான் சொன்னான் என்று அவன் சொல்லவும் அவனை காவியனிடம் கொடுத்து விட்டு, கோபமாக அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு சென்றாள் வெண்பா.

நீலுவிடம் கேட்ட பசங்க வேகமாக உள்ளே சென்றனர். சாப்பிட்டு கொண்டிருந்த தன்வந்த் சாப்பாட்டை எடுத்து அவன் மீதே கொட்டினாள் வெண்பா. அவன் கோபமாக அவளை அடிக்க வந்தான்.

அவன் கையை பிடித்த எழிலன், பொண்ணுங்கல அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத என்றான்.

அவ என்ன செஞ்சா? கத்தினான் தன்வந்த்.

நீ நீலுகிட்ட என்ன பேசுன? என்று கிருஷ்ணன் கோபமாக..மாறி மாறி அடிக்க, வெண்பாவும் அழுது கொண்டே அவனை அடித்தாள். சத்தம் கேட்டு கவனித்த விஷ்வா அவர்களிடம் ஓடி வந்தான்.

நளன் வெண்பாவை பிடித்து இழுக்க, என்னை விடுங்க..அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று ஆக்ரோசமாக துள்ளிக் கொண்டிருந்தாள் வெண்பா.

“சும்மா இருடி” என்று அருணா, மயூரி அவளிடம் வந்தனர். அவர்களை அணைத்து வெண்பா அழுதாள். அன்று நடந்ததை நினைச்சாலே எனக்கு இப்ப கூட பதட்டமா இருக்கு. இவன் மனுசனாடி..சின்னப்பையனிடம்..யுவன் செத்துருவான்னு சொல்லி வச்சிருக்கான் என்று அழுதாள். அவள் கைகள் நடுங்குவதை பார்த்த எழிலன் மெதுவாக நடந்து அவர்களிடம் சென்று அமர்ந்து அவள் கையை பிடித்தான்.

அழுது கொண்டிருந்த வெண்பா அவனை பார்த்தாள். அருணாவும் மயூரியும் அவனை பார்த்து வெண்பாவிடமிருந்து விலகினர்.

இங்க வா..உட்காரு என்றான் எழிலன். எல்லாரும் அவனை பார்த்தனர். வெண்பாவும் அவனருகே அமர்ந்தாள்.

அவனுக்கு வந்த ப்ளட்டை பார்த்த தான். நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக அவனுக்கு பெரிய பிரச்சனைன்னு நினைச்சா அது பெருசா தான் தெரியும். அவன் அதை சரி செய்யும் முயற்சிக்காக தானே போயிருக்கான். நல்லதை மட்டும் நினை. எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.

நீ இப்படி கோபப்பட்டால் அந்த குட்டிப்பையனும் இவன் சொன்னது உண்மைன்னு தான் நினைப்பான். அவனுக்கு புரிய வைக்கிறத விட்டு இவனோட சண்டை போட்டு என்ன ஆகப் போகிறது? இவன் திருந்தப் போறானா என்ன? அவன் கேட்க, எல்லாரும் அவனையே பார்த்தனர்.

நேத்ரா பிரச்சனையை எப்படி சரி செய்வாளோ? அப்படியே செய்கிறான் என்று ஆச்சர்யமாக பார்த்தனர். விஷ்வா கண்கலங்க அவனை பார்த்தான். வெண்பா ஆறுதலாக அவன் தோளில் சாய்ந்தாள்.

வெண்பா மிதுன் சத்தமிட, நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு, எழிலனையும் பார்த்து விட்டு வெளியே சென்றாள்.

இப்பொழுது தான் மாயாவிடம் பேசி விட்டு சுஜித்ரா அங்கே வந்தாள்.

என்னடா செஞ்சுகிட்டு இருக்கீங்க? மாயாவிற்கு சாப்பாட்டை கொடுத்து வருவதற்குள் இப்படி செஞ்சு வச்சிருக்கீங்க?

டேய், நீ என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? என்று விஷ்வாவை பார்த்து கேட்டாள். அவன் அப்பொழுதும் எழிலனை பார்க்க, அவள் விஷ்வாவை முறைத்து பார்த்தான். அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

வெண்பாவுடன் அருணா, மயூரியும் வந்து அமர்ந்து, ஏய் என்ன பண்ண? தெரிஞ்சு தான் பண்ணியா? மயூரி கேட்க, நான் என்ன செய்தேன்? என்று இருவரையும் பார்த்தான்.

நீ எதுக்கு எழிலண்ணா தோள்ல சாய்ந்த, மிதுன் அண்ணா உன்னை அழைத்த தோரணை இருக்கே? நீ செத்த என்றாள் அருணா.

ஆமா, யாருமே ஆறுதலா பேசல. என்னை தடுக்க மட்டும் தான செஞ்சீங்க? எனக்கு தோன்றியது செய்தேன். இதுல என்ன பெரிய தவறு இருக்கு? வெண்பா கேட்க,

சரி, அப்ப நீ அவரை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. அண்ணான்னு கூப்பிடு என்றாள் அருணா.

வெண்பா அவளை பார்த்து ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

என்னடி, ஏதாவது சொல்லு? மயூரி கேட்க, இல்லை என்னால கூப்பிட முடியலை என்றாள் வெண்பா.

வேணாம் வெண்பா. அண்ணனுகளுக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க. நேத்ரா அக்காவுக்கு தெரிஞ்சா சரியா இருக்காது.

நான் என்ன சொன்னேன்? அண்ணன்னு கூப்பிட மாட்டேன்னு தான சொன்னேன்.

எதுக்கு கூப்பிட மாட்ட?

பிடிக்கலை. கூப்பிடலை.

உனக்கு அவங்களை பிடிச்சிருக்கா? அருணா மெதுவாக வெண்பாவை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

பிடிச்சிருந்தா தான் என்னவாம்?

அடியேய். அவங்க நம்ம நேத்ரா அக்கா தம்பி.

அதனால எனக்கு அவங்கள பிடிக்கக் கூடாதா?

உனக்கு அண்ணா மேல காதல் இருக்கா? மயூரி கேட்டாள்.

இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சுபிர்தனும் மிதுனும் வெண்பா முன் வந்து நின்றனர்.

ஏய், நீங்க போய் சாப்பிடுங்க என்று மிதுன் மற்ற இருவரையும் அனுப்பினான். வெண்பாவிற்கு பயமாக இருந்தாலும் அவர்கள் அமர இவள் நகர்ந்து அமர்ந்தாள்.

இங்க வேண்டாம் என்று வெண்பா கையை பிடித்து இருவரும் தனியே இழுத்து சென்றனர். நளனும் எழிலனும் அவ்விடத்தில் இருந்தே அவர்களை பார்த்தனர்.

டேய், அந்த பொண்ண ரொம்ப திட்டப் போறாங்களோ? என்று நளன் கேட்க, தெரியலையே? அவன் என்னிடமே முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

என்ன முறைத்தானா? நளன் கேட்க, நான் வெண்பாவை காதலிப்பதை மிதுன் கண்டு கொண்டான்.

என்னது வெண்பா மீது உங்களுக்கு காதலா? என்று அவர்கள் பின்னிருந்து அருணாவும் மயூரியும் கேட்க, இருவரும் அவர்கள் பக்கம் திரும்பினர்.

இருவரையும் பார்த்து பயந்து பொண்ணுங்க பின் செல்ல இடித்தனர் தேவாவை.

ஏய், பார்த்து வர மாட்டீங்களா? கவனமா இருங்க. அவன் மீது இடித்து விட்டு மீண்டும் பஞ்சாயத்தை கூட்டாதீங்க என்று தன்வந்த்தை அவனும் முறைத்து விட்டு செல்ல, தேவா..இங்க வாவேன் என்று அருணா கையை விடுத்து மயூரி அவனுடன் பேசுவது போல் செல்ல,

அய்யோ, மயூ..என்னை தனியா விட்டுட்டு போறடி? என்று அவள் நகர, எழிலனை அமர வைத்து விட்டு, அருணா கையை பிடித்த நளன், எங்க ஓட பாக்குற? யாரிடம் சொல்லப் போற?

இல்ல, நான் யாரிடமும் சொல்லலை.

அது எப்படி சொல்லாம இருப்ப?

எனக்கு எதையும் யாரிடமும் அதிகமாக பேசி பழக்கமில்லை என்றாள்.

அப்படி தெரியலையே?

அய்யோ, முதல்ல கையை விடுங்க. அண்ணனுக பார்த்தா எனக்கும் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க என்றாள்.

என்ன கிளாஸ் நடக்கும்? அவன் கேட்க, அவனை முறைத்து அவன் கையை உதறினாள்.

யாரிடமாவது சொன்ன அப்புறம் நடக்குறதே வேற? அவன் மிரட்டுவது போல் சொல்ல, அவள் அவனை பார்த்துக் கொண்டே ஓடினாள். பாட்டியை இடித்து விட்டாள்.

எங்க பார்த்துக்கிட்டே இப்படி ஓடி வர்ற? மெதுவா போ. இந்த பசங்க தான் சண்டை போடுறானுகன்னா. பொட்ட பிள்ளைகளும் அவனுகளுடன் மல்லுக்கு நிக்குதுக..என்று திட்டி விட்டு செல்ல, சுவத்துல முட்டி உன்னோட ப்ரெண்டுக்கு மாதிரி வீங்கிடாம என்று கேலியுடன் கூறி நளன் சத்தமாக நகைத்தான்.

எப்ப நீ ஓட ஆரம்பிச்சியோ அப்பொழுதிலிருந்தே எனக்கும் எல்லாமே தப்பா தான் நடக்குது என்று அவனை முறைத்து தலையில் அடித்தாள் அருணா.

ஓய்.என்று அவன் அவள் பக்கம் செல்ல இருந்தவனை தடுத்த எழிலன் அவனை பார்த்து சிரித்தான்.

பாட்டி நளன் அருகே வந்து, தம்பி இப்படி சத்தமா சிரிக்காத, மோகினிகளுக்கு அழகான பசங்களை பார்த்தால் பிடிக்குமாம். உன் சிரிப்பும் அழகா இருக்கா.. பிடிச்சிட்டு போயிறாம என்று கையால் அவர் சைகை செய்ய, எழிலன் சிரித்தான்.

அருணா அவனை பார்த்து, பாட்டி போல் செய்து காட்டி கேலி செய்து சிரித்துக் கொண்டே, பார்த்து.. பிடிச்சுட்டு போயிட்டா. மோகினி வச்சு செய்யுமாம் என்று மேலும் அவனை உசுப்பேத்தி விட்டு சென்றாள் அருணா.

“பாரேன் டா கொழுப்பை” என்று நளன் எழிலனை பார்க்க,

“மாட்டிக்கிச்சே…மாட்டிக்கிச்சே..”பாடல் பாட, அவளா மாட்டிகிட்டா? நான் தான் மாட்டிகிட்டேன் என்றான் நளன்.

ஹேய்..என்று எழிலன் அவனுக்கு ஹார்ட்டினை கைகளால் விரித்து காட்ட, அவள நாளைக்கு வச்சுக்கிறேன்.

பார்த்துடா, நீ வச்சுக்கிட்டேன்னா. அவனுக அண்ணனுக உன்னை வச்சுப்பானுக.. என்று கேலி உரைத்தான்.

“சும்மா இருடா எழில்” என்று அவனை அழைத்து சென்றான் நளன்.

நீலுவை தூக்கி வந்த காவியன் அவனை ஓரிடத்தில் அமர வைத்து, தானும் அமர்ந்தான். அதே நேரம் நேத்ரா சாப்பிட எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

யுவி, என்ன செய்ற? சாப்பிட வா..அழைத்தாள் நேத்ரா. சத்தம் கேட்டு அதிரதனும் வெளியே வந்தான்.

யுவியை துக்கி அமர வைத்தாள். அவனுக்கு எடுத்து வைக்க, அதிரதனும் அவனருகே அமர்ந்தான். அவனுக்கும் அவள் எடுத்து வைக்க, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சார், சாப்பாடு அங்க இருக்கு என்றாள். அவள் போன் ஒலிக்க, அதை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அவனுக்கு எடுத்து வைத்தாள். போனை பார்த்த அதிரதன் அவளை பார்த்தான். அவள் போனை எடுத்து மறைக்க, அவன் புன்னகையுடன் அவள் போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டு, நீ தொடாத என்றான்.

காவியன் தான் அழைத்திருந்தான்.

காவியா, என்ன செய்றீங்க? அவள் கேட்க, அதிரதன் சாப்பிட்டுக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தான்.

அக்கா, இங்க எதுவுமே சரியில்லை காவியன் சொல்ல, அண்ணா..யுவி என்று நிலவன் சத்தம் கொடுத்தான்.

அக்கா, நீலு ஒரே அழுகை. யுவனிடம் பேசணுமாம்.

பிரச்சனைய சொல்லுடா?

முதல்ல இவன் பேசட்டும். இல்லை நம்மை பேச விட மாட்டான். பேசுடா..என்றான்.

யுவி, நீ நல்லா இருக்கியா? நீலு கேட்க, நீ என்ன செய்யுற? அழுதியா? யுவன் கேட்க, நீ சொல்லுடா என்று நீலு அழுவது போல் கேட்டான்.

நான் நல்லா இருக்கேன். இங்க அக்காவோடவும் அங்கிளோடவும் ஜாலியா இருக்கேன்.

அங்கிளா?

ஆமாடா, இங்க இருக்கிற அங்கிள் என்னோட விளையாண்டாங்க. நாம அன்னைக்கு கோவில்ல பார்த்தோம்ல்ல துப்பாக்கி. அதை வச்சிருக்கேன் என்றான்.

துப்பாக்கியா? நீ வரும் போது கொண்டு வந்துருவேல்ல. நாம சேர்ந்து விளையாடலாம் என்று சொல்லிக் கொண்டே அவன் சுருதி குறைந்தது. தூரத்தில் தன்வந்த் செல்வதை பார்த்தான். அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

அண்ணா..என்று எழுந்து காவியனை கட்டிக் கொண்டு, யுவி செத்து போயிருவானா? என்று கேட்டுக் கொண்டே நிலவன் அழுதான். இவ்வளவு நேரம் பசங்க க்யூட்டா பேசிக் கொண்டிருப்பதை ரசித்து கவனித்து கொண்டிருந்த அதிரதன் முகம் மாற, சாப்பாட்டை தட்டில் வைத்தபடியே யுவனை பார்த்தான்.

டேய் காவியா, நீலு என்ன பேசுறான்? கோபமாக நேத்ரா கேட்க, பின்னே விஷ்வா சத்தம் கேட்டது.

அவன் தான் அறிவு கெட்ட தனமா பேசுறான்னா .ஆளாக்கு கையை ஓங்குறீங்க? அப்புறம் இங்க இருக்கும் பெரியவர்களுக்கு என்ன மரியாதை? என்று கிருஷ்ணனை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

அதை கேட்டு சண்டை போட்டீங்களாடா?

அக்கா, நீங்க அங்க போனதிலிருந்தே இந்த தன்வந்த் சரியில்லை. என்னோட பொறுமையும் பறந்து விடும் போல என்று நடந்த அனைத்தையும் கூறி விட்டு, சுஜி அக்காவிடமும் திமிறாகவும் பேசினான்.

இந்த ஜீவாவும் அவனுக்கு பதிலுக்கு செய்கிறேன்னு பெருசா செய்யதான் வந்தான். மாயா வெளியே வரவும், அவளை பார்த்து அமைதியாக சென்று விட்டான். ஆனால் தன்வந்த் சும்மா இருக்க மாட்டான்னு தான் தோணுது.

விஷ்வா சாரும் அவனிடம் முன்பே எச்சரித்தார். அவன் கேட்பது போல் தெரியலை. சுஜி அக்காவால அவனை சமாளிக்க முடியும்ன்னு தோணலை. ஜீவா எதற்கெடுத்தாலும் கையை ஓங்குவதால் அவனை இரு நாட்களுக்கு மாயாவை போல் அறைக்குள்ளே இருக்க சொல்லி இருக்காங்க.

மாயா..நல்லா இருக்கால்லடா?

ஆமா, விஷ்வா இந்த நேரத்தில் இங்க என்ன செய்கிறான்? விஷ்வா சாரும், அக்காவை ஏதோ பைல்ஸ்ஸை சேர்ந்து தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் வந்த பிரச்சனை வந்து அக்கா, சாரை அடிச்சிட்டாங்க என்றான்.

அடிச்சாலா? விஷ்வா அமைதியாவா இருந்தான்?

அமைதியா தான் இருந்தாங்க. அக்கா தான் கோவிச்சுட்டு போனாங்க. சார் அழைத்தும் போயிட்டாங்க. அப்புறம் தான் இவ்வளவு பிரச்சனையும்.

அக்கா, இங்க உங்க தம்பியும் அவங்க ப்ரெண்ட்ஸூம் இருக்காங்க. நீங்க பேசவாது செய்யலாமே? உங்களை நினைச்சு அழுதாங்க என்றான் காவியன்.

அழுதானா? ஆனால் இப்ப என்னால பேச முடியாது. நான் எதுக்கு சொல்றேன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.

புரியுதுக்கா. ஆனால் நீங்க வெளிய போய் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு போனா..படிப்பை விடணுன்னு நினைக்க மாட்டார்ல்ல.

வெளிய எங்க போனாலும் என்னால நிம்மதியா இருக்க முடியாது. அதனால் தான் இங்கே வேலை பார்ப்பதை ஒத்துக் கொண்டேன்.

அவன் என்னோட தம்பின்னு சுஜி உன்னிடம் சொல்லிட்டாளா?

அக்கா, இங்க எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் முன்னாடி யாரும் ஏதும் பேசக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்காங்க .

ஏதாவது நல்ல விசயம் சொல்றியா? இங்கிருந்து நான் என்ன தான் செய்வது?

சுஜி இருக்காலா?

அக்கா, உள்ள வேலையா இருக்காங்க.

வேற எதும் சொன்னாலா? என்ன பைல்ஸ் பார்த்தாங்கன்னு கவனிச்சியா? திடீர்ன்னு எதுக்கு பார்க்கணும்? என்று சாதாரணமாக கேட்டாலும் அவள் மனம் அடித்துக் கொண்டது.

திடீர்ன்னா? அதிரதன் கேட்க, அக்கா சாருமா லைன்ல இருக்காங்க?

ஆமா, நான் தான் ஸ்பீக்கரில் போட்டேன் என்றான் அதிரதன்.

அக்கா, போனை நீங்க எதுக்கு எடுக்குறீங்க?

அவன் என்ன சொல்வான் என்று அறிந்த நேத்ரா அதிரதன் வாயை பொத்தினாள். அவன் அவள் கையை கடிக்க, ஷ் ஆவென கத்தினாள்.

அக்கா, என்னாச்சு? காவியன் கேட்க, இங்க ஒரு பெரிச்சாலி திடீர் திடீர்ன்னு பயமுறுத்துடா.

அங்க பெரிச்சாலியா?

அண்ணா..இல்லை என்ற யுவியை தூக்கி அவளறைக்கு சென்று விட்டு, அண்ணாவிடம் ஏதும் சொல்லக்கூடாது. ஓ.கே வா? என்று வெளியே வந்தாள்.

அதிரதன் போனை எடுத்து, உங்க அக்காவுக்கு என்னை பார்த்தால் பெரிச்சாலி போல் இருக்கோ?

வாட்? உங்களை அக்கா சொன்னாங்களா?

ஆமா, என்னை தான் சொன்னா. அவள் என் வாயை மூடினாலா..நான் அவள் கையை கடித்து விட்டேன்.

போனை பிடுங்கி காதில் வைத்த நேத்ரா கோபமாக அவனை முறைத்து விட்டு, காவியா..

அக்கா, அங்க என்ன நடக்குது? கவனமா இருங்கன்னு சொல்லீட்டு தான வந்தேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லைடா. வம்பா பேசுறார். அவ்வளவு தான்.

பார்த்துக்கா.பாப்பாவை மறந்துறாதீங்க.

டேய், என்ன பேச்சு பேசுற? நான் ஏற்கனவே சொன்னது சொன்னது தான். என் வாழ்க்கை முடிந்தது தான் என்றாள் சினமுடன்.

அக்கா,..என்று கோபமாக அவன் போனை வைத்தான்.

டேய், காவியா..போனை வச்சுட்டியா? சார் எல்லாமே உங்களால தான் என்று மீண்டும் அவள் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அதிரதன் அவன் போனில் காவியனை அழைத்தான். முதல் முறை அவன் எடுக்கவில்லை. பின் எடுத்து,

சொல்லுங்க சார் என்றான்.

அதிரதனிடமிருந்து போனை பிடுங்கி, டேய் எதுக்குடா போனை வச்ச? நேத்ரா கேட்க. அதிரதன் எழுந்து சென்று யுவனை தூக்கி சாப்பிட அமர வைத்தான். இருவரும் நேத்ராவை பார்த்தனர்.

நீலுகிட்ட போனை கொடு என்றான்.

நீலு செல்லம்..நீ யுவனோட தான பேசுன? அவனுக்கு ஒன்றுமேயில்லை. அவன் கண்டிப்பா உன்னுடன் விளையாட சீக்கிரம் வந்துருவான். அக்கா சொன்னா கேட்பேல்ல. அவனை பத்திரமா உன்னிடம் அழைச்சிட்டு வருவேன். அப்பொழுது பேசியது போல் பேசாத? தன்னுக்கு உடம்பு சரியில்லை. அதான் உன்னிடம் அப்படி பேசிட்டான். அவனுக்கு மருந்து போட்டு அக்கா சரி பண்ணிடுவேன்.

சரிக்கா. யுவனை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க.

ஓ.கேம்மா. அண்ணாகிட்ட போனை கொடு என்ற நேத்ரா, வெண்பா என்ன செய்றா?

அவ சாப்பிடாம கோபிச்சிட்டு போனா. அவ தான் ரொம்ப டென்சன் ஆகிட்டா. அவனை அடித்தாள். உங்க தம்பி தான் பேசி அனுப்பினாங்க.

அவன் பேசினானா?

ஆமாக்கா? சரி, நான் பார்த்துக்கிறேன்.

நீ ஓ.கே தான்ன?

அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே கண்கலங்கினான் காவியன்.

காவியா, நான் தான் சொன்னேன்ல. படிப்புல கவனத்தை செலுத்து. எல்லாமே சரியாகிடும்.

முடியலைக்கா. என்னால முதல்ல மாதிரி கவனமா இருக்க முடியல.

ஏன்டா, நீயும் கேட்க மாட்டேங்கிற?

லவ் பண்ணி பாருங்க தெரியும் என்று கத்தினான். நேத்ரா அமைதியாக முறைத்து நின்றாள்.

அக்கா..காவியன் அழைக்க, நீ என்னமும் செய். அவளிடம் காலேஜ்ல வச்சு நடந்துகிட்டது போல் நடந்துக்காத. அவள் என்ன தான் வெளியே வராமல் இருந்தாலும் தன்வந்த் செய்யும் அனைத்தும் அவளுக்கும் இப்பொழுது தெரிந்திருக்கும்.

கண்டிப்பா..அவள் அவனிடமிருந்து வெளியே வரும் வாய்ப்பாக தோன்றுது. அதுக்காக நீ அவளை தொந்தரவு செய்றன்னு தெரிஞ்சது அவ்வளவு தான் என்றாள்.

சரிக்கா. அவள் அவனிடம் மாட்டாமல் இருந்தாலே போதும் என்றான்.

போனை வை. நாம அப்புறம் பேசலாம்.

விஷ்வாவிற்கு நேத்ரா போன் செய்ய, சாப்பிட்டு கையை கழுவி வந்த அதிரதன் போனை பிடுங்கி என் முன்னே பேசு என்றான்.

சார்..போனை குடுங்க அவள் அருகே வர, விஷ்வா போனை எடுத்தான். வேண்டுமென்றே அதிரதன், நீ யாரிடம் பேசினாலும் என் முன் வைத்து தான் பேசணும்.

சார்..கொடுங்க என்று அவன் கையிலிருந்த போனை பிடுங்க, ஏய்..நீ என்னோட விளையாடாத. அப்புறம் என் விளையாட்டு வேற மாதிரி இருக்கும் என்று சொல்லிக் கொண்டே அவளை பார்த்து கண்ணடித்தான்.

சரி கேட்டு தொலைங்க என்று போனை அவன் முன் வைத்தாள்.

வினு, அவன் என்ன பேசிக்கிட்டு இருக்கான்? நீ அமைதியா இருக்க?

இதை விடு. அங்க என்ன நடக்குது? நான் வந்து ரெண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்னடா பண்றீங்க? தன்வந்த்தை நான் சரி செய்கிறேன். உனக்கும் சுஜிக்கும் என்ன பிரச்சனை?

அமைதியாக இருந்த விஷ்வா, அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான்.

சரி, அது உங்க பர்சனல். என்ன புதுசா பைல்ஸ்ஸ பார்த்துக்கிட்டு இருக்க? என்ன பார்த்த?

பர்சனலா? அதெல்லாம் எந்த பர்சனலும் இல்லை. அவள் நான் சொல்றதை கேட்காம எதிர்மாறாவே பேசுறா?

என்ன?

நானும் நிதினும் உன்னை இனி தொந்தரவு செய்யலைன்னு சொல்லீட்டோம்ல்ல. நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாமே? விஷ்வா கேட்டான்

டேய், எல்லாருக்கும் என்ன ஆச்சு? இதையே பேசுறீங்க? என்று கோபமாக கேட்டாள் .

வேற யார் கேட்டா?

காவியன் தான் கேட்டான்.

அவனா?

எதுக்குடா திடீர்ன்னு. நான் தான் கல்யாணத்திலே விருப்பமில்லைன்னு சொல்லீட்டேனே?

சொன்னா புரிஞ்சுக்கோ வினு. நீ இப்ப சிங்கிலா இருக்க? உன் பின்னாடி சுத்திய யாராவது உன்னை தொந்தரவு செய்வாங்க.

லூசாடா நீ? அது ஸ்கூல், காலேஜ்ல்ல சுத்தினாங்க. அதுக்காக இப்ப வரைக்கும். அதுவும் நான் திருமணமாகி டிவோர்ஸ் ஆனவ. யார் வீட்லயாவது ஒத்துப்பாங்களா? அவனுக எவனும் இப்ப வரையும் சிங்கிளா சுத்த மாட்டானுக என்றாள்.

அது என்ன? சுஜி போலவே நீயும் கேக்குற? அவளிடம் பேசிட்டு பேசுறியா?

இல்லையே? இனி தான் அவளிடம் பேசணும்.

இதை விடேன். ஒரு ப்ரெண்டா சொல்றதுக்கு சொல்லீட்டேன். எதுக்கும் கவனமா இரு. உன்னுடன் இருக்கிறானே அவனிடமும் கவனமா இரு என்றான்.

ஹே.,.என்னை என்ன உன்னை போல் நினைச்சிட்டியா? அதிரதன் கோபமாக, அவனும் அங்கிருந்து கத்தினான்.

டேய், நிறுத்துங்கடா. எத்தனை பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. சின்னப்பசங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?

முதல்ல என்ன பைல்ஸ்ஸ பார்த்துக்கிட்டு இருந்தீங்க? அவள் கேட்க, விஷ்வா சொல்ல ஆரம்பித்தான்.

Advertisement