Advertisement

அத்தியாயம் 16

ஆடையை மாற்றாமல் ஓடி வந்த ஆத்வியை பார்த்து அனைவரும் திகைக்க, சிவநந்தினி..வாயை திறக்கும் முன் அம்மா..நான் புடவை மாற்றுகிறேன். அதற்கு முன் ஒரே ஒரு முக்கியமான விசயம். வாயை திறந்துறாத என்று வாங்க ஆன்ட்டி, அங்கிள்..என்று மெதுவாக பேசி விட்டு தாட்சாயிணியை பார்த்து தலையசைத்து நிதினிடம் வந்து அவன் கையை பிடித்து இழுத்து வெளியே சென்றாள்.

எங்க போறீங்க? செழியன் கேட்க, அதற்குள் இருவரும் வெளியே வந்தனர்.

ஆத்வி..நிதின் அழைக்க, அவன் வாயை மூடி அவனிடம் கொடுத்து கேள் என்று சைகை செய்தாள். போனை காதில் வைத்தான் நிதின். அவள் அவன் கேட்டுக் கொண்டிருந்த போனில் காதை வைக்க, அவளை பார்த்துக் கொண்டே அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

சார், என்னை விடுங்க..நேத்ரா சொல்ல, வினு நீ சொல்லு, உனக்கு அப்படி ஏதும் தோன்றியதா? என்று அவன் அவளது புடவையை பிடித்துக் கொண்டே எழுந்தான்.

இல்ல சார், எனக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை. விடுங்களேன் சார் என்று அவள் அவனை விட்டு விலக, பிடித்திருந்த புடவையை இழுத்தான். அவள் அவன் மீது இடித்து அவன் மார்பில் கை வைத்து விலகி நின்றாள். அவளை ரதன் அனு அனுவாய் ரசித்து பார்த்தான். அவள் பார்வை தாழ்ந்து நின்றாள்.

ஏன்? என்னை நிமிர்ந்து பார்த்து விட்டால் என் வசம் வந்து விடுவாய் என்று நினைக்கிறாயா?

ரதன், என்ன செய்ற? நிதின் சத்தமிட்டான். அவன் அப்பொழுதே ஸ்பீக்கரை எடுத்து விட்டதால் நிதின் அழைப்பு கேட்கவில்லை. அவனுக்கு கேட்கவில்லை என்றான் கோபமாக.

நிது, அண்ணா வினுவை பிடிச்சிருக்குன்னு அவளிடம் சொன்னான் ஆத்வி சொல்ல, வாட்..அவனிடம் சொல்லீட்டு தான வந்தேன்.

ஏன் நிது, உன்னால அவளை மறக்க முடியலையா? ஆத்வி கேட்க, அதுக்காக நான் சொல்லலம்மா. ஆனால் இப்ப அவளிடம் யாரும் காதல், கல்யாணம் என்று உள்ளே வர வேண்டாம்ன்னு தோணுது என்று சொல்லிக் கொண்டே..நான் சொல்றேன். முதல்ல அங்க என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஹெட் செட் போட்டு கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஹலோ..சார், நான் எல்லாருக்கும் எத்தனை முறை சொல்றது? எனக்கு எதுவுமே பிடிக்கலை. இனி கல்யாணம் என்பது என் வாழ்க்கையிலே கிடையாது என்று அழுதாள்.

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லலையே? உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேன். அதுக்காக காதலான்னா..எனக்கு தெரியல. காதலாக இருந்தால் உன்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றான்.

நிது, அண்ணா கல்யாணம் வரை போகிறான் என்றாள் ஆத்விகா. அவன் போனை வெறித்து அமர்ந்திருந்தான்.

சார், உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? நான் திருமணமாகி டிவோர்ஸ் ஆனவ சத்தமிட்டாள்.

எனக்கு உன்னை பார்த்தால் அப்படி தோணவேயில்லை. உன்னை பார்த்தால் என் வயதுள்ள பொண்ணுன்னு யாருமே நம்ப மாட்டாங்க. அதை விடு. எனக்கு உன் மீது இருப்பது ஈர்ப்பா? காதலான்னு? எப்படி கண்டுபிடிக்கிறது?

என்னை விடுங்க என்று அவன் கையை இழுத்து அவள் புடவையை கோபமாக எடுத்துக் கொண்டிருந்தாள்.

வினு, ஸ்மல் நல்லா இருக்கு? என்ன சோப் போடுற?

அவனை பார்த்த அவள், நான் உங்களோட ஆறு மாத வேலைக்காரி மட்டும் தான். உங்களுக்கு புரியுதா? அவள் கேட்க, அவன் அவள் புடவையை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு..

வினு..என்று அழைத்து விலகி சென்றவளை பின்னிருந்து அணைத்தான். அவள் அவன் முன் திரும்ப, உடனே அவளுக்கு இதழணைப்பை கொடுக்க, அவள் அவனை தள்ளி விட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு அழுதாள்.

உங்களை எனக்கு நன்றாக தெரியும். அந்த நம்பிக்கையில் தான் உங்களுடன் இருக்க சம்மதித்தேன். அதுக்காக அழைத்தவுடன் படுக்க வருவேன்னு நினைச்சுட்டீங்கல்ல என்று அழ, அவளை அறைந்த அதிரதன்..

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. காதலை அறிந்து கொள்ள தான் முத்தம் கொடுத்தேன். ஒரு வேலை உன்னை படிக்கும் போதே சந்தித்து இருந்தால் கூட இதே உணர்வு தான் ஏற்பட்டு இருக்கும்ன்னு எனக்கு தோணுது.

உனக்கு தெரிந்த அதே அதிரதன் தான் நான். ஆனால் வினு..எனக்கு ஒரு சந்தேகம். நாம எப்படி பள்ளிப் படிப்பை முடித்து எப்படியும் ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. நான் மாறாமல் தான் இருக்கேன். ஆனால் நீ எப்படி அதை சொல்ற? என் மீது எந்த நம்பிக்கையில் என்னை நம்பி இங்கே இருக்க? இப்ப நடந்த பிரச்சனையில் என்னை என் வீட்டாரே நம்பலை. நீ எப்படி நம்பின? பசங்க சொன்னாங்களே என்று கேள்வியுடன் அவளை பார்த்தான்.

சார், நேரமாகுது. டின்னர் செய்யணும் என்று நழுவ பார்த்தாள்.

ஆமால்ல. அண்ணா சரியா கேட்கிறான்? இவளுக்கு அண்ணா மீது என்ன நம்பிக்கை? என்று நிதினை பார்க்க, அவன் சினமுடன் அமர்ந்திருந்தான்.

நிது..என்று அவள் அழைக்க, எந்த தைரியத்துல வினுவிற்கு முத்தம் கொடுத்தான்? கத்தினான் நிதின்.

டேய், பக்கத்துல அழகா ஒரு பொண்ணு இருக்கா. அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. அதான் கொடுத்துட்டான்.

லூசு மாதிரி பேசாத ஆத்வி, அப்பா கண்டிப்பா வினுவ ஏத்துக்க மாட்டார் அவன் சொல்ல, ஏன்? அழகாக இருக்க மாட்டாளா?

அழகா? அவ பேரழகு என்று நிதின் சொல்ல, அவள் முறைத்தாள்.

ஏய், நீ தான கேட்ட? அதுக்கு தான் பதில் சொன்னேன். புத்திசாலியும் கூட. அவளுக்கு திருமணம் முடிந்து டிவோர்ஸ் ஆகிடுச்சு.

அதனால அந்த பொண்ணு வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு சொல்றியா? ஆத்விகா கேட்க, இல்ல..நம்ம குடும்பத்துல இதை ஏத்துக்க மாட்டாங்க. அதை விட வினுவால் கம்பெனியும் பாதிக்கப்படும் என்றான்.

அண்ணா, பார்த்துப்பான்.

இங்க பாரு. எல்லா நேரமும் உன் அண்ணா வினுவுடன் இருக்க முடியாது. அவங்க கல்யாணமே பண்ணிக்கிட்டாலும் கண்டிப்பா பிரச்சனை அதிகமா வரும். அதை விட வினுவை எல்லாரும் காயப்படுத்துவாங்க. சரியா இருக்காது என்றான்.

டேய், அண்ணா ஒரு பொண்ணை பார்க்க மாட்டானான்னு எல்லாரும் காத்துக்கிட்டு இருந்தாங்க. அவன் எந்த பொண்ணிடமாவது பேசி பார்த்திருக்கிறாயா? இவங்ககிட்ட நல்லா பேசுறான். அவங்கள சரி பண்ணிட்டா போதும். இருவரும் சரியா இருப்பாங்க என்று ஆத்விகா சொல்ல,

இல்ல ஆத்வி, இது சரியில்லை அவன் சொல்ல, இல்லை சரி தான் என்று இருவரும் மாறி மாறி முறைத்துக் கொண்டு சண்டையை தொடங்க, மொத்த குடும்பமும் இவர்களை தேடி வந்தனர்.

என்ன சரி, சரியில்லை செழியன் கேட்க, அப்பா..அம்மா..என இருவரும் திகைத்தனர்.

கேட்கிறார்ல்ல சொல்லுடி. ஏதோ முக்கியமான விசயம்ன்னு பையனை கூட்டிட்டு உன்னை பார்க்க வந்தவர்கள் அருகே இல்லாது சென்று விட்டாய்? பேச இவ்வளவு நேரமா? வா…புடவையை மாத்து என்று ஆத்விகா காதை பிடித்து இழுத்து உள்ளே சென்றார் சிவநந்தினி.

நிதின் போனை அணைத்து வைத்து விட்டு செழியனிடம் சமாளித்துக் கொண்டு உள்ளே வந்தான். அதீபனும் தாட்சாயிணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இவர்களை சந்தேகமாக பார்த்தனர்.

டின்னர் செய்யணும்ன்னு நழுவ சென்ற நேத்ராவிடம், நீ எல்லாரிடமுமே நிறைய விசயங்களை மறைப்பது போல் இருக்கு. அதை விடு. நீ இப்ப என்னை அடிச்சேல்ல. அதுக்கு எனக்கு ஒரு ஹக் வேணும் என்றான் அதிரதன்.

சார், ப்ளீஸ் என்றாள்.

உன்னை நான் ஏதும் செய்ய மாட்டேன். எனக்கு உன் மீது காதல் தானா? என்று தெரிந்து கொள்ள எனக்கு தினமும் ஒரு ஹக் வேணும் என்றான்.

சார், இதெல்லாம் ஒப்பந்தத்தில் இல்லை.

சரி முடியாதுன்னா விடு. காவியன் நம்பர் என்னிடம் இருக்கு. நீ அவங்க எல்லாரிடமும் மறைப்பதை நானே சொல்கிறேன்.

நோ..சார், நான்..என்று தயங்கி ஹக் பண்றேன் என்று அவள் சொல்ல.. ம்ம்..குட்..பதினைந்து நிமிடங்கள் ஹக் பண்ணனும்.

சார், நீங்க வேறெதுவும் என்னிடம் கேட்கவோ இல்லை பிளாக்மெயில் பண்ணவோ? கூடாது என்றாள்.

ஓ.கே என்று அதிரதன் கையை விரிக்க, அவள் மெதுவாக வந்து அவன் கையிட்டு அணைத்தாள்.

அவனாக அவளுக்கு முத்தம் கொடுத்த போது இருந்த உணர்வை விட, இதில் அவன் காதலை அவள் அணைத்தவுடனே கண்டு கொண்டான் அதிரதன். அவன் மனதினுள்..நான் உன்னை முன்னதாகவே பார்த்திருந்தால் உனக்கு இவ்வளவு துயரங்கள் நடக்க விட்டிருக்க மாட்டேன். என்னால் என் காதலை உணர முடியுது. உன்னையும் காதலிக்க வைப்பேன். சீக்கிரமே நம் திருமணத்தை நடத்தி காட்டுவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

ஆனால் வினுநேத்ரா மனதில், எப்படியாவது இவரை விட்டு செல்லணும். யுவி சிகிச்சையையும் விடக்கூடாது. என்னால இதெல்லாம் முடியலை. நான் செய்வது ரொம்ப பெரிய தவறு. சாருக்கு புரிய வைப்பேன் என எண்ணிக் கொண்டாள்.

நிலையத்தில் காலேஜ் முடிந்து பசங்க ஐவரும் வந்தனர். சுஜித்ரா எழிலனுக்கு துணையாக ஒரு மாதத்திற்கு அவர்களை உடன் இருக்க ஏற்பாடு செய்திருந்தாள்.

காவியனை பார்த்த எழிலன்..கண்ணீருடன் அவனை பார்த்து, அவனிடம் சென்று அணைத்தான். அனைவரும் புரியாமல் பார்க்க..சுஜிக்கா..என்று அவளை பார்த்தான். அவள் தலையசைத்தாள்.

ஹலோ..உங்க ப்ரெண்டு அங்க இருக்கான் என்று காவியன் சொல்ல, ம்ம்..சாரி என்று மிதுனிடம் வந்தான். ஆனால் எழிலால் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் அவனை தங்க வைத்த அறைக்கு செல்ல,

சார்..என்று வெண்பாவும் மயூரியும் அழைக்க, வெண்பா நில்லு..நான் பார்த்துக்கிறேன் என்று சுஜித்ரா அவன் கையை தோளில் போட்டு உள்ளே அழைத்து சென்றாள். எல்லாரிடமும் தன் தோழியின் தம்பி என்று மட்டும் சொல்லி இருப்பாள். மிதுன் மட்டும் யோசனையுடன் அவர்கள் பின் சென்றான். அவனுக்கு தான் இவன் வினு நேத்ராவின் உடன் பிறப்பு என்று தெரியுமே?

காவியனை எதற்கு அணைத்தார்? என்று அவர்கள் இருக்கும் அறை வெளியே நின்றான் மிதுன். அவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்து, முதலிலே வித்தியாசமாக பட்டது என்று மனதினுள் நினைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

ஜீவா காவியனிடம் சாப்பிடவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

நீ பட்டினியாவே இரு. அக்கா செய்தது சரிதான். மாயாவிற்கு ஏதாவது ஆனால் உன்னை உன்னால் மன்னிக்க முடியுமா? சுபிர்தன் அவனை திட்டிக் கொண்டிருந்தான். மிதுன் அவர்களிடம் வந்து அமர, வெண்பா, அருணா, மயூரி தேனீர் எடுத்து வந்து அவர்களுக்கு கொடுத்தனர்.

சுஜித்ரா அவர்களிடம் வந்து, எல்லாரும் எழிலனுடன் தங்கிக்கோங்க என்றாள்.

அக்கா, சாப்பாட்டுக்கு நாங்க வெளிய பார்த்துக்கிறோம் காவியன் சொல்ல, நீங்க சாப்பிட்டு வரும் போது எனக்கும் வாங்கிட்டு வாங்க என்று எழிலன் சொல்லிக் கொண்டு தேவாவை பிடித்துக் கொண்டு அங்கு வந்தான்.

இவன் எதுக்கு என்னை அணைத்து அழுதான்? என்று அவன் காலை பார்த்து, மிதுன் சொன்னான் இப்ப உங்க கால் எப்படி இருக்கு? கேட்டான் காவியன்.

பெயினா தான் இருக்கு என்று எழிலன் அதை பார்க்க, நீங்க உட்காருங்கள் என்று தேவா அவனை அமர வைத்தான். வெண்பா தேனீர் எடுத்து வந்து, எழிலனுக்கு கொடுக்க, அதை கொடு. அவன் பால் தான் குடிப்பான் என்றாள் சுஜி.

அக்கா, வினு எங்க இருக்கா? எழிலன் கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.

தெரியல எழில். ஆனால் நல்லா இருக்கான்னு தோணுது அவள் சொல்ல, அவன் யோசனையுடன் இதே தான் நிதுவும் சொன்னான் என்றான்.

பசங்களுக்கு நிதினை தெரியுமே?

நிதுவா? என்று பசங்க ஒருவரை ஒருவர் பார்க்க, மிதுன் அவர்களை பார்த்து விட்டு பேச்சை மாற்ற, ஏய்..இங்க வா..வெண்பாவை அழைத்தான்.

என்ன தேனீர் இது? நல்லாவே இல்லை. வேற எடுத்துட்டு வா என்றான்.

அண்ணா, நல்லா தான் இருக்கும். நல்லா குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்க வெண்பா சொல்ல, வேற எடுத்துட்டு வா என்றவன் சீனியருக்கு பால் எடுத்துட்டு வா என்றான்.

வெண்பா, நீயும் ஜீவாவும் மிதுன் அண்ணா சீனியரை எதுக்கு சார்ன்னு சொல்றீங்க? நிரா கேட்டாள்.

எனக்கு தோணுச்சு கூப்பிட்டேன் வெண்பா சொல்ல, அவன் புன்னகையுடன் அவளை பார்த்தான்.

ஜீவா, நீ எதுக்கு சார்ன்னு கூப்பிடுற?

அவன் காபி கேட் என்று வெண்பா சொல்ல, ஓய்..என்ன கொழுப்பா? ஓவரா பேசுன? என்று அவளது காதை பிடித்து இழுத்தான் ஜீவா.

ஆ…அண்ணா, இவனுக்கு முடிவ கட்டுங்க. என்னை படுத்துறான். நிம்மதியா சாப்பிட விட மாட்டேங்கிறான். சும்மா சும்மா முடிய வேற பிடிச்சு இழுக்கிறான் என்று காவியனிடம் வந்து நின்றான்.

இப்படி வம்பு செய்றத விட்டு படிக்கலாமே? காவியன் ஜீவாவிடம் கேட்க, அதெல்லாம் மூளை இருக்கிறவனுக செய்ற வேலை. இவனால் எப்படி முடியும்? எதுக்கு பிரயோஜம் இல்லாதவன் என்று ஏளமாக ஜீவாவை பார்த்து நகைத்தான் தன்வந்த்.

டேய்..என்று ஜீவா சினமுடன் அவனை அடிக்க, அவன் இவனை அடிக்க அனைவரும் தடுத்தனர். காவியன் அவனை முறைத்து பார்த்தான்.

ஏன்டா, இப்படி உங்களுக்குள்ளவே சண்டை போட்டுக்கிறீங்க? சுஜித்ரா திட்டி விட்டு, தன்வந்த் நீ மைதானத்தை பத்து முறை சுத்தணும் என்றாள்.

நீங்க ஜஸ்ட் ரீபிளைஸ்மென்ட் மட்டும் தான். உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு போங்க என்று சுஜித்ராவிடம் திமிறாக பேசினான் தன்வந்த்.

உன்னையெல்லாம்.. என்று வெண்பா சத்தமிட்டு அவனருகே வர, சுஜித்ரா அவள் கையை பிடித்து தடுத்தாள். தன்வந்த் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது. அங்கு இவர்களை பார்க்க வந்த விஷ்வா அறைந்திருந்தான்.

இங்க பாரு. ஒழுங்கா இருக்கிறதா இருந்தா நீ இங்க இருக்கலாம். நல்லா  படித்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவியா? உன்னை நடுரோட்டில்..என்று சொல்லத் தொடங்கிய விஷ்வா முன் வந்த சுஜித்ராவை பார்த்து பேச்சை நிறுத்தினான்.

சுஜி கையை பிடித்து தனியே விஷ்வா அழைத்து சென்றான். தன்வந்த் கோபமாக எழுந்தான். ஜீவா அவனை முறைக்க, விடு..ஜீவா..மரியாத தெரியாதவனிடம் எதுக்கு சண்டைக்கு போற? வெண்பா கேட்க,

ஆமா..எனக்கு மரியாத தெரியாது. இவன் ரொம்ப தெரிஞ்சவன் பாரு. தன்வந்த் வெண்பாவிடம் வந்தான்.

உனக்கு என்ன தான் பிரச்சனை? வெண்பா கேட்க, அதுவா..இவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கலை. இவனெல்லாம் என்னை பேசுகிறான்?

அதென்னடா, இவனெல்லாம்? நீ படிப்புல்ல முன்னாடி இருக்க. ஆனால் மத்ததுல்ல ஜீரோ. ஆனால் ஜீவா சரியா படிக்கலைன்னாலும் யாருக்கும் பிரச்சனைன்னா முன்னாடி அவனாகவே வருவான். அவன் ரொம்ப நல்லவன்டா என்று வெண்பா கோபமாக ஆரம்பித்தாலும் தன்மையாகவே பேசினாள்.

இவன் நல்லவனா? நீ சொல்றியா? இருவரும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க? திடீர்ன்னு என்ன நல்லவன்னு சொல்ற? இவனிடம் மயங்கிட்டியா என்ன? தன்வந்த் கேட்க, அவள் அழுது கொண்டே ஓடினாள்.

எழிலன் சட்டென எழ, அவனுக்கு மேலும் வலி அதிகமானது. சீனியர் இருங்க என்று மிதுன் அவள் பின் ஓடினான்.

நீ உள்ள போ..என்று காவியன் அமைதியாக சொல்ல, என்ன அண்ணா? உங்க லவ்வு போச்சா. அட, அவளுக்கு என் பின் சுத்தவே நேரம் பத்தாது. அவள போய் லவ் பண்றீங்க? வேற பொண்ணா இல்லை..அவன் சொல்ல, அமைதியாக நின்றிருந்த அருணாவும் மயூரியும் கோபமாக,

ஆமாடா, அவ உன்னை மாதிரி கேவலமான ஒருவனை போய் காதலிச்சா பாரு அவளை சொல்லணும். நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். எல்லாரிடமும் ஓவரா பேசுற? உனக்கு படிப்பிருந்தா மட்டும் போதாது. நீ எப்படி வெளிய போய் வாழப் போறன்னு நானும் பார்க்கிறேன் அருணா சத்தமிட்டாள்.

என்ன சொன்ன? என்று தன்வந்த் அவள் கழுத்தை பிடிக்க, அவனை பிடித்து தள்ளிய அருள், பொண்ணுங்க மேல கைய வச்ச? உடைச்சிருவேன் பார்த்துக்கோ..என்று சத்தமிட்டான்.

எல்லாரும் அவங்கவங்க வேலைய பாருங்க என்று காவியன் சத்தமிட்டான். எல்லாரும் நகர்ந்து செல்ல, அருணா அவனிடம் வந்து, அண்ணா..முதல்ல விட இவன் இப்ப ரொம்ப ஓவரா போறான் என்றாள்.

மயூரி அவனை பார்த்து, இனி மாயா உன் பக்கம் வரவே மாட்டா. வர விடவும் மாட்டோம் என்று வாடி, நாம வெண்பாவை பார்ப்போம். இவனெல்லாம் மனுசனே இல்லை என்று அருணாவை இழுத்து சென்றாள்.

அங்கே வந்த விஷ்வா தன்வந்த்தை இழுத்து சென்று, யாராவது இனி உன் மீது புகார் அளித்தால் உன் படிப்பை நிறுத்தி விடுவோம் என்று எச்சரித்து வெளியே வந்தான்.

விஷ்வா சுஜித்ரா அழைக்க, எல்லாரும் அவர்களை பார்த்தனர்.

வாரேன் என்று கையை காட்டி விட்டு, காவியனிடமும் அவன் நண்பர்களிடமும் வந்தாள் சுஜித்ரா.

ஜீவா, வெண்பாவை பார்க்கலாமா? எழிலன் கேட்க, நீ எதுக்கு பார்க்கணும்? விஷ்வா கேட்டான்.

அவனை முறைத்த எழிலன், நாங்க பேச தான் போறோம். ஏற்கனவே பேசி இருக்கேன். பார்த்துட்டு வந்திருவேன் என்று சினமுடன் செல்ல,..

நம்ம நேத்ரா அக்கா தம்பி இவர் தான? காவியன் கேட்க, என்ன? மற்றவர்கள் கேட்டனர். விஷ்வா நிலையத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்து, நேத்ரா தம்பி இவன் தான் என்றும், அவனை கொலை செய்ய வந்ததையும் சொல்லி..எல்லாருமே கவனமா இருங்க. அவனிடம் நேத்ராவை பற்றி வாயை திறக்கவே கூடாது.

ஹே..குட்டி பசங்ககிட்ட தெளிவா சொல்லிடு சுஜி என்றான். எல்லாரும் அவளை பார்க்க, ஓ.கே நான் பார்த்துக்கிறேன் என்றாள். அவன் தன்வந்த்தை பார்த்து, ஜாக்ரதையா இரு. தேவையில்லாத வேலை பார்க்காத என்று சொல்லி, ரெக்கார்ட்ஸ் எடுத்துட்டு வா சுஜி பார்க்கலாம் என்றான்.

பாட்டி அவன் முன் வந்து, புரியதுப்பா இருந்தாலும் கொலைசெய்ய நினைப்பவன் இங்கே வந்து விட்டால் இங்க புள்ளைகளுக்கும் ஆபத்து வந்திருமே? என்று கேட்டார்.

பயப்படாதீங்க பாட்டி, நான் அடிக்கடி வாரேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பாதுகாப்பிற்காக போலீஸ் வருவாங்க. அவங்களும் இங்க தான் இருக்க போறாங்க என்றான்.

தம்பி, பொம்பள பிள்ளைங்களும் இருக்காங்க. போலீஸ் வேண்டாம்ன்னு தோணுது என்றார்.

நான் பார்க்கிறேன் பாட்டி என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, சுஜி நிறைய பைல்களை தூக்கிக் கொண்டு வந்தாள்.

ஏய், கொஞ்ச கொஞ்சமா எடுத்துட்டு வர வேண்டியது தான? என்று விஷ்வா அவளிடம் வந்தான். அவள் காலில் கல் குத்த தடுமாறினாள்.

அக்கா..என்று கிருஷ்ணன் அவளிடம் வர, அதற்குள் விஷ்வா அவளை பிடித்து காலணி வச்சிருக்கேல்ல, போட்டு வர வேண்டியது தான? என்று அவளை நிறுத்தி எல்லாவற்றையும் வாங்கினான்.

அக்கா, கால்ல ரொம்ப அடிபட்டிருக்கா கிருஷ்ணனும் காவியனும் அவளிடம் வர, மற்றவர்களும் வந்தனர்.

இல்லடா. லைட்டா ஸ்லிப் ஆகிட்டேன் அவ்வளவு தான் என்று காலை சரியாக ஊன்றாமல் நடந்தாள். விஷ்வா அனைத்தையும் ஓரிடத்தில் வைத்து விட்டு அவளிடம் வர, பாட்டி மருந்தை எடுத்து வந்தார். அவள் பாதத்தில் கல் லேசாக கிழித்து இருந்தது. பசங்க அவளை ஓரிடத்தில் அமர வைத்தனர்.

பாட்டி மருந்தை போட்டு விட, விஷ்வா அவளை திட்டிக் கொண்டிருந்தான். சார்..சும்மா இருங்க. லேசா தான் அடிபட்டிருக்கு. நீங்க திட்டி தான் கஷ்டப்பட போறாங்க அருள் சொல்ல, விஷ்வா அவளை பார்த்துக் கொண்டே நிறுத்தினான். அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

இதோ..சொல்லலை. அக்காவை திட்டியே அழ வச்சுட்டீங்க என்றான் அருள்.

இல்லடா. எனக்கு அம்மா நினைவு வந்திருச்சு என்று ஓவென அழுதாள். சிறு பிள்ளை போல் அவள் அழுவதை பார்த்து, அக்கா..எங்களுக்கு யாருமே இல்லை. நீங்க என்னடான்னா இப்ப இறந்தவங்களுக்காக அழுறீங்க? என்று கிருஷ்ணன் கேட்க,

பாட்டி அவனிடம், நீங்க பார்த்ததேயில்லை. ஆனால் அவ பேசி பழகி அவங்களுடனே வளர்ந்திருக்கா, அழாம என்ன செய்வா? சின்ன அடிக்காக இப்படி அக்கறையோட பார்த்தீங்கல்ல. அவளுக்கு அம்மா நினைவு வந்துருச்சு. அதான் அழுறா? நான் பார்த்துக்கிறேன். எல்லாரும் நகருங்க என்ற பாட்டி அவளுக்கு காலில் மருந்திட்டு அருகே அமர்ந்தார். உடன் வேலை செய்பவர்கள் வந்து விட பாட்டி தோளில் சாய்ந்து கொண்டாள் சுஜி. அவளை பார்த்து விட்டு, வாங்கடா அறைக்கு போகலாம் என்று அருள் சொல்ல, மிதுன் வரட்டும்டா என்று அவர்கள் அங்கேயே அமர்ந்து சுஜியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் முன் வந்த விஷ்வா, நீ ரெஸ்ட் எடுத்துக்கிறியா? நான் பார்த்துக்கிறேன் என்றான்.

இல்ல..இல்ல..என்று கண்ணை துடைத்து எழுந்து, அவன் தோளில் கையை போட்டு மெதுவாக நொண்டிக் கொண்டே சென்றான். சுபிர்தன் அவர்களை பார்த்து, இந்த ஜோடி நல்லா இருக்காங்கல்ல? என்றான்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா..என்று மல்லிகா அக்கா கேட்க, நீங்களே பாருங்கக்கா என்றான் அவன்.

எல்லாரும் இருவரையும் பார்த்தனர். ஆமாடா..ஜோடி நல்லா தான் இருக்காங்க என்று ஜெயந்தி அக்கா சொன்னார்.

விஷ்வா அவளுக்கு உதவி விட்டு தானும் அமர்ந்தான். அவள் பைல்ஸ்ஸை எடுக்க, எல்லாரும் அவர்களை பார்ப்பதை கவனித்த விஷ்வா,..என்ன? என்று சத்தமாக கேட்க, ஒன்றுமில்லையே என்று எல்லாரும் நகர்ந்தனர். அவளும் அவர்களை பார்த்து விட்டு பைல்லை பார்த்தாள்.

மேலிருந்த திண்டில் ஏறிய கிருஷ்ணன், இருவரையும் காட்டி சூப்பர் என்று கையை உயர்த்த, விஷ்வா அவனை முறைத்து பார்த்தான். அவள் இவர்களை பார்த்தாலும் பார்க்காதது போல் காட்டிக் கொண்டாள்.

விஷ்வா..என்று அழைத்தாள். அவன் அவளை பார்க்க, வினுவை இன்னும் தொந்தரவு செய்ய போகிறாயா? கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான்.

உன்னை மட்டுமல்ல அவள் இப்ப யாரையும் ஏத்துக்க முடியாத நிலையில் இருக்கா.

தெரியும்.

அவ அப்பொழுதிலிருந்தே உன்னையும் நிதினையும் நண்பனாக தான் பார்த்தாள். ஆனால் நீங்க இருவருமே அவளை தொந்தரவு செய்தீங்க. உங்களால அவள் காயப்பட்டது தான் மிச்சம். அவளிடம் நீ சாதாரணமாக பேசு. மறுபடியும் காதல்ன்னு நின்னா ரொம்ப கஷ்டப்படுவா. உங்களுக்கு உங்க காதல் பெரிசுன்னா அவளுக்கு..என்று நிறுத்தி அவனை பார்த்தாள்.

அவளுக்கு..?

அவளுக்கு அவள் காதல் பெருசு.

காதலா? நம் வினு காதலிச்சாலா? யாரை? அவன் கேட்க, அதை சொல்ல முடியாது. ஆனால் அவனிடம் சொன்னால் அவன் கொஞ்சமும் அவளை மதிக்கவில்லை. அவள் திருமணம் அவளுக்கு பிடிக்காமல் நடந்தது தான். பெற்றோருக்காக என்று செய்தாள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு வந்து நிற்பான்னு நினைக்கலை என்று சுஜி அழுதாள்.

சரி சுஜி, நான் அவளை தொந்தரவு செய்யலை. வினு காதலித்தவன் யாருன்னு சொல்லு? அவனை வைத்தாவது இந்த குழந்தையை கலைக்க சொல்லலாம் என்றான்.

அவனை முறைத்த சுஜி, எதுக்கு குழந்தையை கலைக்கணும்ன்னு நினைக்கிற? அவள் கண்டிப்பா ஒத்துக்கமாட்டா. அவளுக்கு இனி அந்த குழந்தை தான் வாழ்க்கை.

ஏய், என்ன லூசு மாதிரி பேசுற? அந்த குழந்தை அப்பா இல்லாமல் வளர்ந்தால் இந்த சமூகம் அவளை பற்றி அவதூறாக பேசும் என்றான்.

அதுக்காக கருவை கலைக்கணுமா? அது என்ன செய்தது? கோபமாக கேட்டாள்.

நீ சொல்லு? அவன் யாரு? விஷ்வா கேட்க, அதே யோசனை தான் காவியனுக்கும். அக்கா கிரஷ் யாராக இருக்கும்? அதிரதன் சாராக இருக்குமோ? அவன் சிந்தித்தான்.

வெண்பாவை பார்க்க வந்த எழிலனும் ஜீவாவும் அவளை பார்த்துக் கொண்டிருக்க, மிதுனும் அவனுக்கு உதவி அமர வைத்தான்.

சார், நீங்க எதுக்கு வந்தீங்க? கேட்டாள் வெண்பா.

நீ தான் அழுதுகிட்டு வந்தேல்ல. அதான் உன்னை பார்க்க வந்தேன்.

சீனியர், நமக்கு தேவையான எல்லாமே வாங்கியாச்சு என்றான் மிதுன். அவனை பார்த்து சரி நாளைக்கு தொடங்கலாம் என்று வெண்பாவிடம், அவன் தான் தலைக்கனத்தோட சுத்துகிறான்ல்ல. நீ அவனிடம் பேசுற? கேட்டான். இருவரும் அவனை பார்த்தனர்.

அவன் என்ன செய்தாலும் அதற்காக சும்மா இருக்க முடியுமா? வெண்பா கேட்க, சாரி வெண்பா என்னால தான அப்படி பேசிட்டான்.

இப்ப கூட பேசிய வருத்தம் கூட இல்லாம தானடா சுத்துறான். நீ எதுக்கு சாரி கேக்குற? வெண்பா கேட்க, அப்ப நீ அழாத கஷ்டமா இருக்குல்ல ஜீவா சொல்ல.

அவ அழுதா உனக்கென்னடா கஷ்டம்? லவ்வுன்னு சொன்ன கொன்னுடுவேன் என்றான் மிதுன்.

என்னோட ரேஞ்சுக்கு வெண்பாவெல்லாம் சரிப்பட்டு வர மாட்டா என்று அவன் ஓவராக பேச, என்னடா சொன்ன? என்று எழுந்த வெண்பா கையை பிடித்து அமர்த்தினான் எழிலன்.

சும்மா..சும்மா..கை ஓங்கக் கூடாது என்று அவளுக்கு அறிவுரை வழங்க, நீ என்னை சார்ன்னு அழைக்காத பெயர் சொல்லியே அழை என்றான்.

அண்ணா..என்று அழைக்கவா? அவள் ஆர்வமாக கேட்க, இல்லை..இல்லை.. பெயர் சொல்லியே அழை என்றான்.

ஓ.கே டா எழில். இது ஓ.கேவா? அவள் கேட்க, வெண்பா..டா போடக் கூடாது மிதுன் சொல்லிக் கொண்டே எழிலனை பார்த்தான்.

அழைக்கட்டும். நல்லா தான் இருக்கு என்றான் புன்னகையுடன். மிதுன் அவனையே பார்க்க, என்ன?

இல்ல, உங்களுக்கு போடா வாடான்னு பேசுனா பிடிக்காதுன்னு பசங்க சொன்னாங்களே?

அது பசங்க. என்னோட அக்கா என்னை அப்படி தான் கூப்பிடுவா. இப்ப தான் அழைக்க யாருமில்லையே? அவன் வருத்தமாக சொல்ல,

உங்க அக்காவுக்கு என்னாச்சு? வெண்பா கேட்டாள்.

அவளுக்கு கொஞ்சமா பைத்தியம் பிடிச்சிருக்கு. விட்டுட்டு போயிட்டா..என்றான்.

என்ன? லவ்வர் விட்டுட்டு போன மாதிரி சொல்ற? என்று அவன் தோளில் கையை போட்டு வெண்பா சிரிக்க, அவள் கையை தட்டி விட்டு, கோபமாக மிதுன் அவளை முறைத்தான்.

இருக்கட்டும்டா..என்ற எழிலன் அவளை பார்த்தான்.

அண்ணா, முறைக்காத..என்று உங்க காலேஜ்ல்ல அழகான பொண்ணுங்க இருப்பாங்கல்ல. நீ சைட் அடிப்பியாடா? என்று மிதுனிடம் வெண்பா கேட்க, அவள் தலையில் தட்டிய ஜீவா, நீ அண்ணாவிடம் அடி வாங்க போற என்றான்.

இவர்கள் பேச, எழிலன் வெண்பாவை மட்டுமே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெண்பா..நீ கிளம்பு என்றான் மிதுன் எழிலனை பார்த்துக் கொண்டே. ஜீவாவும் அவனை கவனித்தான்.

எழில், உனக்கு பால் எடுத்துட்டு வாரேன் என்று வெண்பா செல்ல, இருவரையும் எழிலன் பார்த்தான். இருவரும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வாங்க போகலாம் என்று மிதுனும் ஜீவாவும் அவனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

சுஜி, நேத்ரா யாரை காதலிச்சா? சொல்லு..விஷ்வா விடாது கேட்டுக் கொண்டே இருக்க, ப்ளீஸ் விஷ்வா விடேன் என்றாள்.

நான் அவளை காதலித்தது போல் அவள் பின் நிறைய பேர் சுத்தி இருக்கானுக. என்னையும் நிதினையும் போல் எல்லாரும் விலகுவாங்கன்னு சொல்ல முடியாது என்றான் விஷ்வா.

உனக்கு என்ன பைத்தியமா? அவளுக்கு திருமணமே முடிஞ்சு அவ வயித்துல குழந்தை இருக்கு. இப்ப எவன் அவ பின்னாடி சுத்த போறான்? என்று சுஜி கேட்க,

ஆமா, திருமணம் முடிந்தது தான். ஆனால் இப்ப புருசனோடவா இருக்கா? டிவோஸ் ஆகி இருக்கு. குழந்தை கூட இங்க இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இன்னும் அதே வினு நேத்ரா போல் அழகாக தான் இருக்கிறாள்.

நீ சொல்றது சரி தான். ஆனால் அவள் பின் சுற்றிய யாருமே அவளுடன் இப்ப பேசுவதில்லையே? இவளை பற்றி அவர்களுக்கு எப்படி தெரியும்? அதுவுமில்லாமல் சின்ன பசங்களாடா எல்லாரும். அவனுகளுக்கு குடும்பமே இல்லையா? எல்லாரும் ஏதாவது வேலையில் இருப்பாங்க. மனைவி கூட இருக்க வாய்ப்புள்ளது என்று சொன்னாள்.

எதுக்கும் கவனமா இருக்கணும்? எப்பொழுதும் எல்லாரும் அவள் பக்கம் இருக்க முடியாதுல்ல விஷ்வா சொல்ல, அவளுக்கும் சரியில்லைன்னு தான் தோன்றியது.

இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்ற? சுஜி கேட்க, அவன் யாருன்னு சொல்லு. இருவரும் திருமணம் செய்து வைத்து விடலாம்.

லூசாடா நீ? அவள பத்தி யோசிடா. குழந்தையை சுமக்கும் ஒரு பொண்ணை யாருடா கல்யாணம் பண்ணிப்பா? சுஜி கோபமாக கேட்டாள்.

அப்ப..வினு வாழ்நாள் முழுவதும் தனியா இருக்கணும்ன்னு சொல்றீயா? விஷ்வா கோபமாக கேட்டான்.

அப்படியில்லை விஷ்வா. முதல்ல குழந்தை பிறக்கட்டும்.

குழந்தை தான் பிரச்சனை. அதை கலைக்க சொல்லு என்று அவனும் கோபமாக பேச..சுஜி அவனை அடிக்கவும் மிதுன், ஜீவா, எழிலனும் வந்தனர். இவர்கள் அவள் விஷ்வாவை அடித்ததை பார்த்துக் கொண்டே எழிலனுடன் வந்து கொண்டிருந்தனர். விஷ்வாவும், சுஜியும் இருவரையும் கவனிக்கவில்லை.

விஷ்வா சட்டையை பிடித்த சுஜி, குழந்தையை கொல்லது உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா. அவளுக்கு கஷ்டம் தான். அந்த குழந்தையை பார்க்க அவன் நினைவும் வரும் தான். அதுக்காக ஏதும் அறியாத பச்ச மண்ணை கொல்றத பத்தியே பேசுற..

நீ அவளிடம் இதே போல் கேட்டாயா? சுஜி கேட்க, விஷ்வா தலை கவிழ்ந்து நின்றான்.

ச்சே..உன்னை..என்று கையை இறுக்கிய சுஜி, நீ அவளை உண்மையிலே காதலிச்சிருந்தா. இந்த வார்த்தையை சொல்லி இருக்க மாட்ட. நீ தானடா சொன்ன? அவளை பிரிந்து தற்பொழுது பார்த்த போது உடைந்திருந்தாள். இந்த பசங்கள பார்த்து தான சரியான்னான்னு சொன்ன. திரும்பவும் அவளை அதே பழைய நிலைக்கு தள்ள பாக்குற? கத்தினாள்.

எனக்கு புரியுது சுஜி. ஆனால் அவள் இப்ப திருமணம் செய்து அவளருகே யாராவது இருப்பது ரொம்ப அவசியம். உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே?

இப்ப அவள் அதிரதன் அருகே பாதுகாப்பாக இருந்தாலும், அவனை மீறியும் சில விசயங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. நீ நினைக்கிற மாதிரி அவன் சொல்ல ஆரம்பிக்க,

போதும் விஷ்வா, என்னால முடியல. உன்னோட பேச்சு என் கோபத்தை அதிகப்படுத்துது என்றாள்.

என்னாச்சுக்கா? என்று எழிலன் கேட்க, அவனை பார்த்து விட்டு, கொஞ்ச நேரம் மட்டும் இருந்து செக் பண்ணிட்டு போ. மீதியை நானே பார்த்துக்கிறேன் என்று விஷ்வா சொல்ல வருவதை கூட கேட்காமல் சென்றாள்.

சார், பிரச்சனையா? மிதுன் கேட்க, எழிலனை பார்த்துக் கொண்டே எங்க பர்சனல் என்று அவன் மீண்டும் பைல்லிடம் வந்து அமர்ந்தான். அவனால் கவனம் செலுத்த முடியாமல்..பத்து நிமிடத்தில் வருகிறேன். சற்று நேரம் மட்டும் இதை பார்த்துக்கோங்க என்று அவன் சென்று பின் வந்தான்.

அவன் அவ்விடம் வரவும் பசங்க மூவரும் அகன்றனர். வெண்பா பாலை எடுத்துக் கொண்டு இவர்களை தேடி சுற்றிக் கொண்டே..

“சுத்துதே சுத்துதே பூமி

அட போதுமடா போதுமடா சாமி”

என்று பாடலை பாடிக் கொண்டே அவர்களிடம் வந்து, இந்தாங்க சார் பால் என்று நீட்டினாள்.

அய்யோ காது வலிக்குது. வாயை மூடு பாட்டாடி இது? ஜீவா புலம்ப, ரொம்ப மோசமாலாம் இல்லை. நல்லா தான் இருக்கு எழிலன் சொல்ல, மிதுனும் ஜீவாவும் அவனை பார்த்தனர்.

ஆமா..ஆமா..”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”? என்று வெண்பா சொல்ல, எழிலன் சிரித்தான்.

எதுக்கு சிரிக்கிற? அவள் கேட்க, இல்ல கழுதைக்கு மட்டும் தான் கற்பூர வாசனையே தெரியாதா? மற்ற மிருகங்களுக்கு தெரியுமோ? எழிலன் கேட்க, தெரியலையே என்று வெண்பா மிதுனை பார்த்தாள். அவன் அவளை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

இதுக்கு மேல இங்க இருந்தா எப்படியும் அண்ணாவிடம் திட்டு வாங்கணும் என்று, “பை பை” ஸ்வீட் டிரீம்ஸ் என்று அவள் செல்ல, அவளையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் எழிலன்..

அண்ணா, இவர் சரியில்லையே? ஜீவா மிதுனிடம் சொல்ல, மிதுன் எழிலனிடம் நேரடியாகவே, சீனியர் உங்களுக்கு வெண்பாவை பிடிச்சிருக்கா? கேட்டான். அவன் பதில் சொல்ல முடியாமல் இருவரையும் பார்த்தான்.

இல்லையா சீனியர்?

அவள் சென்ற பாதையை பார்த்துக் கொண்டே பிடிச்சிருக்கு என்றான்.

அவள் படிக்கலை. பெரியதாக உலகறிவும் இல்லை. விளையாண்டு தனமா தான் பேசுவா. ரொம்ப கோபப்படுவா..என்று மிதுன் சொல்லிக் கொண்டே அவனை பார்த்தான்.

இதையெல்லாம் வைத்து அவளை வேண்டாம்ன்னு நான் சொல்லணும்ன்னு நீ நினைக்கிறேல்ல என்று எழிலன் கேட்டான். மிதுன் பதில் சொல்லாமல் அவனை பார்க்க,

சார், உங்களால அவளை சமாளிக்க முடியாது. அவள் சரியான சேட்டை பிடித்தவள். நல்ல பொண்ணு தான். கோபம் வந்தா யாருன்னு பார்க்காமல் கையை ஓங்கிடுவா என்றான் ஜீவா.

நான் அவளை காதலிக்க கூடாதுன்னு சொல்றீங்களா? எழிலன் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவனை பார்த்தனர்.

சொல்லுங்க? என்று கேட்டான். இருவரும் அமைதியாக இருந்தனர்.

டேய் மச்சான் என்ற சத்தத்தில் மூவரும் திரும்பினர். நளன் வந்து கொண்டிருந்தான்.

நீ இங்க என்ன பண்ற? எழிலன் எழ, மிதுனும் ஜீவாவும் அவனை பிடித்தனர். அவர்களை பார்த்து விட்டு நளனை பார்த்தான்.

அக்கா தான் வர சொன்னாங்க? அக்காவா? எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சா? ஆர்வமுடன் வேகமாக நகர்ந்து கீழே விழ சென்றான். நளன் அவனை பிடித்து விட்டு, டேய்..எதுக்கு இப்படி பண்ற?

சுஜித்ரா அக்கா இரு நாள் விடுப்பு எடுத்து வந்து உன்னுடன் இருக்க சொன்னாங்க என்றான் நளன். எழிலன் கண்ணீருடன் அவனுடன் வந்து அமர்ந்தான்.

ஏன்டா, அக்கா இப்படி பண்ணுறா? பார்த்தே ரெண்டு வருசத்துக்கு மேல ஆகுதுடா. அவளுக்கு யாராலும் பிரச்சனை வந்துருமோன்னு பயமா இருக்குடா என்று நளனை அணைத்து அழுதான்.

இங்க பாரு எழிலா, அக்காவுக்கு ஒன்றும் இருக்காது. அவங்க நல்லபடியா இருப்பாங்க என்று நளன் அவனை தேற்றினான்.

Advertisement