Advertisement

அத்தியாயம் 12

“சிவநந்தினி அன்பு நிலைய”த்திற்குள் கார் செல்ல காவியா, நீ இங்க தான் இருக்கிறாயா? என்று சங்கீதன் கேட்க, இத்தனை வருடங்களாய் இங்கே தான் இருந்தேன். பள்ளி முடிந்த பின் தான் வெளியே தங்கி இருக்கோம்.

இது பிரணா குடும்பம் நடத்துவது என்று சங்கீதன் சொல்ல, தெரியும் என்ற காவியன்..அவளோட அம்மா தான் நானும் மிதுனும் படிக்க உதவினாங்க. ஆனால் அவளோட அண்ணாவுக்கு இந்த நிலையம் இருப்பது கூட தெரியல. இங்க சரியான வசதி கூட இல்லை. மாயா போல பல பேர் இங்கே எட்டாம் வகுப்புடன் நின்று விட்டனர் என்று அவளை பார்த்தான்.

அண்ணா, அந்த அக்கா குடும்பம் தான் நம்ம முதலாளியா? அப்படின்னா அவங்களும் தானே? ஜீவா கேட்க, ஆம் என்று தலையசைத்த காவியன், மாயாவை பார்த்து..நீ யாரை வேண்டுமானாலும் காதலி. ஆனால் தன்வந்த் அருகே நெருங்காத. நீ தான் காயப்படுவ.

அதை நானே பார்த்துக்கிறேன் என்று மாயா சொல்ல, என்னமும் செய் எனக்கென்ன? என்று காவியன் இறங்கினான். சங்கீதனும் கீழே இறங்க பின்னே மாயாவும் ஜீவாவும் வந்தனர்.

பாட்டியும் சுஜித்ராவும் அவர்களை பார்த்து வந்தனர்.

டேய், உன்னிடம் என்ன சொன்னேன்? என்று சுஜித்ரா ஜீவாவிடம் வர, அவன் காவியன் பின்னே ஒளிந்தான். காவியன் அவனை இழுத்து சுஜித்ராவிடம் விட்டான்.

அண்ணா, என்னை காப்பாத்துங்க என்று ஜீவா கத்த, நான் ஏதும் செய்யவேயில்லை. அதுக்குள்ள கத்துற? சுஜித்ரா அவன் காதை திருகி கேட்க, அக்கா..என்னை விட்டுருங்க. எல்லாமே மாயா தான் என்றான். அவள் அமைதியாக நின்றாள்.

“ஜீவாவுக்கு ஒரு வாரம் சாப்பாடு கட்” என்றாள் சுஜி.

அக்கா என்னை அடிக்க கூட செய்யுங்க. சாப்பாடு போடாம இருந்திறாதீங்க என்று அழுதான்.

“நான் சொன்னதை கேட்காமல் அவளை தனியா கூட்டிட்டு போனேல்ல” என்ற சுஜி மாயாவிடம் வந்து, இரண்டு நாட்களுக்கு நீ அறையை விட்டு வெளியே வரவே கூடாது என்றாள்.

அக்கா..என்று காவியன் அழைத்தான்.

என்ன? நான் வினு இல்லை. நீ சொல்வதை கேட்க. தனியா அவ்வளவு தூரம் போயிருக்காங்க. ஒண்ணு கிடக்க ஒன்றானால் என்ன செய்வது? சுஜி சத்தமிட்டாள். பாட்டியும் மற்றவர்களும் அவளை பார்த்து புன்னகைத்தனர்.

போ..என்று மாயாவிடம் சத்தமிட, அவள் கண்ணீருடன் உள்ளே சென்றாள்.

அக்கா, இது அதிகமில்லையா? மயூரி கேட்க, இது அவளுக்கான நேரம். என்ன சொல்ற காவியா? என்று சுஜி கேட்டாள்.

அக்கா, நான்..என்று அவன் சிந்தித்தான்.

நான் இங்கே வரும் முன்னே வினு உங்க எல்லார் பற்றியும் சொல்லி விட்டாள்.

பார்த்துக்கோங்க. நாங்க கிளம்புகிறோம் என்று காவியன் சொல்ல, அண்ணா சாப்பாடு என்று பாவமாக ஜீவா கேட்க, அக்கா முடிவு தான் சரி என்று அவனும் சென்று விட்டான்.

மாயா..எல்லாமே உன்னால தான் ஜீவா கத்த, வாய மூடுடா என்று வெண்பா மாயாவை பார்க்க சென்றாள். அவனை யாருமே கண்டு கொள்ளவில்லை.

நண்பா..என்று ஜீவா அவன் நண்பர்களிடம் செல்ல, நாங்க உன்னிடம் பேசினால் எங்களுக்கும் சோறு போட மாட்டாங்க நண்பா. சோறு முக்கியம் ஜீவா..என்று அவர்கள் சொல்ல, பாவிகளா, நம்ம தளபதி டயலாக்க சொல்லி தப்பிக்கிறானுக பாரு என்று புலம்பிக் கொண்டு அமர்ந்தான்.

சங்கீதனும் காவியனும் ரதன் கம்பெனி முன் வர, ரணா ஓடி வந்து ஏறினாள். அவள் பின்னே செழியன், சங்கீதன் அப்பா தினகரன், அதீபன், ஆத்விகா வந்தனர்.

பை பை..அப்பா, அக்கா என்று சொல்லி விட்டு அவள் ஏறவுமே சங்கீதன் காரை எடுத்தான். அனைவரும் அவனை தான் பார்த்தனர். பக்கமிருந்த காவியனை யாரும் பார்க்கவில்லை. ஆத்விகாவும் அதீபனும் சங்கீதனை பார்த்து கையசைக்க, அவனும் கையசைத்தான்.

சங்கீத் காரை நிறுத்து, காவியனை அப்பாவுக்கு அறிமுகப்படுத்தலாம் ரணா சொல்ல, அதெல்லாம் தேவையில்லை. நேரமாகுது என்றான் காவியன்.

உன்னோட அக்கா ஓ.கே தான?

ம்ம்..ஓ.கே தான் என்றாள் வருத்தமாக. இருவரும் அவளை பார்த்தனர்.

காவியா, அந்த பொண்ணு ஓ.கே தான? ரணா கேட்க, சங்கீதன் அதற்கு முதல்ல நீ ஓ.கே வாகு. அப்புறம் மத்தவங்கள கேட்கலாம் என்று காவியனை பார்த்தான்.

சங்கீதனுக்கு ரணா காதல் தெரியும். அவளை காவியன் ஏற்றுக் கொள்வது முடியாத காரியம் என்று எண்ணியவாறு காரை செலுத்தினான். ரணா காவியனை கவனித்துக் கொண்டே வந்தாள்.

ஆத்விகா வீட்டில் அவள் அம்மாவை பார்த்து அணைத்துக் கொண்டாள். அவரும் அவளுக்கு ஆறுதலளிக்க, அவர் மடியிலே படுத்துக் கொண்டாள். சற்று நேரம் தன் மகளை பார்த்துக் கொண்டிருந்த செழியன், தன் மனைவியிடம் தலையசைத்து கிளம்ப, சாப்பிட்டு போங்க என்றார் சிவநந்தினி.

ஷ்..என்ற செழியன், பாப்பாவை பார்த்துக்கோ என்று அவர் கம்பெனிக்கு கிளம்பினார்.

மதியவேளையில் ரவிக்குமார் வீட்டில் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். நிதின், தாட்சாயிணியும் இருந்தனர்.

ஏம்மா, பொண்ணு வீட்டுக்கு இன்று ஈவ்னிங் போகணும்? என்று ரவிக்குமார் சொல்ல, நிதின் வாய்க்கு கொண்டு போன சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு எழுந்தான்.

தம்பி, சாப்பிடுய்யா..என்று ரேவதி அவனருகே வந்து அவனை அமர வைத்தார்.

அந்த பொண்ணுக்கென்ன? ரவிக்குமார் சத்தமிட, எனக்கு பிடிக்கலை என்றான் நிதின்.

பொண்ணு பிடிக்கலையா? இல்ல லவ்வுன்னு சுத்திக்கிட்டு இருக்கியா?

இல்ல, எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை.

நான் மீடியாவிடம் சொல்லீட்டேன். என்னால மீற முடியாது.

என்னாலும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.

ரேவா, அவனை ஒத்துக்க வை..என்று அவர் சொல்ல, ரேவதி பேசும் முன் சாப்பாடு தட்டு பறந்தது. நம் நிதின் விட்டெறிந்தான். அவர் அவனை அடிக்க வந்தார்.

அப்பா, நில்லுங்க என்ற தாட் சாயிணி அவன் தான் பிடிக்கலைன்னு சொல்றான்ல..விடுங்க. நாளாகட்டும் என்றாள்.

இல்லம்மா, மீடியா வழியாக அனைவருக்கும் விசயம் சென்றடைந்து விட்டது என்றார்.

சரிப்பா, அப்படின்னா..பொண்ண மாத்துங்க.

பொண்ண மாத்தணுமா? என்று பெற்றோர்கள் கேள்வியுடன் அவளை நோக்க, அவள் சாதாரணமாக சாப்பிட்டுக் கொண்டே, செழியன் அங்கிள் மூத்த பொண்ணை கேளுங்க என்றாள்.

என்ன சொன்ன? என்று அவளிடம் சினத்துடன் ரவிக்குமார் வந்தார். அவள் பயமில்லாமல் எழுந்து நின்றாள். நிதின் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

நில்லுங்க, பொண்ண அடிச்சிறாதீங்க என்று ரேவதி..என்னடி பேசுற? அவங்க அப்பாவோட எதிரி என்றார்.

ஆமாம்மா, ஆனால் இவனுக்கு பிடித்த பரீட்சயமானவர்கள். அந்த பொண்ணு இங்க வந்தால் நம்ம அப்பா நிலை உயர கூட வாய்ப்பிருக்கே என்றாள்.

என்னம்மா சொல்ற? அவள் அப்பா கேட்க, பொண்ணை கேட்கும் போது, உங்களுக்கு வேண்டியதையும் கேளுங்க என்றாள்.

அவன் அதெல்லாம் பொண்ணையும் தர மாட்டான். எனக்கு வேண்டியதையும் தர மாட்டான்.

தருவார்ப்பா. நானும் ஆத்விகா படித்த பள்ளியில் தான் படித்தேன். அவள் எனக்கு சீனியர் தான். நல்ல பொண்ணு தான்.

எப்படிம்மா?

காதல்ப்பா என்று நிதினை பார்த்தாள்.

உனக்கும் தெரியுமா? நிதின் கேட்க, நல்லா தெரியும். அவளுக்கு சிறுவயதிலிருந்தே இவனை பிடிக்கும். காதலிக்கிறா? இவன் கல்யாணம் விசயம் தெரிந்து அவள் என்ன செய்வான்னு சொல்லவா? என்று நிதினை பார்த்தாள்.

என்ன பண்ணுவாம்மா? அவங்க அப்பாகிட்ட பேச சொல்லுவாளா? இல்ல கோபத்தில் எல்லாவற்றையும் தூக்கி உடைப்பாளா? ரேவதி கேட்க, அம்மா..நீ சீரியல் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட.

ஒன்று தவறான முடிவெடுப்பா இல்லை அழுவா, சாப்பிட மாட்டா என்று நிதினை பார்த்தான். அவனுக்கு அதிரதன் சொன்னது நினைவுக்கு வந்தது. அமைதியும் ஆபத்து தான் என்று அவன் சொன்னததை எண்ணிக் கொண்டே அவளருகே வந்தான்.

உனக்கு எப்பொழுதிலிருந்து அவள் என்னை காதலிப்பது தெரியும்? நிதின் கேட்க, தோளை குலுக்கினாள்.

சொல்லு? கேட்டான்.

அது அவள் உன்னை விட்டு பிரிந்து எங்க பள்ளிக்கு வந்த போதே தெரியும்.

நான் தான் உன் அண்ணன்னு தெரியுமா?

தெரியும். அப்பா உன்னை கண்காணிக்க ஆள் வைத்திருப்பார். நானும் உன்னை பார்க்க உன் பள்ளிக்கு ஆத்விகா பின்னே பல முறை வந்திருக்கேன் என்று அவனை முறைத்த தாட்சண்யா..

அவள் இடத்தில் நான் இருந்தால் உன்னை கொல்லாமல் விட்டிருக்க மாட்டேன். நீ வேற பொண்ணு பின்னாடி தான சுத்திக்கிட்டு இருந்த? என்று நேத்ராவை சொல்ல,

பள்ளிக்கு அவள் வருவாளா? நிதின் கேட்க, ஆமா..தினமும் வருவா. நீ தான் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பித்து விட்டாயே? அதனால் உன்னை பார்க்க தினமும் வருவா.

அப்பா, அவளோட காதல் அவள் அண்ணாவை தவிர யாருக்கும் தெரியாது. ஆனால் அவள் வீட்டில் இப்ப எல்லாருக்கும் தெரிந்திருக்கும். உனக்கும் தெரிந்திருக்குமே? அவள் கேட்க, அவன் அமைதியாக நின்றான்.

அப்பா, அவ அழுதுகிட்டு தான் இருப்பா. இப்ப அவளை வைத்து வேண்டுமென்பதை வாங்கிக்கோங்க என்றாள்.

ஓய், என்ன ரொம்ப பேசுற?

நீங்க இப்படியெல்லாம் செய்தால் நான் இங்கிருந்து போக வேண்டியது தான்.

எங்க போவ? உன்னோட பழைய வீட்டுக்கா? போனா..உன்னை தப்பா தான் நினைப்பாங்க. பணத்துக்காக இங்க வந்திருக்கன்னு எல்லாரும் இப்பவே பேசிகிட்டு இருக்காங்க அவள் சொல்ல, பிரணா கோபமாக திட்டியது நிதினுக்கு நினைவிற்கு வந்தது.

நீ இன்னும் அந்த பொண்ணையே நினைச்சுக்கிட்டே இருக்கியா? ஆத்விகாவை கன்சிடர் பண்ணேன் தாட்சாயிணி சொல்ல, நிதின் ஆத்விகா மேலுள்ள காதலை மறைத்தான் அவர்களிடம். இவன் பெற்றோர்கள் நல்லவர்கள் தான். அவனை யாரும் ஏதும் செய்யாமல் பார்த்துக் கொள்வதாக தான் செழியன் ரவிக்குமாரிடம் பேசி நிதினை அழைத்து சென்றிருப்பார். இருவரும் முதலில் நண்பர்களாக தான் இருந்தனர்.

தன் மகன் தன்னுடன் இருந்தால் உயிரோட இருக்க மாட்டான். அவனை கொல்ல நினைப்பவர்கள் அவனை கொன்று விட்டால்..என்று பயந்து தான் செழியனிடம் விட்டிருப்பார் ரவிக்குமார். அதற்குள் அவர்களது தொழிலில் இருவரும் முட்டிக் கொண்டு தொழிற்பகை ஏற்பட்டு இருக்கும்.

உனக்கு அந்த பொண்ணை பிடிக்காதாப்பா? ரேவதி கேட்க, பிடிக்கும். ஆனால் காதல் இல்லை என்றான். ரேவதி தன் கணவனை பார்க்க, சரி பார்க்கலாம் என்றார்.

அதெல்லாம் வேண்டாம் நிதின் சொல்ல, உனக்கு பிடிக்கும்ல்ல? தாட்சாயிணி கேட்டாள். அதுக்கு அவங்க கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை வைத்து கல்யாணம் பண்ணிக்கணுமா? நான் தான் காதல் இல்லைன்னு சொன்னேன்ல..கத்தினான்.

இப்ப என்ன தான்டா சொல்ல வர்ற? ரவிக்குமார் கேட்க, அவனை பார்த்து சிரித்த தாட்சாயிணி..அப்பா அவங்களிடம் எதுவும் கேட்காம பொண்ணை கேட்கணும்ன்னு சொல்றான் என்றாள்.

அது எப்படி? முடியாது என்றார்.

ஏங்க ப்ளீஸ், நம்ம பையனுக்காக என்றார் ரேவதி.

அவர் கேட்கவில்லை.

காதல் இல்லை என்றாலும் பிடிச்சிருக்குன்னு ஒத்துக் கொண்டானே போதாதா? ரேவதி கேட்டு விட்டு, பிசினஸ், குடும்பம் இரண்டையும் ஒன்று சேர்த்து பார்க்காதீங்க என்றார். ரவிக்குமாரும் மனமிறங்கினார்.

அப்பா, உங்களுக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம். எனக்கு அவள் மீது காதலெல்லாம் இல்லை நிதின் சொல்ல, மனதினுள் சிரித்த தாட்சாயிணி, ஆமாப்பா..உங்களுக்கு விருப்பமில்லைன்னா அந்த மந்திரி பொண்ணு கூட ஓ.கே தான் என்று நிதினை பார்த்தாள். அவன் அவளை முறைத்தாள்.

நானும் அந்த பொண்ணை பற்றி கேள்விப்பட்டிருக்கேன் என்று அவர் மனைவியை பார்க்க இருவரும் பழைய நினைவுகளில் புகுந்தனர். செழியனும் ரவிக்குமாரும் தோழர்களாக இருந்த போது பிரணா சிவநந்தினி வயிற்றில் இருந்தாள். அப்பொழுது ஆத்வி இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இரு குடும்பமும் எங்கு சென்றாலும் சேர்ந்தே தான் செல்வர். அப்படி இருக்க…பள்ளியில் நிதின் ஒரு பையனுடன் சண்டையிட்டிருப்பான். அதில் அந்த பையனுக்கு இரத்தம் வந்து பெற்றோரை வர செய்து பெரிய பிரச்சனையாக, ஆத்வி அடித்ததாக அவள் பழி ஏற்று அனைவர் முன்னும் அவனை அடித்திருப்பாள். அவள் செய்தது அப்பொழுது அதிரதன், அடி வாங்கிய பையன், நிதின் தவிர யாருக்கும் தெரியாது.

நிதினை ஒருவன் கொலை செய்ய முயற்சித்த போது அவன் தானாகவே செழியனை தேடி வந்திருப்பான். அப்பொழுது லாரி ஒன்று நிதினை மோத சிறுவயதில் நடந்ததை மறந்து விட்டான். பின் தான் நிதின் செழியன் வீட்டில் இருந்திருப்பான். செழியன் அந்த ஒரு வாரமாக நிதினை ஹாஸ்பிட்டலில் அருகே இருந்து பார்த்துக் கொண்டார். ரேவதி வந்து பார்த்துக் கொண்ட போது அவருக்கும் ரவிக்குமாருக்கும் மிரட்டல் வர, அப்பொழுதைக்கு நிதினை  செழியன் குடும்பத்துடன் விட்டு விட்டனர்.

செழியனுக்கும் மிரட்டல் வர அவனையும் அதிரதனையும் ஒரே பள்ளியிலும் ஒரே வகுப்பிலும் படிக்க ஏற்பாடு செய்தார். அதிரதன் படிப்பிற்காக மட்டுமல்ல நிதினுக்காகவும் தான் யாரையும் அருகில் விடவில்லை. ஆனால் நிதின் தான் ஏதும் புரியாமல் நண்பர்கள் எனவும் காதல் என்று வினுநேத்ரா பின்னும் சுற்றி இருப்பான். செழியனுக்கு எப்படி நிதினோ அதே போல் ரவிக்குமாருக்கு அதிரதன் என்றால் உயிர்..

அன்று நிதினுக்கு நடந்த விபத்தை பயன்படுத்திய ஒருவன் ரவிக்குமாரின் தொழில் ரகசிய மீட்டிங் பற்றிய பட்டியலை செழியன் வீட்டிற்கு வந்து வைத்து விட்டு, இருவருக்கும் சண்டையை கிளப்பி, நிதினை அவன் வீட்டிற்கே வர வைத்து கொலையும் செய்திடலாம். நண்பர்களையும் பிரிந்து இருவர் கம்பெனிக்குள்ளும் நுழைய நினைத்தான். அவன் நினைத்ததில் ஒன்று மட்டும் நடந்தது. நண்பர்களை மட்டும் பிரித்து விட்டான். ஆனால் நிதின் பக்கம் கூட செல்ல முடியவில்லை. அதிரதனுக்கு சிறு வயதிலே எல்லா பயிற்சியும் கற்று கொடுத்திருப்பார் செழியன். ஸ்மார்ட் வொர்க், அவனை கொல்ல ஆட்கள் வரும் போதெல்லாம் ஏதாவது செய்து கூட்டத்தை வர வைத்து விடுவான் அதிரதன் சிறு வயதில். இப்பொழுது வரை மிரட்டல் வந்து கொண்டு தான் இருக்கிறது இரு குடும்பத்திற்கும்.

ரவிக்குமாரும் ரேவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, நிதின் இருவர் இடையிலும் வந்து லவ்வா பண்ணிகிட்டு இருக்கீங்க? கேட்டான்.

தாட்சாயிணி புன்னகையுடன், இது காதல் இல்லை அண்ணா என்று அவன் தோளில் கையை போட்டு, “மலரும் நினைவுகள்” என்றாள்.

மலரும் நினைவுகளா? அவன் கேட்க, இருவரும் சுதாரித்து..மாலை செழியன் வீட்டுக்கு பொண்ணு கேட்க போகணும் தயாரா இருங்க என்று அவர் செல்ல,

எங்கப்பா போறீங்க?

மந்திரிய பார்த்து விசயத்தை சொல்லீட்டு வாரேன் என்று அவர் செல்ல, நானும் வருகிறேன் என்று நிதினும் சென்றான்.

நேத்ரா கண்விழித்து பார்க்க, அதிரதன் அவளறை நாற்காலியில் யுவனை அவன் மேலே போட்டு கண்ணை மூடி சாய்ந்திருந்தான்.

ஒரு நிமிடம் அவனை ரசித்தவள் தலையை சிலுப்பி, வினு..நீ இப்ப நேத்ரா.  குழந்தைக்கு அம்மாவாக போற என்று எண்ணிக் கொண்டே மீண்டும் அவனை பார்த்து யுவியை பார்த்தாள்.

சார்..என்று சத்தமிட்டு கீழே வேகமாக இறங்கினாள். வேகமாக இறங்கியதில் அவள் புடவை தட்டி அவனை நோக்கி வர..விழித்த அதிரதன் அவளது ஒரு தோள்ப்பட்டையை பற்றி நிறுத்த தோற்று அவளை தவற விட்டான். அவள் நேராக அவன் மேலே விழுந்து அவள் இதழ் அவன் இதழோட உரச,இருவரும் அதிர்ந்து அப்படியே இருக்க யுவி விழித்து..அக்கா என்றான்.

அவள் பதட்டமாக நகர, அங்கிருந்த அழகான பெண்ணுருவ சிலையில் தலையை இடித்துக் கொண்டு ஷ்..ஆ..என்றாள்.

அக்கா..என்று அதிரதனிடமிருந்து கீழே இறங்கி வலிக்குதா? கேட்டான் யுவி.

அவள் தலையை தேய்த்துக் கொண்டு அதிரதனை பார்க்க, அவன் இதழில் கை வைத்து அப்படியே அமர்ந்திருந்தான். அவள் வேகமாக திரும்பிக் கொண்டாள்.

இப்ப என்ன செய்றது? என்று வேறு வழியில்லாமல் சங்கடமாக திரும்பி, சாரி சார், நான் உண்மையாகவே யுவி உங்களிடம் இருப்பதால் தான் பதறி எழுந்தேன். ஆனால் தவறுதலாக “ஐ..ஐ..அம்..சாரி சார்” என்றாள்.

எழுந்த அவன் சட்டையை சரி செய்து விட்டு முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு, அவன் என்னிடம் இருந்தால் தான் என்ன? என்று கேட்டான்.

அவன் உங்களை தொந்தரவு செய்றான். அவன் உங்களுக்கு பாரமாக இருப்பான் என்று தான் அவனை துக்க வந்தேன்.

பாரமா? என்று அவன் நேத்ராவை சினமுடன் நெருங்க, அவள் பயந்து கொண்டு பின் சென்றாள்.

சார், எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கு. நீங்க என்று வாயிலை அவள் பார்க்க, அவன் அவளிடம், இனி நீ இந்த பாரம் என்ற வார்த்தையை உபயோகித்தால்.. உன்னை நான் என்று அவளது கன்னத்தை பிடித்தான். அவள் பயத்துடன் கண்ணை மூடிக் கொண்டு, “உபயோகிக்க மாட்டேன் சார்” என்று கண்ணை திறந்தாள்.

அவளை விட்டு அவன் வெளியே அவளுக்கு தெரியாமல் புன்னகையுடன் சென்றான். அவன் பின் செல்லவிருந்த யுவனை பிடித்து நிறுத்திய நேத்ரா..டேய் சார் திட்ட போறார். போகாத

அக்கா, அங்கிள் திட்ட மாட்டார்.

அங்கிளா? ஒழுங்கா சார்ன்னு சொல்லு. நெருக்கமானவங்கள தான் அங்கிள்ன்னு சொல்லணும் என்றாள்.

வெளியே ஓடிச் சென்ற யுவன், அமர்ந்திருந்த அதிரதன் அருகே வந்து, அக்கா இப்ப அங்கிள்ன்னு சொல்லலாமா? கேட்டான்.

அதிரதன் இருவரையும் பார்க்க, அய்யோ…இவனை என்று அவள் தலையில் அடிக்க, அதிரதன் புன்னகையுடன்..என்ன ஆச்சு? என்று யுவனை அவன் மடியில் தூக்கிக் கொண்டான்.

நெருக்கமா இருந்தா தான் அங்கின்னு சொல்லணுமாம் நேத்ரா அக்கா சொல்றாங்க. நாம இப்ப நெருக்கமா தான இருக்கோம். அதான் அங்கிள்ன்னு சொன்னேன். அக்கா முறைக்கிறாங்க..என்றான் யுவன்.

டேய், இங்க வாடா நேத்ரா அழைக்க, நீ இங்க வா..என்று அதிரதன் அவளை அழைத்தான்.

சார், எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு என்று நழுவ பார்த்தாள்.

நீ இப்ப எதுவும் செய்ய வேண்டாம். சிம்பிளா செய் போதும் என்றான்.

ஓ.கே சார், நான் செய்கிறேன்.

நான் உன்னை அழைத்தேன். என் பேச்சை ஆறு மாதத்திற்கு கேட்பேன்னு சொன்னேல்ல..வா..என்று அழைத்தான். அவள் முறைத்துக் கொண்டு அவனிடம் வந்தாள்.

யுவி எதுக்கு என்னை அங்கிள்ன்னு சொல்லக் கூடாது?

ஆமா, எதுக்கு சொல்லக்கூடாது? யுவியும் கேட்க, யுவி என்று அவனை நேத்ரா முறைத்தாள்.

ஓய், அங்க என்ன முறைப்பு? இங்க பதில் சொல்லு என்றான் அதிரதன்.

சார், நாங்க வேலைய பார்க்க தான் வந்திருக்கோம். எல்லாரும் அவரவர் இடத்தில் இருப்பது தான் நல்லது என்று சொல்லி விட்டு அவனருகே வந்த அவள் யுவியை துக்க அவன் இருக்கட்டும் என்று கடுமையுடன் அவன் முகம் மாறியது.

சார், நான் உங்களிடம் பேசணும் என்று யுவி அறைக்கு போ..என்றாள். அவன் அதிரதனை பார்த்தான். நீ போ, நான் வாரேன் என்றான். யுவி அறைக்கு செல்ல,

சார், நீங்க அவனிடம் நெருக்கம் காட்டாதீங்க என்றாள்.

ஏன், உனக்கு பொறாமையா இருக்கா? அவன் கேட்க, கோபமாக அவனை முறைத்த நேத்ரா..அவன் கொஞ்ச நாள் தான் இங்கே இருப்பான். அதை விட அவன் இங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் அவனுடைய வாழ்நாள் குறையும் என்றாள்.

வாட்? என்னுடன் இருப்பதால் அவன் நாட்கள் குறையுமா? கோபமாக அவளை நெருங்கினான். அவள் அங்கேயே நின்று, இல்ல சார்…நீங்க என்னை நம்பாமல் தான் யுவி ட்ரீட்மென்ட்டுக்கு லேட் பண்றீங்க? அது அவன் உயிருக்கு ஆபத்து என்றாள்.

என்னால் அவனுக்கு ஏதாவது ஆகிடும்ன்னு சொல்றீயா? என்று அவளை இழுத்து அவன் உடலோடு நெருக்க அவள் பதறி போனாள்.

சார், விடுங்க என்றாள்.

அவன் அதை கேட்காது, அவள் இடையில் கை வைத்து விட, அவனை கன்னத்தில் அறைந்த நேத்ரா அழுது கொண்டு, உங்களுக்கு புரியலையா சார்? யுவிக்காக தான் இந்த ஆறு மாத கான்ட்ராக்ட்.

அவன் இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிசமும் என் மனம் பதறுது. எங்கே அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று தூங்க முடியலை. இப்பொழுது கூட என் விழிப்பில் அவன் தான் இருக்கிறான். அவனை தான் நினைத்து பயந்து கொண்டிருக்கேன்.

வேற எந்த ஆம்பளையிடனும் தனியே இருக்க சம்மதித்து இருக்க மாட்டேன். எனக்கு உங்களை பற்றி நன்றாக தெரியும். நீங்க சீக்கிரமே அவனுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடுவீங்கன்னு தான் இருக்க சம்மதித்தேன். அவனை நீங்க சீக்கிரமே ஹாஸ்பிட்டல்ல சேர்த்திடுங்க சார் ப்ளீஸ் என்று அவன் காலில் விழுந்தாள். அவளை அதிர்ந்து பார்த்த அதிரதன், அவளை தூக்கி விட்டு நிஜமாகவே யுவிக்கு? அவன் கேட்க

அய்யோ சார், அவன் நல்லா இருந்தால் நான் எதுக்கு உங்களை தேடி வரணும்? தனியே உங்களுடன் இருக்க ஆறு மாத கான்ட்ராக்ட் போடணும்? என் பெயரை நானே ஏன் கெடுத்துக்கணும்? என்று அவள் அழுதாள்.

வினு, அவன் நல்லா தான விளையாடுறான்?

இதுக்கு மேல என்ன சொல்லி உங்களுக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியல சார் என்று அழுது கொண்டே அமர்ந்து, ஒரு வேலை அவனுக்கு சிகிச்சை அளித்தாலும் நீங்க நெருக்கமா பழகினா. பின் அவன் தான் கஷ்டப்படுவான் சார்.

எங்களுக்கெல்லாம் யாருமே இல்லை. நன்றாக பழகி விட்டுட்டு போனா..அந்த கஷ்டம் எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா சார்? எனக்கு நல்லா தெரியும். என்னை போல் யுவி கஷ்டப்பட வேண்டாம். அவனுக்கு நிலையத்து பசங்க..பாட்டி, அக்கா எல்லாருமே போதும். நீங்க அவனுக்கு சிகிச்சைக்கு உதவ நேரமானாலும் அவனை விட்டு தள்ளியே இருங்க. அவன் பக்கத்தில் இருந்து நான் இருக்கேன்னு நம்பிக்கை தராதீங்க. அது அவனுக்கு இப்ப சந்தோசமா தான் இருக்கும். ஆறு மாதத்திற்கு பின்னும் உங்களை தேடினால் என்னால சமாளிக்க முடியாது.

அப்படி சமாளிக்க முடியாத நிலையில் தான் என் உடன்பிறந்தவனை தனியே தவிக்க விட்டு இங்க இருக்கேன் என்று முகத்தை மூடி அழுதாள்.

கட்டுபாடற்ற நேத்ரா மனதில் இருந்ததை அதிரதனிடம் கொட்ட, அவன் எழுந்து அவளிடம் வந்து அவளை அவன் மார்ப்போடு சாய்த்துக் கொண்டான். சற்று நேரத்தில் சுதாரித்து அவன் பிடியிலிருந்து விலகி பதட்டமானாள்.

அதிரதன் அவள் கையை இழுத்து தன் மார்பில் வைத்து, “வினு..ரொம்ப அடிக்குது எதனால்? என்று உனக்கு ஏதாவது தெரியுமா?” கேட்டான்.

அவள் கண்ணீர் நின்று அவனை பார்த்த நேத்ரா கையை இழுத்துக் கொண்டு “தெரியாது சார்” என்று எழுந்து அறைக்கு செல்ல, அவள் கையை பிடித்த அதிரதன் நீயும் யுவியும் இங்கே வந்த பின் தான் எனக்கு இப்படி இருக்கு என்றான்.

அவனை பயத்துடன் பார்த்த நேத்ரா அவன் கையை எடுத்து விட்டு அறைக்கு ஓடினாள். அவன் மீண்டும் நெஞ்சில் கை வைத்து பார்த்துக் கொண்டே சோபாவில் படுத்துக் கொண்டு அவள் பேசியதையே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

மந்திரி வீட்டிற்குள் நுழைந்தனர் ரவிக்குமாரும் நிதினும். அவர்களை பார்த்த அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

ரவிக்குமார் தயங்குவதை பார்த்த நிதின், அங்கிள் என்னால உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு வேற பொண்ணை பிடிச்சிருக்கு என்று பட்டென உடைத்தான்.

மந்திரி அதிர்ந்து, என்ன சொல்றீங்க? பதறினார்.

அங்கிள், நான் உங்க பொண்ணை பார்த்தது கூட இல்லை. ப்ளீஸ் ஏத்துக்கோங்க என்றான்.

ஏய்..எழுந்திருங்க என்று அவர் ரவிக்குமார் சட்டையை பிடிக்க, அங்கே வந்தாள் அந்த பொண்ணு. அவளை பார்த்து ரவிக்குமாரும், நிதினும் அதிர்ந்தனர். அவர்களை பார்த்து விட்டு..பொண்ணை பார்த்தவர்.

டேய் வேலு, பிள்ளைய ஏன்டா வெளிய விட்ட? கத்தினார்.

நிதின் தன் அப்பா சட்டையை பிடித்திருந்த மந்திரி கையை தட்டி விட்ட நிதின், ஏமாத்தி இருக்கீங்க சார் என்று கத்தினான்.

தம்பி, அவளுக்கு நடந்த விபத்தில் இப்படி மனநலம் குன்றி பைத்தியமாகிட்டா.. என்று அவர் சொல்ல, அந்த பொண்ணோட உண்மையான மனநிலையை மறைத்து ஏமாத்தி கல்யாணம் செய்து வைக்க பாக்குறீங்க?

அந்த பொண்ணு..நிதினை பார்த்து அவனிடம் ஓடி வந்து, புருசா..வா..போகலாம் என்று அவனை இழுக்க, அவன் அசராது அங்கேயே நின்றான். அப்பொழுது அவள் கைப்பகுதியில் ஆடை விலக..அதிலிருந்த காயத்தை பார்த்து..

சார், இந்த காயம்? அவன் கேட்க, டேய்..வேலு அவளை இழுத்துட்டு போடா..என்று மேலும் கத்தினார் மந்திரி.

அப்பாவும் மகனும் பார்த்துக் கொண்டு, அந்த பொண்ணு உங்க பொண்ணு தானா? ரவிக்குமார் கேட்க, அவர் திருதிருவென விழித்தார்.

நிதின் அலைபேசியை  எடுத்து போலீஸிற்கு போன் செய்ய..அவர் அதற்குள் அவன் அலைபேசியை பிடுங்கி வீசி விட்டு, டேய், எல்லாரும் வாங்கடா என்று கத்தினார்.

நான்கைந்து பேர் வர, நிதின் ரவிக்குமாரை பார்த்தான். அவர் கண்ணசைக்க.. உள்ளே ஒருவன் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டு அனைவரையும் அடித்து விட்டு, அவர்களை போலீஸிடம் ஒப்படைத்தனர்.

சார், நீங்க யாரு? நிதின் வந்தவனை வினவ, ஐ அம் ” சீ ஐ டி விக்ரம்” என்றார்.

நீங்க எப்படி இங்க வந்தீங்க? ரவிக்குமார் கேட்க, சார், இரண்டு வருசமா அதிரதன் தான் உங்களை பார்த்துக்க சொல்லிட்டு போனார். இப்ப கூட அவர் மறைந்திருப்பதால் பார்த்துக்க சொன்னார் என்று நிதினை பார்த்து விக்ரம் சொன்னான்.

என்னை வேவு பார்க்க சொன்னானா? நிதின் கோபமாக கேட்க, நோ..சார் உங்களை பாதுகாப்பாக பார்த்துக்க சொன்னார்.

என்ன சொல்றீங்க? நிதின் கேட்க, சிறு வயதிலிருந்தே அதிரதன் அவனை பாதுகாத்ததையும், ஆத்விகா செயலையும் அவன் அப்பா சொல்ல, மீதியை விக்ரம் சொன்னார்.

அப்பாவை பத்திரமாக வீட்ல விட்டுருங்க சார். அப்புறம் அந்த பொண்ணை மனநல காப்பகத்தில் வைத்து மருத்துவரை வைத்து பரிசோதிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு விசயம் வெளிய வரக் கூடாது. மந்திரி ஆட்களிடம் உண்மையை வர வைத்து, அவர் செய்த வேறு விசயத்தை வைத்து உள்ள வையுங்க.

அப்பா, ஈவ்னிங் எல்லாரும் தயாரா இருங்க. ஆத்வியைபொண்ணு கேட்க போகணும். நான் வாரேன் என்று நிதின் ஓட, சார் தனியா போகாதீங்க விக்ரம் கத்தினான்.

மகனே, எங்க போறீங்க?

அப்பா, வந்துருவேன். சார் அப்பாவை பார்த்துக்கோங்க. நான் பத்திரமாக வந்து சேர்வேன் என்றும் காரை வேகமாக ஓட்டினான். அவன் வந்து நின்றது அதிரதனும் நேத்ராவும் இருக்கும் வீட்டில்.

நேத்ரா மெதுவாக எட்டி பார்க்க, சோபாவின் விளிம்பில் அதிரதனின் கால் தெரிந்தது. அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அவனருகே வந்து பார்த்த நேத்ரா, அவன் தலையை மெதுவாக நகர்த்தி பஞ்சுத் தலையணையை கொடுத்தாள். அவன் அப்பொழுதும் நன்றாக தூங்கினான். ஒரு நிமிடம் மெய் மறந்து அவனை பார்த்த நேத்ரா, சமையலறைக்கு சென்று அவள் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது வந்த கார் சத்தத்தில் ஹாலுக்கு வந்தாள் நேத்ரா. சினமுடன் வந்த நிதின், தூங்கிக் கொண்டிருந்த அதிரதன் காலை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டான்.

டேய், உனக்கு என்ன பைத்தியமா? சாருக்கு அடிபடப் போகுது நேத்ரா சொல்லும் சத்தம் கேட்டு விழித்து, வினு என்று உடலை வளைத்து நெளித்தான். அவன் முன் கையை கட்டிக் கொண்டு முறைத்து நின்ற நண்பனை பார்த்து,

என்னடா, பணக்கார மாப்பிள்ளை சௌக்கியமா? பொண்ணு எப்படி இருக்காங்க? அதிரதன் கேட்டுக் கொண்டே எழுந்தான். அவன் சட்டையை பிடித்த நிதின், ஏன்டா சொல்லலை? என்று கண்ணீருடன் அவனை பார்க்க,

என்னாச்சுடா? இப்ப நீ இங்க என்ன பண்ற? அதிரதன் கேட்க, அவனை செல்லமாக நிதின் அடிக்க, அய்யோ..அப்படியே குட்டிம்மா மாதிரி அடிக்கிற? கேலி செய்தான் அதிரதன்.

டேய், அடிக்கிறத நிறுத்திட்டு, எதுக்கு இந்த திடீர் விஜயம் சொல்லு? கேட்டாள் நேத்ரா.

வினு..என்று அவளை பார்த்த நிதின் அதிரதனை பார்க்க, இவர்கள் சத்தத்தில் யுவனும் வெளியே வந்தான்.

கோபம் சென்று நிதினுக்கு அழுகை வந்தது. அதிரதனை அணைத்து சாரிடா, நீ சொல்லி இருக்கலாம்ல்ல என்றான்.

நிது..தெளிவா பேசு என்று அதிரதன் கேட்க, யாருடா விக்ரம்? கேட்டான்.

கண்டுபிடிச்சிட்டியா? அதிரதன் சோபாவில் அமர்ந்தான்.

அந்த கொலைகாரன் யாரு? முதலில் உன்னை தான் வட்டமிட்டான். ஆனால் இப்பொழுது அவன் பார்வை நம் சம்பந்தப்பட்ட அனைவர் மீது படுகிறது. அவன் யாருன்னு தான் தெரியலை என்றான் அதிரதன்.

போதும் ரதா..நீ என்னிடம் மறச்சு நீ மட்டும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருக்க? நிதின் கேட்க, நேத்ரா புரியாமல் இருவரையும் பார்த்தாள்.

வினு..கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வா அதிரதன் சொல்ல, அவள் எடுத்து வந்து அவனிடம் கொடுக்க, எனக்கில்லை அவனுக்கு என்றான் அதிரதன்.

நிதினிடம் நேத்ரா நீட்ட, வினு..நம்ம ஸ்கூல்ல..இவனை எல்லாரும் எப்படி கேலி செய்திருப்பாங்க. எல்லாத்தையும் எனக்காக தான் செய்திருக்கான் என்று நிதின் சொல்ல, அவள் அமைதியாக இருவரையும் பார்த்தாள்.

வினு, அமைதியா இருக்க? உனக்கு தெரியுமா? நிதின் கேட்க, தெரியாது. ஆனால் அப்பொழுது உங்கள் இருவரை சுற்றியும் ஏதோ நடப்பது போல் இருக்கும். ஜஸ்ட் ஃபீல் பண்ண தான் முடிந்தது. அந்த வயசுல எனக்கு புரியல. ஆனால் பள்ளி இறுதி வருடம்..என்று அவள் அதிரதனை பார்த்தாள். இருவரும் அவளை தான் ஆர்வமுடன் பார்த்தனர்.

சார், அன்று கொல்ல வந்தது உங்களை இல்லையா? இவனையா? என்று நேத்ரா கேட்டாள்.

என்று? அதிரதன் தெரியாதது போல் கேட்க, அவனருகே வந்தஅவள் அவனது இடது கையை பிடித்து சட்டையை ஏற்றி விட்டு தழும்பை காட்டினாள்.

இருவரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தனர். உனக்கு இது கூட நினைவில்லையா? நான் சத்தமிட்டேனே மறந்திட்டியா? என்று நேத்ரா நிதின் தலையில் கொட்டினாள்.

அன்று சத்தம் கொடுத்த பெண்ணின் குரல் உன்னுடையதா? அதிரதன் கேட்க, அவள் “ஆம்” என்று தலையசைத்தாள்.

என் கையில் இருந்த தழும்பு உனக்கு இப்ப வரையுமா நினைவில் இருக்கு. ஏழு வருசமாவது இருக்குமே? அதிரதன் கேட்க, செக்கண்டில் தடுமாறி மீண்ட நேத்ரா, உங்க கையில நேற்று பார்த்தேனேல்ல. அப்பவே நினைவுக்கு வந்தது என்றாள்.

நிதின் கண்ணீருடன் மீண்டும் அதிரதனை அணைக்க, டேய்..விடுடா இதெல்லாம் விசயமா? போடா கல்யாண வேலைய பாரு. சார் ரொம்ப பிஸியா இருப்பீங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்குமே? அதிரதன் நிதினை பார்த்து கூற, ஆத்வியும் என்னிடம் முன்னாடியே சொல்லி இருக்கலாம். அம்மா, அப்பா, உன்னோட சிஸ்டர், என்னோட சிஸ்டர் எல்லாருமே சேர்ந்து மறச்சுட்டீங்கள? கோபமாக எழுந்தான்.

உன்னை சிறு வயதிலிருந்து கொல்ல நினைக்கிறான். கவனமா இருன்னு சொன்னா “நீ எஞ்சாய் பண்ணி இருக்கவே மாட்ட” அதிரதன் சொல்ல, எனக்கு பதிலா நீ உன் வாழ்க்கையை பாழாக்கிட்ட நிதின் சொல்ல..

யாரு பாழாக்கியது? இல்லடா. என் கவனம் உன் மீதும் படிப்பிலும் இருப்பதால் தான் என்னால் இப்ப இந்த நிலையில் இருக்க முடியுது. இல்ல அதீபன் மாதிரி..என்ன செய்றதுன்னு தெரியாமல் இருந்திருப்பேன். “என் இந்த உயர்ந்த நிலைக்கு நீ தான்டா காரணம்” என்று நிதின் தோளில் கையை போட்டான்.

யுவன் நேத்ராவிடம் ஓடி வந்து அவள் காலை கட்டிக் கொண்டான். அவள் அவனை துக்கி, சீக்கிரமா எழுந்துட்ட. நாம வேலைய பார்க்கலாம் என்று சொல்ல, அவனை விட்டு நீ போ என்றான் அதிரதன். அவள் அவனை முறைத்தாள்.

அதிரதன் எழுந்து, அவனை இறக்கி விடுன்னு சொன்னேன் என்றான்.

சார், நான் தான் சொன்னேன்ல அவள் சொல்ல, யுவன்அதிரதனை பார்த்து விட்டு அவள் கழுத்தை கட்டிக் கொண்டான்.

யுவி இறங்கு என்று அதிரதன் நேத்ரா அருகே வந்தான்.

சார், நாங்க வேலை பார்க்கணும் என்று யுவன் சொல்ல, அதிரதன் அப்படியே நின்றான்.

யுவி, எப்படி கூப்பிட்ட? அதிரதன் கேட்க, நேத்ராவும் அவனை பார்த்தாள்.

“சாரி சார்” என்று நேத்ரா சொன்னது போல் சொல்ல,

யுவி..உன்னை நான் அறைக்கு போக சொன்னேனே? போகலையா? என்று நேத்ரா அவனை கீழே இறக்கி விட்டு கேட்க, எனக்கு தூக்கம் வரலை. அதான் திரும்ப வெளியே வந்தேன் என்றான். அதிரதனும் நேத்ராவும் பேசியதை யுவன் கேட்டிருப்பான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement