Advertisement

அத்தியாயம் 11

கல்லூரியில் ரணா சோகமாக அமர்ந்திருந்தாள்.

“ரணா என்னாச்சு? பெரிய அலை வந்து அடிச்சிருச்சோ? இவ்வளவு சோகமா இருக்க?” நித்திர கண்ணன் கேட்க,

“முதல்ல கன்னத்துல இருந்து கையை எடுடி” என்று ஆரா ரணா கையை தட்டி விட்டாள்.

“ஏதாவது சொல்லு ரணா?” லட்சனா கேட்டுக் கொண்டிருக்க, காவியனும் சங்கீதனும் வந்தனர்.

“என்னம்மா, ரொம்ப அமைதியா இருக்கீங்க?” சங்கீதன் கேட்க, காவியனும் ரணாவை பார்த்தான்.

“எதுவும் பிரச்சனையா ரணா?” காவியன் கேட்க, அட பாருப்பா..பேசுறது நம்ம காவியனா ராகவ் கேட்க, அவனை முறைத்த காவியன் ரணாவை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.

என்னோட அக்கா அண்ணாவோட ப்ரெண்ட லவ் பண்றா.

அதுல என்ன இருக்கு ரணா? சங்கீதன் கேட்க, சொல்றத முழுசா கேளுடா என்று அனைத்தையும் அவள் சொல்ல, உன் அண்ணனோட ப்ரெண்டு குடும்பத்தை பற்றி உன் அண்ணாவுக்கு தெரியுமா? காவியன் கேட்டான்.

இல்ல, அவனுக்கு தான் கான்டெக்ட் பண்ணவே முடியலை. தெரியாதுன்னு நினைக்கிறேன் அவள் சொல்ல, இனி தெரிந்து விடும் என்ற குரலில் அதிர்ந்து பார்த்தாள் ரணா.

தீக்சி நீயா? வெளிய வந்துட்டியா?

நான் தான்..நான் என்ன கொலையா செய்தேன்? அதற்கு தான் ஆதாரமேயில்லையே?

நீ எதுக்கு இங்க வந்த?

அட, குட்டிம்மா. நியூஸ் பாக்கலை போல.

“ஏய், அண்ணா மாதிரி பேச நினைக்காத” என்று ரணா விரலை நீட்டினாள். அட என் செல்லக்குட்டியே, இனி தான் உன் அக்காவுக்கு இருக்கு. உன்னோட அண்ணனை வெளியே வர வைக்கிறேன் பாரு.

அக்காவா? என்ன சொல்ற?

அதான் அவளது காதலன் நிதின் அவனது உண்மையான வீட்டிற்கு சென்று விட்டான். அவங்க ஏத்துக்கிட்டாங்க. அதை விட அவனுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மந்திரி பொண்ணு என்று அவள் கூற,

இப்ப தான் அவங்களுக்கு தெரியும். அதுக்குள்ள எப்படி திருமணம்?

அவங்களுக்கு நிதின் தான் அவங்க வீட்டுப் பையன்னு ஏற்கனவே தெரியும். ஆனால் உன் அப்பா தான் அவனை பிடித்து வைத்திருந்தார்.

இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன் என்று ரணா சொல்ல, நிதின் உன் அக்காவை காதலிக்கலையாமே? அவள் கூற, ரணாவால் ஏதும் பேச முடியவில்லை.

அய்யோ..குட்டிம்மா, உன்னால எதுவுமே செய்ய முடியாது. உன்னோட அக்கா அவனை நினைச்சுக்கிட்டே சாக போறா? உன் அண்ணன் வெளிய வந்தால் மீடியாவை நானே கிளப்பி விடுவேன் தீக்சி சொல்ல, காவியன் சிரித்தான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

மீடியாவை நீ கிளப்பி விடுவியா? மீடியா என்ன மீடியா? நீ தான் மறைந்து வாழணும். நீ நியூஸ் பார்க்கலை போல காவியன் கேட்க, என்ன பேசுற? அவள் சத்தமிட்டாள். சுற்றி இருந்தவர்கள் அவர்களை கவனித்தனர்.

காவியன் என்ன பேசுற? ஆரா கேட்க, ஆரா அமைதியா இரு.

நீயெல்லாம் காதலை பத்தி பேசுற? நேரக் கொடுமைடா..உனக்கு ரணா அண்ணா மேல காதலா? இல்லை பணத்தை சுருட்டும் ஏற்பாடா? காவியன் கேட்க, ரணா..இவள் சரியான பைத்தியம். அழகா இருக்கான்னு மிதப்பு. ஆனால் கொஞ்சமும் மூளை இல்லையே?

ஏய், யார்கிட்ட பேசுற? தீக்சிதா அரட்டினாள்.

தயாளன் சாரின் பொண்ணுமான, அதிரதன் சார் சாம்ராஜ்ஜியத்தை சரிக்க நினைத்த மிஸ் தீக்சிதாவிடம் தான் பேசுறேன் காவியன் சொல்ல,

காவியா, உண்மையிலே இவள் தான் காரணமா? ரணா கேட்க, என்ன ரணா நீ நேத்து குடுத்த பேட்டியில உன் தைரியத்தை எல்லாரையும் வியந்து பார்க்க வச்சிட்டு, இன்று சின்னபொண்ணு மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்க?

என்ன நியூஸ் காவியா? ராகவ் கேட்க, நான் இணையத்தில் போட்ட செய்தி தான். மேடம் மூளைய கழற்றி வச்சிட்டாங்க போல என்று தீக்சிதா அருகே சென்ற காவியன், ஜெயிலுக்கு போயிட்டு வந்த பயம், வருத்தம் ஏதுமில்லாமல் மணக்க மணக்க சென்ட் போட்டு மேடம் வந்துருக்காங்க.

மேடம், உங்க திட்டத்தை எல்லாருக்கும் தெரியும்படியா பேசுவீங்க? ரணா அண்ணா ஹோட்டலுக்கு போன வீடியோவையும் மற்றுமொரு வீடியோவையும் ஒத்து போட்டேனா? செம்ம டிரெண்டு ஆகிடுச்சு. என்னன்னு தெரியணுமா மேடம்? என்று போனை காட்டினான்.

அதில் அதிரதன் போல் அறைக்குள் ஒருவன் சென்றதும், அவனுடன் தீக்சிதாவும் அஷ்வினியும் பேசியது வீடியோவாக தெளிவாக தெரிந்தது. ஆடியோவும் சேர்ந்தே இருந்தது.

ரணா, உன்னோட அண்ணன் போலவே ஒருவனை செட் செய்து அவனையும் அஷ்வினியையும் அறைக்குள் ஆடையில்லாமல் இருக்க சொல்லி பணம் கொடுத்தாள் இவள். அந்த வெட்கம் கெட்டவளும் பணத்தை வாங்கிக் கொண்டு ஒருவனோட இருந்திருக்காள்.

உன் அண்ணா மாதிரி அவன் இல்லை என்பதால் லூசுக..அதே இடத்திலா எல்லாம் செய்வீங்க? அதிரதன் சார் போலவே உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனை தயார் செய்த வீடியோ அப்படியே கிடைத்தது. இதில்..ஏய், நில்லுடா..இது அதிரதனோட ஃபேவரேட் சென்ட் என்று அவனுக்கு இந்த மேடம் அடித்து வேற விட்டாங்க என்று காவியன் தீக்சிதாவை பார்த்து சிரித்தான்.

யாருடா நீ? எதுக்கு இதெல்லாம் செய்ற?

நான் யாராக இருந்தால் உனக்கென்ன? மீண்டும் கலி சாப்பிட தயாராக இரு அவன் சொல்ல, தீக்சி கையை ஓங்கினாள். அவள் கையை பிடித்த ரணா அவளை அடிக்க கையை ஓங்க, எதுக்கு ரணா கோபம்? பொறுமையா இரு என்ற காவியன் “இனி நீங்க எங்க போனாலும் ஆபத்து தான்”. குறிப்பாக மீடியா கையில் சிக்கிறாதீங்க ஆன்ட்டி என்றான்.

டேய், உன்னை சும்மா விட மாட்டேன். சங்கீதன் உன் அம்மாவை நீ மறந்து விட்டாயோ? அவள் கேட்க, அவன் கையை முறுக்கினான். எல்லாரும் அவனை பார்க்க, ரணா..உன்னோட பேமிலியையும் இவனையும் சும்மா விட மாட்டேன் என்று கூறி விட்டு தீக்சிதா அங்கிருந்து ஓடினாள்.

காவியா? எப்படிடா? எல்லாத்தையும் தனியா செஞ்சுட்ட? சங்கீதன் கேட்க, ஆமா இதெல்லாம் விசயமா? ரணா அண்ணா சென்றதாக சொல்லப்பட்ட ஹோட்டல்ல சென்று புட்டேஜ் வாங்கி செய்தேன்.

டேய், அங்க எப்படிடா? சும்மா உள்ள விடவே மாட்டானுக? சங்கீதன் கேட்க, அது ரகசியம். சொல்ல மாட்டேன் என்று புத்தகத்தை எடுத்து அமர்ந்தான்.

ஹே..காவியா, சூப்பர்டா என்று அவனை சுற்றி இருந்தவர்கள் பாராட்டினார்கள். ரணா புன்னகையுடன் அவனருகே வந்து அமர்ந்தாள்.

சொல்லு ரணா? என்று அவன் கவனம் புத்தகத்தில் இருக்க, நிமிர்ந்து பாக்குறானா பாரு? என்று மனதில் எண்ணிய ரணா..தேங்க்ஸ் சொல்ல வாயெடுத்த போது, கல்லூரி முதல் நாளன்று அவனை அடித்த சீனியர் காவியன் முன் மூச்சிறைக்க வந்து நின்றான். அவர்கள் அவனுடன் நன்றாகவே பேச ஆரம்பித்திருந்தனர்.

என்னாச்சு சீனியர்? காவியன் கேட்க, உன்னை தேடி ஒரு பொண்ணும், பையனும் வந்திருக்காங்க என்றான் அவன்.

என்னை தேடி யார் வரப் போறா? நீங்க வேற சீனியர் என்றான்.

அந்த பொண்ணு பேரு மாயாவாம் என்றான். மாயாவா? என்று புத்தகத்தையும், பையையும் அப்படியே போட்டு விட்டு ஓடினான் காவியன். ரணா முகம் சுருங்கியது.

நம்ம காவியன் ஒரு பொண்ணுக்காக அவனுக்கு உயிரான புத்தகத்தை கீழே போட்டு ஓடிகிறானா? காதலாக இருக்குமோ? ராகவ் கேட்க, ரணா அவனை முறைத்தாள்.

என்னை எதுக்கு முறைக்கிற? உனக்கு பிடிச்சிருந்தா அவனிடம் சொல்லி இருக்கலாம்.

ரணா, எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது என்று ஆரா சொல்ல, அவள் மீண்டும் வருத்தமானாள்.

எதுக்கு இப்படி அவள கஷ்டப்படுத்துறீங்க? வாங்க போய் பார்த்துட்டு தான் வருவோமே? சங்கீதன் அழைக்க, உன்னிடம் கூட அவன் சொல்லவில்லையா? லட்சணா கேட்க, வர்றீங்களா? என்று கோபமாக அவள் சொல்ல,

கோவிச்சிக்காத சங்கீத் என்று அவன் கன்னத்தை அவள் கிள்ள, அவள் கையை தட்டி விட்டு அவன் முன் செல்ல, எல்லாரும் அவனை பின் தொடர்ந்தனர். ரணாவிற்கு பயம் அதிகமானது.

மாயா? காவியன் அழைக்க, மாயா அவனருகே வந்தாள். ரணாவும் நண்பர்களும் அங்கு வந்தனர். தள்ளி நின்று அவனை கவனித்துக் கொண்டிருந்தனர்.

யாரோட வந்த?

அவள் ஜீவாவை கை காட்டினாள். அண்ணா..என்று ஜீவாவும் அவர்களிடம் வந்தான்.

ஸ்கூலுக்கு போகலையா? எதுக்கு தனியா கூட்டிட்டு வந்திருக்க? பிரச்சனையானால் என்ன செய்வது? என்று கோபமாக காவியன் ஜீவாவை அடிக்க கையை ஓங்க, அவன் கையை மாயா பிடித்து, நான் தான் உன்னிடம் பேசணும்ன்னு அழைத்து வந்தேன்.

அதுக்கு தனியா வரணுமா? என்று காவியன் அமைதியாக மாயாவை பார்த்தான்.

பேசலாமா? அவள் கேட்க, வாங்க என்று மரத்தடி நிழலில் போடப்பட்டிருந்த கல் இருக்கையில் அவர்களை அமரச் சொல்லி அவனும் அமர்ந்தான்.

மாயா, நான் அங்கே காத்திருக்கவா? ஜீவா கேட்க, அவனை முறைத்த மாயா, ஒழுங்கா உட்காரு என்றாள். அவனும் அவளருகே அமர்ந்து காவியனை பார்த்தான்.

காவியா, என்னை போலே உன்னை நினைத்ததால் தான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன். மற்றபடி எனக்கு உன் மீது எந்த காதல் உணர்வுகளும் இல்லை. ப்ளீஸ்..அதை மறந்து நீ உன் படிப்பையும் வாழ்க்கையையும் பார் என்று அவள் பேச காவியன் கண்கள் கலங்கியது.

என்னால் உன்னை காதலிக்க முடியாது. எனக்கு உன்னை பார்த்தால் ஏதும் தோன்றவேயில்லை என்று அவள் சொல்ல சொல்ல, அவன் கண்ணில் நீரூற்று பெருகியது. சுற்றியிருந்தவர்கள் காவியனை அதிர்ந்து பார்த்தனர்.

காவியா, ப்ளீஸ் அழாத..எனக்கு கஷ்டமா இருக்கு என்று அவன் கண்ணீரை மாயா துடைக்க, அவள் கையை பிடித்த காவியன் அவன் கன்னத்தில் வைத்து அழுது கொண்டே அவளது கையில் முத்தமிட்டான். ரணாவிற்கு அழுகை வர ஆரம்பித்தது.

காவியா என்று மாயா அவன் கையை எடுக்க, அவள் கையை பிடித்து இழுத்து அணைத்தான் காவியன்.

விடு காவியா, மாயா அழ அவளை விடுவித்து அவள் கையை பிடித்து இழுக்க அவனை நெருங்கிய மாயா விழித்து நிற்க, அவளை இழுத்து இதழ்களில் முத்தமிட்டான். ரணா அழுது கொண்டே ஓடினாள். அவள் பின் ஆராதனாவும் லட்சணாவும் ஓடினர்.

மாயா திகைத்து வாயில் கை வைத்து கண்ணீருடன் நிற்க, ஜீவா காவியனை அடித்தான். சுயம் வந்த மாயா ஜீவாவை விலக்கி “காவியா, இப்ப என்ன செஞ்ச? உனக்கு பைத்தியமாடா பிடிச்சிருக்கு” என்று சினமுடன் அவனை அடித்தாள். அவன் எந்த பதிலும், எதிர்ப்பும் காட்டாமல் மாயா கொடுக்கும் அடியை வாங்கிக் கொண்டான். சங்கீதன், ராகவ், கண்ணன் காவியனிடம் வந்தனர்.

சொல்லுடா..என்று அழுது கொண்டே அமர்ந்தாள். சாரி மாயா, நீ என்னை வேண்டாம்ன்னு சொல்வதை தாங்க முடியாமல் செய்துட்டேன். “மன்னிச்சிரும்மா” என்று அவளிடம் வந்தான்.

அது எப்படிடா? கட்டிப் புடிக்கிற, முத்தம் கொடுக்குற மன்னிக்கணுமா? நீ இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்ட? அக்காவும் சாரும் உனக்காக பேசி தானே இங்க அட்மிசன் வாங்கினாங்க. நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க? என்று அவனை அடித்தாள்.

இப்ப கூட என்னால ஒருநாள் கூட உனக்கு வீணாகிடக்கூடாதுன்னு தான் அக்கா பேச்சை மீறி வந்தேன். நீயும் மத்தவங்கள மாதிரி நடந்துக்கிட்ட என்று அழுதாள்.

என்ன சொன்ன மாயா? மத்தவங்க மாதிரின்னா?..நான் உனக்கு ஸ்பெசல் தானே? காவியன் கேட்க, ஆமா..ஸ்பெசல் தான். ஆனால் உன் மீது எந்த காதலும் இல்லை. ஒரு ப்ரெண்டா நீ எனக்கு எப்பவும் ஸ்பெசலா தான் இருந்திருக்க?

அப்படின்னா இப்ப ப்ரெண்டு இல்லை. பார்க்க பேசக் கூடாதுன்னு சொல்றீயா? காவியன் கோபமாக கேட்டான்.

காவியா, நான் தான் கோபப்படணும். நீ கோபப்படுற? அவள் சத்தமிட, என் மேல தப்பு தான் மாயா. எங்கே உன்னை தவற விட்டு விடுவேனோ? என்ற பயத்தில் தான் முத்தம் கொடுத்தேன். வேற எந்த தவறான எண்ணமும் எனக்கு இல்லை. என்ன சொன்ன? மத்தவங்க மாதிரியா? என் இடத்தில் வேரொருவன் இருந்தால் என்ன செய்வான் தெரியுமா? எல்லாமே சரியா பேசுறேன்னு வாய்க்கு வந்த படி பேசாத..

எனக்கு உன்னை பிறந்ததிலிருந்தே தெரியும்? எனக்கு உன் மீது பதின்மூன்று வருசமா காதல் இருந்தது. இதுவரை உன்னை நான் தொட்டது கூட இல்லை. நீ என்னை விட்டு போயிடுன்னு சொல்லும் போது..சரி மாயான்னு விட்டு போனா..அது காதல் இல்லை. அதுக்கு பேரு வேற..உனக்கு புரியுதா? கத்தினான்.

நான் கிஸ் பண்ணது தப்பு தான் ஒத்துக்கிறேன். உனக்கே தெரியும். நமக்கென வேறு யாருமே இல்லை. நம்ம எல்லாரும் ஒரே குடும்பமா ஒருவரை ஒருவர் பார்த்து தான் வளர்ந்தோம். உனக்கு எப்படி தன்வந்த்தை பிடித்ததோ அதே போல் எனக்கு உன்னை பிடித்தது. என் காதல் சிலருக்கு மட்டும் தான் தெரியும். உனக்கே தெரியாமல் தான் காதலித்தேன்.

போ என்று சொன்னா காதல் போகாது மாயா. நீ வேண்டுமானால் தன்வந்தை விட்டு போ..என்று உன் மனதிடம் சொல்லிப் பாரு. உனக்கு தெரியும். நான் அடுத்தவன் போல் இல்லை. அதை விட உன் தன்வந்த்தை போல் இல்லை என்று கோபமாக பேசி விட்டு அமர்ந்தான். மாயா கண்ணீருடன் நின்றாள்.

ஜீவா மாயாவை பார்த்துக் கொண்டே, சாரி அண்ணா நான் உங்களை கோபத்தில் அடிச்சிட்டேன் என்று அவனை அணைக்க, காவியனும் அவனை கட்டிக் கொண்டு அழுதான்.

எப்படி பேசுறா பாருடா? இவளுக்கு இன்னும் வெளி உலகத்தை பற்றி சுத்தமா தெரியலை. என்ன செய்யப் போறாளோ? வருத்தப்பட்டான்.

ஜீவா அவனை விலக்கி விட்டு மாயாவிடம் வந்து, மாயா..அடுத்தவனை பற்றி உனக்கு என்ன தெரியும்? கொஞ்சம் சொல்றீயா? இன்று அண்ணாவிடம் பேசியது போல தான எங்க எல்லாரிடமும் பேசுவ? அவன் கேட்க, அவள் பேச முடியாமல் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

அண்ணா..நீங்க கிளாசுக்கு போங்க. இவளாக எப்படி நம்ம வீட்டுக்கு வர்றான்னு பார்ப்போம். தனியா வந்தா தான மத்தவனுக எப்படி இருப்பாங்கன்னு அவளுக்கு தெரியும்? என்று ஜீவா கோபமாக பேச, நிலையுணர்ந்த காவியனின் சீனியர் பொண்ணு

தம்பி, கொஞ்சம் அமைதியா இரு என்று மாயாவிடம் வந்து, எல்லாரும் சேர்ந்து ஒரே இடத்தில் இருப்பதாக பேசுறீங்க? அப்படியும் காவியனை பற்றி உனக்கு தெரியலையா? ஆனால் இங்க இருக்கும் எல்லா பொண்ணுகளுக்கும் அவனை பற்றி தெரியும்?

மாயா காவியனை பார்க்க, அவன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

அவன் பக்கம் எந்த பொண்ணையும் விட மாட்டான். அவன் பேசும் பொண்ணுங்கன்னா அவங்க தான் என்று பிரணா, ஆராதனா, லட்சணாவை காட்டினாள் அந்த சீனியர். அவனை எத்தனை பொண்ணுங்களுக்கு பிடிக்கும் தெரியுமா? என்ன கெல்ஸ் பிடிக்கும் தான? சீனியர் சத்தமிட, பொண்ணுங்க முன் வர, காவியன் நிமிர்ந்து அனைவரையும் முறைக்க எல்லாரும் அப்படியே நின்றனர்.

என்ன காவியன்? உனக்காக பேசுனா கூட முறைக்கிற? ஒரு பொண்ணு கேட்க, நான் யாரையும் பேச சொல்லலை. சீனியர் நீங்க யாருக்கும் புரிய வைக்க வேண்டாம். எல்லாரும் இங்க என்ன வேடிக்கை பாக்குறீங்க?

“ஜீவா, நீங்க கிளம்புங்க” என்று காவியன் சொல்ல, மாயா அவன் முன் வந்து கண்ணீருடன் சாரி காவியன் என்றான். அவளை பார்த்த காவியன், “அழாத,..ஜீவா பத்திரமா கூட்டிட்டி போ” என்றான்.

அண்ணா..என்று அவன் தயங்க, என்னடா?

புது அக்கா இருக்காங்கல்ல. அதான் சுஜித்ரா அக்கா அவங்களிடம் சொல்லாம வந்துட்டோம். பாட்டி திட்டுவாங்க அண்ணா.

வாங்குங்க. நானா வரச் சொன்னேன் என்று மாயாவை பார்த்தான். அவள் பயத்துடன் காவியனையும், ஜீவாவையும் பார்த்தாள்.

இங்க பாரு மாயா. உனக்கு விருப்பமில்லைன்னா உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். என்றாவது என்னை ஏத்துப்பன்னு நினைச்சேன்.

அதை விடு. இப்ப என்ன செய்யலாம்? அடுத்தவனோட போறீயா? இல்லை எங்களுடன் வர்றீயா? அவன் கேட்க, அவள் அழுது கொண்டு, நான் கோபத்துல பேசினா நீ அதையே சொல்லி காட்டுற? என்று மேலும் அழுதாள்.

காவியன் ஜீவாவை பார்க்க, ஹே டியர்..எதுக்கு அழுற? என்று கேலியாக அவன் கேட்க, அவனிடம் உன்னை எத்தனை முறை சொல்லி இருக்கேன். டியர்ன்னு சொன்ன..சொன்ன..என்று அவள் யோசிக்க..

டியர் சொன்னா, என்ன செய்வ டியர்? கேட்டான்.

கொல பண்ணிடுவேன். பார்த்துக்கோ என்று அவள் அழுகை நின்று சாதாரணமாக பேசினாள்.

காவியன் புன்னகையுடனும், ஏக்கமாகவும் அவளை பார்த்தான்.

சங்கீதன் அவனை பார்த்து, காவியா..நமக்கு பர்ஸ்ட் பீரியடு கிளாஸ் இல்லை. நீ விடுப்பு எடுக்க வேண்டாம். போயிட்டு வா. நாங்களும் பிராஜெக்டுக்காக கிளம்புகிறோம் என்றான்.

ரணா காருடன் அவர்கள் முன் வந்து, ஏறுங்க என்றாள்.

ரணா..இருக்கட்டும். நாங்க கிளம்புறோம் காவியன் சொல்ல, எப்படியும் லாயர் ஆபிஸூக்கு போவேல்ல. நானும் அங்க தான போகணும். வாங்க எல்லாருமே போகலாம் அவள் அழைக்க..

ஆமாடா, ரணா கூடவே போயிட்டு வாங்க என்றான் சங்கீதன்.

டேய், நீயும் தான் வரணும் ரணா சொல்ல, மீ..

யா..யூ தான் என்றாள் ரணா.

நான் வரலை. நான் ரொம்ப பிஸி சங்கீதன் சொல்ல, அங்கிள் கிட்ட பிரச்சனை எதுவும் பண்ணியா?

உன்னோட அங்கிள் தான் பிரச்சனை பண்றார்?

வர்றீயா? நான் இறங்கணுமா? அவள் கேட்க, அம்மா தாயே வேண்டாம். நானே வந்துடுறேன் என்று அவளருகே ஏறி அமர்ந்தான்.

பசங்களா வாங்க? அவள் மாயாவை பார்த்து அழைக்க, வந்துட்டோம் என்று ஜீவா காரில் ஏறி அமர, காவியனும் மாயாவும் ஒரே போல் அவனை முறைத்தனர்.

டேய், ஏறுடா சங்கீதன் சொல்ல, இருவரும் ஜீவாவுடன் ஏறினர்.

அக்கா..அடுத்த முறை டின்னருக்கு போகலாமா? பட் பே நீங்க தான் பண்ணனும் ஜீவா ரணாவிடம் கேட்க, ம்ம்..கண்டிப்பா பிரதர் என்று அவள் சொல்ல, மாயாவும் காவியனும் அவனை கிள்ளினர்.

ஆ..அக்கா கிள்ளுறானுக. நான் முன்னாடி வரவா? காப்பாத்துங்க என்றான் ஜீவா. ரணா புன்னகைத்துக் கொண்டே காவியனை பார்க்க, அவளை மாயா பார்த்தாள்.

சாப்பாடுன்னா போதுமே உனக்கு? மாயா திட்டிக் கொண்டே மீண்டும் ரணாவை பார்த்தாள். ரணா கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அவ்வப்போது காவியனை பார்த்துக் கொண்டே வந்தாள். இல்லை..இல்லை.. சைட் அடித்துக் கொண்டே வந்தாள். ஜீவாவிடம் மாயா கண்ணை காட்ட..இருவரும் ரணா காவியனை பார்த்துக் கொண்டே கார் ஓட்டுவதை பார்த்துக் கொண்டே அவர்களுடன் பயணித்தனர்.

கார் பயணத்தில் அனைவரும் ஈடுபட்டிருக்க ரணா போன் ஒலித்தது. காரினூடே கனெக்ட் செய்து வைத்திருந்தாள்.

சொல்லுடா..? அவள் கேட்க, ஹேய் உடனே நம்ம ரதன் அண்ணா இண்டஸ்‌ரீஸிற்கு வா அதீபன் அழைக்க, என்னாச்சுடா?

ஆத்வி, நிதின் திருமண நியூஸ்ஸை ஊழியர்கள் வழியாக கேள்விபட்டு நியூஸ் பார்த்துட்டா. அவளறையில் இருந்து கொண்டு வெளிய வர மாட்டேங்கிறா. அப்பாவிடம் சொன்னால் கோபப்படுவார். அம்மா டென்சன் ஆவாங்க. அண்ணாவை கான்டெக்ட் பண்ண முடியல. சீக்கிரம் வர முடியுமா? யாருக்கும் அவள் காதல் தெரியும் முன் வந்து விடு. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு  என்றான் அதீபன்.

காரை சட்டென நிறுத்திய ரணா டென்சனாக, ரணா காரை எடு. அக்காவை பார்க்க போகணும் சங்கீதன் சொல்ல, பயமா இருக்குடா என்று பதறினாள்.

ரணா அமைதியா இரு. முதல்ல நிதின் சாருக்கு கால் பண்ணு என்றான் காவியன்.

அவரை உனக்கு தெரியுமா? சங்கீதன் கேட்க, அதான் நியூஸ்ல பார்த்தேன். அதிரதன் சார் செக்கரட்டரியா டிவில்ல பார்த்திருக்கேன் என்று காவியன் கூற, ஜீவாவும் மாயாவும் அவனை பார்த்தனர்.

“டிவி பக்கம் செல்லாதவன் எப்படி பார்ப்பான்?” மாயா சிந்தித்தாள்.

ரணா போன் செய்ய, அவன் எடுக்கவில்லை.

டேமிட், எடுக்க மாட்டிங்கிறான் என்று அவள் திட்ட, சங்கீதன் உன் நம்பர் அவருக்கு தெரியுமா?

தெரியும் காவியா.

நம்பர் சொல்லு என்று காவியன் அவன் போனில் போட அவன் எடுத்தான்.

டேய் லூசு, போன் பண்ணா எடுக்க மாட்டியா? ஆமால்ல சார், நீங்க இப்ப எவ்வளவு பெரிய ஆள். எடுப்பீங்களா? நீ எவனா வேண்டுமானாலும் இருந்துக்கோ. என்னோட அக்காவை கதவை மட்டும் திறக்க சொல். நீ சொன்னா தான் கேட்பா என்று ரணா பேச அந்த பக்கம் சத்தமே இல்லை.

டேய்..லயன்ல்ல இருக்கியா? இல்லையா? சொல்லித் தொலை. உன்னோட கல்யாணத்தை தண்டோராவா போடுவ? அவ என்ன செய்றான்னே தெரியல..அண்ணாவாது பக்கத்துல இருக்கலாம். உங்கள வச்சுக்கிட்டு..என்று அவள் திட்ட,

போனை வை..என்று நிதின் சொல்லி போனை வைத்து விட இவனுக்கு திமிரு கூடி போச்சு என்று ஹாரனை போட்டு அழுத்தினாள் ரணா.

அக்கா, காது வலிக்குது ஜீவா கத்தினான்.

ரணா..நகரு என்று சங்கீதன் காரை ஓட்டிக் கொண்டே அவன் அப்பாவிற்கு போன் செய்து விசயத்தை சொல்ல, அவர் செழியன் ஆபிசில் இருந்திருப்பார். அவரிடம் தினகரன் விசயத்தை சொல்ல, அவர் தன் மகளை பார்க்க கிளம்பினார்.

முதலில் வந்தது தினகரனும் செழியனும். ஆத்விகாவிடம் வெளியிருந்து பேசியே அவளை கதவை திறக்க வைத்தார். யாரும் அவ்விடம் வராமல் அதீபன் பார்த்துக் கொண்டான்.

தினகரன் தன் மகனுக்கு போன் செய்து சொல்ல, அதிரதன் கம்பெனி முன் ரணா இறங்க, மற்றவர்கள் நிலையத்திற்கு சென்றனர். ஆத்விகா அழுது கொண்டு தான் இருந்திருப்பாள். தவறான முடிவு ஏதும் எடுக்கவில்லை.

அவள் அப்பாவை பார்த்து அவரை அணைத்து, ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என்று அழுதாள். அழாதடா..அவன் போனால் போகட்டும். உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் என்று சமாதானப்படுத்தினாலும் அவள் கேட்கவில்லை. ரணா உள்ளே வந்து அதீபனிடம், அக்கா..என்று கண்ணீருடன் கேட்டாள்.

அவன் கையை காட்ட உள்ளே சென்று, ஏன்க்கா இப்படி பயமுறுத்திட்ட? என்று ஆத்விகாவை அணைத்தாள் ரணா. ஆத்விகா அழுகையை நிறுத்தி அமைதியானாள்.

கண்ணீரை துடைத்து, நீ காலேஜ் போகலையா? என்று கேட்டாள். நான் வேற வேலையாக வெளியே வந்தேன்.

நான் இன்று விடுப்பு எடுத்து உன்னுடனே இருக்கவா? அக்கா, அப்பா…என்று செழியனை பார்த்தாள். அவர் கோபமாக ஆத்விகாவை வெறித்துக் கொண்டிருந்தார்.

அவள் வீட்டுக்கு போகட்டும் என்ற செழியன், நீ காலேஜூக்கு போ..என்றார். கொஞ்ச நேரம் அக்காவோட இருந்துட்டு போகவா? என்னோட ப்ரெண்டுக்கு பிரச்சனை? அவன் பிரதரை வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கான் அவள் சொல்ல,

காரை யாரிடமோ கொடுத்துட்டு இங்க என்ன பண்ற? அதீபன் கேட்க, யாரோ இல்லை என்று தினகரனை பார்த்து சங்கீத் தான் அவர்களை அழைச்சிட்டு போயிருக்கான் என்று அவரை பார்த்தாள். அவர் அமைதியாக நின்றார்.

கார் வந்தவுடன் ரணா காலேஜூக்கு போகணும். ஆத்விய நானே கூட்டிட்டு போறேன் என்று செழியன் அதிரதன் அறைக்கு சென்றார்.

நிதின் பதட்டமாக அதிரதனுக்கு அழைக்க, அவன் போனை எடுக்க, என்னிடம் எதை பற்றியும் பேசாமல் எனக்கு திருமணம்ன்னு நியூஸ் போட்டுட்டானுகடா. ஆத்வி கம்பெனி அறையிலிருந்து வெளிய வர மாட்டேங்கிறான்னு குட்டிம்மா கால் பண்ணாடா..

வாட்? என்று அதிரதன் சாப்பாட்டு கையுடன் எழுந்தான்.

எல்லாம் இவனுக பிளான் தான். இதில் செழியனும் உடந்தை. அன்று நிதினை செழியன் அவர் அறைக்கு சென்று கதவை மூடி, அவனுடைய பெற்றோர் பற்றியும், அவர்களிடமிருந்து காப்பாற்ற தான் இவனை இவர் வீட்டிற்கு அழைத்து வந்ததையும் கூறினார். பின் நிதின் அதிரதனுக்கு கால் செய்து விசயத்தை சொல்ல, போனை வாங்கிய செழியன்..

நீ எங்க வேண்டுமானாலும் இரு. இப்பொழுதைக்கு வர வேண்டாம். நிதினை அவன் வீட்டுக்கு அனுப்புவோம். அங்கே யார் என்ன செய்றாங்கன்னு அவன் கண்காணிக்கட்டும். நம்மை வீழ்த்த நினைப்பவனும் நிதின் சிறுவனாக இருக்கும் போது கொல்ல வந்தவனும் யார் என்பதை எளிதாக கண்டறியலாம் என்றார்.

சார்..என்று நிதின் அதிர்ந்து இருப்பான். பின் தான் இந்த டிராவை செய்திருப்பார்கள்.

டேய், நீ இன்னும் நியூஸ் பார்க்கலையா? நிதின் கேட்க, ம்ம்..பார்க்கிறேன்டா என்று வினு டிவி ஆன் பண்ணு என்றான்.

ஓய், வினுவ வேலைக்காரியாகவே ஆக்கிட்ட போல..கொன்றுவேன் நிதின் சொல்ல,

நான் சொல்வதை கேட்பது தான் அவள் வேலை. அவளே செய்கிறால் உனக்கென்னடா? என்று வினுவை பார்த்தான். அவள் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு டிவியை ஆன் செய்து கொண்டே, யுவனை பார்த்தான். அவன் விளையாண்டு கொண்டிருந்தான். சற்று நேரம் அதிரதன் அவனை மறந்து நேத்ராவை பார்க்க, சார் ஓ.கேவா? என்று அவள் கேட்க, சுயம் வந்தவன் ம்ம்..என்றான்.

டேய், ரதா பேசாம என்ன பண்ற? அவன் கேட்க, அமைதியா தான் இரேன்டா என்ற அதிரதன் டிவியை பார்க்க, ரவிக்குமாரும், ரேவதியும் தன் மகனாக நிதினை அறிமுகப்படுத்தி விட்டு அவன் திருமணத்தை பற்றி பேச, சார் என்ன நடக்குது? என்று அவளும் அவனருகே வந்து டிவி பார்த்தாள்.

அக்கா, அங்கிள்..என்று யுவனும் அவர்களிடம் வந்தான்.

போன்ல அவன் தானா சார்? அவள் கேட்க, அதிரதன் கவனம் நேத்ராவால் சிதற, வினு கொஞ்சம் தள்ளி போறியா? அதிரதன் சொல்ல..சாரி சார் என்று பின் நகர்ந்து அவளும் பார்த்தாள்.

டேய், உன்னோட தங்கச்சி தாட்சாயிணியோட பேசுனியா? அதிரதன் கேட்க,

உனக்கு அவளை தெரியுமா?

உன்னோட குடும்பமே தெரியுமே? உனக்கு கூட ரவிக்குமார் அங்கிளை தெரியும்ல?

ம்ம்..தெரியும் என்றான் நிதின்.

ஆமாடா. அவள் ரொம்ப அமைதியா இருக்கா.

பார்த்துடா. அமைதி தான் ஆபத்தாகும் என்றான் அதிரதன்.

இப்ப ஆத்வி என்ன செய்றான்னு பாருடா? நிதின் கேட்க, நிது உனக்கு அவளை பிடிக்கும்ன்னு சொல்லிடலாம்ல்ல..அதிரதன் கேட்க, அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே? நிதின் சொல்ல..

அதான் குடிச்சிட்டு உளறுனியே? என்றாள் நேத்ரா.

வினு, நாங்க பேசிக்கிற விசயம் வெளிய வந்துச்சு. என்னை போட்டு தள்ளிடுவானுக..நிதின் சொல்ல,

நிது..உனக்கு உயிர் பயத்தை காட்டிட்டானுகளா?

டேய், அந்த பொண்ணை எங்கோ பார்த்தது போல் இல்லை வினு கேட்க, எந்த பொண்ணை சொல்ற? அதிரதன் கேட்டான்.

அதான் நம்ம நிதுவோட பொண்டாட்டி..என்று சிரித்தாள்.

ஏய், வினு..எனக்கு நேரம் வரும் அப்ப பாரு..உன்னை என்ன செய்கிறேன்னு? நிதின் மிரட்டுவது போல் சொல்ல, அச்சோ..நிதுவுக்கு மிரட்ட கூட தெரியல..சார், இவனை வச்சி கொலைகாரனை பிடிக்க போறீங்க? கேலியாக அவள் சொல்ல..

கொலைகாரன் விசயம் உனக்கு எப்படி தெரியும்? அதிரதன் கேட்டான்.

சார், நீங்க உங்க அப்பாவிடம் பேசும் போது நான் சமையலறையில் தான் இருந்தேன். நான் ஒட்டுக் கேக்கலை. தானா கேட்டுச்சு என்றவள் டிவியை பார்த்து கையிலிருந்த தம்ளரை கீழே விட்டாள்.

நம் காவியன் அதிரதன் விசயத்தை இணையதளத்தில் போட்டதை டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ஏய், என்னாச்சு? அதிரதன் எழுந்தான்.

நேத்ரா கண்ணீருடன் கையை காட்டினாள். அவனை நல்லவனாக பேசிக் கொண்டிருந்தனர்.

இதை யார் கண்டுபிடித்தது? அதிரதன் ஆச்சர்யமுடன் பார்த்து, நல்ல விசயம் தான என்று அதிரதன் சொல்லிக் கொண்டே நேத்ராவை பார்த்தான். அவள் கண்ணீருடன் உடல் வியர்க்க..பின்னிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

வினு..என்னாச்சு? என்று அவளிடம் வந்தான். அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

சார்..சார்..என்று தலையில் அவள் கையை வைத்து மயங்க, ஹே…வினு என்று அவளை பிடித்தான் அதிரதன்.

டேய், அவளுக்கு என்னாச்சு? நிதின் கேட்க, தெரியலடா..மயங்கிட்டா..என்று ஆத்விக்கு ஒன்றுமில்லையாம். அப்பா மேசேஜ் பண்ணி இருக்கார். நீ கவனமா இரு…இவளை நான் பார்த்துக்கிறேன் என்று அதிரதன் சொல்லி விட்டு அலைபேசியை வைத்தான்.

நீ வினுவ பார்த்துக்கிறியா? என்று அதிர்ந்து, ரதா உன் போக்கே சரியில்லை என மனதினுள் நினைத்த நிதினுக்கு ஆத்வியை பார்க்கணும் போல இருந்தது. ஆனால் அவனால் அந்த வீட்டிலிருந்து நகர கூட முடியலை. அவனுக்கு அவள் மீதான காதல் அதிகரித்தது. அவன் சிந்தனையுடனே திரிந்தான்.

நேத்ராவை தூக்கிய அதிரதன் அவளறைக்கு தூக்கி சென்றான். யுவன் அழுது கொண்டே அவன் பின் சென்றான். தண்ணீரை முகத்தில் தெளிக்க அவள் விழித்தாள். அவளுக்கு டிவியை பார்த்த நினைவு வர..சார், நான்..ஓய்வெடுக்கணும் என்று அழுதாள்.

அதுக்காக எதுக்கு அழுற? என்று அவள் கையை பிடித்தான். அவள் கைகள் குளிர்ந்து நடுங்கியது.

அவளது உள்ளங்கையை தன் கையால் தேய்த்து சூடேற்றிக் கொண்டே, நீ ஓய்வெடு என்று அவன் சொல்ல, அக்கா..அக்கா..என்று யுவன் அழுதான். அவள் கண்ணோரமாக அவனை பார்த்து, அழாத..நான் தூங்க தான் போறேன். ஒன்றுமில்லை என்று யுவனை பார்த்துக் கொண்டே கண்ணை மூடினாள்.

அவளது கையை தேய்த்து விட்டு அவளை பார்த்துக் கொண்டே மறுகையில் தேய்க்க நகர்ந்து சென்றான். யுவன் அவளருகிலே அமர்ந்திருந்தான். நேத்ரா ஆடை விலக, அவளது எலுமிச்சை நிற இடையை பார்த்த அதிரதன் கண்களை தாழ்த்த, அவன் கைகள் தானாக அவளருகே நெருங்க உடனே வெளியே சென்று தலையை அழுத்தமாக கோதினான்.

என்னையே பார்க்க வச்சுட்டாளே? வினு உன்னிடம் ஏதோ இருக்கு. எனக்கு உன்னை பிடிக்க ஆரம்பித்தது போல் இருக்கு. ஆனால் இது காதலா? ஈர்ப்பா? சிந்தித்தவனுக்கு நேத்ரா காவியனுக்கு கொடுத்த காதல் அறிவுரைகள் நினைவிற்கு வந்தது.

நானே பார்க்கிறேன். உன் மீது எனக்கு காதலா? இல்லை ஈர்ப்பா? சிந்தித்தவன் அறையினுள் எட்டி பார்த்தான். அவள் ஆடையை சரி செய்த யுவன் அவளருகே படுத்து, அவள் மீது கையை போட்டு சொக்க ஆரம்பித்தான். அப்படியே தூங்கிப் போனான். இருவரை பார்த்த அதிரதன் தானாக சிரித்தான். ஏனோ இருவரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. அவர்கள் அருகே அமர்ந்து இருவரும் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

Advertisement