Advertisement

              அழகின் அழகே..

அத்தியாயம் 1

ரீங்கரமாய் அலாரமொலிக்க பட்டென எழுந்து, எழுந்துருங்க சீக்கிரம் சீக்கிரம்  என்று ஒவ்வொரு அறை கதவையும் தட்டி குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பதினேழு வயதையொத்த மாயா.

“சிவநந்தினி அன்பு நிலையம்” பொறிக்கப்பட்ட அந்நிலையத்தில் சுமார் எண்பது குழந்தைகள் இருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் உள்ளனர். தற்பொழுது அந்நிலையத்தில் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைப்பதில்லை. அதனால் சிலர் தங்கள் படிப்பை நிறுத்தி மற்றவர்கள் படிக்க உதவுகிறார்கள். அதில் ஒருத்தி தான் மாயா.

தேனு, “இன்னும் கிளம்பலையா?” நேரமாகிறது. அக்கா வந்துடுவாங்க. சீக்கிரம் கிளம்பு.

மாயாக்கா, நிரா என்னோட ஆடையை மறைச்சு வைச்சிருக்கா. அவள் தான் முதலில் குளிப்பாளாம். என்னை முன் விட மாட்டேன் என்று ஒளிச்சு வச்சிட்டா. நான் அதை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.

மாயாவை ஒத்த வயதுடைய தன்வந்த், என்ன செய்றீங்க? நேரமாகிறது என்று தன்னுடைய கைக்கடிகாரத்தை கட்டி கொண்டே பள்ளிச்சீருடையில் அங்கே வந்தான். கடிகாரம் அவனுக்கு பரிசாக கிடைத்தது. மற்றபடி யாரும் இது போல் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள்.

அண்ணா என்று தேனு ஆரம்பிக்க, குளித்து பள்ளிச்சீருடையில் வந்த நிரா அவள் எழ நேரமாக்கிட்டாள்.

“யாருடி நேரமாக்கியது?” நீ தான் என்னுடைய ஆடையை களவு செய்துடாய். களவாணி களவாணி என்று தேனு கூற இருவரும் சண்டையை ஆரம்பித்தனர்.

நிறுத்துங்க மணியை பாருங்கள் எட்டாகப் போகிறது. அக்கா வந்துருவாங்க தேனு சீக்கிரம் குளித்து தயாராகி இறை வழிப்பாட்டிற்கு வந்து சேரு என்று  வெண்பா மற்றவர்களிடம் சீக்கிரம் அங்கே செல்லுங்கள் என்று  அவசரப்படுத்தி விட்டு, “அங்க யாருடா இருக்கீங்க?” என்று சத்தமிட்டவாறு சென்றாள்.

நிராவை தன்வந்த் அழைத்து, மாயா வேற யாரும் இருக்காங்களா? என்று பார்த்து விட்டு வா என்று முன் சென்றான்.

நிரா என் ஆடையை எடுத்து கொடுத்து விட்டு போ என்று தேனிலா கத்த, நீ குளிக்க போ. நான் எடுத்து தாரேன். நீ சீக்கிரம் வா என்று ஆடையை எடுத்து அவள் குளிக்கும் அறையில் போட்டு விட்டு மாயா சென்றாள்.

சிறுவர்களை தேவாவும், சிறுமிகளை மயூரியும் வழிபாட்டிற்காக நிற்க வைத்துக் கொண்டிருந்தனர். தன்வந்த், நிரா, மாயாவும் சேர்ந்து அவர்களுடன் நின்றனர். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் சத்தம். அப்படியொரு அமைதி.

வில்லென கூரான புருவங்கள், கருநிறவிழியாள், வளைந்து உருண்ட மூக்கு, கோவைபழ இதழால், மாம்பழகன்னத்தால் பிரம்மன் படைத்தை முதல் பேரழகியாய் அங்கே வந்தாள் கந்தர்வ மங்கையவள் வினு நேத்ரா. அந்நிலையத்தின் அனைத்து பொறுப்புகளும் அவள் கையில் தான். அவள் குணத்திலோ அளவிட முடியா சொக்கத்தங்கம். அன்பானவள், பண்பானவள், பொறுப்பானவள், அதீத புத்திசாலி பொண்ணும் கூட.

“குட் மார்னிங் அக்கா” என்று அனைவரும் தங்களது காலை வணக்கத்தை கூற, அவள் பின் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் செல்லம்மா பாட்டி, ஆனந்தி, மல்லிகா, ஜெயந்தி, தனசேகரன் வந்தனர்.

“குட் மார்னிங் குட்டீஸ்” வாங்க இறை அருள் பெறலாம் என்று அனைத்து பொருட்களையும் விநாயகர் முன் வைத்து பாட்டியை அழைத்து ஆராத்தி காட்ட கூறினாள்.

நேத்தும்மா, நீ தானே அனைத்தையும் தயார் செய்தாய். நீயே ஆராத்தி காட்டும்மா.

இல்லம்மா. நீங்க பெரியவங்க. நீங்க செய்யுங்க.

என்னால் செய்ய முடியாதும்மா. நான் கணவனை இழந்தவள். நீ செய்மா.

அம்மா, நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன்.

நீ வேற, நான் வேற..அவர்கள் பேசிக் கொண்டிருக்க, யாராவது ஆராத்தி காட்டுங்க. எனக்கு வகுப்பிற்கு நேரமாகிறது. ஸ்பெசல் கிளாஸ் இருக்கு அக்கா தன்வந்த் கூற, ஆராத்தி தட்டை எடுத்து பாட்டி கையில் திணித்து விட்டு நகர்ந்து நின்றாள் வினு நேத்ரா.

அவளை பெருமையோடு பார்த்த பாட்டி ஆராத்தி காட்ட, சிறுவ சிறுமியர் இறைபாடல் பாடி வழிபாட்டை முடித்து விட்டு, சாப்பிட அமர்ந்தனர். அவர்களில் சிலருக்கு நேத்ரா தான் ஊட்டி விடுவாள். அவள் வேலையாக இருந்தால் மாயா அல்லது வெண்பா ஊட்டுவார்கள்.

அக்கா, தன்னு அண்ணா மட்டும் கடிகாரம் போட்டிருக்கிறார். எங்களுக்கு கிடையாதா? சிறுவன் ஒருவன் கேட்க, அவனை பார்த்து விட்டு

கண்ணா, அண்ணா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு அடிக்கடி பரீட்சை வைப்பார்கள். நேரம் குறித்து அதற்கேற்றவாறு எழுத கடிகாரம் தேவைப்படுமல்லவா? அதனால் தான் வாங்கி இருக்கான்.

அக்கா, ஜீவா அண்ணாவும் பன்னிரண்டாம் வகுப்பு தானே அவங்க மட்டும் போட மாட்டிக்கிறாங்க ஒரு சிறுமி கேட்க,

அட என் அறிவுகுட்டி, புத்திசாலி நிவி. ஜீவா அண்ணாவுக்கு இது போல் பொருட்களெல்லாம் பிடிக்காது. நீயே கேளு நேத்ரா கூற,

அவனும் ஆமாம் நிவி. நேரத்தை கணித்து பரீட்சை எழுதுவதை விட எதையும் பயன்படுத்தாமல் மூளையை மட்டும் பயன்படுத்து எழுதுபவன் தான் அதீபுத்திசாலி அவன் கூறி விட்டு தன்வந்த்தை பார்த்தான். அவன் ஜீவாவை முறைத்து விட்டு, அக்கா நான் போயிட்டு வாரேன்.

ஏ..கிழவி வெட்டி கதை பேசமாக எல்லாருக்கும் உதவி செய் என்று பாட்டியை வாரி விட்டு மற்றவர்களிடமும் கூறி விட்டு அவன் கிளம்ப, ஜீவாவும் அவன் நண்பர்களும் அவன் பின் சென்றனர்.

நான் பசங்கள பள்ளியில் விட்டு வருகிறேன். நீங்க வேலைய பாருங்க. மாயா யுவனுக்கு மருந்து கொடு. நேரமாயிற்று என்று சின்ன பசங்களை வரிசையாக நிற்க வைத்து நேத்ரா பள்ளிக்கு சென்றாள்.

அகன்ற நெற்றி, தீர்க்கமான பார்வை, துல்லியத்தன்மையுடனான காது, எளிய மணத்தையும் நுகரும் நாசி, தடித்த அதிரம், உருண்டு திரண்ட புஜத்தினாலான மேனி, பார்க்கும் கண்களை அகல விடாத கவர்ச்சி முகம். ஆனால் கடினமான மனம். குடும்பத்திலும் வெளியிலும் பார்வையாலே அடக்கும் தந்திரன். உலகின் நம்பர் ஒன் தொழிலதிபன். நம் பிசினஸ் மேக்னட் அதிரதன். அப்பாவின் பேச்சை மட்டும் தட்டாத பிள்ளை. அனைத்து தொழிலிலும் முன்னோடியாக திகல்பவர் இளஞ்செழியன். அப்பாவிற்கு நிகர் பிள்ளை என்று அனைவரும் போற்றும் வண்ணம் செயல்படுபவன்.

ஆனால் இன்று அவன் நிலை முற்றும் மாறப்போவதை அறியாமல் அவனது கம்பெனிக்கு சென்றான். செழியன் எண்டர்பிரைசஸ், செழியன் எஸ்டேட் இருக்க, ரதனின் அம்மா சிவநந்தினி பெயரிலோ நம் நாயகி பொறுப்பில் உள்ள நிலையம் மட்டுமே. ஆனால் ரதன் இண்டஸ்ட்டீரீஸ், ரதன் எண்டர்பிரைசஸ், ரதன் இன்ஸ்ட்டியூசன் என்று பள்ளி கல்லூரியும் வைத்து நடத்துகிறான் நம் நாயகன்.

கம்பெனிக்குள் நுழைந்த அவனை அலைபேசி அழைத்து ஏதோ கூற டேமிட்..என்று விட்டு விலாசினான் அலைபேசியை. அனைவரும் நடுங்கியபடி அவனை பார்த்தனர்.

வேகமாக அவன் அறைக்குள் வந்த நம் அதிரதனின் செக்கரட்டரியும் தோழனுமான நிதின், இதை பாருங்க சார் என்று அவனது அலைபேசியை காட்டினான்.

என்ன இது? இதுக்கு வாய்ப்பேயில்லை என்று கத்தினான் ரதன்.

இதை பார்த்த நம்முடைய இன்வெஸ்டர்ஸ், ஸேர் கோல்டர்ஸ் நம் கம்பெனியை விட்டு ஒவ்வொருவராக செல்கிறார்கள்.

எங்கே அவள்? தீக்சித்தா என்று கத்தினான் ரதன்.

தீக்சித்தா நம் ரதனுக்கு பார்த்த பொண்ணு. அவளே ரதனை பற்றி தவறாக பேசி வீடியோவை அனுப்பி இருக்கிறாள். அதுவும் ரதன் வேரொரு பெண்ணுடன் அறையில் தனியே உறவாடுவது போல் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல..நிறைய அனுப்பி இருக்கிறாள்.

நம் ரதனுக்கு பொண்ணுங்க சவகாசமே கிடையாது. ரதன் அப்பாவின் தோழனான தயாளனின் பொண்ணு தான் தீக்சித்தா. அவளுக்கு தான் ரதனை பிடித்து அவள் அப்பா மூலம் திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சார், அவங்கள பிடிக்கவே முடியல. ஆனால் அவங்க இதை செய்ய என்ன காரணமாக இருக்கும்? யாராவது அவளை மிரட்டி இருப்பார்களோ?

அதெல்லாம் இருக்காது. அவள் தான் எல்லாரையும் மிரட்டுவாள் என்று சீற்றத்துடன் யாரையோ வைத்து அவள் என் ஸேரை கீழிறக்கி கம்பெனியை அழிக்க நினைக்கிறாள்.

சார், அவங்க உங்கள காதலிக்கிறாங்க. அவங்க இதெல்லாம் செய்ய மாட்டாங்க.

முழுதாக அப்படி சொல்ல முடியாது. பணம் பாதாளம் வரை செல்லும். அதுவும் இந்த பொண்ணுங்க பணத்துக்காக எதையும் செய்வாங்க.

போதும். நீ அம்மாவை இழுக்காதேடா என்று நிதின் நண்பனாக மாறி சத்தமிட்டான்.

அப்படின்னா எதுக்கு பணத்தை வாங்கிட்டு போகணும்? உன் அம்மாவிடம் கேட்டு சொல் ரதனும் கத்தினான்.

அது உன்னோட சின்ன வயதில் நடந்தது. ஆனால் அதை வைத்துக் கொண்டு இப்பொழுது வரை அம்மாவை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறாய்? அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்.

அப்படி என்ன சொல்ல முடியாத காரணம்? என்று சீறினான்.

அதற்கு மேல் அதிரதனை சமாளிக்க முடியாமல் போதும். நம் அம்மா விசயத்தை விடு. இப்பொழுதுள்ள நிலையை எப்படி சமாளிப்பது?

முதல்ல வெளிய விசயம் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சேனல் வரை வெளியாகிவிட்டது. வேறேதாவது யோசி என்று நிதின் கூற, வேறேன்ன மீட்டிங் அரேஞ்ச் பண்ணு. பார்த்து விடலாம் என்றான் உறுதியாக ரதன்.

அதற்குள் மீடியா ஆட்கள் கம்பெனிக்குள் நுழைய யாராலும் சமாளிக்க முடியவில்லை. அதிரதனின் அதிரடியான நடை சத்தம் கேட்டு அவனுடைய கம்பெனி ஆட்களே அவனை பற்றி தவறாக புறம் பேச தொடங்கினார்கள். அவன் நேராக பத்திரிக்கையாளர்களிடம் சென்று, அது நான் இல்லை. போட்டோஷாப் செய்திருக்கிறார்கள் என்றான் தாளாத சினத்துடன்.

சார், இதை பாருங்கள் என்று ஒருவன் எல்லா வீடியோவையும் காண்பித்தான். கிளப், ஹோட்டல், அடுக்குமாடி கட்டிடம் அனைத்திலும் அதிரதன் உள்ளே செல்வதை போலவும், அதில் உள்ள ஒரு அறையில் அவன் உல்லாசமாக இருப்பதை போன்றும் காட்சிகள் இருந்தன.

நான் இந்த இடத்திற்கு செல்ல கூட இல்லை என்று அவன் கூறிக் கொண்டிருக்க, அவனுடன் அறையில் இருந்த அந்த பொண்ணு அங்கே வந்தாள்.

ஹாய் டியர் என்று அதிரதன் மீது அஷ்வினி கை போட, அனைவரும் மேலும் பேசினார்கள்.

அவன் கோபமாக அவளை தள்ளி விட்டு, நீ யார்? டியரா? இதற்கு முன் நான் உன்னை பார்த்ததேயில்லை. என்ன செய்கிறாய்? என்று கர்ஜித்தான்.

ஓ..என்று மீடியா முன் அழுது நாடகமாட ஆரம்பித்தாள் அஷ்வினி. நேற்று தான் நாம் ஒன்றாக இருந்தோம். நீங்க தீக்சித்தாவை கூட விட்டு விடுவேன் என்று எனக்கு சத்தியம் கூட செய்தீர்களே? மீண்டும் ஓவென்று அழுது கொண்டு அவளுக்கு போன் செய்து கூட பேசினீர்கள். என்னை தான் திருமணம் செய்யப் போவதாக கூறினீர்கள். அதனால் தான் அவள் இந்த இடத்தை அறிந்து கொண்டு நம்மை தேடி கண்டுபிடித்து வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறாள்.

ஆனால் நீங்கள் என்னையும் ஏமாற்றி இருக்கிறீர்கள்? எத்தனை பெண்கள்? என் காதல் உண்மை. நீங்க அவங்க எல்லாரையும் விடுகிறேன்னு சொன்னா நான் உங்களை ஏற்றுக் கொள்வேன் .

அவளை புழுவாய் பார்த்த ரதன், நீ என்ன என்னை ஏற்றுக் கொள்வது? எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் அடித்துக் கூறுவேன்.

மீண்டும் அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, எரிச்சலுடன் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கத்தினான். அவள் மேலும் புலம்பிக் கொண்டே அழ, ஆத்திரமடைந்த அதிரதன் அவளை அடித்து விட்டான். மேலும் அவளுக்கு நடிக்க கற்றா கொடுக்கணும். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள்.

அதிரதனது செய்தி நாடு முழுவதும் பரவ அவனது சாம்ராஜ்ஜியம் சரிந்தது.

உலகின் மிகப் பெரிய பிசினஸ் மேக்னட் பெண்களுடன் மறைமுகமான பழக்கமா? வெளியுலகில் நல்லவர் போல் நடித்து அனைவரையும் ஏமாற்றி இருக்கிறாரா? இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்? பலப்பல கேள்விகள் ஆர்ப்பரித்துக் கொட்ட, மீடியாவிற்கு விருந்தானான் அதிரதன். நிதினாலும் அப்பிரச்சனையை போக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அதிரதனோ, என் மீது தவறில்லை என்று உறுதியாக இருந்தான். ஆனால் அவன் வீட்டில் உள்ளவர்கள் அவனை ஏளனமாக பேசினார்கள்.

அவன் வீட்டிற்கு வந்ததும், என்னடா அதி? எத்தனை பொண்ணுங்க? என்று கேலியுடன் நகைத்தார் நிர்மலா என்ற நிம்மி சித்தி.

அவன் முன் அமைதியாக இருந்த அனைவரும் தெனாவட்டாக அவன் முன் வந்து கை நீட்டி பேசினார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், நான் தான் என்று ஆதாரம் இருக்கலாம். அது நான் இல்லை. ஒரு நாள் இல்லை ஒரு நாள் தெரிய வரும். அப்பொழுது உங்கள பார்த்துக்கிறேன் சித்தி என்று கத்தினான்.

சிவநந்தினி முன் வந்து, என் பிள்ளை அப்படி செய்யலாம் மாட்டான். நான் அவனை எப்போதும் நம்புவேன் என்றார். அவனது அம்மாவை பார்த்து விட்டு, அவன் அத்தை யசோதாவை பார்த்தான்.

அவன் அம்மா யாருக்கோ பணம் கொடுத்ததை பார்த்தான் அதிரதன். அது தவறான ஆளுக்கு கொடுத்திருக்காங்க. அம்மா ஏதோ தவறு செய்கிறார்கள் என்று சிறு வயதிலிருந்தே நம்ப ஆரம்பித்ததால் அவருடன் பேச மாட்டான். அவனுக்கு எல்லாமே யசோதா தான். ஆனால் இன்று அவரோ, ஏன்டா இப்படி செய்தாய்? என்று அதியை அடித்து விட்டார்.

அங்கு வந்த இளஞ்செழியன், என் மானத்தை வாங்கி விட்டாயே? இதுவரை நம் மீது மற்றவர்கள் வைத்திருந்த மரியாதை அனைத்தையும் கெடுத்து விட்டாயே? நல்லவன் போல் நன்றாகவே நடித்திருக்கிறாய்? நான் தீக்சுவை பார்த்து விட்டு தான் வருகிறேன். நீ செய்த காரியத்தால் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். பாவம் அந்த பொண்ணு. நல்ல வேலையாக திருமணத்திற்கு முன்பே உன்னை பற்றி தெரிந்து விட்டது? இனி என் மூஞ்சிலையே முழிக்காதே என்று சினத்துடன் கத்தினார்.

என்னால் என்னுடைய அனைத்து சொத்துக்களையும் காப்பாற்ற முடியும். காப்பாற்றி தருகிறேன். நீ தீக்சுவை திருமணம் செய்து ஒழுங்காக குடும்பத்தை நடத்து. யார் பின்னும் செல்லாமல் இரு இல்லை.. என்று நிறுத்தி அவனை பார்த்தார்.

ரதன் கையை கட்டிக் கொண்டு, நீங்களும் என்னை நம்பவில்லையா அப்பா? அப்பா உண்மையாகவே எனக்கு அந்த பொண்ணை யாரென்றே தெரியாது. நான் அம்மாவை பற்றி அன்று கூறியதையும் நம்பவில்லை. இன்றும் நம்பவில்லை. யார் என்ன சொன்னாலும் நீங்களும் அத்தையும் நம்பி இருக்கக் கூடாதுப்பா. என்னோட அம்மாவை விட உங்களுடன் தான் அதிகம் இருந்திருக்கிறேன் அத்தை. உங்கள் வளர்ப்பு தப்பாகாது. நீங்களும் என்னை நம்பவில்லை. ஏன்?ஏன்?ஏன்?..என்று கதறி அழுதான்.

நிஜமாகவே நீ ஏதும் செய்யவில்லையா? கேட்டார் அப்பா. அவன் ஏதும் பேசாமல் அறைக்கு சென்றான். வீடே அமைதியாக இருந்தது. சற்று நேரத்தில் கீழே வந்தான். இனி நான் இங்கிருக்க போறதில்லை. உங்கள் யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லையே?

நான் நம்புகிறேன். போகாதே பப்பூ என்றார் அவனது தாய். அவரை ஏளனமாக பார்த்து விட்டு வெளியேற, யசோதா ஓடி வந்து, போகாதே கண்ணா.. போகாதே என்று கெஞ்சினார். இனி உங்கள் யாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவன் முன் செல்ல,

“கண்ணா” என்று அவனது பாட்டி வேகமாக அவனை தடுத்தார். நீங்க என்ன பேச போறீங்க பாட்டி?

என் பெயரன் ஏதும் செய்யமாட்டான். அவனை அசைக்க யாராலும் முடியாது. அந்த பொண்ணை பார்த்தாலே தப்பா தான் தெரியுது?

பாட்டி, நீங்க என்ன சொன்னாலும் நான் இங்கே இருக்க போவதில்லை. என் மனதை அனைவரும் உடைத்து விட்டார்கள். என்னை பற்றிய உண்மை வெளியே வரும் போது தான் உங்களுக்கு என்னருமை புரியும் என்றான்.

அண்ணா என்று அவன் தங்கைகள் ஆத்விகாவும் பிரணவியும் அவன் முன் வந்தனர். ஜாக்கிரதையா இருங்க. எல்லாரையும் பார்த்துக் கொள்ளுங்கள். நான் செல்கிறேன்.

“வருகிறேன்” என்று சொல்லு அம்மா கூற, இனி தான் நான் வரப் போறதேயில்லையே? என்று அப்பாவையும் அவன் அத்தையையும் பார்த்தான்.

யசோதாவும், சிவநந்தினியும் முகத்தை மூடி அழுதனர். அவன் அப்பாவோ மகனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். தங்கைகளோ, அண்ணா எங்களை விட்டு செல்லாதே என்று அழுதனர். அவனுடைய சித்தப்பா ராம விஷ்ணுவோ, தம்பி அவசரப்படாதீங்க நில்லுங்க என்றார். ஆனால் அவரின் மனைவி நிம்மி மனநிறைவுடன் தன் மகனுக்கு அனைத்தும் சொந்தமாக போகிறது என்று திளைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவனோ அவர் பேச்சை கேட்காமல் ஊர் சுற்றினான். அதிரதன் மிகவும் மனமுடைந்து வெளியேறினான். பாட்டி அங்கேயே மயங்கினார்.

மாலை நேரத்தில் பசங்க விளையாண்டு கொண்டிருந்தனர். மற்றவர்கள் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். மல்லிகா அக்கா அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார். நேத்ராவும் கையில் புத்தகத்தை புரட்டியவாறு காபியை வாங்கி பருகிக் கொண்டிருந்தாள். அனைவரும் அவளுடன் இணைந்து கொண்டனர்.

அக்கா, இன்று வகுப்பில் முத்து சிற்பி பற்றி ஆசிரியர் கூறினார். சிற்பி கடலில் ஆழத்தில் தான் இருக்குமாம். நீங்க பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்ததில்லை. ஆனால் அதை பற்றி தெரியும் என்று அதை பற்றி கூறிக் கொண்டிருந்தாள். அக்கா, நாங்கள் வந்து விட்டோம் என்று வந்தனர் காவியன், மிதுன், சுபிர்தன், கிருஷ்ணன், அருள்.

இரண்டு வருடங்களாக தான் நேத்ரா இங்கே இருக்கிறாள். போன வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து சென்ற மாணவர்கள் தான் அவர்கள். அதில் இருவர் படிப்பில் முதல் மற்றும் இரண்டாவதாக வந்து உதவித்தொகை மூலமாக காவியன் சட்டக்கல்லூரியிலும் மிதுன் இன்ஞ்சினியரிங்கும் படிக்கின்றனர். பொதுவாக பள்ளி விட்டு வெளியே சென்று விட்டால் அதிரதன் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் கிடைத்திருக்காது.

ஆனால் நேத்ரா அவளுக்கும் மேலை உள்ள விஷ்வாவின் உதவியால் அதிரதன் அம்மாவை சந்தித்து உதவி கேட்டு, அவர்கள் இருவருக்கு மட்டும் படிக்க வழிவகை செய்தாள். அதனால் தான் அவர்கள் பணக்காரர்கள் படிக்கும் கல்லூரியில் படிக்கிறார்கள்.

மற்றவர்கள் சுபிர்தன், கிருஷ்ணன், அருள் படிப்பிற்கான செலவை விடுமுறையில் வேலை செய்து சேர்த்து வைத்து, அந்த பணத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாருமே வேகமா வந்த மாதிரி இருக்கே? உங்கள என்னடா சொல்லி இருக்கேன்? சனி, ஞாயிறன்று மட்டும் வாங்கன்னு சொன்னேனா? இல்லையா? படிக்க எதுவுமே இல்லையா? நேத்ரா கேட்க,

இருக்குக்கா. உங்கள பார்க்கணுன்னு தோணுச்சு. அதான் வந்தோம் என்றான் கிருஷ்ணன்.

இந்தாங்கக்கா என்று நேத்ரா கையை பிடித்து இழுத்து அவள் கையில் பணத்தை வைத்தான் காவியன். மற்றவர்களும் அவளிடம் பணத்தை அவள் கையில் வைத்தனர்.

என்னடா இது?

யுவன் செலவுக்காக என்று அருள் சொல்ல, உங்க செலவுக்காக வச்சுக்கோங்க என்றாள்.

அக்கா, எங்களுக்கு தெரியாதா? பணத்தை சேமித்து அவனுக்கு முதல்ல சிகிச்சையை கவனிக்கணும். இல்ல அவன் உயிருக்கே ஆபத்தாகி விடும்ன்னு டாக்டர் தான் சொன்னார்ல.

ஆமா, அதுக்காக நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்குறீங்க?

இதெல்லாம் பத்தாதுக்கா. பெருசா ஏதாவது செய்யணும்.

நீங்க படிக்கிற வேலைய பாருங்க. படிப்பு ரொம்ப முக்கியம். யுவனுக்கு நான் பார்த்துக்கிறேன் என்று காவியன், மிதுனிடம்..கம்மிங் சன்டே ஓர் இடத்துக்கு போகணும். கூட வர்றீங்களாடா? கேட்டாள்.

எங்கம்மா முக்கியமான விசயமா? செல்லம்மா பாட்டி கேட்க, ஆமா பாட்டி, ஆன்லைன் ஜாப் பண்ணலாம்ன்னு நினைக்கிறேன். அந்த விசயமா தான் பாட்டி என்றாள்.

நானும் வரலாமா? ஓர் குரல் கேட்க அவர்கள் திரும்பி பார்த்தனர். விஷ்வா  நேத்ராவிற்கு மேலான இடத்தில் இருப்பவன். நம் வினு நேத்ராவின் கல்லூரி நண்பன். ஆனால் அவனுக்கு அப்பொழுதிலிருந்தே அவள் மீது காதல். ஆனால் அவளுக்கு அவனால் இந்த பொறுப்பு கிடைக்கவில்லை.

அவளது போதாத நேரத்தில் செல்லம்மா பாட்டியின் அக்கா தான் அவளை அழைத்து வந்தார். மனதில் வலியை சுமந்து வந்த நேத்ராவின் வாழ்க்கையில் நிதானம் வர இங்கிருந்த குட்டிப் பசங்க தான் காரணம். பாட்டியின் அக்கா உடல்நலமில்லாமல் ஊருக்கு சென்றவர் இறந்த செய்தி தான் எட்டியது. அதனால் அந்த இந்நிலையத்தின் பொறுப்பை பாட்டியை பார்க்க சொன்னார்கள். அவராலும் எங்கும் அலைந்து திரிய முடியாது என்று அவர் கூற, வேற படித்த ஆட்களை பாருங்கள் என்றார்.

விஷ்வா பாட்டியை பார்க்க வந்தான், வினு நேத்ராவை பார்த்து,

வினு, “இங்க என்ன பண்ற?” என்று கேட்க, இருவரும் தனியே சென்று பேசி வந்தனர். பின் தான் அவளே இங்கிருப்பதாக ஒத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்திருப்பாள். இப்படி தான் நிலையத்தின் பொறுப்பு வினு கையில் வந்திருக்கும்.

இப்ப விஷ்வாவும் வாரேன் சொல்ல, அவள் மறுக்க தயங்கி தலையை மட்டும் அசைத்தாள்.

அக்கா, நாளைக்கு காவியனோட காலேஜ்ல ப்ரெஷர்ஸ் பார்ட்டி இருக்கு என்ற அருள், ஆமா காவியா “நீ என்ன செய்யப் போற?” கேட்டான்.

என்ன செய்றது? நாம படிக்க தான போறோம். இதெல்லாம் முடியாது.

படிப்பு முக்கியம் தான். அதுக்காது எஞ்சாய் பண்ணக்கூடாதா விஷ்வா கேட்க, காவியன் நேத்ராவை பார்த்தான்.

உன்னை ஏதாவது செய்ய சொன்னால் தயங்காம உடனே செய்யணும் என்றாள் நேத்ரா. அவன் புன்னகைத்து விட்டு, அக்கா நாங்க கிளம்புகிறோம். நேரமாகுது என்று அவன் சொல்ல,

உங்க அக்கா சொன்னா தான் கேட்பீங்களோ? அவளுக்கு முன்னிருந்தே என்னை உங்களுக்கு தெரியும்ல.

தெரியும் சார். அக்கா தான் உரிமையா பழகுறாங்க என்று பாட்டி, நேத்ரா மற்றவர்களிடம் கூறி விட்டு ஐவரும் கிளம்பினர்.

சட்டக்கல்லூரிக்குள் முதல் நாள் செல்லும் போது ராகிங் நடந்திருக்கும். சட்டம் படித்துக் கொண்டு இப்படி செய்யாதீங்க என்று காவியன் அவனுடைய சீனியரிடம் சொல்ல,

இப்ப வந்துட்டு என்னடா சட்டம் பேசுற? என்று ஒருவன் அடிக்க, காவியன் அசையாது நின்றான். மற்றவர்களை அவனை தள்ளி விட்டு மிதிக்க, காரிலிருந்து இறங்கினாள் பிரணவி.

கண்ணில் கூலருடன் பேண்டு சர்ட்டுடன் வாகான உடலும் அழகின் உருமாயிருந்தாள். அனைவரும் அவளை ஆவென பார்க்க, நேராக அவர்களிடம் வந்து, “ஹாய்..சீனியர்ஸ் ராகிங்கா?”

காவியனை அடிப்பதை விட்டு அட, பட்சி நம்மிடம் தானாவே வருதுடா ஒருவன் சொல்ல, காவியனை பார்த்த பிரணவி கையை நீட்டினாள். அவன் அவள் கையை பிடிக்காமல் தானாக எழுந்து நின்றான்.

எவ்வளவு நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளாமல் சரியான நாட்டுப்புறம் போல என்றான் ஒருவன் காவினை. அவன் கையை முறுக்க,

பாருடா இவனுக்கு கோபம் வருதாம் ஒருவன் சொல்ல, அவனை விடுடா. இந்த அழகுபட்சியை பார்ப்போம் என்று பிரணவி பக்கம் திரும்பி, அவள் கையை ஒருவன் பிடித்தான்.

கையை எடு என்று அவள் அவனை முறைத்தாள்.

“எடுக்கலைன்னா என்ன செய்வ?” அவன் கேட்க, அவன் கையை திருப்பி முதுகில் ஓங்கி ஓர் அடியை போட்டு, தம்பி என்னோட அண்ணாவே எங்களை தொட மாட்டான். அவனுக்கு மட்டும் தெரிஞ்சது. நீ செத்தடா மவனே என்று மிரட்டினாள்.

உங்க அண்ணன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

ஆமாடா, ”பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அதிரதன்” என்னோட அண்ணன் என்றாள் திமிறாக. அவள் பேச்சை கேட்டு அவளை அதிர்ந்து பார்த்தான் காவியன்.

மற்ற எல்லாரும் சிரித்தனர். டேய், அவ சொன்னதை பார்த்தியா பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தின் அரசனாம் அவன். அதுக்கு பதில் “கலவி மன்னன்னு” சொல்லு என்று ஒருவன் சொல்ல,

டேய், என்னோட அண்ணா எதுவுமே செய்யலை. செய்யவும் மாட்டான். யாரோ அவனை எப்படியோ சிக்க வச்சிருக்காங்க. நானே நிரூபிக்கிறேன் பாருங்கடா என்றாள்.

அதை நிரூபிக்கிறது இருக்கட்டும். நீங்கள் எங்களுடன் கலவியில் ஈடுபட தயாராக உள்ளீர்களா? அசிங்கமாக பேச, கொதித்தாள் பிரணவி. அவள் அவனை அடிக்க, அவளை அவர்கள் சுற்றி நின்றனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவியன் உள்ளே நுழைந்து பிரணவி கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக கல்லூரிக்குள் ஓடினான்.

டேய் விடுடா, அவனுகள ஒரு வழி பண்ணிட்டு வந்துடுறேன் என்று காவியனை திட்டிக் கொண்டே வந்தாள். அவர்களும் பின் விரட்ட, இருடா வாரேன் என்று நின்றாள். அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்தனர்.

இப்ப நின்ன எல்லார் முன்னாடியும் நீ அழுற மாதிரி ஆகிடும். வாயை மூடிட்டு வா என்று மேலும் இழுத்து ஓடினான். சிறிய சந்து போன்றுள்ள இடத்தில் அவளை உள்ளே தள்ளி அவனும் உள்ளே சென்று அவள் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தான். அவள் அவன் கையை தட்டி விட்டு வெளியே செல்ல முனைய, அவளை இழுத்து நீ என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. உன்னோட அண்ணன் பேர் முழுசா கெட்டுப் போச்சு. அதை சரி செய்தால் தான் நிலைமை சரியாகும் என்றான்.

அவள் கண்ணீருடன் நிற்க, அவர்கள் அவளை பார்த்து விட, இதுக்கு தான் போகாதன்னு சொன்னேன் என்று வெளியே வந்து அவளை இழுத்து ஓடினான்.

நேராக பிரபசர்ஸ் இருக்கும் அறைக்கு வந்து நின்றான் காவியன் பிரணவியுடன்.

என்னப்பா? லவ்வா? யாரும் விரட்டுறாங்களா? ஒருவர் கேட்க, காவியன் அவளிடமிருந்து கையை எடுத்து விட்டு, இல்ல சார் என்று விசயத்தை சொன்னான். அவங்க பேமிலியால தான் காவியன் மாதிரி யாருமில்லாத பசங்க உயிரோட இருக்காங்க. அதற்காக அதை செய்தான். ஆனால் பிரணவி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சீனியர்ஸ் கிட்ட பேசுங்க சார் என்று திரும்பவும் வாயை கொடுக்காமல் இரு என்று சென்று விட்டான்.

சீனியர் வராமலிருக்க, அவளை அங்கேயே அமர வைத்து அவர்கள் வேலையை கவனித்தனர். “நானா அமைதியா இருக்கேன்?” என்று வாயடைத்து அவளே அவளுடன் பேசினாள்.

யாரவன்? திடீர்ன்னு கூட்டிட்டு ஓட ஆரம்பிச்சுட்டான். இதில் அறிவுரை வேற, அப்பா செய்தாலே கவனிக்க மாட்டேன். இது என்னடா? இப்ப கூட அவன் பேசியது கேட்டுக்கிட்டே இருக்கு புலம்பிக் கொண்டிருக்க, அவளிடம் பேசி விட்டு அவள் வகுப்பறைக்கு ஒரு பிரபசரே அழைத்து சென்றார். காவியனும் அதே வகுப்பில் தான் அமர்ந்திருந்தான்.

அவனை பார்த்து அவள் அப்படியே நிற்க, அந்த பிரபசரும் அவனை பார்த்து, நீயே இந்த பொண்ணை கூட்டிட்டு வந்துருக்கலாம்லப்பா. பாரு நான் மறுபடியும் படியேறனும் என்றார்.

எழுந்த காவியன், சாரி சார், இந்த பொண்ணு என்னோட வகுப்புன்னு தெரியாது என்று அவரிடம் வந்து அந்த சீனியர்ஸ் சார்?

யாருமே வரலப்பா என்று அவர் சொல்ல, அவன் அவர்கள் அடையாளத்தை அச்சுபிசகாமல் சொல்ல..நல்லா கவனிச்சு இருக்க போல. அவனுக என்னோட வகுப்பு பசங்க தான். எச்சரிக்கை செய்றேன்.

இனிமே உன்னை தொந்தரவு செய்தால் சொல்லும்மா என்றார்.

ஓ.கே சார் என்று அவனை பார்த்தாள். “தேங்க்ஸ் சார்” என்று அவரிடம் சொல்லி விட்டு அவனிடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவள் வகுப்பை பார்க்க, ஏய் ரணா..இங்க..இங்க..பாரு என்று அவளுடைய ப்ரெண்ட்ஸ் சத்தமிட, அவள் சென்று அமர்ந்தான்.

“யாருடி அவன்?” கேட்க, தெரியலடி. ஆனால் எனக்கு உதவினான். அட்வைஸ் பண்றான்டி என்று பிரம்மை பிடித்ததை போல் சொல்ல,

என்னாச்சுடி? என்ற ராகவ், ரணா அந்த பையன் வலையில் சிக்கிட்டா.

அடச்சே, சும்மா இரு என்று கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள்.

அப்பாடி அவனால தான் தப்பிச்சேன்.

காலேஜ் ஃபுல்லா கை பிடிச்சு சுத்தி இருக்கான். பார்த்துடி ஏமாந்துறாத. பார்க்க வசதி இல்லாதவன் போல தெரியுது என்றாள் ஆரா.

இப்ப செம்ம ஜாலியா எஞ்சாய் பண்ணனும். லவ்வுன்னு சுத்தி நேரத்தை வீணாக்க முடியாதுப்பா என்றாள் ரணா.

காவியன் அருகே இருந்தவன் “ஐ அம் சங்கீதன்” என்று அவனிடம் கையை நீட்ட, யோசித்த காவியன்..”ஐ அம் காவியன்” என்று கையை கொடுத்து இருவரும் நண்பர்களானார்கள்.

ஏய் ரணா, அவனோட நேம் க்யூட்டா இருக்கு. காவியனாம் என்றாள் லட்சணா.

காவியன் டாட் என்றாள் ரணா.

அது என்ன டாட்? நித்திர கண்ணன் கேட்க, சொல்ல தோணுச்சு சொன்னேன்.

ஏய் ரணா, நீ சரியில்லை.

ஆமா நீ வேற, அண்ணா வேற வீட்டை விட்டு போயிட்டான் என்று அவள் சோகமாக சொல்ல,

என்ன? அண்ணா வீட்டை விட்டு போயிட்டாங்களா? ராகவ் கத்தினான். அனைவரும் அவர்களை பார்க்க காவியனும் திரும்பி அவர்களை பார்த்தான். ரணா அவன் தலையில் அடித்து, வாய மூடு என்றாள்.

சாரி ப்ரெண்ட்ஸ் என்று ஆரா சொல்ல, அவரவர் வேலையை அனைவரும் கவனித்தனர். காவியன் அவளை பார்க்க, அவளும் காவியனை பார்த்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement