Advertisement

அத்தியாயம் 35

நிதின் அருகே நெருங்கி தயாரா இருக்கேல்லடா. நம்ம வீட்டுக்குள்ள ஆட்கள் இருக்காங்கடா என்று அதிரதன் சொல்ல, நான் தயார்டா என்று சொல்லும் போது ஒருவன் நீளமான கத்தியுடன் வந்தான். பின் அவர்களை பலர் சூழ்ந்து இருக்க, அதிரதன் ஒரு பக்கமாகவே சண்டையிட்டான். அவனால் சமாளிக்க முடியல.

ரதா, நீ விலகி இருடா. நான் பார்த்துக்கிறேன் என்று நிதின் சொல்ல, அதிரதன் கேட்கவேயில்லை. அவன் என்ன தான் முன் போல் கடுமையாக இல்லை என்றாலும் அவன் கால்வாசி தான் மாறி இருக்கான். அவனது குணம் கோபத்தில் தலை தூக்க தான் செய்தது.

ரதா, நிதின் கோபனுடன் சண்டை செய்ய, மேலும் அதிரதன் கையில் அடிப்பட்டது. ரதா..அவன் சத்தமிட, சட்டென கதவை திறந்து பின் அக்கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அவர்கள் உதவிக்காக சுபிர்தன் வெளியே வந்தான்.

அதீபனுக்கு அவன் அம்மா குடும்பத்திற்கு ஏற்பட்டது போல் ஏதும் ஆகக்கூடாது. இதற்கு மேல் யாரையும் இழக்கக்கூடாது என்ற எண்ணம். அவனும் சிவநந்தினி அறையை பூட்டி விட்டு வந்தான்.

சுபிர்தன் நேராக அதிரதனை தாக்க வருவர்களுக்கு நேரே வர, சுபி, அதி எதுக்குடா வந்தீங்க? என்று பல்லை கடித்துக் கொண்டு அதிரதன் சமாளிக்க,

அண்ணா, நானும் மாமாவும் பார்த்துப்போம். நீ ஓய்வெடு என்று அதீபன் சுபிர்தனிடம் கண்ணை காட்டினான்.

டேய், கார்ட்ஸ் எங்க போய் தொலைஞ்சீங்க? கத்தினான் அதிரதன்.

சார், அமைதியா இருங்க. பார்த்துக்கலாம் என்று அவன் அலைபேசியை கையில் கொடுத்தான். அதிரதன் பேசியது போல் யாரோ பேசி அவர்களை திசை திருப்பியது தெரிய வந்தது. அதிரதன் கோபமாக, வாங்கடா என்று சத்தமிட்டான்.

அறைக்கதவை மெதுவாக திறந்து  ஆத்வி, ரணா, தாட்சு பார்த்தனர். பொண்ணுங்க மூவருக்குமே இருவரும் ரொம்ப முக்கியமாச்சே. ஆத்வி நிதினுக்கு ஏதும் ஆகி விடுமோ? என பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அச்சோ, அண்ணாவுக்கு ரொம்ப வலிக்குது போலக்கா என்று ரணா அதிரதனை பார்த்து பதறிக் கொண்டு, நான் அண்ணவை அழைச்சிட்டு வரவா? கேட்க, நீ வெளிய போன உன்னை வச்சு எல்லாரையும் பிடிச்சிருவாங்க. அமைதியா இரு. நானே டென்சன்ல இருக்கேன் ஆத்விகா சொல்ல, தாட்சாயிணி அதீபனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அம்மாவை கொன்றது இவனுகளாக தான் இருக்கும்? என்று மனதில் உறுதியானவன். மொத்த கோபத்தையும் இவர்களிடம் இறக்கினான். ஆனால் அவனும் சோர்வாக அடிவாங்கினான். தாட்சாயிணிக்கு கண்ணீர் ஆறாய் ஓடியது. ஆத்வியும் கண்ணீருடன் இருவரையும் பார்த்தாள். சுபிர்தனும் அதிரதனும் மீண்டும் உள்ளே வந்தனர். ஆனால் சுபிர்தனால் அவனுகளோட சண்டை போட முடியவில்லை அடி தான் வாங்கினான்.

சுபி, நீ அறைக்கு போ என்று மூவரும் சத்தமிட்டனர். அவனால் விட்டு போக முடியவில்லை. செழியன் பொறுமை தாங்க முடியாமல் துப்பாக்கியை எடுத்து வந்து ஒருவன் கால் நோக்கி தோட்டாவை செலுத்தினார். அது அவனை துளைக்க மற்ற ஆட்கள் பயந்தனர். அந்நேரம் கார்ட்ஸ் உள்ளே வந்து, அனைவரையும் போலீஸில் ஒப்படைத்தனர்.

வீட்டினர் வெளியே ஓடி வந்தனர். பசங்களுக்கு அடிப்பட்டதை பார்த்து, அதிரதனிடம் யசோதா ஓடி வந்தார். அவனை பார்த்துக் கொண்டே சிவநந்தினி அதீபனுக்கு மருந்திட, ரேவதி நிதினுக்கும், பாட்டி சுபிர்தனுக்கும் மருந்து போட்டு விட்டனர். மற்றவர்கள் கண்ணீருடன் நின்றனர்.

சுபிர்தனுக்கு அடி அதிகமாக பட்டிருக்கும். அதிரதன் அவன் கையை பிடித்துக் கொண்டே அவனிடம் வந்து, சாரிடா என்றான்.

என்ன சார் நீங்க? எதுக்கு சாரியெல்லாம்? என்று கேட்டான்.

“எல்லாரும் ஓய்வெடுங்க” என்று அவரவர் அறைக்கு செல்ல ரணா மனம் கேட்காமல் பாட்டி அறைக்கதவை தட்டினாள்.

பாட்டி அவளை பார்த்து, என்னடி பண்ற? என்று கேட்டார். பாட்டி அவனுக்கு, இந்த மருந்தை போட்டு விடு. சீக்கிரம் குணமாகிவிடும் என்று சொன்னாள். அவளுக்கு சங்கீதன் சொன்னது நினைவுக்கு வந்திருக்கும். அவர்களுடன் மழையில் நனைந்து போராடினால் தான் தெரியும் என்று காவியனை சொல்லி இருப்பான். இவனும் அவன் நண்பன் தானே! கஷ்டத்தில் இருக்கான் என்று அவள் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாட்டி, முதல்ல தண்ணீரால் சுத்தப்படுத்திட்டு போடு. இல்லைன்னா காயத்தின் தொற்று அவன் உடலில் பரவும் என்று சொன்னாள். பாட்டி, அவளை உற்று பார்த்து சிரித்தார்.

நான் பேசிகிட்டு இருக்கேன். நீ என்ன சிரிக்கிற? அவள் கோபமாக முகத்தை வைத்தாள்.

இல்லடி எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. எனக்கு மருந்து தேய்த்து படுத்தால் தான் காலையில் எனக்கு வலி தெரியாது. மருந்தை போட்டு விட்டு படுக்க செல்லும் போது இடையிலே வந்துட்டியே?

மருந்து போட எவ்வளவு நேரமாகப் போகுது? அவள் கேட்க, நீயே போட்டு விட்ருடி என்றார்.

என்னது? நானா? பாட்டி என்றாள் ரணா.

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்ததை சுபிர்தன், பாட்டி அதெல்லாம் வேண்டாம். நீங்க தான் போட்டு விட்டுருக்கீங்கல்ல. இருக்கட்டும் என்றான்.

அவன் பேசுவதை பார்த்து உள்ளே வந்தாள் ரணா. வேண்டாம் மேம் இருக்கட்டும் என்றான் அவன்.

மேம்மா? என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? ரணா கேட்க, சும்மாவே புள்ள முடியாம இருக்கான். சண்டைய ஆரம்பிக்கிறா பாரு என்று பாட்டி சொல்ல, அவள் பாட்டியை முறைத்தாள்.

பாட்டி, என்ன சொன்ன? சோர்வா இருக்குன்னு சொன்ன? இப்ப எதுக்கு வெட்டியா பேசுற? சும்மா படுத்து தூங்கு. இல்ல இவனுக்கு நீ தான் மருந்து போடணும் என்று அவனை பார்த்து, எதுக்கு கீழ படுத்துருக்க? நான் பெட்டுக்கு அரேஜ் பண்ணவா? அவள் கேட்க, நீங்க மருந்தை கொடுத்துட்டு போங்க. நானே போட்டுப்பேன் என்றான்.n அவன் வெற்று மார்புடன் கூச்சமுடன் உணர்ந்தான்.

வலியோட எப்படி முதுகுல போட்டுப்ப? என்று கேட்டுக் கொண்டு தண்ணீரை எடுத்து வந்து அங்கிருந்த மிருதுவான துவாலையை எடுத்து கீழே அமர்ந்து அவனுக்கு துடைக்க, அவன் வலியுடன் கண்ணை மூடிக் கொண்டான்.

ரொம்ப வலிக்குதா? என்று அவள் அவனுக்கு ஊதி விட, அவனுக்கு பயமானது. ப்ளீஸ் நீங்க போங்க. யாராவது பார்த்தா தப்பா எடுத்துக்க போறாங்க என்றான்.

குத்துக்கல்லாட்டம் நான் இருக்கும் போது யார் என்ன பேசுவாங்க? என்று பாட்டி கண்ணை திறக்க, அவள் புன்னகையுடன், எனக்கு தெரியுமே பாட்டி? நீ தூங்க மாட்டன்னு..என்று மறைக்காமல் கையை எடு. எப்படி மருந்து போடுவது? என்று அவனுக்கு மருந்திட, யாருமில்லா அவனுக்கு இப்படி அக்கறையுடன் போடவும் அவனுக்கு ரணாவை பிடித்து விட்டது. அவன் அவளை ரசித்து பார்த்தான்.

பாட்டி, அண்ணா லவ் பண்றானாமே? கேள்விப்பட்டேன் என்று ரணா கேட்க, அடியேய் உங்க அண்ணனிடம் கேட்டதற்கு நிலத்தில் கோலம் போடாத குறை தான். அப்படி வெட்கப்படுறான்.

வெட்கமா? அண்ணாவா? அச்சோ மிஸ் பண்ணிட்டேனே? என்ற ரணா, அப்ப தாட்சு அண்ணியை நம்ம மியூசிக் பாஸூக்கு கட்டி வச்சிருங்க என்றாள். பாட்டி சோகமாக,

எனக்கு புரியுது பாட்டி. ஆனால் எதற்கு உன்னை நீயே காரணமாக்கிக்காத. எதுவும் உன்னால நடக்கலை. இது தான் விதி. நீ தான அடிக்கடி சொல்வ? விதிய மாத்த யாராலும் முடியாதுன்னு..

பாட்டி அழுதார். எழுந்த ரணா படுக்கையில் அவரருகே அமர்ந்து, எதுக்கு அழுற பாட்டி? கண்டிப்பா எல்லாமே சீக்கிரமே சரியாகிடும். உனக்கு ஒரு விசயம் சொல்லவா?

அதீபனும் தாட்சு அண்ணியும் கோவிலில் இருந்து வரும் போது, நான் கேட்டது உனக்கு நினைவிருக்கா? அவங்க இருவர் மீது அந்த மாலையோட வாசனை மட்டுமல்ல அண்ணாவோட பர்ஃபியூம் வாசனை அண்ணி மீது வந்தது.

நீ ஓ.கே சொல்லு. நானே இருவருக்கும் “க்யூபிக்” கா இருக்கேன்.

பாட்டி கண்ணை துடைத்து, அது என்னடி “க்யூக்கா?”

அய்யோ பாட்டி, அது “க்யூபிக்”. இரு காதலர்களையும் சேர்த்து வைக்கும் தேவதை என்றாள்.

அவங்கள சேர்த்து வைப்பது இருக்கட்டும். உன் அம்மா சொன்னது உண்மையா? பாட்டி கேட்க, அம்மாவா? என்ன சொன்னாங்க? என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு மீண்டும் மருந்து போட்டாள்.

உங்க காலேஜ்ல யாரையோ உனக்கு பிடிச்சிருக்காம்? அவர் கேட்க, பட்டென விழித்தது சுபிர்தன் மனது. அவன் இவனது நண்பனாயிற்றே? நான் தப்பா யோசிக்கிறேன் என்று மனதை கட்டுப்படுத்தினான். ஆனால் அவள் கண்ணை பார்க்க பார்க்க, பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோன்றியது சுபிர்தனுக்கு.

அதான பார்த்தேன். ஆத்வி பல வருசமா காதலிச்சுக்கிட்டு இருக்கா. அந்த விசயமெல்லாம் வெளியவே தெரியாது. ஆமா எனக்கு அவனை பிடிக்கும். இப்ப என்னவாம்? என்று சொல்லி விட்டு, கன்னத்தில் கை வைத்து, பாட்டி அம்மா அப்பாவிடம் சொல்லி இருப்பாங்களோ? என்று கேட்க,

எனக்கு எப்படிடி தெரியும்?

ஆமா, உனக்கு எப்படி தெரியும்? என்று அலுத்துக் கொண்டு சொன்னாலும் ஒரு பிரயோஜனும் இல்லை. அவனுக்கு நான் இருப்பதே தெரிய மாட்டேங்குதே. பாட்டி அழுதா கூட கண்டுக்க மாட்டேங்கிறான். ஆனால் எனக்கு அவனை தான் பிடிச்சிருக்கு.

அவன் எல்லாரிடமும் அக்கறையா இருக்கான். அவனுக்கு என்னை தான் பிடிக்கல போல என்று ரணா வருத்தப்பட்டாள். சுபிர்தன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

கதவு தட்டும் ஓசை கேட்டு, “எஸ் கம்” என்றாள்.

அதிரதன் தான் அலைபேசியுடன் நின்றிருந்தான். ஏய் குட்டிம்மா, என்ன பண்ற? அதிரதன் கேட்க, என்னிடம் நீ பேசாத. நான் உன்னிடம் பேச மாட்டேன் என்றாள்.

பாருடா கோபத்தை, பாட்டி தான் இவனுக்கு போட்டு விட்டாங்களே! நீ என்ன பண்ற? என்று அவன் டோன் மாறியது.

பாட்டி தான? நல்லா போட்டு விட்டுருக்காங்க. மருந்தை காயத்துக்கு போடாம எங்க போட்டு போட்டு விட்டுருக்காங்க பாரு என்று அவனை பார்த்தாள். சுபிர்தன் எழுந்து அமர்ந்திருந்தான்.

டேய், இன்னும் முடியல. அதுக்குள்ள எதுக்கு எழுந்த? ரணா கேட்க, இந்தா இவனுக்கு நீயே போட்டு விடு. நீ மட்டும் பேசிறாத என்று எழுந்தாள்.

ஓ..நான் பேசக்கூடாது. ஆனால் நீ என்னிடம் பேசுவாயா? இப்ப தான் என்னிடம் பேச மாட்டேன்னு சொன்ன? அதிரதன் கேட்க, ஆமா நான் பேச மாட்டேன். “சீட்டர் பாய்” என்னை மாத்திட்ட. எனக்கு தான் அண்ணிய முதல்ல அறிமுகப்படுத்துவேன்னு சொன்ன? உனக்கு நினைவிருக்கா? இல்லையா?

இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு என்னை தவிர. போடா..நீ என்னோட அண்ணனே இல்லை என்றாள்.

அதிரதன் சிரித்துக் கொண்டு, அந்த பொண்ணுக்கு என் மீது விருப்பமில்லையே? அவன் சொல்ல, அண்ணா..என்று அவனை அணைத்துக் கொண்டு ஓவென அழுதாள்.

குட்டிம்மா, நீ எதுக்கு அழுற?

அண்ணா, எனக்கும் உன் நிலை தான் என்று அவனை அணைத்தாள்.

குட்டிம்மா, விளையாடாத? அதிரதன் சொல்ல, என்னை பார்த்தால் எல்லாருக்கும் எப்படி தெரியுது? என கோபமான ரணா,

அம்மா என்னை தொல்லையாகவே நினைக்கிறாங்க. அப்பாவுக்கு அவர் வேலையையும் அம்மாவையும் பார்க்க நேரம் சரியாகுது. அக்கா சொல்லவே வேண்டாம். பாட்டியோட பேசுனா எனக்கும் அவங்களுக்கும் சண்டை வந்திரும்..

போங்கடா, இதுல இந்த லவ்வு எங்கிருந்து தான் வந்து தொலைச்சுதோ? பெரிய பாடா இருக்கு. அவனிடம் காதலை சொல்ல கூட இல்லை. அதுக்குள்ள அவன் பிடிக்கலைன்னு சொல்லி இருக்கான். நீ அதுக்கு மேல, திடீர்ன்னு காணா போயிடுற. திடீர்ன்னு வந்து நிக்குற. அவன் அதுக்கு மேல..என்று அதீபனை திட்ட வந்து நிறுத்தி அழுதாள்.

எதுக்கு இந்த குட்டி மண்டையில இவ்வளவு டென்சன்? நீங்க மத்ததை ஒதுக்கி வச்சுட்டு படிப்பை கவனிக்கலாமே? அதிரதன் கேட்டான்.

இதோ, ஆரம்பிச்சுட்டேல்ல. புத்தரோட போதனைகள. போதும்டா சாமி. இங்க இருக்கிறதுக்கு யாருமே இல்லாத தனித்தீவுல இருந்துட்டு போயிறலாம் போல என்றாள்.

இப்ப என்ன உனக்கு? அவன் யாருன்னு சொல்லு? பார்க்கலாம் என்றான் அதிரதன்.

போடா, அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நான் போறேன் என்று எழுந்தாள்.

ஏன்டி, இப்படி பட்டாசா பொரிஞ்சு தள்ளுறியே? உன்னோட அண்ணன் தான் அவன். அவனுக்கு அடிபட்டதை பார்க்க தோணுச்சாடி பாட்டி கேட்க,

எனக்கு பயமா இருந்தது. அதான் நான் அடியை பார்க்கல.

பயமா? என் செல்ல தங்கைக்கு பயமா? அதிரதன் கேட்க, நீ ஒன்றும் கொஞ்ச வேண்டாம். பயப்படாம எப்படி இருக்க முடியும்? என்று எழுந்து வாயில் கை வைத்து நின்றாள் ரணா.

அதிரதனுக்கு பின் சினமுடன் சிவநந்தினி நின்று கொண்டிருந்தார்.

இங்க என்னடி பண்ணிக்கிட்டு இருக்க? சிவநந்தினி கேட்க, பேச்சாடி பேசுன? கேட்குறால பதில் சொல்லு என்று பாட்டி சொல்ல, பாட்டியை முறைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள் ரணா.

நில்லுடி, என்று அவள் கையை பிடித்து நிறுத்திய சிவநந்தினி, உன்னை கண்டிப்போட வளர்த்திருக்கணும். என் தவறு தான். நீ காதலிக்கிறது பெருமையான விசயமாடி? அதுவும் அந்த பையனுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டு என்று..சுபிர்தனை பார்த்து முறைத்தார்.

அம்மாடி, என்னால முடியலன்னு நான் தான் போட்டு விட சொன்னேன் என்று பாட்டி சொல்ல, அதுக்கு? கொஞ்சமும் அறிவில்லையாடி?

அம்மா, நான் மருந்து தான போட்டு விட்டேன் என்று ரணா கேட்க, பாட்டியால முடியலைன்னா என்னை அழைத்திருக்கலாம்ல்ல. இல்ல உங்க அத்தை இருக்காங்கல்ல அழைத்திருக்கலாம்ல்ல. உனக்கு தோன்றத செஞ்சுகிட்டு இருக்க? என்று சிவநந்தினி கோபமாக கத்தினார்.

அம்மா, போதும். இதுக்கு மேல பேசாதீங்க? ஏன் நீங்க காதலிக்கலையா? உங்க குடும்பத்தை விட்டு நீங்க வரலையா? நான் அப்படி சென்று விட மாட்டேன். எல்லாரும் காதலிச்சா மறைப்பாங்க. நான் எதையும் யாரிடமும் மறைக்க நினைக்கலை. நான் காதலிக்க தான் செய்றேன். தப்பேதும் செய்யலையே? அன்று நீ என்னை இரிட்டேட் பண்ற மாதிரி பேசுன? அதனால கோபத்துல சொல்லீட்டேன். இப்ப அண்ணா காதல் விசயம் என்னுடன் ஒத்து போனதால் சொன்னேன். இதில் எந்த தவறும் இல்லை.

அம்மா, நீ அப்பாவோட வந்த பின் கொஞ்சமாவது உன்னோட அம்மா, அப்பா, தம்பிய நினைச்சு பார்த்தியா? நீ பாட்டுக்கு இங்க இருக்க? உன்னோட தம்பி உனக்காக வந்திருக்கார். ஆனால் ஒரு முறை நீ போனீயாம்மா? என்று அவள் கேள்விகள் கேட்க, செழியன் அவளை அறைந்தார்.

அப்பா..அதிரதன் சத்தமிட்டான். ரணா கண்ணீருடன் செழியனை பார்த்தாள். சிவநந்தினி கண்ணீருடன் அமர்ந்தான்.

ஏன் பார்க்கலை? உன் அம்மா, அவள் தம்பியை எனக்கு தெரியாமல் சந்தித்தாள். இதோ அதற்கான புகைப்படம் என்று வீசி எறிந்தார்.

சின்ன பொண்ணு மாதிரியா பேசுற? இப்ப தான் ஸ்கூல் முடிச்சிருக்க? அதுக்குள்ள இந்த உலகத்தை பற்றி உனக்கு என்ன தெரியும்? இப்பவே உனக்கு காதல் வேண்டி இருக்கா? என்று அவர் கடினமான வார்த்தைகளை உதிர்த்தார்.

போதும் நிறுத்துங்க என்று ரணா கத்தி விட்டு, அங்கிருந்த கண்ணாடி டீப்பாயை கோபமாக தட்டினாள். அது சில்லுசில்லாய் நொருங்கி அவள் கையை கிழித்து இரத்தம் வந்தது. ஆனால் ரணா நிற்கவில்லை. எல்லாரும் அறையை விட்டு வெளியே வந்து அவளை பார்த்தனர். கையில் இரத்தம் வடிய உள்ளே செல்லும் ரணாவை பார்த்து துடித்து போனார்கள்.

அதிரதனும் சிவநந்தினியும் வேகமாக கதவை தட்ட, போங்க. எனக்கு யாரையும் பார்க்க விருப்பமில்லை என்று வலியுடன் கத்தினாள்.

குட்டிம்மா, கதவை திற பேசிக்கலாம். மருந்து போடணும் என்று அதிரதன் சத்தம் கொடுக்க, வெளிய வாடி..என்று சிவநந்தினி கதவை தட்டினார். ரணாவும் சத்தமில்லாமல் இருக்க, ரணா வெளிய வா என்று ஆத்விகாவும் தாட்சாயிணியும் கத்தினார்கள்.

ஏய், குட்டிப்பிசாசு வெளிய வா என்று அதீபனும் அழைத்தான். அவளிடம் பதிளில்லாமல் இருக்க, சட்டை போட்டுக் கொண்டு வெளியே வந்த சுபிர்தன், கதவை உடைக்க தள்ளினான். அவனுக்கு அடிபட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை.

அதிரதன் அவனை பார்த்து கதவை உடைக்க வந்தான். இருடா என்று நிதின் அவனை விலக்கி விட்டு கதவை உடைத்தான். ரணா மயங்கி இருந்தாள். கை முழுவதும் இரத்தமாகி இருந்தது. செழியன் கண்ணீருடன் அவளருகே வந்தார். அதிரதன் அவன் அப்பாவை முறைத்து விட்டு, நிது டாக்டருக்கு கால் பண்ணு. ஆத்வி அந்த தண்ணிய எடு என்று எடுத்து அவள் முகத்தில் நீரை தெளிக்க அவள் எழவேயில்லை.

டாக்டர் வந்தவுடன், அவளுக்கு மருந்திட்டு டிரிப்ஸ் செலுத்தினர். டென்சனா இருந்தாங்களோ? அவர் கேட்க, ஆமா சார் என்றாள் தாட்சாயிணி. சாப்பிடலையோ? என்று அவர் கேட்க, ஆமா சார் என்றாள் ஆத்வி.

முடிந்தவுடன் இதை போட்டு விடுங்க என்று செவிலியர் ஒருவரை விட்டு,  மருத்துவர் செழியனை பார்த்து, பொண்ணு எழுந்ததும் சாப்பிட வையுங்க. கையில வலி அதிகமா இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வாங்க என்று அவர் சென்றார்.

அவர் சென்றதும் அதிரதன் அவன் அம்மா, அப்பாவை சத்தம் போட்டான். நானும் ஒத்துக்கிறேன் ரணா மருந்து தான் போட்டு விட்டால் என்றாலும் பார்ப்பவர் கண்ணுக்கு தவறா தெரியும்ன்னு தான் புரியுது. அதுக்கு திட்டுனீங்களா? கிளம்பி இருக்கலாம்ல்ல. அதை விட்டு நான் தான் பேசிகிட்டு இருக்கேன்ல. அதுக்குல்ல என்ன அவசரம்?

அவ கேட்டதுல்ல எந்த தப்பும் இல்ல. காதலிக்க தான செஞ்சா? இதுல என்ன தப்பு இருக்கு? நீங்க காதலிக்கலையா? அவன் கோபத்துல தான் உங்க அம்மா, அப்பா, தம்பின்னு இழுத்து பேசிட்டா. ஆளாலுக்கு அவளை அடிக்கிறீங்க?

அம்மா, ஒரு நாள் அவளுக்கு ஊட்டி விட்டிருக்கீங்களா? அப்பா ஒருநாள் அவளுடன் நேரம் செலவழித்து இருக்கீங்களா? இல்லையே? உங்களுக்கெல்லாம் நேரம் இல்லை. நம்ம பிரணா பசங்களோட பழகுற பொண்ணு தான். ஆனால் இதுவரை அவளிடம் யாரும் குறை சொல்லாத அளவு தான் நடந்திருக்கா.

ஒன்று இருக்கு. கொஞ்சம் அதிகமா பேசுவா? நம்ம யாரும் அவளிடம் பேசலை. அதனால் பார்ப்பவர்கள் அனைவரையும் நண்பர்களாக்கிப்பா.

அவள் காதலிக்கிறான்னு சொன்னதே எனக்கு ஆச்சர்யமா தான் இருக்கு. கண்டிப்பா அந்த பையனோட ஏதோ ஒரு விசயம் பிடித்து கூட இருக்கலாம். ஒரு வேலை நம்ம காட்டாத அக்கறையை அவன் காட்டி இருக்கலாம். அது அவளுக்கு பிடித்திருக்கும். இது ஒன்றும் தவறில்லை.

அக்கறை இல்லாமலா இருக்கோம்? யசோதா கேட்க, அப்படி சொல்லலை யசோ. அவள் எதிர்பார்க்கும் விசயம் நம்மிடம் இல்லாமல் இருக்காலாம். அதை அந்த பையனிடம் அவள் பார்த்திருக்கலாம். அழகை பார்த்து பழகுவது நம் பிரணா இல்லை. அதுக்காக அவள் செய்யும் அனைத்தும்  சரின்னு நான் சொல்லலை.

கொஞ்சம் அவளை புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க என்றான் அதிரதன். சுபிர்தனுக்கு அங்கு நிற்க முடியாமல் இருக்க, அதிரதன் அவனை பார்த்து, இவன் மீது யாரும் எந்த குறையும் சொல்ல வேண்டாம். இவனை என் அறைக்கே அழைத்து செல்கிறேன் என்றான்.

கண்ணா, அவன் என்னுடன் இருக்கட்டும் என்று பாட்டி கேட்க, இல்ல பாட்டி. இருக்கட்டும். இதுக்கு மேல அவனால நம்ம வீட்ல இருக்க முடியும்ன்னு தோணுதா  உனக்கு? நான் என் அறைக்கே அழைத்து செல்கிறேன். இப்பவாது அவளை பார்த்துப்பீங்களா? அதிரதன் கேட்க, கண்ணீருடன் சிவநந்தினி தன் மகனை பார்த்தார்.

வா..சுபி போகலாம் என்று அவனை இழுத்து செல்ல, இந்த மருந்து என்று பாட்டி கேட்க, வேண்டாம் நான் வச்சிருக்கிறதை கொடுத்திப்பேன் என்று அவனை இழுத்து சென்றான். அலைபேசியில் நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காவியன் கண்கலங்கினான். நேத்ராவும் கேட்டு விட்டு அலைபேசியை அணைத்தாள். சிவநந்தினி, செழியன் மட்டும் ரணாவுடன் இருந்தனர்.

காவியன் அறைக்கு சென்று படுத்தான். கிருஷ்ணன் அவனருகே வந்து, படுத்துக் கொண்டு செம்மையா பசிக்குதுடா. பயத்துல இப்படியா பசிக்கிறது?

இப்ப தான் சாப்பாடு செய்ய தொடங்கி இருக்காங்க. காவியா, அக்காவுக்கு உதவலாமா? என்று கேட்டான்.

அதிரதன் தான் சுபிர்தனுக்கு அடி பட்டதை நேத்ராவிடம் சொன்னான். அருகே காவியன் இருந்ததால் அவனுக்கும் தெரிந்து தான் சுபிர்தனுக்கு அழைப்பு விடுத்தனர். அவன் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் அதிரதனுக்கே அழைத்து “அவனிடம் பேசணும்”  என்று நேத்ரா சொல்ல, அவன் சுபிர்தனை தேடி பாட்டி அறைக்கு சென்றிருப்பான். இப்படி தான் அனைத்தையும் கவனித்து இருப்பர் நேத்ராவும் காவியனும்.

அந்த பிரச்சனையிலும் தன்னை வெளிக்காட்டாமல் ஏதும் சொல்லாமல் அவளுக்கு தன் மீதுள்ள காதலை கொஞ்சமும் யோசிக்காமல் வீட்டில் எல்லார் முன்னும் சொல்லி விட்டாளே? என்று ரணாவை பற்றி எண்ணத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் காவியன்.

காவியா, உன்னிடம் தான் பேசுகிறேன்? கிருஷ்ணன் சொல்ல, ம்ம்..என்ற காவியனை இழுத்தான் அவன்.

இல்லடா. கொஞ்சம் சோர்வா இருக்கு.  நான் ஓய்வெடுக்கணும் என்று காவியன் சொல்ல, நீ நல்லா தான இருக்க?

ப்ளீஸ், நான் தனியா இருக்கணும்? என்று காவியன் சொல்ல, கிருஷ்ணன் அவனை பார்த்துக் கொண்டே வெளியே வந்தான்.

ரணாவிற்கு அடிப்பட்டு இரத்தம் வந்து, சிகிச்சை நினைவிற்கு வந்த காவியனுக்கு மனம் பதட்டமானது. அவனும் சாதாரணமாக இருக்க முயற்சி செய்தான்.

அவளுக்கு ஒன்றுமிருக்காதுல்ல? என்ற கேள்வி அவனை படுத்தி எடுத்தது. சுபியிடன் கேட்கலாம் என்று அலைபேசியை எடுத்தவனுக்கு அதிரதனும் அவனுடன் இருப்பானே? சரியாக பேச கூட முடியாதே? என்று எண்ணம் தோன்ற, நிதினை அழைத்தான் காவியன்.

ஆத்வி அழுது இருந்ததால் அவளை சமாதானப்படுத்த நிதின் அவளறைக்கு சென்றிருந்தான். ஆத்விகா நிதினை பார்த்ததும் அணைத்துக் கொண்டாள். ரொம்ப பெயின் இருக்கா?

இல்ல ஆத்து, இதுக்கெல்லாம அழுவாங்க என்று அவள்

கண்ணீரை துடைத்து விட்டு, அவளை அணைத்துக் கொண்டான்.

காவியன் அழைப்பு இந்நேரம் வந்ததை பார்த்து, அவளை விலக்கி இந்த நேரத்துல கால் பண்றானே? என்று ஆத்வியை பார்த்துக் கொண்டே அழைத்தான்.

என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க? நிதின் கேட்க, சுபி நல்லா இருக்கானா? அவனுக்கு ஒன்றுமில்லையே? காவியன் கேட்க, உனக்கு எப்படி தெரியும்?

அதிரதன் சார், அக்காவிடம் சொன்னாங்க. நானும் அருகில் தான் இருந்தேன்.

ம்ம், ரொம்ப இல்ல. நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

என்னையுமா கேக்குற? நிதின் கேட்க, உங்க அதீபன் சாரையும் தான் கேட்கிறேன்.

நம்பவே முடியல. ஆச்சர்யமா இருக்கு நிதின் கேட்க, காவியன் தயக்கமுடன் அமைதியாக இருந்தான்.

என்ன பேச்சவே காணோம்? நிதின் கேட்க, சார்..என்று அவன் தயங்க, ரணா பத்தியும் அதிரதன் சொல்லீட்டானா? அவன் டென்சன்ல போனான். கால் பண்ணி இருக்க மாட்டானே?

ஆமா சார், அவரு அப்ப கால் பண்ணல. ஆனால் உங்க பாட்டி அறைக்கு செல்லும் போது போது கால் செய்தார். பின் நடந்த பிரச்சனையில் எங்க கால்லையும் மறந்துட்டார் என்றான்.

வாட்? அப்ப லயன்ல தான் இருந்தியா? கோபமாக நிதின் கேட்க, அக்காவும் தான் என்றான் காவியன். அவள விடு. நீ லயன்ல தான இருந்த? எல்லாமே கேட்டிருப்பேல்ல?

ஆமா..என்றான் அமைதியாக.

அதான பார்த்தேன். உனக்கு ஏதாவது புரிஞ்சதா? நிதின் கேட்க, நிது யார்கிட்ட பேசுற? ஆத்விகா கேட்டாள். ஆத்வி கொஞ்ச நேரம் அமைதியா இரு என்று நிதின் சத்தமிட்டான்.

சொல்லு, புரிஞ்சதா? கேட்டான்.

காவியன் அமைதியாக இருந்தான்.

இது தான் ரணா. இப்ப உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். சுபிர்தனை பார்த்தவுடன் நீயும் வந்திருக்கிறாயோன்னு உன்னை தேடுனா?

சார், ஆனால்..

சும்மா சொன்னதையே சொல்லி என்னை டென்சன் ஆக்காத.

இப்ப தான் சார், மாயாவிடமிருந்து வெளியவே வந்திருக்கேன். எனக்கு நேரம் வேண்டும்.

நீ நேரம் கேட்டுக் கொண்டே இரு. உன்னை போய் இந்த குள்ளச்சி லவ் பண்றா பாரு. அவள சொல்லணும். இப்படியா அவளோட காதல் வீட்ல எல்லாருக்கும் தெரிய வரணும்? எல்லாம் அவள் நேரம் நிதின் புலம்பினான்.

அலைபேசியை பிடுங்கிய ஆத்வி, நீ யாரு? உன்னை பத்தி சொல்லு? அப்படி என்ன தான் உன்னிடம் இருக்குன்னு பார்க்கலாம்? இதுவரை எங்க பிரணா யாரு பின்னாடியும் போனதில்லை. ஆனால் உனக்காக அடி வாங்கி இருக்கா. ஆனால் நீ எங்க இருக்க? என்ன பண்ற? சொல்லு என்று கத்தினாள்.

ஆத்து, என்ன பண்ற? குட்டிம்மா விசயத்துல நீ தலையிடாத. நீ முதல்ல அவளிடம் ஒழுங்கா பேசவாது செய்வியா? அவள் சொன்னதை நல்லா யோசித்து பார் என்றான் நிதின்.

குட்டிம்மாவை இவன் பார்த்து ஒரு மாதம் தான் ஆகுது. அவனுக்கு எப்படி தெரியும்? ஆனால் நாம எல்லாரும் அவளோட தான் இருந்திருக்கோம். அவள் இன்று பேசியதை பார்த்தேல்ல. மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தா இப்படி கையில் அடிபடும் அளவிற்கு போயிருப்பாள் என்று கண்கலங்கினான்.

ஆத்வி மீண்டும் காவியனிடம், நீ அவளை விட்டு விலகியே இரு. அவள் முன் வராதே என்று ஆத்வி சொல்ல, நிதின் அவளை அடித்தான்.

வாய மூடு, நம்ம குட்டிம்மாவுக்கு தான் அவனை பிடிச்சிருக்கு. அவன் எதுக்கு முன் வராமல் இருக்கணும்? பைத்தியம் மாதிரி உளறாத என்றான்.

இல்ல, அவன் பிரணா அருகே வருவது சரியா இருக்காது என்று சொல்ல, காவியன் கண்ணீர் பெருக்கெடுத்து அழுகையானது. அவன் அழுவதை கேட்டு ஆத்விகா அமைதியானாள்.

சரிங்க மேம். நான் அவள் முன் வரலை என்று அழுது கொண்டே அலைபேசியை வைத்து அழுதான். எனக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு? இப்ப தான் ஒருத்தி என் காதலை ஏத்துக்கலை. ரணா எனக்கு எப்படி பொருத்தமா இருப்பா? அவளுக்கும் எனக்கு ஏணி வைத்தால் கூட எட்டாதே என்று எண்ணியவாறு படுத்தான்.

வச்சிட்டான் போதுமா? நிதின் ஆத்விகாவிடம் சத்தம் போட்டான்.

இப்ப தான் அவன் மனசு நம்ம பிரணா பக்கம் வந்தது போல் இருக்கு. அதுக்குள்ள இப்படி கெடுத்துட்டியே? அவன் நல்ல பையன் தான். அவனுக்கு வேற பொண்ணை பிடிச்சிருந்தது. ஆனால் அந்த பொண்ணுக்கு இவன் மீது விருப்பமில்லை என்று நிதின் ஆத்வியிடம் சொல்லி விட்டு, உன் அண்ணனுக்கு அவனை நல்லா தெரியும், இப்ப கூட உன் அண்ணா இத்தனை நாள் தங்கிய இடத்தில் தான் இருக்கான்.

நம்ம குட்டிம்மாவை அவனுக்கு தெரியும் என்றோ, இவள் காதலிப்பது அவனை என்று, இருவரும் ஒரே வகுப்பு என்றும் அதிரதனுக்கு தெரியாது.

அவனை பத்தி சொல்லு என்று ஆத்விகா அமர்ந்தாள். நிதின் சொல்ல, நம்ம நிலையத்துல வளர்ந்த பையனா? அப்பா ஏத்துப்பாரா?

அது என்ன ஏத்துப்பாரா? நானும் அதே நிலையில் வளர்ந்தவன் தானே? என்ன இப்ப திடீர்ன்னு குடும்பம் இருக்காங்க. அவனை போல் நிலையத்தில் இல்லாமல் இங்கேயும் விடுதியிலும் வளர்ந்தேன். அவ்வளவு தான் எங்களுக்குள் வித்தியாசம் என்றான் நிதின். ஆத்வி கண்கள் கலங்கியது.

ஏம்மா, அவனோட சேர்த்து நான் என்னை பேசியதால் உன்னோட கௌரவம் குறைஞ்சு போச்சா? நிதின் கேட்க, என்னடா இப்படி கேக்குற? அந்த பையனிடம் ரொம்ப ஹார்சா பேசிட்டேனே?

நீயே பேசு? அவன் மனசுல இருக்கிறத கண்டுபிடிக்கணும்? நிதின் சொல்ல, நிது உனக்கு புரியலையா? பிரணா முன் வராதன்னு சொன்னதுக்கு “வர மாட்டேன்”னு சொல்லி அழுதான். அவனுக்கு இவளை பிடிக்காமல் அழுகை வருமா?கேட்டாள்.

நிஜமா தான் சொல்றியா? வா..இப்பவே குள்ளச்சிட்ட பேசலாம் என்றான்.

பழைய படி ஆரம்பிச்சுட்ட பாரு என்று ஆத்விகா சொல்லி விட்டு, காதலை நாம சொல்லக்கூடாது. அந்த பையன் தான் சொல்லணும். நிது, நான் அந்த பையனை பார்க்கலாமா? என்று அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டு கேட்டாள்.

அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் பார்க்கும் போது பார்த்துக்கோ. முதல்ல அவனிடம் பேசு என்ற நிதின் அவனுக்கு அழைப்பு விடுக்க, அதை பார்த்து காவியன் அலைபேசியை தவிர்த்தான்.

போச்சு, எடுக்க மாட்டேங்கிறான்.

அவனோட இருக்கிற யாரையும் தெரியாதா? ஆத்விகா கேட்க,அதான் வினு இருக்காளே என்று அவளை அழைத்து காவியனிடம் கொடுக்க சொன்னான். அவள் அவனை விசாரித்தாள்.

நேத்ரா அறைக்குள் செல்ல, காவியன் முகத்தை துடைத்து விட்டு படுத்திருந்தான்.

காவியா, அலைபேசிய எடுக்காம என்ன செய்ற? நிது உன்னிடம் பேசணுமாம் என்று அவள் அவனை உற்று பார்த்து, என்னாச்சுடா? நீ சரியில்லையே? பிரச்சனையா? உனக்கு ஏதும் செய்யுதா? பதறினாள் நேத்ரா.

அவன் நல்லா தான் இருக்கான். உன்னோட அன்பு மழையில் நீ அவனை மூழ்கடித்து விட்டால் அவனை வெளியே இழுக்க முடியாதே? நிதின் சத்தம் அலைபேசியில் கேட்டது.

ஆமா, நான் மூழ்கடித்து விட்டால் நீ காப்பாற்ற வருவாயா? என்று கேட்டுக் கொண்டே, நீ அவனிடம் என்ன பேசணும்? எதுக்கு கால் பண்ணி இருக்க?

அது ரகசியம் வினு. என்னடா உன் அக்காவிடம் சொல்லிடலாமா? நிதின் கேட்க, காவியன் அலைபேசியை பிடுங்கி, அக்கா..நான் பேசிக்கிறேன். நீங்க வேலைய பாருங்க என்றான்.

ரகசியமா? என்ன எனக்கு தெரியாத ரகசியம்? சொல்லுடா என்று அமர்ந்தாள்.

அக்கா, நான் சொல்றேன். இப்ப பேசிட்டு வரவா? கேட்டான் காவியன்.  சரி, அப்புறம் சொல்லணும் என்று நேத்ரா நகர்ந்தாள்.

ஆத்விகா அலைபேசியை வாங்கி, சாரிப்பா..கோவிச்சுக்காத. இந்த நிது இப்ப தான் எல்லாத்தையும் சொன்னான். பணக்கார பொண்ணுங்கன்னா பசங்க ஏமாத்துவானுகளா? அந்த பயத்தில் பிரணா மேலுள்ள அக்கறையில் தான் இப்படி பேசிட்டேன். நீ பேசிக்கோ என்றாள்.

இல்ல மேம், நீங்க சொன்னது தான் சரி என்றான்.

நீ வேற..எங்க அண்ணன் போட்ட போடுல யாரும் வாயை திறக்கல. உன்னை அண்ணாவுக்கு தெரியுமாமே? அவன் யாரிடமும் பேச கூட மாட்டான். ஆனால் உங்களோட பழகுறான்னா..நீங்க சரியா தான் இருப்பீங்க. அவ என்னோட தங்கச்சி. பயமிருக்கும்ல்ல என்றாள் ஆத்விகா.

நான் சாரிடம் பிரணா என்னுடன் படிக்கிறான்னு கூட சொல்லலையே?

அதனால் என்ன? அதான் எங்களுக்கு தெரிஞ்சிருச்சுல்ல. அண்ணாவை பிரணாவே சமாளிச்சுப்பா. என்ன அம்மா, அப்பா தான். அதையும் நாங்க பார்த்துக்கிறோம்.

இல்ல, எனக்கு அவள் மீது ஏதுமில்லை என்றான். ஓ..இல்லாமல் தான் அவளை பார்க்காதன்னு சொன்னதுக்கு அழுதியா?

தெரியல, திடீர்ன்னு கஷ்டமா இருந்தது? அதான்..

சரிப்பா. உனக்கு இரண்டு வாரம் நேரம் தாரேன். அதுக்குள்ள உன்னோட காதலை உணர்ந்து அவளிடம் சொல்லிடு.

என்ன? இரு வாரத்திலேவா?

அதுனால என்ன?

ஸ்டட்டீஸ் இருக்கே?

யும் படிப்பிஸ்ஸா? அண்ணா மாதிரி இல்லைல்ல? அவள் கேட்க, காவியன் புன்னகைத்தான்.

ஆமா, நம்ம ரதனோட இவனுக்கு எல்லாமே ஒத்து போகும் ஆத்வி. அப்படியே அவன் போல தான். அவன் போல் அமைதி, லீடர்ஷிப். படிப்பு எல்லாமே உன் அண்ணா மாதிரியே தான். ஆனால் என்ன இவன் எல்லாரிடமும் பேசுவான். உன்னோட சிடுமூஞ்சி அண்ணன் இல்ல.

டேய், என்னோட அண்ணனையே குறை சொல்றீயா? இருவரும் பேச்சு சண்டை ரொமான்ஸாக மாறியது.

ஓ.கே மேம், நீங்க பிஸியா இருக்கீங்க? நாம அப்புறம் பேசலாம் என்று அலைபேசியை வைத்து விட்டு நிம்மதியாக உணர்ந்தான் காவியன்.

செழியன் அனைவரையும் சாப்பிட அழைத்தார். அனைவரும் வேண்டாம் என்று விட, அவர் ஏதும் சொல்லாமல் தன் மகள் பிரணவியிடம் சென்று தன் மனைவி அருகே அமர்ந்தார்.

தாட்சாயிணிக்கு அதீபனை பார்க்கும் எண்ணம் தோன்ற ஹாலில் யாருமில்லை என்று எண்ணி அதீபன் அறைக்கு சென்றாள். சத்தம் கேட்டும் தூங்குவது போல் பாவனை செய்தான். சிவநந்தினி என அவன் நினைத்தான். ஆனால் தாட்சாயிணி உள்ளே வந்ததும் அவள் தான் என்று கண்டுபிடித்து விட்டான். கண்ணை மூடி ஆழ்ந்து உறங்குவது போல் நடித்தான் அதீபன். அவள் அவனருகே அமர்த்து அவன் தலையை கோதினாள். அவன் திரும்பி படுக்க, அவனை பார்த்துக் கொண்டே அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அதீபனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவன் அமைதியாக இருந்தான். சற்று நேரம் இருந்து விட்டு வெளியே சென்றாள். கீழே வந்த அவளை ரேவதி பார்த்துக் கொண்டே நின்றார். அவள் அதை கவனிக்காமல் அறைக்கு சென்று விட்டாள்.

Advertisement