Advertisement

அத்தியாயம் 34

அதீபனும் தாட்சாயிணியும் அதே கோலத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர்.

என்னாச்சுடா? பதறி ஓடி வந்தனர் அனைவரும்.

பயப்படாதீங்க அத்தை. கோவில்ல ஒருவரை தெரியாம இடிச்சு இப்படி குங்குமமும் மஞ்சலும் கொண்டிருச்சு என்றாள்.

அப்ப இந்த மாலை? ஆத்விகா கேட்க, இது என்று அதீபனை பார்த்த தாட்சாயிணி, பூசாரி கொடுத்தாரு என்றாள்.

அப்படியா? என்று ரணா இருவரையும் நெருங்கி, மாலைய கையில கொடுத்தா உங்க இருவர் மேல எதுக்கு பூ வாசனை வருது? கேட்டாள்.

ஹ, இதை கொஞ்ச நேரம் வச்சிரு. உன் மேலயும் வாசனை வரும் என்று மாலையை கொடுக்க வந்த தாட்சாயிணி கோவிலுக்கு போயிட்டு வந்தா. முதல்ல பூஜை அறைக்கு போகணும். இப்படி தான் எல்லாரும் இடையில வருவீங்களா? தாட்சாயிணி கேட்டுக் கொண்டே நகர்ந்தாள்.  அவன் அவள் சென்ற திசைக்கு எதிர்திசையில் நகர்ந்தான்.

அதீபா நீயும் தான கோவிலுக்கு போயிட்டு வந்த?  பூஜை அறைக்கு போய் சாமி கும்பிட்டுட்டு அறைக்கு போ என்றார் சிவநந்தினி. அனைவரும் அவனை பார்க்க, அவனும் ஏதும் பேசாமல் பூஜை அறைக்குள் சென்றான். அவள் முடித்து திரும்ப, அதீபன் முன் வந்து நின்றான். அவளுக்கும் அவனை பிடித்து தான் இருந்தது. ஆனால் அவளை பிடிக்காதது போல் அனைவர் முன்னும் சொல்லி விட்டானே? அவள் விலகி சென்று விட்டாள். அவன் திரும்பி போகும் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

நான் அதிகமாக உன்னிடம் ஏதும் கேட்டதில்லை. உன்னை பார்க்க வந்ததுமில்லை. இன்று ஏன் இப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியல? ஆனால் ஏதோ மனசே சரியில்லை. எல்லாம் நல்லபடியாக எப்பொழுதும் போல் இருந்தால் போதும் என்று விபூதி இட்டு வந்து அறைக்கு சென்றான் அதீபன்.

மறைந்திருந்த பாட்டியும் சிவநந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவன் தயாராகி கீழே வந்தான். ரணாவும், தாட்சாயிணியும் கையில் ஊசியுடன் சில உள்ளநூல்கள், ஜமிக்கி, சில பாசிகளை வைத்து எம்பிராய்டரி கற்றுக் கொண்டிருந்தனர் சிவநந்தினியிடம்.

அம்மா, நான் கிளம்புகிறேன் என்று பாட்டியை தேடினான்.

அத்தைய தேடுறியா? அவங்க அறையில இருக்காங்க. போ..பார்த்துட்டு போ என்றார் சிவநந்தினி.

இல்லம்மா. ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு என்றான்.

“சரி, பார்த்து போயிட்டு வா” என்று தாட்சாயிணியை பார்த்தார் சிவநந்தினி. அவனும் அவளை பார்த்தான். அவன் அலைபேசி அழைக்க, அதை பார்த்து இவங்க எதுக்கு கால் பண்றாங்க? என்று கேட்டுக் கொண்டே எடுத்தான்.

ஹலோ இவன் சொல்ல, அந்த பக்கம் சொன்னதை கேட்டு, என்ன சொல்றீங்க? என்று பதட்டமான அதீபன் முகம் வியர்த்து வடிந்தது. மூவரும் அவனை பார்த்தனர். அவன் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அவன் கையில் இருந்த அலைபேசி நழுவியது. அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கத்தி அழுதான்.

“என்னாச்சுடா?” என்று சிவநந்தினியும், “மாமா” என்று தாட்சாயிணியும், “அண்ணா” என்று ரணாவும் அவனிடம் வந்தனர்.

“அம்மா” என்று சிவநந்தினியை அணைத்து கதறி அழுதான். அவனது சத்தத்தில் வீட்டிலிருந்த மற்றவர்களும் அங்கு வந்தனர். எல்லாம் அவன் கையை விட்டு போனதாக உணர்ந்தான்.

அதீபன் சிவநந்தினியை அணைத்துக் கொண்டே, அம்மா, பாட்டி, தாத்தாவை கொன்னுட்டாங்கலாம் என்று கதறி அழுதான். அனைவரும் திகைத்து அவனை பார்த்தனர்.

அதீபா? என அவனை சிவநந்தினி விலக்க, அவன் உடைந்து அழுதான். சிவநந்தினி அவனை அணைத்துக் கொள்ள, பாட்டியும் அவர்களுடன் சேர்ந்து அவர்களை அணைத்து அழுதார்.

ரணா, ஆத்விகா கண்ணீருடன் நின்றனர். தாட்சாயிணியும் ரேவதியும் அவர்களை கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரம் செழியன், ரவிக்குமார், நிதின் பதட்டமாக வீட்டிற்கு வந்தனர்.

செழியன் ரவிகுமாரிடம், ரவி..நீ தங்கச்சியையும் பாப்பாவையும் பார்த்துக்கோ. இங்கேயே இருங்க. நாங்க போயிட்டு வாரோம் என்றார்.

அனைவரும் அவர்களை பார்க்க, நிதின் அதீபனிடம் வந்தான். அதீபன் அவனை அணைத்து அழுது கொண்டிருந்தான்.

இல்லண்ணா. நாங்களும் வாரோம் என்று ரேவதி சொல்ல, ரவிக்குமார் தன் மனைவியை பார்த்தார். அழுது கொண்டிருந்த அதீபனும் அவரை பார்த்தான்.

சரி, வாங்க என்று அனைவரும் கிளம்பினர். இவர்களுக்கு தெரிந்தது போல் அதிரதனையும் இவ்விசயம் எட்டியது. சாப்பிட்டுக் கொண்டே அலைபேசியை காதில் வைத்த அதிரதன், சட்டென எழுந்தான். அவன் கண்கள் கலங்கியது. ஒரு நிமிடம் செய்வதறியாது அமர்ந்தான்.

சார், என்னாச்சு? நேத்ரா கேட்க, வினு, பாட்டி..என்று முழுதாக சொல்ல முடியாமல் கண்ணை மூடி திறந்து நகர்ந்து சென்று அலைபேசியில் காவியனை தொடர்பு கொண்டு, இப்பவே நீயும் உன்னோட ப்ரெண்ட்ஸூம் இங்க வரணும். சீக்கிரம் வாங்க. பிரச்சனைன்னா இவனால தனியா சமாளிக்க முடியாது. இப்ப கார்ட்ஸ் அங்க வருவாங்க. அவங்களோட வாங்க..என்று சொல்லி வைத்து விட்டு, மீண்டும் கார்ட்ஸ்ஸை அழைத்து விசயத்தை சொன்னான்.

கார்ட்ஸ் பாதியிலே நின்று விட, அரைமணி நேரத்திற்குள் காவியனும் அவன் நண்பர்களும் அதிரதனின் வீட்டிற்கு வந்தனர். அவன் நிதினிடம் பேசிக் கொண்டிருந்தான்.

என்னாச்சு சார்? காவியன் கேட்க, நான் நாளை தான் வருவேன்னு நினைக்கிறேன். அதுவும் சரியாக தெரியவில்லை. நான் கிளம்புகிறேன் என்று அவனை பார்த்துக் கொண்டிருந்த நால்வரையும் பார்த்து, “நான் வாரேன்” கவனமா இருங்க என்று சொல்லி அவன் காரில் ஏறினான்.

சார், பிரச்சனையா? யாருக்கும் ஏதும் ஆகி விட்டதா? தனியா போறீங்க? நானும் வரவா? காவியன் கேட்க, பிரச்சனை தான். என்னோட சித்தியையும், அவங்க அம்மா, அப்பாவையும் கொன்னுட்டானுக என்று அதிரதன் சொல்ல, பசங்க அனைவரும் திகைத்து நின்றனர்.

சார், இந்த பசங்க இங்க இருக்கட்டும். பெயினோட உங்களால வண்டி ஓட்ட முடியாது? பாடிகார்டு ஜீவா சொல்ல,

ஆமா, பெயின் அதிகமாயிடும் அதிரதா என்றாள் சாரு.

யுவன் அதிரதன் கண்ணீரை துடைத்து விட்டதை நினைத்துக் கொண்டே, அவனையும் நேத்ராவையும் பார்த்தான்.

காவியனை தவிர உங்களில் யாரு கார் ஓட்டுவீங்க? அதிரதன் கேட்டான். சுபிர்தன் அவன் முன் வந்து நின்றான். எனக்கு காவியன் தான் பழக்கினான் என்றான். அதிரதன் அவனை பார்த்து கண்ணை காட்டினான். அவனும் கண்ணை மூடி திறந்தான்.

சரி வா, போகலாம் என்றான்.

சார், அவன் உங்களை விட்டு தனியா வருவானா? நேத்ரா சுபிர்தன் மேலுள்ள அக்கறையில் கேட்க, தனியா விட மாட்டேன். அவன் என்னோட தான் இரு நாட்களும் இருப்பான் என்றான். அவள் தலையை மட்டும் ஆட்டினாள். சுபிர்தன் காரை எடுக்க, அவர்கள் கிளம்பினர்.

அதீபன் பாட்டி வீட்டிற்கு அவனும் மற்றவர்களும் வந்தனர். போலீஸ், “சி.பி.ஐ” ஆட்களும் இருந்தனர். போட்டோகிராபர் இறந்தவர்களை படமெடுக்க, அதீபன் பயத்துடன் உள்ளே வந்தான். அவர்கள் வீடளவு இல்லை என்றாலும் அழகாகவும் அமைப்பாகவும் அமைக்கப்பட்ட வீடு. அவன் அம்மா, பாட்டி, தாத்தாவை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் அழுதான். ரணாவும் ஆத்வியும் அவனுடன் அருகே செல்ல போலீஸ் அவர்கள் யாரையும் அருகே விடவில்லை. சிவநந்தினி, பாட்டி, யசோதா பசங்களுடன் பார்த்து கதறி அழுதனர்.

அந்த கொலைகாரனுக்கு அதிக தைரியம் தான். மிலிட்டரி தாத்தா இருக்கார். பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்ட போலீஸாரையும் கொன்றுக்கானே? எம்புட்டு தைரியம் என பேசுவதை கேட்ட செழியன், பாதுகாப்பிற்கு போலீஸ் இருந்தாங்களா? கேட்டார்.

ஆமா சார், நிம்மி இங்க வந்த நாளே போலீஸ் பாதுகாப்பிற்காக வந்துட்டாங்க. நீங்க வந்த அன்று அவங்க சாப்பிட போனாங்க. ஒருவர் தான் மப்டியில் நின்று கொண்டிருந்தார். நீங்க பார்க்கலையா? ஒரு பெண்மணி சொல்ல, போலீஸா? என்று அங்கிருந்த போலீஸ் ஒருவரிடம் கேட்டார்.

சார், உங்க பையன் அதிரதன் தான் பாதுகாப்புக்கு ஆள் போட சொல்லி கமிஷ்னரிடம் கேட்டார். அங்கே செய்தியாளர்கள் வந்து நிற்க, மூத்த அதிகாரி அவர்களை பேசி நகர்த்தி வைத்தார்.

அந்நேரம் அதிரதனும் சுபிர்தனும் வந்தனர். சுபி, எங்க வீட்ல யாருக்கும் எனக்கு அடிபட்டது தெரியாது. அதனால நீ எதையும் உளறிடாத. உன்னை பற்றி கேட்டால் அந்த நிலையத்தில் வளர்ந்தவன்னு மட்டும் சொல்லு. வினு யுவனை பற்றி நீ வாயை திறக்கவே கூடாது . மத்த எல்லாத்தையும் நானே பார்த்துப்பேன் என்று சொல்லிக் கொண்டே வந்தான். செய்தியாளர்கள் அவனை சூழ, இப்ப தான் வந்துருக்கேன். பார்த்துட்டு வாரேனே? என்று உள்ளே சென்றான்.

அவனை பார்த்த செழியன், ரதா..பாருடா இதெல்லாம் என அணைத்தார். நிதினும் அவனருகே வந்தான். அவன் சுபிர்தனை பார்த்து விட்டு அதிரதனை பார்த்தான்.

நிது, சுபியை பார்த்துக்கோ என்று உள்ளே சென்று மூவர் முன்னும் மண்டியிட்டு கண்ணீருடன் அமர்ந்தான். அதிரதன், ரணா, ஆத்விகா அவர்களது அம்மா உறவுகளை பார்த்ததில்லை. இந்த பாட்டி, தாத்தாவை அவங்களோட பாட்டி தாத்தாவாக தான் பழகுவர். அவர்கள் தன் பேரன் அதீபன் போல தான் மூவரையும் நடத்துவார்கள்.

பாட்டிக்கு அதீபன் போல அதிரதன் என்றால் உயிர். அதே போல் ரணா ஆத்வியை தாத்தாவிற்கும் மிகவும் பிடிக்கும். அதீபனை பள்ளி, கல்லூரியில் பார்க்க வரும் போது இருவரும் ரணா, ஆத்வியை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இவர்களை பார்த்து விட்டு அதிரதனையும் பார்த்து விட்டு தான் வீட்டிற்கு செல்வர். தாட்சாயிணி, நிதினை பற்றியும் அவர்களுக்கு தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தாலும் அருகே செல்ல மாட்டார்கள்.

செழியன் பசங்களை அதிகமாக பாட்டி, தாத்தா வீட்டிற்கு விட மாட்டார். நிர்மலாவிற்கு பிடிக்காது என்பதால் விட மாட்டார். ஆனால் அவர்கள் பேரன், பேத்திகளை தவற விட்டதில்லை. ஆனால் இன்று தவறி பக்கம் வராத தூரத்திற்கு சென்று விட்டனர்.

அதிரதன் கண்ணீர் செல்ல செல்ல அழுகையாக மாறியது. அதீபனும் மற்றவர்களும் அப்பொழுது தான் அதிரதனை பார்த்தனர்.

அவனை பார்த்த அதீபன், அண்ணா, எல்லாரும் மொத்தமாக என்னை விட்டுட்டு போயிட்டாங்க என்று அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதான். நானும் பக்கத்திலே இருக்காமல் போயிட்டேன் அண்ணா என்று அவன் சொல்ல,அதிரதனும் அவனை கட்டிக் கொண்டான்.

ரணாவும் ஆத்வியும் அவனை பார்த்து, அண்ணா..உனக்கு ஒன்றுமில்லையே? என்று கேட்கவும் தான் அதீபன் அவனை நகர்த்தி, சாரி அண்ணா..நான் மறந்துட்டேன் என்றான்.

எல்லாருக்கும் தெரியுமா? அதிரதன் கேட்க, அம்மா, அத்தை, பாட்டி, நிதின் அம்மா, அப்பாவுக்கு தெரியாது என்று ரணா சொன்னாள்.

அப்பாவுக்கு? என்று அவன் அவரை பார்த்துக் கொண்டே ஆத்வியிடம் கேட்டான்.

அவருக்கு தெரியாதுண்ணா என்றாள்.

ரொம்ப வலிக்குதா அண்ணா? ரணா கண்ணீருடன் அவனுக்கு அடிபட்ட இடத்தில் கை வைக்க, ஆமாடா வலி இருக்கு. அவனுகள சும்மா விட மாட்டேன் என்று கோபமாக எழுந்தான் அதிரதன். அங்கிருந்த அனைவரையும் பார்த்தான். அங்கிருந்து அவன் நகர, ரேவதி சிவநந்தினியிடமும், தாட்சாயிணி அதீபன் தோளில் வை வைத்துக் கொண்டே ரணா, ஆத்விகா அருகே வந்து அமர்ந்தாள்.

சிவநந்தினி எதையோ பார்ப்பதும் பின் நிதினை பார்ப்பதுமாக இருந்தார். நிதின் அவரை பார்த்து, ரதா இரு. நான் அம்மாவை பார்த்துட்டு வாரேன் என்று அவரிடம் சென்றான்.

“சேர்மன் செழியன்” இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் சுபிர்தன் அதிரதனிடம், நிதின் சார் மேல உங்களுக்கு கோபம் வரலையா சார்? கேட்டான்.  ரவிக்குமார் சுபிர்தனை முறைத்து பார்த்தார்.

அவன் மேல் எதுக்கு கோபம் வரப் போகிறது?

இல்ல, உங்க அம்மாவோட உங்களை விட நெருக்கமாக இருப்பது போல இருக்கு. சின்னதா பொறமை கூடவா உங்களுக்கு இல்லை? அவன் கேட்க, தன் மகன் ஏதும் சொல்லி விடுவானோ? என்று செழியன் பயந்தார்.

“அதெப்படி இல்லாமல் இருக்கும்?” என்று பேருக்கு சொன்னாலும் இருவரையும் தான் பார்த்தான். செழியனுக்கு அப்போது தான் நிம்மதி வந்தது.

உங்களுக்கு யாருமில்லைன்னு வருத்தப்பட்டிருக்கிறாயா? அதிரதன் அவனிடம் கேட்க, நீ யாருப்பா? செழியன் கேட்டார்.

சார், நான் என்று சுபிர்தன் தயங்க, நம்ம நிலையத்துல வளர்ந்த பையன் “சுபிர்தன்” என்று அவன் தோளில் அதிரதன் கையை போட்டான். செழியனும் ரவிக்குமாரும் அதிரதனை ஆச்சர்யமாக பார்த்தான்.

யாரையும் பக்கம் கூட விட மாட்டான். யாரையும் தொட்டு பேச மாட்டான். இந்த சின்ன பையன் தோளில் உரிமையாக கையை போடுறானே? என்று வியந்து பார்த்தனர்.

வருத்தம் இருக்கும் சார். எனக்கு மட்டுமல்ல எங்க எல்லாருக்கும் இருக்கும். புதிதாக ஒரு குடும்பம் உதிக்கப் போகிறார்களா? என்ன? இல்லைல்ல சார். “இருப்பதை வைத்து சிறப்புடன் வாழணும்” என்று அக்கா எப்போதும் சொல்லுவாங்க. அது போல் நாங்க எல்லாருமே குடும்பமா தான் இருக்கோம். எங்க சீனியர்ஸ்ஸை வெளிய பார்த்தால் கூட அண்ணா என்று உரிமையா இப்ப கூட பேசுவோம்.

அப்ப பஞ்சபாண்டவர்கள்? என்று அதிரதன் புருவத்தை உயர்த்தி கண்ணடித்து கேட்க, சுபிர்தன் புன்னகையுடன், நீங்க முதல் முறை சொன்னப்ப எங்களுக்கு கோபம் கூட வந்தது. ஆனால் சார், அது தான் உண்மை. எங்களில் ஒருவன் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை முழுமை பெறாது என்றான்.

நாங்க பஞ்சபாண்டவர்கள் தான். நாங்க ஐவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் தான். என்ன? பாண்டவர்கள் உடன் பிறந்தவர்கள். நாங்க தோழர்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் அவங்களுக்கு குந்திதேவி அம்மா இருப்பாங்க. எங்களுக்கு அக்கா இருக்காங்க என்றான்.

நல்லா பேசுறப்பா என்று ரவிக்குமார் சொல்ல, தினகரனும் சங்கீதனும் வந்தனர். சங்கீதன் சுபிர்தனை பார்த்து விட்டு காவியனை தேடினான்.

சுபிர்தன் அவனை பார்த்து, அவன் வரலை. நான் சாருக்கு உதவியாக வந்தேன் என்று வேண்டாதவனிடம் சொல்வது போல் சொல்ல, அதிரதனும் மற்றவர்களும் அவனை பார்த்தனர்.

“பார்த்தாலே தெரியுது” என்று சங்கீதனும் விறைப்புடன் சொன்னான்.

எதுக்குடா இப்படி பேசுறீங்க? உங்களுக்கு தெரியுமா?

தெரியும். சும்மா பார்த்திருக்கோம் என்றான் சங்கீதன்.

காவியன் தன் நண்பர்களை பற்றி சங்கீதனிடம் உயர்வாக சொல்லி இருப்பான். அதே போல் சங்கீதனை பற்றி இவர்களிடம் உயர்வாக சொல்லி இருப்பான். அதனால் நட்பு பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

ஆம்புலன்ஸ் வந்து இறந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல, உள்ளிருந்தவர்கள் வெளியே வந்தனர். ரணா அப்பொழுது தான் சுபிர்தன், சங்கீதனை பார்த்தாள்.

காவியன் வந்திருப்பானோ? என்று அவள் கண்கள் அல்லாடியது. அவளருகே சென்ற சங்கீதன் அவன் வரலை என்று சொல்ல, வருத்தமாக நின்றாள். அதீபனும் செழியனும் ஆம்புலன்ஸில் செல்ல, மற்றவர்கள் காரில் சென்றனர்.  அதிரதன் காரில் தான் ரணா, சிவநந்தினி, யசோ அத்தை, பாட்டி சென்றனர். காரை சுபிர்தன் தான் ஓட்டினான்.

தம்பி, உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கே? பாட்டி சுபிர்தனிடம் கேட்க, அவன் அதிரதனை பார்த்தான். யசோ அத்தைக்கு நினைவு வந்தது. சுபிர்தன் அதிரதனை பார்த்ததை கவனித்த யசோ அத்தைக்கு ஏதோ இருக்கு. நாம வாயை திறக்க வேண்டாம் என்று நினைக்க, நம்ம நிலையத்துல வளர்ந்த பையன் என்று மட்டும் சொன்னான்.

சரிப்பா, என்று பாட்டி சீட்டில் சாய்ந்து கொண்டார். அதிரதன் தோளில் சாய்ந்து கண்ணை மூடி படுத்திருந்த ரணாவை அவ்வப்போது கவனித்துக் கொண்டே வண்டியை செலுத்தினான் சுபிர்தன்.

நிதினுடன் அவன் குடும்பமும் கிளம்பினார்கள். நிதின் சிவநந்தினியை பார்க்க சென்ற போது, அவர் காட்டியது டேபிளின் சிறு இடுக்கில் கிடந்த அலைபேசியை. அவன் சிவநந்தினியை பார்த்து விட்டு, வேண்டுமென்றே அருகே சென்று அவனது கைக்குட்டையை அதன் மீது போட்டு எடுக்க சென்றான்.

சார், என்ன செய்றீக? என்று “சி.பி.ஐ” ஆள் ஒருவன் கேட்க, என்னோட கைக்குட்டை உள்ள விழுந்திருச்சு சார் என்றான். அவர் எட்டி அதை பார்த்து விட்டு, எடுத்துக்கோங்க என்று நகர்ந்தார். அவன் கைக்குட்டையோடு அலைபேசியை எடுத்து தன் காரில் மறைத்து வைத்தான்.

நிதின் அதிரதனை அழைத்து சொல்ல, செழியனும் ரவிக்குமாரும் அவன் பேசியதை கேட்டு அவனிடம் வேகமாக வந்தனர். ரவிக்குமார் அதிரதன் தோளில் இடித்து விட, ஷ் ஆ..என சத்தமிட்டான் அதிரதன்.

என்னாச்சுப்பா? என்று செழியன் அவன் தோளில் கை வைக்க, அதிரதனுக்கு வலித்தது. நிதின் அதை பார்த்து, அப்பா..நாம அப்புறம் பேசலாமா? என கேட்டான். அவர் தன் மகன் சட்டையை விலக்க, கட்டிட்டது லேசாக தெரிந்தது. வேகமாக சட்டையை விலக்க, சிவநந்தினி நிதினை பார்க்க வந்தார். அவர் பின் யசோதாவும் வந்தார்.

அதிரதன் சட்டையை செழியன் கழற்றி திட்டிக் கொண்டிருந்தார். அவன் அமைதியாக நின்றான். யசோதா பதறி அவனிடம் ஓடி வந்தார். அவன் அவரை பார்த்துக் கொண்டே தன் அம்மாவை பார்த்தான். சிவநந்தினி கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.

அதிரதனுக்கு தான் அவன் அம்மா அருகே வருவது கூட பிடிக்காதே! அதனால் தன் பையனுக்கு அடிப்பட்ட வேதனையில் கண்ணீருடனும், மேலும் நகர முடியாமல் அவனை இப்பொழுதும் தூரத்தில் இருந்து பார்ப்பதுமாய் நின்றவரை பார்த்து முதல் முறையாக அதிரதன் உள்ளம் கசிந்தது. அவனுக்கு அவன் அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று தோன்றியது. எப்பொழுதும் போல் நிதின் ஓடிச் சென்று சிவநந்தினியை அணைத்து விட்டு அங்கிருந்து அழைத்து சென்றான்.

அதிரதனுக்கு சுபிர்தன் கேட்டது நினைவுக்கு வந்தது. அம்மா மீதான பொறாமை மெதுவாக தலையை நீட்டியது. யசோதா பேசுவது அவனுக்கு கேட்கவில்லை. அம்மாவை தேடும் பிள்ளையானான் அதிரதன்.

கண்ணா, என்று யசோதா அதிரதனை பார்த்தான். அவன் கோபமாக இருப்பது தெரிந்தது. எப்பொழுதும் போல் அவன் அம்மா மீது கோபப்படுகிறான் என்று அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் செழியன் கண்ணில் பட்டது அதிரதனின் இறுகிய கைகள்.

அவன் அம்மாவிடம் கோப்படுவான். ஆனால் இந்த அளவிற்கு வெளிப்படையாக காட்ட மாட்டானே? என்று அவர் எண்ணினார்.

முதல்ல அதை ஃபாரன்சிக்கிற்கு அனுப்பி, இந்த அலைபேசியின் கை ரேகை இறந்தவருடையது தானா? என்று பார்க்கணும். யாரையும் நம்ப முடியாது. எல்லாம் முடிந்தவுடன் அதீபனை நம் வீட்டில் விட்டுட்டு பார்ப்போம் என்றான் அதிரதன். செழியனும் ரவிக்குமாரும் ஒத்துக் கொண்டனர்.

தம்பி, இது எப்படி வந்தது?

இது நான் காரில் ஓர் வேலையாக வந்தேன். திரும்பி செல்லும் போது கொல்ல ட்ரை பண்ணாங்க என்று அப்பா அதீபனை நல்லா பார்த்துக்கோங்க. அவன் ஏதும் தவறாக யோசித்து விடாமல் என்றான் அதிரதன்.

சரிப்பா. நீயும் பார்த்து இரு என்றார் செழியன். அங்கிள் நீங்களும் கவனமா இருங்க என்றான் ரவிக்குமாரிடம். அவர் புன்னகையுடன் அதிரதனை பார்த்தார்.

பிரேத பரிசோதனை முடித்து மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் வீட்டிற்குள் கொண்டு செல்லவில்லை.

தம்பி, ரொம்ப நேரம் வச்சிட்டு இருக்கக்கூடாதுப்பா பெரியவர் ஒருவர் சொல்ல, அதீபன் வெளியே ஓரிடத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

இந்த வீட்டு மாப்பிள்ளையை காணோமே? அவர் தானே எல்லாமே செய்யணும்? என்று ஒருவர் சொல்ல, அவர் வர மாட்டார் என்று அதீபன் சத்தமிட்டான்.

வர மாட்டாரா? பொண்டாட்டி சாவுக்கு கூடவா வர மாட்டார்? அப்படி என்ன வேலை கிடக்கு? சேர்மனே இங்க இருக்கார் என்று ஒருவர் சத்தமிட்டார்.

என்னோட அம்மா, அப்பாவுக்கு விவாகரத்து ஆகிடுச்சு என்று கோபமாக கத்தினான் அதீபன்.

அதீபா, என்ன சொல்ற? பாட்டி கோபமாக கேட்டார்.

ஆமா பாட்டி, இருவருக்கும் ஏற்கனவே விவாகரத்து ஆகிடுச்சு?

என்னடா சொல்ற? செழியனும், அதிரதனும் கேட்டனர்.

ஆமா, எல்லாம் ஏற்கனவே முடிஞ்சது என்று அவன் அழுத்தி சொல்ல, செழியனுக்கு அவன் ஏதோ சொல்ல வர்றான் என்று புரிந்தது. அதிரதனுக்கு வீட்டினுள் நடந்தது வெளியே தெரிய வேண்டாமென அவன் கூறுகிறான் என்று தெளிவாக புரிந்தது.

என்னப்பா யாருக்கும் தெரியாமல்? என ஒருவர் கேட்க, அதீபன் தாத்தா அறைக்கு சென்று விவாகாரத்து பத்திரத்தில் இருவரும் கையெழுத்திட்டதை காட்ட,

அட ஆமாப்பா..ரெண்டு பேருமே கையெழுத்து போட்டிருக்காங்க. அப்ப பிள்ளைக்காக தான் சேர்ந்து வாழந்தாங்களோ? ஒருவர் பேச,

யோவ், சும்மா இரு. பெரிய இடத்து விசயம் எதுக்கு? ஆக வேண்டிய காரியத்தை ஆரம்பிங்க. மணிய பாருங்க நாலாச்சு. இப்ப ஆரம்பிச்சா தான் சூரியன் மறையும் முன் அனைத்தையும் முடித்திடலாம் என்றார்.

ஏற்கனவே செழியன் எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்க, அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு செய்தனர். அதீபன் உடைந்த மனதோடு தன் அம்மா, பாட்டி, தாத்தாக்கான எல்லா காரியத்தையும் செழியன் அதிரதனோடு செய்து முடித்து வீட்டிற்கு வந்தனர்.

இரு நாட்களுக்கு எதையும் யாரும் தொடக் கூடாது. அதனால் யாரும் இங்கே இருக்கக்கூடாது. விசாரணைக்கு தேவைப்படும் என்று “சி.பி.ஐ” ஆட்கள் சொல்ல, அதீபனுடன் சிறிது நேரம் இருந்து விட்டு அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

சுபிர்தனுடன் அதிரதனும் அதீபன் கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்திருக்க, பின் சீட்டில் சிவநந்தினி, யசோதா, பாட்டி இருந்தனர். அதிரதன் அவன் அம்மாவை பார்த்துக் கொண்டே வந்தான். அவர் கவலையாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தார். பாட்டி தூங்கி விட, யசோதா யோசனையுடன் சுபிர்தனை பார்த்துக் கொண்டே வந்தார்.

அனைவரையும் கலைக்கும் விதமாக சுபிர்தன் அலைபேசி அழைத்தது. அவன் அதை கட் செய்து விட்டு வண்டியை செலுத்த மீண்டும் மீண்டும் அழைத்தது.

எடுடா அதிரதன் சொல்ல, அவன் அழைப்பை எடுத்தான்.

வண்டி ஓட்டும் போது இப்படி பேசக்கூடாது என்று ஸ்பீக்கரில் போட்டான்.

வினுநேத்ரா அழைத்திருந்தாள். அக்கா, இவன் அழைக்க, என்னடா செய்ற? சாப்பிட்டியா?

ம்ம்..சாப்பிட்டேன் அக்கா.

அங்க எல்லாமே ஓ.கே தான? அவள் கேட்க, இங்க ஓ.கே வான்னு எனக்கே குழப்பமா இருக்கு என்றான். எல்லாரும் அவனையும் அலைபேசியையும் பார்த்தனர்.

குழப்பமா? நியூஸ் முழுவதும் அவங்க குடும்பத்தை பற்றி தான் சென்று கொண்டிருக்கிறது. சரி, நீ ஓ.கே தான? அவள் கேட்க, சுபிர்தன் அதிரதனை பார்த்து விட்டு, எனக்கு என்ன? நான் ஓ.கே தான் என்றான். அதிரதன் புன்னகைத்தான். பின்னிருந்த மூவரும் அவனை பார்த்தனர்.

அக்கா, நீங்க என்ன பண்றீங்க?

நாங்களா? இப்ப தான் மூச்சே விடுறது போல இருக்குடா.

ஏன்க்கா? அங்க ஏதும் பிரச்சனையில்லையே?

பிரச்சனையா? இப்ப தான் பிரச்சனை பக்கமில்லையே? என்றாள்.

அக்கா, என்று அவன் அலைபேசியை வைக்க கையை கொண்டு வந்தான். அதிரதன் அவன் கையில் அடியை போட்டு, பேசு என்று கையை காட்டினான்.

அக்கா, வேண்டாம் சுபிர்தன் சொல்ல, என்னடா வேண்டாம்? சிடுமூஞ்சியா அமைதியா இருந்தா ஏதும் கேட்டா பதில் கூட உங்க சாரு சொல்ல மாட்டாரு. இப்ப பேசியே கழுத்தருக்குறாரு என்றாள். அதீபன் அவன் அண்ணனை பார்க்க, அதிரதன் அலைபேசியை முறைத்தான்.

அக்கா..அழுத்தி அழைத்தவன், வேண்டாம் என்றான் சுபிர்தன்.

உனக்கு தெரியுமா சுபி, அவனுக்கு பெரிய இவன்னு நினைப்பு. பள்ளியில் படிக்கும் போது என்சாம் டைம் மேம் வரல. இவன் நல்லா படிப்பானே சந்தேகத்தை தீர்த்து வைப்பான்னு பக்கத்துல போன கூட பிடிச்சு தள்ளி விட்டுருவான். இடியட். உங்க சாருக்கு திமிரு ரொம்ப ஜாஸ்தி.

ஏய்..யசோதா சத்தமிட, ஷ்..என்று அதிரதன் மூவரையும் பார்த்தான்.

என்னாச்சு? யாருடா? என்று நேத்ரா சுபிர்தனிடம் கேட்க, வெளிய ஒருத்தவங்க பேசுறாங்கக்கா என்றான்.

சரிடா. சீக்கிரம் வாங்க என்று அவள் சொல்ல, அதிரதன் சைகையில் சுபிர்தனிடம் சொல்ல, அவன் பேசும் முன்,

ஏய், எங்க போற? சத்தமிட்டாள்.

அக்கா..என்று கிருஷ்ணன் குரல் கேட்டது.

நில்லுடா, அவள் கத்த, அவனும் நின்றான்.

அவனிடம் சென்று, எங்க ஓட பாக்குற? என்று அவன் காதை திருகினாள் வினுநேத்ரா.

“ஆ…” என்று அவன் கத்தினான்.

அக்கா, விட்ருங்க. இந்த கிருஷ்ணனை அடித்தால் அந்த கிருஷ்ணனுக்கு வலிக்கும்.

ஓ, அப்படியா? அந்த கிருஷ்ணன் எப்போதும் ஒரே இடத்தில் நாள் முழுவதும் நிற்பார். நீயும் நிற்கணுமா? மக்கள் எல்லாரும் சாப்பிட்டால் அவர் சாப்பிட்டது போல். உனக்கு சாப்பாடு வேண்டாம்ல? என்று அவள் கேட்டாள்.

தெய்வமே, இப்படியெல்லாம் சொல்லி பட்டினி போட்டுறாதீங்க என்று அலறினான். வினு நேத்ரா சிரித்தாள். முதல் முறை அவள் சிரிக்கும் சத்தத்தை கேட்கிறான் அதிரதன். அவன் அமைதியாக கவனித்தான்.

சரி, நீ எப்படி காவியனிடமிருந்து தப்பிச்ச?

அதுவாக்கா? வெரி சிம்பிள். என் அலைபேசியில் ஓர் சத்தத்தை எழுப்பினேன். இது போனிலிருந்து தான் வந்தது என்று யாராலும் கண்டறிய முடியாது.

என்னடா புதுசா சொல்ற?

ஆமாக்கா, எங்க சீனியர் கண்டுபிடித்தது? என்று அலைபேசியை பார்த்து, இந்த நேரத்திற்கு அணைந்து இருக்கணுமே? இன்னும் சத்தம் கேட்குது என்று அவன் அலைபேசியை ஆராய்ந்தான்.

அக்கா, இது என்னோட அலைபேசியில் வரலை. என்ன சத்தம் இது? என்று அவன் ஆராய, ஏற்கனவே தேடிக் கொண்டிருந்த காவியன் அவன் நண்பர்கள், ஜீவா, சாரு கண்டறியும் முன் பாம் வெடிக்கும் சத்தம் கேட்டது. சுபிர்தன் பிரேக்கை சட்டென அழுத்தினான்.

ஏய், என்னாச்சு? என்று நேத்ரா கேட்க, கிருஷ்ணன் வேகமாக வீட்டிற்குள் ஓடினான். எல்லாரும் நன்றாக இருந்தார்கள். யுவன் எங்க? நேத்ரா பதற, காரினுள் அனைவரும் திகைத்தனர்.

வினு, என்னாச்சு? என்று அதிரதன் பதட்டமாக, அக்கா..அக்கா..என்று சுபிர்தன் கத்தினான்.

அக்கா, யுவி இங்க இருக்கான். ஒன்றுமில்லை என்று அருள் சத்தம் கொடுக்க, அனைவரும் அங்கு வந்தனர். யுவி என்று சாருவும் நேத்ராவும் அழுது கொண்டே அவனை அணைத்தனர்.

அக்கா..என்று அவன் கையை காட்ட, சிட்டி பக்கம் தான் ஏதோ ஓர் இடத்தில் குண்டு வெடித்தது. அலராம் எப்படி இங்கே வந்தது? காவியன் கேட்க, கிருஷ்ணன் விழித்தான்.

என்னடா பண்ண? காவியன் கேட்க, நான் இந்த அறையிலிருந்து வெளியே போக தான் செய்தேன். ஆனால் என் அலாரம் நின்று விட்டது. இங்க எப்படி அலராம் அடித்தது? என்று எனக்கு தெரியாதுடா என்றான் பாவமாக கிருஷ்ணன்.

இன்னும் சத்தம் கேட்குது? நல்லா கவனிங்க என்ற ஜீவா. பசங்களா நீங்க மேல போய் தேடுங்க. சின்னதாக ஏதாவது கிடைத்தாலும் கொண்டு வாங்க என்றான்.

எல்லாரும் வேகமாக தேடினர். நேத்ரா கால் செய்ததையே மறந்து விட்டாள்.

வினு, நீ இங்கேயே இரு. நான் கீழ பார்க்கிறேன். யுவன் அக்காவோடவே இருக்கணும். ஓ.கே வா? என்று சாருவும் தேடினான்.

அதிரதன் ஜீவாவை அழைத்து, ஏதோ சொல்ல ஜீவா வெளியே ஓடிச் சென்று கார் வைக்கும் இடத்தை பார்த்தான். அங்கே ஏதோ ஒன்று மின்னிக் கொண்டிருந்தது.

பாஸ், இங்க தான் இருக்கு என்று நியூ மாடல்ல டிராக்கிங் டிவைஸ்.

அப்ப, அவன் நம்ம இடத்தை கண்டுபிடிச்சிட்டானோ? அதிரதன் கேட்க,

அது தெரியல பாஸ், எனக்கு இதை பற்றி தெரியும். இது பழுதாகி இருப்பதால் தான் சத்தமிடுகிறது. ஆனால் உங்க காரில் தான் செட் செய்து இருக்காங்க.

ஜீவா, காவியனும் அவன் நண்பர்களும் வந்த காரில் இந்த டிவைசின் தடம் இருக்கான்னு அடியில போய் பாரு என்றான் அதிரதன்.

அப்படி ஏதும் தெரியல பாஸ்.

ஆனால் இதுவரை அங்கே பிரச்சனை இல்லையே?

ஆமா பாஸ், நீங்க கிளம்பியதால் நீங்க இல்லைன்னு தெரிந்து தான் ஏதோ திட்டம் போட்டிருக்காங்களோ? பாஸ், இப்ப நீங்க உங்க கார்ல தான் இருக்கீங்களா? ஜீவா கேட்க, ஆமா என்றான் அதிரதன்.

சார், நீங்க அந்த கார்ல ஏதோ ஆபத்து இருக்குமோன்னு தோணுது பாஸ் என்று ஜீவா சொல்ல, இருக்குமோ என்று அதீபனை நகர வைத்து, யாரையும் பேச வேண்டாமென சைகை செய்து, அனைவரையும் கீழே இறங்க சொல்லி அதிரதன் ஜீவாவிடம் பேசினான்.

மறைவான இடமொன்றில் அனைவரையும் நிற்க வைத்து விட்டு, அதிரதன் காரிடம் செல்ல திரும்பினான். அவனது கார் வெடித்து சிதறியது.

சார்,..என்று ஜீவா பதறினான். சாருவும் மற்றவர்களும் அவனிடம் வந்தனர். பயத்தில் சிவநந்தினி அதிரதனிடம் ஓடி வந்து அழுது கொண்டே அவனை அணைத்தார். அதிரதன் உறைந்து தன் அம்மாவை பார்த்தான். யசோதா அத்தையும் அவனிடம் ஓடி வந்தார். சிவநந்தினியை பார்த்து நின்று விட்டார். அதிரதன் திட்டி விடுவானோ? என்று பாட்டியும் யசோதாவும் பார்க்க, அவன் ஏதும் சொல்லாமல் அவன் அத்தை பாட்டியிடமும் கையை நீட்டினான். எல்லாரும் அவனை அணைத்துக் கொள்ள, அதீபனும் அவனிடம் வந்து அவனை அணைத்தான். சுபிர்தன் புன்னகை கலந்த ஏக்கத்தோடும் எரிந்து கொண்டிருக்கும் காரை பயத்துடனும் பார்த்தான்.

சுயம் வந்த சிவநந்தினி பயத்துடன் விலக, அனைவரும் நகர்ந்தனர். அதிரதன் அவன் அம்மாவை விலக விடாமல் அணைத்து விடுத்தான். பின் சுபிர்தன் முன் வந்து அவனை பார்த்தான்.

என்னாச்சு சார்? தொண்டை அடைக்க பேச முடியாமல் அவன் கேட்க, அதிரதன் அவனை அணைத்தான். சுபிர்தன் அதிரதனை அணைத்து அழுதான்.

சரிடா, ஒன்றுமில்லை. அழாத. இங்க நடந்ததை உங்க அக்காகிட்ட சொன்ன? அவ இங்கேயே கிளம்பி உன்னை பார்க்க வந்துருவா என்று கேலியாக அதிரதன் சொல்ல, இந்நிலையில் பழைய அதிரதனாக இருந்தால் கோபப்பட்டு கத்தி இருப்பான். இவனது மென்மையான இக்குணத்தை இவர்களே இப்பொழுது தான் பார்க்கிறார்கள்.

அவனது பாட்டி அவனிடம் வந்து, உண்மையாக உனக்கு ஒன்றுமில்லையேய்யா? என்று கேட்டார்.

இல்லை. நல்லா தான் இருக்கேன். உங்க பக்கத்துல தான இருந்தேன் என்று அவன் கேட்க, அவர் அவனை உற்றுநோக்கி, “யாருடா அந்த பொண்ணு?” என கேட்டார்.

“நேரம் வரட்டும் சொல்றேன் பாட்டி” என்று பாட்டி கன்னத்தை பிடித்து இழுத்து வெட்கப்பட்டான்.

அண்ணா, நீயா வெட்கப்படுற? என்று அதீபன் கேட்க, இல்லையே என்று அதிரதன் நிமிர்ந்து நிற்க, “சார் இதுக்கு உங்க வெட்கமே பரவாயில்லை” என்று அழுத சுபிர்தன் சிரித்தான்.

நந்து, என்னை பிடி. என்னால நிற்க முடியவில்லை. நம் கண்ணா இந்த அளவு மாறி இருப்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை என்று யசோதா  நடிக்க, சிவநந்தினியும் அதிரதனை பார்த்தார். அவன் குணம் அனைத்தும் அறிந்தவர்கள் நிதினும் செழியனும் மட்டுமே.

என்ன தான் எல்லாரிடமும் பாசம் இருந்தாலும் வெளிகாட்ட மாட்டான். இப்பொழுது இவனுடைய செய்கை அதீபனையும் வியக்க வைத்தது.

சார், நாம இங்கிருந்து சீக்கிரம் கிளம்பணும் என்றான் சுபிர்தன். மற்றொரு காரை வர வைத்து அதில் ஏறி வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.

சுபிர்தன் வீட்டினுள் வர மாட்டேன் என்று அதிரதனுடன் பிடிவாதம் செய்து கொண்டிருந்தான்.

வீட்டிற்கு ஏற்கனவே செழியனும் மற்றவர்களும் முன்பே வந்திருந்தனர். சுபிர்தன் செய்வதை பார்த்து, “டேய் ரொம்ப அடம் பண்ணாதடா” என்று உள்ள வாடா பாட்டி சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார். சிவநந்தினி இருவரையும் பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல,

கண்ணா, எதுக்கு அவனிடம் கேட்டுக்கிட்டு தூக்குடா என்றார் யசோதா.

என்னது? என்று சுபிர்தன் பின்னே சென்று கொண்டே ரணாவை பார்த்தான். அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அதீபன் அவனறைக்கு சென்று விட சிவநந்தினியும் அவன் பின்னே சென்றார். ரேவதியும் தாட்சாயிணியும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிதின் அவனை பார்த்து, ரதா..அவனோட கையை பிடி, காலை பிடிக்கிறேன் என்று இருவரும் செய்வதை பார்த்து, “மை காட்” என்னை விட்டுருங்க. நான் வேணும்ன்னா நிலையத்துக்கு போயிட்டு வர்றேனே சார் என்றான்.

அதெல்லாம் ஓட முடியாது. வா..என்று நிதின் அவனை தனியாகவே பிடித்து இழுத்து வந்தான். அதிரதன் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தான்.

ஆத்விகா அவனை பார்த்து, அண்ணா “உள்ள வா. என்ன பண்ற?” கேட்டாள்.

கேட்டருகே சென்று வெளியே எட்டி பார்த்து விட்டு அதிரதன் உள்ளே வந்தான். ஆனாலும் அவன் நின்று நின்று வர, “என்னாச்சுடா கண்ணா?” உன் முகமே சரியில்லை யசோதா கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.

இதுதான் வாய்ப்பு என்று சுபிர்தன் நகர, சுபி, நில்லு வெளிய போக வேண்டாம் என்ற அதிரதன், எல்லாரும் அறைக்கு போய் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்க. போங்க என்று அதிரதன் சத்தமிட்டான்.

தம்பி, என்னாச்சுப்பா? என்று செழியன் கேட்க, போங்க என்று மீண்டும் சத்தமிட்டான். அதீபனும் சிவநந்தினியும் எட்டிப் பார்த்தனர்.

ஆத்வி, ரணா, தாட்சு எல்லாரும் அப்பா அறைக்கு போங்க என்ற அதிரதன், பாட்டி உங்க அறைக்கு இவனை கூட்டிட்டு போங்க. யசோ நீயும் பாட்டியோட இரு. யாரும் கதவை திறக்கக்கூடாது. அங்கிள் உள்ளே இருந்தாலும் கவனமா இருங்க என்று சொல்லி விட்டு அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்தான். அதீபன் கீழிறங்க, நீ அம்மாவ பார்த்துக்கோ அதீபா. உள்ள போ என்று சத்தமிட்டான். ஏதோ பிரச்சனை? என்று அனைவருக்கும் தெளிவாக புரிந்தது.

 

 

 

Advertisement