Advertisement

அத்தியாயம் 33

மறுநாள் காலை ரேவதி மேல் கையை போட்டுக் கொண்டு அவர் மகன் நிதின் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்த அவர் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து விட்டு தன் கணவனை எழுப்பினார். அவரும் மகிழ்ச்சியுடன் தன் மகனை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தார். இருவரும் தன் மகனை ரசித்து விட்டு அவன் நெற்றியில் இதழ் பதித்து விட்டு வெளியே வந்தனர். நிதின் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

சிவநந்தினி ஏற்கனவே எழுந்து அவர் வேலையை கவனிக்க ஆயத்தமாகி இருந்தார். ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அப்பொழுது உள்ளே நுழைந்தார் யசோதா. அனைவரையும் பார்த்து புன்னகையுடன் வந்தார். ஆனால் அனைவர் முகமும் வாடி இருந்தது. அதீபன் சோபாவில் அமர்ந்திருந்தான்.

ரணா அவனை பார்த்து, அவனை இடித்துக் கொண்டு அமர்ந்து நடுராத்திரில பியானோ வாசித்து கொல்லறடா? அவள் கேட்க, அவன் அமைதியாகவே இருந்தான்.

நிதின், ஆத்வியும் வந்து அமர, தாட்சாயிணி வந்து அவள் அம்மாவிடம் அமர்ந்தாள். அவளை நகர்த்திய அவள் அம்மா, என்னடி இது? என்று கேட்க, அம்மா பார்த்தால் தெரியலை? தூரத்துல இருக்கிறவங்களோட பேசுற அலைபேசி என்றாள்.

அட, அட..என்னவொரு விளக்கம்? நிதின் கலாய்த்தான். அவள் அவனை முறைத்தாள்.

அடியேய், அது தெரியுது. நைட் யாரிடம் பேசுன? அவர் கேட்க, அவள் நேராக அமர்ந்திருந்த அதீபனை பார்த்தாள்.

பக்கத்துல இருந்து அலைபேசியில் அண்ணாவுடன் பேசுனீங்களா? ரணா கேட்க, இல்ல என்று வேகமாக நகர்ந்தாள்.

நில்லுடி, என்று ரேவதி எழுந்தார்.

அம்மா, அவன் தான் கால் பண்ணான். செக் பண்ணி பாரேன். நீங்க இத்தனை பேர் இருக்கும் போது நான் எப்படி வெளிய போவேன்?

அப்ப, அவன் உன்னை அழைத்திருக்கானா? ரேவதி கேட்க, அய்யோ.. உலறிட்டேனோ? என்று தலையை பிடித்து, அம்மா அப்படியே நில்லுங்க. உங்க பின்னாடி என்று தாட்சாயிணி சொல்ல சிலையாக ரேவதி நிற்க, ரவிக்குமார் சிரித்தார்.

நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வாரேன் என்று அவள் ஓட, மகனே நிதின் அவளை இழுத்துட்டு வா என்று ரேவதி தன் மகனுக்கு கட்டளையிட, தாட்சு நில்லு..என்று நிதின் அவளை இழுத்து வந்தான்.

சோபாவில் அவளை பிடித்து அழுத்தி அவன் அமர, சொல்லுடி கிஷோர் தான?

ஆமாம்மா. விசயம் வேற. நான் எத்தனை முறை சொன்னாலும் நம்பவே மாட்டேங்கிற என்ற தாட்சாயிணி வாயை அடைத்தார் ரேவதி.

எதுக்கு கால் பண்ணான்?

அவனுக்கு கெல்ப் வேணுமாம். இந்த சந்தீப் குரங்கு என்று அவன் கவிதை நினைவு வர..அம்மா, செம்ம விசயம் இருக்கு என்று சந்தீப் வருணித்ததை சொல்ல எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அதீபன் ஏதோ யோசனையில் இருந்தான். நிதின் அவனிடம் வந்து, நாம வெளிய போயிட்டு வரலாமா? நிதின் கேட்க, வரிசையாக நான்..நான்..என்று எழுந்து நின்றனர்.

ஏன்டி, நான் அழைத்ததற்கு எவளும் வர மாட்டேன்னு சொன்னீங்க? இப்ப என்னடி வேகமாக எழுந்து நிக்குறீங்க? யசோதா கேட்டுக் கொண்டே அதீபனிடம் வந்து, என்னாச்சுடா கண்ணா? உன்னோட க்யூட் சிரிப்பை பார்க்க வந்தால் நீ இவ்வளவு சோகமா இருக்க? என்று கேட்டார்.

சித்தி, இப்ப எதுவும் அவனிடம் கேட்காதீங்க? நிதின் சொல்ல, அப்பாடா..ஒருவழியா உறவு முறையை கூறி விட்டாய்? இப்ப தான ஏதோ முழுதானது போல் இருக்கு என்றார் யசோதா.

நீ சொல்லுடி? ரேவதி தாட்சாயிணியிடம் கேட்க, அம்மா, சந்தீப்புக்கு “பிரேக் அப்”பாம். பேசியே சாவடிக்கிறான். அவனை ஏதாவது செய்ய சொல்லி தான் கிஷோர் அழைப்பு விடுத்தான். போதுமா? என்று அவள் நகர, ரணாவின் மாடர்ன் போஸில் நீட்டிய காலில் தாட்சாயிணி தடுக்க, நிதின் அவளை பிடிக்கிறேன் என்று அவனும் கீழே விழுந்தான். அனைவரும் சிரியாய் சிரித்தனர்.

அண்ணா, நானா விழுந்திருந்தால் கூட இவ்வளவு அசிங்கம் நடைபெற்றிருக்காது என்று திரும்பினாள்.. ரவிக்குமார் தன் பொண்ணை பார்த்து சிரித்தார்.

அப்பா, எல்லாருக்கும் என்னை பார்த்தால் எப்படி தெரியுது? என்று கோபமாக சோபா இடுக்கில் மாட்டிய ஆடையை கவனிக்காமல் எழ போனவளை,

தாட்சு, எழாத என்று அதீபன்  எழுந்து வந்து சோபாவை லேசாக நகர்த்தினான். அவள் ஆடை வெளியே வந்தது.

“தேங்க்ஸ் மாமா” என்று அவள் அனைவர் முன்னும் கூறினாள். எல்லாரும் அவளை பார்க்க, எழுந்து ஆடையை உதறி விட்டு, அப்பா நீங்க எப்படி சிரிக்கலாம்? மாமாவுக்கு இருக்கும் அக்கறை கூட உங்களிடம் இல்லை. என்னோட பேசாதீங்க..பை..எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அவள் செல்ல,

அம்மாடி, பார்த்து போ. இப்ப உன்னை பார்க்க உன் அறைக்கு வந்தேனா? அங்க பெருசா கரப்பான் பூச்சி உன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தது என்றார் ரவிக்குமார்.

படுக்கையிலா? என்று வேகமாக அவரிடம் ஓடி வந்து, அப்பா..அது போயிருச்சா? பிடிச்சு கீழ போட்டீங்களா? இல்லை நீங்க தான் உள்ள போட்டீங்களா? நைட் அதோடு தான் தூங்கினேனா? ஆமா இரவு மாமா அறையில இருந்த பின் என்ன நடந்தது? எப்படி அறைக்கு வந்தேன்? அவள் கேட்க,

ஹ..உன் மாமன் தான் தூக்கிட்டு வந்து உன்னை உன்னறையில் படுக்க போட்டான்.

அண்ணா, லூசாடா நீ? மாமா எப்படி? என்று அவள் அதீபனை பார்க்க, அவன் அவளை பார்த்து, இதுல என்ன இருக்கு? என்றான்.

“இதுல என்ன இருக்கா?” மாமா நீங்க தான் கரப்பான்பூச்சிய பிடிச்சு என்னோட அறையில போட்டீங்களா? என்று கோபமாக தாட்சாயிணி அதீபன் அருகே வந்தாள்.

எனக்கு வேற வேலை இல்லையா? அவன் கேட்க, நீ ரொம்ப மோசம்டா அதீபா என்று அவனிடம் சண்டை போட தொடங்கினாள். அவளது அலைபேசி அவளை அழைக்க, நான் பேசிட்டு வந்து வச்சுக்கிறேன் என்று அவள் அம்மா கையிலிருந்து பிடுங்கி அமர்ந்தாள்.

வைசு, சொல்லு?

தாட்சு, அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சு போச்சு. இன்று மாலை என்னை பொண்ணு பார்க்க மாமா ஊர்ல இருந்து வர்றாங்க? என்று அழுதாள் வைசாலி.

வைசு, அழாத. இதுக்கு தான் கிஷோரிடம் முதலிலே சொல்ல சொன்னேன்.

ப்ளீஸ் தாட்சு, எனக்கு கெல்ப் பண்ணு. நான் அவனிடம் சொல்லணும். இன்னும் இரண்டு மணி நேரத்தில் அம்மா பொருட்கள் வாங்க கடைக்கு போறாங்க. அவனை எங்க வீட்டுக்கு பக்கமிருக்கும் அம்மன் கோவிலுக்கு வர சொல்லு ப்ளீஸ் என்று அழுது விட்டு, அம்மா வாராங்க என்று அலைபேசியை வைத்து விட்டாள்.

ஏய் இருடி, என்ற தாட்சாயிணி இவளை..என்று நிறுத்தி எல்லாரும் அவளை பார்ப்பதை பார்த்து அவள் அம்மாவிடம்,

அம்மா, வைசுவை உனக்கு பிடிக்கும்ல்ல?

எதுக்கு திடீர்ன்னு கேக்குற?

சொல்லும்மா?

ஆமா, பிடிக்கும். ரொம்ப நல்ல பொண்ணு. அமைதியா இருப்பா.

ஹ..அவளுக்கு இப்ப ஒரு பிரச்சனை? அவளை அவளோட மாமா பொண்ணு பார்க்க வரப் போறாங்களாம்?

அட, நல்ல விசயமாச்சே. இதுல என்ன பிரச்சனை?

அம்மா, அவளுக்கு மாமாவை கல்யாணம் பண்ண விருப்பமில்லை. அழுறா?

அப்புறம்? என்று அவள் அம்மா முகம் மாற,

அதுனால அவளோட அம்மாவிடம், “அவள் கிஷோரை லவ் பண்றதை சொல்லி பேசணும்” என்று கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்து கொண்டே கேட்டாள்.

ஏய், என்ன விளையாடுறியா? நல்ல பையனா சொன்னா கூட நான் பார்ப்பேன். அதை விட்டு அவனை..

அம்மா, அவனுக்கென்ன? அவன் நல்லவன் தான். சும்மா சும்மா அவனை திட்டிக்கிட்டே இருக்கீங்க? சீறினாள் தாட்சாயிணி.

அவனை சொன்னால் உனக்கென்ன கோபம் வருது? நிதின் கேட்டான்.

அவன் என்னோட ப்ரெண்டு. அதனால் கோபம் என்ன? அதற்கு மேலும் வரும் என்றாள்.

யாருமா அவன்? நீங்க அவன் மேல கோபப்படுறீங்க? இவ இப்படி அவன் சார்பா பேசுறா? நிதின் கேட்க,

அவன் அம்மா, அப்பா பேச்சை கேட்காமல் அவங்கள மீறி வெளிய வந்து பாக்ஸிங்கில் சேர்ந்து போறவன் வர்றவனிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கான் என்று அம்மா சொல்ல,

அம்மா, போதும். இதுக்கு மேல அவனை பத்தி ஏதாவது பேசுன அவ்வளவு தான்?

அவனுக்காக என்னோட சண்டை போடுற? உனக்கு அவனை பிடிச்சிருக்குல்லடி என்று அம்மா கேட்க, தாட்சாயிணிக்கு கோபம் மேலும் ஏறியது.

அம்மா, காதலிச்சா தான் சப்போர்ட்டா இருக்கணும்ன்னு இல்லை. சின்ன வயசுல இருந்து பெற்றோர் சொல்லை தட்டாமல் வளர்ந்தவன் தான். பள்ளியில் அவன் பாக்ஸிங்கில் இருந்த போது அவங்க யாருக்கும் பிரச்சனை இல்லை. அவன் அவங்களுக்காக தான் அவனுக்கு கிடைத்த வாய்ப்பை விட்டு எங்களுடனே கல்லூரியில் வந்து சேர்ந்தான்.

படித்து முடித்தும் அவனுக்கு பிடித்ததை பார்க்காமல் வேலைக்கு இவங்களாகவே அபாயிண்ட் பண்ணி வச்சிருக்காங்க.

அப்புறம் தான் அவன் கோபப்பட்டு வெளிய வந்தான். இன்னும் ஒரு வாரத்துல கூட டோர்னமென்ட் இருக்கு. அவன் நல்லவன் இல்லைன்னா. அதீபனையும் நல்லவன் இல்லைன்னு சொல்லுவீங்களா? என்று பட்டென கேட்டு விட்டாள். அவன் நிமிர்த்து அவளை முறைத்து பார்த்தான்.

ஏய், என் பிள்ளைய என்ன பேசுக்கிட்டு இருக்க? என்று கோபமுடன் சிவநந்தினி வர, அத்தை நீங்க தலையிடாதீங்க. நான் என்னோட அம்மாவிடம் பேசிக்கிட்டு இருக்கேன்.

அதுக்கு என் பிள்ளைய எதுக்குடி இழுக்குற?

நான் எங்கே இழுத்தேன்? நான் பக்கத்துல நிக்க தான செய்றேன் என்றாள்.

“ஓய், அமைதியா உட்கார்ந்திரு. இல்லை யாரிடமாவது அடி வாங்கிடுவ” நிதின் எச்சரித்தான். ஆமாம்மா, மாப்பிள்ளய எதுக்கு பேசுற?

மாமா, நிர்மலா அத்தை உங்களிடம் எத்தனை முறை கம்பெனிக்கு போன்னு சொல்லி இருப்பாங்க. நீங்க கேட்டீங்களா? உங்க மியூசிக்க தான கட்டிட்டு அழுதீங்க? இப்ப வரை அப்படி தான். இப்ப கூட அதிரதன் மாமாவுக்கு பதிலா தான போறீங்க?

சும்மா இருடி ரேவதி சொல்ல, நான் மாமாவை குறை சொல்லலை. நான் சப்போர்ட் தான் பண்றேன். கிஷோர் மாதிரி தான் மாமாவும். மாமா சூப்பரா கிதார் ப்ளே பண்ணுவாங்க தெரியுமா? அவங்களுக்கும் அவங்க ப்ரெண்ட்ஸூக்கும் எங்க பள்ளி கல்லூரியில் நிறைய விசிறிகள் இருக்காங்க. ஏன் மாமாவுக்கும், அவங்க குரூப்ல இருக்கிற மாறா, மானசா எல்லாரும் எனக்கும் பிடிக்கும். அதுவும் மானசா அக்கா பியானோ ப்ளே பண்ணுவாங்களே! வேற லெவல்ல இருக்கும். நான் அவங்களோட பியானோ ஃபேன் என்றாள். அதீபன் ஆச்சர்யமாக அவளை பார்த்தான்.

அதனால் தாங்கள் கூற வருவது..? ரணா கேட்க, நான் என்னத்த சொல்ல? சொன்னா எல்லாருக்கும் புரியவா போகுது. பெத்தவங்களே இப்படி தான் ரொம்ப மோசம். புள்ளைகளுக்கு பிடிச்சதை செய்யவே விட மாட்டாங்க என்று அமர்ந்தாள்.

மேடமுக்கு, தண்ணீர் வேணுமா? நிதின் கிண்டலாக கேட்டான்.

போடா..போய், எடுத்துட்டு வா.

என்ன? நிதின் கேட்க, நீ தான கேட்ட? எடுத்துட்டு வா..என்றாள்.

கிஷோருக்கும் மாமாவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். அவன் கோபத்தில் பெற்றோரை விட்டு அவன் கனவை நோக்கி செல்கிறான். மாமா அம்மாவை விட்டு போக மனமில்லாமல் எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க என்று அதீபனை பார்த்தாள்.

அவன் விரக்தி சிரிப்புடன், என்னால அம்மாவை விட்டு செல்ல முடியாமலும், அவங்க சொல்றதை கேட்க முடியாமலும் தான் தவித்துக் கொண்டிருக்கிறேன். இதுல இந்த அப்பா வேற? நான் என்ன தான் செய்றது? என்று பிரிதாபமாக கேட்டான்.

மாமா, நோ..வொரி என்று அவனிடம் வந்து  மெதுவாக பேசினாள். நான் முதல்ல என்னோட ப்ரெண்டு வைசு காதலுக்கு உதவிட்டு வாரேன். நாம ஆன்ட்டிய ஒத்துக்க வைப்போம் என்றாள்.

நீ சொன்னா? அவங்க சரின்னு கேட்பாங்கன்னு நினைக்கிறியா?

அதெல்லாம் கேட்பாங்க மாமா. நான் கிஷோரிடம் சொல்ல வேண்டியதை சொல்லீட்டு வந்துடுறேன் என்று எழுந்து சென்றாள்.

கிஷோரிடம் அவள் சொல்ல, நல்லது அவள் கல்யாணம் பண்ணிக்கட்டும். என்னை எதற்கு அவள் சந்திக்கணும்?

ப்ளீஸ்டா. ஒரு முறை தான். நானும் வாரேன் என்று அவள் சொல்ல, சரி எப்ப வரணும்? அவன் கேட்க, எட்டு மணிக்கு வந்துரு என்று தாட்சாயிணி சொல்ல, அவன் வைத்து விட்டான்.

அனைவரிடமும் வந்து ஒவ்வொருவராக அலசினாள். யார் உதவ வருவாங்க? என்று அவள் குடும்பம் இந்த விசயத்தில் உதவ மாட்டாங்கன்னு அவளுக்கு நன்றாக தெரியும். எல்லாரையும் பார்த்து விட்டு, அதீபனை பார்த்து அமைதியாக அவனருகே வந்து அமர்ந்தாள்.

இவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இருந்த? இப்ப ரொம்ப அமைதியா இருக்க? ஆத்விகா கேட்க, அவளோ மனதினுள் மாமாவிடம் எப்படி உதவி கேட்பது? என்ற யோசனையில் இருந்தாள்.

அதீபன் அவள் கையை சுரண்ட, அவனை பார்த்தாள்.

அவன் ஆத்விகாவிடம் கண்ணை காட்ட, அவளை புரியாமல் தாட்சாயிணி பார்த்தாள்.

நீ இந்த உலகத்துலவே இல்லையோ? அவள் கேட்க, அண்ணி..ஒன்றுமில்லை என்று அதீபனை பார்த்தாள்

ஏய், என்ன சொல்லீட்டியா? இனி இந்த விசயமா யாரிடமும் நீ பேசக் கூடாது ரேவதி அவள் அலைபேசியை பிடுங்க வந்தார்.

அதீபன் அருகே வந்து, மாமா அம்மாவிடமிருந்து என்னை காப்பாத்துனீங்கன்னா. நாம யாருக்கும் தெரியாமல் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்றாள். அவன் அவளை பார்த்தான்.

என்னாச்சு? வேண்டாமா? என்று அவனிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவள் அம்மாவை தடுத்து, அத்தை அதெல்லாம் ஏதும் செய்ய மாட்டாள் என்றான். எல்லாரும் அவனை பார்த்தனர். ரேவதி அவளை முறைத்துக் கொண்டே நகர்ந்தார்.

அய்யோ மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல நாம வெளிய போகணும்.

நாமலா?

ஆமா மாமா, இங்க யாரும் எனக்குஉதவியே செய்ய மாட்டாங்க. சேடிஸ்ட்..புரியாதவங்க. மாமா, நீங்க என்னோட கோவிலுக்கு வருவீங்கல்ல. கிஷோரிடம் வைசு காதலை மட்டும் சொன்னால் கூட போதும் என்றாள்.

ஏய், என்ன சொல்லுற? நாம எப்படி வெளிய போக முடியும்?

அங்க என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? சிவநந்தினி கேட்க, அத்தை எனக்கு மனசே சரியில்லை. அம்மா என்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டாங்க. நான் கோவிலுக்கு போகணும்? நீங்க வர்றீங்களா?

கோவிலுக்கா? ரேவதி கோபமாக எழுந்து, சரி நான் வாரேன் என்றார்.

கதை கெட்டது போ. அத்தை அம்மா வேண்டாம். நாம போகலாம். நமக்கு பாதுகாப்புக்கு மாமா வருவாங்க என்றாள். எல்லாரும் அதீபனை பார்த்தனர்.

அம்மா, சொன்னா போகலாம் என்றான்.

என்ன அண்ணா? நீயா கோவிலுக்கு போகப் போற? உனக்கு கோவில் எப்படி இருக்கும்ன்னு தெரியுமா? ரணா கேட்க, ஆத்விகா நிதின் காதில் இருவரும் ஜோடியா சுத்த திட்டம் போட்டுட்டாங்க. ஆனால் நம்ம பேச கூட முடியல என்றாள்.

அப்படியா? நாமும் போகலாமா?

போகலாமா? ஆர்வமாக அவள் கேட்க, போகலாம். ஆனால் மாமாவுக்கு ஆத்வி முத்தம் வேண்டுமே?

ச்சீ..போடா என்றாள்.

என்ன கேட்டுட்டேன்? ச்சீன்னு சொல்ற?

அக்கா, அண்ணிய சொல்லீட்டு நீ இப்ப என்ன பண்ற? ரணா கோபமாக கேட்டாள். நிதினுக்கு தான் அவள் காதல் தெரியுமே?

உன்னோட அக்காவுக்கு முத்தம் வேணுமாம் குட்டிம்மா நிதின் சொல்ல, டேய், என்ன மாத்தி பேசுற? என்று கேட்டுக் கொண்டே அவன் தொடையில் “நறுக்கென” கிள்ளினாள் ஆத்விகா. ரணாவிற்கு கடுப்பாக இருந்தது. எழுந்து உள்ளே சென்றாள்.

ஏம்மா, அவன் கண்டிப்பா வரணுமா? சிவநந்தினி கேட்க, அதீபன் இருவரையும் பார்த்தான்.

அத்தை, மாமா வரக் கூடாதா? அவள் முகத்தை சோகமாக வைத்திருக்க, சிவநந்தினி புன்னகையுடன் வரலாம்மா. ஆனால் அவன் ஆபிஸிக்கு போகணுமே? நானும் அவரை கிளப்பணுமே?

சரிங்கத்த..நானே போய்க்கிறேன் என்றாள். நிதினுக்கு அவள் அந்த பசங்களுக்கு உதவ நினைக்கிறாள் என்று புரிந்தது.

எட்டு மணிக்கு தான போயிட்டு வரட்டும்மா. அவனே அதிசயமா கோவிலுக்கு போறேன்னு சொல்லி இருக்கான் என்ற நிதின், தாட்சு ஒரு மணி நேரம் ஆகுமா? நிதின் கேட்க,

அண்ணா, அவ்வளவு நேரம் ஆகாது. அரை மணி நேரம் தான் ஆகும் என்றாள்.

தாட்சு எதுக்கு தனியே போகணும்? அவன் தான் போகிறேன்னு சொல்றான்ல்ல. இருக்கிற நிலைமையில துணைக்கு போயிட்டு தான் வரட்டுமே? நிதின் கேட்க, பேச வாயெடுத்த ரேவதி கையை அவர் கணவர் பிடித்தார்.

அம்மா, அப்பா நீங்க என்ன சொல்றீங்க? அவன் கேட்க, அதனால என்ன? போயிட்டு வரட்டும் என்ற ரவிக்குமார் வேறெங்கும் நிற்காமல் பத்திரமா இருவரும் வீட்டுக்கு வரணும் என்றார்.

யார் எங்கே போகப் போறாங்க? என்று செழியன் கேட்டுக் கொண்டே அறையிலிருந்து வந்தார். நிதின் விசயத்தை சொல்ல, அதீபா..காட்ஸ்ஸை அழைச்சிட்டு போகணும் என்றார்.

சரி தயாராகி கிளம்புங்க என்றான் நிதின்.

அதீபன் தாட்சாயிணியை பார்த்து விட்டு செல்ல, நீ அண்ணாவா மாமா வேல பாக்குற? ஆத்விகா சொல்ல, நிதின் புன்னகைத்தான்.

நான் உன்னை பாராட்டவா செய்தேன். திட்டுறேன். சிரிக்கிற என்று அவள் செல்ல, அனைவரும் கலைந்து சென்றனர்.

ரேவதி அறைக்கு வந்து தன் கணவரிடம், என்ன செய்றீங்க? அந்த பையனோட எதுக்கு அனுப்புறீங்க? மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா தப்பா எடுத்துக்க போறாரு என்றார் கோபமாக.

இல்லம்மா. அதிரதன் மாப்பிள்ளைக்கு வேற பொண்ணை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஆனால் அவர் நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு உறுதியா சொல்லீட்டாரு.

அப்ப வேற மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான? முகத்தை திருப்பினார் ரேவதி.

நம்ம பொண்ணுக்கு ஏன் இளைய மாப்பிள்ளையை கட்டிக்க கேட்க கூடாது என்று அவர் கேட்டவுடன், கண்டிப்பாக முடியாது என்றார் ரேவதி.

ஏம்மா?

என்ன கேக்குறீங்க? அந்த பையன் எந்த வேலையும் பார்க்காமல் இரு வருடங்களாக வீட்ல சும்மா தான் இருக்கான். அவனை நம்ம பொண்ணுக்கு கட்டி வைக்க முடியாது. இதை சொல்லி தான் நம்ம பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கத்துனா? நீ இப்படி பேசுனது தெரிஞ்சா செம்மையா கோபப்படுவா என்றார்.

அவ கோபப்பட்டா? பட்டுட்டு போகட்டும். பிள்ளைய பார்த்துக்க நல்ல வேலை வேண்டாமா? இவனை எப்படி முடித்து வைப்பது? அவன் அப்பா வேற, என்ன நினைப்புடன் இங்கே இருந்திருக்கான். அவனை போல் இவனும் இருந்தால் என்ன செய்வது? அந்த பையனோட அம்மா சிவநந்தியா இருந்தா கூட நான் ஒத்துட்டு இருந்திருப்பேன். அந்த நிர்மலாவுடன் நம்ம பொண்ணு ரொம்ப கஷ்டப்படணும். உங்களுக்கு ஏதும் தெரியாது.

இல்லம்மா. பையன் ரொம்ப நல்ல பையன் தான். அவங்க அம்மா, அப்பா இப்படின்னா? அவன் என்ன செய்வான்?

அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் நல்லவன்னு ஒத்துக்கிறேன். ஆனால் அவனுடன் மட்டும் நம்ம பொண்ணு இருக்க போறதில்லையே? நந்து கஷ்டப்பட்ட மாதிரி அந்த நிர்மலாகிட்ட என்னால என் பொண்ணை விட முடியாது என்று சத்தமிட்டார்.

அதீபனுடன் தாட்சாயிணி கோவிலுக்கு போக அவள் அப்பா தான் ஒத்துக் கொண்டார். ஆனால் ரேவதி முகம் மாறியதை பார்த்தது அதீபனுக்குள் உறுத்தியது. அதனால் அவருடன் பேசலாம் என்று மீண்டும் கீழிறங்கி வந்தான்.

வந்தவன் இருவர் அறைப்பக்கம் வந்தான். அவர்கள் பேசுவதை கேட்டு அவன் கண்கள் கலங்கியது. கண்ணீருடன் அவனறைக்கு சென்று கதவை தாழிட்டு அழுதான்.

சற்று நேரத்தில் தயாராகி தாட்சாயிணி அதீபன் அறையில் வந்து நின்று கதவை தட்டினாள். அவனும் தயாராகி கதவை திறந்தான். இருவரும் சேர்ந்து கீழே வர, செழியனும் சிவநந்தினியும் இருவரையும் பார்த்து பிரம்மித்து நின்றனர். பின் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

அறையை விட்டு வெளியே வந்த ரேவதியும் அவர்களை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார். என்னமா, நல்லா இருக்காங்கல்ல? ரவிக்குமார் தன் மனைவியை பார்க்க, இல்லை. நன்றாக இல்லை என்று மழுப்பினார் ரேவதி.

நேராக ரேவதியிடம் வந்து, நீங்களும் வாங்க ஆன்ட்டி. கோவிலுக்கு போகலாம் என்று அதீபன் அழைக்க, தாட்சாயிணியை அவனை முறைத்தாள்.

ரேவதி புன்னகையுடன், வேண்டாம்ப்பா. நீங்க போயிட்டு வாங்க என்று ரவிக்குமாரை பார்த்து முறைத்தார்.

செழியன் அவர்களிடம் வந்து கவனமா போயிட்டு வாங்க. தாட்சு, நீ நிஜமாகவே மனசு சரியில்லன்னு தான் போகணும்ன்னு நினைக்கிறியா? அவர் கேட்க,

மாமா..நிஜமா பிராமிஸ் என்று அவள் தலையில் கை வைக்க சென்றவள் கையை தட்டி விட்டான் அதீபன். இருவரும் கிளம்பினர்.

டேய், வந்துட்டியா? தாட்சாயிணி கிஷோரிடம் கேட்க, நான் மட்டுமல்ல அவளும் வந்துட்டா. என்னை தேடிகிட்டு இருக்கா? நீ எங்க இருக்க? அவன் கேட்டான்.

நாங்களும் வந்துட்டோம்.

நாங்களா?

ஆமா, அதீபன் மாமாவோட தான் வந்துருக்கேன்.

பாருடா. சொல்லவேயில்லை அவன் கிண்டலாக கேட்க, சும்மா இருடா என்று காரிலிருந்து இறங்கினாள்.

நீ அவளிடம் பேசு அவன் சொல்ல, அவன் வைசாலியை நோக்கி சென்றான்.

அதீபன் வெளியே நின்று ஆபிஸ் கால் பேசிக் கொண்டிருந்தான். அவன் முன் வந்த தாட்சாயிணி, அவன் கையை பிடித்து “சீக்கிரம் வாங்க” என்று இழுத்து சென்றாள்.

கோவிலினுள் இருவரும் ஒன்றாக காலடி எடுத்து வைக்க, மணி சத்தம் காதை கிழித்தது. அவன் அலைபேசியை வைத்தான்.

மாமா, சூப்பர் டைமிங். பூஜை நடக்குது போல என்று அவன் கையை பிடித்துக் கொண்டே உள்ளே சென்றாள். சாமி ஊர்வலம் ஆரம்பிக்க, ஆராத்தியை தொட்டு கும்பிட்டு மாமா எடுத்துக்கோங்க என்றாள்.

நானா? என்று அதை பார்த்துக் கொண்டே நின்றான்.

தம்பி, எடுத்துக்கோப்பா பக்கமிருந்தவர் சொல்ல, மாமா இங்க பாருங்க என்று ஆராத்தியை தொட்டு அவன் பக்கம் காட்டி விட்டு, விபூதி வைத்து விட்டாள். அவன் அவளை பார்க்க, வாங்க உள்ள போகலாம் என்று இறைவனை பார்த்து. எப்படியாவது வைசு பிராபிளம் சால்வ் ஆகணும் என்று அவளாகவே கடவுளிடம் முறையிட்டுக் கொண்டே சென்றாள்.

இருவரையும் பார்த்து, மாமா அங்க இருக்காங்க. வாங்க என்று குளத்தின் தூணிற்கு அருகே நின்று கொண்டிருந்த தன் நண்பர்கள் அருகே வந்து,  “வாங்க என்ன செய்றாங்க பார்க்கலாம்?” என்று பக்கத்து தூணின் பின் மறைந்து நிற்க வைத்தாள். அவனும் அவளருகே நின்று கொண்டான்.

“கங்கிராட்ஸ் வைசு” உனக்கு மேரேஜ் ஆகப் போகுதாமே? கிஷோர் கேட்க, இல்ல நான் பண்ணிக்க மாட்டேன்.

ஏன்? மாப்பிள்ளை அழகா இல்லையா? இல்லை பணம் போதாதா? அவன் கேட்க, அவள் அவனை பார்த்தாள். ஆனால் அவளால் பேச முடியவில்லை.

ஏய், என்ன? சொல்லு? என்னிடம் என்ன பேசணும்?

தற்செயலாக வேடிக்கை பார்த்த வைசு, தாட்சாயிணியை பார்த்து விட்டாள். இருவரும் அவள் பார்ப்பதை பார்த்தனர்.

வைசு கண்கலங்கியது. அவளால் சொல்ல முடியலை என புரிந்து கொண்டு, வாயை அசைத்து..இங்க பாரு என்று கையை காட்டி கவனிக்க சொன்னாள்.

மாமா, இப்படி திரும்புங்க என்று அதீபனை நிற்க வைக்க, எதுக்கு? சும்மா இரு தாட்சு என்றான்.

ப்ளீஸ் மாமா, அமைதியா இருங்க என்று வைசுவை பார்த்துக் கொண்டு, அதீபன் கையை காட்டி அவன் கையை பிடித்த தாட்சாயிணி..பிடி என்றாள்.

வைசுவும் கிஷோர் கையை பிடிக்க, பார்..என்று கையை காட்டி அதீபன் கண்ணை பார்த்து, “நான் உன்னை லவ் பண்றேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று அவனிடம் சொல்லிக் காட்டி சொல்ல சொன்னாள். அதீபன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தாட்சாயிணி  “சொல்லுடி” என்று அழாத குறையாய் மண்றாடினாள். அப்பொழுதும் வைசுவால பேசவே முடியலை.

வைசு, என்ன பண்ற? யாராவது பார்த்தால் தப்பா நினைக்க போறாங்க என்று கிஷோர் சொல்ல, உன்னோட மாமா சாயங்காலம் வந்திருவான்டி என்று வாயை அசைத்தாள் தாட்சாயிணி. கண்ணை மூடி திறந்து, கண்கள் நிறைய காதலும், கண்ணீரும் நிரம்பி வழிய தாட்சாயிணி சொன்னது போல் கிஷோர் கண்ணை பார்த்துக் கொண்டு சொன்னாள் வைசு.

மறுநிமிடம் அவள் கன்னத்தில் விழுந்தது அறையொன்று. அவள் அம்மாவும் அப்பாவும் அவர்கள் முன் இருந்தனர்.

போச்சு..போச்சு..என்று அதீபன் கையை விட்டு வேகமாக அவர்களிடம் வந்தாள் தாட்சாயிணி. அவனும் அவள் பின் வந்தாள்.

என்னடி பண்ணிக்கிட்டு இருக்க? திருட்டுத்தனமா யாருக்கும் தெரியாமல் ஓடி வந்திருக்க? என்று வைசு அம்மா அவளை அடிக்க, கிஷோர் அப்படியே நின்றான்.

ஆன்ட்டி, அவளை அடிக்காதீங்க என்று தாட்சாயிணி அவர்களிடம் வந்தாள்.

ஏம்மா, நீ நல்ல பொண்ணுன்னு தானே பழக விட்டோம். இப்ப இப்படி வந்து நிறுத்திட்டீங்கல்ல? என்று அவளிடமும் வைசு அம்மா கோபமாக பேசினார்.

ஆன்ட்டி, அப்படி இல்ல. டேய், ஏதாவது பேசு என்று கிஷோர் காலை மிதித்தாள். அவன் வைசாலியை பார்த்துக் கொண்டே நின்றான்.

வைசு அம்மா அவன் கையை தட்டி விட்டு அவனை முறைத்துக் கொண்டே செல்ல, பெருமூச்செடுத்து விட்ட தாட்சாயிணி வேகமாக வைசாலி பெற்றோர் முன் வந்து நின்றாள்.

வழிய விடும்மா அவள் அப்பா சத்தமிட, நீங்க போகலாம் அங்கிள். ஆனால் நான் சொல்றத கேட்டுட்டு நீங்க போங்க.

சின்ன வயசுல இருந்து நீங்க உங்க பொண்ணுக்காக பார்த்து பார்த்து எல்லாமே செஞ்சு கொடுத்தீங்க. அது எல்லாமே அவளுக்கு பிடிச்சிருக்கான்னு யோசிச்சீங்களா?

அது எப்படி பிடிக்காமல் போகும்? அவர் கேட்க, அவர்களை சுற்றி வேடிக்கை பார்த்தபடி ஆட்கள் சென்று வந்தனர்.

பிடிக்கும். ஆனால் எல்லாமே பிடித்ததில்லை. நீங்க வாங்கி கொடுத்த பொம்மை பிடித்தது. சாக்லெட், உணவு எல்லாமே அவளுக்கு பிடிக்கும். ஆனால் நீங்கள் வாங்கி கொடுத்த பல பொருட்கள் அவளுக்கு பிடிக்காது.

அவளுக்கு லைட்டான கலரில் உள்ள ஆடைகள் தான் பிடிக்கும். நீ எப்படி வாங்குவீங்க? அவளுக்கு டிரீம் இருக்கு உங்களுக்கு தெரியுமா? தாட்சாயிணி கேட்க, தன் மகளை இருவரும் பார்த்தனர். அவளுக்கு நியூஸ் ரிடர் ஆகணும்னு ஆசை. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கல. எதுக்கு தெரியுமா? உங்க மேல அவளுக்கு இருக்கும் பயம்.

பெற்றோர் மேல பிள்ளைகளுக்கு பாசம் இருக்கணும். பயம் இருக்கக்கூடாது. பயம் இருக்கணும் தான். அதுக்காக இருவரும் இப்படி இவளிடம் கடுமையாக நடந்து கொண்டதால் தான் அவள் பாசத்திற்காக ஏங்கினாள். நாங்க எல்லாருமே சிறு வயதிலிருந்தே தெரிந்தவர்கள் தான்.

எனக்கு கிஷோரை பற்றி தெரியும்? உங்க பொண்ணோட இருபது வருடமா ஒன்றாக படித்தவன் அவன். அவன் பெயரையாவது உங்களிடம் சொல்லி இருக்காலா? இருக்காது. அவளிடம் நீங்க அம்மா, அப்பாவா பழலகலை. ஓர் ஆசிரியராக தான் பழகி இருக்கீங்க கண்டிப்புடன். இப்ப அவள் வந்தது அவனுடன் ஓடிப் போக இல்லை. அவளது பத்து வருட காதலை அவனிடம் சொல்ல மட்டும் தான். சொல்லீட்டா. கூட்டிட்டி போங்க. அவளுக்கு பிடிக்காத மாமா கூட கல்யாணம் பண்ணி வையுங்க. அதான வேண்டும். இப்ப நீங்க கிளம்புங்க அங்கிள் என்று தாட்சாயிணி அவர்களுக்கு வழியை விட்டாள்.

அங்கிள், ஆனால் ஒன்று. அவள் தவறான முடிவெடுத்தால் காரணம் நீங்களாக தான் இருப்பீங்க. அது என்ன பொண்ணுகளுக்கு மட்டும் கட்டுப்பாட்டுக்கு மேல் கட்டுப்பாடு? அங்க நிக்காத, அதை செய்யாத, பசங்களோட பேசாத, உனக்கெதுக்கு கனவு?

ஹப்பாடா..முடியலப்பா என்று ஆன்ட்டி, நீங்க அடிச்சது போதாது. இன்னும் அவளுக்கு பத்து அடிய போடுங்க.

ஒருவர் அவளை குறுகுறுவென பார்க்க, யோவ் என்னய்யா, வேலைய பார்த்துட்டு போயா..என்று அவள் அம்மாவை பார்த்த தாட்சாயிணி, இங்க இப்ப எத்தனை பேர் நம்மை பார்த்துட்டு போயிருப்பாங்க. அதில் சிலர், இந்தம்மாவை பாருங்க அவங்க பிள்ளையவே இத்தனை பேர் முன்னாடி இப்படி அடிக்குது என்று உங்களை திட்டுவாங்க இல்லை இந்த பொண்ணை பாரு..இப்ப இருக்கும் பசங்களாம் இப்படி தான் லவ் பண்றேன் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணுதுகன்னு, என்ன நடக்குது? என்ன பேசுறோம்ன்னு முழுசா கூட கவனிக்காம வாய்க்கு வந்தபடி பேசுவாங்க. இவங்களுக்காக நீங்க பயப்படுறீங்களா?

இதெல்லாம் விடுங்க. உங்க பொண்ணு அவனை லவ் பண்றது அவனுக்கு தெரியவே தெரியாது. இப்ப தான் சொல்லவே செஞ்சிருக்கா உங்க பொண்ணு.

அவனோட மூஞ்சிய பாருங்க. பேயறஞ்ச மாதிரி இல்ல. இவனெல்லாம் பாக்ஸராம் என்று அவள் சொல்ல, இதுவரை அழுது கொண்டிருந்த வைசாலி கிஷோரை பார்த்தாள். அவனருகே வந்து, சாரிடா நான் சொல்ல லேட் பண்ணிட்டேன் என்று அழுது கொண்டே, நான் ஒரு முறை உன்னை கட்டிக்கவா? என்று கேட்க, அவள் பெற்றோர் வேகமாக அவளிடம் வந்தனர்.

நான் உங்களோட வர்றேன்ம்மா. உங்க தம்பிய கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் ஒரே ஒரு முறைம்மா என்று அவள் கிஷோரை அணைத்து விட்டு, நாம இனி மீட் பண்ணவே வேண்டாம் என்று அவள் நகர, அவளது கையை பிடித்த கிஷோர், அவளை இழுத்து அவள் பெற்றோர் முன் வந்து அவன் கனவு, அவன் பெற்றோரிடம் அவன் பொறுமையாக இருந்தது. அவன் கனவிற்காக பெற்றோரை விட்டு வெளியே வந்தது என அவனை பற்றிய அனைத்தையும் தயங்காமல் சொன்னான்.

பின் வைசாலியை பார்த்து, எனக்கு வைசுவை பிடிக்கும். ஆனால் காதல் இல்லாமல் தான் இருந்தது. எனக்கு என் கனவு தான் பெரியதாக தெரிந்தது. அதனால் தான் வைசு இத்தனை வருடமாக என்னை காதலித்தது தெரியாமல் இருந்திருக்கிறேன். ஆனால் அவள் காதலை சொன்ன நிமிடம் முதல் நானும் அவளை காதலிக்கிறேன். எனக்கும் உங்களை போல் தான் அவள் மனதில் இருக்கும் எல்லாமே தெரியாது. ஆனால் இனி தெரிஞ்சுப்பேன் என்று அவளை பார்த்து புன்னகைத்தான்.

என்னால உன்னை ஏத்துக்க முடியாது. என்ன தான் அவளுக்கு உன்னை பிடித்திருந்தாலும் நீ பாக்ஸர். உனக்கு படும் ஒவ்வொரு அடியும் அவள் மனதில் இடியாய் விழும். அவள் அழுது கொண்டு தான் இருப்பாள் என்றார் வைசாலி அம்மா.

வைசு, நீ சொல்லு? நான் என்னோட பாக்ஸிங்கை விட்டால் தான் என் அருகே இருப்பாயா? என்று அவன் கேட்க, அவள் இல்லை என்று தலையசைத்து விட்டு, ஆனால் அம்மா சொன்னது போல் உனக்கு அடிபட்டால் நானும் காயப்படுவேன்.அழுவேன் என்றாள்.

எனக்கு பாக்ஸிங் பிடிக்கும். ஆனால் இதை மட்டும் வைத்து உன்னால எப்படி என்னோட பொண்ணை பார்த்துக்க முடியும்? அவள் அப்பா கேட்டார்.

ஏன் சார், முடியாது? என்னால முடியும். குறிப்பிட்ட வயதிற்குள் ஒரு பாக்ஸராக என் வாழ்க்கையில் வெற்றியடைவேன்.

இதான் பிரச்சனைன்னா. என்னோட இலக்கு. “தேசிய அளவிலான பாக்ஸிங் டோர்னமென்ட்டில் வெற்றியடையணும்”. அதன் பின் நிரந்தரமாக ஓர் “பாக்ஸிங் ட்ரெயினிங் அகாடமி” ஆரம்பித்து விடுவேன் என்றான்.

அதுவரை நான் உயிரோட நன்றாக இருந்தால், உங்க பொண்ணை திருமணம் செய்யும் தகுதி இருந்தால் கல்யாணம் பண்ணிக்கலாமா?

வைசாலி அப்பா சிரித்துக் கொண்டு, அது என்ன அவ்வளவு சாதாரணமா?

இல்லை, கஷ்டம் தான் சார். நான் காலேஜ் மூன்று வருடம் தான் படித்தேன். முதல் மூன்று மாதம் முழுவதும் பிராக்டிஸ்ல போயிருச்சு. நான் என்னோட கோச்சுடன் தான் தங்கி இருக்கேன். அவருக்கு குடும்பம் இல்லை. ஆனால் என்னை பற்றி தெரிந்து என் அம்மா, அப்பாவுக்கு என் திறமையை காட்ட உதவிகிறேன்னு. நிறைய உதவிகள் செய்தார். பயிற்சிக்கு சென்ற மூன்று மாதத்தில் கலந்து கொள்ள முடியாது. என்னோட சீனியர் போக முடியாத காரணத்தால் அப்பொழுதே உள்ளே சென்றேன்.

எல்லாரும் நான் தோற்றுவிடுவேன்னு தான் பேசினார்கள். அவர் தான் என்னை ஊக்குவித்தார். அன்று வெற்றியடைந்தேன். இரு வருடமாகிறது. இரு முறை தோற்று இருக்கிறேன். ஆனால் அடுத்த வாரம் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள போகிறேன். கண்டிப்பாக வெற்றி அடைவேன். இன்னும் இரு வருடம் எனக்காக காத்திரு. அப்பொழுது நான் இருந்தால் பார்க்கலாம். நீங்க என்ன சொல்றீங்க மேம்? அவன் கேட்க,

ம்ம், இரு வருடம் தான பார்க்கலாம். ஆனால் நாங்க நடுத்தர வர்க்கத்தினர்ம்மா. எல்லாரும் பேசுவாங்களே? என்று தாட்சாயிணியை பார்த்து அவள் அம்மா கேட்டு விட்டு, நீ யாரையாவது காதலித்தால் உன் அம்மா ஏத்துப்பாங்களாம்மா? கேட்டாள்.

அவள் புன்னகையுடன், ஆன்ட்டி..எனக்கு வைசுவை பார்க்கும் போது எப்போதும் ஓர் பொறாமை இருக்கும். என்ன தெரியுமா? அவள் எல்லா இடத்திற்கும் உங்களுடன் சென்றாலும் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல தேவையில்லை.

நான் அப்படியில்லை.

பணக்கார பொண்ணா பிறந்ததை எல்லாரும் அதிர்ஷ்டமா பார்ப்பாங்க. என்னை பொறுத்தவரை அது சாபம். சுதந்திரமா சுத்தவே முடியாது. யாராவது பார்த்து ரவி பொண்ணு தானம்மா, எப்படி இருக்க? என்று விசாரிக்கிறேன் என்ற பெயரில் காக்கா பிடிப்பாங்க. இதனால் நான் என் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது.

உங்களை போல் அம்மா, அப்பா கையை பிடித்துக் கொண்டு ஊர் சுற்ற முடியாது. விளையாட முடியாது. என்னோட அம்மா பணக்காரவங்க தான். பாசமா இருப்பாங்க. உங்களை மாதிரி கண்டிப்பும் கூட. ஆனால் அவங்க கண்டிப்பு வேற மாதிரி. நீங்க பசங்க கூட பழகக் கூடாதுன்னு சொல்லுவீங்க. அவங்க பணக்கார பசங்களோட தான் பழகணும்ன்னு சொல்லுவாங்க. கல்யாணம் கூட அப்படி தான் திட்டம் வச்சிருக்காங்க. அதுக்காக அவங்க சொல்றதை நான் கேட்க முடியாது.

என்னால என்னோட அம்மாவை சமாளிக்க முடியும். அப்பா கண்டிப்பாக என் பக்கம் தான் வருவார். உங்க பொண்ணுகிட்ட நீங்களே கேளுங்க. நான் பணக்கார பசங்களோட பழகி பார்த்திருக்காளா? கேளுங்க. என்னோட ப்ரெண்ட்ஸ். நீங்க சொன்ன நடுத்தவர்கள் தான் என்றாள்.

அவர்கள் அதீபனை பார்த்தனர். அவர் என்னோட மாமா. அப்பாவோட ப்ரெண்டோட பையன்.

ஒரு வேலை இவரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்கன்னா? அவள் அம்மா கேட்க, எனக்கு பிடிச்சிருந்தா அது பணக்காரன் ஏழைன்னு பார்க்க மாட்டேன். ஆனால் என் மனசுக்கு பிடிச்சிருந்தா என் மாமாவை கல்யாணம் பண்ணிப்பேன் என்றாள். அவன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

அவளும் அவனை பார்த்தாள். தப்பா ஏதும் சொல்லீட்டேனா மாமா? அவள் கேட்க, தாட்சு அவள் அம்மாவுக்கு எதிர்மாறா இருக்காள் என்று அவள் அம்மா பேசியதை நினைத்துக் கொண்டு நின்றான்.

மாமா? என்று தாட்சாயிணி அருகே வந்து அவன் கையை பிடித்தாள். அவன் சட்டென பின்னே நகர்ந்தான்.

அவன் கையை பிடித்திருந்த தாட்சாயிணி அவன் மேல் மோதி அங்கிருந்த தூணில் தலை அடிக்க வரும் முன் அவளை நகர்த்தி அவளை பிடித்தான் அதீபன். தாட்சு என்று கிஷோரும், வைசாலியும் சத்தமிட்டனர்.

திடீரென அவன் செயலில் ஒருவரை இடித்து விட்டான் அதீபன்.  அவர் கையிலிருந்த தாம்புலம் தட்டி அதிலிருந்த விபூதி, குங்குமம், மஞ்சள் அனைத்தும் இருவர் மீதும் கொட்டி, தேங்காய் கீழ விழுந்து உடைந்தது. தட்டிலிருந்த மலர்மாலை இருவர் கழுத்திலும் வந்து விழுந்தது. பட்டுப்புடவை ஒன்று இருவர் மேலும் விழுந்தது.

சாமிக்கு வாங்கியது இப்படியாகிடுச்சே என்று அவர் புலம்ப, அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அங்கிருந்தவர்களில் வயதான பாட்டி அவர்களிடம் வந்து, இந்த மலர்மாலை இவர்களுக்கு திருமண மாலையாகப் போகிறது. அதனால் தான் தனக்கானதை அம்பாள் இருவருக்கு கொடுத்து விட்டார் என்று சொல்லி இருவரையும் வாழ்த்தினார். அதிர்ச்சியில் தாட்சாயிணிக்கு மூச்சே நின்றது போல் இருந்தது. அவள் அதீபனை பார்க்க, அவன் மாலையை அவள் கையில் கொடுத்து விட்டு அவன் தலையில் விழுந்த அனைத்தையும் சரி செய்து கொண்டிருந்தான்.

அந்த பாட்டி அவர்களிடம் வந்து, இந்த மாலைய உங்க வீட்டு பூஜை அறையில் வையுங்க என்று அவர்களை பார்த்து புன்னகைத்து சென்றார்.

கிஷோர் சிரித்துக் கொண்டு, வைசுக்கு உதவ வந்து நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட என்றான்.

டேய், சும்மா இரு என்று அவள் அவனை அடித்தாள்.

“கங்கிராக்ட்ஸ்ப்பா” வைசு அப்பா புன்னகையுடன் அதீபனுக்கு கை கொடுக்க, அங்கிள் “இந்த பாட்டி சொன்னது போல் நடக்க வாய்ப்பேயில்லை” என்று சொல்லி விட்டு, தாட்சு நேரமாகுது, அப்பா காத்திருப்பாங்க என்று அழைத்தான். புன்னகைத்த அவள் முகம் வாடியது. அதீபன் அவள் அம்மா பேசியதை மனதில் வைத்து பேசினான்.

தன் நண்பர்களுக்கு “பை”  சொல்லி விட்டு, வைசு அம்மா, அப்பாவிடமும் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.

Advertisement