Advertisement

அத்தியாயம் 30

செழியன் அவர் காதல் கதையை கூறத் தொடங்கினார். நந்துவை அவள் கிராமத்தில் வைத்து தான் பார்த்தேன். ரொம்ப அழகு, படிப்பு இல்லை, ஆனால் எதையும் கவனித்து செயல்படுவாள்.

நான் அவள் கிராமத்திற்கு பிராஜெக்ட் விசயமா தான் போனேன். அவளை பிடித்து விட்டது. ஒரு மாதம் அங்கே தான் தங்கி இருந்தேன். அவளிடமும் பேசினேன். இருவரும் அடிக்கடி சந்தித்தோம். அவளுக்கும் என்னை பிடித்தது. அவள் பெற்றோருக்கு விருப்பமில்லை. அவர்களிடம் பேசியும் அவங்க ஒத்துக்கலை. அதனால் அவளை அங்கேயே ஒரு கோவிலில் வைத்து மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். எல்லாரும் கோபப்பட்டாங்க. விஷ்ணு அவளை ஒருமாதிரி பார்க்க, அவனும் கோபத்தில் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் என்னுடன் கிராமத்திற்கு வந்த அவனுக்கும் நந்துவை பிடித்து விட்டது எனக்கு தெரியாது. தெரியாமல் தான் திருமணம் செய்து அழைத்து வந்தேன். ஒரு வாரம் அவன் நண்பர்களுடன் வெளியே செல்வதாக சொன்னான். சரி என்று எல்லாரும் விட்டுட்டாங்க. அவன் வீட்டிற்கு வந்த அன்று நந்துவை காணவில்லை. அவன் என்னை பார்த்து நக்கலாக சிரித்தான். நான் பதட்டத்தில் அதையும் கவனிக்க தவறினேன். போலீஸார் உதவியுடன் அவளை மீட்டேன். அப்பொழுது தான் கடத்தியது விஷ்ணு என தெரிந்து அவனிடம் பேசினேன்.

அவன் என்னிடம் நேராகவே எங்களை பிரித்து விடுவதாக சவால் விட்டான். உங்க பாட்டிக்கு இப்ப வரை ஏதும் தெரியாது. நந்துவுக்கும் தெரியாது. ஆனால் இப்ப அவன் எண்ணம் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. இத்தனை வருடங்களாக அவள் அருகே இருக்கும் போது அவளை தவற விட்டு விடுவோமோ? இல்லை அவள் பெற்றோரிடம் இருந்த அவளை அழைத்து வந்தது தவறோ? என்று கூட நினைத்தேன்.

உன் அம்மாவை அவனுக்கும் திருமணம் செய்து வைப்பதற்குள் போதும் போதும் என்றானது என்று அதீபனை பார்த்து சொன்னார்.

அவள் சாமர்த்தியசாலி. எல்லாம் தெரிந்தும் அவனை என் நந்து பக்கம் வருவதை விடவே மாட்டாள். ஆனால் அவன் கண்கள் மட்டும் எப்பொழுதும் நந்து மீது இருக்கும்.

ஆனால் அதிரதன் பிறந்த பின் அவன் என்னை கூட அவன் அம்மா பக்கம் விடவே மாட்டான். எப்பொழுதும் அவள் அருகே இருக்கணும். இல்லை கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடுவான். அவன் தான் நந்துவுக்கு முழு பாதுகாப்பாக இருந்தான் என்றார் கண்ணீருடன். ஆனால் நான் அவளை மனைவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

நான் சொன்னதற்காக இருபது வருடமாக இருந்த குடும்பத்தை விட்டு, உன் அம்மா தொந்தரவையும் தாங்கிக் கொண்டு, என் அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருந்தாள். என்னால் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று அழுதார் செழியன்.

அப்படின்னா, அந்த கடத்தலுக்கு பின் அப்பா நந்தும்மாவை ஏதும் செய்தாரா?

இல்லை அதீபா, நான் விடுவேனா? அவள் குடும்பத்தை மீறி அழைத்து வந்தேன். அவள் முழுவதும் என் பொறுப்பு மட்டுமே. என் தம்பி என்றும் பாராமல் நந்துவிற்காக அவனை கொல்லும் வரை சென்றேன்.

“அப்பா” அதீபன் அதிர, ஆமா. அவன் நான் இல்லாத நேரத்தில் அவளறியாமலே அவளை நெருங்கினான். தன் கையிலிருந்த பேனாவை அவன் கழுத்தில் சொறுக வந்தேன். நந்து விழித்து விட்டாள். திருடன் என மாற்றி அவளை நம்ப வைத்தேன்.

ஆனால், இப்ப இந்த பிராஜெக்டை சொல்லி நீங்க தான அவரை உள்ளே அனுப்புனீங்க? நிதின் கேட்டான்.

ஆமா, அவளுக்கு இங்கே பெரியதாக மரியாதை இல்லை. உன் அம்மா அவளை ரொம்ப கஷ்டப்படும் படி பேசுவார். அதை கூட நந்து வெளிப்படையாக என்னிடம் சொல்லி அழுததில்லை. ஆனால் அவள் தனிமையில் அதிகமாகவே அழுதிருக்காள். படிப்பு இல்லை என்பதால் நான் தான் இங்கிலீஸ் பேச கற்றுத் தருகிறேன். இப்ப கூட என்னை அணைத்து அழுதாளே தவிர என்னிடம் அவளுக்கு சொல்ல தோன்றவில்லை. அவளுக்கு இப்ப தெரிஞ்சு போச்சு. அவள் அவனை விலக்கி வைப்பதை விட, நடப்பதை நேரே அனைவரிடமும் சொல்லணும்.

அம்மா, எதுக்கு சொல்ல மாட்டேங்கிறாங்க? அதீபன் கேட்டான்.

அவர் விரக்தி சிரிப்புடன், அவன் என் தம்பி அல்லவா? சொன்னால் இருவரும் அவளால் பிரிந்து விடுவோம். இதை விட உங்க பாட்டி ரொம்ப வருத்தப்படுவாங்க. அவங்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்று தான் பயந்தாள்.

அவளே இந்த விசயத்தை வெளிப்படையாக சொல்லணும். அதுக்காக தான் இவ்வாறு செய்தேன்.

அவளுக்காக நான் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது. அவள் குடும்பத்தை அவளுக்காக தேடிக் கொண்டு வந்து சேர்க்கணும். அவர்களிடம் மன்னிப்பு கேட்கணும் என்றார்.

அவளுக்காக அவர்களை தேடிச் சென்றேன். ஆனால் யாரும் அங்கு இல்லை. அருகே இருப்பவர்களிடம் கேட்டால் அவர்கள் பதில் கூறாமல் என்னை திட்டினார்கள். நான் இப்பொழுது வரை தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவள் தம்பியை அவள் எனக்கு தெரியாமல் சந்தித்தாள். அதுவும் நீடிக்கவில்லை என்று வருந்தினார்.

இதை கேட்ட ரணா சுவற்றில் சாய்ந்து கண்ணீருடன் அமர்ந்தாள்.

அப்பா, இவரை என்ன தான் செய்றது?

நாம நிர்மலா மேடமை வீட்டுக்கு அழைத்து வரலாமே? நிதின் கேட்க, இல்ல..கண்டிப்பா முடியாது. அவங்க செஞ்ச வேலைக்கு தண்டனை கிடைத்தே ஆகணும் அதீபன் சொன்னான்.

ஆமா நிதின், அவள் அம்மா வீட்ல கொஞ்ச நாள் இருக்கட்டும். இதை நந்து தான் சரி செய்யணும் .ஆனால் அவளுக்கு அந்த அளவு தைரியம் வராது என்றார் செழியன்.

வரும். வர வைக்கலாம் என்று சத்தம் கேட்டு மூவரும் அதிர்ந்து வெளியே பார்த்தனர். ரணா எழுந்து செழியனை பார்த்தாள். தாட்சாயிணியும் அவளுடன் உள்ளே வந்தாள்.

பிரணாம்மா, செழியன் பதற, அப்பா நீங்க நினைச்சிருந்தா உடனே சரி செய்திருப்பீங்க? ஆனால் அம்மா இதை சரி செய்வது தான் சரியா இருக்கும். அவங்களே செய்வாங்க ன்னு தானே காத்திருந்தீங்க?. செய்ய வைக்கலாம் என்றாள்.

அவர் கண்ணீருடன் மகளை பார்க்க, அவள் அவரிடம் வந்து அவரை அணைத்து வருத்தப்படாதீங்கப்பா.

அம்மாவை எப்படி பேச வைப்பது?

செய்யலாம். அம்மாவோட வீக்னஸ் நாம தான. அதை வைத்து செய்யலாம் அப்பா என்றாள்.

நம்மள வச்சு என்ன செய்ய முடியும்? நிதின் கேட்டான்.

நம்மன்னா நாம இல்லை. அப்பாவை வச்சு செய்யலாம் ரணா சொல்ல, என்னை வச்சு என்னம்மா பண்ணப் போற?

அப்பா, அம்மா எல்லாத்தையும் பொறுத்துப்பாங்க. ஆனால் பாட்டியை தவிர உங்களை யாரும் ஏதும் சொல்ல விட மாட்டாங்க என்றாள்.

அதான் எல்லாருக்கும் தெரியுமே? அதீபன் கேட்க, அங்கிள் உங்களுக்கு புரியலையா? உங்க தம்பி மட்டும் உங்களை பற்றி ஆன்ட்டி முன் தவறாக பேசினால் ஆதங்கத்தில் மனதில் இருப்பதை பேசுவாங்கல்ல என்றாள் தாட்சாயிணி.

அது அவ்வளவு சாதாரணமானதில்லை செழியன் சொல்ல, தாட்சாயிணிக்கு கை கொடுத்து, முயற்சி செய்து பார்க்கலாம் என்றாள் ரணா.

என்னவாது செய்யுங்க என்று அவர் எழுந்தார்.

ரணா, அவங்க மேலும் கஷ்டப்படும் படி ஆகாதே? நிதின் கேட்க, அதெல்லாம் ஒன்றும் ஆகாது. நாங்க பார்த்துக்கிறோம் என்று ரணா தாட்சாயிணியை பார்த்தாள்.

கண்டிப்பா அவங்க வருந்தும் படி ஆகாது என்றாள் தாட்சாயிணி.

எல்லாமே சரி. ஆனால் என் அப்பாவை எப்படி பேச வைப்பீங்க? அதீபன் கேட்டான்.

கொஞ்சம் நேரம் கொடு. நாங்களே சொல்கிறோம் என்ற தாட்சாயிணி வெளியேற, அதீபனை பார்த்த ரணா அவர் அம்மா பக்கம் வராமல் பார்த்துக்கணும் என்றாள்.

ம்ம். பார்த்துக்கிறேன் என்றான். அவர்களும் அங்கிருந்து கிளம்பினர்.

ரணா நேராக பாட்டி அறைக்கு வந்து கதவை தட்டினாள். பாட்டி கதவை திறந்தார். அவரை விலக்கி உள்ளே சென்று அவள் அம்மாவை பார்த்தாள். சிவநந்தினி கண்ணீருடன் படுத்திருந்தார்.

ஏன்டி, பிள்ளைங்க இன்னும் சாப்பிட்டு முடிக்கல. எழுந்திருடி. எதுக்கு அழுறன்னாது சொல்லுடி? பாட்டி சத்தம் போட, அத்தை பசங்கள நான் பார்த்துக்கிறேன் நந்து ஓய்வெடுக்கட்டும் என்றார் ரேவதி.

பாட்டி, கத்தாம வெளிய போ. நான் என் அம்மாவை பார்த்துப்பேன் என்றாள் ரணா.

என்னடா அதிசயம் இது? என்னோட மருமகள நான் பார்த்துப்பேன். நீ என்னடி புதுசா பார்த்துக்கிறேன்னு சொல்ற? பாட்டி கேட்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரணா அவள் அம்மா முன் வந்து, அம்மா ரொம்ப டயர்டா இருக்கு. நானும் உன்னுடன் படுத்துக்கவா? கேட்டாள்.

அழுகை நின்று தன் மகளை பார்த்து சிவநந்தினி இரு கைகளையும் நீட்டினார். ரணா அவரருகே படுத்து அவள் அம்மாவை அணைத்துக் கொண்டு எங்களை தொந்தரவு செய்யாதீங்க என்று கத்தினாள்.

“போடி ராங்கி” என்று பாட்டி ரணாவை திட்டிக் கொண்டே வெளியே வந்தார். தன் மகன் செழியனை பார்த்து, உன்னோட பொண்டாட்டிக்கு என்னடா ஆச்சு? கேட்டுக் கொண்டே அமர்ந்தார்.

நிதினும் அதீபனும் சாப்பிட அமர்ந்தனர். ரேவதி அவர்களுக்கு பரிமாறினார்.

ஆமா, ஆத்விகாவை எங்கே? அவர் கேட்க, நானும் பார்க்கலையே? சாப்பிட கூட வராமல் என்ன செய்றா? நிதின் கேட்க, அதீபன் அவனை முறைத்து பார்த்தான்.

நீங்க சாப்பிடுங்க. நான் பார்த்துட்டு வாரேன் என்று ரேவதி அவளை பார்க்க சென்றார்.

இவ்வளவு நேரம் அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்த தாட்சாயிணி தன் அம்மா சென்ற பக்கம் பார்த்து விட்டு, வேகமாக செழியனிடம் ஓடி வந்து அமர்ந்தாள்.

என்னாச்சும்மா? அவர் கேட்க, மாமா எனக்கு ஒரு உதவி வேணும்? என்றாள். அதீபனும் நிதினும் அவளை பார்த்தனர்.

அதுக்கு ஏன்டி இப்படி ஓடி வர்ற? பாட்டி கேட்டார்.

பாட்டி அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சது நான் காலி.

அப்படி என்ன வேணும்? என்ன வேண்டுமானாலும் தயங்காமல் கேளும்மா. மாமா வாங்கித் தாரேன் என்றார் செழியன்.

எனக்கு எதுவும் வேண்டாம் மாமா. ஆனால் நான் என்று அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டே, நான் வெளிய போகணும் கூட்டிட்டு போறீங்களா?

வெளியவா? ஏற்கனவே பிரச்சனையா இருக்கே? என்று செழியன் அவளை பார்த்தார். பின் அவளிடம்,” எங்கம்மா போகணும்?” என்று கேட்டான்.

மாமா, நான் கோர்ஸ் சேர்ந்திருக்கேன். காலை பத்து மணி முதல் பதினொரு மணி வரை “எம்பிராய்டரி கிளாசும்” பதினொன்று மணி முதல் ஒரு மணி வரை “பியானோ கிளாசும்”, மாலை நடனப்பள்ளியில் நான்கு முதல் ஐந்து மணி வரை “பரதமும்”, ஐந்து முதல் ஆறு மணி வரை “பாரின்” நடனமும் போய்க் கொண்டிருந்தேன். பின் ஆறு முதல் ஏழு மணி வரை நண்பர்களுடன் எங்காவது சென்று வருவேன். இது கூட வேண்டாம். எல்லா வகுப்பிற்கும் போனால் நல்லா இருக்குமே?

அப்பா இன்று காலை எழுந்ததும் என்னையும் அம்மாவையும் வெளியே போகவே கூடாதுன்னு ஆர்டர் போட்டிருக்காங்க. அம்மாகிட்ட கேட்டா கத்துவாங்க. ப்ளீஸ் மாமா என்றாள். அதீபனும் நிதினும் கையை அழும்பி விட்டு அவர்களிடம் வந்தனர்.

இதுக்கெல்லாம் போய் என்ன செய்யப் போறடி? பாட்டி கேட்க, பாட்டி என்ன இப்படி கேட்டுட்டீங்க? பணத்தை மிச்சம் செய்யாலாம். எம்பிராய்டரி நமக்கு பிடிச்ச மாதிரி பண்ணனுன்னா எவ்வளவு வாங்குவாங்க தெரியுமா?

அப்படியா? அப்போ பியானோ? நிதின் கேட்க, பியானோ, நடனம் என் ஆர்வம் மிக்கது. என்னால விட முடியாது.

பியானோ ப்ளே பண்ணுவியா? அதீபன் கேட்க, போன வருடம் தானே கல்லூரி முடித்தேன். இப்ப தான் எல்லாமே ஆரம்பிச்சு இருக்கேன். இப்ப தான் ஆரம்பித்து இருக்கேன். அதுக்குள்ள போகாம இருந்தா எல்லாத்தையும் அப்படியே நிறுத்திடுவாங்க மாமா. ப்ளீஸ் என்றாள்.

அதெல்லாம் முடியாது நிதின் சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே உன்னிடம் நான் கேட்கலை என்று செழியனை பாவமாக பார்த்தாள் தாட்சாயிணி.

நிதின் புன்னகைக்க, அவர்களது அம்மா ரேவதி கோபமாக அவளை முறைத்துக் கொண்டிருந்தார். அவரை பார்த்து வேகமாக நிதின் பின் தாட்சாயிணி மறைய, அவன் புன்னகையுடன் நகர்ந்தான்.

டேய், நீ தான் அம்மாகிட்ட சொன்னீயா? எப்படா சொன்ன? என்று நிதினை முறைத்துக் கொண்டு அவள் அம்மாவை பார்த்தாள்.

வாடி இங்க? அவள் அம்மா அழைக்க, அம்மா வேண்டாம். நான் சின்ன பாப்பால்ல விட்டுரும்மா என்று அதீபன் பின் ஒளிய அவன் உதவுவான் என்று பார்த்தால் அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

டேய், கெல்ப் பண்ணுடா அம்மா காதை பிடிச்சு இழுப்பாங்க. ரொம்ப வலிக்கும். உதவுடா என்றாள்.

அத்த, இருங்க. அவள் போயிட்டு தான் வரட்டுமே? அவளுக்கும் கார்ட்ஸ் அரேஜ் பண்ணலாம் என்றான் அதீபன்.

இல்ல அதீபா, எதுக்கு தேவையில்லாத வேலை? என்று அவள் காதை பிடித்து இழுத்தார். அவள் அவன் சட்டையை பிடித்துக் கொண்டு, பாவமாக அவனை பார்த்துக் கொண்டே கத்தினாள்.

அம்மா..விடும்மா. முதல்ல பேசிக்கலாம். புள்ளைக்கு வலிக்க போகுது என்று செழியன் சொல்ல, சிவநந்தினி ஆழ்ந்து தூங்கிய பின் வெளியே வந்த ரணா அனைவரையும் பார்த்தாள்.

நீங்க சொல்றதால நான் விடுறேன் அண்ணா. ஆனால் இவள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று கோபமாக சொல்ல, சரி பாப்பா வெளிய போக வேண்டாம் என்றார் செழியன். தாட்சாயிணி அழவே ஆரம்பித்தாள்.

போம்மா. நம்ம வீட்ல தான் டார்ச்சர் பண்ற? இங்கேயுமா? என்று அவள் கோபித்துக் கொண்டு திரும்பி நின்றாள்.

செழியன் அவள் முன் வந்து, இங்க வாடா என்று அவள் அம்மா முன் நிறுத்தி, வெளிய போக வேண்டாம். வீட்ல வச்சு கத்துக்கலாமே? என்று அவர் கேட்க, வீட்லன்னா ஓ.கே என்றார் ரேவதி.

வீட்லயா? மாமா, வீட்டுக்குள்ள யாரும் வர்றது பாதுகாப்பு இல்லையே? தாட்சாயிணி கேட்க, யார் வர போறா? யாரும் வர மாட்டாங்க என்றார் செழியன்.

நீங்க தான சார் வீட்ல வச்சு கத்துக்கலாம்ன்னு சொன்னீங்க? நிதின் கேட்க, ஆமாப்பா, நந்துவுக்கு எம்பிராய்டரி நன்றாக தெரியும். அவளிடம் கத்துக்கட்டும். நடனம் ஆத்வி கற்று தருவாள். பியானோ அதீபன் கற்றுத் தருவான்.

அப்பா, நானா? நீங்க சொன்னீங்கன்னு தான் நான் ஆபிஸூக்கே வாரேன். நேரமிருக்காது. இதெல்லாம் என்னால முடியாது என்றான் அதீபன்.

உன்னிடம் தான் எல்லா இசைக்கருவிகளும் வச்சுருக்கேல்ல. கொஞ்ச நேரம் தானே? செழியன் கேட்க, வீட்டுக்கு வரவே ஏழாகும். அப்புறம் எப்படி சொல்லி தர முடியும்? நோ..என்றான்.

அப்படின்னா ஆபிஸ் நேரத்துல பாப்பா பியானோ கிளாஸ் டைம்ல நீ தான் அவளோட கிளாசுக்கு கூட்டிட்டு போய் அங்கேயே இருந்து அழைத்து வரணும் என்றார்.

அப்பா, ஆபிஸ் வொர்க்க விட்டு எப்படி?

ரெண்டுல ஏதாவது முடிவெடு என்றார் செழியன்.

அப்பா..

தாட்சாயிணி அவனிடம் வந்து ப்ளீஸ்..ப்ளீஸ்..என்றாள்.

சரி, வீட்ல வச்சே சொல்லித் தாரேன். ஆனால் ஒரு கண்டிசன். என்னோட பொருட்கள் எதையும் தொடக் கூடாது. எனக்கு சுத்தமாக பிடிக்காது என்றான்.

ஓ.கே.. ஓ.கே என்றாள் மகிழ்ச்சியாக.

நான் வேலைய முடிச்சி வந்த அரை மணி நேரம் கழித்து தான் சொல்லித் தருவேன் என்றான்.

ஓ.கே. எப்ப வேண்டுமானாலும் ஓ.கே. சொல்லிக் கொடுத்தால் போதும் என்றாள்.

ரணாவை பார்த்து, உனக்கு ஏதாவது தெரியுமா? உன்னிடமும் கிளாஸ் வாரேன் என்றாள் தாட்சாயிணி.

அவ இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்கா.

அதுனால என்ன? என்ன விசயம் கத்துக்கிறோம் என்பது தான் முக்கியம். யாரிடம் கத்துக்கிறோம் என்பதில்லை என்று அறிவாக தாட்சாயிணி பேச, “சரியா சொன்னம்மா” என்று அவளை செழியன் பாராட்டினார்.

பாருடா வந்தவுடன் ஸ்கோர் பண்றா? ரணா சொல்ல, எங்க ரணாவுக்கு நல்லா சாப்பிட தெரியும். கத்துக்கிறியா? அதீபன் கேட்க, ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன். என்னை எரிச்சலாக்காத என்று கொந்தளித்தாள் ரணா.

தாட்சாயிணி அவளிடம் வந்து, ரணா கையெழுத்து அழகா இருக்கும். எனக்கு சொல்லித் தர்றீயா? என்று அவள் கேட்க, ஓ.மை ஸ்வீட் சீனியர் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் ரணா.

ச்சீ, என்ன பண்றடி? ரேவதி இருவரிடமும் வர, நான் தான முத்தம் கொடுத்தேன். அண்ணி ஒன்றும் கரைஞ்சிற மாட்டாங்க அத்தை.

அத்தை, எனக்கு ஒரு சந்தேகம்? சீனியர் உங்க பொண்ணு தானா? ஸ்வீட்டா பேசுறாங்க என்று ரணா ரேவதியை கிண்டலாக கேட்க, ரணா..வா இல்லை உன் காதும் அம்மா கையில தான் இருக்கும் என்று ரணாவை இழுத்துக் கொண்டு புன்னகையுடன் ஓடினாள் தாட்சாயிணி. செழியனுக்கு தாட்சுவை பிடித்து போயிற்று. ரேவதியும் அவர்கள் பின் சென்றனர். நிதின் ஆத்விகாவை பார்க்க சென்றான்.

எல்லாரும் அமர, அதீபா தயாராகி வா என்ற செழியன் பாட்டியிடம், நம்ம அதிரதனுக்கு இந்த பொண்ணு சரியா இருப்பால்லம்மா என்று கேட்க, ஆனால் நம்ம பையனுக்கு வயசு கூட இருக்குமே? கேட்டார் பாட்டி. அதீபன் நின்று செழியனை பார்த்து விட்டு யோசனையுடன் அவன் அறைக்கு சென்றான்.

அப்படி என்னம்மா இருக்கும்? ஐந்து வயசு இருக்குமா?

ஆமாடா. அஞ்சு வருசம் இருக்கும். நம்ம ரவி ஒத்துக்கிட்டான்னா பார்க்கலாம்.

அம்மா, அப்ப பேசலாமா? செழியன் கேட்டார்.

ரேவாவையும் வச்சு பேசணும். ஏற்கனவே கேட்டது தானே? பாட்டி கேட்க, ஆமாம்மா நம்ம பையன் என்ன சொல்றானோ?

அதெல்லாம் புள்ளைய பிடிக்கும். நீ அவங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடி நம்ம பையனிடம் கேட்டுக்கோ என்றார் பாட்டி.

சரிம்மா என்று அவர் மகிழ்வுடன் சொல்ல மேலிருந்து அதீபன் அவரை பார்த்துக் கொண்டிருந்தான். பின் தயாராகி கருப்பு நிற கோர்ட்டு சட்டையும் அதற்கேற்ற பேண்ட்டுடனும் பக்கா பிஸினஸ் மேனாக கீழே வந்தான்.

அவனை பார்த்து செழியனும் பாட்டியும் எழுந்தனர். நம்ம அதிரதன் போலவே இருக்கிறான்ல்லய்யா பாட்டி கேட்க, ஆமாம்மா. ஆனால் அவனை போல் முகத்தை சிடுசிடுவென வைத்து கொள்ளாமல் இருக்கான். சிரித்தால் இன்னும் அழகாக இருக்கும் செழியன் அவனை பார்த்துக் கொண்டே சொன்னார்.

அவன் அம்மாவை நினைத்து கஷ்டப்படுறான். அம்மாவுடனே தான் இருப்பானே? என்று பாட்டி வருத்தமாக சொல்ல, சிவநந்தினி கதவை திறந்து வெளியே வந்து செழியனிடம் வந்தார்.

நந்து, நல்லா இருக்கேல்லம்மா? செழியன் கேட்க, ம்ம் என்று தலையசைத்து அதீபன் வருவதை பார்த்து, அதீபா சாப்பிட்டாயா? அவர் அவனிடம் கேட்க, அவன் அவரை அணைத்து, அம்மா நல்லா இருக்கீங்கல்ல? எனக் கேட்டான்.

நான் நல்லா இருக்கேன். இரு வாரேன் என்று சமையலறைக்கு சென்று இனிப்பை எடுத்து வந்து ஊட்டி விட்டார். தாட்சாயிணி, அவள் அம்மா, ஆத்விகா, நிதின் வந்தனர்.

அம்மா, எனக்கு என்று ஆத்வி இருவருக்கும் இடையில் வந்தாள்.

நகரும்மா. பிள்ள கிளம்பும் போது குறுக்க வந்துட்டு இருக்க என்று ஆத்விகாவை சிவநந்தினி தள்ள, நிதின் சிரித்தான்.

எதுக்குடா சிரிக்கிற? அம்மா எனக்கு வேணும் என்று ஆத்வி மீண்டும் இடையே வர, அடியேய் நகருடி என்று அவர் சொல்ல, அதீபன் அவரிடமிருந்து அவன் கையில் வாங்கி அவளுக்கு கொடுக்க, அவள் வாங்கி விட்டு வாயை திறந்தபடியே அவனை பார்த்தாள்.

நிதின் அவள் வாயை மூட, அவனை பார்த்து விட்டு அதீபன் செல்வதை பார்த்து முன் வந்து அவன் தலையை தொட்டு பார்த்தாள்.

என்னக்கா? அவன் கேட்க, அக்காவா? அப்பா என்னை பிடிங்க. எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு என்று செழியனை அழைத்தாள் ஆத்வி.

என்ன அண்ணி காலையிலே டிராமாவா?

டிராமாவா? தாட்சு? இவன் அதீபன் இல்லை. அவனுக்குள் ஆவி புகுந்துருச்சுன்னு நினைக்கிறேன் என்றாள்.

ஆவியா? என்று தாட்சு அவனருகே வந்து உற்று பார்த்து, எனக்கு அப்படி தெரியலையே அண்ணி? என்றாள்.

இல்ல தாட்சு. இவன் எனக்கு ஊட்டி விட்டான். என்னை அக்கான்னு சொல்லீட்டான். “மை காட்” என்று அவனிடம் டேய், உனக்கு அடி ஏதுமில்லையே? அவள் கேட்க, அவன் அமைதியாக வெளியே சென்றான்.

என்னாச்சு இவனுக்கு? காலையில நல்லா இருந்த மாதிரி தானே இருந்தான் தாட்சாயிணி சிந்தித்தாள். செழியன் புன்னகையுடன் சென்றார்.

“நீ முதல்ல சாப்பிட வாடி” என்று அதீபன் செல்வதை பார்த்துக் கொண்டே சிவநந்தினி ஆத்விகாவை உள்ளே அழைத்து சென்றார்.

செழியன், அதீபன், நிதின் சேர்ந்து ஆபிஸுக்கு சென்றனர். நிதினை ரவிக்குமார் கம்பெனியில் விட்டு அதீபனும் செழியனும் சென்றனர். அதீபனை பற்றிய சிந்தனையுடன் நிதின் சென்றான்.

அதிரதன் விழித்து சோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வினு நேத்ராவை பார்த்துக் கொண்டிருந்தான். சாரு கதவை திறந்து அவனை பார்க்க, அவன் நேத்ராவை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த சாரு,

அதிரதன் சார் உள்ளே வரலாமா? பிஸியா இருக்கீங்களா? என கேட்டாள்.

அவன் புன்னகையுடன் வா என்று கண்ணாலே அழைத்தான். அவள் தேனீரை அவனுக்கு கொடுத்து விட்டு, சார் நியூஸ் பாருங்க என்று அவள் சொல்ல, அலைபேசியை தேடினான்.

இருங்க சார், எடுத்து தாரேன் என்று எடுத்து கொடுத்தாள். ரவிக்குமார் கம்பெனி நியூஸை பார்த்து, அவர் கம்பெனியை எதற்கு குறி வைக்கிறான்? என்று யோசனையுடன் நிதினை அழைத்தான். அவன் வேலையில் மும்பரமாக இருந்தான்.

அதிரதன் அழைப்பை எடுத்தான். என்னடா செஞ்சுகிட்டு இருக்கீங்க?

ரதா, அதிகாலை நடந்தது. பிரச்சனையில் உன்னை தொந்தரவு செய்ய வேண்டாமென்று தான் சொல்லலை.

சரி, இப்ப எங்க இருக்க? அங்கிள் ஓ.கே வா?

ரவிக்குமார் நிதினை அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார்.

நிது, அவரிடம் கொடு என்று அதிரதன் சொல்ல, அவர் அதிரதன் என்றவுடன் மகிழ்ச்சியாக மாப்பிள்ள, உங்களுக்கு ஒன்றுமில்லையே? என்று கேட்டாள்.

இல்ல அங்கிள். எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் உங்க கம்பெனியை எதுக்கு அவன் குறி வச்சிருக்கான். ஏதாவது கால் செய்து மிரட்டினானா? அதிரதன் கேட்க, அவர் தயக்கத்துடன் மிரட்டலைப்பா. பாப்பாவை கடத்திட்டானுக என்று வருத்தமாக சொன்னான்.

வாட்? தாட்சாயிணியவா? யாருன்னு கண்டுபிடிச்சீங்களா? என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

இல்லப்பா. போலீஸ் தேடிகிட்டு இருக்காங்க என்றார்.

அவ நல்லா இருக்காலா? பயந்துட்டாளா? அவன் அக்கறையுடன் கேட்க, நேத்ரா எழுந்து அமர்ந்தாள். சாரு அவளிடம் சென்று அமர்ந்தாள்.

அதான் நீங்க எல்லாரும் தான் இருக்கீங்களே? செழியன், நிதின் அதீபனும் உதவினாங்க என்றார்.

இப்ப ஆன்ட்டியும் அவளும் எங்க இருக்காங்க?

உங்க வீட்ல தான் இருக்கோம். செழியனிடம் வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவே மாட்டேங்கிறான் மாப்பிள்ள என்றார்.

எங்க வீட்லயா? அங்கிள் பாட்டி உங்களை ஏதும் சொல்லலையே?

இல்ல. அவங்க முன் போல் நன்றாகவே பேசுறாங்க மாப்பிள்ள என்றார்.

வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளை என்கிறாரே? என்று நேத்ராவை பார்த்தான்.

அவள் எழுந்து அவனிடம் வந்து,சார், உங்க தம்பி கால் பண்ணாங்க. உங்கள நியூஸ் பார்க்க சொன்னாங்க என்று சொல்லி விட்டு நிமிர்ந்து கூட பாராமல் அவள் சென்றாள்.

ஏய், நில்லு என்னாச்சுடி? என்று சாரு அவள் பின் வந்தாள்.

இவளுக்கு என்னாச்சு? என்று அதிரதன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

மாப்பிள்ள, பொண்ணுங்க சத்தம் கேட்குது? என்று கேட்டார்.

ஆமா அங்கிள் என்ற அதிரதன், நீங்க என்னை எப்பொழுதும் போல் பெயர் சொல்லியே அழையுங்கள்.

இல்ல மாப்பிள்ள என்று அவர் பேச தொடங்க, என்னால தாட்சாயிணியை கல்யாணம் பண்ணிக்க முடியாது அங்கிள். தப்பா எடுத்துக்காதீங்க. அவள் நல்ல பொண்ணு தான் அங்கிள். அவளுக்கு ஏற்ற நல்ல பையனா பாருங்க என்று நேராகவே பேசினான்.

எதுக்குப்பா? வயது வித்தியாசம் பாக்குறீங்களா? அவர் கேட்க, இல்ல அங்கிள் அவன் சொல்ல, ஜீவா இங்க வா என்று சாரு கத்தும் சத்தம் கேட்டு அதிரதன்,

ஹேய், என்னாச்சு? என்று சத்தமிட்டான்.

மயங்கிய நிலையில் நேத்ரா அவள் கையை பிடித்து, வேண்டாம் என்றாள்.

ஜீவாவும் யுவனும் வந்தனர். ஜீவா அவளை அறைக்கு தூக்கிட்டு போ என்று அதிரதனிடம் வந்து, ஒன்றுமில்லை சார். அவள் காலில் லைட்டாக அடிபட்டிருச்சு. அவ்வளவு தான்.

பெரிய அடியா? எப்படி ஆச்சு? ப்ளட் வருதா? பெயினா இருக்கா? என்று பதட்டத்துடன் அவன் கேள்விகளை அடுக்கினான்.

சார், பதறும் அளவு இல்லை. அவள் விழ வந்தால் அதனால் தான் ஜீவாவை அழைத்தேன். சாரி சார். அவளுக்கு சிறியதா தான் அடிபட்டிருக்கு. இரத்தமெல்லாம் வரலை என்றாள்.

உஃப் என்று விட்டு, மருந்து போட்டு விடு என்று படுத்துக் கொண்டான்.

சரிப்பா, இந்தா நிதினிடம் பேசு என்று அலைபேசியை அவனிடம் கொடுத்து விட்டு, தம்பி பேசிட்டு என்னோட அறைக்கு வாங்க என்றார் ரவிக்குமார்.

ரதா, இப்ப பிரச்சனையில்லை. அதான் நான் இருக்கேன்ல்ல. நீ உடம்ப பார்த்துக்கோ என்றான் நிதின்.

இல்லையே? உன் வாய்ஸ் சரியில்லையே?

நான் நல்லா தான் இருக்கேன் என்று நிதின் சொன்னாலும் ராமவிஷ்ணுவின் செயல்கள் அவன் தலையை குடைந்து எடுத்தது.

ரதா, நாம அப்புறம் பேசலாமா? தலை ரொம்ப வலிக்குது என்று அவன் பேசுவதை கூட கேட்காமல் நிதின் வைத்து விட்டான்.

ஏதோ சரியில்லை என்று அதிரதனுக்கு புரிந்தது. யோசனையோடு அவன் இருக்க, யுவன் உள்ளே வந்தான்.

அதிரதன் அறையிலிருந்து வெளியே வந்தவுடனே கண் இருள முடியாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டாள் வினு நேத்ரா. அப்பொழுது தான் ஜீவாவை அழைத்தாள் சாரு. அவன் அவளை அறைக்கு தூக்கி செல்ல யுவனும் அவன் பின்னே சென்றான். சாரு அதிரதனை அமைதிபடுத்தி விட்டு, நேத்ரா முகத்தில் தண்ணீர் தெளித்து எழ வைத்து அருந்த தண்ணீரை கொடுத்தாள்.

ஆனாலும் நேத்ரா சோர்வாக இருக்க, சாரு அவளறைக்கு சென்று சில மருத்துவ கருவிகளை எடுத்து வந்தாள். முதலில் மனஅழுத்தம் உள்ள கருவிகளை எடுத்து அவளுக்கு சோதனை செய்தாள்.

பிரஸ்ஸர் மிகவும் அதிகமாக இருந்தது. திடீர்ன்னு எப்படி அதிகமானது? வினு அதிரதன் ஏதும் சொன்னானா? சாரு கேட்க, இல்லை என்று தலையசைத்து அமைதியாக இருந்தாள் நேத்ரா.

ஏற்கனவே நேரம் கழித்து தான் வந்தோம் தூங்குனியா? இல்லையா? சாரு கேட்க, தூங்கியதாக தலையசைத்தாள்.

இங்க பாரு வினு, உனக்கு இந்த குழந்தை மீது விருப்பம் இருக்கா? இல்லையா? சாரு கோபமாக கேட்டாள்.

என்ன சாரு? நீயும் என்னை எல்லாரையும் போல் நினைக்கிறாயா? முதலில் எழிலனுக்காக தான் உயிரோடவே இருந்தேன். பின் நிலையத்துல இருக்கிற பசங்கள பார்த்து மனம் மாறியது. இப்ப குழந்தை? நான் கலைக்கணும்ன்னா தெரிந்தவுடனே செய்திருப்பேன் என்றாள்.

அப்புறம் ஏன் பிரஸ்ஸர் இவ்வளவு அதிகமா இருக்கு?

அது வந்து..என்று அதீபன் பேசியதை நினைத்து கண்கலங்கினாள்.

சொல்லு வினு?

ப்ளீஸ் என்னிடம் ஏதும் கேட்காத? என்று அழுதாள்.

இப்படி அழுறத நிறுத்து. உன்னை நீயே கஷ்டப்படுத்துற. அதனால் தான் பிரஸ்ஸர் அதிகமாயிருக்கு. என்னாவாக இருந்தாலும் சொல்லிடு வினு. ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. இல்லை கரு கலையும் வாய்ப்பு கூட உள்ளது. ஐந்து மாதம் ஆனால் தான் குழந்தை பாதுகாப்பா இருக்கும்.

இப்பவே உனக்கு ப்ரெஸ்ஸர் இவ்வளவு இருந்தால் குழந்தை நார்மலாக பிறக்காது. ஆப்ரேசன் தான் செய்யணும். உன்னை ஒருவர் பார்த்துக் கொள்வது போலாகி விடும். கவனமா இரு வினு.

வினு, உன்னால எதையும் மறக்க முடியலையா? சாரு கேட்க, வினு நேத்ரா அழுதாள்.

சரி வினு, நான் கிளம்பும் போது நீயும் என்னோட வா. அதிரதனுக்கு ஒரு வாரத்தில் சரியாகிடும். என்னோட வீட்டுக்கு வா. அம்மா இருக்காங்க என்று சாரு சொல்ல,

கண்ணை துடைத்த நேத்ரா “இல்ல சாரு, நான் வரலை. நான் ஆறு மாதம் இங்கிருந்து விட்டு நிலையத்துக்கு போயிடுவேன்” என்றாள்.

அங்க போய் உன்னால இந்த நிலையில் வேலையெல்லாம் பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து நீ ஓய்வில் இருப்பது தான் நல்லது. நீ ரொம்ப வீக்கா இருக்க.  இல்லை உன்னையும் இழக்கும்படி ஆகிடும். உன்னை பார்த்தாலே உன் உடல்நிலை தெரியுது.

இல்ல சாரு, நான் நல்லா இருக்கேன் என்று அழுது சோர்ந்த தன் முகத்தை கைகளால் துடைத்து விட்டு தன் கூந்தலை சரி செய்து நேத்ரா சொல்ல, சாரு கண்ணீருடன் அவளை அணைத்தாள்.

பின், ” இங்க பாரு வினு. உனக்கு ஒரு வாரம் தான் நேரம் தருவேன். அதற்குள் அதிரதனிடம் நீயாகவே கர்ப்பமாக இருக்கும் விசயத்தை சொல்லு. அப்புறம் அவன் என்ன செய்யணும்ன்னு முடிவெடுக்கட்டும். இந்த ஒரு வாரத்தில் நீ சொல்லவில்லை என்றால் நீ என்னுடன் என் வீட்டிற்கு வரணும் என்றாள் சாரு கண்டிப்புடன்.

சாரு, நான் அவனிடம் சொன்னால் நான் ஏமாற்றியதாக நினைப்பானே?

நினைச்சா நினைக்கட்டும். என்ன செய்ய சொல்ற? இதை நீ அவனை பார்த்த அன்றே சொல்லி இருக்கணும்.

அன்று நான் இதை சொல்லி யுவனுக்கு ஆப்ரேசனுக்கு பணம் கொடுக்க மாட்டேன்னு சொன்னால் நான் என்ன செய்வது?

சோ..அந்த பையனுக்காக. உன்னை நீயே அவனிடம்..

ப்ளீஸ், நீயும் அப்படி சொல்லாத. நான் யுவன் ஆப்ரேசனுக்காக மட்டும் தான் செய்தேன் என்று அழுதாள். யுவன் அவனை பார்த்து, அக்கா எதுக்கு அழுறீங்க? என்று கேட்க, கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

பின், நான் சொல்ல முயற்சிக்கிறேன் சாரு என்ற நேத்ராவிற்கு வாமிட் வர எழ கூட முடியாமல் தவித்தாள். அவள் கஷ்டப்படுவதை பார்த்த சாரு அழுது கொண்டே அவளிடம் செல்ல, அவளை தடுத்து ஜீவா அவளை தூக்கி,

சிஸ்டர், என்னை உங்க பிரதரா நினைச்சுக்கோங்க என்று அவளை வாஷ்ரூமிற்கு தூக்கி சென்று மெதுவாக இறக்கி விட்டான். சாரு அவளை பிடித்துக் கொண்டாள். முடித்த நேத்ரா முகத்தை மீண்டும் மீண்டும் தண்ணீரில் அடித்து அவளை அவளே சரி செய்து கொண்டு, நானாகவே போகிறேன் என்று சாருவுடன் நடந்து சென்று படுத்துக் கொண்டு, நான் கொஞ்ச நேரம் தூங்கவா? நீ யுவனையும் அவனையும் பார்த்துக்கோ என்று கண்ணை மூடினாள்.

சாரு வெளியே நாற்காலியில் கண்ணீருடன் அமர்ந்தாள். ஜீவா நேத்ராவை பார்த்துக் கொண்டே வெளியே வந்து சாருவை பார்த்து அவளருகே வந்து அமர்ந்தான்.

அவனை பார்த்து விட்டு அவள் எழ, “உட்கார்” என்றான். அவனை பார்த்துக் கொண்டே அவள் அமர, அவள் கை மேல் கை வைத்தான்.

ஜீவா அவள் அழைக்க, பாஸூக்கும் இவங்களுக்கும் பழக்கம் இருக்கா? சார் இவங்கள மறந்துட்டாரா? அவன் கேட்க, விரக்தி புன்னகையுடன், பழக்கமெல்லாம் இல்லை என்று அவர்களது பள்ளியில் நடந்த சிலவற்றை சொன்னாள்.

ஓ..அப்படியா என்று நேத்ரா இருக்கும் அறையை பார்த்து விட்டு, வருத்தப்படாத. நான் வேண்டுமானால் பாஸூடம் பேசவா?

நீயா? நீ எப்படி பேசுவாய்? நீ எங்களுக்கு பாதுகாப்பிற்காக வந்தவன். நீ அவன் விசயத்தில் தலையிட்ட ரொம்ப கோபப்படுவான். இனி அவனுக்கு ஏதும் தெரிந்து ஒன்றும் ஆகப்போறதில்லை.

ஜீவா எழுந்து அதிரதன் அறைபக்கம் சென்றான்.

அதிரதனிடம் வந்த யுவன் அவனிடம் வந்து, அங்கிள் “நாங்க எங்க வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டான்.

எதுக்கு போகணும்? என்னை உனக்கு பிடிக்கலையா? அதிரதன் கேட்க, அங்கிள் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால் அக்காவுக்கு காய்ச்சல் என்றான்.

காய்ச்சலா? வினுவுக்கா? அவன் கேட்க, ஆமா அங்கிள் என்று யுவன் பார்த்து அவள் மயங்கியது; ஜீவா அவளை தூக்கியது; சாரு திட்டியது; வினு அழுதது என அவனுக்கு புரிந்ததை சொன்னான்.

மயங்கினாலா? காய்ச்சலா? என்று சிந்தித்த அதிரதன் ஆமா, சோர்வா தான் இருந்தாள்.

“அதுக்காக எதுக்கு இங்கிருந்து போகணும்?”

அக்கா வீட்டுக்கு போனா தான் அழாம இருப்பாங்களாம் என்றான் யுவன்.

என்ன சொல்ற? நான் அவளை ஒன்றுமே செய்யலையே? என்றவனுக்கு அதீபன் அவளிடம் பேசியதை சொன்னது நினைவுக்கு வந்தது.

Advertisement