Advertisement

அத்தியாயம் 28

நிதினுக்கு சங்கீதனிடமிருந்து, “இவன் தான்” என்று மேசேஜ் வந்தது.

“அப்ப கண்டிப்பா இவன் தான் கொலைகாரன்” என்றான் நிதின்.

காட்டுங்க என்று இருவரும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டனர். பின் அவர்கள் கிளம்ப, வினு அறையை திறந்தாள். அதிரதன் வாயிலிலே நின்றான்.

மங்கிய விளக்கொலியில் நேத்ரா யுவனுடன் படுத்து இருவரும் அணைத்தப்படி இருக்க, அவள் அழகாக தாழாட்டு பாடல் ஒன்றை பாடினாள். அவளை அதிரதன் மெய் மறந்து பார்த்தான்.

“வினு” மெதுவான அழைத்தான். அவள் கண்ணை திறந்து அவனை பார்க்க, நிறைய சாப்பிட்டாயா? தொப்பை போட்டிருக்கு. ஒரே நாளில் எப்படி? கேலியாக அவன் கேட்க, வேகமாக ஆடையை சரி செய்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் யுவியை பார்த்து அவனை நகர்த்தி படுக்க வைத்து எழுந்தாள்.

அதிரதன் அங்கேயே கையை விரிக்க, என்ன சார்? என்று அவனருகே வந்தாள்.

“இப்பொழுது எனக்கு ஹக் வேண்டும்” என்று அவளை இழுத்து அணைத்தான். அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாலும் விலகவில்லை. வெளியே போகும் வருபவர்கள் இவர்களை பார்த்துக் கொண்டே சென்றனர்.

சார், விடுங்களேன். எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க.

அதுக்காகவெல்லாம் விட முடியாது என்றான் அதிரதன்.

சார், மூச்சு முட்டுது. எனக்கு சோர்வா இருக்கு. நான் தூங்கணும் என்றாள்.

தூங்கணுமா? என்று அவளை விலக்கி விட்டு உள்ளே சென்று யுவி அருகே படுத்துக் கொண்டான்.

சார், என்ன செய்றீங்க? அவனை தொந்தரவு செய்யாதீங்க.

சரி, இங்க வா..என்று அருகே அமர வைத்து விட்டு திறந்திருந்த கதவை பார்த்து புன்னகைத்து விட்டு, எழுந்து கதவை சாத்தினான்.

அவர்கள் இருந்த அறைக்கு நேரான அறையில் தான் விக்கியை காதலித்த பொண்ணுடன் நேத்ரா குழந்தைக்கு காரணமான கார்த்திக் இருந்தான். அதிரதனின் செய்கை அவன் கோபம் உச்சிக்கு செல்ல வைத்தது.

பாருடி, அவனுக்கு எவ்வளவு திமிரு? என்னோட நேத்துவை கட்டிப் பிடிக்கிறான் என்று கத்திக் கொண்டிருந்தவன் பாரு..கதவை அடைத்து விட்டான். என்ன செய்யப் போகிறானோ? என்று அவளிடம் கத்தினான்.

உனக்கு நான் அருகே இருப்பதே தெரியவில்லையா? எப்ப பாரு நேத்து நேத்து தான். அவளிடம் அப்படி என்ன தான் இருக்கு? அவள் சத்தமிட, சட்டென கத்தியை எடுத்து அவளது கழுத்தில் வைத்து, என் நேத்துவை ஏதாவது சொன்னேன்னா அவ்வளவு தான். அவள் யாரையும் அருகே விட மாட்டாள். அவன் சும்மா கட்டி தானே பிடிச்சிருக்கா என்று அவன் மனதை அவனே தேற்றிக் கொண்டு, அந்த அதிரதனுக்கு என் கையால் தான் சாவு. அவன் நேத்துவை தொட நான் விடவே மாட்டேன் என்று புலம்பினான்.

“நீ என்னமும் செய்” என்று அவள் எழ, அவளை இழுத்து அவன் மடியில் போட்டுக் கொண்டு, எனக்கு விருந்தாகாமல் உன்னை விடுவேனா? என்று அவளுடன் ஒன்ற ஆரம்பித்தான்.

வினுவிடம் அதிரதன் அனைத்தையும் சொல்ல, நான் சொன்னேன்ல விக்கி எதுவும் செய்யமாட்டான். அவன் நல்லா தானே இருப்பான் சார்? அவள் கேட்க, அது உறுதியாக செல்ல முடியாது. இந்த தழும்பை பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? பாரு என்று அதிரதன் புகைப்படத்தை காட்ட இது எனக்கு தெரியும். ஆனால் யாருன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது சார் என்றாள்.

தெரியுமா? நல்லா யோசித்து சொல்லு என்று அதிரதன் கேட்க, கண்ணை மூடி நினைவுகளை பின்னோக்கி ஓட விட்டாள். அவள் முகத்தில் எல்லா விதமான பாவனைகளும் வந்து சென்றது. அதிரதன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹேய், வினு ஓரமா போ..என்று ஒருவன் கத்த, பள்ளிச்சீருடையில் வந்த வினு நேத்ராவை ஒருவன் தள்ளி விட்டு அவன் அந்த பந்தடியை வாங்கி கீழே விழ, அங்கிருந்த கம்பி கிழித்து அவன் புருவத்தின் மேல் இரத்தம் ஆறாக ஓடியது. வினு அவனை பார்த்து அழுது கொண்டே நின்றாள். அதே கண்ணீர் இப்பொழுதும் வர அவன் முகம் நேத்ரா கண்ணில் பட்டது.

கார்த்திக், கார்த்திக்..ஒன்றுமில்லை என புலம்பியவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள். அழ ஆரம்பித்தாள் வினு நேத்ரா. அதிரதன் அவளை அணைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டு கண்டறிய வேண்டாம் என்றான்.

அவள் அழுது கொண்டே அவன்..அவன்..கார்த்திக்கா? என்று மேலும் அழுதாள்.

கார்த்திக்கா? யார் அவன்? அதிரதன் கேட்க, தயாரானதை சொல்ல வந்த நிதின் இதை கேட்டு அதிர்ந்து கதவை சாத்தி விட்டு உள்ளே வந்து, வினு அவன் கார்த்திக்கா? “மை காட்” நம்பவே முடியலை என்று அமர்ந்தான் நிதின்.

லிஸ்ட்ல அவனை மறந்துட்டியாடா? அதிரதன் கேட்க, டேய் அவனும் நம்ம வகுப்பு தான். ஆனால் என்று வினுவை பார்த்தான். அவள் அதிரதனை அணைப்பிலிருந்தும் விடவில்லை. அழுகையை விடவும் இல்லை.

அவன் தான் லிஸ்ட்லயே இல்லையே? நிதின் சொல்ல, என்னடா சொல்ற?

சோடா புட்டி கண்ணாடி, பூனைக்குட்டி தலை முடி, அழகான வெகுளி சிரிப்பு என இருந்தவன் தான் கார்த்திக். ஆனால் இந்த அளவிற்கு உடம்பை வளர்த்து,..நம் வினுக்காக இப்படியா? என்று நிதின் திகைப்பிலிருந்து வெளியே வராமல் சொன்னான்.

வினு, போதும். எதுக்கு இப்படி அழுற? என்று அதிரதன் அவளை விலக்கினான்.

“என்னால நம்பவே முடியலடா” என்று மீண்டும் அதிரதனை அணைத்தாள்.

டா வா? என்னையா சொன்ன? அதிரதன் கேட்க, அவனை விலக்கி விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

நிது, அவன் எப்படிடா இப்படி செய்கிறான்? நேத்ரா மேலும் புலம்ப, அதிரதன் கோபமாக சீக்கிரம் கிளம்புங்க. இப்பவே கிளம்பணும். அவள் எடுத்து வைக்க உதவுடா என்று அதிரதன் விளக்கை ஒளிர வைக்க விளக்கு பொத்தானில் கை வைக்க, அவனது கையை பிடித்து தடுத்த நேத்ரா, போடாதீங்க. யுவி எழுந்திடுவான். அவன் நன்றாக ஓய்வெடுக்கணும்ன்னு டாக்டர் சொன்னாங்க. நான் இப்படியே எடுத்து வச்சிருவேன் என்று அவள் எடுக்க நிதின் அவளுக்கு உதவினான்.

அதிரதன் டாக்டரை பார்த்து விட்டு, அவரிடமே அவ்வறையையும் விசாரித்து உள்ளே சென்றாள். அதை கவனிப்பவனோ உறங்கிக் கொண்டிருந்தான். லேசாக அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அவனுக்கு எதிரே ஒரு பொண்ணு ஓட, ரதா அவள பிடி என்று நிதின் கத்தினான்.

அதிரதன் அந்த பொண்ணை பிடிக்க, என்னை விடு..கெல்ப் கெல்ப்..என்று கத்தினாள். அதிரதன் முகம் தெளிவாக பார்த்த அனைவரும் திகைத்து அவனை பார்க்க, நிதின் அவளருகே வந்து இவ தான்டா விக்னேஷ்வரன் காதலித்த பொண்ணு என்றான்.

ஓடி வந்த ஒரு பொண்ணு அதிரதனிடம் கயிற்றை கொடுக்க, அவன் புன்னகையுடன் வாங்கினான். அந்த பொண்ணோ..சார், செல்ஃபி என்று புகைப்படம் அவனோட எடுத்து தன் இன்ஸ்டாவில் போட்டாள்.

அந்த பொண்ணு தப்பி ஓட, நிது நான் அவளை பிடிக்கிறேன் என்று எடுத்த விவரத்தை எடுத்து நிதினிடம் கொடுத்து இப்ப போலீஸ் வருவாங்க அவனை பிடி என்று அதிரதன் அவள் பின் ஓடினான்.

கார்த்திக் அவனறையில் இல்லை. செட்..என்று நிதின் சத்தமிட்டான்.

கொலைகாரன் இங்க தான் இருக்கான்னு சொன்னீங்க சார்? போலீஸ் ஒருவர் கேட்க, சார் இங்கே தான் இருந்தான். இதோ பாருங்க அவனோட விவரம் என்று அதிரதன் சேகரித்த தகவல்களை நிதின் போலீஸாரிடம் காட்ட, அவர் தன் அலைபேசியில் அவனது புகைப்படத்தை அவர் ஆட்கள் அனைவருக்கும் பகிர்ந்து அவனை பிடிக்க ஏற்பாடு செய்தார்.

அதிரதன் தனியாக அங்கே வந்தான்.

ரதா? எங்க அந்த பொண்ணு?

அவ தப்பிச்சிட்டா. இவன் எங்க?

இவனும் தப்பிச்சிட்டான்.

அதிரதன் சார், நீங்க கம்பிளைண்ட் கொடுங்க. நாங்க பார்த்துக்கிறோம் அவர்களின் தலைமை போலீஸார் கூற, இப்ப நடந்ததை வைத்து நீங்க அவனை தேடுங்க. எனக்கு கம்பிளைண்ட் பைல் பண்ண நேரமில்லை. எங்களை சார்ந்த அனைவருக்கும் ஆபத்து இருக்கு. அவனையோ இந்த பொண்ணையோ பிடிச்சா உடனே இவனுக்கு கால் பண்ணுங்க என்று சொல்லி விட்டு,

நிது, காவியனையும் வினுவையும் அழைச்சிட்டு போர்டிகோவிற்கு வா. நான் காரை எடுத்துட்டு வாரேன். எதையும் எடுத்து வைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை வினுவையும் சீக்கிரம் வரச் சொல்லு என்று சொல்லி விட்டு அவன் செல்ல, வினு யுவியை தூக்கிக் கொண்டும், நிதின் அவனது பொருட்களையும் காவியன் மிதுனும் வந்தனர். அதிரதன் காரின் பின்னே செவிலியர் ஒருவர் இருந்தார். வினு, காவியன் பின்னே ஏற, நிதினும் மிதுனும் அதிரதனுடன் ஏறினர்.

நிதின் செவிலியரை பார்த்து, ஹே சாரு நீயா? இங்க தான் வொர்க் பண்றியா? பார்த்து வருடமாகிடுச்சுல்ல என்றான்.

வினு என்னை நீ மறந்துட்டியா? சாரு என்ற செவிலியர் கேட்க, ஹா..மறந்துட்டேன். சாரி சாரி. இப்ப நினைவு வந்திருச்சு என்று அவர்கள் பேச,

உங்க இருவருக்கும் தெரியாத ஆட்களே இல்லையா? அதிரதன் கேட்க, உன்னை மாதிரி நாங்க என்ன புத்தகப்புழுவா? என்று நிதின் கேட்டான். அவனை முறைத்துக் கொண்டே காரை எடுத்தான் அதிரதன்.

நம்ம பக்கத்து வகுப்பு தான் சாருமதி. என்ன சாரு? என்று நேத்ரா அவளை பார்த்து புன்னகைக்க, வெங்கிய பார்த்தியா? அவன் மேரேஜூக்கு நான் போனேன் தெரியுமா? பொண்ணு சுமார் தான். பார்த்து வினு. அவன் கண்ணுல பட்டுறாத. மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன் பின் வந்து விடாமல் அவள் கிண்டலாக சொல்ல, நிதின் முகம் சுருங்கியது. நேத்ரா கண்ணீர் வெளியே வந்தது.

என்னாச்சு? நல்லா தான பேசிக்கிட்டு இருந்தீங்க? சாரு கேட்க, இப்ப அவன் உயிரோட இல்லை என்றான் நிதின். யுவியை மடியில் போட்டிருந்த நேத்ரா கண்ணீர் ஆறாக, கொஞ்ச நேரம் அமைதியா வர்றீங்களா? என்று அதிரதனும் காவியனும் ஒன்றாக சத்தமிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

என்னால தான் எல்லாரும் தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறாங்க நேத்ரா மனதினுள் குமிறினாள். அவளை மீறியும் கண்ணீர் வர, அக்கா..நிறுத்துறீங்களா? காவியன் சத்தமிட, சும்மா இருடா. அவளே கஷ்டத்துல இருக்கா. அழுதா அழட்டும்.

அக்கா, நீங்க அழக்கூடாது. நான் எதுக்கு சொல்றேன்னு புரியுதா? இல்லையா?

ம்ம்..என்று நேத்ரா கண்ணை துடைத்துக் கொண்டாள். நிலையத்திற்கு கார் வர, வெளியிருந்தே காவியனும் மிதுனும் இறங்கினர்.

அக்காவையும் சேர்த்து பார்த்துக்கோங்க என்று சாருவிடம் கூறி விட்டு, அதிரதனிடம் வந்து பார்த்துக்கோங்க சார். பிரச்சனைன்னா சொல்லுங்க. அப்புறம் அக்காவை தொந்தரவு செய்றீங்கன்னு தெரிஞ்சது அவ்வளவு தான் என்று காவியன் மிரட்டுவது போல் சொன்னான்.

என் நேரம்டா. சின்ன பசங்கல்லாம் என்னை மிரட்டுறானுக என்று அதிரதன் சொல்ல, காவியன் நகர்ந்தான். காரை எடுக்க வந்த அதிரதனின் முன் முகத்தை கொண்டு வந்த மிதுன், பார்த்து சார் அக்காவுக்கு ஏதாவது ஆச்சு பசங்க எல்லாரும் சேர்ந்து வச்சி செஞ்சிருவோம் என்றான் புன்னகையுடன்.

டேய், அதுக்கு எதுக்கு மூஞ்சிய திடீர்ன்னு முன்னாடி கொண்டு வந்து பயமுறுத்துற? உங்கக்கா என்ன என்னோட தனியாவா இருக்க போறா? அதான் அந்த பொண்ணு கூட இருக்கா. இதை விட யுவி இருக்கான் அதிரதன் சொல்ல, இருந்தாலும் கவனமா இருங்க இல்லை என்று மிதுன் சொல்ல, கார் கதவை தட்டும் ஓசை கேட்டு கதவை அதிரதன் திறந்தான்.

நீலூ, அங்கிள் அக்கா, யுவிக்கு என்று நாக்கை மடித்து கையை நீட்டினான். அதிரதன் வாயில் வைத்து வினு என்ன இது? உனக்கு ஒருவன் தான தம்பி. வரிசையா மிரட்டிறானுக. பெரிய பட்டாளத்தையே உன் பக்கம் வச்சிருக்கியே? நான் தொலைஞ்சேனா? அதிரதன் தலையில் கை வைத்தான்.

மிதுன் புன்னகையுடன் நீலூவை தூக்கி முத்தமிட்டு உள்ளே அழைத்து சென்றான். வினுவும் சிரிக்க, நிதின் சிரிப்பு தனியாக தெரிந்தது. மூவரும் அவனை பார்க்க, இல்ல நம்ம ரதன்கிட்ட இத விட யாரும் மிரட்டி இருக்க மாட்டாங்க. என்ன வினு? என்று அவளை பார்க்க, அவள் புன்னகையுடன் அதிரதனை பார்த்தாள்.

சார், நீங்க இந்த அளவு பேசுவீங்களா? என்ன ஆச்சர்யம்? ஹாப்பா..பார்க்கவே சந்தோசமா இருக்கு என்று சாரு அதிரதனை பார்த்து சொன்னாள்.

என்ன? எல்லாரும் சொல்லி வச்சு பேசுறீங்களா? ஒரே மாதிரி பேசுறீங்க? என கேட்டுக் கொண்டே அங்கே வெளியே நின்ற பாடிகார்ட்ஸிடம் கண்ணை காட்டி விட்டு காரை எடுத்தான் அதிரதன்.

அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது லாரி கன்டெயினர் அவர்களை இடிக்க வர, அதிரதன் பிரேட் போட திசை மாறி கார் நின்றது. வினு கை தானாக வயிற்றை பிடிக்க, அந்த நேரத்திலும் சாரு அவளை கவனித்தாள்.

சீட் பெல்ட் போடுங்க என்று தன் கட்டளையை பிறப்பித்தவன் காரை விரைந்து செலுத்த, பொண்ணுங்க பயத்துடன் இருந்தனர். யுவி விழித்து நேத்ராவை அணைத்திருந்தான்.

அவன் காரிலிருந்த பொத்தான் ஒன்றை அழுத்தி, “நம்பர் ஃபோர் அன்ட் பைவ்”. “கம் நைவ் டூ அதர் கார்ட்ஸ்”. க்விக் பாஸ்ட்” அவன் சொல்ல, எஸ் பாஸ் என்ற சத்தம் முடிக்க, நால்வர் பைக்கில் அவர்கள் கார் பின் பாதுகாத்து வந்தனர்.

நிது, வா..நீ டிரைவ் பண்ணு என்று அதிரதனும் நிதுனும் இடத்தை மாற்ற, ரதா, என்ன செய்யப் போற? நான் அவனை பிடிக்கணும். கண்டிப்பாக கொலைகாரனை சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்று அவன் தன் காரில் வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான். பின் அவனுக்கு தேவையானதை எடுக்க, வினுவும் சாருவும் பார்த்துக் கொண்டனர்.

பயந்தவாறு யுவன், அங்கிள் என அழைத்தான். அவனை திரும்பி பார்த்த அதிரதன், ஒன்றுமில்லைடா யுவி. சின்ன கேம். நாம ஜெயிக்கணும்ல்ல. எங்க எனக்கு ஒரு கிஸ் கொடு? என சீட்டிற்குள் புகுந்து யுவனிடம் வந்து கன்னத்தை அவனிடம் காட்ட, யுவனும் முத்தம் கொடுத்தான். அதிரதனும் யுவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு, எதுக்கும் பயப்படக்கூடாது என்று கையை நீட்ட அவனும் கையை கொடுத்தான். இருவரும் புன்னகைத்து கொண்டனர்.

இரு பொண்ணுங்களையும் பார்த்து, என்ன நடந்தாலும் கீழே இறங்கக் கூடாது என்று வினுவை பார்த்து விட்டு, நிது காரை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இரு. நான் பார்த்துக்கிறேன். இப்ப மட்டும் மெதுவாக செலுத்து என்று சொல்ல அவனும் செய்தான். அடுத்த நொடியே காரின் மேற்பக்கம் மூலம் சட்டென கார் மீது ஏறினான்.

பாய்ஸ் அவன் சத்தம் கொடுக்க, ஒரு பக்கமாக பைக்கில் வந்து கொண்டிருந்தவர்கள் கையை விட்டு ஓட்டினர். “காட் இட்” அதிரதன் சொல்ல, அவர்கள் தலையில் கையை அவர்கள் வைத்து பாதையாக செயல் பட்டனர். அவன் அவர்கள் கையில் மிதித்து ஏறி கடைசியாகப்பட்டவன் கையிலிருந்து எம்பி லாரியை பிடித்து தொங்கினான்.

அதிரதன் காரில் பின் இருந்தவர்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர். எப்படியோ கதவை திறந்து உள்ளே செல்ல, லாரி ஓட்டுனர் அருகே இருந்தவன் அதிரதனை ஓங்கி எத்த, அதிரதன் மீண்டும் சரிந்து பழைய இடத்திலே தொங்கிக் கொண்டிருந்தான்.

வேகமாக லாரி மேலே ஏறி, ஓட்டுனரை நிறுத்த முயற்சித்தான். ஆனால் அருகே இருந்தவன் கத்தியை எடுத்து அருகே வர, புரியாமல் ஏதும் செய்யாமல் இருந்தவன் தன் காரை பார்த்தான். தன்னவர்களின் பாதுகாப்பிற்காக செய்யலாம் என்று தோன்றவே அதிரதன் முடிவெடுத்தவனாய் மேலிருந்து குதித்து டிரைவரின் கதவை பிடித்தான். அருகிலிருந்தவனுக்கு தோதாக அதிரதன் கையருகே கத்தியை கிழிக்க கொண்டு வந்தான்.

பாடி கார்ட் ஒருவன் துப்பாக்கியை எடுத்து டிரைவரை குறி வைத்து சுட்டான். தோட்டா லாரி கண்ணாடியை கிழித்து அவனை துளைக்க, டிரைவர் நெஞ்சில் தோட்டா பாய்ந்து அங்கேயே அவர் இறந்தார். அருகே இருந்தவன் கத்தியை துக்கி அதிரதன் பக்கம் எறிந்தான். கொஞ்ச கொஞ்சமாக அப்பொழுது தான் அதிரதன் மேலேறினான். அவன் எறிந்த கத்தி அதிரதன் நெஞ்சில் பாய்ந்து கீழே விழுந்தது.

ஏய்..என்று அதிரதன் கத்திக் கொண்டே பல்லை கடித்து வலியை பொறுத்தான். வினுவும் சாரும் பதட்டமாக நிதினிடம் சொன்னார்கள். அவன் காரை நிறுத்தினால் லாரி கார் மீது மோதும். அவன் புரியாமல் கலக்கத்துடன் தன் நண்பனை திரும்பி பார்த்துக் கொண்டே காரை செலுத்தினான்.

உள்ளே இருந்தவன் பிரேக்கை அழுத்த, லாரி நின்ற மறுநிமிடம் அதிரதன் கீழே குதித்தான். உள்ளிருந்தவன் தப்பி ஓட, அதிரதன் கொடுத்த சத்தத்தில் அவனது பாடி கார்ட்ஸ் அவனை பிடித்து இழுத்து வந்தனர். யுவனை சாருவிடம் கொடுத்து விட்டு, நிதினும் வினுவும் அதிரதனிடம் வந்தனர். மற்றவர்கள் அதிரதனை அழைத்து வந்து காரில் ஏற்றினார்கள்.

அதிரதன் மீது கத்தி வீசியவன் கையிலிருந்த கத்தியால் அவனை அவனையே “சதக் சதக்கென” குத்தி செத்தும் விட்டான்.

அதை கவனித்த அதிரதன், நிது அவன் என்று கையை காட்டினான்.

ரதா, அவனை பார்த்துக்கிறேன். சாரு உன்னால இப்ப ட்ரீட் பண்ண முடியுமா? நிதின் கேட்க, யா சுயர் டாக்டர் இதுபோல் அடிபட வாப்பிருக்குனு சொன்னதால அதற்கு தேவையான அனைத்து மருந்துகளையும் கொண்டு வந்திருக்கேன் என்று மருத்துவத்திற்கு என சாரு வைத்திருந்த பையை எடுத்தாள்.

அதிரதன் நெஞ்சில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை பார்த்து, வினு சிறிதும் யோசிக்காது அவளது புடவை முந்தானையால் அதில் அழுந்த வைக்க, அவனுக்கு வலி உயிர் போனது. அவள் கை மீது அதிரதன் கையை வைத்தான்.

சார், ரொம்ப பெயினா இருக்கா? என்று வினு கண்ணிலிருந்து கண்ணீர் வர, அந்த வலியிலும் அதிரதனுக்கு “தனக்காக அழுகிறாள் ” என்று மகிழ்ச்சியானது.

வினு, கொஞ்சம் தள்ளி கத்தி பட்டிருந்தால் தான் கிரிட்டிக்கல் ஆகி இருக்கும். இதெல்லாம் ஒரு வாரத்திலே குணமாகி விடும் என்று சாரு அவளை பார்த்துக் கொண்டே கூறினாள்.

அங்கிள், “இரத்தம்”, “என்னை போல உனக்கும் இரத்தம்” என்று யுவன் அழுதான். சாரு அவனை பார்த்து விட்டு வினுவை பார்த்தாள். வினு அவனை அணைத்தாள்.

வினு, நீ உன்னுடைய புடவையை எடு என்று சாரு சொல்ல பின் தான் அவனருகே இருந்த நெருக்கத்தை வினு நேத்ரா உணர்ந்தாள். காருக்குள்ளே இவர்கள் இருக்க நிதின் அங்கே போலீஸை வர வைத்து விசயத்தை சொன்னான். அவர்கள் சடலத்தை ஆம்புலன்ஸ்  மூலமாக எடுத்து சென்றனர்.

வினு அதிரதனை விட்டு விலக, எங்க போற? அங்கேயே இரு என்று சாரு காரிலிருந்து வெளியே வந்து மறுபக்கமாக ஏறினாள்.

பெரிய பிரச்சனையா? பாடி கார்டு ஒருவன் கேட்க, எவ்வளவு சீக்கிரமா கேக்குறீங்க சார்? சாரு கேட்டுக் கொண்டே வினு, குட்டிப்பையனை தள்ளி அமர வை என்று சொல்லி விட்டு வா..வந்து எனக்கு உதவி என்று இரத்தத்தை சுத்தம் செய்து கொண்டே, அதிரதன் சார் உங்களுக்கு பயமா இருக்கா? என்று கேட்டாள் சாரு.

எனக்கு பயமா? வலி மட்டும் தான். ஆனால் வினுவின் கண்ணீரால் அதுவும் சரியானது என்றான்.

அப்படியா சார்? வினு நீ அழுதா அதிரதன் சாருக்கு சீக்கிரம் சரியாகிடும். கொஞ்சம் அழுகிறாயா? சாரு கேலியாக கேட்க, அக்கா அழாத அண்ணா சொன்னான்ல்ல என்றான் வினு.

மருந்திட்டு பஞ்சை வைத்து சாரு கட்டு போட வினுவும் உதவினாள். ஆனால் அவள் நெருக்கம் அதிரதனுக்கு மேலும் சிலிர்க்க, சாரு புன்னகையுடன் இருவரும் எப்படி மறுபடியும் மீட் பண்ணீங்க? எனக் கேட்டாள்.

வினு பதறி, என்ன மீட்டா? இல்லை. நான் யுவனுக்காக உதவி கேட்க தான் வந்தேன்.

ஓ..அது மீட் இல்லையா? சாரு கேட்க, அதிரதன் புன்னகைத்தான். அவனை பார்த்து விட்டு, வினு உன்னோட மேரேஜ் பத்தி கேள்விபட்டேன். சாரிய்யா, என்னால வர முடியலை என்றாள்.

என்னோட மேரேஜ் உனக்கு எப்படி தெரியும்?

என் வகுப்பு தோழன் ராஜ் தான் அவன் இன்ஸ்டாவில் போட்டான். உனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையோ? அவள் கேட்க, வினு அமைதியாக உதவிக் கொண்டிருந்தாள்.

பிரச்சனையா வினு? சாரு கேட்க, டிவோஸ் ஆகிடிச்சு சாரு. நாம இத பத்தி அப்புறம் பேசலாமே? என்று தவிர்த்தாள் நேத்ரா.

இருவரும் அவனுக்கு கட்டிட்டு முடிக்க, நிதினிடம் கம்பிளைண்ட் தர சொல்லி போலீஸ் கேட்டார்.

நிதின் அதிரதனிடம் சொல்லி விட்டு அவன் ஒரு பாடி கார்டுடன் சென்றான். அதிரதன் காரை ஜீவானந்தன் என்றவன் ஓட்டி வர பின்னே மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

அதிரதன் மற்றவர்களை அனுப்ப, அவனுடன் அதிரதனும் மற்றவர்களும் வீடு வந்து சேர்ந்தனர்.

அதிரதனை அவனறைக்கு மூவரும் அழைத்து வந்தனர். வினு நீ குட்டிப்பையனை தூங்க வைக்க போ என்றாள் சாரு.

இல்ல வினு, நீ இங்க தான் இருக்கணும் என்று அதிரதன் சாருவை முறைத்தான். இவர்களை ஜீவானந்தன் கவனித்தாலும் ஏதும் பேசவில்லை.

அதிரதா, நான் அவளுடன் பேசணும். நான் உனக்கு இன்ஜெக்சன் போடணும். போ வினு என்றாள் சாரு.

இன்ஜெக்சன் தான? வினு பக்கத்துல இருக்கட்டும் என்றான்.

என்ன இவன் புரிந்து தான் பேசுகிறானா? சாரு அவனிடம், ரொம்ப மாறிட்டா என்று பெருமூச்செடுத்து விட்டு, வினு என்ன செய்யப் போற? சாரு கேட்டாள்.

நான் வெளிய இருக்கேன் சார். யுவன் தூங்கியவுடன் வாரேன் என்றாள்.

நோ, நீ போகக் கூடாது என்ற அதிரதன், எனக்கு எந்த மருந்தும் வேண்டாம். ஜீவா என்று அதிரதன் சத்தமிட்ட மறு நிமிடம், மேடம் நீங்க வெளிய வாங்க என்று சாருவை அழைத்தான்.

நான் இன்ஜெக்சன் போடாமல் வர மாட்டேன் என்று அவள் பிடிவாதமாக நின்றாள். அதிரதன் கண்ணை காட்ட, ஜீவா சிறிதும் யோசிக்காது சாருவை அலேக்காக தூக்கினான்.

ஏய், விடுடா அவள் கத்த, ஹேய் அவள என்ன செய்ற? வினு அவனிடம் வர இருந்தவள் கையை பிடித்தான் அதிரதன்.

ஜீவா சாருவை தூக்கி வெளியே செல்ல, ஹே, பாடி பில்டர்ன்னா என்ன வேணும்ன்னாலும் செய்வாயா? இடியட் உன்னோட பாஸூக்கு இன்ஜெக்சன் போடலைன்னா பெயின்ல அவனால தூங்கவே முடியாது அவள் சத்தமிட்டாள்.

சரிங்க சார், நான் பக்கத்தில் இருக்கேன். இன்ஜெக்சன் போட்டுக்கோங்க என்றாள் நேத்ரா. அதிரதன் அவள் கையை பிடித்து, நிஜமாக தான் சொல்றியா? கேட்டான்.

ஆமா சார் என்று சொல்லிக் கொண்டே யுவனை தோளில் ஏற்றி போட்டாள் நேத்ரா.

ஜீவா, அதிரதன் அழைக்க அவன் சாருவை கீழே இறக்கி விட்டான்.

ஏய்..பாடி பில்டர் இங்க தான இருப்ப. நான் பார்த்துக்கிறேன் என்று அவள் மிரட்டுவது போல் பேச, அவள் அறைக்கு சென்ற பின் சாருவை பார்த்து ஜீவா புன்னகைத்தான். பின் அவன் அறை வாயிலிலே நின்றான்.

உள்ளே சென்ற சாரு கனைத்துக் கொண்டு, கையை விட்டால் நான் இன்ஜெக்சன் போட சரியா இருக்கும்.

அவளை பார்த்து அதிரதன் கையை விட, யுவனை தோளில் போட்டவாறே அமர்ந்தாள் நேத்ரா.

ஹே, பாடி பில்டர் இங்க வா..சாரு அழைக்க, ஜீவா நகரவேயில்லை.

டேய், அவனை கூப்பிடுடா என்று இவனுக கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே? புலம்பினாள் சாரு.

அதிரதன் சத்தம் கொடுக்க, வினு அந்த குட்டிப்பையனை எவ்வளவு நேரம் தான் சுமப்பாய். பாரு அவன் வேற தூங்கிட்டான்.

ஹே, பாடி பில்டர், இந்த பையனை கொஞ்ச நேரம் வச்சிரு என்றாள். அவன் அதிரதனை பார்க்க, ஓ…உங்க பாஸ் சொன்னா தான் செய்வாயா? சாரு கேட்க, எஸ் மேம் என்றான்.

பேச்சுக்காவது இல்லைன்னு சொல்றான்னு பாரேன் வினு.

சாரு, சும்மா இரு. பரவாயில்லை. இவனை நானே பார்த்துப்பேன்.

இல்ல வினு, சாரு சொல்றது சரி தான். எவ்வளவு நேரம் கையில் வச்சிருப்ப. ஜீவா அவனை அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து விட்டு வா என்றான். அவனும் சென்றான். அவனுக்கு சாரு டிரிப் போட்டு இன்ஜெக்சனை செலுத்தினாள்.

நாங்க ரொம்ப நாள் கழித்து மீட் பண்ணி இருக்கோம். பேசிக்கலாமா அதிரதா? சாரு கேட்டாள்.

இவ்வளவு நேரம் சார்? வீட்டுக்கு வந்த பின் போடா வாடான்னு பேசுற?

இது உன்னோட வீடு தான? அதான் அழைத்தேன்.

ம்ம்..கூப்பிட்டுக்கோ என்ற அதிரதன் நேத்ராவை பார்த்து, சீக்கிரம் பேசிட்டு இங்கே வந்துரு. யுவனோட சாரு இருந்துப்பா. என்ன சாரு இருந்துப்பேல்ல?

உங்களுக்கு நான் தான் ஊறுகாயா? என்று மனதினுள் நினைத்தாலும் நேத்ராவை பார்த்துக் கொண்டு, சரி சரி என்றாள் சாரு.

போகலாமா வினு? சாரு கேட்க, காலையில அவசரத்துல சமையலறையில் ஒதுங்க வைக்காமல் அப்படியே போட்டுட்டு போயிட்டேன். அதை மட்டும் சுத்தம் செய்து விட்டு வாரேன் என்றாள்.

வா, நானும் உதவுகிறேன் என்று வினுவை பார்த்து, என்ன சொன்ன வினு? இங்க அதிரதனோட தனியா இருந்தீயா? அவள் கேட்க, இப்ப அதுல என்னவாம்? அதிரதன் கேட்டான்.

என்னவா? என்று இருவரையும் பார்த்தாள். பின் யுவனை பார்த்து, அப்ப யுவன் உங்க குழந்தையா? அவள் கேட்டுக் கொண்டே வாயில் கை வைத்தாள்.

அதிரதன் சிரித்தான். சாரு என்ன பேசிக்கிட்டு இருக்க? உனக்கென்ன பைத்தியமா? வினு கேட்க, நான் பைத்தியமா? நானா? என்று, வினு நீ இங்க என்ன பண்ற? அதான் பையனுக்கு ஆப்ரேசன் முடிந்ததுல்ல அவள் கேட்க,

சொல்லு வினு. நம்ம கான்ட்ராக்ட்டை சொல்லு என்றான் அதிரதன். அவள் அவனை முறைத்து விட்டு, சொல்றேன் சாரு. நீ நினைப்பது போல் மட்டும் எங்களுக்குள் எதுவும் இல்லை. இனி இருக்கவும் செய்யாது. ஆறே மாதம் தான் என்றாள்.

அதிரதன் முகம் சுருங்கியது. சாரு அவனை பார்த்து விட்டு வா போகலாம் என்று அதிரதனை பார்த்து, கண்டதையும் நினைக்காதே என்று இருவரும் அடுக்கலைக்கு வர, ஜீவா அதிரதன் அறைக்கதவில் கையை வைக்க, இருவரும் கத்தினர்.

ஜீவா கதவை திறந்து கொண்டே சத்தம் கேட்ட திசையை பார்த்தான். வேகமாக வினு ஓடி வந்தாள். ஓடாதடி விழுந்திருவ? என்று சாரு அவள் பின் ஓடி வந்தாள்.

வினு நேராக ஜீவா மீது முட்டி அவனது தோள்ப்பட்டையை பிடிக்க, அதிரதனுக்கு எரிந்தது. அவன் கண்களும் மங்கலாகியது. ஆனால் வினு விலகியதில் சாருவும் அவனை பிடித்து நிற்கிறேன் என்று அவனை பிடிக்க, அவள் வந்த வேகத்தில் அவன் சுவற்றில் இடித்து நின்றான். அவள் இதழ்கள் ஜீவாவின் மார்பில் அச்சாக பதிய அதிர்ந்து நின்றான்.

அய்யோ, போச்சு..போச்சு..என்று வினு, அவன் நகர்ந்திருக்கலாம்ல என்று அவன் மார்பை விலக்க, அவளது உதட்டு சாயம் தெளிவாக அவனது நெஞ்சில் இருந்தது. அவன் அதை பார்த்து அவளை பார்த்தான்.

அவன் விலகி இருந்தால் நீ கீழே விழுந்து வாரி இருப்பாய் வினு சொல்லிக் கொண்டே, அவள் நினைவிற்கு சப்பாத்தி வந்தது.

ஹே..தம்பி..அங்க அங்க என்று வினு பதட்டமாக, சாருவும் ஹே..வா..அங்க வா என்று சொல்ல, ஏதும் பிரச்சனையா? என்று துப்பாக்கியை எடுத்தான் ஜீவா.

அடச்சே, “ஆனா..ஊனா இதை ஒன்றை எடுத்திடு” என்று சாரு அவன் கையை பிடித்து இழுக்க, மேம் கையை எடுங்க என்று அதட்டினான்.

அவள் பட்டென கையை விட்டு அடுக்கலைக்கு சென்று பார்த்தால் வினு செய்திருந்த சப்பாத்தியில் புழுக்கள் வந்து உறவாடியது.

இதுக்கா கத்துனீங்க? என்று அவன் அந்த பாக்சை எடுத்து வெளியே செடிப்பக்கம் கொண்டு வந்து போட்டு, தண்ணீரால் அலசி கீழே ஊற்றி கொடுத்து விட்டு இருவரையும் முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.

அவர்களும் உள்ளே வர, அதிரதனை பார்த்து ஜீவா கத்தினான்.

என்னாச்சு? என்று வினும் சாருவும் பதறி வந்தனர்.

எங்க பாஸ கொன்னுட்டியே பாவி. விச ஊசி போட்டியா? நீ வாய் பேசுவதை வைத்தே எனக்கு சந்தேகமாக தான் இருந்தது. நீயும் அந்த கொலைகாரனோட ஆள் தான?

கொலைகாரனோட ஆளா? நானா? ஏய் மண்டு பாடி பில்டரே, அவனுக்கு நான் வலிக்காகவும் தூங்கவும் தான் இன்ஜெக்சனே போட்டேன்.

அவ்வளவு தான? ஒன்றுமில்லையா? ஜீவா கேட்க, கதை கட்டுகிறான் பாரு. முதல்ல கொலைகாரன் ஆளா நான் இருந்தா இவன் பக்கம் வர கூட முடியாது. இவன் கண்டுபிடிச்சிருப்பான்.

அப்படியா? என்று ஜீவா கேட்க, உன்னை பார்த்தால் எனக்கு பாடி பில்டர் மாதிரி இருந்தாலும் உன் தொழில் இது தானான்னு சந்தேகமா இருக்கு என்றாள்.

அவன் வருத்தமாக இது இல்லை என்றான்.

அப்புறம் எதுக்கு இந்த வேலையில சேர்ந்தீங்க? வினு கேட்டாள்.

நான் “குளோபல் கம்பெனியில் மெயின் பிரான்சில்”  “ஐ.டி சாப்ட்வெர்” ஃபீல்டுல தான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கு அம்மா இல்லை, அப்பாவும் தம்பியும் இருக்காங்க. தம்பி தற்பொழுது கல்லூரி சென்று கொண்டிருக்கிறான். சம்பாதிக்கும் பணம் போதவில்லை.

என்ன? ஐ.டி வொர்க்? சம்பளம் பத்தலையா? சாரு அதிர்ச்சியுடன் கேட்டாள்.

நான் சொல்றதை முழுசா கேளுங்க என்ற ஜீவா, வீட்டுக்கு வந்தும் வேலை செய்யும் படி இருப்பதால் அப்பா, தம்பியை கவனிக்க முடியவில்லை. அம்மா இறந்த அதிர்ச்சியில் முதல் அட்டாக் வந்தது. பின்னும் எங்களை நினைத்து கவலைப்பட்டே இரண்டாவது அட்டாக். ஹாஸ்பிட்டலில் மூன்றாவது அட்டாக் வந்தால் கண்டிப்பாக பிழைப்பது கஷ்டம். அதனால் “இதய மாற்று அறுவை சிகிச்சை” செய்யணும்ன்னு சொன்னாங்க.

தம்பி அவர் அருகே இருந்தால் அவன் படிப்பு கெட்டு விடுமேன்னு நினைத்து நான் வேலையை விட்டேன். அவன் இப்ப செம் விடுமுறையில் தான் இருக்கான். அவன் அப்பாவை பார்த்துப்பான். நான் வேலை தேடும் போது..இந்த வேலைய பத்தி சொன்னாங்க. நான் இந்த டீம்லயே இல்லை. இன்டர்வியூல நான் பார்த்தது அதிரதன் சாரை அதுவும் வீடியோ காலில் தான். அவர் தான் என்னை அவர் பிரச்சனை முடியும் வரை இவர்களோடு சேர்ந்து கொள்ள சொன்னார்.

இப்ப தான் மூச்சே விட முடியுது. இவருடன் தனியே வரவும் தான் ஏதோ நிம்மதியா இருக்கு என்றான். அவர் பிரச்சனை முடிந்தவுடன் அப்பாவிற்க்கு சிகிச்சை செய்வதாக சொன்னார் என்றான்.

உனக்கு சண்டை போட வருமா? வினு கேட்டாள்.

அம்மா இறக்கும் முன் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன். ஜிம் போவேன். சண்டை வரும். ஆனால் இவனுக மாதிரி சாவடி அடிக்கிற மாதிரி கஷ்டம் தான்.

அப்புறம், உனக்கு இங்கென்ன வேலை?

மேம், சாவடி அடிக்க முடியும். மனசு வர மாட்டேங்குது என்றேன் என்று ஜீவா அவளை முறைத்துக் கொண்டு சொல்ல, எதுக்கு முறைக்கிற? எங்க பாதுகாப்பு முக்கியம்ல? சாரு கேட்டு விட்டு, தப்பா எடுத்துக்காத பொண்ணுங்க பசங்ககிட்ட கேட்க கூடாத கேள்வி தான். கொஞ்சம் ஆர்வமா இருக்கு. கேட்கவா? சாரு கேட்க, அவன் முறைத்தான்.

சாரு, சும்மா இரு வினு தடுக்க, நீ ஐ. டில்ல தான வேலை பார்த்த? சம்பளம் எவ்வளவு தருவாங்க? அவள் கேட்க, ஏய் சாரு வினு சத்தமிட, அவன் தயங்காது பதில் கூறினான்.

சேரும் போது ஐம்பதாயிரம் தான் கொடுத்தாங்க. நான் ஐந்து வருடமாக வேலை செய்கிறேன். ஆறு லட்சம் வாங்கினேன்.

வாட்? என்று இருவரும் அவனை பார்த்தனர்.

நம்ம வொர்க்குக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும். வீட்டிலும் வந்து பார்ப்பேன். சீனியாரிட்டி, இன்கிரிமென்ட் என வாங்கினேன்.

இதை வைத்து உன் அப்பாவிற்கு சிகிச்சை அளித்திருக்கலாமே?

இல்ல மேம். அப்பா இரத்தம் அரிதானது. அதனால் டோனருக்கு ஏற்பாடு செய்து தான் சொல்லணும் என்றார்கள். பணமும் அதிகம் கேட்டார்கள். நான் சம்பாதிப்பது தான் எங்க வீட்டிலே ஓடிக் கொண்டிருந்தது. தம்பி இஞ்சினியரிங் படிக்கிறான். அதுக்கு, அப்பா மருந்து செலவு. மாதா மாதாம் செக் அப் வேற.

நான் வெளியே கடன் வாங்கினால் கண்டிப்பாக அப்பாவிற்கு தெரிந்து விடும். கஷ்டம். இப்ப கூட உயிரை பணயம் வைத்து தான் செய்கிறேன்னு அவருக்கு தெரிஞ்சா பயமா தான் இருக்கு. தம்பிக்கும் தெரியாது. ஆனால் அவருக்கு தினமும் பேசினால் சந்தேகம் வராது. பார்த்துக்கலாம். அப்பா உயிரை விடவும், தம்பி படிப்பை விடவும் பெரியதாக எனக்கு ஏதும் தோன்றவில்லை என்றான் கண்ணீருடன்.

செம்ம சென்ட்டிமன்ட்டா பேசுறப்பா? பாரு உன் நிலையில் எனக்கே கண்ணீர் வந்து விட்டது என்று அவன் தோளில் தட்டினாள். அவன் அவள் கையை தட்டி விட்டு, சும்மா டிராம பண்ணாத என்றான்.

நானும் உன் நிலையில் தான் இருக்கேன். என்ன உனக்கு பிரச்சனை கொஞ்சம் சீரியஸ். எனக்கு அந்த அளவுக்கு இல்லை என்று கோபமாக சொல்லி விட்டு அறையிலிருந்து வெளியே வந்து அமர்ந்தாள் சாரு.

ஜீவாவும், வினுவும் வெளியே அவளுடன் வந்து ஹாலில் அமர்ந்தனர்.

Advertisement