Advertisement

அத்தியாயம் 26

ரணா நில்லு, அதீபன் அழைக்க, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ரணா கோபமானாள்.

எனக்கு தெரியும். உன்னோட காதல் தெரியும் என்றான் அதீபன்.

அவள் சங்கீதனையும் நண்பர்களையும் பார்க்க, ராகவ் ஆரா பின் ஒளிந்தான்.

டேய் நில்லுடா, எல்லாமே உன்னோட வேலை தானா? ரணா ராகவை விரட்டினாள். அவளை நிறுத்திய அதீபன், அண்ணாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவான் என்றான்.

ரணா அமைதியாக அதீபனை பார்த்து, என்னோட காதல் அவனுக்கு கூட தெரியாது என்றாள்.

இல்ல ரணா. அவனுக்கு தெரியும். நிதின் கோபமாக அவனிடம் பேசப் போனார். ஆனால் உனக்காக சப்போர்ட்டா தான் பேசிட்டு வந்துருக்கார். ஆனால் அவன் ஏத்துக்க மாட்டான் சங்கீதன் கூறினான்.

நீ யாரை சொல்ற? சுஜி கேட்க, அவனது பார்வை மாயாவை மேலிட்டது.

மாயா, ஜீவாவிற்கு அன்றே அவள் பார்வையில் சந்தேகம் வந்தது. இப்பொழுது காவியனை தான் சொல்றான்னு புரியது.

காவியன் பெயரை சொன்னவுடன் சுஜி திகைத்து விழித்து நிற்க, பாட்டி நேராகவே ரணாவிடம், இது சரியாக இருக்காதும்மா என்று சொல்ல அவர் கண்கள் கலங்கியது.

ஏற்கனவே அதிரதன் நேத்ராவை தான் திருமணம் செய்வேன்னு சொன்னதை கேட்டவருக்கு இதை கேட்டு மேலும் பயமானது. அவர்களால் வளர்ந்தவன் காவியன். அவங்க வீட்டுக்கு இவன் மருமகனா? முடியாது என நினைத்தார்.

ஏன் பாட்டி, உங்க யாருக்கும் என்னை பிடிக்காதா?

அப்படியில்லைம்மா. உங்க அம்மா, அப்பா இல்லைன்னா இங்கிருக்கும் பிள்ளைகளும் இல்லை. காவியனும் இல்லை. இது சரியாக வராது என்றார். அதீபனே பாட்டி பேச்சை திகைத்து தான் பார்த்தான்.

அவன் அம்மாவை போல அவனும் ஸ்டேட்டஸ் பார்ப்பவனாக இருந்தாலும் மனிதரின் நல்ல மனதை உணர்பவனும் கூட, இவன் அதிரதனிடம் சரி என்றதே காவியனை கண்காணிக்க தான். அவன் சரியாக இருந்தால் நல்லது என்று.

பாட்டிம்மா, இதெல்லாம் விசயமே இல்லை என்றாள் தாட்சாயிணி.

இருக்கும்மா. நிறைய இருக்கு. நீங்க சின்ன பிள்ளைகள். உங்களுக்கு தெரியாது. அதனால் வரும் கஷ்டம் சாதாரணமானது இல்லை. காவியனும் கண்டிப்பாக ஏத்துக்க மாட்டான்.

பாட்டி, அவனை ஒத்துக்க வைக்க முடியுமா? சங்கீதன் கேட்க, அவர் அனைவரையும் பார்த்து அவன் யாருமில்லாமல் வளர்ந்தவன். நீங்க அவனுக்கு முதலாளி மட்டும் தான். அவன் உங்களை ப்ரெண்டா ஏத்துக்கிட்டதே பெருசு தான் என்றான். மற்ற பசங்களும் அங்கு வந்தனர்.

பாட்டி, ஜீவா தொடங்க, அவனை முறைத்த பாட்டி, போய் படிக்கிற வேலைய பாருங்க என்றார் சினமுடன்.

காவியன் நண்பர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் ரணாவை மட்டுமே கவனித்தனர். அவள் கண்ணீரை கட்டுப்படுத்தி வைத்திருப்பது தெரிந்தது.

ஏற்கனவே அவன் மாயா முன் கத்தியது, இப்ப பாட்டி பேசியது என மனதில் இருந்தாலும் அவள் கண்ணீர் வர, சுஜி அவளிடம் வந்தாள்.

வேண்டாம் என்று நிறுத்திய ரணா, கண்ணீரை துடைத்துக் கொண்டு, என்னால் எதையும் விட முடியாது. எடுத்ததை விட்டு பழக்கமில்லை. என் அண்ணன் யார் தெரியும்ல? அதிரதன். நானும் அவன் போல் எடுத்த முடிவில் பின் வாங்க மாட்டேன். எனக்கு காவியன் மட்டும் தான் வேண்டும் என்று சொல்லி விட்டு நேராக காரில் ஏறி, அண்ணா வர்றீயா? இல்லையா? அதீபனை அழைத்தாள். அவன் சங்கீதனை பார்க்க, கார்ச் சாவியையை வாங்கிக் கொண்டு அவள் நண்பர்களும் அவளுடன் சென்றனர்.

வெண்பா பின் சென்ற எழிலன் அவர்களது அறைக்கு சென்று கதவை தட்டினான்.

யாரும் வராதீங்க போங்க. நான் யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே வெண்பா கதவை திறந்து விட்டு மீண்டும் ஓர் மூலையில் அமர்ந்து கொண்டாள். எழிலன் புன்னகையுடன் உள்ளே வந்தான்.

ஓ..இது தான் உன்னோட கோபமா? என்று அவளருகே அமர்ந்தான். அவள் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்க, அவளை தோளில் செல்லமாக இடித்தான்.

எழிலா, நீ போ. உன் மேல கோபமா இருக்கேன். கோபமா இருக்கிறாயா? ஓ. கே என்று அவள் தோளில் கை போட்டான். அவன் கையை தட்டி விட்டு மறு பக்கம் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்தாள் வெண்பா.

பின்னிருந்து அவளை அணைத்து, என்னோட முயல்குட்டிக்கு கோபம் குறையலையா?

முயல்குட்டியா? என்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்ணடிக்க, அவனை முறைத்தாள்.

என்னாச்சும்மா, கண்ணடிக்க கூடாதா?

நீங்க என்ன பண்றீங்க?

அட, முயல்குட்டி மரியாதையா பேசுது?

அவன் கையை எடுத்து அவன் பக்கம் திரும்பினாள். நீ..நீங்க? என்று அவள் தயங்க,

ம்ம், நான் தான்..

அவன் காதல் பார்வை தாங்க முடியாமல் மறுபடியும் வெண்பா திரும்பினாள்.

அவளை திருப்பிய எழிலன், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு வெண்பா. உனக்கும் அப்படி தானே?

பிடிக்குமா?

ஆமா, பிடிக்கும் என்று அவளது கையை பிடித்து, உனக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ. தேர்வெழுதி  நீ வகுப்பில் சேர்ந்தால் உனக்கு நான் பரிசு தருவேன்.

பரிசா? சரி. உனக்கு பிடிக்க தான் செய்யுமா? பாவமாக வெண்பா கேட்டாள்.

இல்லையே? ரொம்ப பிடிக்குமே? அவள் முகம் வாடியது. அவளது கண்ணை பார்த்துக் கொண்டு, நம்ம காதலின் ஆரம்பம் படிப்பாக தான் இருக்கும் என்றான்.

அவள் வெட்கமுடன் தலைகவிழ்ந்து கொண்டு, எனக்கும் உன்னை பிடிக்கும் என்றாள்.

தெரியும் என்று அவளை நிமிர்த்தி யாரிடமும் பேசும் போது கவனமா பேசு. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. பொண்ணுங்க எல்லார் முன்னாடியும் அவரை பேசியதால் தான் அவர் கோபப்பட்டு உன்னிடம் இப்படி நடந்துக்கிறார். மத்தபடி வேடிக்கையாகவும் ஜாலியாகவும் பேசுபவர் தான்.

உங்களுக்கு அந்த சாரை தெரியுமா?

இவர் அண்ணாவை தெரியும். ஆனால் இவரையும் அடிக்கடி பார்த்திருக்கேன் என்றான் எழிலன்.

ஓ.கே என்று எழிலனை அணைத்தாள். அவன் புன்னகையுடன் அவளை விலக்கி, நல்லா படிக்கணும்.

ரொம்ப கஷ்டம் என்றாள்.

அதான் நான் இருக்கேனே?

ஓ.கே என்று அணைக்க வந்தவளை நிறுத்தி, இப்ப கூடாது. படிப்பு முடியட்டும் என்றான்.

சோ..க்யூட். ஆனால் ஜீவா டப்பென மாயாவிற்கு முத்தம் கொடுத்துட்டான் என்றாள்.

அவன் கொஞ்சம் எமோஸ்னல் ஆகிட்டான். அதற்கு பின் அவன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே?

ஆமா, ஆமா. அவனும் நல்லவன் தான் என்றாள்.

சரி, போகலாமா? என்று எழுந்து எழிலன் வெண்பாவிடம் கையை நீட்ட, அவன் கையை பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

முதல்ல அவரிடம் சாரி சொல்லிடு. இல்லை உங்க இருவருக்கும் பிரச்சனை முடியாது.

ஓ.கே எழிலா என்று அவள் சொல்ல புன்னகையுடன் இருவரும் கையை கோர்த்துக் கொண்டு வெளியே வந்தனர். தன்வந்த் இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றான்.

அதீபன் நண்பர்களிடம் பேச, பாட்டி பேசியதை கேட்ட வெண்பாவும் ரணாவிற்கு சப்போர்ட்டாக பேச, உள்ளே சென்ற தன்வந்தும் வெளியே வந்தான்.

சுஜி அவளை தடுத்து அனைவரிடமும் இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று தன்வந்த்தை அழுத்தமாக பார்த்தாள்.

சுஜியை பார்த்துக் கொண்டே அதீபன் சுபிர்தனிடமும் மற்றவர்களிடமும் பேசினான். என்னடா பாக்குற? தாட்சாயிணியா அவனிடம் கேட்டாள். அவளை பார்த்து விட்டு படிக்கும் பசங்களை பார்த்தான்.

ஒருவரை ஒருவர் நோட்டை மாற்றி வைத்து எழுதிக் கொண்டிருந்தனர். உடனே அலைபேசியை எடுத்து பசங்க படிக்க, எழுத தேவையான பொருட்களுக்கு ஆர்டர் செய்தான். வெண்பா அவனிடம் வந்து மன்னிப்பு கேட்க,

நீ தான் கேட்கிறாயா? என்று எழிலனை பார்த்துக் கொண்டே கேட்டான்.

நான் தான் சார். சாரி என்று அவள் மாயாவுடன் இணைந்து கொண்டாள். பின் எழிலனை வெண்பா பார்க்க, ஓ.கேவா? என உதட்டசைவில் கேட்க, எல்லாரும் இருவரையும் பார்த்தான். அவன் கட்டை விரலை உயர்த்தி புன்னகையுடன் ஓ.கே என்றான்.

தாட்சு, அந்த பையன் ஸ்மைல் அழகா இருக்குல்ல? அதீபன் கேட்க, டேய் என்ன பேசுற? என்று மற்றவர்களை பார்க்க, அனைவரும் சிரித்தனர்.

மணி இரவு எட்டானது. காரில் சென்று கொண்டிருந்த ரணா, காரை நிறுத்து என்றாள்.

சங்கீதன் காரை நிறுத்த, எதுக்கு ரணா நிறுத்த சொன்ன? ஆரா கேட்டாள்.

பதில் சொல்லாமல் கீழிறங்கி எதிரே இருந்த ரெஸ்டாரண்டிற்கு செல்ல ரோட்டை கடக்க நின்றாள். மற்றவர்கள் அவளருகே வரும் முன் ரோட்டை அவள் கடக்க, திடீரென லாரி ஒன்று ரணாவை அடித்து தூக்க சீறிக் கொண்டு வந்தது. அவள் கவனிக்காமல் செல்ல, ரணா நில்லு என நண்பர்கள் சத்தமிட்டனர்.

ரணா அருகே லாரி வரவும் சங்கீதனும் கண்ணனும் ஒன்றாக அவளை பிடித்து இழுத்தனர். அவள் தப்பினாலும் கீழே விழுந்து மூவருக்கும் அடிபட்டது.

பயத்தில் ரணா மயங்கி விட்டாள். சுற்றி இருந்தவர்கள் அவர்களுக்கு உதவ, ஒருவன் மட்டும் புன்னகையுடன் ரணாவை பார்த்துக் கொண்டே சென்றான். சங்கீதன் அவனை பார்த்து அவனிடம் செல்ல, அவனோ திடீரென காணாமல் சென்று விட்டான். மற்றவர்கள் ரணாவை ஓரமாக நகர்த்தினர்.

சங்கீதன் மீண்டும் ரணாவிடம் வந்தான். அவள் விழித்து அமர்ந்தாள். அவள் கையில் லேசாக அடிபட்டிருந்தது. அவன் நெற்றியில் வழிந்த இரத்தத்தை பார்த்து, சங்கீதா இரத்தம் என்று ரணா உதடு நடுங்க கூற, கண்ணனுக்கு அவனது இடுப்புப் பகுதியில் சட்டை கிழிந்து லேசான காயம் இருந்தது.

ஒன்றுமில்லை ரணா என்று ஆரா அவளை கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள்.

லட்சணா காருக்கு சென்று பஞ்சு மருந்தை எடுத்து வந்து ஏற்கனவே கண்ணனுக்கு போட்டு விட்டு, சங்கீதனை பார்த்து கண்ணீருடன் அவனுக்கு காயத்தை சுத்தம் செய்து மருந்தை போட்டு கட்டு போட்டு விட்டாள்.

அவள் கண்ணீரை பார்த்து, அவள் கையை ஆறுதலாக அழுத்தமாக பிடித்தான் சங்கீதன். அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

“வாங்க கிளம்பலாம்” என்று ராகவ் அழைக்க,  கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க என்று சங்கீதன் விலகி சென்று அலைபேசியை எடுத்து அதிரதனை அழைத்தான்.

ஹாஸ்பிட்டலில் யுவன் அழைத்தான் என்று அதிரதன் அவனை பார்க்க சென்று அவனுடன் இருந்தான். அலைபேசி அழைக்க, பேசிட்டு வாரேன் என்று வெளியே வந்து சங்கீதன் சொன்னதை கேட்டு பதறினான்.

குட்டிம்மாவுக்கு ஒன்றுமில்லையே? நல்லா இருக்கால்ல? அதிரதன் கேட்க, நல்லா இருக்கா சார். ஆனால் பயந்துடா என்றான். சங்கீதன் பார்த்தவனையும் கூறி இருப்பான்.

சரி. முதல்ல வீட்டுக்கு போங்க என்று போனை வைத்தான். அவனுக்கு மற்றொரு கால் வந்தது. நிதின் அதிரதன் தோளில் கை வைக்க கண்ணீருடன் நின்றவனை பார்த்து திகைத்த நிதின், என்னாச்சுடா?

அலைபேசியை காதில் வைத்துக் கொண்டே நிதினை அணைத்தான்.

ஹா..ஹா..ஹா..என்ன ஒரு விளையாட்டு?  உன்னோட க்யூட் தங்கை மிஸ் ஆகிட்டாலே? நான் கூட அவளோட சாவ பார்த்துடலாம்ன்னு நினைச்சேன். இப்படியும் நண்பர்களா? உயிரையும் பார்க்காமல் இப்படி காப்பாற்றி விட்டானுகளே? இதை நான் எதிர்ப்பார்க்கலையே?

யாருடா நீ விக்கி இல்லை. வேற யாரு? உனக்கு என்ன தான் வேண்டும்? அதிரதன் கோபமாக கத்தினான். அவனை சுற்றி இருந்த அனைவரும் அவனை தான் பார்த்தனர்.

சார், அமைதியா பேசுங்க. பேசண்ட் இருக்காங்க என்றார்.

அய்யோ, கத்தாத அதிரதா. இவ்வளவு கோபமாக? எனக்கு வேண்டியதை கொடுத்து விடுவாயா?

என்ன வேணும்? சொல்லித் தொலை.

ரதா, யாருடா? நிதின் கேட்க, அவன் வாயில் கை வைத்த அதிரதன். சொல்லு..

எனக்கு உன்னுடையது செழியனுடையது எல்லாமே வேணும். எல்லாமே என்றான் அழுத்தமாக.

கம்பெனியா?

எல்லாமே. ஆனால் அதுமட்டுமல்ல, இதை விட முக்கியமான செழியனோட சொத்து ஒன்று இருக்கு. அது கண்டிப்பா வேணும்.

வீடா? அதிரதன் கேட்க, நீயே கண்டுபிடி..உனக்கு ஒரு வாரம் தாரேன். கண்டுபிடிச்சு சொல்லு. ஆனால் அவனோட பொண்ணுங்க யாருக்காவது ஏதாவது ஆனால் தானே அவன் பதறுவான். அவன் நிம்மதியாக இருக்கவே கூடாது. என்னுடைய கடைசி கொலை உன் அப்பாவாக தான் இருப்பான்.

ஏய், என்னோட குடும்பத்தை தொட நினைக்காத கொல்லாமல் விட மாட்டேன் என்று அதிரதன் கொலைகாரனை எச்சரித்தாலும் இப்பொழுது ஆத்வி நினைவு வந்தது. அலைபேசியை வைத்து விட்டு, நிது..போ. சீக்கிரம் ஆத்வியை அழைச்சிட்டு வீட்டுக்கு போ. அவன் அவளை ஏதும் செய்து விடாமல்.

என்ன சொல்ற ரதா?

ரணாவை அவன் சொல்ல, நிதின் அவனிடம் காவியன், வினு, மிதுனிடம் இதை பற்றி சொல்லாத என்றான்.

தலையசைத்த அதிரதன், தனியே போகாத என்று காவியன் அறைக்கதவை பட்டென திறந்து விஷ்வா கையை பிடித்து ஏதும் சொல்லாமல் இழுத்து வந்து, கவனமாக போங்க. முதல்ல ஆத்விய வீட்ல விட்டுட்டு, விஷ்வா வீட்ல அவனை விட்டுடு. அங்கேயே இரு. நான் ஆட்களை அனுப்பிய பின் அவர்களுடன் உன்னோட வீட்டுக்கு போ. யாரும் வெளியே வர வேண்டாம் என்று அவனை அனுப்பி விட்டு நேத்ராவை பார்க்க சென்றான் அதிரதன்.

அவள் யுவனுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்க, வேகமாக அறைக்குள் நுழைந்து அவளை அணைத்தான்.

சார் என்று அவள் பதற, ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்று அவன் அவளை இறுக்க, அவனது பதட்டம் இதயதுடிப்பை அவளுக்கு காட்டியது.

பிரச்சனையா சார்?

ஆமா வினு என்று அவளை விட்டு நகர்ந்து அப்பா..ஓ.. அவரோட செக்கரட்டரிய பார்த்துக்க சொல்லலாம் என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்தான். நோ..சார் என்று நேத்ரா தடுத்தாள். அவன் அவளை பார்த்தான்.

அவள் தயங்கிக் கொண்டே, அவங்க வேண்டாம் சார். எனக்கு அவங்க மேல சந்தேகமா இருக்கு என்றாள்.

உனக்கு எப்படி அவங்கள தெரியும்?

தெரியும் சார். உங்க அப்பாவை உதவிக்காக பார்க்க சென்ற போது அவங்க யாருடனோ, அவனை இப்ப ஏதும் செய்ய வேண்டாம். சேர்மன் கதையை முடிச்ச்சிட்டு பார்த்துக்கலாம் என்றார்.

வினு, என்ன சொல்ற?

ஆமா சார், நான் நன்றாக கேட்டேன். பார்த்தேன். நான் அவரிடம் இதை சொல்ல நிறைய முறை முயற்சி செய்தேன். வேறு வழியில்லாமல் என்று அவனை பார்த்து தனி ஐடி கிரியேட் அவருக்கு எச்சரிக்கை செய்தேன்.

நான் பார்த்துக்கிறேன்னு பதில் அனுப்பினார்.

இதை முன்னே சொல்லி இருக்கலாம்ல்ல.

சார், நான் இதை உங்களிடம் சொன்னால் நீங்க அவங்களை ஏதாவது செய்தால் அனைத்தும் வீணாகிவிடும். அவங்களை கண்காணிக்க தான் உங்க அப்பா அவர் பக்கத்திலே வச்சிருக்கார். அதுவும் ஆபத்து தான். முடிந்தால் உங்களுக்கு நம்பிக்கையான ஒருவர் அவர் பக்கம் இருக்க ஏற்பாடு செய்யுங்க. நீங்க ஏற்பாடு செய்பவன் எதற்கும் பயப்படாமல் இருக்கணும். விஷ்வாவை போல் குடும்பத்தை வச்சி மிரட்டுவானுக.

எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்க. சார் முதல்ல வேலைய பாருங்க என்றாள்.

அங்கிள், வாங்க சாப்பிடலாம்  அழைத்தான் யுவி.

யுவி சாப்பிட்டு துங்கு என்று அவன் கழுத்தில் ரணா அணிவித்ததை பார்த்துக் கொண்டே, வினு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கோ. யார் தட்டினாலும் திறக்காத. நான் கால் பண்ணா திற என்று சொல்லி விட்டு பத்திரமாக இருங்க என்று எச்சரித்து கதவை திறந்தான்.

சார், நீங்க எங்க போறீங்க?

வீட்டுக்கு போயிட்டு வாரேன் என்று அவன் சொல்ல, பார்த்து சார் என்றாள்.

ம்ம்..என்று புன்னகையுடன் மீண்டும் ஒரு முறை அவளை அணைத்து, தாழ்ப்பாள் போட்டுக்கோ என்று வெளியேறினான். வினுநேத்ரா புன்னகைத்தாள்.

காவியன் அறைக்கதவை திறந்து மிதுனை அழைத்தான். அதிரதன் முகத்தை பார்த்தே ஏதோ பிரச்சனை என கண்டு கொண்டான் காவியன்.

சார், காவியன் அழைக்க, அவனை பார்த்து ஓய்வெடு என்று மிதுனை வெளியே அழைத்து கவனமாக இருங்க என நேத்ராவிடம் கூறியதை கூற,

ஏதும் பிரச்சனையா சார்? மிதுன் கேட்க, அதிரதன் கண்கள் கலங்கியது.

நான் பார்த்துக்கிறேன். நீங்க கவனமா இருங்க உள்ளே போ என்று இருவரிடமும் கையை காட்டி விட்டு வெளியே வந்தான்.

சங்கீதனை அழைத்து, இந்த நேரம் எங்க போனீங்க? என்று கேட்டு விட்டு, அதீபா என்று பல்லை கடித்து விட்டு அவனை தொடர்பு கொண்டான்.

நிலையத்தில் பசங்க அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். விக்ரம் அதீபனிடம் வர, தம்பி யாரோ வெளிய நின்னு பார்த்துக்கிட்டே இருக்கான் என்று தனசேகரன் சொல்ல, இருவரும் வந்து பார்த்தனர். இருவரும் அவனை விரட்டிக் கொண்டு வெளியே வர, அவனை பிடித்தான் விக்ரம்.

அவனிடம் விசாரிக்க, நிலையத்தில் பாம் வைத்திருக்கும் விசயம் தெரிந்தது. இன்னும் பதினாறு நிமிடத்தில் வெடித்து விடும் என்று அவன் சொல்ல, யாரோ ஒருவன் தூரத்தில் இருந்து அவனை சுட்டான். துப்பாக்கி சத்தத்தில் அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினர்.

ஏய்..என்று விக்ரம் கத்தினான். அவன் இறந்தவுடன் பாம் ஸ்குவாடை வர வைத்தனர். இரண்டே நிமிடத்தில் வந்து தேடினர். நியூஸ் சேனல்ஸ் அனைவரும் அங்கு வர, சேர்மனும் விசயம் அறிந்து வந்தார். பாமை கண்டுபிடித்து அகற்றினார்கள்.

அதீபன் அலைபேசியில் அதிரதனை பார்த்து, இவன் பேசும் முன் அதிரதன் ரணாவை பற்றி சொல்லி கத்த ஆரம்பித்தான்.

அண்ணா, என்ன சொல்ற? அதீபன் பதறினான். சேர்மன் அவனது அலைபேசியை வாங்கி அதிரதனுக்கு நடந்ததை சொல்ல, அப்பா என்னால இப்ப வர முடியாது. நீங்க பாருங்க..என்று சோர்வுடன் அலைபேசியை வைத்து ஹாஸ்பிட்டல் வெளியே வந்தான். செய்தி உலகெங்கும் பரவியது.

பாம் பற்றி சொன்ன போதே குட்டி பசங்க, மற்றவர்களை ஒரே இடத்தில் சேர்த்து இருக்க வைத்த சுஜி தாட்சாயிணி, அதீபன், விக்ரம் இவர்களுடன் வெளியே வந்தாள்.

இப்பொழுது அழும் குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர். நிவி பாப்பா அழுது கொண்டே சுஜியிடம் ஓடி வந்தாள்.

நிவி, எங்கிருந்து வர்ற ?பயந்துட்டியா அவள் அணைக்க, அக்கா..அங்க பூச்சாண்டி என்று அழுதாள். அதே நேரம் முகமூடி போட்டு கருப்பு நிற ஆடையில் ஒருவன் சுவற்றில் ஏறினான். சேர்மனும் மற்றவர்களும் அங்கே வந்து பார்க்க, அதீபன் அவனருகே சென்று ஒரே குதியில் அவன் காலை பிடித்து இழுத்தான். இருவரும் சரிய அவன் கையில் கத்தியை எடுத்து அதீபனை குத்த வரும் போது அங்கே வந்த காவியன் நண்பன் அருள் அவன் கையை குத்த விடாமல் பிடித்தான். விக்ரமும் அவன் கையிலிருந்த கத்தியை லாவகமாக எடுக்க, அவன் முகமூடியை கிருஷ்ணன் கழற்றினான்.

மீடியா ஆட்கள் இதை நேரிலையாக மக்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ வந்த தோட்டா அவனை துளைக்க அவ்விடத்திலே அவனும் இறந்தான். அனைவரும் பதறி விலக, நிவி அவன் உன்னை ஒன்று செய்யலையே? என்று பதட்டமாக அவளை ஆராய்ந்தாள் சுஜித்ரா.

உஃப் ஒன்றுமில்லைடா நிவி என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

அனைவரையும் அங்கிருந்து கிளப்பி விட்டு, பாதுகாப்பிற்காக போலீஸை அங்கே வர வைத்தனர்.

ஹேய்..யாருடா பாம் வச்சது? கத்தினான் அந்த கொலைகாரன். தேவையில்லாமல் விசயம் பெருசாகிடுச்சு என்று எங்கடா அவனை? என்று கொலைகாரன் கத்த, அங்கே வந்தான் ஒருவன்.

அப்பா, நான் செய்த வேலையில் நம் ஊரே ஆடி போயிருச்சு பாருங்க என்றான்.

டேய், என்ன செஞ்சு வச்சிருக்க? போலீஸ் அனைவரையும் நம் பக்கம் திருப்பி விட்டுட்ட. பாரு அந்த அதிரதன் சீக்கிரம் நம்மை கண்டுபிடிக்க போறான். விக்கியை பார்த்தியா? இல்லையா? கத்தினான் அவன்.

பார்த்துட்டு தான் அந்த நிலையத்துல பாம் வச்சேன். எல்லாருக்கும் நம் மீது பயம் இருக்கணும்ல்ல.

அதுக்கு முட்டாள்தனமாக செய்வ?

இதுல என்ன முட்டாள் தனம் இருக்கு? இந்த இடம் இருந்தால் தான என்னோட நேத்து இங்க தங்குவா. இல்லைன்னா நான் அவளை தூக்கிட்டு வந்துருவேன்ல்ல.

நீ இவ்வளவு சாதாரணமா நினைக்காத? அவ இப்ப அந்த அதிரதன் பக்கத்துல இருக்கா. முதல்ல இருவரையும் தள்ளி வைக்கணும். இல்லை உண்மை தெரிந்தால் அவனிடமிருந்து அவளை பிரிக்கவே முடியாது என்றான்.

இல்ல..இல்ல..நேத்து எனக்கு தான் என்று அவன் கத்தினான்.

இப்ப அந்த அதிரதன் அவன் குடும்பத்தை எண்ணி பயத்தில் இருப்பான். சிறிய இடைவெளி கிடைத்தால் நீ அவள தூக்கிட்டு வந்து வச்சுக்கோ. அப்புறம் அவன் என்ன? அந்த விக்கி நினைத்தாலும் அவளை காப்பாற்ற முடியாது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவளை வச்சுக்கோ. அழுத்து விட்டால் சொல்லு மறு நிமிடம் அவள் அவளோட பாசமிகு பெற்றோரிடம் செல்லட்டும் என்றான்.

நோ..நோ..அப்பா. அவள் எனக்கு அழுத்து போக வாய்ப்பே இல்லை. சீக்கிரம் அவளை அடையணும். காத்துக்கிட்டு இருக்கேன். ஆனால் என்ன இந்த விக்கியை போல் நடிக்க ரொம்ப சிரமமா இருக்கு என்றான்.

அவன் இருக்கு இடம் பாதுகாப்பு தான? கொலைகாரன் கேட்க, பக்கா பாதுகாப்பான இடம் அவனால் நகர கூட முடியாது. யாராலும் கண்டுபிடிக்க முடியாத அவனோட வீடு தான்.

சரி, போ. அந்த செள்ளியன் அவளிடம் பேசி விடக்கூடாது கண்காணித்துக் கொண்டே இரு.

ஓ.கே “பை” ப்பா என்று அவன் செல்லும் போது அவன் செய்த கொலைகளை நினைத்துக் கொண்டு காற்றை உள்ளிழுத்து நேத்து..நீ எனக்கு மட்டும் தான். அதான் அந்த செள்ளியனை கட்டிக் கொள்ள வைத்தேன். ஆனால் அவனால் கூட உன்னை தொட விடாமல் செய்துட்டேன்.

மறுபடியும் நான் உன்னுடன்..ம்ம்..என்ன சுகம்? என்று மூச்சை உள்ளிழுத்து அங்கிருந்த பூக்களை முகர்ந்தான் அவன்.

ஆம், நம் வினு நேத்ராவின் கருவில் இருக்கும் குழந்தை இவனுடையது தான். ஆனால் அவளோ தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறாள். நம் வினுநேத்ரா கருவுற்று இருப்பது இவனுக்கு மட்டுமல்ல கொலைகாரன், அஷ்வினி, தீக்சிதா, செள்ளியன் யாருக்குமே தெரியாமல் இருப்பது நம் நேத்ராவிற்கு நன்மை தான்.

வீட்டில் அனைவரும் ரணாவையும் அவள் நண்பர்களையும் பார்த்து பதறி இருக்க, அதிரதன் அறைக்கதவு திறக்கப்பட, சிவநந்தினி தன் குடும்பத்தின் முன் தைரியமாக வந்து நின்றார்.

வெளியே வந்து அதிரதனை பார்த்து, அனைவரும் அவனிடம் செல்ல, சிவநந்தினி மட்டும் அப்படியே நின்றார். அவன் தன் அம்மாவை பார்த்து விட்டு, அனைவரையும் பார்த்தான்.

கண்ணா, வீட்டுக்கு வந்துட்டியா? பாட்டி மகிழ்ச்சியாக, அண்ணா என்று ரணா கண்ணீருடன் அவனை அணைத்து அழுதாள். அவள் பயமும், மனதிலிருந்த வலிகளும் அண்ணனை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சம் கரைந்து போனது.

யசோதா அத்தை, மன்னிச்சிருடா கண்ணா நான் நம்பாமல் இருந்தது தவறு தான். எங்கேயும் போகாத என்றார்.

அவரை பார்த்து விட்டு சங்கீதன், கண்ணனை அணைத்து அவர்களுக்கு நன்றி கூறினான் அதிரதன். அவனை விலக்கிய சங்கீதன், சார் நான் அவனை பார்த்தேன் என்றான்.

யாரடா சொல்ற? லட்சணா கேட்க, அவளை பார்த்து விட்டு சார், நான் பார்த்தேன்னு சொன்னேன்ல. அந்நேரம் கொஞ்சம் மயக்கமாக இருந்தால் அவன் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் உங்களை போல் தான் இருந்தான்.

உங்களோட ஹட், வெய்ட், அப்படியே உங்களது உடல் வாகு. எனக்கு அடிபட்டதில் கண்கள் மங்கலாகியது. அதனால் அவன் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் சார், அவனது வலது புருவத்திற்கு மேல் தழும்பு இருந்தது.

தழும்பா, தெளிவாக தெரியுமா? இருந்ததா? அதிரதன் கேட்க, ஆமா, இவன் தான் ஹெட்ன்னு நினைக்கிறேன். அங்கு அவன் மட்டுமில்லை. அவனை சுற்றி சிலர் சென்றனர். அவன் ரணாவை பார்த்து சிரித்தான் சார்.

அவன் திட்டம் வெற்றியடைந்த சிரிப்பு அது அல்ல. இனி தான் ஏதோ செய்யப் போகிறான்.

இல்ல. அவன் செஞ்சுட்டான். ஆனால் அவனுக்கு தான் தோல்வி என்றான் அதிரதன் சோபாவில் அமர்ந்தவாறு. அந்நேரம் மற்றவர்களும் வீட்டிற்கு வந்தனர்.

தாட்சாயிணியை அவள் வீட்டில் விட்டு செழியன், ராமவிஷ்ணு, அதீபன் கையில் நிவியுடன் வந்தனர்.

அவர்களை பார்த்து அதிரதன் எழுந்தான். நிவி அதீபனிடமிருந்து இறங்கி அதிரதனிடம் ஓடி வந்து, அங்கிள் என்று அணைத்துக் கொண்டாள். அனைவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

பயந்துட்டீங்களா? அதிரதன் கேட்க, அவள் மேலும் அழுதாள்.

ஒன்றுமில்லைடா. நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும் என்றும் நிவியை அணைத்தான் அதிரதன்.

எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க? அவன் அப்பாவை பார்த்தான்.

இந்த பொண்ணு அழுதுகிட்டே இருந்தால் அவனை பார்த்து பயந்துவிட்டாள். கொலையையும் பக்கத்தில் இருந்து பார்த்துட்டா. அழுகையை நிறுத்தவில்லை. இரு நாட்கள் இங்கே இருக்கட்டும் என்று அழைத்து வந்தோம்.

நீ எங்கிருந்த ரதா? நீ இல்லாம எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க என்று ராமவிஷ்ணு சிவநந்தினியை பார்த்தார். அதிரதனும் அவன் அம்மாவை பார்த்தான். எப்பொழுதும் போல் ஏதும் பேசவில்லை. அவர் கண்கலங்கியது.

ஆத்வி இன்னும் வரலையா? என்று அதிரதன் நிதினுக்கு அழைப்பு விடுத்தான்.

நாங்க வந்துகிட்டு இருக்கோம்டா என்றான் நிதின்.

சீக்கிரம் அழைச்சிட்டு வா. அப்பா, சித்தப்பா, பிரணா, அதீபன் தவிர யாரும் நான் சொல்லும் வரை வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

குட்டிம்மா, நீ காலேஜ் தவிர எங்கும் செல்லக்கூடாது என்று கை தட்டினான்.

சார், நாங்க கிளம்புறோம் என்று சங்கீதன் சொல்ல, உன்னோட அப்பா வெளிய தான் இருக்கான். ரொம்ப தேங்க்ஸ்ப்பா என்று செழியன் சங்கீதனை அணைத்தார்.

இரு பாடிகார்ட்ஸ் உள்ளே வந்தனர்.

குட்டிம்மா, இவங்க காலேஜ்ல உன்னுடன் தான் இருப்பாங்க என்றான். ஆவென அவளுடைய நண்பர்களும் அந்த இருவரையும் பார்த்தனர். அதீபன் சிரித்தான்.

டேய், சும்மா இருடா பாட்டி அவனை திட்டினார்.

அண்ணா, என்னது? வேணாம். அதான் என்னோட ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே?

நீ காலேஜ் போணும்ன்னா வீட்டிலிருந்து கிளம்பி நீ வீட்டிற்கு திரும்பி வரும் வரை உன் பாதுகாப்புக்கு கண்டிப்பாக இவங்க வருவாங்க என்றான் அதிரதன்.

காலேஜ்ல எப்படி?

அதெல்லாம் பிரிஸ்சிபிலிடம் பேசியாச்சு என்றான் அவன்.

ரணா அவர்களிடம் வந்து சுற்றி பார்த்து, ஹாய், உங்க பேர் என்ன? அவள் கேட்க,

ஜனார்தன் மேம் என்றான் ஒருவன். துர்கேஷ் மேம் என்றான் மற்றவன். ஆனால் இருவரும் விறைத்தபடி கூறினார்கள்.

நீங்க பார்க்க க்யூட்டா இருக்கீங்க. உங்க யூனிஃபார்மை மாத்திட்டு வாங்களேன்.

நோ..மேம்.

ஹலோ, எனக்கு ஒன்றும் அவ்வளவு வயசாகலை. அது என்ன மேம்?

மரியாதையாம் என்று அதீபன் மேலும் சிரிக்க, அதிரதன் ரணா அருகே வந்து அவள் தோளில் கை போட்டு, உன்னோட ப்ரெண்ட்ஸ் மாதிரி இவங்கள ட்ரீட் பண்ணக்கூடாது.

அண்ணா, இவங்க மட்டும் இப்படி நடந்து கொண்டால் காலேஜ்ல எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க என்று முகத்தை சுளித்துக் கொண்டு சொன்னாள்.

ஆமா, இதெல்லாம் எதுக்கு? ராம விஷ்ணுவும் கேட்க, சித்தப்பா நடந்தது தெரியுமா? தெரியாதா? மிரட்டுவது போல் அதிரதன் கேட்க, சிவநந்தினி அவர்கள் முன் வந்து, எதுக்கு இதெல்லாம்? பிரச்சனை முடியும் வரை ஆத்வி போல இவளும் வீட்டிலே இருக்கட்டும் என்றார்.

என்னது வீட்டிலா? என்று ரணா மனதில் காவியனை பார்க்காமல் விட்டால் வேற எவளாவது அவனை பிடிச்சிடுவாளுக. நெவர் அவனே வேண்டாம் என்றாலும் என்னால இதுக்கு மேல அவனை மறக்க முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

அதிரதன் குனிந்து அவளை பார்த்து சொடக்கிட்டான்.

அண்ணா என்று படபடப்புடன் அவனை பார்த்து, நான் கண்டிப்பாக காலேஜ் போகணும் என்று அவள் அம்மாவை பார்த்தாள். சிவநந்தினி அவளை முறைக்க, செழியன் அவர் தோளில் கை வைத்து கோபப்படாதம்மா. காலேஜ்ல தான் புள்ளைங்க வாழ்க்கையை சந்தோசமாக கழிக்க முடியும் என்றார்.

சரி குட்டிம்மா, நீயே முடிவெடு. காலேஜ் போறதாக இருந்தால் இவங்க உடன் வருவாங்க இல்லையெனில் வீட்டிற்குள் அடைந்து தான் இருக்கணும் என்றான். அனைவருக்கும் மீண்டுமொரு அதிர்ச்சி. அவன் முடிவிலே நிற்பவன் அவன் அம்மா பேச்சை ஏற்றுக் கொண்டானா? என்று அவனை பார்த்தனர்.

லட்சணா அவர்களிடம் வந்து சார், நான் அவளிடம் பேசலாமா? கேட்டாள்.

ம்ம்..என்று அதிரதன் ரணா தோளில் இருந்த கையை எடுத்தான். லட்சணா கேட்டதும் கூட செய்கிறானா? என்று அதீபன் வாயை பிளந்து கொண்டு தன் அண்ணனை பார்த்தான்.

ரணாவை தனியே அழைத்து வந்த லட்சணா, ரணா..இவனுக காவியன் அளவு இல்லைன்னாலும் நல்லா இருக்கானுக. இவனுகள வச்சி அவனை வெறுப்பேற்றி அவனை உன் மீது காதலில் விழ வைப்போம் என்றான்.

திட்டம் நல்லா தான் இருக்கு லட்சு. ஆனால் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களே!

இல்லைன்னாலும் கிண்டல் பண்ணாம இருந்திருவானுகளா? என்ற லட்சணா வாய்ப்பை தவற விட்டு விடாதே! உனக்கு மரியாதை முக்கியமா? காவியன் முக்கியமா? என கேட்டாள்.

அய்யோ, எனக்கு காவியன் தான் முக்கியம். எப்படியும் கமெண்ட் பண்ணுவாங்க. பார்த்துக்கலாம் என்று அண்ணா, “தேங்க்யூ” என்று அதிரதனை அணைத்து, நான் காலேஜூக்கு போறேன். இவங்களும் வரட்டும் என்றாள்.

அதீபா, நீ என்னோட எல்லாத்தையும் பார்த்துக்கணும். துணைக்கு விஷ்வா இருப்பான்.

அவனா? என்று அதீபன் கேட்க, அது என்ன அவனா? அவன் தான் என்றான் அதிரதன்.

அண்ணா, நீ எப்ப வருவ?

வாரேன்டா. ஒரு முக்கியமான வேலை இருக்கு. கண்ணாமூச்சி விளையாட்டை அவன் தான் ஆரம்பித்து விட்டானே? நான் முடிச்சிட்டு வாரேன்.

வேண்டாம்ப்பா என்று செழியனும் ராமவிஷ்ணுவும் சொல்ல, ஆமா கண்ணா என்று யசோதாவும்  பாட்டியும் அவர்களை போல் தடுத்தனர்.

ஏன்? அவனை தடுக்குறீங்க? எடுத்ததை அவன் தான் முடிக்காமல் விட மாட்டானே! அவனுக்கு சப்போர்ட் பண்ணலைன்னாலும் வேண்டாம் என தடுக்காதீங்க என்றார் சிவநந்தினி.

அதுக்கில்லைம்மா. அவன் ரொம்ப டேஞ்சரா இருக்கான் செழியன் சொல்ல, அப்பா இதுக்கெல்லாம் பயந்தால் எப்படி கம்பெனியை பாதுகாப்பது? நீங்க எல்லாரும் தொழிலை கவனிங்க. நான் அவனை பார்த்துக்கிறேன் என்றான் அதிரதன்.

நிதினும் ஆத்வியும் உள்ளே வந்தனர். ரணா உன் கைக்கு என்னாச்சு? அங்கிள் வெளிய நிக்கிறாரு. சங்கீத் என்ன இது? என்று வரும் போதே ஆத்விகா பதட்டமுடன் அனைவரையும் பார்த்தாள்.

மத்தவங்க எல்லாரும் எங்கே ஜனா? அதிரதன் கேட்க, வெளிய தான் இருக்காங்க என்றான்  அந்த பாடி கார்டு.

வரச் சொல்லுங்க என்றான் அதிரதன்.

பத்து பேர் வந்து நின்றனர். அதிரதா என்ன இது? செழியன் கேட்க, அப்பா நான் நினைப்பதை செய்யணும்ன்னா எல்லாரும் பாதுகாப்பா இருக்கணும். ஆத்வி இப்பொழுதிலிருந்து நீ வெளியவே போகக்கூடாது.

அண்ணா, ஆமா ஆத்விம்மா..வா என்று பாட்டி அவளை அழைத்தார்.

என்ன பிளான் வச்சிருக்க அதி? ராம விஷ்ணு கேட்க, இனி தான் யோசிக்கணும் சித்தப்பா என்றான் அவன்.

வீட்டிற்கு இருவர், செழியனுடன் இருவர், அதீபனுடன் இருவர், ராமவிஷ்ணுவிற்கு இருவர் என அதிரதன் பிரிக்க,

எனக்கெல்லாம் ஆட்கள் பக்கமிருந்தால் வேலையே நடக்காது என்றார் ராமவிஷ்ணு. அதிரதன் திரும்பி அவரை பார்த்த பார்வையில் அமைதியானார்.

என்ன கிண்டல் பண்ணேல்லடா? பார்த்தியா உன் பின்னும் சுத்துவாங்க என்று ரணா அதீபனிடம் வம்பு செய்தாள். இவங்கள சாதாரணமா நினைக்காதீங்க. பெரிய கேங்க்ஸ்டர் ஆட்கள். அதனால தேவையில்லாம பேசாதீங்க என்றான் அதிரதன்.

சங்கீதா, அப்பா காத்திருக்கார். நீங்க கிளம்புங்க என்று அவர்களை அனுப்ப, நிதின் அவன் கையை பிடித்து மெதுவாக சாரி என்றான். அவனை பார்த்துக் கொண்டே சங்கீதன் வெளியேற, தினகருடன் சேர்ந்து நண்பர்களை அவர்களது வீட்டில் விட்டு அவர்களும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

பாடிகார்ட்ஸூக்கு தன் ஆர்டரை வைத்து விட்டு, நான் வாரேன் என்று அதிரதன் சொல்ல, சாப்பிட்டு போகலாமே? என்று சிவநந்தினி கேட்க, யசோதா சமையலறைக்கு சென்று பாலை எடுத்து வந்தார்.

இன்னும் சிலருக்கு பாதுகாப்பு தேவை. நான் தான் செல்லணும் என்று அவன் அம்மாவை பார்த்து முதல் முறையாக பதில் கூற, அனைவரும் மகிழ்வுடன் சிவநந்தினியையும் அதிரதனையும் பார்த்தனர். சிவநந்தினி கண்ணீர் கசிய, யசோதா பாலை சிவநந்தினியிடம் கொடுக்க அதை வாங்கி, அதிரதன் அருகே பயத்துடன் வந்தார்.

அவன் அவர் எதை கொடுத்தாலும் தூக்கி எறிந்து விடுவான். ஆனால் இப்பொழுது வாங்கி குடித்து விட்டு அவர் கையில் கொடுத்து விட்டு, நான் வாரேன் என்று பாடி கார்ட்ஸை பார்த்து கண்ணசைத்தான். வீட்டினுள் இருந்த விருந்தாளிகள் தங்கும் இல்லத்தில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தான்.

அவர்கள் வீட்டை சுற்றி நிற்க, நிது..நீ வா போகலாம் என்று அவனறைக்கு அழைக்க, எங்க போற? ரணா கேட்க, வந்த வழியே தான் செல்லப் போகிறேன் என்று நிதின் தோளில் அதிரதன் கையை போட்டுக் கொண்டே செல்ல, நிதின் திரும்பி ஆத்விகாவை பார்த்து பறக்கும் முத்தத்தை பறக்க விட்டான். அனைவரும் புன்னகையுடன் சென்றனர். ஆனால் சிவநந்தினி ரணா அறைக்கு சென்று “அவளிடம் படிக்க மட்டும் தான போற?” கேட்டார்.

அம்மா, என்னை விடு. உன் பாட்டை நான் நாளை பார்த்துக்கிறேன் என்று சொல்ல, உன்னை திட்டியது அந்த பையன் தான.

அவன் தான் அம்மா. எனக்கு அவனை பிடிக்கும். நீயும் லவ் மேரேஜ் தான. அவனை நிதி, அண்ணா, சங்கீத் எல்லாருக்கும் தெரியும். நீ வேணும்ன்னா விசாரிச்சுக்கோ. ஆனால் அவன் என்னை மறுத்திட்டான். உனக்கு போதுமா? என்று ரணா அழுதாள். சிவநந்தினி அவளை அணைக்க, அவனிடம் சொல்ல கூட இல்லம்மா. ஆனால் சங்கீதனிடமும், நிதுவிடமும் முடியாதுன்னு சொல்லீட்டானாம் என்றாள்.

சரிம்மா, உனக்கு சாப்பிட எடுத்து வரவா? கேட்க, எனக்கு பசிக்கல்லம்மா. பயமா இருக்கு. என்னால அவனை மறக்க முடியாதும்மா என்றாள்.

அவளை அந்நிலையில் திட்டவும் முடியாமல், அவள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருந்தவருக்கு நிதுவுக்கு நன்றாக தெரியுமாம்மா? கேட்டார்.

தெரியும்மா. இப்ப கூட அண்ணா சொன்னது அவனை தான். ஆனால் அண்ணாவுக்கு எனக்கு அவனை தெரியும்ன்னு தெரியாது. என் காதலும் தெரியாது என்று அழுதாள். அவர் யோசனையுடன் அவள் தலையை கோதிக் கொண்டே பார்த்தார். அவள் தூங்கவும் வெளியே வந்தார் சிவநந்தினி.

 

 

 

 

Advertisement