அனல் -9

“சாப்பிட்டு இருடா, பேசிட்டு வரேன்னு தான போனேன்? அதுக்குள்ளே  இவன் எங்க சாப்பிடாம போனான்?”

 என்று புலம்பிக்கொண்டே த்ரூவைத் தேடிக்கொண்டு மதி சென்றான். அப்போது கிரவுண்டில்  மரத்தின் கீழே அன்வீதா பதட்டத்துடன் நின்றிருப்பதை பார்த்தவன்.

“ஐ…. பொம்மாயி….. இவ என்ன இங்க நின்னுட்டு இருக்கா?” என்று யோசனையாக அவள் அருகே சென்று

“ஏ…. பொம்மாயி …. க்ளேஸ்க்கு போல” என்ற சத்தத்தில், பயந்து நெஞ்சில் கை வைத்துக்கொண்டு,

“நீ மெல்லமா மாட்லாடா..?”

“நான் யாரடி மாட்டி விட்டேன்? இப்போ தான்டி ஹாஸ்டல்ல இருந்து வெளியவே வரேன்.”

“ப்ச்…. எனக்கு ஹெட்ஏக்கா இருக்கு, கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாத”

என்று எப்படியோ அவள் கற்றுக் கொண்ட தமிழில் அவள் பேசி விட்டு திரும்பி நின்றவளை ஏற இறங்க பார்த்து

“இவ இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்கு புரிய வைக்க மாட்டாலே, என் கூட சேர்ந்து பன் பண்ணிட்டு தான இருப்பா. இன்னைக்கு என்ன ஆச்சு? அத்தனை டென்ஷனா நிக்கிறா?”

என்று அவன் யோசித்தபடியே இருக்க, அவன் பின்னே இருந்து த்ரூவின் குரல் திடீரென்று கேட்டுத் திரும்பினான்.

கையில் கருப்பு கவரோடு வந்தவனைப் பார்த்து,

“என்ன பிரனாவ், இன்னைக்கு அவுட்சைட் ஃபுட் சாப்பிட போறோமா ” என்று பேசியவனைக் கண்டு கொள்ளாது அவனைத் தாண்டிச் சென்று அன்வீதா இடம் நீட்ட , அதை கையில் அதை வாங்கிக்கொண்டவள்.

“தாங்ஸ் பிரனாவ்” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

“என்னடா ஆச்சு… பொம்மாயி இவ்வளவு வேகமா எங்க போறா?”

என்று கேட்டு நின்றவனின் தோளில் கை போட்ட த்ரூவ், “லேடீஸ் மேட்டர் டா மதி…. “

“ஓ… அதுக்கு தான் அத்தனை பதட்டமா?”

“ம்ம்ம்…. சரி அத விடு, முதல்ல அவள பொம்மாயி கூப்பிடுறத நிறுத்துடா. ஏதோ அந்த பசுபதியே நேர்ல வந்து கூப்பிடுற மாதிரி இருக்கு!”

அதை கேட்டு சத்தமாக சிரித்த மதி, “டேய், நான் எவ்வளவு அழகா பொம்மாயின்னு கூப்பிடுறேன், அதை பேய் மாதிரி இருக்குன்னு சொல்றியே டா!”

“எனக்கு என்னமோ நீ கூப்பிடும் போது எல்லாம் அப்படி தான் பீல் ஆகுது” என்று பேசிக்கொண்டு க்ளால் நோக்கி நடந்தவர்களை, பர்ஸ்ட் இயர் பெண் ஒருத்தி வழி மறித்து நிறுத்தவும்,

“ரைட், இதோ தொடங்கிட்டாங்களா… பர்ஸ்ட் இயர்ஸ் வந்தே மூணு மாசம் தானே ஆகுது, அதுக்குள்ள லவ்வா?” என்று முனங்கிய மதி.

“ஆல் த பெஸ்ட் டா பிரனாவ்” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று நின்றுவிட்டான்.

அந்த ஜூனியர் ஏதோ கார்டை அவனிடம் நீட்டுவதும், அதை இவன் வாங்க மறுத்து ஏதோ பேசுவதுமாக இருப்பதை பார்த்தவன்

“மோதல்ல இவன் ஜாதகத்தை வாங்கிப் பார்க்கணும். காலேஜ் கண்ணன் மாதிரி எல்லாம் இவனையே சுத்தி வர்றாங்க!”

“எந்த இயர் மதி…” என்ற குறளில் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த மதி, அன்வீதாவைப் பார்த்துவிட்டு,

“பர்ஸ்ட் இயர் பொண்ணு”

“வாட் பர்ஸ்ட் இயரா, அவ்?.. இவன் எந்தா தெரியும் மதி?”

“அது ஒன் வீக் முன்னாடி சீனியர் ரேகிங்ல நம்பர் கேட்டு அழுவ விட்டுட்டாங்க. நம்ம ஆளுக்கு தான் பொண்ணுங்க கண்ணு கலங்குனாலே தாங்காதே!

அதை பார்த்துட்டு பசங்கள கொஞ்சம் தட்டி வச்சின்னு சம்பவம் ஆகிடுச்சு, அதுல புடிச்சிருக்கும் போல!”

“பட் மதி…. நீயும் கூட தான சண்டை போட்ட, அப்புறம் ஏன் அங்க மட்டும் லவ்?”

“ப்ச்… நாங்கலாம் கண்ணுலயே கலவறத்தைக் காட்டி பயமுறுத்துறவங்க,

என்னப் பார்த்த பயம் தான் வரும், ஆனா நம்ம பையன் அப்படியா? ஏதோ அன்னை தேரஸா பையன் மாதிரி கண்ணுலயே கருணையைத் தூக்கிட்டு சுத்துறவன், அவனப் பார்த்து லவ் வராம இருந்தா தான் அதிசயம்.”

“ஓ…..” என்று அவர்கள் பேசுவதையே இவள் பார்த்துக்கொண்டிருக்க மதி,

“இப்போ ஓகேவா… பொம்மாயி…. சோடா ஏதாவது வாங்கித் தரட்டுமா?”

என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்.

“இல்ல பரவாயில்லை…” என்னும் போதே த்ரூவும் அங்கு வந்துவிட மூவருமாக கிளாஸை நோக்கி நடந்தனர்.

“அப்பறம் என்னடா, சேம் டயலாக்கா?” என்று சிரித்த மதியை முறைத்த த்ரூவ்.

“என்னை என்ன பண்ணச் சொல்ற மதி? சின்னப் பொண்ணு, ஏதோ புரியாமப் பண்றாங்கடா!”

“புரியாமப் பண்றாங்கனா ‘நோ’ன்னு சொல்லி முடிச்சி வைக்காம, ‘தாட் இயர், அப்போ வா பேசலாம்னு சென்னை அந்தப் பொண்ணு என்னன்னு யோசிக்கும்.”

“‘வாட் தாட் இயர், அப்போ பேசலாம்’ சொன்னியா? ‘வாட் பிரனாவ்’!” என்று அன்வீதா அதிர, அவள் அதிர்ச்சியில் மதி சிரித்தபடி,

“ஓ… உனக்கு இவன் ரிஜக்க்ஷன் எப்படி இருக்கும்னு கேட்டது இல்லையே, அதான் இப்படி ஷாக் ஆகுற,” என்றவனை “என்ன சொல்ற?” என்று அவள் பார்க்க,

“சார்-க்கு பொண்ணுங்க மனச உடைக்க வராது. சோ, லவ் சொல்லி, வர எல்லாருக்கும் ஒரே மாவ்தான், அரச்சி கோடுப்பான்!”

“என்ன பேசுற மாவு? ஏன் தரணும் அவன்?”

“ம்கும்  உன் கிட்ட இப்படிப் பேசுனது என் தப்புதான், வா தெளிவா சொல்றேன்,” என்றவன் அவர்களைக் கடைசி பெஞ்ச் சீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு மேஜைக்குக் கீழே சாக்லேட், ஒரு உணவுப் பொட்டலம், காட்ஸ் என்று குவிந்து கிடப்பதைப் பார்த்த அன்விதா,

“ஏ… வாட் இஸ் திஸ்?” என்று கண்களை விறிக்கவும் மதி,

“இதெல்லாம் காதல் பரிசுகள், நம்ம பையனுக்கு டெய்லி வரும்,”

என்று த்ரூவை  பார்க்க, அவன் தலையைத் குனிந்தபடி அவன் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டான்.

“நம்ம பையன் லவ் சொல்லி வரப் பொண்ணுங்க கிட்ட எல்லாம், ‘வாங்கம்மா இது தப்பு, இந்த வயசுக்கு ஹார்மோன்ஸ் இப்படித்தான் தப்பு தப்பச் சொல்லும், நீங்க முதல்ல படிங்க, உங்க படிப்பு முடிஞ்சும் இந்த பீலிங்ஸ் இருந்தா வாங்க பேசலாம்’னு நம்பர் வரை கொடுத்துட்டு வந்துருவான்!”

என்றதும் அன்விதா த்ரூவை அதிர்ச்சியுடன் “என்னாடா இது?” என்பது போலப் பார்த்து வைக்க மதி,

“இது என்ன பிரமாதம்னு நிறைய சம்பவம் இருக்கு. நம்ம தலைவன் பண்றதுல, அந்த பொண்ணுங்க படிக்காம இவன் பின்னாடியே சுத்தி கால் பண்ணா, அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு இப்படிப் பண்ணா, ‘உங்கள இனி நான் என் பிரண்டா கூடப் பார்க்க மாட்டேன், படிங்க அதுதான் முதல்ல’னு பேசுற பேச்ச நம்பி பல பொண்ணுங்க காலேஜ்ல விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்காங்கன்னு நியூஸ் கேள்விப்பட்டேன்,”

என்று பேசியபடி அந்த உணவுப் பொட்டலத்தைப் பிரிக்க, அதில் இட்லி, வடை என்று இருப்பதைப் பார்த்த மதி,

“மார்னிங் நீ சாப்பிடலையா டா பிரனாவ்?” என்றதற்கு அவன் மறுப்பாகத் தலையசைத்து, “டுடே கேன்டீன்ல உப்புமா டா, அதான் வந்துட்டேன்,”

“கூடச் சுத்துறது எனக்கே இப்போதான் தெரியுது, ஆனா உன் விசிறிகளுக்கு மட்டும் எப்படிடா இவ்வளவு பாஸ்டா நியூஸ் போகுது?” என்று அந்த இட்லியைத் தூக்கி மதி காட்டவும்.

“இவன் சாப்பிடலன்னு னா இந்த இட்லி…” என்று வாயைப் பிளந்தாள் அன்வீதா.

“ம்ம்ம்…. வேற யாருக்கு, அனைத்தும் நம்ம சார்க்கு தான்” என்றவன், அதை உண்ணப் போக அன்வீதா அவன் கையை பிடித்துத் தடுத்தவள்.

“ஏ… என்னடா பண்ற?”

“ம்ம்ம்…. பார்த்தா தெரியல, டுடே நானும் சாப்பிடல, சோ சாப்பிடப் போறேன்.”

“ஏ… இடியட், இப்படி நீங்க சாப்பிட்டு அக்சப்ட் பண்றதுனால தான், டெய்லி தே சென்ட் திஸ் கிஃப்ட் டா!”

“என்ன சொல்ல வர்ற? அதுக்காக சாப்பாட்டை வேஸ்ட் பண்ணச் சொல்றியா?”

“எஸ், அப்போ தான் நெக்ஸ்ட் டைம் கிஃப்ட் வைக்க மாட்டாங்க.”

என்றதைக் கேட்ட த்ரூவும், “அப்படியா?” என்பது போலப் பார்க்க, மதி,

“அப்போ நாங்க என்ன சாப்பிட? நான் இதை நம்பி தான் எதுவுமோ கேன்டீனில்ல வாங்காம வந்தேன்”

என்றதும் அவள் பையில் வைத்திருந்த சாப்பாட்டு டப்பாவை எடுத்து நீட்டிய அன்வீதா.

“இன்னைக்கு இதை சாப்பிடு, ஓகே?” என்றதற்கு, த்ரூவ் வேண்டாம் என்று சொல்ல வாய் திறக்கும் முன்னே அதை வாங்கிய மதி.

“ஸ்வீட் பொம்மாயி!, யூ ஆர் எ குட் கார்ல் டா, டுடே நம்ம லன்ச் கேன்டீனில் சாப்பிடலாம்”

 என்று விட்டு, அவள் எடுத்து வந்த முட்டை சாதத்தை ரசித்து அவனும் உண்டான்; பிரனாவிற்கும் ஊட்டினான். அவனும் முதல் முறை அம்மாவின் கைருசியில் ரசித்து உண்டான்.