அதை விட்டுட்டு ஒன்னா படிக்கலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டு, போயும் போயும் அவன் கூட போய் சுத்துற,” என்ற வினோவை முறைத்து பார்த்தவன்,
“உங்ககிட்ட பேசலையா அதுக்கு திட்டுங்க, அதை விட்டுட்டு அவன தப்பா பேசாதீங்க டா.”
“ஏன் பேச கூடாது? நாங்க என்ன பொய்யா பேசுறோம்? இருக்குறத தான பேசுறோம்? எங்கள பாத்துட்டு ஒரு மாதிரி மூஞ்ச திருப்பிட்டு போறான். அவன் அப்பாவ விடவா நாங்க கேவளமா போயிட்டோம்?”
“நியாயப்படி அப்படிப்பட்ட அப்பனுக்கு போறந்த அவ கூட தான் நாங்க பேச யோசிக்கணும்.”
“வினோ, நீ ரொம்ப தப்பா பேசுற, போதும், இதோட நிறுத்திக்கோ டா.”
“என்ன நிறுத்தணும் மதி? நான் இந்த வயசுக்கு பொண்ணுங்க பிரண்டோட சுத்துறேன், அதுல என்ன தப்பு? நான் லவ் பண்ற பொண்ணு கிட்ட போய் என்ன பத்தி தப்பா சொல்லி வச்சிருக்கான்.”
“அது அவனா போய் சொல்லல டா? அந்த பொண்ணு உன்ன பத்தி எங்ககிட்ட கேட்டதுக்கு தான் அவன் உண்மையா சொன்னா டா, அதுல என்ன தப்பு இருக்கு?
அவன் சொன்ன மாதிரி நீ நிறைய பொண்ணுங்க கூட பழகுற தான?”
“எனக்கு என்ன பத்தின உண்மைய அந்த பொண்ணு தெரிஞ்சிக்கிட்டதுலாம் ஒரு மேட்டரே இல்ல. இவ இல்லனா வேற பொண்ணுன்னு நான் மூவ் ஆன் ஆகிடுவேன்.”
“அப்பறம் என்ன, அந்த பொண்ண மறந்திடு டா!”
“எனக்கு என்ன பத்தி தப்பா அவன் பேசுனது தான் பிரச்சனை. போயும் போயும் இவன் வாய்யால என்ன பொம்பள போருக்கின்னு சொல்லுவான்னா…” என்று டேபிளை அடித்து பேசியவனிடம்,
“அவன் உன்ன பொம்பள பொருக்கி ன்னு சொல்லல, அப்படி அவன் சொன்னாலும் அதுல என்ன தப்புன்னு கேக்குறேன்.
நானும் வந்தது பாக்குறேன், அவன பத்தி தப்பாவே பேசிட்டு இருக்க. இதுவே வேற எவனாவது பேசியிருக்கணும், மூஞ்ச பேத்து கைல கோடுத்துருப்பேன்.”
என்று பேசியவனின் சினத்தில் பயம் துளிர்த்தாலும் வினோ தொடர்ந்து பேசத்தான் செய்தான்.
“உண்மையா தான் சொல்றேன், அவங்க அம்மா அவங்க அப்பாக்கு மூணாவது பொண்டாட்டி. சொத்துக்காக இருபது வயசு வித்தியாசத்துல அவன கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
ஏன் அந்த அளு? அவங்க அம்மா ஓடயும் நிப்பாட்டலையே! அவங்க அப்பறம் எத்தனையோ பேரை வீட்டுல இவங்களுக்கு தெரிஞ்சே வப்பாட்டியா வச்சிருந்தானாம்!”
இதை கேட்டு மதி அதிர்ந்து போனவனாக வினோவை பார்க்க, அவன் மேலும் தொடர்ந்தான்.
“சரி, அம்மா தான் இப்படின்னா, இவன் என்ன பண்ணிட்டு இங்க வந்திருக்கான் தெரியுமா? சொத்துக்காக சொந்த அப்பனையே மாடில இருந்து தள்ளி விட்டு, படுத்த படுக்கையா ஹோம்ல சேத்துட்டு வந்திருக்கான் டா!”
அதற்கு மேலே கேட்க முடியாது என்று சேரை விட்டு எழுந்த மதி, கைகளை இறுக மூடித் திறந்தவன் வினோவை நோக்கி விரல் நீட்டி,
“அவங்க அம்மா அப்பாவ பார்த்து நான் அவ கூட நண்பனா இருக்கல. எனக்கு அவனை பத்தி தெரியும், அது போதும். தேவை இல்லாத விஷயத்த இப்படி பேசிட்டு இருக்காத!
இப்போ நீ என் கிட்ட பேசுனது என்னோட போயிடனும். வெளிய எதவது தெரிஞ்சது நீ இங்க பண்ற எல்லாம் தப்பும் நியூஸ்ல வரும் வினோ, நான் சும்மா பேசிட்டு போறன்னு நினைக்காத, உனக்கு என்ன பத்தி தெரியும் தானே!”
என்று மிரட்டி விட்டு விறு விறு என மதி சென்றுவிட, வினோ கோபமாக,
“சிட், சிட், சிட்!” என்று டேபிளை தட்டியவன்,
“இவங்கள எப்படியாவது பிரிக்கணும் டா!” என்று கோபமாக யோசிக்கத் தொடங்கினான்.
வினோ சொல்வதை கேட்டு முதலில் அதிர்ச்சி ஆனான் தான் மதி, ஆனால் இது முழு உண்மை இல்லை என்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது.
இத்தனை நாட்களாகத் த்ரூவ் உடன் பழகியதில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
த்ரூவ் என்ன தான் பெண்களை மரியாதையாக நடத்தினாலும், அவர்களிடம் நெருங்கி கூட நிற்க மாட்டான்; எப்போதும் ஒரு வித இடைவெளியில் தான் நின்று பேசுவான்.
இதையெல்லாம் வைத்துப் பார்த்தவனுக்குத் தோன்றியது, இதுவே த்ரூவ் ஏதோ மிக பெரிய வலியைச் சுமந்து கொண்டு இருக்கிறான் என்று.
அதை நண்பனான இவனிடம் கூட சொல்ல முடியாமல் தவிப்பதும், நேற்று இரவு பேசியதை வைத்து யூகித்தவன்; இன்று வினோ பேசியது எதுவும் அவன் காதுக்கு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டான்.
இவன் எடுத்த உறுதியை இவனே உடைத்து எறியப் போவது தெரியாமல், தன் நண்பனைப் பார்க்கச் சென்றான் மதி.