“ஹாய்டா பிரானாவ்! இங்க நம்ம குரூப் இருக்கும் போது அங்க யாரை தேடுற நீ? நம்ம குருப்ல உன்னோட சேத்து நாலு பேர் இருக்கோம், என்னும் ஒருத்தன் போதும்டா “

 என்றவன் கையை தோளில் இருந்து எடுத்து விட்ட த்ரூவ் குழப்பமான முகத்துடன்.

“நான் எப்போ உங்க கூட ஜாயின் பன்றன்னு சொன்னேன்”

“ஏன்டா பிரானாவ் சேர மாட்டேன்னு வேற சொல்லுவியாடா. நல்ல தெரிஞ்ச பையனேன்னு வந்தா என்னடா இப்படி பேசுற”

“என்னது தெரிஞ்ச பையனா? என்ன எப்படி உனக்கு தெரியும்?”

“அட பாவி, பிரானாவ் உனக்கு உண்மையா என்ன ஞாபகம் இல்லையா?” என்ற மதியை ஒரு முறை நன்றாகப் பார்த்து விட்டு

“நீயும் ஹாஸ்டல் ஸ்டூடண்ட் தானே” என்றவனை அடப்பாவி என்பது போல பார்த்தவன்.

“நீ பிஃத் கோயம்புத்தூர்ல தானே படிச்ச?”

“அமா, அது எப்படி உனக்கு தெரியும்?”

“தெரியாம எப்படிடா, நானும் உன் கிளாஸ் தானேடா. மதியழகன் ஞாபகம் இல்லையா?”

 என்றபடி தோளில் கை போடவும், நன்றாக யோசித்து பார்த்த த்ரூவ் அவனின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

சிறுவயதில் காதில் இருப்பக்கமும் கடுக்கன் போட்டுக்கொண்டு சேட்டையின் முழுஉருவமாக வந்து நின்றது நினைவு வரவும், மதியின் காதை தான் முதலில் பார்த்தான்.

த்ரூவின் பார்வையை கண்டுகொண்டவன், காதை பிடித்தபடி “அது கலட்டிடன் டா எல்லாம் கிண்டல் பண்ணாங்கன்னு”

“ஓ….. சரி, நான் உங்க கூட ஜாயின் பண்ணனும்னா என் பேச்ச கேப்பீங்களா?”

“கண்டிப்பா டா பிரானாவ், உன் பேச்ச கேக்காம எப்படி?” என்றுபடி இவன் நண்பன் புறம் திரும்பியவன்.

“இவன் வினோ, இவன் சரத் டா” என்று அறிமுகம் செய்து விட்டு அவனையும் சேர்த்து அழைத்து சென்றனர்.

மதி சொன்னது போல என்னும் ஒருவனையும் இவர்களுடன் இணைத்து பேரையும் கோடுத்து விட்டனர்.

பேரை கொடுத்த கையோடு த்ரூவை கேண்டினுக்கு அழைத்து கொண்டு சென்று, “ஜூஸ், சிகரெட்” என்று குதித்தவனை முறைத்த த்ரூவ்

“இதோ பாருங்க, உங்க கூட இப்படி சுத்தலாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல, ப்ராஜெக்ட் பத்தி ஏதாவதுனா மட்டும் வாங்க” என்று விட்டு சென்றுவிட்டான்

“என்னடா மதி, இவன் இப்படி இருக்கான், இவன போய் நம்ம குரூப்ல போட்டியேடா?” என்ற வினோவை பார்த்து சிரித்தவன்

“இந்த செம்மும் அரியர் வைக்க கூடாதுன்னா அவன் பேச்ச கேட்டு தான் ஆகணும். உங்கல மட்டும் வச்சினா ஒன்னும் பண்ண முடியாது ” என்று பேசியவனை என்ன தான் செய்ய என்று விட்டு விட்டான்.

இப்படியே நாட்கள் செல்ல அந்த ப்ராஜெக்ட் காக த்ரூவ் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தான். மதி வகுப்பு நேரத்தில் அவன் பக்கம் அமர்ந்து தூங்குவதோடு சரி, மத்த நேரம் எல்லாம் ஊரை சுற்ற சென்று விடுவான்.

இப்படியே நாட்கள் செல்ல ப்ராஜெக்ட் சப்மிட் செய்ய இரண்டு நாட்கள் தான் இருந்தது. அதில் கடுப்பான த்ரூவ்

“ப்ராஜெக்ட்ல ஒரு ஆணியும் கலட்டல நாளும் பரவாயில்லை, அன எழுதுற வொர்க் பண்ண கூட வர மாட்டிக்கிறாங்க இவனுங்கள!” என்று பல்லை கடித்தவன்.

நேராக மதியின் அறையை நோக்கி சென்றிருந்தான் வினோ; சரத், மதி என்று மூவரும் ஒரே அறையில் தான் தங்கி இருந்தனர்.

இன்று மூவரையும் பார்த்து நன்றாக கேட்டு திட்டி விடவே அங்கே சென்றான் த்ரூவ். ஆனால் அங்கு யாருமின்றி அறை தனித்து இருக்க, மேலும் கோபம் கொண்டவன் நேரத்தை பார்த்தான்.

மணி எட்டு என்று காட்டவும் “ என்னும் ஒன் அவர்ல ரோல் கால்லுக்கு வந்துருவாங்க இப்போ பாத்து இவனுங்க எங்க போனா “ என்று யோசித்தபடி போனை எடுத்து அவனை அழைக்க, மறுபுறம் போன்

வேகு நேரம் கழித்தே போனை அட்டென்ட் செய்தான் மதி. அதில் த்ரூவ் கடுப்பாகி  அவனை திட்டித் தீர்த்து விட்டான்.

மூச்சு விடாமல் வெகு நேரம் திட்டி முடித்தவன், அப்போதுதான் மறுபுறம் எந்தப் பதிலும் இன்றி பாட்டுச் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதை கவனித்தான்.

“என்ன சத்தத்தை காணோம் “ என்றபடி திரும்ப, அங்கே சரத் வினோவை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு தள்ளாடியபடி வர, அவன் பின் மதியைத் தேடி அவன் இல்லை என்றதும்.

அவர்களிடம் சென்று இவன் “சரத்! எங்க மதி “

“என்னது மதி இங்க இல்ல? அப்போ அவனும் அங்க தான் இருக்கானா போச்சி! “

“அப்போ மதியை நீ அங்கயே விட்டு வந்துட்டியா டா “

“இவன் மட்டும் தான் இருக்கான்னு நினைச்சன் “

“இடியட் நீங்களாம் ஒன்னா தானடா போய்ருப்பீங்க அப்புறம் எப்படி அவன் இல்லைன்னு நினைச்ச“

“இல்ல நான் என் கேர்ல் பிரண்டு கூட இருந்தேன் டைம் ஆகவும் தான் போன “

“பிச்….” என்று நெற்றியைத் தேய்த்தவன்

“ என்னும் ஒன் அவர்ல ரோல் கால்க்கு வந்துருவாங்க சீக்கிரம் அவனை போய் கூட்டிட்டு வாடா “

“என்னது நானா நானும் குடிச்சிருக்கேன் கண்டிப்பா என்னால திரும்ப போகலாம் முடியாது “ என்றவனை கோபமாகப் பார்த்தவன்.

“நல்ல நட்பு…” என்று முனங்கியவன், கண்களை மூடி யோசித்து விட்டு ஒரு முடிவு எடுத்தவனாக

“சரி மதி எங்க இருக்கான் இப்போ “ என்று கேட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து ஆட்டோ பிடித்துச் சென்றான்.

அவர்கள் சென்ன இடத்தில் மதியைத் தேட, அங்கே ஒரு டேபிளில் குப்புற விழுந்து கிடந்தவனை ஒரு அடி போட்டு எழுப்ப, அவன்

“அ… அம்மா வலிக்குது “ என்று கத்திய படி எழுந்து அமர்ந்தான்.

“வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டு காலேஜ்கு படிக்க அனுப்புனா குடி கேக்குதாடா “ என்று மீண்டும் அவன் அடுக்க

“அச்சோ…. சாரிம்மா இனி குடிக்க மாட்டேன் “ என்று போதையில் உளறியவன் மீண்டும் உறங்கச் செல்ல

“டேய் மதி தூங்கித் தொலையாத “ என்று அவனை எழுப்ப

“அம்மா…. என்னும் கொஞ்சம் நேரம் ம்மா ப்ளீஸ்….” என்றபடி அவன் மீது சாய்ந்து தூங்கியவனை தூக்கி கோண்டு ஆட்டோவில் போட்டு ஆஸ்டலுக்குச் சென்று சேருவதற்குள் ஒரு வலி ஆகி போனான் த்ரூவ்.

ஆனால் அந்தச் சுவர் அதை எப்படி இவனோடு சேர்ந்து தாண்ட என்று திகைத்துப்போய், இவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மதி போதையில் தள்ளாடியபடி எழுந்து நடந்து செல்லவும்

“ப்ச்… இவன் ஒருத்தன்… டேய் எங்க டா போற…. நில்லுடா….முடியலடா உங்கள வச்சிக்கிட்டு… “ என்று புலம்பியவன் அங்கு இருந்த ஒரு பெரிய புதரைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்க

“இது தான் வழி இதுகுள்ள போனா காலேஜ் வந்திரும் டாடா….” என்று மதியை பார்த்து கைகளை விரித்து நின்றவன் பேலன்ஸ் இன்றி தொப் என்று கீழே விழுந்துவிடவும், தலையை மறுப்பாக அசைத்தவன்

“நல்லா பண்ணி வச்சிருக்கீங்க டா காலேஜ “ என்றபடி புதர் உள்ளே செல்ல, அதன் பின்னே காலேஜ் சுவர் உடைந்து நிலையில் இருக்கவும் அதன் வழியாக உள்ளே நுழைந்தனர் இருவரும்.

“இப்படி ஒரு இடம் எப்படி எனக்கு தெரியாம போச்சு “ என்று த்ரூவ் முனங்க

“புக்க மட்டும் பார்க்காம….. சுத்தி காலேஜயும் பாக்கணும் அதுக்கு…“ என்று உளறியபடி வந்த மதியை ஒரு வழியாக பிடித்து இழுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றான்.

என்னும் பத்து நிமிடத்தில் ரோல் கால்க்கு வந்துவிடும் நிலையில் சரத் மற்றும் வினோ அதற்கு முன்பாகவே நன்றாகப் படுத்து உறங்கிவிட, த்ரூவ் மதியை இழுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றுவிடப் போனவன் மேலேயே வாந்தியை எடுத்து வைத்தான் மதி.

“ஏ….. “ என்று கத்தியபடி மூக்கை போத்தியவன்.

“ச்சை…. உன்ன…. வாந்தி எடுக்க இடமே இல்லையாடா பக்கி “

என்று திட்டியவன், அவன் டிசர்ட்டை கலட்டி விட்டு, அவனையும் தண்ணீர் அடியில் நிற்க வைத்து, அவன் படுக்கையில் இறத்தோடு தள்ளியவன்.

“டைம் ஆச்சி, இதுக்கு மேல என்னமோ பண்ணிக்கோ “ என்று விட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் அறைக்கு சென்றவன், வார்ட்டன் வருகையில் தூங்குவது போல படுத்துக் கொண்டு, அவர்கள் சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டவன்.

“மொதல்ல இந்த கும்பல்ல விட்டு தள்ளி இருக்கணும், இல்லன்னா நம்மள படிக்க விட மாட்டாங்க “

என்றவன், அவன் மீது வரும் வாந்தி நாற்றம் குமட்டி கொண்டு  வரவும் குழிக்க சென்றுவிட்டான்.

வெகுநேரம் நீரின் அடியில் இருந்தவன், நன்றாகக் குழித்து முடித்துவிட்டு, ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தபடி தலையைத் துடைத்துக் கொண்டு வந்தவனை “அ…. “ என்று பார்த்த மதி.

“வாவ் செமையா இருக்கடா, எப்படி இப்படி மெயின்டைன் பண்ற….“ என்றவனை முறைத்தவன்.

“இப்போ யார கேட்டு என் பெட்ல உக்காந்து இருக்க? ஒழுங்கா எந்திரி!”

“டேய் ஏன்டா டென்ஷன் ஆகுற? ஜெஸ்ட் உக்கார தான செஞ்சேன்.” என்று கட்டிலை விட்டு எழுந்தவன்.

“ஆமா, நான் கேட்டதுக்கு பதில் எங்கடா எப்படி இப்படி உடம்ப கட்டி கட்டியா வச்சிருக்க?”

“குடிச்சிட்டு உலறாத… பேசாம போடா!”

“வாமிட் பண்ணிட்டா போதை இறங்கிடும்டா எனக்கு, சோ சொல்லு, வாட் இஸ் த சீக்ரெட்?”

“சீக்ரெட் தான தோ சொல்றேன், மார்னிங் ஃபோர்கு முழிச்சி பச்சத் தண்ணிய தலைல ஊத்திட்டு ஆ…. ன்னு கத்திட்டே ஓடு, இப்படி உடம்பு போடும் “ என்றவனைப் பார்த்து முறைத்தவன்.

“விளையாடாம சொல்லு, நானும் ஜிம், டயட் லாம் பண்ணி தான் பாக்குறேன் ஒன்னும் வர்க்கவுட் ஆகல.”

“அதுக்கு மொதல்ல குடிக்காம இருக்கணும், குடிச்சா கட்டி கட்டிய இல்ல, தொப்ப தான் வரும் “ என்றவனை முறைத்தவன்.

“நான் ஒன்னும் டெய்லி லாம் குடிக்க மாட்டேன், தெரியுமா?”

“ஒ…”

“டேய் நம்புடா….. “

“நான் ஏன் உன்ன நம்பணும்?”

“என்னா நம்ம பிராண்ட்ஸ்!”

“குடிக்கிறவன் கூடலாம் நான் சேர மாட்டேன் “ என்றவனை கீழ் உதட்டை கடித்து முறைத்துப் பார்த்தவன்.

“முதல்ல அந்த லைட் ஆஃப் பண்ணு, சரண் தூங்க வேணாம்மா?” சரண் மதியுடன் தங்கும் ரூம்மேட்.

“இந்த பில்டிங்கே இடிஞ்சி விழுந்தாலும் அவன் முழிக்க மாட்டான், அங்க பாரு வாய்லயே ட்ரெயின் விட்டுட்டு இருக்கான் “

என்று காட்டிய புறம் பார்க்க, அங்கே சரண் தலைவரைப் போர்வையை போர்த்தி கொண்டு சத்தமாக உறங்கிக் கொண்டிருக்கவும்,

“சரி நீயும் போ, நானும் தூங்கணும்.”

“இப்போ என்ன தொறத்துறதுலயே ஏன்டா இருக்க? உனக்கு ஏன் என்ன பிடிக்கல?”

“எனக்குன்னு நிறைய பொறுப்பு இருக்கு, உன்ன மாதிரி கேர்லெஸா இருக்க முடியாது.”

என்று சீரியஸாக பேசிய த்ருவை பார்த்து “உண்மைய சொல்லு, நீ யாரு? உனக்கு உண்மையா எத்தன வயசு ஆகுது? ஒரு வேலை நீ ஒரு கட்டாரியா?” என்று பேசியவை,

“வாட்..” என்று கேள்வியாகப் பார்க்க.

“பின்ன எதோ பழங்காலத்து மூத்த முதியவர் மாதிரி பேசினா… டவுட் வராது?” என்று காதை குடைந்தவன்.

“இங்க பாருடா, பிரனாவ் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கத்தான் செய்யும், அதுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு முனிவர் மாதிரி இருக்கணும்னு இல்ல.

நான் சொல்லி உனக்குத் தெரியணும்னு இல்ல, செம்மையா படிக்கிற புத்திசாலியா இருக்க இதுகூட கொஞ்சம் ஜாலியா இருன்னு தான் சொல்றேன்.”

“ஜாலியா னா எப்படி? உன்ன மாதிரி குடிச்சிட்டு வாந்தி எடுக்கணுமா?” என்றதற்கு சிரித்த மதி.

“குடிக்கிறது மட்டும் ஹாப்பி இல்ல, இந்த நாளு செவுத்துக்குள்ளயே இருக்காம ஜாலியா வெளியே வா.

வீக் எண்ட் ப்ரியா தான இருப்ப, அப்போ என் கூட ஜாலியா இரு” என்று பேசிப் பேசியே அவனையும் இவர்கள் குழுவில் சக்சஸ் ஆக இணைத்துக் கொண்டான் மதி.

யாரையும் அவன் வட்டத்தில் இணைக்காத த்ரூவ், மதியை அவனோடு அழகாகப் பொறுத்துக்கொண்டான். அவனின் நட்பு அவனின் கல்லூரி நாட்களைப் பூஞ்சோலையாக மனம் வீச தான் வைத்தது.

இரண்டாம் ஆண்டு சொர்க்கமாகச் சென்ற நாட்கள் போய், மூன்றாம் ஆண்டு நரகமாகப் போவது தெரியாது சுற்றித் திரிந்தார்கள்.

அனைத்தும்

தேனின் ஒரு துளி விஷமாக அவள் வந்த தருணம் அது.