“அது வேலை விஷயம்மா ஒன்னு பார்த்துட்டு இருக்கேன் பாட்டி, உள்ள நெட் கிடைக்கல.”
“உள்ள கிடைக்கலன்னா மாடிக்கு போய் பாரு, இங்க வேணாம்டா, இந்த ஸ்டெல்லா வர நேரம் ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது.”
“அவ வந்தா எனக்கு என்ன பாட்டி? அவ வந்தா ரோட்டுல யாரும் நிக்கக் கூடாத?”
“அவள பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறியேடா! இங்க வீட்டு முன்னாடி அந்த கடவுளே வந்து இந்த நேரத்துக்கு நின்னாலும், ‘ஏன் இங்க நிக்கிறீங்க? இந்த நேரம் இங்கலாம் நிக்க கூடாது’ன்னு கடவுளையே திட்டுற ஆளுடா அவ!”
“தெரியும் தெரியும் அவள, இத்தனை வருஷமா பக்கத்துல ஒன்னா இருக்கோமேன்னு ஒரு நம்பிக்கை வேணாம் என்ன பொண்ணோ அப்படி என்ன தான் பசங்கன்னா, இப்படி வெறுப்போ!”
“அவ என்ன ஆதி பண்ணுவா? பட்ட கஷ்டம் அப்படி நம்பிக்கை தர வேண்டிய அப்பனே இப்படி விட்டு ஓடிட்டா, அவளும் என்ன தான் பண்ணுவா?”
“அதான் தப்புன்னு சொல்றேன் பாட்டி. அவ அப்பா பண்ண தப்புக்காக எல்லோரும் ஒரே மாதிரின்னு இவ நினைக்குறது என்ன நியாயம்?”
“சின்ன வயசுல இருந்து அப்படியே வளந்துட்டா ஆதி, என்ன பண்றது,” என்று நைஸாக பேசிக்கொண்டே ஆதியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே சென்று விட்டார் மணியம்மாள்.
இவர்கள் சென்று சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கிய ஸ்டெல்லா, ஒரு நிமிடம் வாசலிலேயே நின்றபடி வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றாள்.
வாசலில் செருப்பைக் கழட்டி விட்டு உள்ளே நுழையும் போதே ரூத்தின் பாடல் காதில் விழ, அதை ரசித்து கேட்டபடி அப்படியே நின்று விட்டாள் ஸ்டெல்லா.
அந்தப் பாடல் முழுவதும் ரூத் பாடி முடித்த பிறகே பையை வைத்துவிட்டு சமையல் அறை சென்றாள்.
“ஜோசப் டுடே சாங் சூப்பர் டி!”
“ஸ்டெல்லா…. உனக்கும் இந்த பாட்டிக்கும் இதே வேலையா போயிடுச்சு, ஒழுங்கா ரூத்னு கூப்பிடு இல்ல ஜோசப்பின்னு கூப்பிடு, அதென்ன ஜோசப் பையன் பேரு?”
அதை கேட்டு அழகாக சிரித்த ஸ்டெல்லா, அவள் தலையில் கையை வைத்து ஆட்டிவிட்டு சிரித்தபடி எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
ஒருவன் இவள் சிரிப்பைப் பார்க்க அங்கே தவம் இருக்க, இவளோ தனது சிரிப்பு மொத்தமும் தன் தங்கை ஒருத்திக்கே என்று கொடுத்து விட்டாள் போலும்.
ஸ்டெல்லாவின் செல்லத் தங்கை ரூத் ஜோசப்பின், அவளைக் குழந்தை முதல் இன்றுவரை கண்ணாகப் பார்த்து வருகிறாள். மூன்று வருடங்களுக்கு முன் தான் இவளின் பாட்டி காலமானார், அன்றிலிருந்து ரூத் அவளுக்காகவே வாழ்ந்து வருகிறாள்.
அறைகுள் சென்ற ஸ்டெல்லாவை முறைத்த ரூத், அங்கு மாட்டிக்கொண்டிருந்த ஐந்து வயதுக் குழந்தையின் முன் நின்று,
“அம்மா, உன்னையும் இப்படித்தான் பையன் பேரு வச்சி கிண்டல் பண்ணுவாங்களா? முதல்ல யாரும்மா உனக்கு இப்படிப் பேர் வச்சா இந்தத் தாத்தாவா? அவர் கிட்ட கேளும்மா, உங்களுக்கு வேற நல்ல பேரே கிடைக்கலையான்னு” என்று புலம்பியவளைப் பார்த்து சிரித்த ஸ்டெல்லா,
“என்னது அம்மா வச்ச பேறா? அம்மா எப்படி அம்மாக்கே பேர் வைப்பாங்க?” என்று குழம்பிப் போய் ஸ்டெல்லாவிடம் இவள் பார்வையைத் திருப்ப, அதில் ஒரு நிமிடம் தடுமாறிய ஸ்டெல்லா சமாளிப்பாகச் சிரித்தபடி,
“போ ஸ்டெல்லா, நீ பொய் சொல்ற, பாட்டிலாம் இப்படிப் பேரு வைக்க மாட்டாங்க” என்று சொல்லிச் சென்றவள், பின்னரே மூச்சை இழுத்துவிட்டபடி சிரித்த முகத்துடன் சென்ற ஸ்டெல்லா,
“டுடே நைட் டின்னர் என்ன டா?”
“சப்பாத்தி இறா தொக்கு ஸ்டெல்லா”
“என்ன பக்கத்து வீட்டுப் பாட்டி கொடுத்தாங்களா?”
“ம்ம்ம், ஸ்டெல்லா, அவங்க பேறன் வாங்கி வந்ததானா?”
“ஒ…” என்று அதில் இருந்த இறளை ஒன்றை கையில் எடுத்து ரூத்க்கு ஊட்டவும், அதை ருசி பார்த்த ரூத் கண்களை மூடி,
“ம்ஹூம், வேணாம் ஜோசப், நான் சப்பாத்தியோட சாப்பிடறேன், நீ சாப்பிடு, உனக்குத்தான் இது ஃபேவரிட் ஆச்சே” என்று சிரித்துப்பேசிக் கொண்டே இருவருமாகச் சப்பாத்தியைச் சுடத் தொடங்கினர்.
இங்கு ஆதிஷ் வீட்டில் அனைவரும் ஒன்றாக உணவு உண்டு கொண்டிருந்தனர்.
“அத்தை ஒரு வாட்டி சொன்ன பறவால தினமும் வந்து பேசுறாங்க த்தா, நான் என்ன பண்ண. நீங்க அந்தப் பொண்ணுங்க வீட்டுக்குப் போகாதீங்க. அந்தப் பெரிய பொண்ணு வேற எல்லாரையும் முறைக்குற மாதிரியே பார்த்து வைக்குது.”
“நான் இந்த வீட்டுக்குக் கல்யாணம் ஆகி வரும்போது எனக்குப் பதினைந்து வயசுதான். அப்போ இத்தன வீடுலாம் கிடையாது. இதோ இந்த பக்கத்து வீடு, அப்புறம் அந்தத் தெரு முனை வீடுன்னு தள்ளித் தள்ளித்தான் இருக்கும்.”
“கல்யாணம் ஆன புதுசுன்னு பாக்கம, என் புருஷன் என்ன நைட் ஒத்தையில விட்டுட்டு வியாபாரம்னு போய்டுவாரு. பல நாள் நைட் முழுக்க வர மாட்டாரு, தெரியுமா?”
“பழைய கதை, இப்போ எதுக்குமா?”
“ப்ச்…. கேளுடா, அப்போ நைட் கரண்ட் கூட இருக்காது. என்னதான் நான் தைரியமானவ நாளும், அப்போ நான் சின்னப் பொண்ணுடா, பயந்து போயிட்டேன்.
அப்போ ஸ்டெல்லாவோட பாட்டி எனக்குத் துணையா இருந்தாங்க. அவங்களுக்கும் கல்யாணம் ஆன புதுசு தான் இருந்தும் நைட் முழுக்க உங்க அப்பா வர வரக்கும் ஏன் சில நேரம் நைட் முழுக்க என் கூட துணையா இருப்பாங்கடா.
அப்படிப்பட்ட என் தோழியோட பொத்திகள அவ இல்லாதப்ப பாத்துக்காம போயிட்டேன அவளுக்கு நான் என்ன தோழி.
பாவம், ரெண்டும் பொம்பள பிள்ளைங்க. ஒன்னு இரா பகல் பாக்காம வேலைன்னு ஓடிட்டு இருக்கும்போது, தங்கச்சிய நினைச்சு வேற பயந்துட்டு இருக்கக்கூடாதுன்னு தான் அவ வர வரக்கும் நான் நின்னுட்டு வரேன்.”
என்று கலங்கிய கண்ணைத் துடைத்தவர் வாணிபுறம் திரும்பி,
“இதோ பாருடி, எனக்கு அவங்க அப்புறம் தான் எல்லாமே. அந்தப் புள்ளைகளுக்கு ஒரு நல்லது பண்ற வரை நான் அவங்க கூடத்தான் இருப்பேன். இதைத் தடுக்க உனக்கு மட்டும் இல்லை, என் புள்ளைக்கும் கூட உரிமை இல்லை,” என்றவர் கையைப் பிடித்த வாணி.
“அத்தை கோபப்படாதீங்க, நான் ஏதோ புரியாம உளறிட்டேன். என்ன மண்ணிச்சிடுங்க… அத்தை, இனி இப்படிப் பேச மாட்டேன்.”
“சரி சரி, அழுது வடிஞ்சது போதும். சீரியல் போட்டாச்சு, சத்தத்தைக் கொஞ்சம் கூட்டி வை,” என்று சொன்னதும் ஆதிஷ் பக் என்று சிரித்துவிட, மணியம்மாள்
“டேய், கம்முன்னு இருடா,” என்று அவன் தொடையை நறுக்கென்று கிள்ளிவிட அவன்,
“அ… பாட்டி வலிக்கிது பாட்டி!” என்று கத்த, அன்று இரவு அந்த வீட்டில் எப்போதும் போல அழகாக நகர்ந்தது.
அங்கு அப்படி என்றாள். இங்கு உணவு உண்டு முடித்த ஸ்டெல்லாவும் ரூத்தும் உறங்கும் அறைக்குச் செல்ல ஸ்டெல்லா,
“ஜோசப், நீ வேணா டிவி ஹோக்குப் பாடப் போறியா? நான் உன்னச் சேர்த்து விடுறேன்.”
ரூத் சிறு வயதிலிருந்தே கர்நாடக இசை கற்றுக்கொண்டு வருகிறாள். சில மேடைகளில் நன்றாகப் பாடியும் இருக்கிறாள். அதை வைத்தே படிப்பு முடியப் போகும் நிலையில் இவளைச் சினிமாவில் பாட வைக்கலாமா என்று யோசித்து ஸ்டெல்லா கேட்க, ரூத்தோ…
“ஹ… நானா? டீவிலயா? அய்யோ வேணாம் வேணாம்! எனக்கு நாலு பேரு சேர்ந்து ஒன்னா நின்னாலே காத்து தான் வரும், இதுல டீவில பாட்டா? நோ வோ ஸ்டெல்லா!”
“ஏண்டி ஜோசப், இப்படி பயப்படுற? கொஞ்சம் ட்ரை பண்ணி பாருடி, உனக்குத் தான் பாட்டு பாட பிடிக்குமே!”
“ம்ம்ம்….. எனக்கு ஆடக் கூட தான் பிடிக்கும்,” என்று எண்ணியவள்.
“அது பாடப் பிடிக்கும் தான், ஆனா சினிமால பாட வேணாம் எனக்குப் பாட்டுப் பாட குட்டிப் பசங்களுக்குச் சொல்லித் தரத்தான் விருப்பம்.”
என்று கட்டிலில் ரூத் படுத்துக்கொள்ள, ஸ்டெல்லாவும் அவள் சொன்னதை யோசித்தபடி இருக்கவும், அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரூத், அவள் போட்டிருந்த இரவு உடையைப் பிடித்து இழுத்து,
“ஸ்டெல்லா, தூக்கம் வருது…” என்று குட்டாவி விட்டபடி கையை நீட்டவும், நினைவிலிருந்து கலைந்த ஸ்டெல்லா சிரித்தபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டு தூங்கச் சென்றாள்.
ஸ்டெல்லா ரூத்தின் கையைப் பிடித்த பின்னரே அவளும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.
இருவரும் ஒருவரின் கையை மற்றோருவர் அத்தனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உறங்கிப் போயினர்.