“உன் பேரு என்ன?” என்று கேட்க, அதற்கு அவன் பயத்தில் நடுங்கி ஆங்கிலத்தில்
“என்ன விட்டுருங்க ப்ளீஸ்…” என்று கதறவும், திரும்பி மதியைப்பார்த்து முறைத்தவன்.
“லூசு….தமிழ் தெரியாதவன் கிட்ட தமிழ்ல கேள்வி கேட்டுருக்க நீ…” என்று திட்டியவன் இவன் புறம் திரும்பி, ஆங்கிலத்தில் த்ரூவ் மீண்டும் அதே கேள்வியை கேட்கவும், அவன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து
“சுதிப், என் பேரு” என்றவன் முகமே வீங்கிப் போய் இருந்தது. அதைப்பார்த்து அவனை கை பிடித்து அமர வைத்தவன், குடிக்கத் தண்ணீர் கொடுக்கவும், மதி
“ம்ம்ம்… அப்படியே பிரியாணி, சரக்குன்னு வாங்கி கொடுத்து தாலாட்டு பாடு” என்றவன் பேச்சைக் கண்டுகொள்ளாத த்ரூவ்.
“நீ எந்த ஊரு சுதிப்? இங்க என்ன பண்ற?” என்று பொருமையாக பேசினான்
“என் ஊரு சிட்குள், இங்க ஒரு வேலையா வந்தேன் சார். எனக்கு எதுவும் தெரியாது, நானே காசுக்காக தான் இந்த வேலையப் பாக்குறன்.”
“அப்படி என்ன வேலையா வந்த சுதிப்?” என்று கூர்மையாக அவன் முகத்தை ஆராய்ந்தான். அவன் சொல்லப் போவது உண்மையா இல்லை பொய்யா என்று கண்டுபிடிக்க.
“அது எங்க ஊருக்கு வந்த டூரிஸ்ட் கொடுக்கிற வேலை எல்லாத்தையும் நான் செய்வேன். அப்படி ஒருத்தர் தான் என்ன இங்க இந்த பென்டிரவ் கொடுக்கச் சொன்னாரு சார்” என்று அவன் அணைத்து உண்மையையும் சொல்லிவிட்டான்.
சுதிப் பென்டிரவ் என்றதும் இருவரும் அலாட்டாகி , ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாலே பேசிக்கொண்டு
“உனக்கு வேலை கொடுத்த அந்த டூரிஸ்ட் பேரு என்ன சுதிப்?” என்றதற்குத் தலையைச் சொரிந்தவன்
“பேரு தெரியாது சார்” என்று அவன் சொன்னதை கேட்ட கடுப்பான மதி, அவனை அடிப்பது போல அருகில் சென்று
“பேரு தெரியாதவனுக்குலாம் வேலை செய்வியாடா?” என்றதற்கு அவன் பயந்து தலையசைக்கவும், அவனைத் தடுத்த த்ரூவ்.
“சரி அவனப் பார்த்திருக்க தான? அவன் ஃபோட்டோ காட்டுனா அடையாளம் சொல்லுவியா?” என்றதற்கு அவன் தலையசைக்கவும்.
“டேய் மதி, உன் நண்பன் ஃபோட்டோவ அவன் கிட்டக் காமி” என்று சொன்னவனை முறைத்த மதி,
“ஒழுங்கா வாயை மூடிட்டு போய்டுடா, உன் மேலையே செம கடுப்புல தான் இருக்கேன்” என்று திட்டியவன், போலீஸ் வெளியிட்டுருந்த
வினோவின் படத்தை காட்டவும், அதைப்பார்த்து சுதிப் “ம்ம்ம் இவங்க தான் சார் எனக்கு வேலை கொடுத்தது” என்றதும் வேகமாக அவன் தோளைப் பிடித்த த்ரூவ்.
“இப்போ அவன் எங்க இருக்கான்?” என்று அவன் சொன்னதை கேட்டுக்கொண்டு சுதிப்புடன் மூவருமாக ஹிமாச்சல பிரதேசம் சென்றார்கள்.
அங்கிருந்து காரில் சென்று கொண்டிருக்கும் போது த்ரூவ் அவன் போனை எடுத்து போலீஸ்க்கு அழைக்கப் போகவும், அதைத் தடுத்து நிறுத்திய மதி.
“அவனுக்கு போலீஸ்ல நிறைய பேரைத் தெரியும், அதை வச்சி தான் இத்தன நாள் தப்பிச்சு இருந்தான். சோ இப்போ வேணாம், நம்மலே முதல்ல அவனப் புடிச்சிட்டு அப்புறம் சொல்லலாம்.”
என்றவன் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. இன்று வரை எத்தனை கஷ்டப்பட்டு அத்தனை க்ளூ கொடுத்தும், புரோஜினம் இன்றி அவனைப் பிடிக்க முடியாமல் ஏதாவது காரணம் சொன்ன போலீஸின் செயல் இப்போது புரிய வர.
“ஷிட்…. இவனுங்கள சென்னை போய் பாத்துக்குறேன்.”
“எல்லாரும் அப்படி இல்ல த்ரூவ், அனா அந்த டிபார்ட்மென்ட்ல கொஞ்சம் பேரு அப்படி தான் இருக்காங்க.”
“ சரி…உன்னை எப்படி அம்மா இங்க அனுப்பினாங்க? இதுக்கு அப்புறம் நீ இனிமே மதுரைல தான் இருப்பன்னு சொன்னாங்கலே!”
“அதுவா உன் கூட பாட்னர சேர்ந்து வொர்க் பண்றன்னு சொன்ன, சரின்னு விட்டுட்டாங்க”
என்று சொன்னவனை அதிர்ந்து போய் திரும்பி பார்த்த த்ரூவ், அப்படியே அவனைப் பார்த்தப் படியே இருக்க அவன் தலையைத் திருப்பிய மதி.
“என்ன அப்புறம் பொறுமையா கூட சைட் அடி, இப்போ முதல்ல அவனப் பிடிக்கணும்” என்று சொன்னவன் பேச்சில் யோசனையான த்ரூவ்.
“இவன் என்ன நார்மலா பேசுறான்? எப்பவும் உன்ன விடமாட்டேன் டா….ன்னு தான பேசுவான், ஒருவேளை இவன நம்ம காப்பாத்துனதுல மாறிடானா ?” என்று குழப்பமான மனதுடன் தான் சிட்குளை அடைந்தனர்.
இங்கு சிட்குளில் சுதிப் சொன்ன விட்டீன் முன்னே நின்று
“இங்க தான் அவன் இருக்கானா” என்று கைகளை முறிக்கிய மதியை “நீ இங்கயே இரு , நான் உள்ள போய் அவனைப் பிடிக்கிறேன்”
“இல்ல வேணா நானும் வரேன் உள்ளே அவன் கன் ஏதாவது வச்சிருந்தா, அவன் சரியான பைத்தியக்காரன் டா, அவன் ஏதாவது பண்ணி வச்சிருவானு” என்றவனுக்கு அவனிடம் இருந்த பிஸ்டலை எடுத்து காட்டியவன்
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி வீடு அருகே சுதிப்பை பிடித்துக்கொண்டு சென்றான்.
அதை பார்த்த மதி, த்ரூவ் பேச்சி கேட்காமல் அவர்கள் பின்னாலயே செல்லவும். அவனை பார்த்த த்ரூவ் “ திருந்தாத ஜென்மம் டா நீ “ என்று வாய் அசைத்து காட்ட அதை ஒரு தோள் குழுக்களில் தள்ளி விட்டவன்.
சுதிப்பிடம் கண்களை காட்டி கதவைத் தட்டச் சொன்னான், கதவின் வலது புறம் மதி ஒளிந்து இருக்க, அதன் மறுபுறம் த்ரூவ் நின்று கொண்டிருந்தான்.
பின் சுதிப் மெல்ல கதவைத் தட்டினான்.
சுதிப் தட்டவும் உள்ளே இருந்து வினோவின் குரல் “யாரு…?” என்று கேட்டது; பதிலுக்கு இவன் சுதிப் என்றதும் கதவை லேசாக திறந்து சுதிப்பை பிடிக்க கைநீட்டியவனின் கையை த்ரூவ் எட்டி பிடித்திருந்தான்.
த்ரூவை அங்கு எதிர்பார்க்காத வினோ அதிர்ந்து நின்று அவனை பார்க்க, அந்த கன நேரத்தில் மதி அவன் மீது பாய்ந்து இருந்தான்.
வினோவை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தவன், அவன் முகத்தில் ரத்தம் வரும் வரை அத்தனை குத்து குத்திருந்தான்.
அதை பார்த்து பயந்த சுதிப் “இந்த சார் முதல்ல அடிச்சிட்டு தான் பேசுவாரு போல” என்று நினைத்துக்கொண்டான். பின்னே கதவைத் திறந்த இவன் மீதும் இப்படித்தானே பாய்ந்தான்.
“எருமை நாயே….. நம்பிக்கைத் துரோகி….. என்ன தைரியம் இருந்தா நண்பன்னு சொல்லி ஏமாத்துவ?” என்று மதி ஒவ்வொரு பேச்சுக்கும் அவனை போட்டு அடிக்க, அவனைத் தடுக்க முயன்ற த்ரூவ்
“டேய்…. மதி நிறுத்து, அவன் முழு போதையில இருக்கான் டா” என்று த்ரூவ் சொன்ன பிறகுதான் மதியும் அவனைப் பார்த்தான்.
அப்போதுதான் போதை எடுத்திருப்பான் போல, கண்கள் எல்லாம் சொறுகி மதி அடித்த அடியில் சுயநினைவு இன்றி இருந்தான்.
பின் அவனை கட்டிப்போட்டு இருவருமாக அவனை இவர்கள் ஆட்களிடம் சொல்லி, பாதுகாப்பாக சென்னைக்கு கொண்டு போலிஸிடம் ஒப்படைக்க சொல்லியிருந்தனர்.
வினோவை அழைத்துச் செல்லும் முன் சுதிப்பிற்கு த்ரூவ் அவன் உதவிக்கு பணத்தைக் கொடுக்க, அதை அவன் மறுத்து “எனக்கு ஒரு வேலை வாங்கித் தாங்களேம் சார், இப்படி யாருன்னே தெரியாதவர்களுக்குக் கீழே வேலை செய்ய விருப்பம் இல்லை சார்”
என்றவனை த்ரூவ் ஒரு நிமிடம் யோசித்து பின் “இங்க எனக்கு எந்த வேலையும் தெரியாது, ஆனா டெல்லியில ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்து விட்டா செய்வியா?”
என்றதற்கு அவன் சந்தோஷமாகத் தலை அசைக்கவும், ஒரு கார்டை நீட்டியவன் டெல்லியில் இடம் சொல்லி அங்கே போய் பார்க்கச் சொன்னான்.
அத்துடன் பணத்தையும் கொடுத்துவிட்டு இவர்கள் கிளம்பிவிட, மதி மதுரைக்குச் செல்லாமல் த்ரூவுடனே சென்னைக்குச் சென்றான்.
விமானத்தில் இவன் அருகே அமர்ந்த மதியை முறைத்து பார்த்த த்ரூவ் “என்னடா என் கூடவே இருக்க? அதான் அவனைப் பிடிச்சு கொடுத்தாச்சே, இதுக்கு அப்புறம் என்ன?”
“ம்ம்ம்…. உன் கூடவே தான் இருக்கப் போறேன்னு சொன்னனே டா, என்ன உன்ன பார்ட்னரா சேர்த்து கிட்டாலும் சரி இல்ல அசிஸ்டண்டா வச்சுகிட்டாலும் சரி”
என்றவனை நக்கலாகப் பார்த்த த்ரூவ் “என்ன திடீர் ஞானோதயம்?”
“திடீர்னுலாம் இல்ல, எப்பவும் உன் கூட சேர்ந்து வொர்க் பண்ணனும் தான் ஆசை, ஆனா நீ தான் என்ன சேர்த்துக்கல”
“காலேஜ் முடிஞ்சு எத்தனை வாட்டி உன் கூட பேச வந்தேன், அப்போ பேசுனியாடா?”
“ப்ச்… அப்போ உன் மேல கோபத்துல இருந்தேன். ஏன் படிக்கப் போயிட்டு திரும்பி வந்த உடனே, என்ன வந்து பார்த்துருக்கலாம் தான, உன்ன யாரு எனக்கு போட்டியா பிசினஸ் தொடங்க சொன்னா?” என்று சொன்னதை கேட்டு அமைதியாகக் கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவன்.
“அது நீயும் என்ன வேணாம்னு சொல்லிட்ட, அவளும் என்ன விட்டுப் போயிட்டா அந்த கோபம்” என்றவனை புரியாமல் பார்த்தவன் “அவளும்னா யாருடா?”
“பொம்மாயி டா”
“என்னது அன்வீயா? அவள எப்போ எப்படிடா பார்த்த?”
“ஜெர்மன்ல வொர்க் பண்ணும் போது பார்த்தேன் டா”
“டேய்…. ஒழுங்கா பிட்டு பிட்டா சொல்லாம முழுசா சொல்லு என்ன ஆச்சின்னு” என்றதற்கு பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டவன்
“அது அவள அங்க பார்த்து பேசின்னு, அவளும் என்ன லவ் பண்ணுனா, நானும் அவள லவ் பண்ணி லவ் சொல்லிக்கப் போகும் போது எங்களுக்குள்ள சண்டை வந்துடுச்சி அதுல என்ன விட்டு போயிட்டா, இப்போ எங்க இருக்காளோ?”
“எங்க இருப்பாளோன்னா அவள தேடவே இல்லையா டா நீ?” என்றதற்கு மறுத்துத் தலையசைத்தவன்
“அவள தேடாத இடம் இல்ல, அவ வீட்டை கூட ஆள் வச்சி இப்போ வர வாட்ச் பண்றேன், ஆனா நோ யூஸ், அவ எங்க இருக்கான்னு அவங்க வீட்டுல இருக்கவளுக்கே தெரியல”
“அப்போ அந்த கோபத்தையும் சேர்த்து தான் என் மேல இறக்குனியா டா?” என்றதற்கு ஆம் என்று தலையசைத்தவன், த்ரூவ் தோளில் சோகமாகத் தலை சாய்ந்து கொண்டான்.
சோகமாக முகத்தை வைத்தவனை திட்டவும் முடியாது அதற்கு மேலே நடந்த வற்றை கேட்கவும் முடியாது அமைதியாகி விட்டான்.
“என்னம்மோ பண்ணு…” என்றபடி அவனும் கண் மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.
எப்படியோ பழைய நண்பன் இவனிடமே வந்துவிட்ட நின்மதியில், விமானத்திலிருந்து இறங்கியவனுக்கு இடியாக வந்து சேர்ந்தது ஸ்டெல்லாவின் ராஜினாமா கடிதம்.