அனல் – 21

சிங்கப்பூர் அலுவலக அறையில் மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்த மீனா

“அப்பா…. எப்படியோ எல்லாம் ஓவர், என்னும் சின்ன சின்ன கரக்ஷன்ஸ் தான் இருக்கு. அதை நைட் குள்ள முடிச்சிட்டா நாளைக்கு முழுக்க சிங்கப்பூரை சுத்திப் பார்க்கலாம்” என்று உற்சாகமாக லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு வந்தவள்

அவள் பின்னாலேயே ‘என்ன பண்ணி ரெண்டு பேரையும் ஒன்னு சேர்க்க?’ என்று யோசித்தபடி வரும் ஆதிஷைப் பார்த்து

“என்ன ப்ரோ, பலமா யோசிக்கிறீங்க? ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா நாளைக்கு?” என்றவளை

“இவ வேற ஒருத்தி, தொணதொணன்னு ஒரு ப்ளான் போட விடுறாலா ” என்று சலித்தவன் வெளியில் சிரித்தபடி

“அதுலாம் இல்ல மீனா, உள்ள டிசைன்ல சொன்ன கரக்ஷன் பத்தி தான் யோசிச்சிட்டு வந்தேன்” என்று ஏதோ சொல்லி மழுப்ப, இது புரியாது மீனா

“என்ன ப்ரோ இதுக்கு போய்யா இவ்ளோ யோசிக்கிறீங்க ? டோன்ட் வொரி, உங்களுக்கு கஷ்டமா இருந்தா  பேளான்ஸ் கரக்ஷன்ஸை நானே பார்த்துக்கிறேன்”

என்று தோள்களை உலுக்கி பேசியவளை பார்த்து

“பரவாள நல்ல பொண்ணு தான் “ என்று நினைத்தவனாக

“இல்ல இல்ல, நானும் ஹெல்ப் பண்றேன் மீனா” என்று பேசியபடி ஹோட்டலுக்கு கிளம்ப கீழே செல்ல, அங்கே தான் காருக்காக ஸ்டெல்லாவும் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்து கடுப்பான ஆதிஷ் “அச்சோ…. இவ கூட..யா கார்ல போகணும்” என்று சலித்தபடி காரில் ஏறினான்.

ஸ்டெல்லா அவனைப் போல எல்லாம் யோசிக்காமல், ஏன் அவனை கண்டு கூட பார்க்காமல் மீனாவுடன் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

கார் புறப்படவும் மீனா “மேம்…. சார் எங்க? நீங்க மட்டும் தனியா இருக்கீங்க?” என்று பற்களைக் காட்டிப் பேசியவளைச் சலிப்பாக பார்த்தவள்

“சார் எப்பயோ கிளம்பிட்டாங்க மீனா, ஏதோ பிரண்ட்ஸை பார்க்கணும்னு”

“ஓ… “ என்றவளுக்கும் அதன் பிறகு என்ன பேச என்று தெரியாமல் போக அமைதியாகி விட்டாள்.

காரில் ஏற்பட்ட அமைதியை குலைக்கும் வகையில் மீனாவின் போன் சத்தம் போடவும், அதை அட்டென்ட் செய்தாள் மீனா.

போனை எடுத்தவள் ஊருக்கே கேட்கும் அளவு சத்தமாக

“அப்பா….. சொல்லுங்க” என்று உர்ச்சகமாக  இவள் கத்தியதில், அந்த டிரைவரே ஒரு நிமிடம் இவளைத் திரும்பிப் பார்த்துவிட்டார்.

“ஹான்…. நான் சாப்பிட்டேன்…ப்பா, அம்மா நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா?” என்று இவள் சத்தமாகப் பேசியதில்

“அப்பா கூட மட்டும் பேச சொன்னா ஊருக்கே கேக்கப் பேசுவா போல, என்ன சவுன்டா பேசுறா? அது தொண்டையா இல்ல ஸ்பீக்கரா?” என்று முனங்கியவன், காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு அவன் ரூத்துடன் மெசேஜில்  கடலை வருக்கத் தொடங்கி விட்டான்.

“சரிப்பா…. அப்புறம் நாளைக்கு ஹாஸ்பிட்டல் செக்கப் இருக்கு, நேரத்துக்கு அம்மாவைக் கூட்டிட்டுப் போங்க” என்று இவள் அவள் அப்பாவுடன் பேசியதையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்டெல்லா.

மனதில் பல எண்ணங்கள் ஓட, நெஞ்சு பாறமாக ஆனது போல இருக்க கண்களை மூடித் சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்.

மீனா என்னும் அவள் அப்பாவுடன் தான் பேசிக்கொண்டு இருந்தாள்; அதைத் கேட்கக் கேட்க இவள் மனதிலு எழும் கேள்வியை தடுக்கவே முடியாமல் போனது

“அப்பா கூட இருந்திருந்தா இப்படித்தான் நம்மளும் இப்போ சந்தோஷமா குடும்பமா இருந்திருப்போமா… ஜோசப்?” என்று யோசித்தவளின் கண்கள் கலங்கத் தயறாக இருக்க, அதை கண்களை சிமிட்டிச் சரி செய்ய முயன்ற படி

“ஜோசப், நீயும் அப்போ ஹாப்பியா என் கூட இருந்திருப்பல? நம்ம அம்மா கூட இருந்திருப்பாங்க, அப்பா அம்மான்னு வெளிய எல்லார் மாதிரி ட்ரிப்லாம் போயிருக்கலாம்.

கிறிஸ்துமஸ்க்கு மேட்சிங் ட்ரெஸ் போட்டுட்டு நம்ம நாளு போரும் சர்ச்க்குப் போயிருக்கலாம். அப்பா கூட பைக்லப் போயிருக்கலாம். எங்க அப்பா இருக்காங்க ன்னு நம்மள கிண்டல் பண்ண பசங்க முன்னாடி கூட்டிப் போய் நிக்க வச்சிருக்கலாம்” என்று பல ஆசைகள் இவளை மீறி வரிசை கட்டி நிற்க, அதைச் சுமக்க முடியாமல்

தொண்டையை அழுத்திப் பிடித்தவள் கண்களை இறுக மூடவும் , கோட்டத் தயராக தேங்கியிருந்த ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்தது.

“மேம் என்ன ஆச்சு? ஏன் அழுதுட்டு இருக்கீங்க?” என்ற மீனாவின் குரலில் திடுக்கிட்டு கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவள்

“அது ஒன்னும் இல்ல, கண் எரிச்சல், சூடாகி இருக்கும் போல, தூங்கி எழுந்தா சரி ஆகிடும்” என்று சமாளித்துவிட்டுத் கண்களை துடைத்த படி தலையைத் திருப்பித் கொண்டாள்.

என்ன தான் இரும்பு போல நான் என்று வெளியில் வேடம் போட்டாலும், உள்ளே குடும்பத்துக்காக உள்ளம் ஏங்கத்தான் செய்கிறது.

ஸ்டெல்லாவின் கண்ணீரை வினோதமாகப் பார்த்த ஆதிஷிற்கு ஏதோ புரிவது போல இருக்க, அவளைத்தான் கண்ணாடி வழியே பார்த்தான்.

அப்பா அம்மா இன்றி தனியாக பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவள். எப்போதும் அவள் கண்கள் கலங்கி இவன் பார்த்ததே இல்லை. ஆனால் இன்று மீனா அவள் குடும்பத்துடன் பேசியது கேட்டு அவள் அழுவதைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.

என்ன தான் அவளை கல்லு , கடினமானவல் என்று இவன் கிண்டல் செய்தாலும், அப்படி அவள் வளரக் காரணமும் இது தானே; தனியே அவளின் பாட்டி மற்றும் தங்கை என்று இருவரையும் தோளில் தாங்கியவள்.

வேறு எப்படி இருப்பாள் இந்தச் சமுதாயத்தில்? ஆண் இல்லாமல் இத்தனை நாள் பாதுகாப்பாக இவர்கள் இருக்க இவளின் இறுக்கம் தான் முதல் காரணம், என்று நினைத்தவன்,

“எப்படியாவது இவளை சார் கூட சேர்த்து சந்தோஷமா வாழ வைக்கணும்” என்று எண்ணிக்கொண்டவன், அடிக்கடி ஸ்டெல்லாவை கண்ணாடி வழியே அவள் அழுகிறாளா என்று பார்த்தபடி தான் ஹோட்டல் வரை வந்தான்.

ஹோட்டல் வந்ததும் மூவரும் கீழே இறங்கி உள்ளே செல்ல, அங்கே ரிஸப்ஷனில் வைத்திருந்த செயற்கை நீர்வீழ்ச்சி அருகில் தான் த்ரூவ் நின்று இவர்களுக்காகக் காத்திருந்தான்.

த்ரூவை பார்த்ததும் ஸ்டெல்லாவின் சோர்ந்த மனம் உற்சாகமாகவும், மலர்ந்த முகமாக அவனை நோக்கிச் சென்றாள்.

இதை பார்த்த மீனா சலிப்பாக, “ம்க்கும்… இப்படிப் பார்க்கிறது  எல்லாம் நல்லாதான் பாத்து போறாங்க, ஆனா மனசதான் திறக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க.

இவங்க ரெண்டு பேரையும் ரூம்ல போட்டு அடச்சி வச்சாலும், அடுத்த பிசினஸ் எப்படித் தொடரலாம்னு தான் விடிய விடிய பேசுவாங்க தவிர வேற ஒன்னுத்துக்கும் சரியாப்பட்டு வர மாட்டாங்க” என்று சலித்தபடி அவள் அறைக்குச் சென்றுவிட,

ஆதிஷ் மட்டும் மீனா சொன்னதை காதில் வாங்கிக் கொண்டபடி இவர்களைப் பார்த்தபடி அங்கேயே நின்றவனுக்குத் அவள் பேசியதில் இருந்து ஒரு ஐடியா உதயமாகவும்

“ஹே… சூப்பர் ஆதிஷ்…” என்று அவனை அவனே பாராட்டி விட்டு வேகமாகத் த்ரூவை நோக்கி ஓடிச் சென்றவன், த்ரூவ் மீதே மோதி அவன் கையில் வைத்திருந்த போனைத் தட்டித் தண்ணீருக்குள் போட்டுவிட்டான்.

அதில் “ஹே… ஆதிஷ்…” என்று கத்திய த்ரூவ், “ஓ… காட்! மை போன்…” என்று வேகமாகப் போனை எடுத்தான்; அது தண்ணீரில் மூழ்கி நனைந்து இருந்தது.

உடனே அதைத் துடைத்து ஆன் செய்யப் போனவனைத் தடுத்த ஆதிஷ், “சார்… இப்போ ஆன் பண்ணா போன் வேஸ்டா போயிடும். அதை உடனே சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க” என்று போனை வாங்கியவன் அவனே போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு,

“சாரி சார், வேணும்னே பண்ணல. தண்ணி கீழ இருக்குறதப் பார்க்காம வந்துட்டேன், கால் ஸ்லிப் ஆகிடுச்சு சார்.”

“ப்ச்… இட் ஓகே, போனை கொடு நான் பார்த்துக்கிறேன்.” என்று போனை வாங்க போனவனை

“இல்ல சார், நான் பண்ண தப்புக்கு நானே போனை சரி பண்ணித் தரேன் சார். தண்ணில தான சார் விழுந்திருக்கு, எனக்கு சரி பண்ணத் தெரியும். நான் மார்னிங் உங்களுக்கு ரெடி பண்ணித் தந்துடுறேன் சார்.”  என்றவனை

“பட் இம்பார்டன்ட் கால்ஸ்…வருமே… ஆதிஷ்” என்று த்ரூவ் யோசிப்பதை பார்த்த ஆதிஷ், ஸ்டெல்லாவைத் கோர்த்து விட்டான்.

“மேம் உங்க பிஏ மாதிரி தான சார். ஏதாவது அர்ஜென்ட்னா உங்களுக்கு கால் வரும்போது அவுங்க  வந்து சொல்ல மாட்டாங்களா சார்?”

என்றதும், அதற்கு மேல் த்ரூவ் எந்தக் கேள்வியும் கேட்காமல் தலையை ஆட்டிவிட்டான்.

“ஸ்டெல்லா சொன்னா போதும் போல எல்லாத்துக்கும் தலை ஆட்டுரார் “ என்று மனதில் நினைத்தவன்.

அவன் பிளானின் முதல் கட்ட வெற்றியுடன் சிரித்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பினான் ஆதிஷ் .

இரவு மீனாவுடன் சேர்ந்து டிசைன் கரக்ஷனை முடித்தவன், “எல்லாம் ஓவர் தானா மீனா ,சார் கிட்ட இதை காட்டிடலாம்ல?”

“ம்ம்ம் எஸ் ப்ரோ, அவ்வளவு தான் டிசைன் ஓவர். நான் போய் சார் கிட்ட அப்ரூவல் வாங்கிட்டு சென்ட் பண்றேன்” என்று எழுந்து போனவளை நிறுத்திய ஆதிஷ்

“இல்ல மீனா, நான் போய் சார் கிட்ட காட்டிக்கிறேன். ரொம்ப லேட் நைட் ஆகிடுச்சு, நீங்க சாப்பிட்டு ட்டு ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என்றவன் லேப்டாப்பை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன்

நேராக ஸ்டெல்லா அறை முன் நின்று அவள் கதவைத் தட்டிக் கொண்டு இருந்தான்.

அப்போது தான் ஸ்டெல்லா தலைவலி காரணமாக ரிஸப்ஷனில்  காபி கேட்டு அதை சுடச்சுட குடித்துக் கொண்டு இருந்தாள்.

கொஞ்சம் தான் குடித்து முடித்திருப்பாள், அதற்குள் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு அதை வைத்துவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தவள்

ஆதிஷை இந்த நேரத்தில் இங்கு எதிர்பாராமல் புருவம் உயர்த்தி “என்ன வேணும்?” என்றாள்

“ம்ம்ம்…. எனக்கு ஒன்னும் வேணாம், சார்க்கு தான் இந்த லேப்டாப் வேணும்மா” என்று நக்கலாக பேசியவனை முறைத்து

“என்னென்னு தெளிவா சொல்லுங்க ஆதிஷ்” என்று பல்லை கடித்துக் கொண்டு இவள் பேச, விஷயத்திற்கு வந்தான் ஆதிஷ்

“நானும் மீனாவும் டிசைன் முடிச்சிட்டோம். இத சார் பார்த்து ஓகே சொன்னா நாங்க மெயில் சென்ட் பண்ணிடுவோம்.”

“சரி, அதுக்கு ஏன் என்கிட்ட வந்திருக்க? சார் ரூம் பக்கத்து ரூம் தானே?”

“ ப்ராஜெக்ட் ஹெட் நீ தான்னு ஞாபகம் இருக்கு தானா? அப்போ நீ தான் இந்த மாடல் பத்தி சார் கிட்ட சொல்லணும்” என்றவனை குறு குறுவென சந்தேகமாக பார்த்தவள்.

“அப்படி ஒன்னும் இல்லையே, நீயே கூட காட்டலாமே!”

“உங்க பிரான்ச் ஆபிஸ் எப்படின்னு எனக்கு தெரியல, ஆனா எங்க ஆபிஸ்ல இது தான் ப்ரோசிஜர், சோ இந்தாங்க” என்று லேப்டாப்பை கொடுத்துவிட்டு அவன் பாட்டுக்கு சென்று விட

சலிப்புடன் அந்த லேப்டாப்பை பார்த்தவள் “இப்போ இது வேறயா…” என்று முனகியபடி கதவை சாத்திவிட்டு, அவள் அறைக்கான கீ கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு த்ரூவ் அறைக்கு சென்றாள்.

த்ரூவ் அறையை தட்டிவிட்டு ஸ்டெல்லா நிற்க, த்ரூவ் சாட்ஸ் மற்றும் டிசெட்டுமாக கதவைத் திறக்க, ஸ்டெல்லா சங்கடமாக நெளிந்தபடி

“இல்ல நான் மார்னிங் வரேன் சார்” என்று செல்லி செல்ல போனவளை

“ஸ்டெல்லா உள்ள வா…..” என்றவனின் குரல் போக விடாமல் தடுக்கவும், எச்சிலை விழுங்கியபடி உள்ளே நுழைந்தாள் ஸ்டெல்லா.

ஸ்டெல்லா த்ரூவ் அறைக்கு சென்ற அடுத்த நிமிடம், அங்கு அறைக்கு முன்னே வந்த ஆதிஷ் ரிசப்ஷனில் வாங்கிய மாஸ்டர் கீயை வைத்துவ மேனுவலாக கதவை பூட்டிவிட்டு அவன் அறைக்கு சிரித்தபடி சென்று விட்டான்.

இங்கு அறைக்குள் சென்ற ஸ்டெல்லா, அங்கே மேஜை மீது இருந்த பச்சை பாட்டிலையும் அதை குடித்து வைத்த கிளாஸையும் பார்த்தவள்

த்ரூவ் பக்கம் கோபமாக திரும்பி “குடிச்சிட்டு இருக்கீங்களா…. “ என்று கேட்டவளை இடுப்பில் கைவைத்து முறைத்தவன்

“அது ஒன்னும் சரக்கு இல்ல, ஜஸ்ட் ஒயின் தான், அல்கஹால் இல்லாத ஒயின். தாகமா இருக்கவும் இந்த ஹோட்டல்ல இது ஸ்பெஷல் அச்சேன்னு ஆர்டர் பண்ணேன், ஒரு சிப் கூட குடிக்கல. அதுக்குள்ள…. நீ…. என்ன பார்த்த குடிச்சவன் மாதிரியா இருக்கு ஸ்டெல்லா?”

என்று கண்களை உருட்டி மிரட்டியபடி பேசியவனை பார்த்து, பயத்திற்கு பதிலாக சிரிப்பு வரும் போல இருக்கவும் பேச்சை மாற்ற

“டிசைன் ஓவராம், ஆதிஷ் கொடுத்துட்டு போனான் பாக்க சொல்லி”

“ஓ… சரி ஸ்டெல்லா, வா பார்த்து முடிச்சிடலாம்” என்று இருவருமாக ஹோபாவில் அமர்ந்து அந்த டிசைனைப் பார்த்துக்கொண்டிருக்க

த்ரூவ் ஒயினை குடித்தபடி ஸ்டெல்லா டிசைனைப் பார்த்தான், டிசைனை பார்த்த ஸ்டெல்லவிற்கு தலை சுற்று வது போல இருக்கவும் தலையை பிடித்த படி அமர்ந்து விட்டாள்.

அப்போது திடீரென்று அவள் தோளில் தலையை சாய்த்தவின் கைகள் இவள் இடையை அழுத்திப் பிடித்தன.

அதில் கண்கள் விரிய அவனைத் தள்ளிவிட்டு எழுந்த ஸ்டெல்லா, கோபமாக அவனைப் பார்க்க, அவனோ ஹோபவில் சாய்ந்தபடி

“ஸ்டெல்லா….. ஸ்டெல்லா….. டேய்… அம்மு….. ஏன்டி…. தள்ளி விடுற “ என்று உளறியவனை அதிர்ந்து போய் பார்த்தவள்.

“த்ரூவ்…. ஏன் இப்படி… பேசுறீங்க…. நீங்க குடிக்கல தான, அப்புறம் ஏன் உளறுறீங்க “ என்றவளுக்கும் தலை லேசாகச் சுற்றியது, அதில் செவிற்றை பிடித்து நின்றவள் வேகமாக யோசித்து.

எதோ சரியில்லை என்று உணர்ந்தவளாக  கதவைத் திறக்க முயன்றாள், அதுவும் திறக்க முடியாமல் போகவும், போனை ரூம்மில் வைத்துவிட்டு வந்த மடத்தனத்தை-ஐ நோந்துகொண்டவள்.

அறையின் போனை எடுத்து ரிசப்ஷனுக்கு அழைக்க முயன்றாள். பாவம், அந்த அறையில் போனை ஆதிஷ் கட் செய்து வைத்திருப்பது தெரியாது, இவள் முயற்சி செய்ய ரிங் போகவில்லை.

“என்ன ஹோட்டல் இது, கால் கூட போகாம “ என்று புலம்பியவளைப் பின்புறமாக த்ரூவ் அணைக்கவும்

அதில் உடல் விறைக்க பயந்து அசையாது நின்றவளின் காதில்

“ அம்மு….. என் அழகு பொண்டாட்டி அம்மு….” என்று அவள் காதருகே மீசை முடி உரச உளறியவன், ஸ்டெல்லா காதில் உதடு குவித்து முத்தம் வைக்க,

அதில் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது; மேலும் அவன் அவள் காதில் பேச பேச, உடல் கூசி நடுங்க தொடர நெளிந்தபடி டேபிளை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றாள் ஸ்டெல்லா.