அனல் – 20

அறைக்குள் தலைகானியில் முகத்தை புதைத்த ரூத், “ம்ம்…..ஜாலி…டான்ஸ் கத்துக்க போறேன்”  என்று கால்களை காற்றில் உதைத்துத் துள்ளித் கொண்டிருந்தவள், எழுந்து அமர்ந்து ஆதிஷ் இவள் கையை பிடித்த இடத்தை பார்த்தாள்.

லேசாக சிவந்து போயிருந்தது, அதை வருடியது ரூத்.

“சரியான காட்டான் எவ்வளவு அழுத்திப் பிடிச்சிருக்கான்…” என்று வெட்கப்பட்டு சிரித்தவள்,

அவள் போனை எடுத்து ஸ்டெல்லா வரைந்திருந்த அவளின் அம்மாவின் ஓவியத்தை வருடி, “நானும் டேன்ஸ் ஆடும் போது இதே போலவா இருப்பேன் ம்மா…”

என்று ஓவியத்துடன் பேசியவளுக்கு நடன ஆசையே இதைப்பார்த்து தான் வந்தது.

சிறு வயதில் இருந்து இவள் அம்மாவை பற்றி மற்றவர்கள் சொல்லி கேட்டு அவர்களின் கற்பனையில் தான் தன்  அம்மாவை பார்த்து வளர்த்தாள்

வீட்டில் அம்மாவின் பெரிய வயது படம் ஒன்றும் இல்லாமல் இருக்க, அவரின் முகம் எப்படி இருந்திருக்கும்  என்று யோசித்து யோசித்து களைத்தவளுக்கு கிடைத்த பரிசு தான் அந்த ஓவியம்.

அதில் இருந்த அவளின் வளர்ந்த அம்மாவின் படத்தை வருடியவள், அவரை மனதிலேயே உருவமாகப் பதித்துக் கொண்டாள்.

முதலில் அவர் போல நடனம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு தான் க்ளாஸ் சென்றாள்; ஆனால் அது ஸ்டெல்லாவால் கற்று கோள்ள முடியாமல்  போனது.

இப்போது வளர வளர, இவள் அம்மாவை போல முக அமைப்போடு இவள் இருக்கவும், அம்மாவை போல அந்த நடன உடை போட்டு அவரைப் போலவே இருக்கிறேனா என்று பார்க்கும் ஆசையும் சேர்த்து வந்து ஒட்டிக்கொண்டது.

அதையும் சேர்த்து  நிறைவேற்றி பார்க்கவே இந்த நடனம் கற்றுக்கோள்ள போகிறாள்.

“ இந்த ஸ்டெல்லா ஏன் நம்மல டேன்ஸ் ஆட விட மாட்டிக்கிறா ஒரு வேலை அந்த ஓடி போன அப்பா அம்மாவ டேன்ஸ் ஆடும் போது பாத்து தான் கல்யாணம் பண்ண கேட்டுருப்பாறோ …”

என்று யோசித்தபடி படுக்கையில் விழுந்தவள், மறுநாளுக்காக மிகவும் ஆர்வமாக இருந்தாள்.

அடுத்த நாள் ஸ்டெல்லா வேலைக்கு சென்றதும், வீட்டில் இவள் வேலையை வேகமாகப் பார்த்து முடித்தவள், பாட்டியிடம் பாட்டு க்ளாஸ் செல்வதாகப் பொய் சொல்லி கிளம்பி விட்டாள்.

பாட்டி எப்படியும் ஸ்டெல்லாவிடம் பேச மாட்டார், ஸ்டெல்லா வீடு வருமுன் வீட்டிற்கு வந்து விடலாம் என்று திட்டம் போட்டு அதைச் செயல்படுத்தவும் செய்தாள்.

முதல் முறை ஸ்டெல்லவிடம் இருந்து மறைத்து ஒன்று செய்கிறாள், அதுவும் அவளுக்குப் பிடிக்காத ஒன்று.

ஆதிஷ் சொன்னபடி மது வீட்டிற்கு சென்று,  நடனம் ஆடக் கற்றுக்கொள்ளத் தொடங்கினாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து ஒரு வாரம் முடிந்து, இவர்கள் சிங்கப்பூர் செல்லும் நாளும் வந்தது.

ஸ்டெல்லா அவளின் உடமைகளை காரின் டிக்கியில் ஏற்றி விட்டு ரூத் அருகே வந்தவள்,

“ஜோசப், மூனு நாள்ல வந்துருவேன் டா. நீ பார்த்துப் பத்திரமா இருக்கணும் சரியா? நேரத்துக்கு சாப்பிட்டு பாட்டி கூட பத்திரமா இருக்கணும்” என்றவள், அருகில் நின்று கொண்டிருந்த மணியம்மாள் பக்கம் திரும்பி,

“அவளைப் பார்த்துக்கோங்க…” என்ற ஒற்றை வார்த்தையுடன் காரில் ஏறி விட்டாள்.

“என் கிட்டயா இவ பேசுனா “ என்று அவர் அதிர்ச்சியாக அவளை பார்த்த படி நின்று விட்டார்.

இவற்றை எல்லாம் பார்த்தபடி பின்னே இருந்த மற்றோரு காரில் இவன் உடைமைகளை எடுத்து வைத்து விட்டு, இவன் அம்மா அருகே வந்தான் ஆதிஸ்,

இவ்வளவு நேரம் பக்கத்து வீட்டை வாயை பிளந்த படி பார்த்து கொண்டிருந்த வாணி , ஆதிஷ் அருகில் வரவும்

“ பேரன், நீ ஊருக்கு போற உன்ன பாக்குறத விட்டுட்டு அங்க போய் நிக்கிறாங்க பாருடா உங்க பாட்டி”

என்றதும் அங்கு நின்று கொண்டிருந்த ரூத்தை கண்கள் நிறைக்க மூன்று நாட்களுக்கும் சேர்த்து பார்த்துக்கொண்டவன்

 “ விடு ம்மா  அங்க தான நிக்கிறாங்க பாட்டி “ என்றவனை முறைத்து பார்த்தவர்

“நீயும் சரி, உங்க பாட்டியும் சரி, எப்போ பாரு பக்கத்து வீட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணி  பேசுறிங்க “

என்று முகத்தை திருப்பியவர்  ஸ்டெல்லா காரில் செல்வதை பார்த்து விட்டு

“உண்மையாவே அவ கூடத்தான் சிங்கப்பூர் போறியா டா?” என்ற அம்மாவை முறைத்து பார்த்தவன்,

“அவ கூட மட்டும் இல்ல, இன்னும் ரெண்டு பேர் வருவாங்க.”

“ அது சரிடா…, ஒரே இடத்துக்குத்தானே போறீங்க? ஒரே கார்ல போனா என்ன, காசு மிச்சமாகும் தான?” என்ற அம்மாவை ஆதிஷ் நன்றாக முறைத்து

“என்னது, அவ கூட நானா? அம்மா…, ஒழுங்கா அமைதியா இருங்க கிளம்பும் போது டென்ஷன் பண்ணாதீங்க” என்று கூறி அனைவரிடமும் விடைபெற்றுவிட்டான்,

“ அவ  கூட போனா என்ன? என்னம்மோ அவ வரான்னு அந்த ப்ளைட்ட விட்டு   தனி ப்ளைட்ல போற மாதிரி சீன் போடுறான் “ என்று முனங்கியவர் அவனை பார்க்க

காரில் ஏறியவன் அனைவருக்கும் கை அசைக்க, கார் கிளம்பியது.

வாசலில் இருந்த ரூத் இவனையும் ஓரக் கண்ணால் பார்த்தபடி நின்றவள், அவன் அவளுக்கும் சேர்த்து கையசைக்கவும் சிரித்த முகத்துடன் கை அசைத்து வழி அனுப்பினாள்.

இருவரும் கிளம்பியதும் ரூத்தின் முகமே வாடப் போனது; ஒரு புறம் அவள் அக்கா, மறுபுறம் அவளுக்குப் பிடித்தமானவன் – இருவரும் இன்றி மூன்று நாட்கள் என்ன செய்யப் போறேனோ என்று நினைத்தபடி உள்ளே சென்றாள்.

இங்கு விமான நிலையத்திற்கு முதலில் வந்த ஸ்டெல்லா, தன் பெட்டியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

விமான நிலையம் உள்ளே காத்திருக்கும் இடத்தில், கையில் போனைப் பார்த்தபடி டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து நின்று கொண்டிருந்த த்ரூவை புருவம் தூக்கிப் பார்த்தவள்,

“என்ன இது… இவர் என்ன இப்படி வந்திருக்காரு? இவர பார்க்க வேலை விஷயமா சிங்கப்பூர் வர மாதிரியே தெரியலையே…” என்று யோசித்தபடி அங்கேயே நின்றவளை,

“ஹலோ மேடம், வழி விட்டா நாங்களும் போவோம்ல” என்றவன் குரலில் வேகமாகத் திரும்பிப் பார்க்க, ஆதிஷ் தான் நின்று கொண்டிருந்தான்.

முகத்தைச் சுளித்தபடி வைத்துக்கொண்டு, இவன் பேசியவனை கேட்டு மேலும் கீழும் பார்த்தவள், சுற்றி அந்த இருந்த காலியான  இடத்தைப்பார்த்துவிட்டு,

“உனக்கு போக வேற இடமே இல்லையா? இந்த வழியாத்தான் போணுமா?” என்று பதிலுக்கு இவள் முறைக்க,

“ஏன், உங்களுக்கு நின்னு சைட் அடிக்க வேற இடமே இல்லையா? இங்க , அந்த இடத்துல தான் நிக்கணுமா?”

“ஹே… ஆதிஷ், லிமிட் கிராஸ் பண்ணிப் பேசாத” என்று கை நீட்டி இவள் எச்சரிக்க,

“நீங்க என் வழியில வராம இருந்தா நான் ஏன் கிராஸ் பண்ணப் போறேன், எப்பப் பாரு நடுலயே நிக்கிறது , தள்ளு” என்றவன் அவளைத் தாண்டி த்ரூவ் அருகே சென்றான்.

“ப்பூ….. இருக்குற பிரச்சனையில இவன் வேறயா…. இவன்னு தெரிஞ்ச அப்போவே ரிஜெக்ட் பண்ணிருக்கலாம், தப்பு பண்ணிட்டேன் ச்சே..” என்று புலம்பியவள் அவர்கள் அருகே சென்றாள்.

ஸ்டெல்லாவைப் பார்த்த த்ரூவ், போனை பாக்கெட்டில் போட்டுவிட்டு அவளுடன் பேச இவனை நோக்கி வந்த ஆதிஷை நகர்ந்து விட்டு அவளிடம் சென்றான்,

“ஹாய் ஸ்டெல்லா, எப்போ வந்த, தா பெட்டிய நான் இழுத்துட்டு வரேன்” என்று பெட்டியை வாங்கப் போனவனை கை நீட்டித் தடுத்தவள்,

“இல்ல வேணாம், நான் பார்த்துக்கிறேன் சார்” என்று அவளே வைத்துக்கொண்டாள்.

அவனைப் பார்த்து மனசுக்குள் சிரித்த ஆதிஷ், “என்ன கண்டுக்காம போனிங்க தான உங்களுக்கு  வேணும்,  அனா சார்….உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா சார்? பாவம் நீங்க” என்று நினைத்தவன்,

“ஹாய் சார்,” என்று அவனை பார்த்து சிரிக்க, த்ரூவ் அப்போதுதான் அவனைப் பார்த்தது போல, “ஹாய் ஆதிஷ், எப்போ வந்தீங்க?” என்ற கேள்வியில்,

“காதல் வந்தா எமனுக்கும் எருமைக்கும் தான் வித்தியாசம் தெரியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன், இங்கே என்னன்னா ஆள் நிக்கிறது கூடவா தெரியாது” என்று எண்ணியவன், வெளியில் சிரித்தபடி,

“இப்போதான் வந்த சார்” என்று சாமளித்து விட்டு இவர்களை பார்க்காது போல திரும்பி நின்று கொண்டான்.

அதன் பின் மீனாவும் வந்துவிட, நால்வராக செக்-இன் செய்து விமானத்திலும் அமர்ந்து விட்டார்கள்.

த்ரூவிற்கு பிசினஸ் கிளாஸில் டிக்கெட் போட்டவள், இவர்கள் மூவருக்கும் எக்கனாமியில் போட்டு இருக்க, த்ரூவ் கடுப்பாகி விட்டான்.

“யார் கிட்ட கேட்டு எனக்கு மட்டும் பிசினஸ் போட்டீங்க? போட்டா எல்லாருக்கும் ஒரே கிளாஸ்ல போட்டிருக்கணும்” என்று கத்தியவனைச் சலனமில்லாமல் ஸ்டெல்லா பார்த்து,

 “நீங்க முன்னாடியே இன்பார்ம் பண்ணலையே சார், சோ நான் ப்ரோசிஜரை தான் ஃபாலோ பண்ண” என்று கூறிவிட்டு அவள் சீட்டில் முகத்தை திரும்பி வைத்து அமர்ந்து கொண்டாள்.

த்ரூவ் வாய்க்குள் ஏதோ முனங்கியபடி ஹார்ரோஸ்டர் இடம் சென்று, தன் சீட்டை ஸ்டெல்லா அருகில் மாற்றி அமர்ந்து கொண்டான்.

“இப்போ எதுக்கு முகம் இப்படி வச்சிருக்க?” என்றவனை திரும்பிப் பார்த்தவள்,

“நான் இருக்கப் போய் தான எக்கனாமில டிராவல் பண்றீங்க, அப்போ தப்பு உங்க மேல தான?  முன்னாடியே என் கிட்ட சொல்லாம விட்டது உங்க தப்பு தான”

என்று முகத்தைச் சுளித்தபடி பேசிக் கொண்டிருந்தவளின் கையில் நறுக்கென்று இவன் ஒரு ஆர்வத்தில் கிள்ளிவனுக்கு

அவள் முகம் வலியால் சுருங்குவதைப் பார்த்து இவன் முகம் மாற,

“அச்சோ…. வலிச்சிருச்சா டி? நான் வேகமா கிள்ளணும்னு கிள்ளல, சாரி…” என்று பதறி பேசியவன் , அவன் கைகளைத் கோர்த்தபடி கண்களை மூடி அமர்ந்து விட்டான்.

அவன்  கோர்த்திருந்த கைகள் நடுங்குவதை யாரும் அறியாது வாரு அத அழுத்தி பிடித்தவன் அவன் உணர்வுகளை மறைக்க முயன்றான்

நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவன் இப்படித் திடீரென்று அமைதியானதை புரியாமல் பார்த்தவள்,

“ரொம்ப வலிக்கல, லைட்டா தான் வலிச்சிது”

என்று இவன் கிள்ளிய கையை அவன் முன்னே நீட்டி காட்டியவளின் செய்கையில் லேசாக உதடு விரிய புன்னகைத்தவன் , அவள் நீட்டிய கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டு

“நீ சொன்னது சரிதான், நீ இங்க இருக்கப் போய் தான், இப்படி டிராவல் பண்றேன். எனக்குப் பிடிச்ச பொண்ணு கூட டிராவல் பண்றதை விட பிசினஸ் கிளாஸ் ஒன்னும் பெருசு இல்லடி.”

என்று சொல்லியவன், அவள் கையை விடாமல் கண்களை மூடிப் படுத்துத் தூங்கப் போய்விட்டான்.

தூங்கும் த்ரூவைப் சலிப்பாகத் பார்த்து  தலையசைத்துவிட்டு அவளும் தூங்கிப் போனாள்.

இவர்களைப் பின்னிருந்த சீட்டில் இருந்து பார்த்த ஆதிஷுக்கு இவர்கள் பேச்சு எதுவும் கேட்கவில்லை; த்ரூவ் ஸ்டெல்லாவின் கையைப் பிடித்துக் கொண்டு உறங்குவதும் தெரியவில்லை.

அவனுக்குத் த்ரூவ் மற்றும் ஸ்டெல்லா ஏதோ சிறிது நேரம் பேசிவிட்டுத் தனித்தனியாக அமர்ந்து உறங்குவது போலத்தான் தெரிந்தது; அதில் கடுப்பானவன்,

“என்ன மேக்கு டா இவங்க ரெண்டு பேரும்? இவர் போய் சீட்டை மாத்திட்டு வந்த வேகத்துல, நானும் என்னமோ நடக்கப் போகுதுன்னு ரெடியா வேற இருந்தேன், இப்படி சப்பின்னு ஆகிடுச்சே!”

“நீங்க வேற ப்ரோ! இவங்க எப்போவும் இப்படித்தான். நாங்களும் சார் ஆபீஸ்க்கு அடிக்கடி வர்றதைப் பார்த்துட்டு, ஆபீஸ் ரொமான்ஸ் எல்லாம் இருக்கும்னு எதிர்பார்த்தா, அவுங்க அதெல்லாம் இங்க கிடையாதுன்னு சும்மா பார்த்துட்டு போயிருவோம்னு, இருந்துடாங்க சார்”

என்ற மீனாவின் குறில் குரலில், “அட, மனசுக்குள்ள பேசுறதை வாய் விட்டு ஒலறிட்டோமா!” என்று அதிர்ந்தவன், அவளைப் பார்த்துச் சாமளிப்பாக சிரிக்க

“அட ப்ரோ, ஏன் இப்படி ஜெர்க் ஆறிங்க? நானும் உங்கள மாதிரி தான், எப்பத்தான் இவங்க சேருவாங்கன்னு வெயிட்டிங்ல இருக்கேன்!”

என்று சொன்னவளை வினோதமாகப் பார்த்தவன், அவனும் கண் மூடித் தூங்குவது போலப் படுத்துக்கொண்டான்.

பேசிக்கொண்டே இருந்தாள் மட்டும் தான் காதலா? அவள் அருகாமையில் அவள் தரும் மௌனமும் காதல் தான்.

விமானம் தரை இறங்கியதும் நேராக ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே ஸ்டெல்லா வாயைத் திறக்கும் முன்பே த்ரூவ் அனைவருக்கும் ரூம் கார்டை வாங்கித் கொடுத்து விட்டான் .

இவன் அறையை ஸ்டெல்லாவின் அறை பக்கம் மாற்றித் கொண்டான். அதில் அவனை முறைத்துப் பார்த்தவள்,

“எனக்கு நீங்க கொடுத்திருக்கிறது உங்களுக்கான ரூம், இதுதான் பெருசு, இதை எடுத்துக்கோங்க” என்று அவன் கையில் இருந்த கார்டைப் பிடுங்கியவள், இவள் கார்டைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

“எந்த ரூமா இருந்தா என்ன, உன் பக்கத்துல இருந்தா போதும்” என்று நினைத்தபடி அவன் அறைக்குச் சென்றான்.

முதல் இரண்டு நாட்கள் வந்த வேலையை மும்முரமாகப் அனைவரும்  பார்த்தனர். வெளியில் எங்கும் சுற்றிப் பார்க்கச் செல்லாமல் கம்பெனி, ஹோட்டல் என்று இருந்தவர்களைச் சலிப்பாகப் பார்த்த ஆதிஷ்,

“இந்த சார், இதுக்கு இங்க வராமலே இருந்திருக்கலாமே , இவ கூட பேசி ரொமான்ஸ் ஏதாவது நடக்கும்னு பார்த்தா, வேலை வேலை ன்னு ஓடிட்டு இருக்காரு, இவரும் அவள மாதிரியே இருக்காரே! இல்ல, இது வேலைக்கு ஆகாது, நம்ம கலந்துல இறங்க வேண்டியது தான்.

இந்த மாதிரி வாய்ப்பு சென்னைக்கு போனா கிடைக்காது” என்று யோசித்தவன், பிளான் போட்டு அடுத்த நாள் இரவு முழுக்க ஸ்டெல்லாவைத் த்ரூவின் அறையில் பூட்டி வைத்துவிட்டான்.