“என்னடா சொல்ற? தெளிவா சொல்லு, நேத்து என்ன நடந்துச்சி?” என்றவனைப் பாவமாகப் பார்த்தபடி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன்.
“ஒரு அறை விட்டாங்க பாருடா ஆதிஷ், இப்பவும் கன்னம் வலிக்குது….” என்று கன்னத்தைத் தேய்த்துக் கொள்ளவும்.
“அறைக்கே இப்படின்னா என்ன மாதிரி அடி வாங்கி இருந்தா அவ பக்கமே போக மாட்டான் போலவே” என்று நினைத்தவன், “சரி விடு, எப்படியோ பிளேன் வர்க்கவுட் ஆயிடுச்சுல அது போதும்.
இதுக்கப்புறம் சிங்கப்பூர்ல யும் ஏதாவது ட்ரை பண்ணி பாக்கலாம் ” என்றவனைப் புரியாமல் பார்த்த தருண்.
“என்ன சிங்கப்பூர் டா?”
“அதான் நெக்ஸ்ட் வீக் ப்ராஜெக்ட் காக போறோமே, ஏன் உனக்குத் தெரியாது?”
என்றவனுக்கு அதிர்ச்சிதான், ‘என்னது சார் சிங்கப்பூர் போறாரா? சார் இத பத்தி எதுவுமே இன்ஃபார்ம் பண்ணலையே என்கிட்ட ‘என்று யோசித்தவன், நேராகத் த்ரூவிடம் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றான்.
த்ரூவின் அறைக்கு அனுமதி கேட்டு சென்ற தருண்
“சார்…. நெக்ஸ்ட் வீக் ஷெட்யூல் போட்டுருக்கேன், ஏதாவது சேஞ்சஸ் இருந்தா சொல்லுங்க சார்”
“எஸ் தருண், செக் பண்ணிட்டேன், ஆனா அதுல ஒரு சின்ன சேஞ்ச் இருக்கு. நெக்ஸ்ட் வீக் த்ரீ டேஸ் நான் சென்னையில இருக்க மாட்டேன், சிங்கப்பூர் போறேன். அதுக்கு ஏத்த மாதிரி ரீஷெட்யூல் பண்ணிடு.”
“என்ன ப்ராஜெக்ட் சார் அது? டேட் சொன்னீங்கன்னா டிக்கெட் அண்ட் ஹோட்டல் செக் பண்ணிடுவேன்.”
என்றவனை நிமிர்ந்து பார்த்த த்ரூவ், “உன் கிட்ட பேசணும், உட்காரு” என்று அவனுக்கு எதிரே கை நீட்டவும், தருண் சேரில் அமர்ந்தான்
“அந்தப் பொண்ணு சீதா…. அவங்க வேலை விஷயம் என்ன ஆச்சு? எப்போ ஜாயின் பண்றாங்கலாம்?”
“நெக்ஸ்ட் வீக் வர சொல்லியிருக்கேன் சார்.”
“இல்ல, நாளைக்கே வரச் சொல்லி அப்பாயிண்ட் கொடுத்து, டிரெய்னிங் நீ கொடுக்க ஸ்டார்ட் பண்ணிடு. நெக்ஸ்ட் வீக் ஸ்டெல்லா ஆபிஸையும் சேர்த்து நீ தான் பாக்குற மாதிரி இருக்கும்.”
“அப்போ சிங்கப்பூர் க்கு நான் வரலையா சார்? என்ன தனியா விட்டுப் போறீங்களா?” என்று பயந்த தருணத்தைப் புரியாமல் பார்த்த த்ரூவ்.
“ஏன் இந்தன பயம் தருண்?”
“அது சார், உங்க எதிரி அந்த ஹோட்டல் சார், அவுங்க கூட இருக்க பிரச்சனையில்ல ஏதாவது என்ன பண்ணிட்டா, பயமா இருக்கு சார்” என்றவனைப் பார்த்து முறைத்த த்ரூவ்.
“ஒன் டைம் ஒரு மிஸ்டேக் நடந்திருச்சி, அதுக்குன்னு அதை திருப்பிச் சரி பண்ணிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா தருண்?”
“அய்யோ இல்ல சார், நான் அப்படிச் சொல்லல.”
“உன் பயம் தெரிஞ்சு உனக்கு எப்பவோ நான் சேடோவ் போட்டுடேன். ஒரு வாட்டி பண்ண தப்பத் திருப்பி பண்ண மாட்டேன் தருண்” என்றவன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட, தருண்.
“தேங்க்ஸ் சார்” என்று விட்டு வெளியே வந்துவிட்டான். வெளியே வந்தவன் நெஞ்சைத் தடவியபடி, “அப்பா எப்படியோ என்னைத் திரும்பக் கடத்தாம இருந்த சரி அந்த ஹோட்டல் காரர் அவர பாக்கவே பயமா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே சீதாவிற்கு போன் செய்யச் சென்றான்.
இங்கு வீட்டில் ரூத் இன்றும் ஆதிஷை பார்க்க முடியாது சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். அவனிடம் நடனம் கற்றுக்கொள்வதைப் பற்றிப் பேச இரண்டு நாளாக முயல்கிறாள்.
இருண்ட நாளும் இரவு ஸ்டெல்லா வந்த பிறகே வருகிறான். மெசேஜில் சந்தேகங்களைக் கேட்க விருப்பம் இல்லை, நேரில் பார்த்துப் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள்
“இவனை நேர்ல பார்க்க முடியாது போல, பேசாம கால் பண்ணி வெளிய மீட் பண்ணணும்னு சொல்லுவோம்” என்று யோசித்தவளாக, அவனுக்கு அழைக்க அந்தப் பக்கம் கால் எடுக்கப்படவில்லை.
அதில் கடுப்பானவள், “நமக்கே ஆடிக்கும் அம்மாவசைக்கும் தான் இந்தத் தைரியம், கொஞ்சம் எட்டிப் பார்க்குது, அப்பவும் இப்படித் தண்ணி ஊத்தி அனச்சா நான் என்ன பண்ணுவேன்?”
என்று புலம்பியவள் இன்ஸ்டா பக்கம் சென்று ஆதிஷின் நடனங்களை அவனது நடனப் பள்ளி பக்கத்தில் பார்க்கத் தொடங்கினாள்.
அதைப் பார்க்கப் பார்க்க இவளுக்கும் ஆசையாக இருந்தது. பரதநாட்டிய உடை அணிந்து இவனுடன் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்று மனம் கற்பனை செய்ய, அவள் கற்பனை போகும் திசையில் தலையைத் தட்டித் அதை ஒதிக்கியவள்.
‘எருமை ரூத், என்னடி யோசிக்கிற? ஏன் மேடம் தனியா எல்லாம் ஆட மாட்டிங்களா? அவன் கூடத்தான் ஆடணுமோ?’ என்று ஒரு பக்க மனம் அவளுக்குக் கொட்டு வைக்க, மறுபக்கமோ
“ஏன் அவன் கூட நான் ஆடக் கூடாதா? ஏன் ஆதிஷே அன்னைக்கு அவன் கூட நான் ஆட தான கேட்டான்” என்று மற்றொரு பக்கம் மனம் இப்படிச் சொல்ல, மீண்டும் குழம்பிய நிலையில் படுத்துக் கொண்டு இருக்கும் போதுதான் ஆதிஷிடம் இருந்து இவளுக்கு அழைப்பு வந்தது.
அவன் அழைப்பைப் பார்த்து வேகமாக போனை அட்டெண்ட் செய்தவள், “ஹலோ ஆதி…” என்றவளின் உற்சாகக் குரலில் இதழ் விரிய புன்னகைத்தவன்.
“சொல்லுங்க மேம், என்ன அதிசயமா என் ஞாபகம்?”
“சும்மா தான்…, நீங்க பிஸியா இருந்தா அப்புறமா கால் பண்ணுங்க” என்று அவன் பின்னே கேட்ட பேச்சின் குரலில் இவள் தயங்க,
“பிஸிலாம் இல்ல, இங்க கீழே பார்க்கல தான் இருக்கேன். டுடே இங்க கூட்டம் அதிகம், அதான் இப்படிச் சத்தம் கேக்குது. நீ சொல்லு, அப்புறம் என்ன பண்ற?”
“சும்மா தான், நீங்க சொன்னதப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்.”
“நான் சொன்னதப் பத்தினா? என் கூட டான்ஸ் ஆடுறதப் பத்தியா?”
“ம்ம்ம்… அது தான், அதப் பத்தி தான் கொஞ்சம் நேர்ல பேசணும். வீட்டுக்கு சீக்கிரம் வரீங்களா?”
என்றவளின் பேச்சில் அவன் மீசையைத் திருகிச் சிரிப்பை மறைத்தவன்,
“ம்ம்ம்… ஓகே ரூத், நைட் பார்க்கலாம், பாய்” என்று கூறிவிட்டு போனை வைத்தவன், முகத்தை மூடி பொங்கிய சிரிப்பை மறைத்து சிறிது நேரம் அமர்ந்து விட்டான்.
அனைத்தும் இவன் நினைத்தது போலவே அழகாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படியே சென்றால் ரூத் மிகச் சீக்கிரமாக இவனிடம் வந்து சேர்ந்து விடுவாள் என்று நம்பிக்கை பிறந்தது
அதில் மகிழ்ந்தவன் “யூ ஆர் ஒன் அன்ட் ஒன்லி மைன் பொம்ம, நீ எனக்கு மட்டும் தான்டி செல்லாம்” என்று கூறிவிட்டு, எழுந்து அவன் வேலையை வேகமாக முடிக்கச் சென்றான்.
மாலை நேரம் சைட் விசிட் முடித்து நேராக வீட்டுக்குச் சென்றவன் வாசலில் நின்றபடி ரூத்திற்கு கால் செய்ய, அவளும் அவன் அழைப்பிற்காகத்தான் காத்திருந்தாள் போலும்; வேகமாக போனை அட்டெண்ட் செய்தவள்.
“வீட்டுக்கு வந்திடுங்கலா ஆதி….” என்று ஆர்வமாக கேட்க
“ம்ம்ம்… ரூத், கூப்பிட்டு லேட்டா வர்றதா?”
“ம்ம்ம்…. ஆதி…” என்று சினிங்கியவள், “சரி உங்க கூட எப்படி நேர்ல பேச? பாட்டி இங்க தான் டீவி பார்த்துட்டு இருக்காங்க” என்று அவள் பாட்டியை ரூமில் இருந்து எட்டி பார்த்த படி பேசினாள்அ
“பாட்டி அங்கேயே இருக்கட்டும், நான் மாடில வெயிட் பண்றேன், நீ சீக்கிரமா வா…” என்று போனை வைத்துவிடவும், திருதிருவென முழித்த ரூத், போனை எடுத்துக்கொண்டு நைஸாக வெளியே செல்ல,
“எங்கடி போற சில்லாட்ட…” என்ற பாட்டியின் குரலில் உடல் தூக்கிப் போட நின்றவள்,
“அது பாட்டி…. மாடில போன் பார்க்கலாம்னு,”
“போன் தான, அதை ஏன் மாடில இருந்து பாக்கற? கோசு கடிக்கும், இங்கயே உக்காந்து பாரு,”
“சிிக்னல் கிடைக்கல பாட்டி, ஒரே ஒரு பாட்டு மட்டும் கேட்டுட்டு வந்திரேன்” என்றவள், பாட்டியின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மாடி ஏறிவிடவும்,
“வர வர சில்லாட்ட சரியே இல்ல, கீழ வரட்டும், பாத்துக்கறேன்” என்று டீவியை பார்க்கத் தொடங்கிவிட்டார்.
இப்படி மறைத்துத் திருட்டுத்தனமாக எதையும் செய்து பழக்கம் இல்லாத ரூத்திற்கு, பதற்றம் அதிகமாக அனைத்து புறமும் சுற்றிப் பார்த்தபடி தான் மாடி ஏறினாள்.
இவள் சுற்றிப் பார்த்தபடி பயத்துடன் வருவதை தண்ணீர் டேங்கிற்கு அடியில் இருந்து சாய்ந்து பார்த்தவன்,
“ரூத்….” என்று சத்தமாக கத்தி அவளை அழைக்கவும், திடுக்கிட்ட ரூத் வேகமாக அவன் அருகே ஓடி வந்தாள்.
“அச்சோ…. ஆதி ஏன் இப்போ இப்படி கத்துற? யாருக்காவது கேட்டுட போது” என்று பயத்தில் கைகளை பிசைந்தபடி சுற்றிப் பார்ப்பவளை ரசனையாகத்தான் பார்த்தான்.
சட்டை, பேன்ட் தூக்கிப் போட்ட கொண்டை என்று கலைந்த ஓவியமாக அழகிய தோற்றத்தில் கண் முன் நின்றவளை அள்ளிக்கொள்ளத் துடித்த, கைகளைக் மார்பில் கட்டிக் கொண்டு நின்றவன்.
“அப்பறம் ரூத் சொல்லு, ஏதோ பேசணும்னு சொன்னியே” என்று அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.
“அமா ஆதி, கொஞ்சம் டான்ஸ் பத்தி பேசணும். எனக்கு டான்ஸ் கத்துக்கறதுக்கு ஓகே தான், ஆனா அதுல சில விஷயங்கள் சொல்லணும்,”
“பரவாயில்லையே, நல்ல முடிவு தான் எடுத்துருக்க ரூத். சரி சொல்லு, என்ன சொல்லணும்?”
“எனக்கு டான்ஸ் கத்துக்க ஆசை தான், ஆனா அதை நான் தொடர்ந்து கத்துக்க ஆசையான்னு தெரியல. ஒரு வாட்டி டான்ஸ் ஆடிப் பார்த்துட்டு அது எனக்குப் பிடிச்சிருந்தா நான் அதை கண்டினியூ பண்றேன். பிடிக்கலன்னா அதை மேலும் கத்துக்க சொல்லி கம்ப்ல் பண்ண கூடாது,”
“சரி, அப்புறம்?”
“எனக்கு பரதநாட்டியம் தான் ஆட கத்துக்கணும், வேற டான்ஸ் வேணாம்,”
“ஓகே… இன்னும் வேற ஏதாவதா இருக்கா?”
“ம்ஹூம்… அவ்ளோ தான். இனி நீங்க தான் சொல்லணும், எப்போ, எங்க, எப்படி கத்துத் தரப் போறீங்க?”
“என்னது நான் கத்து தரணுமா” என்று அதிர்ந்தவன் “டேன்ஸ் மாஸ்டாரா நான் வந்தனா டான்ஸ் மட்டுமா கத்து தருவேன்” என்று நினைத்து கோண்டவன் தலையை அசைத்து அவன் எண்ணத்தை கலைத்து
“உனக்கு நான் டான்ஸ் கத்துத் தரப்போறேன்னு யார் சொன்னா?” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்.
“அப்போ நீங்க கத்துத் தர மாட்டீங்களா?” என்றவளின் முகம் வாடிப் போகவும், அவள் தலையில் தட்டிய ஆதிஷ்,
“டெய்லி உனக்கு டான்ஸ் சொல்லி கொடுத்துட்டு இருந்தா என் வேலைய யார் பாப்பா டி?”
“இல்ல எங்க மாஸ்டர் இப்போதைக்கு நியூ ஸ்டூடண்ட்ஸ் எடுக்குற மாதிரி இல்ல. சோ நீ என் சீனியர் கிட்ட தான் கத்துக்க போற.”
“உங்க சீனியரா?”
“ஆமா, அவங்க பேரு மது. இங்க டான்ஸ் அகாடமிக்கு பின்னாடி சும்மா கொஞ்சம் சின்ன பசங்களுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க. ஆல்ரெடி உன்ன பத்தி பேசிட்டேன், நீ அவங்கள போய் நாளைக்கே பாரு,” என்றவனை யோசனையாக பார்த்தவள்
“நான் ஓகே சொல்லிடுவேன்னு முன்னாடியே தெரியுமா?”
“ம்ம்ம் தெரியும், லைட்டா கெஸ் பண்ண,” என்று சிரித்தவனை, “ஆ…” என்று இவள் பார்த்திருந்தாள்.
“நீங்க நல்லாதான் பேசுறீங்க. நல்ல பையனா வேற இருக்கிங்க இருந்தும் ஏன் இத்தனை நாள் என் கூட நீங்க நல்லா பேசாம இப்போ மட்டும் பேசுறீங்க? ஏன்?”
என்று பல நாட்களாக மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டு இருந்தாள்.
“அதுக்கு ரீசன் உங்க அக்கா தான்.”
“என்னது ஸ்டெல்லாவா…” என்று இவள் புரியாமல் பார்க்க,
“ஆமா, அவளே தான். எப்போ பாரு உனக்கு பாடி கார்ட் வேலை பாத்துட்டு, உங்க வீட்டு கிட்ட கூட நிக்க விட மாட்டா. இதுல எங்க இருந்து உன் கூட பேசுறது?”
“அது… அது அக்கா கொஞ்சம் ஓவர் ப்ரோடக்டிவ்,”
“ஒவர் இல்ல, ஒவரோ ஒவர்! உங்க அக்கா உங்க வீட்டு வாசல்ல இருந்து விளையாட கூட விட மாட்டா. ஏன் உங்க வீட்டுக்கு வந்த எங்க பாட்டிய கூப்பிட கூட வீட்டுக்குள்ள விட மாட்டா,”
என்று ஆதிஷ் சொன்னதை கேட்டு முகம் வாடி தலை தாழ்த்தியவள், “சாரி…, ஸ்டெல்லாக்கு பதிலா நான் கேக்குறேன்,” என்றவளை தலையை பிடித்து ஆட்டியவன்.
“சரி இட்ஸ் ஓகே, நானும் என் ரூத் காக சாரி ஏத்துக்குறேன்,” என்றவனை நிமிர்ந்து பார்த்து இவள் சிரிக்கவும், அவள் சிரிக்கும் உதட்டை பார்த்து எச்சிலை விழுங்கியவன்.
குரல் கரகரக்க, “அப்பறம் ரூத்…” என்று அவன் எண்ணங்களை கடிவாளம் இட முயன்று அவள் முகத்தைப் பார்த்தான்.
ஆதிஷின் பார்வை மாற்றத்தை கண்டு நெளிந்த ரூத், “அப்போ நான் கிளம்புறேன் ஆதி, நாளைக்கு பாக்கலாம்,” என்று விட்டு செல்ல போனவளின் கைகளை பிடித்தவன்,
“உனக்காக வேலைய முடிச்சிட்டு இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க, எனக்கு எதுவும் இல்லையா ரூத்?” என்றவன், கையில் இருந்து இவள் கையை உருவ முயன்றவளாக.
“என்ன வேணும் ஆதி?” என்று அவன் முகத்தைப் பார்க்க, ஆதிஷ் இவளின் உதட்டை கனநேரம் பார்த்து விட்டு மீண்டும் அவள் கண்களை பார்த்தவன், “ஓகே வா…” என்பது போல புருவம் உயர்த்த, அதில் அதிர்ந்து போய் வாயை பிளந்து பார்த்தவள்.
“அச்சோ இது தப்பு…” என்று சத்தமாக சொல்லியவளை மலர்ந்த சிரிப்புடன் பார்த்தவன்,
“என்ன தப்பு? நான் தான் எதுவுமே கேட்கலையே ரூத்,” என்றவன் மீண்டும் அவன் கண்களால் அதையே சொல்ல, இவள் பயந்து அரண்டு போனாள்.
இவன் சொல்ல வருவது புரியாமல் இருக்க, இவள் ஒன்னும் குழந்தை இல்லையே!
“கைய விடு ஆதி…, வலிக்குது,” என்று உருவ முயன்றவளுக்கு, “ஹே… ரூத் மேல என்னடி பண்ற? கீழ வாடி…” என்ற பாட்டியின் குரல் கேட்டு உடல் தூக்கி போட, கண்கள் கலங்கும் போல் இருந்தது.
அவளின் கண்களை பார்த்து கொண்டிருந்தவன், இந்த மாற்றத்தை பார்த்து விளையாட்டை கைவிட்டு விட்டு அவள் கையை விட்டுவிட்டான்.
ஆதிஷ் கையை விட்ட உடனே அவனை பார்க்காது வேகமாக படிக்கட்டு நோக்கி சென்றவள், ஒரு நிமிடம் நின்று ஏதோ யோசித்தவள் மெல்ல இவன் பக்கம் திரும்பி,
“தாங்க்ஸ் ஆதி, எனக்காக வந்ததுக்கு,” என்று சிரித்தவள் கீழே இறங்கி சென்று விட்டாள்.
ரூத் சென்றதும் தலை முடியை கோதியவன், “என் குட்டி பொம்ம…” என்று முனுத்தபடி கண்களை மூடி அவனுக்குள் எழும் உணர்வுகளை அடக்க முயன்றான்.
துளி துளி தேனாக சேமித்த காதல் இது, இத்தனை ஆண்டுகள் தூரம் நின்று கவிதையாக ரசித்த ஒன்று, இன்று அருகில் நின்று அதுவும் இவன் கண்களை பார்த்து பேசும் கவிதை பெண்ணிடம் கை காலை வைத்து கோண்டு சும்மா எதுவும் செய்யாமல் இருப்பது தான் நரகமாக இருந்தது.
இதன் பிறகு ரூத்துடன் இப்படி தனியே ஆள் இல்லாத இடத்தில் சந்திக்கவே கூடாது என்று முடிவு எடுத்து கொண்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான்.